அத்தியாயம் 30

மனுஷர் மத்தியில், நான் ஒருமுறை மனுஷனின் கீழ்ப்படியாமையையும் பலவீனத்தையும் சுருக்கிச் சொன்னேன், இவ்வாறு நான் மனுஷனின் பலவீனத்தைப் புரிந்துகொண்டேன், அவனுடைய கீழ்ப்படியாமையை அறிந்தேன். மனுஷர் மத்தியில் வருவதற்கு முன்பு, எப்போதோ மனுஷரின் சந்தோஷங்களையும் துயரங்களையும் நான் புரிந்து கொண்டேன்—இதன் காரணமாக, மனுஷரால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடிகிறது, மேலும் மனுஷரால் சொல்ல முடியாததைச் சொல்ல முடிகிறது, நான் அதை எளிதாகச் செய்கிறேன். இது எனக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசம் இல்லையா? இது ஒரு தெளிவான வேறுபாடு இல்லையா? மாம்சமும் இரத்தமும் கொண்ட ஜனங்கள் எனது கிரியையை நிறைவேற்றக் கூடுமா? சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசிகளைப் போல நான் அதே தன்மையுடன் இருக்கக் கூடுமா? ஜனங்கள் என்னை “ஒத்த தன்மை” உள்ளவராக இருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள்—அவர்கள் என்னை அறியாததினால் அல்லவா அப்படிச் செய்கிறார்கள்? மனுஷர்களிடையே உயர்ந்து எழுவதற்குப் பதிலாக, ஏன் என்னை நானே தாழ்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்? மனுக்குலம் ஏன் என்னைக் கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள், மனுஷர்கள் எனது நாமத்தை ஏன் பிரகடனப்படுத்த இயலாதிருக்கிறார்கள்? என் இருதயத்தில் மிகுந்த வருத்தம் இருக்கிறது, ஆனால் ஜனங்கள் அதை எப்படி அறிவார்கள்? அவர்களால் எப்படிப் பார்க்க முடியும்? வாழ்நாள் முழுவதும் அவர்கள் எனக்குத் தொடர்புடையதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதிருப்பது ஜனங்களை தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதைப் போல் எப்போதும் திகைத்து, குழப்பமடையச் செய்கிறது; நான் அவர்களை அழைக்கும்போது, அவர்கள் வெறுமனே கனவு காண்பதைத் தொடர்கிறார்கள், அதனால் எவரும் என்னுடைய காரியங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இன்று, பெரும்பாலான ஜனங்கள் இன்னும் ஆழ்ந்த நித்திரையில் உள்ளனர். ராஜ்ய கீதம் ஒலிக்கும் போது மட்டுமே அவர்கள் நித்திரையிலுள்ள கண்களைத் திறந்து, தங்கள் இருதயங்களில் சிறிது சஞ்சலத்தை உணர்கிறார்கள். மனுஷர்கள் மத்தியில் என் தடி தாக்கும் போது, சமுத்திரத்தில் உள்ள மணலைப் போலவே அவர்களின் தலைவிதி பயனற்றது என்பதுபோல, அவர்கள் அப்போதும் மிகக் குறைவாகவே கவனம் செலுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும், எனது படிகள் எவ்வளவு தூரம் வந்துவிட்டன என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை—ஏனென்றால் ஜனங்கள் என் இருதயத்தைப் புரிந்துகொள்வதில் அக்கறை காட்டவில்லை, அதனால் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை ஒருபோதும் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. நான் எல்லாவற்றிற்கும் மேலாக அசைவாடுகிறேன், எல்லாவற்றிற்கும் இடையில் ஜீவிக்கிறேன், அதே நேரத்தில், எல்லா ஜனங்களின் இருதயங்களிலும் நான் மையமாக இடம் பெறுகிறேன். இந்தக் காரணத்திற்காக, ஜனங்கள் என்னை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள், நான் அசாதாரணமானவன், அல்லது நான் புரிந்துகொள்ள முடியாதவன் என்று நம்புகிறார்கள்—இதன் விளைவாக, என்மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வலுவாகிறது. நான் ஒருமுறை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜனங்களையும் பொருட்களையும் கவனித்துக்கொண்டு மூன்றாம் வானத்தில் சாய்ந்து ஓய்வாயிருந்தேன். நான் நித்திரையில் இருக்கும்போது, என் ஓய்வைத் தொந்தரவு செய்வதற்கு பயந்து ஜனங்கள் அமைதியாகிவிடுவார்கள். நான் விழித்தவுடன், எனக்கு திட்டவட்டமாகச் சந்தோஷத்தைக் கொண்டுவரும் காரியத்தைச் செய்வது போல், அவர்கள் உடனடியாகச் சுறுசுறுப்படைகிறார்கள். என்மீது பூமியில் உள்ள ஜனங்களின் மனப்பான்மை இதுதான் அல்லவா? இன்றைய ஜனங்கள் மத்தியில் யார் வானத்திலும் பூமியிலும் இருக்கும் என்னை ஒன்றாகப் பார்க்கிறார்கள்? வானத்தில் இருக்கும் என்னை வணங்காதவர் யார்? மேலும் பூமியில் இருக்கும் என்னை யார் தாழ்வாகப் பார்க்கவில்லை? மனுஷன் ஏன் எப்போதும் என்னைக் கிழித்து எறிகிறான்? மனுஷன் ஏன் எப்போதும் என்னிடம் இரண்டு வித்தியாசமான மானப்பான்மைகளைக் கொண்டிருக்கிறான்? பூமியில் மனுவுருவான தேவன் வானத்தில் உள்ள அனைவருக்கும் கட்டளையிடும் தேவன் அல்லவா? வானத்தில் உள்ள நான் இப்போது பூமியில் இல்லையா? ஜனங்கள் என்னைப் பார்க்கிறார்கள் ஆனால் என்னை ஏன் அறியவில்லை? வானத்துக்கும் பூமிக்கும் இடையே ஏன் இவ்வளவு தூரம் இருக்கிறது? இந்த விஷயங்கள் மனுஷனால் ஆழ்ந்து ஆராய தகுதியற்றவையா?

நான் என் கிரியையைச் செய்யும்போதும், நான் பேசும் காலங்களிலும், ஜனங்கள் அவர்களுடைய வாசனை உணர்வு எனக்கு இருப்பதைவிடக் கூர்மையானது என்பதுபோலவும், அவர்கள் வலுவான சுவையை விரும்புவது போலவும், மேலும் மனுஷருக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியாதது போலவும், இதனால் எனது கிரியையை “நிறைவுபடுத்த” மனுஷரை நான் “தொந்தரவு” செய்ய வேண்டும் என்பது போல எப்போதும் அதில் “சுவையைச்” சேர்க்க விரும்புகிறார்கள். நான் வேண்டுமென்றே ஜனங்களின் நேர்மறைத் தன்மையை தணிக்கவில்லை, ஆனால் என்னை அறிந்துகொண்ட அடித்தளத்தின் அடிப்படையில் தங்களைச் சுத்திகரிக்கும்படி கேட்கிறேன். அவர்களிடம் குறைபாடுகள் அதிகமாகையால், அவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதனால் என் இருதயத்தைத் திருப்திப்படுத்த அவர்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய நான் பரிந்துரைக்கிறேன். ஜனங்கள் ஒரு காலத்தில் தங்கள் கருத்துக்களில் என்னை அறிந்திருந்தார்கள், இருந்தும் இதைப் பற்றி முற்றிலும் தெரியாது இருந்தார்கள், இதனால் அவர்களின் நேசிப்பு மணலை தங்கமாகக் கருதுவது போல் இருந்தது. நான் அவர்களுக்கு நினைவுபடுத்தியபோது, அவர்கள் இதில் ஒரு பகுதியை மட்டுமே கழித்து விட்டார்கள், ஆனால் வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன பொருட்களுடன் சென்ற பகுதியை மாற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கைகளில் இன்னும் எஞ்சியிருக்கும் பகுதியைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்—இதன் விளைவாக, அவர்கள் எப்போதும் எனக்கு முன் தாழ்மையுடனும் பொறுமையுடனும் இருக்கிறார்கள்; அவர்கள் என்னுடன் இணக்கமாக இருக்க இயலாது, ஏனென்றால் அவர்களுக்கு நிறைய கருத்துக்கள் உள்ளன. இதனால், அனைவரும் என்னுடன் ஜீவித்திருக்கவும் இனி என்னை விட்டு விலகிச் செல்லாமல் இருக்கவும், மனுஷரிடம் உள்ளதையும், அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்பதையும் கைப்பற்றி, தூரத்திலே தூக்கி எறிய நான் முடிவு செய்தேன். என் கிரியையின் காரணமாகவே என் சித்தத்தை மனுஷன் புரிந்து கொள்ளவில்லை. நான் எனது கிரியையை இரண்டாவது முறையாக முடித்து அவர்களை நரகத்தில் தள்ளுவேன் என்று சிலர் நம்புகிறார்கள். நான் ஒரு புதிய பேசும் வழியைப் பின்பற்றுவேன் என்று சிலர் நம்புகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் பயத்தில் நடுங்குகிறார்கள்: நான் என் கிரியையை முடித்து, அவர்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் விட்டுவிடுவேன் என்று அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள், மேலும் நான் அவர்களை மீண்டும் ஒருமுறை கைவிடுவேன் என்ற ஆழ்ந்த பயத்தில் உள்ளனர். எனது புதிய கிரியையை அளவிட ஜனங்கள் எப்போதும் பழைய கருத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். நான் கிரியை செய்யும் முறையை ஜனங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னேன்—இந்த முறை அவர்கள் தங்களைப் பற்றி ஒரு நல்ல விவரத்தைக் கொடுக்க முடியுமா? ஜனங்களின் பழைய கருத்துக்கள் எனது கிரியையைச் சீர்குலைக்கும் ஆயுதங்கள் இல்லையா? நான் ஜனங்களிடம் பேசும்போது, அவர்கள் எப்போதும் என் பார்வையைத் தவிர்க்கிறார்கள், என் கண்கள் அவர்கள் மீது தங்குமோ என்று ஆழ்ந்த பயம் வருகிறது. இவ்வாறு, அவர்கள் என்னிடமிருந்து ஓர் ஆய்வை ஏற்றுக்கொள்வது போல் தலையைக் குனிந்து கொள்கிறார்கள்—இது அவர்களின் கருத்துக்களால் ஏற்பட்டதல்லவா? இன்று வரை நான் என்னைத் தாழ்மைப்படுத்திக் கொண்டேன், ஆனால் யாரும் ஏன் கவனிக்கவில்லை? மனுஷனுக்காக நான் தலையைத் தாழ்த்த வேண்டுமா? நான் வானத்திலிருந்து பூமிக்கு வந்தேன், நான் உயரத்திலிருந்து ஓர் இரகசிய இடத்திற்கு வந்து இறங்கினேன், மனுஷருக்கு மத்தியில் வந்து என்னிடம் என்ன உள்ளது மேலும் நான் யாராய் இருக்கிறேன் என்ற அனைத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தினேன். என் வார்த்தைகள் நேர்மையானவை மற்றும் உள்ளார்ந்தவை, பொறுமை மற்றும் கனிவு கொண்டவை—ஆனால் நான் என்னவாக இருக்கிறேன் மற்றும் என்னிடம் என்ன உள்ளது என்று எப்போதாவது எவராவது பார்த்தது உண்டா? நான் இன்னும் மனுஷருக்கு மறைந்திருக்கிறேனா? மனுஷரைச் சந்திப்பது எனக்கு ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது? ஜனங்கள் அவர்களின் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பதால்தானா? நான் எனது கடமைகளை புறக்கணிப்பதும், ஜனங்கள் அனைவரும் வெற்றியைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதுமே அதற்குக் காரணமா?

தேவன் தேவனாக இருக்கிறார், அவரிடம் எளிதில் ஈடுபட முடியாது, அதே நேரத்தில் மனுஷன் மனுஷனாக இருக்கிறான், எளிதில் ஒழுக்கங்கெட்டுப் போகக் கூடாது என்று ஜனங்களின் மனதில் உள்ளது—ஆயினும் ஜனங்களின் செயல்கள் இன்னும் என் முன் கொண்டு வரப்பட முடியவில்லை. எனது தேவைப்பாடுகள் மிகவும் உயர்வாக இருப்பதாலா? மனுஷன் மிகவும் பலவீனமானவனாக இருப்பதாலா? ஏன் எப்போதும் ஜனங்கள் வெகுதூரத்திலிருந்து எனக்குத் தேவைப்படுகின்ற தரங்களை பார்க்கிறார்கள்? அவை உண்மையில் மனுஷனால் அடைய முடியாதவையா? எனது தேவைகள் ஜனங்களின் “அமைப்பின்” அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, அதனால் மனுஷனின் வளர்ச்சியை ஒருபோதும் தாண்டவில்லை—ஆனால், அப்படி இருந்தும் எனக்குத் தேவையான தரங்களை அடைய ஜனங்கள் இயலாமல் இருக்கிறார்கள். எண்ணற்ற முறை மனுஷர்களிடையே நான் கைவிடப்பட்டிருக்கிறேன், எண்ணற்ற முறை என் உடல் முட்களால் மூடப்பட்டு அவர்களுக்கு வெறுக்கத்தக்கதாக இருப்பதுபோல், ஜனங்கள் என்னைக் கேலிசெய்யும் கண்களால் பார்த்தார்கள், இப்படியாக ஜனங்கள் என்னை வெறுக்கிறார்கள், நான் மதிப்பில்லாதவன் என்று நம்புகிறார்கள். இந்த வழியில், நான் மனுஷனால் முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டேன். எண்ணற்ற முறை ஜனங்கள் என்னை குறைந்த விலைக்கு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர், மேலும் எண்ணற்ற முறை அவர்கள் என்னை அதிக விலைக்கு விற்றுள்ளனர், இதன் காரணமாகவே நான் இன்று இருக்கும் சூழ்நிலையில் என்னைக் காண்கிறேன். ஜனங்கள் இன்னும் எனக்காகத் திட்டங்களை உருவாக்குவது போல உள்ளது; அவர்களில் பெரும்பாலோர் இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் லாபத்திற்கு என்னை விற்க விரும்புகிறார்கள், ஏனென்றால் மனுஷன் என்னை ஒருபோதும் நேசிக்கவில்லை. நான் ஜனங்களிடையே ஓர் இடைத்தரகராக அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட பயன்படுத்தும் அணு ஆயுதம் போல அல்லது அவர்களிடையே கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை போல உள்ளது—இதன் விளைவாக, மொத்தத்தில், நான் மனுஷனின் இதயத்தில் முற்றிலும் மதிப்பு இல்லாமல் இருக்கிறேன், நான் கட்டாயத் தேவையில்லாத ஒரு வீட்டுப் பொருள். ஆனாலும் இதன் காரணமாக நான் மனுஷனைக் கண்டிக்கவில்லை; நான் மனுஷனைக் காப்பாற்றுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை, மற்றும் எப்போதும் மனுஷனிடம் இரக்கத்துடன் இருந்திருக்கிறேன்.

நான் ஜனங்களை நரகத்தில் தள்ளும்போது, நான் நரகத்துடன் சிறப்பாக ஓர் ஒப்பந்தம் செய்வது போலவும், நான் ஜனங்களை விற்பதில் நிபுணத்துவம் கொண்ட ஒரு வகைத் துறை போலவும், ஜனங்களை ஏமாற்றுவதில் ஒரு நிபுணர் போலவும், அவர்கள் என் கையில் கிடைத்தவுடன் அவர்களை அதிக விலைக்கு விற்பேன் என்பது போலவும் அவற்றை செய்யும்போது நான் நிம்மதியடைகிறேன் என்றும் ஜனங்கள் நம்புகிறார்கள். ஜனங்களின் வாய்கள் அதைச் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் இருதயத்தில் இதைத்தான் நம்புகிறார்கள். அவர்கள் அனைவரும் என்னை நேசித்தாலும், அவர்கள் அதை இரகசியமாகவே செய்கிறார்கள். இந்தச் சொற்ப அன்புக்கு ஈடாக இவ்வளவு பெரிய விலை கொடுத்து நான் அவர்களுக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறேனா? ஜனங்கள் ஏமாற்றுக்காரர்கள், நான் எப்போதும் ஏமாற்றப்பட்டவரின் பாத்திரத்தையே வகிக்கிறேன். நான் மிகவும் கபடமற்றவன் போல் உள்ளது: இந்தப் பலவீனமான அம்சத்தை அவர்கள் பார்த்தவுடன், அவர்கள் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஜனங்களைக் கொலை செய்வதற்கோ அல்லது சீரற்ற குறியிட்டச் சீட்டுக்களை ஒட்டுவதற்கோ அல்ல—அவை மனுஷனின் யதார்த்தம். ஒருவேளை எனது சில வார்த்தைகள் “மிக அதிகதூரம் போகலாம்”, அப்படிப்பட்ட விஷயத்தில் நான் ஜனங்களின் மன்னிப்புக்காக “கெஞ்ச” மட்டுமே முடியும்; ஏனென்றால் நான் மனுஷனின் மொழியில் “திறமை பெற்றவன்” இல்லை, நான் சொல்வதில் பெரும்பாலானவை ஜனங்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய இயலாதவை. ஒருவேளை எனது சில வார்த்தைகள் ஜனங்களின் இதயங்களைத் துளைக்கலாம், அதனால் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க என்னால் “கெஞ்ச” மட்டுமே முடியும்; ஏனென்றால் நான் மனுஷருக்கான வாழ்க்கைக்கான தத்துவத்தில் திறமை வாய்ந்தவனல்ல மற்றும் நான் பேசும் விதம் பற்றி குறிப்பிடத்தக்கவனல்ல, எனது பல வார்த்தைகள் ஜனங்களிடம் சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை எனது சில வார்த்தைகள் ஜனங்களின் நோயின் மூலத்திடம் பேசி அவர்களின் நோயை வெளிப்படுத்துகின்றன, எனவே நான் உனக்காகத் தயார் செய்த சில மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் எனக்கு உன்னைக் காயப்படுத்தும் எண்ணம் இல்லை, இந்த மருந்துக்கு எந்தப் பக்க விளைவுகளும் இல்லை. ஒருவேளை எனது சில வார்த்தைகள் “யதார்த்தமாகத்” தோன்றாமலிருக்கலாம், ஆனால் ஜனங்கள் பீதியடைய வேண்டாம் என்று நான் “கெஞ்சுகிறேன்”—என் கை மற்றும் கால்கள் “விரைந்து செயல்படவில்லை”, எனவே என் வார்த்தைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஜனங்கள் என்னைப் “பொறுத்துக்கொள்ள” வேண்டும் என்று நான் கேட்கிறேன். இந்த வார்த்தைகள் மனுஷனுக்கு உதவிகரமானவையா? இந்த வார்த்தைகளிலிருந்து ஜனங்கள் ஏதாவது பெற முடியும் என்று நம்புகிறேன், அதனால் என் வார்த்தைகள் எப்போதும் வீணாகாது!

ஏப்ரல் 9, 1992

முந்தைய: அத்தியாயம் 29

அடுத்த: அத்தியாயம் 31

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக