நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க ஏன் விருப்பமில்லாதிருக்கிறாய்?
ஜெயங்கொண்டவர்கள் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறார்கள், மற்றும்பரிபூரணப்படுத்தப்பட்ட பிறகுதான் ஜனங்கள் கடைசி நாட்களுடைய கிரியையின் மாதிரிகள் மற்றும் மாதிரிச்சான்றுகளாகிறார்கள். முழுமையாக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் பிரதிபலிப்புப் படலங்கள், கருவிகள் மற்றும் ஊழியத்திற்கான பொருள்களாக இருக்கிறார்கள். தேவனால் முற்றிலும் ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் அவருடைய நிர்வாகக் கிரியைகளின் தெளிவான படிகமாக இருக்கின்றனர், அதோடுகூட மாதிரிகள் மற்றும் மாதிரிச்சான்றுகளாகவும் இருக்கின்றனர். அத்தகைய நபர்களை விவரிக்க நான் பயன்படுத்திய இந்த வார்த்தைகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை பல சுவாரஸ்யமான கதைகளை வெளிப்படுத்துகின்றன. அற்பவிசுவாசிகளாகிய நீங்கள் உங்கள் முகம் சிவப்பு நிறமாக மாறும் வரை எப்போதும் குறிப்பிடப்படாத தலைப்பைப் பற்றி வாதாடுகிறீர்கள், இதன் விளைவாக சில சமயங்களில் உறவுகள் கூட சேதமடைந்திருக்கின்றன. இது ஒரு சிறிய தலைப்பு என்றாலும், உங்கள் சிந்தனை மற்றும் உங்கள் நம்பிக்கையில், இது ஒரு முக்கியத்துவமற்ற தலைப்பை விட அதிகம் என்பது மட்டுமல்லாமல், உங்கள் தலைவிதியுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விஷயமாகும். எனவே விவேகமற்றவர்கள் பெரும்பாலும் இது போன்ற ஓர் அற்பமான விஷயத்தால் பெரும் இழப்பை சந்திக்க அதாவது—சிறிதளவைக் காத்து, நிறைய இழக்க மட்டுமே நேரிடும். சில முக்கியமற்ற தலைப்புகள் காரணமாக, நீங்கள் ஓடிவிடுவீர்கள், ஒருபோதும் திரும்ப மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் வாழ்க்கையை முக்கியமற்றதாகப் பார்க்கிறீர்கள், மேலும் நீங்கள் எந்த பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அவைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறீர்கள். எனவே உங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், உங்கள் நடைமுறை வாழ்விலும் கூட, அந்தஸ்தைக் குறித்த உங்கள் கருத்துக்களால் நீங்கள் அடிக்கடி பல சிக்கலான மற்றும் விசித்திரமான கதைகளை உருவாக்குவீர்கள். ஒருவேளை நீங்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள், ஆனால் நீங்கள் இன்னும் தனித்தனியாக வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் உண்மையில் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்வேன், இவ்வகையான காரியங்கள் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றன. நீங்கள் அதை நம்பவில்லை என்றால், கீழே உள்ள இந்த வரிவடிவ விளக்கத்தை ஒரு சகோதரியின் (அல்லது ஒரு சகோதரரின்) வாழ்க்கையிலிருந்து பாருங்கள். அந்த நபர் உண்மையில் நீயாகவோ அல்லது ஒருவேளை உன் வாழ்க்கையில் உனக்குப் பரிச்சயமான ஒருவராகவோ இருக்கலாம். நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால், இந்த வரிவடிவ விளக்கம் நீ பெற்றிருந்த அனுபவத்தை விவரிக்கிறது. விளக்கத்தில் எதுவும் விட்டு வைக்கப்படவில்லை, ஒரு சிந்தனை அல்லது கருத்து கூட விடப்படவில்லை, ஆனால் அவை அனைத்தும் இந்தக் கதையில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீ அதை நம்பவில்லை என்றால், முதலில் அதை வாசி.
இது ஓர் “ஆவிக்குரிய நபரிடம்” இருந்து வரும் சிறிய அனுபவமாகும்.
திருச்சபையில் உள்ள சகோதர சகோதரிகள் செய்த பல காரியங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இல்லை என்பதைப் பார்த்தபோது அவள் கவலையடைந்தாள், ஆகவே அவள் அவர்களை இவ்வாறு கடிந்துகொள்ளத் தொடங்கினாள்: “நீங்கள் அவலமான பொருட்கள்! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? உண்மையிலேயே நீங்கள் ஏன் மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்கிறீர்கள்? நீங்கள் விரும்பியதைச் செய்வதற்குப் பதிலாக ஏன் சத்தியத்தைத் தேடக்கூடாது? … உங்களுக்குத்தான் நான் இந்த விஷயங்களைச் சொல்கிறேன், ஆனால் அதே நேரத்தில் அதை வெறுப்பதும் நானே. தேவன் பொறுமையின்றி பற்றி எரிவதை நான் பார்க்கிறேன், எனக்குள் ஓர் அக்கினியை நான் உணர்கிறேன். தேவன் என்னிடம் ஒப்படைத்த கிரியையை முழுமையாகச் செய்து முடிக்க நான் உண்மையிலேயே தயாராக இருக்கிறேன், உங்களுக்கு ஊழியம் செய்ய நான் உண்மையாகவே விரும்புகிறேன். இப்போது நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் என்பது சரிதான். தேவன் நம்மீது அதிக நேரத்தை செலவழித்திருக்கிறார் மற்றும் அநேக வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார், ஆனால் நாமோ இன்னும் அப்படியே இருக்கிறோம். என் இதயத்தில், நான் தேவனுக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன் என்று எப்போதும் உணர்கிறேன்….” (அவள் தொடர்ந்து பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.) பிறகு, அவள் ஜெபிக்க ஆரம்பித்தாள்: “தேவனே! எனக்குப் பலத்தை அளித்து முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு என்னை அதிகமாக அசைக்கும்படி நான் உம்மிடம் கெஞ்சுகிறேன், மேலும் உமது ஆவியானவர் என்னில் கிரியை செய்வாராக. நான் உம்முடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். இறுதியில் நீர் மகிமை அடையும் வரை, நான் என் ஜீவனைக் கொடுக்க வேண்டியதாயிருந்தாலும் கூட, எனது எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்க நான் இப்போதே தயாராக இருக்கிறேன். நாங்கள் மகத்தான துதிகளைச் செலுத்த விரும்புகிறோம். அதனால், எங்கள் சகோதர சகோதரிகள் உமது பரிசுத்த நாமத்தைத் துதிக்கும்படி மகிழ்ச்சியுடன் பாடி நடனமாடவும், உம்மை மகிமைப்படுத்தவும் உம்மை வெளிப்படுத்தவும், உமது கிரியைகள் உண்மையானவைகள் என்று நிரூபிக்கவும், நீர் சுமக்கிற பாரங்களுக்கான ஒவ்வொரு கவனத்தையும் உமக்கு செலுத்தவும் முடியும்….” அவள் இவ்வாறு ஊக்கமாக ஜெபித்தாள், பரிசுத்த ஆவியானவர் உண்மையில் அவளுக்கு ஒரு பாரத்தைக் கொடுத்தார். இந்த முறை, அவள் வழக்கத்துக்கு மாறான பாரமடைந்து, அவள் நாள் முழுவதும் வாசிப்பது, எழுதுவது, கவனிப்பதில் செலவு செய்தாள். அவள் தன்னால் முடிந்தவரை அலுவலாக இருந்தாள். அவளுடைய ஆவிக்குரிய நிலை மிகச்சிறப்பாக இருந்தது, தன் இருதயத்தில், அவள் எப்போதும் உற்சாகத்துடனும் பாரத்துடனும் இருந்தாள். அவ்வப்போது அவள் பலவீனமடைந்து சுவற்றில் மோதிக் கொள்வாள், ஆனால் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அவள் இயல்பு நிலையை மறுபடியும் பெற்றுக்கொள்வாள். இது போன்ற ஒரு கால கட்டத்திற்குப் பிறகு, அவளுடைய வளர்ச்சி துரிதம் அடைந்தது, அவளால் தேவனுடைய அநேக வார்த்தைகளைப் பற்றிய சில புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ள முடிந்தது, மேலும் அவள் ஒட்டுமொத்தமான துதிப்பாடல்களையும் விரைவாகக் கற்றுக்கொண்டாள், அவளுடைய ஆவிக்குரிய நிலை மிகச் சிறப்பாக இருந்தது. திருச்சபையில் உள்ள பல விஷயங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இல்லை என்பதை அவள் பார்த்தபோது, அவள் கவலையடைந்து தன் சகோதர சகோதரிகளை இவ்வாறு நிந்தித்தாள்: “இதுதான் உங்கள் கடமைக்கான பக்தியா? ஏன் உங்களால் இவ்வளவு சிறிய விலைக்கிரயத்தைக் கூட செலுத்த முடியவில்லை? நீங்கள் அதை செய்ய விரும்புவதில்லை என்றால், நான் செய்வேன்….”
அவள் ஒரு பாரத்தைப் பெற்றிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் மேலும் மேலும் கிரியை செய்ததால் அவள் தன் விசுவாசத்தில் பலமுள்ளவளாக உணர்ந்தாள். அவள் எப்போதாவது சில சிரமங்களை எதிர்கொண்டு எதிர்மறையாக மாறிவிடுவாள், ஆனால் அவளால் இவைகளை மேற்கொள்ள முடிந்தது. அதாவது, அவள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவித்தபோது, அவளுடைய நிலை அற்புதமாக இருந்தபோதிலும், அவளால் சில சிரமங்களைச் சந்திப்பதையோ அல்லது ஏதோ ஒரு வகையில் பலவீனப்படுவதையோ தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்க முடியாமல் நடக்கும், ஆனால் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அவளால் அந்த நிலைகளில் இருந்து வெளியே வர முடிந்தது. அவள் பலவீனத்தை அனுபவித்தபோது, அவள் ஜெபம் செய்வாள், அவளுடைய தனிப்பட்ட வளர்ச்சி உண்மையில் போதுமானதாக இல்லை என்பதை உணர்வாள், இருப்பினும் அவள் தேவனுடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தாள். தேவன் என்ன செய்தாலும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், அவருடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும் அவள் ஆயத்தமாக இருந்தாள். அவளைப் பற்றி சில கருத்துகள் மற்றும் தவறான அபிப்ராயங்கள் கொண்ட சிலர் இருந்தனர், ஆனால் அவளால் தன்னை ஒரு பக்கமாக வைத்துக்கொண்டு அவர்களுடன் ஐக்கியத்தில் ஈடுபட முடிந்தது. பரிசுத்த ஆவியானவர் தனது இயல்பான கிரியையைச் செய்யும்போது ஜனங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தேவனுடைய கிரியை மாறத் தொடங்கியது, மேலும் ஜனங்கள் அனைவரும் கிரியையின் மற்றொரு கட்டத்திற்குள் நுழைந்தனர், அதில் தேவன் அவர்களிடம் வெவ்வேறு கோரிக்கைகளைக் கொண்டிருந்தார். எனவே ஜனங்களுக்கான புதிய கோரிக்கைகளை உருவாக்கும் புதிய வார்த்தைகள் பேசப்பட்டன: “… நான் உங்களைத்தான் வெறுத்திருக்கிறேன், ஆசீர்வாதங்களை அல்ல. உங்களை ஆசீர்வதிக்கும் எண்ணத்தையும் நான் பெற்றிருந்ததில்லை உங்களை முழுமையாக்கும் எண்ணத்தையும் நான் பெற்றிருந்ததில்லை, ஏனெனில் நீங்கள் மிகவும் கலகக்காரர்கள். நீங்கள் தாறுமாறு உள்ளவர்களாகவும் வஞ்சகர்களாகவும் இருப்பதாலும், மேலும் நீங்கள் திறமையில் குறைவுபட்டிருப்பதாலும் நீங்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதாலும், நீங்கள் என் பார்வைக்குள்ளோ அல்லது என் இருதயத்திலோ ஒருபோதும் இருந்ததில்லை. உங்களைக் கண்டிக்கும் ஒரே நோக்கத்துடன் என் கிரியை செய்யப்படுகிறது; என் கை ஒருபோதும் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இல்லை, என் சிட்சையும் வெகு தொலைவில் இல்லை. நான் உங்களைத் தொடர்ந்து நியாயந்தீர்த்து, சபித்திருக்கிறேன். உங்களுக்கு என்னைப் பற்றிய புரிந்து கொள்ளுதல் இல்லாததால், என் உக்கிர கோபம் எப்போதும் உங்கள் மீது உள்ளது. நான் எப்பொழுதும், உங்கள் மத்தியில் கிரியை செய்திருக்கும் போதும், உங்கள் மீதான எனது மனப்பான்மையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது அருவருப்பைத் தவிர வேறல்ல—வேறெந்த மனப்பான்மையோ எண்ணமோ அல்ல. எனது ஞானம் மற்றும் எனது மகத்தான வல்லமைக்கு நீங்கள் பிரதிபலிப்புப் படலங்களாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் என் பிரதிபலிப்புப் படலங்களைத் தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் உங்கள் கலகத்தின் மூலம் என் நீதி வெளிப்படுகிறது. என் கிரியையின் இணைப்புகளாக இருக்கும்படி, நீங்கள் என் கிரியைக்கான பிரதிபலிப்புப் படலங்களாக நான் உங்களை செயல்பட வைத்திருக்கிறேன்….” “இணைப்புகள்” மற்றும் “பிரதிபலிப்புப் படலங்கள்” என்ற வார்த்தைகளைப் பார்த்தவுடன், அவள் யோசிக்க ஆரம்பித்தாள்: “இந்த வார்த்தைகளின் வெளிச்சத்தில் நான் எப்படி பின்பற்ற வேண்டும்? இவ்வளவு விலைக்கிரயம் கொடுத்து, நான் இன்னும் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்கிறேன். ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பவர் வெறும் ஊழியம் செய்பவர் அல்லவா? கடந்த காலத்தில் நாங்கள் ஊழியம் செய்பவர்களாக இருக்கவில்லை, நாங்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்தோம் என்று கூறப்பட்டது, ஆனால் நாம் ஊழியம் செய்பவர்களின் பாத்திரத்தில் இன்றும் இல்லையா? ஊழியம் செய்பவர்கள் குறைவுற்ற வாழ்க்கையுடையவர்களாய் இருப்பதில்லையா? நான் எவ்வளவு பாடு அனுபவித்தாலும், தேவன் அதற்காக என்னைப் புகழ மாட்டார்! நான் ஒரு பிரதிபலிப்புப் படலமாக வாழ்ந்து முடித்த பிறகு, அது முடிந்துவிடாதா? …” அவள் இதைப் பற்றி எவ்வளவு அதிகமாக யோசித்தாளோ, அவள் அவ்வளவு அதிகமாக மனச்சோர்வடைந்தாள். அவள் திருச்சபைக்கு வந்து தன் சகோதர சகோதரிகளின் நிலைகளைக் கண்டபோது அவள் மிகவும் மோசமாக உணர்ந்தாள்: “நீங்களும் சரியில்லை! நானும் சரியில்லை! நான் எதிர்மறையாகிவிட்டேன். அடடா! என்ன செய்ய முடியும்? தேவன் இன்னும் நம்மை விரும்பவில்லை. இந்த வகையான கிரியையைச் செய்வதில், அவர் நம்மை எதிர்மறையாக ஆக்கமாட்டார் என்பதற்கான ஒரு நம்பிக்கையும் இல்லை. என்னில் என்ன தவறு என்று தெரியவில்லை. நான் ஜெபம் செய்யக் கூட விரும்பவில்லை. எப்படியாயினும், நான் இப்போது நன்றாக இல்லை, என் உள்ளான உந்துதலை என்னால் உண்மையில் ஒன்று திரட்ட முடியவில்லை. நான் பலமுறை ஜெபம் செய்துவிட்டேன், ஆனால் என்னால் இன்னும் முடியவில்லை, மேலும் தொடர்ந்து செய்ய நான் தயாராக இல்லை. இப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். நாம் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறோம் என்று தேவன் கூறுகிறார், எனவே பிரதிபலிப்புப் படலங்கள் வெறும் ஊழியம் செய்பவர்கள் அல்லவா? நாம் பிரதிபலிப்புப் படலங்கள், அவருடைய குமாரர்களும் அல்ல, நாம் அவருடைய ஜனங்களும் அல்ல என்று தேவன் கூறுகிறார். நாம் அவருடைய குமாரர்கள் அல்ல, அவருடைய முதற்பேரான குமாரர்களும் அல்ல. நாம் ஒன்றும் இல்லை, வெறும் பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கிறோம். அதுதான் நாம் என்றால், நமக்கு சாதகமான முடிவு கிடைக்குமா? பிரதிபலிப்புப் படலங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஏனென்றால் அவைகளுக்கு ஜீவன் இல்லை. நாம் அவருடைய குமாரர்களாக, அவருடைய ஜனங்களாக இருந்தால், அப்போது அதில் நம்பிக்கை இருக்கும்—நாம் முழுமையாக்கப்படலாம். தேவனுடைய ஜீவனை பிரதிபலிப்புப் படலங்களால் சுமந்து செல்ல முடியுமா? தனக்கு ஊழியம் செய்பவர்களுக்குள் தேவன் ஜீவனை வைக்க முடியுமா? அவரால் நேசிக்கப்படுபவர்கள் அவருடைய ஜீவனைப் பெற்றிருப்பவர்கள், அவருடைய ஜீவன் உள்ளவர்கள் மட்டுமே அவருடைய குமாரர்கள், அவருடைய ஜனங்கள். நான் எதிர்மறையாக மற்றும் பலவீனமாக இருந்தாலும், நீங்கள் அனைவரும் எதிர்மறையாக இல்லை என்று நம்புகிறேன். பின்வாங்குவதும் எதிர்மறையாக இருப்பதும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது என்பதை நான் அறிவேன், ஆனால் நான் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்கத் தயாராக இல்லை. நான் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க அஞ்சுகிறேன். எப்படியிருந்தாலும், என்னிடம் இவ்வளவு பலம் மட்டுமே உள்ளது, என்னால் இப்போது தொடர்ந்து செல்ல முடியாது. நான் செய்திருப்பதைப் போல் உங்களில் யாரும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன், ஆனால் என்னிடமிருந்து ஓரளவு உத்வேகத்தைப் பெற முடியும். நான் மரித்துப் போகலாம் என்பதாய்க் கூடத் தோன்றுகிறது! என் மரணத்தைச் சந்திப்பதற்கு முன் சில இறுதி வார்த்தைகளை நான் உங்களுக்கு விட்டுச் செல்வேன்—உங்களால் இறுதி வரை பிரதிபலிப்புப் படலங்களாகச் செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்; ஒருவேளை இறுதியில், தேவன் பிரதிபலிப்புப் படலங்களைப் புகழ்வார்….” சகோதர சகோதரிகள் இதைப் பார்த்தபொழுது, ஆச்சரியப்பட்டனர்: “அவள் எப்படி இவ்வளவு எதிர்மறையாக இருக்க முடியும்? கடந்த இரண்டு நாட்களாக அவள் முற்றிலும் நன்றாகத்தானே இருந்தாள்? அவள் ஏன் திடீரென்று தன் பலத்தை இழந்தாள்? அவள் ஏன் இயல்பாக இல்லை?” அவள் இப்படிச் சொன்னாள்: “நான் இயல்பாக இல்லை என்று சொல்ல வேண்டாம். உண்மையில், என் இருதயத்தில் உள்ள எல்லாவற்றையும் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன். தேவனுடைய சித்தத்தை நான் நிறைவேற்றவில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் அவருடைய பிரதிபலிப்புப் படலமாகச் செயல்படத் தயாராக இல்லை என்பதால் அல்லவா? நான் தவறொன்றும் செய்யவில்லை. ஒருவேளை ஒரு நாள் தேவன் ‘பிரதிபலிப்புப் படலங்கள்’ என்ற தலைப்பை ‘ஜீவனுள்ள சிருஷ்டிகள்’ என்று மாற்றுவார், அது மட்டுமல்லாமல், முக்கியமான வழிகளில் அவரால் பயன்படுத்தப்படும் தமது ஜீவனுள்ள சிருஷ்டிகளாகவும் மாற்றுவார். கொஞ்சம் நம்பிக்கை இதில் இருக்கிறதல்லவா? நீங்கள் எதிர்மறையாகவோ அல்லது சோர்வடையவோ மாட்டீர்கள் என்று நம்புகிறேன், மேலும் தேவனைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கும் பிரதிபலிப்புப் படலங்களாக ஊழியம் செய்வதற்கும் உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்யக்கூடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், என்னால் தொடர முடியாது. என் செயல்கள் உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள்.” மற்ற ஜனங்கள் அதைக் கேட்டு, “நீ அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினாலும், நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், ஏனென்றால் தேவன் எங்களை ஒருபோதும் அநியாயமாக நடத்தியதில்லை. உன்னுடைய எதிர்மறையால் நாங்கள் கட்டுப்படுத்தப்பட மாட்டோம்” என்று கூறினர்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இந்த அனுபவத்தைக் கடந்துசென்ற பிறகு, அவள் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பது பற்றி இன்னும் எதிர்மறையான நிலையில் இருந்தாள், அதனால் நான் அவளிடம் சொன்னேன்: “உனக்கு என் கிரியைப் பற்றிய புரிந்து கொள்ளுதல் இல்லை. என் வார்த்தைகளின் ஆழமான சத்தியம், சாராம்சம் அல்லது எதிர்கால பலன்கள் பற்றி உனக்குப் புரிதல் இல்லை. என் கிரியையின் நோக்கமோ அல்லது அதன் ஞானமோ உனக்குத் தெரியாது. எனது சித்தத்தைப் பற்றிய புரிதல் உனக்கு இல்லை. உனக்குப் பின்வாங்க மட்டுமே தெரியும், ஏனென்றால் நீ ஒரு பிரதிபலிப்புப் படலம்—நீ அந்தஸ்தால் உன்னை அளவுக்கதிகமாக ஆக்கிரமித்துள்ளாய்! எப்படிப்பட்ட மூடன் நீ! கடந்த காலத்தில் நான் உனக்கு ஏராளமானவைகளை சொல்லியிருக்கிறேன். நான் உன்னைப் பரிபூரணப்படுத்துவேன் என்று சொன்னேன்; நீ மறந்துவிட்டாயா? நான் எப்போதுமே பிரதிபலிப்புப் படலங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பு நான் பரிபூரணப்படுத்தப்படுவதைப் பற்றி பேசவில்லையா?” “காத்திருங்கள், நான் அதைப் பற்றி யோசிக்கட்டும். ஆம், அது சரிதான்! நீர் பிரதிபலிப்புப் படலங்களைப் பற்றி பேசுவதற்கு முன்பே அந்த விஷயங்களைச் சொன்னீர்!” “நான் பரிபூரணமாக்கப்ப்படுவதைப் பற்றிப் பேசியபோது, ஜனங்கள் ஜெயங்கொண்ட பிறகுதான் அவர்கள் பரிபூரணமாக்கப்படுவார்கள் என்று நான் சொல்லவில்லையா?” “ஆம்!” “என் வார்த்தைகள் உண்மையானதாக இல்லையா? அவைகள் நல்லெண்ணத்தில் சொல்லப்படவில்லையா?” “ஆம்! நீர் அநியாயமான எதையும் ஒருபோதும் சொல்லாத தேவன்—இதை யாரும் மறுக்கத் துணிய முடியாது. ஆனால் நீர் பல வழிகளில் பேசுகிறீர்.” “கிரியையின் வெவ்வேறு கட்டங்களுக்கு ஏற்ப எனது பேசும் முறைகள் மாறவில்லையா? நான் சொல்கிற விஷயங்கள் உன் தேவையின் அடிப்படையில் செய்யப்படவும் சொல்லப்படவுமில்லையா?” “நீர் ஜனங்களின் தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்கிறீர், அவர்களுக்குத் தேவையானதை நீர் வழங்குகிறீர். இது உண்மையல்ல!” “அப்படியானால் நான் உனக்குச் சொல்லியிருக்கிற விஷயங்கள் பயனுள்ளதாக இருக்கவில்லையா? என் சிட்சைகள் உன்னுடைய நலனுக்காக நிறைவேற்றப்படவில்லையா?” “இது என்னுடைய சொந்த நலனுக்காக என்று நீர் இன்னும் எப்படிச் சொல்ல முடியும்! நீர் என்னைக் கிட்டத்தட்ட மரணத்தருவாய் வரை சிட்சித்தீர்—நான் இனி ஒருபோதும் வாழ விரும்பவில்லை. இன்று நீர் இதைச் சொல்கிறீர், நாளை நீர் அதைச் சொல்கிறீர். நீர் என்னைப் பரிபூரணப்படுத்துவது என் நலனுக்காகவே என்று எனக்குத் தெரியும், ஆனால் நீர் என்னைப் பரிபூரணப்படுத்தியிருக்கவில்லை—நீர் என்னை ஒரு பிரதிபலிப்புப் படலமாக்கி என்னை நீர் இன்னும் சிட்சிக்கிறீர். நீர் என்னை வெறுக்கிறீர், அப்படித்தானே? ஒருவரும் உமது வார்த்தைகளை விசுவாசிக்கத் துணிவதில்லை, உமது சிட்சை உம்முடைய இருதயத்தில் உள்ள வெறுப்பைத் தீர்க்க மட்டுமே என்பதையும், என்னை இரட்சிப்பதற்காக அல்ல என்பதையும் இப்போதுதான் நான் தெளிவாகக் கண்டேன். முன்னர் நீர் என்னிடமிருந்து சத்தியத்தை மறைத்தீர்; நீர் என்னைப் பரிபூரணப்படுத்துவதாக சொன்னீர், அந்த சிட்சை என்னைப் பரிபூரணபடுத்துவதற்காக இருந்தது. அதனால் நான் எப்போதும் உமது சிட்சைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறேன்; இன்று நான் ஒரு பிரதிபலிப்புப் படலம் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பேன் என நான் கற்பனை கூட செய்ததில்லை. தேவனே, நீர் என்னை வேறு எதைப் போலாவது செயல்படுத்தி இருந்தால் நலமாக இருந்திருக்கும் அல்லவா? நீர் என்னை ஒரு பிரதிபலிப்புப் படலத்தின் தொப்பியை அணிய வைக்க வேண்டுமா? ராஜ்யத்தில் ஒரு வாயில்காப்பாளராக இருப்பதைக் கூட நான் ஏற்றுக்கொள்வேன். நான் இங்கும் அங்குமாக ஓடி என்னையே ஒப்புக்கொடுத்திருந்தேன், ஆனால் இறுதியில் என் கரங்கள் வெறுமையாக உள்ளன—நான் முற்றிலும் பணமில்லாமல் இருக்கிறேன். ஆயினும், இப்போது கூட நீர் என்னை உமது பிரதிபலிப்புப் படலமாகச் செயல்பட வைப்பதாகச் சொல்கிறீர். நான் என் முகத்தைக் கூட எப்படிக் காட்ட முடியும்?” “நீ எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாய்? கடந்த காலத்தில் நான் அநேக நியாயத்தீர்ப்புக் கிரியைகளைச் செய்திருக்கிறேன், அது உனக்குப் புரியவில்லையா? உன்னைப் பற்றிய உண்மையான புரிதல் உனக்கு இருக்கிறதா? ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற தலைப்பானது வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பாகவும் இருக்கிறதல்லவா? பிரதிபலிப்புப் படலங்களை பற்றிய எனது பேச்சு அனைத்தும் உன்னை நியாயந்தீர்ப்பதற்கான ஒரு வழியின் செயல்முறை என்று நீ நினைக்கிறாயா? பிறகு நீ என்னை எப்படிப் பின்பற்றுவாய்?” “உம்மை எப்படிப் பின்பற்றுவது என்று நான் இன்னும் திட்டமிடவில்லை. முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் ஒரு பிரதிபலிப்புப் படலமா இல்லையா? பிரதிபலிப்புப் படலங்கள் கூட பரிபூரணப்படுத்தப்படக் கூடுமா? ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற தலைப்பு மாற்றப்படக் கூடுமா? நான் ஒரு பிரதிபலிப்புப் படலமமாக இருப்பதன் மூலம் மாபெரும் சாட்சியைப் பகர்ந்து, பின்னர் பரிபூரணப்படுத்தப்பட்ட ஒருவராகவும், தேவனை நேசிப்பதற்கு முன்மாதிரியானவளாகவும், தேவனுக்கு மிகவும் நெருக்கமானவளாகவும் ஆக முடியுமா? நான் முழுமையாக்கப்பட முடியுமா? என்னிடம் உண்மையை சொல்லுங்கள்!” “காரியங்கள் எப்போதும் வளர்ந்து வருகின்றன, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? நீ தற்போது ஒரு பிரதிபலிப்புப் படலமமாக உன் பொறுப்பில் கீழ்ப்படிவதற்கு ஆயத்தமாக இருக்கும் வரை, உன்னால் மாற முடியும். நீ பிரதிபலிப்புப் படலமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கும் உன்னுடைய விதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், தங்களது வாழ்வின் மனநிலையில் மாற்றம் கொண்டவர்களில் ஒருவராக நீ இருக்க முடியுமா இல்லையா என்பதுதான்.” “உம்மால் என்னைப் பரிபூரணப்படுத்த முடியுமா முடியாதா என்று சொல்ல முடியுமா?” “முடிவுபரியந்தம் என்னைப் பின்பற்றி எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உன்னைப் பரிபூரணமாக்க முடியும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.” “நான் எத்தகைய துன்பம அனுபவிக்க வேண்டும்?” “நீ துன்பத்தையும், கூடவே வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையையும், குறிப்பாக, பிரதிபலிப்புப் படலமமாககஇருப்பதற்கான சிட்சையைப் போன்ற வார்த்தைகளின் சிட்சையையும் அனுபவிப்பாய்!” “அதே சிட்சை ஒரு பிரதிபலிப்புப் படலமமாகவும் இருக்கிறதா? சரி, துன்பங்களுக்கு உட்படுவதன்மூலம் உம்மால் நான் பரிபூரணமாக்கப்பட முடியுமானால், நம்பிக்கை இருக்குமானால், அது நல்லது. இது ஒரு சிறு துளியளவு நம்பிக்கையாக இருந்தாலும், அது ஒரு பிரதிபலிப்புப் படலமமாக இருப்பதை விடவும் சிறந்தது. ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற அந்தத் தலைப்பு, மிகவும் மோசமாகத் தெரிகிறது. நான் ஒரு பிரதிபலிப்புப் படலமமாக இருக்கத் தயாராக இல்லை!” “பிரதிபலிப்புப் படலங்களைப் பற்றிய மிகவும் பயங்கரமானது என்ன? பிரதிபலிப்புப் படலங்களாய் இருப்பவர்கள் தங்களின் சொந்த உரிமையில் சரியாக இல்லையா? ஆசீர்வாதங்களை அனுபவிக்க பிரதிபலிப்புப் படலங்களாய் இருப்பவர்கள் தகுதியற்றவர்களா? பிரதிபலிப்புப் படலங்களாய் இருப்பவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்று நான் சொன்னால், அப்போது நீயும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியுமே. எனது கிரியையின் காரணமாக ஜனங்களின் தலைப்புகள் மாறும் என்பது உண்மையல்லவா? இருந்தபோதிலும், வெறும் ஒரு தலைப்பு உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கிறதா? நீ இந்த வகையான பிரதிபலிப்புப் படலம் என்பது உண்மையிலேயே தகுதியானது. நீ பின்பற்றத் தயாராக இருக்கின்றாயா இல்லையா?” “சரி, நீர் என்னை முழுமையாக்க முடியுமா முடியாதா? உம்முடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க நீர் என்னை அனுமதிக்கக் கூடுமா?” “நீ முடிவுபரியந்தம் பின்பற்றத் தயாரா இல்லையா? நீ உன்னையே அர்ப்பணிக்க ஆயத்தமா?” “நான் அதை மீண்டும் சிந்திக்கட்டும். ஒரு பிரதிபலிப்புப் படலம் கூட உம்முடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும், மேலும் முழுமையாக்கப்பட முடியும். முழுமையடைந்த பிறகு, நான் உமக்கு நெருக்கமானவளாக இருப்பேன், உமது சித்தத்தை முற்றிலும் புரிந்துகொள்வேன், மேலும் நீர் பெற்றிருப்பவைகளை நானும் பெற்றிருப்பேன். நீர் அனுபவிப்பதை நானும் அனுபவிப்பேன், மேலும் நீர் அறிவதை நானும் அறிந்து கொள்வேன். … துன்பங்களை அனுபவித்து, பரிபூரணப்படுத்தப்பட்ட பிறகு, என்னால் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். அதனால் நான் உண்மையில் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பேன்?” “நீ என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பாய் என்று கவலைப்படாதே. நான் உனக்குச் சொன்னாலும் கூட, இவை உன் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஒரு நல்ல பிரதிபலிப்புப் படலமான பிறகு, நீ ஜெயங்கொள்வாய், நீ ஒரு வெற்றிகரமான பிரதிபலிப்புப் படலமாகஇருப்பாய். இதுவே ஜெயங்கொண்ட ஒருவரின் மாதிரி மற்றும் மாதிரிச் சான்றாகும், ஆனால் நிச்சயமாக நீ ஜெயங்கொண்ட பிறகு மட்டுமே ஒரு மாதிரியாகவும் மாதிரிச் சான்றாகவும் மாற முடியும்.” “ஒரு மாதிரி மற்றும் மாதிரிச் சான்று என்றால் என்ன?” “இது ஜெயங்கொண்டிராதவர்களாகிய அனைத்து புறஜாதியினருக்கும் ஒரு மாதிரி மற்றும் மாதிரிச் சான்றாகும்.” “இதில் எத்தனை பேர் அடங்குவர்?” “அநேக ஜனங்கள். இது உங்களில் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் மட்டுமல்ல—உலகம் முழுவதும் இந்த நாமத்தை ஏற்றுக்கொண்ட அனைவரும் ஜெயங்கொண்டிருக்க வேண்டும்.” “அப்படியானால், இது ஐந்து அல்லது பத்து நகரங்கள் மட்டும் இல்லையா!” “இதைப் பற்றி இப்போது கவலைப்படாதே, உன்னைப் பற்றி மிகுதியாகக் கவலைப்படாதே. நீ இப்போது எப்படி பிரவேசத்தை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்து! நீ முழுமையாக்கப்பட முடியும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.” “எந்த அளவிற்கு? நான் எத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்?” “நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீ முழுமையாக்கப்பட முடியும் என்று நான் உறுதியளித்தேன். நான் நம்பகமானவர் என்பதை நீ மறந்துவிட்டாயா?” “நீர் நம்பகமானவர் என்பது உண்மைதான், ஆனால் உமது சில பேச்சு முறைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்று நான் முழுமையாக்கப்பட முடியும் என்று நீர் உத்தரவாதம் அளிக்கிறீர், ஆனால் நாளை அது நிச்சயமற்றது என்றும் நீர் கூறலாம். மேலும் சில ஜனங்களிடம் நீர், ‘உன்னைப் போன்ற ஒருவர் முழுமையாக்கப்பட முடியாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்’ எனக் கூறுகிறீர். உமது வார்த்தைகளால் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது. நான் அதை வெறுமனே நம்பத் துணிவதில்லை.” “அதனால் நீ உன்னையே அர்ப்பணிக்க முடியுமா முடியாதா?” “எதை அர்ப்பணிப்பது?” “உன் எதிர்காலத்தையும் உன் நம்பிக்கையையும் அர்ப்பணி.” “அந்த விஷயங்களை விட்டுவிடுவது எளிதானதா! ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற தலைப்புதான் முக்கிய விஷயமாக இருக்கிறது—உண்மையிலேயே அது எனக்கு வேண்டாம். நீர் அந்தத் தலைப்பை என்னிடமிருந்து நீக்கிவிட்டால், நான் எதற்கும் ஆயத்தமாக இருக்க முடியும், எதையும் செய்ய முடியும். இவை வெறும் சிறிய காரியங்கள் அல்லவா? நீர் அந்தப் பதவியை நீக்கிப் போட முடியுமா?” “அது எளிதாக இருக்கும், இல்லையா? அந்தத் தலைப்பை நான் உனக்குக் கொடுக்கக் கூடுமானால், நிச்சயமாக நான் அதை எடுத்துக்கொள்ளவும் முடியும். ஆனால் அதற்கான நேரம் இது அல்ல. கிரியையின் இந்தக் கட்டத்திற்கான உன் அனுபவத்தை நீ முதலில் முடிக்க வேண்டும், அப்போதுதான் நீ ஒரு புதிய தலைப்பைப் பெற முடியும். ஒருவர் எவ்வளவு அதிகமாக உன்னைப் போல இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க வேண்டும். நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பதைக் குறித்து எவ்வளவு பயப்படுகிறாயோ, அவ்வளவு அதிகமாக நான் உன்னை முத்திரை குத்துவேன். உன்னைப் போன்ற ஒரு நபர் கண்டிப்பாகத் திருத்தப்பட்டு நடத்தப்பட வேண்டும். ஒருவர் எவ்வளவு அதிகமாக கலகக்காரராக இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் ஊழியம் செய்பவர்களாக இருப்பார்கள், இறுதியில் அவர்கள் ஒன்றும் ஆதாயப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.” “நான் மிகவும் விடாமுயற்சியுடன் தேடுகிறேன் என்றால், என்னால் ஏன் ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற பெயரைத் தூக்கி எறிய முடியாது? இத்தனை வருடங்களாக நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்து வந்தோம், சிறிதளவு கூட பாடுபடவில்லை. நாங்கள் உமக்காக அநேக காரியங்களைச் செய்துள்ளோம். நாங்கள் காற்றையும் மழையையும் கடந்து சென்றோம்; நாங்கள் எங்கள் வாலிபத்தின் முடிவை நெருங்கிவிட்டோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவும் இல்லை குடும்ப வாழ்க்கையை துவங்கவும் இல்லை மற்றும் எங்களில் அதைச் செய்தவர்கள் இன்னும் வெளியேவந்திருக்கிறார்கள். நான் உயர்நிலைப் பள்ளி வரை பள்ளிக்கூடத்தில் இருந்தேன், ஆனால் நீர் வந்ததாகக் கேள்விப்பட்டவுடன், நான் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை விட்டுவிட்டேன். நாங்கள் பிரதிபலிப்புப் படலங்கள் என்று நீர் சொல்கிறீர்! நாங்கள் நிறைய இழந்துவிட்டோம்! நாங்கள் இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்கிறோம், ஆனால் இப்போது நாங்கள் வெறும் உமது பிரதிபலிப்புப் படலங்கள் என்று ஆகிவிட்டது. இது என் முன்னாள் வகுப்புத் தோழர்கள் மற்றும் என் சகாக்களை என்னைப் பற்றி என்ன நினைக்க வைக்கும்? அவர்கள் என்னைப் பார்த்து என் நிலை மற்றும் என் அந்தஸ்தைப் பற்றிக் கேட்கும்போது, அவர்களுக்குச் சொல்ல நான் எப்படி வெட்கப்படாமல் இருக்க முடியும்? முதலில், உம் மீது இருந்த என் நம்பிக்கையின் காரணமாக நான் எந்த விலைக்கிரயத்தையும் கொடுத்தேன், மற்றவர்கள் அனைவரும் என்னை ஒரு முட்டாள் என்று பரியாசம் செய்தனர். ஆனால் நான் இன்னும் பின்பற்றி, என் வேளை வரும் அந்த நாளுக்காக ஏங்கினேன், அப்போது நான் விசுவாசிக்காத அனைவரையும் காட்ட முடியும். ஆனால் அதற்குப் பதிலாக, இன்று நான் ஒரு பிரதிபலிப்புப் படலம் என்று நீர் சொல்கிறீர். தலைப்புகளில் மிகக் குறைந்ததை நீர் எனக்கு வழங்கினால், நீர் என்னை ராஜ்யத்தின் ஜனங்களில் ஒருவராக இருக்க அனுமதித்தால், அதுவே போதுமானதாக இருக்கும்! நான் உமது சீஷியாகவோ அல்லது உமது நம்பிக்கைக்குரியவளாகவோ இருக்க முடியாவிட்டாலும், உம்மைப் பின்பற்றுபவளாக இருப்பதே எனக்குப் போதுமானதாக இருக்கும்! எங்கள் குடும்பங்களை விட்டு விட்டு, இத்தனை வருடங்களாக நாங்கள் உம்மைப் பின்பற்றி வந்தோம், இப்போது வரை இவ்வளவு காலமாக தேடுவது மிகவும் கடினமாக இருந்திருக்கிறது, அதற்காக நாங்கள் காண்பிக்க வேண்டியதெல்லாம் பிரதிபலிப்புப் படலம் என்ற தலைப்பு மட்டுமே! நான் உமக்காக எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டேன்; பூமிக்குரிய எல்லா செல்வங்களையும் விட்டுவிட்டேன். முன்பு, யாரோ ஒருவர் எனக்கு ஒரு திறமையுள்ள வாழ்க்கைத் துணையை அறிமுகப்படுத்தினார். அவர் உண்மையில் அழகாகவும் நன்கு உடையணிந்தவராகவும் இருந்தார்; அவர் ஓர் உயர் மட்ட அரசாங்க அதிகாரியின் மகனாக இருந்தார். அந்த நேரத்தில் நான் அவரில் ஆர்வமாக இருந்தேன். ஆனால் தேவன் தோன்றியிருந்தார் மற்றும் தன்னுடைய கிரியையைச் செய்துகொண்டிருந்தார் என்று நான் கேள்விப்பட்டவுடன், நீர் எங்களை ராஜ்யத்திற்குள் வழிநடத்தி எங்களை பரிபூரணப்படுத்தப் போகிறீர், எல்லாவற்றையும் விட்டுவிடக் கொஞ்சமும் நேரம் செலவழிக்காமல் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று நீர் எங்களிடம் கேட்டீர், நான் அதைக் கேட்டவுடன், நான் முற்றிலும் உறுதியாக இல்லை என்பதைக் கண்டேன். பிறகு என்னை நானே கடினப்படுத்திக்கொண்டு அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டேன். அதன் பிறகு, அவர் என் குடும்பத்திற்கு பல முறை பரிசுகளை அனுப்பினார், ஆனால் நான் அவைகளைப் பார்க்கக் கூட இல்லை. அந்த நேரத்தில் நான் வருத்தப்பட்டேன் என்று நீர் நினைக்கிறீரா? ஏதோ ஒரு வகையில் அது மிகவும் நன்றாகத்தான் இருந்தது, மேலும் அது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. நான் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும்? இரவில் என்னால் தூங்க முடியாத அளவுக்கு பல நாட்களாக நான் வருத்தப்பட்டேன், ஆனால் இறுதியில் நான் அப்படியே அதை விட்டுவிட்டேன். நான் ஜெபம் செய்த ஒவ்வொரு முறையும், பரிசுத்த ஆவியானவரால் நான் ஏவப்பட்டேன், அவர் சொன்னார்: ‘எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய நீ ஆயத்தமாய் இருக்கிறாயா? எனக்காக உன்னையே நீ ஒப்புக்கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறாயா?’ உம்முடைய அந்த வார்த்தைகளை நான் நினைக்கும் போதெல்லாம், நான் அழுவேன். எனக்கு ஞாபகத்தில் இருப்பதை விட பல முறை நான் ஏவப்பட்டு சோகத்தில் அழுதேன். ஒரு வருடம் கழித்து அந்த மனிதன் திருமணம் செய்து கொண்டான் என்று நான் கேள்விப்பட்டேன். நான் பரிதாபமாக இருந்தேன் என்று சொல்லத் தேவையில்லை, ஆனால் உமக்காக நான் அதையும் அப்படியே போகட்டும் என்று விட்டுவிட்டேன். என் உணவு மற்றும் உடை ஆகிய இவை அனைத்தும் தரமற்றது என்று கூட குறிப்பிடாமல்—நான் அந்தத் திருமணத்தைக் கைவிட்டேன், நான் இவை அனைத்தையும் விட்டுவிட்டேன், எனவே நீர் என்னை ஒரு பிரதிபலிப்புப் படலமாக செயல்பட வைக்கக் கூடாது! என் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வாகிய என் திருமணத்தை நான் கைவிட்டுவிட்டேன், இவையெல்லாம் என்னையே உமக்குப் படைப்பதற்காகத்தான். ஒரு நபரின் முழு வாழ்க்கையும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்து மகிழ்ச்சியான குடும்பத்தைக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை. நான் இதைப் போக விட்டுவிட்டேன், எல்லா விஷயங்களிலும் சிறந்ததாகிய இதையே விட்டுவிட்டேன், இப்போது என்னிடம் எதுவும் இல்லை, நான் தன்னந்தனியாக இருக்கிறேன். நீர் என்னை எங்கே போகவிட்டீர்? நான் உம்மைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து நான் கஷ்டப்பட்டேன். நான் நல்ல வாழ்க்கையைப் பெற்றிருந்ததில்லை. நான் என் குடும்பத்தையும் என் வாழ்க்கையையும், மாம்சத்தின் அனைத்து மகிழ்ச்சியையும் விட்டுவிட்டேன், நாங்கள் அனைவரும் செய்திருக்கிற இந்தத் தியாகமானது உமது ஆசீர்வாதத்தை அனுபவிக்க இன்னும் போதாதா? எனவே இப்போது இந்த ‘பிரதிபலிப்புப் படலமே’ காரியமாக இருக்கிறது. தேவனே, நீர் வெகுதூரம் சென்றுவிட்டீர்! எங்களைப் பாரும்—இந்த உலகத்தில் நம்புவதற்கு எங்களுக்கு எதுவும் இல்லை. எங்களில் சிலர் எங்கள் குழந்தைகளைக் கைவிட்டுவிட்டோம், சிலர் எங்கள் வேலையை, எங்கள் வாழ்க்கைத் துணைகளை,[அ] மற்றும் இன்னும் பலரைக் கைவிட்டுவிட்டோம்; நாங்கள் அனைத்து மாம்சீக இன்பங்களையும் விட்டுவிட்டோம். எங்களுக்கு இன்னும் என்ன நம்பிக்கை இருக்கிறது? இந்த உலகத்தில் நாங்கள் எப்படி தொடர்ந்து உயிர்வாழ முடியும்? நாங்கள் செய்த இந்தத் தியாகங்களுக்கு ஒரு பைசா கூட மதிப்பு இல்லையா? இதையெல்லாம் உம்மால் பார்க்கக் கூட முடியாதா? நாங்கள் அந்தஸ்தில் தாழ்ந்தும் எங்களது திறமையில் குறைவுற்றவர்களாகவும் இருக்கிறோம்—அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நாங்கள் செய்ய வேண்டும் என்று நீர் விரும்பியதற்கு நாங்கள் எப்பொழுது செவிகொடாமல் இருந்திருக்கிறோம்? இப்போது நீர் பரிதாபமாக எங்களை கைவிட்டு, ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற தலைப்பை ‘திருப்பிக் கொடுக்கிறீரா’? எங்கள் தியாகம் எங்களுக்குக் கொண்டு வந்ததெல்லாம் இதுதானா? இறுதியில், தேவனை விசுவாசித்ததால் நான் என்ன பெற்றேன் என்று ஜனங்கள் என்னிடம் கேட்டால், ‘பிரதிபலிப்புப் படலம்’ என்ற வார்த்தையைப் பார்க்க நான் உண்மையிலேயே அவர்களை அனுமதிக்கலாமா? நான் ஒரு பிரதிபலிப்புப் படலம் என்று சொல்ல என் வாயை எப்படித் திறக்க முடியும்? நான் அதை என் பெற்றோருக்கு விளக்க முடியாது, என் முன்னாள் திறமையுள்ள வாழ்க்கைத் துணைக்கும் என்னால் விளக்க முடியாது. நான் இவ்வளவு பெரிய விலைக்கிரயம் கொடுத்துள்ளேன், அதற்குப் பதிலாக நான் பெறுவது ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பது! ஆ! நான் மிகவும் சோகமாக உணர்கிறேன்!” (கைகளால் தன் தொடைகளை அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்) “இப்போதும் நான் உனக்குப் பிரதிபலிப்புப் படலம் என்ற தலைப்பைக் கொடுக்கமாட்டேன், ஆனால் அதற்குப் பதிலாக உன்னை என் ஜனங்களில் ஒருவனாக மாற்றி முன்னோக்கிச் சென்று சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு உன்னை அறிவுறுத்துவேன் என்று நான் சொன்னால், நீ கிரியை செய்வதற்கான அந்தஸ்தை நான் உனக்கு வழங்கினால், உன்னால் அதைச் செய்ய முடியுமா? இந்த கிரியையின் ஒவ்வொரு கட்டத்திற்குப் பின்பு நீ உண்மையில் எதை ஆதாயப்படுத்தி இருக்கிறாய்? மேலும் இங்கே நீ இன்னும், உன் கதையால் என்னைப் பொழுது போக்கிக்கொண்டு இருக்கிறாய்—உனக்கு வெட்கம் இல்லையா! நீ விலைக்கிரயம் செலுத்தியிருப்பதாகவும் ஆனாலும் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்கிறாய். ஒரு நபரைப் பெறுவதற்கான எனது நிபந்தனைகள் என்ன என்பதை நான் உனக்குச் சொல்லாமல் புறக்கணித்திருக்கக் கூடுமா? என் கிரியை யாருக்காக? உனக்குத் தெரியுமா? இங்கே நீ பழைய மனக்குறைகளை புத்துயிர் பெறச் செய்கிறாய்! நீ இனி ஒரு மனிதனாகக் கூட எண்ணப்படுவாயா? உன் சொந்த இச்சையால் நீ அனுபவித்த எந்தப் பாடுகளுக்கும் நீ உள்ளாகவில்லையா? மேலும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே உன் பாடு உண்டாகவில்லையா? நீ எனது தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறாயா? நீ விரும்புவதெல்லாம் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும் என்பதே ஆகும். உனக்கு வெட்கமே இல்லை! எப்போதாவது உன்னைக் குறித்த எனது தேவைகள் கட்டாயமாக்கப்பட்டதா? நீ என்னைப் பின்பற்றத் தயாராக இருந்தால், நீ எல்லா விஷயங்களிலும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும். நிபந்தனைகளில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்காதே. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பாதை துன்பத்தின் பாதை என்று நான் உனக்கு முன்பே சொன்னேன். இது குறைந்த சாதகங்களுடன் கூடிய கடினமான வாய்ப்புகளால் நிரம்பியுள்ளது. நீ மறந்துவிட்டாயா? இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நீ துன்பப்பட விரும்பினால், என்னைப் பின்பற்று. நீ துன்பப்பட விரும்பவில்லை என்றால், அப்போது நிறுத்திக்கொள். நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை—நீ வருவதற்கு அல்லது போவதற்கு சுதந்திரமாக இருக்கிறாய்! இருப்பினும், எனது கிரியை இப்படித்தான் செய்யப்படுகிறது, மேலும் உன்னுடைய தனிப்பட்ட கலகத்தனத்தினால் எனது முழு கிரியையையும் என்னால் தாமதிக்கச் செய்ய முடியாது. நீ கீழ்ப்படிய விருப்பமில்லாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள் விருப்பத்துடன் இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் துணிச்சலான ஜனங்கள்! நீங்கள் எதற்கும் பயப்படுவதில்லை! நீங்கள் என்னுடன் நிபந்தனைகளைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்—நீ நீடித்துவாழ விரும்புகிறாயா இல்லையா? நீ உனக்காகத் திட்டமிட்டு உன் புகழ் மற்றும் நன்மைக்காகப் போராடுகிறாய். என்னுடைய கிரியை அனைத்தும் உங்களுக்காகவே அல்லவா? நீ குருடனா? நான் மாம்சமாவதற்கு முன்பு, உன்னால் என்னைப் பார்க்க முடியவில்லை, நீ பேசிய இந்த வார்த்தைகள் அப்போது மன்னிக்கக்கூடியதாக இருந்திருக்கும், ஆனால் இப்போது நான் மனுவுருவானவர், நான் உங்கள் மத்தியில் கிரியை செய்கிறேன், ஆனாலும், இன்னும் உன்னால் பார்க்க முடியவில்லையே? உனக்கு என்ன புரியவில்லை? நீ இழப்பை அனுபவித்ததாகச் சொல்கிறாய்; அதனால் நம்பிக்கையற்ற ஜனங்களாகிய உங்களை இரட்சிப்பதற்கு நான் மாம்சமாகி இருக்கிறேன், மேலும் மிகவும் அதிகமான கிரியைகளைச் செய்திருக்கிறேன், ஆனால் இப்போது கூட நீ இன்னும் குறைகூறிக்கொண்டே இருக்கிறாய்—நான் இழப்பை சந்தித்து இருக்கிறேன் என்று நீ சொல்ல மாட்டாயா? நான் செய்தது எல்லாம் உங்களுக்காக இல்லையா? தற்போதைய வளர்ச்சியின் அடிப்படையில் நான் இந்தப் தலைப்பை ஜனங்ளுக்குப் பயன்படுத்துகிறேன். நான் உன்னைப் ‘பிரதிபலிப்புப் படலம்’ என்று அழைத்தால், அப்போது உடனடியாக நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக ஆகிவிடுவாய். அதேபோல், நான் உன்னை ‘தேவனுடைய ஜனங்களில் ஒருவன்’ என்று அழைத்தால், அப்போது நீ உடனடியாக அவ்வாறுதான் ஆகிவிடுவாய். நான் எப்படியெல்லாம் உன்னை அழைக்கிறேனோ அப்படித்தான் நீ இருக்கிறாய். இவை அனைத்தும் என் உதடுகளிலிருந்து வரும் சில வார்த்தைகளால் அடையப்படுவதில்லையா? என்னுடைய இந்த சில வார்த்தைகள் உன்னை மிகவும் கோபமூட்டுகிறதா? சரி அப்படிஎன்றால், என்னை மன்னித்துவிடு! நீ இப்போது கீழ்ப்படியவில்லை என்றால், இறுதியில் நீ சபிக்கப்படுவாய்—அப்போது நீ மகிழ்ச்சியாக இருப்பாயா? நீ வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தாமல் உன் அந்தஸ்து மற்றும் தலைப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறாய்; உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீ மிகப்பெரிய விலைக்கிரயம் கொடுத்துள்ளதை நான் மறுக்கவில்லை, ஆனால் உன் சொந்த வளர்ச்சி மற்றும் நடைமுறையைப் பார்—இப்போது கூட, நீ இன்னும் நிபந்தனைகளுக்கான பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறாய். உன் தீர்மானத்தின் மூலம் நீ பெற்றிருக்கிற வளர்ச்சி இதுதானா? நீ இன்னும் கொஞ்சமாவது நேர்மையுடன் இருக்கிறாயா? உனக்கு மனச்சாட்சி இருக்கிறதா? தவறு செய்தது நானா? உன்னைக் குறித்த எனது தேவைகள் தவறாக இருந்ததா? சரி, அது என்ன? நான் உன்னை சில நாட்களுக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகச் செயல்பட வைக்க வேண்டும், ஆனால் நீ அவ்வாறு செய்யத் தயாராக இல்லை. அது எத்தகைய தீர்மானம்? நீங்கள் அனைவரும் மனவுறுதி அற்றவர்கள், நீங்கள் கோழைகள்! உன்னைப் போன்ற ஜனங்களைத் தண்டிப்பது இப்போது வழக்கமாகிவிட்டது!” நான் இதைச் சொன்னவுடன், அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த வகையான கிரியையை இப்போது அனுபவிக்கும்போது, தேவனுடைய கிரியையின் படிகள் மற்றும் ஜனங்களை மறுரூபப்படுத்தும் அவரது முறைகள் குறித்து நீங்கள் ஏதாவது புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருக்க வேண்டும். இதைப் பெற்றிருத்தலே மறுரூபமடைவதில் பலனை அடைவதற்கு ஒரே வழியாகும். உங்கள் தேடலில், உங்களுக்கு அதிகமான தனிப்பட்ட கருத்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் எதிர்காலங்கள் உள்ளன. தற்போதைய கிரியையானது அந்தஸ்திற்கான உங்கள் ஆசை மற்றும் உங்கள் ஆடம்பரமான ஆசைகளை சமாளிப்பதற்காகவே ஆகும். நம்பிக்கைகள், அந்தஸ்து மற்றும் கருத்துக்கள் அனைத்தும் சாத்தானிய மனநிலையின் தரமான பிரதிநிதித்துவங்களாகும். இந்த விஷயங்கள் ஜனங்களின் இருதயங்களில் இருப்பதற்கான முழுமையான காரணம் சாத்தானின் விஷம் எப்போதும் ஜனங்களின் எண்ணங்களைச் சிதைப்பதும், மற்றும் எப்போதும் சாத்தானின் இந்தச் சோதனைகளை ஜனங்கள் உதறித்தள்ள முடியாததுமே ஆகும். அவர்கள் பாவத்தின் மத்தியில் வாழ்கிறார்கள், ஆனாலும் அதைப் பாவம் என்று நம்புவதில்லை, மேலும் இன்னும் அவர்கள் நினைக்கிறார்கள்: “நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம், எனவே அவர் எங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும் மற்றும் எல்லாவற்றையும் சரியான முறையில் எங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம், எனவே நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும், மேலும் நாங்கள் மற்றவர்களை விட அதிக அந்தஸ்து மற்றும் எதிர்காலத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். நாம் தேவனை விசுவாசிப்பதால், அவர் நமக்கு எல்லையற்ற ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும். இல்லையெனில், அது தேவனை விசுவாசித்தல் என்று அழைக்கப்படாது.” பல ஆண்டுகளாக, ஜனங்கள் தங்கள் பிழைப்புக்காக நம்பியிருந்த எண்ணங்களே, அவர்கள் துரோகிகளாகவும், கோழைகளாகவும், இழிவாகவும் மாறும் அளவுக்கு அவர்களின் இருதயங்களைச் சிதைத்து வருகின்றன. அவர்களிடம் மனவுறுதியும் தீர்மானமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்கள் பேராசை கொண்டவர்களாகவும், ஆணவக்காரர்களாகவும், தன்னிச்சையாக செயல்படுபவர்களாகவும் கூட மாறிவிட்டனர். அவர்கள் சுயத்தை மீறிய எந்தத் தீர்மானமும் இல்லாதவர்கள், இன்னும் அதிகமாக, இந்த இருண்ட தாக்கங்களின் கட்டுப்பாடுகளை உதறித்தள்ள அவர்களுக்குக் கொஞ்சமும் தைரியம் இல்லை. ஜனங்களின் எண்ணங்களும் வாழ்க்கையும் மிகவும் அழுகிப்போயிருக்கிறது, தேவனை விசுவாசிப்பதற்கான அவர்களின் நோக்கங்கள் இன்னும் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு அருவருப்பானதாகவும், மேலும் ஜனங்கள் தேவன் மீதான நம்பிக்கை குறித்த தங்கள் நோக்கங்களைப் பற்றிப் பேசும்போது அதைக் கேட்பதற்குக் கூட சகித்துக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. ஜனங்கள் அனைவரும் கோழைகளாகவும், திறமையற்றவர்களாகவும், இழிவானவர்களாகவும் மற்றும் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தகார வல்லமைகளை அவர்கள் அருவருப்பாக உணர்வதில்லை, மேலும் அவர்கள் ஒளி மற்றும் சத்தியத்திற்கான அன்பை உணரவில்லை; மாறாக, அவைகளை வெளியேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். உங்கள் தற்போதைய எண்ணங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் இது போல் இல்லையா? “நான் தேவனை விசுவாசிக்கிறபடியால், எனக்கு ஆசீர்வாதங்கள் பொழிந்தருளப்பட வேண்டும், மேலும் என் அந்தஸ்து ஒருபோதும் குறையாமல் இருப்பதையும், அவிசுவாசிகளை விடவும் அது மிக உயர்வாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.” அத்தகைய கண்ணோட்டத்தை உங்களுக்குள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக மட்டுமல்ல, அநேக ஆண்டுகளாக நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பரிமாற்றச் சிந்தனை வழி அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடையந்திருக்கிறது. நீங்கள் இன்று இந்தப் படிக்கு வந்திருந்தாலும், நீங்கள் இன்னும் அந்தஸ்தை விட்டுவிடவில்லை, ஆனால் அதைப் பற்றி விசாரிக்கத் தொடர்ந்து போராடுகிறீர்கள், ஒரு நாள் உங்கள் அந்தஸ்தை இழந்து உங்கள் பெயர் அழிந்துவிடும் என்ற ஆழ்ந்த அச்சத்துடன், அதை நாள்தோறும் கவனிக்கிறீர்கள். ஜனங்கள் எளிதாகத் தங்கள் விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிடுவதில்லை. எனவே, நான் இன்று உங்களை இவ்வாறு நியாயந்தீர்ப்பதனால், இறுதியில் நீங்கள் எந்த அளவு புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருப்பீர்கள்? உங்கள் அந்தஸ்து உயர்வாக இல்லை என்றாலும், நீங்கள் தேவனுடைய உயர்வை அனுபவித்தீர்கள் என்று கூறுவீர்கள். உங்களது தாழ்ந்த பிறப்பால் நீங்கள் அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை, ஆனால் தேவன் உங்களை உயர்த்துவதால் நீங்கள் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள்—இது அவர் உங்களுக்கு வழங்கிய ஒன்று. இன்று நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுடைய பயிற்சி, அவருடைய சிட்சை மற்றும் அவரது நியாயத்தீர்ப்பைப் பெற முடிகிறது. இன்னும் அதிகமாக, இதுவே அவரால் வருகிற உயர்வாகும். அவரின் சுத்திகரிப்பையும் பற்றிஎரியும் அக்கினியையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் பெற முடியும். இது தேவனுடைய மகத்தான அன்பு. இத்தனை காலங்களாக அவருடைய சுத்திகரிப்பு மற்றும் பற்றிஎரியும் அக்கினியையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நபர் கூட இருந்ததில்லை, அவருடைய வார்த்தைகளால் ஒரு நபர் கூட பரிபூரணப்படுத்தப்பட முடியவில்லை. தேவன் இப்போது உங்களுடன் நேருக்கு நேர் பேசுகிறார், உங்களைச் சுத்திகரிக்கிறார், உங்கள் உள்ளான கலகத்தனத்தை வெளிப்படுத்துகிறார்—இது உண்மையில் அவருடைய உயர்வு. ஜனங்களுக்கு என்ன திறமைகள் உள்ளன? அவர்கள் தாவீதின் குமாரர்களாக இருந்தாலும் சரி அல்லது மோவாபின் சந்ததியினராக இருந்தாலும் சரி, மொத்தத்தில் ஜனங்கள் அதைப் பற்றிப் பெருமைபாராட்டுவதற்குத் தகுதியற்ற சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களாக இருக்கிறார்கள். நீங்கள் தேவனுடைய சிருஷ்டிகளாய் இருப்பதால், நீங்கள் ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய வேண்டும். உங்களுக்கு வேறு எந்தத் தேவைகளும் இல்லை. நீங்கள் இப்படித்தான் ஜெபிக்க வேண்டும்: “தேவனே! எனக்கு அந்தஸ்து இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்போது என்னையே நான் புரிந்துகொள்கிறேன். எனது அந்தஸ்து உயர்ந்தால் உம்முடைய உயர்த்துதலே அதற்குக் காரணமாகும், அது குறைவாக இருந்தால் உம்முடைய நியமனமே அதற்குக் காரணமாகும். எல்லாம் உமது கரங்களில் உள்ளது. எனக்கு எந்த விருப்பத்தேர்வுகளும் இல்லை, எந்தப் புகார்களும் இல்லை. நான் இந்த நாட்டிலும் இந்த ஜனங்கள் மத்தியிலும் பிறப்பேன் என்று நீர் ஆணையிட்டீர், நான் செய்ய வேண்டியது எல்லாம் உமது ஆளுகையின் கீழ் முற்றிலும் கீழ்ப்படிவதாகும், ஏனென்றால் எல்லாம் உமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. அந்தஸ்தைப் பற்றி நான் சிந்திப்பதில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு சிருஷ்டி தானே. நீர் பாதாளக் குழியில், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் என்னை வைத்தாலும், நான் ஒரு சிருஷ்டியைத் தவிர வேறல்ல. நீர் என்னைப் பயன்படுத்தினால், நான் ஒரு சிருஷ்டியாயிருக்கிறேன். நீர் என்னைப் பரிபூரணப்படுத்தினால், நான் இன்னும் ஒரு சிருஷ்டியாகத்தான் இருக்கிறேன். நீர் என்னைப் பரிபூரணப்படுத்தவில்லை என்றாலும், நான் இன்னும் உம்மை நேசிப்பேன், ஏனென்றால் நான் ஒரு சிருஷ்டியைத் தவிர ஒன்றுமில்லை. நான் சிருஷ்டிப்பின் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சிருஷ்டியைத் தவிர வேறல்ல, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரிலும் ஒருத்தியாக மட்டுமே இருக்கிறேன். என்னை சிருஷ்டித்தவர் நீரே, மேலும் நீர் விரும்பியபடி எனக்குச் செய்ய நீர் என்னை மீண்டும் ஒருமுறை இப்போது உமது கரங்களில் வைத்திருக்கிறீர். நான் உமது கருவியாகவும் உமது பிரதிபலிப்புப் படலமாகவும் இருக்கத் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் எல்லாம் நீர் நியமித்தவைகளாகும். அதை யாராலும் மாற்ற முடியாது. அனைத்து விஷயங்களும் அனைத்து நிகழ்வுகளும் உமது கரங்களில் உள்ளன.” நீ இனி அந்தஸ்துக்கு மனதை செலுத்தாத நேரம் வரும்போது, அப்போது நீ அதிலிருந்து விடுபடுவாய். அப்போதுதான் நீ நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தேட முடியும், அப்போதுதான் உன் இருதயம் எந்த தடைகளும் இல்லாமல் விடுதலையாக முடியும். இந்த விஷயங்களிலிருந்து ஜனங்கள் வெளியேற்றப்பட்டவுடன், இனி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது. உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இப்போது என்ன கவலை? நீங்கள் எப்போதும் அந்தஸ்தால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள் மற்றும் உங்கள் சொந்த வாய்ப்புகளைப் பற்றி தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எப்போதும் தேவனுடைய பேச்சுக்களின் பக்கங்களைத் திருப்புகிறீர்கள், மனுக்குலத்தின் இலக்கு பற்றிய வாக்கியங்களை வாசிக்க ஆவலாய் இருந்து உங்கள் வாய்ப்புகள் என்ன, உங்கள் இலக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்கள். நீ ஆச்சரியப்படுகிறாய், “எனக்கு உண்மையிலேயே ஏதேனும் வாய்ப்புகள் உள்ளனவா? தேவன் அவைகளை எடுத்துப்போட்டு விட்டாரா? நான் ஒரு பிரதிபலிப்புப் படலம் என்று மட்டுமே தேவன் கூறுகிறார்; அப்படியானால், என் வாய்ப்புகள் என்ன?” உங்கள் வாய்ப்புகளையும் விதியையும் ஒதுக்கி வைப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கிறது. இப்போது நீங்கள் பின்பற்றுபவர்கள், மேலும் இந்த கட்ட கிரியை குறித்து நீங்கள் சில புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருக்கிறீர்கள். இருப்பினும், அந்தஸ்துக்கான உங்கள் விருப்பத்தை நீங்கள் இன்னும் ஒதுக்கி வைக்கவில்லை. உங்கள் அந்தஸ்து உயர்ந்திருக்கும்போது நீங்கள் நன்றாகத் தேடுகிறீர்கள், ஆனால் உங்கள் அந்தஸ்து தாழ்ந்திருக்கும்போது நீங்கள் ஒருபோதும் தேடுவதில்லை. அந்தஸ்தின் ஆசீர்வாதங்கள் எப்போதுமே உங்கள் மனதில் இருக்கின்றன. பெரும்பாலான ஜனங்கள் ஏன் எதிர்மறையிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ள முடியாது? கடினமான வாய்ப்புகள் காரணமாகவே என்ற பதில் எப்போதும் மாறாதது அல்லவா? தேவனுடைய பேச்சுக்கள் வெளியிடப்பட்டவுடன், உங்கள் அந்தஸ்து மற்றும் அடையாளம் உண்மையில் என்ன என்பதைப் பார்க்க நீங்கள் விரைந்து செல்கிறீர்கள். நீங்கள் அந்தஸ்து மற்றும் அடையாளத்திற்கு முன்னுரிமை அளித்து, தரிசனத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடுகிறீர்கள். மூன்றாவதில் தான் நீங்கள் பிரவேசிக்க வேண்டிய ஒன்று உள்ளது, மேலும் நான்காவது இடத்தில்தான் தேவனுடைய தற்போதைய சித்தம் இருக்கிறது. தேவனுடைய “பிரதிபலிப்புப் படலங்கள்” என்ற உங்களுக்கான தலைப்பு மாறிவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் முதலில் பார்க்கிறீர்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் வாசித்து, “பிரதிபலிப்புப் படலம்” என்ற தலைப்பு நீக்கப்பட்டதை நீங்கள் காணும்போது, நீங்கள் மகிழ்ச்சியடைந்து தேவனுக்கு மிகுந்த நன்றி செலுத்துகிறீர்கள் மற்றும் அவருடைய மாபெரும் வல்லமையைத் துதிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் பிரதிபலிப்புப் படலங்களாக இருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் வருத்தப்படுவீர்கள், உங்கள் இதயத்தில் உள்ள ஏவுதல்கள் உடனடியாக சிதைந்துபோகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்த வழியில் தேடுகிறீர்களோ, அவ்வளவு குறைவாக நீங்கள் அறுவடை செய்வீர்கள். அந்தஸ்துக்கான ஒரு நபரின் ஆசை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தீவிரமாக அவர்கள் கையாளப்பட வேண்டும், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் நன்கு புடமிடுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தகைய ஜனங்கள் பயனற்றவர்கள்! இந்த விஷயங்களை முழுமையாக விட்டுவிடுவதற்காக அவர்கள் கையாளப்பட்டு போதுமான அளவு நியாயந்தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் இறுதி வரை இந்த வழியைப் பின்தொடர்ந்தால், நீங்கள் எதையும் அறுவடை செய்ய மாட்டீர்கள். ஜீவனைப் பின்தொடராதவர்களால் மறுரூபம் அடைய முடியாது, சத்தியத்திற்காகத் தாகம் கொண்டிராதவர்களால் சத்தியத்தைப் பெற முடியாது. நீ தனிப்பட்ட மறுரூபத்தையும் பிரவேசத்தையும் பின்தொடர்வதில் கவனம் செலுத்துவதில்லை, ஆனால், அதற்குப் பதிலாக ஆடம்பரமான ஆசைகள், மேலும் தேவன் மீதான உன் அன்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் அவரிடம் நெருங்குவதைத் தடுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறாய். அந்த விஷயங்கள் உன்னை மறுரூபப்படுத்த முடியுமா? அவைகளால் உன்னை ராஜ்யத்திற்குள் கொண்டு வர முடியுமா? உன்னுடைய பின்தொடர்தலின் நோக்கம் சத்தியத்தைத் தேடுவதற்கு அல்ல என்றால், அப்போது அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு நீ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உலகிற்குத் திரும்பிச் செல்லலாம். உன் நேரத்தை இந்த வழியில் வீணாக்குவது உண்மையிலேயே அதற்கு தகுதியானது அல்ல—உன்னையே ஏன் சித்ரவதைச் செய்துகொள்கிறாய்? அழகான உலகில் வெளியே, நீ எல்லா வகையான விஷயங்களையும் அனுபவிக்க முடியும் என்பது உண்மையல்லவா? பணம், அழகான பெண்கள், அந்தஸ்து, தற்பெருமை, குடும்பம், குழந்தைகள் மற்றும் பல—உலகின் இந்தக் காரியங்கள் நீ அனுபவிக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயங்கள் இல்லையா? நீ மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தைத் தேடி இங்கு அலைவதால் என்ன பயன்? மனுஷகுமாரன் கூட தன் தலைசாய்க்க ஓர் இடமில்லை, அப்படி இருக்க நீ எப்படி நிம்மதியான ஓர்இடத்தைப் பெற்றிருக்க முடியும்? உனக்கு நிம்மதி தரும் அழகான இடத்தை அவரால் எப்படி உருவாக்க முடியும்? அது சாத்தியமா? என் நியாயத்தீர்ப்பைத் தவிர, இன்று நீ சத்தியத்தைப் பற்றிய போதனைகளை மட்டுமே பெற முடியும். நீ என்னிடமிருந்து ஆறுதலைப் பெற முடியாது, மேலும் நீ இரவும் பகலுமாக ஏங்குகிற ரோஜாக்களின் படுக்கையைப் பெற முடியாது. உலகின் செல்வங்களை நான் உனக்கு வழங்க மாட்டேன். நீ உண்மையாகப் பின்தொடர்ந்தால், நீ மீண்டும் தண்ணீரில் உள்ள மீனைப்போல இருக்கும்படிக்கு நான் ஜீவப் பாதையை முழுவதுமாக உனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீ உண்மையாகப் பின்தொடரவில்லை என்றால், நான் எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். ஆறுதலுக்காகப் பேராசை கொண்டவர்கள், பன்றிகள் மற்றும் நாய்களைப் போன்றவர்களுக்கு என் வாயிலிருந்து வார்த்தைகளைக் கொடுக்க நான் தயாராக இல்லை!
அடிக்குறிப்பு:
அ. மூல உரை “மனைவிகள்” என்று கூறுகிறது.