அத்தியாயம் 39
நாம் தேவனுடைய வார்த்தைகளையும் தாண்டிச் சென்று கொஞ்சம் நம் வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களையும் பேசுவோம். இதனால் நம்முடைய வாழ்க்கை மேலும் மலர்வதால் நாம் நம்மைப் பற்றி தேவன் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்கிறோம். குறிப்பாக, இன்றைய காலத்தின் வருகையினால்—ஒவ்வொன்றும் அதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்ட ஒரு காலம், மேலும் சிட்சையின் ஒரு காலம்—பேரளவிலான காட்சியில் கவனத்தையும், “ஒட்டு மொத்த ஆர்வங்களில்” சிந்தையும் செலுத்த வேண்டிய ஒரு பெரும் தேவை இருக்கிறது. இது தேவனின் சித்தம், மேலும் இது எல்லா ஜனங்களாலும் அடையப்பட வேண்டிய ஒன்று. பரலோகத்தின் தேவனுடைய சித்தத்துக்கு நாம் நம்மை எப்படி வழங்காமல் இருக்க முடியும்? தேவன் “ஜனங்களின் மூதாதையர்கள் தங்களைத் தங்களின் குடும்பத்துக்குள் மீண்டும் வழிநடத்துவதற்காக, எல்லாவகையான மக்களுக்கும் எண்களைக் கொடுக்கிறார், ஒவ்வொரு வகையான நபர்களின் மீதும் வெவ்வேறு அடையாளத்தை இடுகிறார்,” ஜனங்கள் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது, மேலும் இதன் விளைவாக. எல்லாவகையான மக்களும் தங்கள் உண்மையான ரூபங்களை வெளிப்படுத்துகின்றனர். இது இப்படி இருக்க, ஜனங்கள் தங்கள் மூதாதையர்களுக்கு விசுவாசமாய் இருக்கிறார்களே தவிர தேவனுக்கு அல்ல என்று கூறுவது நியாயமாக இருக்கிறது. இருப்பினும், தங்களுடைய மூதாதையர்களின் வழிகாட்டுதலின் கீழ் எல்லா ஜனங்களும் தேவனுக்கு ஊழியம் செய்து வருகின்றனர், இதுவே தேவனுடைய கிரியையின் அற்புதத்தன்மையாகும். எல்லாம் தேவனுக்கு ஊழியம் செய்கின்றன, மற்றும் மக்களைச் சாத்தான் தொந்தரவு செய்தாலும், தேவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ஆங்காங்குள்ள ஆதாரங்களை” தமக்கு ஊழியம் செய்ய இழுத்துக் கொள்ளுகிறார். இருந்தாலும் ஜனங்களால் இதை அறிந்துணர முடிவதில்லை. தேவன் சொல்கிறார் “இவ்வாறு, நானும் உழைப்பைப் பிரித்துக்கொள்வேன், மேலும் முயற்சியைப் பகிர்ந்தளிப்பேன். இது என் திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இதற்கு எந்த மனிதனாலும் இடையூறு செய்ய முடியாது.” தேவன் தீர்மானிக்கிற எல்லாவற்றையும், தேவன் நிறைவேற்ற விரும்பும் எல்லாவற்றையும், அவர் செய்து முடிப்பதற்கு முன் ஜனங்களால் பார்க்க முடியாது. தேவனுடைய கிரியை முடிவடைந்த பின்னர்தான் அவர்களால் பார்க்க முடியும்; இல்லாவிட்டால், அவர்கள் குருடர்கள், மேலும் அவர்கள் ஒன்றையும் பார்ப்பதில்லை.
இன்று, சபைகளில் தேவனுக்குப் புதிய கிரியை உள்ளது. அவர் எல்லாவற்றையும் இயற்கையின் போக்கைப் பின்பற்ற வைக்கிறார், மனிதனுடைய செயல்பாட்டை உண்மையிலேயே தாங்கும்படி கொண்டுவருகிறார். “எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் எல்லாவற்றையும் நான் ஆட்சிசெய்து, எல்லாவற்றிற்குள்ளும் இருக்கும் எல்லாவற்றுக்கும் நான் கட்டளையிட்டு, இருப்பவைகள் எல்லாம் இயற்கையின் போக்கைப் பின்பற்றவும் இயற்கையின் கட்டளைக்குக் கீழ்ப்படியவும் செய்கிறேன்.” என்று தேவன் கூறுகிறார். “இயற்கையின் போக்குகளைப் பின்பற்றுதல்” என்பதில் உங்களுக்கு இருக்கும் புத்திசாலித்தனமான நுண்ணறிவு என்ன என்று எனக்குத் தெரியாது, எனவே நாம் அதைப்பற்றி பேசுவோம். இப்படித்தான் நான் அதைப் பார்க்கிறேன்: அவர்கள் தங்கள் மூதாதையர்களால் வீட்டுக்கு வழிநடத்தப்படுவதால், எல்லா வகையான ஜனங்களும் வந்து “செயல்பட” வேண்டும். அவர்கள் இயற்கையின் போக்கைப் பின்பற்றுவதால், அவர்களுக்கு இயல்பானதாக இருப்பது அவர்கள் தாங்க வேண்டிய அசல் செயல்பாட்டைக் கொண்டுவர பயன்படுத்தப் படுகிறது, இந்த விதியின் படி பரிசுத்த ஆவியாவரின் வழிகாட்டுதலை அவர்கள் பின்பற்றும்படி செய்கிறது. ஒவ்வொரு நபரின் உள்ளிருக்கும் நிலையின்படி பரிசுத்த ஆவியானவரின் கிரியை மேற்கொள்ளப்படுகிறது; சரியாகச் சொன்னால், இது “தேவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு நடத்துவதால் அவர்கள் அவருக்கு ஊழியம் செய்கிறார்கள்” என்று அழைக்கப்படுகிறது, பின்னர் இது இயற்கையின் போக்கைப் பின்பற்றி இணைக்கப்படுகிறது. ஒரு நபரின் உள்ளே பிசாசின் கூறுகள் இருந்த போதிலும், தேவனால் இதைப் பயன்படுத்த முடியும், அவர்களுக்குள் இயல்பாக இருப்பதின் அடிப்படையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியைச் சேர்த்து, அவர்களை தேவனுக்கு ஊழியம் செய்ய போதுமானதாக ஆக்க முடியும். “இயற்கையின் போக்கைப் பின்பற்றுதல்” பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்—ஒருவேளை உங்களுக்கு அதிக ஆலோசனைகள் இருக்கலாம். உங்களால் சிறப்பான பங்களிப்புகளை அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இயற்கையின் போக்கைப் பின்பற்றுவதில் நீங்கள் ஒத்துழைக்க விரும்புகிறீர்களா? தேவனுடன் கிரியையைப் பிரித்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இதை எப்படி அடைவது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஜனங்களால் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியும் என நான் நம்புகிறேன், அதாவது பகிரப்படும் கருத்துக்களுக்காக தேவனைத் திருப்திப்படுத்த அவர்களால் ஒரே மனமுள்ளவர்களாக இருக்க முடியும், மேலும் ராஜ்யத்தின் பாதையில் ஒன்றாக முன்னேற முடியும். தேவையற்ற எண்ணங்களோடு வருவதற்கு என்ன தேவை இருக்கிறது? தேவனுக்காக இன்றுவரை இல்லாமல் இருக்கும் இருப்பு யாருடையது? மேலும் இது இப்படி இருப்பதால், சோகம், துக்கம் மற்றும் பெருமூச்சுக்கு என்ன தேவை இருக்கிறது? இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஜனங்களின் முழு வாழ்க்கையும் தேவனின் கரத்தில் இருக்கிறது, தேவனுக்கு முன்பாக அவர்களுடைய தீர்மானம் இல்லாமல் இருந்தால், மனிதனின் இந்த வெறுமையான உலகத்தில் யார்தான் வீணாக வாழ விரும்புவார்கள்? எதற்காக உபத்தரவப்பட வேண்டும். உள்ளே வருவதும் வெளியே ஓடிச் செல்வதுமான இந்த உலகத்தில் தேவனுக்காக அவர்கள் எதையும் செய்யாவிட்டால், அவர்களுடைய முழு வாழ்க்கையும் வீணாகப் போய்விடாதா? உன் செய்கைகளை தேவன் ஒரு பொருட்டாகக் கருதாவிட்டாலும் கூட, உன்னுடைய மரணத்தின் சமயத்தில் நன்றியுணர்வோடு ஒரு புன்னகையை உதிர்க்க மாட்டாயா? நீ நேர்மறையான முன்னேற்றத்தைத் தேட வேண்டுமே தவிர எதிர்மறையான பின்னடைவை அல்ல—இது சிறந்த நடைமுறைக்காகவல்லவா? உன்னுடைய செயல்பாடுகள் தேவனைத் திருப்திப்படுத்துவதாக மட்டுமே இருந்தால், நீ எதிர்மறையானவனாகவோ அல்லது பின்வாங்குபவனாகவோ இருக்க மாட்டாய். மக்களின் இருதயங்களில் அளந்தறியமுடியாத விஷயங்கள் எப்போதும் இருப்பதால், அதை அறியாமல், அவர்களுடைய முகங்கள் மந்தாரமான வானம்போல் உள்ளன. இதனால் அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய முகங்களில்பல “பள்ளங்கள்” தோன்றுகின்றன. இது நிலத்தில் ஏற்படும் பிளவு போல் உள்ளது. நிலம் நகர்ந்து “மேடுகளை” அல்லது “பள்ளங்களை” உருவாக்கி மக்கள் அறியாமலேயே நகர்வது போல இது இருக்கிறது. இதில், நான் மக்களைக் கேலி செய்யவில்லை, ஆனால் “நிலவியல் அறிவைப்” பற்றி பேசுகிறேன்.
தேவன் எல்லா ஜனங்களையும் சிட்சைக்குள் கொண்டு வந்திருந்தாலும், அவர் இதைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, அவர் வேண்டுமென்றே இந்தத் தலைப்பைத் தவிர்த்துவிட்டு புதிய ஒன்றை தொடங்குகிறார். இது ஒரு விதத்தில் தேவனுடைய கிரியைக்காகவும் மற்றும் இன்னொரு விதத்தில் கிரியையின் இந்தக் கட்டத்தை உடனடியாக முடிப்பதற்காகவுமே ஆகும். கிரியையின் இந்தப் படிநிலையை நிறைவேற்றும் தேவனின் நோக்கம் முன்னரே நிறைவேற்றப்பட்டு விட்டதால், மேலும் இதைப்பற்றிக் கூறத் தேவையில்லை. இன்று, தேவனின் கிரியை செய்யும் முறைகளை எவ்வளவு தூரம் பார்த்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை; என்னுடைய மனசாட்சியில், தேவனுடைய கிரியை வழக்கமாக இருக்கக்கூடியது போல தெளிவாகக் கட்டங்களாகவும் கால அளவுகளாகவும் பிரிக்கப்படவில்லை என்றே நான் உனர்கிறேன். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய கிரியையாற்றும் வழிகளைக் கொண்டு வருகிறது, ஏறக்குறைய மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழ்கிறது, மற்றும் ஐந்து நாட்களில் கூட, தேவனுடைய கிரியைக்கு இரு வெவ்வேறு விதமான உள்ளடக்கங்கள் இருக்கக் கூடும். இது தேவனுடைய கிரியையின் வேகத்தைக் காட்டுகிறது; எதிர்வினையாற்றுவதற்கும் உன்னிப்பாக நோக்குவதற்கும் மக்களுக்கு நேரம் கிடைப்பதற்கு முன்னதாக தேவன் ஒரு சுவடுமின்றி சென்றுவிட்டிருக்கிறார். இப்படி, தேவன் எப்போதும் மக்களால் புரிந்துகொள்ள முடியாதவராகவே இருப்பது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையையின் புலனாகாதத் தன்மைக்கு வழிகோலியிருக்கிறது. “அதனால் நான் மனிதனை விட்டகன்றேன்” போன்ற வார்த்தைகளை தேவன் எப்போதும் ஏன் கூறுகிறார்? இந்த வார்த்தைகளில் மக்கள் மிகக் குறைவாகவே கவனம் செலுத்தக் கூடும், ஆனால் அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்போது, நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமில்லை. மங்கலான சந்திரனின் ஒளியிலேயே தேவனை அவர்கள் எப்போதும் தேடுகிறார்கள்—இது முற்றிலும் உண்மை—மனிதனை தேவன் வேண்டுமென்றே கேலி செய்வதுபோலவும், அவர்களைக் குழப்பமடையச் செய்யவும் திசைதிருப்பவும் எல்லா ஜனங்களுடைய மூளைகளையும் வீங்க வைப்பது போலவும் இது காணப்படுகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு அரிதாகவே தெரிகிறது; இது அவர்கள் கனவுகாண்பது போல் இருக்கிறது; விழித்தெழும்போது, என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு தேவனின் சாதாரண வார்த்தைகளே போதுமானதாகும். அப்படியானால், “இன்று, நான் எல்லா ஜனங்களையும் சுத்திகரிக்கப்படுவதற்காகப் ‘பெரிய உலையில்’ போடுகிறேன். நான் நிமிர்ந்து நின்று நெருப்பில் மக்கள் எரிவதை உன்னிப்பாகக் கவனிக்கிறேன், தீப்பிழம்புகளால் நெருக்கப்பட்டு, மக்கள் உண்மைகளை உரைக்கிறார்கள்” என்று தேவன் சொல்வதில் ஆச்சரியமில்லை. தேவனின் எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும் வார்த்தைகளின் மத்தியில், என்ன செய்வது என்று மக்களுக்கு எந்த சிந்தையும் இல்லை; உண்மையில், தேவன் சொல்வது போல, சிட்சை வெகு காலத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது, மற்றும் இன்னும் மக்கள் இதை உணர்ந்துகொள்ளாததால், தேவன் மிகவும் தெளிவாகக் கூறும்போதே அவர்கள் அறிகிறார்கள், தேவன் அவர்களிடம் சொன்ன பிறகே அவர்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். தேவனுடைய கிரியை இந்தக் கட்டம் வரை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இப்போதுதான் சிட்சையைப் படிக்கிறார்கள் என்று சொல்லலாம். இது எப்படி இருக்கிறது என்றால், மக்கள் அணுகுண்டைப் பற்றி அறிந்திருந்தும்—காலம் இன்னும் வராததால், மக்கள் கவனம் செலுத்துவதில்லை என்பது போல இருக்கிறது; யாராவது ஒருவர் ஒன்றைச் செய்ய ஆரம்பிக்கும் போதுதான் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். அணுகுண்டு வெளிச்சத்துக்கு வரும்போதுதான் ஜனங்கள் அதைப் பற்றி மேலும் அறிகிறார்கள். மனுஷனை உலையில் போடுவேன் என்று தேவன் கூறும்போதே ஜனங்கள் சற்றே விழிப்படைகிறார்கள். தேவன் பேசியிருக்கவில்லை என்றால் யாருக்கும் தெரிந்திருக்காது—அப்படித்தானே? தேவன் கூறுகிறார், “ஒரு கயிற்றால் இழுக்கப்பட்டு உணர்விழ்ந்து போனவர்களைப் போல ஜனங்கள் அறியாமலேயே உலைக்குள் நுழைகிறார்கள்.” இதை ஏன் பகுத்தாயக் கூடாது: சிட்சை ஆரம்பித்துவிட்டது என்று தேவன் கூறும்போதா, அல்லது சிட்சை ஆரம்பித்துவிட்டது என்று தேவன் கூறுவதற்கு முன்னரா, எப்போது மக்கள் உண்மையைக் கூறுகிறார்கள்? இதிலிருந்து நாம் பார்க்கக் கூடியது, சிட்சையைப் பற்றி தேவன் பேசுவதற்கு முன், ஜனங்கள் அறிக்கையிட ஆரம்பித்தார்கள், இது தேவன் பேசுவதற்கு முன்னரே சிட்சை ஆரம்பித்து விட்டது என்பதைக் காண்பிக்கிறது—இது உண்மை இல்லையா?