அத்தியாயம் 91

எனது ஆவி தொடர்ந்து பேசுகிறது மற்றும் என் சத்தத்தை உரைக்கிறது—உங்களில் எத்தனை பேருக்கு என்னை அறிந்து கொள்ள முடியும்? நான் ஏன் மாம்சமாகி உங்கள் மத்தியில் வர வேண்டும்? இது ஒரு பெரிதான இரகசியம். நீங்கள் என்னை நினைத்து நாள் முழுவதும் எனக்காக ஏங்குகிறீர்கள், நீங்கள் என்னைத் துதிக்கிறீர்கள், என்னில் மகிழ்கிறீர்கள், ஒவ்வொரு நாளும் என்னைப் புசித்துக் குடிக்கிறீர்கள், ஆனால் இன்றும் நீங்கள் என்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு அறிவில்லாமலும் குருடாகவும் இருக்கிறீர்கள்! நீங்கள் என்னைக் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறீர்கள்! உங்களில் எத்தனை பேரால் என்னுடைய சித்தத்தைக் குறித்து அக்கறை கொள்ள முடியும்? அதாவது, உங்களில் எத்தனை பேரால் என்னை அறிந்து கொள்ள முடியும்? நீங்கள் அனைவரும் பிசாசின் மாதிரிகள், நீங்கள் இன்னும் என்னுடைய சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறீர்களா? அதை மறந்து விடுங்கள்! நான் உனக்குச் சொல்லுகிறேன்: சாத்தானின் செயல்கள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவை எனது கட்டுமானத்தை அழிக்கவும், எனது நிர்வகித்தலுக்கு இடையூறு விளைவிப்பதற்காகவும் உள்ளன. அதன் செயல்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதனுடைய சாரம் மாறாது—அது என்னை எதிர்க்கிறது. எனவே, பலர் அறியாமலேயே என் கரத்தால் வீழ்த்தப்பட்டு, அறியாமலேயே என் குடும்பத்தை விட்டு வெளியே துரத்தப்படுகிறார்கள். இன்று, ஒரு விஷயம்கூட (பெரியதோ சிறியதோ) மனிதனால் திட்டமிடப்படவில்லை; எல்லாம் எனது கரங்களில் உள்ளன. எல்லாம் மனிதனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக யாராவது சொன்னால், நீ எனக்கு விரோதமாக இருக்கிறாய் என்று நான் சொல்கிறேன், நான் நிச்சயமாக உன்னைக் கடுமையாகச் சிட்சிப்பேன், உன் தலை சாய்க்க இடமின்றி உன்னை என்றென்றும் விட்டு விடுவேன். எல்லா நிகழ்வுகளிலும், விஷயங்களிலும், எது எனது கரங்களில் இல்லாமல் இருக்கிறது? எது என்னால் அமைக்கப்படவில்லை, அல்லது என்னால் முன்குறிக்கப்படவில்லை? நீங்கள் இன்னும் என்னை அறிந்திருப்பதாகப் பேசுகிறீர்கள்! இவைப் பிசாசின் வார்த்தைகள். நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி இருக்கிறீர்கள், அதனால் என்னையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? நீ செய்தது யாருக்கும் தெரியாவிட்டால், அதனால் எதுவும் நேராது என்று நீ நினைக்கிறாயா? நீ சுலபமாகத் தப்பித்து விடலாம் என்று நினைக்காதே! நான் உன்னை என் முன் மண்டியிட்டு அதை வெளிப்படையாகப் பேச வைக்க வேண்டும். பேசாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; இது எனது ஆட்சிமுறை ஆணை!

யார் எனது ஆவி என்பதையும், யார் எனது மாம்சம் என்பதையும் நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்கிறீர்களா? எனது மனுவுருவெடுத்தலின் முக்கியத்துவம் என்ன? உங்களில் யார் இந்தப் பெரிய காரியத்தைக் கவனமாகச் சிந்தித்து என்னிடமிருந்து சில வெளிப்பாட்டைப் பெற்றவர்கள்? நீங்கள் அனைவரும் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்! நீ சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்று நான் ஏன் சொல்கிறேன்? இன்று, நான் உங்களுக்கு என் மனுவுருவெடுத்தலின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறேன், இது உலகம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் மனிதனால் அவிழ்க்க முடியாத ஒரு இரகசியம், இது நான் வெறுக்கிற பல பொருட்களை அழித்துவிட்டது. இன்றும் அப்படித் தான். என் மாம்சத்தினிமித்தம், நான் நேசிக்கிற அநேகர் பரிபூரணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நான் ஏன் மாம்சமாக வேண்டும்? நான் ஏன் எப்பொழுதும் போலவே தோன்றுகிறேன் (எனது உயரம், தோற்றம், உயரம் மற்றும் பல உட்பட எல்லா விஷயத்திலும்)? யாராலும் அதைக் குறித்து ஏதாவது சொல்ல முடியுமா? என் மனுவுருவெடுத்தலில் அவ்வளவு மகத்துவம் நிறைந்துள்ளது, அதை எல்லாவற்றையும் வெறுமனே சொல்லிவிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் இப்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன் (எனது கிரியைகள் இவ்வளவு தூரம் அடைந்ததால், நான் இதைச் செய்யவும் சொல்லவும் வேண்டும்): எனது மனுவுருவெடுத்தல் முதன்மையாக எனது முதற்பேறான குமாரர்களை நோக்கி இருக்கிகிறது. நான் அவர்களின் மேய்ப்பனாக இருந்து, அவர்கள் என்னுடன் முக-முகமாக சம்பாஷிக்கவும் பேசவும் முடியும்படிக்கு இருக்கிறது; இது மேலும் நானும் எனது முதற்பேறான குமாரர்களும் ஒருவரோடொருவர் நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறது (அதாவது நாங்கள் ஒன்றாகப் புசிக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம், ஒன்றாக வாழ்கிறோம், ஒன்றாகச் செயல்படுகிறோம்), யதார்த்தத்தில் அவர்கள் என்னால் போஷிக்கப்பட வேண்டும் என்பதற்காக—இவை வெறுமையான வார்த்தைகள் அல்ல, ஆனால் யதார்த்தமானவை. முன்பு, ஜனங்கள் என்னை விசுவாசித்தனர், ஆனால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை, இதற்கு நான் இன்னும் மனுஷரூபம் எடுக்காததே காரணம். இன்று, எனது மனுவுருவெடுத்தல் உங்கள் அனைவரையும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இடமளிக்கிறது மற்றும் என்னை உண்மையாக நேசிப்பவர்கள்—ஞானமுள்ள தேவனாகிய என்னை—என் பேச்சினாலும் நடத்தையினாலும் மேலும் நான் விஷயங்களைக் கையாளும் விதத்தின் பின்னணியில் உள்ள கொள்கைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள இடமளிக்கிறது. எனது புலப்படாத செயல்களில் எனது மனிதத்தன்மை என்ற அம்சத்தைப் பார்க்க என்னை மெய்யாகத் தேடாதவர்கள், அதன் மூலம் என்னை மறுத்து, “எந்தக் காரணமும் இல்லாமல்” என்னால் வீழ்த்தப்பட்டு மரிக்கவும் இது இடமளிக்கிறது. சாத்தானை அவமானப்படுத்துவதில், மனுவுருவெடுத்தல் எனக்கு மிகவும் உறுதியான சாட்சியைப் பகருகிறது; நான் மாம்சத்திலிருந்து வெளிவருவது மட்டுமல்லாமல், என்னால் மாம்சத்திற்குள்ளும் வாழ முடியும். நான் இடஞ்சார்ந்த அல்லது புவியியல் சார்ந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படவில்லை; என்னைப் பொறுத்தவரை, எந்தத் தடையும் இல்லாமல், எல்லாம் சீராக நடக்கிறது. இதில் தான் சாத்தான் மிகவும் வெட்கப்படுகிறான், நான் மாம்சத்திலிருந்து வெளியே வரும் போது, நான் இன்னும் என் மாம்சத்தில் என் கிரியையைச் செய்கிறேன், மேலும் நான் பாதிக்கப்படவே இல்லை. நான் மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும், அதிலுள்ள எண்ணற்ற விஷயங்களையும் அடிவைத்து கடந்து செல்கிறேன். என்னிலிருந்து பிறந்தவர்கள் ஆனால் எனக்கு விரோதமாக எழுந்தவர்கள் அனைவரையும் வெளிப்படுத்தவே நான் மனுஷரூபம் எடுத்துள்ளேன். நான் மாம்சமாகவில்லை என்றால், அவர்களை வெளிப்படுத்த வழியே இருக்காது (என் முகத்திற்கு முன்பாக ஒரு விதமாகவும், என் முதுகுக்குப் பின்னால் வேறொரு விதமாகவும் செயல்படுபவர்களைக் குறிக்கிறது). நான் ஒரு ஆவியாக இருந்திருந்தால், ஜனங்கள் தங்கள் கருத்துகளில் என்னைத் துதிப்பார்கள், மேலும் நான் உருவமற்ற மற்றும் தொடர்பு கொள்ள முடியாத தேவன் என்று நினைப்பார்கள். எனது இன்றைய மனுஷரூபம் ஜனங்களின் கருத்துக்களுக்கு (எனது உயரம் மற்றும் தோற்றத்தைப் பற்றி பேசுகிறது) முற்றிலும் எதிரானது, ஏனெனில் அவர் அவ்வளவு உயரம் இல்லாமல் சாதாரணமாகத் தெரிகிறார். இந்த விஷயம் தான் சாத்தானை மிகவும் அவமானப்படுத்துகிறது மற்றும் ஜனங்களின் கருத்துகளுக்கு (சாத்தானின் நிந்தனை) மிகவும் வலுவான எதிர்ப்பாகும். என்னுடைய தோற்றம் மற்றவர்களை விட வித்தியாசமாக இருந்தால், அது பாதகமாக இருக்கும்—எல்லோரும் என்னை ஆராதிக்கவும், தங்கள் சொந்தக் கருத்துகளின் மூலம் என்னைப் புரிந்து கொள்ளவும் வருவார்கள், மேலும் அவர்கள் எனக்காக அழகாக சாட்சி பகர முடியாது. எனவே, இன்று எனக்கு இருக்கும் சாயலை நான் ஏற்றுக் கொண்டேன், அதைப் புரிந்து கொள்வது கடினமே அல்ல. ஒவ்வொருவரும் மனிதக் கருத்துக்களை விட்டு வெளியே வர வேண்டும், மேலும் சாத்தானின் தந்திரமான சூழ்ச்சிகளால் ஏமாந்து விடக்கூடாது. எனது கிரியையின் தேவைகளுக்கு ஏற்ப, வருங்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை உங்களுக்குச் சொல்லுவேன்.

இன்று, எனது மகத்தான கிரியை வெற்றியடைந்துள்ளது, மேலும் எனது திட்டம் நிறைவேறியுள்ளது. ஒரே மாதிரியான, ஒன்றுபட்ட சிந்தையுடன் என்னுடன் ஒத்துழைக்கும் ஒரு கூட்ட ஜனங்களை நான் ஆதாயப்படுத்தி உள்ளேன். இது எனக்கு அதிக மகிமையான நேரம். எனது அன்பான குமாரர்களால் (என்னை நேசிப்பவர்கள் அனைவரும்) என்னுடன் சேர்ந்து, நான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பதில் என்னுடன் ஒரே இருதயம் மற்றும் சிந்தையுடன் இருக்க முடியும். இது ஒரு அதிசயமான விஷயம். வரும் நாட்களில், யாரை நான் சாதகமற்றவராகக் கருதுகிறேனோ, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உணர மாட்டார்கள், அதாவது கடந்த காலத்தில் நான் சொன்னதற்கு இணங்காதவர்களை நான் ஒதுக்கித் தள்ளுவேன். நான் சொல்வதற்கு ஜனங்கள் முற்றிலுமாக இணங்க வேண்டும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் முற்றிலுமாக இணங்க வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்; அனைத்தும் என்னைப் பொறுத்தது. ஜனங்களே—என்னிடம் விதிமுறைகளைப் பேசாதீர்கள். நீ தகுதி உடையவன் என்று நான் சொன்னால், அது கல்லில் எழுதப்பட்டது; நீ தகுதியற்றவன் என்று நான் சொன்னால், எரிச்சலடைந்து வானத்தையும் பூமியையும் நிந்திக்காதே. இது அனைத்தும் என்னுடைய ஏற்பாடு. நீ உன்னை அவமதிக்க வேண்டும் என்று யார் சொன்னது? அந்த வெட்கக் கேடான முட்டாள்தனத்தை நீ செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? நீ எதுவும் சொல்லா விட்டாலும், என்னிடமிருந்து நீ உண்மையை மறைக்க முடியாது. நானே மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராயும் தேவன் என்று நான் கூறும் வார்த்தைகள் யாருக்காக? இதை நான் வஞ்சகமானவர்களுக்குச் சொல்லுகிறேன். என் முதுகுக்குப் பின்னால் இப்படிச் செய்வது எவ்வளவு வெட்கக் கேடானது! நீ பொய்களைச் சொல்லி என்னை வஞ்சிக்க விரும்புகிறாயா? அது அவ்வளவு எளிதானது அல்ல! உடனே இங்கிருந்து வெளியேறு! கலகத்தின் மகனே! நீ உன்னை நேசிக்கவில்லை, உன்னை மதிக்கவில்லை! நீ உன்னைப் பற்றி கவலைப்படவில்லை, இருந்தாலும் இன்னும் நான் உன்னை நேசிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயா? அதை மறந்துவிடு! அப்படிப்பட்ட பாதகன் ஒருவன் கூட எனக்கு வேண்டாம். நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்! இது எனது நாமத்துக்கு மிகக் கடுமையான அவமானத்தைக் கொண்டு வருகிறது; நீங்கள் இதைத் தெளிவாகப் பார்க்கவில்லை என்றால், இது சரிப்பட்டு வராது. இந்தப் பொல்லாத மற்றும் ஒழுங்கற்ற பழைய சகாப்தத்தில் எந்த அழுக்குகளாலும் மாசுபடாமல் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; நீங்கள் முற்றிலும் பரிசுத்தமாகவும் மாசற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இன்று, என்னுடன் இராஜாக்களாக ஆட்சி செய்யத் தகுதியுடையவர்கள் எந்த அசுத்தத்தாலும் மாசுபடாதவர்கள், ஏனென்றால் நானே பரிசுத்த தேவன், எனது நாமத்தை அவமானப்படுத்தும் யாரையும் நான் விரும்பவில்லை. அப்படிப்பட்டவர்கள் என்னைச் சோதிக்க சாத்தானால் அனுப்பப்பட்டவர்கள், நிச்சயமாக, அவர்கள் அனைவரும் சாத்தானின் கையாட்கள், அவர்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட வேண்டும் (அவர்களைப் பாதாளக்குழியில் எறிய வேண்டும்).

எனது குடும்பம் பரிசுத்தமானதும் மாசற்றதுமாக இருக்கிறது, மேலும் எனது ஆலயம் அற்புதமானதாகவும் மகத்தானதாகவும் இருக்கிறது (நான் என்னவாக இருக்கிறேன், என்ன கொண்டிருக்கிறேன் என்பதை உடையவர்களைக் குறிக்கிறது). தங்கள் இஷ்டம் போல் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்யத் துணிபவர் யார்? நான் நிச்சயமாக அவர்களை மன்னிக்க மாட்டேன். அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு அதிக வெட்கமடைவார்கள். நான் ஞானமாக செயல்படுகிறேன். பட்டயம் இல்லாமல், துப்பாக்கி இல்லாமல், ஒரு விரலை உயர்த்தாமல், என்னை எதிர்க்கிற, எனது நாமத்தை அவமானப்படுத்துகிறவர்களை நான் முற்றிலும் முறியடிப்பேன். நான் தயாள குணமுள்ளவன், சாத்தான் அந்தளவுக்கு கலகத்தை ஏற்படுத்தினாலும், நான் எனது கிரியையைச் சீராக தொடர்கிறேன்; நான் அதைப் பொருட்படுத்தாமல், எனது நிர்வாகத் திட்டம் முடிந்ததும் அதை முறியடிப்பேன். இது எனது வல்லமை மற்றும் எனது ஞானம், அதற்கும் மேலாக, இது எனது முடிவில்லாத மகிமையின் ஒரு சிறிய பகுதியாகும். எனது பார்வையில், என்னை எதிர்ப்பவர்கள் அழுக்கில் ஊர்ந்து செல்லும் வண்டுகளைப் போன்றவர்கள், எந்த நேரத்திலும் எனது நோக்கங்களின்படி என்னால் காலால் நசுக்கிக் கொல்ல முடியும். இருப்பினும், நான் ஞானத்துடன் விஷயங்களைச் செய்கிறேன். என் முதற்பேறான குமாரர்களை அவர்களுடன் சமாளிக்க வைத்திருக்க வேண்டும்; நான் அவசரப்படவில்லை. நான் முறைப்படி, ஒரு ஒழுங்கான முறையில் மற்றும் சிறிய தவறு இல்லாமல் செயல்படுகிறேன். என்னில் இருந்து பிறக்கும் அந்த முதற்பேறான குமாரர்கள் நான் என்னவாக இருக்கிறேனோ அதைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் எனது கிரியைகளில் என் முடிவில்லாத ஞானத்தைக் காண முடிய வேண்டும்!

முந்தைய: அத்தியாயம் 90

அடுத்த: அத்தியாயம் 92

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக