அத்தியாயம் 15

மனிதர்கள் அனைவரும் சுய அறிவு இல்லாத ஜீவன்கள், அவர்களால் தங்களைத் தாங்களே அறிய முடியவில்லை. இருந்தபோதிலும், தங்கள் புறங்கைகளை அறிந்திருப்பது போல, மற்றவர்கள் செய்தது, சொன்னது ஆகியவை எல்லாம், அவை செய்யப்படுவதற்கு முன்பு முதலில் அவர்களுக்கு முன்னால் அவர்களால் “பரிசோதிக்கப்பட்டன”, மேலும் அவர்களின் ஒப்புதலைப் பெற்றன என்பது போல மற்றவர்கள் எல்லோரையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் மற்ற எல்லோரையும் அவர்களின் உளவியல் நிலைகள்வரை முழு அளவில் எடுத்துக்கொண்டது போலத் தோன்றுகிறது. மனிதர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள். அவர்கள் இன்று ராஜ்யத்தின் காலத்திற்குள் நுழைந்தாலும்கூட, அவர்களின் சுபாவம் மாறாமல் உள்ளது. இப்போதும், அவர்கள் எனக்கு முன்னால் நான் என்ன செய்கிறேனோ அதைச் செய்கிறார்கள், அதேசமயம் எனக்குப் பின்னால் அவர்கள் தங்களுக்கே சொந்தமான தனித்துவமான “தொழிலை” செய்யத் தொடங்குகிறார்கள். எனினும், பின்னர், அவர்கள் எனக்கு முன்பாக வரும்போது, வெளிப்படையாக அமைதியாகவும், அச்சமின்றியும், தணிவான முகத்தோற்றத்துடனும் ஒரு நிலையான நாடித்துடிப்புடனும், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட மனிதர்களைப் போல இருக்கிறார்கள். இது துல்லியமாக மனிதர்களை மிகவும் வெறுக்கத்தக்கவர்களாக்குகிறது அல்லவா? அநேகர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு முகங்களை அணிந்துகொள்கிறார்கள்—ஒன்று எனக்கு முன்னால் இருக்கும்போது, மற்றொன்று என் பின்னால் இருக்கும்போது. அவர்களில் அநேகர் எனக்கு முன்பாக இருக்கும்போது பிறந்த ஆட்டுக்குட்டிகளைப் போலச் செயல்படுகிறார்கள், ஆனால் எனக்குப் பின்னால் இருக்கும்போது, அவர்கள் கொடூரமான புலிகளாக மாறி, பின்னர் மலைகளைச் சுற்றி மகிழ்ச்சியுடன் சிறகடிக்கும் சிறிய பறவைகள்போல நடிக்கிறார்கள். அநேகர் என் முகத்தின் முன்னே, நோக்கத்தையும் தீர்மானத்தையும் காட்டுகிறார்கள். அநேகர் தாகத்துடனும் ஏக்கத்துடனும் என் வார்த்தைகளைத் தேடுவதற்கு எனக்கு முன்பாக வருகிறார்கள், ஆனால் என் முதுகுக்குப் பின்னால், என் வார்த்தைகள் வில்லங்கமானது என்பதுபோல் அவற்றின்மீது சலிப்படைந்து அவற்றை அவர்கள் கைவிடுகிறார்கள். அநேகந்தரம், என் எதிரியால் மனித இனம் சீர்கெடுவதைக் கண்டதும், மனிதர்களிடம் என் நம்பிக்கையை வைப்பதை நான் விட்டுவிட்டேன். அநேகந்தரம், அவர்கள் எனக்கு முன்பாகக் கண்ணீருடன் மன்னிப்பு கோருவதற்கு வருவதைக் காண்கிறேன், இருந்தபோதிலும், அவர்களுடைய சுய மரியாதையின்மை மற்றும் பிடிவாதமான திருத்த முடியாத தன்மை காரணமாக, அவர்களின் இருதயங்கள் உண்மையானவை மற்றும் அவர்களின் நோக்கங்கள் நேர்மையானவை என்றாலும் கூட, கோபத்தில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு என் கண்களை மூடிக்கொண்டேன். அநேகந்தரம், என்னுடன் ஒத்துழைக்கும் அளவுக்கு ஜனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், அவர்கள் எனக்கு முன்பாக, என் அரவணைப்பின் கனிவைச் சுவைப்பதுபோலத் தெரிகிறது. அநேகந்தரம், நான் தேர்ந்தெடுத்த ஜனங்களின் அப்பாவித்தனம், ஜீவிதத்தன்மை மற்றும் அபிமானத்தைக் கண்டிருக்கிறேன், இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு நான் எப்படி மிகுந்த மகிழ்ச்சியைப் பெறாமல் இருக்க முடியும்? மனிதர்களுக்குத், தங்களின் முன்குறித்த ஆசீர்வாதங்களை என் கைகளில் எப்படி அனுபவிப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் “ஆசீர்வாதங்கள்” மற்றும் “துன்பம்” ஆகிய இரண்டின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் காரணத்தினால், மனிதர்கள் என்னைத் தேடுவதில் நேர்மைக்கு மிக அப்பால் இருக்கிறார்கள். நாளை என்பதில்லையென்றால், எனக்கு முன்பாக நிற்கும் உங்களில் யார் முற்றிலும் கால் பதிக்காத பனிபோலவும் களங்கமற்ற மாணிக்கமாகவும் இருப்பீர்கள்? ஒரு சுவையான உணவு, ஓர் உன்னதமான ஆடை, அல்லது அருமையான ஊதியம் கொண்ட ஓர் உயர் அலுவலகப் பணி ஆகியவற்றிற்குப் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்றாக என்மீதான உங்கள் அன்பு இருக்க முடியுமா? மற்றவர்கள் உன்மீது வைத்திருக்கும் அன்பிற்காக இதைப் பரிமாறிக்கொள்ள முடியுமா? சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது, ஜனங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பைக் கைவிடத் தூண்டுமா? துன்பங்களும் இன்னல்களும் எனது ஏற்பாடுகள் குறித்து அவர்கள் குறைகூறும்படிச் செய்ததா? என் வாயில் இருக்கும் கருக்குள்ள பட்டயத்தை யாரும் உண்மையிலேயே பாராட்டவில்லை: அது என்ன என்பதை உண்மையிலேயே புரிந்து கொள்ளாமல் அதன் மேலோட்டமான பொருளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். என் பட்டயத்தின் கருக்கை மனிதர்களால் உண்மையாகக் காண முடிந்தால், அவர்கள் எலிகள் தங்கள் வளைகளுக்குள் ஒடுவதுபோல தலைதெறிக்க ஓடுவார்கள். அவர்களின் உணர்வின்மை காரணமாக, மனிதர்கள் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, ஆகவே எனது வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதையோ அல்லது அவை மனித சுபாவங்களை எவ்வளவு வெளிப்படுத்துகின்றன என்பதையும், அந்த வார்த்தைகளால் அவர்களுடைய சொந்தச் சீர்கேடுகள் எவ்வளவு மதிப்பிடப்பட்டன என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, நான் சொல்வதைப் பற்றிய அவர்களின் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் விளைவாக, பெரும்பாலான ஜனங்கள் வெதுவெதுப்பான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர்.

ராஜ்யத்திற்குள்ளேயே, என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருவது மட்டுமல்லாமல், எல்லா தேசங்களிலும் எல்லா இடங்களுக்கும் என் கால்கள் சடங்கு முறைப்படி நடந்து செல்கின்றன. இந்த வழியில், நான் அசுத்தமான மற்றும் அசிங்கமான எல்லா இடங்களையும் வென்றேன், இதனால் பரலோகம் மாத்திரம் அல்ல, ஆனால் பூமியும் மாற்றத்தின் செயல்பாட்டில் உள்ளது, பின்னர் புதுப்பிக்கப்படுகிறது. அண்டவெளிக்குள், எல்லாம் என் மகிமையின் பிரகாசத்தில் புதியது போல் பிரகாசிக்கிறது, இது, இப்போது மனிதக் கற்பனையில் கருக்கொண்டதைப் போல, சாத்தானால் பங்கமாக்கப்படாத மற்றும் வெளிப்புற எதிரிகளின் தாக்குதல்களுக்கு உட்படாத, பரலோகத்திற்கு அப்பால் ஒரு பரலோகம் இருக்கிறது என்பதைப் போல, இது புலன்களை மிகவும் மகிழ்வித்து மற்றும் ஜனங்களின் ஆவிகளை உயர்த்துகிற, இருதயத்தை தொடும் ஓர் அம்சத்தை முன்வைக்கிறது. பிரபஞ்சத்தில் எட்டக்கூடிய மிக உயர்ந்த இடங்களில், எண்ணற்ற நட்சத்திரங்கள் என் கட்டளைப்படி நியமிக்கப்பட்ட இடங்களை எடுத்துக்கொள்கின்றன, அவை இருளடைந்த நேரங்களில் அவற்றின் ஒளியை நிழலற்ற பகுதிகள் வழியாக அளித்து ஒளிர்கின்றன. மறுதலிப்பதற்கான சிந்தனைகளை மனதில் கொள்ள எந்தவொரு ஜீவனும் துணிவதில்லை, எனவே, எனது நிர்வாக ஆணைகளின் சாராம்சத்திற்கு ஏற்ப, முழு பிரபஞ்சமும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுச் சரியான அமைப்பில் உள்ளது: எந்தவொரு இடையூறும் இதுவரை எழுந்ததில்லை, பேரண்டம் இதுவரை பிரிக்கப்படவில்லை. நான் நட்சத்திரங்களுக்கு மேலாகப் பறந்து பாய்வதைச் செயலாக்குகிறேன், சூரியன் அதன் கதிர்களை வீசும்போது, என் கைகளிலிருந்து கீழே இறங்கும் வாத்து இறகுகள் போன்ற பெரிய பனிப்பொழிவுகளை அனுப்பி அவற்றின் வெப்பத்தை நான் நிவர்த்தி செய்கிறேன். நான் என் மனதை மாற்றிக்கொள்ளும்போது, அந்தப் பனி அனைத்தும் ஒரு நதியாக உருகும், மற்றும் ஒரு நொடியில், வானத்தின் அடியில் எல்லா இடங்களிலும் வசந்தம் உருவாகிறது மற்றும் பூமியின் முழு நிலப்பரப்பையும் மரகதப் பச்சையாக மாற்றுகிறது. நான் ஆகாயவிரிவுக்கு மேலே அலைந்து திரிகிறேன், உடனடியாக, என் உருவாக்கத்தின் காரணமாகப் பூமியானது அடர்ந்த இருளால் மூடி மறைக்கப்படுகிறது: எந்த எச்சரிக்கையும் இல்லாமல், “இரவு” வந்துவிட்டது, இதனால் ஒருவரின் முகத்தின் முன்னே ஒருவரின் கையைப் பார்க்க முடியாதபடிக்கு உலகம் முழுவதும் அது இருட்டாக வளர்கிறது. ஒளி அணைக்கப்பட்டவுடன், மனிதர்கள் இந்தத் தருணத்தைப் பரஸ்பர அழிவுக்கான வன்முறைச் செயல்களில் இறங்குவதற்கும், ஒருவரிடமிருந்து ஒருவர் பறித்தும், கொள்ளையடிக்கவும் பயன்படுத்திக் கொள்ளத் துவங்குகிறார்கள். பூமியின் தேசங்கள் பின்னர் குழப்பமான ஒற்றுமையின்மையில் விழுந்து எல்லா மீட்பிற்கும் அப்பாற்பட்ட நிலையை அடைந்து குழம்பிய கொந்தளிப்பான நிலையில் நுழைகின்றன. ஜனங்கள் துன்பப்பட்ட நிலையில் போராடுகிறார்கள், தங்கள் வேதனையின் நடுவே முனகுகிறார்கள், புலம்புகிறார்கள், மனக்கலக்கம் கொண்டு கொடுந்துயரத்துடன் அழுகிறார்கள், மனித உலகத்திற்கு வெளிச்சம் உடனடியாக மீண்டும் வர வேண்டும், இதனால் இருளின் நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்து, முன்பு ஒருமுறை இருந்த உயிர்ச்சக்தியை மீட்டெடுக்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். இருப்பினும், நான் நீண்ட காலத்துக்கு முன்பே மனிதர்களை விட்டு வெளியேறி விட்டேன், உலகின் தவறுகளுக்காக அவர்கள்மீது ஒருபோதும் ஒரு துளியேனும் பரிதாபப்பட மாட்டேன்: நீண்ட காலமாகவே பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் நான் வெறுத்தேன், நிராகரித்தேன், அங்குள்ள நிலைமைகளுக்கு என் கண்களை மூடிக்கொண்டேன், மனிதர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் சைகைகளுக்கும் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன், அவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையிலும் அப்பாவித்தனத்திலும் மகிழ்ச்சி அடைவதை நிறுத்திவிட்டேன். உலகைப் புதிதாக மாற்றுவதற்கான மற்றொரு திட்டத்தை நான் துவங்கியுள்ளேன், இதனால் மீண்டும் ஒருபோதும் நீரில் மூழ்காத இந்தப் புதிய உலகம் விரைவில் மறுபிறப்பைக் காணலாம். மனிதர்களின் மத்தியில், பல வினோதமாகத் தோன்றுகிற அரசுகள் தங்களைச் சரிப்படுத்துவதற்காகக் காத்திருக்கின்றன, நடப்பதை நான் நேரடியாகத் தடுப்பதற்கு நிறையத் தவறுகள் உள்ளன, நான் துடைத்துப் போடுவதற்காக ஏராளமான தூசிகள் உள்ளன, நான் விடுவிப்பதற்கு எனக்கு ஏராளமான இரகசியங்கள் உள்ளன. மனிதகுலம் அனைத்தும் எனக்காகக் காத்திருக்கிறது, என் வருகைக்காக ஏங்குகிறது.

பூமியில், மனிதர்களின் இருதயங்களில் நிலைத்திருக்கும் நடைமுறை தேவன் நானே; பரலோகத்தில், எல்லா சிருஷ்டிகளுக்கும் எஜமானன் நானே. நான் மலைகள் மீதேறி, ஆறுகளைக் கடந்து சென்றுள்ளேன், மனிதர்களின் உள்ளேயும் வெளியேயும் நான் அலைந்திருக்கிறேன். நடைமுறை தேவனையே வெளிப்படையாக எதிர்க்கத் தைரியம் கொண்டவர் யார்? சர்வவல்லவரின் ராஜரீகத்திலிருந்து விலகிச்செல்லத் துணிந்தவர் யார்? ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால், பரலோகத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்லத் துணிந்தவர் யார்? மேலும், நான் பூமியில் இருக்கிறேன் என்று மறுக்கமுடியாமல் கூறுவதற்கு தைரியம் கொண்டவர் யார்? நான் வசிக்கும் இடங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் மனிதர்களில் ஒருவரும் இல்லை. நான் பரலோகத்தில் இருக்கும்போதெல்லாம், நானே இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன், நான் பூமியில் இருக்கும்போதெல்லாம், நானே நடைமுறை தேவன் என்பதனால் இருக்குமா? நிச்சயமாக நான் நடைமுறை தேவனா இல்லையா என்பதை எல்லா சிருஷ்டிகளையும் ஆளுகை செய்கிறவராக இருப்பதாலோ அல்லது மனித உலகின் துன்பங்களை நான் அனுபவிப்பதன் மூலமோ தீர்மானிக்க முடியாது. அதுதான் பிரச்சினை என்றால், எல்லா நம்பிக்கையையும் தாண்டி மனிதர்கள் அறியாதவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லவா? நான் பரலோகத்தில் இருக்கிறேன், ஆனால் நான் பூமியிலும் இருக்கிறேன்; சிருஷ்டியின் எண்ணற்ற பொருட்களின் மத்தியில் நான் இருக்கிறேன், ஆனால் ஜனங்களிடையேயும் நான் இருக்கிறேன். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் என்னை தொடலாம்; மேலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் என்னைப் பார்க்க முடியும். மனிதர்களைப் பொறுத்தவரை, நான் சில நேரங்களில் ஒளிந்திருக்கிறேன், சில சமயங்களில் புலப்படும்படியாக இருக்கிறேன்; நான் உண்மையில் இருப்பதாகத் தெரிகிறது, ஆனாலும் நானும் இல்லை என்று தெரிகிறது. மனிதர்களால் ஆழங்காண முடியாத புரியாத மர்மங்கள் என்னில் உள்ளன. எல்லா மனிதர்களும் என்னில் இருக்கும் இரகசியங்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு நுண்ணோக்கி மூலம் என்னை உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது, இது அவர்களின் இருதயங்களில் அந்தச் சங்கடமான உணர்வை அகற்றும் என்று நம்புகிறார்கள். எனினும், அவர்கள் ஊடுகதிர்களை பயன்படுத்தினாலும், நான் வைத்திருக்கும் எந்த இரகசியங்களையும் மனிதர்களால் எவ்வாறு கண்டறிய முடியும்?

என் கிரியையின் விளைவாக, என் ஜனங்கள் என்னுடன் மகிமையை அடையும் தருணத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை கண்டுபிடிக்கப்பட்டு, சேறு மற்றும் அழுக்கு அனைத்தும் சுத்தமாகத் துடைக்கப்படும், மற்றும் எண்ணற்ற ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள மாசுபட்ட நீர் அனைத்தும், எனது எரியும் நெருப்பில் உலர்ந்துவிடும், இதற்குமேல் அது இருக்காது. அதன்பிறகு, சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் அழிந்துவிடும். வலுசர்ப்பத்தால் பறிக்கப்படாமல் இருக்க என் அன்பான பராமரிப்பின் கீழ் இருக்க நீங்கள் உண்மையிலேயே தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் உண்மையில் அதன் வஞ்சகத் தந்திரங்களை வெறுக்கிறீர்களா? எனக்கு வலுவான சாட்சியை யார் அளிக்க இயலும்? என் நாமத்திற்காகவும், என் ஆவியானவர் நிமித்தமாகவும், எனது முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவர்களுடைய எல்லா பலத்தையும் யார் காணிக்கையாக அளிக்க முடியும்? மனித உலகில் ராஜ்யம் இருக்கும் இன்றைய நாள்தான், நான் மனிதர்கள் மத்தியில் நேரில் வந்த காலம். இது அவ்வாறு இல்லையென்றால், எந்தவிதமான நடுக்கமும் இல்லாமல் என் சார்பாகப் போர்க்களத்தில் இறங்கக்கூடிய எவரும் இருக்கிறார்களா? ராஜ்யம் வடிவம் பெறும்படி, என் இருதயம் திருப்தியடையும்படி, மேலும், என்னுடைய நாள் வரும்படி, இதனால் சிருஷ்டியின் எண்ணற்ற பொருட்கள் மறுபடி பிறந்து ஏராளமாக வளரும் காலம் வரும்படி, இதனால் மனிதர்கள் அவர்களுடைய துன்பக் கடலிலிருந்து மீட்கப்படும்படி, நாளைய தினம் வரும்படி, அது அற்புதமாக, மலர்ந்து செழித்து வளரும்படி, மேலும், எதிர்காலத்தின் இன்பம் நிறைவேறும்படி, எனக்காகத் தங்களையே பலியாக்கிக் கொள்வதில் எதனையும் விட்டுவைக்காமல், எல்லா மனிதர்களும் தங்கள் முழு வலிமையுடனும் போராடுகிறார்கள். வெற்றி ஏற்கனவே என்னுடையது என்பதற்கு இது அறிகுறி அல்லவா? இது எனது திட்டம் முடிந்ததற்கான அடையாளம் அல்லவா?

கடைசி நாட்களில் ஜனங்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் உலகின் வெறுமையை உணருவார்கள், மேலும் ஜீவிதத்துக்கான தைரியம் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இந்தக் காரணத்திற்காக, எண்ணற்ற ஜனங்கள் ஏமாற்றத்தில் இறந்துவிட்டனர், எண்ணற்ற மற்றவர்கள் தங்கள் தேடல்களில் ஏமாற்றமடைந்துள்ளனர், மேலும் எண்ணற்ற மற்றவர்கள் சாத்தானின் கையால் கையாளப்படுவதற்கு வருந்துகிறார்கள். நான் பலரையும் மீட்டு, அவர்களில் பலரையும் ஆதரித்திருக்கிறேன், மேலும், மிகவும் அடிக்கடி, மனிதர்கள் ஒளியை இழந்துவிட்டபோது, அவர்களை மீண்டும் ஒளியுள்ள ஓர் இடத்திற்கு நகர்த்தியுள்ளேன், இதனால் அவர்கள் என்னை வெளிச்சத்திற்குள் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியின் மத்தியில் என்னை அனுபவிப்பார்கள். என் ஒளியின் வருகையின் காரணமாக, என் ராஜ்யத்தில் வாழும் ஜனங்களின் இருதயங்களில் வழிபடுவது வளர்கிறது, ஏனென்றால் நான் மனிதர்கள் நேசிக்கும் ஒரு தேவன்—மனிதர்கள் பாசப்பிணைப்புடன் பற்றிக்கொள்ளும் ஒரு தேவன்—அவர்கள் என் வடிவம் பற்றிய ஒரு நிலையான எண்ணத்தால் நிறைந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இது ஆவியானவர் செயலா அல்லது மாம்சத்தின் செயல்பாடா என்பதைப் புரிந்து கொள்பவர் எவரும் இல்லை. இந்த ஒரு விஷயத்தை விரிவாக அனுபவித்து உணர ஜனங்களுக்கு முழு வாழ்நாளும் எடுத்துக்கொள்ளும். மனிதர்கள் ஒருபோதும் என்னைத் தங்கள் இருதயங்களின் உள்ளார்ந்த ஆழத்தில் இகழ்ந்ததில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஆவிகளின் ஆழத்தில் என்னைப் பற்றிக்கொள்கிறார்கள். என் ஞானம் அவர்களின் அபிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது, நான் செய்யும் கிரியையின் அதிசயங்கள் அவர்களின் கண்களுக்கு ஒரு விருந்து, என் வார்த்தைகள் அவர்களின் மனதைக் கவரும், ஆனாலும் அவற்றை அவர்கள் மிகவும் விருப்பத்துடன் நெஞ்சார நேசிக்கிறார்கள். எனது யதார்த்தம் மனிதர்களை இழப்பிலும், வாயடைத்துப் போகும்படியும், குழப்பத்திலும் ஆழ்த்துகிறது, ஆனாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இது உண்மையிலேயே மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கான துல்லியமான அளவீடு அல்லவா?

மார்ச் 13, 1992

முந்தைய: அத்தியாயம் 14

அடுத்த: அத்தியாயம் 16

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக