கடைசி நாட்களில் தேவன் ஏன் ஆவிவடிவத்தில் வராமல் மனுஷரூபத்தில் வருகிறார்?

டிசம்பர் 9, 2021

இரட்சகரான, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ள தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சத்தியங்கள வெளிப்படுத்தியதில் இருந்து அநேக மக்கள் மெய் வழியைத் தேடி ஆராய்ஞ்சி, இரட்சகரின் வருகய வரவேத்திருக்காங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள் அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிகாரமும் வல்லமயும் உடயதுங்கிறதயும், உண்மயிலே அவைகள்தாம் சத்தியங்கிறதயும் பாத்தாங்க இது பரிசுத்த ஆவியின் சத்தம் கிறதயும் உறுதிப்படுத்துனா ங்க சாதாரண மனிதர் யாரும் இந்த வார்த்தைகள பேச முடியாது. தேவனுடைய சத்தத்தக் கேட்டு, அவங்க சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டாங்க தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எழுப்பப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணவிருந்தில கலந்துகிட்டாங்க. தேவனுடய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்க தேவனுடய வார்த்தைகள ஒவ்வொரு நாளும் புசிச்சிக், குடிச்சாங்க, மற்றும் அனுபவிச்சாங்க, இது அவங்க இதயங்கள மேலும் மேலும் பிரகாசிச்சிச்சி. அவங்க தேவனுடய பிரசன்னத்த அனுபவிச்சது மட்டுமில்லாம, அவருடய வார்த்தைகளுடய பிரகாசித்தலயும் பெற்றுகிட்டாங்க பல சத்தியங்கள கத்துக்கிட்டாங்க, பல விஷயங்களப் புரிச்சிகிட்டாங்க. வேதத்தின் பல ரகசியங்களயும் அவங்க கத்துக்கிட்டாங்க, இது மிக பெரிய இன்பம். அவங்க விசுவாசத்தால நிரம்பி வழியுறாங்க, தேவன் மேல உள்ள அவங்க அன்பு ஆழமாயிடிச்சி. தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட அநேக மக்கள் சீனகம்யூனிஸ்ட் கட்சியோட ஒடுக்குமுறை, கைதுகள், அப்புறம் துன்புறுத்தல்களுக்கு பயப்படல. அவங்க தங்களோட குடும்பங்கள், உலக உறவுகளை விட்டு, தேவனுக்கு சாட்சியா சுவிசேஷத்த பகிர்ந்து கொள்ள கடமபட்டுருந்தாங்க. அவுங்க சிசிபியின் கொடூரமான கைதுகள் அப்புறம் துன்புறுத்தல்களயும் அனுபவிக்கிறாங்க. ஆனா தொடர்ந்து, தைரியமாக, அசராம தேவன பின்பற்றாங்க, அவருக்கு சாட்சி கொடுக்குறாங்க. அவர்கள் தோற்கடிக்கப்படல, அவர்கள நிச்சயமா துடைத்தெறியப்படல. அவங்க தேவனுக்காக பெரிய சாட்சிய சுமந்திருக்ககாங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடய ராஜ்யத்தின் சுவிசேஷம் இப்போ பூமியில இருக்குற ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்கு, மேலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய சபை அந்த நாடுகள் பலவற்றில நிறுவப்பட்டிறுக்கு. அதிக அதிகமான மக்கள் தேவனுடய சத்தத்த கேட்டு சர்வவல்லமையுள்ள தேவன நோக்கி திரும்பிக்கிட்டு இருக்காங்க. ஆன்லைன்ல சர்வவல்லமையுள்ள தேவனுடய கிரியய ஆராச்சி செய்றங்களோட எண்ணிக்க கூடிக்கிட்டே வருது. இது கர்த்தராகிய இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்த முழுமையா நிறைவேத்துது: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள் சொல்றது போல: “பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையைக் கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள ‘ஒலிவ மலையில்’ இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் ஆகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’”).

சர்வவல்லமையுள்ள தேவன் உச்சரித்த வார்த்தகள், ஒரு பெரிய ஒளி போல, ஏற்கனவே கிழக்கிலருந்து மேற்கு நோக்கி பரவியிருக்கு. ஒவ்வொரு நாட்டுலயும் இருக்குற தேவனால தெரிந்தெடுக்கபட்ட மக்கள் சுவிசேஷத்த பிரசங்கிக்கிறாங்க, அவருக்கு சாட்சி சொல்றாங்க ஏற்கனவே சாத்தான தோற்கடிச்சதுக்காகவும், எல்லா மகிமயயும் பெற்றுகிட்டதுகாகவும் மகிழ்ச்சியுடன் தேவன துதிக்கிறாங்க. இரட்சகரான சர்வவல்லமையுள்ள தேவன் பேரழிவுகள் வாரதுக்கு முன்னாலே தோன்றி கிரிய செய்யத் தொடங்கிட்டாரு, அவர் ஒரு கூட்ட ஜெயங்கொள்றவங்களயும் உருவாக்கியிருக்காரு. அவருடைய ராஜ்ய சுவிசேஷம் ஒவ்வொரு நாட்டுக்கும் பரவியிருக்கு அதன்படி பேரழிவுகளும் தொடந்து வந்துருக்கு. தேவனுடய வீட்டில ஆரம்பிக்கிற நியாயத்தீர்ப்பின் வேலை ஏற்கனவே ஒரு பெரிய வெற்றி என்பத நம்மால பாக்க முடியும், அப்புறம், தேவன் இந்த உலகத்த நியாயம்தீக்கவும், சிட்சிக்கவும் எல்லா வகயான பேரழிவுகளயும் பயன்படுத்திக்கிட்டு இருக்காரு. இந்த பேரழிவுகள்லாம் ராஜ்யத்தின் சுவிசேஷத்த விரிவுபடுத்தவும், அநேக மக்கள பாவத்தில இருந்தும், சாத்தானுடய ஆக்கிரமிப்புல இருந்தும் மக்கள ரட்சிக்கவும் உதவுது. இதோட வேறொரு அம்சம் என்னன்னா, தேவன் சிட்சிக்கவும், இந்த இருண்ட, தீய காலத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவும் தேவன எதுக்குற எல்லா தீய சக்திகளயும் துடைச்செறியவும் பேரழிவுகள பயன்படுத்துறாரு. கடைசி நாட்களில் தேவனுடய நியாயத்தீர்ப்பின் கிரிய இந்த கனிகளத்தான் கொடுக்கும். இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு மகத்தான காரியங்களச் செஞ்சி, அவரு உலகத்த அசச்சிக்கிட்டு இருக்காரு. ஆனால் மத உலகில் இருக்குற பலர் சிசிபி யாகிய சிவப்பான பெரிய வலுசர்பத்தால, தவறா வழிநடத்தப்படுறாங்க இன்னும் மதத்திற்குள அந்திககிறிஸ்துவால பிணைக்கப்பட்டுருக்காங்க. ஆவி வடிவத்துல ஒரு மேகத்தில தேவன் இறங்கி வரணும்கற கருத்த அவங்க பிடிச்சிகிறாங்க, அவர் மாம்சத்துல மனுஷகுமாரனா திரும்பி வர முடியாது. அதனாலதான் மேகத்தில வராத எதுவும் பொய்யிங்குறதுலயும் அவரு மனுஷ குமாரன் என்கிற எந்த சாட்சியும் பொய்யானதுன்னுங்குறதுலயும் அவங்க உறுதியா இருக்காங்க அது மனித நம்பிக்க ன்னு சொல்றாங்க. அவங்க சபைகளுக்கான பரிசுத்த ஆவியின் வார்த்தைகள தேடவும், விசாரிக்கவும் தவறிடுறாங்க, அல்லது தேவனுடய சத்தத்த தேடிக் கவனிக்குறதுமில்ல. ஆனா அவங்க மத அந்திகிறிஸ்துகள பின்பற்றாங்க, தொடர்ந்து தியாயந்தீர்த்து, கண்டனம் செய்து சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றுதலயும், கிரியையயும் தூஷிக்கிறாங்க. அதனாலதான் அவங்க இன்னும் கர்த்தர வரவேற்கல்ல ஆனா பேரழிவுக்குள்ள விழுந்து, அழுது தங்களோட பற்கள கடிக்குறாங்க, அவங்க வாழ்வாங்களா இல்லனா மரிப்பாங்களான்னு யாருக்குமே தெரியாது. பலருக்கு ஒரு கேள்வி இருக்கு. கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பிறகு நாற்பது நாட்களா ஆவியா காட்சியளித்தாரு, எனவே அவர் ஆவி வடிவத்தில திரும்பி வரணும். சர்வவல்லமையுள்ள தேவன் ஆவியாக காட்சியளிக்காம, ஏன் மனுஷரூபத்தில மனுஷகுமாரனா தோன்றணும்? பலர் இந்தக் கேள்வியக் கேட்குறாங்க அநேகர் சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கமாட்டாங்க; ஏன்னா அவரு மாம்சத்தில இருக்காரு, ஆவியில இல்ல. எத்தகைய ஒரு அவமானம்! அவங்க இரட்சிப்புக்கான தங்கள் ஒரே வாய்ப்ப இழக்குறாங்க, இதுக்காக அவங்க நித்தியத்துக்கும் வருத்தப்படுவாங்க. அடுத்து இந்த கேள்விக்கு பதிலளிக்க ஒரு சிறிய ஐக்கியத்த பகிர்ந்து கொள்றேன் ஏன் தேவன் ஆவியில் இல்லாம மாம்சத்தில தோன்றுறார், கடைசி நாட்களில்.

முதலாவதாக, கர்த்தர் எவ்வாறு தோன்றி கிரிய செய்றார் என்பத பொறுத்தவரை கடைசி நாட்கள்ல, நாம் கர்த்தராகிய இயேசு மாம்சத்தில உலகத்துக்கு அவருடைய கிரியய செய்ய கடைசி நாட்கள்ல மனுஷகுமாரனா திரும்பி வருவாரு என்பத உறுதிப்படுத்த முடியும். இது ஒரு மனிதனால தீர்மானிக்கப்பட்டது இல்ல, கர்த்தராகிய இயேசுவின் சொந்த வாயில் இருந்து வந்த பல தீர்க்கதரிசனங்கள அடிப்படையா கொண்டது. தேவன் உண்மையில் ஆவியாக திரும்புவாரா இல்லனா மனுஷகுமாரனா மாம்சத்தில் திரும்புவாரா என்பது நீண்ட காலத்துக்கு முன்பே தேவனால தீர்மானிக்கப்பட்டிருச்சி, இதில மனுஷன் தேர்ந்தெடுத்தது ஒண்ணுமில்ல. மனிதர்களாக, நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்ம சொந்த கருத்துக்கள், கற்பனைகள்அடிப்படையில விஷயங்களை மட்டுப்படுத்தாமல், கீழ்படிய வேண்டியதுதான். உண்மையில, தேவனின் முன்தீர்மானிக்கப்பட்ட தோன்றுதல் மனித கருத்துகளோட பொருந்தலனாலும், அதுதான் சிறந்தது, நம்முடய இரட்சிப்புக்கு ரொம்ப அர்த்தமுள்ளது, பிரயோஜனமானது. அது தவறா இருக்க முடியாது. நாம் எத கற்பனை செய்யலாங்குறதின் அடிப்படையில நாம் அத அணுக முடியாது. நாம் புத்தியுள்ள கன்னிகைகளாக இருக்கணும், முட்டாள்களாக இருக்கக்கூடாது. கர்த்தரின் தோன்றுதல வரவேற்க ஒரே வழி அதுதான். மக்கள் தங்களோட சொந்த வரையறைகள் படி போறத வலியுறுத்தலாம், மேகத்தின் மேல் கர்த்தர் வருவத தவிர வேறு எதையும் ஏற்க மறுத்து, மாம்சமான மனுஷகுமாரன நிராகரிச்சாங்க. இந்த நடத்தயின் விளைவுகள் தான் என்ன? அவர்கள் நிச்சயமாக பேரழிவுகளில் சிக்கி தண்டிக்கப்படுவாங்க, தங்களுக்கு தாங்களே அழிவ வரவழைப்பாங்க. நாம புத்தியுள்ள கன்னிகைகள்னா, கர்த்தர வரவேற்க தேவனுடைய சத்தத்த தேடி, கேட்டு, கர்த்தரின் தேவைகளுக்கு ஏற்றால் போல நாம் செய்யணும். அவரு எந்த வடிவத்த எடுத்துக்கிட்டாலும், சந்தோஷமா ஏத்துக்கிட்டு, நமக்கு நாமே தெரிவு செய்ய முயற்சிக்காம அவருக்கு முழுமயா கீழ்படிய வேண்டியதுதான். இல்லன்னா, நாம புத்தியில்லாத கன்னிகைகளாக மாறிறுவோம், பேரழிவுக்குள்ள சிக்கி, அழுது, நம்ம பல்ல கடிப்போம். எனவே கடைசி நாட்கள்ல உண்மையில என்ன நடக்குது? தேவன் ஆவியா திரும்புவாரா, இல்லனா மனுஷகுமாரனா திரும்புவாரா? முதலாவது, தேவனுடய ஆவியுடன் இடைபடுவது எளிதா இல்லனா மனுஷகுமாரன்கிட்ட இடைபடுவதுஎளிதா என்பத பத்திப் பேசலாம். அவருக்கு, ஆவியின் மூலமாவா, இ்ல்லனா மாம்சத்தின் மூலமாவா நம்மகிட்ட பேசுறது எளிது? அநேகர் என்ன சொல்வாங்கன்னா இரண்டு வழியும் மனுஷகுமாரனுக்கு சுலபம்தான். அது சரி தான். அதனாலதான், கிருபையின் காலத்துல தேவன் தோன்றி கிரிய செஞ்சப்ப மாம்சமானார். கர்த்தராகிய இயேசுதான் மனுஷகுமாரன். அவர் மனிதங்க மத்தியில வாழ்ந்தாரு, சாப்பிட்டாரு, குடிச்சாரு, நம்ம கூட வாழ்ந்தாரு. அநேகர் கர்த்தரப் பின்பற்றினாங்க, ஐக்கியப்பட்டாங்க, பேசினாங்க, அவரோடு இடைபட்டாங்க. இது முற்றிலும் சுதந்திரமாவும் எளிதாவும் இருந்திச்சி, எந்தக் கட்டுப்பாடும் அல்லது வரம்பும் இல்ல. அவங்க எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் அன்பக் கண்டாங்க. நீர்பாச்சபட்டாங்க, பாதுகாக்கபட்டாங்க தேவனால ஆதரிக்கபட்டாங்க, மக்களால பல சத்தியங்கள அறிய முடிஞ்சிச்சி. தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்திய பின்னால, அவர் சிலுவையில அறையப்பட்டாரு மனுக்குலத்தின் பாவ நிவாரண பலியானாரு. யாரானாலும் கர்த்தராகிய இயேசுவ தங்கள் இரட்சகரா ஏற்றுக்கொண்டு தாங்க அறிக்கயிட்டு, அவர்கிட்ட மனந்திரும்புனா செய்த பாவங்கள் மன்னிக்க பட முடியும், அப்புறம், அவங்க தங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கபட்டு, தேவன் கொடுத்த சமாதானத்தயும், சந்தோஷத்தயும் அனுபவிக்க முடியும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த பின்னால அவர் பரலோகத்திற்கு ஏறினாரு அதிக அதிக மக்கள் அவரது சுவிசேஷத்தை பகிர தொடங்குனாங்க இயேசுக் கிறிஸ்துவ இரட்சகராவும் தேவனின் தோற்றமாவும் சாட்சி கொடுத்தாங்க. ரொம்ப காலத்திற்கு முன்பே கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷம் உலகத்தின் ஒவ்வொரு நாட்டிற்கும் பரவிச்சி. மனுக்குலத்த மீட்கவும், இரட்சிக்கவும் தேவன் மனுஷகுமாரனாக மாம்சமானார் என்பது ரொம்ப பலனளிப்பதா இருந்தது என்பத இது நிருபிக்குது. தேவனுடய ஆவிய மக்களால பார்க்கவோ தொடவோ முடியாது—அவங்க அந்தவழியில அவரத் தொடர்பு கொள்ள முடியாது. தேவனுடய ஆவியுடன் நம்மால தொடர்பு கொள்ள முடியாது. தேவனுடய ஆவி பேசும் போது, எல்லாரும் பயந்து நடுங்குவாங்க. அந்த வழியில நாம எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கூடுதலா, தேவனுடய ஆவி சிலுவையில அறையப்பட்டுருக்க எந்த வழியுமே இல்லை. மக்களாலப் பாக்க இல்லனா தொட முடியாத ஒண்ண எப்படி சிலுவையில அறைய முடியும், இல்லையா? இது மனுஷகுமாரனா கிரிய செய்றது தேவனுக்கு சிறந்தது ன்னு நமக்கு காட்டுது. இயேசு மனுக்குலத்த மீட்கும் தமது பணிய முடிச்சப்ப தேவன் மகிமைப்படுத்தபட்டாரு. இது எல்லாரும் பாக்குற மாதிரி தெளிவா இருக்கு. கர்த்தராகிய இயேசுவின் கிரியயின் உண்மைகள்ள இருந்து மனுக்குலத்த மீட்கும் தேவனுடய பணியில அது அவரது மீட்கும் பணியா இருந்தாலும் இல்லனா கடைசி நாட்களின் நியாய தீர்ப்பு கிரியயானாலும் மனுஷகுமாரனா மாம்சமாவதுதான் மிக பொருத்தமானதுன்னு நாம் உறுதியா இருக்க முடியும். இதுதான் சிறப்பான பலன குடுக்கும். மேலும், கடைசி நாட்கள்ல மனுஷகுமாரனா மாம்சமாவதுதான் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள முழுமயா நிறைவேத்துது: “மனுஷகுமாரனுடைய வருகை,” “மனுஷகுமாரன் வருவார்,” மற்றும் “மனுஷகுமாரன் தம்முடைய நாளிலே,” வேதத்த நல்லா அறிஞ்சவங்க, கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறினத பாக்க முடியும். எனவே ஏன் அநேக மக்கள் மனுஷகுமாரனுடய தோன்றுதல் மேலும் கிரியய பற்றியுள்ள கருத்துக்கள பற்றிப்பிடிச்சிகிறாங்க? ஏன் அநேக மக்கள் இன்னும் தேவன் ஆவி வடிவில் ஒரு மேகம் மீது இறங்குவார்ங்குறத வலியுறுத்துறாங்க? இது உண்மையில முட்டாள்தனமானது மற்றும் அறியாம. தேவன் மனுஷகுமாரனா தோன்றி, தாழ்ம உள்ளவரா, மறைவா இருந்து கிரிய செய்றாரு இது மிகவும் பலனளிப்பதுங்குறதால மட்டுமில்ல, அப்படின்னாதான், நாம தேவனுடய மனநிலயயும், அவருடய தாழ்மயும், மறஞ்சிருக்கும் தன்மயும் எவ்வளவு இனிமங்குறத நம்மால பாக்க முடியும், தேவன் மனிதர்கள மனிதகுமாரனா நேரடியா சந்திக்காரு நம்மோடு நேருக்கு நேர், சாப்பிடுறாரு, குடிக்குறாரு, நம்மோட வாழ்றாரு, நீர்பாச்சி, மேய்ச்சி, நம்ம இரட்சிக்க சத்தியத்த வெளிப்படுத்துறாரு. அதுதான் தேவனுடய பெரிய அன்பு! மக்களால ஏன் இத பாக்க முடியல? சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்த சொல்றது போல: “மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். … மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறைப் பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும்தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யான கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தையச் சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது”).

சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருக்கு. மாம்சமாகுறதுனால மட்டுமே கடைசி நாட்கள்ள நடக்கும் அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியயில தேவன் முழுமயா சுத்திகரிக்கவும், மனுக்குலத்த இரட்சிக்கவும் அழகான சென்றடையும் இடத்துக்கு நடத்தவும் முடியும். தனிப்பட்ட முறையில சர்வவல்லமையுள்ள தேவன நம் மத்தியிலயும், நம்மோட இணைஞ்சி வாழ்வதயும் பார்த்ருக்கோம், எப்போதும் சத்தியத்த ஐக்கியப்படவும் மேலும் நடைமுறை பிரச்சினைகள தீக்கவும். அவர் மனிதகுலத்தின் சீர்கேட கவனிக்கிறார் அவருடைய வார்த்தைகள எழுதி சத்தியங்கள நமக்கு கொடுக்கிறாரு. தேவனுடய வார்த்தைகள நாம் உண்மையிலேயே அனுபவிக்கிறோம், நமது ஆவிகள் விடுவிக்கப்படுகின்றன. தேவன் நம்மோடு சத்தியத்த ஐக்கியப்படும் போது, நாம் அவர்கிட்ட, கேள்விகள கேக்கலாம். அவரு பொறுமயா பதில் சொல்வாரு. சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்தோடு வாழ்றாரு, நம்மகூட பேசி யும், ஐக்கியப்படவும் செய்றாரு. நமது ஒவ்வொரு வார்த்தையும், நமது ஒவ்வொரு அசைவும், நமது ஒவ்வொரு சிந்தனை எல்லாம் பகல போல தேவனுக்கு தெளிவா இருக்கு, அவரு கண் முன்னால இருக்கு. எந்த நேரத்திலும் இல்லனா இடத்திலும் அவரால சத்தியங்கள வெளிப்படுத்த முடியும், நம்முடைய சாத்தானிய மனநிலைகளையும், அவரைப் பற்றிய நமது கருத்துக்களையும் கற்பனைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக விசுவாசத்தில நம்ம தவறுகள மற்றும் பின்தொடர்தல நமக்கு இருக்குற தவறான கண்ணோட்டங்கள திருத்துறார். இப்படி தான் மாம்சத்தில் இருக்குற தேவன் தனிப்பட்ட முறையில தண்ணீர் பாய்கிறாரு மேலும் மேய்க்குறாரு, முகமுகமா கற்பிச்சி ஆதரிக்குறார். இது நமக்கு ஒரு அற்புதமான, இதயத்தை நெகிழ செய்ற அனுபவம். தேவன் நம்பமுடியாத அளவுக்கு நேசிக்கத்தக்கவர் மேலும் அணுகக்கூடியவர். நாம் தேவனின் எண்ணற்ற நேசிக்கத்தக்க அம்சங்கள பாக்குறோம், நம்ம இதயங்களின் ஆழத்திலிருந்து அவர நேசிக்கிறோம். கிறிஸ்து பல சத்தியங்கள வெளிப்படுத்துறார் மேலும் அத்தகைய பெரிய கிரியைகள செய்றாரு, ஆனால் அவர் மிகவும் தாழ்மையானவரு மேலும் மறைவாஇருக்காரு, ஒருபோதும் தன்ன தேவன்னு காட்டவோ அல்லது வெளிப்படுத்தவோ இல்ல. அவர் ரொம்ப சாதாரணமானவர், நம்மோட இடைபடுறதுல இதமானவரு, அவர் சொல்வதைக் கேட்க யாரையும் கட்டாயப்படுத்துறதில்ல. கிறிஸ்துவுக்கு ஆணவமோ அகந்தையோ ஒரு துளிகூட இல்ல. கிறிஸ்துவோட வார்த்த நம்பிக்கக்கி உரியது அதில பொய்யோ, நடிப்போ, தந்திரமோ இல்ல. அவர் எங்களை குடும்ப உறுப்பினர்கள போல நடத்துறார், பேசுகிறார், எங்களுடன் அக்கறயா இடைபடுறாரு. அது நமக்கு இதமளிக்குது. கிறிஸ்துவின் மனுஷீகத்தில எந்த சீர்கேடும் இல்லங்குறத நாம பாக்கலாம். அவர் சாதாரண—ஒரு இரக்கமான, பரிசுத்தமான மனுஷீகத்தக் கொண்டிருக்கார். கிறிஸ்துவால எந்த இடத்திலும், எப்ப வேண்டுமானாலும் சத்தியத்த வெளிப்படுத்த முடியும் நம்ம வளக்கவும், ஆதரிக்கவும், வழிநடத்தவும் முடியும். கிறிஸ்துவுக்கு சாதாரண மனுஷீகம் மட்டுமல்ல, ஒரு தெய்வீக சாரமும் இருக்கு என்பதில நாம் இன்னும் உறுதியாக இருக்கோம். அவர் உண்மையிலேயே தேவனின் சாயல், மாம்சத்தில வந்த நடைமுறை தேவன். இதுவர கிறிஸ்துவைப் பின்தொடர்ந்ததுல, கிறிஸ்துவே, சத்தியம், வழி, ஜீவன் என்பது நமக்கு தெரியும். கிறிஸ்துவத் தவிர வேறு எந்த பிரபலமோ, பெரிய மனிதர்களோ சத்தியத்த வெளிப்படுத்தவும் மனுக்குலத்த இரட்சிக்கவும் முடியாது. தேவனுடய மாம்சமாகுதல்ல, தேவன்கிட்ட என்ன இருக்கு, அவர் யாரு என்பத நாம பாக்குறோம். கிறிஸ்துவின் தெய்வீக சாரத்தை நாம் பாக்குறோம், தேவனோட மனநிலை பரிசுத்தமானது மற்றும் நீதியானது என்பதையும் நாம பாக்குறோம். தேவன் எவ்வளவு தாழ்மையாகவும் மறைவாகவும் இருக்காருங்கறதயும், அவரு முற்றிலும் அன்பாகவும் அழகாகவும் இருக்காருங்கறதயும் நாம பாக்றோம். இது நம்ம தேவனுக்கு நெருக்கமாக கொண்டு வருது, அவர் கிட்ட சமர்ப்பிக்கவும் அவரை நேசிக்கவும் செய்யுது. மனுக்குலத்த இரட்சிக்க மாம்சத்தில் தேவனுடய கிரிய ரொம்ப அர்த்தமுள்ளதா இருக்கு. இது தேவனுக்கும் மனிஷனுக்கும் இடையிலான இடைவெளியை மட்டும் மூடல ஆனா இது தேவன பத்துன நடைமுறை அறிவயும் புரிதலயும் பெற அனுமதிச்சிருக்கு. இது தேவனுடய நடைமுறை கிரியை மூலமாதான் நாம படிப்படியாக சத்தியத்த புரிஞ்சிகிட்டு, நிஜத்துக்குள்ள நுழையணும்ன்னு, இறுமாப்பு, வஞ்சகம் போன்ற பல சீர்கெட்ட மனப்பாங்குல இருந்து நம்மை விடுவிச்சி கொள்றோம். நாம ஒரு உண்மையான மனித சாயல்ல வாழ்ந்து, தேவனுடய இரட்சிப்பின் கிருபைய பெறுறோம். கடைசி நாட்களில சர்வவல்லமையுள்ள தேவனுடய கிரியயின் மூலம், மாம்சத்தில் தேவனுடய கிரிய எவ்வளவு நடைமுறையானது, உண்மையானதுங்கிறத நாம் மிக ஆழமா உணர்றோம்! மாம்சத்தில தேவன் வரலன்னா நாம் தேவன்கிட்டருந்து அத்தகைய உறுதியான நீர்ப்பாய்ச்சலயும் ஆதரவயும் பெற முடியாது, அதுமட்டுமில்லாம சத்தியத்த புரிஞ்சிக்கிட்டு ஆதாயம் செய்வது, பாவங்கள விட்டுவிலகுறது, மேலும் முழுமையா தேவனால இரட்சிக்கபடுவது முடியாத காரியங்களா இருக்கும். தேவன் மாம்சத்தில் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதுனால மட்டுமே அதை அடைய முடியும்.

ஆகவே, தேவன் கடைசி நாட்களில் மாம்சமாகி, மனித குலத்த முற்றிலுமா சுத்திகரிப்பதற்காகவும் இரட்சிப்பதுக்காகவும்தான் சத்தியத்த வெளிப்படுத்தி, தம்முடைய நியாயத்தீர்ப்ப செய்றாருங்கறத ஒவ்வொருவரும் தெளிவா பாக்கணும். தேவன் ஆவியா தோன்றவும், கிரிய செய்றதாவும் இருந்திருந்தா சீர்கெட்ட மக்களாகிய நமக்கு சத்தியத்தப் புரிஞ்சிக்கவும், ஆதாயமாக்கவும் வாய்ப்பு இல்லாம போயிருக்கும் அதோட, ஒருகாலும் நம்ம சீர்கேட்ட உதறவும், அவரால இரட்சிக்கபடவும் முடிஞ்சிருக்காது. இதுல ஒரு துளி சந்தேகமும் கிடயாது. இருந்தாலும், சர்வவல்லமையுள்ள தேவன் அநேக சத்தியங்கள வெளிபடுத்தியிருக்கிறத மத உலகத்துல இருக்கிற நிறய பேறு பாக்குறாங்க சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள் அதிகாரமும், வல்லமயும் உடயவைன்னு ஒத்துக்கிறாங்க வழக்கமான, இயல்பான தோற்றத்த கொண்ட மனுஷகுமாரனா அவரு இருக்கிறதுனால அவரு மனுஷந்தான், தேவனில்ல ன்னு அவங்க சர்வவல்லமையுள்ள தேவன கண்டனம் செய்றாங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடய தோற்றத்தயும், கிரியயும், பயித்தியகாரத்தனமா எதுக்கிறாங்க, கண்டனம் செய்றாங்க தூஷிக்கிறாங்க. 2,000 வருஷத்துக்கு முன்னாடி கர்தராகிய இயேசு கிரிய செய்ய வந்தத சிந்திக்குறத தவிர வேற எதயும் நம்மால செய்ய முடியாது. கர்த்தராகிய இயேசுவுக்கு ஒரு சாதாரணத் தோற்றம் இருந்ததால பரிசேயர்கள், அவர சராசரி மனுஷன போல பாவிச்சாங்க, “இவரு நசரேயனல்லவா?” ன்னு நியாயந்தீக்குறவிதத்துல பேசுனாங்க. “இவரு தச்சனுடய குமாரனல்லவா?” எவ்வளவு சத்தியத்த அவரு வெளிப்படுத்தியிருந்தாலும், என்ன அற்புதத்த அவரு செஞ்சாலும் பரிசேயர்கள் தேடவே இல்ல, அவர ஏத்துக்கவும் இல்ல. அதுக்கு பதிலா, அவர் பிசாசுகளின் தலைவனால பிசாசுகள துறத்துறாறுன்னு கர்தராகிய இயேசுவ நியாயந்தீத்தாங்க ஆக்கினைக்குள்ளா தீத்தாங்க, கடைசியில, அவர சிலுவயில அறஞ்சி, பெரிய குத்தத்த செஞ்சாங்க. அவங்க தேவனால தண்டிக்கபட்டாங்க. இரண்டுதரம், மனுஷகுமாரனா தேவன் தோன்றி மாம்சத்துல கிரிய செஞ்சிருக்காரு. அப்பிடின்னா, மக்கள் ஏன் கிறிஸ்துவ ஏத்துக்கிறதில்ல, எதுக்காங்க, ஆக்கினைக்குள்ளா தீர்க்றாங்க, நிராகரிக்றாங்க? எங்க அவுங்க தப்பு செய்றாங்க? இது ஏன்னா, அவங்க வெளிப்புறத்த மட்டுந்தான் பாக்குறாங்க, அதாவது கிறிஸ்து ஒரு சாதாரண மனுஷனப் போல தோற்றமளிக்கிறாரு. அவங்க ஆராய்ச்சி செய்வதில்ல, கிறிஸ்து வெளிப்படுத்தின எல்லா சத்தியங்களயும் அவங்க அங்கிகரிக்கிறதில்ல. கிறிஸ்துவின் தெய்வீக சாரத்த அவங்க பாக்குறதில்ல, ஆனா, அவங்க தங்களுடய மனித கருத்துக்களின் காரணமா எதிர்த்து கிறிஸ்துவ ஆக்கினைக்குள்ளா தீக்குறாங்க. இதுக்காக, அவங்க தேவனால தண்டிக்கபட்டு ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டிருக்காங்க. வேதம் சொல்கிறது: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்(யோவான் 3:36). சத்தியத்த வெளிப்படுத்துற மனுஷகுமாரன ஆக்கினைக்குள்ளா தீர்க்கிற, எதிர்க்கிற எவரும் பரிசுத்த ஆவிக்கு எதிரா தேவதூஷணம் சொல்றாங்க, இம்மயிலும், மறுமயிலும் மன்னிக்கபட மாட்டாங்க. புத்தியுள்ள கன்னிகைகள், சத்தியத்த தேடணும், தேவனுடய சத்தத்துக்கு செவிகொடுக்கணும். பேசி கிரிய செய்ற மனுஷ குமாரனாகவே கடைசி நாட்கள்ல கர்த்தருடய வருக இருக்குது. அவர ஏத்துக்கிறவங்கதான் சத்தியத்த நேசிக்குறவங்க. மனுஷகுமாரன நிராகரிச்சி, எதிர்த்து, ஆக்கினைக்குள்ளா தீர்க்கிற வங்க சத்தியத்த ஏளனம் பண்றாங்க. மனுஷகுமாரனுடய தோற்றம், கிரிய மூலமா தேவன் ஒவ்வொருவருக்கும் அவங்க என்னவா இருக்காங்கங்கறதுக்கு ஏற்ப வெளிப்படுத்துறாரு. இது தேவனுடய ஞானம், இது அவருடய சர்வ வல்லமைய வெளிப்படுத்துது.

முடிவா, தேவனுடய வார்த்தயிலருந்து ரெண்டு வாக்கியங்கள பாப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்தச் சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களைக் கொண்டுவரும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி மற்றும் செய்து முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவரைத் தவிர்க்கவும் என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்குப் பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுவுருவெடுத்தல் இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்தச் சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பிருக்காது, அல்லது அதைக் காண நீங்கள் தகுதியடைந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுப்போக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுவுருவாக இருக்கும் இந்தச் சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

நம்ம எல்லாருக்கும் தெரிந்தபடி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசு என்ற மனிதனா தேவன் இந்த பூமியில மாம்சமா...

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...