இந்தப் படிப்புகளை நான் பின்தொடர மாட்டேன்

செப்டம்பர் 28, 2023

நான் ஒரு கிறிஸ்துவ குடும்பத்துல பிறந்தவன். என்னோட பெற்றோர் ரெண்டு பேருமே விவசாயிகள். எங்களோட குடும்பம் காய்கறிகளயும் நெல்லயும் பயிரிட்டு பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க. நான் எப்பவுமே பள்ளிக்கூடத்துல நல்லா படிச்சேன், அதனால என்னோட பெற்றோர்கள் என்னோட படிப்புக்கு ரொம்ப உறுதுணையா இருந்தாங்க எதிர்காலத்துல நான் நல்லா இருப்பேன்னு எதிர்பாத்தாங்க. எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சு என்னோட குடும்பத்தோட ஏழ்மையான வாழ்க்கைய மாத்துவேன்னு அவங்க நம்புனாங்க. அந்த நேரத்துல, நாங்க ஏழைகளா இருந்ததால, என்னோட பள்ளிக்கூடப் படிப்புக்காக என்னோட பெற்றோர் அடிக்கடி கடன் வாங்குனாங்க. என்னோட தாத்தா அவரோட வாழ்க்கைச் செலவுல இருந்து எனக்காகப் பணத்தைச் சேமிச்சு வச்சாரு, என்னோட சகோதரியும் என்னோட படிப்புக்கு பணம் சம்பாதிக்கறதுக்காக பகுதி நேரமா வேலை செஞ்சாங்க. என்னோட முழுக் குடும்பமும் அவங்கள வறுமையில இருந்து மீட்டெடுக்க என் மேல நம்பிக்கை வைச்சிருந்தாங்க. என்னோட பெற்றோர் தினமும் வயல்கள்கல கடுமையா உழைச்சத நான் பாத்தேன், இப்படி வாழ்றது ரொம்ப கடினம்னு நான் நெனச்சேன், அதனால என்னோட குடும்பம் அதுக்கு மேல ரொம்ப ஏழ்மையா இல்லாம இருக்க, நான் கஷ்டப்பட்டுப் படிக்கவும், சிறந்தவனா இருக்கவும் தீர்மானிச்சேன். என்னோட தேர்வுல நல்ல மதிப்பெண் பெற, நான் கடினமா உழைச்சேன், அடிக்கடி படிக்கறதுக்காக இரவுல ரொம்ப நேரம் முழிச்சிருப்பேன். அதுக்கப்புறமா, நான் என்னோட விருப்பப்படியே பல்கலைக்கழகத்துக்குப் போனேன். அதுக்கப்புறமா, ஒரு பேராசிரியராகி நல்ல எதிர்காலத்தப் பெறணும்னு எனக்கு ஒரு புதிய லட்சியம் ஏற்பட்டுச்சு.

பட்டம் பெற்றதுக்கப்புறமா, நான் பி.எச்.டி படிக்க பல்கலைக்கழகத்துல அறிவியல் ஆராய்ச்சியில பணி செஞ்சேன். அந்த நேரத்துல என்னோட பெற்றோர் அடிக்கடி என்னையக் கூப்பிட்டு. “நீ தேவனிடத்துல அதிகமாக ஜெபிக்கணும், உன்னோட படிப்புல கவனம் செலுத்தணும்” அப்படின்னு எனக்கு நினைவுபடுத்துனாங்க. என்னோட அப்பாவும் என்கிட்ட கேட்டாரு, “உன்னோட வளாகத்துல திருச்சபை இருக்குதா? நீ திருச்சபைக்குப் போகணும்” அப்படின்னு சொன்னாரு. ஆனா நான் வீட்ல வேதாகமத்த வாசிச்சு தேவனிடத்துல ஜெபிக்க விரும்புனேன், ஏன்னா, நான் என்னோட முழு நேரத்தயும் அறிவியல் ஆராய்ச்சியில செலவு செஞ்சேன், கூடுகைகளுக்குப் போக எனக்கு நேரமில்லாம இருந்துச்சு. ஆராய்ச்சியின் செயல்முறையில, கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் நிறையா இருந்துச்சு. மத்தவங்க அறிவியல் கோட்பாடுகள், தேவனோட சர்வவல்லமை, ராஜரீகம் அப்படிங்கற தலைப்புல விவாதிச்சப்போ, ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளரா, எல்லாத்தயும் விளக்குறதுக்கு நான் எப்பவும் விருப்பமில்லாமலயே அறிவியல் கண்ணோட்டங்களப் பயன்படுத்தினேன். சீக்கிரமாவே, என்னோட இருதயம் தேவனிடத்துல இருந்து வெகுதூரம் போயிருச்சு, நான் ரொம்பக் குறைவா ஜெபிக்கவும், வேதாகமத்த வாசிக்கவும் செஞ்சேன், நான் அடிக்கடி சோர்வாவும் மனசுக்குள்ள வெறுமையாவும் உணர்ந்தேன். என்னோட வேலையில ஏற்பட்ட குறச்சுக்க முடியும்ங்கற நம்பிக்கையில, நான் சில சமயங்கள்ல வாரக் கடைசில என்னோடு வேலை பாக்கறவங்களோடு சேர்ந்து ஓய்வுக்காக கடற்கரைகள், ஓய்வு விடுதிகள் அல்லது பூங்காக்களுக்குப் போனப்பவும், கடைசியில, நான் அப்பவும் எந்த உண்மையான சமாதானமும் சந்தோஷமும் இல்லாம, உள்ளத்துக்குள்ள வெறுமையா உணர்ந்தேன். 2020 புது வருஷத்துல, நான் தேவனிடத்துல ஜெபிச்சு, தேவனிடத்துல நெருங்கி வரத் தீர்மானிச்சு, என்னோட வாழ்க்கைய வழிநடத்தவும் மாத்தவும் தேவனிடத்துல கேட்டுக்கிட்டேன், ஏன்னா அந்த வெறுமை நிலையில வாழ்றது உண்மையிலயே சோர்வடையச் செய்றதா இருந்துச்சு.

கொஞ்ச நாள்லயே, நான் ஒரு சகோதரிய முகநூல்ல சந்திச்சேன், அவங்க என்னைய ஒரு ஆன்லைன் கூடுகைக்குக் கூப்பிட்டாங்க. அந்த நேரத்துல, அவங்க சொன்ன ஒரு விஷயம் என்னைய உண்மையிலயே தொட்டுச்சு. தேவனோட வார்த்தைகள வாசிக்கறதும் தேவனோடு நல்ல உறவை ஏற்படுத்துறதும் ரொம்ப முக்கியம்னு அவங்க சொன்னாங்க. அவங்க சொன்னத நான் ஒத்துக்கிட்டேன். நான் ஒரு கிறிஸ்தவனா இருந்தேன், ஆனா என்னோட முழு நேரத்தயும் அறிவியல் ஆராய்ச்சியில செலவு செஞ்சேன். தேவனை ஆராதிக்க நான் கூடுகைகளுக்குப் போகவே இல்ல, எப்போதாவதுதான் ஜெபிச்சு வேதாகமத்த வாசிச்சேன். தேவனோடு எனக்கு சரியான உறவு இல்லங்கறத உணர்ந்தேன், நான் தேவனோடு நெருக்கமா இருக்க விரும்புனேன், அதனால ஆன்லைன் கூடுகையில சேர சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். தேவனோட வார்த்தைகள வாசிச்சு, என்னோட சகோதர சகோதரிகளின் ஐக்கியத்தக் கேட்டது மூலமா, கடைசி நாட்கள்ல, தேவன் தம்மோட வார்த்தைகள சர்வவல்லமையுள்ள தேவன் அப்படிங்கற நாமத்துல வெளிப்படுத்துறாருங்கறதயும், அவர் நமக்காகச் சுருளத் திறந்திருக்கிறாருங்கறதயும், மனிதகுலத்தப் பாவத்துல இருந்து முழுமையா இரட்சிக்கும்படி, ஜனங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியையச் செய்ய தேவன் இந்த முறை திரும்பி வந்திருக்கிறாருங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன். பல கூடுகைகளுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு அப்படிங்கறத நான் உறுதியா நம்புனேன். அந்த நேரத்துல நான் ரொம்பவே உற்சாகமா இருந்தேன், கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். ரெண்டு மாசங்களுக்கப்புறமா, நான் திருச்சபையில ஒரு கடமைய செய்யத் தொடங்குனேன். நான் தேவனோட வார்த்தைய அதிகம வாசிச்சபோது, சில சத்தியங்கள நான் படிப்படியா புரிஞ்சுக்கிட்டேன்.

ஒரு நாள், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய நான் வாசிச்சேன், அது இன்னும் என்னோட மனசுல அப்படியே பசுமையா இருக்குது. தேவனோட வார்த்தைகளோட இந்தப் பத்தி என்னோட இருதயத்த அசச்சுது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “அறிவு என்பது, எல்லோரும் எண்ணுவது போல, ஒரு நேர்மறையான விஷயமா? குறைந்தபட்சம், ‘அறிவு’ என்ற வார்த்தையின் அர்த்தம் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக இருப்பதாக ஜனங்கள் கருதுகின்றார்கள். இந்நிலையில், மனிதனைக் கெடுக்க சாத்தான் அறிவைப் பயன்படுத்துகிறான் என்பதை இங்கே ஏன் குறிப்பிடுகின்றோம்? பரிணாம வளர்ச்சிக் கொள்கை அறிவின் ஒரு அம்சமல்லவா? நியூட்டனின் அறிவியல் சட்டங்கள் அறிவின் ஒரு பகுதியாக இல்லையா? பூமியின் ஈர்ப்பு விசையும் அறிவின் ஒரு பகுதியாகும், அல்லவா? (ஆம்.) ஆகவே, மனிதகுலத்தை கெடுக்க சாத்தான் பயன்படுத்தும் விஷயங்களில் அறிவு ஏன் பட்டியலிடப்பட்டுள்ளது? இது குறித்து உங்கள் பார்வை என்ன? சத்தியத்தின் ஒரு சிறு பகுதியாகிலும் அறிவில் இருக்கின்றதா? (இல்லை.) பின்னர் அறிவின் சாராம்சம் என்ன? மனிதன் பெறும் அறிவு அனைத்தும் எதன் அடிப்படையில் கற்றுக்கொள்ளப்பட்டது? இது பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததா? ஆய்வு மற்றும் சாராம்சத்தின் மூலம் மனிதன் பெற்ற அறிவு நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டதல்லவா? இந்த அறிவுக்கு, தேவனுடன் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? தேவனை வணங்குவதோடு இது தொடர்புடையதாக இருக்கிறதா? இது சத்தியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? (இல்லை.) அப்படியானால் மனிதனைச் சீர்கெடுக்க சாத்தான் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறான்? இந்த அறிவு எதுவும் தேவனை வணங்குவதுடனும் அல்லது சத்தியத்துடனும் தொடர்புடையதல்ல என்று நான் சொன்னேன். சிலர் இதைப் பற்றி இவ்வாறு நினைக்கிறார்கள்: ‘அறிவுக்கு சத்தியத்துடன் எந்த தொடர்பும் இல்லை, எனினும், அது ஜனங்களை கெடுக்காது.’ இது குறித்து உங்கள் பார்வை என்ன? ஒரு நபரின் மகிழ்ச்சி அவர்களின் இரு கைகளாலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அறிவால் நீ போதிக்கப்பபட்டாயா? மனிதனுடைய தலைவிதி அவன் கைகளில் இருப்பதாக அறிவு உனக்குக் கற்பித்ததா? (ஆம்.) இது எத்தகையப் பேச்சு? (இது பேய்த்தனமான பேச்சு.) முற்றிலும் சரி! இது பேய்த்தனமான பேச்சு! அறிவு என்பது விவாதிக்க ஒரு சிக்கலான தலைப்பு ஆகும். அறிவுப் புலம் என்பது அறிவைத் தவிர வேறில்லை என்று நீங்கள் வெறுமனே கூறலாம். இது தேவனை வணங்காததன் அடிப்படையிலும், தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதைப் புரிந்து கொள்ளாததன் அடிப்படையிலும் கற்றுக் கொள்ளப்பட்ட அறிவுப் புலமாகும். ஜனங்கள் இத்தகைய அறிவைப் படிக்கும்போது, தேவன் எல்லாவற்றின் மீதும் ராஜரீகம் கொண்டிருப்பதை அவர்கள் பார்ப்பதில்லை. தேவன் எல்லாவற்றின் மீதும் பொறுப்பு ஏற்பதை அல்லது ஆளுகை செய்வதை அவர்கள் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் செய்வதெல்லாம் முடிவில்லாமல் ஆராய்ச்சி செய்து அறிவின் குறிப்பிட்ட பகுதியை ஆராய்ந்து, அறிவின் அடிப்படையில் பதில்களைத் கண்டுபிடிப்பது தான். இருப்பினும், ஜனங்கள் தேவனை நம்புவதற்குப் பதிலாக ஆராய்ச்சியை பின்பற்றினால், அவர்கள் ஒருபோதும் உண்மையான பதில்களைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது உண்மையல்லவா? அந்த அறிவானது உனக்கு வழங்கக்கூடியது ஒரு வாழ்வாதாரம், வேலை, மற்றும் வருமானம் மட்டுமே. இது நீ பசியின்றி இருப்பதற்கு மட்டுமே. ஆனால் அது ஒருபோதும் தேவனை வணங்கச் செய்யாது. அது உன்னை ஒருபோதும் தீமையிலிருந்து விலக்கி வைக்காது. ஜனங்கள் அறிவை எவ்வளவு அதிகமாகப் படிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்த்துக் கலகம் செய்யவும், தேவனைத் தங்களது படிப்புகளுக்குள் உட்படுத்தவும், தேவனைச் சோதிக்கவும், தேவனை எதிர்க்கவும் விரும்புவார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V”). தேவனோட வார்த்தைகள் என்னோட இருதயத்தத் துளைத்துச்சு. இவ்வளவு காலமா, நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்தேன்னு நெனச்சேன். சின்ன வயசுல இருந்தே நான் தேவனை விசுவாசிச்சேன். நான் அறிவியல் படிச்சாலும், அறிவியல் ஆராய்ச்சி செஞ்சாலும், ஒரு நல்ல உத்தியோகத்தப் பெறவும், என்னோட சொந்த வாழ்க்கைய மாத்திக்கிட்டு, எதிர்காலத்துல மத்தவங்க மத்தியில சிறந்தவனா இருக்கணும்னும் தான் நான் என்னோட ஆராய்ச்சியப் பயன்படுத்தணும்னு நெனச்சேன். நான் தேவனை மறுதலிக்கிறனா அல்லது எதிர்க்கிறனான்னு யோசிக்கவே இல்ல. தேவனோட வார்த்தையின் வெளிப்பாடுகள் மூலமா, என்னோட சிந்தனை தவறானதுங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். அறிவியலும் அறிவும் சத்தியம் இல்ல, நேர்மறையான விஷயங்களும் அல்ல. நாத்திகம், பொருள்முதல்வாதம், பரிணாம வளர்ச்சிக் கொள்கை போன்ற தேவனை மறுதலிக்குற கோட்பாடுகள் எல்லாமே சாத்தானிடத்துல இருந்து வந்தவையா இருக்குது. ஜனங்கள சீர்கெடுக்க சாத்தான் விஞ்ஞான அறிவப் பயன்படுத்துறான், அவங்களோட இருதயங்கள தேவனிடத்துல இருந்து விலக்கி, தேவன் இருக்கிறார்ங்கறத அவங்கள மறுதலிக்கச் செய்யுறான். இந்த விஞ்ஞான அறிவ நான் தினமும் படிச்சேன், ஆனா அது என்னைய தவறா வழிநடத்தி, தேவனிடத்துல இருந்து விலகிச் செல்ல மட்டுந்தான் செஞ்சுச்சு, நான் அதுல இருந்து ஒருபோதும் சத்தியத்தப் பெறமாட்டேன். நான் ஆராய்ச்சி செஞ்சப்போ, என்னோட எண்ணங்கள் முழுசா நாத்திகக் கருத்துகளால ஆக்கிரமிக்கப்பட்டு, எல்லாவித கோட்பாடுகளான நியூட்டனின் விதிகள், புவியீர்ப்பு விசை, இன்னும் பல விஷயங்களாலயும் நிரம்பியிருந்துச்சு. என்னால அத எப்படி விளக்க முடியும்? இந்தக் கோட்பாடுகள் தான் என்னைய விஷம் போல சீர்கெடுத்துச்சு. பிரபஞ்சத்துல என்ன நடக்குதுங்கறதக் கணக்கிட்டு ஆய்வு செய்ய தினமும், நான் இந்த விதிகளயும் சூத்திரங்களயும் பயன்படுத்தினேன். நான் எவ்வளவு அதிகமாப் படிச்சேனோ, அவ்வளவு அதிகமா எல்லாத்தயும் அறிவியல் கொள்கைகளால விளக்கமுடியும்ன்னு நான் நெனெச்சேன். என்னையும் அறியாமலயே, நான் தேவனோட சிருஷ்டிப்பயும் ராஜரீகத்தயும் மறுக்க ஆரம்பிச்சேன். என்னோட இருதயமும் தேவனிடத்துல இருந்து ரொம்ப தூரத்துல இருந்துச்சு. நான் இப்படியே தொடர்ந்து படிச்சிக்கிட்டு இருந்தா, இந்தக் கோட்பாடுகள் என்னையத் தொடர்ந்து சிதைச்சுக்கிட்டே இருக்கும் நான் எப்பவுமே சாத்தானோட ஆதிக்கத்தின் கீழ வாழ்ந்து தேவனை எதிர்ப்பேன். விஞ்ஞான அறிவு என்னைய எப்படி விஷமாக்குதுங்கறத உணர்ந்தப்போ, நான் அறிவியல் ஆராய்ச்சியக் கைவிடணும்னு எனக்குத் தோணுச்சு, ஆனா நான் அப்படி செஞ்சிட்டா என்னோட எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு நான் கவலப்பட்டேன். நான் என்னோட ஆராய்ச்சியத் தொடரணுமா அல்லது விட்டுட்டு வேறு ஏதாவது செய்யணுமான்னு என்னோட இருதயத்துல ஒரு யுத்தம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. என்னோட வறுமையில இருந்து தப்பிக்க நான் எவ்வளவு மும்முரமா செயல்பட்டேன்ங்கறத நெனச்சுப் பாத்தேன். அந்தஸ்தயும் நல்ல எதிர்காலத்தயும் பின்தொடருறதுல நான் நிறைய நேரத்தயும் பலத்தயும் செலவழிச்சிருந்தேன், ஆனா எனக்கு உண்மையான சந்தோஷம் இருந்ததே இல்ல. அதுக்குப் பதிலா, நான் அடிக்கடி வெறுமையயும் வேதனையயுந்தான் உணர்ந்தேன். நான் விரும்பிய வாழ்க்கை இது இல்ல. சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிட்டதால, நான் தேவனோட வார்த்தைய வாசிச்சு, ஒரு சிருஷ்டியா என்னோட கடமைய நிறைவேத்தியிருந்தேன், வாழ்க்கை முன்னாடி இருந்தத விட ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் எவ்வளவு அதிகமா வாசிச்சேனோ, அவ்வளவு அதிகமா ஆவிக்குரிய விடுதலைய உணர்ந்தேன். தேவனுடனான என்னோட உறவும் நெருக்கமாச்சு, அதோட, நான் ரொம்ப சமாதானமாவும் பாதுகாப்பாவும் உணர்ந்தேன். இது நான் இதுவர உணராத ஒண்ணா இருந்துச்சு. தேவனோட வார்த்தைய வாசிச்சது மூலமா, என்னைய இவ்வளவு ஆழமா சீர்கெடுத்தது சாத்தான்தான்ங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன், சத்தியத்தயும் ஜீவனையும் தேடுறது ரொம்ப அர்த்தமுள்ள விஷயங்கள்ங்கறத நான் கத்துக்கிட்டேன். இத நெனச்சுப் பாக்கயில, சத்தியத்தப் பின்தொடர்றதுலயும் என்னோட கடமையச் செய்றதுலயும் அதிக நேரத்த செலவிடணும்னு நான் என்னோட மனசுல உறுதி செஞ்சேன்.

அதுக்கப்புறமா, என்னோட பெற்றோருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சுவிசேஷத்த அறிவிச்சேன். கர்த்தராகிய இயேசு கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யத் திரும்பி வந்திருக்கிறார்னும், சர்வவல்லமையுள்ள தேவன் நம்மள சுத்திகரிக்கறதுக்கும், பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து நம்மள இரட்சிக்கறதுக்கும் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காருன்னும் நான் அவங்ககிட்ட சொன்னேன். என்னோட பெற்றோரிடத்துல, “நான் தேவனோட புதிய கிரியைய ஏத்துக்கிட்டேன், தேவனோட நிறைய வார்த்தைகளப் புரிஞ்சுக்கிட்டேன், சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்படுறதுக்கான வழியக் கண்டுபிடிச்சிருக்கேன், ஆனா கர்த்தர் திரும்பி வந்திருக்குற நற்செய்தியத் தெரிஞ்சுக்காத நிறைய விசுவாசிகள் இன்னும் இருக்குறாங்க. நான் அவங்களுக்கு சுவிசேஷத்த அறிவிக்க விரும்புறேன்” அப்படின்னும் சொன்னேன். கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்தப் பிரசங்கிக்க என்னோட தாத்தா நிறைய கிராமங்களுக்குப் போனாருன்னும் அதனால நானும் அவரோட முன்மாதிரியப் பின்பற்றி நிறைய ஜனங்களுக்கு தேவனோட ராஜ்யத்தின் சுவிசேஷத்தப் பரப்புறதுக்கு அதிக நேரத்தயும் பலத்தயும் செலவிட விரும்பறேன்னும் நான் சொன்னேன். என்னோட பெற்றோர் கண்டிப்பா எனக்கு ஆதரவளிப்பாங்கன்னு நான் நெனச்சேன். என்னோட அம்மா அழ ஆரம்பிச்சதும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்க அழுவதப் பாத்தது எனக்கும் வருத்தமா இருந்துச்சு. நான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்ங்கறதுக்காக என்னோட பெற்றோர் எனக்காக செலவழிச்ச எல்லா பணத்தயும் நெனச்சுப் பாக்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு. எதிர்காலத்துல எனக்கு நல்ல வேலை கிடைச்சு அவங்களயும் என்னோட குடும்பத்தயும் என்னால கவனிச்சுக்க முடியும்ன்னு அவங்க நம்புனாங்க. சுவிசேஷத்தப் பிரசங்கிப்பதுல என்னோட நேரம் முழுவதயும் செலவுபண்ணுனா, என்னோட பெற்றோர் எனக்காக செலவழிச்ச எல்லாமே வீணாகிடும், அதனால அவங்க ரொம்ப வருத்தமா இருந்திருக்கணும். இத உணர்ந்து, நானும் அழ ஆரம்பிச்சேன். நான் என்னோட பெற்றோரை வருத்தப்படுத்த விரும்பல, ஆனா என்னோட கடமைய செஞ்சுக்கிட்டே நான் சுவிசேஷத்தப் பிரசங்கிக்க விரும்புனேன். அதனால, நான் தேவனிடத்துல நான் என்னோட சாட்சியில உறுதியா நிக்க எனக்கு அதிக விசுவாசம் கொடுக்கும்படி அவரிடத்துல கேட்டு ஜெபிச்சேன். அந்த நேரத்துல, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் நெனச்சுப் பாத்தேன், “தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). தேவன் எனக்கு ஜீவனைக் கொடுத்தாரு, என்னோட பெற்றோர், நான் பிறந்த குடும்பம் எல்லாமே தேவனால ஏற்பாடு செய்யப்பட்டது, என்னோட பெற்றோர் எனக்காக இவ்வளவு கொடுத்ததும் தேவனோட ஏற்பாடாதான் இருந்துச்சு அப்படிங்கறத தேவனோட வார்த்தை எனக்குப் புரிய வச்சுச்சு. கடந்த காலத்துல, என்னோட பெற்றோர் எனக்காக இத செஞ்சாங்கன்னதான் நான் எப்பவுமே நெனச்சேன், என்னோட பெற்றோரின் விருப்பங்களயும் என்னோட சொந்த இலட்சியங்களயும் நிறைவேத்த நான் வாழணும்னும், கௌரவத்தயும் அந்தஸ்தயும் பெற நான் பாடுபடணும்னும் நான் நம்புனேன். ஆனா என்னோட வாழ்க்கைய வழிநடத்தியது என்னோட பெற்றோர் இல்ல அப்படிங்கறத தேவனோட வார்த்த எனக்கு உணர்ந்துக்க வெச்சுது. நான் எந்த நேரத்துல என்ன செஞ்சேன், அல்லது என்னோட வாழ்க்கையில என்ன பங்கு வகிச்சேன்—இது எல்லாமே தேவனால ஏற்பாடு செய்யப்பட்டவையா இருந்துது. என்னோட குடும்பம் செழிப்பான வாழ்க்க வாழுறதுக்காக, அறிவைப் பெற்றுக்கறது மூலமா என்னோட விதிய மாத்த நான் எப்பவுமே விரும்புனேன். அந்த நேரத்துல, தேவனோட சர்வவல்லமையயும் ராஜரீகத்தயும் பத்தி எனக்குத் தெரியாது. இப்போ, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். தேவனோட வார்த்தைய வாசிச்சது மூலமா, ஜனங்களோட விதிகள் தேவனால தீர்மானிக்கப்படுதுங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். எதிர்காலத்துல என்னோட பெற்றோரும் குடும்பமும் எப்படிப்பட்ட வாழ்க்கயக் கொண்டிருந்தாங்க அப்படிங்கறதும் அவங்களுக்கு நல்ல விதி இருந்ததாங்கறதும் தேவனோட கரங்கள்ல இருந்துச்சு, இவை தேவனோட ஏற்பாடுகள், என்னால அவற்ற மாத்த முடியல. ஜனங்க தேவனோட ராஜரீகத்த ஏத்துக்கிட்டு, தேவனோட திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியணும். இத நான் புரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, என்னோட பெற்றோர் எனக்காக அழுவத நான் பாத்தாலும், நான் ரொம்ப அமைதியா இருந்தேன். அதே சமயத்துல நான், தேவனுக்கு முன்பா வந்து, ஒரு சிருஷ்டியா தன்னோட கடமைய செஞ்சு, சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு, தேவனுக்குச் சாட்சி பகருறதும், ஒருவர் வாழக்கூடிய ரொம்ப அர்த்தமுள்ளதும் மதிப்புமிக்கதுமான வாழ்க்கைங்கறதயும் உணர்ந்தேன். இப்போ என்னோட பெற்றோர் என்னையப் புரிஞ்சுக்கலேன்னாலும், என்னோட கடமைய என்னால் அவ்வளவு சுலபமா விட்டுட முடியல. என்ன நடந்தாலும் சரி, எல்லாத்தயும் தேவனிடத்துல ஒப்படைச்சிட்டு, தேவனை சார்ந்துக்கிட்டு முன்னேற விரும்புனேன்.

அதனால, தேவனைப் பின்பற்றி என்னோட கடமைய முழு மனசோடு செய்யணும்னும், படிப்பக் கைவிடணும்னும் நான் முடிவெடுத்தேன். முதல்ல, என்னோட முடிவப் பத்தி என்னோட ஆசிரியருக்கு செய்தி அனுப்புனேன். ஆசிரியர் ரொம்ப ஆச்சரியப்பட்டு, “நீ ஏன் இந்த முடிவெடுத்திருக்குற? பணப் பிரச்சினையா?” அப்படின்னு என்கிட்ட கேட்டாரு. அதோடு அவர், பல்கலைக்கழக நிதியுதவி திட்டம் ஒண்ணு இருக்குதுன்னும், அது ஒரு ரொம்ப அரிய வாய்ப்புன்னும், அவர் எனக்கு உதவ விரும்புனாருன்னும் சொன்னாரு. என்னைய சந்திச்சுப் பேச விரும்புறதாவும் அவர் சொன்னாரு, ஆனா நான் முடிவெடுத்துட்டேன், அதனால, நான் அவரப் பாக்கவும் இல்ல, திரும்பக் கூப்பிடவும் இல்ல. அந்த ஆசிரியர் எனக்கு இன்னொரு கடிதத்த அனுப்பி வச்சாரு. என்னோட முடிவுக்கான காரணத்த அவர் தெரிஞ்சுக்க விரும்புனாரு. ஆசிரியரோட கடிதத்தப் பாத்து நான் தயங்குனேன், ஆனா கடைசியா, நான் பதிலளிக்கல. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் நெனச்சுப் பாத்தேன். “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கு இடையிலான இடைபடுதல்களாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான். … தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, நீ எப்படி தேவனைத் திருப்திபடுத்த வேண்டும், எப்படி அவருக்கு உனது சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய உபத்திரவம் என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிற நேரம் என்றும் நீ அறிந்திட வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). இவை சாத்தானோட சோதனைகள்ங்கறத தேவனோட வார்த்த எனக்குப் புரிய வச்சுச்சு. நான் தேவனைப் பின்பற்றி என்னோட கடமைய செய்ய முடிவு செஞ்சப்போ, எனக்கு இன்னமும் பணம், கௌரவம், செல்வத்தின் மேல ஆசை இருக்குதுங்கறத சாத்தான் தெரிஞ்சுக்கிட்டு. அதனால அது என்னை ஏமாத்தவும், என்னோட கடமைய விடச் செய்யவும் இதப் பயன்படுத்துச்சு. தேவனோட நாமத்த மறுதலிக்கும்படி தன்னோட மனைவி மூலமா யோபுக்கு வந்த சோதனைய நான் நெனச்சுப் பாத்தேன். வெளிப்புறமா, ஜனங்கள் யோபுவினிடத்துல பேசுவதப் போல் காணப்பட்டுச்சு, ஆனா அதுக்குப் பின்னாடி சாத்தான் தேவனுக்கு எதிரா போராடிக்கிட்டு இருந்தான். அதுக்கப்புறமா நான் வெளிப்புறமா, என்னோட ஆசிரியர் என்னையப் பதிவுசெஞ்சு எனக்கு ஒரு திட்டத்த அறிமுகப்படுத்த முயற்சிக்கிறாருங்கற மாதிரி தெரிஞ்சுது, ஆனா அதுக்குப் பின்னால சாத்தானோட தந்திரம் இருந்துச்சுன்னு நெனச்சேன். தேவன் என்னைய வாழ்க்கையில திரும்ப சரியான பாதைக்குக் கொண்டுவர விரும்பினாரு. எல்லா வகையிலயும் தேவனுக்கு எதிரா கலகம் செய்ய சாத்தான் என்னைய சோதிச்சான். ஆனா நான் என்னைய ஏமாந்துபோக அனுமதிக்க முடியல. இந்தச் சூழல அனுபவிக்க நான் தேவனை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்துச்சு. அதனால, நான், “தேவனே! தயவுசெஞ்சு எனக்கு விசுவாசத்தக் கொடுங்க, என்னோட தவறான ஆசைகள நீக்கிப்பேடுங்க. இந்த இக்கட்டான நேரத்துல, நான் உமக்கு சாட்சி சொல்ல விரும்புறேன்” அப்படின்னு தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் இப்படி ஜெபிச்சதுக்கப்புறமா, நான் ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன். ரெண்டு நாட்களுக்கு அப்புறமா, ஆசிரியருக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பி, இதுதான் என்னோட கடைசி முடிவுன்னும், என்னோட ஆராய்ச்சிய என்னால தொடர முடியலன்னும் அவரிடத்துல சொன்னேன். நான் செய்திய அனுப்பியதுக்கப்புறமா, நான் ஒரு பெரிய விடுதலைய உணர்ந்தேன், அதோட, நான் ரொம்ப நிம்மதியா உணர்ந்தேன். அதுக்கப்புறம், இந்த விஷயங்களப் பத்தி யோசிப்பத நிறுத்திட்டேன். என்னோட சகோதர சகோதரிகளோடு சுவிசேஷத்த எப்படிப் பிரசங்கிக்கறது, என்னோட கடமைய எப்படிச் சிறப்பா செய்றதுங்கறத பத்தி மட்டுந்தான் யோசிச்சேன்.

சில மாசங்களுக்கப்புறமா, நான் என்னோட பெற்றோரிடத்துல, நான் என்னோட படிப்பத் தொடர மாட்டேன்னும், தேவனோட கிரியை முடிவடையப் போகுதுன்னும், அதனால அதிகமான ஜனங்கள் தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கும்படி, நான் வேகமா சுவிசேஷத்தப் பரப்ப வேண்டியிருந்துச்சுன்னும் சொன்னேன். அவங்களுக்குப் புரியல, ஆனா நான் தேவனை விசுவாசிச்சு என்னோட கடமையச் செய்யணும்னு என்னோட மனசுல உறுதி செஞ்சுக்கிட்டத அவங்க பாத்ததும், அதுக்குமேல அதிகமா அவங்க எதுவுமே சொல்லல. என்னோட கடமையச் செய்யும் செயல்முறைல, நம்மளோட கடமைகளச் செய்றது மூலமா, நாம அதிகமா சத்தியத்தப் பெறலாம் அப்படிங்கறதயும், சத்தியம்தான் வாழ்க்கையில ரொம்ப மதிப்புமிக்க விஷயம் அப்படிங்கறதயும் நான் படிப்படியா உணர்ந்தேன். இந்தப் புரிதலப் பெற்றுக்கிட்டவுடனே, நான் என்னோட கடமையச் செய்ய அதிக விருப்பமுள்ளவனா இருந்தேன், என்னோட குடும்பத்தயும் எதிர்காலத்தயும் பத்திய கவலைகள் குறஞ்சுக்கிட்டே இருந்துச்சு, எல்லாத்தயும் தேவனோட கரங்கள்ல விட்றவும், காரியங்களத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யறத தேவனிடத்துல விட்றவும் நான் கத்துக்கிட்டேன். கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்த இன்னும் அதிகமான ஜனங்களுக்கு எப்படி பரப்புறதுங்கறது பத்தி மட்டுந்தான் இப்போ நான் சிந்திக்குறேன், அதன் மூலமா, சாத்தானோட ஆதிக்கத்தின் கீழ வாழுறவங்களால சாத்தானால ஏமாத்தப்பட்டு தீங்கு அனுபவிக்கறவங்களால தேவனோட சத்தத்தக் கேட்கவும், தேவனிடத்துல திரும்பவும், கடைசி நாட்கள்ல தேவனோட இரட்சிப்பப் பெறவும் முடியும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...