உண்மையில் எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன?
2,000 ஆண்டுகளுக்கு முன்னாடியே, கர்த்தராகிய இயேசு சிலுவையில அறையப்பட்டு, அவருடைய மீட்பின் கிரியைய முடிச்ச பிறகு, அவர் திரும்பி வருவதாக உறுதியளிச்சாரு. அப்ப இருந்து, அவரிடத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்படி, நமது இரட்சகர் ஒரு மேகத்துலருந்து இறங்கி வருவார்னு எல்லா விசுவாசிகளும் ஏங்குறாங்க. எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளப்படுவோம்னு விசுவாசிகள் நம்புறாங்க, ஆனா, அவங்க தங்களுக்கு முன்னால கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கற பேரழிவுகளப் பார்த்துக் கொண்டிருக்கறாங்க ஆனா, மேகத்துல திரும்பிவரும் கர்த்தர இன்னும் வரவேற்க்கல. பலர் மிகவும் மனச்சோர்வடைந்திருக்காங்க. கர்த்தர் உண்மையிலயே திரும்பி வந்திருக்கிறாரா, விசுவாசிகள் யாராவது இதுவரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காங்களான்னு அவங்க தொடர்ந்து ஆச்சரியப்படுறாங்க. ஆனா, யாரும் அப்படி எதையும் பார்த்திருக்கல. அவங்க பாக்கறதெல்லாம் பேரழிவுகள் பெருகுவதும், தொற்றுநோய்கள் ரொம்ப தீவிரமடைவதும், பேரழிவுகள்ல நிறைய ஜனங்க மரிப்பதும், சில போதகர்களும் மூப்பர்களும் கூட மரிப்பது மட்டும் தான். ஜனங்கள் பயப்படுறாங்க அல்லது கர்த்தரால கைவிடப்பட்டிருக்கலாம்னு நினைக்கறாங்க, எந்த நேரத்திலும் பேரழிவுகள்ல மரித்துப்போகலாம் என்பது போன்ற உணர்வால் நிரம்பியிருக்காங்க. பேரழிவுகள் தொடங்கியுள்ள நிலையில், கர்த்தர் ஏன் திரும்பி வந்து அவங்கள எடுத்துக்கொள்ளவில்லைனு அவங்களால கண்டுபிடிக்க முடியல. கர்த்தராகிய இயேசு மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனா ஏற்கனவே திரும்பி வந்து சத்தியங்கள வெளிப்படுத்தி, கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியைய செய்யுறாருன்னு கிழக்கத்திய மின்னல் சாட்சி பகர்ந்திருக்குங்கறது அவங்களுக்கு ஆச்சரியமா இருக்குது. சத்தியத்திற்காக ஏங்குகிற பலர் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சு, தேவனோட சத்தத்த அங்கீகரிச்சு, சர்வவல்லமையுள்ள தேவனிடத்துக்குத் திரும்புறாங்க. அவங்க ஒவ்வொரு நாளும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் புசிச்சு பானம்பண்ணுறாங்க, அவைகளால பராமரிக்கப்பட்டு போஷிக்கப்படுறாங்க, ஆட்டுக்குட்டியானவரோட கலியாண விருந்துல கலந்துக்கறாங்க. அவங்கதான் கர்த்தர வரவேற்றவங்க, பேரழிவுகளுக்கு முன்பே தேவனோட சிங்காசனத்துக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பவங்க. “கர்த்தரோட திரும்பி வருதல், அவங்களோட எடுத்துக்கொள்ளப்படுதல் பத்தி கிழக்கத்திய மின்னல் தவறா புரிஞ்சிருக்கனும்.” பல மதவாதிகள் குழப்பமடைந்து, சிந்திக்குறாங்க, “ஏன்னா, வேதாகமம் சொல்லுது, ‘பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்’ (1 தெசலோனிக்கேயர் 4:17). கர்த்தர் திரும்பி வந்திருந்தா, நாம ஏன் எடுத்துக்கொள்ளப்படல? அவர் ஜனங்கள வானத்திற்கு கூட்டிட்டுப் போயிருக்கனும்ல? கிழக்கத்திய மின்னல் விசுவாசிகள் தெளிவாக இன்னும் பூமியிலதான் இருக்காங்க, அவங்க எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க முடியும்?” அது அவங்களுக்குப் புரியவே இல்லை. அப்படினா, உண்மையிலயே எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன? எடுத்துக்கொள்ளப்படுதலோட உண்மையான அர்த்தத்த பலரும் புரிஞ்சிக்கறதில்ல, ஆனா, அது வானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதைக் குறிக்குதுன்னும், அதனால, பூமியில இருக்கிற யாரும் இன்னும் எடுத்துக்கொள்ளப்படலன்னும் நினைக்குறாங்க. அவர்கள் ரொம்பவே தவறா புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.
கர்த்தராகிய இயேசு விசுவாசிகளிடம் தம்மை வரவேற்கச் சொன்னதப் போலவே, கர்த்தர் திரும்பி வந்து அவங்கள எடுத்துக்கொள்வாருங்கற நம்பிக்கை முற்றிலும் சரியானதுதான். ஆனா, பவுல் சொன்னாரு “கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு” அது சரிதானா? கர்த்தராகிய இயேசு தாம் திரும்பி வரும்போது, விசுவாசிகள ஆகாயத்துல சந்திப்பதுக்காக கூட்டிட்டுப் போவதா எப்போதாவது சொன்னாரா? அவர் சொல்லல. பரிசுத்த ஆவியானவரிடத்திலருந்து இதுக்கு சாட்சி இருக்குதா? இல்லை. கர்த்தராகிய இயேசுவின் சார்பா பவுலால இதைப் பத்தி பேச முடியுமா? அதை கர்த்தர் அங்கீகரிச்சாரா? இல்லை. கர்த்தர் விசுவாசிகள எடுத்துக்கொள்ளும் வழி தேவனால ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்” (மாற்கு 13:32). பவுல் ஒரு மனிதன், ஒரு சாதாரண அப்போஸ்தலன், கர்த்தர் விசுவாசிகள எப்படி எடுத்துக்கொள்வாருன்னு அவனால எப்படி அறிஞ்சிக்க முடியும்? பவுல் சொன்னது முழுக்க முழுக்க அவனோட சொந்த கற்பனைய அடிப்படையாக் கொண்டது, அது கர்த்தர பிரதிநிதித்துவப்படுத்தல. நாம கர்த்தர எப்படி வரவேற்கறோம் என்பதுக்கு நிச்சயமா, நாம இதை அடிப்படையா எடுத்துக்க முடியாது. அவர் கடைசி நாட்கள்ல எப்படி திரும்பி வர்ராரு, விசுவாசிகள எடுத்துக்கறாரு என்பதப் பத்திய, கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள நாம பின்பற்றனும், ஏன்னா, அவர் ராஜ்யத்தின் கர்த்தராகிய கிறிஸ்துவா இருக்காரு அவரோட வார்த்தைகள் மட்டுந்தான் மெய்யானவையாகவும் அதிகாரமுள்ளவையாகவும் இருக்கு. கர்த்தரோட வார்த்தைகளுக்கு ஏற்ப அவரை வரவேற்பதில் தவறாக இருக்க முடியாது. கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார்னு பாக்கலாம். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்” (மத்தேயு 24:27). “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44). “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று” (மத்தேயு 25:6). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளிப்படுத்தல் 3:20). “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27). “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). அவரது திரும்பி வருதலப் பத்திய தீர்க்கதரிசனங்கள்ல, கர்த்தர் எப்போதும் “மனுஷகுமாரன்” னு குறிப்பிடுவதை நாம பாக்கலாம், “மனுஷகுமாரனுடைய வருகை,” “மனுஷகுமாரன் வருவார்,” “சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால்,” மற்றும் “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது.” இந்த முக்கிய அறிக்கைகள் கர்த்தர் மாம்சத்தில் மனுஷகுமாரனாத் திரும்பி வர்ராருன்னும், பேசவும், நம்ம கதவைத் தட்டவும் பூமிக்கு வர்ராருன்னும் நமக்குச் சொல்லுது. கர்த்தரோட சத்தத்தக் கேட்டு கதவத் திறப்பவங்க கர்த்தர வரவேற்று அவருடைய விருந்துல கலந்துக்கற புத்தியுள்ள கன்னிகைகளா இருக்காங்க. அவங்க கர்த்தருக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்பட்டாங்க. கர்த்தராகிய இயேசு வானத்துல தம்மைச் சந்திக்க ஜனங்கள கூட்டிட்டுப் போவதா ஒருபோதும் சொல்லல, ஆனா, ஜனங்கள தம்மை வரவேற்பதற்காக தம்மோட சத்தத்தக் கேட்கும்படியும், அவருக்கு முன்பாக வந்து, அவரோட விருந்துல கலந்துகொள்ளும்படி சொன்னாரு. கர்த்தர வரவேற்கவும், அவரை சந்திக்கவும், நாம அவரோட வார்த்தைகளப் பின்பற்றி, தேவனோட சத்தத்தக் கேட்கனும். மணமகன் வருகிறார்னு யாராவது அழைப்பதைக் கேட்டவுடனே, நாம அவரைச் சந்திக்க வெளியே செல்லனும். நம்மோட சொந்த கற்பனைகளின் அடிப்படையில வானத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுவோம்னு முட்டாள்தனமா காத்திருக்கக் கூடாது. நாம அப்படிச் செய்தால், கர்த்தரோட சத்தத்தக் கேட்கவும், அவரை வரவேற்கவும் ஒருபோதும் முடியாது. கர்த்தர் மனுஷகுமாரனாத் திரும்பிவந்து, நம்ம மத்தியில வந்து, நம்மகிட்ட பேசுறாரு. அதனால, நாம வானத்துல எடுத்துக்கொள்ளப்படுவதுக்காகக் காத்திருந்தா, நாம கர்த்தரிடத்துல இருந்து வேறுபட்ட பாதையில இருக்கோம். அதனால, வானத்துல கர்த்தர சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவோங்கற ஜனங்களோட நம்பிக்கை வெறும் அர்த்தமில்லாதது. இது தேவனோட சொந்த வார்த்தைகளுக்கு முழுவதும் எதிரானது, இது ஒரு மனிதக் கருத்தே தவிர வேறல்ல. அப்படின்னா, உண்மையிலயே எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன? சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் இதை நமக்குத் தெளிவுபடுத்துது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “‘எடுத்துக்கொள்ளப்படுதல்’ என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல, ஒரு தாழ்வான இடத்தில் இருந்து ஓர் உயர்வான இடத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் என்று அர்த்தமாகாது; அது ஒரு பெரிய தவறான கருத்து ஆகும். ‘எடுத்துக் கொள்ளப்படுதல்’ என்பது என் முன்குறித்தலையும் பின்னர் தெரிந்தெடுத்தலையும் குறிக்கிறது. என்னால் முன்குறித்து தெரிந்தெடுக்கப்பட்ட அனைவரையும் நோக்கித் துல்லியமாக குறிவைக்கப்படுகிறது. முதற்பேறான குமாரர்கள் அல்லது குமாரர்கள் என்ற நிலையை அடைந்தவர்கள், அல்லது தேவனுடைய ஜனங்களே எடுத்துக் கொள்ளப்படுபவர் ஆவர். இது ஜனங்களின் கருத்துகளுக்கு முற்றிலும் இணக்கமற்றது. எதிர்காலத்தில் என்னுடைய வீட்டில் ஒரு பங்குடையவர்கள் அனைவரும் எனக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். இது முற்றிலும் உண்மையாகும், ஒருபோதும் மாறாதது மேலும் மறுக்க முடியாதது. இது சாத்தானுக்கு எதிரான எதிர்தாக்குதல். என்னால் முன்குறிக்கப்பட்ட யாரொருவரும் எனக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 104”). “நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய சொற்கள் ஆகியவற்றைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுகிறார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”). இது எல்லாவற்றையும் புரிஞ்சுக்கறதை எளிதாக்குது, இல்லையா? “எடுத்துக்கொள்ளப்படுதல்” நாம நினைக்கறதப் போல, தாழ்வான இடத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு பூமியிலருந்து வானத்திற்கு கொண்டு செல்லப்படுவது இல்ல. இது ரொம்பத் தெளிவில்லாததும் இயற்கைக்கு அப்பாற்பட்டதும் இல்ல. பேசவும் கிரியை செய்யவும் தேவன் பூமியில மனுஷகுமாரனா மனுவுருவாகும்போது, அவரோட வார்த்தைகள நாம கேட்கும்போது, இதை உண்மைனும் தேவனோட சத்தம்னும் அங்கீகரித்து, அதன்பின், தேவனோட கிரியைக்கு கீழ்ப்படிந்து, அதை ஏற்றுக்கொள்ள முடியும்போது “எடுத்துக்கொள்ளப்படுதல்” நிகழுது. நாம தேவனோட வார்த்தைகளப் புசிச்சு பானம்பண்ணுறோம், தனிப்பட்ட முறையில் அவரால நீர்பாய்ச்சப்பட்டு போஷிக்கப்படுறோம், நாம தேவனோட இரட்சிப்பைப் பெறுறோம். இதுதான் தேவனுக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்படுறதுங்கறது. கர்த்தராகிய இயேசு தம்மோட மீட்பின் கிரியையச் செய்ய வந்தப்ப, பேதுரு, யோவான், மற்ற சீஷர்களப் போல, அவரோட வார்த்தைகள தேவனோட சத்தம்னு அங்கீகரிச்சு, அதன்பின் அவரை ஏத்துக்கிட்டு பின்பற்றுனவங்க எல்லாரும் தேவனுக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்பட்டாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல வந்திருந்து சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யுறாரு. சத்தியத்த நேசிச்சு தேவனோட தோற்றத்துக்காக ஏங்குகிற, எல்லா சபைப் பிரிவுகளச் சேர்ந்தவங்களும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தியமாவும் தேவனோட சத்தமாவும் இருப்பதப் பாத்து, அவருடைய நியாயத்தீர்ப்பின் கிரியைய ஏத்துக்கிட்டாங்க. அவங்க ஒவ்வொரு நாளும் தேவனோட வார்த்தைகளப் புசிச்சு பானம்பண்ணுறாங்க, அவைகளால தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்படுறாங்க, தேவனோட நியாயத்தீர்ப்பயும் சுத்திகரிப்பயும் அனுபவிக்கறாங்க. அவங்கதான் தேவனுக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரோட கலியாண விருந்துல கலந்துகொள்ளும் புத்தியுள்ள கன்னிகைகள், இது வெளிப்படுத்தின விசேஷத்துல உள்ள தீர்க்கதரிசனத்த முழுசா நிறைவேத்துது: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளிப்படுத்தல் 3:20).
எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன என்பதுல, இப்ப நாம எல்லாரும் தெளிவா இருக்கோம்னு நெனக்கிறேன். வானத்துல கர்த்தர சந்திக்கும் எண்ணத்தைப் பத்தி இப்ப நெனச்சா, இது பொய்யானதும் முட்டாள்தனமானதுமா இல்லையா? கர்த்தராகிய இயேசு “மனுஷகுமாரனுடைய வருகை” ன்னு பலதடவ தீர்க்கதரிசனமா சொல்லி. அவரோட சத்தத்துக்கு செவிகொடுக்கனும்னு மறுபடியும் மறுபடியும் மனுஷன எச்சரிக்கிறாரு. அப்படினா, அவரை வரவேற்க, அவரோட சொந்த வார்த்தைகளுக்குப் பதிலாக, மனுஷனோட வார்த்தைகளின்படி போக ஜனங்க ஏன் வலியுறுத்துறாங்க? “கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு” அப்படிங்கற முட்டாள்தனமான கூற்ற அவங்க ஏன் பிடிச்சுக்கறாங்க? இது என்ன மாதிரியான பிரச்சனை? இது ஆசீர்வாதங்களுக்காக ரொம்பவே ஆர்வமா இருப்பத சுட்டிக்காட்டுது இல்லையா? இது அவங்க பேரழிவுகள்லிருந்து விலகி, நேரடியா அவங்க ஆசீர்வாதங்கள்ல மூழ்குற இடமான, தேவனோட ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்பட விரும்புவதால் இல்லையா? நாம இதப்பத்தி சிந்திப்போம். பாவங்கள்ல இருந்து மன்னிப்பு பெற்றவங்களால தொடர்ந்து பாவம் செய்ய முடியுமா? கர்த்தர் வரும்போது அவங்க ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுவாங்களா? அதன் ஆசீர்வாதங்கள அனுபவிக்க அவங்களுக்கு உரிமை இருக்குதா? கர்த்தர் நம்மள பாவத்துலருந்து மீட்டார்ங்கறது உண்மைதான். ஆனால் நாம இன்னும் நம்மளோட பாவ சுபாவங்களால கட்டுப்படுத்தப்படுறோம், நம்மால பாவம் செஞ்சு தேவனை எதிர்க்காம இருக்க முடியாதுங்கறத நாம மறுக்க முடியாது. நாம பாவத்தின் கட்டுகள்ல இருந்து தப்பிச்சு தூய்மை அடையல. தேவன் பரிசுத்தமானவரும் நீதியுள்ளவருமா இருக்காரு. “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபிரெயர் 12:14). அப்படினா, அசுத்தத்தாலும் சீர்கேட்டாலும் நிறைஞ்ச ஜனங்களால அவரோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியுமா? இது ஒரு மனுஷீக கற்பனையும், வெறும் ஆசை எண்ணமுமா இருக்குது இல்லையா? சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களில் இயேசு இறங்கி வருவார் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் அவர் எப்படி குறிப்பாக இறங்கி வருவார்? உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு, மாற்றப்படவில்லை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல முடியுமா? நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும், தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை என்பதும் உண்மைதான், ஆனால் இது நீ பாவமற்றவன் மற்றும் தூய்மையுள்ளவன் என்பதை நிரூபிக்காது. நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்? நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாகவும், இழிவானவனாகவும் இருக்கிறாய், ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய்; உன்னால் எப்படி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்! தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய். நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை. நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல, உன்னை மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் கிரியையை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய். இந்த வழியில் நீ தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய், ஏனென்றால் மனிதனை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய், இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும். நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய், ஆகையால் தேவனின் சுதந்திரத்தை நேரடியாகச் சுதந்தரிக்க முடியாது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து”). “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியையச் செஞ்சாரு, இது ஜனங்கள மீட்கறதும், பாவத்த மன்னிக்கறதும் மட்டுந்தான். ஆனா, நம்மளோட பாவ சுபாவம் அப்படியே நிலைச்சிருக்குது. நாம தேவனுக்கு எதிரா தொடர்ந்து கலகம் செய்யுறோம் முழுமையா இரட்சிக்கப்படல. கர்த்தராகிய இயேசுவால நம்மளோட பாவங்கள் மன்னிக்கப்பட்டா மட்டும் போதாது. நாம இன்னும் கர்த்தர வரவேற்று, அவருக்கு முன்பா எடுத்துக்கொள்ளப்படணும். கடைசி நாட்கள்ல அவரோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்கணும், அப்போதுதான் நாம பாவத்துல இருந்து விடுபட்டு முழுமையா இரட்சிக்கப்பட்டு, தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அவருக்கு பயப்படுறவங்களா மாற முடியும். அப்புறம், நாம அவரோட ராஜ்யத்துல பிரவேசிக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல வந்து கர்த்தராகிய இயேசுவின் மீட்புப் பணியின் அடித்தளத்தின் மீது, சத்தியங்கள வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்யுறாரு. இது மனுஷனோட பாவ சுபாவத்தையும், சீர்கெட்ட மனப்பான்மையையும் முழுமையா சரிசெய்யத்தான், அதனால, நாம பாவத்துல இருந்தும் சாத்தானின் வல்லமைகள்ல இருந்தும் விடுபட்டு தேவனால முழுமையா இரட்சிக்கப்பட முடியும். சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தி, சீர்கெட்ட மனுஷர்களாகிய நாம சுத்திகரிக்கப்படவும், முழுமையா இரட்சிக்கப்படவும் நமக்குத் தேவையான எல்லாத்தையும் சொல்லுறாரு. தேவனோட நிர்வாகத் திட்டத்தின் மறைபொருள்கள அவர் வெளிப்படுத்தியிருக்காரு. அதாவது, மனிதகுலத்த நிர்வகிப்பதுல தேவனோட நோக்கம், சாத்தான் எப்படி மனிதகுலத்த சீரழிக்குறான், தேவனோட கிரியையின் மூன்று கட்டங்கள் எப்படி மனுஷன முழுமையா இரட்சிக்குது, அவரோட கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியையின் அர்த்தம், மனுவுருவாதல் மற்றும் தேவனோட நாமங்களின் மறைபொருட்கள், ஒவ்வொரு வகையான நபரின் முடிவும், சென்றடையும் இடமும், அப்புறம், ராஜ்யத்தின் அழகு. இந்த வார்த்தைகள் ரொம்பவே, கண்ணத் திறக்க வைக்கறதும் முமுவதுமா நம்ப வைக்கறதுமா இருக்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவன் நம்மளோட சாத்தானிய சுபாவமும் மனநிலையுமா இருக்கிற மனுஷனோட பாவத்தின் மூலக்காரணத்தையும் தேவனுக்கு எதிரான எதிர்ப்பையும் நியாயந்தீர்த்து அம்பலப்படுத்துறாரு. சாத்தானால நாம எவ்வளோ ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்கோம் அப்படிங்கற உண்மையையும் அவர் அம்பலப்படுத்துறாரு. சீர்கேட்ல இருந்து தப்பிச்சு முழுமையா இரட்சிக்கப்படுவதுக்கான பாதைய நமக்குக் காட்டுறாரு. தேவனால தெரித்துகொள்ளப்பட்ட ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தேவனோட வார்த்தைகளப் புசிச்சு பானம்பண்ணுறாங்க மற்றும் அனுபவிக்கிறாங்க. அவருடைய வார்த்தைகளால நாம நியாயந்தீர்க்கப்படுறோம், சிட்சிக்கப்படுறோம், கையாளப்படுறோம், கத்தரிக்கப்படுறோம், எல்லா வகையான உபத்திரவங்களயும் அனுபவிச்சு, நாம பல சத்தியங்களக் கத்துக்கிட்டு, நமது சாத்தானிய சுபாவத்த உண்மையா அறிஞ்சுக்கறோம். நாம எப்பவுமே சீர்கேட்டுக்குள்ளேயே வாழுறோம், தேவனுக்கு எதிரா கலகம் செஞ்சு, அவரை வெறுக்கிறோம், நாம மனந்திரும்பி மாறலேனா, தேவனால நீக்கப்பட்டு தண்டிக்கப்படுவோம். நாம் தேவனோட நீதியுள்ள, தீமை செய்யாத மனநிலைய அனுபவிச்சு, அவர் மீது பயபக்தியை வளர்த்துக்கறோம். நமது சீர்கேடு படிப்படியா சுத்திகரிக்கப்பட்டு மாறுது. நம்மால இறுதியா பாவத்தின் கட்டுகள்ல இருந்து தப்பிச்சு, தேவனுக்கு அற்புதமான சாட்சி பகர முடியும். பேரழிவுகளுக்கு முன்பே தேவன் ஒரு கூட்ட ஜெயங்கொள்ளுகிறவர்கள ஆயத்தப்படுத்திவிட்டாரு, பேரழிவுகள் வருகின்றன. சர்வவல்லமையுள்ள தேவனை நிராகரிச்சு எதிர்க்கறவங்க, சாத்தானுக்குச் சொந்தமானவங்க எல்லாரும் பேரழிவுகள்ல அழிக்கப்படுவாங்க. தேவனோட நியாயத்தீர்ப்ப அனுபவிச்சு சுத்திகரிக்கப்பட்டவங்க பேரழிவுகள் மூலமா தேவனோட பாதுகாப்பப் பெறுவாங்க, அவரோட ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு அழகான சென்றடையும் இடத்தப் பெற்றிருப்பாங்க. இதுதான் உண்மையிலேயே தேவனோட ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுறது. தேவனால முழுமையா இரட்சிக்கப்பட்டு முழுமையாக்கப்பட்ட இந்த ஜெயங்கொள்ளுபவர்கள்தான், தேவனோட வார்த்தைகளக் கைக்கொண்டு, பூமியில அவரோட சித்தத்தச் செய்யுறவங்க. அவங்கதான் தேவனோட ராஜ்யத்தின் ஜனங்கள். கிறிஸ்துவின் ராஜ்யம் பூமியில இப்படித்தான் உணரப்படுது. இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த நிறைவேத்துது: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:9-10). “யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது” (வெளிப்படுத்தல் 21:2-4). “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்” (வெளிப்படுத்தல் 11:15). சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சொல்வது போல, “ஜெயங்கொள்ளும் கிரியையை முடித்ததும், மனிதன் ஓர் அழகான உலகத்திற்குக் கொண்டு வரப்படுவான். இந்த ஜீவிதம் அப்போதும் நிச்சயமாகப் பூமியில்தான் இருக்கும், ஆனால் அது இன்றைய மனிதனின் ஜீவிதத்தைப்போலல்லாமல் இருக்கும். மனிதகுலம் முழுவதையும் ஜெயங்கொண்ட பின்னர் மனிதகுலத்தின் ஜீவிதம் இதுதான், இது பூமியில் மனிதனுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும், மேலும் மனிதகுலத்திற்கு இதுபோன்ற ஒரு ஜீவிதம் இருப்பது மனிதகுலம் ஒரு புதிய மற்றும் அழகான உலகில் நுழைந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருக்கும். இது பூமியிலுள்ள மனிதன் மற்றும் தேவனின் ஜீவிதத்தின் தொடக்கமாக இருக்கும். அத்தகைய அழகான ஜீவிதத்தின் முன்மாதிரி என்னவென்றால், மனிதன் சுத்திகரிக்கப்பட்டு ஜெயங்கொள்ளப்பட்ட பிறகு, அவன் சிருஷ்டிகருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிறான். ஆகவே, மனிதகுலம் போய்ச்சேர வேண்டிய அற்புதமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தேவனின் கிரியையின் கடைசிக் கட்டமே ஜெயங்கொள்ளும் கிரியையாகும். அத்தகைய ஜீவிதம் என்பது பூமியில் மனிதனின் எதிர்கால ஜீவிதமாகவும், பூமியில் மிக அழகான ஜீவிதமாகவும், மனிதன் ஏங்குகிற ஜீவிதமாகவும், உலக வரலாற்றில் மனிதன் இதற்கு முன் அடையாத ஒரு வகை ஜீவிதமாகவும் இருக்கிறது. இது 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியையின் இறுதிப் பலனாகும்; மனிதகுலம் இதற்குத்தான் வெகுவாக ஏங்குகிறது, மேலும் இது மனிதனுக்கு தேவன் அளித்த வாக்குத்தத்தமும் ஆகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்”).
“மனிதர்கள் தங்கள் ஆதிச் சாயலில் மீட்கப்பட்ட பின், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை முறையே நிறைவேற்ற முடிகின்றபோது, தங்களுக்கே உரிய முறையான இடங்களில் இருந்து மற்றும் தேவனின் விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படியும் போது, பூமியில் தம்மை ஆராதிக்கும் ஒரு கூட்ட மக்களை தேவன் ஆதாயப்படுத்தியிருந்திருப்பார், மற்றும் தம்மை ஆராதிக்கும் ஒரு ராஜ்யத்தை அவர் நிறுவி இருப்பார். பூமியின் மேல் அவர் நித்திய வெற்றியைப் பெறுவார், மற்றும் அவரை எதிர்த்த அனைவரும் நித்தியமாய் அழிந்துபோவார்கள். இது மனுக்குலத்தை அவர் படைத்ததன் ஆதி நோக்கத்தை மீட்டெடுக்கும்; எல்லாவற்றையும் படைத்த அவர் நோக்கத்தை மீட்டமைக்கும், மற்றும் அது பூமியின் மேல், எல்லாவற்றின் மத்தியிலும், அவரது விரோதிகளின் மத்தியிலும் அவரது அதிகாரத்தை மீட்டெடுக்கும். இவை அவரது முழு வெற்றியின் சின்னங்களாய் இருக்கும். அதில் இருந்து, மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும், மற்றும் சரியான பாதையில் ஒரு வாழ்க்கையைத் தொடங்கும். மனுக்குலத்துடன் தேவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார், அவரும் மனுக்குலமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நித்திய வாழ்வு தொடங்கும். அருவருப்பும் கீழ்ப்படியாமையும் பூமியில் இருந்து மறைந்து போயிருக்கும், மற்றும் புலம்பல் யாவும் காணாமற் போயிருக்கும், தேவனுக்கு எதிராக உலகில் இருந்த எல்லாம் இல்லாமல் போயிருக்கும். தேவனும் அவர் இரட்சிப்புக்குள் கொண்டுவந்த மக்கள் மட்டுமே இருப்பர்; அவரது சிருஷ்டிப்பு மட்டுமே மீந்திருக்கும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”).
இந்தக் கட்டத்துல, உண்மையிலயே எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்னங்கறதப் பத்திய முழு புரிதல் நமக்கு இருக்கு. எடுத்துக்கொள்ளப்படுதல் முக்கியமா தேவனோட சத்தத்தக் கேடடு, அவரோட அடிச்சுவடுகளப் பின்பற்றுவதும், சர்வவல்லமையுள்ள தேவனிடத்துக்குத் திரும்பி, தேவனோட கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியைய ஏத்துக்கொள்ளறதும் தான். பேரழிவுகளுக்கு முன்னாடி மத உலகம் ஏன் எடுத்துக்கொள்ளப்படுதல அனுபவிக்கல? முக்கியமா அவங்க சத்தியத்தத் தேடுறது இல்ல அல்லது தேவனோட சத்தத்தக் கேட்பதில்ல, ஆனா, அவங்களோட கருத்துக்களயும், வேத வசனங்களோட நேரடியான அர்த்தத்தையும் வலியுறுத்தறாங்க. அவங்க மனுஷனோட வார்த்தைகள மட்டுமே கேக்குறாங்க, ஆனா, அவரோட வார்த்தைகளின்படி கர்த்தரை வரவேற்பதில்ல. இதனாலதான் பேரழிவுகள்ல விழுந்திருக்காங்க. கர்த்தர் மேகத்துல வர்றதுக்கு ஜனங்க காத்திருக்க விரும்புறாங்க. உடனடியாக ரூபத்தை மாத்திக்கிட்டு, அவரைச் சந்திக்க வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட விரும்புறாங்க, அதனால அவங்க, தங்களத் தாங்களே ஆயத்தப்படுத்திக்காம அல்லது தேவனோட சத்தத்தக் கேட்க முயற்சி செய்யாம செயலற்ற நிலையில் காத்திருக்கறாங்க. அவங்களோட இருதயங்கள் உணர்ச்சியில்லாம இருக்கின்றன. அவங்களால எப்படி தேவனை இப்படி வரவேற்க முடியும்? அவங்க அழுதுகிட்டும் பற்களக் கடிச்சிக்கிட்டும் பேரழிவுகள்ல விழுவாங்க. இப்ப, சர்வவல்லமையுள்ள தேவன் முப்பது ஆண்டுகளா தம்மோட நியாயத்தீர்ப்பு கிரியையச் செஞ்சுக்கிட்டு வர்றாரு. பேரழிவுகளுக்கு முன்னாடியே அவர் ஒரு கூட்ட ஜெயங்கொள்ளுபவர்களை ஆயத்தப்படுத்திட்டாரு, இப்ப பேரழிவுகள் வருகின்றன. பேரழிவுகள்ல தேவனோட சத்தத்தக் கேட்டு கர்த்தர வரவேற்கறவங்களுக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கு. இதுவே, பேரழிவுகளுக்கு மத்தியில எடுத்துக்கொள்ளப்படுதல், அவங்க பாதுகாகாகப்படுவாங்கங்கற நம்பிக்கை அவங்களுக்கு இருக்கு. கர்த்தர் மேகத்துல வரணும்னு வலியுறுத்தி தங்களோட எண்ணங்களின்படி நடப்பவங்க பேரழிவுகள்ல விழுவாங்க, அவங்க இரட்சிக்கப்பட முடியாது. பேரழிவுகள் முடிஞ்ச பிறகு, தேவன் எல்லா நாடுகளுக்கும் எல்லா ஜனங்களுக்கும் வெளிப்படையாத் தோன்றுவாரு, வெளிப்படுத்தின விசேஷம் 1:7 இன் தீர்க்கதரிசனத்த நிறைவேற்றுவாரு, “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.” சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இன்னும் இரண்டு பகுதிகளோட நாம முடிக்கலாம். “நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசு திரும்பி வருவது ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, அகந்தையுள்ள நபராக நீங்கள் இருக்கக்கூடாது, மாறாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்திற்காக ஏங்குகிற மற்றும் அதைத் தேடுகிற ஒருவராக இருக்க வேண்டும்; இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).
“கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?