மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

ஜனவரி 7, 2023

நம்ம எல்லாருக்கும் தெரிந்தபடி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசு என்ற மனிதனா தேவன் இந்த பூமியில மாம்சமா வந்தாரு, போதிச்சாரு, “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது(மத்தேயு 4:17). ஏராளமான சத்தியத்த அவர் பேசினார், மீட்பின் மீட்பின் பணிய நிறைவேத்த, மனுக்குலத்தின் பாவ நிவாரண பலியா அவர் சிலுவயில அறயப்பட்டாரு, அதன் மூலமா நியாயப்பிரமாணத்தின் காலத்த முடிச்சி, கிருபயின் காலத்த ஆரம்பிச்சாரு. தேவன் முதல் முறையா மாம்சமாகி வந்தப்ப இந்த கிரியை மீட்பதுக்காக செய்யபட்டிச்சி. யூதாயிசம் கர்தராகிய இயேசுவ ஆக்கினைக்குள்ளா தீர்க்க எல்லா முயற்சியயும்செஞ்சிச்சி ரோம அரசாங்கத்தோட சேந்து அவர சிலுவயில அறஞ்சிச்சி, ரெண்டாயிரம் வருஷங்களுக்கு பிறகு, கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷம் பூமியின் மூலமுடுக்கெல்லாம் பரவிடுச்சி. இது கர்த்தராகிய இயேசுவே மனுவுருவான தேவன்னும், மாம்ச ரூபத்தில கிரிய செய்ய வந்த ஒன்றான மெய்தேவனும் சிருஷ்டிகர்னும் நிருபிக்குது. இருந்தாலும், அநேகர் கர்த்தராகிய இயேசுதான் மாம்சத்தில வந்த தேவன்னு ஏத்துகிறதில்ல. மாறா, கர்த்தராகிய இயேசுவ அவங்க சாதாரண மனுஷனா கருதுறாங்க. அநேக மத பாஸ்டர்கள் கூட கர்த்தராகிய இயேசுவே தேவன்னு ஏத்துகிறதில்ல. அவரு தேவனுடய பிரிய குமாரன்னு மட்டுமே நினைக்கிறாங்க. இன்னைக்கி, எண்ணமுடியாத அளவு கர்த்தர விசுவாசிக்கிறவங்க இருந்தாலும், கர்த்தராகிய இயேசுவே தேவன்னு உண்மையிலே சிலரே அறிஞ்சிருக்காங்க. கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய சத்தியங்களின் அர்த்தமும், மதிப்பும் யாருக்கும் தெரியாது. கர்த்தர வரவேக்குற காரியத்துல, அநேகம் பேர், பேரழிவுக்குள்ள விழுந்திட்டாங்க, ஏன்னா அவங்களுக்கு தேவனுடய குரலைக் கேக்க முடியாது. உணர்வுபூர்வமா விசுவாசிக்கறதா வெளிய தெரிஞ்சாலும், யாராலல்லாம் தேவனுடய குரலைக் கேக்க முடியலயோ, அவங்க மனுஷகுமாரனின் சாயல கர்த்தராகிய இயேசுவில பாத்தாங்கன்னா உண்மயிலே, கர்த்தர தொடர்ந்து விசுவாசிக்கவும், அவர பின்பற்றவும் முடியுமா? அவங்களால கர்த்தராகிய இயேசு ஒரு சாதாரண மனிதன்னு கண்டணம் பண்ணவும், அவரு தேவன்னு மறுக்கவும் முடியுமா? இவ்வளவு சத்தியத்த கர்த்தராகிய இயேசு இன்னக்கி வெளிப்படுததுரத கேட்டா, தேவதூஷணம் பேசியதுக்காக கர்த்தராகிய இயேசுவ இன்னும் கண்டணம் பண்ணவும் அவர திரும்பவும் சிலுவயில அறயவும் முடியுமா? கர்த்தராகிய இயேசுவை பரிசேயர் கண்டனம் செய்த உண்மையின் அடிப்படையில், நம்மால உறுதியா சொல்ல முடியும் கர்த்தருக்குள் இருக்குற எல்லா விசுவாசிகளும் அவர மனுஷகுமாரங்கற அசல் நிலயில பார்த்தா அதேகம் பேர் ஓடிப்போயிருவாங்க, இன்னும் அதிகம் பேர், பரிசேயர்கள போல கர்த்தராகிய இயேசுவ நியாயம் தீப்பாங்க, கண்டனம் பண்னுவாங்க, திரும்பவும் அவர சிலுவயில அடிப்பாங்க. நான் காரிங்கள இப்படி சொன்னா சிலர் எதுக்கலாம், ஆனா நான் சொல்ரதெல்லாம் உண்ம. மனுக்குலம் ரொம்ப ஆழமா சீர்கெட்டு போனதுனாலயும், தேவன் மேல வைக்ற நம்பிக்கய்க்கி தங்களோட கண்கள நம்புறதுனாலயும் தான் மாம்சமான மனுஷகுமாரன் தேவனுடய தற்சொருபம் அப்படியிங்குறத அறிய முடியல. இது மனுஷருபமெடுத்தல் ஒரு பெரிய ரகசியமுன்னு காட்டுது. ஆயிரக்கணக்கான வருசங்களா, சத்தியத்தின் இந்த அம்சத்த யாராலும் புரிஞ்சுக்க முடியல. கர்த்தராகிய இயேசு மாம்சமான தேவன்னு விசுவாசிகளுக்கு தெரிஞ்சிருந்தாலும், யாரலயும் மனுஷருபமெடுத்தல்ன்னா என்னன்னும் மாம்சமான தேவன எப்படி புரிஞ்சிக் கிடுறதுன்னும் தெளிவா விளக்க முடியல.

எனவே, மாம்சத்தில் வரவும், கிரிய செய்யவும் ஏன் தேவன் முடிவெடுத்தார்? துல்லியமா சொல்லணும்னா, மனுக்குலத்தின் சீர்கேடு, இரட்சிப்பின் கிரியய முடிக்க தேவன் மாம்சத்தில் வரவேண்டிய தேவய உண்டாக்கிச்சி. வேற வார்த்தயில சொல்லனும்னா, மாம்சத்துல வரப்போறவருதான் மனுக்குலத்தின் இரட்சிப்ப முழுமயா செஞ்சி முடிக்கமுடியும். மனுக்குலத்த மீட்கவும், இரட்சிக்கவும், தேவன் இரண்டு தடவ மாம்சமானாரு. கர்த்தராகிய இயேசுவே, மாம்சமான தேவன், அவரு மீட்பின் வேலய செய்ய வந்தாரு. மீட்பின் கிரியைய செய்ய தேவன் ஏன் ஒரு மனுஷன பயன்படுத்தலன்னு சிலர் கேக்கலாம். தேவன் ஏன் மனுஷரூபமெடுத்தாரு? ஏன்னா, மனுக்குலத்தின் ஒவ்வொரு சீர்கெட்ட மனிதனும் பாவத்த சுமக்றான், நாம எல்லாரும் பாவிகள், தகுதியான பாவ நிவாரண பலி இல்லங்கிறதே இதனோட அர்த்தம், மாம்சமான மனுஷகுமாரன் மட்டுமே, பாவமில்லாதவர். எனவே, மீட்பின் கிரியைய தானே எடுத்துக்கிறதுக்காக தேவ குமாரனா தேவன் மாம்சமானார். இது மட்டுந்தான் தேவனுடய நீதியயும், பரிசுத்தத்தையும் காட்டுது, சாத்தான முழுமயா அவமானபடுத்தி, தேவன குற்றஞ்சாட்ட எந்த வாய்ப்பும் கொடுக்கல. இதுவும் மனுக்குலத்துக்கான தேவனுடய உண்மயான அன்பயும், அவங்களுக்கான இரக்கத்தயும் அவங்கள அறிய செஞ்சுச்சி. கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியைய முடிச்சப்ப, மீண்டும் வருவேன்னு தீர்கதரிசனமா சொன்னாரு. இன்னக்கி, கர்த்தராகிய இயேசு திரும்பிட்டாரு, அவர் மாம்சமான சர்வவல்லமையுள்ள தேவன். சர்வவல்லமையுள்ள தேவன் அதிகமான சத்தியத்த வெளிப்படுத்தியிருக்காரு. மனுக்குலத்தின் சீர்கேட்ட முழுமயா சுத்திகரிக்க கடைசி நாட்கள்ல மனுக்குலத்த பாவத்திலருந்தும் சாத்தானின் வல்லமயிலருந்தும் காப்பாத்தவும், மனுக்குலத்த அழகான முடிவுக்குள் கொண்டுவரவும் நியாயத்தீர்ப்பின் கிரியய செய்றாரு. இருப்பினும், எதிர்பாராதது என்னன்னா, சர்வவல்லமையுள்ள தேவன் அதிகமான சத்தியத்த வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் இன்னும் கடுமயா எதிர்க்கபடுறாரு, மத உலகில் உள்ள அந்தி கிறிஸ்துகளின் சக்திகளால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கபடுறாரு. தடுக்கவும், கெடுக்கவும், தேவனுடைய தோன்றுதல தடைசெய்யவும், வேல செய்யவும் கடைசி நாட்கள்ள சிசிபி கூட கைகோத்துருக்காங்க. மனுவுருவான தேவனுடய தோற்றமே சர்வவல்லமையுள்ள தேவன் எனபத மறுக்க அவங்க எதயும் செய்வாங்க, மேலும், சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண மனிதன்னு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவும், தேவ துஷணம் சொல்லவும் செய்வாங்க. இது மத உலகில் அந்திக்கிறிஸ்துவின் கோர முகத்தை இது முழுமயா அம்பலமாக்குது சத்தியத்த வெறுப்பவங்களா, தேவன எதிர்கிறவங்களா. இரண்டாயிரம் வருஷங்கள திரும்பி பாத்தா, பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், யூதமதத்தின் பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவ மேசியாவா ஏத்துக்கிறத விட மரிச்சிருவாங்க, தேவ தூஷணம் பேசிய ஒரு சாதாரண மனிதனாத்தான் கர்த்தராகிய இயேசுவ அவுங்க சித்தரிச்சாங்க, கர்த்தராகிய இயேசுவ எதிர்க்க, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க தேவ தூஷணம் பேச அவங்களால என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் செஞ்சாங்க, கடைசியில, அவங்க அவர சிலுவயில அறஞ்சாங்க, கொடுரமான ஒரு குற்றத்த செஞ்சாங்க, அதுக்காக தேவனால சபிக்கபட்டு, தண்டிக்கபட்டாங்க. இன்னைக்கி சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷகுமாரன் ரூபத்துல தோன்றி கிரிய செய்றாறு. சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகள் தான் சத்தியம்னு அநேக மக்கள் நம்புறாங்க, அவங்க தேவனுடய சத்தத்த கேட்டுருக்காங்க, கடைசி நாட்கள்ள தேவனுடய கிரியைய சந்தோஷமா ஏத்துகிட்டு, கர்த்தர வரவேத்துருக்காங்க. இருந்தாலும், மாம்சமான தேவன தெரியாத அநேக மக்கள் இருக்காங்க. அவங்க இன்னும் சர்வவல்லமையுள்ள தேவன சாதாரண மனுஷனாத்தான் பாவிக்குறாங்க. யாருல்லாம் சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டாங்களோ, அவங்கள சாதாரண மனிதன விசுவாசிக்கிறதா சொல்லி நியாயந்தீக்காங்க, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்றாங்க. அந்த மக்கள் பைபிள புரிஞ்சிகிட்டதா நினைக்காங்க, ஆனா, மெய் வழிய ஆராய மறுக்குறாங்க சர்வவல்லமையுள்ள தேவன வெறியா ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்றாங்க, எதித்து, தேவன மீண்டும் சிலுவயில அறையிற பாவத்த செய்றாங்க. கடவுளுடைய இரண்டு மனுவுருவெடுத்தல்களும் ஏன் மனிதனால் கண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுச்சி? ஏன்னா, மக்களுக்கு தேவனத் தெரியாது, உண்மை என்றால் என்னவென்று புரியல, மனுவுருவடுத்தலின் பெரிய ரகசியத்த இன்னும் குறைவாகவே புரிஞ்சி இருக்காங்க. மனிதர்கள் ஆழமா சீர்கெட்டு போயிட்டாங்க மேலும் சாத்தானிய சுபாவத்த கொண்டிருப்பதால்தான் இது நடக்குது. அவங்க சத்தியத்த அருவருப்பது மட்டுமில்ல, வெறுக்கவும் செய்றாங்க. அவங்க வேணும்னே தேவனுக்கு விரோதமாக இருக்காங்க, அவங்களுக்கு எந்த பயமுமே இல்லை. உண்மையிலேயே, தேவ பக்தி கொண்ட சிலர் இருக்கத்தான் செய்றாங்க அவங்க அறியாமயினால பேய்களின் ராஜாவும், அந்திகிறிஸ்துவின் சக்தியுமான சிசிபி யினால வஞ்சிக்கபட்டுட்டாங்க மேலும், தேவன எதிர்க்கும் வழிய எடுத்துக்கிட்டாங்க. மனுவுருவெடுத்தல்மற்றும் சத்தியத்த பற்றின அறிவு இல்லாததே அவங்க தோல்விக்கு காரணம். ஆகவே, அவர்களால தேவனின் குரலைக் கேட்க முடியல. எனவே, மனுவுருவான தேவன சாதாரண மனிதனாக பராமரிக்குறாங்க அதே போல் அவர கண்டனம் பண்றாங்க, தேவ துஷணம் பேசுறாங்க. மனுவுருவெடுத்தலின் சத்தியத்த புரிஞ்சிக்கறது கர்த்தர வரவேற்கவும், பரலோக ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படவும் முக்குயம்ன்னு அப்பட்டமா தெரியுது. இது நம்ம இறுதி இலக்கு தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை.

அநேகர் கேட்பாங்க, கர்த்தராகிய இயேசு மாம்சத்ல வந்த தேவன் மற்றும் மீட்பின் கிரியைய செஞ்சியிருப்பதால, மனுக்குலம் ஏற்கனவே இரட்சிக்கபட்டு, தேவன் பக்கமா திரும்பிட்டாங்க, ஆக, மனுகுலத்த நியாயத்தீர்ப்பு செய்யும் கிரியய செய்ய கடைசி நாட்களில் தேவன் ஏன் இன்னும் மனுவுருவெடுக்கணும்? இதில மிக ஆழமான அர்த்தம் இருக்கு. எளிமயா சொன்னா, தேவன் மனுக்குலத்த மீட்க இரண்டு தடவ மனுஷரூபத்துல வருவாரு, அப்புறம் முற்றிலும் சுத்திகரிக்கவும் நம்மை இரட்சிக்கவும் வருவாரு என்பத உலகம் படைக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே தேவன் தீர்மானிச்சிட்டாரு. தேவன் மனுஷகுமாரனாக இரண்டு தடவ மாம்சத்தில வருவாருன்னு வேதாகமத்துல நிறய தீர்க்கதரிசனங்கள் இருக்கு. முதல் தடவ, ஒரு பாவ நிவாரண பலியா சிலுவையில அறையப்பட்டதன் மூலம், மக்கள் செய்த பாவங்கள மன்னிக்கும படியா அவர் மீட்பின் வேலய முடிச்சார். ஆனால் மக்கள், அவர்கள் செய்த பாவத்திலருந்து தப்பி பரிசுத்தத்தம் அடையல. இரண்டாவது தடவ, சத்தியத்த வெளிப்படுத்துவதன் மூலமும், நியாயத்தீர்ப்பின் கிரிய மூலமும் அவர் மனுக்குலத்த முழுமையா சுத்திகரிப்பாரு. மனுக்குலத்த பாவத்துலருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலருந்தும் முற்றிலு மா இரட்சிப்பார். யுகத்த முடிவுக்கு கொண்டு வருவாரு, மேலும் ஒரு அழகான சென்றடையும் இடத்துக்கு மனுக்ககுலத்த கொண்டு போவாரு. எனவே, இரண்டு மனுவுருவெடுத்தல்களும் மனுக்குலத்த மீட்பதற்கும், பின்னர் முற்றிலும் மனுக்குலத்த இரட்சிக்கவும் ஆகும். மனுக்குலத்த இரட்சிக்கும் தன்னுடய நிர்வாகத் திட்டத்த நிறவேற்ற தேவன் இரண்டு தடவ மாம்சமானார். இன்று, சர்வவல்லமையுள்ள தேவனுடய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரிய வெற்றி பெற்று, ஒரு கூட்டம் ஜெயங்கொள்பவர்கள பரிபூரணப்படுத்தியிருக்கு, தேவன் சாத்தான தோற்கடிச்சி, மகிமை பெற்றிருக்கார். தேவன் தம்முடைய மகத்தான கிரியய முடிச்சிட்டாருன்னு சொல்லலாம். இவை யெல்லாம் தேவன் ஏற்கனவே செஞ்சது. இப்போ, கடைசி நாட்கள்ல தேவனின் மனுவுருவெடுத்தலின் நம்பமுடியாத அர்த்தத்தை நம்மால பாக்க முடியும். ஒரு புறம், அது கிருபயின் காலமான பழய காலத்த முடிவுக்கு கொண்டு வந்திச்சி, ராஜ்யத்தின் காலமான ஒரு புதிய காலத்த தொடங்கிச்சி. மறுபுறம், அது மனுக்குலத்த முற்றிலும் சுத்திகரிச்சி, இரட்சிக்குது, ஒரு அழகான சென்றடையும் இடத்துக்கு மனுக்குலத்த கொண்டு வருது. மீட்பின் கிரியையும் நியாயத்தீர்ப்பு கிரியையும் மாம்சமான தேவனால் நிறைவேத்தப்படுது. எனவே தேவனுடய ரெண்டு மனுவுருவெடுத்தல்களும் உண்மையில ஆழ்ந்த முக்கியத்துவம் கொண்டது. இன்று சர்வவல்லமையுள்ள தேவன் இவ்வளவு சத்தியத்த வெளிப்படுத்தி, நம்ம உலகத்தில இப்படிப்பட்ட பெரிய காரியங்கள செய்திருக்கார். தேவனுடய கிரியைய அறியாத அநேகர் ஏன் இன்னும் இருக்கிறார்கள்? சர்வவல்லமையுள்ள தேவன் தான் மாம்சமான தேவன் என்பத அநேகர் இன்னும் ஒப்புக்கொள்ள மறுக்காங்க. மத கருத்துக்கள பிடிச்சிகிறாங்க, கர்த்தராகிய இயேசு மட்டுமே தேவன் ன்னு நம்புராங்க, பைபிளை க் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே நாம் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியும்னு வலியுறுத்துராங்க. என்ன ஒரு முட்டாள்தனமான மற்றும் அறியாமையான செயல். இப்படிப்பட்ட முட்டாள்கள் எப்படி தேவனுடைய சத்தத்தக் கேட்க முடியும்? சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய எல்லா சத்தியத்தையும் அவங்க எப்படி கண்டுபிடிக்க முடியும்? இறுதியில், இந்த மக்களுக்கு மாம்சமான தேவன பத்தி அறிவு இல்லாததுனால தேவனின் குரல அடையாளம் காண முடியாது, எனவே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக அவங்க உயர்த்தப்பட முடியாது. இந்த அறியாமயுள்ள ஜனங்க, இந்த புத்தியிலாத கன்னிகைகள், எத்தன ஆண்டுகளா விசுவாசிச்சாலும், தேவனுடய அங்கிகாரத்த ஒருபோதும் பெற மாட்டாங்க. தெளிவா, நீங்கள் தேவன வரவேற்க விரும்பினா மனுவுருவான தேவன பத்திய அறிவும் மனுவுருவெடுத்தல் பற்றிய சத்தியத்த புரிந்துகொள்வதும் முக்கியம்! எனவே, மனுவுருவெடுத்தல்னா துல்லியமா என்னது? மனுவுருவெடுத்தல நாம் எப்படி புரிஞ்சிக்கணும்? நிஜ மற்றும் பொய் கிறிஸ்துக்கள நாம் எப்படி வேறுபடுத்தி பாக்க முடியும்? சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தையப் படிச்ச பிறகு நாம் புரிஞ்சிக்குவோம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “‘மனுஷரூபமெடுத்தல்’ என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”). “மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது”). “மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). தேவனுடய வார்த்த தெளிவா கூறுது என்னன்னா, மனுவுருவெடுத்தல்ங்கறது தேவனுடைய ஆவி மாம்ச ரூபமெடுத்தல்தான். அதாவது, தேவனுடய ஆவி ஒரு சாதாரண நபராக மாற மாம்சத்த அணிந்து கொள்ளுதுன்னு சொல்லலாம். பின்னர் மனித உலகில் தோன்றி கிரிய செய்யுது. எளிமயா சென்னா, அது தேவனுடய ஆவி மாம்சமாகி தேவ குமாரனாக ஆகிறதுன்னு அர்த்தம். வெளித்தோற்றத்தில், மாம்சமான தேவன் இயல்பான சாதாரண மனிதர், உயர்ந்தவரோ, அசாதாரணமானவரோ இல்ல, சாதாரண மக்களைப் போல சாப்பிடுகிற, உடுத்துகிற, சாதாரண வாழ்க்கையை வாழ்கிற ஒருவர். அவர் பசியுடன் இருந்தா சாப்பிடணும், அவர் சோர்வாக இருந்தா தூங்கணும், அவர் சாதாரண மனித உணர்வுகள அனுபவிக்கிறாரு அவர் உண்மையில மற்றும் நிஜத்தில மனுஷன் மத்தியில வாழ்றார், மேலும் அவர்தான் மனுவுருவான நடைமுறை தேவன் என்பதை யாராலயும் பாக்க முடியாது. ஆயினும், ஒரு இயல்பான சாதாரண நபராக இருந்தபோதிலும், அவருக்கும் படைக்கப்பட்ட மனிதர்களுக்கும் இடையே கணிசமான வித்தியாசம் இருக்குது. அவர் தேவனின் மனுவுருவம், மேலும் தேவனின் ஆவி அவருக்குள் இருக்கு. அவர் சாதாரண மனுஷீகம் கொண்டவர், ஆனால் முழுமையா தெய்வீகமும் கொண்டவர். இது பாக்கக்கூடியது மற்றும் தொடக்கூடியது. அவர் பிரதானமா சத்தியத்த யாருக்கு வெளிப்படுத்தணுமோ, அவங்களுக்கு வெளியாக்குறார் மேலும் ரகசியங்கள எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் அவரால வெளிப்படுத்த முடியும். அவரால தேவனுடய மனநிலைய, தேவனிடம் என்ன இருக்கு தேவன் என்னவாக இருக்கார் ன்னும், தேவனுடய மனம் எண்ணம், தேவனுடய அன்பு, தேவனுடய சர்வவல்லமை, ஞானம் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் சாட்சியமளிக்கவும் முடியும். இதனால, எல்லா மக்களும் தேவன அறிந்து, புரிந்து கொள்ள முடியும். பைபிளில் உள்ள எல்லா ரகசியங்களயும் அவரால வெளிப்படுத்த முடியும். அதாவது வெளிப்படுத்தல்ல தீர்க்கதரிசனமா சொல்லப்பட்ட புத்தக சுருள அவரால திறக்க முடியும். இது அவருக்கு முழுமையான தெய்வீகம் இருக்கு என்பத நிருபிக்கிது. வெளித்தோற்றத்தில், கிறிஸ்து ஒரு சாதாரண நபர், ஆனால், அவரால இவ்வளவு சத்தியத்த வெளிப்படுத்த, மக்களை விழிப்படையச் செய்து, சாத்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து சீர்கெட்ட மனித குலத் த இரட்சிக்க முடியும். அவர்களுக்குள் தேவனுடய ஆவி இல்லாம, இத எப்படி யாராலும் செய்ய முடியும்? நிச்சயமா எந்த பிரபலமோ அல்லது பெரிய மனிதரோ இதுபோன்ற விஷயங்கள செய்யவே முடியாது. ஏன்னா, எந்த பிரபலமோ அல்லது பெரிய மனிதரோ சத்தியத்த வெளிப்படுத்த முடியாது. அவங்க கிட்ட எந்த சத்தியமும் இல்லை. அவங்களால தங்களக் காப்பாத்தக்கூட முடியல, அப்ப அவங்க எப்படி எல்லா மனுக்குலத்தயும் காப்பாத்த முடியும்? மனுவுருவான தேவனே சத்தியத்த வெளிப்படுத்த முடியும் மனிதர்கள சுத்திகரிக்கவும், இரட்சிக்கவும் நியாயத்தீர்ப்பு கிரியைய செய்வார். இந்த திறன்கள் எந்த மனிதனிடம் இல்ல. மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற புத்தகம் கடைசி நாட்களில் தேவனுடைய வார்த்தையா இருக்குது, மேலும் கடைசி நாட்களில் தேவனின் தியாயந்தீர்க்கும் கிரியைக்கு சாட்சியாக இருக்கு. தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்பின் கிரியை அனுபவிச்சிருக்காங்க மேலும், சர்வவல்லமையுள்ள தேவனின் நீர் பாய்ச்சுதலயும், மேய்த்தலையும் ஏத்துக்கிட்டிருக்காங்க, அவங்க எல்லாரும் மாம்சமான தேவனுடைய கிரியையின் ஆழத்த நடைமுறையில உணர்ந்துருக்காங்க. நிச்சயமாக தேவன் மக்கள் மத்தியில் வாழ்றாரு. தம்ம ஆதரிக்கவும், நிரப்பவும் நம்முடய உண்மையான நிலைமையின் அடிப்படையில் சத்தியத்த வெளிப்படுத்துறார், அத்துடன் தேவ நம்பிக்கயில உள்ள திசைமாற்றங்கள், தவறுதலான தேடுதல்கள் மற்றும் கண்ணோட்டங்களயும் மேலும் நமக்குள் உள்ள அனைத்து வகையான சாத்தானிய மனநிலைகளயும், நாம் அறிவு மற்றும் மாற்றம் பெறுவதற்காக அம்பலப்படுத்தவும் செய்றாரு. மேலும், தேவன் அவருடய விருப்பங்களையும், மக்களுக்கான தேவைகளையும் நமக்கு சொல்றாரு. பின்பற்ற மிகவும் நடைமுறைக் குறிய மற்றும் துல்லியமான இலக்குகளையும், பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளையும் நமக்கு கொடுக்குறார், அப்படினாதான் சத்தியத்தின் நிஜத்துக்குள்ள நாம் பிரவேசிக்க முடியும். தேவனுடைய இரட்சிப்பப் பெற்று, சாத்தானுடய இருண்ட ஆதிக்கத்திலிருந்து முற்றிலும் தப்பிக்கமுடியும். சர்வவல்லமையுள்ள தேவனை பின்பற்றுர எவரும் ஆழமா அனுபவிக்கிறார் மனுவுருவான தேவன் மக்கள நியாயந்தீர்க்கவும், சிட்சிக்கவும் சத்தியத்த வெளிப்படுத்த வரலன்னா, அவங்களால தங்கள் பாவ சுபாவங்கள ஒருபோதும் அடையாளம் காண முடியாது, அல்லது அவர்கள் கட்டு மற்றும் பாவத்தின் நெருக்கத்திலிருந்து தப்பிக்கவும் முடியாது. அவர்கள் தேவனுடைய தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே அவர்களுடைய சீர்கெட்ட மனப்பான்மைகள் சுத்தம் செய்யப்பட முடியும் என்பதயும் அவங்க உணர்றாங்க. தேவனின் நீதியான மனநிலயப் பத்தி அறிவதன் மூலம் தான் அவங்க தேவனுக்கு பயந்து தீமையைத் விட்டு விலகலாம். மேலும், தேவனின் வார்த்தையினால் வாழும்போது மட்டுமே அவங்க உண்மையான மனிதச் சாயலில் வாழ முடியும். மேலும், தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற தகுதிபெற்று, பரலோக ராஜ்யத்துக்குள்ள கொண்டு வரப்பட முடியும். இத பரிசீலியுங்கள்: கடைசி நாட்களில், மனுவுருவான தேவன் வந்து இவ்வளவு சத்தியங்கள வெளிப்படுத்தலன்னா, இரட்சிக்கப்பட இந்த வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்ப எப்பவாவது பெற்றிருப்போமா? நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சைகளயும் பெற்று, தேவனுடைய அபரிமிதமான ஆசீர்வாதங்கள அனுபவிக்க முடியுமா? கடைசி நாட்களில் தேவனுடைய மனுவுருவாதல் இல்லன்னா, மனுக்குலம் முழுவதும் அழிவுக்கு உள்ளாயிரும், யாரும் இரட்சிப்ப பெற முடியாது. இது சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை சொல்வது போல் தான், “இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பரலோகத்திலுள்ள தேவன் பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழ்வதைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

இந்த கட்டத்தில், சிலர் கேட்கலாம், மாம்சமான தேவனின் புறத் தோற்றம் சாதாரணமானது, அவருடைய தெய்வீகம் அவருடைய மாம்சத்திற்குள் மறைஞ்சிருக்கு. எனவே தேவன் வந்திருந்தா, நாம் எப்படி அவர மனுவுருவான தேவனா அடையாளம் காண முடியும்? சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் நமக்கு வழி காட்டுது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனுடைய வார்த்தையிலிருந்து, நாம் பார்க்க முடியும் மனுவுருவான தேவன அங்கிகரிப்பது அவருடய தோற்றத்த அடிப்படையா கொண்டதல்ல. இல்லனா அவர் எந்த குடும்பத்தில் பிறந்தார், அவருக்கு பதவியும் அல்லது அதிகாரமும் இருக்கா, அல்லது மத உலகில் அவருக்கு அந்தஸ்து இருக்கா என்பதின் அடிப்படயிலும் அல்ல. இது இந்த விஷயங்களை அடிப்படையா கொண்டது அல்ல. மாறாக, அது தேவனுடைய சாரம் அவர்கிட்ட இருக்காங்கறத அடிப்படையாகொண்டது, அவரால சத்தியத்த வெளிப்படுத்த முடியுமா மற்றும் தேவனுடைய கிரியய செய்ய முடியுமா என்பத அடிப்படையா கொண்டிருக்கு. இதுதான் மிக முக்கியமான கூறு. அவரால சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்த இரட்சிக்கும் கிரியைய செய்ய முடியும்னா, பின்னர் அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் மற்றும் சமுதாயத்தில் அதிகாரம் மற்றும் பதவி இல்லைனா கூட, அவர் தேவனே. கிருபயின் காலத்த போலவே, கர்த்தராகிய இயேசு கிரிய செய்ய வந்தபோது, அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார், ஒரு மாட்டு தொழுவத்தில் உலகத்திற்கு வந்தார், அவர் உயரமாவோ அல்லது சக்திவாய்ந்த உடல்கட்டு உடயவராவோ இல்ல, அவருக்கு எந்த அந்தஸ்தும் அதிகாரமும் இல்ல, ஆனாலும் அவரால சத்தியத்த வெளிப்படுத்த முடிஞ்சிச்சி, மக்கள் மனந்திரும்ப வழிய கொடுத்தாரு, மேலும் மக்களுடய பாவங்க ள மன்னிக்க முடிஞ்சிது. அவருடைய சீஷர்களான பேதுரு, யோவான் போல சத்தியத்த நேசித்தவங்க கர்த்தராகிய இயேசுவின் கிரியையிலும் அவர் வெளிப்படுத்திய சத்தியத்திலும் பாத்தாங்க அவருக்கு தேவனின் வல்லமயும் அதிகாரமும் இருந்திச்சி கர்த்தராகிய இயேசுவ மேசியா என அங்கிகரிச்சாங்க, ஆகவே, அவங்க அவர பின்பற்றி, கர்த்தரின் இரட்சிப்ப பெற்றாங்க. இன்னைக்கு, தேவன் மீண்டும் மனித உலகத்துக்குள்ள மனுவுருவா வந்திருக்காரு. அவரு புறம்பா ஒரு சாதாரண மனிதனா தோன்றினாலும், சர்வவல்லமையுள்ள தேவன் அதிக சத்தியத்த வெளிப்படுத்தமுடியும், கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ய முடியும். எல்லா நாடுகளிலும், இடங்களிலும் அநேகர் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய சத்தியத்த பாத்திருக்காங்க, தேவனுடைய குரல அங்கீகரிச்சி, சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டு, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக உயர்த்தப்பட்டிருக்காங்க. அவங்க தேவனுடைய நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் அனுபவிக்கத் தொடங்கி, கொஞ்சம் சத்தியங்களப் புரிஞ்சிகிட்டாங்க. அவங்க எல்லாரும் அற்புதமான அனுபவங்களையும் சாட்சியங்களையும் கொண்டிருக்காங்க, மேலும் சுவிசேஷத்த பிரசங்கிக்கவும் தேவன சாட்சிபகரவும் தங்கள் எல்லாத்தயும் கொடுக்காங்க. உண்மைகள் நிரூபிக்குது யாரால சத்தியத்த வெளிப்படுத்தவும், நியாயந்தீர்கவும் மேலும் மக்கள சுத்திகரிக்கவும் முடியுமோ, அவராலதான் மனுக்குலத்த முழுமயா இரட்சிக்கவும் முடியும் அவரே கிறிஸ்துவும் மனுவுருவான தேவனும் ஆவார். இது மறுக்க முடியாதது. யாராவது சத்தியத்த வெளிப்படுத்த முடியலன்னா, அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் மட்டுமே மத்தவங்கள வஞ்சித்தா, இது ஒரு தீய ஆவியின் கிரிய. அவங்க தங்கள தேவன்னு அழைச்சிக்கிட்டா, அவர்கள் தேவன ஆள்மாறாட்டம் செய்ற பொய் கிறிஸ்துக்கள். மனுவுருவான தேவன அறிய, இந்த உண்மயில நாம உறுதியா இருக்கணும்: மனுவுருவான தேவ ன் மட்டுமே சத்தியத்த வெளிப்படுத்த முடியும், கடைசி நாட்கள்ல, நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்வாரு, மேலும் முற்றிலும் சாத்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து மனுக்குலத்த இரட்சிப்பார்.

சர்வவல்லமையுள்ள தேவன் அதிகமான சத்தியத்த வெளிப்படுத்தி, கடைசி நாட்களில் இவ்வளவு பெரிய கிரியைய செய்திருக்காரு. இருந்தாலும், மனுஷங்க இத பார்ப்பதில்ல. வெறுமனே கர்தராகிய இயேசு ஒரு மேகத்துக்கு மேல வெளிப்படையா வருவதுக்கு காத்திருக்காங்க. அத்தகைய மக்கள் பேரழிவில் அழிக்கப்படுவதால் அழுது பற்களைக் கடிப்பாங்க. இது வெளிப்படுத்துதலில் உள்ள தீர்க்கதரிசனத்த நிறைவேத்துது “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). சர்வவல்லமையுள்ள தேவன் மேலும் சொல்றாரு, “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்.” இறுதியாக, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியப் படிப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளை உன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கடைசி நாட்களில் தேவன் ஏன் ஆவிவடிவத்தில் வராமல் மனுஷரூபத்தில் வருகிறார்?

இரட்சகரான, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ள தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சத்தியங்கள வெளிப்படுத்தியதில் இருந்து அநேக மக்கள்...

இரட்சகர் வரும்போது மனுக்குலத்த எப்படி இரட்சிப்பாரு?

தமிழில் இயேசுவைப் பற்றிய செய்தி: இரட்சகரின் வருகைக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? நீங்களும் ஒருவரா? இரட்சகர் வரும்போது மனிதனை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

வேதாகம பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு சிலுவையில் “முடிந்தது” என்று சொன்னபோது உண்மையில் அவர் என்ன சொன்னார்?

ஆண்டவர் இயேசு சிலுவையில் கூறிய "முடிந்தது" என்பதன் உண்மையான அர்த்தத்தை இன்றைய பைபிள் பிரசங்கம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறது. நீங்கள் வசனத்தை சரியாகப் புரிந்துகொள்ள, படிக்க கிளிக் செய்யவும்.

சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி முழுசா 30 ஆண்டுகள் ஆயிருச்சி 1991 இல் கிரியை செய்யவும், சத்தியத்த...