திரித்துவம் என்ற கருத்து நயாயப்படுத்தக் கூடியதா?

டிசம்பர் 11, 2021

மனுவுருவான கர்த்தராகிய இயேசு கிருபையின் கால கிரியைய செஞ்சதுக்குப் பிறகு, 2,000 வருஷமா, முழுக் கிறிஸ்தவமும் ஒன்றான மெய்த்தேவனை “திரித்துவம்”னு வரையறுத்திருக்கு. வேதாகமம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவின்னு குறிப்பிடறதினால தேவன் ஒரு திரித்துவமாகத்தான் இருக்கணும்னு அவங்க அனுமானித்திருக்காங்க. சில விவாதங்கள் இருக்கு, ஆனா பெரும்பாலான ஜனங்க திரித்துவம்கிற கருத்த எந்த மாற்றமும் இல்லாம உறுதிசெஞ்சிருக்காங்க. சிலர் “திரித்துவம்”னும் மற்றவங்க “திரியேகம்”னும் சொல்றாங்க இது சாராம்சத்தில ஒன்னுதான், ஒரே விஷயத்தத்தான் குறிக்குது. நாம “திரித்துவம்”னு சொன்னாலும் அல்லது “திரியேகம்”னு சொன்னாலும் அது என்ன சொல்லுதுன்னா தேவன் மூணு பாகங்களா இருக்காரு. எல்லாரும் ஒன்றாக சேர்ந்திருந்தா அவங்கதான் தேவன் ஒரு பாகம் இல்லன்னா, அவங்க ஒன்றான மெய்த்தேவன் இல்ல. அவங்கெல்லாம ஒன்னா சேர்ந்திருக்கும் போது மட்டுந்தான் அவங்க ஒன்றான மெய்த்தேவன். மொத்தத்தில, சொல்றதுக்கு இது ஒரு வேடிக்கையான விஷயம். யேகோவா தேவன் ஒன்றான மெய்த்தேவன் இல்லன்னு உங்களால உண்மையிலேயே சொல்ல முடியுமா? அல்லது கர்த்தராகிய இயேசு ஒரே மெய் தேவன் இல்லயா? பரிசுத்த ஆவியானவர் ஒரே மெய் தேவன் இல்லயா? இந்தத் திரித்துவம்கிற கருத்து ஒன்றான மெய்த்தேவன மறுத்து அவமானப்படுத்துறதில்லையா? இது ஒன்றான மெய்த்தேவன துண்டுதுண்டாக்கி தூஷிப்பதில்லயா? இந்தத் திரித்துவம்கிற கருத்து எப்படி மொத்தமா அபத்தங்கறத நாம பாக்கலாம். ஆக அது போலத்தான் இந்த மத உலகம் ஒன்றான மெய்த்தேவன திரித்துவம்னு வரையறுத்திருக்கு. இந்தக் காலம் முழுதும் அவர கூறுபடுத்தியிருக்கு. இது தேவனுக்கு மிக வேதனயானதா இருக்கு. மத உலகம் கெட்டியாக இதப் பிடிச்சி தொங்குது, ஆரம்பத்திலிருந்தே மாற மறுத்திடுச்சி. நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யவும், மனுக்குலத்த இரட்சிக்கும் எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்தவும் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கார். கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய பொய்யான திரித்துவத்த அவர் முழுசா அம்பலப்படுத்தி இருக்காரு. இது நம்ம கண்கள திறந்திருக்கு நாம நம்ம இதயத்தில இருந்து கிறிஸ்துவ வழியும் சத்தியமும் ஜீவனும்னு துதிக்கிறோம், தேவனின் ஞானத்தையும் சர்வவல்லாமையும் போற்றுறோம். இந்த பொய்மைய தேவனே நேரடியா கலைக்காம இருந்தா திரித்துவம்கிற கருத்துக்குள்ள இருக்கிற அபத்தங்கள நம்மால ஒருபோதும் கண்டறிய முடியாது. தேவனுடைய சில வார்த்தைகள வாசிச்சு நாம இதப்பத்தி கொஞ்சம் கவனமா பாப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “உங்களில் யாராவது திரித்துவம் உண்மையில் உண்டென்று கூறினால், மூன்று ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரே தேவன் சரியாக யார் என்பதை விளக்குங்கள். பரிசுத்த பிதா என்றால் யார்? குமாரன் என்றால் யார்? பரிசுத்த ஆவியானவர் என்றால் யார்? யேகோவா தான் பரிசுத்த பிதாவா? இயேசு தான் குமாரனா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா ஆவியானவர் இல்லையா? குமாரனின் சாராம்சம் ஆவியானவர் இல்லையா? இயேசுவின் கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இல்லையா? அந்த நேரத்தில் ஆவியானவரால் செய்யப்பட்ட யேகோவாவின் கிரியை இயேசு செய்தது மாதிரியானது இல்லையா? தேவன் எத்தனை ஆவியானவர்களைக் கொண்டிருக்க முடியும்? உங்கள் விளக்கத்தின்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே என்று வைத்துக் கொண்டால், மூன்று ஆவியானவர்கள் உள்ளனர், ஆனால் மூன்று ஆவியானவர்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று தேவர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஒன்றான மெய்த்தேவன் என்று யாருமே இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகையான தேவன் எவ்வாறு இன்னும் தேவனுடைய இயல்பான சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு என்பதை நீ ஏற்றுக்கொண்டால், அவரால் எப்படி ஒரு மகனைப் பெற்று பிதாவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் உண்மையில் உன் கருத்துக்கள் அல்லவா? ‘ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவரும், ஒரே ஒரு தேவனும் மட்டுமே உள்ளனர்’ என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரே ஒரு தேவனும், இந்த தேவனில் ஒரே ஒரு ஆள்தத்துவமும், ஒரே ஒரு தேவனுடைய ஆவியானவரும் உள்ளனர். நீ பேசும் பிதாவும் குமாரனும் இருக்கின்றார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கின்றார். மேலும், நீங்கள் நம்பும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் சாராம்சம் பரிசுத்த ஆவியின் சாராம்சமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஆவியானவராக இருக்கிறார், ஆனால் அவரால் மாம்சமாகி மனிதர்களிடையே வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கவும் முடியும். அவருடைய ஆவியானவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். அவரால் ஒரே நேரத்தில் மாம்சத்திலும் பிரபஞ்சத்திற்கு மேலேயும் இருக்க முடியும். தேவனே ஒன்றான மெய்த்தேவன் என்று எல்லா ஜனங்களும் சொல்வதனால், யாருடைய விருப்பப்படியும் பிரிக்க முடியாத ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார்! தேவன் ஒரே ஒரு ஆவியானவராகவும், ஒரே ஒரு ஆள்தத்துவமுள்ளவராகவும் இருக்கின்றார்; அவர்தான் தேவனுடைய ஆவியானவர் ஆவார். … பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்து மிகவும் பொருத்தமற்றதாகும்! இது தேவனைப் பிரிக்கின்றது, ஒவ்வொருவரையும் ஒரு நிலைப்பாட்டுடனும் ஆவியானவருடனும் மூன்று நபர்களாகப் பிரிக்கின்றது. அப்படியானால் அவரால் எப்படி இன்னும் ஒரே ஆவியானவராகவும் ஒரே தேவனாகவும் இருக்க முடியும்? வானமும் பூமியும் அதிலுள்ளவை யாவும் பிதா, குமாரனால் அல்லது பரிசுத்த ஆவியானவரால் சிருஷ்டிக்கப்பட்டனவா என்று சொல்லுங்கள்? அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சிருஷ்டித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படியானால் மனுக்குலத்தை மீட்டவர் யார்? அதைச் செய்தது பரிசுத்த ஆவியானவரா, குமாரனா அல்லது பிதாவா? மனுக்குலத்தை மீட்டது குமாரன் தான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் உண்மையில் குமாரன் யார்? அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவன் இல்லையா? சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கண்ணோட்டத்தில் மாம்சமாகிய தேவன் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு பிறந்தார் என்பது உனக்குத் தெரியாதா? அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நீ என்ன சொன்னாலும், அவர் இன்னும் பரலோகத்திலுள்ள தேவனுடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவனாவார். குமாரனைக் குறித்த இந்தக் கருத்து உண்மையில் பொய்யானதாகும். எல்லாக் கிரியைகளையும் செய்பவர் ஒரே ஆவியானவர்தான். தேவன் மாத்திரமே, அதாவது, தேவனுடைய ஆவியானவரே அவருடைய கிரியையைச் செய்கிறார். தேவனுடைய ஆவியானவர் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அவர் இயேசுவில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனுடைய ஆவியானவரால்) கிரியை செய்யப்படவில்லை என்றால், அவருடைய கிரியை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”). தேவனுடைய வார்த்தைங்க தெளிவாவும் ஆழமாவும் இருக்கு. தேவனே மெய் தேவன், தேவனுக்கு ஒரே ஒரு ஆவியானவர்தான் இருக்கிறார், இந்த தேவனில் ஒரு நபர்தான் இருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்கள் நிச்சயமா இல்ல. தேவன் முன்னர் கர்த்தராகிய கிறிஸ்துவாக மாம்சமானார், குமாரனப் பத்தி குறிப்பிடப்படல. வெறும் தேவனுடைய ஆவியானவர்தான் இருந்தார், அவர்தான் பரிசுத்த ஆவியானவர். தேவன் வானத்தையும், பூமியையும் மத்த எல்லாத்தையும் சிருஷ்டிச்சபோது அதெல்லாம் அவரது ஆவியின் வாத்தைகளால சிருஷ்டிக்கப்பட்டது, ஆக தேவனுடைய ஆவியானவர்தான் ஒன்றான மெய்த்தேவனா? நியாயப்பிரமாண கால கிரியைய தேவன் செஞ்சபோது, அது நேரடியா மனுஷங்க மூலம் செய்யப்பட்டிச்சு. அப்போ “குமாரன்”னு சொல்லப்படும் யாரும் இல்ல, ஆனா ஒரே தேவன் இருந்தார், அவர்தான் சிருஷ்டிகர். தேவன் ஒரு திரித்துவம்னு எப்போதும் யாரும் சொல்லல, பரிசுத்த ஆவியானவரும் ஒருபோதும் திரித்துவம் குறிச்சு சாட்சி கொடுக்கல. அப்போ ஜனங்க ஏன் தேவன ஒருமுற அவர் மனுவுருவெடுத்து கர்த்தராகிய இயேசுவா வந்தப்போ திரித்துவம்னு வரையறுக்க ஆரம்பிச்சாங்க? மாம்சமான தேவனுடைய ஆவியானவரே கர்த்தராகிய இயேசு, மேலும் அவருடைய எல்லா கிரியையும் தேவனுடைய ஆவியால நிர்வகிக்கப்பட்டு நேரடியா வெளிப்படுத்தப்பட்டுது. கர்த்தராகிய இயேசுவுக்குள் இருந்த ஆவியே யேகோவாவின் ஆவி—அதுவே பரிசுத்த ஆவி. ஆகவே கர்த்தராகிய இயேசு மெய்யான ஒரே தேவனா? ஆம், அவரேதான். ஆகவே, மாம்சமான காரணத்தினால தேவன் மூணு பாகமா—பிதா, குமாரன், பரிசுத்த ஆவி—பிரிக்கப்படல, ஆனா ஜனங்க மனுவுருவெடுத்தலின் சாராம்சத்த புரிஞ்சிக்காததனால தேவன் பிரிக்கப்படுறத வலியுறுத்தினாங்க. இது மனுஷன் செஞ்ச பிழை, ஏன்னா மனுஷனுக்குப் புரிஞ்சிக்கிற திறன் குறைவா இருக்குது. தேவனே ஒன்றான மெய்த் தேவன். ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார் மேலும் அவருக்கு ஒரு ஆவிதான் இருக்குது. எந்த ஒரு மனுவுருவெடுத்தலுக்கும் முன்பாக அவர் ஒருவரே மெய்யான தேவன் மேலும் அவர் மனுவுருவெடுத்தலுக்குப் பின் மெய்யான ஒரே தேவனாகவே இருக்கார். அவர் மாம்சமானதால ஜனங்க தேவன மூன்று பாகங்களாக, மூன்று நபர்களாகப் பிரிக்கிறாங்க, இது அடிப்படையில தேவன உடைக்குது மேலும் ஒன்றான மெய்த்தேவன மறுதலிக்குது. இது ரொம்பவும் முட்டாள்தனமானதில்ல? உலகத்த சிருஷ்டித்தபோது அவர் ஒன்றான மெய்த்தேவனாக இருந்திருக்க மாட்டாரா? அல்லது நியாயப்பிரமாணத்தின் காலத்தில அவர் ஒன்றான மெய்த்தேவன் இல்லையா? ஒன்றான மெய்த்தேவன் கிருபையின் காலத்தில மாம்சத்தில தோன்றி கிரியை செய்த பிறகு ஏன் திரித்துவ தேவனாக மாற வேண்டும்? மனுஷனுடைய மதிகேட்டாலும் முட்டாள்தனத்தாலும் உருவாக்கப்பட்ட தவறல்லவா இது? திரித்துவம் என்ற கருத்து சரியா இருந்தா தேவன் உலகத்த சிருஷ்டிச்சப்ப அவர் ஏன் தன் மூன்று நபர்களுக்கும் சாட்சி கொடுக்கல? நியாயப்பிரமாணத்தின் காலத்தில இதுக்கு ஏன் யாரும் சாட்சி கொடுக்கல? ஒரு திரித்துவத்தப் பத்தி வெளிப்படுத்தின விசேஷத்தில ஏன் பரிசுத்த ஆவியானவரின் சாட்சி எதுவும் இல்ல? இந்த வகையிலதான் நாம உறுதியாகச் சொல்லலாம் என்னன்னா, தேவனுடைய ஆவி, அதாவது பரிசுத்த ஆவியானவர், பிதா, மற்றும் குமாரன் தேவன் திரித்துவம்னு ஒருபோதும் சாட்சியப் பகிரல. சீர்கெட்ட மனுஷர்களும் மத உலகமும்தான் இந்த முட்டாள்தனமான திரித்துவக் கொள்கைய கர்த்தராகிய இயேசு மாம்சமாகக் கிரியை செஞ்சு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கட்டியிருக்காங்க. திரித்துவம்கிற கருத்து எந்தவிதத்திலும் ஆதாரமில்லாதது என்கிறது தெளிவா தெரியுது, மேலும் அது ஒரு மனுஷனுடைய கருத்தும் கற்பனையுமேயல்லாம வேறொண்ணுமில்ல. 2000 வருஷங்களா மத உலகின் மாபெரும் பொய்யே அது, அது ஏராளமான ஜனங்கள தவறா வழிநடத்தி அவங்களுக்குத் தீங்கு செஞ்சிருச்சி.

இந்தக் கட்டத்தில நீங்க ஆச்சரியப்படலாம் கர்த்தராகிய இயேசுவை “நேச குமாரன்”னு ஏன் பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுத்தாரு மேலும் தன்னுடைய ஜெபத்தில கர்த்தராகிய இயேசு ஏன் பரலோகத்தில் இருக்கிற தேவன “பிதா”ன்னு அழைச்சாரு? அதுக்கு என்ன அர்த்தம்? இந்தக் கேள்விக்கு சர்வவல்லமையுள்ள தேவன் என்ன சொல்லியிருக்காருங்கறத நாம பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “‘இயேசு என்னுடைய நேசகுமாரன் என்று தேவன் வெளிப்படையாகக் கூறவில்லையா?’ என்று மற்றவர்கள் சொல்கின்றனர். இயேசு என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்பது நிச்சயமாக தேவனால் கூறப்பட்டதுதான். தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுத்தார், ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே, பரலோகத்திலுள்ள ஆவியானவராக தமது சொந்த மனுஷ அவதரிப்புக்கு சாட்சி கொடுத்தார். இயேசு அவருடைய மனுஷ அவதரிப்பாவார், பரலோகத்திலுள்ள அவருடைய குமாரன் அல்ல. உனக்குப் புரிகிறதா? ‘நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார்,’ என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லையா? மனுஷ அவதரிப்பின் காரணமாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பிரிக்கப்பட்டார்கள் அல்லவா? உண்மையில், அவர்கள் இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”). “இயேசு ஜெபம் செய்கையில் பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்று பெயர் சொல்லி அழைத்தபோது, இது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்பட்டது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தை அணிந்திருந்தார் மற்றும் ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பெற்றிருந்தார். அவனுக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தாலும், அவருடைய வெளிப்புறத் தோற்றம் இன்னும் ஒரு சாதாரண மனிதனின் தோற்றமாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ‘மனுஷகுமாரனாக’ மாறியிருந்தார், இதைப் பற்றி இயேசு உட்பட எல்லா மனிதர்களும் பேசினார்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதால், அவர் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபராக (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனிதனின் வெளிப்புறத் தோற்றமுள்ளவராக) இருக்கிறார். ஆகையால், இயேசு பரலோகத்திலிருக்கின்ற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைத்தது, நீங்கள் முதலில் அவரைப் பிதா என்று அழைத்ததைப் போன்றதாகும். அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார். … ஆனாலும், அவர் தேவனை (அதாவது, பரலோகத்திலுள்ள ஆவியானவரை) இவ்வாறு அழைப்பது, அவர் பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவரின் குமாரன் என்பதை நிரூபிக்கவில்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மட்டுமே வேறுபட்டதாக இருந்ததே தவிர, அவர் வேறு நபராக இருக்கவில்லை. தனித்தனியான நபர்களாக இருக்கின்றனர் என்பது பொய்யாகும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”). தேவனுடைய வார்த்தைகளில இருந்து நாம என்ன பாக்கலாம்னா கர்த்தராகிய இயேசுவ பரிசுத்த ஆவியானவர் நேசகுமாரன்னு அழைச்சது ஆவியின் கண்ணோட்டத்தில் இருந்து தம்முடைய மனுவுருவுக்கு தேவன் அளித்த சாட்சியாம். பரிசுத்த ஆவியானவர் இதச் செஞ்சிருக்கலேன்னா ஒருத்தரும் கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளத்த அறிஞ்சிருக்க மாட்டாங்க. ஆகவே இந்த வெளிப்படையான சாட்சி கர்த்தராகிய இயேசு தேவனின் மனுவுரு என்பத ஜனங்க அறிஞ்சிக்கிறதுக்கு அனுமதிச்சிது. மேலும் கர்த்தராகிய இயேசு ஜெபிக்கும்போது பரலோகத்தில இருக்கிற தேவன பிதாவேன்னு அழைச்சாரு ஏன்னா மாம்சத்தில இருக்கும் போது அவர் இயற்கைக்குமீறிய வல்லமையுடையவரா இல்ல, ஆனால் சாதாரண மனுஷத் தன்மையோடு ஜீவித்து ஒரு வழக்கமான நபரப் போலவே உணர்ந்தார். அதனாலத்தான் ஒரு சிருஷ்டியின் இடத்தில இருந்து பரலோகத்தில இருக்கும் தேவனுடைய ஆவிய பிதாவேன்னு அழைச்சார். இந்த வகையா ஜெபிக்கிறது கிறிஸ்துவினுடைய தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் பரிபூரணமா உள்ளடக்கியது. ஆனா பிதாவிடம் கர்த்தராகிய இயேசு செய்த ஜெபங்களின் அடிப்படையில மத உலகம் தேவன இரண்டா பிரிச்சு, யேகோவாவுக்கும் இயேசுவுக்கும் ஒரு பிதா-குமாரன் உறவு இருக்கிறதா சொல்லிச்சு. என்ன ஒரு முட்டாள்தனம்! கர்த்தராகிய இயேசுவின் சீஷனான பிலிப்பு அவருக்கிட்ட இதப்பத்தி இப்படிக் கேட்டான், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்” (யோவான் 14:8). அவருடைய பதில் என்ன? கர்த்தர் கூறினார்: “பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?(யோவான் 14:9-10). மேலுமவர் சொன்னார், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்(யோவான் 10:30). பிதாவும் குமாரனும் ஒரே தேவன்னு தெளிவாகுது, மேலும் ஜனங்க நினைக்கிற மாதிரி ஒரு பிதா-குமாரன் உறவுமில்ல. தேவன் மனுவுருவெடுத்ததால்தான் ஒரு பிதா, ஒரு குமாரன் என்ற இந்தக் கருத்து உருவானதுக்கான ஒரே காரணம். மேலும் மாம்சத்தில அவர் கிரியை செஞ்சிக்கிட்டிருந்த அவருடைய காலத்துக்கு மட்டுமே இது பொருந்தும். மாம்சத்தில தேவனுடைய கிரியை முடிவுக்கு வந்த உடனே அவர் தமது ஆதி வடிவத்த திரும்பப் பெற்றார் மேலும் அதற்கு மேலும் பிதா குமாரன்கிற எந்த ஒரு உறவும் இருக்கல.

தேவனுடைய வார்த்தைகளின் இன்னொரு பகுதிய நாம பார்க்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசுவுக்குள் இருக்கும் ஆவியானவர், பரலோகத்திலுள்ள ஆவியானவர், யேகோவாவின் ஆவியானவர் எல்லோருமே ஒருவர்தான். அவர் பரிசுத்த ஆவியானவர் என்றும், தேவனுடைய ஆவியானவர் என்றும், ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்றும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆவியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவனுடைய ஆவியானவரால் அதிகமான கிரியைகளைச் செய்ய முடியும். அவரால் உலகத்தைச் சிருஷ்டிக்கவும், பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவும் முடியும். அவரால் முழு மனுக்குலத்தையும் மீட்கவும் முடியும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொண்டு அழிக்கவும் முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன, அவருக்குப் பதிலாக தேவனுடைய ஆள்தத்துவங்களான யாராலும் செய்ய முடியாது. அவருடைய ஆவியானவரை யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லவர் என்ற பெயர்களிலும் அழைக்கலாம். கர்த்தரும், கிறிஸ்துவும் அவரே. அவரால் மனுஷகுமாரனாகவும் முடியும். அவர் வானத்திலும் பூமியிலும் வாசம்பண்ணுகிறார். அவர் பிரபஞ்சங்களுக்கு மேலேயும், திரளான ஜனங்களுக்கு நடுவேயும் வாசம்பண்ணுகிறார். வானத்திற்கும் பூமிக்கும் அவர் ஒருவரே எஜமானர்! சிருஷ்டிப்பின் காலம் முதல் இப்போது வரை, இந்த கிரியையானது தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டு வருகிறது. வானத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும் அல்லது மாம்சத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும், இவை அனைத்தும் அவருடைய சொந்த ஆவியானவராலேயே செய்யப்படுகின்றன. வானத்திலிருந்தாலும் அல்லது பூமியிலிருந்தாலும், சகல ஜீவராசிகளும் அவருடைய சர்வவல்லமையுள்ள உள்ளங்கையிலே உள்ளன. இவை எல்லாமே தேவனுடைய கிரியையாகும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவராலும் செய்ய இயலாது. வானங்களில், அவர் ஆவியானவராகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். மனிதர்களிடையே அவர் மாம்சமாகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். அவர் இலட்சக்கணக்கான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவர் இன்னும் அவராக இருக்கிறார், அவருடைய ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக சகல மனுக்குலத்திற்குமான மீட்பு அவருடைய ஆவியானவரின் நேரடி கிரியையாகும், அதேபோல் இது கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும், தேவனை சர்வவல்லவர் என்றும், ஒரே மெய்த்தேவன் என்றும், சகலத்தையும் உள்ளடக்கிய தேவன் என்றும் மட்டுமே அழைக்க முடியும். தனித்தனி ஆள்தத்துவங்களும் கிடையாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்தும் கிடையாது. வானத்திலும் பூமியிலும் ஒரே ஒரு தேவன் தான் வாசம்பண்ணுகிறார்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளிலிருந்து, தேவன் ஒரு ஆவியானவர்ன்னும் அதுதான் பரிசுத்த ஆவியானவர்னும் பாக்குறோம். அவர் சர்வவல்லமையுள்ளவர்; வானத்தையும், பூமியையும் மத்த எல்லாத்தையும் அவர் சிருஷ்டித்து அத ஆளுகை செய்யுறார். தம்முடைய கிரியைக்காக அவரால் மாம்சமாக முடியும் மேலும் ஒரு நடைமுறைக்கு ஏத்த வழியில மனுஷங்க மத்தியில ஜீவிக்க முடியும். வெளியிலிருந்து பாக்கும்போது அவர் ஒரு சாதாரண நபராகத் தோற்றமளிக்கிறார் ஆனா அவருடைய கிரியை எல்லாம் தேவனுடைய ஆவியால நிர்வகிக்கப்படுது. மனுவுருவில் தேவனுடைய கிரியை முழுமையடையும்போது அவர் தமது ஆதி வடிவத்த திரும்பவும் அடையுராறு. மனுவுருங்கறது அவருடைய கிரியையின் ஒரு கட்டத்தில தேவன் மனுக்குலத்துக்கு எப்படி தோற்றமளிக்கிறார் என்பதுதான். ஆகவே, தேவன் நேரடியா ஆவியிலிருந்து கிரியை செஞ்சாலும், அல்லது மாம்சத்திலிருந்து கிரியை செஞ்சாலும் அவர் யேகோவான்னு, இயேசுன்னு, அல்லது சர்வவல்லமையுள்ள தேவன்னு எப்படி அழைக்கப்பட்டாலும் அவர் அதே ஆவியாத்தான் இருக்கார். அவர்தான் தேவன், அவர் சுயமாக இருக்கிறவர், நித்தியமானவர் மேலும் எல்லாவற்றையும் சிருஷ்டித்து ஆளுகை செய்யுறார். நம்ம ஐக்கியத்தின் இந்தக் கட்டத்தில, எல்லோருக்கும் தெளிவா புரிஞ்சிருக்குன்னு நான் நினைக்கிறேன் அதாவது ஒரே தேவன்தான் உண்டு, ஒன்றான மெய்த்தேவன். இதில எள்ளளவும் சந்தேகமில்ல. ஒன்றான மெய்த்தேவனே திரித்துவம்னு கிறிஸ்தவம் சாதிக்குது, தேவன மூணு பகுதியா பிரிக்கிறத வலியுறுத்துது, இவங்க மூணு பேரும் சேர்ந்ததுதான் ஒன்றான மெய்த்தேவன்ற நம்பிக்கையப் பரப்புது, மேலும் தனித்தனியாக அவங்க ஒன்றான மெய்த்தேவன் இல்ல. உண்மையிலேயே இது தேவன மறுப்பதில்லையா? தேவனப் பத்திய இப்படிப்பட்ட மாபெரும் தவறான புரிதலைக் கொண்டிருக்கும் மனுஷஜாதி கொஞ்சம் கூட வேதாகமத்த புரிஞ்சிக்கலைனும் அல்லது தேவனின் சாராம்சத்தை அறியலைன்னும், மேலும் அவங்க நம்பமுடியாத அளவுக்கு வேதாகமத்தின் நேரடியான உள்ளடக்கத்த புரிவதில மூர்க்கத்தனமா இருக்காங்கறதும், மனுஷ எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப தேவன வரையறுத்து பிரிக்கிறாங்கங்கறதும் நிரூபனமாகுது. இது உண்மையில தேவன எதிர்த்து தூஷிப்பது ஆகும்.

மேலும் இப்போ, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசிநாட்களின் கிறிஸ்து, வந்திருக்கிறார், அவரது கிரியைய செய்ய சத்தியத்த வெளிப்படுத்துறார், மத உலகின் மகாபெரிய பொய்யான திரித்துவத்த அம்பலப்படுத்துறார். ஒன்றான மெய்த்தேவனே தேவன் என்பதில நாம் இப்போது உறுதியா இருக்கோம். அவரது ஆவிதான் ஒன்றான மெய்த்தேவன், பரிசுத்த ஆவியானவர்தான் ஒன்றான மெய்த்தேவன், மேலும் அவரது மனுவுருக்கள்தான் ஒன்றான மெய்த்தேவன். அவரது ஆவியான பரிசுத்த ஆவியானவர் போல மேலும் அவரது மனுவுருவில், அவர்தான் ஒன்றான மெய்த்தேவன் மற்றும் அவர் ஒரே ஒரு தேவன்தான். அவரப் பிரிக்க முடியாது. ஜனங்களால இந்த சத்தியங்கள ஏத்துக்க முடியாம உறுதியா அவங்களோட கருத்துக்களையும் கற்பனைகளையும் பிடித்து தொங்கிக்கிட்டிருந்தா, திரித்துவத்த நம்புவத வலியுறுத்தி, மெய்யான ஒரே தேவன மூணு தேவன்களாகப் பாத்தா, அது தேவன நிந்தித்து தூஷிக்கும் பாவமாகும். தேவனுடைய ஆவிய தூஷிப்பது பரிசுத்த ஆவியானவர தூஷிப்பதாகும், மேலும் அதனோட விளைவுகள யாராலும் தாங்க முடியாது. தாமதமின்றி விழித்துக்கொள்ளவும் தேவனுக்கு எதிராகப் போகும் தவறைத் தவிர்ப்பதற்காக இந்தத் தவறான கண்ணோட்டத்தப் பிடித்துக்கொள்வத நிறுத்தவும் அறிவுள்ளவங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை(மத்தேயு 12:31-32). மத உலகம் இன்னும் திரித்துவம்கிற பொய்ய பிடிவாதமா வலியுறுத்தி வருது. எவ்வளவு காலத்துக்கு அவங்க தேவன எதிர்த்துகொண்டே இருப்பாங்க? விழித்துக்கொள்ள இதுவே நேரம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இத்தனை ஆண்டுகளில், உங்களால் தேவன் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறார், ஒரு தேவன் வெளிப்படையாக மூன்று தேவர்களாகப் பிரிக்கப்படுமளவிற்கு தலைமுறைதோறும் சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டு வருகிறார். இப்போது மனிதனால் தேவனை மீண்டும் ஒன்றாக இணைப்பது உண்மையில் கூடாத காரியமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அவரை மிகவும் சிறியவராகப் பிரித்திருக்கின்றீர்கள்! தாமதமாவதற்கு முன்பே நான் காலம் தாழ்த்தாமல் எனது கிரியையை செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறு வெட்கக்கேடான வழியில் தொடர்வீர்கள் என்று சொல்வது கடினம்! இவ்விதமாக தேவனைத் தொடர்ந்து பிரிப்பீர்களேயானால் அவரால் எப்படி இன்னும் உங்கள் தேவனாக இருக்க முடியும்? நீங்கள் இன்னும் தேவனை உணர்ந்துகொள்வீர்களா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”). “உங்கள் பகுத்தறிவால் தேவனுடைய கிரியையை முழுமையாகப் பிரிக்க முடியுமா? யேகோவாவின் எல்லா கிரியைக்குள்ளும் உள்ள உள்நோக்கத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? ஒரு மனிதனாக உன்னால் அதை அறிந்துகொள்ள முடியுமா அல்லது நித்தியத்திலிருந்து நித்தியம் வரை காணக்கூடிய தேவனால் அறிந்துகொள்ள முடியுமா? வெகு காலத்திற்கு முந்தைய நித்தியத்திலிருந்து வரவிருக்கும் நித்தியம் வரை உன்னால் காண முடியுமா அல்லது அவ்வாறு செய்யக்கூடிய தேவனால் முடியுமா? நீ என்ன சொல்கிறாய்? தேவனைக் குறித்து விவரிக்க நீ எவ்விதத்தில் தகுதியுள்ளவனாக இருக்கிறாய்? உன் விளக்கம் எதன் அடிப்படையிலானது? நீ தேவனா? வானமும், பூமியும், யாவும் தேவனாலேயே சிருஷ்டிக்கப்பட்டவையாகும். இதைச் செய்தது நீ அல்ல, அப்படி இருக்கும்போது நீ ஏன் தவறான விளக்கங்களைக் கொடுக்கிறாய்? இப்போது, நீ திரித்துவ தேவனை தொடர்ந்து நம்புகிறாயா? இவ்விதமாக அது மிகவும் பாரமாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? நீ மூவரை அல்ல, ஒரே தேவனை விசுவாசிப்பது சிறந்தது. ஒளியாக இருப்பது சிறந்தது, ஏனென்றால் கர்த்தருடைய பாரம் ஒளியாக இருக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...

கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?

கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இதயெல்லாம் இண்டர்நெட்டுல போட்டு அது உலகம்...

தமிழ் பைபிள் பிரசங்கம்: நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன—கர்த்தர் திரும்பி வரும்போது நம்மை நேரடியாகத் தமது ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்வாரா?

இந்த தமிழ் பைபிள் பிரசங்கக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள். பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கான சரியான வழியை அது உங்களுக்குச் சொல்லும்.

மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

விதின்னு சொன்னாலே, பணம், அந்தஸ்து இருந்தா, வெற்றி அடஞ்சா நல்ல விதின்னும், ஏழைங்க, தாழ்ந்தவங்க, பேரழிவால கஷ்டத்தால பாதிக்கபட்டவங்க எல்லாரும்...