என் மீதமுள்ள வருஷங்களுக்கான என் விருப்பத் தேர்வு

ஜனவரி 21, 2024

சின்ன வயசுலயிருந்தே, என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு, நாங்க மத்த கிராம மக்களால அடிக்கடி கொடுமைப்படுத்தப்படுவோம். என்னோட அம்மா அவங்களோட கொடுமைப்படுத்துதலால கண்ணீர் சிந்துறதப் பாக்குறப்போ, நான் எப்பவுமே பரிதாபமா உணர்வேன். எங்களுக்கு அந்தஸ்து இல்லாததால எல்லோருமே எங்களை இழிவா பார்ப்பது போல் தோனுச்சு, அதோடு நாங்க முன்னேறுறதுக்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சதே இல்ல. அந்த சமயத்துல என்னோட பெற்றோர் என்கிட்ட அடிக்கடி, “பெரிய நகரங்கள்ல கூட ஏழைகள் தனியாத்தான் இருக்குறாங்க, ஆனா பணக்காரர்களுக்கு மலைகளோட ஆழத்துல கூட விருந்தாளிகள் இருப்பாங்க, அதனால நீ பெரியவனாகுறப்போ, உனக்குன்னு ஒரு பெயரை உருவாக்கி, உன்னோட சகாக்களக் காட்டிலும் நம்ம குடும்பத்துக்கு பெருமை சேர்க்கணும்” அப்படின்னு சொல்லுவாங்க. நான் இந்த வார்த்தைகள அப்படியே இருதயத்துல பதிச்சுக்கிட்டேன், அந்தஸ்தையும் மத்தவங்களோட மரியாதையயும் அடைய கடுமையா உழைச்சேன்.

1986ல, ஒரு பெரிய தேசிய நிறுவனத்துக்கான ஆட்சேர்ப்பு பயிற்சித் திட்டத்துல பங்கெடுத்தேன். பயிற்சிக்கான நேரத்துல, நான் கடினமா படிச்சு, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாசமும் தரம் மற்றும் நடத்தை ரெண்டுலயும் முதல் மதிப்பெண்களப் பெற்றேன். ஆனா எனக்கு அதிர்ச்சி தரும் விதமா, எனக்கு கீழான, ஆரம்ப கட்ட பதவி ஒண்ணு ஒதுக்கப்பட்டுச்சு, அதே சமயத்துல என்னோட தரங்கள விட மோசமா இருந்தவங்க ஆனா, நல்ல குடும்ப பரம்பரையக் கொண்டிருந்தவங்களுமான மத்தவங்களுக்கு மேலாளர் பதவிகள் வழங்கப்பட்டுச்சு. இந்த பின்னடைவ ஏத்துக்கறது எனக்கு ரொம்ப கடினமா இருந்துச்சு, நான் என்னைய வேறுபடுத்திக் காட்ட விரும்புனா, நல்லா செயல்பட்டா மட்டும் போதாதுங்கறத உணர்ந்தேன், நான் முதலாளிய தயவு செய்யக் கத்துக்கணும். அதனால, அதுக்கப்புறமா முதலாளியோட வீட்டுல வேலை செய்ய அடிக்கடி நான் போவேன், அதோடு, அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டப்போ, அவர் கூப்பிடுறப்ப எல்லாம் போய் உதவ நான் அங்க இருந்தேன். முதலாளியோட அங்கீகாரத்தப் பெற, என்னோட நிர்வாகத் திறனை மேம்படுத்த எல்லா வகையான புத்தகங்களயும் வாங்கி, வெறித்தனமா படிக்க ஆரம்பிச்சேன். சில வருஷ கடின உழைப்புக்கு அப்புறமா, நான் கடைசியா உயர் மட்ட நிர்வாகத்துக்கு பதவி உயர்வு பெற்றேன். தொழிற்சாலையில, தொழிலாளர்கள் எல்லாரும் தலையசைச்சும், கும்பிட்டும் என்னைய வரவேற்றாங்க நான் வீட்டுக்குத் திரும்பிப் போனப்ப, அக்கம் பக்கத்தினர் எல்லாருமே என்னையப் பாக்க வருவாங்க. அதே போல, நான் எங்க கிராமத்துல பெரிய ஆளா மாறியிருந்தேன். அதிகதிகமான ஜனங்க என்கிட்ட உதவி கேட்டு வந்தாங்க அதோடு அதுக்கு முன்னாடி எங்கள ஏளனமாப் பாத்தவங்க கூட தங்களோட பேச்ச முழுசா மாத்திக்கிட்டு, அப்போது என்னோடு ரொம்ப நட்பா இருந்தாங்க. என்னோட மாயையில, எல்லாரோட கவனத்தயும் ஈர்த்ததும் பாராட்டால நிரம்பி வழிந்ததும் ரொம்ப திருப்திகரமா இருந்துச்சு.

1998-ல என்னோட 35வது வயசுல தொழிற்சாலை இயக்குநரா நான் பதவி உயர்வு பெற்றேன். அந்தஸ்தயும் அதிகாரத்தயும் பெற்றிருந்தாலும், நான் இன்னும் நிம்மதியில்லாம இருந்தேன். எனக்கு தனிப்பட்ட தொடர்புகள் இல்லாததால, என்னோட பணியில நான் சிறப்பா செயல்படலேன்னா, என்னோட தற்போதைய அந்தஸ்த என்னால தக்கவச்சுக்க முடியாம போகலாம்ன்னு நான் கவலப்பட்டேன். அதனால, ஏதாவது தப்பு நடந்துட்டா நான் பணி நீக்கம் செய்யப்படுவேன்னு உள்ளத்தின் ஆழத்துல பயந்து, லேசான பனி மேல நடப்பதப் போல, ரொம்ப எச்சரிக்கையோட என்னோட வேலைய செஞ்சேன். எங்களோட தொழில வளர்க்கறதுக்காக, நான் அடிக்கடி எங்க வாடிக்கையாளர்களுக்கு விருந்து சாப்பாடு கொடுத்து, குடிக்கவும் பாட்டுக் கச்சேரிக்கும் வெளியே கூட்டிட்டுப் போவேன். சில மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையும் விபச்சாரிகளயும் லஞ்சமா கொடுப்பத நான் உணர்ந்தேன். இப்படி தொழில் செய்யுறத நான் வெறுத்தேன், ஆனா என்னோட விருப்பத் தேர்வுகளப் பத்தி பலதடவ யோசிச்சதுக்கப்புறமா, நான் நிலைமையோட யதார்த்தத்துக்குத் திரும்ப ஆரம்பிச்சுட்டேன். அந்த நேரத்துல, நான் கவலயோடு போராடிக்கிட்டு, தூங்குறதுல சிரமப்பட்டுக்கிட்டு இருந்தேன். வேலையினால ஏற்பட்ட மன அழுத்தத்தாலயும் என்னோட சொந்த கவலையினாலயும், மத்த நோய்களோடு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடெமியாவை போன்றவை எனக்கு வந்துச்சு. பின்நாட்கள்ல, என்னோட கம்பெனி பொது கம்பெனியிலயிருந்து தனியாருக்கு சொந்தமான கம்பெனியா மாறுச்சு. இருநூறு முந்நூறு ஊழியர்கள் அந்த கம்பெனியில பங்குகள வாங்கி உரிமையப் பெற்றுக்கிட்டாங்க. மூணு வருஷங்களுக்கு அப்புறமா, எங்களோட வருமானத்த அதிகரிக்க, தலைவரோ திட்டத்துக்கு ஏற்ப சிறுபான்மை பங்குதாரர்கள நாங்க வாங்கிட்டோம், அப்படி செஞ்சதால, நானும் இன்னும் சில முக்கிய பங்குதாரர்களும் கோடீஸ்வரர்களாயிட்டோம், அதோடு எங்களோட கம்பெனி எங்க பிராந்தியத்துல வரி வருவாய்க்கான முக்கிய ஆதாரமா மாறுச்சு. நான் அடிக்கடி தலைமை மாவட்டத்துல முக்கியமான கூட்டங்கள்ல கலந்துக்க வேண்டியிருந்துச்சு, டிவில கூட நான் வந்தேன். இதுக்கு முன்னாடி இல்லாத அளவுக்கு என்னோட தற்பெருமையில நான் திருப்திடஞ்சேன். வெளிப்புறமா, நான் உலகத்தோட உச்சியில இருப்பதப் போலவும், ஒரு உயர்ந்த வாழ்க்கை முறையை வாழ்வதாவும் காணப்பட்டுச்சு, ஆனா உள்ளுக்குள்ள நான் வெறுமையாவும் நிம்மதியில்லாமலும் இருந்தேன். ஒவ்வொரு ராத்திரியும் நான் படுக்கையில படுத்திருக்குறப்போ, நான் எனக்குள் நெனச்சுக்குவேன்: “கொஞ்ச வருஷங்களாவே, நான் என்னோட இருதயத்தயும் ஆத்துமாவயும் என்னோட வேலைய செய்ய வெறித்தனமா அர்ப்பணிச்சு அந்தஸ்தயும் புகழையும் நான் அடைஞ்சிருக்கேன், ஆனா நான் என்னோட கண்ணியத்தயும் ஆரோக்கியத்தயும் இழந்துட்டேன். உண்மையிலயே இப்படித்தான் நான் என்னோட வாழ்க்கைய வாழணுமா? இப்படி வாழுறதுல என்ன அர்த்தம் இருக்குது?”

ஆனா என்னோட பிஸியான வாழ்க்க என்னைய ரொம்ப நேரம் சிந்திச்சுப் பாக்கவிடல. என்னோட அந்தஸ்தோடும் நற்பெயரோடு பிரிக்கமுடியாத அளவுக்கு நான் பிணைக்கப்பட்டிருக்குறேன், அதனால என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் தொடர்ந்து ஓடுறதுதான்.

ஆனா எனக்கு அதிர்ச்சி தரும் விதமா, நான் என்னோட தொழில்ல வாழ்க்கையின் உச்சத்த எட்டினப்போ, நிர்வாகத்துல என்னோட சொந்த தவறுதல் காரணமா எங்களோட தயாரிப்புகள்ல ஒண்ணு பெரிய தர சிக்கல சந்துச்சுச்சு, அது நிறுவனத்துக்கு பல மில்லியன் யுவான் நஷ்டத்த ஏற்படுத்திருச்சு. அந்த நேரத்துல, நான் முழுவதுமா பரிதாபமா உணர்ந்தேன். என்னோட இத்தனை வருஷங்கள்லயும் அந்த நிறுவனத்துல, ஏறக்குறைய ஒவ்வொரு வருஷமும் நான் நிலையான முன்னேற்றங்கள ஏற்படுத்துனேன், ஆனா கடந்த ஆறு மாசங்களா நான் உயிரைக் கொடுத்து உழைச்சும், நான் என்னோட நற்பெயரக் கெடுத்துக்கிட்டேன். நான் ரொம்ப உயர்ந்த உயரத்துல இருந்து தாழ அடிமட்டத்துல விழுந்ததப் போல் உணர்ந்தேன். என்னோட வலியிலயும் வேதனையிலயும், சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷத்த என்னோடு பகிர்ந்துக்க சில சகோதர சகோதரிகள் வந்தாங்க. தேவனோட வார்த்தைகள் இப்படி சொல்லப்பட்டிருந்தத நான் பாத்தேன்: “மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்”). “மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). இத வாசிச்சதும், வாழ்க்கையில நம்மளோட தலைவிதி எல்லாமே தேவனோட கரத்துல இருக்குதுங்கறது எனக்குப் புரிஞ்சுச்சு. நம்மளோட தொழில்ல நாம வெற்றி பெறுவோமா இல்லையாங்கறதுல நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல. யோசிச்சுப் பாத்ததுல இது உண்மைன்னு நான் உணர்ந்தேன். நான் முதலில என்னோட சொந்த முயற்சியினால என்னோட தொழிலை முன்னேற்றனும்னு நோக்கம் கொண்டிருந்தேன். ஆனா அதுக்குப் பதிலா, நான் மோசமா தோல்வியடைஞ்சேன். நம்மளோட தலைவிதிய நாம கட்டுப்படுத்தலங்கறத இது எனக்குக் காட்டுச்சு. இந்த வார்த்தைகள் உண்மையிலயே நடைமுறைக்குரியதும் சரியானதும்னு எனக்குத் தோனுச்சு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாசிச்சதன் மூலமா, இது தேவனோட கிரியைதான்னு உறுதிப்படுத்திக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கிட்டேன்.

அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் வேற ஒரு பத்திய நான் பாத்தேன்: “தேவனுடைய குரலைக் கேட்கவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், மனுக்குலத்தின் தலைவிதியின் மீது கவனம் செலுத்தவும், தேவனை மிகவும் பரிசுத்தமானவராக்கவும், மிகவும் கனத்திற்குரியவராக்கவும், மிகவும் உயர்ந்தவராக்கவும், மனுக்குலம் தொழுதுகொள்ளும் ஒரே இலக்காக மாற்றவும், ஆபிரகாமின் சந்ததியினர் யேகோவாவின் வாக்குத்தத்தத்தின் கீழ் வாழ்ந்ததைப் போலவும், தேவன் முதலாவது சிருஷ்டித்த ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தது போலவும் தேவனுடைய ஆசீர்வாதத்தின் கீழ் மனுக்குலம் முழுவதும் வாழ்வதற்கு உதவவும் வேண்டுமாறு சகல தேசங்களையும், சகல நாடுகளையும், ஏன் சகல தொழில் நிறுவனங்களையும் சேர்ந்த ஜனங்களை வலியுறுத்துகிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”). தேவனோட வார்த்தைகள் எனக்குள்ள ஆழமான தாக்கத்த ஏற்படுத்துச்சு. நான் என்னோட வாழ்க்கையின் முதல் பாதிய வெற்றிக்காக போராடி கழிச்சுட்டேன், என்னோட சகாக்கள விட சிறந்து விளங்கணும்ங்கற என்னோட இலக்க நான் உணர்ந்திருந்தாலும், எனக்குன்னு ஒரு பேர உருவாக்கிக்கிட்டாலும், என்னோட சொந்த வீண் ஆசைகள நிறைவேத்திக்கிட்டாலும் கூட, உள்ளத்துல நான் வெறுமையாவும் வேதனையாவும் உணர்ந்தேன். சத்தியத்தத் தேடுவதுக்காகவும் அவரை ஆராதிப்பதுக்காகவும் தேவனுக்கு முன்பா வர்றது மட்டுமே சரியான வழிங்கறதயும், தேவனோட ஆசீர்வாதங்களப் பெறுவோம்ங்கறதயும் நான் உணர்ந்தேன். அதனால நான் தேவனிடத்துல, விசுவாசத்தக் கடைப்பிடிக்கவும் முன்னோக்கிச் செல்ல தேவனைப் பின்பற்றவும் என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்வேன்னு உறுதி செஞ்சுக்கிட்டேன்.

ரெண்டு மாசங்களுக்கப்புறமா, நான் என்னோட திருச்சபையில ஒரு குழுத் தலைவராகி, குழு கூடுகைகள நடத்துற பொறுப்புல இருந்தேன். நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன் அதோடு தேவனோட சித்தத்துக்கு செவிசாய்க்கவும் என்னோட கடமைய செய்யவும் தயாரா உணர்ந்தேன். நாங்க கூடுற இடம் நான் வேலை செஞ்ச இடத்துக்குப் பக்கத்துல இருந்ததால, கூடுகைகளுக்குப் போற வழியில சக ஊழியர்கள நான் அடிக்கடி சந்திக்க நேரிட்டுச்சு. காலப்போக்குல, நான் பதற்றப்பட ஆரம்பிச்சேன். நான் விசுவாசிங்கறத என்னோட முதலாளி கண்டுபிடிச்சுட்டா, குறைந்தபட்சமா நான் விமர்சிக்கப்படுவேன், அதோடு பேர இழக்க நேரிடும், ஆனா ரொம்ப மோசமா சொல்லப்போனா நான் கம்பெனியிலயிருந்து நீக்கப்படலாம். அதுக்கப்புறமா, என்னோட வாழ்நாள்ல பாதி வரை நான் போராடி பெற்ற புகழையும் அந்தஸ்தையும் இழந்து போயிருவேன். ஆனாலும் நான், “தேவன் மேல விசுவாசம் வச்சதுக்கப்புறமா, சில சத்தியங்கள நான் புரிஞ்சுக்கிட்டதால, என்னால பல பொல்லாப்புகளத் தவிர்க்க முடிஞ்சுச்சு. தேவனை விசுவாசிக்கறதும், சத்தியத்தத் தேடுறதும், என்னோட கடமையச் செய்யுறதும்தான் சரியான வழிங்கறதயும், என்னோட வாழ்க்கையில ரொம்ப மதிப்புமிக்கதும் அர்த்தமுள்ளதுமான ஒரு விஷயம்ங்கறதயும் நான் ஆழமாக நம்புனேன், அதனால என்ன செஞ்சாலும் என்னால அதை கைவிட முடியாது” அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, நான் கட்டுப்படுத்தப்பட்டவனா இருப்பத நிறுத்திக்கிட்டேன், அதோடு, தொடர்ந்து கூடிவந்து என்னோட கடமைய செஞ்சேன். நான் கணிச்ச மாதிரியே, கொஞ்ச நாளுக்கப்புறமா, நான் தேவனை விசுவாசிக்கறதயும் கூடுகைகள்ல கலந்துக்கிட்டு இருந்தேன்ங்றதயும் முதலாளி கண்டுபிடிச்சுட்டாரு. ஒரு தடவ, எங்க கம்பெனி நடத்துன கூட்டத்துல நான் கலந்துக்கல, அதனால தலைவர் என்னைய எல்லா இடங்கள்லயும் தேடிப் பாக்க ஆட்கள அனுப்பி, கூடுகை எங்க நடந்துச்சுன்னு ஜனங்ககிட்ட விசாரிக்கவும் செஞ்சாரு. இன்னொரு தடவ, நான் ஒரு கூடுகைக்குப் போயிக்கிட்டு இருந்தேன் தலைவர் கண்டுபிடிச்சுட்டு, வேணும்னே நடுத்தர மேலாளர்கள் எல்லாரையும் கூப்பிட்டு கூட்டத்த நடத்தினாரு, நான் வெளிய போக முடியாதபடிக்கு எனக்குப் பக்கத்துல உக்காந்தாரு. இந்த முழு சூழ்நிலையும் எனக்கு ரொம்ப கடினமா இருந்துச்சு ஒவ்வொரு தடவையும் நான் கூடுகைகள்ல கலந்துக்கிட்டப்போ, நான் எப்பவும் கட்டுப்படுத்தப்பட்டதா உணர்ந்தேன். அந்த காலகட்டத்துல, நான் ரொம்பவே போராட்டத்த உணர்ந்தேன் என்னோட தற்போதைய சூழ்நிலை தேவனை விசுவாசிப்பதுலயிருந்தும் என்னோட கடமையச் செய்யுறதுலயிருந்தும் என்னையத் தடுத்துக்கிட்டு இருந்துச்சுங்கறத உணர்ந்தேன். அதனால நான் தேவனிடத்துல ஜெபிச்சேன்.

அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் பாத்தேன், அது சொன்னது: “மேலும் நீ என்னை திருப்திப்படுத்துவது எவ்வாறு என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும், மற்றும் என்னில் உனக்கிருக்கும் விசுவாசத்தை சரியான பாதையில் அமைக்க வேண்டும். இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”). தேவனோட வார்த்தைகள் மூலமா, விசுவாசிகளா நம்மளோட வாழ்க்கையில நாம எத சந்திச்சாலும், நாம எப்பவுமே தேவனிடத்துல பயபக்தியையும் கீழ்ப்படிதலயும் கடைப்பிடிக்கணும் அதோடு அவருக்காக சாட்சி கொடுக்கணும்ங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். அந்த நேரத்துல, நான் ரெண்டு வருஷங்களா விசுவாசத்தக் கடைப்பிடிச்சு வந்திருந்தேன், நான் வெளிப்புறமா என்னோட கடமைய செஞ்சாலும், என்னோட வேலையால நான் கட்டுப்படுத்தப்பட்டேன் நான் பணிநீக்கம் செய்யப்படுவேன், என்னோட அந்தஸ்தை இழக்க நேரிடும்ன்னு நான் எப்பவுமே கவலப்பட்டேன். அதனால என்னோட கடமைய என்னால செய்ய முடியல. அதோடு சில நேரங்கள்ல என்னோட வேலை என்னோட கூடுகையயும் கடமைகளயும் பாதிக்க விட்டுட்டேன். என்னோட சாட்சி எங்கே போச்சு? அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் வேற ஒரு பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சு. “தேவன் மீதான தனது விசுவாசத்தில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் குறைகூறாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்”). தன்னோட விசுவாசத்துல, பேதுரு தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அன்பு செலுத்த நாடினாரு. கர்த்தராகிய இயேசு அவனைக் கூப்பிட்டப்ப, அவன் உடனடியா அவரைப் பின்தொடருறதுக்காக தன்னோட மீன்பிடி படகை விட்டுட்டான், அவன் உபத்திரவங்களயும் சிரமங்களயும் எதிர்கொண்டப்போ, அவன் இன்னும் தேவனோட சித்தத்த திருப்திப்படுத்த நாடினான். கடைசியில, அவன் தலைகீழா சிலுவையில அறையப்பட்டு, தேவனோட கடைசி அன்பையும், மரணம் வரை கீழ்ப்படிதலயும் அடைஞ்சு, தேவனுக்கு ஒரு அற்புதமான ஜீவனுள்ள சாட்சியை பகர்ந்துக்கிட்டு, மதிப்பும் அர்த்தமும் நிறைஞ்ச வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருந்தான். நான் விசுவாசத்த கடைப்பிடிக்கவும் தேவனைப் பின்பற்றவும் நான் தீர்மானிச்சிருந்ததால, தேவனை நேசிக்கவும் திருப்திப்படுத்தவும் நான் பேதுருவைப் பின்பற்றணும்—இது மட்டுமே சரியான முடிவாக இருக்கும். என்னோட வாழ்க்கையின் முதல் பாதியில எப்படி இருந்தேன்னு நான் நெனச்சேன், நான் லஞ்சம் வாங்கினேன், கொடுத்தேன், தரங்கெட்ட நிலையில உழன்றுக்கிட்டு இருந்தேன் அந்தஸ்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் பொய் சொன்னேன். முற்றிலுமா துன்பத்துல வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அப்படித்தான் என்னோட இளமை என்னைக் கடந்து போச்சு. நான் கடைசியா தேவனால சரியான பாதையில வழிநடத்தப்பட்டாலும், நான் இன்னும் என்னோட வேலையால கட்டுப்படுத்தப்பட்டேன், விசுவாசத்தக் கடைப்பிடிக்கறதுலயும் என்னோட கடமையச் செய்யுறதுலயும் என்னால கவனம் செலுத்த முடியல. நான் இப்படியே தொடர்ந்து போய்க்கிட்டு இருந்தா, என்னோட வாழ்க்கையில உண்மையிலயே முன்னேற முடியுமா? குறிப்பா, “நேரம் யாருக்கும் காத்திருக்காது!(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் X”). அப்படிங்கற தேவனோட வார்த்தைகள நான் யோசிச்சப்போ, நான் ஒரு அவசர உணர்வ உணர்ந்தேன். இந்தப் பூமியில 50 வருஷங்களுக்கு அப்புறம், கடைசி நாட்கள்ல தேவனோட இரட்சிப்பின் கிருபைய ஏத்துக்கறதுக்கான வாய்ப்பும், சத்தியத்தத் தேடி தேவனோட இரட்சிப்ப அடையுறதுக்கான வாய்ப்பும் எனக்கு எப்படி கிடைச்சுச்சுன்னு நான் நெனச்சப்ப, இது எல்லாமே தேவனோட தயவால நடந்துச்சு. என்னோட விசுவாசத்துல நான் அதிக அக்கற இல்லாம இருந்தத நிறுத்த வேண்டியிருந்துச்சு. அதுக்கப்புறமா, என்னோட நேரத்தயும் ஆற்றலயும் சத்தியத்தத் தேடுறதுக்கும் என்னோட கடமையச் செய்யுறதுக்கும் செலவிடும்படி என்னோட வேலைய விட்டுவிடணும்ங்கற எண்ணம் எனக்கு வந்துச்சு.

ஆனா எனக்கு அப்பத்தான் தோணுச்சு நான் என்னோட வாழ்க்கையில பாதிக்கும் மேல ஏனோதானோன்னு கழிச்சுட்டேன், கடைசியா, பல மில்லியன் யுவான் போர்ட்ஃபோலியோவோடு ஒரு முக்கிய பங்குதாரராகிட்டேன், நான் எண்ணுறதுக்கும் அதிகமான பாராட்டுறவங்க இருந்தாங்க. ஆனா நான் என்னோட வேலைய இழந்துட்டா, நான் மறுபடியும் ஒரு சராசரி ஆளா இருப்பேன், பிறகு யார் என்னோடு நேரம் செலவழிப்பாங்க? என்னோட நண்பர்களும் உறவினர்களும், முதலாளியும் சக ஊழியர்களும் ஆகிய எல்லாருமே என்னைய இழிவா பார்ப்பாங்க நான் ஒரு முட்டாள்ன்னு சொல்லுவாங்க. அதுக்கப்புறமா அவங்களுக்கு முன்னாடி நான் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்? இத நெனச்சவுடனே எனக்குள்ள நான் முரண்பட்டேன். அதனால, என்னோட வேலையின் கட்டுகள்லயிருந்தும் தடைகள்லயிருந்தும் விடுபட எனக்கு பலத்தைக் கொடுங்கன்னு கேட்டு நான் தேவனிடத்துல ஜெபிச்சேன். என்னோட தேடுதலின் நடுவுல, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள். இந்தப் புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, மனிதகுலம் தேவனைத் தவிர்த்து, அவரைக் காட்டிக் கொடுத்து, பொல்லாதவர்களாக மாறுகிறது. எனவே, இவ்வாறு, சாத்தானுடைய புகழ் மற்றும் ஆதாயத்தின் மத்தியில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையும் அழிக்கப்படுகிறது. இப்போதும் சாத்தானுடைய கிரியைகளைப் பார்க்கும்போது, அதன் மோசமான நோக்கங்கள் முற்றிலும் வெறுக்கத் தக்கவையாக இருக்கின்றன அல்லவா? புகழ் மற்றும் ஆதாயமின்றி ஒருவர் ஜீவிக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், இன்றும் நீங்கள் சாத்தானுடைய மோசமான நோக்கங்களைக் காண முடியவில்லை. ஜனங்கள் புகழ் மற்றும் ஆதாயத்தை விட்டுவிட்டால், அவர்களால் இனி முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாது, இனி அவர்களால் அவர்களுடைய குறிக்கோள்களைக் காண முடியாது, அவர்களுடைய எதிர்காலம் இருண்டதாகவும், மங்கலானதாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் மாறிப்போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், மனிதனைக் கட்டிப்போட புகழும் ஆதாயமும் சாத்தான் பயன்படுத்தும் கொடூரமான கைவிலங்குகள் என்பதை நீங்கள் மெதுவாக ஒரு நாள் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நாள் வரும்போது, நீ சாத்தானுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக எதிர்ப்பாய். உன்னைக் கட்டிப்போட சாத்தான் பயன்படுத்தும் கைவிலங்குகளை முழுமையாக எதிர்ப்பாய். சாத்தான் உன்னில் உட்புகுத்திய எல்லாவற்றையும் தூக்கி எறிய விரும்பும் நேரம் வரும்போது, நீ சாத்தானுடன் ஒரு முழுமையான முறிவைக் கடைபிடிப்பாய். சாத்தான் உன்னிடம் கொண்டு வந்த அனைத்தையும் நீ உண்மையிலேயே வெறுப்பாய். அப்போது தான் மனிதகுலத்திற்கு தேவன் மீது உண்மையான அன்பும் ஏக்கமும் இருக்கும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). தேவனோட வார்த்தைகள் மூலமா, என்னோட வேலையை விட்டுட்டு என்னோட ஆற்றலை என் கடமையில செலுத்த முடியாம போனதுக்குக் காரணம், மனுஷர்களக் கட்டுறதுக்கும் கட்டுப்படுத்துறதுக்கும் சாத்தான் பயன்படுத்தும் கட்டுகளா புகழும் செல்வமும் எப்படி இருக்குதுங்கறத நான் பாக்கல. அது எனக்கு ஒரு கண்ணிய வச்சிருந்துச்சு. புகழையும் செல்வத்தயும் சாத்தான் என்னைய ஏமாத்திக் கெடுக்கறதுக்கான ஒரு வழியா பயன்படுத்தி வந்து, என்னைய அதப் பின்தொடரவும் தேவனிடத்துலயிருந்து விலகியிருந்து, துரோகம் செய்யவும் வச்சுச்சுங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். என்னோட சின்ன வயசுல இருந்தே என்னோட குடும்பம் வறுமையில வாடியதாலும், கொடுமைப்படுத்தப்பட்டதாலும், இழிவா பார்க்கப்பட்டதாலும், மேலும் “மற்றவர்களை விட சிறந்தவனாய் இரு, உன் முன்னோர்களுக்கு மரியாதையை ஏற்படுத்து,” “மனிதன் மேல்நோக்கிப் போவதற்குப் போராடுகிறான்; தண்ணீர் கீழ்நோக்கிப் பாய்கிறது” போன்ற சாத்தானிய தத்துவங்களால நான் நஞ்சூட்டப்பட்டிருந்தேன், இந்தக் கருத்துகள நான் உயர்ந்த சத்தியங்களா எடுத்துக்கிட்டேன் நான் ஒரு உயர்ந்த வாழ்க்கைய வாழ்வேன்னு வாக்குப் பண்ணினாரு. அதுக்காக, நான் என்னோட தரம் தாழ்ந்து நடந்துக்கிட்டேன் என்னோட முதலாளிக்கு அளவுக்கு அதிகமா மதிப்பு கொடுத்து அளவுக்கு அதிகமா அவரப் பிரியப்படுத்துனேன். நான் அந்தஸ்தப் பெற்றதுக்கப்புறமா, மத்தவங்க எனக்கு எதிரா சதி செய்யுறாங்ககன்னு நான் தொடர்ந்து கவலப்பட்டேன். அதனால என்னோட அந்தஸ்த உறுதியா வச்சுக்க, நான் என்னோட மனசாட்சிக்கு எதிரா சென்று வாடிக்கையாளர்களுக்கு பணத்தயும் விபச்சாரிகளயும் லஞ்சமா கொடுத்தேன். நான் தினமும் பயந்து, பதட்டத்துல இருந்தேன், நான் செஞ்சிருந்த எல்லாமே என்னையப் பின்தொடரும்ன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தப் பெற, எங்களோட கம்பெனிய நான் கடினமா முயற்சி செஞ்சு கட்டியெழுப்புனேன், ஆனா அது சுலபமான ஒண்ண விட்டுட்டு கஷ்டமானதத் தேர்ந்தெடுத்ததப் போல இருந்துச்சு—ஒரு நிமிஷங் கூட ஓய்வு இல்ல, நான் கடைசியில சோர்வடைஞ்சு நோய்வாய்ப்பட்டேன். எனக்கு அந்தஸ்தும் அதிகாரமும் இல்லாதப்போ, தேவையான எந்த வகையிலும் இவற்றப் பெற நாடினேன், ஆனா கடைசியா நான் விரும்பினத அடைஞ்சப்போ, நாள் முழுவதும் கேளிக்கைகள்ள ஈடுபடுத்துறதுலயும் விருந்தளிப்பதுலயும் சிக்கிக்கிட்டேன் அதோடு பொல்லாத உலகப் போக்குகளப் பின்பற்றுறதத் தவிர வேறு வழியில்லாம இருந்துச்சு, ஒரு மனுஷனா உணர்வே இல்லாம இருந்தேன். எனக்குக் கொஞ்சம் கூட அமைதியோ, நிலையான தன்மையோ இல்ல தினமும் நான் ரொம்ப சோர்வா உணர்ந்தேன், வேதனையானதும் சோர்வானதுமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்தேன்! சாத்தான் என்னைய சித்திரவத செய்ய புகழையும் செல்வத்தயும் பயன்படுத்தினான். பிரபலமானவங்களும் பணக்காரங்களுமா இருந்தாலும், செல்வமும் நற்பெயரும் இருந்தாலும், தங்களோட தொழில்ல வெற்றி பெற்றவங்களா இருந்தாலும், எப்படி அவங்கள்ல சிலர் இன்னும் போதைப்பொருளுக்கு அடிமையா இருக்காங்க, தற்கொலை செஞ்சுக்குறாங்க அல்லது சிறைத் தண்டணை விதிக்கப்படுறாங்கன்னு நான் யோசிச்சேன். புகழும் செல்வமும் அவங்களுக்கு தற்காலிக கௌரவத்தக் கொடுத்திருக்கக் கூடும், ஆனா அது அவங்களோட மனசுக்குள்ளயும் சரீரத்துக்குள்ளயும் வெறுமையயும் துன்பத்தயும் மட்டுமே கொண்டு வந்துச்சு. அப்பத்தான் நான், சாத்தான் நம்மளத் தூண்டுறதான புகழையும் செல்வத்தயும் தேடுறதுக்கான ஆசை எதிர்மறையான ஒரு விஷயம்ங்கறதயும்—இது ஜனங்களிடத்துல சூழ்ச்சி செஞ்சு அவங்கள சேதப்படுத்துற சாத்தானோட வழிங்கறதயும் சீர்கேட்டுக்கும் தீங்குக்கும் மட்டுமே வழிவகுக்குதுங்கறதயும் புரிஞ்சுக்கிட்டேன். அது ஜனங்களோட மனிதத்தன்மைய அதிகதிகமா கொள்ளையடிச்சு அவங்கள அரக்கர்களா மாத்துது. தேவனோட வார்த்தைகளின் வழங்கலயும் தண்ணீர்ப் பாய்ச்சுதலயும் அனுபவிச்சதன் மூலமா, சத்தியத்தைத் தேடுறதும், தேவனை கனம்பண்ணுறதும், பொல்லாப்புக்கு விலகுறதும் ஒரு சிருஷ்டியா என்னோட கடமையச் செய்யுறதும் மட்டுந்தான் அர்த்தமுள்ளதும் மதிப்புமிக்கதுமான வாழ்க்கைய வாழ எனக்கு உதவும்ங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். புகழுக்காகவும் செல்வத்துக்காகவும் என்னோட வாழ்க்கைய அதிகமா விட்டுக்கொடுக்குற கண்ணியில என்னால விழ முடியல. அந்தஸ்து மற்றும் நற்பெயரின் கட்டுகளத் தூக்கி எறிய, என்னோட கடமைய சரியா செய்ய, சத்தியத்த தேடி, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ நான் தேவனை சார்ந்திருக்க வேண்டியிருந்துச்சு. இத உணர்ந்தப்ப, வேலைய விட்டு விலக முடிவு செஞ்சேன்.

நான் கம்பெனியில முக்கியப் பங்கு வகித்ததால நான் நேரடியா ராஜினாமா செய்ய முயற்சி செஞ்சா தலைவர் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டாருன்னு எனக்குத் தெரியும். அதனால நான் நீண்ட நோய்வாய்ப்படுதல் விடுப்புக்கு தலைவரிடத்துல விண்ணப்பிக்க முடிவு செஞ்சேன். ஆனா அவர் என்னோட நோக்கத்த யூகிச்சியுக்கணும், “நான் இதுல கையெழுத்துப்போட மாட்டேன். உங்களை நோய்வாய்ப்படுதல் விடுப்பு எடுக்க நான் அனுமதிச்சா, அதுக்கப்புறமா நீங்க அப்படியே ராஜினாமா செஞ்சுருவீங்க” அப்படின்னு சொன்னாரு. அதக் கேட்டதும் எனக்கு சற்று மன உளைச்சல் ஏற்பட்டுச்சு. தலைவர் என்னைய ராஜினாமா செய்ய விடலேன்னா, நான் பிரச்சினைய கட்டாயப்படுத்திட்டா, நான் அவரைப் புண்படுத்திவிட மாட்டேனா? என்னோட பங்கு மூலதனம் இன்னும் நிறுவனத்துல முதலீடு செய்யப்பட்டிருந்துச்சு, அவர் எனக்கு விஷயங்கள கடினமாக்கி, நான் முதலீடு செஞ்ச பணத்தத் திரும்பப் பெற அனுமதிக்கலேன்னா என்ன செய்யறது? அந்த நேரத்துல, வேலைய ராஜினாமா செய்யறது எனக்கு ஒரு கடினமான பிரச்சினையா மாறுச்சு நான் என்ன செய்யறதுன்னு எனக்கு உண்மையிலயே தெரியல. அதனால் நான் தொடர்ந்து தேவனிடத்துல ஜெபிச்சு, வழிநடத்தும்படி அவர்கிட்ட கேட்டேன்.

ஒரு நாள், தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்தி திடீர்ன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஆபிரகாம் தன் கரத்தை நீட்டி, தன் மகனைக் கொல்ல கத்தியை எடுத்தபோது, அவன் செய்த செயல்கள் தேவனால் காணப்பட்டதா? அவை காணப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே, ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட வேண்டும் என்று தேவன் கேட்டபோது, ஆபிரகாம் தன் மகனைக் கொல்ல கத்தியை உயர்த்தியபோது, ஆபிரகாமின் இருதயம் தேவனுக்கு முன்பாக இருந்தது. அவனுடைய முந்தைய முட்டாள்தனம், அறியாமை மற்றும் தேவனைப் பற்றிய அவனுடைய தவறான புரிதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அந்த நேரத்தில் தேவனுக்காக ஆபிரகாமின் இருதயம் உண்மையாக, நேர்மையாக இருந்தது. அவன் உண்மையிலேயே தேவனால் கொடுக்கப்பட்ட மகன் ஈசாக்கை தேவனிடம் திருப்பித் தர முயற்சி செய்தான். அவரிடத்தில், தேவன் கீழ்ப்படிதலைக் கண்டார். தேவன் தாம் விரும்பிய கீழ்ப்படிதலைக் கண்டார்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). ஆபிரகாமோட அனுபவம் எனக்கு ரொம்ப ஊக்கமளிப்பதா இருந்துச்சு. தேவன் ஜனங்களோட உண்மையயும் கீழ்ப்படிதலயும் விரும்புறாருங்கறத நான் பாத்தேன். தேவன் ஆபிரகாம்கிட்ட அவனோட ஒரே மகனான ஈசாக்க பலியிடச் சொல்லிக் கேட்டப்போ, தேவனைத் திருப்திப்படுத்தத் ஆபிரகாம் தன் வலியைத் தாங்கிக்கிட்டு, தன்னோட அன்புக்குரியவனைக் கைவிட்டான். இதன் மூலமா, ஆபிரகாமோட இருதயம் அவருக்கு உண்மையாக இருந்தத தேவன் பாத்தாரு. அதுக்கப்புறம் நான் என்னோட சொந்த நடத்தைகளப் பத்தி சிந்திச்சுப் பாத்தேன். என்னோட விசுவாசம் என்னோட வாழ்வின் மிகப்பெரிய பகுதியா இருக்கணும்னு நான் விரும்புறேன்னும், நான் என்னோட கடமைய போதுமான அளவு நிறைவேத்துறதுக்காக ராஜினாமா செய்ய ஆசப்படுறேன்னும் சொன்னாலும் கூட, அது வெறும் வார்த்தையாத்தான் இருந்துச்சு, நான் உண்மையிலயே என்னோட உண்மையான இருதயத்த அர்ப்பணிக்காம இருந்தேன். ராஜினாமா செய்யுறத கட்டாயப்படுத்துறதன் மூலமா தலைவரை நான் புண்படுத்திவிடுவேன்னும் என்னோட முதலீட்டைக் கேட்க முடியாதுன்னும் கவலப்பட்டேன். நான் என்னோட சொந்த நலன்களப் பத்தி மட்டுந்தான் கவலப்பட்டேன். ஆபிரகாம் தன்னோட ஒரே மகனை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தான். அதோடு நான் செய்ய வேண்டியதெல்லாமே நான் என்னோட வேலைய ராஜினாமா செய்யறதுதான், ஆனா என்னால அத செய்ய முடியல. தேவனை நான் உண்மையா நேசிக்கல—நான் அவரை ஏமாத்திக்கிட்டு இருக்கலயா? இதயெல்லாம் உணர்ந்ததும் எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்வு வந்துச்சு. நான் தேவனிடத்துல: “அன்புள்ள தேவனே! நான் என்னோட கடமைய நிறைவேற்றுறதுல கவனம் செலுத்தும்படிக்கு ராஜினாமா செய்ய விரும்புறேன். ஆனா என்னால அத செய்ய முடியல. ஓ தேவனே! இதுக்கப்புறமும் நான் உம்மை ஏமாத்த விரும்பல. நான் என்னோட வேலைய விட்டுவிட்டு என்னோட கடமைய முழுநேரமா செய்யத் தயாரா இருக்குறேன்” அப்படின்னு ஜெபிச்சேன். ஜெபிச்சதுக்கப்புறமா, நான் கடைசியா தலைவரோடு என்னோட ராஜினாமா பத்தி விவாதிக்க தைரியத்தப் பெற்றுக்கிட்டேன். கடைசியா, பாதி வருஷம் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதிச்சாரு. ஆனா நான் ஏற்கனவே ராஜினாமா செய்யுறதுல உறுதியா இருந்தேன்.

இப்படியே பாதி வருஷம் போயிருச்சு நிறுவனத்துடனான என்னோட உறவைப் பாதுகாத்துக்கவும், நான் முதலீடு செஞ்சிருந்த பணத்தத் திரும்பப் பெறவும் என்னோட விடுமுறையை நீட்டிக்க திட்டமிட்டேன். ஆனா தலைவர், அவரோட மாகாண தலைநகர்ல இருக்குற எங்க விற்பனை கம்பெனி ஒண்ணுல இருப்பதா சொல்லி, என்னோட விடுமுறைய நீட்டிக்க அவர நேர்ல சந்திக்கும்படி கேட்டுக்கிட்டாரு. ஆனாலும், நாங்க கடைசியா சந்திச்சப்போ, அவர் என்னோட விடுப்புக்கான விவரங்களக் கொண்டுவரவே இல்ல அதோடு, கம்பெனியோட எல்லா பிரிவுகளுக்கும் ஒரு சுற்றுப்பயணத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாரு. எல்லா அலுவலகங்களும் ஆடம்பரமா அலங்கரிக்கப்பட்டு ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. எல்லாருமே வேலையில மும்முரமா இருந்தாங்க அதோடு எல்லா பிரிவுகளோட மேலாளர்களும் என்னைய “இயக்குனர் வாங்” அப்படின்னு அன்போடு கூப்பிட்டாங்க. என்னையும் அறியாம நான் மறுபடியும் ஒரு சோதனைக்குள்ள சிக்கினேன். நான்: “நான் ஒதுங்கியிருந்து பாதி வருஷம் ஆயிட்டாலும் இந்தக் கம்பெனியில எனக்கு செல்வாக்கு இருக்குது. இந்தப் பெரிய கம்பெனியில எனக்குப் பங்கு இருக்குது, இந்த கம்பெனியில நான் இன்னும் ஒரு தலைவரா இருக்குறேன்! கடந்த ரெண்டு வருஷங்கள்ல எங்களோட கம்பெனி அதிக லாபத்த ஈட்டியிருக்குது. நான் என்னோட கடமைய விட்டுட்டு தொடர்ந்து இங்க வேலை செஞ்சா, என்னால கொஞ்சம் தீவிரமா பணம் சம்பாதிக்கவும், என்னோட வாழ்க்கைய செல்வ செழிப்பா வாழ முடியும்—என்னோட சந்ததியினரும் கூட கண்ணியமா வாழ முடியும்” அப்படின்னு நெனச்சேன். இது எனக்கு நடந்தப்போ, கொஞ்சம் ஆசையத் தூண்டுறதா அது இருந்துச்சு. ஆனா என்னோட நிலை முடங்கிப்போயிருச்சுங்கறத நான் சீக்கிரத்துல உணர்ந்துக்கிட்டேன், அதனால நான் சீக்கிரமா என்னோட இருதயத்துல தேவனைக் கூப்பிட்டேன். அப்பத்தான், கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு: “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்(லூக்கா 16:13). வேதாகமத்துலயிருந்து, கர்த்தராகிய இயேசுவை சோதிக்க சாத்தான் முயற்சித்த ஒரு சம்பவமும் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு: “மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:8-10). அதன் ஆடம்பரமான அலுவலக இடத்தயும் செழிப்பான வேலை சூழலையும் எனக்கு சுட்டிக்காட்டுவதன் மூலமா கம்பெனியோடு இருக்க தலைவர் என்னைய சோதிக்கலயா? சாத்தான் திரைக்குப் பின்னாடியிருந்து இதயெல்லாம் கையாளலயா? நான் தேவனையும் என்னோட கடமையயும் கைவிட்டு, அது தொடர்ந்து என்னை பயன்படுத்தவும் துஷ்பிரயோகம்பண்ணவும் அனுமதிக்கும்படிக்கு சாத்தான் அந்தஸ்தயும் செல்வத்தயும் பயன்படுத்தி என்னைய சோதிக்கவும் தூண்டவும் முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தான். சாத்தானோட தந்திரமான சூழ்ச்சிக்கு என்னால அடிபணிய முடியல.

அதுக்கப்புறமா, என்னோட விடுமுறைய இன்னும் மூணு மாசங்களா நீட்டிச்சேன். மூணு மாசங்கள் கிட்டத்தட்ட முடிஞ்சவுடனே, நான்: “என்னால இப்படி விடுப்பு கேட்டுக்கிட்டே இருக்க முடியாது. நான் அமைதியா என்னோட கடமையச் செய்யும்படிக்கு, இந்த கம்பெனியோடான உறவை நான் துண்டிக்க விரும்புனா, என்னோட எல்லா பங்குகளயும் நான் விற்கணும், ஆனா வருஷத்துக்கு ஒரு நாள் மட்டுந்தான் அத்தகைய விற்பனை அனுமதிக்கப்படுது. தலைவர் என்னோட பங்குகள விற்க அனுமதிக்கலேன்னா என்ன செய்யறது? அவர்கிட்ட இன்னும் என்னோட 1.5 மில்லியன் பங்கு மூலதனம் இருக்குது. அவர் அத என்கிட்ட திருப்பித் தரலேன்னா, நான் காசு இல்லாதவனா இருப்பேன். அந்த மூலதனத்த என்னோட இளம் வயசுலயே ரத்தத்தாலும், வியர்வையாலும், கண்ணீராலும் சம்பாதிச்சேன்!” அப்படின்னு நெனச்சேன். அந்த நேரத்துல, நான் நாள் முழுவதும் இதப் பத்தி நெனச்சு வருத்தப்படுவேன், அதோடு என்னோட கடமைய சரியா நிறைவேத்த முடியாம ரொம்ப வருத்தப்பட்டேன். அதனால, இந்தச் சிக்கல்லயிருந்து என்னைய விடுவிச்சுக்க ஒரு வழியைத் திறக்கும்படி அவரிடத்துல கேட்டு, நான் தேவனிடத்துல மௌனமா ஒரு ஜெபத்த ஏறெடுத்தேன்.

அதுக்கப்புறமா, என்னோட பங்குகள விற்பதப் பத்திக் கலந்து பேச தலைவர சந்திச்சேன், ஆனா அவர் என்னைய விலக விடல, அவர்: “இந்தக் கம்பெனிய விட்டு வெளியேற விரும்புனா, உங்களோட சில பங்குகள நீங்க இழக்க நேரிடும்” அப்படின்னு சொல்லி எனக்கு விஷயங்களக் கடினமாக்கினாரு. ஆயிரக்கணக்கான யுவான்கள இழக்குறத என்னால ஏத்துக்க முடியல. அந்தப் பணத்த சம்பாதிக்க நான் கடுமையா உழைச்சிருந்தேன்! அந்த நேரத்துல, சாத்தான் மறுபடியும் என்னைய சோதிக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தான்ங்கறத நான் உடனடியா உணர்ந்துக்கிட்டேன். தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் சிந்துச்சுப் பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தன்னிடம் இருந்த அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டவை என்றும், அது அவனுடைய சொந்த உழைப்பின் விளைவாக இல்லை என்றும் யோபு தன் இருதயத்தில் ஆழமாக நம்பினான். ஆகவே, இந்த ஆசீர்வாதங்கள் மூலதனமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவன் பார்க்கவில்லை. மாறாக, தனது முழு வல்லமையுடனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழியில் தனது ஜீவித கொள்கைகளை தொகுத்து வழங்கினான். அவன் தேவனுடைய ஆசீர்வாதங்களை நேசித்தான். அவற்றுக்காக நன்றி தெரிவித்தான். ஆனால் அவன் ஆசீர்வாதங்களால் ஈர்க்கப்படவில்லை. மேலும், அவற்றைவிட அதிகமானவற்றை அவன் தேடவில்லை. சொத்து மீதான அவனது அணுகுமுறை இதுதான். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அவன் எதையும் செய்யவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களின் பற்றாக்குறை அல்லது இழப்பால் கவலைப்படவில்லை அல்லது வேதனைப்படவில்லை. தேவனுடைய ஆசீர்வாதங்களால் அவன் பெருமளவில் மகிழ்ச்சியடையவில்லை. அவன் அடிக்கடி அனுபவித்த ஆசீர்வாதங்களின் காரணமாக தேவனுடைய வழியைப் புறக்கணிக்கவில்லை அல்லது தேவனுடைய கிருபையை மறந்துவிடவில்லை. யோபுவின் சொத்து மீதான அணுகுமுறை அவனது உண்மையான மனிதத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறது: முதலாவதாக, யோபு ஒரு பேராசை கொண்ட மனிதன் அல்ல. அவன் பொருள்மயமான ஜீவிதத்தை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவதாக, தேவன் தன்னிடம் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்வார் என்று யோபு ஒருபோதும் கவலைப்படவில்லை அல்லது அஞ்சவில்லை. இது தேவனுக்குக் கீழ்ப்படியும் மனநிலையாக இருந்தது. அதாவது, தேவன் அவனிடமிருந்து எப்போது எடுப்பார் அல்லது எடுப்பாரா இல்லையா என்பது குறித்து அவனுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் புகார்களும் இல்லை. அதற்கான காரணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேவனுடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய மட்டுமே முயன்றான். மூன்றாவதாக, அவனுடைய சொத்துக்கள் தனது சொந்த உழைப்பிலிருந்து வந்தவை என்று அவன் ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் அவை தேவனால் அவனுக்கு வழங்கப்பட்டன என்று நம்பினார். இதுவே தேவன் மீதான யோபுவின் நம்பிக்கையாக இருந்தது. இது அவனுடைய நம்பிக்கையின் அடையாளமாகும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). தேவனோட வார்த்தைகள், யோபு பெரும் செல்வத்த சேர்த்து வச்சிருந்தாலும், அவன் அத பொக்கிஷமா நினைக்கல. அதுக்குப் பதிலா, தேவனுக்கு கீழ்ப்படியவும் ஆராதிக்கவும் அவன் முக்கியத்துவம் கொடுத்தான். அதனால, அவன் தன்னோட எல்லா செல்வத்தயும் சொத்தையும் இழந்தப்போ, அவனால இன்னும் தேவனைப் போற்றவும் துதிக்கவும் முடிஞ்சுச்சு. யோபின் சம்பவம் என்னைய ரொம்பவே ஊக்கப்படுத்துவதா இருந்துச்சு. என்னோட செல்வத்தப் பற்றிப்பிடிச்சுக்கிட்டு இருந்தத நிறுத்திட்டு, அதுக்குப் பதிலா தேவனைத் திருப்திப்படுத்த, நான் யோபுவப் பின்பற்றணும்ங்கறது எனக்குத் தெரியும். என்னோட மனசுல தீர்மானிச்சதுக்கப்புறமா, 200,000 யுவான் மதிப்புள்ள பங்குகள விட்டுக்கொடுக்க ஒத்துக்கிட்டேன். ஆனா தலைவர் அது போதாதுன்னு நெனச்சுக்கிட்டு, அதிக பணத்த இழக்கும்படி கேட்டாரு. இவ்வளவு பணத்த விட்டு பிரிவத என்னால தாங்க முடியல, அதனால நான் அமைதியா தேவனிடத்துல ஜெபிச்சேன். அப்பத்தான், என்னையக் கட்டவும் கட்டுப்படுத்தவும் சாத்தான் பணத்தப் பயன்படுத்த முயற்சிக்குறான்ங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். என்னோட செல்வத்த என்னால பிரிய முடியலங்கற ஒரே காரணத்துக்காக சாத்தானோட சோதனைக்கு நான் அடிபணியக்கூடாது. நான் சாட்சியில உறுதியா நின்னு சாத்தான அவமானப்படுத்த வேண்டியிருந்துச்சு. அதுக்கப்புறமா, அவர் என்னைய நிறுவனத்த விட்டு வெளியேற அனுமதிக்கறதுக்கு முன்னாடி, பங்குகள்ல 500,000 யுவானுக்கு சமமான தொகைய நான் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்துச்சு. அப்போதுலயிருந்து, கடைசியா விசுவாசத்தப் பயிற்சி செய்யறதுலயும் என்னோட கடமைய செய்யுறதுலம் என்னால கவனம் செலுத்த முடிஞ்சுச்சு.

அதுக்கப்புறமா, ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுல ஒரு மாவட்டக் குழுச் செயலர் சிறையில அடைக்கப்பட்டதாவும் சிறைவாசத்தின் மன அழுத்தத்துனால மனதளவுல பாதிக்கப்புக்கு உள்ளானதாவும் நான் கேள்விப்பட்டேன். நான்: “புகழுக்காகவும் செல்வத்துக்காகவும் பாடுபடுவதன் கடுமையான விளைவுகள்தான் இவை” அப்படின்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன். நான் எப்படி வெகுமதிகளக் கொடுத்தேன், லஞ்சம் கொடுத்தும் வாங்கியும் இருந்தேன்னும், அந்தஸ்தப் பெறுறதுக்காக தரக்குறைவாவும் சீர்கேட்டுலயும் உழன்றுக்கிட்டு இருந்தேன்னும் நெனச்சுப் பாத்தேன். நான் கம்பெனிய விட்டு வெளியேறாம இருந்திருந்தா, கடைசியில அதே தலைவிதியத்தான் நானும் சந்திச்சிருப்பேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் புகழ் மற்றும் செல்வத்தின் கட்டுகள்லயிருந்து என்னைய விடுவிச்சுச்சு, சாத்தானோட சோதனையிலயிருந்து என்னைய விலக்கி வச்சுச்சு. என்னோட இருதயத்தின் ஆழத்துலயிருந்து தேவனோட கிருபைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நான் நன்றி சொன்னேன்.

இந்த வருஷங்கள்ல நான் தொடர்ந்து என்னோட கடமைய நிறைவேற்றி வர்றேன், அதோடு அடிக்கடி கூடிவந்து என்னோட சகோதர சகோதரிகளோடு தேவனோட வார்த்தைகள ஐக்கியங்கொள்ளுறேன். நான் சத்தியத்தப் புரிஞ்சுக்கிட்டு பல உலக விஷயங்களப் பத்திய நுண்ணறிவப் பெற்றிருக்குறேன். நான் அடிக்கடி தேவனோட வார்த்தைகள சிந்துச்சுப் பார்ப்பேன், அவை சொல்லுது: “ஜனங்களின் முழு வாழ்க்கையும் தேவனின் கரத்தில் இருக்கிறது, தேவனுக்கு முன்பாக அவர்களுடைய தீர்மானம் இல்லாமல் இருந்தால், மனிதனின் இந்த வெறுமையான உலகத்தில் யார்தான் வீணாக வாழ விரும்புவார்கள்? எதற்காக உபத்தரவப்பட வேண்டும். உள்ளே வருவதும் வெளியே ஓடிச் செல்வதுமான இந்த உலகத்தில் தேவனுக்காக அவர்கள் எதையும் செய்யாவிட்டால், அவர்களுடைய முழு வாழ்க்கையும் வீணாகப் போய்விடாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மறைபொருட்களைப் பற்றிய விளக்கங்கள், அத்தியாயம் 39”). உண்மையிலயே, வாழ்க்கை ரொம்ப குறுகியது. நான் என்னோட வாழ்நாள்ல பாதிக்கும் மேல சாத்தானோட ஆதிக்கத்துல வாழ்ந்துட்டேன். நான் செல்வத்தயும் புகழையும் தேடினேன், மத்தவங்களவிட சிறந்து விளங்க முயற்சி செஞ்சேன். சாத்தான் என்னைய பயன்படுத்தி துஷ்பிரயோகம் செஞ்சான், நான் வெறுமையானதும், பரிதாபகரமானதும், அர்த்தமில்லாததுமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்தேன். தேவனோட இரக்கமும் கிருபையுந்தான் அவரோட கடைசி நாட்களின் இரட்சிப்பப் பெற்றுக்கவும், அதோடு அவருக்காக என்னைய அர்ப்பணிக்கவும், ஒரு சிருஷ்டியா என்னோட கடமையைச் செய்யவும் எனக்கு உதவுச்சு. தேவனுக்காக இல்லேன்னா, என்னோட வாழ்நாள் முழுசையும் நான் வீணடிச்சிருப்பேன். திருச்சபையில என்னோட கடமையைச் செய்யுறதால, ஒரு காலத்துல எனக்கு இருந்த அதே அந்தஸ்தும் செல்வமும் இல்லாம இருக்கலாம், ஆனா நான் சுதந்திரமும், விடுதலையுமான ஒரு வாழ்க்கைய வாழுறேன், என்னோட மனசாட்சி நிம்மதியா இருக்குது. நான் கொஞ்சம் மனித சாயல்ல வாழ்ந்திருப்பதப் போல உணருறேன். இதுக்கெல்லாம் காரணம் தேவன் என்னைய சரியான பாதையில கூட்டிட்டுப் போறதுதான். தேவனோட அன்புக்கும் இரட்சிப்புக்கும் நான் நன்றி சொல்லுறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சரியான தெரிவு

நான் ஒரு தொலைதூர மலைப்பகுதியில இருக்குற கிராமத்துல, பல தலைமுறைகளா விவசாயிகளா இருக்குற குடும்பத்துல பிறந்தேன். நான் பள்ளிக்கூடத்துல...

பணத்திற்கு அடிமைப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு

ஜிங்வூ, சீனா என்னுடைய இளம் வயதில், என்னுடைய குடும்பம் ஏழையாக இருந்தது, மேலும், என்னுடைய பெற்றோர்களால் என்னுடைய படிப்பிற்குப் பணம் செலுத்த...

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 2)

டான் சுன், இந்தோனேஷியா நான் மீண்டும் சோதனையில் விழுந்து, ஜனங்கள் ஏன் பணத்திற்காக கடினமாக உழைக்கின்றனர் என்பதற்கான மூலக் காரணத்தைக்...

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

நான் ஒரு நெரிசலான தெருவில்நிற்கிறேன், கார்களின் கடுமையான சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருக்கேன், பாதசாரிகள் விரைந்து செல்வதைப் பார்க்கிறேன்,...