இரட்சகர் வரும்போது மனுக்குலத்த எப்படி இரட்சிப்பாரு?
இரட்சகரப் பத்தி நாம பேசும்போது எல்லா விசுவாசிகளும் கடைசி நாட்கள்ல, அவரு மனுக்குலத்த இரட்சிக்கப் பூமிக்கு வருவது நிச்சயம்னு ஒத்துக்கறாங்க. பல தீர்க்கதரிசிகளும் கடைசி நாட்கள்ல இரட்சகர் வருவார்னு சொல்லியிருக்காங்க. அப்படின்னா யாரு இரட்சகர்? வெவ்வேறு சபைப் பிரிவுகள் வெவ்வேறு விளக்கங்கள வச்சிருக்காங்க, அதோட வெவ்வேறு மதங்களும் அவர பத்தி வித்தியாசமான விஷயங்கள சொல்லுதுங்க. உண்மையான இரட்சகர் யாரு? வானங்களயும் பூமியயும் எல்லாத்தயும் படைச்ச கர்த்தர்தான் உண்மையான இரட்சகர், அவர் தான் ஒன்றான மெய்த்தேவன், சிருஷ்டிகர். எல்லாத்தையும் படைச்ச கர்த்தர் மட்டுந்தான் ஒன்றான மெய்த் தேவன், அதோட மாம்சத்தில் இருக்கிற மெய்த்தேவன் மட்டுந்தான் மனுக்குலத்த இரட்சிக்கக்கூடிய இரட்சகர். எல்லாத்தயும் படச்சது மெய்த்தேவன் இல்லைனா, அப்போ அவரு சிருஷ்டிகர் இல்ல, அவரால மனுக்குலத்த இரட்சிக்க முடியாது. இதுல நாம தெளிவா இருக்கணும். ஞாபகம் வச்சுக்கோங்க! ஒரே ஒரு மெய்த்தேவன் தான் இருக்காரு, தேவனின் மனுவுரு மட்டுந்தான் இரட்சகர். மாம்சத்திலே இருக்கிற மெய்த்தேவன் மட்டுந்தான் சத்தியத்த வெளிப்படுத்தி முழு மனுகுலத்தயும் இரட்சிக்கவும், நம்மள அழகான இடத்துக்கு கூட்டிட்டுப் போகவும் முடியும். நிறைய பொய்யான தேவர்கள் இருக்காங்க, அதனால அத எல்லாத்தயும் பட்டியலிட அவசியமில்ல, ஆனா ஒரே ஒரு மெய் இரட்சகர் தான் இருக்காரு. அப்படின்னா, உண்மையில் அந்த இரட்சகர் யாரு? 2000 வருஷங்களுக்கு முன்னாடி கர்த்தராகிய இயேசு வந்து சொன்னாரு, “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத்தேயு 4:17). அவரு அதுக்கப்புறம் மனுஷனோட பாவங்கள போக்க சிலுவையில அறையப்பட்டாரு. அவரு மீட்பின் கிரியைய முடிச்சுட்டு கிருபையின் காலத்த தொடங்கி வெச்சாரு, மக்கள் தேவனுக்கு முன்னாடி வர, ஜெபிக்க, தேவனோடு தொடர்பு வச்சுக்க, இப்ப வரைக்கும் தேவனப் பின்பற்ற அனுமதிச்சாரு. இது கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் கிரியை. கர்த்தராகிய இயேசு மனுஷங்களுக்குள்ள வந்து கிரியை செஞ்ச இரட்சகர். இப்ப வரைக்கும் நாம பார்த்ததோட அடிப்படையில, யாரு இரட்சகர்? தனிப்பட்ட முறையில மனுக்குலத்த இரட்சிக்க வந்த மாம்சத்துல இருக்கிற தேவன். கர்த்தராகிய இயேசு ஜனங்களோட பாவங்களை மன்னிச்சு மீட்பின் கிரியைய செஞ்சாரு, ஆனாலும் இன்னும் ஜனங்க தொடர்ந்து பாவம் செஞ்சு உண்மையான மனந்திரும்புதல அடைய முடியல. தேவனோட இரட்சிப்புங்கறது ஜனங்கள உண்மையாவே மனந்திரும்ப வெக்கத் தான், நம்ம பாவங்கள மட்டும் மன்னிச்சு, அதோடு நிறுத்தறதில்ல. அதனாலதான் கர்த்தராகிய இயேசு முழுசா மனுக்குலத்த இரட்சிக்க கடைசி நாட்கள்ல திரும்பிவருவேன்னு வாக்குப் பண்ணாரு. இரட்சகர் இப்போ திரும்பி வந்து நம்மிடையே இருக்காரு. மனுஷன சுத்திகரிக்கவும் பாவத்திலிருந்து இரட்சிக்கவும் அவரு பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு, அதனால நாம தேவன நோக்கி முழுசா திரும்பி, அவரால ஆதாயப்படுத்தப்பட முடியும், அதோட அவர் நமக்காக ஆயத்தம் பண்ணி வச்சிருக்கிற அழகான இடமான அவரோட ராஜ்யத்திற்குள்ள பிரவேசிக்க முடியும். இப்போ தேவனோட சத்தத்தைக் கேட்ட ஜனங்க உலகம் முழுசும் இருக்காங்க, அவங்க எல்லாம் அவரோட சிங்காசனத்துக்கு முன்னாடி உயர்த்தப்பட்டுருக்காங்க. அவங்க எல்லாரும் தேவனால நியாயந்தீர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு அழகான சாட்சிய கொண்டிருக்காங்க. அவங்க தேவனால பரிபூரணப்படுத்தப்பட்ட ஜெயங்கொள்ளுகிறவர்களா இருக்காங்க. துரதிஷ்டவசமா தேவனோட சத்தத்தக் கேக்காத பலபேர் இன்னும் இருக்காங்க, அவங்க இன்னும் தேவனோட தோன்றுதலயும் கிரியையும் பாக்கல. அதனாலதான் இரட்சகர் மனுக்குலத்த எப்படி இரட்சிக்கிறாருங்கறதுக்கு நாங்க இப்போ சாட்சியமளிக்கிறோம்.
நாம இரட்சிப்பப் பத்தி பேசும்போது, சிலருக்கு இந்தத் தெளிவில்லாத யோசன இருக்கு, அதாவது தேவன் திடீர்னு வானத்திலிருந்து இறங்கி வந்து, பேரழிவுகள்ல தப்பிச்சு பரலோகம் போக விசுவாசிகள நேரடியாக் கூட்டிட்டு போவாருன்னு. இது ஒரு மனித கருத்து அப்பறம் கற்பனை, ஆனா அது உண்மையானதில்ல. இன்னொரு முக்கியமான பிரச்சனை இருக்கு. எல்லா ஜனங்களும் சாத்தானால ஆழமா சீர்கெடுக்கப்பட்டு சாத்தானுக்குரிய சுபாவத்தோட இருக்காங்க. எல்லாரும் பாவத்துலயும், அசுத்தமும் சீர்கேடும் நிறஞ்சும் வாழ்றாங்க. நாம நேரடியா எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? நாம பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியானவங்களா? ஒவ்வொருத்தரும் இந்தக் கருத்தப் பிடிச்சுக்கிட்டு, இரட்சகர் இறங்கிவர காத்திருந்தா, அது வீணா முடிஞ்சு போயிடும். அவங்க அழுது பல்லக் கடிச்சு பேரழிவுகள்ல விழுவாங்க. அப்போ இரட்சகர் வரும்போது மனுக்குலத்த எப்படி இரட்சிப்பாரு? முதல்ல, அவர் நம்மள பாவத்திலிருந்து இரட்சிக்கறாரு. கர்த்தராகிய இயேசு நம் பாவங்கள் மன்னிக்கப்படும்படி மீட்பின் கிரியைய மட்டும் செஞ்சிருக்காரு, ஆனா அந்த மன்னிப்பு இருந்தாலும், நம்மளால பாவம் செய்யாம இருக்க முடியல. நாம பாவத்தின் பிடியில இருந்து தப்பிக்கல. இது மறுக்க முடியாத உண்மை. தேவன் பரிசுத்தமானவர் நீதியுள்ளவர். அவர் ஒரு பரிசுத்த இடத்தில தோன்றி, அவரையே அசுத்தமான இடத்திலிருந்து மறச்சுக்கறாரு. பரிசுத்தமில்லாம இருந்துட்டு, ஜனங்களால கர்த்தரத் தரிசிக்க முடியாது, அப்படின்னா பாவத்துல வாழ்ற நாம எப்படி தேவனோட ராஜ்யத்துல பிரவேசிக்க தகுதியானவங்களா இருக்க முடியும்? அதனால்தான் தேவன் கடைசி நாட்கள்ல மீண்டும் மனுவுரு எடுத்து நியாயத்தீர்ப்பு அப்புறம் சிட்சையின் கிரியையும் செஞ்சு ஜனங்களை முழுசா சுத்திகரித்து பாவத்தில இருந்தும், சாத்தான்கிட்ட இருந்தும் இரட்சிக்க சத்தியத்த வெளிப்படுத்தறாரு. அது சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றது மாதிரியே இருக்கு: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).
இரட்சகர் ஏற்கனவே வந்துட்டாரு. கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவன் மனுவுருவா மாம்சத்தில திரும்பி வந்துருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவன் தேவனோட வீட்ல இருந்து தொடங்கி, நியாத்தீர்ப்பின் கிரியைய செஞ்சு, மனுக்குலத்த சுத்திகரிக்கிற, இரட்சிக்கிற எல்லா சத்தியங்களயும் வெளிப்படுத்தியிருக்காரு. எவ்ளோ பெரியவங்களா, இல்ல புகழ் பெற்றவங்களா இருந்தாகூட, மாம்சத்தில இருக்கிற தேவனத் தவிர வேற யாராலயும் சத்தியத்த வெளிப்படுத்தி மனுக்குலத்த இரட்சிக்க முடியாது. பூமிக்கு வருகிற தேவனோட மனுவுரு தான் கிறிஸ்து, நம்மோட இரட்சகர். “கிறிஸ்து” ன்னா என்ன? அப்படின்னா இரட்சகர்னு அர்த்தம். அப்படின்னா, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்களின் கிறிஸ்து, மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் நியாயத்தீர்ப்பின் கிரியைய எப்படி செய்றாரு?
சர்வவல்லமையுள்ள தேவன் நமக்கு சொல்றாரு: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).
கடைசி நாட்கள்ல, நம்ம பாவ சுபாவத்த அம்பலப்படுத்த சத்தியத்த வெளிப்படுத்தி தேவன் மனுக்குலத்த இரட்சிக்கிறாரு, அதனால நாம நம்மோட பாவத்தோட வேரையும், சாத்தானால ஆன நம்மோட சீர்கேட்டோட உண்மையயும் பாக்க முடியுது. இத ஒருத்தர் புரிஞ்சிட்டவுடனே, அவங்க உண்மையான வருத்தத்த அடையவும், அவங்களயே அருவருக்கவும் வெறுக்கவும் முடியும். அப்புறம் அவங்க உண்மையாவே மனந்திரும்ப ஆரம்பிக்கலாம், அதோட அவங்க சத்தியத்தப் புரிஞ்சுக்கவும் அடையவும் மட்டும் ஏங்குவாங்க. அவங்க சத்தியத்த கடைப்பிடிக்க முடிஞ்ச உடனே, அவங்க தேவனுக்குக் கீழ்ப்படியறது எப்படின்னு கத்துக்கிட்டாங்க. அவங்க சத்தியத்தைப் புரிஞ்சுக்கறாங்க, தேவனோட வார்த்தைகளின்படியும் சத்தியத்தின்படியும் வாழ்றாங்க, அதனால அவங்களோட வாழ்க்கையோட மனநிலை மாறத் தொடங்குது. தொடர்ந்து தேவனோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்ப அனுபவிக்கிறதனால, கடைசில அவங்க அவங்களோட சீர்கேடான மனநிலையிலிருந்து சுத்திகரிக்கப்படறாங்க. இவங்க தான் முழுசா இரட்சிக்கப்பட்டவங்க, இவங்க மனுஷனுக்காகத் தேவன் ஆயத்தப்படுத்தி வெச்சிருக்கிற அழகான இலக்குக்குள்ள பிரவேசிக்க முடியும். அதனாலதான் நாம சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பயும் சிட்சயயும் ஏத்துக்கணும். நாம உண்மையா மனந்திரும்பணும், உண்மையா மாறணும், தேவனுக்கு கீழ்ப்படியற, அவர ஆராதிக்கிற ஜனங்களா மாறணும். இது மட்டுந்தான் உண்மையான இரட்சிப்பு, இது மட்டுந்தான் அவரோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க நம்மள தகுதியாக்குது.
இப்போ ஒரு விஷயம் நமக்கு உறுதியாத் தெளிவாயிடுச்சு. தேவன் மட்டுந்தான், சிருஷ்டிகர் மட்டும்தான் மனுக்குலத்த இரட்சிச்சு, நம்மள அந்த அழகான இலக்குக்குள்ள கொண்டு வரமுடியும். இந்த தேவன், இந்த சிருஷ்டிகர் இந்த முழுநேரமும் இன்னைக்கு வரைக்கும், மனுக்குலத்த வழிநடத்தவும் இரட்சிக்கவும் பேசிட்டும் கிரியை செஞ்சுட்டும் இருக்காரு. முழு வேதாகமமும் தேவனோட தோற்றத்துக்கும் கிரியைக்குமான சாட்சி. அது வானமும் பூமியும் எல்லா காரியங்களும் தேவனால சிருஷ்டிக்கப்பட்டதுன்னு சாட்சியக் கொடுத்து, சிருஷ்டிகரோட தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சியமளிக்குது. நம்ம மத்தியில வருகிற இந்த ஒரு மெய்த்தேவனுடைய மனுவுரு மட்டும்தான் இரட்சகர். அவரால தான் மனுக்குலத்த இரட்சிக்க முடியும். இந்த இரட்சகர் மாம்சத்தில தேவனா இருக்கணும், சத்தியத்த வெளிப்படுத்தணும். இவர்தான் ஒன்றான மெய் இரட்சகர். சத்தியத்த வெளிப்படுத்த முடியாத, பெயரளவில் இரட்சகர்னு அழைக்கப்படற எவரும் ஜனங்கள ஏமாத்துற பொல்லாத ஆவிதான். நெறைய பொய்யான தேவர்கள் இருக்காங்க, புகழச்சியா பேசப்படற பிரபலங்களப் போல, அவங்க செத்ததுக்கப்புறம் பேரரசர்களால தேவர்களா நியமிக்கப்பட்டிருக்காங்க. இது உண்மையில நியாயமா இருக்க முடியுமா? இந்த ஜனங்க வெறும் சீர்கேடான மனுஷங்கமட்டுந்தான், அவங்க சாகும்போது நரகத்துக்குப் போறாங்க, அபப்டின்னா அவங்க யார இரட்சிக்க முடியும்? அவங்களால அவங்களையே இரட்சிக்க முடியல, தேவன் அவங்கள அவங்களோட பாவத்துக்காக தண்டிக்கறாரு. அப்படின்னா அவங்களால மனுக்குலத்த இரட்சிக்க முடியுமா? அந்தப் பேரரசர்கள் எல்லாரும் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே செத்துட்டாங்க, அவங்க எல்லாரும் இப்போ நரகத்துல இருக்காங்க. அவங்க நியமிச்ச பொய்த் தேவர்களால உண்மையில மனுக்குலத்த இரட்சிக்க முடியாது. எப்படி இருந்தாலும், பொய்யான தேவன நம்பாதீங்க. அது முட்டாள்தனம் அப்புறம் அறியாமை, அது உங்கள நிச்சயமா அழிச்சுரும். இரட்சகர் தேவனோட மனுவுருவா இருக்கணும், அவர் சத்தியத்த வெளிப்படுத்தணுங்கறத ஞாபகம் வச்சுக்கோங்க. இது தேவன்கிட்ட இருந்து மட்டுந்தான் வர முடியும். சத்தியத்த வெளிப்படுத்த முடியாத இரட்சகர்னு அழைக்கப்படற யாரானாலும், அவங்க பொய்யாவும், ஜனங்களத் தவறா வழிநடத்தறவங்களாவும் தான் இருப்பாங்க. மாம்சத்தில் தேவனா இல்லாம, தங்கள தேவன்னு சொல்லிக்கற யாரானாலும் அந்திக்கிறிஸ்துவாவும் பொல்லாத ஆவியுமாத்தான் இருப்பாங்க. அந்த ஜனங்க இரட்சகர்கள் இல்ல, அவங்களால மனுக்குலத்த இரட்சிக்க முடியாது. சாத்தானும் எல்லாப் பொல்லாத ஆவிகளும் தேவனப் போல பாசாங்கு செய்யுது, ஆனாலும் அதுங்க அப்பவும் தங்கள எல்லாத்தயும் சிருஷ்டித்தவர்னு சொல்லத் துணியாதுங்க, குறிப்பா அதுங்க மனுஷன சிருஷ்டித்ததா சொல்லத் துணியாதுங்க. அதோட மனுஷனோட தலைவிதிக்கு அதுங்களே பொறுப்பெடுத்துக்க முடியும்னு சொல்லத் துணியாதுங்க. ஜனங்கள வழிதவறச் செய்றதுக்கும் அவங்களோட நம்பிக்கைய பெறுவதற்கும் அதுங்க அங்குமிங்கும் சில அறிகுறிகளயும் அற்புதங்களையும் சும்மா காட்டுங்க. இந்த பொய்யானத் தேவர்கள் பொல்லாத ஆவிகள் எல்லாம் ஜனங்களத் தவறா வழிநடத்தற, சீர்கெடுக்கிற பிசாசுகள், பேய்கள். அதுங்க ஒன்றான மெய்த்தேவனான, சிருஷ்டிகருக்கு எதிரிகள், அவர்கிட்டயிருந்து மனுக்குலத்தப் பறிக்க முயற்சி பண்ணதுங்க. அதனாலதான் இந்தப் பிசாசுகளும் பொல்லாத ஆவிகள் எல்லாம் தேவனோட கசப்பான எதிரிகள், அதனாலதான் அவரால வெறுக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் இருக்குதுங்க. இந்தப் பிசாசுகளயும் பொல்லாத ஆவிகளயும் வணங்கற ஆராதிக்கிற எல்லாரும் தேவனால தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்: நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”).
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?