இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம்

ஆகஸ்ட் 20, 2021

நமது அன்றாட ஜீவியத்தில், தேவனுக்கு நெருக்கமாகி, தேவனுடன் உண்மையான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, நாம் தேவனுடன் ஒரு சரியான உறவைப் பராமரிக்கவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும், சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும், யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும். ஆகையால், நம்மால் எப்படி சரியாக தேவனுக்கு நெருக்கமாக முடியும்? கீழேயுள்ள நான்கு காரியங்களை மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடனான நமது உறவு நிச்சயமாக நெருக்கமாகிவிடும்.

1. நேர்மையான இருதயத்துடன் தேவனிடம் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுங்கள்

ஜெபம் என்பது நாம் தேவனுடன் தொடர்புகொள்ளும் ஒரு வழிமுறையாகும். ஜெபத்தின் மூலம், நமது இருதயங்கள் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கவும், தேவனுடைய வார்த்தையை தியானிக்கவும், தேவனுடைய சித்தத்தை நாடவும், தேவனுடன் ஒரு சரியான உறவை ஏற்படுத்தவும் முடியும். ஆனால் நாம் வாழ்க்கையில் வேலையிலோ அல்லது வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், நாம் அடிக்கடி ஜெபத்தில் ஏவுதல்களைச் செய்ய முடியும், மேலும் நாம் சில கவனக்குறைவான வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் தேவனை அக்கறையின்றி நடத்துகிறோம். நாம் காலையில் முதல் காரியத்தில் மும்முரமாக இருக்கும்போது, உதாரணமாக, வேலைக்குச் செல்லும்போது அல்லது வேறு எதிலாவது மும்முரமாக இருக்கும்போது, நாம் அவசர அவசரமாக ஜெபம் செய்கிறோம்: “ஓ தேவனே! இன்றைய வேலையை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன், என் குழந்தைகளையும் என் பெற்றோர்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். நான் சகலத்தையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன், என்னை ஆசீர்வதித்து என்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆமென்!” சில தொடர்பில்லாத வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் தேவனை அக்கறையின்றி நடத்துகிறோம். நமது இருதயங்கள் அமைதியாகவும் இருப்பதில்லை, நாம் தேவனுடன் உண்மையான தொடர்பும் கொண்டிருப்பதில்லை. சில வேளைகளில், நாம் இனிமையாக ஒலிக்கும் சில வார்த்தைகளையும், சில வெறுமையான, பெருமையான வார்த்தைகளையும் தேவனிடம் ஜெபிக்கிறோம், மேலும் நமது இருதயங்களில் இருப்பதை நாம் தேவனிடம் சொல்வதில்லை. அல்லது சில நேரங்களில், நாம் ஜெபிக்கும்போது, சில வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கிறோம், அதே போல ஒவ்வொரு முறையும் பழைய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்கிறோம், மேலும் இது முற்றிலும் ஒரு மதச் சடங்கு ஜெபமாகிறது. இது போன்ற பல ஜெபங்கள் நமது ஜீவியங்களில் சொல்லப்படுகின்றன, அதாவது விதிகளைப் பற்றிக்கொண்டிருக்கும் ஜெபங்கள் மற்றும் தேவனுக்காக நமது இருதயங்களைத் திறக்காத அல்லது தேவனுடைய சித்தத்தை நாடாத ஜெபங்கள். நாம் எந்த அர்த்தமும் இல்லாமல் ஜெபங்களைச் சொல்லும்போது தேவன் அதை வெறுக்கிறார், ஏனென்றால் இவ்வகையான ஜெபமானது வெளிப்புற தோற்றம் மற்றும் மதச் சடங்குகளுடன் மட்டுமே தொடர்புடையதாக இருக்கிறது, மேலும் நமது ஆவியில் தேவனுடன் உண்மையான தொடர்பு இல்லை. இதுபோல ஜெபம் செய்யும் ஜனங்கள் தேவனை அக்கறையின்றி நடத்துகின்றனர் மற்றும் தேவனை வஞ்சிக்கின்றனர். ஆகையால், இது போன்ற ஜெபங்கள் தேவனால் கேட்கப்படுவதில்லை, மேலும் இவ்விதமாக ஜெபிக்கும் ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவதற்கு மிகவும் கடினமாகிவிடுகிறது. அவர்கள் இது போல ஜெபிக்கும்போது, அவர்களால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிவதில்லை, அவர்களுடைய ஆவிகள் இருளாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன, மேலும் தேவனுடனான அவர்களுடைய உறவு மேலும் மேலும் தொலைவாகிவிடுகிறது.

கர்த்தராகிய இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்(யோவான் 4:24). தேவனே வானத்தையும் பூமியையும் நிரப்புகிற சிருஷ்டிகர். அவர் எல்லா நேரங்களிலும் நமது அருகில் இருந்து, நமது ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், ஒவ்வொரு எண்ணத்தையும் கருத்தையும் கண்காணிக்கிறார். நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது, நாம் தேவனை ஆராதிக்கிறோம், மேலும் நாம் ஒரு நேர்மையான இருதயத்துடன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும். ஆகையால், நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது, நாம் தேவனுக்குப் பயப்படும் இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும், தேவனிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும், நமது நிஜ நிலைகளையும், நமது சிரமங்களையும், நமது கஷ்டங்களையும் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவந்து அவற்றைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டும், நாம் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நடைமுறைப் பாதையை நாட வேண்டும், ஏனென்றால் இவ்விதமாக மட்டுமே நமது ஜெபங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்திருக்கும். உதாரணமாக, நாம் வாழ்க்கையில் சில சிரமங்களை எதிர்கொள்கிறோம், அல்லது நாம் தொடர்ந்து பாவம் செய்து பாவத்தை அறிக்கை செய்யும் சூழ்நிலையில் நாம் வாழ்வதைப் பார்க்கிறோம், மேலும் நாம் சித்தரவதைப்படுவதாக உணர்கிறோம். ஆகையால், நாம் தேவனிடம் நமது இருதயங்களைத் திறந்து, இப்பிரச்சனைகளைப் பற்றி தேவனிடம் சொல்லி தேவனுடைய சித்தத்தை நாடுகிறோம், தேவன் நமது நேர்மையைக் கண்டு அவர் நம்மை ஏவுவார். அவர் நமக்கு விசுவாசத்தைக் கொடுப்பார் அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள அவர் நமக்கு அறிவூட்டுவார். இவ்வாறு, நாம் சத்தியத்தைப் புரிந்துகொண்டு முன்னோக்கிச் செல்ல ஒரு வழியைக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, நமது ஜெபங்கள் விதிகளை மட்டுமே பற்றிக்கொண்டு வெறும் சம்பிரதாயமாக பேசும்போது, அல்லது நாம் பெருமிதமாகவோ அல்லது வெறுமையாகவோ பேசும்போது, மற்றும் தேவனுடன் உண்மையான தொடர்பு கொண்டிருக்காத போது, நாம் இவ்விதமாக ஜெபிக்கலாம்: “ஓ தேவனே! நான் முன்பு ஜெபித்தபோது, நான் உம்மை அக்கறையின்றி நடத்திக் கொண்டிருந்தேன். நான் சொன்ன அனைத்தும் உம்மை வஞ்சிப்பதற்காக சொன்னவை, மேலும் நான் உம்மிடம் உண்மையாகவே பேசவில்லை; நான் உமக்கு மிகவும் கடன்ப்பட்டவனாக உணர்கிறேன். இந்நாள் முதல், நான் என் இருதயத்தில் ஜெபம் செய்ய விரும்புகிறேன். நான் என் இருதயத்தில் என்ன நினைக்கிறேனோ அதையே நான் உம்மிடம் சொல்வேன், மேலும் நான் உம்மை நேர்மையான இருதயத்துடன் ஆராதிப்பேன், உமது வழிகாட்டுதலைக் கேட்பேன். நமது இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் தேவனிடம் இதைத் திறக்கும்போது, நமது இருதயங்கள் அசைக்கப்படுகின்றன. பின்னர் நாம் தேவனுக்கு எதிராக எவ்வளவு கலகம் செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்கிறோம், மேலும் தேவனிடம் உண்மையாக மனந்திரும்பவும் மற்றும் அவரிடம் உண்மையாக பேசவும் விரும்புகிறோம். இந்த நேரத்தில், நாம் அவருடன் முகமுகமாகப் பேசுவது போல, தேவனுடனான நமது உறவு மிகவும் நெருக்கமாக இருப்பதை நாம் உணர்வோம். இதுதான் தேவனிடம் நம் இருதயங்களைத் திறப்பதனால் கிடைக்கும் பலனாகும்.

தேவனிடம் நமது இருதயங்களைத் திறப்பதற்கும், நாம் அவரிடம் எவ்வளவு சொல்கிறோம் என்பதற்கும் அல்லது நாம் கவர்ச்சியான வார்த்தைகளையோ அல்லது கவர்ந்திழுக்கும் மொழியையோ நாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் தேவனிடம் நமது இருதயங்களைத் திறந்து, நமது உண்மையான நிலையைப் பற்றி அவரிடம் சொல்லி, அவருடைய வழிகாட்டுதலையும் அறிவூட்டுதலையும் நாடும் வரை, நாம் சில எளிய வார்த்தைகளைச் சொன்னாலும் தேவன் நமக்குச் செவிமடுப்ப்பார். நாம் இவ்விதமாக தேவனிடம் அடிக்கடி நெருங்கும்போது, அது கூடுகைகளிலும் அல்லது ஆவிக்குரிய ஆராதனைகளிலும் அல்லது தெருவில் நடக்கும்போதும் அல்லது பேருந்தில் அல்லது வேலையில் உட்கார்ந்திருக்கும்போதும், நமது இருதயங்கள் எப்போதும் ஜெபத்தில் அமைதியாக தேவனிடத்தில் திறக்கும். அதை அறியாமலேயே, நமது இருதயங்கள் தேவனுக்கு முன்பாக இன்னும் அதிகமாக அமைதியாகிவிடும், தேவனுடைய சித்தத்தை நாம் அதிகமாக புரிந்துகொள்வோம், மேலும் நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, தேவனை திருப்திப்படுத்த சத்தியத்தை எப்படி கடைப்பிடிப்பது என்பதை நாம் அறிந்துகொள்வோம். இவ்வாறு, தேவனுடனான நமது உறவு மிகவும் இயல்பாகிவிடும்.

2. தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவற்றை உங்கள் இருதயத்தில் தியானிக்கும்போது, அவற்றின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்

நாம் ஆவிக்குரிய ஆராதனைகளை நடத்துகிறோம், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கிறோம். இரண்டும் நல்ல முடிவுகளை அடையும் விதத்திலும், தேவனுடனான நமது உறவை நெருக்கமாக்கும் விதத்திலும் தேவனுடைய வார்த்தைகளை நாம் எவ்வாறு வாசிக்கலாம்? தேவனின் வார்த்தை கூறுகிறது: “மக்கள் தங்கள் இருதயத்தால் தேவனுடைய ஆவியைத் தொடுவதே அவர்கள் தேவனில் விசுவாசம் வைப்பதற்கும், அவரை நேசிப்பதற்கும், அவரைத் திருப்திப்படுத்துவதற்குமான வழியாகும். தேவனுடைய திருப்தியைப் பெற்று, தங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளோடு ஐக்கியப்படுத்தி தேவனுடைய ஆவியின் ஏவுதலை பெறுவார்கள்(“தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்”). நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் அவற்றை தியானித்து, நமது இருதயத்தில் தேட வேண்டும், நாம் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற வேண்டும், மேலும் தேவனுடைய சித்தத்தையும் அவர் நம்மிடம் கோருவதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன. இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதன் மூலம் மட்டுமே, நமது முயற்சிகள் பலனளிக்கும், மேலும் நாம் தேவனை நெருங்குவோம். நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் உண்மையில் கவனம் செலுத்தாமல் அவற்றின் மீது ஒரு மேலோட்டமான பார்வையை மட்டுமே செலுத்தியிருந்தால், நம்மை பகட்டாக காட்டிக்கொள்ள சில எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்துகொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நாம் அவருடைய வார்த்தைகளை எவ்வளவு வாசித்தாலும், நாம் அவருடைய சித்தத்திற்கு இணங்கவும் மாட்டோம், தேவனுடன் ஒரு சரியான உறவை ஏற்படுத்தவும் திறனற்றவர்களாக இருப்போம்.

ஆகையால், நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் நமது இதயங்களை அமைதிப்படுத்தி, தேவன் ஏன் இதுபோன்ற காரியங்களைச் சொல்கிறார், தேவனுடைய சித்தம் என்ன மற்றும் இதுபோன்ற காரியங்களைச் சொல்வதன் மூலம் தேவன் என்ன முடிவுகளை அடைய விரும்புகிறார் என்று சிந்திக்க நமது இருதயங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்விதமாக அவருடைய வார்த்தைகளை ஆழமாக சிந்திப்பதன் மூலம் மட்டுமே நாம் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், அவருடைய இருதயத்திற்கு அதிகப் பிரியமுள்ளவர்களாவும் இருக்க முடியும், மேலும் தேவனுடனான நமது உறவு பெருகிய முறையில் இயல்பாகிவிடும். உதாரணமாக, கர்த்தராகிய இயேசு சொல்வதை நாம் பார்ப்போம்: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்(மத்தேயு 18:3). இந்த வசனத்தின் மேலோட்டமான அர்த்தத்தை நம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும், நாம் நேர்மையானவர்களாக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆனால் ஒரு நேர்மையான நபராக இருப்பதன் முக்கியத்துவம், தேவன் ஏன் நேர்மையானவர்களை நேசிக்கிறார் மற்றும் ஒரு நேர்மையான நபராக மாறுவது எப்படி போன்ற பிரச்சினைகள் நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய பிரச்சினைகளாகும். ஜெபம்-வாசித்தல் மற்றும் தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பதன் மூலம், தேவனுடைய சாராம்சம் உண்மையுள்ளது என்பதையும், தேவன் சொல்வதோ அல்லது செய்வதோ பொய்யல்ல அல்லது வஞ்சனையல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்வோம், ஆகையால் தேவன் நேர்மையான ஜனங்களை நேசிக்கிறார் மற்றும் வஞ்சகமான ஜனங்களை வெறுக்கிறார். நாம் நேர்மையான ஜனங்களாக வேண்டும் என்பதையே தேவன் கோருகிறார், ஏனென்றால் தேவனுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப நேர்மையான ஜனங்களாவதன் மூலம் மட்டுமே நாம் தேவனால் அவருடைய ராஜ்யத்திற்குள் வழிநடத்தப்பட முடியும். நாம் எப்படி சரியாக நேர்மையானவர்களாக முடியும்? முதலாவதாக, நாம் பொய்கள் சொல்லக்கூடாது, ஆனால் நாம் தூய்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் மற்றும் நமது இருதயங்களில் உள்ளதைச் சொல்ல வேண்டும்; இரண்டாவதாக, நாம் வஞ்சகமாக செயல்படக்கூடாது, நமது சொந்த நலன்களைக் கைவிட வேண்டும், தேவனையோ அல்லது மனுஷனையோ வஞ்சிக்கக்கூடாது; மூன்றாவதாக, நமது இருதயங்களில் எந்த வஞ்சகமும் இருக்கக்கூடாது, நமது செயல்களில் தனிப்பட்ட உட்கருத்தோ அல்லது நோக்கமோ இருக்கக்கூடாது, மாறாக நாம் சத்தியத்தை கடைப்பிடிப்பதற்காகவும் தேவனைத் திருப்திப்படுத்துவதற்காகவும் மட்டுமே செயல்பட வேண்டும். தியானிப்பதன் மூலம் இந்த வெளிச்சத்தை அடைந்த பிறகு, நாம் அதை நமது செயல்களிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கிறோம், பின்னர் நாம் இன்னும் பல வஞ்சக வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்: நாம் மற்றவர்களைக் கையாளும் போது, நம்மால் பெரும்பாலும் நமது சொந்த நலன்களையும், நற்பெயரையும் மற்றும் அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக பொய் சொல்வதிலிருந்தோ அல்லது ஏமாற்றுவதிலிருந்தோ நம்மைத் தடுக்க முடிவதில்லை. நாம் தேவனுக்காக நம்மை செலவழிக்கும் போது, நாம் தேவனை நேசிக்கவும் தேவனை திருப்திப்படுத்தவும் விரும்புவதாக ஜெபத்தில் கூறலாம், ஆனால் நமது குழந்தை நோய்வாய்ப்பட்டால், அல்லது நாமோ அல்லது ஒரு குடும்ப உறுப்பினரோ வேலை இழந்தால், நாம் தேவனிடம் புகார் செய்ய ஆரம்பிக்கிறோம். அதேபோல நாம் கர்த்தருக்காக வேலை செய்வதையும் செலவழிப்பதையும் விட்டுவிட விரும்புகிறோம்; இதில், நாம் கறைபடிந்த ஒரு விதத்திலும் நாம் தேவனோடு ஒப்பந்தம் செய்யும் விதத்திலும் தேவனுக்காக நம்மை செலவிடுவதை நாம் பார்க்கலாம். தேவனை திருப்திப்படுத்த அல்ல, தேவனிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காகவே நாம் தேவனுக்காக நம்மை செலவிடுகிறோம். இவை நமது வஞ்சக வெளிப்பாடுகளுக்கான வெறும் சில உதாரணங்கள்தான். இந்த வெளிப்பாடுகளிலிருந்து, நாம் உண்மையிலேயே நேர்மையானவர்கள் அல்ல என்பதை நாம் பார்க்கலாம். நமது சொந்த தவறுகளையும் குறைபாடுகளையும் நாம் தெளிவாகப் பார்த்ததும், சத்தியத்திற்கான தாகத்துக்கு நமக்குள் தீர்மானம் எழுகிறது, மேலும் நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகப் பின்பற்ற முற்படுகிறோம். தேவனுடைய வார்த்தைகளைத் தியானிப்பதன் மூலம் பெறப்படும் பலன் இதுதான்.

நிச்சயமாகவே, தேவனுடைய வார்த்தைகளை ஒருமுறை தியானிப்பதன் மூலம் இந்த பலனை அடைய முடியாது, மாறாக அவருடைய வார்த்தைகளை பலமுறை தியானிப்பதன் மூலமே அடைய முடியும். மேலும், நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் நாம் தேவனுடைய வார்த்தைகளை மனதார கடைப்பிடிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளை நமது இருதயங்களில் இடைவிடாமல் தியானிக்கும் வரை, நாம் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற முடியும். ஒரு நாள், நாம் சில புதிய வெளிச்சத்தைப் பெறுவோம், அடுத்த நாள் நாம் இன்னும் கொஞ்சம் புதிய வெளிச்சத்தைப் பெறுவோம், காலப்போக்கில், தேவனுடைய வார்த்தைகளில் உள்ள சத்தியத்தைப் பற்றி நாம் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும், நடைமுறைப் பாதை மிகவும் தெளிவாகிவிடும், நமது வாழ்க்கை படிப்படியாக முன்னேறும், மேலும் தேவனுடனான நமது உறவு மேன்மேலும் நெருக்கமாகும்.

3. சத்தியத்தை நாடுங்கள் மற்றும் சகலத்திலும் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடியுங்கள்

தேவனுடன் ஒரு சரியான உறவைப் பராமரிப்பதற்கு நமக்குத் தேவையான மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால் நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சத்தியத்தை நாடுவதும் அவருடைய வார்த்தைக்கு ஏற்ப செயல்படுவதுமே ஆகும். ஆனால் வாழ்க்கையில், நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, நாம் பெரும்பாலும் நமது சொந்த அனுபவங்களையே நம்பியிருக்கிறோம் அல்லது அவற்றைக் கையாள மனித வழிமுறைகளையே பயன்படுத்துகிறோம், அல்லது நம் விருப்பங்களுக்கு ஏற்ப அவற்றைக் கையாள்கிறோம். நாம் மிகவும் அரிதாகவே தேவனுக்கு முன்பாக அமைதியாகி சத்தியத்தைத் தேடுகிறோம் அல்லது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப பிரச்சினையைக் கையாளுகிறோம். இது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான பல வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது, மேலும் நாம் தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறோம். தேவனின் வார்த்தை கூறுகிறது: “நீ என்ன செய்கிறாய், ஒரு விஷயம் எவ்வளவு பெரியது அல்லது சிறியது, தேவனுடைய குடும்பத்தில் உன் கடமையை நிறைவேற்றுவதற்காக இதைச் செய்கிறாயா அல்லது உன் சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ செய்வது தேவனுடைய சித்தத்திற்கு இணங்குவதாகவும், அதோடுகூட மனிதத் தன்மையுள்ள ஒரு நபர் செய்கிற செயலாகவும் இருக்கிறதா என்பதை நீ கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு, நீ செய்கிற எல்லாவற்றிலும் சத்தியத்தை நாடுவாயானால், அப்பொழுது, நீ உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கிற ஒரு நபராக இருப்பாய்(“தேவனுடைய சித்தத்தைத் தேடுதல் சத்தியத்தை செயல்படுத்துவதற்கேயாகும்”). “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்(யோவான் 8:31). தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஒரு தெளிவான பாதையைக் காண்பிக்கின்றன. நாம் திருச்சபையில் வேலை செய்தாலும் அல்லது நமது வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சினைகளைக் கையாண்டாலும், நாம் எப்போதும் சத்தியத்தையே நாடி தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் காரியங்களை எவ்வாறு கையாள்வது என்று பார்க்க வேண்டும், நாம் எதிர்கொள்ளும் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சத்தியத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவனோடு நமது சரியான உறவைப் பராமரிக்க வேண்டும்.

உதாரணமாக, நமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் சத்தியத்தை எவ்வாறு நாட வேண்டும் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் ஒரு துணையைத் தேடும் போது, நாம் எப்போதும் நமது சொந்த விருப்பங்களுக்கே சென்று, அந்த நபரின் வெளிப்புறத் தோற்றத்திலும் சுபாவத்திலும் கவனம் செலுத்துகிறோம், மேலும் ஒரு உயரமான, பணக்கார, அழகான ஆளையோ அல்லது அழகான சருமமுள்ள, பணக்கார, அழகானப் பெண்ணையோ நாம் தேடுகிறோம், அப்படிப்பட்ட ஒருவரை நாம் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்வோம் என்றும், மேலும் நாம் உடல் சுகம், வசதி மற்றும் இன்பமாக வாழ்வோம் என்றும், மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் என்றும் நம்புகிறோம். இருப்பினும், அது போன்ற ஒரு துணையைக் கண்டுபிடிப்பது தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நன்மை பயக்குமா என்று நாம் எப்போதாவது யோசிக்கிறோமா? நமது துணை தேவனை நம்பவில்லை என்றால், நாம் தேவனை நம்புவதிலிருந்து நம்மைத் தடுக்க முயற்சி செய்தால், விளைவு என்னவாக இருக்கும்? வேதம் சொல்கிறது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக(2 கொரிந்தியர் 6:14). விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் ஆகியோரின் விருப்பங்கள் ஒன்றாக இருக்காது மற்றும் ஒருவருக்கொருவர் பொருந்த மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் பார்க்கலாம். விசுவாசம் மற்றும் சமூகப் போக்குகளுக்கான அணுகுமுறைகளில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் வெவ்வேறு காரியங்களைப் பின்பற்றுவார்கள்: ஒரு விசுவாசி தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலக விரும்புவார், அதே நேரத்தில் ஒரு அவிசுவாசி உலகின் தீய போக்குகளைப் பின்பற்ற விரும்புவார். நாம் ஒரு அவிசுவாசியுடன் ஐக்கியமாக இருக்கும் போது, நாம் கட்டாயம் அவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவோம், மேலும் நமது வாழ்வின் முன்னேற்றம் தடுக்கப்படும். ஆகையால், ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் இருவரும் ஒரே அலைநீளத்தில் இருந்தாலும் சரி, நமது விருப்பங்கள் இணக்கமாக இருந்தாலும், அந்த நபரின் மனிதாபிமானத்தையும் குணத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும், அவர்களுடன் ஐக்கியம் கொள்வது தேவன் மீதான நமது நம்பிக்கைக்கு பயனளிக்குமா என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நாம் இந்த காரியங்களை கருத்தில் கொள்ளாமல், அந்த நபரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால், நாம் திருமணம் செய்த பிறகு, வேதனை வரும், ஏனென்றால் நாம் ஒரே அலைநீளத்தில் இல்லை. நமது வாழ்க்கைத் துணை நம்மை வற்புறுத்தி தேவனை நம்புவதிலிருந்து நம்மைத் தடுக்க முயற்சி செய்தால், இது நமது ஆவிக்குரிய வாழ்க்கையை இன்னும் அதிகமாக அழிக்கும். ஆகையால், நமது வாழ்வில் நாம் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், சத்தியத்தைத் தேடுவதன் மூலமும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படுவதன் மூலமும் மட்டுமே, நாம் தேவனுடைய பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ முடியும், இவ்விதமாக மட்டுமே நாம் தேவனுடனான நமது சரியான உறவைப் பராமரிக்க முடியும்.

4. தேவனுக்கு முன்பாக வந்து ஒவ்வொரு நாளும் உங்களையே பிரதிபலியுங்கள், மேலும் தேவனுடான உங்கள் சரியான உறவைப் பராமரியுங்கள்

யேகோவா தேவன் சொன்னார்: “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்(ஆகாய் 1:7). நமது வாழ்க்கைப் பிரவேசத்திற்கு நம்மையே பிரதிபலிப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் தேவனுடைய வார்த்தைகளின் மூலம் காணலாம்! பிரதிபலிப்பதன் மூலம், நாம் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதையும், தேவன் கோரும் அளவுகோல்களிலிருந்து நாம் மிகவும் பின்தங்கியிருப்பதையும் நாம் காணலாம். ஆகையால், சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான உந்துதல் நமக்குள் எழுகிறது, நமது மாம்சத்தை கைவிட நாம் தீர்மானிக்கிறோம், மேலும் தேவனுடைய வார்த்தையின்படி நடக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இவ்விதமாக, நமது நடைமுறை அனுபவங்களில் தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்பட நாம் கவனம் செலுத்துகிறோம், நாம் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கிறோம், மேலும் தேவனுடனான நமது உறவு பெருகிய முறையில் இயல்பானதாகிறது. உதாரணமாக, நம்மில் போதகர்களாக ஊழியம் செய்பவர்கள் வேதாகமத்தில் அது சொல்வதைப் பார்க்கிறார்கள்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்(1 பேதுரு 5:2-3). ஆகையால், நாம் சுய பிரதிபலிப்பில் ஈடுபட்டு நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: தேவனுடைய வார்த்தைகளுக்கும் அவருடைய சித்தத்திற்கும் சாட்சி கொடுக்க நாம் கவனம் செலுத்துகிறோமா, மற்றவர்களை தேவனுக்கு முன்பாக வழிநடத்துகிறோமா அல்லது நம்மை பகட்டாக காண்பிப்பதற்கு நாம் பிரசங்கிக்கும் போது உரத்த குரலில் அர்த்தமில்லாத காரியங்களைச் சொல்கிறோமா, மற்றவர்களை நம்மை வழிபட வைப்பதற்காகவும் நம்மைப் பார்க்க வைப்பதற்காகவும் எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் பிரசங்கிக்கிறோமா? மற்றவர்கள் நமக்கு நியாயமான பரிந்துரைகளைச் செய்யும் போது, நாம் நமது சொந்த பிரச்சினைகளைப் பிரதிபலிக்கிறோமா அல்லது அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோமா, நாம் சாக்குபோக்குகளைச் சொல்லி நம்மை நியாயப்படுத்த முயற்சி செய்கிறோமா? சுய பிரதிபலிப்பின் மூலம், தேவனுக்கு நாம் செய்யும் ஊழியத்தில் இன்னும் பல பகுதிகள் உள்ளன, அதில் நாம் கலகம் செய்கிறோம் என்பதையும், நாம் இன்னும் பல சீர்கேடான மனநிலைகளைக் கொண்டிருக்கிறோம், அவை தீர்க்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து சத்தியத்தைத் தேட வேண்டும் என்பதையும் நாம் காணலாம். இவ்வாறு, நாம் நம்மைத் தாழ்மையுடன் நடத்தலாம், நமது கிரியையில் தேவனுடைய சித்தத்தை அதிகமாக நாடலாம், மேலும் தேவனுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப மற்றவர்களை வழிநடத்தலாம். தேவனுக்கு முன்பாக நம்மால் அடிக்கடி வர முடியாவிட்டால், நமது சொந்த சீர்கேடுகளையும் குறைபாடுகளையும் நாம் உணரத் தவறிவிடுவோம் மற்றும் சத்தியத்தைப் பின்தொடர்வதில் நம்மை நாமே நம்புவோம். ஆகையால் நாம் அசையால் நிற்பதில் திருப்தி அடைவோம் மற்றும் எந்த முன்னேற்றத்தையும் செய்ய மறுப்போம், மேலும் நாம் மேலும் மேலும் கர்வமும் சுய-நீதியும் கொண்டவர்களாவோம், தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானவர்களாக இருப்பதாக நம்புவோம். ஆனாலும், உண்மையில், நமது செயல்களும் நடத்தையும் தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும், மேலும் தேவன் நம்மை வெறுப்பார். ஆகையால், அடிக்கடி சுய-பிரதிபலிப்பில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்பதையும், ஒருவர் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது ஒருவரை அறிந்துகொள்வதற்கான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதையும் காணலாம். ஒருவருடைய சொந்த சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே மனம்வருந்தி, பின்னர் எழும்ப முடியும், மேலும் ஒருவர் சத்தியத்தைப் பின்தொடரவும் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றவும் விருப்பமுள்ளவராவார். சுய-பிரதிபலிப்பு நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் நன்மைபயப்பதாக இருக்கிறது, மேலும் இது தேவனை நெருங்குவதற்கு தவிர்க்க இயலாத திறவுகோலாகவும் இருக்கிறது.

நம்மைப் பிரதிபலிப்பதற்கு பல வழிகள் உள்ளன: தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் நாம் நம்மைப் பிரதிபலிக்க முடியும்; நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளில் நம்மை நாமே பிரதிபலிக்க முடியும்; மற்றவர்கள் நமது குறைபாடுகளையும் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டுவது நம்மைப் பிரதிபலிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்; மேலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் செய்யும் தவறுகளை நாம் பார்க்கும் போது, நாம் நம்மைப் பிரதிபலிக்கலாம், அவர்களுடைய தவறுகளை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொண்டு அவற்றால் பயனடையலாம், மற்றும் பல உள்ளன. சுய பிரதிபலிப்பு என்பது பகலுக்கு அல்லது இரவுக்கு என்று மட்டுப்படுத்தப்படவில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நமது இருதயங்களில் தேவனிடத்தில் ஜெபிக்கலாம், நமது சீர்கேடுகளைப் பிரதிபலித்து அறிந்து கொள்ளலாம், மேலும் தேவனுடைய வார்த்தைகளுக்குள் அவருடைய சித்தத்தையும் கோரிக்கைகளையும் நாடி, சரியான நேரத்தில் மனந்திரும்பலாம். இருப்பினும், ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அந்த நாளில் நாம் செய்த அனைத்தையும் பிரதிபலிக்கவும் சுருக்கமாகப் பார்க்கவும் வேண்டும், அப்போதுதான் நம் நிலைகளைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற முடியும் மற்றும் எந்த காரியங்களில் நாம் இன்னும் சரியாகப் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். நாம் இதைச் செய்ய ஆரம்பித்ததும், நமது நாட்டம் அதிக நோக்கமுள்ளதாக இருக்கும் மற்றும் தேவனோடு ஒரு சரியான உறவை ஏற்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலேயுள்ள நான்கு காரியங்களும் நாம் தேவனை நெருங்குவதற்கான நடைமுறைப் பாதையாகும். இந்த காரியங்களை நாம் நடைமுறைப்படுத்தும் வரை, தேவனுடனான நமது உறவு நெருக்கமாகிவிடும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுடன் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருப்போம், மேலும் தேவன் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளிச் செய்து, அவருடைய ஆசீர்வாதத்தில் வாழ நமக்கு உதவுவார். ஆகையால், நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக்கூடாது?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

நான் ஒரு நெரிசலான தெருவில்நிற்கிறேன், கார்களின் கடுமையான சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருக்கேன், பாதசாரிகள் விரைந்து செல்வதைப் பார்க்கிறேன்,...

நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள்

“நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஒரு மருத்துவரைக் கண்டுபிடிப்பதற்காக சுற்றித் திரியுங்கள்” என்ற சொற்றொடர், மக்கள்...

3 தியானங்களில் நல்ல பலன்களை அடைவதற்கு கிறிஸ்தவர்களுக்கான கோட்பாடுகள்

கிறிஸ்தவ வாழ்க்கையில் பக்தி இன்றியமையாதது. இந்த 3 கோட்பாடுகளையும் புரிந்துகொள்ளுங்கள், அதனால் நீங்கள் பயனுள்ள பக்தி செய்து வாழ்க்கையில் படிப்படியாக வளர முடியும்.

கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

பல கிறிஸ்தவர்கள் குழப்பமடைகிறார்கள்: தேவன் அன்பாயிருக்கிறார், அவர் சர்வ வல்லவர், அப்படியிருக்க அவர் ஏன் நம்மை துன்பப்படுவதற்கு...