எங்கள் குடும்பத்தின் அழிவுக்கு யார் காரணம்?

ஜனவரி 21, 2024

நானும் என்னோட கணவரும் ஒரே கிராமத்துல வாழ்ந்தோம், நாங்க சின்ன வயசுல இருந்தே எங்க பெற்றோரோட சேந்து கர்த்தராகிய இயேசுவ விசுவாசிச்சோம். எங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கப்புறம், நான் ஒரு மருத்துவ மையத்த திறந்தேன், அவர் ஒரு தொலைக்காட்சி நிருபரா வேல செஞ்சாரு. எங்களுக்கு ரெண்டு அழகான குழந்தைகள் இருந்தாங்க எங்களோட குடும்ப வாழ்க்கை அமைதியாவும் மகிழ்ச்சியாவும் இருந்துது. 2008 பின்பகுதியில, என்னோட மாமியாரும் நானும் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டோம். என் கணவர் ஏத்துக்கல, அவர் அவரோட வேலைல பரபரப்பா இருந்தாரு. ஆனா அவர் என்னோட விசுவாசத்த ஆதரிச்சாரு. கூடுகை மூலமாகவும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய படிக்கறது மூலமாவும், நம்மோட இரட்சகர் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன்னாடி வந்து மனுக்குலத்த இரட்சிக்கற சத்தியங்கள வெளிப்படுத்தி வர்றாருன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். தேவனோட கிரியை கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகுது இதுதான் இரட்சிக்கப்படுறதுக்கு நமக்கு ஒரே வாய்ப்பு. இது ஒரு விலைமதிப்பற்ற, விரைந்தோடுற வாய்ப்பா இருக்கு. நான் அதத் தவற விட்டுட்டேனா என்னைக்கும் வருத்தப்படுவேன். அதனால என்னோட சத்தியத்தை கடைபிடிக்கிறதுக்கும் ஒரு கடமைய பொறுப்பெடுத்து செய்யறதுக்கும், நான் மையத்த மூடிட்டு மத்த சகோதர சகோதரிகளோட சேந்து சுவிசேஷத்தப் பிரசங்கிக்க ஆரம்பிச்சேன்.

2010 ல, மத நம்பிக்கைகளை ஒடுக்கவும் ஒழிக்கவும், சின்னக் கம்யூனிஸ்ட் கட்சி தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள், இன்னும் மத்த ஊடகங்கள பயன்படுத்தி சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய அவதூறுபண்ணவும் இழிவுபடுத்தவும் செஞ்சுது. அவங்க கிறிஸ்தவர்கள கைது செஞ்சு துன்புறுத்துனாங்க. நான் அவரயும் சிக்க வச்சுருவேன்னு பயந்து, என்னோட கணவர் என் விசுவாச பாதையில குறுக்க நிக்க ஆரம்பிச்சாரு. ஒரு நாள் அவர் என்கிட்ட, “கட்சி மதத்த அனுமதிக்காது, விசுவாசிகள் அவங்க குடும்பங்கள விட்டுடுவாங்கன்னு சொல்லுது. உன் விசுவாசத்த அப்படியே நீ விட்டுடு. நீ அதுக்காக கைது செய்யப்பட்டேன்னா, நம்ம குடும்பம் சிதஞ்சு போகும். முன்னாடி மாதிரியே நம்ம திருச்சபைக்கு மட்டும் போறது எல்லாமே ஒன்னு தானே?” அப்படின்னு சொன்னாரு. நான் அவர்கிட்ட, “ஒரு விசுவாசியா இத்தன வருஷங்களா நான் நம்ம குடும்பத்த கைவிடுறத நீங்க பாத்தீங்களா? இது எல்லாம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய ஒடுக்கறதுக்காக கட்சியால ஜோடிக்கப்படற பொய்கள். நீங்க எப்படி அவங்களோட பொய்கள நம்பலாம்? தேவன் திரும்பி வந்து புதிய கிரியைய செய்யறாரு. அந்தப் பழய திருச்சபைகளுக்கு போயிட்டே இருப்பவங்க கடைசி வரைக்கும் பின்பற்றுனா கூட, சத்தியத்தயோ ஜீவனையோ அடைய மாட்டாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு அப்படிங்கிறதுல நான் உறுதியா இருக்கேன், நான் தேவனோட அடிச்சுவடுகள பின்பற்றுறேன். நான் மெய்யான வழிய விட மாட்டேன்” அப்படின்னு சொன்னேன். நான் எவ்ளோ உறுதியா இருந்தேன்னு பாத்த அவரு, “எதுவா இருந்தாலும், நீ உன்னோட விசுவாசத்த கடைப்பிடிக்க முடியாது, கூடுகைகளுக்குப் போக முடியாது!” அப்படின்னு என்னை எச்சரிச்சாரு. அதுக்கப்புறம், காலையில சீக்கிரமா எழுந்திருச்சு சமையலறையில ஒளிஞ்சுட்டு தேவனோட வார்த்தைகள படிக்கறதும் குடும்பத்துகிட்டயும் நண்பர்கள்கிட்டயும் அவருக்குத் தெரியாம சுவிசேஷத்த பகிர்ந்துக்கறதுதான் என்னால செய்ய முடிஞ்சுது.

2012 ல ஒரு நாள் சாயங்காலம், ஒரு கூடுகைக்கப்புறம், கீழ உள்ள ஸ்டோர் ரூம் வாசல்ல என் கணவர் உக்காந்திருந்தத நான் பாத்தேன். நான் உள்ள வர்றத அவர் பாத்தப்போ, சரமாரியா என்னை உதச்சு, குத்தி தரையில அழுத்திப் பிடிச்சாரு. நான் என் முழு பலத்தோட போராடி என்னை விடுவிச்சுட்டு மாடிக்கு ஓடுனேன். ஆனா அவர் என்னைப் பிடிச்சு முகத்துல அடிச்சு, கொடூரமா, “இனியும் கூட்டங்கள்ல கலந்துக்க நீ தட செய்யப்படற!” அப்படின்னு சொன்னாரு. எனக்கு தல சுத்துச்சு, என் வாயோட ஓரத்துல இரத்தம் வழிஞ்சுது. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கும் மேல அவர் என்னை அடிச்சது இதுதான் முதல் தடவ. என் விசுவாசம் காரணமா அவர் என்னை அவ்ளோ கடுமையா அடிப்பார்னு நான் நெனச்சுக் கூடப் பாக்கல. அந்த நேரத்துல நான் ஒரு வித பலவீனமாவும் பயமாவும் உணந்தேன். நான், கொஞ்சம் காலத்துக்கு நான் கூடுக்கைக்குப் போறதயும் கடமையை செய்றதயும் நிறுத்தணுமா? அவர் என்னை மறுபடியும் அடிச்சா என்ன செய்யறது? அப்படின்னு நெனச்சேன். நான் சரியான நிலையில இல்லைங்கறது எனக்குத் தெரிஞ்சுது, அதனால நான் சீக்கிரமா தேவன் கிட்ட ஜெபிச்சு, விசுவாசத்தயும் பலத்தயும் அவர்கிட்ட கேட்டேன். அப்போ நான் தேவனுடைய இந்த வார்த்தைகள நெனச்சுப் பாத்தேன்: “இதற்கும் அதற்கும் நீ பயப்படக்கூடாது; நீ எத்தனை சிரமங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்தாலும், எனது சித்தம் தடையின்றி செயல்படுத்தப்படும்படி, நீ எனக்கு முன்னால் நிலையாக இருக்க முடியும், எந்த ஒரு இடையூறாலும் தடைசெய்யப்படாமல் இருக்க முடியும். இது உன்னுடைய கடமையாகும்…. பயப்படாதே; எனது ஆதரவுடன், யார் இந்தப் பாதையைத் தடை செய்ய முடியும்? இதை நினைவில் கொள்! மறந்து விடாதே! நிகழும் அனைத்தும் எனது நல்ல நோக்கத்தினால் தான், அனைத்துமே எனது கவனிப்பின்கீழ் உள்ளன. நீ சொல்கிற மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் உன்னால் என் வார்த்தையைப் பின்பற்ற முடியுமா? அக்கினியின் சோதனைகள் உன்மீது வரும்போது நீ மண்டியிட்டு, கூப்பிடுவாயா? அல்லது முன்னேற முடியாமல் பயந்து ஒடுங்கிப் போவாயா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 10”). ஆமா, முற்றிலும் எல்லாமே தேவனோட கரங்கள்ல இருக்கு. தேவனோட அனுமதி இல்லாம, என் கணவரால என்னை எதுவும் செய்ய முடியாது. அன்னைக்கு எனக்கு அது நடக்க தேவன் அனுமதிச்சிருந்தாரு. அடிக்கப்படுவனோ அல்லது திட்டப்படவனோங்கற பயத்துல என் கடமைய செய்ய நான் துணியாம இருந்தேன்னா, அது சாட்சிய இழக்கறதா இருக்காதா? என்னோட கணவர் என்னை எப்படி ஒடுக்குனாலும், நான் என் சாட்சியில உறுதியா நிக்க வேண்டியிருந்துது. நான் எப்பவும் போல தொடர்ந்து கூட்டங்களுக்குப் போய் என் கடமைய செஞ்சிட்டு வந்தேன்.

2021-வது வருஷம் பின்பகுதியில, சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபைல கம்யூனிஸ்ட் கட்சியோட அடக்குமுறை இன்னும் வெறித்தனமா மாறுச்சு. அவங்க தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் மேல பெரிய அளவிலான அடக்குமுறைகளயும் கைதுகளயும் நடத்தி வந்தாங்க. ஒரு நாள், ஒரு கூட்டத்தில இருந்தப்போ, இன்னும் சிலபேர் கூட சேந்து நானும் கைது செய்யப்பட்டேன். சமூக ஒழுங்கா சீர்குலச்ச குற்றச்சாட்டின் பேர்ல அவங்க என்னை பத்து நாட்கள் சிறையில அடச்சாங்க. நான் விடுதலையாகி வீட்டுக்கு போனப்போ என்னோட கணவர் ஆத்திரப்பட்டாரு: “உனக்கு ஏதாவது தெரியுமா? என்னோட முதலாளிகள் மற்றும் கூட வேல செய்றவங்க எல்லாரும் விசுவாசத்துக்காக நீ கைது செய்யப்பட்டத பத்திக் கேட்டாங்க. என்னால அங்க தலநிமிந்து இருக்க முடியல. ரொம்ப அவமானமா இருக்குது!” நான் அவர்கிட்ட, “விசுவாசிக்கறது சரியானது மற்றும் இயல்பானது. கூடறதும் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறதும் செய்யறதுக்கு மதிப்பான ஒரு காரியம். கிறிஸ்தவர்கள கைது செய்யவும் துன்புறுத்துவும் வலியுறுத்தற கட்சிதான் பொல்லாததா இருக்கு. மெய்யான வழி பல ஆண்டுகளா துன்புறுத்தப்பட்டு வருது. இந்தப் பாதையில நடக்கறவங்க சாத்தானோட வல்லமைகளால துன்புறுத்தப்படுறாங்க. சுவிசேஷத்தப் பகிர்ந்ததுக்காகவும் தேவனுக்கு சாட்சி கொடுத்ததுக்காகவும் பல காலத்து பரிசுத்தவான்கள் கைது செய்யப்படலையா?” அவர் கோபத்தோட, “நாம ஒன்ன தெளிவுபடுத்திக்கலாம். நீ விசுவாசிக்கறத நிறுத்தறதா சத்தியம்பண்ணுனா, நமக்கு ஒரு நல்ல வாழ்க்க இருக்கும். நீ விசுவாசத்த கடைபிடிச்சேன்னா, நாம விவாகரத்து வாங்கப் போறோம்! தேர்ந்தெடுக்கற உன்னோட சுதந்திரத்துல நான் தடையா நிக்க மாட்டேன்!” அப்படின்னு பதில் சொன்னாரு. என்னைய என் விசுவாசத்தக் கைவிடச் செய்யறதுக்கு விவாகரத்த வெச்சு மிரட்டுனது கோபமூட்டறதாவும் பயமுறுத்துறதாவும் இருந்துது. கம்யூனிஸ்ட் கட்சியோட ஒடுக்குமுறயால அவர் பத்து வருஷ திருமண வாழ்கைய தூக்கி வீசுவாருன்னு நான் நெனச்சுக் கூடப் பாக்கல. நாங்க விவாகரத்து வாங்கிட்டா, அது நிச்சயமா என் குழந்தைகள பாதிக்கும். நான் விவாகரத்து செய்ய விரும்பல, ஆனா அதவிட அதிகமா, தேவனுக்குத் துரோகம் பண்ணவும் அவரப் பின்பற்றி இரட்சிக்கப்படறதுக்கான என்னோட வாய்ப்ப இழக்கவும் விரும்பல. இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கறதுன்னு எனக்குத் தெரியல. என்னை வழிநடத்தும்படி தேவன்கிட்ட கேட்டு ஒரு ஜெபத்த பண்ணேன். அவரோட இந்த வார்த்தைகளோட பத்தி என் நினைவுக்கு வந்துது: “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கு இடையிலான இடைபடுதல்களாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). தேவனோட வார்த்தைகள யோசிச்சுப் பாத்தப்போ, அது என் கணவரோட அடக்குமுறையா தெரிஞ்சா கூட, அதுக்குப் பின்னாடி என்னைத் தடுத்து நிறுத்த, தேவன காட்டிக் கொடுக்க என்னை வற்புறுத்த, இரட்சிப்புக்கான என்னோட வாய்ப்ப இழக்க வெக்க, சாத்தான் அவர பயன்படுத்திட்டு இருந்தான்ங்கறத நான் பாத்தேன். சாத்தானோட சூழ்ச்சி மேற்கொள்றதுக்கு என்னால விட முடியல. சிசி பியோட வதந்திகள நம்புனதாலதான் என் கணவர் என்னோட வழியில குறுக்க நின்னாரு. நான் அவங்களோட பொய்கள அவர்கிட்ட அம்பலப்படுத்தி அவர் பகுத்தறிவு அடைஞ்சாருன்னா, ஒருவேள அவர் என்னை ஒடுக்கறத நிறுத்துவாரு. அதனால நான் அவர்கிட்ட, “சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மீதான கட்சியோட தூஷணமும் அவதூறும் அவங்க இட்டுக்கட்டுற வெறும் வதந்திகதான். ஒரு நிருபரா இத்தன வருஷங்களுக்கப்புறம், கட்சியோட போலிச் செய்திகளோட உண்மைக் கதை உங்களுக்கு நல்லாத் தெரியாதா? கட்சிய நம்ப முடியாதுன்னு நீங்க எப்பவும் சொல்றீங்க இல்லயா? நமக்குத் தெரிஞ்ச சர்வவல்லமையுள்ள தேவனோட விசுவாசிகள் யார் தங்களோட குடும்பங்கள கைவிட்டிருக்காங்க? நான் பல வருஷங்களா விசுவாசத்துல இருக்கேன், நம்மளோட பெற்றோரயும் குழந்தைகளயும் நான் நல்லா பாத்துக்கலையா?” அப்படின்னு சொன்னேன். நான் சொன்னத மறுக்க அவருக்கு வழியே இல்லாம இருந்துது, அதனால அவரு கோபத்தோட, “நீ அசைய மாட்டேன்னு என்னால பாக்க முடியுது. சரி, போய் உன் தேவன விசுவாசி!” அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறம் கதவ படார்னு சாத்திட்டு அங்க இருந்து போயிட்டாரு.

அதுக்கப்புறமா, நான் ஆச்சரியப்படும்படியா, அவர் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்துக்குப் போனாரு. சமரசமா போகச் சொல்லி நீதிபதி எங்ககிட்ட சொன்னாரு. அவர் என்னோட சம்பள அட்டையயும் வங்கி அட்டைகளயும் எடுத்துட்டாரு, என்னைக் கண்காணிக்கறதுக்காக எப்பவும் வேலைக்குப் போகாம வீட்லயே இருந்தாரு அதனால கூட்டங்களுக்குப் போறதுக்கோ அல்லது என்னோட கடமைய செய்றதுக்கு வெளியே போறதுக்கோ எனக்கு வழியே இல்லாம இருந்துது. ஒரு நாள் எங்க ஊர் கிராமத் தலைவர் போன் செஞ்சு நான் விசுவாசத்த கடைப்பிடிக்காம இருக்கறதயும் அல்லது சுவிசேஷத்தப் பரப்பாம இருக்கறதயும் உறுதிப்படுத்திக்கவும், என்னோட கணவர என்னைக் கண்காணிக்கவும் வெக்கவும், போலீசார் கிராம கமிட்டிக்கு தகவல் தெரிவிச்சிருந்தாங்கன்னு சொன்னாரு. இல்லைனா நான் கைது செய்யப்பட்டா, அவங்களும் சம்பந்தப்படுத்தப்படுவாங்க. இதக் கேட்டதும் என்னோட கணவர் என்னை இன்னும் கடுமையா கண்டிச்சாரு. ஒருதடவ, நானும் என் மாமியாரும் படுக்கையறயில தேவனோட வார்த்தைகளப் பத்தி அமைதியா ஐக்கப்பட்டுட்டிருந்தோம், ஆனா என்னோட கணவர் ஒட்டுக்கேட்டுட்டு, திடீர்னு உள்ள வந்து, “நீ இன்னும் விசுவாசிக்கறயா? நீ உன்னப் பத்தி மட்டுந்தான் யோசிக்கற, என்னைப் பத்தியோ நம்ம குழந்தைகள பத்தியோ யோசிக்கறதே இல்ல. நீ கைது செய்யப்பட்டா, நாங்களும் சம்பந்தப்படுவோம்!” அப்படின்னு கத்துனாரு. இதச் சொல்லிட்டு, அவர் என்னை அடிச்சாரு. குழந்தைகள் ரொம்பவும் பயந்து வெளிய வர தைரியமில்லாம, படுக்கையறைகள்லயே ஒளிஞ்சுகிட்டாங்க, என்னோட மாமியார் சோகத்தோட அழுதாங்க. அப்போ நான் ரொம்பக் கோவமா இருந்தேன். என்னோட விசுவாசத்துனால, கம்யூனிஸ்ட் கட்சி என் குடும்பத்த என் வழியில குறுக்க நிக்க வெச்சு மிரட்டுச்சு, அது என்னோட 80 வயசான மாமியார் மற்றும் என்னோட குழந்தைகளயும் பயமுறுத்தறதா இருந்துது. ஒரு முழுமையான மகிழ்ச்சியான குடும்பம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுச்சு. நான் ரொம்பவும் சோகமாவும் தனிமையாவும் உணந்தேன். என் கணவர் என்னோட விசுவாசத்தப் பயன்படுத்தி எல்லா நேரத்துலயும் சண்ட போட்டாரு. என்னால கூடிப்போகவா என் கடமைய செய்யவோ முடியல. அவர் வீட்ல இல்லாதப்போ தேவனோட வார்த்தைகள படிக்கத்தான் என்னால முடிஞ்சுது. சகோதர சகோதரிகளோட கூடி ஒரு கடமைய செய்யக்கூடிய அந்த நாட்கள் இல்லாம நான் உண்மைல வாடுனேன், ஆனா இப்போ என்னோட வீடு ஒரு கூண்டா மாறிடுச்சு. ரெண்டு மாசமா ஒவ்வொரு நாளும் என்னோட கணவரோட ஒத்துணர்வில்லாத தன்மயயும் கண்டிப்புகளயும் நான் பொறுத்திட்டிருந்தேன். நான் ரொம்பப் பரிதாபமாவும் மனச்சோர்வாவும் உணந்தேன். அது எப்போ முடியும்னு எனக்குத் தெரியாம இருந்துது. என்னோட துயரம் ஒரு குறிப்பிட்ட கட்டத்த அடஞ்சப்போ, “சர்வவல்லமையுள்ள தேவனே, நான் ரொம்ப அதிகமான வேதனைலயும் துயரத்துலயும் இருக்கேன். இந்தச் சூழ்நிலைய எப்படிச் சமாளிக்கறதுங்கறது எனக்குத் தெரியல. தயவு செஞ்சு என்னைப் பிரகாசிப்பிங்க, அதனால என்னால உங்க சித்தத்தப் புரிஞ்சிக்க முடியும்” அப்படின்னு ஜெபிச்சேன். என்னோட ஜெபத்துக்கப்புறம், நான் தேவனோட வார்த்தைகளப் படிச்சேன் சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல்லாயிரம் ஆண்டுகளாக இது அசுத்தமான நிலமாக இருந்து வருகிறது. இது தாங்க முடியாத அழுக்கும், மிகுந்த துன்பமும், எங்கும் தலைவிரித்தாடும் பிசாசுகளும், சூழ்ச்சி மற்றும் வஞ்சகமும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துதலும், இரக்கமற்றும் கொடூரமாகவும், இந்தப் பிசாசு நகரத்தை மிதித்தும், மரித்த உடல்களின் குப்பைகளால் நிரம்பியதுமாய் இருக்கிறது; அழுகியதனால் ஏற்படுகிற துர்நாற்றம் தேசத்தை மூடுகிறது மற்றும் காற்றில் பரவுகிறது, மேலும் அது பலத்தப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வானங்களுக்கு அப்பால் உள்ள உலகத்தை யாரால் பார்க்க முடியும்? மனுஷனின் சரீரம் முழுவதையும் பிசாசு இறுக்கமாகப் பிடிக்கிறது, அது அவனது இரு கண்களையும் மறைக்கிறது, மேலும் அவனது உதடுகளை இறுக்கமாக மூடுகிறது. பிசாசுகளின் நகரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் போது, ஏதோ அது ஊடுருவ முடியாத பிசாசுகளின் அரண்மனையாக இருப்பதைப் போலப் பிசாசுகளின் ராஜா பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரை வெறித்தனமாய்ச் செயல்பட்டிருக்கிறான்; இதற்கிடையில், இந்தக் காவல் நாய்களின் கூட்டம், தாங்கள் அறியாத வேளையில் தேவன் தங்களைப் பிடித்து, தங்களுக்குச் சமாதானம் மற்றும் சந்தோஷத்திற்கான ஓர் இடத்தையும் விட்டுவைக்காமல், அனைவரையும் அழித்துவிடுவார் என்ற மிகுந்த பயத்துடன், ஒளிரும் கண்களால் கூர்ந்து நோக்குகின்றனர். இது போன்ற பிசாசின் நகரத்து ஜனங்கள் தேவனை எப்படிப் பார்த்திருக்க முடியும்? அவர்கள் எப்போதாவது தேவனுடைய அன்பையும் தயவையும் அனுபவித்திருக்கிறார்களா? மனுஷ உலக விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவர்களில் யாரால் தேவனுடைய ஆர்வமுள்ள சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்? அப்படியானால், மனுவுருவாகிய தேவன் முழுவதுமாக மறைந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்: இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற பிசாசுகள்இருக்கிற இதைப் போன்ற இருண்ட சமுதாயத்தில், எவ்வித இரக்கமும் இல்லாமல் ஜனங்களைக் கொல்லும் பிசாசுகளின் ராஜா, அன்பாகவும், தயவாகவும் மற்றும் பரிசுத்தமாகவும் இருக்கிற தேவன் இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்வான்? அது எப்படி தேவனுடைய வருகையைப் பாராட்டி உற்சாகமடைய முடியும்? இந்தக் கீழ்த்தரமானவர்கள்! அவர்கள் தயவுக்குப் பதிலாக வெறுப்பைத் திருப்பிச் செலுத்துகிறார்கள், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தேவனை ஒரு சத்துருவாகக் கருத ஆரம்பித்தனர், அவர்கள் தேவனைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அவர்கள் அளவுக்கதிகமான காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள், அவர்கள் தேவனைச் சிறிதும் கருத்தில்கொள்வதில்லை, அவர்கள் கொள்ளையடித்துக், கன்னமிட்டுத் திருடுகிறார்கள், அவர்கள் மனச்சாட்சியை முழுவதுமாக இழந்துவிட்டார்கள், அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் அப்பாவிகளை உணர்வற்ற நிலைக்குத் தள்ளுகிறார்கள். பண்டைய காலத்தின் முன்னோர்களா? அன்பான தலைவர்களா? அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள்! அவர்களின் தலையீடு வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் இருளிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது! மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). தேவனோட வார்த்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி சாத்தானோட ஒரு உருவகமா இருக்குது, அது பூமிக்கு வந்த ஒரு பிசாசு. அது மத சுதந்திரத்த அனுமதிப்பதா வெளி உலகத்துக்குச் சொல்லுது, ஆனா அதுக்குப் பின்னாடி அது வெறித்தனமா தேவன எதிர்க்குது மற்றும் அவரோட தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள மிருகத்தனமா நடத்துதுன்னு எனக்கு காட்டுச்சு. கடைசி நாட்கள்ல, மனுவுருவான தேவன் மனக்குலத்த இரட்சிக்கறதுக்காக சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள ஜனங்க படிச்சா, அவங்க சத்தியத்தப் புரிஞ்சிட்டு அதனோட பேய்த்தனமான முகத்தப் பார்ப்பாங்க, அதுக்கப்புறம் அத நிராகரிச்சு கைவிட்டுருவாங்கன்னு கட்சி பயப்படுது. அப்போ ஜனங்கள என்னைக்கும் கட்டுப்படுத்தணும்ங்கற அதனோட காட்டுத்தனமான லட்சியம் நொறுங்கிப் போயிரும். அதனாலதான் அது ரொம்பவும் கோவமா இருந்து, வெறித்தனமா கிறிஸ்துவ பின்தொடர்ந்து, தேவனோட தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள கைது செஞ்சு துன்புறுத்துது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய அகப்படுத்தவும் அவதூறு பண்ணவும் அது எல்லா வகையான பொய்களயும் இட்டுக்கட்டுது, சத்தியம் தெரியாத பலரயும் தவறா வழிநடத்துது, அதனால அவங்க மெய்யான வழிய ஏத்துக்கத் துணியறதில்ல. நெறைய கிறிஸ்தவங்களோட குடும்ப உறுப்பினர்கள் அவங்களோட பொய்கள நம்புறாங்க அதுக்கப்புறம் அது கூட சேந்துட்டு தேவனோட தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள துன்பப்படுத்துறாங்க. கடைசில, தேவனுக்கு எதிரா போனதுற்க்காக, அவங்களும் நரகத்துக்குப் போவாங்க. நான் எவ்ளோ அதிகமா நெனச்சனோ, அவ்ளோ அதிகமா கம்யூனிஸ்ட் கட்சி உண்மையில தேவன வெறுக்கற, ஜனங்கள அழிக்கிற ஒரு பிசாசுன்னு பாத்தேன். அது தேவனோட மோசமான எதிரி நான் அத என்னோட இதயத்தோட ஆழத்திலிருந்து வெறுக்கறேன். நான் அதக் கைவிடவும் நிராகரிக்கவும் தேவன கடைசி வரைக்கும் பின்பற்றவும் உறுதியெடுத்தேன்.

நான் தேவனோட வார்த்தைகள்ல இன்னொன்னயும் படிச்சேன். “அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள்…. ஏனென்றால் அது தேவனை எதிர்க்கின்ற ஒரு தேசத்திலேயே இறங்கியிருக்கின்றது. தேவனின் அனைத்து கிரியைகளும் மிகப்பெரிய இடையூறுகளைச் சந்திக்கின்ற காரணத்தால் அவரின் வார்த்தைகளை நிறைவேற்ற அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தப்படியே மக்கள் தேவ வார்த்தையின் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றார்கள், இதுவும் பாடுகள் அனுபவிப்பதன் ஒரு பங்காகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தனது கிரியையை நடப்பிப்பது தேவனுக்கு மிகக் கடினமாகும், ஆனால் இந்தக் கடினத்தினூடாகவே தனது ஒரு கட்டக் கிரியையைத் தேவன் செய்கின்றார், அது அவரது ஞானத்தையும் அதிசயமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மக்கள் கூட்டத்தை முழுமையாக்குவதுமாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?”). தேவனோட வார்த்தைகள்ல இருந்து, கட்சி தேவனுக்கு எதிரா செயல்பட்டு, அவரோட எதிரியா இருக்கறதால, சீனாவில இருக்கற விசுவாசிகள் பெரும் ஒடுக்குமுறையயும் கஷ்டங்களயும் சந்திக்க நேரிடுது அப்படின்னு நான் கத்துக்கிட்டேன் இது தேவனால நியமிக்கப்பட்டிருக்கு. நம்மளோட விசுவாசத்த பரிபூரணப்படுத்தவும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்த பத்தின பகுத்தறிவ நாம கொண்டிருக்கறதுக்கும், நாம அத வெறுத்து நிராகரிச்சு, அதுக்கு மேலயும் அதனால தவறா வழிநடத்தப்படவோ காயப்படுத்தப்படவோ மாட்டோம் அப்படிங்கறதுக்காக தேவன் இந்தக் கடினமான சூழல்களப் பயன்படுத்தறாரு. ஆனா தேவனோட சித்தம் எனக்குத் தெரியல. நான் எதிர்மறையா இருந்தேன், மாம்சரீகமான துன்பங்களப் பத்தி புகார் செஞ்சேன், நான் சத்தியத்த தேடவோ அல்லது ஒரு பாடத்த கத்துக்கவோ இல்ல. நான் ரொம்பவும் கலகக்காரியா இருந்தேன். தேவன் ரொம்ப உயர்ந்தவர், ஆனா சீர்கெட்ட மனுக்குலத்த இரட்சிக்கறதுக்காக, இந்த மாதிரியான வேதனையயும் அவமானத்தயும் தாங்கறாரு. அவர் மாம்சமாகி, பேசவும் கிரிய செய்யவும் நம்ம மத்தியில வந்திருக்காரு, பொல்லாத கம்யூனிஸ்ட் கட்சியோட பின்தொடர்தல்களயும் துன்புறுத்தலயும் மத உலகத்தோட கண்டனத்தயும் தொடர்ந்து தாங்கறாரு. ஆனா மனுக்குலத்த இரட்சிக்கறத தேவன் ஒருபோதும் கைவிடவே இல்ல. அவர் சத்தியங்கள வெளிப்படுத்தி, நீர்ப்பாய்ச்சி, நம்மள போஷிச்சுட்டே வர்றாரு. நம்ம இரட்சிப்புக்காக தேவன் இந்த எல்லா அவமானங்களயும் வேதனையயும் சகிச்சுட்டாரு. இப்போ நான் தேவன பின்பற்றுறதுக்கும் இரட்சிப்ப பின்தொடர்றதுக்கும் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். உண்மையான விசுவாசமும் தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதலும் என் இருதயத்துல இல்லாம இருந்துது. என்னோட வளர்ச்சி ரொம்பவும் சிறியதா இருந்துது. இந்தக் கட்டத்தில நான் வருத்தத்தாலயும் குற்ற உணர்ச்சியாலயும் நெரம்பி இருந்தேன், என் கணவர் என்னை எப்படி நடத்தினாலும், நான் சரீர பலவீனங்களுக்கு அடிபணிஞ்சுட்டே இருக்கமாட்டேன், ஆனா உறுதியா நிக்கறதுக்காக தேவன நம்பி இருப்பேன், ஒருபோதும் சாத்தனுக்கு மடியவோ வழிவிடவோ மாட்டேன்னு உறுதியா முடிவெடுத்தேன். அதுக்கப்புறம், என்னோட கணவர் என்னை அப்பவும் தொடர்ந்து ஒடுக்கி, என் வழியில குறுக்க நின்னப்பவும், நான் ஜெபிச்சு தேவன் மேல சார்ந்துகிட்டேன், தேவனோட வார்த்தைகளின் வழிகாட்டுதலால நான் ரொம்பவும் வேதனப்படல.

ஒரு தடவ, நான் ஒரு பழைய வகுப்புத் தோழன்கிட்ட சுவிசேஷத்தப் பகிர்ந்துட்டேன்னு என் கணவர் தெரிஞ்சிட்டப்போ, அவர் வீட்டுக்கு வந்து, “உன்னோட பிரசங்கம் ஜனங்களோட குடும்பங்கள அழிக்கறதா கட்சி சொல்லுது. நான் உன்னை எச்சரிக்கிறேன், நீ உன்னோட வகுப்புத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் தொடர்ந்து சுவிசேஷ சொல்லாம இருக்கறது நல்லது, இல்லைனா என்னால என் முகத்த காட்ட முடியாது” அப்படின்னு என்னைத் திட்டுனாரு. அவர் தேவன தூஷிச்சு சில காரியங்களயும் சொன்னாரு. தேவன் மேல வெறுப்பு கொண்ட அவரோட கடுமயான தோற்றத்த பாத்து நான் கோபமடஞ்சேன். நாங்க சுவிசேஷத்த பகிர்ந்துக்கறோம், இதனால ஜனங்க விசுவாசத்த கொண்டிருந்து தேவனோட இரட்சிப்ப ஏத்துக்க முடியும், ஆனா கட்சி விஷயங்கள தலகீழா மாத்துது. நாங்க குடும்பங்கள பிரிக்கறோம்னு பலவிதமான பொய்கள அவங்க இட்டுக்கட்டறாங்க. அது தீமையாவும் வெட்கமில்லாததாவும் இருக்கு. பல வருஷங்களா கம்யூனிஸ்ட் கட்சி தேவனுக்கு எதிரா செயல்படுது, விசுவாசிகள கைது செய்யுது, நெறைய கிறிஸ்தவங்கள கைது செய்ய, சிறையில அடைக்க காரணமா இருக்குது. பல கிறிஸ்தவங்க கைதாகறத தவிர்க்கறதுக்காக ஓடிட்டே இருக்காங்க, அவங்களால வீட்டுக்குத் திரும்பிப் போக முடியல. நெறைய குடும்பங்கள் பிளவுபட்டுருச்சு, பெற்றோர்களும் குழந்தைகளும் பிரிஞ்சிருக்காங்க. இந்த எல்லா கிறிஸ்தவ குடும்பங்களோட அழிவுக்கும் கட்சி தான் காரணம்! கட்சியோட பொய்களால என் கணவர் ஏமாத்தப்பட்டதயும், சரி எது தப்பு எதுன்னு சொல்ல முடியாம, தேவன் மேலயும் விசுவாச ஜனங்க மேலயும் ரொம்பவும் வெறுப்பா இருந்ததப் பாத்தது, எனக்கு தேவனோட வார்த்தைகள நினைப்பூட்டுச்சு: “மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். … சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). “ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). என் கணவரோட தேவன எதித்து நிக்கற சுபாவத்தயும் சாராம்சத்தயும் தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. எனக்கு விசுவாசம் இருந்துது, நான் சுவிசேஷத்த பகிர்ந்தேன், அதனால அவர் என்னை ஒடுக்கவும் என்னைத் தடுக்கவும் எல்லா வழிகளயும் பயன்படுத்துனாரு, அதோட தேவன தூஷிக்கிற காரியங்களயும் சொன்னாரு. மேலோட்டமா பாத்தா, அது என்னைக் குறிவெச்சது போல இருந்துது ஆனா உண்மையில, அவரு வெறுத்தது சத்தியத்தயும் தேவனயும் தான். நான் என் கணவரோட சாராம்சத்த இதுக்கு முன்ன பாத்ததில்ல. எங்க திருமண வாழ்க முழுதுமே, அவர் என் மேல அக்கறையாவும் கவனத்தோடயும் இருந்தாரு, அவர் எல்லாத்தலயும் என்னை ஆதரிச்சாரு, அதனால அவர் எனக்கு நல்லவரா இருந்தாருன்னு நான் நெனச்சேன். என்னோட விசுவாசம் கட்சியால ஒடுக்கப்பட்டதயும், அது அவரோட நல்ல பேரயும் எதிர்காலத்தயும் பாதிக்கும் அப்படிங்கறதயும் அவர் பாத்தவுடனே, என்னை அடிக்கவும், என்னோட விசுவாசத்துல இருந்து என்னைத் தடுக்க எல்லா வழிகளயும் பயன்படுத்தவும், தேவன தூஷிக்கவும் ஆரம்பிச்சு, முற்றிலும் மாறுபட்ட நபரா மாறுவார்னு நான் நெனச்சு கூட பாக்கல. அது ஒரு பிசாசோட வெளிப்பாடா இருந்துது. நான் முதல்ல அவர் வெறுமனே கம்யூனிஸ்ட் கட்சியோட பொய்களால தவறா வழிநடத்தப்பட்டதாவும், அவற்ற பத்தின பகுத்தறிவு அவர் அடஞ்சிருந்தா அவர் அவ்ளோ ஒடுக்குறவரா இருக்கமாட்டாருன்னும், நான் மாயைகள நம்பிட்டிருந்தேன். நான் தவறு செஞ்சன்னு இப்போ எனக்குத் தெரியும். என் கணவர் ஒரு நிருபரா இருந்ததால, பொய்யான செய்திகள இட்டுக்கட்டிய கட்சி பத்தின உள்கதை அவருக்கு நல்லாவே தெரியும், ஆனாலும் அவர் அப்பவும் அவங்களோட பொய்கள நம்புனாரு, என்னோட விசுவாசத்த துன்புறுத்துனாரு. சாரம்சத்துல, தேவன எதிர்க்குற ஒரு பிசாசா அவர் இருந்தாரு. அவரோட குழந்தைகள பெத்தெடுக்கவும், குடும்பத்தில இருக்கற சின்னவங்களயும் வயசானவங்களயும் பாத்துக்கவும் என்னைப் பயன்படுத்துறதுக்காகவும் மட்டுந்தான் அவர் எனக்கு முன்னாடி நல்லவரா இருந்தாருன்னும் நான் தெளிவா பாத்தேன். அது கொஞ்சங்கூட உண்மையான அன்பாவே இல்ல. அது தேவனோட வார்த்தைகள எனக்கு நினைப்பூட்டுச்சு: “விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). நான் ஒரு விசுவாசியா இருந்தேன், நான் தேவன பின்பற்றுனேன், சத்தியத்தப் பின்தொடர்ந்தேன், சரியான பாதையில இருந்தேன். என்னோட கணவர் கம்யூனிஸ்ட் கட்சிய பின்பற்றுனாரு, தேவனுக்கு எதிரான பாதையில இருந்தாரு. நாங்க ஒரே பாதையில நடக்கல. நாங்க எந்த ஒத்துணர்வு இல்லாம ஒன்னா வாழ்ந்தோம், அது இயல்பாவே வேதனையா இருந்துது. அது தெளிவானவுடனே, நான் அவரப் பத்தின எல்லா மாயைகளயும் விட்டுட்டேன். அந்த நேரத்துல, தேவனோட வார்த்தைகள படிக்கற திறன் எனக்குக் குறைவா தான் இருந்துது அதோட என்னால கூட்டங்கள்ல கலந்துக்க முடியல, ஒரு கடமையயும் செய்ய முடியல. அது முற்றிலும் பரிதாபமா இருந்துது. அந்தச் சில நாட்கள்ல நான் தேவன்கிட்ட அவசரமா ஜெபிச்சிட்டிருந்தேன், ஒரு வழிய திறக்கும்படி அவர கேட்டேன்.

ஒரு நாள் சாயந்திரம், என்னோட கணவர், “நான் இன்னைக்கு என்னோட தொழில பத்தியும், காரியங்கள் எப்போ எனக்கு சாதகமா மாறும்னு கேக்கவும் ஒரு ஜோசியக்காரர்கிட்ட போனேன்” அப்படின்னு சொன்னாரு. நான் யோசிக்காம, “நீங்க எல்லாம் ஒரு விசுவாசி, அந்தப் பொல்லாத குப்பைய நம்புறீங்களா?” அப்படின்னு சொன்னேன். அவரோட முகநாடி உடனடியா மாறி அவர் என்னை வயித்துல குத்துனப்போ நான் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். அவர் வெறித்தனமா, “உன் விசுவாசத்த கடைப்பிடிக்க நீ வலியுறுத்துனேனா, இந்த வீட்ட விட்டு வெளியே போ!” அப்படின்னு கத்துனாரு. அந்த நொடியில, என்னோட உறுப்புகள் எல்லாம் இடத்தவிட்டு நகுந்த மாதிரி அவ்ளோ வலிச்சுது. வலியில என் வயித்தப் புடிச்சுகிட்டு நான் தரையில படுத்துட்டேன். அந்த வீட்ல என்னோட கணவர் என்னைத் தினந்தினம் கொடுமப்படுத்துறார். என்னால தேவனோட வார்த்தைகள படிக்கவோ, கூட்டங்கள்ல கலந்துக்கவோ அல்லது கடமைய செய்யவோ முடியல. அது தொடந்துச்சின்னா நான் சத்தியத்த பின்தொடர வழியே இல்லாம இருக்கும், நான் கடைசில அழிஞ்சு போயிடுவேன். இப்போ அவர் என்கிட்ட வன்முறையில ஈடுபட்டு என்னை வெளியேத்தறதா மிரட்டுனாரு. என்னால அந்த வேதனையயும் கொடுமையயும் தொடர்ந்து தாங்க முடியல அப்படின்னு நெனச்சேன். அந்த வீட்டின் சிறையில இருந்து என்னை விடுவிச்சுக்கவும், அந்த நரக வாழ்க்கையலிருந்து தப்பிச்சுப் போகவும், அவர விட்டுட்டுப் போக நான் முடிவு செஞ்சேன். அன்னைக்கு ராத்திரி, சோகத்துல அழுதுட்டே என் படுக்கையில படுத்திருந்தேன். நாங்க கஷ்டப்பட்டு கட்டுன வீட்டப் பாத்து, பத்து வருஷத்துக்கும் மேலான எங்களோட திருமணம் முறியப்போகுதுன்னு நெனச்சு, கம்யூனிஸ்ட் கட்சியால இவ்ளோ அற்புதமான ஒரு குடும்பம் அழியப் போகுதுன்னு நினைச்சு, குறிப்பா எங்க குழந்தைகள் எப்படி இருப்பாங்கங்கற சிந்தனையில, எங்க மூத்த மகளால தன்னைப் பாத்துக்க முடியும், ஆனா இளையவளுக்கு நாலு வயசுதான் அவளுக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்தது, இத நினைச்சப்போ நான் பலவீனத்தால மேற்கொள்ளப்பட்டதா உணந்தேன். நான் பல வருஷங்களா அவள கவனிச்சுக்கறதுல முழுசா ஈடுபட்டிருந்தேன். அவள் என்னை விட்டுப் பிரிஞ்சிருந்ததே இல்ல. என்னோட மாமியாருக்கும் வயசாயிட்டிருந்துது. நாங்க விவாகரத்து செஞ்சுட்டா குழந்தைகள யார் பாத்துக்குவாங்க? இந்த எண்ணம் என் மனச உலுக்குச்சு. என்னைப் பிரகாசிப்பிக்கும்படியாவும் அவரோட சித்தத்தப் புரிஞ்சுக்க எனக்கு உதவி செய்யும்படியாவும் தேவன்கிட்ட கேட்டு நான் ஒரு ஜெபம் பண்ணேன். ஜெபிச்சதுக்கப்புறம் தேவனோட சில வார்த்தைகள நெனச்சு பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). “நீ ஏன் அவற்றை என் கரங்களில் ஒப்படைக்கவில்லை? உனக்கு என் மீது போதுமான விசுவாசம் இல்லையா? அல்லது நான் உனக்காகப் பொருத்தமற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுவேன் என்று நீ பயப்படுகிறதினாலேயா? உன் மாம்சத்தின் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறாய்? உன் அன்புக்குரியவர்களுக்காக நீ எப்போதும் ஏங்குகிறாய்! உன் இருதயத்தில் எனக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 59”). தேவன் தான் மனுஷ வாழ்க்கையோட ஆதாரம் அவர்தான் நம்ம விதிகள ஆளுகிறவர்னு தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. என் பிள்ளைகள் பாதுகாப்பாவும் ஆரோக்கியமாவும் வளர்றாங்களாங்கறது பெற்றோர்களாகிய எங்களோட கட்டுப்பாட்டுல இல்ல, ஆனா அது எல்லாமே தேவனால தீர்மானிக்கப்படுது. என்னோட இளைய மகளோட உடல்நிலை, அவ வாழ்க்கைல என்ன எதிர்கொலள்றா, அவளுக்கு என்ன மாதிரியான விதி இருந்துது எல்லாமே தேவனால முன்குறிக்கப்பட்டிருக்கு. தேவன் ஏற்பாடு செய்றதெல்லாம் சிறந்ததாவும், ரொம்பப் பொருத்தமாவும் இருக்கும். ஆனா தேவன் மேல இருந்த என்னோட விசுவாசம் குறைவா இருந்துது. ஆரோக்கியமா வளர்றதுக்காக எப்பவும் நான் என் குழந்தைகள் பக்கமே இருக்கணும், அவங்கள கவனிச்சுக்கணும்னு நெனச்சேன். நான் அவங்கள தேவனோட கரங்கள்ல கொடுக்கல. நான் அகந்தையானவளாவும் அறியாதவளாவும் இருந்தேன். ஒரு அம்மாவா, நான் என் மகள் பக்கத்துல இருந்தா, அவள அரவணச்சு நல்லா போஷிக்கிறது தான் என்னால செய்ய முடியும், ஆனா அவளோட விதிய என்னால கட்டுப்படுத்த முடியாது. நான் இப்போ தேவனோட ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிஞ்சு, அவள தேவன்கிட்ட ஒப்படைக்கணும், என்னோட கவலைகள எல்லாத்தயும் விட்டுட்டு, தேவனப் பின்பற்றி, சுவிசேஷத்தப் பரப்பி என் கடமைய செய்யணும். தேவனோட சித்தத்த புரிஞ்சுக்கறது எனக்கு ரொம்பவும் விடுதலையா இருந்துது.

நானும் என் கணவரும் அடுத்த நாள் விவாகரத்துக்கான நடவடிக்கைகள மேற்கொண்டோம். அதுக்குக் காரணம் நான் விசுவாசியா இருந்ததுன்னு அதிகாரி தெரிஞ்சிட்டதும், அவர் எனக்கு “இது மதத்தப் பத்துனதுங்கறதுனால, நீங்க கையெழுத்து போட்ட உடனே உங்க கணவர், குழந்தைகள் மற்றும் வீடு எல்லாமே போய்டும். நீங்க உறுதிபடுத்திக்கறது நல்லது” அப்படின்னு அறிவுர சொன்னாங்க. இதக் கேட்டப்போ, எனக்கு ஒரு விதமான தயக்கம் உண்டாச்சு. நான் என் கணவரோட தேவனுக்கு விரோதமான சாரம்சத்தப் பாத்திருந்தாலும் என் குழந்தைகள தேவனோட கரங்கள்ல ஒப்படைக்கத் தயாரா இருந்தாலும், என்னோட கையெழுத்துனால என்னோட வீடு, குழந்தைகள், மத்த எல்லாமே போயிரும் அப்படின்னு நினைச்சது என்னைத் தயக்கப்பட வெச்சுது. நான் சரியான நிலையில இல்லைங்கறத உணர்ந்து, நான் அமைதியா ஜெபம் பண்ணேன், அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகள்ல இருந்து இத நெனச்சுப் பாத்தேன்: “நீ ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம். நீ நிச்சயமாக தேவனை ஆராதித்து அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடர வேண்டும். நீ தேவனை ஆராதிக்காமல், உன்னுடைய அசுத்த சரீரத்திற்குள் வாழ்வாயானால், நீ வெறுமனே மனித உடையில் உள்ள ஒரு மிருகம் அல்லவா? நீ ஒரு மனுஷன் என்பதால், நீ தேவனுக்காக உன்னையே பயன்படுத்தி எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இன்றைய நாளில் நீ உட்படுத்தப்பட்ட சிறிய துன்பங்களை மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்டு, யோபு மற்றும் பேதுருவைப் போல அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். … நீங்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள், முன்னேற்றத்தை நாடுபவர்கள். நீங்கள் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் தேசத்தில் எழும்பினவர்கள், நீதியுள்ளவர்கள் என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள். இதுவே மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (2)”). தேவனோட வார்த்தைகள் உடனடியா பிரகாசிப்பிக்கறதா இருந்துது. இது உண்மதான், நான் ஒரு சிருஷ்டி, தேவன ஆராதிக்கறதுங்கறது நான் செய்ய வேண்டிய கடமை. தேவன பின்பற்றுறதுக்காக எல்லாத்தயும் விட்டுடறது, சத்தியத்தயும் ஜீவனயும் பின்தொடர்றது வாழ்க்கையில சரியான பாதை. அது ரொம்ப மதிப்புமிக்க ரொம்ப அர்த்தமுள்ள வாழ்க்கை. தேவன் கடைசி நாட்கள்ல தோன்றி மனுக்குலத்த இரட்சிக்கறதுக்காக கிரியை செஞ்சிட்டிருக்காரு, அது ஒரு விலைமதிப்பில்லாத வாய்ப்பு. தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கறதுக்கும் அவரோட வார்த்தைகளோட வாழ்வாதாரத்த அடயறதுக்குமான நல்ல அதிர்ஷ்டத்த கொண்டிருக்கறது தேவனோட கிருபையும் இரக்கமுமா இருக்கு. தேவனோட கிரியை இப்போ முடிவுக்கு வரப்போகுது. நான் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு, தேவனுக்காக என்னை ஒப்புக்கொடுத்து, என் கடமைய செய்யணும். இல்லைனா, இரட்சிப்புக்கான என்னோட வாய்ப்ப நான் இழந்துடுவேன், அது வாழ்நாள் முழுவதுக்குமான வருத்தமா இருக்கும். ஆனா என் கணவர் கம்யூனிஸ்ட் கட்சியோட சேந்து என்னைத் தடுக்கவும் ஒடுக்கவும் எல்லாத்தயும் செஞ்சாரு, என்னை எதிரியப் போல நடத்துனாரு. “தேவன்” அப்படிங்கற வார்த்தைய சொன்னாலே அவர் என்னை அடிச்சாரு. அந்த வீட்ல இருக்கறப்போ, என்னால தேவனோட வார்த்தைகள படிக்க முடியல, கூட்டங்கள்ல கலந்துக்க அல்லது கடமைய செய்ய என்னால வெளிய போக முடியல. தேவன விசுவாசிக்கறதுக்கும் பின்பற்றுறதுக்கும் விவாகரத்து செய்றது தான் எனக்கு ஒரே வழியா இருந்துது. அப்படி வாழ்ந்தா, நான் ஒரு வெறுமையான ஓடா இருக்க மாட்டனா? நான் சாத்தானோட தண்டிக்கப்பட்டு நரகத்தில தான் முடிவடைவேன். உண்மைகள எதிர்கொண்டப்போ, என்னோட கணவரும் வீடும் என்னோட தூண் இல்லங்கறது தெள்ளத் தெளிவா இருந்துது. என்னைக் காயப்படுத்தறதுக்கும் என்னைப் பாழாக்கறதுக்கும் சாத்தான் பயன்படுத்துன கருவிகளா, தடைகளா அவங்க இருந்தாங்க. தேவன் மட்டுந்தான் என்னோட தூண், தேவன் மட்டுந்தான் என் வாழ்க்கைக்கான வாழ்வாதாரம். தேவனப் பின்பற்றுறதும் ஒரு சிருஷ்டியோட கடமைய செய்யறதுந்தான் தேவனால இரட்சிக்கப்படுறதுக்கும் நல்ல விதியயும் இலக்கையும் அடையறதுக்கான ஒரே வழி. நான் பேதுருவ பத்தி நெனச்சுப் பாத்தேன், விசுவாசத்தக் கொண்டிருக்கறதுக்கும் சத்தியத்தயும் ஜீவனயும் அடையறதுக்கும் அவனோட பெற்றோரோட கட்டுப்பாடுகள அவன் உடச்சான். கர்த்தராகிய இயேசுவ பின்பற்றுறதுக்காக எல்லாத்தயும் விட்டுட்டான். என்னோட பேய் கணவரோட கட்டுகள்ல இருந்து விடுபடவும் முழு மனசோட சர்வவல்லமையுள்ள தேவன பின்பற்றவும் நான் பேதுருவோட மாதிரிய பின்பற்ற வேண்டியிருந்துது. அதனால, தயக்கமில்லாம விவாகரத்துப் பத்திரத்தில கையெழுத்து போட்டேன்.

நான் வீட்டுக்குப் போனப்போ, என்னோட மூத்த மகள், “அம்மா தேவனை விசுவாசிக்கறது சரியான காரியம், ஆனா அப்பா உங்கள அப்படி நடத்தறது பாக்கறப்போ, நீங்க அப்படிக் கஷ்டப்படுறத நான் பாக்க விரும்பல. நான் உங்க விவாகரத்த ஆதரிக்கிறேன்” அப்படின்னு சொன்னா. அவ சொன்னதக் கேட்டது எனக்கு ரொம்ப ஊக்கப்படுத்தறதா இருந்துது. விவாகரத்துப் பத்தி என்னோட நண்பர்கள் தெரிஞ்சுகிட்டதும், அவங்கள்ல கிட்டத்தட்ட இருபது பேர் ஒன்னா வந்து என் விசுவாசத்தக் கைவிடணும்னு வலியுறுத்துனாங்க. நான் அவங்ககிட்ட திடமா உறுதியோட, “தேவனை விசுவாசிக்கிறது சரியான பாதை. நான் நான் பெற்றோரயும் குழந்தைகளயும் ரொம்ப நல்ல கவனிச்சேன், ஆனா அவரு கட்சியோட பொய்கள நம்பி என் விசுவாச பாதையில குறுக்க நின்னாரு. அவர் என்னை அடிச்சுத் திட்டுனாரு, இந்த விவாகரத்துக்கு என்னை வற்புறுத்துனாரு. நான் எந்த மேன்மையோ மரியாதையோ இல்லாம வாழ்ந்துட்டு வர்றேன். எனக்கு வேற வழியே இல்ல. எங்க குடும்பத்த அழிச்சது கம்யூனிஸ்ட் கட்சி தான்!” அவங்களுக்குப் பதில் சொல்றதுக்கு ஒன்னும் இல்லாம போச்சு.

அதுக்கப்புறம், நான் வீட்ட விட்டு வெளியேறி கடமைய செஞ்சிட்டு இருந்தவங்களோட சேந்துகிட்டேன். நான் சகோதர சகோதரிகளோட சேந்து சுவிசேஷத்த பரப்ப ஆரம்பிச்சேன், ஒவ்வொரு நாளும் தேவனோட வார்த்தைகள படிச்சேன், சத்தியத்தைக் குறிச்சு ஐக்கிப்பட்டேன், தேவனோட வார்த்தைகளோட வாழ்வாதாரத்த அனுபவிச்சேன். நான் அமைதியாவும் நிம்மதியாவும் உணந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியால துன்புறுத்தப்பட்டு, என் கணவரால ஒடுக்கப்பட்டதுக்கப்புறம், தேவன வெறுக்கற ஜனங்கள அழிக்கற கட்சியோட பொல்லாத முகத்த நான் முழுசா பாத்தேன். அது உண்மையில சாத்தானோட உருவம், தேவனோட மோசமான எதிரி. நான் என்னோட மனசு ஆழத்திலிருந்து அத வெறுத்து நிராகரிச்சேன். நான் என் கணவரோட தேவன எதிர்க்குற உண்மையான சாராம்சத்த பத்தின பகுத்தறிவ அடஞ்சேன் அந்த வீட்டோட கூண்டில இருந்து விடுபட்டேன். அது எல்லாமே தேவனோட இரட்சிப்பா இருந்துது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

எனது தெரிந்தெடுப்பு

மார்ச் 2012 இல், என் அம்மா கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய...

புதிய விசுவாசிகளுக்கு நீர்பாய்ச்சுவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்

இந்த வருஷம் ஜனவரியில, நான் திருச்சபையில் புதுசா வந்தவங்களுக்கு நீர்ப்பாய்ச்சிட்டு இருந்தேன். புதுசா வந்த சகோதரி ரேன் ஜியா அவங்க கணவர்...

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய...