சத்தியத்தைப் பின்தொடர்தல் என்னை மாற்றியது

ஜனவரி 21, 2024

மே 2018ல, நான் இராணுவத்துல சேர வீட்டை விட்டு வெளிய போயிட்டேன். ராணுவத்துல, ஒரு தலைவர் உத்தரவு பிறப்பித்தப்போ, கீழ்நிலை வீரர்கள் அவங்க சொன்னபடியே பணிவோடு செஞ்சாங்க. எங்க வேலைய மேற்பார்வை செஞ்சப்போ, தலைவர்கள் எங்களுக்கு அதிகாரமா கட்டளையிட்டாங்க, அவங்க அதிகமா ஈர்க்கத்தக்கவங்களா இருந்தாங்க. நான் அவங்கள ரொம்ப பாராட்டினேன். பெண் இராணுவ வீராங்கனைகள்ல ரொம்ப உயர்ந்த தலைவரிடத்துல பணமும் அதிகாரமும் இருந்துச்சு. அவங்க தன்னோட மகளை எங்க இராணுவத்துக்குக் கூட்டிட்டு வந்தப்போ, எல்லாரும் அவளை புன்னகையோடு வரவேத்தாங்க. நாம் ஆர்வத்தோடு இருக்கணும், அப்போ, நம்மால கடைசியில அவங்களப் போல இருக்க முடியும்ன்னு மேலிடத் தலைவர்கள் அடிக்கடி எங்ககிட்ட சொன்னாங்க. அந்த நேரத்துல நான் ஒரு தலைவியா வர பாடுபடுவேன்னு எனக்கு நானே உறுதியெடுத்துக்கிட்டேன். அந்தஸ்தயும் பாராட்டயும் பெற்றிருப்பது ரொம்ப கௌரமா இருக்கும்ன்னு நான் நெனச்சேன். அப்போதுலயிருந்து, நான் என்னைய சிறந்தவளா காட்டிக்க என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செஞ்சேன், தலைவர்கள் சொன்ன எல்லாத்தயும் அப்படியே நான் பின்பற்றினேன். தலைவர்களுக்கு முன்னாடி நான் நல்லா செயல்பட்டேன், அவங்க என்னைய ரொம்ப விரும்புனாங்க. சீக்கிரத்துலயே, அவங்க என்னைய யூனிட்டின் தலைவியா பதவி உயர்வு செஞ்சாங்க. நான் உற்சாகமடைஞ்சேன். என்னோட பதவி உயர்வுக்குப் பிறகு நான் தலைவர்களுக்கு இன்னும் அதிகமா கீழ்ப்படிஞ்சேன். எங்களோட தினசரி வேலைகள்ல நான் முன்னோடியா இருந்தேன், சோம்பேறித்தனமா இருக்கத் துணியல. கீழ்நிலை வீரர்கள் சோம்பேறித்தனமா இருக்கறதப் பாத்ததும், நான் முகத்தக் கடினப்படுத்திக்கிட்டு, பின்விளைவுகள சந்திக்க நேரிடும்ன்னு மிரட்டினேன். அவங்கள்ல சிலர் அத விரும்பல, என்னோட முதுகுக்குப் பின்னாடி என்னையப் பத்தி கேவலமான விஷயங்களச் சொன்னாங்க. கீழான தரத்துல இருக்குற வீரர்கள் என்னோட பேச்சக் கேட்கும்படிக்கு, ஒரு நல்ல தோற்றத்த உருவாக்கவும் உயர்ந்த பதவியப் பெறவும் நான் கடுமையா உழைக்கணும் அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட கடின உழைப்பால, மறுபடியும் நான் அணித் தலைவியா பதவி உயர்வு பெற்றேன். அது உண்மையிலயே மரியாதைக்குரியதுன்னு உணர்ந்தேன். அதோடு, நான் அணித் தலைவியா ஆனதுக்கப்புறமா தனிப்படையினர் என்னோட பேச்சக் கேட்க ஆரம்பிச்சாங்க. ஆனா அணித் தலைவர்கள் இன்னும் உழைக்கவேண்டி இருந்துச்சு. அது களைப்படையச் செய்யுறதா இருந்துச்சு, அதனால், நான் தொடர்ந்து தரவரிசையில மேல ஏற வேண்டியிருந்துச்சுன்னு நான் நெனச்சேன். உயர் பதவியில, எனக்கு அதிக அதிகாரம் இருக்கும், அதோடு எந்த வேலையயும் செய்ய வேண்டியதில்ல. அது நல்லா இருக்கும்! உயர் பதவியப் பெற, நான் தொடர்ந்து கடினமா உழைக்க ஆரம்பிச்சேன், ஒவ்வொரு நாளும் கடினமா உழைச்சேன், அதே மாதிரி செய்யச் சொல்லி தனிப்படைகள கட்டாயப்படுத்தினேன். தலைவர்களால ஒதுக்கப்பட்ட பணிகள நாங்க எப்பவுமே கால அட்டவணைக்கு முன்னதாவே செஞ்சு முடிப்போம். தலைவர்கள் என்னோட வேலையில ரொம்ப மகிழ்ச்சியடைஞ்சாங்க. அதோடு, சீக்கிரத்துலயே, நான் படைப்பிரிவு தலைவியா பதவி உயர்வு பெற்றேன்.

படைப்பிரிவுத் தலைவியா என்னோட நிலையப் பாதுகாத்துக்கறதுக்காக, எங்களோட படைப்பிரிவு மத்தவங்களோடத விட பின்வாங்காம இருப்பத உறுதிப்படுத்திக்க, தனிப்படைப் பிரிவினர் நான் சொல்றதக் கேட்குறதுக்கான வழிகளக் கண்டுபிடிச்சேன். தனிப்படைப் பிரிவினர்கள் என்னோட பேச்சக் கேட்காதப்போ, தண்டனையா அவங்கள நிக்கவைக்கவோ அல்லது புஷ்அப் செய்யவோ வச்சேன். அதுக்கப்புறமா, அவங்க என்னோட பேச்ச அதிகமா கேட்டாங்க. அவங்க அதுக்கப்புறமா எனக்கு முன்னாடி சோம்பேறித்தனமா இருக்கத் துணியல, அதோடு ரொம்ப மரியாதையோடு இருந்தாங்க. நான் உண்மையிலயே மகிழ்ச்சியா இருந்தேன். ஆனாலும் கூட நான் அதிக நெருக்கடியின் கீழ இருந்தேன், நல்லா வேலை செய்யலேன்னா, மேலிடத் தலைவர் என்கிட்ட சொல்லிடுவாரு. விமர்சனத்தத் தவிர்க்கவும், கொஞ்சம் பாராட்டுகளப் பெறவும், நாங்க பணிகளச் செய்யுறப்போ, நான் எப்பவுமே கடுமையான தொனியில் படையினரை திட்டிக்கிட்டிருந்தேன். கொஞ்ச காலம் கழிச்சு, அவங்க என்னோட சுபாவத்த விரும்பல அதோடு என்னைய வெறுத்தாங்க. அவங்க என்னோட முகத்துக்கு முன்னாடி நல்ல விஷயங்களச் சொல்லுவாங்க, ஆனா என்னோட முதுகுக்குப் பின்னாடி என்னையப் பத்தி நிறைய மோசமான விஷயங்களச் சொன்னாங்க. நான் அதத் தெரிஞ்சுக்கிட்டப்போ, ரொம்ப சங்கடமா உணர்ந்தேன். சில நேரங்கள்ல நாங்க எங்களோட பணிகள முடிக்காதப்போ, தலைவர்கள்கிட்ட இருந்து விமர்சனங்கள எதிர்கொண்டேன். அந்த நேரத்துல, ஒருவேளை நான் ஒரு தரம் உயர்ந்திருந்தா, அதுக்கப்புறம் நான் திட்டுவாங்கியிருந்திக்க மாட்டேன், அதோடு நான் இவ்வளவு அழுத்தத்துல இருந்திக்கவும் மாட்டேன். அப்புறம், நான் ஜனங்களோட மதிப்பை அதிகமா பெறுவேன் அப்படின்னு நான் நெனச்சேன். அந்த இலக்க நோக்கி அமைதியா வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

கடைசியா ஒரு நாள், கேப்டன் என்கிட்ட, எல்லா படைப்பிரிவு தலைவர்கள்லயும், நான்தான் அவங்களுக்கு அதிக நம்பிக்கைக்குரியவளா இருந்தேன்னும், அவங்க எப்போதாவது கேப்டனாக பணியாற்றுறத நிறுத்திட்டா, நான் அவங்களோட இடத்தப் பெறுவேன்னும் சந்தோஷத்தோடு சொன்னாங்க. அதக் கேட்டதும் நான் ரொம்பவே உற்சாகமடைஞ்சேன். அவங்க என்னைய எவ்வளவு நம்புனாங்கங்கறது ஒருபோதும் எனக்குத் தெரிஞ்சதில்ல. சீக்கிரத்துலயே, நான் கேப்டன் பதவிய ஏத்துக்கிட்டேன். அதிகமதிகமான தனிப்படைப் பிரிவினர்கள் என்னைய உயர்வாப் பார்த்தாங்க, நான் போன எல்லா இடங்கள்லயும் எனக்கு மரியாத கிடைச்சுச்சு. நான் அதுக்கப்புறம் உழைச்சுக்கிட்டு இருக்கல, எனக்கு அதிக ஓய்வு நேரம் இருந்துச்சு. கேப்டன் பதவியில இருந்து எனக்குக் கிடைச்ச உயர்வின் உணர்வை நான் ரொம்ப அனுபவிச்சேன். ஆனா கொஞ்ச நாள் கழிச்சு, என்னோடு படைப்பிரிவு தலைவராக பதவி உயர்வு பெற்றவங்கள்ல சிலர் பொறாமைப்பட்டாங்க, அதோடு, என்னோட கட்டளைகளப் பின்பற்ற மாட்டாங்க. நான் ரொம்ப கோபமாக இருந்தேன், நான் மரியாதைய இழந்ததப்போல உணர்ந்தேன், அதனால அவங்கள என்னோட பேச்சக் கேட்கச் செய்ய எல்லாவிதமான வழிகளயும் யோசிச்சேன். ஆனா அவங்க இன்னும் கேட்கல. என்னால அவங்களக் கட்டுக்குள்ள வச்சிருக்க முடியலன்னு உணர்ந்தேன், ஆனா என்னோட அந்தஸ்துக்காக, நான் உறுதியா இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அதிக அதிகாரத்தோடு கூடிய உயர் பதவியக் கொண்டிருப்பது நான் நெனச்சதப்போல அவ்வளவு சிறப்பானது அல்லன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நான் சொன்னதச் செய்யாதப்போ எனக்குக் கீழ வேலை செய்யுறவங்கள நான் எப்பவுமே தண்டிச்சுத் திருத்தினேன், அதோடு எனக்கு அதிகமா கோபம் வந்துச்சு. அதோடு கூட, தனிப்படையினர என்னால கையாள முடியலன்னு மேலிடத் தலைவர்கள் சொல்லுவாங்களோன்னும் நான் திறமையற்றவள்ன்னு அவங்க நினைப்பாங்களென்னும் நான் பொதுவாவே கவலப்பட்டேன். ஒருவேளை நான் கேப்டன் பதவியக் கூட இழக்க நேரிடும். இது ரொம்ப மன அழுத்தம் நிறைந்ததாவும், ரொம்ப சோர்வடையச் செய்வதாவும் இருந்துச்சு. நான் உண்மையிலயே விட்டுவெளியேற விரும்புனேன், ஆனா அதுக்கப்புறம், எப்படி நிறையப் பேர் கேப்டனா இருக்க விரும்புவாங்கன்னும் அவ்வளவு சுலபமா எனக்கு அந்த இடம் கிடைக்கலன்னும், அதனால ராஜினாமா செய்யுறது அவமானமா இருக்காதா? அப்படின்னும் நான் நெனச்சேன். நான் உதவியற்றவளா உணர்ந்தேன், அதனால மன அழுத்தத்த பொறுத்துக்கிட்டு ஒவ்வொரு நாளையும் கடத்தினேன்.

ஆகஸ்ட் 2020ல, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கற நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைச்சுச்சு. நான் தினமும் தேவனோட வார்த்தைகள வாசிக்க ஆரம்பிச்சேன், சகோதர சகோதரிகளோடு கூடுகையில கலந்துக்கிட்டேன். நான் ரொம்ப சந்தோஷமா உணர்ந்தேன் அதோடு நான் அத ரொம்ப சந்தோஷமா அனுபவிச்சேன். ஒரு நாள், தேவனோட வார்த்தைகளோட ஒரு பத்திய நான் வாசிச்சேன். “சாத்தான் மிகவும் நுட்பமான ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அது ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற ஒரு முறையாகும். அது தீவிரமானதல்ல. இவ்வாறு சத்தானுடைய ஜீவித முறையையும், அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், சாத்தான் உருவாக்கும் ஜீவித இலக்குகளையும் நோக்கங்களையும், ஜனங்கள் அறியாமையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அறியாமலேயே ஜீவிதத்தில் லட்சியங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜீவித நோக்கங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும், அவை ‘புகழ்’ மற்றும் ‘ஆதாயம்’ ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பெரிய அல்லது பிரபலமான மனிதரும்—உண்மையில் எல்லா ஜனங்களும்—பின்பற்றும் அனைத்தும் ‘புகழ்’ மற்றும் ‘ஆதாயம்’ என்ற இந்த இரண்டு சொற்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். புகழ் மற்றும் ஆதாயம் கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்தி தங்களால் உயர் அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அனுபவிக்கவும், ஜீவிதத்தை அனுபவிக்கவும் முடியும் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயம் என்பது ஜனங்கள் சிற்றின்பத்தையும் மாம்சம் விரும்பும் இன்பத்தையும் பெற்றுக்கொள்ளும் ஜீவிதத்தைப் பெற பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலதனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனிதகுலம் அதிகமாக விரும்பும் இந்த புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, ஜனங்கள் விருப்பமின்றி, அறியாமலேயே, தங்கள் சரீரங்களையும், மனங்களையும், அவர்களிடம் உள்ள அனைத்தையும், அவர்களுடைய எதிர்காலங்களையும், தலைவிதிகளையும் சாத்தானிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் ஒரு கணம் கூட தயங்காமல் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் ஒப்படைத்த அனைத்தையும் மீட்டெடுப்பதன் அவசியத்தை ஒருபோதும் அறியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு சாத்தானில் தஞ்சமடைந்து, அதற்கு விசுவாசமாகி விட்டால், ஜனங்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டில் எதையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை. அவை சாத்தானால் முழுமையாகவும் நிச்சயமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக ஒரு புதைகுழியில் மூழ்கிவிட்டனர். அவர்களால் தங்களை விடுவிக்க முடியவில்லை(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). முழுக்க முழுக்க தங்களோட வாழ்க்கை முறைகளாலும் தவறான பாதைகள்ல அவங்க நடக்க முடிவு செய்யுறதாலும்தான் ஜனங்களோட வாழ்க்கை ரொம்ப வேதனையானதாவும் மன அழுத்தம் நிறைந்ததாவும் இருக்குதுங்கறத தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. சாத்தானால சீர்கெடுக்கப்பட்டதுக்கப்புறமா, எல்லோருமே மத்தவங்கள விட சிறந்தவங்களா இருக்கவும் அதிகாரத்தப் பெறவும் முயற்சி செய்யுறாங்க. அந்தஸ்தும், அதிகாரமும் இருந்தா, மரியாதையும், பாராட்டும் கிடைக்கும்ன்னும், ஜனங்க அவங்க சொல்றதக் கேட்பாங்கன்னும், அவங்க பெருமையா வாழ்வாங்கன்னும் நினைக்குறாங்க. அதனால ஜனங்க எல்லாருமே பெயரையும் ஆதாயத்தயும் விரும்புறாங்க, அந்தஸ்து மேல பேராசப்படுறாங்க, அதோடு அந்தஸ்தப் பின்தொடருறாங்க. நானும் அப்படித்தான் இருந்தேன். ராணுவத்துல சேர்ந்ததுக்கப்புறமா பெண் ராணுவ வீராங்கனைகள்ல முதலிடம் பிடிச்சு மத்தவங்களோட பாராட்டப் பெறணும்ன்னு ஆசைப்பட்டேன். அந்த இலக்கை அடையறதுக்கு, நான் படிப்படியா தரங்கள்ல உயர்ந்து, படைப்பிரிவு தலைவியாவும், அதுக்கப்புறம் கேப்டனாவும் பதவி உயர்வு பெற்றேன். என்னோட தரம் உயர்ந்ததால, நான் நிறையப் பேரை மேற்பார்வை செஞ்சேன். நான் அநாகரீகமான முறையில பேசுவேன், நடந்துக்குவேன், ஜனங்கள் மேல அதிகாரம் செலுத்துறதயும், அவங்களத் திட்டுறதயும் நான் விரும்புனேன். நான் சொல்றது சரியோ தப்போ, தனிப்படைப் பிரிவினர்கள் கேட்கணும். என்னோட நிலைய உறுதிப்படுத்திக்க, அந்தப் படைப்பிரிவு தலைவர்கள் நான் சொல்றதக் கேட்காதப்போ, நான் என்னோட அதிகாரத்தப் பயன்படுத்தி அவங்கள அடக்கினேன், அதோடு, எல்லா விதமான வழிகள்லயும் தனிப்படைப் பிரிவினரைத் தண்டிச்சேன். நான் எப்பவுமே கட்டளையிடுறவளாவும், மத்தவங்ககிட்ட எந்த பச்சாதாபமும் இல்லாதவளாவும் இருந்தேன். தனிப்படையினர் படிப்படியா என்கிட்டயிருந்து வெகுதூரம் விலகிட்டாங்க, என்னோடு பழகுறத விரும்பல. நான் கொஞ்சம் அந்தஸ்தப் பெற்றதுக்கப்புறமா, நான் பயமுறுத்துற நபரா மாறினேன். சில சமயங்கள்ல நான் யாரோடாவது மனம் விட்டுப் பேசணும்னு விரும்புனேன், ஆனா யாருகிட்ட பேசுறதுன்னு எனக்குத் தெரியல. நான் தலைவர்களால புறந்தள்ளப்படாம இருக்கும்படி, நான் அவங்ககிட்ட ரொம்ப பணிவா இருப்பேன் அதோடு எந்த அவமானத்தயும் தாங்கிக்குவேன். என்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மன அழுத்தமும் வேதனையும் நெறஞ்சதா இருந்துச்சு, நான் உண்மையிலயே ராஜினாமா செய்ய விரும்புனேன். ஆனா என்னோட அந்தஸ்து எனக்கு எப்படி பயனளிச்சுச்சுன்னு நான் நெனச்ச தருணத்துல, நான் கைவிட விரும்பல. பெயர் மற்றும் ஆதாயம்ங்கற சேத்துல நான் சிக்கிக்கிட்டேன், அது களைப்படையச் செய்யுறதாவும் துன்பகரமானதாவும் இருந்துச்சு. சாத்தான் ஜனங்கள சீர்க்கெடுக்கறதும் காயப்படுத்துறதுமான வழிகள்ல இதுவும் ஒண்ணுதான்ங்கறத அந்த நேரத்துல நான் உணர்ந்துங்கிட்டேன். அந்தஸ்தப் பின்தொடர்வது ஜனங்களோட காட்டுமிராண்டித்தனமான ஆசைகள அதிகதிகமா பெருகச் செய்யுது, அவங்களால இயல்பா பழக முடியாதபடிக்கு அவங்கள அதிக அளவுல அகந்தையுள்ளவங்களாவும் மத்தவங்களப் புறக்கணிப்பவங்களாவும் ஆக்குது. நான் என்னோட விசுவாசத்தப் பெற்றதுக்கு முன்னாடி, அந்தஸ்தப் பின்தொடருறதயும் மத்தவங்கள விட சிறந்தவளா நிற்க நாடுறதயும் லட்சியமும் வாக்குறுதியும் கொண்டிருப்பதுன்னு நான் எப்பவுமே நெனச்சேன். பெயரையும் அந்தஸ்தயும் பின்தொடர்றது சரியான பாதை இல்லங்கறத இப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன். இதையெல்லாம் உணர்ந்துக்கிட்டப்போ, பெயர், அந்தஸ்துங்கற கட்டுகள்லயிருந்து இருந்து விடுபட என்னைய வழிநடத்தணும்னு தேவனிடத்துல கேட்டு, நான் ஒரு ஜெபத்த ஏறெடுத்தேன்.

அதுக்கப்புறமா ஒரு நாள், சர்வவல்லமையுள்ள தேவனோட இணையதளத்துக்குப் பாடல்களப் பதிவிறக்கம் செய்யப் போனேன் அதோடு “நான் வெறும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட குட்டி ஜீவன்” அப்படிங்கற புதிய ஒண்ணப் பார்த்தேன்:

1 தேவனே! எனக்கு அந்தஸ்து இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்போது என்னையே நான் புரிந்துகொள்கிறேன். எனது அந்தஸ்து உயர்ந்தால் உம்முடைய உயர்த்துதலே அதற்குக் காரணமாகும், அது குறைவாக இருந்தால் உம்முடைய நியமனமே அதற்குக் காரணமாகும். எல்லாம் உமது கரங்களில் உள்ளது. எனக்கு எந்த விருப்பத்தேர்வுகளும் இல்லை, எந்தப் புகார்களும் இல்லை. நான் இந்த நாட்டிலும் இந்த ஜனங்கள் மத்தியிலும் பிறப்பேன் என்று நீர் ஆணையிட்டீர், நான் செய்ய வேண்டியது எல்லாம் உமது ஆளுகையின் கீழ் முற்றிலும் கீழ்ப்படிவதாகும், ஏனென்றால் எல்லாம் உமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளன.

2 அந்தஸ்தைப் பற்றி நான் சிந்திப்பதில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு சிருஷ்டி தானே. நீர் பாதாளக் குழியில், அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் என்னை வைத்தாலும், நான் ஒரு சிருஷ்டியைத் தவிர வேறல்ல. நீர் என்னைப் பயன்படுத்தினால், நான் ஒரு சிருஷ்டியாயிருக்கிறேன். நீர் என்னைப் பரிபூரணப்படுத்தினால், நான் இன்னும் ஒரு சிருஷ்டியாகத்தான் இருக்கிறேன். நீர் என்னைப் பரிபூரணப்படுத்தவில்லை என்றாலும், நான் இன்னும் உம்மை நேசிப்பேன், ஏனென்றால் நான் ஒரு சிருஷ்டியைத் தவிர ஒன்றுமில்லை.

3 நான் சிருஷ்டிப்பின் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சிருஷ்டியைத் தவிர வேறல்ல, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள் எல்லோரிலும் ஒருத்தியாக மட்டுமே இருக்கிறேன். என்னை சிருஷ்டித்தவர் நீரே, மேலும் நீர் விரும்பியபடி எனக்குச் செய்ய நீர் என்னை மீண்டும் ஒருமுறை இப்போது உமது கரங்களில் வைத்திருக்கிறீர். நான் உமது கருவியாகவும் உமது பிரதிபலிப்புப் படலமாகவும் இருக்கத் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் எல்லாம் நீர் நியமித்தவைகளாகும். அதை யாராலும் மாற்ற முடியாது. அனைத்து விஷயங்களும் அனைத்து நிகழ்வுகளும் உமது கரங்களில் உள்ளன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருக்க ஏன் விருப்பமில்லாதிருக்கிறாய்?” என்பதிலிருந்து

இந்தப் பாடலைக் கேட்டதும், பாடலோட வரிகள் உண்மையிலயே புதுமையானதா இருந்ததப் போல உணர்ந்தேன். அந்தஸ்தப் பெற்றிருக்கறதும் பெறாம போவதும் எல்லாமே தேவனால தீர்மானிக்கப்படுது, அது அவரோட கரங்கள்ல இருக்குது, நான் அதப் பின்தொடரக் கூடாதுன்னு உணர்ந்தேன். நான் ஒரு கேப்டனா இருந்தேன், ஆனா தேவனுக்கு முன்பா நான் எந்த அந்தஸ்தும் இல்லாத ஒரு அற்ப மனுஷியா இருந்தேன். மத்தவங்கள நான் கீழ்ப்படுத்தியிருக்கக் கூடாது. எப்படி நான் தனிப்படைகள அடக்கியிருந்தேன்னு நெனச்சப்போ, நான் உண்மையிலேயே குற்ற உணர்ச்சியயும் வருத்தத்தயும் உணர்ந்தேன். என்னோட அந்தஸ்த விட்டுட்டு அவங்களோடு நல்லாப் பழக விரும்பினேன். நான் தேவனிடத்துல ஜெபிச்சு, எனக்கு உதவி செய்யும்படி கேட்டேன். படிப்படியா, நான் என்னைய ஒதுக்கி வச்சுட்டு, அவங்களோடு தொடர்புகொள்ள முயற்சி செஞ்சேன், அதோடு அவங்கள அநாகரீகமா திட்டுறத நிறுத்திட்டேன். தேவனோட வார்த்தைகள என்னோட நிஜ வாழ்க்கையில அப்படிப் பயன்படுத்தியப்போ, அப்படியொரு சமாதான உணர்வ நான் பெற்றேன்.

அதுக்கப்புறம் ஒரு நாள் காலையில எங்களுக்கு ஒரு கூட்டம் நடைபெற்றுச்சு. என்னோட பொறுப்புல இருந்த ஒரு படைப்பிரிவுத் தலைவன் தன்னோட படைப்பிரிவுல இருந்த எல்லாரும் அங்க இருக்குறாங்களான்னு பாக்கல, ஆட்களோட தலையக் கணக்கிடல. எங்க யூனிட்ல இருக்குறவங்க தாமதமா வர இருந்தாங்க, எல்லா யூனிட்கள விடவும் ரொம்ப மெதுவா செயல்படுறவங்களா இருந்தாங்க. என்னோட நிர்வாகத் திறன் குறைவா இருந்ததா மேலிடத் தலைவர் நெனச்சுக்குவாருன்னும், தனிப்படைப் பிரிவினர்கள் என்ன நினைப்பாங்கன்னும் நான் கவலப்பட்டேன். கூட்டம் முடிஞ்சதும், நான் அவகிட்ட, “இப்ப எங்க போயிருந்த? ஏன் அவகாசம் கேட்கல? உன்னோட படைப்பிரிவுல யாரும் ஆட்களோட தலையக் கணக்கிடல. நீ நம்மளோட முழு யூனிட்டையும் பின்தங்க வைக்குற” அப்படின்னு ரொம்ப கோபமா கேட்டேன். ஆனா அவள் அத ஏத்துக்கல, உடனே என்னைய விட்டு விலகிப்போனாள். நாங்க வாக்குவாதம் செய்ய ஆரம்பிச்சோம். அப்போ, உடற்பயிற்சி ஆசிரியை வந்து ஏன் வாக்குவாதம் செஞ்சுக்கிட்டு இருந்தோம்ன்னு கேட்டாங்க. நாங்க ஒவ்வொருத்தரும் எங்க பக்கத்துத் தரப்புலயிருந்து விளக்கினோம், தனக்கு என்ன செய்வதுன்னோ அல்லது யார் தவறு செஞ்சாங்கன்னோ தெரியலன்னு உடற்பயிற்சி ஆசிரியை சொன்னாங்க. இதக் கேட்டதும் நான் கோபப்பட்டு, அவள் நான் சொல்றதக் கேட்காதது மட்டுமல்லாம, என்னைய விட்டு விலகியும் போனாள், அப்படியென்றால் அவள் தவறு செஞ்சாள்ன்னு அர்த்தம் இல்லையா? அதோடு, நான் அவளுக்கு மேல உயர்ந்தவளா இருக்குறேன், அதனால அவள் என்னோட பேச்சைக் கேட்டிருக்கணும். உடற்பயிற்சி ஆசிரியைக்கு யார் சரி, யார் தவறுன்னு தெரியாதுங்கறது முட்டாள்தனமா இல்லையா? அப்படின்னு யோசிச்சேன். நான் ரொம்ப வெறித்தனமா அங்கயிருந்து வெளியேறி கதவ சாத்தினேன். நான் குடியிருப்பு வளாகத்துக்குத் திரும்பி வந்தேன், ரொம்ப அநீதி இழைக்கப்பட்டதா நான் உணர்ந்தேன், என்னால கண்ணீர் விட்டு அழாம இருக்க முடியல. தளபதிக்கு எங்களோட வாக்குவாதத்தப் பத்தித் தெரிஞ்சதும், அவங்க, “அவங்க உன்னோட கேப்டன், அவங்க என்ன சொன்னாலும் சரிதான், அவங்க சொல்றதக் கேட்கணும்” அப்படின்னு படைப்பிரிவுத் தலைவர்கிட்ட சொன்னாங்க. படைப்பிரிவுத் தலைவி அவளோட வாதத்த வாதிட்டப்போ, தளபதி, “எங்க நிறுவனத்துல, எது எப்படின்னு சொல்ல கேப்டனுக்கு உரிமை இருக்குது, நீ கேட்கலேன்னா நீதான் தப்பு செய்யுற” அப்படின்னு கோபத்தோடு அவளக் கண்டிச்சாங்க. தளபதி அவகிட்ட சொன்னதக் கேட்டதும், நான் என்னோட உணர்வுகள வெளிப்படுத்த முடிஞ்சதப் போல உணர்ந்தேன். நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன், எனக்குக் கொஞ்சம் மரியாத கிடச்சதப் போல உணர்ந்தேன்.

ஆனா ஒரு நாள் என்னோட தினசரி வேத தியானங்கள்ல, அத எனக்கு உணர உதவுன தேவனோட வார்த்தைகள் சிலவற்ற நான் வாசிச்சேன். தேவனுடைய வார்த்தைகள் சொல்லுகின்றன, “ஒரு மனிதனுக்கு அந்தஸ்து கிடைத்ததும், அவனுக்குத் தன் மனநிலையைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் கடினமாகிறது, அதனால் அவன் அதிருப்தியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளைத் துரிதமாய் பயன்படுத்திக் கொள்வதில் இன்பங்கொள்ளுகிறான்; அவன் தனது திறனை வெளிப்படுத்த, தெளிவான காரணமின்றி அடிக்கடி கோபத்தில் பற்றியெரிந்து, தன் அந்தஸ்தும், அடையாளமும் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவான். நிச்சயமாக, எந்தவொரு அந்தஸ்தும் இல்லாத சீர்கெட்ட ஜனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. தங்கள் சொந்த அந்தஸ்தையும் மேன்மையையும் பாதுகாப்பதற்காக, அவர்கள் அடிக்கடி தங்கள் உணர்ச்சிகளையும், அவர்களின் ஆணவத் தன்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவத்தை அழியாமல் காக்கவும், நிலைநிறுத்தவும் மனிதன் கோபத்தில் பற்றியெரிந்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். மேலும் இந்தச் செயல்கள் மனிதன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகும்; அவை அசுத்தங்களாலும், திட்டங்களாலும், சூழ்ச்சிகளாலும், மனிதனின் சீர்கேடுகளாலும் மற்றும் தீமைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனிதனின் காட்டுத்தனமான லட்சியங்களாலும், விருப்பங்களாலும் நிரம்பியிருக்கின்றன. … மனிதனின் வெளிப்படுத்தும் தன்மையானது அசுத்த வல்லமைகளுக்கு ஒரு தப்பிச் செல்லும் வழியாகும். மேலும் அது மாம்ச மனிதனின் கட்டுப்பாடற்ற, தடுக்க இயலாத, தீய நடத்தையின் வெளிப்பாடாகும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் II”). “சாத்தானின் மனநிலைக்குள் பல வகையான சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன, ஆனால் மிகவும் வெளிப்படையானதும் மிகவும் தலைதூக்கி நிற்பதுமான ஒன்று அகந்தையான மனநிலையாகும். அகந்தையே மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வேராகும். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக அகந்தையுள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு அதிகமாகப் பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை எதிர்க்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது? அகந்தையான மனநிலைகளைக் கொண்டவர்கள், அனைவரும் தங்களுக்குக் கீழே இருப்பதாகக் கருதுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் விட மோசமாக, அவர்கள் தேவனை விட உயர்ந்தவர்கள் என்பதாகவும் நடந்து கொள்கிறார்கள், மேலும் அவர்களுடைய இருதயங்களுக்குள் தேவனைக் குறித்த பயம் இல்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதாகவும் அவரைப் பின்பற்றுவதாகவும் தோன்றினாலும், அவர்கள் அவரைத் தேவனாகக் கருதுவதே இல்லை. அவர்கள் எப்போதும் தாங்கள் சத்தியத்தைக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள் மற்றும் தங்களைக் குறித்த உலகத்தை நினைக்கிறார்கள். இதுவே அகந்தையான மனநிலையின் சாராம்சமும் வேருமாக இருக்கிறது, மேலும் இது சாத்தானிடமிருந்து வருகிறது. எனவே அகந்தை என்னும் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். மற்றவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்ற உணர்வு ஒரு அற்பமான விஷயமாகும். முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஒருவரின் அகந்தையான மனநிலையானது தேவனுக்கும், அவருடைய ஆளுகைக்கும் மற்றும் அவருடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவிடாமல் அவரைத் தடுக்கிறது; அத்தகைய நபர் எப்போதும் மற்றவர்களின் மீதான அதிகாரத்திற்காக தேவனுடன் போட்டியிட விரும்புவதாக நினைக்கிறார். இந்த வகையான நபர் தேவனிடம் சிறிதளவேனும் பயபக்தியாக இருப்பதில்லை, சொல்லப்போனால் தேவனை நேசிப்பதோ அல்லது அவருக்குக் கீழ்படிவதோ இல்லை. அகந்தையும் கர்வமும் கொண்ட ஜனங்களால், குறிப்பாகத் தங்கள் உணர்வுகளை இழந்து விட்ட அளவிற்கு மிகவும் அகந்தையுள்ளவர்களால், தேவன் மீதான தங்கள் விசுவாசத்தில் அவருக்குக் கீழ்ப்படிய முடியாது, மேலும் தங்களை உயர்த்திக் கொண்டு தங்களுக்குத் தாங்களே சாட்சியமளிக்கவும் கூடச் செய்வார்கள். அத்தகையவர்கள் தேவனை மிகவும் எதிர்க்கிறார்கள் மற்றும் தேவன் மீதான பயம் முற்றிலும் இல்லாமல் இருக்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருக்குது. அந்தஸ்தினால, ஜனங்க கட்டுப்பாட்டை இழந்தவங்களாவும் அகந்தையுள்ளவங்களாவும் ஆகுறாங்க. தங்களோட பெயரையும் அந்தஸ்தயும் பாதுகாக்க, அவங்க அடிக்கடி கோபத்த வெளிப்படுத்துகிறாங்க, ஜனங்களத் திட்டுறாங்க, அதோடு தங்களோட அதிகாரத்தக் காட்டுறாங்க. அது ஒரு அகந்தையான மனநிலையின் கட்டுப்பாடா இருக்குது. நான் ராணுவத்துல சேர்ந்தப்போ, அதிகாரியா இருந்து மத்தவங்களோட மதிப்பப் பெறணும்ங்கறதுதான் என்னோட நாட்டமா இருந்துச்சு. பதவியும் அதிகாரமும் பெற்றதுக்கப்புறமா, என்னோட வார்த்தைகளுக்கு அதிகாரம் இருப்பதா உணர்ந்தேன், நான் முன்னுரிமை எடுத்துக்கிட்டேன். நான் கேப்டனாக இருந்தேன், அதனால, படைப்பிரிவுத் தலைவர்களயும் தனிப்படைகளயும் கட்டுப்படுத்துற அதிகாரம் என்கிட்ட இருந்துச்சு. அவங்க நான் சொல்றதக் கேட்கணும், அவங்க அப்படிச் செய்யலேன்னா, நான் அவங்கள அநாகரீகமாத் திட்டி, அவங்களோட இடத்துலயே இருக்க வச்சேன். நான் ரொம்ப அகந்தையுள்ளவளா இருந்தேன். படைப்பிரிவின் தலைவி சரியான நேரத்துல ஆட்களோட தலையக் கணக்கிடாதப்போ, எங்க யூனிட்டின் முன்னேற்றத்த தடுத்தாங்க, நான் அவங்ககிட்ட கோபப்பட்டு பேசினேன், அவ கேட்கலங்கறது மட்டுமல்லாம, எனக்கு இடைஞ்சல் பண்ணினாள். அவள் என்னைய ஒரு பொருட்டா நினைக்கலன்னும், என்னைய இழிவாப் பார்த்தாள்ன்னும், அதோடு எல்லாருக்கும் முன்னாடி என்னைய தலை குனிய வச்சாள்ன்னும் உணர்ந்தேன். வம்பு செய்யவும், அவளத் திட்டித் தீத்துக்கவும், என்னோட அதிருப்தியை வெளிப்படுத்தவும் இத ஒரு சாக்கா பயன்படுத்திக்கிட்டேன். அது தனிப்படையினரும் கீழ்ப்படிதலோடு இருக்கணும்ன்னு அவங்கள எச்சரிக்கறதுக்காகவும்தான். என்னோட பார்வையில, நான் ஒரு கேப்டனா இருந்தேன், அவள் ஒரு படைப்பிரிவுத் தலைவியா இருந்தாள், அதனால என்னோட பேச்சை அவள் கேட்கணும். அவள் கேட்கலேன்னா, அதோடு என்கிட்ட முரண்பட்டாலும் கூட, நான் அவளத் திட்டி எது என்னன்னு காட்டணும். நான் ரொம்ப அகந்தையுள்ளவளாவும் கட்டுப்பாட்ட இழந்தவளாவும் இருந்தேன். எனக்கு அந்தஸ்து கிடைச்சவுடனேயே, யாராவது நான் சொல்றதக் கேட்கலேன்னா உடனே, நான் அவங்களத் திட்டித் தீர்த்தேன் அவங்கள ஒடுக்கவும் நான் விரும்பினதச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் என்னோட பதவியப் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இதன் விளைவா, யாருமே என்கிட்ட சேர விரும்பல. நான் ஒரு விசுவாசியா இருந்தேன், ஆனா நான் மாறியிருக்கல. நான் பகுத்தறிவில்லாத அகந்தையுள்ளவளாவும், எந்த மனித சாயலும் இல்லாதவளாவும் இருந்தேன், அதனால் ஜனங்க என்னைய வெறுத்து ஒதுக்கினாங்க, அதோடு தேவன் அத அருவருத்து வெறுத்தாரு.

என்னோட அனுபவங்களப் பத்தி ஒரு சகோதரியோடு பேசினேன், அவங்க தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய எனக்கு அனுப்பினாங்க, அது பயிற்சிக்கான பாதைய எனக்குக் கொடுத்துச்சு. “சிருஷ்டிகளில் ஒருவனான மனிதன் தனது சொந்த நிலையில் இருக்க வேண்டும் மற்றும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். சிருஷ்டிகரால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கடமையாகக் காத்துக்கொள்ள வேண்டும். உன் எல்லையை மீறி செயல்படாதே அல்லது உன் திறனுக்கு அப்பாற்பட்ட அல்லது தேவன் வெறுக்கத்தக்க காரியங்களைச் செய்யாதே. பெரியவராக இருக்க முயற்சிக்காதே அல்லது ஒரு தேவ நிலையில் உள்ளவராக அல்லது மற்றவர்களுக்கு மேலாக, தேவனாக மாற முயற்சிக்காதே. இவ்வாறு மாற ஜனங்கள் ஆசைப்படக்கூடாது. பெரியவராக அல்லது தேவ நிலையில் உள்ளவராக மாற முற்படுவது அபத்தமானதாக இருக்கிறது. தேவனாக மாற முற்படுவது இன்னும் அவமானகரமானதாக இருக்கிறது. அது அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கதாகும். எது பாராட்டத்தக்கது மற்றும் சிருஷ்டிகள் எல்லாவற்றையும் விட அதிகமாக வைத்திருக்க வேண்டியது என்னவென்றால், அது உண்மையான சிருஷ்டியாக மாறுவதாக இருக்கிறது. இதுவே எல்லா ஜனங்களும் பின்பற்ற வேண்டிய ஒரே குறிக்கோளாக இருக்கிறது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, ஜனங்களோட பாராட்டயும் மதிப்பயும் பெறுறதுக்கு உயர்ந்தவரா இருக்க முயற்சி செய்யுறது வெட்கக்கேடான ஒரு விஷயம்ங்கறது எனக்குப் புரிஞ்சுச்சு. நாம நம்மளோட இடத்துல இருந்து மனசாட்சியோடு நடந்துக்கணும். அதத்தான் தேவன் நம்மகிட்ட கேட்குறாரு. அதிகாரமுள்ள அதிகாரியாகவும், மத்தவங்க மேல அதிகாரம் செலுத்தவும், பாராட்டப்படவும், மத்தவங்கள நான் சொல்றதக் கேட்க வைக்கவும் நான் முன்னோக்கிச் செல்ல முயற்சி செஞ்சேன். அது தேவன் வெறுக்குற ஒரு விஷயம். நான் மனந்திரும்பாம, பெயரையும் அந்தஸ்தயும் பின்தொடர்ந்துக்கிட்டே இருந்தா, நான் ஒரு அவிசுவாசியப் போல அப்படியே இருப்பேன். அவிசுவாசிகள் பணம், நற்பெயர், அந்தஸ்து ஆகியவற்றுக்குப் பின்னாடி போறாங்க. இந்த விஷயங்களுக்காக அவங்க ஒருத்தரை ஒருத்தர் கொல்லுறாங்க சண்டை போடுறாங்க. ஒரு விசுவாசியாக, நான் அவிசுவாசியோட பாதையில இருக்கக்கூடாது. நான் சத்தியத்தப் பின்தொடரணும் ஒரு சிருஷ்டியா என்னோட இடத்துல இருக்கணும். இத உணர்ந்ததும், என்னோட தினசரி வாழ்க்கையில சத்தியத்தப் பின்பற்றவும் தேவனோட வார்த்தைகளின்படி செயல்படவும் நான் தயாரா இருந்தேன். நான் மத்தவங்களோடு சமமாக நடந்துக்கணும், ஒரு கேப்டன்ங்கற நிலைப்பாட்டுலயிருந்து மத்தவங்களுக்குக் கட்டளையிட்டுக்கிட்டு இருக்குறத நிறுத்தணும் அப்படின்னு நான் தீர்மானிச்சுக்கிட்டேன். நான் தேவனிடத்துல, “தேவனே, நான் பெயரையும் அந்தஸ்தயும் பின்தொடர்றத நிறுத்த விரும்புறேன், அதோடு என்னோட அகந்தையான மனநிலையால் வாழுறத நிறுத்த விரும்புறேன். சத்தியத்தக் கடைபிடிக்க எனக்கு வழிகாட்டுங்க” அப்படின்னு ஜெபிச்சேன்.

அதுக்கப்புறமா, நான் தினமும் அவங்ககிட்ட கவனமா பேசவும் அவங்க மேல அக்கறை காட்டவும் ஆரம்பிச்சேன். அவங்க ஏதாவது தப்பு செஞ்சப்போ, நான் அவங்கள தண்டிச்சுத் திருத்தணும்ன்னு தலைவர் விரும்பினாரு, முன்னாடி, என்னோட அந்தஸ்தத் தக்கவச்சுக்க அவங்களத் திட்டிக்கிட்டும் என்னோட அதிகாரத்தைக் காட்டிக்கிட்டும் இருந்ததப் போல, நான் இப்ப இல்ல, ஆனா என்னால அவங்களோடு பழகவும், அவங்க எங்க தவறியிருந்தாங்கன்னு அவங்களுக்குச் சொல்லவும், அடுத்த முறை சிறப்பாகச் செய்ய அவங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடிஞ்சுச்சு. இப்படி காரியங்களச் செஞ்சு கொஞ்ச நாளுக்கப்புறமா, அணித் தலைவர்களோடும், படைப்பிரிவுத் தலைவர்களோடும், தனிப்படையினரோடும் எனக்கு நல்ல உறவு இருந்துச்சு. தனிப்படையினர் சிலர் என்கிட்ட, எனக்கு வினோதமான ஒரு குணம் இருந்துச்சு, அவங்க என்னையப் பாத்து பயந்து, ஏதாவது ஒரு தவறு நடந்தா, நான் அவங்களத் திட்டுவேன்னு எப்பவுமே கவலைப்பட்டாங்க. ஆனா இப்ப, நான் ரொம்பவே நல்லா இருந்தேன், அவங்க மேல அக்கறையா இருக்க ஆரம்பிச்சேன். என்னோடு நல்லா பழக முடிஞ்சதா அவங்க உணர்ந்தாங்க அப்படின்னு சொன்னாங்க. இதக் கேட்டதும் நான் தேவனுக்கு நன்றி சொன்னேன் அதோடு நான் அவங்ககிட்ட, “நான் ஏன் இப்படி மாறினேன்னு தெரியுமா? அது, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டதாலதான். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் என்னைய மாத்துச்சு, அதனாலதான் எனக்கு இந்த மாற்றம் வந்திருக்குது. தேவனிடத்துல வர்றதுக்கு முன்னாடி, நான் அந்தஸ்தையும் மத்தவங்களோட பாராட்டையும் பின்தொடர்ந்தேன். என்னோட பதவியத் தக்க வச்சுக்க நான் எப்பவுமே உங்களத் திட்டிக்கிட்டு இருந்தேன். என்னோட விசுவாசத்தப் பெற்றதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சதன் மூலம், ஆணவத்தோடு ஜனங்களத் திட்டுறது சரியில்லங்கறதயும், அது ஒரு சீர்கெட்ட மனநிலையிலயிருந்து வருதுங்கறதயும், நான் அதச் செய்ய கூடாதுங்கறதயும் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அனுபவிச்சிருக்குற இந்த மாற்றத்த நான் சொந்தமா செஞ்சிருக்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவன் மேல நான் வச்சிருக்கிற விசுவாசத்தினால—அவரோட வார்த்தைகள் என்னைய மாற்றுச்சு” அப்படின்னு சொன்னேன். அவங்களால அத நம்பவே முடியல. நான் அவங்களோடு தொடர்ந்து சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டேன், தனிப்படையினர் சிலரோட முகங்கள்ல புன்னகை தோன்றுச்சு. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஆராயுறதுல அவங்க ஆர்வமுள்ளவங்களா ஆனாங்க. அதுக்கப்புறமா, சில படைப்பிரிவுத் தலைவர்களும், அணித் தலைவர்களும், தனிப்படையினர்களும் சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிட்டாங்க. நாங்க ஒண்ணா கூடி, தேவனோட வார்த்தைகளப் புசிச்சுப், பானம்பண்ணி, நல்லா பழகினோம், அதோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டு சாட்சி பகர்ந்தோம். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

ஒரு “நல்ல தலைவரின்” சிந்தனைகள்

என்னோட சின்ன வயசுலருந்தே என்னோட பெற்றோர், நட்போடு பழகணும், அணுகக்கூடியவளாவும் அனுதாபத்தோடும் இருக்கணும், மத்தவங்களுக்குப் பிரச்சனைகளோ...

கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருந்ததிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்

நான் ஒரு வீட்டுத் திருச்சபையில சக ஊழியரா இருந்தேன். 2000 ல ஒரு நாள், மேல்மட்டத் தலைவர்கள் ஒரு சக ஊழியர் கூட்டத்தக் கூட்டினாங்க. அவங்க,...

பூமியதிர்ச்சிக்குப் பின்

நான் 2019 இல் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன். அப்புறமா பின்னால நான் சர்வவல்லமையுள்ள தேவனின் பல வார்த்தைகள...

Leave a Reply