மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

நவம்பர் 29, 2021

விதின்னு சொன்னாலே, பணம், அந்தஸ்து இருந்தா, வெற்றி அடஞ்சா நல்ல விதின்னும், ஏழைங்க, தாழ்ந்தவங்க, பேரழிவால கஷ்டத்தால பாதிக்கபட்டவங்க எல்லாரும் இழிவா பார்க்கபட்டா, கெட்ட விதின்னும் அநேக மக்கள் நினைக்கிறாங்க. அதனால, விதிய மாத்த அறிவை தீவிரமா தேடுராங்க. இதனால பணத்தையும், அந்தஸ்தயும் பெறலாம், அப்போ அவங்க விதி மாறிரும் ன்னு நம்புறாங்க. பணம், அந்தஸ்து அப்புறம் வாழ்க்கையில வெற்றி பெற்றுட்டா நல்ல விதி இருக்குன்னு அர்த்தமா? பாடுபடுறதும், துன்பப்படுறதும், துரதிர்ஷ்டமும் உண்மையிலேயே, கெட்ட விதின்னு அர்த்தமாயிறுமா? அநேக மக்களுக்கு இது பத்தி சரியான புரிதல் இல்ல அதனால தங்கள் விதிய மாத்த இன்னும் அறிவை தீவிரமா தேடுறாங்க. ஆனா, அறிவால ஒரு நபருடைய விதிய மாத்த முடியுமா? யாரால மனுக்குலத்த இரட்சிக்கவும், நம்முடைய விதிய முழுசா மாத்தவும் முடியும்? இன்னைக்கு இந்த கேள்விய ஆழமா பாப்போம்.

who-can-save-mankind-and-change-fate

அன்றாட வாழ்கையில, அறிவ சம்பாதிக்க முடிஞ்ச அநேக மக்களால, பணத்தையும், அந்தஸ்தையும் கூட சம்பாதிக்க முடியுறத நம்மால பாக்க முடியும். வாழ்கையில அவங்க செழிப்பா இருக்காங்க, கூடவே புகழ் வாய்ந்தவங்களா, பாராட்டப்படுறவங்களா மாறிடுறாங்க. வெற்றி பெற்றுட்டாங்க, எல்லாராலும் அறியப்பட்டுட்டாங்க, எனவே, அவங்களுக்கு ஒரு சிறந்த விதி இருக் கிற மாதிரி தெரியுது. ஆனா அது உண்மையா? உண்மையிலே, அவங்க சந்தோஷமா இருக்காங்களா? அவங்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருக்கலாம் மேலும் உழைப்பாளிகளப் போலவும் தோணலாம் ஆனா அவங்க இன்னமும் வெறுமையாவும் துன்பமாவும் உணர்றாங்க, வாழணும்ங்ற உத்வேகத்த இழந்து போறாங்க. இன்னும் சிலர், போதை பொருளை எடுக்குறாங்க அல்லது தங்கள தாங்களே கொன்னு க் கிறாங்க. சிலர் தங்கள் அதிகாரத்த தவறா பயன்படுத்தி, தாங்க விரும்பினதெல்லாம் செய்றாங்க, குற்றங்களையும் செஞ்சி, அவமானப்பட்டு கடைசில, ஜெயிலுக்கு போறாங்க, இவங்க எல்லாம் பெ ரு ம்பாலும் அறிவுஜீவிகள் இல்லையா? ரொம்ப புத்தியாலியான, சட்டத்த புரிஞ்சிக்கிற இந்த மக்கள் ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான காரியங்கள செய்றாங்க? அவங்க ஏன் இப்படிப்பட்ட அபத்தமான காரியங்கள செய்யணும்? விஷயங்கள் ஏன் இப்படி மாறியிருது? இந்த நாட்கள்ல, ஒங்வொருவரும் கல்விய விரும்புறாங்க, அறிவ தேடுறாங்க எல்லா நாட்டுல உள்ள ஆளும் வர்க் கமும், எல்லா மக்களும் அறிவு ஜீவிகளாயிருக்காங்க. அவங்க கிட்ட தான் அதிகாரம் இருக்கு, உலகம் முழுவதும் அவங்கதான் தகுதியானவங்க. நியாயமா பாத்தா, அறிவு ஜீவிகளின் கட்டுப்பாட்ல, உலகம் அதிக அதிகமா நாகரிகமானதாகவும், நேசிக்கிறதாகவும் மாறணும். ஆனா, உலகத்துல உண்மையில என்ன தான் நடக்குது? அது பரபரப்புக்குள்ளும், குழப்பத்துக்குள்ளயும் போய்கிட்டே இருக்கு மக்கள் ஏமாத்றாங்க, சண்டை போடுறாங்க, அல்லது ஒருவர ஒருவர் கொல்லவும் செய்றாங்க. தேவன மறுதலிக்கவும், எதிர்க் கவும் செய்றாங்க, மனந்திரும்ப எந்த வாஞ்சையும் இல்லாம, சத்தியத்தை வெறுக்கவும், தீமைய உயர்த்தவும் செய்றாங்க. தேவ கோபாக்கினையையும், மனித கோபத்தையும் தூண்டுறாங்க. பேரழிவுக்கு மேல் பேரழிவு வருது, மேலும் உலகம் மாபெரும் யுத்தத்தின் விளிம்பில் இருக்குது. தெளிவா தெரியறது என்னன்னா தகுதி பெற்ற அறிவு ஜீவிகள் அதிகாரத்தில் இருப்பது, அமைதியான, சந்தோஷமான சமுதாயத்த உருவாக்குவதில்ல, மாறாக, மேலும் மேலும் பேரழிவையும், பாடுகளையுமே கொண்டு வருது. பேரழிவுகள் அதிகரித்துக் கொண்டே போகுது, யுத்தங்கள் தொடர்ச்சியா நடக்குது, மேலும் பூமி அதிர்ச்சிகளும், பஞ்சங்களும் வருது. உலகம் முடிவுக்கு வந்து விட்டதைப் போல, மக்கள் பயத்தால் நிறைஞ்சிருக்காங்க. இதுக்கான உண்மையான காரணம் தான் என்ன? மக்கள் அறிவையும், அதிகாரத்தயும், அந்தஸ்தையும் பெற்றுக் கொள்ளும் போது, அவங்க அநேக பயங்கரமான காரியங்கள ஏன் செய்றாங்க? அறிவு ஜீவிங்களையும், தகுதியானங்களையும் பெற்றிருப்பது ஒரு நாட்டுக்கும், மக்களுக்கும் ஏன் பேரழிவ கொண்டு வருது? இது எண்ணிப்பாக்க வேண்டியது! அறிவைப் பெறுறது, ஒருவர மேம்பட்டவராக்கி, பாவத்திலிருந்து விடுவிக்கவும் முடியுமா? அறிவைப் பெறுறது மக்களை இரக்கம் உடையவர்களாகவும், கெட்ட காரியங்கள செய்றதிலிருந்து தடுக்கவும் முடியுமா? அறிவு மக்களை பாவத்திலிருந்தும், சாத்தானிய அதிகாரத்திலிருந்தும் இரட்சிக்க முடியுமா? ஒரு மனிதனின் விதியை மாத்த அறிவால் முடியுமா என்பதைப் பத்தி எனக்கு அதிக சந்தேகம் இருக்குது. அறிவையும், அந்தஸ்த்தையும் பெற்ற பிறகும் ஏன் அநேகர் அதிக அதிகமாக இறுமாப்பாகவும், சுய நீதியுடையவர்களாகவும் மாறிறாங்க? அதிகமா தெரிஞ்சா ஏன் அவங்க சுய முக்கியத்துவம் உடையவங்களா ஆயிருராங்க? அதிகாரத்துக்கு வந்துட்டா, அவங்க குதர்க்கமாவும், தன்னிச்சையாவும், அழிவயும், பேரழிவயும் கொண்டுவாராங்க. சிறந்த கல்வி, முன்னேறிய விஞ்ஞானத்தோட, ஒரு நாடு சிறப்பா ஆட்சிசெய்யப்படணும், மக்கள் நாகரீகமா, சந்தோஷமா, ஆரோக்கியமா இருக்கணும். ஆனா அப்படி பட்ட நாடு உண்மயிலேயேஇருக்கா? ஒருக்காலும் இல்ல. அதனால மக்கள் கைய பிசஞ்சிக்கிட்டு இருக்காங்க! இத நான் தேவனுடைய வார்த்தயில வாசிச்சேன்: “மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல், மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன. மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்குப் போதுமான இடமோ, தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை. தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது. மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும், நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள், மனிதப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார் என்ற உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்விதமாக, தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப் புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும், தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையைக் குறித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள். மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும் அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை. புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். … தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். இவ்விதமாக, மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும் குறைவாகவே சந்தோஷமாகக் காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர். மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல், ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும், அதில் பிரயோஜனமில்லை. யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால், மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது. எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது. அறிவியல், அறிவு, சுதந்திரம், ஜனநாயகம், ஓய்வு, சௌகரியம் ஆகியவை மனுஷனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மாத்திரமே கொண்டுவருகின்றன. இந்தக் காரியங்கள் மூலமாகவும் கூட, மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, சமுதாயத்தின் அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான். இந்த காரியங்களால் ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் தடுக்க இயலாது. … எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான். தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது. அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு நியாயமான சமூகம் மனுக்குலத்திற்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய இரட்சிப்பும், அவர்களுக்கு அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே, தேவைகள், ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் மனுஷனின் ஆவிக்குரிய வெறுமை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இயலும். ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பையும் கவனிப்பையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், இதுபோன்ற ஒரு நாடோ அல்லது தேசமோ வீழ்ச்சியையும், இருளையும் நோக்கிச்செல்லும் சாலையில் காலடி எடுத்து வைக்கும், மேலும் தேவனால் நிர்மூலமாக்கப்படும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”).

தேவனுடைய வார்த்தை மிகச் சரியானது, அது விஷயத்தின் உண்மய வெளிப்படுத்துது. உண்மையில அறிவு எப்படி வருது? சந்தேகமே இல்லாம அது வரலாறு முழுவதும் பாராட்டு பொருளா இருந்த அந்த பிரபலமான மற்றும் பெரிய மக்கள் கிட்ட இருந்து வந்துருக்கு. கன் ஃபூசியனிசம், டார்வினின் பரிணாமக் கோட்பாடும் இருக்கு மார்க்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கையும் கம்யூனிசக் கோட்பாடும். நாத்திகம், பொருள்முதல்வாதம், பரிணாமக் கோட்பாடு இவ எல்லாம் புகழ் பெற்ற மக்கள் புத்தகங்களில் எழுதிய சிந்தனைகள், கோட்பாடுகளில் இருந்து வந்திருக்கு. அது நம்ம நவீன சமுதாயத்தில விஞ்ஞானத்துக்கும், கோட்பாட்டுக்கும் அஸ்திபாரம். யுகங்கள் தோறும் இந்த உபதேசமும் கோட்பாடும் ஆளும் வர்கத்தால ஊக்குவிக்கபடுது. அவங்க இத பாடபுத்தகத்துக்குள்ளேயும், வகுப்பு அறைக்குள்ளேயும் கொண்டு வந்துட்டாங்க இது மனிதகுலத்தின் பழமொழியாவே மாறிறிச்சி. அவங்க தலைமுறை தலைமுறையா கற்பிச்சி, துருப்பிடித்த, மற்றும் மரத்துப்போன தலைமுறையாகி, ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை தவறாக வழிநடத்தவும் சீர்கெடவும் பண்ற கருவிகளாவும் மா மாத்திட்டாங்க. எல்லா மனுக்குலமும் கல்வி, அறிவு, மேலும் விஞ்ஞானத்தின் தாக்கத்தினால அதிக அதிகமா சீர்கெட்டு போச்சு சமுதாயம் இருளடைஞ்சி, தேவனும் மனிதனும் கடும் கோவப்படுரமாதிரி அதிக குழப்பமாயிடுச்சி. இப்ப பேரழிவுகள் நடந்துக்கிட்டே இருக்கு, அழிவுகளின் தாக்கம் நிக்கிறமாதிரி இல்ல. பெரிய யுத்தம் எந்த நேரத்தலும் வெடிக்கலாம். உலகம் முடிவுக்கு வந்ததுட்ட மாதிரி மக்கள் பயத்துல வாழ்றாங்க. இது விஞ்ஞானமும், அறிவும் உண்மையா இல்லயா ன்னு உண்மயிலேயே நம்மள ஆச்சரியப்பட வைக்குது. மக்கள் அவைகள அதிக அதிகமா பின் தொடர் றாங்க, ஏத்துகிறாங்க ஆனா அவங்களால பாவத்துக்கு தப்பிக்க முடியாது அல்லது சமாதானத்த கண்டடையவும் முடியாது மாறா, அதிக அதிகமா சீர்கெட்டு, தீயவங்களாகி, தப்பிக்க முடியாத அளவு பாவம், வேதனைக்குள்ள மூழ்குறாங்க. எல்லாராலும் வணங்கபடுற புகழ்பெற்ற, பெரியவங்களுடைய உண்மயான நிலய பாப்போம். அவங்க தேவன மறுதலிக்கும், நிராகரிக்கும் நாத்திகவாதியாவும் ஆயிட்டாங்க. தேவன் இருக்குறாறுன்னு அவங்க நம்புறது இல்ல, இல்லனா அவர் எல்லாத்தையும் ஆளுறார்ன்னு விசிவாசிக்கிறதுமில்ல. குறிப்பா அவங்க தேவன் வெளிப்படுத்தும் சத்தியத்த ஏத்துக்கிறதும் இல்ல. அவங்களோட எல்லா சம்பாசனயிலயும் ஒரு வார்த்த கூட சமுதாயத்தோட அந்தகாரத்த அம்பலபடுத்றது இல்ல சாத்தானால சீர்கெடுக்கப்பட்ட மனுசனுடய சாராம்சத்தயும், நிஜத்தயும் ஒரு வார்த்தயில கூட அம்பலபடுத்றது இல்ல; ஆளும் வர்க்கங்களோட சுபாவத்தயும், தீய சாராம்சத்தயும் ஒரு வார்த்தயில கூட அம்பலபடுத்றது இல்ல, அல்லது தேவன் இருக்காருன்னும் அவருடைய கிரியைய பற்றி சாட்சி சொல்றதும் இல்ல, அல்லது தேவனுடைய செயல்கள், அவரது அன்பு பற்றி சாட்சி சொல்றதும் இல்ல, அல்லது தேவனுடைய வார்த்தைகளில் உள்ள சத்தியத்துடன் ஒத்துப்போ றதில்ல. அவர்களுடைய வார்த்தைகள் எல்லாம் தேவனை மறுதலிக்கும் எதிர்க்கும் துர்உபதேசங்கள். எல்லாத்திலயும், அவங்க பேச்சு ஆளும் வர்கத்தின் நலன தாங்குறதா மனுகுலத்த தவறா வழி நடத்தவும், சீர் கெடவும், தீங்கு இழைக்குறதாவும் இருக்கு, விளைவா, அவங்க மனுகுலத்த அந்தகாரமான, தீய வழியில நடத்திட்டாங்க, அன்றியும், மனுக்குலம் தேவன எதிர்த்து, துரோகம் செய்யும் சாத்தானாவே ஆயி டிச்சி. ஆளும் வர்க்கத்தில எப்படிப்பட்ட மக்கள் இருக்காங்க? அவங்க குணசாலிகளா, புத்திசாலிகளா? இல்லவே இல்ல. ஒரு நல்ல புத்திசாலியான ஒரு நபர் இனிதான் வரணும். அவங்களுக்கு இருக்கிறதா சொல்லப்படும் நல்ல குணமும் ஞானமும் எப்படி இருக்குதோ அப்படியே காட்டப்பட்டு வருது, திரைக்குப் பின்னால் அவங்க செய்த குற்றங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திடிச்சி. முழு வரலாற்றுலயும் சாத்தான் மனுக்குலத்த சீர்கெடுத்த வரலாறு முழுவதிலும், எந்த நல்ல அல்லது புத்திசாலி ஆட்சியாளர்களும் இருந்தது இல்லன்னும், அதிகாரத்தில் இருந்த அனைவரும் பேய்களின் உருவங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் தெளிவா இருக்கு. அவர்களின் கருத்துக்களில் மற்றும் கோட்பாடுகளில் எது மனிதகுலத்தை மிகவும் ஆழமாக கெடுத்தது? நாத்திகம், பொருள்முதல்வாதம், பரிணாமவாதம், கம்யூனிசம். அவர்கள் எண்ணற்ற துர் உபதேசங்களயும் பொய்களையும் பரப்பியுள்ளனர், “தேவன் இல்லை,” “எந்த இரட்சகரும் இருந்ததில்லை,” என்பதும் இதில் அடங்கும், “ஒருவரின் விதி அவரது கையில் உள்ளது,” மற்றும் “அறிவு உங்கள் விதியை மாற்ற முடியும்.” இந்த விஷயங்கள் சின்ன வயதிலிருந்தே மக்களின் இதயங்களில் வேர்விட்டு படிப்படியா வளர்ந்துருது. விளைவு என்ன? மக்கள் தேவனையும் அவரிடம் இருந்து வரும் எல்லாவற்றையும், அவர் வானம், பூமி மற்றும் அதில், உள்ள அனைத்தையும் சிருஷ்டித்தார் என்பதையும் கூட மறுதலிப்பதற்குத் தொடங்குகிறார்கள். மனிதன் தேவனால் சிருஷ்டிக்கபட்டவன், ஆனால் அவங்க இந்த உண்மைய மறுக்கிறாங்க, மனிதன் விலங்குகள் வகையைச் சேர்ந்தவன் போல. மனிதர்கள் குரங்குகளிலிருந்து வந்தாங்கன்னு அவங்க சத்தியத்த திரிக்கிறாங்க. இந்த பொய்யான, மதியீனமான அறிவார்ந்த கோட்பாடுகள் மக்கள் மனதை அபகரிச்சி, அவங்க இருதயங்கள ஆக்கிரமி ச்சி, அவங்களுடைய சுபாவத்தின் ஒரு பகுதியாக மாறிச்சி, எனவே அவங்க எல்லாரும் தேவன மறுதலிக்குறாங்க, தங்களை அவரிடமிருந்து விலக்கிக் கொள்றாங்க, மேலும் அவங்க சத்தியத்த ஏற்றுக்கொள்வது ரொம்ப கடினமா இருக்குது. அவங்க அதிக இறுமாப்பா, தீயவர்களா, எல்லா நேரத்திலும் சீர்கெட்டு போறாங்க. அவங்க எல்லா மனசாட்சியயும் நியாயத்தயும் இழக்குறாங்க. தங்கள் மனுஷிகத்தின் மேல உள்ள பிடியை விட்டு இரட்சிப்புக்கு தூரமாயிருறாங்க. இவ்வாறுதான் மனுக்குலம் பேய்களாக மாறும் அளவுக்கு சாத்தானால் சீர்கெடுக்க பட்றிச்சி. மக்கள் அறிவைத் தொடர்வதும், அத தங்கள் விதிய மாத்துறதுக்கு பயன்படுத்துவதும் தான் பரிதாபமான விளைவு ஆகும். விஞ்ஞானமும் அறிவும் சத்தியமல்ல நம்ம வாழ்க்கையாக மாற்ற முடியாது அது நம்ம வாழ்கயாக முடியாது ஆனா அவங்க சத்தியத்துக்கு முரணானவங்க அவங்க சத்தியத்திற்கு ஒவ்வாதவங்க. அவங்க செய்யக்கூடியதெல்லாம் சீர்கெட்டது, காயப்படுத்துறது, மனிதகுலத்த அழிப்பது தான்.

எனவே ஏன் இந்த விஷயங்கள் சத்தியம் இல்லன்னு சொல்லணும்? ஏனென்றால், அறிவு தேவனிடமிருந்து வருவதில்ல. ஆனால் அது மனிதன சாத்தான் சீர்கெடுத்ததிலிருந்து வருது. அது மனுக்குலம் வணங்குகிற அந்த பெரிய மற்றும் பிரபலமான மக்கள் கிட்ட இருந்து வருது. எனவே அறிவு சத்தியம் இல்லன்னு நாம உறுதியா சொல்லலாம். முதலாவது, அறிவு மக்கள் தங்கள் சீர்கெட்ட சாராம்சத்த தெரிந்து கொள்ள அல்லது அவர்களுக்கு சுய அறிவு கொடுக்க உதவ முடியாது. இரண்டாவது, அறிவால் மக்களின் சீர்கெட்ட மனநிலய சுத்தப்படுத்த முடியாது, ஆனால் மக்கள மேலும் மேலும் இறுமாப்பானவங்களா மட்டும் மாத்துது. மூணாவது, மனுக்குலத்த பாவத்திலிருந்து இரட்சிக்கவும், அவங்கள சுத்திகரிக்கவும் அறிவால முடியாது. நாலாவது, மக்கள் சத்தியத்த கத்துக்கிட்டு, தேவன அறியவும் சமர்ப்பிக்கவும் உதவாது. அஞ்சாவது, அறிவு மக்கள் உண்மையான மகிழ்ச்சியை பெற அல்லது அவங்களுக்கு ஒளிய கொண்டு வர உதவ முடியாது, குறிப்பாக அவங்களுக்கு ஒரு அழகான இலக்கயும் கொடுக்க முடியாது. ஆகவே அறிவு சத்தியம் அல்ல, அது பாவத்திலிருந்து அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனிதகுலத்த காப்பாற்ற முடியாது. எனவே அறிவு ஒரு நபரின் விதிய மாற்ற முடியாதுன்னு நாம நம்பலாம். தேவனிடமிருந்து வருவது மட்டுமே சத்தியம். தேவனுடைய வார்த்தைகள் மட்டுமே சத்தியம். சத்தியம் மட்டுமே மக்களின் ஜீவனாக இருக்க முடியும் அவங்க சீர்கேட்ட சுத்தம் செய்யவும், அவங்க தங்கள் பாவத்திலிருந்து தப்பிக்கவும், பரிசுத்தமாக்கவும் செய்யுது. சத்தியம் மட்டுமே மக்கள் தங்கள் மனசாட்சியயும் நியாயத்தயும் மீட்க வும் மற்றும் ஒரு உண்மையான மனித வாழ்கைய வாழ்ந்து காட்டவும் உதவிசெய்யுது. சத்தியமே மக்களுக்கு வாழ்க்கையில உண்மையான திசையயும் இலக்கையும் கொடுக்க முடியும். மேலும், சத்தியமே தேவனை அறிந்து கொள்ளவும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறவும், அழகான இலக்கை அடையவும் மக்களுக்கு உதவ முடியும். அதனால்தான் மாம்சத்தில் தேவன் வெளிப்படுத்திய சத்தியம் மட்டுமே சாத்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து மனிதர்களைக் இரட்சிக்கவும், முடியும், அவங்கள முழுமயா தேவனை நோக்கித் திரும்ப செய்யுது. இரட்சகர் மட்டுமே மனிதகுலத்த இரட்சிக்கவும் மனிதகுலத்தின் விதியைமாற்றி, நமக்கு ஒரு அற்புதமான இலக்கைக் கொடுக்கவும் முடியும். எனவே ஏன் அறிவால மனிதன இரட்சிக்க முடியாது? ஏனென்றால் மனிதன் சாத்தானால் மிகவும் ஆழமாக சீர்கெடுக்கப் பட்டிருக்கான். சாத்தானிய சுபாவங்கள் மற்றும் சாத்தானிய மனநிலைகளில் வாழ்ந்து தொடர்ந்து பாவம் மற்றும் தீமைய செய்றான். சரியான சந்தர்பத்தில் எது சரியோ அந்த தீமய செய்ய அவங்க திறன் உள்ளவங்க அவங்க அதிகாரத்த பெறும் நொடியில அவர்கள் தங்கள் உண்மையான நிறத்த காட்டுவாங்க கட்டவிழ்த்து விடப்படுவாங்க. அறிவு சாத்தானிடமிருந்து சீர்கெட்ட மனுஷீகத்தில் இருந்து வருது, எனவே அறிவு சத்தியம் அல்ல. மனுக்குலம் எவ்வளவுதான் சீர் கேட்ட கற்றாலும், அவங்க தங்கள் சொந்த சீர்கேட்டின் சாரம் மற்றும் உண்மைய அறிய முடியாது, அவங்க உண்மையிலேயே மனந்திரும்பி தேவனை நோக்கித் திரும்ப முடியாது. எவ்வளவு பெரிய அறிவும் ஒரு நபரின் பாவ சுபாவத்த தீர்க்க முடியாது, இன்னும் குறைவா தங்கள் சீர்கெட்ட மனநிலைய மாத்தவும் முடியாது. சீர்கெட்ட மனுஷனுக்கு எவ்வளவு அறிவிருந்தாலும் அவங்க பாவம், அல்லது சாத்தானின் ஆக்கிரமிப்புல தப்பி, பரிசுத்தத்த அடைய முடியாது. சத்தியத்த ஏற்றுக்கொள்ளாம அவங்களால தேவனுக்கு கீழ்ப்படிய முடியாது, அவர்களின் பாவ சுபாவ பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. சீர்கெட்ட மனுக்குலத்தின் அறிவு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், சத்தியத்த ஏற்றுக்கொள்வது கடினம் அவங்க தேவன மறுதலிக்கவும், எதிர்க்கவும் அதிக வாய்ப்புள்ளது. மனிதர்கள் அறிவைத் தொடரும் போது, அவங்கஇறுமாப்பாவும், சுய நீதி உள்ளவர்களாவும் ஆயிடுறாங்க. மேலும் அதிக லட்சியம் உள்ளவங்களா ஆயிடுறாங்க. அவங்க பாவ பாதையில் செல்வதை தவிர்க்க முடியாது. ஆகவே தான் அறிவு மக்கள சீர்கெடவும், தீங்கடயவும் அழிக்கவும் மட்டுமே செய்யும். அநேக மக்களால அறிவின் உண்மயான நிலயயோ இல்லனா உண்மயிலே எது நல்லதுன்னு பாக்க தெரியல. அவங்களால அறிவு ஆதாரத்தின் உண்ம நிலய பார்க்க முடியாது, ஆனா, சத்தியத்துக்கு பதிலா கண்ண மூடிக்கிட்டு அத ஆராதிச்சி பின்தொடர்ராங்க. அந்த எல்லா புகழ் பெற்ற மக்களும் பதவிக்கு வந்த பிறகு ஏன் மக்களுக்கு கஷ்டத்தயும், நாட்டுக்கு ஏராளமான தீமயும் கொண்டுவாரமாரி அதிக தீமய செய்ராங்க, எல்லாவித அழிவுகளயும் செய்றாங்க சரி செய்ய முடியாத அளவுக்கு கொடூரமான தவறுகள ஏற்படுத்துறாங்க? இவையே அறிவை ஆராதிப்பது, பின்பற்றுவதன் விளைவுகளாகும். அறிவு ஒரு மனிதனின் விதிய மாத்தாதுங்றத இது காட்டுது, ஒரு மனுசனுடய அறிவு எவ்வளவுதான் முன்னேறுனதா இருந்தாலும் அவங்களுக்கு விசுவாசம் இல்லனா, சத்தியத்த ஏற்கலன்னா தேவனால் அவங்கள இரட்சிக்க முடியாது. தேவனால் இவங்க ஆசீர்வதிக்கப்பட மாட்டாங்க, அல்லது இவங்க அறிவு எவ்வளவு முன்னேறுனதா இருந்தாலும் நல்ல விதி இருக்காது, மாறா, மரிக்கும் போது நரகத்துக்கு போவாங்க. தேவன் நீதி உள்ளவர், மனுசனுடய விதிய அவர் ஆள்றார், எனவே, அவருடய அங்கீகாரத்த அல்லது ஆசீர்வாதத்த பெறாத யாராலும் நல்ல விதிய பெற முடியாது, மாறா, அழிவுக்கும், நித்திய அழிவுக்கும், நரகத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்படுறாங்க.

இப்போ, ஞானம் மிக்கவர்கள் அறிவ கொண்டாடுறத நிறுத்திட்டாங்க. ஆனா பரிசுத்தவான்கள் வர வேண்டும் என்றும், இரட்சகர் பூமிக்கு வந்து மனிதகுலத்த காப்பாத்தணும்னு ஏங்குறாங்க. எந்த புகழ்பெற்ற, பெரிய மனுசனும் மனுக்குலத்த இரட்சிப்பாங்கனு ஒருவரும் நம்பல. தங்களயே அவங்களால இரட்சிக்க முடியாது, எப்படி அவங்களால மனுக்குலத்த இரட்சிக்க முடியும்? அந்த அறிவு ஒரு நல்ல விதியை உறுதி செய்ய முடியாது, அறிவியல் மற்றும் கல்வி மூலம் வளர்ச்சி யோசனை வெறும் முட்டாள்தனம் என்ற உண்மய இது காட்டுது. இரட்சகர் மாத்திரமே மனுக்குலத்த பாவத்திலிருந்தும், சாத்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் இரட்சிக்க முடியும்; சத்தியத்த வெளிப்படுத்தும் இரட்சகரால மட்டுமே நம்மள ஒளியின் வழியில் நடத்த முடியும்; இரட்சகர் வெளிப்படுத்திய அனைத்து உண்மைகளையும் ஏற்றுக்கொள்வது மட்டுமே நாம் முழுமையா தேவனால இரட்சிக்கபடுமாறு சாத்தானின் சீர்கேட்டிலிருந்து இருந்து நம்மை விடுவிக்க முடியும் மேலும், அவருடைய அங்கீகாரத்தையும், ஆசீர்வாதத்தயும் பெற முடியும். நம்ம விதிய முழுமயா மாத்த இது மட்டுமே ஒரே வழி. ஒரு நபரின் விதியமாற்றுவது இரட்சகரின் தோற்றத்தையும் கிரியையயும் ஏற்றுக்கொள்வதன் மூலம் நடக்கிறது என்பது தெளிவாகிறது கடைசி நாட்களில் இரட்சகர் வெளிப்படுத்திய அனைத்து சத்தியங்களையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், கடைசி நாட்கள்ல தேவனின் நியாயத்தீர்ப்ப ஏற்பது மூலம் சுத்தம் செய்யப்படுவதினால நடக்குது. எளிமயா சொன்னா ஒருவரின் விதிய உண்மையில் முழுமயா மாற்ற ஒரே வழி சத்தியத்த ஏற்றுக்கொள்வது தான். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே. தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார். தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார். மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவனுடைய ராஜரீகத்திலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன. மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும் தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன. நீ ஒரு மெய்யான கிறிஸ்தவனானால், எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன என்பதை நிச்சயமாக நம்புவாய். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியை தேவன் மாத்திரமே அறிவார். இந்த மனுக்குலத்தின் போக்கை தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார். மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால், ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால், மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும், மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”).

அறிவுஜீவிகள் தங்களக்கூட காப்பாத்த முடியாது, எனவே அவங்க எப்படி மனிதகுலத்தை காப்பாத்த முடியும்? என்பத நாம தெளிவா பாக்கலாம். இரட்சகர் மட்டுமே மனுக்குலத்த பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும், மனிதர்களுக்கு ஒளியையும், மகிழ்ச்சியையும், அழகான இருப்பிடத்தையும் தர முடியும். அப்படியானால் இரட்சகர் யார்? எந்த சந்தேகமும் இல்ல அவர் மனித வடிவில் வந்த மனுவுருவான தேவன் மனுக்குலத்தின் மத்தியில் இரட்சிப்பின் கிரியைய செய்ய வந்தாரு. அவர் நம்ம இரட்சகர். இரட்சகர் தேவனுடைய உருவமா இருக்காரு, அவர் மனித மாம்சத்தில் வந்த தேவன் என்று நாம் சொல்லலாம். மனுவுருவெடுத்தல் என்றால் அது தான். எனவே, தேவ மனுவுருவெடுத்தல் என்பது இரட்சகர் நம்மத்தியில் பூமிக்கு இறங்கி வந்ததுதான். மனுக்குலத்த சிருஷ்டித்ததிலுருந்து மனுக்குலத்த இரட்சிக்க தேவன் ரெண்டு முறை மனுவுரு எடுத்துருக்கார். 2000 வருஷத்துக்கு முன்னால அவர் கர்த்தராகிய இயேசுவா மாம்சமாகி ஒரு பிரசங்கத்தில சொன்னாரு “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று(மத்தேயு 4:17). அநேக சத்தியங்கள அவர் வெளிப்படுத்தினாரு இறுதியில் மனுக்குலத்த மீட்பதற்காக சிலுவையில் அறையப்பட்டு, மனுக்குலத்திற்கு பாவநிவாரணபலியானாரு. இது மனிதன் மீதான தேவனுடைய அன்பின் தெளிவான நிரூபணம். உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் தங்கள் இரட்சகராக கர்த்தராகிய இயேசுவ ஏத்துக்கிட்டாங்க, அறிக்கையிட்டு, தேவனிடம் மனந்திரும்பி, அவங்க பாவங்களிலிருந்து அவங்க மன்னிக்கப்பட்டாங்க. அவங்க தேவன் கொடுத்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும், அவருடைய கிருபையின் பெரும் பகுதியையும் அனுபவிச்சாங்க. கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியைய முடிச்சபோது அவர் அநேக முறை தீர்க்கதரிசனம் கூறினார் “நான் விரைவாக வருகிறேன்” மற்றும் “மனுஷகுமாரனுடைய வருகை.” “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்(மத்தேயு 24:44). அதனால்தான் கர்த்தராகிய இயேசுவ இரட்சகராக ஏத்துக்கிட்ட ஒவ்வொருவரும் அவங்கள இரட்சிக்க இரட்சகர் கடைசி நாட்களில். பூமிக்கு வரவும், பரலோக ராஜ்யத்துக்குள் அவர்களை எடுத்து செல்லவும் காத்திருக்காங்க. கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் சொன்னார், “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்(யோவான் 17:17). அவரது தீர்க்கதரிசனங்கள் அடிப்படையில், கடைசி நாட்களில் தேவன் மனுஷ குமாரனாக மாம்சமாவார் மனுக்குலத்த முழுமையாகச் சுத்திகரிப்பதற்கும் இரட்சிப்பதற்கும் சத்தியங்கள வெளிப்படுத்துவார். ஒரு அழகான சென்றடையும் இடத்துக்கு மனிதகுலத்த எடுத்து செல்ல. மனுவுருவானதேவன் கடைசி நாட்களில் இரட்சகராக மனுக்குலத்துக்கு தோன்றுறாரு. எனவே நாம் எப்படி இரட்சகரை வரவேற்க வேண்டும்? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது(யோவான் 10:27). “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). கர்த்தராகிய இயேசு மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டினார் கர்த்தரை வரவேற்பதற்கான திறவுகோல் கடைசி நாட்களில அவர் திரும்பி வரும்போது, தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள ஏற்றுக் கொள்றதும், தேவனுடைய சத்தத்தக் கேட்பதும் ஆகும். பேரழிவுகள் இப்போது நம் கண்களுக்கு முன்னால் உள்ளன. உலகம் முழுவதும், சர்வ வல்லமையுள்ள தேவன் மட்டுமே மனிதகுலத்த இரட்சிக்கும் அனைத்து சத்தியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் பாக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன தவிர எவரும் சத்தியத்த பேசல. சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு என்பத இது நிருபிக்குது கடைசி நாட்களில மனுக்குலத்த இரட்சிக்க வந்த இரட்சகர் அவர். இது ஒரு பெரிய நல்ல செய்தி. இரட்சகரின் இரட்சிப்ப ஏத்துக்கிறது மட்டுமே நமது விதிய மாத்தும், தேவனால வெளிப்படுத்தபட்ட சத்தியங்கள ஏத்துக்கணும்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

சர்வவல்லமையுள்ள தேவன் அநேக சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இது “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” போன்ற புத்தகங்களில் லட்சகணக்கான வார்த்தயால் தொகுக்கபட்டிறுக்குது. இவை அனைத்தும் கடைசி நாட்களில் தேவன் அவருடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக வெளிப்படுத்திய சத்தியங்கள் நியாயப்பிரமாண காலம், கிருபையின் காலம், கிருபையின் காலத்ல தேவன் வெளிப்படுத்திய சத்தியங்களவிட இது ரொம்ப அதிகம். மனுக்குலத்தக் காப்பாற்றுவதற்கான தனது நிர்வாகத் திட்டத்தின் எல்லா ரகசியங்கள சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்கார். மக்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளாத வேதத்தின் எல்லா ரகசியங்களயும் அவர் வெளிப்படுத்தியிருக்கார். அவர் சாத்தானால சீர்கெடுக்கப்பட்ட, தேவனுக்கு விரோதமான நம்முடைய சாத்தானிய சுபாவம் பற்றிய சத்தியத்த வெளிப்படுத்தி இருக்கார். இது நமது பாவத்தன்மயின் வேர் மற்றும் நமது சீர்கேட்டின் சத்தியத்த அறிந்துகொள்ள உதவுது. உண்மையின் முன்பாக மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துக்கிறாங்க தங்கள வெறுத்து, வருத்தப்பட்டு, உண்மையா மனந்திரும்புறாங்க. ஜனங்க கடைப்பிடிக்கவும், நுழையவும் வேண்டிய எல்லா சத்தியத்தயும் தேவன் வெளிப்படுத்துறார். அதனால் நாம் அவரது வார்தயினால வாழலாம். மேலும், உண்மையான மனித சாயலும், சத்தியத்தின் சாயலும் கொண்டு வாழ்ந்து காட்டலாம். தேவனுடைய வாக்குத்தத்தங்களயும் ஆசீர்வாதங்களையும் பெற ஒரே வழி அதுதான். சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இவை எல்லாம் மனுக்குலத்தின் சீர்கேட்ட தூய்மைப்படுத்தவும், சாத்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றவும் உள்ளன எனவே, நாம் தேவனை நோக்கித் திரும்பி, தேவன அறிந்து கொள்ளலாம். இந்த சத்தியங்கள் மட்டுமே வாழ்கைக்கான உண்மைகள், இரட்சிப்ப பெறுவதுக்கான போதனைங்க. இது ஒரு நபரின் விதியை தலகீழா மாற்ற போதுமானது, ஒரு அழகான சென்றடையும் இடத்துக்குள்ள நுழைய அவங்களஅனுமதிக்குது—தேவனுடைய ராஜ்யம். பெரும் பேரழிவுகள் ஏற்கனவே தொடங்கிடுச்சி. இரட்சகரின் தோற்றத்தையும் கிரியையயும் ஏத்துக்கிறது மட்டுமே அவங்க நல்ல நம்பிக்கை நனவாகுறத்துக்குஒரே வழி. சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய எல்லா சத்தியங்களையும் ஏற்றுக்கொள்வது மட்டுமே தேவனுடைய அங்கீகாரத்த பெற ஒரே வழி, பெரும் பேரழிவுகளில் இருந்து தேவனின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களை பெற, அவர்கள் வாழ இன்னும், தேவனால் அவருடைய ராஜ்யத்துக்குள் கொண்டுவரப்படவேண்டும். இரட்சகர் வெளிப்படுத்திய எல்லா சத்தியங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஆனால், அவர்களுடைய கற்பனையின் பொய்யான தேவன் அல்லது தீய ஆவி வந்து அவர்களை பேரழிவிலிருந்து காப்பாற்றும் வரை காத்திருந்தால் அது ஒரு மாயையே. இறுதியில் வெறுங்கையுடன் இருப்பாங்க, அவுங்க முயற்சியிலருந்து எதையும் பெறமாட்டாங்க. தவறான தேவன்கள் மற்றும் தீய ஆவிகளும் மக்களை இரட்சிக்க முடியாது. மாம்சத்தில் வந்த தேவன் மட்டுமே இரட்சகராக மனுக்குலத்த காப்பாத்த முடியும். அது மட்டுமே மக்கள் ஒரு நல்ல விதியையும் இலக்கயும் பெற ஒரே வழி. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). “கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்?

நாம ஏற்கெனவே சில தடவ கடைசி நாட்கள்ல செய்யப்படும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியயப் பத்திப் பேசி இருக்கோம். நாம இன்னைக்கு யார் இந்த...

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....

மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

நம்ம எல்லாருக்கும் தெரிந்தபடி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசு என்ற மனிதனா தேவன் இந்த பூமியில மாம்சமா...

தமிழ் பிரசங்க குறிப்புகள்: ஒன்றான மெய் தேவன் யார்?

ஒரே உண்மையான தேவனைக் கண்டுபிடிப்பதற்கான வழி இதுதான், தேவனின் சிம்மாசனத்தின் முன் பேரானந்தம் அடைந்து, முழு இரட்சிப்பைப் பெறுங்கள். கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.