நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டீர்களா?

ஏப்ரல் 16, 2023

நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டீர்களா

கர்த்தரின் விசுவாசிகள் யாவரும் அவரது வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று, நாம் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்களைப் பற்றி ஓரளவு ஐக்கியங்கொள்ளவும் மற்றும் கர்த்தரின் வருகையைப் பற்றிய பல்வேறு புரிதல்களைப் பற்றி விவாதிக்கவும் போகிறோம். பெரும்பாலான ஜனங்கள் கர்த்தர் திரும்பி வரும்போது மேகங்கள் மீது இறங்குவார் என்று நம்புகிறார்கள், ஆனால் வேதாகமத்தில் உள்ள கர்த்தராகிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனங்களின்படி, அவர் திரும்பி வந்து மனுஷகுமாரனாக வார்த்தைகளை உரைப்பார். கர்த்தர் பல சந்தர்ப்பங்களில் மனுஷகுமாரனின் வருகை அல்லது தோற்றம் பற்றி தீர்க்கதரிசனமாக உரைத்தார், மேலும் மனுஷகுமாரனின் வருகை என்பது தேவன் மாம்சத்தில் தோன்றி கிரியை செய்வதைக் குறிக்கிறது. இது மட்டுமே தெளிவான விளக்கமாகும், நீங்கள் அதை ஒரு மதத் திருச்சபையில் கேட்பதற்கு வாய்ப்பில்லை. மனுஷகுமாரனின் வருகை, அல்லது தோன்றுதல் என்பது ஒரு மிகப்பெரிய இரகசியம், அவருடைய தோன்றுதலையும் கிரியையையும் ஏற்கெனவே வரவேற்காமல் யாரும் அதை அறிந்துகொள்ள மாட்டார்கள்.

வேதாகமத்தில் கர்த்தருடைய திரும்பி வருதலைப் பற்றி ஏராளமான தீர்க்கதரிசனங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அப்போஸ்தலர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் போன்ற மனுஷர்களிடமிருந்து அல்லது தேவதூதர்களிடமிருந்து வந்தவையாக இருக்கின்றன. ஜனங்கள் மேற்கோள் காட்ட முனையும் தீர்க்கதரிசனங்கள் மனுஷர்களிடமிருந்து வந்தவை, எனவே கர்த்தர் வெளிப்படையாக மேகங்களின் மீது இறங்கி வருவதைக் காண அவர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் உண்மையில், கர்த்தருடைய வருகை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்(மத்தேயு 24:36). அந்த நாள் அல்லது மணிநேரம் யாருக்கும் தெரியாது என்பதாலும், பரலோக தூதர்களுக்கோ அல்லது குமாரனுக்கோ கூட தெரியாது என்பதாலும், மனுஷர்களாலோ அல்லது தேவதூதர்களாலோ கொடுக்கப்பட்ட கர்த்தரின் வருகையைப் பற்றிய வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஏதேனும் உண்மையிலேயே துல்லியமாக இருக்க முடியுமா? அவை அவ்வளவு துல்லியமாக இருக்க முடியாது. எனவே, நாம் கர்த்தரை வரவேற்க விரும்பினால், கர்த்தராகிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனங்கள் சொல்லுகிறதையே நாம்அடிப்படையாகப் பயன்படுத்த வேண்டும் வேண்டும். அதுவே கர்த்தரை வரவேற்பதற்கான நமது ஒரே நம்பிக்கையாகும். கர்த்தர் மேகங்கள் மீது இறங்கி வருவார் என்று பிடிவாதமாக வலியுறுத்தும் அனைவரும், அழுகைக்கும், பற்கடிப்புக்கும் பேரிடர்களுக்கும் உள்ளாக நேரிடும். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; … வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). கர்த்தராகிய இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் என்ன பார்க்க முடிகிறது? கடைசி நாட்களில் அவர் மனுஷகுமாரனாகத் திரும்பி வருகிறார் என்று கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன. மனுஷகுமாரன் உண்மையில் மனுவுருவானவராக இருக்கிறார், மேலும் அவர் முதலாவதாக வார்த்தைகளை அறிவிப்பார், பல சத்தியங்களை வெளிப்படுத்துவார், மேலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை சகல சத்தியங்களுக்குள்ளும் வழிநடத்துவார். கர்த்தர் வந்து சத்தியங்களை வெளிப்படுத்துவதன் மூலமாக என்ன கிரியையைச் செய்வார்? சந்தேகமில்லாமல், அவர் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்து மனுக்குலத்தின் முழுமையான இரட்சிப்புக்கான கிரியைச் செய்வார். அப்படியானால் கர்த்தரை நாம் எப்படி வரவேற்க முடியும்? அவர் மனுஷகுமாரனாக வருவதாலும், மனுஷகுமாரன் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதுவுமின்றி முற்றிலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருக்கிறார் என்பதாலும், அவருடைய வெளித்தோற்றத்தை மட்டுமே கொண்டு தேவனுடைய தோன்றுதல்தான் இது என்பதை யாராலும் பார்க்க முடியாது. மனுஷகுமாரனுடைய பேச்சுகளைக் கேட்டு, இது தேவனுடைய சத்தம்தானா என்பதைப் பார்ப்பதே முக்கியமானதாகும். கர்த்தரை வரவேற்பது என்பது தேவனுடைய சத்தத்தை அங்கீகரிப்பதன் மூலமும் அவருக்குக் கதவைத் திறப்பதன் மூலமும் நிறைவேற்றப்படுகிறது. அவர் சத்தியங்களைக் கூறி ஜனங்கள் அவரது குரலுக்கு செவிகொடுக்கவில்லை என்றால், அவரை வரவேற்க அவர்களுக்கு வழியே இருக்காது. இது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மீண்டும் மீண்டும் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). இது மொத்தம் ஏழு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, கர்த்தரை வரவேற்க, தேவனுடைய சத்தத்தைக் கேட்பது மிகவும் முக்கியமானதாகும்; அவரை வரவேற்க இதுதான் ஒரே வழியாகும். கர்த்தரை வரவேற்பதற்கான திறவுகோல் என்னவென்று இப்போது உங்களுக்குத் தெரியுமா? கர்த்தரை வரவேற்க, நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்க நிச்சயம் நாட வேண்டும், இந்தச் "சத்தம்" திரும்பி வந்திருக்கிற கர்த்தர் வெளிப்படுத்திய பல சத்தியங்களையும், ஜனங்கள் இதற்கு முன் ஒருபோதும் கேள்விப்பட்டிராத அனைத்து சத்தியங்களையும், வேதாகமத்தில் ஒருபோதும் பதிவு செய்யப்பட்டிராத விஷயங்களையும் குறிப்பிடுகிறது. மனுஷகுமாரனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்றும், அவை அனைத்தும் தேவனுடைய சத்தம்தான் என்றும் புத்தியுள்ள கன்னிகைகள் கேட்டு, மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகி, கர்த்தரை வரவேற்கிறார்கள். சத்தியத்தை வெளிப்படுத்தும் வல்லமை கர்த்தருக்கு மட்டுமே உண்டு; கர்த்தர் மட்டுமே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். மனுஷகுமாரன் வெளிப்படுத்தின வார்த்தைகளைக் கேட்டு அலட்சியமாக இருக்கிறவர் அல்லது அவற்றைப் புறந்தள்ளுகிறவர், அல்லது சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர் யாராக இருந்தாலும், அவர் கர்த்தரால் கைவிடப்படும் புத்தியில்லாத கன்னிகையாவார். அவர்கள் நிச்சயமாக, அழுது, பற்களைக் கடித்துக்கொண்டு பெரிய பேரழிவுகளில் விழுவார்கள். இப்போதைக்கு, மத உலகம் கர்த்தரை இன்னும் வரவேற்கவில்லை; மாறாக, அவர்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகி, தேவனைக் குற்றம் சாட்டி, மறுத்தலித்து, தொடர்ந்து விரக்தி நிலையில் உள்ளனர். தேவனுடைய ஆடுகளாக இருப்பவர்கள், தேவனுடைய சத்தத்தைக் கேட்டபின், கர்த்தரை வரவேற்கத் தங்களை அனுமதித்து, மெய்யான வழியை ஆவலுடன் தேடி ஆராய்கிறார்கள். எனவே நாம் தெளிவாக இருக்க வேண்டும்: கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வரும்போது, ​​அவர் மனுஷ குமாரனாகத் தோன்றி சகல சத்தியங்களையும் வெளிப்படுத்துகிறார், மேலும், கர்த்தர் வெளிப்படுத்திய இந்தச் சத்தியங்கள் அனைத்தும் எங்கே இருக்கின்றன என்று தேடுவதும், தேவன் எந்த திருச்சபைக்குள் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தேடுவதும்தான் கர்த்தருடைய தோன்றுதலைத் தேடுவதில் நமக்கு முக்கியமானதாகும். மனுஷகுமாரன் வெளிப்படுத்திய சத்தியங்களை நீங்கள் கண்டுபிடித்தவுடன், அந்த சத்தத்தின் பிறப்பிடத்தைப் பின்பற்றுவதன் மூலம் தேவனுடைய தோன்றுதலையும் கிரியையையும் உங்களால் காண முடியும். கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்ட சகல சத்தியங்களும் மனுக்குலத்தை சுத்திகரித்து இரட்சிக்கும் என்று நீங்கள் கண்டறிந்தவுடன், நீங்கள் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருப்பீர்கள், அதன் பின்னர் நீங்கள் அவரை வரவேற்றிருப்பீர்கள். கர்த்தரை வரவேற்க இதுவே சிறந்த வழி, மற்றும் எளிய வழியாகும். வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியமில்லை, மேகங்களில் இறங்கிவரும் கர்த்தரை வரவேற்க மலையுச்சியில் நிற்க வேண்டிய அவசியமில்லை, நேரம் தவறாமல் ஜெபிக்கவோ, அல்லது உபவாசித்து ஜெபிக்கவோ வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கான உங்கள் தேடலில் ஒருபோதும் ஓய்வெடுக்காமல், கவனமாய் விழித்திருந்து காத்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில், உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம்: அப்படியானால், நாம் கேட்பது தேவனுடைய சத்தமா என்பதை நம்மால் எப்படி அடையாளம் காண முடியும்? உண்மையில், தேவனுடைய சத்தத்தைக் கேட்பது அவ்வளவு கடினமானதே அல்ல. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). தேவனுடைய தோன்றுதல் மற்றும் கிரியையைப் பற்றி யாராவது சாட்சியளிப்பதையோ அல்லது அவர் பல சத்தியங்களை வெளிப்படுத்தியிருப்பதையோ நீங்கள் கேட்கும் எந்தத் தருணத்திலும், உடனடியாக இதை ஆராய்ந்து பார்த்து, தேவன் பேசியதாகக் கூறப்படும் இந்த வார்த்தைகள் சத்தியம்தானா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அவை சத்தியமாக இருந்தால், நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் தேவனுடைய ஆடுகளால் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியும். இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, இது ஒருவர் எவ்வளவு படித்தவராய் இருக்கிறார் என்பதையோ, வேதாகமத்தை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறார் என்பதையோ, அல்லது அவருடைய அனுபவத்தின் ஆழத்தையோ சார்ந்தது அல்ல. கர்த்தராகிய இயேசுவால் பேசப்பட்ட பல வார்த்தைகளைக் கேட்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி உணர்கிறோம்? கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றிய எந்த அனுபவமும், புரிதலும் இல்லாவிட்டாலும் கூட, அவற்றைக் கேட்டவுடனேயே அவை சத்தியம் என்பதையும், அவை அதிகாரமும் வல்லமையும் வாய்ந்தவை என்பதை நாம் உணரலாம்; அவை மனித புரிதலுக்கு அப்பாற்பட்டு ஆழமானவையும் இரகசியமானவையுமாய் இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும்—இதுவே ஏவப்படுதல் மற்றும் உள்ளுணர்வைத் தூண்டுதலின் பங்காகும். இதை நம்மால் தெளிவாக வெளிப்படுத்த முடிகிறதோ இல்லையோ, இந்த உணர்வு சரியானது, மற்றும் ஒரு நபருக்கு இருதயமும் ஆத்துமாவும் இருந்தால், தேவனிடத்திலிருந்து வருகிற வார்த்தைகளின் வல்லமையையும் அதிகாரத்தையும் அவர்களால் உணர முடியும் என்பதைக் காட்ட இது போதுமானதாய் இருக்கிறது. தேவனுடைய சத்தத்தைக் கேட்பது என்பது அப்படித்தான் இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் வேறு என்ன குணாதிசயங்களைக் கொண்டுள்ளன? இதை இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம். தேவனுடைய வார்த்தைகள் நமக்கு வாழ்க்கைக்கான போஷாக்கை அளிக்கின்றன; அவை இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன, புதிய காலத்தைத் திறந்து வைக்கின்றன மற்றும் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்றன. மேய்க்கவும், நீர்ப்பாய்ச்சவும் மற்றும் ஜனங்களுக்கு வழங்கவும் கர்த்தராகிய இயேசு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சத்தியங்களை வெளிப்படுத்த முடிந்ததைப் போலவே இது இருக்கிறது; கர்த்தர் பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களையும் வெளிப்படுத்தினார், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற பாதையை மனுக்குலத்திற்குக் கொண்டு வந்தார், கிருபையின் காலத்தைத் திறந்து கொடுத்தார், நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் மனுக்குலத்தின் மீட்பின் கிரியையை முடித்தார். இது எந்த மனுஷனாலும் நிறைவேற்ற முடியாத ஒன்றாக இருந்தது. அப்படித்தானே? அப்படியானால், இந்நாட்களிலும், அநேக சத்தியங்களை வெளிப்படுத்தி, பல வருஷங்களாக வார்த்தைகளை அறிவித்துக்கொண்டிருக்கும் மனுஷகுமாரன் ஒருவர் இருக்கிறார். இந்த வார்த்தைகளை வாசித்த பிறகு பலர், அவை பரிசுத்த ஆவியானவரின் உரைகள் என்றும், தேவனுடைய சத்தம் என்றும் உணர்ந்திருக்கிறார்கள், மேலும் சத்தியங்களை வெளிப்படுத்தும் இந்த மனுஷகுமாரன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்றும், அவர் மாம்சத்தில் உள்ள சர்வவல்லமையுள்ள தேவன் என்றும் நிச்சயமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி, மனுக்குலத்தைச் சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் தேவையான சகல சத்தியங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் ராஜ்யத்தின் காலத்தைத் தொடங்கி, கிருபையின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார். தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படிக்கு சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சிலவற்றைக் கேட்க, எல்லோரும் விரும்புகிறார்களா? சர்வவல்லமையுள்ள தேவனுடைய உரைகளின் சில பத்திகளை நாம் வாசிப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”). “பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையைக் கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள ‘ஒலிவ மலையில்’ இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் ஆகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’”). “நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”).

சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் சில பத்திகளைக் கேட்டபின், எல்லோரும் இப்போது எப்படி உணர்கிறீர்கள்? இது தேவனுடைய சத்தம்தானா? சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒவ்வொரு கடைசி வாக்கியமும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது, மேலும் ஜனங்களை அவர்களின் உள்ளத்தின் ஆழம் வரை அசைக்கிறது. தேவனைத் தவிர மனுக்குலம் முழுவதையும் பற்றி யாரால் பேச முடியும்? மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தேவனுடைய சித்தத்தை யாரால் வெளிப்படுத்த முடியும்? கடைசி நாட்களில் தேவனுடைய திட்டத்தையும், அவருடைய கிரியைக்கான ஏற்பாடுகளையும், அதோடு கூட, மனுக்குலத்தின் முடிவு மற்றும் சென்றடையும் இடத்தை முன்கூட்டியே யாரால் வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் தெரியப்படுத்த யாரால் முடியும்? தேவனைத் தவிர, யாராலும் இவற்றைச் செய்ய முடியாது. மனுக்குலம் முழுவதுக்குமான சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளின் அதிகாரத்தையும் வல்லமையையும் நாம் உணர உதவுகின்றன. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் நேரடியாக தேவனிடமிருந்து வந்தவை, தேவனுடைய சத்தமாக இருக்கின்றன! சர்வவல்லமையுள்ள தேவனுடைய இந்த வார்த்தைகளைப் பொறுத்தவரை, தேவன் வானத்தில் உயர்ந்து நின்றுகொண்டு, உலகம் முழுவதையும் நோக்கிப் பார்த்துப் பேசுவதைப் போன்றதாகும். சர்வவல்லமையுள்ள தேவன் சிருஷ்டிப்பின் கர்த்தர் என்ற நிலையிலிருந்து மனுக்குலத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார், எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத நீதியுள்ள, மகத்துவமான தேவனுடைய மனநிலையை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளுக்குள் உள்ள சத்தியங்களை அவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் அல்லது அவற்றை முதன்முறையாகக் கேட்கும்போது உண்மையான அனுபவமோ அல்லது புரிதலோ இல்லாதிருந்தாலும், தேவனுடைய ஆடுகளான அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் வல்லமையும் அதிகாரமும் நிரம்பியிருப்பதை உணருவார்கள், மற்றும் இது தேவனுடைய சத்தமாய் இருக்கிறது என்றும் மற்றும் அது தேவனுடைய ஆவியிடமிருந்து நேரடியாக வருகிறது என்றும் உறுதியாக இருப்பார்கள். இது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறது, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27).

இப்போது நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறோம், மற்றும் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களைப் பார்த்திருக்கிறோம், எனவே சத்தியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் தேவன் என்ன கிரியையைச் செய்ய வந்தார்? கர்த்தராகிய இயேசுவின் வாயிலிருந்து வந்த தீர்க்கதரிசனங்களால் நிரூபிக்கப்படக்கூடிய நியாயத்தீர்ப்பின் கிரியையை அவர் கடைசி நாட்களில் செய்ய வந்திருக்கிறார். “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:27). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; … வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). பேதுருவின் முதல் புத்தகத்தின் 4வது அத்தியாயம், 17வது வசனத்தை நம்மால் மறந்துவிட முடியாது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” இந்தத் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக உள்ளன. கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கும், மேலும் இது கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு கிரியையை ஏற்றுக்கொண்ட அனைவரின் மத்தியிலும் செயல்படுத்தப்படும். அதாவது, மனுவுருவான மனுஷகுமாரன் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும் பூமியில் அநேக சத்தியங்களை வெளிப்படுத்தி, சகல சத்தியங்களுக்குள்ளும் பிரவேசிக்கும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இது கடைசி நாட்களில் இரட்சகரால் நிறைவேற்றப்பட்ட நியாயத்தீர்ப்பு கிரியையும், நீண்ட காலத்திற்கு முன்பே தேவனால் திட்டமிடப்பட்ட கிரியையுமாய் இருக்கிறது. இப்போது மாம்சத்தில் உள்ள மனுஷ குமாரனாகிய சர்வவல்லமையுள்ள தேவன், கொஞ்ச காலத்திற்கு முன் வந்து, மனுக்குலத்தின் சுத்திகரிப்பு மற்றும் இரட்சிப்புக்கான சகல சத்தியங்களையும் வெளிப்படுத்தி, உலகம் முழுவதையும் அசைத்துக்கொண்டும், அனைத்து மதங்களையும் மதப்பிரிவுகளையும் அசைத்துக்கொண்டும் இருக்கிறார். அதிகமான ஜனங்கள் தேவனுடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து, மெய்யான வழியைத் தேடி ஆராய்ந்து வருகின்றனர். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் அனைத்து முக்கிய இரகசியங்களையும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், மனுக்குலத்தை நிர்வகிப்பதில் தேவனுடைய நோக்கங்களையும், மனுக்குலத்தை இரட்சிக்க தமது மூன்று கட்ட கிரியைகளை அவர் எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதையும், மனுவுருவாதல் பற்றிய இரகசியங்கள் மற்றும் வேதத்திற்குப் பின்னால் உள்ள உண்மை சம்பவம் போன்ற சத்தியங்களின் இரகசியங்களையும் நமக்குச் சொன்னார்; அதற்கும் மேல், சர்வவல்லமையுள்ள தேவன், மனுக்குலம் சாத்தானால் எவ்வாறு சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையையும், தேவனை எதிர்க்கும் நமது சாத்தானிய குணத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார், அதே நேரத்தில், நம்முடைய சீர்கெட்ட மனநிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு முழுமையாக இரட்சிக்கப்படுவதற்கான நடைமுறைப் பாதையைச் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு வகையான நபர்களுக்கான முடிவையும், ஜனங்களின் உண்மையான சென்றடையும் இடங்களையும், தேவன் எவ்வாறு காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதையும், கிறிஸ்துவின் ராஜ்யம் எவ்வாறு தோன்றும் என்பதையும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியுள்ளார். சத்தியத்தின் இந்த இரகசியங்கள் ஒவ்வொன்றும் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சர்வவல்லமையுள்ள தேவன் கோடிக்கணக்கான வார்த்தைகளை உரைத்துள்ளார், மேலும் இந்த வார்த்தைகள் அனைத்தும் மனுக்குலத்தை நியாயந்தீர்ப்பதற்கும் சுத்திகரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சத்தியங்களாய் இருக்கின்றன. இது கடைசி நாட்களில் தேவன் செய்த நியாயத்தீர்ப்பு கிரியையாகும். இது மனுக்குலத்தை முழுவதுமாக சுத்திகரித்து இரட்சிப்பதற்கு வார்த்தைகளால் மட்டுமே செய்யப்படும் ஒரு கட்ட கிரியையாகும்.

அப்படியானால், நியாயத்தீர்ப்பின் கிரியையை சர்வவல்லமையுள்ள தேவன் எவ்வாறு செய்கிறார்? அவருடைய வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்தக் கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). “தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனின் கிரியை முதன்மையாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதாகும். இந்த அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், அவர் மனுஷனிடம் அதிக சத்தியத்தைக் கொண்டுவருகிறார், மேலும் கடைப்பிடிப்பதற்கான பல வழிகளையும் அவனுக்குச் சுட்டிக்காட்டுகிறார், இதன் மூலம் மனுஷனை ஜெயங்கொண்டு அவனது சொந்த சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை இரட்சிக்கும் அவரது நோக்கத்தை அடைகிறார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியைக்குப் பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகு, கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு கிரியையானது முதன்மையாக சத்தியத்தை வெளிப்படுத்துவதன் மூலமும், மனுக்குலத்தை நியாயந்தீர்ப்பதற்கும், சுத்திகரிப்பதற்கும், இரட்சிப்பதற்கும் சத்தியத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் செய்யப்படுகிறது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில், சத்தியத்தை வெளிப்படுத்தியும் தமது நியாயத்தீர்ப்பின் கிரியை செய்தும் தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டைச் சுத்திகரிக்கிறார். அவர் ஒரு கூட்ட ஜனங்களை இரட்சித்து, பூரணப்படுத்துகிறார், தேவனுடன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டவர்களை ஒரு குழுவாக உருவாக்குகிறார்: அது தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் பலனாக இருக்கிறது. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியையின் கவனம் இங்குதான் வைக்கப்படுகிறது! இதனால்தான், சர்வவல்லமையுள்ள தேவனாகிய இரட்சகர், தாம் வந்ததிலிருந்து சத்தியங்களை வெளிப்படுத்தி வருகிறார், ஜனங்கள் கொண்டிருக்கும் ஒவ்வொரு வகையான சீர்கெட்ட மனநிலையையும் அம்பலப்படுத்தி நியாயந்தீர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் நம்மைக் கிளைநறுக்கிக் கையாள்வதன் மூலமும், நம்மைச் சோதித்துப் புடமிடுவதன் மூலமும் நமது சீர்கெட்ட மனநிலையை சுத்திகரித்து, மறுரூபப்படுத்திக்கொண்டிருக்கிறார்; இது மனுஷனுடைய பாவத்தன்மையின் மூலக்காரணத்தை சரிசெய்கிறது, பாவத்தை முற்றிலும் கைவிடவும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதிக்கவும் நமக்கு உதவுகிறது. இந்தக் கட்டத்தில், கர்த்தராகிய இயேசு ஏற்கனவே மனுக்குலத்தை மீட்டுவிட்டார், எனவே மனுக்குலத்தை நியாயந்தீர்க்க இரட்சகர் ஏன் கடைசி நாட்களில் சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று நினைத்து சிலர் கொஞ்சம் குழப்பமடையக் கூடும். ஏனென்றால், கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியையை மட்டுமே செய்தார், அதாவது கர்த்தராகிய இயேசுவின் மீது வைக்கும் விசுவாசம் பாவ மன்னிப்பைக் கொண்டுவருகிறது, அல்லது விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம், இது ஜனங்களை ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக வந்து, தேவனுடன் ஐக்கியங்கொள்வதற்கும், அவருடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க நம்மைத் தகுதிப்படுத்துகிறது. இருப்பினும், பாவநிவாரண பலியாக கர்த்தராகிய இயேசுவின் பங்கு மனுக்குலத்தின் பாவங்களை மன்னிக்க மட்டுமே உதவியது; அதனால் மனுஷனுடைய பாவத்தன்மையின் மூலப் பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை. அதனால்தான், மனுக்குலத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகும், நாம் எப்போதும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம் என்ற உண்மையை கிருபையின் காலத்தில் வாழும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். நம்மால் நமக்கே உதவ முடியவில்லை, பாவத்தை விட்டுவிட வேண்டும் என்று எவ்வளவு அதிகமாக ஆசைப்பட்டாலும், நம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை. பகலில் பாவம் செய்து, இரவில் அறிக்கையிட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம். அதனால்தான் கர்த்தராகிய இயேசு மறுபடியும் வந்தபோது சத்தியத்தை வெளிப்படுத்தி கடைசிநாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்தார், ​​மனுஷனை அவர்களுடைய சீர்கெட்ட மனநிலைகளிலிருந்து முழுமையாகச் சுத்திகரித்து, அவர்களுடைய பாவத்தன்மையின் வேரை சரிசெய்யும் கிரியையான கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையை இது குறிக்கிறது. இப்படித்தான் ஜனங்கள் முற்றிலும், முழுமையாக இரட்சிக்கப்பட முடியும். கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியையை அனுபவிக்காமல் கர்த்தராகிய இயேசுவிடமிருந்து மீட்பை மட்டுமே மக்கள் அனுபவித்தால், தங்கள் செயல்களில் எது பாவமானது என்பதை அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர அவர்களால் வேறு எதையும் செய்ய முடியாது; மனுஷனின் பாவத்தன்மையின் மூலக்காரணத்தை அவர்களால் பார்க்க முடியாது. அதாவது, அவர்களால் மனுஷனின் சாத்தானிய சுபாவத்தையும் சாத்தானிய மனநிலையையும் புரிந்துகொள்ள முடிவதில்லை, அவற்றை சரிசெய்யவும் முடிவதில்லை. மனுஷனுடைய பாவத்தன்மைக்கு மூலக்காரணமான சீர்கெட்ட மனநிலையின் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை அனுபவிப்பதாகும். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நியாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). நியாயத்தீர்ப்பு கிரியையை தாமே வந்து நிறைவேற்றுவதற்காக தேவன் ஒரு மாம்சீக வடிவத்தை எடுத்திருக்கிறார், அநேக சத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் நீண்ட காலமாக ஜனங்களை அம்பலப்படுத்தி நியாயத்தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் மட்டுமே ஜனங்களால் தங்கள் சீர்கேட்டின் உண்மையைத் தெளிவாகப் பார்க்க முடியும் மற்றும் அவர்களின் சொந்த சுபாவம் மற்றும் சாராம்சத்தை உணர்ந்துகொள்ள முடியும். இந்த நியாயத்தீர்ப்பின் மூலம், ஜனங்கள் தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் கூட காண்பார்கள், இதனால் தேவனிடத்தில் பயபக்தியை ஏற்படுத்திக்கொள்வார்கள். இதன் மூலம் மட்டுமே நமது சீர்கெட்ட மனநிலைகளைப் படிப்படியாகக் களைந்து, உண்மையான மனித சாயலை வாழ்ந்து காட்ட முடியும். நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்வதற்கு மனுவுருவான தேவன் சத்தியங்களை வெளிப்படுத்துவதுதான் இதை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி என்று கூறலாம். இதனால்தான் சர்வவல்லமையுள்ள தேவன் வார்த்தைகளை உரைப்பதும், நியாயத்தீர்ப்பு கிரியையைச் செய்ய சத்தியத்தைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாக, மிகவும் தீவிரமானதாக மற்றும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது!

ஒரு விசுவாசி முழுமையாக இரட்சிக்கப்படுவாரா மற்றும் ஒரு நல்ல சென்றடையும் இடத்தை அடைய முடியுமா என்பதற்கான திறவுகோல், தேவனுடைய தோன்றுதலையும் கிரியையையும் அவர்களால் வரவேற்க முடிகிறதா என்பதில் உள்ளது. அப்படியானால், தேவனுடைய சத்தத்தை ஒருவரால் கேட்க முடிகிறதா இல்லையா என்பதே முக்கியமான விஷயமாகும். சர்வவல்லமையுள்ள தேவன் கடைசிநாட்களில் தோன்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிரியை செய்துகொண்டு வருகிறார், ஆனால் இன்னும் ஏராளமான ஜனங்கள் தேவனுடைய குரலைக் கேட்பதை நாடவில்லை. சில ஜனங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள், மற்றும் தேவனுடைய சத்தத்தைக் இன்னும் கேட்காமலேயே அல்லது கர்த்தரை வரவேற்காமலேயே தங்கள் அந்திய வருஷங்களை அடைகிறார்கள். அவர்கள் கர்த்தரால் புறம்பாக்கப்ட்டிருக்கிறார்கள் மேலும் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. அதனால்தான் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் கூடியவராக இருப்பது என்பது, ஒருவரால் முழுமையான இரட்சிப்பை அடைய முடியுமா மற்றும் ஒரு நல்ல சென்றடையும் இடத்தைப் பெற முடியுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான திறவுகோலாக இருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை அநேகர் வாசித்து, அவை சத்தியம் என்று ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர் என்பதை அவர்களால் இன்னும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது உண்மையிலேயே அவமானகரமானது, மனிதனுடைய முட்டாள்தனம் மற்றும் குருட்டுத்தன்மையின் விளைவாக இருக்கிறது. கர்த்தரை அறியாதவர்கள், அழுதுகொண்டும் தங்கள் பற்களைக் கடித்துக்கொண்டும் பேரழிவுகளில் விழுவதற்கு ஏதுவாகிறார்கள்.

கடைசியாக, நாம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஒரு பத்தியை வாசிப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறம்பாக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், புறம்பாக்கப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பதற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். ‘வார்த்தைகள்’ என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை மீட்டுவிட்டார், ஆனாலும் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரும்போது நியாயத்தீர்ப்பு பணியை அவர் ஏன் செய்ய வேண்டும்?

2,000 வருடங்களுக்கு முன்பு, மனித குலத்தைப் பாவங்கள்ல இருந்து மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு மனுஷ ரூபத்துல சிலுவைல அறையப்பட்டார்,...

கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்யுது?

பேரழிவுகள் தங்கள் மேல இருப்பத மக்கள் உணர்ந்துருக்காங்க மேலும், மேகத்து மேல கர்த்தர் வர்றத எதிர்பாத்து படபடப்போடு காத்திருக்காங்க....

மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்?

நாம ஏற்கெனவே சில தடவ கடைசி நாட்கள்ல செய்யப்படும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியயப் பத்திப் பேசி இருக்கோம். நாம இன்னைக்கு யார் இந்த...

Leave a Reply