நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

டிசம்பர் 14, 2021

welcome-the-Lord-by-hearing-God-s-voice

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா ஏற்படுது, எல்லா வகயான கொள்ள நோய்ங்களும் அதிகரிக்குது, மேலும் பஞ்சமும் யுத்தமும் பயமுறுத்துது. கர்த்தர் எந்த நேரமும் வரலாம்னு விசுவாசிங்க நினைக்கிறாங்க, மேலும் அவர் எந்த நொடியில் திடீர்னு ஒரு மேகத்தின் மேல வருவார்னு அவங்களுக்குத் தெரியல, அதனால அவருடைய வருகைக்கு காத்திருந்து அவங்க ராத்திரியும் பகலும் ஜெபிக்கிறாங்க. இருந்தாலும், பேரழிவுகள் தொடர்ந்து வரத் தொடங்கிருச்சி, ஆனா இந்த நாள் வரைக்கும் அவங்களால கர்த்தர் ஒரு மேகத்துக்கு மேல தோன்றுறத பாக்க முடியல. பலருக்குக் குழப்பமா இருக்கு, ஆச்சரியப்படுறாங்க, “கர்த்தர் ஏன் இன்னும் வரல? அவர் உண்மயில்லாமலா பேசுவாரு?” நிச்சயமா இல்ல. கர்த்தர் உண்மயுள்ளவரு, கர்த்தருடய வார்த்தைகள் ஒருபோதும் ஒண்ணுமில்லாம போகாது. யாரும் அத எதிர்பாக்காம இருந்தப்போ, கர்த்தர் மனுஷகுமாரனா மனுஷரூபமெடுத்து ரகசியமா இறங்கினாரு, வெகு காலத்துக்கு முன்னரே பலரும் அவர வரவேத்தாங்க. பல வருஷங்களுக்கு முந்தி ஆவியானவருடய அடிச்சுவடுகள தேடிய பின்பு, மனுஷ குமாரன் பல சத்தியங்கள பேசுறதயும் வெளிப்படுத்துறதயும் கண்டறிஞ்சாங்க. இந்த வார்த்தைங்கள அவங்க எவ்வளவு அதிகமா படிச்சாங்களோ அவ்வளவு அதிகமாக அது பரிசுத்த ஆவியானவருடய குரல், தேவனுடய குரல்தான்னு அவங்க உணர்ந்தாங்க, மேலும் இறுதியா அவங்க சத்தியத்த வெளிப்படுத்தும் இந்த மனுஷகுமாரன் மறுபடியும் வந்த கர்த்தராகிய இயேசுன்னு கண்டுபிடிச்சாங்க, அவர்தான் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன்! அவங்க எல்லாம் உற்சாகமா ஆரவாரிச்சாங்க: “கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்காரு, நாம கடைசியா கர்த்தர வரவேற்றிருக்கோம்!” தேவனுடய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்க செய்திய பரப்ப ஓடினாங்க, சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்த வெளிப்படுத்தி, தோன்றி, கிரியசெய்றதுக்கு சாட்சி பகர்ந்தாங்க. சத்தியத்த நேசிச்சு தேவனுடைய தோற்றத்துக்காக ஆவலுடன் இருந்த எல்லா சபைப் பிரிவுகளையும் சேர்ந்த பலர் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள வாசித்து அது தேவனுடைய குரல்தான்னு அறிஞ்சாங்க, ஒருவர் பின் ஒருவரா தேவனின் சிங்காசனத்துக்கு முன் வந்தாங்க, ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில கலந்துக்கிட்டாங்க. இதன் மூலம் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுது: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றமும் கிரியையும் முழுசா கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள நிறைவேற்றின: “நான் விரைவாக வருகிறேன்,” “மனுஷகுமாரனின் வருகை,” “மனுஷ குமாரன் வருகிறார்,” மற்றும் “மனுஷ குமாரன் அவருடைய நாளில் இருப்பார்.” தேவன் உண்மயுள்ளவர்னு இது நிரூபிச்சிது, மேலும் அவருடய எல்லா வார்த்தைங்களும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும். கர்த்தராகிய இயேசு சொன்னது போல, “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்தேயு 24:35). மேலும், சர்வவல்லமையுள்ள தேவன் சொன்னதுபோல, “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நான் சொல்வதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 53”). நமது ரட்சகர் இயேசு ஏற்கெனவே வந்துட்டாரு, அவர்தான் சர்வவல்லமையுள்ள தேவன். அவர் பல சத்தியங்கள வெளிப்படுத்தினாரு, கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாரு, ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஜெயங்கொள்பவர்களின் ஒரு குழுவ நிறைவுசெஞ்சிருக்காரு சர்வவல்லமையுள்ள தேவன் சாத்தான தோக்கடிச்சி எல்லா மகிமயும் அடஞ்சாரு, அதனுடன் பெரும் பேரழிவுகள் தொடங்கிருச்சி. தேவனுடய கிரிய எல்லாம் நெருக்கமா இணஞ்சி இருக்கிறத நாம பாக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, முழு மத உலகத்தயும், மொத்த உலகத்தயும் அசைக்கிறாரு. இருந்தாலும், பல மதரீதியான ஜனங்க இன்னும் ரட்சகர் இயேசுமேகத்தின் மேல வர்றதுக்கு காத்திருந்து வானத்த உத்துப்பாக்குறாங்க. அவங்க எல்லாம பேரழிவில விழுந்துட்டாங்க, என்ன நடக்குதுன்னு அவங்களுக்குத் தெரியல, அவங்கள புத்தியில்லாத கன்னிகைங்கன்னுதான் சொல்ல முடியும். மத உலகத்துல உள்ள அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகளால கட்டுப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டுவரும் பல முட்டாள்தனமான அறியாமையிலுள்ள ஜனங்க, சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றத்தயும், கிரியயும் நியாந்தீர்த்து கண்டனம் செய்றாங்க. அவருடய வார்த்தைங்கதான் சத்தியம்னு அவங்களுக்கு நல்லா தெரியும், ஆனா அவற்ற ஏத்துக்க மாட்டங்க. உண்மயான வழிய கொஞ்சம் கூட பாக்காம அவங்க இன்னும் கர்த்தர் மேகத்தின் மேல வரும் வேதாகம வார்த்தைகள பிடிச்சி தொங்கிக்கிட்டிருக்காங்க, அதுமட்டுமில்லாம தேவனுடய குரல தேடாம இருக்காங்க. இதனால, அவங்க பேரழிவில விழுந்து, குற சொல்லி, அழுது, பற்கள கடிக்கிறாங்க. இது உண்மயில வருத்தமானது. சிலர் கேக்கலாம், “கர்த்தர வரவேற்க தேவனுடய குரல நாம ஏன் கவனமா கேட்கணும்?” இந்த விஷயத்தில என் புரிதல பத்தி இன்னைக்கி நான் கொஞ்சம் பகிர்வேன்.

முதல்ல நாம் தெளிவா இருக்கணும், எல்லாரும் பாக்கிறபடியா கர்த்தர் வானத்தில இருந்து ஒரு மேகத்தின் மேல உண்மையிலேயே திரும்பி வர்றதா இருந்தா, நாம அவருடைய குரல கேக்க கவனமா இருக்க வேண்டாம், நம்முடைய பார்வையையே சார்ந்திருக்கலாம். ஆனா கர்த்தர் மாம்சத்தில மனுஷகுமாரனா திரும்பி வர்றாரு, வெளிப்புறமா அவரு தேவனுடய சாயல்ல இல்ல, அவரு வெறும் ஒரு சாதாரண மனுஷந்தான், இயற்கைக்கு அப்பாற்பட்டு இல்ல. மனுஷங்க மரணத்துக்கு ஏதுவானவங்கிறதுனால தேவனுடய ஆவிய பாக்க முடியாது. நாம மனுஷகுமாரனின் உடல் வடிவத்ததான் பாக்க முடியும், மாம்சத்தில இருக்கும் மனுஷகுமாரன அறிய அவருடய குரல கேக்குறத தவிர வேறு ஒரு வழியுமில்ல. அவருடைய பேச்ச வச்சுத்தான அவர அடயாளம் காண முடியும். அதனாலதான் கர்த்தராகிய இயேசு சொன்னார், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). நாம எல்லாருக்கும் தெரிஞ்சபடி, 2000 வருஷத்துக்கு முன்னால மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசுவா தேவன் மாம்சமானாரு. அவர் சாதாரண மனிதத்தன்மையோடு வாழ்ந்தாரு, சாதாரண மக்களப் போல சாப்பிட்டாரு, உடுத்திக்கிட்டாரு, தூங்கினாரு, பயணம் செஞ்சாரு. கர்த்தராகிய இயேசுதான் மனுவுருவான தேவன்னு யாருக்கும் தெரியாது, அவருடய குடும்பத்துக்குக் கூட, கர்த்தராகிய இயேசுவுக்குமே அவர்தான் மனுவுருவான தேவன்னு தெரியாது. அவர் எல்லா இடத்துலேயும் பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்த பிரசங்கித்து பல சத்தியங்கள வெளிப்படுத்தினாரு. அவர் ஜனங்களுக்கு தங்கள் பாவத்த அறிக்கயிடுறது, மனந்திரும்புறது, சகிப்புத்தன்ம, பொறும, மத்தவங்கள ஏழு 70 தரம் மன்னிக்கிறது, சிலுவைய எடுத்துக்கிட்டு அவரப் பின்தொடர்றது ஆகியவற்ற கற்பிச்சாரு. தங்களுடய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் தேவனிடத்தில அன்புகூர, தங்களப் போல பிறரையும் நேசிக்க அவர் மக்கள் கிட்ட சொன்னாரு, கர்த்தராகிய இயேசு பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களயும் வெளிப்படுத்தினாரு, யார் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கலாம் என்பத பல மக்கள் கிட்ட சொன்னாரு. மனுஷனின் மீட்புக்கு தேவனால வெளிப்படுத்தப்பட்ட மனந்திரும்புதலுக்கான வழிதான் இந்த சத்தியங்கள், மேலும் மனுஷங்க இத ஒருபோதும் கேட்டதோ அல்லது பாத்ததும் இல்ல. கர்த்தராகிய இயேசுவ பின்பத்தின பலர் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு அதிகாரமும் வல்லமையும் உடையது என்பதக் கேட்டதாலேயே அப்படிச் செஞ்சாங்க, சிருஷ்டிக்கப்பட்டவைகளால் வெளிப்படுத்த முடியாத விஷயங்களா அவையெல்லாம் இருந்திச்சி. அவங்க தேவனுடய குரல அறிஞ்சி கர்த்தர பின்பத்தினாங்க. இது தேவனுடய ஆடுகள் அவர் குரலக் கேட்டு கர்த்தர வரவேற்பது. அதே நேரத்தில யூத மார்க்கத்தின் அந்தப் பிரதான ஆசாரியருங்க, பரிசேயர், சதுசேயருங்க, கர்த்தருடய வார்த்தைகளின் அதிகாரத்தயும் வல்லமையையும் அங்கீகரிச்ச போதிலும், கர்த்தராகிய இயேசு ஒரு சாதாரண இயல்பான மனுஷகுமாரனப் போல இருந்ததால, புகழ்பெற்ற குடும்பமோ, உயர் அந்தஸ்தோ அதிகாரமோ இல்லாம இருந்த ஒரே காரணத்தால, அவருடைய வார்த்தைங்க வேதத்தில இல்லாததால, அவருடய பேரு மேசியான்னு இல்லாததால. அது வேதாகம தீர்க்கதரிசனங்களுக்குப் பொருந்தாம இருந்ததால, அவங்க கர்த்தராகிய இயேசுவ மறுதலிச்சி நிராகரிச்சி, அவரு தேவதூஷணம் சொல்றாருன்னு ஆக்கினத்தீர்ப்பு கூட செஞ்சாங்க. முடிவா அவர சிலுவயில அறஞ்சாங்க, மேலும் அவங்க தேவனால தண்டிக்கப்பட்டு சபிக்கப்பட்டாங்க. ஆகவே, கர்த்தர வரவேற்க தேவனுடய குரல கவனிச்சிக் கேக்குறது எவ்வளவு முக்கியம்னு நாம பாக்கலாம்! நாம தேவனுடய குரல கவனிச்சிக் கேக்காம இருந்து, மனுஷகுமாரனுடய வெளித்தோற்றத்த மட்டுமே பாத்தா, அவர் தேவன்தான்னு நாம ஒருபோதும் அறிய மாட்டோம். நம்முடய கருத்துக்களயும் கற்பனைகளயும் அடிப்படயா கொண்டு நாம கர்த்தர கண்டனம் செஞ்சி நிராகரிப்போம். கடைசி நாட்கள்ல தேவன் மீண்டும் தோன்றி கிரிய செய்ய மனுஷகுமாரனா ஒருமுற மாம்சமாகி இருக்காரு. நாம கர்த்தர வரவேற்க விரும்பினா தேவனுடைய குரல கவனமாக கேப்பத சார்ந்திருக்கணும், இதெல்லாம தேவனுடய வார்த்தைங்களான்னும், இதுதான் சத்தியம்னா, அது பரிசுத்த ஆவியானவரிடமிருந்தான் வருதான்னும் கவனிச்சிக் கேக்கணும், நம்முடய தீர்மானங்கள இத அடிப்படையாக் கொண்டு எடுக்கணும். அப்படின்னாத்தான் தேவனுடய வெளிப்பாடான கிறிஸ்துவ நம்மால அறிய முடியும், தேவனுடய குரல கேட்டால் மட்டுமே நம்மால கர்த்தர வரவேற்க முடியும்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றது போல, “நாம் தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய சொற்கள் ஆகியவற்றைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய வார்த்தைகள் பேசப்படுகின்றனவோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுகிறார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் அடிச்சுவடுகளைத் தேடுவதில், நீங்கள் ‘தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்’ என்கிற வார்த்தைகளை உதாசீனம் செய்திருக்கிறீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”). “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).

இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத இரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, அவர் ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்கப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலின் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ பெறவும் முடியாமல் போனாலும், தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், மேலும் தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், முழு மனுக்குலத்தின் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

தேவனுடய தோற்றத்த தேடுறது மற்றும் தேவனின் மனுவுருவெடுத்தல அறியும் வழிய அறிவதுங்கறத சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்க காட்டுது. அது முழுத் தெளிவா இருக்கு: கிறிஸ்துதான், வழியும், சத்தியமும், ஜீவனுமுமாயிருக்காரு; சத்தியத்தயும் தேவனுடய குரலயும் வெளிப்படுத்துறதனால கிறிஸ்துவின் தெய்வீகம் முக்கியமா வெளிப்படுத்தப்படுது. ஆகவே கிறிஸ்துவின் தோற்றம் எவ்வளவு சாதாரணமாகவும் இயல்பாகவும் இருந்தாலும், அவர் சத்தியத்த, தேவனுடய மனநிலய மற்றும் அவரிடம் என்ன இருக்கு அவரு என்னவா இருக்காருன்னு வெளிப்படுத்துற வரயில, அவர்தான் தேவனுடய வெளிப்பாடு. கிறிஸ்துவின் மனிதத்தன்ம எவ்வளவு சாதாரணமாவும் இயல்பானதாவும் இருந்தாலும், அவரால சத்தியத்த வெளிப்படுத்தவும், தேவனுடய குரல வெளிப்படுத்தவும் முடியுற வரயில, அவர் ஒரு தெய்வீக சாராம்சத்த கொண்ட நபர்தான்—அவர் மனுவுருவான தேவன். இத பத்தி எந்த சந்தேகமும் இல்ல. சர்வவல்லமையுள்ள தேவன் தேன்றி கிரிய செய்ய ஆரம்பித்ததில இருந்து, எல்லா சபைப் பிரிவில் இருந்தும் சத்தியத்த நேசிக்கிற ஏராளமான ஜனங்க சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள வாசிச்சி அவருடய வார்த்தைகள் எல்லாம் சத்தியம், மொத்தமும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வருது மற்றும் தேவனுடய குரல்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க இப்படி சர்வவல்லமையுள்ள தேவன்தான் தேவனின் தோற்றம், அவர்தான் மனுவுருவான தேவன், திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசுன்னு உறுதிப் படுத்தியிருக்காங்க. தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா ஜனங்களும் உறுதிப்படுத்தக்கூடியஉண்ம இதுவே. மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷர்கள் மத்தியில ஜீவிக்கிறாரு, சாப்பிட்டு, வாழ்ந்து மற்றவங்களோடு இடைபடுறாரு. சத்தயத்த வெளிப்படுத்தி, தண்ணீர்ப் பாய்ச்சி, போஷித்து தேவனுடய ஜனங்கள எந்த நேரத்திலயும் இடத்திலயும் வழிநடத்துறாரு. ஒண்ணுக்குப் பின் ஒண்ணாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடய வார்த்தைகளின் அத்தியாயங்கள நாம பாத்திருக்கோம், அவையெல்லாம் இப்போ “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” போன்ற புத்தகங்களா தொகுக்கப்பட்டிருக்கு. அதில மொத்தமா பல லட்சக்கணக்கில வார்த்தைங்க இருக்கு. தேவனின் 6,000 வருஷகால நிர்வாகக் கிரியயின் எல்லா ரகசியங்களயும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்காரு, மனுக்குலத்த நிர்வகிப்பதில தேவனின் நோக்கம், மனுக்குலத்த சாத்தான் எப்படி சீர்கெடுத்தான், அவங்கள ரட்சிக்க தேவன் எப்படி படிப்படியா கிரிய செஞ்சாரு, மனுவுருவெடுத்தலின் ரகசியங்க, வேதாகமத்தின் உட்கத, கடைசி நாட்கள்ல தேவனின் நியாயத்தீர்ப்பு எப்படி மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்குது, ஜனங்கள அவங்களுடய வகைக்கு ஏற்ப எப்படி தேவன் பிரிக்கிறாரு, காலத்த முடிவுக்குக் கொண்டுவர நன்மைக்கு பலனும் தீமைக்கு தண்டனையும் அளித்தல், பூமியில கிறிஸ்துவின் ராஜ்யம் எப்படி ஸ்தாபிக்கப்படுது என்பது போன்ற பலவற்ற வெளிப்படுத்தி இருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்தின் தேவன எதிர்க்கும் சாராம்சத்தயும் அவங்களோட சீர்கேட்டின் உண்மயயும் கூட நியாயந்தீர்த்து வெளிப்படுத்துறாரு. தங்கள் சீர்கேடான மனநிலய போக்கி ரட்சிப்ப அடயவும் அவர் ஒரு பாதைய மக்களுக்கு அளிக்கிறாரு. தேவனுடன் ஒரு தகுந்த உறவை எப்படி உருவாக்குறது, ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கு எவ்வாறு பயிற்சி எடுப்பது, தேவனுக்கு எப்படி உண்மயா இருப்பது, தேவனுக்கு பயப்படும் மற்றும் தீமய வெறுக்கும் தேவனுடய வழிய எப்படி பின்பற்றுவது, கீழ்ப்படிதலயும் தேவன் பேரில் அன்பயும் எப்படி அடயுறது மற்றும் இன்னும் அதிகமானத அவர் ஜனங்களுக்குச் சொல்றாரு. இந்த சத்தியங்க எல்லாம் பாவத்தில் இருந்து விடுதலயயும், தங்கள் விசுவாசத்தில தேவனால முழு இரட்சிப்பயும் அடையுறதுக்கு மக்களுக்குத் தேவயான சத்தியங்க. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட இந்த சத்தியங்க எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த முழுசா நிறைவேத்துது: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள நாம எவ்வளவு அதிகமாக படிக்கிறோமோ, நம்ம இருதயம் அவ்வளவு அதிகமா பிரகாசம் அடயுது, அவை நம்மள முழுசா ஜெயங்கொள்ளுது. தேவனுடய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் மூலமா வெளிப்படுத்தப்படும் அவரோட நீதி, பரிசுத்தம், மகத்துவம் மற்றும்கோபத்த பாக்கும்போதும், இடறலுண்டாக்க இயலாத தேவனின் மனநிலய அனுபவிக்கும் போதும், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள்தான் சத்தியம், தேவனுடய குரல், அவைகள்தான் சபைகளுக்கான பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள்னு நாம உறுதியடையுறோம். அதப் பத்தி சிந்தியுங்க—தேவனுடய கிரியயின் ரகசியங்கள தேவனத் தவிர யாரால வெளிப்படுத்த முடியும்? தேவனுடய மனநிலயயும் அவர்க்கிட்ட என்ன இருக்குது அவர் என்னவா இருக்காருங்கறதயும் யாரால வெளிப்படுத்த முடியும்? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சத்தை தேவனைத் தவிர யாரால் நியாயந்தீர்த்து வெளிப்படுத்த முடியும்? மனுக்குலத்த பாவத்தில இருந்து யாரால ரட்சிக்க முடியும்? தேவன் மட்டுமே சத்தியத்த வெளிப்படுத்த முடியுங்கறதில சந்தேகமில்ல, தேவன் மட்டுமே சீர்கேட்டில் இருந்து மனுக்குலத்த சுத்திகரிச்சி, அவங்கள பாவத்தில இருந்தும் சாத்தானின் வல்லமயில இருந்தும் ரட்சிக்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண, இயல்பான மனுஷகுமாரனப் போல தோற்றமளிக்கலாம், ஆனா அவருடய வார்த்தைகள் மற்றும் கிரியயில இருந்து, அவரிடம் சாதாரன மனிதத்தன்ம மட்டுமில்லாம தெய்வீக சாராம்சம் இருப்பதயும் நாம பாக்கலாம். அவருக்குள் தேவனின் ஆவியானவர் இருக்கிறார், அவருடய வார்த்தைங்க தேவனின் ஆவியானவரிடம் இருந்து வரும் நேரடியான வெளிப்படுத்தல்கள். சர்வவல்லமையுள்ள தேவன்தான் வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார், அவர்தான் மனுவுருவான தேவன், திரும்பிவந்திருக்கும் கர்த்தராகிய இயேசு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்வது போல, “தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தியும், அதே நேரத்தில் அவருடைய இருதயத்தில் பேசியும் தமது வார்த்தைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவருடைய வார்த்தைகள் ஜீவ வல்லமையைத் தாங்கியுள்ளன, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன, சத்தியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவருடைய வார்த்தைகளால் நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம், அவர் பேசும் தொனியிலும் விதத்திலும் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம், மேலும் நம்மை அறியாமலேயே இந்தச் சாதாரண மனிதனுடைய ஆழ்மன உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம். … அவரைத் தவிர வேறு யாராலும் நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவோ அல்லது நமது சுபாவத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் புரிந்துகொள்ளவோ அல்லது மனுக்குலத்தின் கலகக் குணத்தையும் சீர்கேட்டையும் நியாயந்தீர்க்கவோ அல்லது நம்மிடம் பேசவோ, பரலோக தேவனின் சார்பாக இதுபோல நமது மத்தியில் கிரியை செய்யவோ முடியாது. அவரைத் தவிர வேறு யாரிடமும் தேவனுடைய அதிகாரமும், ஞானமும் மற்றும் மேன்மையும் கிடையாது; தேவனுடைய மனநிலையும் மற்றும் தேவனிடம் இருப்பதும், தேவன் யார் என்பதும் அவருக்குள் அவர்களுடைய பரிபூரணத்தில் உண்டாகின்றன. அவரைத் தவிர வேறு யாரும் நமக்கு வழியைக் காட்டவும் வெளிச்சத்தைக் கொண்டுவரவும் இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரை தேவன் வெளிப்படுத்தாத மறைபொருட்களை வெளிப்படுத்த இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், நம்முடைய சொந்த, கேடான மனநிலையிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயலாது. அவர் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தேவனுடைய மிகவும் ஆழமான இருதயத்தையும், தேவனுடைய அறிவுரைகளையும், சகல மனுஷர்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு புதிய யுகத்தையும், ஒரு புதிய சகாப்தத்தையும் ஆரம்பித்துள்ளார், மேலும் ஒரு புதிய வானத்தையும் பூமியையும் புதிய கிரியையையும் ஆரம்பித்துள்ளார். மேலும், அவர் நாம் தெளிவில்லாமல் வாழ்ந்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாகவும், நமது முழு சரீரமும் இரட்சிப்பின் பாதையை முற்றிலும் தெளிவாகக் காண்பதற்கு உதவியதன் மூலமாகவும் அவர் நமக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளார். அவர் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நமது இருதயங்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார். அந்தத் தருணம் முதல், நமது மனங்கள் உணர்வுள்ளதாகிவிட்டன, நமது ஆவிகள் புத்துயிர் பெற்றது போலத் தோன்றுகின்றன: நமது மத்தியில் வாசம்பண்ணும், நீண்ட காலமாக நம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்தச் சாதாரண, அற்பமான மனிதர் நமது எண்ணங்களிலும் நடையிலும் அல்லது கனவிலும் எப்பொழுதும் வீற்றிருப்பவரும் மற்றும் இரவும் பகலும் நாம் ஏங்கித்தவிக்கக் கூடியவரும் கர்த்தராகிய இயேசுதானல்லவா? அவரேதான் அது! உண்மையில் அவரேதான் அது! அவரே நமது தேவன்! அவரே நமது, சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 4: தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்”).

இந்தக் கட்டத்தில, நாம ஏன் கர்த்தர வரவேற்க தேவனுடய குரல கவனித்துக் கேட்கணும் என்பதில நமக்கு அதிக தெளிவு இருக்கணும். உண்மையில, தேவனுடய குரல கவனித்துக் கேட்பது கஷ்டம் இல்லாததுதான். தேவனுடய ஆட்டால் தேவனுடய குரலக் கேட்க முடியும்—இது தேவனால நியமிக்கப்பட்டதுதான். ஜனங்களுடய கல்வி நில முக்கியமில்ல, அவங்களுடய வேத அறிவு மற்றும் அனுபவ ஆழமும் கூட முக்கியமில்ல. சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள உணர்வோடயும் ஆவியோடயும் படிக்கிற யாரொருவரும் தேவனுடய எல்லா வார்த்தைகளும் சத்தியங்கறத உணரலாம், அவங்க அதிகாரத்தோடும் வல்லமயோடும் இருப்பாங்க, மேலும் அவங்கதான் தேவனுடய குரல். மனுக்குலத்தின் மீதான தேவனுடய அன்ப அவங்களால உணர முடியும், மேலும் தேவனுடய நீதியான, மகத்துவமான மனநில எந்த ஒரு மனுஷனின் குற்றத்தயும் சகிக்காது. ஆவிக்குரிய உணர்வு மற்றும் உள்ளுணர்வின் செயல்பாடுதான் இது. கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளப் படிக்கும்போதும் நமக்கு இந்த உணர்வுதான் உண்டாகும். ஏன்னா சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளும், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளும் ஒரே ஆவியின் வெளிப்பாடுகள்தான். அவை ஒரே ஆதாரத்தில இருந்து வர்றதுதான். சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான். நாம சர்வவல்லமையுள்ள தேவனின் இன்னும் கொஞ்சம் வசனப் பகுதிகள வாசிக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையைக் கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள ‘ஒலிவ மலையில்’ இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் ஆகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’”).

நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”).

சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வல்லமையும் அதிகாரமும் உடையது, ஜனங்களுடய இருதயத்த அசைக்குது. முழு மனுக்குலத்திடமும் சிருஷ்டிகரா சர்வவல்லமையுள்ள தேவன் பேசுறார். அவருடய வார்த்தைகள் மூலம் தேவனின் அதிகாரமும் அடையாளமும் தெளிவா வெளிப்படுத்தப்பட்டிருக்கு, அவற்றின் தொனி, அவருடைய நில, மனநில, அவர் என்ன கொண்டிருக்காரு மற்றும் அவர் என்னவா இருக்காரு என்பதெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கு, எல்லாம் தேவனுடைய தனித்துவமான குணங்க. ஒரு தேவதூதனோ, சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றோ, ஒரு சாத்தானிய தீய ஆவியோ இவை எல்லாவற்றையும் அடய முடியாது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் தேவனுடைய தனித்துவமான அதிகாரத்த முழுசா வெளிப்படுத்துது, மேலும் அவை தேவனுடய நீதியான இடறலுண்டாக்க இயலாத மனநிலயக் காட்டுது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் தேவனுடய வெளிப்படுத்தல்களும் குரலுமா இருக்கிறத நாமெல்லாம் பாத்திருக்கோம்.

இன்னைக்கி, மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையில இருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் மற்றும் பல தேவனின் வார்த்தைகளின் வாசிப்புகளின் வீடியோக்கள ஆன்லைனில பாக்கலாம், மேலும் எல்லா நாடுகளில் இருந்தும் எல்லா சபைப் பிரிவுகளில இருந்தும் அதிக அதிகமான ஜனங்க சர்வவல்லமையுள்ள தேவனப் பத்தி ஆராய்ஞ்சி ஏத்துக்கிட்டு வராங்க. இருந்தாலும், மதத்துக்குள்ள இன்னும் பலரும் வேத வசனத்த பிடிச்சிக்கிட்டு இருக்காங்க, கர்த்தர் ஒரு மேகத்தில கீழ வருவார்ங்கற தங்களுடய எண்ணத்தப் பிடிச்சிக்கிட்டு இருக்காங்க. சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்துறத அவங்க பாக்காங்க, ஆனாலும் அவங்க தேவனின் குரல தேடவோ, ஆராயவோ அல்லது கேக்கறதோ இல்ல. அவங்க மத உலகத்தின் அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகளோடு சேர்ந்து சர்வவல்லமையுள்ள தேவன நியாயந்தீர்த்து, பழிதூற்றி, கண்டனமும் செய்யலாம். அவங்களுடய இருதயம் குருடானது போல—அவங்க கேக்குறாங்க ஆனா அறியிறது இல்ல, பாக்குறாங்க ஆனா புரிஞ்சிக்கிறது இல்ல. இப்படிப்படவங்களால தேவனுடய குரல கேக்க முடியாது, இது அவங்க தேவனுடய ஆடுகள் இல்லங்கறதக் காட்டுது. கடைசி நாட்களில் தேவனுடய கிரிய வெளிப்படுத்தும் களைகள் இவங்கதான், புத்தியில்லாத கன்னிகைங்க இவங்கதான், இவங்க இப்ப கைவிடப்பட்டு தேவனால் நீக்கப்பட்டு பேரழிவில விழுந்திருக்காங்க. அவங்க வாழ்வாங்களா சாவாங்களான்னு சொல்ல முடியாது. அவங்களால பிழைக்க முடிஞ்சா, பேரழிவுகளுக்குப் பின்னால ஒரு மேகத்தில கர்த்தராகிய இயேசு எல்லாருக்கும் வெளிப்படையா தோன்றுவதுக்கு அவங்க காத்திருக்க மட்டும் செய்யலாம். ஆனா அந்தச் சமயத்தில, அவங்க கண்டனம் செஞ்சு எதிர்த்த சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுன்னு அவங்க பாக்கும்போது, அவங்க எல்லாரும் வாயடைச்சுப் போயிடுவாங்க, ஆனா வருத்தப்படுறதுக்கு அது தாமதமான காலமா இருக்கும். அவங்க அழுதுபுலம்பவும் பற்கடிக்கவும் விடப்படுவாங்க. இது வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனத்த முழுமையா நிறவேத்துது: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7).

இறுதியா, நாம சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளோட ஒரு பத்திய வாசிப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் தோன்றியிருக்கிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய தோற்றத்தைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீ அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். ‘கூடாத காரியம்’ பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தம்மை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய சாராம்சம் ஒருபோதும் மாறாது. … ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய அடிச்சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் அடிச்சுவடுகளும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் வெளிப்படையாக இருக்கின்றன(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...

மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

நம்ம எல்லாருக்கும் தெரிந்தபடி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசு என்ற மனிதனா தேவன் இந்த பூமியில மாம்சமா...

Leave a Reply