ஒரு போதகருக்குப் பிரசங்கிக்கும் கதை
இந்த வருஷம் ஏப்ரல் மாசம் ஒரு சாயங்கால வேளயில, ஒரு தலைவர் திடீர்னு, அம்பது வருஷங்களுக்கு மேல விசுவாசத்தில இருந்த மூத்த போதகர் ஒருத்தர் கடைசி நாட்களின் தேவனோட கிரியய ஆய்வு செய்ய விரும்பறதா என்கிட்ட சொன்னாரு. அது கயோஜியா கிராமத்த சேந்த போதகர் காவ் அவங்க. நான் அவர்கிட்ட போய் சாட்சி சொல்லணும். போதகர் காவோ பல நாடுகள்ல பிரசங்கம் பண்ணியிருந்ததாவும், சிசிபியால அவரோட விசுவாசத்துக்காக சிறையில அடைக்கப்பட்டப்பவும் அவர் தேவன கைவிடலன்னும், அதோட அவர் கர்த்தர உண்மையா விசுவாசிக்கிறாருன்னும் தலைவர் என்கிட்ட சொன்னாரு. இதயெல்லாம் நான் கேட்டப்போ, சுவிசேஷத்த பரப்புறப்போ நான் சந்திச்சிருந்த நெறைய போதகர்கள் மற்றும் மூப்பர்கள நெனச்சு பாத்தேன். பெரும்பான்மையானவங்க பைபிளோட வார்த்தைகளயும் மத கருத்துகளயும் பிடிச்சிட்டிருந்தாங்க. தேவனோட சத்தத்த அடையாளங்காணவும் அல்லது சத்தியத்த ஏத்துக்கறதும் அவங்களுக்குக் கடினமா இருந்துது. அவங்க தங்களோட அந்தஸ்தயும் வருமானத்தயும் ரொம்ப ஆழமா மதிச்சாங்க. சில பேரு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள கேட்டு அவை சத்தியமா இருந்துதுன்னு ஒத்துக்கிட்டாங்க, ஆனா சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கல. இந்த வயசான போதகரால உண்மையாவே சத்தியத்த ஏத்துக்க முடியுமா? இல்லைன்னா மத்தவங்கள மாதிரி அவரும் பிடிவாதமா தன்னோட மதக் கருத்துகள பிடிச்சுக்குவாரா? நான் ரொம்ப பதட்டமாவும் இருந்தேன்—நான் கொஞ்ச வருஷங்களா வேற ஒரு கடமையில இருந்தேன், கொஞ்சம் காலமா சுவிசேஷத்த பரப்பல. இப்போ திடீர்னு இந்த வயசான, வேதாகம அறிவும் மத கருத்துகளும் நெறஞ்சிருந்த போதகர நான் எதிர்கொள்ள வேண்டியிருந்துச்சு. நான் சத்தியத்த பத்தி தெளிவா ஐக்கியப்படாம, அவரோட மத கருத்துகள தீர்க்கத் தவறிட்டேனா, நான் என்னோட கடமையில தவற மாட்டனா? அப்போ நான் தேவனோட வார்த்தைகள நெனச்சுப் பாத்தேன்: “எதையாகிலும் மனிதக் கண்ணால் பார்க்க முடியாதபோது ஜனங்களின் விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் உன் சொந்தக் கருத்துக்களை விட்டுவிட முடியாதபோது உன் விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவு இல்லாதபோது, உன்னிடம் எதிர்பார்க்கப்படுவது விசுவாசம் மற்றும் நீ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சாட்சியாக இருப்பதும் ஆகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). “பரிசுத்த ஆவியானவர் இந்தக் கொள்கையின்படி கிரியை செய்கிறார். மக்களின் ஒத்துழைப்பு மூலம், அவர்கள் மூலமாக தீவிரமாய் ஜெபிப்பது, தேடுவது மற்றும் தேவனிடம் நெருங்குவதன் மூலம், முடிவுகளை அடைய முடியும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவொளியூட்டப்பட்டு பிரகாசிக்கப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், அல்லது மனிதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறான் என்பதல்ல. இரண்டும் இன்றியமையாதவை, மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி”). அது உண்மதான். இந்தச் சாத்தியமான சுவிசேஷத்த ஏத்துக்கறவர சந்திக்கிறது தேவனோட ஏற்பாடா இருந்துச்சு. முன்னாடி போதகர் மற்றும் மூப்பர்கள் கிட்ட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிறதுல நான் தவறியிருந்தாலும், கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்க முடியாதவங்கன்னு என்னால அவங்க எல்லார்த்தயும் என்னால முத்திர குத்த முடியாது. நான் தேவன் மேல நம்பிக்கை வெச்சிருக்கவும், ஒத்துழைக்கிறது மூலமா உன் மேல ஒரு விலகிரயத்த செலுத்தவும் வேண்டியிருந்துச்சு. தேவனோட ஆடுகள் அவரோட சத்தத்த கேக்குது—அவர் சத்தியத்துக்காக ஏங்கி மெய்யான வழிய ஆராய தயாரா இருந்த வரைக்கும், கடைசி நாட்களின் தேவனோட கிரியய அவருக்குச் சாட்சியளிக்கறது என்னோட கடமையா இருந்துது. சின்னதா ஒரு நம்பிக்க இருந்தா கூட, என்னால விட்டுட முடியாது. தேவன சார்ந்துக்கிட்டு அன்போடயும் பொறுமையோடயும் ஐக்கிப்படுறது என்னோட பொறுப்பா இருந்துது—அப்போ எனக்கு கடன்களோ வருத்தங்களோ இருக்காது. இந்த எண்ணங்க கடைசியா எனக்கு விசுவாசத்தக் கொடுத்துது.
நான் போதகர் காவோ அவங்களை பாத்தப்போ, கர்த்தரோட திரும்பி வருதல பத்தி அவரோட எண்ணங்கள கேட்டேன். அவர் என்கிட்ட, “இருபது வருஷங்களுக்கு முன்னாடி, சில பேர் என்கிட்ட நெறையா தடவ சுவிசேஷத்தப் பிரசங்கிச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பு கிரியைய செய்யற திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு அப்படின்னு சாட்சி கொடுத்தாங்க. தேவனோட முந்தைய வார்த்தைகளயும் கிரியயயும் பைபிள் பதிவு செஞ்சிருப்பதா அவங்க சொன்னாங்க, இப்போ கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்து, புது வார்த்தைகள வெளிப்படுத்தியிருந்ததால, சர்வவல்லமையுள்ள தேவனோட புதிய வார்த்தைகள வாசிக்கிறது மூலமாவும் அவற்ற உண்மையா ஏத்துக்கிறது மூலமாவும் மட்டுந்தான், என்னால சத்தியத்த புரிஞ்சுக முடியும் மற்றும் தேவனால இரட்சிக்கப்பட முடியும். அத கேட்டப்போ, என்னால ஏத்துக்க முடியல. பவுல் தெளிவா சொன்னாரு, ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது’ (2 தீமோத்தேயு 3:16). பைபிள் தேவனோட வார்த்தை, கிறிஸ்தவ நியதின்னு இதுக்கு அர்த்தம் அத மறுக்க முடியாது. வானமும் பூமியும் ஒழிஞ்சு போயிரும்; தேவனோட வார்த்தைகள் நிலச்சிருக்கும். அதனால விசுவாசிகள் எல்லா நேரத்திலயும் பைபிள படிக்கணும், அத கடப்பிடிக்கணும். அவங்க தப்புண்ணு நான் உறுதியா நம்புனேன் அவங்களோட ஐக்கியத்த அதுக்கு மேல விரும்பல” அப்படின்னு ஆணித்தரமா சொன்னாரு. நான் அவர்கிட்ட: “போதகர் காவோ, நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. மது உலகத்துல இருக்கற பெரும்பாலானவங்க பவுல் சொன்ன அடிப்படையில பைபிள்ல இருக்கிற எல்லா வார்த்தைகளும் தேவனோட வார்த்தைகள்னு முடிவு செய்றாங்க. ஆனா உண்மைல இந்த அறிக்கை உண்மைகளோட ஒத்துப் போகுதா?” போதகர் காவோ அப்போ, “நிச்சயமா அது ஒத்துப்போகுது” அப்படின்னு பதில் சொன்னாரு. நான் அவர்கிட்ட, “பைபிள் முழுவதுமா தேவனோட வார்த்தையாங்கறத பத்தி துல்லியமான பதில் ரொம்ப நாளைக்கு முன்னாடியே சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளால கொடுக்கப்பட்டுது. ஒருவேள நாம இப்ப அந்த வார்த்தைகள படிக்கலாமா?” அப்படின்னு சொன்னேன். அவர் அமைதியா இருந்தாரு, தலையசைக்கறதுக்கு முன்னாடி தயங்குனாரு: “நாம இங்கே இருக்கறதால, நாம வாசிக்கவும் செய்யலாம்.” அதனால சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அவர்கிட்ட நாங்க பகிர்ந்துகிட்டோம்.
சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்று, ஜனங்கள் வேதாகமத்தை தேவன் என்றும், தேவனே வேதாகமமாக இருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆகவே, வேதாகமத்தின் எல்லா வார்த்தைகளும் தேவன் பேசிய வார்த்தைகள் மட்டுமே என்றும், இவை அனைத்தும் தேவனால் சொல்லப்பட்டவை என்றும் அவர்கள் நம்புகின்றனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அறுபத்தாறு புத்தகங்கள் யாவுமே மனிதர்களால் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்தும் தேவனுடைய ஏவுதலினால் வழங்கப்பட்டவை என்றும், பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளின் பதிவு என்றும் தேவனை விசுவாசிப்பவர்கள் கூட நினைக்கின்றனர். இது மனிதனின் தவறான புரிதலாகும், இது உண்மைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. உண்மையிலேயே, தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி ஒரு வரலாற்றுப் பதிவாகும். புதிய ஏற்பாட்டின் சில நிருபங்கள் ஜனங்களுடைய அனுபவங்களிலிருந்து வருகின்றன. மேலும், சில பரிசுத்த ஆவியின் அறிவொளியிலிருந்து வருகின்றன. உதாரணமாக, பவுலின் நிருபங்கள் ஒரு மனிதனுடைய கிரியையிலிருந்து தோன்றியவையாகும். இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியின் விளைவாகும். இவை சபைகளுக்காக எழுதப்பட்டவையாகும், மேலும் இவை சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாக இருந்தன. இவை பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல, பவுலால் பரிசுத்த ஆவியானவரின் சார்பாகப் பேச முடியவில்லை, அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, யோவான் கண்ட தரிசனங்களையும் அவன் பார்க்கவில்லை. அவனது நிருபங்கள் எபேசு, கொரிந்து, கலாத்தியா மற்றும் பிற சபைகளுக்கே எழுதப்பட்டவையாகும். ஆகவே, புதிய ஏற்பாட்டிலுள்ள பவுலின் நிருபங்கள் சபைகளுக்கு பவுல் எழுதிய நிருபங்களாகும், இவை பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல்களும் அல்ல, இவை பரிசுத்த ஆவியானவரின் நேரடி வெளிப்பாடுகளும் அல்ல. இவை அவனுடைய ஊழியத்தின் போது சபைகளுக்கு எழுதிய வெறும் அறிவுரை, ஆறுதல் மற்றும் தேற்றும் வார்த்தைகளாகும். ஆகவே, இவை அந்தக் காலத்தில் பவுலின் பெரும்பாலான கிரியையைப் பற்றிய ஒரு பதிவாகவே இருக்கிறது. அக்காலச் சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி கர்த்தராகிய இயேசுவின் மனந்திரும்புதலுக்கான வழியைக் கடைப்பிடிப்பார்கள் என்பதற்காக இவை கர்த்தருக்குள்ளான சகோதர சகோதரிகளுக்காக எழுதப்பட்டன” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (3)”). “வேதாகமத்தில் உள்ள எல்லாமே தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்பட்ட வார்த்தைகளின் பதிவு அல்ல. தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளை மட்டுமே வேதாகமம் ஆவணப்படுத்துகிறது, இவற்றில் ஒரு பகுதி தீர்க்கதரிசிகளினுடைய முன்னறிவிப்பின் பதிவாகும், மற்றொரு பகுதி காலங்கள் முழுவதும் தேவனால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களால் எழுதப்பட்ட அனுபவங்களும் அறிவுமாகும். மனித கருத்துக்களினாலும் அறிவினாலும் மனித அனுபவங்கள் கறைப்படுத்தப்பட்டுள்ளன, இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். வேதாகமத்தின் பல புத்தகங்களில் மனிதக் கருத்துக்கள், மனித தற்சார்புகள் மற்றும் மனிதர்களுடைய பொருத்தமற்ற புரிதல் ஆகியவை உள்ளன. நிச்சயமாகவே, பெரும்பாலான வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மற்றும் வெளிச்சம் ஆகியவற்றின் விளைவாகும். இவையே சரியான புரிதல்களாகும். ஆனாலும், இவை சத்தியத்தைப் பற்றிய முற்றிலும் துல்லியமான வெளிப்பாடுகள் என்றும் சொல்லிவிட முடியாது. சில விஷயங்களைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பெறப்பட்ட அறிவோ அல்லது பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியே தவிர வேறு எதுவுமில்லை. தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பு என்பது தேவனால் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தப்பட்டதாக இருந்தது: ஏசாயா, தானியேல், எஸ்றா, எரேமியா, எசேக்கியேல் போன்றவர்களின் தீர்க்கதரிசனங்கள் பரிசுத்த ஆவியானவரின் நேரடி அறிவுறுத்துதலிருந்து வந்தவையாகும். இவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். இவர்கள் தீர்க்கதரிசன ஆவியைப் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். நியாயப்பிரமாண காலத்தில், இவர்கள் யேகோவாவின் ஏவுதலைப் பெற்று, யேகோவாவால் நேரடியாக அறிவுறுத்தப்பட்ட பல தீர்க்கதரிசனங்களை உரைத்தார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (3)”).
நாங்க தேவனோட வார்த்தைகள படிக்கறப்போ போதகர் காவோ கவனமா கவனிச்சாரு, அப்பப்போ ஒப்புதலா தலையசச்சாரு. அதுக்கப்புறமா நான் ஐக்கியப்பட்டேன்: “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்கு, பைபிள் தேவனோட முந்தைய ரெண்டு நிலைகள ஆவணப்படுத்துது. யெகோவா தேவன் மற்றும் கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள், தீர்க்கதரிசிகளால சொல்லப்பட்ட தேவனோட வார்த்தைகளத் தவிர, மிச்சதெல்லாம் வரலாற்றுப் பதிவும் மனுஷ அனுபவமுமா இருக்கு. பைபிள்ல தேவனோட வார்த்தைகள் மட்டுமில்ல மனுஷங்களோட, சாத்தானோட வார்த்தைகளும் இருக்கு. இவற்றை நாம வேறுபடுத்தி பாக்கணும், அவற்ற கலக்கக் கூடாது. அது பழைய ஏற்பாடு எப்படி ஏசாயா, எலியா அல்லது எசேக்கியா தீர்க்கதரிசிகளோட தீர்க்கதரிசனங்கள பதிவு செய்யுதோ அது மாதிரி இருக்கு. அவங்களோட வார்த்தைகளுக்கு முன்னாடி, அது எப்பவுமே ‘யேகோவா இப்படி சொல்றாரு,’ ‘யேகோவா அவங்க கிட்ட பேசுனாரு’ அப்படிங்கற மாதிரி இருக்கும், தேவனோட வார்த்தைகள அவை நேரடியா சொல்லுதுங்கறத நிரூபிக்குது. எப்படியிருந்தாலும், நிருபங்க மனுஷனோட அனுபவம், ஒரு மனுஷ பதிவு. பவுல் எழுதுனது போல, திருச்சபைகளுக்கான கடிதங்கள் அவரோட சொந்த அனுபவமாவும் புரிதலாவும் இருந்துது. அப்போ சகோதர சகோதரிகள் பவுலோட கடிதங்கள பெற்றுகிட்டப்போ, அவங்க ‘பவுல்கிட்டயிருந்து ஒரு கடிதம் வந்திருக்கு’ அப்படின்னு சொல்லுவாங்க. ‘தேவனோட வார்த்தைகள் வந்துருச்சுன்னு’ அவங்க எப்பவும் சொல்ல மாட்டாங்க, சரிதான? அதனால நிருபங்கள தேவனோட வார்த்தைகள்னு சொல்ல முடியாது. பைபிள்ல இருக்கற மனிதனோட மற்றும் சாத்தானோட வார்த்தைகள எடுத்து அத தேவனோட வார்த்தைகள்னு சொல்றது தூஷணம் இல்லையா? அதாவது, ‘பைபிள் முழுக்க தேவனால அருளப்பட்டிருக்கு அது முழுக்க தேவனோட வார்த்தைகள்னு’ சொல்றது அடிப்படையில தப்பு.”
நான் பேசி முடிச்ச உடனே, அவர் தெகச்சு போயிட்டாரு. அவர் உற்சாகமா என்கிட்ட, “பைபிள்ல இருக்கற எல்லாமே முழுசா தேவனால அருளப்பட்டிருக்கு, அது தேவனோட வார்த்தைன்னு என்னோட இறையியல் ஆசிரியர் என்கிட்ட சொன்னது எனக்கு ஞாபகமிருக்கு. அதத்தான் இத்தன வருஷங்களா நாங்க சொல்லிட்டு வரோம். பவுல் அதப்பத்தி தப்பா சொல்லிருக்க முடியுமா?” அவர் இதக் கேட்டத கேட்டு என் இதயம் படபடத்துச்சு. நான் வெறுமனே அவர் தலையாட்டுறத பார்த்துட்டு அவர் புரிஞ்சுகிட்டார்ன்னு நெனச்சேன், ஆனா அவரு புரிஞ்சுக்கவே இல்ல. மத்த மதத்தலைவர்கள போலவே போதகர் காவோ அவங்கனாலயும் தேவனோட வார்த்தைகள புரிஞ்சுக்க முடியலையா? ஆனா அதுக்கப்புறம், “இந்த வயசான போதகர் பல தசாப்தங்களா மதக் கருத்துகள பிடிச்சுக்கிட்டு இருக்காரு, அத அவ்வளவு எளிதா அவரால ஒதுக்கி வெக்க முடியுமா? நான் பொறுமையா ஐக்கியப்படணும்னு” நெனச்சேன். அடுத்ததா, நான்: “பவுல் சொன்னது சரியா தப்பாங்கறதப் பத்தி இப்போதைக்கு நாம கவலப்பட வேண்டாம், நாம உண்மைகள பத்தி பேசலாம். போதகர் காவோ, பைபிள் இயற்றப்பட்டதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கர்த்தருக்கு எத்தன வருஷங்களுக்கு அப்புறம் பவுல் 2 தீமோத்தேயுவ எழுதுனாரு?” தயக்கப்படாம, அது 60 வருஷங்களுக்குப் பின்னாடின்னு அவர் சொன்னாரு. “கர்த்தருக்குப் பின்னாடி எத்தன வருஷங்களுக்கப்புறம் புதிய ஏற்பாடு இயற்றப்பட்டுச்சு?” முந்நூறு வருஷங்களுக்குப் பின்னாடின்னு அவர் சொன்னாரு. அதனால நான் சொன்னேன், “நாம இப்ப யோசிக்கலாம், பவுல் 2 தீமோத்தேயுவ எழுதனப்போ புதிய ஏற்பாடு இருந்துச்சா?” அவரு திடுக்கிட்டுப் போய், “இல்ல” அப்படின்னாரு. நான் தொடர்ந்து, “இல்லைனா, அப்போ, பவுலோட வார்த்தைகளான ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது’ அப்படிங்கறது புதிய ஏற்பாட்ட உள்ளடக்கியிருக்கா?” அவரோட கண்கள் விரிஞ்சு, அவர் சொன்னாரு, “எனக்குப் புரியுது. பவுலோட வார்த்தைகள் புதிய ஏற்பாட்ட உள்ளடக்கிருக்க முடியாது. கர்த்தருக்கு நன்றி! நான் எப்படி முன்னாடி இதப் பத்தி நினைக்காம இருந்தேன்? இத்தன வருஷ விசுவாசத்துல, ‘வேதவாக்கியம் எல்லாம் தேவனால அருளப்பட்டிருக்கு, தேவனோட வார்த்தைகளா இருக்கு’ அப்படின்னு நாம எப்பவுமே நம்புனோம், இதப் பத்தி எல்லா இடத்திலயும் பிரசங்கம் பண்ணோம். இந்தக் கூற்றோட உண்மைய பத்தி நாம கேள்வியே எழுப்பல. இந்த ஐக்கியத்தின் மூலமா, பைபிள் முழுசா தேவனோட வார்த்தை இல்லைன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன், என்னோட பல தசாப்தகால கருத்து திருத்தப்படணும். தேவனுக்கு நன்றி!” போதகர் காவோ அவங்களோட கருத்து தீர்க்கப்பட்டத பார்த்துட்டு அவருக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறதுல அதிக உறுதியா உணந்தேன்.
அதனால நான் அவரோடு ஐக்கிப்பட்டேன்: “தேவன் கடைசி நாட்கள்ல தம்முடைய நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்றதுக்காக மாம்சமாகி கோடிக்கணக்கான சத்திய வார்த்தைகள வெளிப்படுத்துறாரு, பைபிளோட ரகசியங்கள மட்டும் வெளிப்படுத்தாம, அவரோட 6,000 வருஷம் நிர்வாகத் திட்டமான அவரோட மூன்று கட்ட கிரயைகள், அவரோட நாமங்கள் மற்றும் அவரோட மனவுருவாதல் பத்தின எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சாத்தானால உண்டான மனுஷனோட சீர்கேட்டின் சத்தியத்தயும், தேவனுக்கு எதிரான மனுஷனோட சாத்தானிய சுபாவம் மற்றும் பல்வேறு சாத்தானிய மனநிலைகள வெளிப்படுத்தியிருக்காரு, அதோட பாலத்துல இருந்து தப்பிச்சு அவரால இரட்சிக்கப்படுவதுக்கான வழிய சுட்டிக்காட்டி இருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட இந்த சத்தியங்கள் திருச்சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரோட வார்த்தைகளாவும் கடைசி நாட்கள்ல தேவனால மனக்குலத்துக்குக் கொடுக்கப்படற நித்திய வழிக்கான வழியாவும், இரட்சிக்கப்பட்டு தேவனோட ராஜ்யத்துல பிரவேசிக்கறதுக்கான வழியாவும் இருக்கு.” அவர் அத ஏத்துக்கிட்டார், ஆனா கடைசி நாட்கள்ல தேவன் ஒரு பெண்ணா மாம்சமாகுறதப் பத்திய கருத்துக்கள் இருந்துச்சு. அவர் என்கிட்ட சொன்னாரு: “சகோதரி, சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியையயும் சுத்திகரிப்பு கிரியையயும் என்னால இப்ப ஏத்துக்க முடியுது, ஆனா கர்த்தராகிய இயேசு ஒரு பெண்ணா மாம்சமாகியிருக்குறார்ன்னு உங்களால எப்படி சாட்சியளிக்க முடியும்? போனதடவ அவர் வந்தப்போ, அவர் ஒரு ஆணா இருந்தாரு—வேதாகமம் அடிக்கடி அவரை ‘குமாரன்’ ன்னு சொல்லுது அதனால அவர் திரும்பி வர்றப்போ, அவர் ஒரு ஆணாகத்தான் இருக்கணும். அவர் எப்படி பெண்ணா இருக்க முடியும்? இத என்னால கற்பனை கூட செஞ்சு பாக்க முடியாது. இதப் பத்தி என்னோடு கொஞ்சம் ஐக்கியப்பட முடியுமா?” அப்படின்னு கேட்டு அவரோடு ஐக்கியப்பட்டேன். நான், “கர்த்தராகிய இயேசு ஆணா வந்தல, ஆயிரக்கணக்கான வருஷங்களா, எல்லா விசுவாசிகளும் அவர் நிச்சயமா ஒரு ஆணாகத்தான் வருவார்ன்னும், நிச்சயமா ஒரு பெண்ணாக வரமாட்டாருன்னும் நெனச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனாலும், சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல ஒரு பெண்ணா மாம்சமாகிட்டாரு—நிறையப் பேர் இத ஏத்துக்கப் போராடுறாங்க. ஆனா, ஜனங்களுக்கு எதப் பத்தி அதிகமான கருத்துக்கள் இருக்குதோ, அதப் பத்தி அதிகமான சத்தியம் கண்டறியப்படணும்ங்கறத நாம புரிஞ்சுக்கணும். வேதாகமத்துல, கர்த்தராகிய இயேசுவோட வருகைக்கான தீர்க்கதரிசனம் குறிப்பிடப்பட்டிருக்குறப்ப எல்லாம், ‘மனுஷகுமாரன்,’ ‘மனுஷகுமாரனுடைய வருகை,’ ‘மனுஷகுமாரன் வந்தார்,’ மற்றும் ‘மனுஷகுமாரன் தம்முடைய நாளில்’ அப்படின்னு குறிப்பிடப்பட்டிருக்குது. இந்த ‘மனுஷகுமாரன்’ அப்படின்னா என்ன? அவங்க ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி இதக் குறிப்பிடுறப்போ, ஒரு மனுஷனால பிறந்தவர்ங்கறதும், சாதாரண மனிதத்தன்மை கொண்டவர்ங்கறதும்தான் அர்த்தம். அப்படின்னா, கர்த்தராகிய இயேசு, ‘மனுஷகுமாரன்’ ங்கற இந்த சொற்றொடர ஏன் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரு? கடைசி நாட்கள்ல, தேவன் மனுஷ குமாரனா, வெளிப்படுவதுக்கும் கிரியை செய்யுறதுக்கும் மனுவுருவானவரா திரும்பி வருவாருன்னு அவர் நமக்கு சொல்லிக்கிட்டிருந்தாரு. ஆனா கடைசி நாட்கள்ல மனுஷகுமாரன் ஆணா வருவாரா பெண்ணா வருவாரான்னு கர்த்தர் சொல்லவே இல்ல. அதனால ஜனங்களால எப்படி இந்த முடிவ எடுக்க முடியும்? ஆதியாகமம் 1வது அதிகாரம், 27 வசனம் நம்ம எல்லாருக்கும் தெரியும்: ‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.’ ஆதியில தேவன் மனுஷனையும் மனுஷியையும் தம்முடைய சாயல்ல சிருஷ்டிச்சாருங்கறத நாம இங்க பாக்கலாம். தேவனை ஆண் அப்படின்னு நாம தீர்மானிச்சா, அப்போ, தேவன் தம்மோட சாயல்ல பெண்ணை சிருஷ்டிச்சாருங்கறத எப்படி விளக்குறது? அதனால, நம்மளோட சொந்த கருத்துக்கள் அல்லது கற்பனைகளின் அடிப்படையில நாம தேவனை வரையறுக்க முடியாது” அப்படின்னு சொன்னேன். அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் சில பத்திகள போதகர் காவோ அவங்களுக்கு வாசிச்சுக் காட்டினேன்.
சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண் ரூபத்தில் வந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவருடைய ரூபம் பெண்ணாக இருக்கிறது. இதிலிருந்து, தேவன் தமது கிரியையில் பயன்படுத்துவதற்காகவே ஆண் பெண் இருபாலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியையானது தனக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன”). “பாலினத்தில், ஒருவர் ஆண் மற்றவர் பெண், எனவே தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை பூர்த்திசெய்து, தேவனைப் பற்றிய மனிதனின் கருத்துக்களை அகற்றுவார்: தேவன் ஆணும் பெண்ணுமாக மாறமுடியும், முக்கியமாக, மாம்சத்தில் மனுஷரூபமாக வந்த தேவன் பாலினமற்றவர். அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் உருவாக்கினார், அவரைப் பொறுத்தவரை பாலினத்தில் பிரிவு இல்லை” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”). “தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).
நான் தொடர்ந்து ஐக்கியப்பட்டு: “ஆதியிலே தேவன் மனுஷனையும் மனுஷியையும் தம்முடைய சாயல்ல சிருஷ்டிச்சாருங்கறது நம்ம எல்லாருக்கும் தெரியும். அதனால, இயற்கையாவே, தேவனால ஒரு மனுஷனாகவும் மாம்சமாக முடியும், ஒரு மனுஷியாகவும் மாம்சமாக முடியும். தேவன் ரெண்டு முறையுமே மனுஷனா மனுவுருவானா, மனுஷர்கள் அவரை வரையறுக்கக் கூடும், அதோடு, அவர் ஒரு ஆணாக மட்டுந்தான் மாம்சமாக முடியும், பெண்ணாக மாற முடியாதுன்னும்—அவர் ஆண்களுக்கு மட்டுந்தான் தேவன், பெண்களுக்கு தேவன் அல்லன்னும் நம்புவாங்க இது அவரைப் பத்திய தவறான புரிதல் இல்லையா? இது பெண்களுக்கு எதிரான நித்திய பாகுபாட்டக் குறிக்கும். இது உண்மையிலயே பெண்களுக்கு அநீதியா இருக்கும். தேவன் நீதியுள்ளவர். அதனால அவர் முதல்ல ஆணாகவும், கடைசி நாட்கள்ல பெண்ணாகவும் மனுவுருவானாரு. இது ரொம்ப குறிப்பிடத்தக்கது. இது தேவனோட நீதியான மனநிலையயும், அதோடு, அவர் ஆண்களயும் பெண்களயும் சமமா நடத்துறாருங்கறதயும் அப்படியே காட்டுது. இது அவர் மனுஷனையும் ஸ்திரீயயும் சிருஷ்டித்ததன் அர்த்தத்த நிறைவேற்றியிருக்குது. உண்மையில, தேவன் ஆணாக மனுவுருவாகிறாரா அல்லது பெண்ணாக மனுவுருவாகிறாராங்கறது ஒரு பொருட்டல்ல. இந்த நபரால சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்த இரட்சிக்கும் கிரியைய செய்ய முடியுற வரை, அவங்களால தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், அதோடு மனுவுருவான தேவன் அவங்கதான். கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்குறாரு. மனுஷனை சுத்திகரிக்குறதும் இரட்சிக்குறதுமான எல்லா சத்தியங்களயும் அவர் வெளிப்படுத்திக்கிட்டும், கடைசி நாட்கள்ல அவரோட நியாயத்தீர்ப்பு கிரியைய செஞ்சுக்கிட்டும் இருக்குறாரு, ராஜ்யத்தின் காலத்தத் தொடங்குறாரு, கிருபையின் காலத்த முடிக்குறாரு. சர்வவல்லமையுள்ள தேவன்தான் மாம்சமான தேவன்ங்கறதயும், திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுங்கறதயும் இது உறுதியா நிரூபிக்குது.”
அந்த நேரத்துல, போதகர் காவ் என்கிட்ட, “சகோதரி, நீங்க சொன்னது எல்லாமே நியாயமானதுதான், அத என்னால மறுக்க முடியாது. ஆனா இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயம் இருக்குது. ஆதியாகமம் 3:16ல, தேவன் சொல்லுகிறார்: ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.’ அதோடு, 1 கொரிந்தியர் 11:3 ல சொல்லப்பட்டிருக்குது, ‘ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான்.’ இந்த உரைகள்லயிருந்து, ஸ்திரீதான் சீர்கேட்டுக்கான ஆதாரம்ங்கறதயும், மனுஷனோட ஆளுகைக்குக் கீழ்ப்பட்டவளா இருக்குறாள்ங்கறதயும் நாம பாக்கலாம். அப்படியிருக்க கர்த்தரால எப்படி ஒரு பெண்ணாக திரும்பிவர முடியும்?” அப்படின்னு ரொம்ப தீவிரமா சொன்னாரு. போதகர் காவோவோட வார்த்தைகளக் கேட்டதும்: “தேவனோட வார்த்தைகள நான் நிறையா உங்களுக்கு வாசிச்சிருக்குறேன், உங்களோடு அதிகமா ஐக்கியப்பட்டேன். இன்னும் நீங்க தேவனை ஆணாக வரையறுக்குறீங்க அதோடு ஒரு பெண்ணா அவரோட மனுவுருவாதலோட உண்மைய ஏத்துக்க முடியல. உங்களோட எண்ணங்கள அவ்வளவு சுலபமா ஒதுக்கிவிட முடியாது போல இருக்குது” அப்படின்னு நான் நெனச்சேன். ஆனா அதுக்கப்புறமா: “அவரோட கருத்துக்களுக்கு வேதத்தப் பத்திய அவரோட புரிதல்ல இருக்குற சந்தேகந்தான் காரணம். அவர் சத்தியத்தப் புரிஞ்சுக்கிட்டா, இந்தக் கருத்துக்கள் நீங்கிப்போயிரும்” அப்படின்னு நான் நெனச்சேன். நான் அவரிடத்துல, “போதகர் காவ், சர்வவல்லமையுள்ள தேவன் இந்த விஷயத்த ரொம்பத் தெளிவா பேசியிருக்குறாரு. அவர் என்ன சொல்லுறாருங்கறத நாம பாக்கலாம்” அப்படின்னு சொன்னேன்.
சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடந்த காலங்களில், ஆணே பெண்ணின் தலைவன் என கூறப்பட்டபோது, சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளை நோக்கி இது கூறப்பட்டது—ஆதியில் யேகோவாவால் படைக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணிடத்தில் அல்ல. நிச்சயமாக, பெண் கணவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை நேசிக்க வேண்டும், மேலும் ஒரு கணவன் தன் குடும்பத்தைப் போஷித்து ஆதரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே மனுக்குலம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக யேகோவாவால் உருவாக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் ஆகும். யேகோவா பெண்ணிடம், ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்’ என்றார். மனுக்குலம் (அதாவது ஆண் பெண் இருவரும்) இயல்பான வாழ்க்கையை யேகோவாவின் ஆளுகையின் கீழ் வாழ வேண்டும், அதன் மூலம் மனுக்குலத்தின் வாழ்க்கையில் ஓர் அமைப்பு இருக்கும், மேலும் அது தனது தகுந்த ஒழுங்கில் இருந்து குலையாது என்பதற்காக மட்டுமே அவர் இவ்வாறு பேசினார். ஆகவே, ஆணும் பெண்ணும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக யேகோவா பொருத்தமான விதிகளை உருவாக்கினார். இது பூமியில் வாழும் அனைத்து சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கானவை மட்டுமே தவிர தேவனின் அவதார மாம்சத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தம்மால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளைப் போலவே எவ்வாறு தேவன் இருக்க முடியும்? அவரது சிருஷ்டிப்பில் மனுக்குலத்தை நோக்கியே அவரது வார்த்தைகள் பேசப்பட்டன; மனுக்குலம் இயல்பான வாழ்க்கையை வாழவே அவர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விதிகளை உருவாக்கினார். ஆதியில், யேகோவா மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது அவர் ஆண் பெண் ஆகிய இரு வகை மனிதர்களைப் படைத்தார்; ஆகையால் அவரது அவதார மாம்சங்களில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவு உள்ளது. ஆதாம் மற்றும் ஏவாளுடன் பேசிய வார்த்தைகளின் அடிப்படையில் அவர் தமது கிரியையைத் தீர்மானிக்கவில்லை. முதலில் அவர் மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது இருந்த அவரது சிந்தனையின் படியே அவர் இரு முறை மாம்சமானதும் முற்றிலுமாகத் தீர்மானிக்கப்பட்டன; அதாவது, ஆண் மற்றும் பெண்ணை அடிப்படையாகக் கொண்ட அவரது இரு அவதாரங்களின் கிரியையையும் அவை களங்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நிறைவுசெய்துவிட்டார். … யேகோவா இருமுறை மாம்சமான போது அவரது மாம்சத்தின் பாலினம் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டது; சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணோடு இணங்க அவர் இருமுறை மாம்சமானார். இயேசுவின் ஆண்தன்மை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமுடையது போன்றது என்று நினைக்க வேண்டாம். அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை, அவை இரு வித இயல்புகள் கொண்ட இரு வேறு ஆண்களுடையவை. இயேசுவின் ஆண் தன்மை அவரே எல்லா பெண்களுக்கும் தலைவர் ஆனால் எல்லா ஆண்களுக்கும் அல்ல என்று நிச்சயமாக இருக்க முடியாதல்லவா? அவர் யூதர்களின் அரசர் அல்லவா (ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட)? அவர்தாமே தேவன், அவர் வெறுமனே பெண்ணின் தலைவரோ அல்லது ஆணிண் தலைவரோ மட்டுமல்ல. அவர் சர்வ சிருஷ்டிகளின் கர்த்தர் மேலும் சகல சிருஷ்டிகளின் தலைவர். இயேசுவின் ஆண்தன்மை பெண்ணின் தலைமைக்கான சின்னமாக இருக்கிறது என்று எவ்வாறு உன்னால் தீர்மானிக்க முடியும்? இது தேவ நிந்தனை ஆகாதா? இயேசு களங்கப்படுத்தப்படாத ஓர் ஆண். அவர் தேவன்; அவர் கிறிஸ்து; அவரே கர்த்தர். அவர் எவ்வாறு களங்கமடைந்த ஆதாமைப் போன்ற ஓர் ஆணாக இருக்க முடியும்? தேவனின் மிகப் பரிசுத்தமான ஆவியால் அணியப்பட்ட மாம்சமே இயேசு. அவர் ஆதாமின் ஆண் தன்மையைக் கொண்ட தேவனே என்று உன்னால் எவ்வாறு கூற முடியும்? அப்படி என்றால், தேவனின் அனைத்து கிரியைகளும் தவறாக அல்லவா இருந்திருக்கும்? சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமின் ஆண் தன்மையை இயேசுவுக்குள் யேகோவா ஒருங்கிணைத்திருக்க மாட்டாரா? தற்காலத்தின் அவதாரம் பாலினத்தால் இயேசுவில் இருந்து வேறுபட்ட ஆனால் இயல்பில் அவரைப் போன்ற தேவ அவதாரக் கிரியையின் இன்னொரு நேர்வு இல்லையா? சர்ப்பத்தால் முதலில் வஞ்சிக்கப்பட்டது பெண் என்பதால் பெண் தேவ அவதாரமாக இருக்க முடியாது என்று நீ இன்னமும் சொல்வதற்கு துணிகிறாயா? பெண் மிகவும் அசுத்தமானவளாகவும் மனுக்குலத்தின் சீர்குலைவுக்கு ஆதாரமாகவும் இருப்பதால் தேவன் மாம்சத்தில் ஒரு பெண்ணாக முடியாது என்று நீ இன்னும் துணிந்து கூறுகிறாயா? ‘பெண் எப்போதும் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும் மேலும் ஒருபோதும் தேவனை வெளிப்படுத்த அல்லது நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது’ என்று கூறுவதில் நிலைத்துநிற்கிறாயா?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன”).
நான் தொடர்ந்து: “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்லயிருந்து, தேவன் ஸ்திரீயிடத்துல, ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்’ அப்படின்னு சொன்னப்போ, மனுக்குலம் யேகோவா தேவனின் ஆளுகையின் கீழ் ஒழுங்கான முறையில வாழும்படி, சீர்கேடு நெறஞ்ச மனுக்குலத்துக்கான அவரோட கோரிக்கையும் கட்டுப்பாடும் இதுவாகத்தான் இருந்துச்சு. இந்த கோரிக்கைக்கும் தேவனோட மனுவுருவாதலுக்கும் எவ்விதத்துலயும் எந்த தொடர்பும் இல்லங்கறத நாம பாக்கலாம். இது பழைய ஏற்பாடுல, ஓய்வுநாளக் கடைப்பிடிக்கும்படி யேகோவா தேவன் மனுஷனுக்குக் கட்டளையிட்டதப் போன்றது. இதத்தான் தேவன் மனுஷனிடத்துல கேட்டாரு—மனுஷனால கர்த்தராகிய இயேசுவிடத்துல இதக் கேட்க முடியாது. கர்த்தராகிய இயேசு சொன்னதப் போல, ‘மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்’ (மாற்கு 2:27-28). அதனால, வேதாகமம், ‘உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்’ (ஆதியாகமம் 3:16), ‘ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான்’ (1 கொரிந்தியர் 11:3) அப்படின்னு வேதாகமம் சொன்னாலும் கூட, இந்த விஷயங்களுக்கும் தேவனோட மனுவுருவாதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. தேவன் ஆணாக மனுவுருவாகிறாரா அல்லது பெண்ணாக மனுவுருவாகிறாராங்கறது ஒரு பொருட்டல்ல, எப்பவுமே அவரோட ஆவியானவரால அணியப்பட்டிருக்குற மாம்சம் மட்டுந்தான் அது, எப்பவுமே அது தேவன்தான். தேவனை ஆணாகவும், பெண்ணா மாற முடியாதுன்னும் வரையறுக்க மனுஷன் இந்த வார்த்தைகளப் பயன்படுத்துனா, கடைசி நாட்கள்ல மனுவுருவான தேவனை மறுதலிச்சா, இது மனுவுருவான தேவனை சீர்கெட்ட மனுஷனோட அதே வகையில வைக்கறது இல்லையா? இது தேவனுக்கு எதிரான தூஷணம் இல்லையா?” அப்படின்னு சொன்னேன். நான் சொல்றதக் கேட்டதும், போதகர் திகச்சுப் போனாரு. அவர் ரொம்ப தீவிரமா, “சகோதரி, கர்த்தர் மாம்சத்துல வந்திருக்கறதால, அவர் மனுஷனாப் பிறந்து பாலினத்தக் கொண்டிருக்கணும். அவர் இந்த தடவ பெண்ணா மனுவுருவாகியிருக்காருங்கறத என்னால உடனடியா ஏத்துக்க முடியாது. நான் ஜெபிச்சு, என்னைய பிரகாசிக்கும்படி தேவனிடத்துல கேட்கணும்” அப்படின்னு சொன்னாரு. போதகர் இதச் சொன்னப்போ, நான் கொஞ்சம் கோபமாவும், குழப்பமாவும் இருந்தேன். நான் அதிகமா ஐக்கியப்பட்டேன்—அவரால ஏன் இன்னும் தன்னோட கருத்துக்கள ஒதுக்கி வைக்க முடியல? என்னதான் நடந்துக்கிட்டு இருந்துச்சு? தேவனோட வார்த்தைய அவரால புரிஞ்சுக்க முடியலயா? அவர் தேவனோட ஆடுகள்ல ஒருத்தரா இல்லையா? நான் அவரோடு தொடர்ந்து பேசணுமா? இதுலயிருந்து நான் என்ன பாடங்களக் கத்துக்கணும்? என்னோட மனசுக்குள்ள நான் தேவனிடத்துல ஜெபிச்சேன்.
அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு: “சுவிசேஷத்தைப் பரப்புவதில், நீ உன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் மற்றும் யாருக்கு நீ அதைப் பரப்புகிறாயா அவர்கள் ஒவ்வொருவரையும் அக்கறையாய்க் கையாள வேண்டும். முடிந்த அளவுக்கு தேவன் மக்களை இரட்சிக்கிறார், மற்றும் நீ தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மெய்யான வழியைத் தேடி கருத்தில் கொள்ளும் யாரொருவரையும் நீ அலட்சியமாகக் கடந்துபோகக் கூடாது. … மெய்யான வழியைக் கருத்தில்கொள்ளும் சிலர் புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களும் சிறந்த திறமையுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள், ஆனால் அகந்தையுள்ளவர்களும் சுய நீதியுள்ளவர்களும், மதக் கருத்துகளைப் பிடிவாதமாகப் பின்பற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள், எனவே இதை சரிசெய்ய உதவும்படி, அவர்களுடன் சத்தியத்தைக் குறித்து அன்புடனும் பொறுமையுடனும் ஐக்கியங்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் எப்படி ஐக்கியங்கொண்டிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மட்டுமே, நீங்கள் கைவிட வேண்டும், ஏனெனில், உங்களால் செய்ய முடிந்தவை மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் நீங்கள் செய்திருப்பீர்கள்” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சுவிசேஷத்தைப் பரப்புவது பொறுப்புள்ள எல்லா விசுவாசிகளுக்கான கடமையாகும்”). தேவனோட வார்த்தைகள் என்னோட கவலை நிறைஞ்ச இருதயத்த சாந்தப்படுத்துச்சு. சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்களிடத்துல நாம அன்பாவும் பொறுமையாவும் இருக்கணும்னு தேவன் கேட்குறாரு. கடைசியில அவங்க சுவிசேஷத்த ஏத்துக்கிட்டாலும் பரவாயில்லை, நம்மால முடிஞ்ச எல்லாத்தயும் நாம செஞ்சிருப்போம். போதகர் காவோவோடு சுவிசேஷத்த பகிர்ந்துக்கறப்போ, நான் செய்ய வேண்டிய எல்லாத்தயும் நான் இன்னும் செய்யலங்கறத உணர்ந்தேன். நான் தேவனோட கோரிக்கைகள நிறைவேற்றல. அவர் வேதாகமத்தப் பற்றிக்கிட்டிருந்ததப் பாத்ததும், இன்னும் அவரோட மனச மாத்த முடியலயேன்னும், அவர் ஒருபோதும் சத்தியத்த ஏத்துக்க மாட்டாருன்னும் நான் நெனச்சேன். தேவன் பெண்ணாக மனுவுருவாவதப் பத்திய கருத்துக்கள அவர் கொண்டிருந்தாரு, என்னோட ஐக்கியத்த உடனடியா புரிஞ்சுக்கல. அதனால நான் மறுபடியும் பொறுமை இழந்தேன். நான் போதகர் காவோ அவங்கள தப்பா நெனச்சுக்கிட்டும், போதகர்களால தேவனோட சத்தத்த அவ்வளவு சுலபமா அடையாளங்காண முடியலயேன்னு நெனச்சுக்கிட்டும் இருந்தேன். ஒருதடவ, அவரால மேற்கொள்ள முடியாத ஒரு கருத்து அவருக்கு இருந்துச்சு நான் அவரை வறையறுத்தேன், அவரைக் விட்டுவிடக் கூட விரும்புனேன். சீர்கெட்ட மனுக்குலத்த இரட்சிக்க தேவன் எவ்வளவு கடினமான முயற்சிகள மேற்கொண்டாருங்கறதயும் நம்மள வளர்த்தெடுக்க எப்படி நிறைய வார்த்தைகள வெளிப்படுத்தி இருக்குறாருங்கறதயும் நான் நெனச்சுப் பாத்தேன். சத்தியத்தப் புரிஞ்சுக்க உதவுற வகையில, அவர் நம்மோடு ஐக்கியப்பட்டு, ஒவ்வொரு சத்தியத்தயும் தெள்ளத் தெளிவா விளக்குறாரு. போதுமான அளவு விவரத்தயும் தெளிவையும் கொடுக்க அவர் கதைகள், உவமைகள் மூலமாவும், எல்லா வழிகள்லயும் அவர் பேசுறாரு. மனுக்குலத்தின் மீது தேவனோட அன்பும், அவர் நமக்காக அர்ப்பணித்திருப்பதும் மிகப் பெரியதுங்கறதயும் அத வார்த்தைகளால விவரிக்க முடியாதுங்கறதயும் நான் பாத்தேன். ஆனா சுவிசேஷத்தப் பரப்புறதுக்கான என்னோட கடமையில, நான் சிரமத்துலயிருந்து விலகி, போதகர் காவோவ விட்டுட விரும்பினேன். என்னோட அன்பு நெறைஞ்ச இருதயம் எங்கே போச்சு? என்னால எப்படி இப்படி என்னோட கடமையச் செய்ய முடியும்? போதகர் காவ் உடனடியாக வந்துவிடலேன்னாலும், நான் பொறுமையில்லாம இருந்துவிடக் கூடாது. நான் அவரை அன்போடு நடத்தணும், அவர் புரிஞ்சுக்கலேன்னா, ஐக்கியப்படுதல்ல நான் அதிக நேரம் செலவிடணும். தேவனிடத்துல ஜெபிச்சு, அவரை சார்ந்துக்கிட்டு, பாஸ்டரைப் பிரகாசிப்பிக்கும்படி அவரிடத்துல கேக்கணும்.
இதப் பத்தி யோசிச்சப்போ, நான் போதகர் காவோவோடு தொடர்ந்து ஐக்கியப்பட்டேன். “சர்வவல்லமையுள்ள தேவனை நாம விசுவாசிக்குறப்போ, அவர் வெளிப்படுத்தியிருக்குற சத்தியத்த விசுவாசிக்குறோம். தேவனோட மனுவுருவாதல் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்தை சுத்திகரிச்சு இரட்சிக்க இயலும் வரை, அவரே தேவன். நாம அவரை விசுவாசிச்சு ஏத்துக்கணும். சர்வவல்லமையுள்ள தேவன் முப்பது வருஷங்களுக்கும் மேலா ஆயிரக்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தி கிரியை செஞ்சுக்கிட்டு வர்றாரு. மனுக்குலத்த பாவத்துலயிருந்து விடுவிச்சு, தேவனோட இரட்சிப்பினிடத்துக்கு நம்மளக் கொண்டுவரும் எல்லா சத்தியங்களயும் அவர் வெளிப்படுத்தியிருக்காரு. எல்லா மதங்கள்லயும், சமயங்கள்லயும் தேவன் தோன்றணும்னு ஏங்கிய நிறைய பேர், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல தேவனோட சத்தத்த அடையாளங் கண்டு, அவரிடத்துல திரும்பியிருக்காங்க. இவங்க எல்லாருமே புத்தியுள்ள கன்னிகைகளா இருக்குறாங்க. அவங்க தேவனோட வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் அனுபவிச்சு, தங்களோட சொந்த சீர்கேட்டின் உண்மையப் புரிஞ்சுக்கிட்டாங்க, மனம் வருந்தினாங்க, தங்களத் தாங்களே வெறுத்தாங்க. தேவனோட நீதியான மனநிலை குற்றத்தப் பொறுத்துக்காதுங்கறத உணர்ந்து, அவங்க தேவனுக்குப் பயந்து, உண்மையிலயே மனந்திரும்பினாங்க, அதோடு அவங்களோட சீர்கெட்ட மனநிலை படிப்படியா மாறுச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் பேரழிவுகளுக்கு முன்னாடி ஒரு கூட்ட ஜெயங்கொள்பவங்கள உருவாக்கியிருக்குறாரு—அவங்க எல்லாருமே வெளிப்படுத்தின விசேஷத்துல தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்குற முதற்பலன்கள். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும், தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் சாத்தானை ஜெயித்த சாட்சிகளும், இரட்சகர் திரும்பி வந்துட்டார்ன்னு எல்லா மனுஷர்களுக்கும் சாட்சியளிக்குற வகையில ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ஆன்லைன்ல வெளியிடப்பட்டுச்சு. எல்லா தேசங்கள்லயிருந்தும் அதிகதிகமான ஜனங்கள் இப்போ மெய்யான வழிய ஆராய்ஞ்சு வர்றாங்க. சர்வ வல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியை, மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனோட ஆறாயிரம் ஆண்டு கால நிர்வாகத் திட்டத்த முடிவுக்குக் கொண்டுவந்து, சாத்தானோட ஆதிக்கத்திலிருந்து நம்மள முழுசா இரட்சிக்குது. சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையால நிறைவேற்றப்பட்ட எல்லாமே சர்வவல்லமையுள்ள தேவன்தான் மாம்சமான தேவன், அதாவது திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுங்கறத உறுதியா நிரூபிக்குது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுவாங்கறத பாலினத்த மட்டுமே அடிப்படையா கொண்டு தீர்மானிக்க முடியாதுங்கறதுதான் இதுக்கு அர்த்தம். அவரால சத்தியத்த வெளிப்படுத்தி மனுக்குலத்தக் இரட்சிக்குற கிரியையச் செய்ய முடியுதா? இதுதான் திறவுகோல்.” இந்த நேரத்துல, போதகர் காவோ: “சகோதரி, உங்க ஐக்கியத்த என்னால புரிஞ்சுக்க முடியுது. ஒருத்தரால சத்தியத்த வெளிப்படுத்தி இரட்சிப்பின் கிரியையச் செய்ய முடிஞ்சா, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவங்க தேவனோட மனுவுருதான். இப்போ என்னோட இருதயம் பிரகாசமாகியிருக்குது!” அப்படின்னு ஆணித்தரமா சொன்னாரு.
அதுக்கப்புறமா, போதகர் காவோ சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நிறைய வாசிச்சாரு, அவரோட கருத்துக்கள் தீர்க்கப்பட்டுச்சு, அதோடு அவர் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டாரு.
சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறதுல இந்த அனுபவத்தின் மூலமா, தேவனோட கிரியை எல்லாமே தேவனால்தாமே செய்யப்படுதுங்கறத நான் பாத்தேன். அவர் ஒரு பஸ்டரா இருந்தாலும் சரி, மூப்பரா இருந்தாலும் சரி, அவங்களோட வேதாகம அறிவு, இறையியல் கற்றது அல்லது மதக் கருத்துக்கள் எதுவா இருந்தாலும் சரி, அவை எல்லாமே சத்தியத்துக்கு முன்னாடி வல்லமையற்றதா இருக்குது. அவங்க தேவனோட வார்த்தைகளப் புரிஞ்சுக்கற வரை, ஓரளவு ஏத்துக்கற வரை, சத்தியத்தத் தேட நாடுற வரை அவங்க எல்லாருமே தேவனோட வார்த்தைகள்ல பதில்களப் பாக்கலாம், கடைசியில அவைகளால ஜெயிக்கப்படுவாங்க. நான் போதகர் காவோவோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டப்போ, போதகர்களும் மூப்பர்களும் சத்தியத்த ஏத்துக்கறது கடினமாய் இருக்கும்ன்னு நான் நெனச்சேன், அதனால நான் போதகர் காவோ மேல தவறான அபிப்ராயம் கொண்டிருந்தேன். அவரோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டப்போ, அவர் கருத்துக்களப் பற்றிக்கிட்டிருந்ததப் பாத்ததும், தேவனோட சத்தத்த அவரால புரிஞ்சுக்க முடியலன்னு நான் தீர்மானிச்சு, அவரைக் கிட்டத்தட்ட கைவிட்டுட்டேன். அதிர்ஷ்டவசமா, தேவனோட வார்த்தைகள் என்னைய வழிநடத்துச்சு அதோடு நான் என்னையப் புரிஞ்சுக்கிட்டு என்னோட கடமைய நிறைவேற்ற முடிஞ்சுச்சு.
அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிச்சேன் கருத்துகளக் கொண்டிருக்குற சுவிசேஷத்த ஏத்துக்குறவங்கள எப்படிக் கையாள்ளுறதுங்கறத அது தெளிவுபடுத்துச்சு. “மெய்யான வழியைக் குறித்து ஒருவர் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டால், நீ எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? அவர்களுக்குப் பதிலளிப்பதற்கு நேரம் செலவிடுவதையும் சிரமப்படுவதையும் நீ பொருட்படுத்தக் கூடாது, மேலும் அவர்கள் அதைப் புரிந்துகொண்டு மீண்டும் கேட்காத வரையில், அவர்களின் கேள்விகளைக் குறித்துத் தெளிவாக ஐக்கியங்கொள்வதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும். அப்போது நீ உன் பொறுப்பை நிறைவேற்றியிருப்பாய், உன் இருதயம் குற்றமற்றதாக இருக்கும். மிக முக்கியமாக, இந்த விஷயத்தில் நீ தேவனிடத்தில் குற்றமற்றவனாய் இருப்பாய், ஏனென்றால் இந்தக் கடமையும், இந்தப் பொறுப்பும், தேவனால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நீ செய்யும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக செய்யப்படும்போது, தேவனை எதிர்கொண்டு செய்யப்படும்போது, தேவனுடைய வார்த்தைக்கு எதிராக உள்ள அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும்போது, சத்தியத்தின் கொள்கைகளின்படி செய்யப்படும்போது, உன் பயிற்சி முற்றிலும் சத்தியத்திற்கும் தேவனுடைய கோரிக்கைகளுக்கும் ஏற்ப இருக்கும். இதன் மூலம், நீ செய்வதும் சொல்வதுமாகிய அனைத்தும் ஜனங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவர்கள் இதை அங்கீகரித்து எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சுவிசேஷத்தைப் பரப்புவது பொறுப்புள்ள எல்லா விசுவாசிகளுக்கான கடமையாகும்”). தேவனோட வார்த்தைகள்லயிருந்து, அவங்களோட பிரச்சனைகளோ அல்லது மதக் கருத்துக்களோ எதுவா இருந்தாலும் சரி, மெய்யான வழிய ஆராயரவுங்க நல்ல மனிதத்தன்மையோடு இருந்தா, சத்தியத்துக்காக ஏங்குனா, தேவனோட வார்த்தைகளப் புரிஞ்சுக்க முடிஞ்சா, அப்போ, நாம தவறுதலாப் புரிஞ்சுக்கவோ அல்லது தன்னிச்சையா அவங்கள வரையறுக்கவோ கூடாது, அவங்கள விட்டுவிடவும் கூடாது. அதுக்குப் பதிலா, தேவனோட வார்த்தைகள நாம கடைப்பிடிக்கணும், “அவர்களுக்குப் பதிலளிப்பதற்கு நேரம் செலவிடுவதையும் சிரமப்படுவதையும் நீ பொருட்படுத்தக் கூடாது, அவர்களின் கேள்விகளைக் குறித்துத் தெளிவாக ஐக்கியங்கொள்வதற்கான ஒரு வழியைக் கண்டறிய வேண்டும்.” நம்மால முடிஞ்சவரைக்கும் அவங்களுக்குப் புரியுறபடி சத்தியத்த ஐக்கியப்படுவது மூலமா நம்மளோட மனசாட்சி தெளிவா இருக்கும்ங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். ஒரு சிருஷ்டியா இது என்னோட பொறுப்புமா இருக்குது. எதிர்காலத்துல, நான் சந்திக்குற சுவிசேஷத்த ஏத்துக்கறவங்க யாரா இருந்தாலும் சரி, அவங்களுக்கு நல்ல மனிதத்தன்மை இருந்தா, தேவனோட வார்த்தைகள அவங்க புரிஞ்சுக்கிட்டா, சத்தியத்த ஐக்கியப்படவும், தேவனுக்கு சாட்சி கொடுக்கவும் என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்ய நான் தயாரா இருக்குறேன், அதன் மூலமா தேவனோட தோன்றுதலுக்காக உண்மையாவே ஏங்குறவங்க, கூடிய சீக்கிரத்துல அவரிடத்துக்குத் திரும்ப முடியும், அதோடு கர்த்தரோட வருகைய வரவேற்க முடியும். தேவனுக்கு நன்றி!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?