கிறிஸ்தவ சிந்தனை: கிறிஸ்தவம் ஏன் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது?
ஆசிரியரின் குறிப்பு: அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச் சென்றது முதல் இன்று வரை, தேவனுடைய விசுவாசிகள் ஏற்கனவே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள். பலருக்கு இது குழப்பமாக இருக்கிறது—தேவனுடைய விசுவாசிகள் அனைவரும் ஒரே வேதாகமத்தை வாசிக்கிறார்கள், எல்லாரும் சிலுவையில் தேவனுடைய இரட்சிப்பைப் போற்றுகிறார்கள், மேலும் தேவன் தம்முடைய விசுவாசிகளுக்காகப் பாதையமைத்த சிலுவையின் வழியே நடக்கிறார்கள், அப்படியென்றால், ஏன் பல வேறுபட்ட சபைப் பிரிவுகள் உள்ளன? பதிலைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து படியுங்கள்.
-
உள்ளடக்கங்கள்
- ஏன் பல்வேறு சபைப் பிரிவுகள் உள்ளன?
- கிறிஸ்தவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- கிறிஸ்தவம் வெவ்வேறு சபைப்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதற்குக் காரணம், அது வெறுமனே ஜனங்களால் ஆளப்படுவதுதான்
- ஒவ்வொரு சபைப்பிரிவுகளும் ஏன் அநேக விசுவாசிகளைக் கொண்டிருக்கின்றன
- இறுதியில், அனைத்து சபைப்பிரிவுகளும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும்
ஏன் பல்வேறு சபைப் பிரிவுகள் உள்ளன?
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொழில் காரியமாக பட்டணத்திற்கு வெளியே சென்றிருந்தபோது, திருச்சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனபோது, நான் உள்ளூர் திருச்சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன், ஏனென்றால், நான் எங்கு சென்றாலும், ஆராதனை தினத்தில் என் சகோதர சகோதரிகளுடன் இணைந்து திருச்சபையில் கலந்துகொள்வது, ஜெபிப்பது மற்றும் தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பது எனக்கு வழக்கமாக இருந்தது. இருப்பினும், இந்த இடங்களில் திருச்சபை முடிந்தபின்பு, அந்த திருச்சபைகளின் தலைவர்கள் (அல்லது மிஷனரிகள்) அடிக்கடி என்னை அணுகி இப்படியாக விசாரித்தனர்: “சகோதரரே, நீங்கள் எந்த சபைப் பிரிவைச் சேர்ந்தவர்? உங்கள் திருச்சபை எப்படிப்பட்ட உபதேசங்களைக் கொண்டுள்ளது?” இதைக் கேட்டு, நான் அடிக்கடி சற்று அதிர்ச்சி அடைந்து, “நான் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன், நான் எந்த ஒரு குறிப்பிட்ட சபைப் பிரிவையும் சேர்ந்தவன் அல்ல” என்று பதிலளிப்பேன். தேவனுக்குக் கீழ் நாம் அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கத்தினர் அல்லவா? இருப்பினும், அவர்கள், “இந்த நாட்களில் அநேக திருச்சபைகள் குழப்பத்தில் உள்ளன. எங்கள் திருச்சபைதான் ஒரே மெய்யான திருச்சபை, இது ஒன்றிணைக்கப்பட்ட திருச்சபை” என்று அடிக்கடி பதிலளிப்பார்கள். எனக்கு இன்னும் குழப்பமாக இருந்தது என்னவென்றால், நான் எனது சொந்த திருச்சபைக்குத் திரும்பிச் சென்றபோது, எப்போதும் போலவே, மற்ற திருச்சபைகளில் நான் என்ன வகையான கோட்பாடுகளைக் கேட்டிருந்தேன் என்று போதகர் என்னிடம் வினவினார், நாங்கள் ஒரு மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டோம், மற்ற திருச்சபைகளில் நான் பெற்றிருந்த புரிதல் அவர் பிரசங்கித்ததை விட வித்தியாசமாக இருந்ததால், ஒரு பரஸ்பர புரிதலுக்கு வர முடியாமல், முற்றிலும் ஒத்துப்போகாத கருத்து வேறுபாட்டில் முடிவடைந்தது. அது போலவே, பல ஆண்டுகளாக, நான் எனது பல்வேறு பயணங்களில் கிறிஸ்தவத்தின் எண்ணற்ற சபைப்பிரிவுகளுக்குச் சென்று, அவர்கள் எப்படி ஒருவரையொருவர் குற்றப்படுத்தி விமர்சித்தார்கள், அதன் மூலம் எப்படி ஒரு “வீடு” ஒரு “போர்க்களமாக” மாறுகிறது என்பதைக் கண்டேன். இதையெல்லாம் பார்த்து, நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொண்டேன், “வேதம் சொல்கிறது, ‘ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்’ (எபேசியர் 4:5-6). நாம் அனைவரும் ஒரே தேவனைத்தான் விசுவாசிக்கிறோம், ஒரே வேதாகமத்தையும் தேவனுடைய வார்த்தைகளையும் வாசிக்கிறோம், அப்படி என்றால், கிறிஸ்தவம் ஏன் பல வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது? இந்தப் பிரச்சினையின் அடிப்படைக் காரணம் என்ன? எந்த சபைப்பிரிவு உண்மையில் தேவனுடைய நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது?” இந்த குழப்பம் மற்றும் அதிர்ச்சியால் நொந்து போன நான், அவசரமாக பதிலைத் தேடினேன்.
கிறிஸ்தவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
பின் நாட்களில், சகோதரர் யுவான் என்ற மிஷனரியை உறவினர் ஒருவரின் வீட்டில் சந்தித்து, கடந்த பல வருடங்களாக என்னைப் பாதித்த குழப்பங்கள் அனைத்தையும் குறித்து அவரிடம் விவாதித்தேன். கிறிஸ்தவம் பல பிரிவுகளாகப் பிரிந்ததற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று நான் கேட்டபோது, சகோதரர் யுவான் கிறிஸ்தவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை எனக்கு விளக்கினார். “கிறிஸ்தவம் கி.பி முதல் நூற்றாண்டில் தோன்றியது மற்றும் கி.பி நான்காம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு முழுவதும் பரவியது, அந்தக் கட்டத்தில் அது கத்தோலிக்கமாக வளர்ச்சியடைந்தது என்று அவர் கூறினார். பின்னர், சில மதப் புரட்சியாளர்கள் கத்தோலிக்கத்தில் திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பிரிவினை இல்லாததால் மகிழ்ச்சியடையவில்லை, மேலும் அவர்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உபதேசங்கள், சடங்குகள், தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின் படிநிலை ஆகியவற்றை எதிர்த்ததால், அவர்கள் சீர்திருத்தத்தைத் தொடங்கினர், பின்னர் புராட்டஸ்டன்ட் இயக்கம் எழுந்தது. காலம் செல்லச் செல்ல பல்வேறு சபைப்பிரிவுகள் தோன்றத் தொடங்கின. ஜனங்களுடைய மாறுபட்ட கருத்துருக்கள் திருச்சபைக்குள் கருத்து வேறுபாடு உணர்வை ஊக்குவித்தன. வேதவசனத்தைக் குறித்த வெவ்வேறு விளக்கங்களை உருவாக்க காரணமாக அமைந்த ஒவ்வொரு சபைப்பிரிவின் புவியியல், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஆதிக்கத்துடன் கூட, விசுவாசிகளின் மத்தியில் பல்வேறு சிந்தனைத் தொகுப்பில் ஏற்பட்ட பிளவுகளும் இணைந்து, வெவ்வேறு சபைப்பிரிவுகளிடையே வெவ்வேறு உபதேசங்களை நிறுவ வழிவகுத்தது. பலவிதமான சபைப்பிரிவுகள் தோன்றுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். உண்மையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பல புதிய சபைப்பிரிவுகளின் தோற்றம் பெரும்பாலும் தங்கள் சொந்த லட்சியங்கள் மற்றும் விருப்பங்களைப் பின்தொடர்வதன் நோக்கத்தில், ஜனங்கள் திருச்சபைகளைப் பிரிக்க முயற்சிப்பதால்தான் ஏற்பட்டது. சில சந்தர்ப்பங்களில், ஜனங்கள் வேத வசனத்தின் புதிய விளக்கங்களை உருவாக்கி, புதிய யோசனைகளைக் கொண்டிருந்தபோது புதிய சபைப்பிரிவுகள் தோன்றின, அவை ஏற்கனவே உள்ள திருச்சபைகளிலிருந்து பிரிந்து தனி கிளையைத் தொடங்க வழிவகுத்தன. இதுவே ஒட்டுமொத்த கிறிஸ்தவமும் மிகவும் சீர்கெட்டுப் போவதற்கும் பல்வேறு மதப்பிரிவுகளுக்கு இடையே இடைவிடாத உள் சண்டைகள் இருப்பதற்கும் காரணமாகும்.”
சகோதரர் யுவானின் ஐக்கியம் மிகவும் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது, அதனால் நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
கிறிஸ்தவம் வெவ்வேறு சபைப்பிரிவுகளாக பிளவுபட்டிருப்பதற்குக் காரணம், அது வெறுமனே ஜனங்களால் ஆளப்படுவதுதான்
சகோதரர் யுவான் தொடர்ந்து கூறினார், “இன்று, பகுத்தறிவும் சத்தியத்தைப் பற்றிய உண்மையான புரிதலும் உள்ள எவரும், கிறிஸ்தவ திருச்சபையில் பெரும்பாலான வல்லமையும் அதிகாரமும் வெறும் ஜனங்களின் கைகளில் இருப்பதைக் கவனித்திருப்பார்கள். திருச்சபையின் தலைவர்கள் தாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் என்று உரிமை கொண்டாடுகின்றனர், ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் தங்கள் சொந்த திட்டங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் போதிப்பது தேவனுடைய வார்த்தையாகவே இருப்பதைப் போல, அவர்கள் வேதத்தைப் பற்றிய தங்களது சொந்த குறைபாடுள்ள மற்றும் தவறான புரிதலின்படி விசுவாசிகளுக்குக் கற்பிக்கிறார்கள். இன்னும் அதிகமான ஜனங்களைக் கட்டுப்படுத்தி, தங்களது அதிகாரத்தின் ஆதிக்கத்தில் அவர்களைச் சிக்க வைக்கும் இறுதிக் குறிக்கோளுடன், விசுவாசிகளை ஏமாற்றுவதற்கு அவர்கள் எல்லா வகையான முட்டாள்தனமான கோட்பாடுகளையும் கூட பரப்புகிறார்கள். இந்த அம்சத்தைப் பொறுத்தவரை, தேவனுடைய கிரியையைப் பற்றிய பதிவு போதுமான அளவு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. நியாயப்பிரமாண காலத்தில், இஸ்ரவேலர்களை வழிநடத்த தேவன் மோசேயை நேரடியாகப் பயன்படுத்தியபோது, மோசே ஆசாரியர்களின் முறைமையை நிறுவினான். ஆசாரியர்கள் தனிப்பட்ட முறையில் தேவனால் வழிநடத்தப்பட்டனர், இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்து அவர்களுக்கு அடிபணிந்தனர். தேவனுடைய சித்தத்திற்கு எதிராகச் சென்றவர்கள் தண்டனையையோ அல்லது வானத்தின் அக்கினியையோ சந்திக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, 250 தலைவர்கள் மோசேயை எதிர்த்துத் தங்கள் சொந்த வழியில் செல்ல முயன்றபோது, தேவன் அவர்கள் அனைவரையும் பூமி விழுங்கிப்போடும்படி செய்தார். மோசேயின் கிரியை முடிந்ததும், தேவன் இஸ்ரவேலர்களை நேரடியாக வழிநடத்தப் பயன்படுத்துகிற யாரும் பூமியில் இல்லாதபோது, தேர்தல் மூலம் ஆசாரியர்கள் நியமிக்கப்படத் தொடங்கினர். தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாரியர்களால் யூத மத உலகம் அடிக்கடி குழப்பத்தில் இருந்தது மற்றும் படிப்படியாக சீர்கெட்டு சிதைந்துபோனது. நியாயப்பிரமாண காலத்தின் கடைசி கட்டத்தில், எந்த ஆசாரியர்களும் தேவனுடைய வழிநடத்துதலைப் பெற்றிருந்ததில்லை, அவர்கள் எந்தவித தகுந்த தண்டனையும் இல்லாமல் அட்டூழியங்களைச் செய்தார்கள், அதனால் ஜனங்கள் குழுக்களாகவும் பிரிவுகளாகவும் பிரிந்தனர், மேலும் தேவாலயம் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கான மையமாக மாறியது. இவ்வாறே, பல்வேறு சபைப்பிரிவுகள் உருவாகின. மீண்டும், கிருபையின் காலத்தில், கர்த்தராகிய இயேசு தம்மை வெளிப்படுத்தவும், கிரியை செய்யவும் மாம்சத்தில் மனுவுருவானபோது, அவர் தனிப்பட்ட முறையில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தெரிந்தெடுத்தார், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் ஆழமாகக் கிரியை செய்தார். அப்போஸ்தலர்களால் தேவனுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடிந்தது மற்றும் தேவனைப் பின்பற்றிய அனைவரும் தேவனால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டவர்களால் மேய்க்கப்பட்டு வழிநடத்தப்பட்டனர். சுயநல நோக்கங்கள் அல்லது தனிப்பட்ட கருத்தின்படி செயல்பட யாரும் துணியவில்லை மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி அனைவரும் தேவனை ஆராதித்தனர். அதைப்போலவே, உண்மையான திருச்சபை உருவாக்கப்பட்டது மற்றும் சொல்லுவதற்குக் கூட எந்த மதப்பிரிவுகளும் இல்லாதிருந்தது. கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிச் சென்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான அப்போஸ்தலர்கள் ஏற்கனவே ஊழியம் செய்து மரித்துவிட்டார்கள், எனவே பூமியிலுள்ள திருச்சபை தேவனால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களின் மேய்த்தல் மற்றும் வழிநடத்துதல் இல்லாமல் இருந்தது. ஜனங்கள் வேதாகமத்தைப் பற்றிய பல்வேறு விதமான விளக்கங்களைக் கொண்டிருந்ததாலும், ஜனங்கள் அகந்தையுடனும், கர்வத்துடனும் காணப்பட்டு, எப்போதும் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பற்றிக்கொண்டிருந்ததாலும், அனைத்து வகையான வெவ்வேறு வகையான சபைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இதனால், கிறிஸ்தவத்தில் ஏற்கனவே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இவ்வாறு, தேவனுடைய தனிப்பட்ட வழிநடத்துதல் இல்லாதபோதும், நம் இருதயங்களில் தேவன் இல்லாதபோதும், நாம் அகந்தையுடன் அதிகாரத்திற்கு உரிமை கோருகிறோம், மேலும் நமது சொந்த எண்ணங்கள் மற்றும் ஒருதலைப்பட்ச எண்ணங்களுக்கு ஏற்ப கிரியை செய்கிறோம் மற்றும் செயல்படுகிறோம். அறியாமலேயே, கிறிஸ்துவுடன் ஒத்துப்போகாத எல்லாவிதமான காரியங்களையும் செய்துவிட்டு, அதைப் பற்றி எதுவும் நினைக்காமல், நாம் மெதுவாக ஒரு மாறுபட்ட பாதையில் செல்கிறோம். தங்களின் சொந்த தவறான எண்ணங்களின்படி தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் தவறான பாதையில் செல்வதற்கும், எல்லாவற்றிலும் கிறிஸ்துவின் வார்த்தையை இறுதி அதிகாரமாக எடுத்துக்கொள்ள முடியாததற்கும் இதுவே காரணமாகும். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடுவதில்லை மற்றும் கீழ்ப்படிவதில்லை, மேலும் எந்த நேரத்திலும் தேவனை எதிர்ப்பவர்களாக மாறலாம். இதுவே மனுஷன் தேவனுக்கு ஊழியம் செய்யும்போது அவரை எதிர்ப்பதற்கு மூலக்காரணமாக இருக்கிறது, மேலும் கிறிஸ்தவம் பல்வேறு பிரிவுகளாக உடைந்து போவதற்கு இதுவே காரணமாகும்.”
சகோதரர் யுவான் கூறிய விதத்தில் ஒருவர் விவரிப்பதைக் கேட்பது இதுவே முதல் முறையாகும். சொல்லப்பட்டதைப் போல், புதிய சபைப்பிரிவுகளின் உருவாக்கம் வெறுமனே ஜனங்களால் தொடங்கப்பட்டது. சபைப்பிரிவுகளின் தலைவர்கள் சொன்னது மற்றும் செய்தது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலில் இருந்து பெறப்படவில்லை. மேலும் என்னவென்றால், மனுஷனுடைய சுபாவம் மிகவும் அகந்தையுள்ளதாகவும் கர்வமானதாகவும் இருக்கிறது, ஒவ்வொருவரும் தனது சொந்த புரிதலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், தங்களது சொந்த வழியில் நடந்துகொள்கிறார்கள், மேலும், சபைப்பிரிவுகள் செழித்து, பெருகிவிட்டன. அப்படியானால், வெவ்வேறு சபைப்பிரிவுகள் ஒருவரையொருவர் தாக்கி விரட்டியதில் ஆச்சரியமில்லை, நான் எங்கு சென்றாலும் திருச்சபைப் போதகர்களின் தற்காப்பான தோற்றத்தை என்னால் காண முடிந்தது. ஏனென்றால், அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே தேவனுடைய வீட்டைத் தங்கள் சொந்த சொத்தாகப் பார்த்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பொல்லாத விவசாயிகளாக மாறியிருந்தனர். ஆனாலும், இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதையெல்லாம் தெளிவாகப் பார்க்க யார் வந்திருந்தார்கள்? இது தேவன் சொன்ன ஒன்றை நினைவுகூருவதற்கு என்னை வழிநடத்தியது: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசாயா 29:13). இந்தச் சில வார்த்தைகள் என் நினைவுகளை எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது! சொல்லப்பட்டதைப் போல், சபைப்பிரிவுகளின் பல்வேறு தலைவர்கள் முன்வைத்த பக்திக்கான வெளிப்புறத் தோற்றத்தால் நான் ஏமாற்றப்பட்டிருந்தேன். என்னையும் அறியாமல் நான் சிறையில் இருந்ததைப் போல் இருந்தது. இதையெல்லாம் நான் உணர்ந்துகொண்டபோது, திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் வந்தது: இந்த பல்வேறு சபைப்பிரிவுகளுக்கு கிறிஸ்துவினுடைய மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய அதிகாரம் இல்லாத நிலையிலும், இன்னும் பலர் ஏன் அவைகளை ஆதரிக்கிறார்கள் மற்றும் பின்பற்றுகிறார்கள்?
ஒவ்வொரு சபைப்பிரிவுகளும் ஏன் அநேக விசுவாசிகளைக் கொண்டிருக்கின்றன
எனது குழப்பத்தை நான் வெளிப்படுத்திய பிறகு, சகோதரர் யுவான் ஐக்கியத்தைத் தொடர்ந்துகொண்டே சொன்னார்: “ஒவ்வொரு பிரிவின் தலைவர்களும் வரம்பெற்ற மற்றும் பண்பட்ட ஜனங்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வேதாகமப் பள்ளிக்குச் சென்றவர்கள், அறிவார்ந்த பகுப்பாய்வில் திறமையானவர்கள், வேத ஆராய்ச்சியில் அறிவுள்ளவர்கள், பல்வேறு ஆழமான மற்றும் மறைபொருள் கோட்பாடுகளை விளக்க முடியும் மற்றும் பெரும்பாலும் தங்கள் கருத்துக்களை நிரூபிக்க வேத வசனத்தை சூழ்நிலைக்கு வெளியே எடுப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் அனைவரும் தலைசிறந்த ஏமாற்றுக்காரர்கள் என்று ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், அவர்களின் வெளிப்புற நற்செயல்கள் மற்றும் சிறந்த பிரசங்கங்களால் ஜனங்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். அறியாமலே, இந்தத் தலைவர்கள் தேவன் ஒரு காலத்தில் வாழ்ந்த விசுவாசிகளின் இருதயங்களில் இடம் பெறுகிறார்கள். விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், அவர்கள் எப்போதும் இந்தத் தலைவர்களிடம் தீர்வு காணச் செல்கிறார்கள். இந்த விசுவாசிகளிடம் சத்தியம் இல்லை, எனவே இந்தத் தலைவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருக்கிறதா, அவர்களுடைய பிரசங்கங்களில் பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சமும் மற்றும் அறிவொளியும் உள்ளனவா இல்லையா மற்றும் அவர்களின் செயல்கள் பரிசுத்த ஆவியானவருடையவைகளுடன் ஒத்துப்போகின்றனவா என்பதைப் பகுத்தறிய இயலாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள், வல்லமை வாய்ந்த மற்றும் வரம் பெற்றவர்களை ஆராதிக்கிறார்கள் மற்றும் இந்தத் தலைவர்களை தங்கள் விக்கிரகங்களாக எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, அவர்கள் வெறும் மனுஷர்களைப் பின்பற்றிக்கொண்டு, தேவனை விசுவாசிப்பதாகக் கூறும் ஜனங்களாக மாறுகிறார்கள். கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்’ (மத்தேயு 15:14). மேலும் தேவனுடைய வார்த்தைகள் கூறுகின்றன, ‘ஒவ்வொரு சபைப் பிரிவின் தலைவர்களையும் பார்—அவர்கள் அனைவரும் அகந்தையுள்ளவர்களும் சுயநீதிக்காரர்களாகவும் இருக்கின்றனர், மேலும் வேதகமத்தை அவர்கள் விளக்குவது சூழலுக்குப் பொருத்தமற்று அவர்களது சொந்தக் கற்பனைகளால் வழிகாட்டப்படுகின்றன. அவர்கள் தங்கள் கிரியையைச் செய்ய வரங்களையும் அறிவையும் சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பிரசங்கமே செய்ய முடியாவிட்டால் ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுவார்களா? எது எப்படி இருந்தாலும், அவர்களுக்கு சிறிது அறிவு இருக்கிறது மேலும் சில உபதேசங்களைப் பற்றி பிரசங்கிக்க முடியும், அல்லது பிறரை எப்படிக் கவர்வது என்றும் சில உபாயங்களை பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்கு முன்னால் ஜனங்களைக் கொண்டு வந்து அவர்களை ஏமாற்ற இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பெயரளவில், அந்த ஜனங்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் தலைவர்களைப் பின்பற்றுகின்றனர்’ (“உண்மையில் தேவனை விசுவாசிப்பது மட்டுமே சத்தியத்தைப் பின்தொடர்வதாகும்”). பரிசேயர்களைப் பற்றி மீண்டும் யோசித்துப் பார்த்தால், அவர்கள் சட்ட அறிவைப் பற்றிய மாபெரும் அதிகாரத்தைப் பெற்றிருந்தனர், வேதாகமத்தை நன்கு அறிந்திருந்தனர், தலைமுறை தலைமுறையாக தேவாலயத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் வேத வசனம் பொறிக்கப்பட்டிருந்தது, வேண்டுமென்றே அனைவரும் பார்க்கும்படியாக திரளானவர்கள் கூடியிருக்கும் தெருக்கடைகளில் நீண்ட ஜெபங்கள் செய்து, தர்மம் வழங்கி, தொண்டு செய்து, தாங்கள் உபவாசிப்பதை அனைவரும் அறியும்படியாக, உபவாசிக்கும் போது, மிகவும் துக்கமாகத் தங்களைக் காண்பித்துக்கொள்கிறார்கள்—இப்படித்தான் அவர்கள் தங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். இவ்வாறு, அவர்கள் யூத ஜனங்களை யேகோவாவின் மிகவும் பக்தியுள்ள ஊழியர்கள் தாங்கள்தான் என்று நம்பச் செய்தனர். இருப்பினும், கர்த்தராகிய இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, இந்தப் பரிசேயர்களால் அவருடைய கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை, மனுவுருவான கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை, சத்தியம் கிறிஸ்துவிடமிருந்து வந்தது என்பதை விசுவாசிக்கவில்லை. மாறாக, தங்கள் அதிகாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து, நிரந்தர ஆட்சி என்ற இலக்கை அடைய, அவர்கள் வெறித்தனமாக எதிர்த்து, கர்த்தராகிய இயேசுவைக் கண்டனம் செய்து, கர்த்தராகிய இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கும் தூஷிப்பதற்கும் பொய்யான வதந்திகளைப் பரப்பி, இறுதியாக கர்த்தரை சிலுவையில் அறைய ரோமானிய அரசாங்கத்துடன் சேர்ந்து சதி செய்தார்கள். இது தேவனுடைய மனநிலையைக் காயப்படுத்தியது மற்றும் தேவனுடைய சாபங்களையும் தண்டனையையும் அவர்களுக்குப் பெற்றுத்தந்தது. பரிசேயர்களைப் பின்பற்றிய யூதேய ஜனங்கள் சத்தியம் இல்லாதவர்களாகவும், அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வழிபட்டவர்களாகவும் இருந்ததால், அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் கிரியையையும் வார்த்தைகளையும் தேடி ஆராயவில்லை, மாறாக கர்த்தராகிய இயேசுவை எதிர்ப்பதிலும் கண்டனம் செய்வதிலும் பரிசேயர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினார்கள். இதனால்தான், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை இழந்தனர், தேவனால் சபிக்கப்பட்டனர், ரோமானியர்களால் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் சந்ததியினர் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகில் அலைந்து திரியும்படி விடப்பட்டனர். இது அவர்கள் வெறும் மனுஷர்களை ஆராதித்துப் பின்பற்றியதன் மிக மோசமான விளைவு!” இதைக் கேள்விப்பட்ட பிறகு, அநேக ஜனங்கள் ஏன் ஒவ்வொரு சபைப்பிரிவையும் பின்பற்றுகிறார்கள் என்பதை நான் இறுதியாகப் புரிந்துகொண்டேன். நம்மிடம் சத்தியம் இல்லாவிட்டால், பகுத்தறிய முடியாவிட்டால், விஷயங்களின் யதார்த்தத்தின் வழியாகப் பார்க்க முடியாவிட்டால், நாம் மற்றவர்களைத் தவறான பாதையில் பின்பற்றிச் செல்ல வாய்ப்புள்ளது!
இறுதியில், அனைத்து சபைப்பிரிவுகளும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும்
அடுத்து, சகோதரர் யுவான் எங்களுக்காக தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியை வாசித்தார்: “உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் மாற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவரால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்கு கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது” (“தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்”).
சகோதரர் யுவான் ஐக்கியத்தில் கூறினார், “உலகில் எத்தனை சபைப்பிரிவுகள் இருந்தாலும், இந்த சபைப்பிரிவுகளுக்குள் எந்தத் தலைவரின் அதிகாரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எத்தனை பேரை அவர்கள் வழிநடத்தினாலும், இறுதியில் அவர்களுக்கு மனுஷர்களின் வாழ்க்கை விதியின் மீது அதிகாரம் இல்லை என்பதை தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் காண முடிகிறது. தேவன் மட்டுமே மனிதகுலத்தின் சிருஷ்டிகராகவும் ஆளுபவராகவும் இருக்கிறார், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எதுவும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களிலிருந்து தப்ப முடியாது. எல்லா மனுஷர்களும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் வாழ்கின்றனர். இறுதியில், ஒவ்வொரு சபைப்பிரிவின் விசுவாசிகளும் சிருஷ்டிகரைப் பின்பற்ற வேண்டும், தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும், மேலும், கீழ்ப்படிந்து கிறிஸ்துவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கிறிஸ்தவ திருச்சபை ஆகும். மனுஷன் உருவாக்கிய சபைப்பிரிவுகள் மனுஷனின் எண்ணங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மற்றும் மனுஷனை அவனது அற்புதமான சென்றடையும் இடத்திற்கு முற்றிலும் கொண்டு செல்ல இயலாது. அவைகள் அனைத்தும் இறுதியில் அடக்கப்பட்டு அழிக்கப்படும்.”
சகோதரர் யுவானின் ஐக்கியம் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டியது: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” (யோவான் 10:16). கிறிஸ்தவ திருச்சபையில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும், அவை அனைத்தும் இறுதியில் தேவனுக்கு முன்பாக வர வேண்டும் என்று தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் பார்க்க முடிகிறது. அவைகள் அனைத்தும் கிறிஸ்து வெளிப்படுத்தியிருக்கிற வார்த்தைகளிலும், ஒரே மேய்ப்பனின் நிர்வாகம் மற்றும் வழிநடத்துதலின் கீழும் இணைந்திருக்க வேண்டும். இது முற்றிலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும் பாதையாகும். எதிர்காலத்தில், சொல்லுவதற்குக் கூட சபைப்பிரிவுகள் எதுவும் இருக்காது. தேவன் இறுதியில் இதைப் பார்ப்பார். இந்த ஐக்கியம் உண்மையில் ஒரு புதிய உலகத்தைக் காணும்படி என் கண்களைத் திறந்தது. நான் நிறைய கற்றுக்கொண்டு, கிறிஸ்தவத்தில் பல்வேறு சபைப்பிரிவுகள் தோன்றுவதற்கான மூலக்காரணத்தைப் புரிந்துகொண்டு, விசுவாசிகளைக் கட்டுப்படுத்தவும் கட்டளையிடவும் விரும்பிய பல்வேறு வகையான தலைவர்களின் நிமித்தமாக எப்படி சபைப்பிரிவுகள் உண்டாயின மற்றும் வல்லமையையும் அதிகாரத்தையும் பெறுவதற்கான தங்களது இலக்கை எப்படி அடைந்தனர் என்பதை உணர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதே உண்மையான திருச்சபை என்பதை அறிந்தேன். அத்தகைய திருச்சபை பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டுள்ளது மற்றும் தேவனுடைய நோக்கங்களுக்கு ஏற்றபடி காணப்படுகிறது. இன்றைய ஐக்கியத்தின் மூலம் நான் அநேக காரியங்களை அறிந்துகொண்டேன் மற்றும் அதிக அளவு ஆவிக்குரிய இன்பத்தையும் விடுதலையையும் உணர்ந்தேன். அவருடைய வழிநடத்துதலுக்காக தேவனுக்கு நன்றி! நான் இறுதியாக விழித்தெழுந்து வெறும் மனுஷர்களைப் பின்தொடர்வதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்தேன். கிறிஸ்தவம் ஏன் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன் மற்றும் எனது அறியாமை மற்றும் குழப்பத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன். நான் சபைப்பிரிவுகளைக் கைவிட்டு, கிறிஸ்துவின் வழிநடத்துதலைக் கொண்ட உண்மையான திருச்சபையைக் கண்டுபிடிக்கத் தயாராக இருக்கிறேன். தேவனுக்கே நன்றி!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?