கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

செப்டம்பர் 14, 2021

சியாவோ ஃபே

நான் கர்த்தரை நம்பத் தொடங்கிய பிறகு, சகோதர சகோதரிகள் “நம் நேசர் கதவைத் தட்டுகிறார்” என்ற பாடலை பாட விரும்பினர், அப்பாடல் இவ்வாறு இருக்கும்: “நம் நேசர் கதவைத் தட்டுகிறார், அவர் தலை முடி பனியால் நனைந்திருக்கிறது; நாம் சீக்கிரமாக எழுந்து கதவை திறப்போம், நம் நேசரைத் திரும்பிப் போக விட வேண்டாம். …” ஒவ்வொரு முறை நாங்கள் இந்தப் பாடலைப் பாடத் தொடங்கும் போதும், எங்கள் இதயங்கள் ஆழமாக நெகிழ்ந்து உணர்ச்சியால் கிளறப்படும். நாங்கள் அனைவரும் எங்கள் நேசரை இரவு தங்கும்படி கேட்க விரும்பினோம், அவர் வந்து கதவைத் தட்டும்போது, முதலாவதாக அவர் சத்தத்தைக் கேட்டு அவரை வரவேற்க விரும்பினோம். கர்த்தரை நம்புகிற நாங்கள் அனைவரும் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருப்போம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் கர்த்தர் வரும்போது, அவர் எப்படிக் கதவைத் தட்டுவார்? கர்த்தர் தட்டும் போது, அவரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தரை நம்பும் ஒவ்வொருவரும் இதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் மீட்பின் கிரியையைச் செய்ய வந்தபோது, கர்த்தரால் செய்யப்பட்ட அற்புதங்களும் கர்த்தருடைய வார்த்தையும் யூதேயா தேசம் முழுவதும் பரவியது. அவருடைய நாமமும் அனைத்து யூத தேசங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அந்தக் காலத்து ஜனங்களுக்கு, பரலோக ராஜ்யத்தின் சுவிஷேசத்தைப் போகிற இடமெல்லாம் பிரசங்கிக்கும்படி சீஷர்களை வழிநடத்திய கர்த்தராகிய இயேசுவே வாசற்படியில் தட்டுகிற கர்த்தராக இருந்தார். கர்த்தராகிய இயேசு கூறினார்: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது(மத்தேயு 4:17). ஜனங்கள் மனந்திரும்பி தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய தம் முன் வருவார்கள் என்று கர்த்தர் நம்புகிறார். அப்படிச் செய்வதால், அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மனிதன் நியாயப்பிரமாணத்தின் சாபம் மற்றும் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுபட்டு தேவனால் மீட்கப்படுவான். அந்த நேரத்தில் பல யூத ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டனர். கர்த்தருடைய வார்த்தையில் இருந்து அதிகாரத்தையும் வல்லமையையும் அவர்கள் உற்றுக் கவனித்தனர், அதாவது கர்த்தராகிய இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் ஜனங்களுக்கு உணவளிக்க முடிந்தது. ஒரே ஒரு வார்த்தையால், கர்த்தராகிய இயேசு காற்றையும் கடலையும் அமைதிப்படுத்த முடிந்தது, அதோடு கூட மரித்து நான்கு நாட்களான பிறகு லாசருவை அவனது கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்ப முடிந்தது…. கர்த்தராகிய இயேசு பேசின எதுவும் முழுமையடைந்தது, நிறைவேறியது, இது கர்த்தருடைய வார்த்தையில் இருக்கும் அதிகாரத்தையும் வல்லமையையும் காண நம்மை அனுமதிக்கிறது. கர்த்தராகிய இயேசு ஜனங்களுக்குக் கற்பிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளும், பரிசேயர்களைக் கடிந்து கொள்ள அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் சத்தியமாக இருந்தது, அவை மனிதர்களாகிய நாம் பேசக்கூடிய வார்த்தைகளாய் இருக்கவில்லை. கர்த்தராகிய இயேசு பேசிய வார்த்தைகள் மற்றும் அவர் செய்த காரியங்கள் தேவனுடைய மனநிலையையும், தேவனிடத்தில் என்ன இருக்கிறது, அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தியது. அவை தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்தி மனிதர்களின் இருதயங்களை நடுங்கச் செய்தன.

அந்தச் சமயத்தில் இருந்த யூத ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவினால் பேசப்பட்ட வார்த்தைகளும் அவர் செய்த அற்புதங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதைத் தெளிவாக அறிந்திருந்தனர், ஆனாலும் தேவனை வணங்கும் இருதயங்கள் அவர்களிடம் சிறிதளவும் இல்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் கிரியையைத் தேடவோ அல்லது விசாரிக்கவோ இல்லை, ஆனால் அதற்குப் பதிலாக வரப்போகிறவர் இம்மானுவேல் அல்லது மேசியா என்று அழைக்கப்படுவார் மற்றும் அவர் ஒரு கன்னியினிடத்திலிருந்து பிறப்பார் என்று நம்பி, வேதாகமத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கண்மூடித்தனமாக பற்றிக்கொண்டிருந்தனர். மரியாளுக்கு ஒரு கணவர் இருப்பதை அவர்கள் கண்டபோது, கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியின் பரிசுத்தக் கருத்தரிப்பு அல்ல என்றும், அவர் ஒரு கன்னியினிடத்திலிருந்து பிறக்கவில்லை என்றும் முடிவு செய்தனர். அவர்கள் நியாயமற்ற தீர்ப்புகளையும் வழங்கி, கர்த்தராகிய இயேசு ஒரு தச்சரின் மகன் என்றும் அவர் முற்றிலும் ஒரு சாதாரண நபரே என்றும் கூறினார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவை மறுதலிக்கவும் கண்டிக்கவும் இந்தத் தீர்ப்புகளைப் பயன்படுத்தினர். அவர்கள் கர்த்தராகிய இயேசு பிசாசுகளின் தலைவனான பெயல்செபூலைச் சார்ந்து கொண்டு, பிசாசுகளைத் துரத்துகிறார் என்று அவருக்கு எதிராக தூஷணஞ்செய்யுமளவிற்குச் சென்றனர். இறுதியில், அவரைச் சிலுவையில் அறைய ரோமானிய அரசாங்கத்துடன் இரகசியமாக ஒத்துழைத்தனர். பெரும்பாலான யூத ஜனங்கள் கர்த்தராகிய இயேசு ஓர் அரண்மனையில் பிறந்திருக்க வேண்டும் என்றும், அவர் தங்கள் அரசராக இருப்பார் என்றும், ரோமானிய ஆட்சியைத் தூக்கி எறிய தங்களை வழிநடத்துவார் என்றும் நம்பினர். பரிசேயர்கள் வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பி கர்த்தராகிய இயேசுவைக் கண்டனம் செய்த போது, அவர்கள் எவ்விதப் பகுத்தறிவுமின்றி கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிகிறவர்களாயிருந்தார்கள். கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பிற்கும் பரிசேயர்கள் கூறிய அவதூறான வார்த்தைகளுக்கும் இடையில், அவர்கள் பரிசேயர்களின் கட்டுக்கதைகளையும் வெளிப்படையான பொய்களையும் கவனிக்கத் தெரிவு செய்து, கர்த்தராகிய இயேசுவினால் பிரசங்கிக்கப்பட்ட வழியை நிராகரித்தனர். கர்த்தர் அவர்கள் கதவை தட்டியபோது, அவர்கள் கர்த்தருக்குத் தங்கள் இருதயங்களை அடைத்தனர். அது கர்த்தராகிய இயேசு சொன்னது போலவே இருந்தது: “ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே(மத்தேயு 13:14-15). அவர்கள் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க மறுத்ததாலும், கர்த்தருடைய மீட்பின் கிரியையை ஏற்றுக்கொள்ளாததாலும், இந்த யூத ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை இழந்தனர். தேவனை எதிர்த்ததன் விளைவாக, அவர்கள் தேவனுடைய தண்டனையை அடைந்தனர், இது இஸ்ரவேலின் இரண்டாயிரம் ஆண்டுகால தேசிய அடிமைப்படுதலுக்கு வழிவகுத்தது. மாறாக, அந்த காலத்தில் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றிய சீஷர்களான பேதுரு, யோவான் யாக்கோபு மற்றும் நாத்தான்வேல் சத்தியத்தை நேசிக்கும் இருதயங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் வார்த்தையையும் கர்த்தராகிய இயேசுவின் கிரியையும் கையாண்ட விதத்தில் தங்கள் சொந்தக் கருத்துக்களையும் கற்பனைகளையும் சார்ந்திருக்காமல், மனமறியத் தேடி, அவற்றைக் கவனத்துடன் படித்து, பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தைப் பெற்றனர். அவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஆண்டவராகிய இயேசுவே வரப்போகும் மேசியா என்பதை அறிந்து கொண்டனர், இப்படி அவர்கள் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய இரட்சிப்பைப் பெற்றனர். பரிசேயர்கள் மற்றும் யூத ஜனங்களின் தோல்வியானது, அவர்கள் தேவனுடைய வெளிப்பாட்டையும் கிரியையையும் புரிந்து கொள்ளவும் அடையாளங்காணவும் வேதாகம தீர்க்கதரிசனங்களின் நேரடி அர்த்தத்தை மட்டுமே சார்ந்திருந்த காரியத்தில் இருந்தது என்பதை நாம் காண முடியும். இது அவர்களை தேவனை நம்புகிற ஆனால் தேவனை எதிர்க்கிற ஜனங்களாக இருக்க வழிநடத்தியது. தேவனை நம்புகிற ஜனங்கள் தேவனுடைய புதிய கிரியைகளை தங்கள் சொந்த கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் கையாண்டால், தேவனுடைய வருகையை அவர்களால் வரவேற்க முடியாமல் போவதோடல்லாமல், அதோடுகூட அவர்கள் எளிதாகத் தேவனை நம்புகிற ஆனாலும் அவரை எதிர்க்கிற ஜனங்களாக மாறிப்போவார்கள் என்பதை இதிலிருந்து நாம் காண முடியும். அது எவ்வளவு பரிதாபகரமானதாக இருக்கும்? கர்த்தராகிய இயேசு கூறினார்: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. … நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்(மத்தேயு 3, 6). நாம் இந்த பேதுரு மற்றும் யோவானைப் போல, தேவனுடைய குரலைக் கேட்கும் போது நீதியின் மீது தாகமும் ஏக்கமும் உள்ள இதயங்களைக் கொண்டு, அதை உற்சாகமாய்த் தேடி ஆராய முடிந்தால் மட்டுமே, நாம் தேவனுடைய வருகையை வரவேற்க முடியும் என்று நாம் இங்கே காண்கிறோம்.

இன்று கடைசி நாட்களில் நிகழப்போகிற கர்த்தருடைய இரண்டாம் வருகையின் தீர்க்கதரிசனங்கள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடைசி நாட்களில் கர்த்தர் மீண்டும் வரும்போது, நாம் அதிக விழிப்புடனும் ஆயத்தத்துடனும் இருக்க வேண்டும், தேவனுடைய சத்தத்தைக் குறித்து கவனம் கொள்ள வேண்டும், மேலும் எந்த நேரத்திலும் வரக்கூடிய நம் வாசற்படியில் கர்த்தரின் தட்டுதலுக்காகக் காத்திருக்கும்படி நீதியைத் தேடுகிற தாகம்கொள்கிற இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வழியில் மட்டுமே நாம் கர்த்தருடைய இரண்டாம் வருகையை வரவேற்க முடியும். கர்த்தராகிய இயேசு கூறினார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). மற்றும் வெளிப்படுத்துதல் 2 மற்றும் 3ம் அதிகாரங்களில் பலமுறை இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது, அவர் தமது வார்த்தையை வெளிப்படுத்தி, புதிய கிரியையைச் செய்வார் என்று வேதத்தில் பார்க்கிறோம். இது நமது வாசற்படியில் கர்த்தர் தட்டுகிறதும், மேலும் கர்த்தர் தமது வார்த்தையைப் பயன்படுத்தி நம் இதயக்கதவுகளைத் தட்டுவதும் ஆகும். கர்த்தர் பேசுகிற வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தருடைய சத்தத்தை ஊக்கமாகத் தேடி, கவனமாகக் கேட்கிறவர்கள் புத்தியுள்ள கன்னிகைகளாவார்கள். அவர்கள் கர்த்தருடைய சத்தத்தை அடையாளங்கண்டவுடன், அப்பொழுது கர்த்தருடைய வருகையை வரவேற்று தேவனுடைய வார்த்தையின் நீர்பாய்ச்சுதலையும் வழங்கலையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுகிறது: “ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்(யோவேல் 2:29). தேவன் உண்மையுள்ளவர், அவருக்காக ஏங்குகிற, அவரைத் தேடுகிற அனைவரையும் இந்த நேரத்தில் அவருடைய சத்தத்தைக் கேட்க அவர் நிச்சயமாய் அனுமதிப்பார். எவ்வாறாயினும், தேவனுடைய ஞானத்தை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்வது கடினமாகும், மேலும் கர்த்தர் திரும்பிவரும்போது அவர் வாசற்படியில் நின்று தட்டும் விதமானது, நம் கருத்துக்களிலும் கற்பனைகளிலும் தெரிவதைப் போன்றிருக்காது. “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). என்று கர்த்தராகிய இயேசு நம்மை எச்சரித்தது போல, நமக்கு யாரோ ஒருவர் “கர்த்தர் திரும்பி வந்துவிட்டார்” என்று சொல்வது போல இருக்கும். கர்த்தருடைய வருகையின் சுவிசேஷத்தைப் பரப்புகிற திருச்சபைகளிலிருந்தும், அல்லது இணையம், வானொலி, முகநூல் அல்லது வேறு எங்கிருந்தும் நாம் தேவனுடைய சத்தத்தை கேட்கக் கூடும், மேலும் அனைத்துத் திருச்சபைகளுடனும் தேவன் பேசுகிறதைக் காணக் கூடும். இருந்தபோதும், கர்த்தர் வாசற்படியில் எவ்விதத்தில் தட்டினாலும், கண்டிப்பாக யூத ஜனங்கள் செய்ததைப் போல நம் வாசற்படியில் தட்டுகிற கர்த்தரை நாம் நடத்தக்கூடாது. நம்முடைய கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில் அவருடைய தட்டுதலைத் தேடவோ அல்லது ஆராயவோ நாம் மறுக்கக்கூடாது, அதைவிட பொய்களையும் வதந்திகளையும் கண்மூடித்தனமாகக் கேட்டு நம்பக் கூடாது. அப்படிச் செய்வதன் மூலம், நாம் கர்த்தருடைய அழைப்பை நிராகரிக்கவும், கர்த்தரை வரவேற்று, பரலோக ராஜ்யத்தினுள் எடுத்துக்கொள்ளப்படுகிற வாய்ப்பையும் இழக்க நேரிடும். இது வெளிப்படுத்துதலில் தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டுள்ளது: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்(மத்தேயு 7:7). நாம் அனைவரும் புத்தியுள்ள கன்னிகைகளாய் மாற வேண்டும் என்பதும் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுமே கர்த்தருடைய சித்தமாகும். நம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும் போது, நாம் அதைத் திறந்த மனதுடன் ஆராய்ந்து, ஆர்வத்துடன் அலசி ஆராய வேண்டும், மேலும் தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணும்போது, நாம் கர்த்தரை வரவேற்க விரைந்து செல்ல வேண்டும். நாம் தேடுகிற இருதயங்களைக் கொண்டிருக்கும் வரை, தேவன் நிச்சயமாக நம் ஆவிக்குரிய கண்களைத் திறப்பார். இவ்வாறு, நாம் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எழுப்பப்பட்டு ஆட்டுக்குட்டியானவரின் விருந்தில் கலந்து கொள்ள முடியும்.

எல்லா மகிமையும் தேவனுக்கே!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

சாங் க்விங் அது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர்...

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 22:12). இப்போது, அவர் திரும்புவதற்கான எல்லா விதமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன, மேலும் பல சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது என்ற முன்னறிவிப்புகள் உள்ளன. கர்த்தர் ஏற்கனவே திரும்பிவிட்டாரா? கர்த்தரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்டு சுத்திகரிக்கப்படுவார்கள்?

பல கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறார்கள், ஆனாலும் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் குழப்பமடைகிறார்கள். கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்திலிருந்து விடுபட வேண்டும்? பாவத்தின் கட்டுகளிலிருந்து உங்களை எவ்வாறு முற்றிலும் விடுவித்துக் கொள்வது என்பதை இந்த உரை உங்களுக்குக் கூறுகிறது.

Leave a Reply