விசுவாசம் பிரசங்கம்: விசுவாசம் என்றால் என்ன? தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தை நாம் எப்படிக் கட்டி எழுப்புவது?

அக்டோபர் 20, 2021

ஹுவாஃபெய்

விசுவாசம் பிரசங்கம்,tamil sermon on faith

கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் தேவன் எதிர்பார்ப்பது மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருப்பதுதான். தங்கள் விசுவாசத்தின் காரணமாக தேவனின் அதிசயமான செயல்களைக் கண்டு அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களைப் பற்றிய பல உதாரணங்கள் வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மோசேக்கு தேவனிடத்தில் விசுவாசம் இருந்தது, மேலும் அவருடைய வழிகாட்டுதலினால், பார்வோனின் எண்ணற்றத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து, இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்து புறப்பட்டபோது அவர்களை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு செல்லமுடிந்தது. ஆபிரகாமுக்கு தேவனிடத்தில் விசுவாசம் இருந்தது மற்றும் தனது ஒரே குமாரனை தேவனுக்குப் பலிசெலுத்த தயாராக இருந்தான், இறுதியில் தேவன் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய சந்ததியார் பலுகிப்பெருகி பலத்த ஜாதிகளாக மாற அனுமதித்தார். யோபுவுக்கு தேவனிடத்தில் விசுவாசம் இருந்தது மேலும் இரண்டு சோதனைகளின் மத்தியிலும் அவனால் தேவனுக்கு சாட்சியாக நிற்க முடிந்தது; முன்னை விட தேவன் அவனை மிகவும் ஆசீர்வதித்தார், மேலும் அவனுக்குத் தோன்றி ஒரு பெருங்காற்றில் இருந்து அவனிடம் பேசினார். கிறிஸ்தவர்களாகிய நாம் மெய்யான விசுவாசம் என்றால் என்ன என்பது பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ளுவது கட்டாயமாகும். அதனால் நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும்—துரதிர்ஷ்டவசமான குடும்ப நிகழ்வுகள், நோயினால் புடமிடப்படுதல், தேவனிடத்தில் நமக்கிருக்கும் நம்பிக்கையின் நிமித்தமாக உபத்திரவம் மற்றும் சிறையிருப்பை அனுபவித்தல்—ஆகிய இவற்றில் நாம் நம் விசுவாசத்தைச் சார்ந்துகொண்டு அசையாமல் தேவனைப் பின்பற்றி, அவருக்கு மாபெரும் சாட்சியாக நிற்க முடியும்.

கர்த்தரிடத்தில் நமக்கு மெய்யான விசுவாசம் இருக்கிறதா?

விசுவாசத்தைப் பற்றிய ஒரு விவாதத்தைக் கேட்கும்போது, தங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்று உறுதியுடன் அறிவிக்கும் சில சகோதரசகோதரிகள் இருக்கக்கூடும். “எனக்கு தேவனிடத்தில் 100% விசுவாசம் உள்ளது. நான் தேவனை எப்போதும் ஒப்புக்கொள்ளுகிறேன், மேலும் நான் ஒரு விசுவாசமுள்ள மனுஷன் என்று இது நிரூபிக்கிறது.” “கர்த்தராகிய இயேசு நமது இரட்சகர், நமது பாவங்களில் இருந்து நம்மை மீட்க அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று நான் நம்புகிறேன். நாம் ஜெபித்துக் கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்வரை நமது பாவங்கள் அவரால் எப்போதும் மன்னிக்கப்படும். இது கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருப்பது இல்லையா?” “நான் இத்தனை ஆண்டுகளாக விசுவாசியாக இருக்கிறேன்; கர்த்தருக்காக என்னை ஒப்புக்கொடுத்து ஊழியம் செய்ய நான் எனது வேலையையும் குடும்பத்தையும் விட்டுவிட்டேன். பல இடங்களிலும் சபைகளை ஸ்தாபித்து மிகவும் துன்பம் அடைந்தாலும் ஒருபோதும் குறைகூறியதில்லை. இவையெல்லாம் தேவனிடத்தில் விசுவாசம் இருப்பதற்கான வெளிப்பாடுகள்.” நாம் தேவனின் இருப்பை விசுவாசிக்கிறோம் மேலும் நாம் கர்த்தருக்காக உற்சாகமாக கிரியை செய்து நம்மை ஒப்புக்கொடுக்கிறோம் என்பதும், நாம் அவருக்காகத் துன்பப்பட்டு ஒரு விலைக்கிரயத்தைக் கொடுக்கிறோம் என்பதும் ஓர் உண்மையே. ஆனால் இந்த விஷயங்களினால் நமக்கு தேவனிடத்தில் மெய்யான விசுவாசம் இருக்கிறது என்று அர்த்தமாகுமா? உண்மையிலேயே கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்து, சத்தியத்தின் பேரில் தாகம் கொண்டு, ஆராய்ந்து, ஐக்கியம் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளாகிய நம் அனைவருக்கும் இந்த விஷயம் தகுதியான ஒன்றாகும்.

என்னை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிறிஸ்தவனாக மாறியதில் இருந்து நான் எப்போதும் உற்சாகமாக கூட்டங்களில் கலந்துகொண்டேன், பிறரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டேன், பலவீனமாக இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவிகளைச் செய்தேன். எவ்வளவு கஷ்டங்களை நான் சந்தித்தாலும், நான் குறைகூற மாட்டேன். ஆகவே கர்த்தரை நேசிக்கும் ஒருவனாகவும், அவரிடம் பயபக்தியுள்ளவன் என்றும், அவரிடத்தில் மெய்யான விசுவாசம் கொண்டவன் என்றும் என்னை நானே கருதிக்கொண்டேன். இருப்பினும், சமீபத்தில் என் குடும்பத்தினரும் நானும் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, முதலில், என்னால் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ண முடிந்தது. அவர்தான் என்னை சோதிக்கிறார் என்று எண்ணினேன். ஆனால் கொஞ்ச காலமாக ஜெபித்த போதும் எங்கள் நிலைமை சரியாகாதபோது, நான் மனமொடிந்து கர்த்தரிடத்தில் ஏமாற்றம் அடைந்தேன், மட்டுமல்லாமல் அவரிடம் குறை கூறி, இவ்வாறாக சிந்தித்தேன்: “கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்ததில் இருந்து, நான் கிரியை செய்து, துன்பம் அடைந்து மேலும் கர்த்தருக்காக என்னை ஒப்புக்கொடுத்து வருகிறேன். அவர் ஏன் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கவில்லை?” என்னிடம் வழக்கமாக இருக்கும் உற்சாகம் எல்லாம் முற்றிலுமாக சிதறிப்போனது. என் குடும்பத்தில் நிலவிய நல்லிணக்கத்தையும், உடல்ரீதியான நோய் அல்லது பேரழிவு இல்லாமல் இருந்த அடித்தளத்தையே என்னுடைய விசுவாசம் அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை இந்தக் கடினமான உண்மையால் வெளிப்படுத்தப்பட்டது என்னைப் பார்க்கச் செய்தது. இருப்பினும், விரும்பத்தகாத ஏதாவது ஒன்று நிகழ்ந்த உடனேயே தேவனிடத்தில் எனக்கிருக்கும் விசுவாசம் அதைத்தொடர்ந்து சிதறிப்போய்விடும். அதற்குப் பின்தான் தேவனிடத்தில் எனக்கிருந்த விசுவாசம் பரிதாபத்துக்குரியதாக இருக்கும் அளவிற்கு மிகவும் அற்பமானதாக இருந்தது என்றுநான் கண்டேன். என்னைச் சுற்றி இருந்த சகோதர சகோதரிகளை பார்த்தபோது, அவர்களில் பெரும்பாலானோரும் அவ்வாறுதான் இருந்தார்கள். கூட்டங்களிலும், சபையின் காரியங்களிலும் எப்போதும் உற்சாகத்தோடு பங்கேற்கும் சில சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கின்றனர். ஆனால் வீட்டில் ஏதாவது மோசமானது நடந்துவிட்டால், அவர்கள் கர்த்தரைக் குற்றம் சொல்லுகிறார்கள் மேலும் கர்த்தரைப் பற்றிய தவறான புரிதலோடும் குறைகளோடும் வாழ்கின்றனர். ஓர் இலகுவான சூழலில் இருக்கும்போது சில சகோதர சகோதரிகளால் கர்த்தரைப் பின்தொடர்ந்து ஆராதிக்க முடிகிறது. இருந்தபோதிலும், கர்த்தர் பேரில் இருக்கும் விசுவாசத்தின் நிமித்தமாக ஒருமுறை அவர்கள் சிசிபியால் துன்புறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டால், அல்லது உலக ஜனங்களால் அவதூறாகப் பேசப்பட்டு தங்கள் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் கர்த்தரிடத்தில் உள்ள விசுவாசத்தை இழந்து போவார்கள், அல்லது அவரிடத்தில் இருந்து விலகிக்கூடச் செல்வார்கள்.

நாம் அன்றாடகம் வெளிப்படுத்துவதில் இருந்தும் ஜீவிப்பதில் இருந்தும் நமது விசுவாசம் எதார்த்தத்தின் சோதனைக்கு எதிராக நிற்கவே முடியாது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கர்த்தராகிய இயேசுவே மெய் தேவன் என்று வெறுமனே நாம் அங்கீகரிக்கிறோம் மேலும் அவரே நமது இரட்சகர் என்று நம்புகிறோம், ஆனால் அதற்காக தேவனிடத்தில் நமக்கு மெய்யான விசுவாசம் இருக்கிறது என்பது அர்த்தமல்ல. குறிப்பாக, நாம் எந்த வகையான சூழலில் இருந்தாலும் தேவனை மறுதலிக்கவோ விட்டுவிடவோ மாட்டோம் என்பது அதன் அர்த்தமாகாது. இது ஏனெனில் நமது விசுவாசம் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக நம்மால் தேவனுடைய ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முடியுமா அல்லது முடியாதா மற்றும் நம்மால் ஏதாவது நன்மைகளை அடைய முடியுமா என்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது. அதனால்தான் தேவனிடத்தில் நமக்குள்ள விசுவாசம் மெய்யானதாக இல்லை. அப்படியானால் மெய்யான விசுவாசம் என்றால் என்ன, மேலும் மெய்யான விசுவாசம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?

மெய்யான விசுவாசம் என்பது உண்மையில் என்ன

தேவனுடைய வார்த்தைகள் கூறுகின்றன, “தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது முக்கியமல்ல, உன் சூழலைப் பொருட்படுத்தாமல், உன்னால் ஜீவிதத்தைத் தொடரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறவும், அவருடைய கிரியைகளைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது மற்றும் உன்னால் சத்தியத்தின்படி செயல்படவும் முடிகிறது. அவ்வாறு செய்வதுதான் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது நீ தேவன்மீது விசுவாசத்தை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நீ தேவனை உண்மையாக நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருந்தால், நீ சுத்திகரிப்பு மூலம் சத்தியத்தைப் பின்தொடர முடிந்தால் மற்றும் உண்மையாகவே உன்னால் தேவனை நேசிக்க முடிந்தால், அவரைப் பற்றி சந்தேகங்களை வளர்த்துக் கொள்ளாதிருக்க முடிந்தால், அவர் என்ன செய்தாலும் நீ அவரை திருப்திப்படுத்த சத்தியத்தை கடைப்பிடிக்கிறாய் என்றால் மற்றும் அவருடைய சித்தத்திற்காக ஆழமாகத் தேடவும், அவருடைய சித்தத்தைக் குறித்து அக்கறையுடன் இருக்கவும் முடிந்தால் மட்டுமே உன்னால் தேவன் மீதான உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும்(“பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). நாம் நோயையும் பேரழிவுகளையும், கஷ்டங்களையும் துன்புறுத்தல்களையும், பின்னடைவுகளையும் தோல்விகளையும் எதிர்கொண்டாலும், நமது மாம்சப்பூர்வமான அல்லது ஆவிக்குரிய பிரகாரமான துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நமது எண்ணங்களுக்குப் பொருந்தாத எந்த ஒரு சூழலிலும் தேவனிடத்தில் பயபக்தியுடனும் கீழ்ப்படிதலுடனும் கூடிய இருதயத்தைப் பராமரிக்க முடிவதையே மெய்யான விசுவாசம் குறிக்கிறது என்பதை நாம் தேவனுடைய வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தவும், அவரிடம் தொடர்ந்து பயபக்தியோடு இருப்பதற்கும் நம்மால் முடிய வேண்டும். இப்படிப்பட்ட நபரை மட்டுமே மெய்யான விசுவாசமுள்ள நபராகக் கருத முடியும். இப்போது நாம் ஆபிரகாம் மற்றும் யோபின் அனுபவங்களை நோக்கிப் பார்த்து மெய்யான விசுவாசம் என்பது என்ன என்பதைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ளுவோம்.

1. ஆபிரகாமின் விசுவாசம்

ஆபிரகாமுக்கு நூறு வயதாக இருந்தபோது, தேவன் அவனுக்கு ஈசாக்கு என்ற ஒரு குமாரனைக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் அருளினார். ஆனால் ஈசாக்கு வளர்ந்துவரும்போது, அவனைப் பலியாக அளிக்கவேண்டும் என்று தேவன் ஆபிரகாமிடம் கூறினார். தேவன் இந்த வகையில் கிரியை செய்வது மனுஷீக எண்ணங்களில் இருந்து மிகவும் மாறுபட்டது என்று உணரக்கூடிய ஜனங்கள் ஏராளமாக உள்ளனர், மேலும் அவர்கள் எங்களுக்கு இந்த மாதிரி சோதனை நேரும் என்றால், நாங்கள் நிச்சயமாக தேவனுடன் வாதாட முயலுவோம் என்று எண்ணலாம். இருப்பினும், ஆபிரகாம் இதை எதிர்கொண்டபோது அவனது எதிர்வினை நாம் எதிர்பார்க்கக் கூடியதற்கு முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது. அவன் தேவனுடன் வாதாடாதது மட்டுமல்லாமல், தேவனிடத்தில் ஈசாக்கை நேர்மையாகவும் மெய்யாகவும் திருப்பித்தந்து அவனால் அவருக்குக் கீழ்ப்படியவும் முடிந்தது. வேதாகமத்தில் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது போலவே, “ஆபிரகாம்அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். … தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம்ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம்தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்(ஆதியாகமம் 22:3, 9-10). முதலில் ஈசாக்கு தேவனால் கொடுக்கப்பட்டவன் என்பதையும் பின்னர் அவன் தேவனால் எடுத்துகொள்ளப்படுகிறான் என்பதையும் அறிந்திருந்ததே, தனக்கு மிகவும் விலையேறப்பெற்றவனாக இருந்தவனைப் பிரிவதாக இருந்த போதிலும் ஆபிரகாம் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவரைத் திருப்திப்படுத்த முடிந்ததற்கான காரணம் ஆகும். அவன் சரியான முறையில் கீழ்ப்படிதல் உள்ளவனாக இருந்தான், அதுவே உண்மையின் சோதனைக்கு நிலைநிற்கக் கூடிய தேவன் பேரில் இருந்த ஆபிரகாமின் விசுவாசம். இது மெய்யான விசுவாசம். இறுதியில், ஆபிரகாமின் மெய்யான விசுவாசமும் தேவனிடத்தில் இருந்த கீழ்ப்படிதலும் அவரது ஒப்புதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றது. தேவன் அவனைப் பல ஜாதிகளுக்கு முற்பிதாவாக மாற அனுமதித்தார்; அவனது சந்ததியார் பலுகிப் பெருகி பலத்த ஜாதிகள் ஆனார்கள்.

2. யோபின் விசுவாசம்

யோபுக்கு செழிப்பான குடும்பம் இருந்ததோடு பத்து பிள்ளைகளும் பல வேலைக்காரர்களும் இருந்ததாக வேதாகமம் நமக்குக் கூறுகிறது; அவன் தன் சகாக்களால் பெரிதும் மதிக்கப்பட்டான். இருந்தாலும், சாத்தானின் சோதனைகளாலும் தாக்குதல்களாலும், யோபு தனக்குண்டான எல்லாவற்றையும் தன் குழந்தைகளையும் இழந்துபோனான். இது கீழ்த்திசையில் மாபெரும் மனுஷனாக இருந்த யோபை கீழ்த்திசையில் மிகவும் ஆதரவற்றவனாக மாற்றியது. அதன் பிறகு அவன் உடலெங்கும் பருக்களால் நிறைந்தது, மேலும் குடும்பத்தாலும் நண்பர்களாலும் அவன் நியாயந்தீர்க்கப்பட்டு வசைபாடப்பட்டான். இவ்வளவு பெரிய சோதனையை எதிர்கொண்ட போதும், யோபு ஒரு வார்த்தை கூட தேவனிடம் குறையாகச் சொல்லவில்லை, மேலும் அவன் சாஷ்டாங்கமாய் விழுந்து தேவனைத் துதித்துக் கூறினான், “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்(யோபு 1:21). “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்?(யோபு 2:10). இந்தச் சோதனையின் ஊடாக யோபு தனது வார்த்தைகளால் பாவம் செய்வதிலிருந்து விலகியிருந்ததுமல்லாமல் தேவனுக்கு முன்பாக ஜெபத்தோடு வந்தான். அவனது இருதயத்தில் தேவனுக்கு ஓர் இடம் இருந்தது, தேவன் பேரில் அவனுக்கு மெய்யான விசுவாசம் இருந்தது, மேலும் எல்லா நிகழ்வுகளும் எல்லா விஷயங்களும் தேவனுடைய கரங்களில் இருக்கிறது, மற்றும் அவன் எதிர்கொண்ட அந்த எல்லா நிலைமைகளுக்கும் தேவனுடைய ஒப்புதல் இருந்தது, அவை மனிதனால் உண்டாக்கப்பட்டவை அல்ல என்று அவன் விசுவாசித்தான் என்பதை இது காட்டியது. தேவனுடைய ஆளுகை மற்றும் ஏற்பாடுகளில் இருந்தே அவனுக்கு உண்டாயிருந்த எல்லாம் வந்தன என்பது தனது பல்லாண்டுகால வாழ்க்கையிலிருந்து அவன் ஆழமாக அனுபவித்து அறிந்த ஒரு விஷயமாகும்; அவனுக்கு இருந்த செல்வம் எல்லாம் அவன் உழைப்பில் இருந்து வந்ததல்ல, தேவனால் அளிக்கப்பட்டதே. இதனால், தேவன் அவனுக்கு முன்னர் தந்ததை எடுத்துக்கொள்ள விரும்பினால் அது இயற்கையானதும் சரியானதுமாகும், மேலும் ஒரு சிருஷ்டியாக, அவன் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவன் தேவனோடு வாதாடக் கூடாது மற்றும் குறிப்பாக தேவனிடம் குறை கூறக்கூடாது—அவனது சொந்த ஜீவன் எடுத்துகொள்ளப்படுவதாக இருந்தால் கூட, அவன் ஒரு குறைகூட கூறக்கூடாது என்பதை அவன் அறிந்திருந்தான். யோபின் சாட்சி சாத்தானை முற்றிலும் அவமானப்படுத்தியது, மேலும் அதற்குப் பின்னர், தேவன் பெருங்காற்றின் நடுவில் இருந்து யோபுக்குத் தோன்றி இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை அளித்தார்.

தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தை அடைய, நமக்கு முதலில் தேவனுடைய ஆளுகையைப் பற்றிய உண்மையான புரிதல் இருக்க வேண்டும், மேலும் எல்லா விஷயங்களும் நிகழ்வுகளும் முற்றிலுமாக தேவனது பிடியில் இருப்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். சிருஷ்டிகளாக நாம் நமது இடத்தை உண்மையாகவே அறிந்திருக்க வேண்டும் மற்றும் சிருஷ்டிகளுக்கு இருக்க வேண்டிய பகுத்தறிவு இருக்க வேண்டும். நம்முடைய சோதனைகளும் கஷ்டங்களும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நாம் தேவன் பேரில் குற்றம் சுமத்தி அவரை விட்டுவிலகாமல், தொடர்ந்து தேவனுடைய சித்தத்தைத் தேடி, அவரது சார்பில் நின்று, அசையாமல் அவரைப் பின்பற்ற நம்மால் இயல வேண்டும். நாம் சகிக்கும் துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவனுக்கு சாட்சியாக நம்மால் உறுதியாக நிற்பதற்கு இயலவேண்டும். இப்படிச் செய்யக் கூடியவர்களாலேயே தேவனிடம் மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் கைதுசெய்யப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதையால் துன்புறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட சகோதர சகோதரிகளை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் அவர்கள் ஒரு போதும் தேவனை மறுதலிக்கவோ அவரை விட்டுவிலகவோயில்லை—அதுவே தேவனிடத்திலான மெய்யான விசுவாசம். விசுவாசிகள் ஆனபின்னர், தங்கள் குடும்பத்தாலும் நண்பர்களாலும் நிராகரிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் உண்டு, அல்லது துரதிர்ஷ்டவசமான விஷயங்கள் அவர்களின் குடும்பங்களில் தோன்றியதுண்டு, ஆனால் அவர்கள் ஒருபோதும் தேவனிடம் குறைகூறியது இல்லை, மேலும் அவர்களால் தொடர்ந்து தேவனைப் பின்பற்றி தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்க முடிகிறது—இதுவும் தேவன் பேரில் உள்ள மெய்யான விசுவாசத்தின் ஒரு வெளிப்பாடே.

தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தைக் கட்டி எழுப்புவது எப்படி

நாம் மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், நாம் அடிக்கடி தேவனுடைய வார்த்தைகளை வாசித்து நன்கு சிந்தனை செய்து, தேவனிடத்தில் ஜெபித்து, எல்லா ஜனங்களிலும், நிகழ்வுகளிலும், ஒவ்வொருநாளும் நாம் எதிர்கொள்ளும் விஷயங்களிலும் தேவனுடைய ஆளுகையை அறிந்துகொள்ளத் தேடுவதோடு, தேவன் ஏற்பாடு செய்யும் சூழல் நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது அவை மேலோட்டமாக நமக்கு நன்மையானவைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் இருதயத்தில் பயபக்தியுடன் தேவனுடைய சித்தத்தைத் தேடி, அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். நம்மால் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நாம் ஒரு சிருஷ்டியின் நிலையில் நின்று தேவனுடைய ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இந்த வழியில் நடைமுறைப்படுத்தும்போது, நாம் கடந்து செல்லும் எல்லாவற்றில் இருந்தும் ஏதாவதொன்றைப் பெறலாம், மேலும் ஜனங்களுக்குள்ளும், நிகழ்வுகளுக்குள்ளும், விஷயங்களுக்குள்ளும், அவர் ஒழுங்குபடுத்தும் சூழலுக்குள்ளும் தேவனுடைய கிரியையை நம்மால் காணமுடியும். அதன் பின்னர், தேவனிடத்தில் நமக்கிருக்கும் விசுவாசம் அதிக அதிகமாய் வலிமையானதும் உண்மையானதுமாய் மாறும். அது யோபின் விசுவாசம் போன்றதே—அது அவனுக்குள் பிறப்பிலிருந்தே காணப்படுகிற ஒன்றல்ல, ஆனால் அவனுடைய ஜீவிதத்தில் நடந்த ஒவ்வொன்றிலும் தேவனுடைய ஆளுகையை அனுபவித்து, தேவ அறிவைத் தேடியதால், படிப்படியாக வளர்ந்த ஒன்றாகும். நமது வாழ்க்கையில் தேவனுடைய ஆளுகையை அனுபவிப்பதிலும் அவற்றை உண்மையில் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தி யோபின் உதாரணத்தை நம்மால் பின்பற்ற முடிந்தால் மட்டுமே, தேவனிடத்தில் நம்மால் மெய்யான விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள முடியும். அதன் பின்னர், நமக்கு எத்தகையக் கஷ்டங்களும் சோதனைகளும் நேர்ந்தாலும், நம்மால் அதை நமது விசுவாசத்தின் மூலம் அனுபவிக்கவும், தேவனுடைய சித்தத்தையும் நம்மேல் அவருக்கு இருக்கும் எதிர்பார்ப்பையும் தேட வும், சத்தியத்தை நடைமுறைப்படுத்தவும் அவருடைய ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும், அவருக்கு சாட்சியாக நிற்கவும் முடியும்.

தேவனுடைய பிரகாசிப்பித்தலுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. ஆமென்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...

கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

சாங் க்விங் அது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர்...