வேதாகம பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு சிலுவையில் “முடிந்தது” என்று சொன்னபோது உண்மையில் அவர் என்ன சொன்னார்?

அக்டோபர் 14, 2021

வேதாகம பிரசங்கம்:

கர்த்தராகிய இயேசு சிலுவையில “முடிந்தது” ன்னு சொன்னப்போ, மனுக்குலத்த இரட்சிக்கற தேவனோட கிரியை முடிஞ்சுதுன்னு அவர் சொன்னாருன்னு கர்த்தரை விசுவாசிக்கிறவங்க நம்பறாங்க. அதனால கர்த்தர் திரும்பி வரும்போது, அவருக்கு இனி இரட்சிக்கிற கிரியைஎதுவும் இருக்காது, ஆனா அவர் கர்த்தர சந்திக்க எல்லா விசுவாசிகளயும் வானத்துக்கு உயர்த்தி பரலோகத்துக்கு நம்மள கூட்டிட்டுப் போவாரு, அவ்ளோதான்னு எல்லாரும் உறுதியா நினைக்கறாங்க. இது கர்த்தர நம்பறவங்க உறுதியா நம்பற ஒரு காரியம். அதனாலதான் நெறைய பேரு வானத்த பாத்துக்கிட்டு கர்த்தர் அவங்கள நேரடியா அவரோட ராஜ்யத்துக்குள்ள கூட்டிட்டுப் போக விருதாவா காத்துட்டுருக்காங்க. ஆனா இப்போ பெரும் பேரழிவுகள் வந்துருச்சு நிறைய பேரு கர்த்தரோட வருகைய பாக்கல, அதனால அவங்களோட விசுவாசம் குறஞ்சுட்டு வருது, அவங்க மனச்சோர்வா உணர்றாங்க. கொஞ்ச பேருக்கு சந்தேகங்கள் கூட இருக்கு: கர்த்தரோட வாக்குத்தத்தம் உண்மைதானா? அவர் வர்றாரா இல்லையா? உண்மையில கர்த்தராகிய இயேசு ரொம்ப நாளைக்கு முன்னாடியே இரகசியமா மனுஷகுமாரனா நிறைய சத்தியங்கள வெளிப்படுத்தி தேவனோட வீட்ல தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையை செஞ்சுட்டு வந்தாரு. ஆனா பெரும்பாலான ஜனங்க தேவனோட சத்தத்தக் கேட்க முயற்சிக்கல இல்ல திருச்சபைகளுக்குப் பேசற பரிசுத்த ஆவியானவரோட வார்த்தைகள கேட்க முற்படல, அவங்கள பரலோகத்துக்கு கூட்டிட்டுப் போக தேவன் மேகத்தின் மேல் வரணும்னு அவங்க எப்போதும் நெனைக்கிறாங்க, அதனால அவங்க கர்த்தர வரவேற்கிற வாய்ப்ப இழக்கிறாங்க. அது வாழ்நாள் முழுதும் வருத்தப்பட வேண்டியதா இருக்கும். இது சிலுவையில கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளான “முடிந்தது” ங்கற வார்த்தைகள ஜனங்க எப்படி விளக்கறாங்கங்கறதோட ரொம்ப நெருக்கமா தொடர்புடையதா இருக்கலாம்.

நாம இதுல ஆரம்பிக்கலாம்: ஏன் பல விசுவாசிகள் கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தையான “முடிந்தது” அப்படின்னா மனுக்குலத்த இரட்சிக்கிற தேவனோட கிரியை முடிஞ்சதுன்னு நினைக்கிறாங்க? இதுக்கு ஏதாவது வேதாகம ஆதாரம் இருக்கா? இது பரிசுத்த ஆவியானவரால உறுதிப்படுத்தப்பட்டிருக்கா? மனுக்குலத்த இரட்சிக்க இனி எந்த கிரியையும் செய்யப் போவதில்லைன்னு தேவன் எப்பவாவது சொன்னாரா? இந்த வார்த்தைகள் தேவன் தன்னோட இரட்சிப்பின் கிரியைய முடிக்கிறத குறிப்பிடுதுன்னு பரிசுத்த ஆவியானவர் சாட்சி அளிச்சாரா? இல்லைன்னு நாம உறுதியா சொல்லலாம். அப்படின்னா, ஏன் எல்லாருமே கர்த்தராகிய இயேசுவோட இந்த வார்த்தைகள தேவனோட இரட்சிப்பின் கிரியை அப்பவே முழுசா முடிஞ்சிருச்சுன்னு அர்த்தமா எடுத்துக்கறாங்க. அது கொஞ்சம் அபத்தமா இருக்குல்ல? தேவனோட வார்த்தைகளப் புரிஞ்சுக்கிறது சாதாரண காரியமில்ல. 2 பேதுரு 1:20 சொல்லுது, “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.” வேதவசனங்கள நீங்களே சொந்தமா விளக்கறதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். பரிசேயர்களப் பத்தி நினைச்சு பாருங்க, அவங்க மேசியாவப் பத்தின தீர்க்கதரிசனங்கள தனிப்பட்ட முறையில விளக்குனாங்க, அதனோட விளைவா, மேசியா வந்தார், அவங்க கர்த்தராகிய இயேசு அவங்களோட விளக்கங்களோடப் பொருந்திப் போகலைன்னு கண்டாங்க. அதனால அவரோட கிரியையையும் கண்டனம் பண்ணாங்க அவர சிலுவையிலயும் அறஞ்சாங்க. அவங்க மோசமான விளைவுகள எதிர்கொண்டாங்க. இது நேரடியா அவங்க கர்த்தராகிய இயேசுவால தண்டிக்கப்பட வழிவகுத்துச்சு. அவங்க சபிக்கப்பட்டாங்க!

அப்படின்னா கர்த்தராகிய இயேசு “முடிந்தது” ன்னு சிலுவையில சொன்னப்போ, அவர் எதப் பத்தி பேசினாரு? இத புரிஞ்சுக்க கடைசி நாட்கள்ல தேவனோட வருகையப் பத்தின வேதாகமத் தீர்க்கதரிசனங்கள குறிப்பா கர்த்தராகிய இயேசு தனிப்பட்ட முறையில தாம் செய்யப் போறேன்னு சொன்ன காரியங்கள, பரலோக ராஜ்யத்தப் பத்தின அவரோட உவமைகள கவனமா சிந்திக்கணும். இந்த விஷயங்கள் எல்லாமே கடைசி நாட்கள்ல அவரோட கிரியையோட நேரடியா சம்பந்தப்பட்டுருக்கு. கர்த்தராகிய இயேசு சிலுவையில பேசியபோது அவர் உண்மையா எதப் பத்தி பேசினாருன்னு சரியா புரிஞ்சுக்க இந்த தீர்க்கதரிசனங்கள், உவமைகளப் பத்தின அடிப்படை புரிதல் நமக்கு இருக்கணும். நமக்கு அது முழுசா புரியலைன்னாலும் மனுக்குலத்த இரட்சிப்பதற்கான தேவனோட கிரியைகள் முழுசா முடிஞ்சருச்சுன்னு நினைச்சுக்க அது காரணமாகாது. இது ஒரு தன்னிச்சையான கேலிக்குரிய நம்பிக்கை. உண்மையில, பரலோக ராஜ்யத்துக்கான கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனங்களயும் உவமைகளயும் நாம தீவிரமா பரிசீலன பண்ணுனா, ராஜ்யத்த பத்தியும் அவரோட வருகையில கர்த்தருடைய கிரியையப் பத்தியும் அடிப்படை புரிதல நாம பெற முடியும். அப்போ “முடிந்தது” ங்கற அவரோட கூற்ற நாம தவறா புரிஞ்சுக்க மாட்டோம். கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனமா சொன்னாரு: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22, 27). 1 பேதுருல சொல்லுது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). வெளிப்படுத்தல்ல, நாம பாக்கறோம்: “இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்(வெளிப்படுத்தல் 5:5). “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). கர்த்தராகிய இயேசு பரலோக ராஜ்யத்த விளக்க இந்த மாதிரி பல உவமைகளயும் பயன்படுத்தினாரு “அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்(மத்தேயு 13:47-50). இந்த தீர்க்கதரிசனங்கள் மற்றும் உவமைகள்ல இருந்து கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்போது பெரிய கிரியைகள செய்வாருன்னு சொன்னத நாம பாக்கலாம். ஆனா அதுல ரொம்ப முக்கியமான பகுதி என்னன்னா சத்தியத்த வெளிப்படுத்தறதும் நியாயத்தீர்ப்பின் கிரியைகள செய்றதும் தான். இது ஜனங்கள எல்லா சத்தியங்களுக்குள்ள நுழையவும் அதுக்கப்புறம் அவங்களோட வகைக்கு ஏற்ப எல்லாத்தயும் வரிசைப்படுத்தவும் வழிவகுக்கும். பரிபூரணப்படுத்தப்பட முடியறவங்க பரிபூரணப்படுத்தப்படுவாங்க, அகற்றப்பட வேண்டியவங்க அகற்றப்படுவாங்க. இது ராஜ்யத்தப் பத்தி கர்த்தராகிய இயேசு சொன்ன எல்லாத்தயும் முழுசா உணர வைக்கும். கோதுமை மற்றும் களைகள், மீன் பிடிக்கிற வலை, புத்தியுள்ள மற்றும் புத்தியில்லாத கன்னிகைகள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள், உண்மையுள்ள மற்றும் பொல்லாத ஊழியக்காரர்கள் இவைகளப் பத்தி சிந்திங்க. தேவனோட வீட்ல இருந்து தொடங்கற நியாயத்தீர்ப்பின் கிரியை களைகள்ல இருந்து கோதுமைய பிரிக்கும், நல்ல ஊழியர்கள பொல்லாத ஊழியர்கள் கிட்ட இருந்து பிரிக்கும், சத்தியத்தை நேசிக்கிறவங்கள வெறும் வசதிய இச்சிக்கிறவங்க கிட்டயிருந்து பிரிக்கும். புத்தியுள்ள கன்னிகைகள் ஆட்டுக்குட்டியானவரோட கல்யாண விருந்துல கலந்துகிட்டு தேவனால பரிபூரணப்படுத்தப்படுவாங்க. புத்தியில்லாத கன்னிகைகள் என்ன ஆவாங்க? அவங்க தேவனோட சத்தத்த கேக்காததால, பேரழிவுகள்ல விழுந்து, அழுது பல்லக் கடிப்பாங்க. இது, எல்லாத்தயும் அவங்க அவங்களோட வகைக்கு ஏற்ப வரிசைப்படுத்தற, நல்லவங்களுக்குப் பலனக் கொடுக்கற, பொல்லாதவங்களுக்கு தண்டனைய கொடுக்கற நியாயத்தீர்ப்பின் கிரியை, இது வெளிப்படுத்தல்ல இருக்கற தீர்க்கதரிசனத்த முழுமையா நிறைவேற்றும். “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்(வெளிப்படுத்தல் 22:11). “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது(வெளிப்படுத்தல் 22:12). நாம கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனங்கள உண்மையில புரிஞ்சுக்கும்போது, கடைசி நாட்கள்ல சத்தியத்த வெளிப்படுத்தவும் நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யவும், எல்லாரையும் அவங்கவங்க வகைக்கு ஏற்ப வரிசைப்படுத்தவும், அவங்களோட முடிவுகள தீர்மானிக்கவும் தான் கர்த்தரோட வருகை முக்கியமா வருதுன்னு நாம பார்க்க முடியும். அதனால சிலுவையில் “முடிந்தது” ன்னு கர்த்தராகிய இயேசு சொன்னது, மனுக்குலத்த இரட்சிக்கற தேவனோட கிரியை முடிஞ்சதுன்னு அவர் சொன்னதா நாம உண்மையில சொல்ல முடியுமா? நாம தொடர்ந்து முட்டாள்தனமா வானத்த பார்த்துகிட்டு, கர்த்தராகிய இயேசு மேகத்தின் மேல வந்து அவர சந்திக்க நம்மையும் வானத்துக்குள்ள கூட்டிட்டுப் போகக் காத்திருப்போமா? தேவன் கடைசி நாட்கள்ல கிரியை செய்யும்போது அவர் வெளிப்படுத்தின எல்லா சத்தியங்களயும் நாம இன்னும் சாதாரணமா கண்டனம் செய்வோமா? கடைசி நாட்களோட நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ய மனுஷகுமாரனா கர்த்தர் திரும்பியிருக்காருங்கறத அப்பட்டமா மறுப்போமா? பெரிய பேரழிவுகள் ஏற்கனவே வந்துருச்சு, மேலும் நெறைய மதவாதிகள் கர்த்தர் அவங்கள எப்பவும் வெளியேத்த மாட்டார்னு நெனச்சுட்டு, அவர் திரும்பி வர்றதப் பத்தின கனவுல தொலைஞ்சு போயிருக்காங்க. முழுச்சுக்க வேண்டிய நேரமிது. அவங்க எந்திரிக்கலைனா, பேரழிவுகள் முடிஞ்சு, சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படையா எல்லா ஜனங்களுக்கும் தோன்றினவுடனே, தேவன் புதிய வானத்தயும் பூமியயும் உருவாக்கியிருப்பாரு, அதோட மத உலகத்தில இருக்கற ஜனங்கள் எல்லாருமே அழுது புலம்பிட்டு பல்லக் கடிச்சுட்டு இருப்பாங்க. அது வெளிப்படுத்துதல்ல இருக்கற இந்தத் தீர்க்கதரிசனத்த நிறைவேற்றும்: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7).

நெறைய பேர் கட்டாயமா கேப்பாங்க, கர்த்தராகிய இயேசு சிலுவையில, “முடிந்தது” ன்னு சொன்னப்போ, உண்மையில என்ன சொன்னாரு? உண்மையில அது ரொம்ப சாதாரணமானது. கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள் எப்பவுமே ரொம்ப நடைமுறைக்குரியதா இருந்துச்சு, அதனால அவர் இத சொன்னபோது, அவர் நிச்சயமா அவரோட மீட்பின் கிரியைய பத்திதான் குறிப்பிடறாரு. ஆனா ஜனங்க கர்த்தரிடத்தில இருந்து வந்த இந்த நடைமுறை வார்த்தைகள் மனுஷன இரட்சிக்க தேவனோட கிரியைய பத்தினதுன்னு புரிஞ்சுக்க வலியுறுத்தறாங்க, ஆனா இது முழுசும் தன்னிச்சையானது, ஏன்னா தேவன் மனுக்குலத்த இரட்சிக்கிற கிரியைய பகுதியளவு மட்டுமே செஞ்சிருக்காரு. இன்னும் ரொம்ப முக்கியமான படி இருந்துச்சு—கடைசி நாட்கள்ல அவரோட நியாயத்தீர்ப்பின் கிரியைதான் அது. “முடிந்தது” அப்படின்னா தேவனோட இரட்சிப்பின் கிரியை முழுசா செய்யப்பட்டுதுன்னு நீங்க ஏன் தொடர்ந்து வலியுறுத்தணும்? அது சற்றே அபத்தமாவும் நியாயமற்றதாவும் இருக்கில்லயா? கர்த்தராகிய இயேசு முதல்ல ஏன் சிலுவையில அறையப்பட்டார்? அவர் இது மூலமா உண்மையில என்ன செஞ்சு முடிச்சாரு? அதனோட விளைவு என்ன? எல்லா விசுவாசிகளுக்கும் இது தெரியும், ஏன்னா இது வேதாகமத்தில ரொம்பத் தெளிவா ஆவணப்படுத்தப்பட்டிருக்கு. கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த மீட்க வந்தாரு. சிலுவையில அறையப்பட்டது மூலமா, கர்த்தராகிய இயேசு எல்லாத்தோட பாவங்களயும் ஏத்துக்கிட்டு, மனுக்குலத்துக்காக பாவ பலியானாரு, அதனால ஜனங்க அதுக்கப்பறம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ ஆக்கினைக்குட்பட்டு மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட அவசியமில்லாம போயிருச்சு. அப்புறம் ஜனங்க கர்த்தர நம்பி, ஜெபம்பண்ணி, அவர்கிட்ட அறிக்க செய்ற வரைக்கும், அவங்களோட பாவங்கள் மன்னிக்கப்படவும், நம்பமுடியாத கிருபையை தேவன்கிட்ட இருந்து அனுபவிக்கவும் முடிஞ்சுது. இதுதான் கிருபையாலே வந்த இரட்சிப்பு, மேலும் அது கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் கிரியை செஞ்சு முடிச்ச காரியம். நம்மோட விசுவாசத்துனால நம்ம பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இப்பவும்கூட நம்மால எப்பவும் பாவம் செய்யாம இருக்க முடியலங்கறது ஒருத்தராலயும் மறுக்க முடியாது. நாம பாவம் செஞ்சு, பாவத்த அறிக்க பண்ணி, மறுபடியும் பாவம் செய்ற சுழற்சியிலயே வாழ்றோம். நாம பாவத்தில இருந்து தப்பிக்கவே இல்ல. இதோட அர்த்தம் என்ன? அப்படின்னா நம்மகிட்ட இன்னும் பாவ சுபாவம் இருக்கு, சாத்தானிய மனப்பான்மைகள் இருக்கு, அதனால நம்மோட பாவங்கள் மன்னிக்கப்பட்டதுக்கப்பறமும் தொடர்ந்து பாவம் செய்ற பிரச்சனய நம்மளால சரி பண்ண முடியாது. இது எல்லா விசுவாசிகளயும் இழப்புல இருக்கச் செய்யுது, இது ரொம்ப வேதனையான ஒன்னு. தேவனோட வார்த்தைகள் சொல்லுது, “நான் பரிசுத்தர், ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). தேவன் நீதியுள்ளவர், பரிசுத்தர், அதனால பரிசுத்தமில்லாத யாரும் அவரப் பாக்க முடியாது. அப்படின்னா எப்பவும் பாவம் செஞ்சுட்டு தேவன எதிர்க்கற ஜனங்க எப்படி தேவனோட ராஜ்யத்துக்கள்ள பிரவேசிக்க தகுதியா இருப்பாங்க? ஜனங்க முழுசா பாவத்திலிருந்து தப்பிச்சு சுத்திகரிக்கப்படாததுனால, மனுக்குலத்த இரட்சிக்கிற தேவனோட கிரியை முடிஞ்சிருக்குமா? தேவனோட இரட்சிப்பு முழுமையான இரட்சிப்பா இருக்கும், அவர் எப்பவுமே தன்னோட கிரியைய பாதியில விட்டுவிட மாட்டாரு. அதனாலதான் கர்த்தராகிய இயேசு அவரோட வருகைய பலமுறைத் தீர்க்கத்தரிசனமா சொன்னாரு. அவர் சர்வவல்லமையுள்ள தேவனோட மனுவுருவா கடைசி நாட்கள்ல ரொம்ப நாளைக்கு முன்னாடி திரும்பியிருக்காரு. கர்த்தரோட மீட்பின் கிரியையோட அடித்தளத்தின் மேல சர்வவல்லமையுள்ள தேவன் நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ய சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு. இது நம்மோட சீர்கேடான மனநிலையிலிருந்து மனுக்குலத்த சுத்திகரிக்கறதுக்கு தான், அதனால நாம பாவத்தின் பிடியில் இருந்து விடுபட முடியும். அது முழுசா சாத்தானோட வல்லமைகள்ல இருந்து நம்மள இரட்சிக்கவும், இறுதியில நம்மள தேவனோட ராஜ்யத்துக்குள்ள கொண்டு வர்றதுக்குந்தான். கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை முடியற வரைக்கும், ஜனங்கள இரட்சிப்பதற்கான தேவனோட கிரியை முடிவடையாது.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).

இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”).

தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். … நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்கு. கிருபையின் காலத்தில, கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் கிரியை மனுஷனோட பாவங்கள மன்னிக்கறது மட்டுந்தான். கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியைதான் மனுக்குலத்த முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்குது. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மனுஷனோட கலகத்தனமான, தேவனுக்கு விரோதமான சுபாவத்தயும் சாராம்சத்தயும் நியாயந்தீர்க்குது வெளிப்படுத்துது, நம்மோட சாத்தானிய மனப்பான்மையயும், சீர்கேட்டையும் தெரிஞ்சுக்க நம்மள அனுமதிக்குது. அது நாம மனுஷ சாயலே கொஞ்சங்கூட இல்லாத சாத்தானிய மனப்பான்மைகளான ஆணவம், தந்திரம், பொல்லாங்கு, துன்மார்க்கம் நெறஞ்சவங்கன்னு காட்டுது. சாத்தானால அவங்க எவ்ளோ ஆழமா சீர்கெடுக்கப்பட்டு இருக்காங்கற உண்மைய ஜனங்கப் பாக்குறதுக்கு இதுதான் ஒரே வழி, அதனால அவங்க உண்மையிலயே தங்கள வெறுத்து, உண்மையான வருத்தத்த வளத்துக்கிட்டு, அதுக்கப்புறம் தேவன்கிட்ட மனந்திரும்பறாங்க. அப்போ சத்தியம் எவ்ளோ விலைமதிப்பற்றதுன்னு அவங்க பாக்குறாங்க, அதோட தேவனோட வார்த்தைகள கடைபிடிக்கிறதுல, சத்திய யதார்த்தத்துக்குள்ள பிரவேசிக்கிறதுல கவனம் செலுத்த ஆரம்பிக்கறாங்க. இது படிப்படியா அவங்களோட சீர்கேடான மனநிலையிலிருந்து விடுதலையாகவும் அவங்களோட வாழ்க்கை மனநிலைய மறுரூபப்படத்தவும் அனுமதிக்குது, கடைசியா, தேவனுக்கு உண்மையாக் கீழ்ப்படுஞ்சு, பயந்து, அவரோட வார்த்தைகளின்படி வாழ முடியுது. இப்படித்தான் ஜனங்க சாத்தானோட வல்லமைகள முழுசா தூக்கி வீசிட்டு, தேவனால முழுசா இரட்சிக்கப்பட முடியும், அதுக்கப்புறம் அவங்க தேவனால பாதுகாக்கப்படவும், கடைசி நாட்கள்ல பேரழிவுகள்ல இருந்து தப்பிக்கவும், மனுக்குலத்துக்காக தேவன் ஆயத்தம் பண்ணியிருக்கற அழகான இடத்துக்குள்ள பிரவேசிக்கவும் முடியும். இது வெளிப்படுத்துதல் 21:3-6ல இருக்கற தீர்க்கதரிசனத்த நிறைவேத்துது. “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.” இங்க, “ஆயிற்று” ன்னு தேவன் சொல்றாரு. இது கர்த்தராகிய இயேசு “முடிந்தது” ன்னு சிலுவையில சொன்னதிலிருந்து முழுதும் வேறுபட்டது. இவை வேறவேற சூழல்கள், வேறவேற உலகங்கள். கர்த்தராகிய இயேசு சிலுவையில “முடிந்தது” ன்னு சொன்னப்போ, அவர் தன்னோட மீட்பின் கிரியைய முடிக்கறது பத்தி பேசினாரு. வெளிப்படுத்தல் புத்தகத்துல “ஆயிற்று” ங்கற வார்த்தைகள் மனுக்குலத்த இரட்சிக்க தன்னோட கிரியைய முழுமையா முடிக்கறத பத்தி தேவன் பேசறது, தேவனோட வாசஸ்தலம் மனுஷங்களுக்குள்ள இருக்கும்போது, அவர் அவங்க மத்தியில வாழ்வாரு, அவங்க அவரோட ராஜ்யத்தின் ஜனங்களா இருப்பாங்க, அங்க கண்ணீர், மரணம் அல்லது துன்பம் இனியிருக்காது. தேவன் அவரோட இரட்சிப்பின் கிரியைய முடிப்பதற்கான ஒரே அடையாளம் இதுதான்.

இந்த கட்டத்துல, சிலுவையில் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளுக்கு, தேவனோட இரட்சிப்பின் கிரியை முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்னு சொல்றவங்க, அது தேவனோட கிரியையின் உண்மைக்கு முற்றிலும் முரணானது, அதோட அது முழுசும் மனுஷனோட கருத்துங்கறதுல தெளிவா இருக்கணும். அது கர்த்தரோட வார்த்தைகளோட தவறான விளக்கம், அது வஞ்சிக்கும், தவறா வழிநடத்தும், எத்தன பேர் அத நம்பி அழிஞ்சாங்கன்னு சொல்லவே முடியாது. கண்மூடித்தனமா இத பிடிச்சிட்டிருக்கிறவங்க, அவங்க ராஜ்யத்தில எடுத்துக்கொள்ளப்பட கர்த்தர் திடீர்னு மேகத்தில தோன்றுவதற்காகக் காத்திருந்து, இவ்ளோ காலமும் சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள ஆராய மறுக்கறவங்க, கர்த்தர சந்திக்கிற அவங்களோட வாய்ப்ப முழுசா இழப்பாங்க. நிச்சயமா, அவங்க எப்பவும் பாவத்திலிருந்து தப்பிச்சு முழுமையா இரட்சிக்கப்பட மாட்டாங்க. அப்போ வாழ்நாள் முழுசும் வெச்சிருந்த விசுவாசம் வீணாப் போயிரும், அதோட அவங்கப் பேரழிவுகள்ல விழுந்து தேவனால அகற்றப்படுவாங்க.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....

கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்யுது?

பேரழிவுகள் தங்கள் மேல இருப்பத மக்கள் உணர்ந்துருக்காங்க மேலும், மேகத்து மேல கர்த்தர் வர்றத எதிர்பாத்து படபடப்போடு காத்திருக்காங்க....

தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க...

கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை மீட்டுவிட்டார், ஆனாலும் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரும்போது நியாயத்தீர்ப்பு பணியை அவர் ஏன் செய்ய வேண்டும்?

2,000 வருடங்களுக்கு முன்பு, மனித குலத்தைப் பாவங்கள்ல இருந்து மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு மனுஷ ரூபத்துல சிலுவைல அறையப்பட்டார்,...

Leave a Reply