தமிழ் பைபிள் பிரசங்கம்: நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன—கர்த்தர் திரும்பி வரும்போது நம்மை நேரடியாகத் தமது ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்வாரா?
பேரழிவுகள் அதுபாட்டுக்கு அதிகரிச்சிக்கிட்டே போகுது, மேலும் விசுவாசிங்க எல்லாம் ஆவலோட இரட்சகரின் வருகைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க, தூங்கிக்கிட்டு இருக்கும்போதே கர்த்தரைச் சந்திக்க ஆகாயத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்காகவும், மேலும் இன்றைக்குத் தீவிரித்துக்கொண்டிருக்கும் பேரழிவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் ஏங்கிக்கிட்டிருக்காங்க. அவங்க ஏன் கர்த்தராகிய இயேசு கீழே இறங்கிவருவதற்காக மேலும் அவரைச் சந்திக்க மேலே எடுத்துகொள்ளப்படுவதற்காக இவ்வளவு நம்பிக்கையோடு காத்திருக்காங்க? கர்த்தராகிய இயேசுவின் மேல் அவங்களுக்கு இருக்கும் விசுவாசத்தின் மூலம் அவங்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டதாக அவங்க விசுவாசிக்கிறாங்க கர்த்தர் அவங்கள இனிமேல் பாவம் செய்கிறவங்களா பார்க்கல அவங்களுக்குத் தேவையான எல்லாம் அவங்கக்கிட்ட இருக்கு, மேலும் கர்த்தர் வரும்போது அவங்க நேரடியா ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுவாங்க. ஆனா பலருக்கு என்ன குழப்பம்னா பெரிய பேரழிவுகள்லாம் வந்திருச்சு, ஆன கர்த்தர் ஏன் இன்னும் வரல? கர்த்தர் உண்மையிலேயே வர்ராறா வரலையான்னு பலரும் சந்தேகப்படத் தொடங்கிட்டாங்க. வரலைனா, அவங்க பேரழிவுல சிக்கி எந்த நேரமும் இறந்து போகக்கூடுங்கிறதுதானே அதனுடைய அர்த்தம்? நிறைய போதகருங்க பேரழிவுகளுக்கு இடையில அல்லது முடிவுல கர்த்தர் வருவாருன்னு இப்ப சொல்றாங்க ஏன்னா அத எப்படி விளக்குறதுன்னு அவங்களுக்குத் தெரியல. ஆனா அது சரியா? மத உலகம் கர்த்தர இன்னும் வரவேற்கல, ஆனா அவர் இன்னும் வரலன்னு அதுக்கு அர்த்தமா? பேரழிவுக்கு முன்னால பிலதெல்பியா சபை எடுத்துக்கொள்ளப்படும்னும் மேலும் பேரழிவுகளின் துன்பங்களிலிருந்து அவங்கள அவர் காப்பார்னும் கர்த்தர் வாக்குத்தத்தம் தந்தது நாம எல்லாருக்கும் தெரியும். உண்மையிலேயே கர்த்தர் தமது வாக்குத்தத்தத்த மீறுவாரா? நிச்சயமாக இல்ல. ஜனங்க நம்புற மாதிரி விசுவாசிங்கள பரலோகத்துக்குள்ள எடுத்துக்கிட்டுப் போக கர்த்தர் ஒரு மேகத்தின் மேல வரலைங்கிறது உண்மைதான் ஆனா நமக்கெல்லாம் தெரியும் அதாவது, அவர் ஏற்கெனவே சர்வவல்லமையுள்ள தேவனாகத் திரும்பி வந்துட்டார்னும், பல சத்தியங்கள வெளிப்படுத்திக்கிட்டும், தேவனுடைய வீட்டில இருந்து ஆரம்பிச்சி நியாயத்தீர்ப்பின் கிரியைகள செஞ்சிக்கிட்டும் இருக்காருன்னும் கிழக்கத்திய மின்னல் தொடர்ந்து சாட்சி அளிச்சிக்கிட்டு இருக்குது. எல்லா சபைப் பிரிவுகளிலிருந்தும் சத்தியத்த நேசிக்கிற ஜனங்க தேவனுடைய சத்தத்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்ல கேட்டு அவர நோக்கித் திரும்பியிருக்காங்க, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்னால கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகள புசித்துப் பானம்பண்ணி ஆட்டுக்குடியானவரின் கல்யாண விருந்துல கலந்துக்கிட்டிருக்காங்க. அவங்க சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் அனுபவிச்சுப் பெரும் சாட்சியக் கொண்டவங்களாக இருக்காங்க அவங்க ஆனந்தமா தேவனத் துதித்து அவருடைய சமூகத்தில ஜீவிக்கிறாங்க. மத உலகின் ஒருபோதும் முடியாத பேரழிவுகளப் பத்திய பயத்தோடு ஒப்பிடும்போது இது இரவும் பகலுமாம். பல விசுவாசிங்க நினைக்கிறாங்க, கிழக்கத்திய மின்னல் சாட்சி கொடுக்கும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்திருக்கும் கர்த்தரா? கடைசி நாட்கள்ல கர்த்தர் உண்மையிலேயே நியாயத்தீர்ப்புக் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்துக்கிட்டிருக்காரா? ஆனா பலருக்கு இன்னும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்கு, “கர்த்தர் ஏற்கெனவே என் பாவங்கள மன்னிச்சிட்டாரு மேலும் அவர் என்ன ஒரு பாவியாப் பார்க்கல. அவர் திரும்பி வரும்போது என்ன நேரடியா பரலோகத்துக்குள்ள எடுத்துக்கிட்டுப் போகணும். உடனடியா என்ன அவர் ஏன் எடுத்துக்கொள்ளல, ஆனா நியாயத்தீர்ப்புக் கிரியயின் ஒரு கட்டத்த கடைசி நாட்கள்ல செய்வாரா?” இன்னைக்கு நாம இந்தத் தலைப்பப் பத்தி கொஞ்சம் பாக்கலாம். நமது பாவம் மன்னிக்கப்படுதுங்கிறதுக்கு, நாம ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்னு அர்த்தமா?
முதல்ல, மன்னிப்படைஞ்சவங்க நேரடியா ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கலாங்கற கருத்துக்கு ஏதாவது வேத அடிப்பட இருக்குதான்னு நாம பாக்கலாம். இதை ஆதரிக்க கர்த்தருடைய வார்த்தைங்க ஏதாவது இருக்கா பாவங்கள் மன்னிக்கப்பட்டவங்க நேரடியா பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரிவேசிக்கலாம்னு கர்த்தராகிய இயேசு எப்போ சொன்னாரு? அது யாரையாவது ஒருத்தர நேரடியா ராஜ்யத்துக்குள்ள அனுமதிக்கும்னு பரிசுத்த ஆவியானவரும் சொல்லல வேத அடிப்படையோ அல்லது கர்த்தரிடத்தில இருந்து நிரூபணமாக வார்த்தைகளோ இல்லாததனால கர்த்தர் வரும்போது அவங்க எடுத்துக்கொள்ளப்படுவாங்கன்னு ஜனங்க ஏன் இவ்வளவு உறுதியா இருக்காங்க? இதுக்கு எந்த அர்த்தமும் இல்ல. பரலோக ராஜ்யத்துக்குள்ள யாரால பிரவேசிக்க முடியுங்கிறதுக்கு கர்த்தர் இந்தத் தெளிவான வசனத்த கொடுத்திருக்காரு: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்தேயு 7:21). இதிலிருந்து நமக்கு உறுதியா என்ன தெரியுதுன்னா மன்னிக்கபடுவது மட்டுமே ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பதுக்குப் போதுமானதல்ல அது ஏன் போதுமானதல்ல? முக்கியமா, பாவத்திலிருந்து மன்னிக்கப்படுறதுனால மட்டுமே நீங்க சுத்திகரிக்கப்பட்டுட்டீங்கன்னு, நீங்க தேவனுக்கு கீழ்ப்படியுறீங்கன்னு, அல்லது தேவ சித்தத்த நிறைவேற்றீங்கன்னு அர்த்தமில்ல. நாமெல்லாம் பாவங்கள்லாம் மன்னிக்கப்பட்ட விசுவாசிங்க கூட தொடர்ந்து பொய் சொல்றதையும், ஏமாத்தறதையும், நேர்மயில்லாம இருக்கிறதையும், வஞ்சிக்கிறதையும் தெளிவா பாத்திருக்கிறோம். கொஞ்சம் வேத அறிவு அவங்களுக்கு இருந்தாப் போதும், அவங்கெல்லாம் மூர்க்கத்தனமா இருக்காங்கா, யார் சொல்றதையும் கேக்க மாட்டாங்க. அவங்க அதிகாரத்துக்கும் ஆதாயத்துக்கும் சண்ட போடுறாங்க தங்களையே விடுவித்துக்கொள்ள முடியாத பாவத்தில அவங்க ஜீவிக்கிறாங்க இது தெளிவா காட்டுறது என்னனன்னா மன்னிக்கப்பட்டிருந்தாலும் கூட ஜனங்க இன்னும் இழிவானவர்களாகவும் சீர்கேடானவர்களாகவும்தான் இருக்காங்க, மேலும் அவங்க எபோதும் பாவம் செஞ்சிக்கிட்டேதான் இருக்காங்க அவங்க சத்தியத்த ஏத்துக்கிட்டு அதுக்குக் கீழ்ப்படியாம இருக்கிறதோட தேவனை நியாயந்தீர்த்து அவர எதிர்க்கிறாங்க. அவங்க அப்படியே பரிசேயர்களைப் போலத்தான் இருக்காங்க அவங்க கர்த்தர நிந்தித்து, நியாயந்தீர்த்து, தூஷித்தாங்க, அவர மீண்டும் சிலுவையில கூட அறைஞ்சாங்க. இது எத நிரூபிக்கிதுன்னா மனுக்குலத்தின் பாவங்கள் மன்னிக்கப்படலாம், ஆனா நாம இன்னும் இழிவாவும் சீர்கேடாவும்தான் இருக்கோம், மேலும் நம்ம சீர்கேடான சாராம்சம் தேவனுக்கு எதிரானதாக இருக்கு. தேவனுடைய வார்த்தைகள் என்ன சொல்லுதுன்னா “நான் பரிசுத்தர், ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவியராகமம் 11:45). “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபிரெயர் 12:14). ஆக, பாவத்தில ஜீவிக்கிறவங்க ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க தகுதியற்றவங்க—இதில ஒரு சந்தேகமும் இல்ல, மேலும் இது தேவனுடைய நீதியான மற்றும் பரிசுத்தமான மனநிலையால முழுவதுமா தீர்மானிக்கப்படுது. பாவமில்லாதவங்கன்னும் பாவம் செய்றதில்லையின்னும், பரிசுத்தத்த அடஞ்சிட்டோம்னும் எந்த விசுவாசியால துணிஞ்சு சொல்ல முடியும்? ஒருவராலும் முடியாது. பல ஆவிக்குரிய புத்தகங்களை எழுதியிருக்கிற பெரிய, புகழ்பெற்ற ஆவிக்குரிய ஜனங்களாலும் கூட அவங்க பாவத்த விட்டு விலகி பரிசுத்தம் ஆயிட்டோம்னு துணிஞ்சு சொல்ல முடியாது. உண்மையில, எல்லா விசுவாசிகளும் ஒன்றுபோலதான் இருக்காங்க, பகலில் ஒரு பாவ நிலையில வாழ்ந்து இரவில பாவத்த அறிக்கையிட்டு, பாவத்தில கசப்போடு போராடுறாங்க. பாவத்தின் கட்டுகளில சிக்கி தவிர்க்க முடியாத வேதனைய அவங்க எல்லாரும் அனுபவிக்கிறாங்க. இந்த உண்மை சுட்டிக்காட்டுறது என்ன? யாருடைய பாவங்க மன்னிக்கப்பட்டதோ அவங்க பாவத்திலிருந்து தப்பி பரிசுத்தம் ஆகலைங்கறதைத்தான் இது சுட்டிக்காட்டுது, ஆகையினால அவங்களும் பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவங்க இல்லன்னு நாம உறுதியா சொல்ல முடியும். கர்த்தராகிய இயேசு சொன்னது போல, “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்” (யோவான் 8:34-35). நம்மால பார்க்க முடியும் அதாவது உங்க பாவங்க மன்னிக்கப்பட்டதால ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கலாங்கிறதுக்கு எந்த வேதாகம ஆதாரமும் இல்ல, ஆனா இது முழுக்க முழுக்க ஒரு மனுஷீக எண்ணம்தான்.
இந்தக் கட்டத்தில பலருடைய மனசில இருக்கும் முதல் கேள்வி அது ராஜ்யத்துக்குள் நம்ம கொண்டு போகலைனா பின் எது கொண்டு போகும் ரஜ்யத்துக்கான பாதை என்ன? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே.” ஒரு சந்தேகமுமில்லாம இதுதான் தேவையானது. அப்போ, எப்படி நாம தேவனின் சித்தப்படி செய்து ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது? உண்மையில, ரொம்ப நாளைக்கு முன்னாலேயே கர்த்தராகிய இயேசு நமக்கு ஒரு பாதைய சுட்டிக்காட்டினார். நல்ல ஒரு புரிதலுக்காக நாம கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்களப் பாப்போம். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:12-13). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்” (யோவான் 5:22). கர்த்தராகிய இயேசு அவருடைய வருகையப் பத்தி பால தடவ தீர்க்கதரிசனம் சொல்லியிருக்காரு. அவர் வரும்போது அவர் செய்யப்போகும் கிரியையப் பத்திய அவருடைய தீர்க்கதரிசனங்கதான் இந்த வசனங்க, நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ய ஜனங்கள சத்தியத்துக்குள் வழிநடத்த பாவத்திலிருந்தும் சாத்தானின் வல்லமைகளில் இருந்தும் மனுக்குலத்த முழுவதுமா இரட்சிக்க மேலும் முடிவாக நமக்கு ஒரு அழகான சென்றடையுற இடம் கிடைப்பதற்காக நம்மள அவருடைய ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்ல பல சத்தியங்கள அது வெளிப்படுத்துது. அதனாலதான் கர்த்தர் வரும்போது நாம அவருடைய நியாயத்தீர்ப்பின் கிரியைய முழுவதுமாக ஏத்துக்க வேண்டும். சத்தியத்த நாம அடையுற வரைக்கும், சீர்கேட்டிலிருந்து நாம முழுமையா சுத்திகரிக்கப்பட முடியாது மேலும் நம்முடைய பாவ சுபாவத்த அகற்ற முடியாது. பாவத்தை விலக்கி பரிசுத்தமாவதற்கு, மேலும் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க தகுதிபெறுவதற்கு அதுதான் ஒரே வழி. நம்முடைய பாவ சுவாபத்த முழுமையா அகற்ற நமது சீர்கேடான மனநில சுத்திகரிக்கப்படணும் சாத்தானின் வல்லமைகளில இருந்து விடுபட நம்முடைய சீர்கேடான மனநிலைய நாம் விட்டொழிக்கணும், தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அவரது சித்தத்த நிறைவேத்தணும். இல்லாட்டா, ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க நமக்கு எந்த உரிமையும் இருக்காது. கடைசி நாட்கள்ல தேவனுடைய நியாயத்தீர்ப்பாலும் சிட்சையாலும் சுத்திகரிக்கப்பட்டவங்க மட்டுமே தேவனுடைய சித்தத்த செய்றவங்க ஆவாங்கங்கறதில நாமஉறுதியா இருக்கலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் கடைசிநாட்கள்ல ஏத்துக்கறதுதான் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஒரே வழிங்கறத இது நிரூபிக்கிறது இதப் பத்தி நாம தேவனுடைய வார்த்தைகளில ஒரு சிலதப் படிக்கலாம். “உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு, மாற்றப்படவில்லை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல முடியுமா? நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும், தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை என்பதும் உண்மைதான், ஆனால் இது நீ பாவமற்றவன் மற்றும் தூய்மையுள்ளவன் என்பதை நிரூபிக்காது. நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்? நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாகவும், இழிவானவனாகவும் இருக்கிறாய், ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய்; உன்னால் எப்படி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்! தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய். நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை. நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல, உன்னை மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் கிரியையை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய். இந்த வழியில் நீ தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய், ஏனென்றால் மனிதனை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய், இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும். நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய், ஆகையால் தேவனின் சுதந்திரத்தை நேரடியாகச் சுதந்தரிக்க முடியாது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து”). “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்க மிகத் தெளிவா இருக்கு. கிருபையின் காலத்துல கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய செய்தாரு. இது மனுஷனுடைய பாவங்கள மன்னிக்கிறதுக்குத்தான், மேலும் இரட்சிப்பின் பாதி கிரியைதான் முடிஞ்சது. கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியைதான் முழுமையா சுத்திகரிச்சி மனுக்குலத்த இரட்சிக்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களையும் அவரது நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஜனங்க ஏத்துக்கணும். அப்ப அவங்களோட சீர்கேடு சுத்திகரிக்கப்பட்டு மாற்றமடைவாங்க மேலும் அவங்க தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அவரது சித்தத்தச் செய்யும் ஜனங்களா இருப்பாங்க, மேலும் அவருடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவங்களா இருப்பாங்க. வேறு வார்த்தையில சொன்னா, பரலோக ராஜ்யத்துக்குள் செல்ல அவங்களுக்கு ஒரு பாஸ்போர்ட் இருக்கும். நாம என்ன சொல்லலாம்னா சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பின் கிரியைதான் மனுக்குலத்த இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் மிகத் தேவையான மிக முக்கியமான படியும், ஒரு நபர் ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதை தீர்மானிக்கும் படியும் அதுதான். மிகவும் முக்கியமான படியை இழந்துபோவது சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிக்கப்படுவதையும் இழந்துபோவது உங்கள் விசுவாசத்தின் ஒட்டுமொத்த தோல்வின்னு அர்த்தம். நீங்க எவ்வளவு காலத்துக்கு விசுவாசிச்சு இருந்தாலும் சரி, எவ்வளவு கடுமையா கிரியை செஞ்சிருந்தாலும் சரி அல்லது எவ்வளவுக்கெவ்வளவு விட்டுக்கொடுத்திருந்தாலும் சரி, நீங்க சர்வவல்லமையுள்ள தேவன் நிராகரித்தால் அதெல்லாம் ஒண்ணுமில்ல, மேலுமது பாதியில கைவிடுறதுதான். நீங்க ராஜ்யத்துக்குள்ள போக மாட்டீங்க. அது ஒரு வாழ்நாள் வருத்தமா இருக்கும்!
ஆக, அவருடைய ராஜ்யத்துக்குள்ள நம்மைக் கொண்டுவர நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், மனுக்குலத்த இரட்சிக்கவும் தேவன் எப்படி கிரியை செய்றார்? நாம சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள வாசிப்போம்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). தேவனுடைய நியாயத் தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவிச்சவங்க எல்லாரும் நம்ம சீர்கேட்டையும் சாராம்சத்தையும் தேவனுடைய வார்த்தைகள் வெளிப்படுத்தலேன்னா நாம எவ்வளவு தூரத்துக்குச் சீர்கெட்டுப் போயிருக்கோம், நம்முடைய சீர்கேடுகள் எவ்வளவு தீவிரமானவைன்னு நம்மால பார்க்க முடியாதுன்னு ஆழமா புரிஞ்சிக்கிறாங்க. தேவனால நியாயந்தீர்க்கப்படாம, சிட்சிக்கப்படாம, கிளைநறுக்கப்படாம, கையாளப்படாம, தண்டித்துத் திருத்தப்படாம நாம நமது சீர்கேடான மனநிலைய விட்டொழிக்க முடியாது மேலும் நம்மை நாமே உண்மையிலே அறிஞ்சிக்கிறதுக்கும் கூட நாம போராடுவோம். பல விசுவாசிங்க தங்களோட பாவத்துக்கான காரணம் சாத்தானால ஆழமாக சீர்கெடுக்கப்பட்டதில்தான் முழுமையா இருக்குங்கிறதப் பார்க்காம எப்போதும் பாவஞ்செய்து அறிக்கையிட்டு, பின் அறிக்கையிட்டு மீண்டும் பாவம் செய்றதத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாம இருக்கிறது அதிசயம் இல்ல. தாங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதனால அவங்க நேரடியா பரலோகத்துக்குப் போகலாம்னு இன்னும் தவறா நம்பிக்கிட்டு இருக்காங்க. இது உண்மையிலேயே குருட்டுத்தனமானது, முட்டாள்தனமானது மேலும் முழுசா விழிப்புணர்வு இல்லாம இருப்பது. சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலமாத்தான் உண்மையான மனந்திரும்புதல் வருது, தேவனின் நீதியான மனநிலையை அறிவதன் மூலமாத்தான் தேவனுக்குப் பயப்படும் பயமும் தீமையை விட்டுவிலகலும் வருது. அப்போதான் நம்மால தேவன தொழுதுகொள்ளவும் அவருக்குக் கீழ்ப்படியவும் முடியும் மேலும் அவரது சித்தத்த செய்யும் ஜனங்களாகலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கடைசிகாலங்கள்ல அனுபவிச்சு சுத்திகரிக்கப்படும் போதுதான் இதை உங்களால உண்மையிலேயே அறிய முடியும்.
நாமெல்லாம் தெளிவா இருக்கோம்னு இப்போ நான் நினைக்கிறேன் அதாவது ராஜ்யத்துக்குப் போகும் வழி திடமானது, மிகவும் நடைமுறைக்கேத்தது சும்மா மன்னிக்கப்பட்டு நம்மை எடுத்துக்கொள்ள கர்த்தருக்காகக் காத்திருப்பது பின் நேரடியாகப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுறது இல்ல இது. அது எதார்த்தமல்ல—அது விரும்பிச் சிந்திப்பதுதான். நாம பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க விரும்பினா, முக்கியமானது என்னன்னா சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏத்துக்கொள்றதுதான் இதனால நம்ம சீர்கேடு சுத்திகரிக்கப்பட்டு நாம தேவனுடைய சித்தத்த செய்யலாம். அதுக்குப்பின் நாம தேவனுடைய வாக்குத்தத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அவருடைய ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்படுவதற்கு தகுதியா இருப்போம். நாம சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியைய ஏத்துக்கொள்ள மறுத்தா நம்மால ஒருபோதும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைய முடியாது அல்லது நம்முடைய சீர்கேடு சுத்திகரிக்கப்படவும் மாட்டாது. இந்த வகையில கர்த்தர் நம்ம பரலோகத்துக்கு எடுத்துச்செல்றதுக்காக ஏங்கிக்கிட்டு இருப்பது பயனற்ற நம்பிக்க, மேலும் அப்படிப்பட்ட ஜனங்க புத்தியில்லாத கன்னிகைகள் அவங்க பேரழிவுல விழுவாங்க, அழுது புலம்பி அவங்கவுங்க பற்களக் கடிச்சிக்கிட்டு இருப்பாங்க. சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கொள்றது என்பது அவரது சிங்காசனத்துக்கு முன்னால எடுத்துக்கொள்ளப்படுறது என்று நாம் சொல்லலாம். அவர் வெளிப்படுத்தும் சத்தியங்களையும் அவரது நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நாம் இன்னும் ஏத்துக்கணும், சீர்கேட்டை விலக்கி சுத்திகரிக்கப்படணும், இதனால முடிவில நாம பேரழிவுகளில் இருந்து தேவனால் பாதுகாக்கப்பட்டு, அவர் நமக்காக உருவாக்கியிருக்கும் அழகான சென்று சேருமிடத்திற்குள் பிரவேசிப்போம். சத்தியத்த ஏத்துக்காம அவருடைய நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் கீழ்ப்படியாம சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துகறதா பெயரளவில் சொல்லிக்கிட்டிருந்தா அது மெய்யான விசுவாசம் ஆகாது, மேலும் அப்படிப்பட்டவன் சத்தியத்தை மெய்யாகவே நேசிக்கிறவனாக இருக்க முடியாது. அவங்க அம்பலப்படுத்தப்பட்டு நீக்கப்படுவாங்க. சர்வவல்லமையுள்ள தேவனிடம் இருந்து இன்னொரு பகுதிய வாசித்து நாம இதை முடிப்போம். “கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?