தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குதுங்கறது மெய்தானா?

பிப்ரவரி 3, 2022

இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ல தோன்றி, கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு, மில்லியன்கணக்கான வார்த்தைகள அவர் வெளிப்படுத்திக்கிட்டு இருக்காரு. அவர் மனிதகுலத்த முழுவதுமா சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும், தேவனோட வீட்ல இருந்து தொடங்கி, நியாத்தீர்ப்பின் கிரியைய செஞ்சிட்டு இருக்காரு. மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பது, இணையத்தில் கிடைக்கக் கூடிய அவரோட வார்த்தைகளின் தொகுப்பா இருக்கு. இது மத உலகத்தை மட்டுமல்லாம, முழு உலகத்தையும் உலுக்கியிருக்கு. எல்லா நாட்டையும், எல்லா சபைப் பிரிவுகளையும் சேர்ந்த, சத்தியத்தை விரும்பி, தேவனோட தோற்றத்திற்காக ஏங்குகிறவங்கள்ல சிலர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளப் படிச்சிருக்காங்க, அவைகள் மெய்யானவைனும் பரிசுத்த ஆவியானவரோட வார்த்தைகள்தான்னும் உணர்ந்திருக்காங்க. அவங்க தேவனோட சத்தத்தைக் கேட்டு, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசுன்னு உணர்ந்து, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பா வந்திருக்காங்க. கர்த்தராகிய இயேசு கூறியதைப் போல, “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). ஆனா, மத உலகத்துல இருக்குற பலரும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்தான் மெய்யானவைனும், அவைகள்தான் வல்லமைவாய்ந்தவை, அதிகாரம் உள்ளவைகள்னும் அங்கீகரிக்கிறாங்க, அவரோட வார்த்தைகள் வேதாகமத்துல பதிவு செய்யப்படாததால, அவைகள ஏத்துக்க மறுக்கறாங்க. அவங்க, தேவனோட எல்லா கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருப்பதாவும், அதுக்கு அப்பால எதையும் பாக்க முடியாதுன்னும் நம்புறாங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மெய்யானவை, ஆனா, அவைகள் வேதாகமத்துல இல்லாததால, எப்படி தேவனோட கிரியையாகவும் வார்த்தைகளாகவும் இருக்க முடியும்? மேலும் சிலர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் உறுப்பினர்கள் வேதாகமத்துக்குப் பதிலா, மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பத வாசிக்கறதப் பாத்து, இதைக் கண்டிச்சு, வேதாகமத்துல இருந்து விலகுவது கர்த்தருக்குத் துரோகம் செய்வதுன்னும், இது தவறான உபதேசம்னும் சொல்றாங்க. இது எனக்கு யூத பரிசேயர்களை நினைவூட்டுது, இவங்கதான் கர்த்தராகிய இயேசுவோட கிரியையும் வார்த்தைகளும் தங்களோட வேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாலயும் அவர் மேசியான்னு அழைக்கப்படாததாலயும், அவருக்கு எதிரா நியாயந்தீர்த்து, கண்டனம் செஞ்சு, சண்டை போட்டாங்க. அவங்க அவரை சிலுவையில கூட அறஞ்சாங்க, அப்புறம் அவங்க, இஸ்ரவேல் தேசமே அழிஞ்சுபோற அளவுக்கு தேவனால தண்டிக்கப்பட்டு, கடுமையா வெறுக்கப்பட்டாங்க. இது சிந்தனையத் தூண்டுகிற ஒரு பாடமா இருக்கு! இன்று பல மதவாதிகள் தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருப்பதாகவும், அதைத் தவிர வேறு எதையும் வெளியே காண முடியாதுன்னும் வலியுறுத்துறாங்க. இந்தத் தவறான கருத்தை பிடிச்சிக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைகளையும் வார்த்தைகளையும் அவங்க மறுக்குறாங்க, அப்புறம் கண்டனம் செய்யுறாங்க. சிலரோ, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மெய்யானவைன்னு வெளிப்படையா ஒப்புக்கொள்றாங்க, ஆனாலும், அவங்க அவைகள ஆராய்ந்து பாக்காம இருக்கறாங்க, அதன் விளைவா, பேரழிவுகளுக்கு முன்னாடியே கர்த்தர வரவேற்கற அவங்களோட வாய்ப்ப இழந்து போறாங்க. துரதிர்ஷ்டவசமா, அவங்க பேரழிவுகள்ல விழுந்துபோயிருக்காங்க. “தேவனோட எல்லாக் கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்கு, அவைகளத் தவிர எதையும் வெளியே பாக்க முடியாது.” இந்த எண்ணம் நிறைய ஜனங்களுக்கு கர்த்தர வரவேற்கும் தங்களோட வாய்ப்ப இழக்கப் பண்ணி, சொல்லமுடியாத தீங்கு செஞ்சுக்கிட்டு வருது. உண்மையிலயே இந்த கருத்துல என்ன தவறு இருக்கு? நான் இன்னும் அதிகமா, அதைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதப் பகிர்ந்துக்கறேன்.

அதை ஆராய்றதுக்கு முன்னாடி, வேதம் எங்கிருந்து வந்துச்சுன்னு நாம தெளிவாப் பாக்கலாம். இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டு பகுதிளாக தொகுக்கப்பட்டிருக்கு. யூதர்கள் யேகோவா மீது விசுவாசம் வச்சு, பழைய ஏற்பாட்டின் வசனங்கள பயன்படுத்துறாங்க, அதே சமயத்துல, கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிற கிறிஸ்தவங்க புதிய ஏற்பாட்டைப் பயன்படுத்துறாங்க. பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டுமே தேவன் தம்மோட கிரியையை முடிச்ச பிறகு, பல நூற்றாண்டுகளுக்கு அப்புறமா மனுஷர்களால தொகுக்கப்பட்டுச்சு. வேதாகம் வானத்திலிருந்து விழவில்லை, நிச்சயமா தேவன் அதைத் தனிப்பட்ட முறையில எழுதி நம்மிடம் ஒப்படைக்கல. அந்தக் காலத்து மதத் தலைவர்களோட ஒத்துழைப்பின் மூலம்தான் இது ஒன்று சேர்க்கப்பட்டுச்சு. நிச்சயமா, அவங்க பரிசுத்த ஆவியானவரோட வெளிச்சத்தையும் வழிநடத்துதலையும் பெற்றிருந்தாங்க—அதுல எந்த சந்தேகமும் இல்லை. வேதாகமம் மனுஷர்களால தொகுக்கப்பட்டதனால, பழைய ஏற்பாட்டுல புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கத்தை சேர்த்திருக்க வாய்ப்பில்லை, புதிய ஏற்பாட்டுல கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையயும் சேர்த்திருக்க வழியே இல்லை. ஜனங்களால எதிர்காலத்தைப் பாக்க முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களும் புத்தகங்களுந்தான் வேதாகமத்த உருவாக்குச்சு, எல்லாத் தீர்க்கதரிசிகளோட அல்லது அப்போஸ்தலர்களோட எழுத்துக்களும் வேதாகமத்துல சேர்க்கப்படல. சில தவிர்க்கப்பட்டன அல்லது அகற்றப்பட்டன. ஆனா, பிரச்சனை அது இல்ல. இது மனுஷர்களால தொகுக்கப்பட்டதால, சிலவற்றை தேர்ந்தெடுப்பது, நீக்குவது தவர்ப்பது எல்லாம் இருப்பது இயல்பானதுதான். இதில் ஜனங்க தவறு செய்யறது எங்கன்னா, தேவனோட எல்லா கிரியைகளும், வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குன்னும், அந்தக் காலங்கள்ல தேவன் அதைச் சொன்னாரு செஞ்சாரு என்பது போலவும் வலியுறுத்தறதுதான். இது எந்த மாதிரியான பிரச்சனை? சில தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் பழைய ஏற்பாட்டுல பதிவு செய்யப்படல, ஏனோக், எஸ்றாவின் புத்தகங்கள் மாதிரியான நமக்குத் தெரிந்த இரண்டு புத்தகங்கள் வேதாகமத்துல இல்லை. புதிய ஏற்பாட்ல இடம் பெறாத மற்ற அப்போஸ்தலர்களின் புத்தகங்களும் இருந்திருக்கனுங்கறத நாம உறுதியா நம்பலாம், கர்த்தராகிய இயேசு மூன்று வருஷங்களுக்கும் மேலாக பிரசங்கிச்சுக்கொண்டிருந்தாரு, அவர் நிறைய சொல்லியிருக்கணும், ஆனா அதுல கொஞ்சம் மட்டுந்தான் வேதாகமத்துல இருக்கு. அப்போஸ்தலன் யோவான் சொன்னதப் போல, “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்” (யோவான் 21:25). தேவனோட கிரியையயும் வார்த்தைகளையும் பத்திய வேதாகமத்தின் பதிவு மிகவும் குறைவாகத்தான் இருக்கு என்பது தெளிவாகுது! சந்தேகத்திற்கு இடமின்றி நாம தெரிஞ்சிக்கறது என்னன்னா, பழைய ஏற்பாடோ அல்லது புதிய ஏற்பாடோ அந்தக் காலத்துக்கான தேவனோட கிரியைகளையும் வார்த்தைகளையும் முழுவதுமா உள்ளடக்கியிருக்கல. இது எல்லாரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. வேதாகமத்தப் பத்தியோ அல்லது அது எப்படி இணைக்கப்பட்டது என்பதப் பத்தியோ புரிஞ்சிக்காத நிறைய ஜனங்கள் மத உலகத்துல இருக்காங்க. தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருப்பதா அவங்க நம்புறாங்க, வேதாகமத்துக்கு வெளியே உள்ள எதையும் மறுக்கறாங்க, கண்டனம் செய்யுறாங்க. இது வரலாற்று உண்மைகளுக்கு ஒத்துப்போகுமா? அந்தக் கூற்று தேவனோட கிரியையை நியாயந்தீர்ப்பது அல்லவா? தேவனை எதிர்ப்பது அல்லவா? வேதாகமம் நடந்த சம்பவங்கள வச்சுத் தொகுக்கப்பட்டுச்சு, அது மனுஷர்களால செய்யப்பட்டுச்சு, அப்படின்னா, மனுஷர்களால எப்படி தேவனோட அடுத்த கட்ட கிரியைய வேதாகமத்துல முன்கூட்டியே எழுதி வைக்க முடியும்? அதற்கு சாத்தியமே இல்லை, ஏன்னா, ஜனங்களுக்கு முன்னதாகவே காணக்கூடிய வல்லமை இல்ல. பழைய ஏற்பாட்டைத் தொகுத்தவங்க கர்த்தராகிய இயேசுவின் நாள்ல உயிரோட இல்ல, அவங்க கர்த்தராகிய இயேசுவின் கிரியைய அனுபவிக்கல. அவரோட கிரியையையும், வார்த்தைகளயும், அப்போஸ்தலர்களோட புத்தகங்களையும் எப்படி அவங்களால பழைய ஏற்பாட்டுல சேர்த்திருக்க முடியும்? புதிய ஏற்பாட்டைத் தொகுத்தவங்களுக்கும், 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி நாட்களின் தேவனோட கிரியைகளையும் வார்த்தைகளையும் முன்னதாகவே வேதாகமத்துல எழுதி வைக்க, எந்த வாய்ப்பும் இல்லை. இன்று, முழு மத உலகமும் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் சாட்சி கொடுத்திருக்குது. சிலர் அவைகளப் பார்த்து, சர்வவல்லமையுள்ள தேவனோட எல்லா வார்த்தைகளும் மெய்யானதுன்னும் அதிகாரமுள்ளவைனும் ஒப்புக்கொண்டிருக்காங்க. ஆனா, வேதாகமத்துல சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் அவரோட நாமமும் இல்ல என்பதாலும், அவைகளை அதுல பாக்க முடியாததாலும், சர்வவல்லமையுள்ள தேவன்தான், தேவனோட தோற்றமா இருக்காரு என்பத மறுக்கறாங்க. இது பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவை எதிர்த்து, கண்டனம் செஞ்ச போது, அவங்க செய்த தவறைப் போலவே இல்லையா? கர்த்தராகிய இயேசுவோட நாமம் மேசியா இல்லை என்பதாலும், அவரோட கிரியையும் வார்த்தைகளும் தங்களோட வேதங்களுடன் பொருந்தாததாலும், அவர்தான் மேசியாங்கிறத மறுக்கலாம்னு பரிசேயர்கள் நெனச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட நாமம் வேதாகமத்துல தீர்க்கதரிசனமா சொல்லப்படல என்பதை மதவாதிகள் இன்று பாக்குறாங்க, அவருடைய வார்த்தைகளும் கூட அதுல காணப்படல, அதனால, அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையயும் வார்த்தைகளையும் மறுத்து கண்டனம் செய்யுறாங்க. தேவனை சிலுவையில் அறைஞ்ச பாவத்தை அவங்க மறுபடியும் செய்யுறாங்க. உண்மையிலயே, தேவனோட கடைசி நாட்களின் கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்துல இல்லன்னாலும், கடைசி நாட்கள்ல தேவனோட புதிய நாமத்தப் பத்திய தீர்க்கதரிசனங்கள் இருக்குது. ஏசாயாவில் இருக்கிற இதைப் போல: “புறஜாதியார் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; நீ ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்படுவாய், யேகோவாவின் வாயே அந்த நாமத்தைச் சூட்டும்(ஏசாயா 62:2). வெளிப்படுத்தின விசேஷத்துலயும் நாம பாக்க முடியும்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்(வெளிப்படுத்தல் 3:12). “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்(வெளிப்படுத்தல் 1:8). “அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்(வெளிப்படுத்தல் 19:6). கர்த்தராகிய இயேசு சொன்னதப் போல, கடைசி நாட்கள்ல தேவன் அதிகமாகப் பேசுவாரு, அதிக கிரியை செய்வாருன்னு வேதாகமம் தீர்க்கதரிசனமா சொல்லுது: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு முறை தோன்றும் ஒரு எச்சரிக்கையும் உண்டு: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). கடைசி நாட்கள்ல தேவன் முத்திரையிடப்பட்ட சுருளைத் திறப்பார் என்றும் வெளிப்படுத்தின விசேஷம் தீர்க்கதரிசனமா சொல்லுது. தேவன், கடைசி நாட்கள்ல திருச்சபைகள்ல பேசுவார்னும், மனிதனை எல்லா சத்தியங்களுக்குள்ளும் வழிநடத்துவார்னும் தெளிவா, தீர்க்கதரிசனமா சொல்லியிருக்கிறாரு. கடைசி நாட்களுக்கான தேவனோட இந்தக் கிரியையும் வார்த்தைகளும் எப்படி வேதாகமத்துல முன்கூட்டியே தோன்ற முடியும்? அது சாத்தியமே இல்ல! இந்த தீர்க்கதரிசனங்கள், வெளிப்படையான உண்மைகள் எல்லாத்தையும் வச்சுக்கிட்டு, ஏன் பல ஜனங்கள் தங்களோட கண்களத் திறந்து வச்சுக்கிட்டே குருடரா இருக்காங்க, தேவனோட எல்லாக் கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்கு, அதுக்கு வெளியில வேற எதையும் காண முடியாதுன்னு நியாயந்தீர்த்து வலியுறுத்துறாங்க? மிகத் தெளிவா, தேவன் தோன்றியிருப்பதையும், கிரியை செஞ்சுக்கிட்டு இருப்பதையும், நியாயந்தீர்க்கவும், எதிர்ப்பதற்கும் துணிச்சலுள்ளவங்களா இருப்பதால, இவங்க தேவனோட கிரியையயும் புரிஞ்சுக்க மாட்டாங்க, சத்தியத்தையும் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க தேவனால கண்டனம் செய்யப்பட்டு அகற்றப்படுகிறாங்க, அவங்க ஏற்கனவே பேரழிவுகளுக்குள்ல விழுந்திருக்காங்க. இது வேதாகமத்தின் வசனங்களை நிறைவேற்றுது: “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்” (நீதிமொழிகள் 10:21). “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்(ஓசியா 4:6).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல சிலவற்றை பாக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் குறைவானவை; அவற்றால் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நான்கு சுவிசேஷங்களிலும் நூற்றுக்கும் குறைவான அதிகாரங்களே உள்ளன, அவற்றில் இயேசு அத்தி மரத்தை சபிப்பது, பேதுரு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தது, இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து சீஷர்களுக்கு காட்சியளித்தது, உபவாசத்தைப் பற்றி போதித்தது, ஜெபத்தைப் பற்றி போதித்தது, விவாகரத்து பற்றி போதித்தது, இயேசுவின் பிறப்பு மற்றும் பரம்பரை, இயேசு தமது சீஷர்களை நியமித்தது மற்றும் பல என இதுபோன்ற வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும், மனுஷன் அவற்றைப் பொக்கிஷங்களாக மதிப்பிடுகிறான், இன்றைய கிரியைகளை அவற்றிற்க்கு எதிராக ஒப்பிடுகிறான். இயேசு தம் ஜீவிதத்தில் செய்த எல்லாக் கிரியைகளும் இவ்வளவுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஏதோ தேவன் இதை மட்டுமே செய்ய வல்லவர், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவர் என்பதைப் போல. இது அபத்தமானது இல்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (1)”).

இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சைரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஓர் ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா? கடந்த கால காரியங்களை இன்றைக்கு கொண்டுவருவது அவற்றை வரலாறாக்குகிறது. அவை எவ்வளவு உண்மையானதாக அல்லது நிஜமானதாக இருந்தாலும், அவை இன்னும் வரலாறாகவே இருக்கின்றன. வரலாற்றால் நிகழ்காலத்தைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் தேவன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதில்லை! ஆகவே, நீ வேதாகமத்தை மட்டுமே புரிந்துகொண்டு, தேவன் இன்று செய்ய விரும்பும் கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும் நீ தேவனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவில்லை என்றால், தேவனைத் தேடுவது என்றால் என்ன என்பதன் அர்த்தம் உனக்குப் புரியவில்லை. இஸ்ரவேலின் வரலாற்றை வாசிப்பதற்காகவும், வானத்தையும் பூமியையும் தேவன் சிருஷ்டித்த எல்லா வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காகவும் நீ வேதாகமத்தை வாசித்தால், நீ தேவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் இன்று, நீ தேவனை விசுவாசித்து, ஜீவனைப் பின்தொடர்ந்தால், மேலும் நீ தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்ந்து, மரித்துப்போன எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் அல்லது வரலாறு பற்றிய புரிதலையும் பின்தொடரவில்லை என்றால், நீ இன்றைய தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வழிகாட்டுதலை நாட வேண்டும். நீ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்திருந்தால், உன்னால் வேதாகமத்தை வாசித்திருக்க முடியும், ஆனால் உன்னால் முடியாது, நீ தேவனை விசுவாசிக்கிற ஒருவன், மேலும் நீ தேவனுடைய இன்றைய சித்தத்தைச் சிறப்பாகத் தேடியிருக்கிறாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)”).

நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யப்பட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். … உயர்ந்த வழி இருக்கும்போது, அந்தத் தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது ஜனங்கள் திரும்பிப் பார்க்கிறார்கள் என்ற வரலாறாக மட்டுமே இருக்கிறது. மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது ‘புனித நூலில்’ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். ‘புனித நூலில்’ அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

நான் இங்கு விளக்க விரும்பும் உண்மை இதுவாகும்: தேவன் என்னவாக இருக்கிறார் என்ன கொண்டிருக்கிறார் என்பது நித்தியமாய் வற்றாததும் முடிவற்றதும் ஆகும். தேவனே ஜீவனுக்கும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறார்; சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றால் அவரை அளந்தறிய முடியாது. கடைசியாக, நான் அனைவருக்கும் தொடர்ந்து ஞாபகப்படுத்த வேண்டும்: புத்தகங்களில், வார்த்தைகளில் அல்லது அவரது கடந்தகால பேச்சுக்களில் இனி தேவனை ஒருபோதும் மட்டுப்படுத்தாதீர்கள். தேவனுடைய கிரியையின் தன்மையை விளக்க புதிது என்ற ஒரே ஒரு வார்த்தைதான் இருக்கிறது. அவர் பழைய பாதைகளைப் பின்பற்றவோ தம்முடைய கிரியையை மீண்டும் செய்யவோ விரும்புவதில்லை; மேலும், ஒரு குறிப்பிட்ட நோக்கெல்லைக்குள் அவரை மட்டுப்படுத்துவதன் மூலம் ஜனங்கள் அவரை ஆராதிப்பதை அவர் விரும்புவதில்லை. இதுவே தேவனின் மனநிலை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பின்னுரை”).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்துது இல்லையா? நியாயப்பிரமாணத்தின் காலத்துலயும் கிருபையின் காலத்துலயும் செய்யப்பட்ட தேவனோட கிரியையின் இரண்டு கட்டங்களோட பதிவுகள் மட்டுந்தான் வேதாகமத்துல இருக்கு. இது ஒரு வரலாற்று புத்தகம், இது தேவனோட எல்லா கிரியையயும் வார்த்தைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவன் சிருஷ்டிகராவும், மனித வாழ்வின் ஆதாரமாவும் இருக்காரு. அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா பேசியும், கிரியை செஞ்சும் வர்ராரு, அவர் மனிதகுலத்தின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வற்றாத ஆதாரமாக இருக்காரு, எப்போதும் நம்மை முன்னோக்கி வழிநடத்துறாரு. அவரோட வார்த்தைகள் எப்போதும் பாய்கிற ஜீவத் தண்ணீரின் ஊற்றா இருக்கு. தேவனோட கிரியையயும் வார்த்தைகளையும் எந்த நபராலும் பொருளாலும் தடுக்க முடியாது, வேதாகமத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாது. அவர் தம்முடைய நிர்வாகத் திட்டத்துக்கும் மனிதகுலத்தின் தேவைகளுக்கும் ஏற்றபடி அதிகம் பேசுவதையும் புதிய கிரியைகளச் செய்வதையும் ஒருபோதும் நிறுத்தல. வேதாகமம் எதுவும் இல்லாத நியாயப்பிரமாணத்தின் காலத்துல, பூமியில் மனிதகுலத்தின் வாழ்க்கையை வழிநடத்த யேகோவா தேவன் நியாயப்பிரமாணத்த வழங்கினாரு. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்துல மனந்திரும்புதலின் வழியைப் பிரசங்கிச்சு, பழைய ஏற்பாட்டுக்கு அப்பாற்பட்ட, மீட்பின் கிரியையச் செஞ்சாரு. சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல வந்து, தேவனுடைய வீட்ல இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுக்கிட்டிருக்காரு. அவர் ஏழு முத்திரைகளையும் புஸ்தகச் சுருளையும் திறந்து, மனிதகுலத்தை சுத்திகரிச்சு, முழுமையா இரட்சிக்கும் எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்துறாரு. இது கிருபையின் காலத்துல மீட்பின் கிரியைய அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட புதிய, மிகவும் உயர்ந்த ஒரு கட்ட கிரியை. இது புதியதும் ரொம்பவே நடைமுறையானதுமான கிரியை, இது வேதாகமத்துல முன்னாடியே தோன்றியிருக்க முடியாது. தேவனோட கிரியை எப்பவுமே புதுசா இருக்கும், ஒருபோதும் பழயதா இருந்ததில்லன்னும், எப்பவுமே முன்னோக்கிச் செல்லுது, ஒருபோதும் செஞ்சதையே செய்யாது என்பதையும் இதுல இருந்து நம்மால பாக்க முடியுது. அவரோட புது கிரியை வேதத்துல உள்ளதை மிஞ்சியதா இருக்கு, மனுஷனுக்கு ஒரு புதிய பாதையையும் இன்னும் உயர்ந்த சத்தியங்களையும் கொடுக்குது. இதனால, நம்மோட விசுவாசம் வேதாகமத்தை மட்டுமே அடிப்படையா கொண்டிருக்க முடியாது, அதோடு கூட, தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குன்னு நம்மால நிச்சயமா சொல்ல முடியாது. தேவனோட தற்போதைய வார்த்தைகளின் வாழ்வாதாரத்தையும் மேய்ச்சலயும் பெற, நாம பரிசுத்த ஆவியானவரோட கிரியைய நாடணும், தேவனோட கிரியையின் அடிச்சுவடுகளத் தொடர்ந்து பின்பற்றணும், வெளிப்படுத்தின விசேஷத்துல சொல்லியிருபதைப் போல: “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே(வெளிப்படுத்தல் 14:4). இவங்கதான் ஆட்டுக்குட்டியானவரோட கலியாண விருந்தில் கலந்துகொண்டு கடைசி நாட்கள்ல தேவனோட இரட்சிப்பைப் பெறக்கூடிய புத்தியுள்ள கன்னிகைகள்.

சர்வவல்லமையுள்ள தேவன் 30 வருஷங்களாக தம்முடைய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியைய செஞ்சுக்கிட்டு வர்ராரு, அவர் மில்லியன்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தியிருக்கிறாரு. அவருடைய வார்த்தைகள் ஏராளமாயிருக்கு, அவை ஒன்றிலும் குறையில்லாதவை. அவைகள், தேவனோட 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் எல்லா மறைபொருட்களாகிய, மனித குலத்தை நிர்வகிப்பதற்கான அவரது நோக்கங்கள், சாத்தான் மனுஷர்கள எப்படி சீர்கெடுக்கறான், தேவன் எப்படி மனிதகுலத்தை சாத்தானோட ஆதிக்கத்துல இருந்து படிப்படியா இரட்சிக்கிறாரு, தேவன் மனிதகுலத்தை உபத்திரவங்கள் மூலமாகவும் புடமிடுதல் மூலமாகவும் எப்படி சுத்திகரிச்சு மனுஷனப் பரிசுத்தமாக்குகிறாரு, கடைசி நாட்கள்ல அவரோட நியாயத்தீர்ப்பு கிரியையின் முக்கியத்துவம், அவரது மனுவுருவாதல் மற்றும் அவரது நாமங்கள் பத்திய மறைபொருட்கள், வேதாகமத்தின் உண்மையான கதை, எல்லா வகையான ஜனங்களோட முடிவுகள், மனிதகுலத்தின் இறுதியாக சென்றடையும் இடம், அதோடு, கிறிஸ்துவின் ராஜ்யம் பூமியில எப்படி உணரப்படுகிறது என்பது போன்ற இவைகளோடுகூட வேதாகமத்தின் மறைபொருட்களையும் வெளிப்படுத்துது. மனிதகுலத்தின் சீர்கேடு மற்றும் அவர்களது தேவனை எதிர்க்கும் தன்மை, சாத்தானிய சுபாவம் ஆகியவை பற்றிய உண்மைய சர்வவல்லமையுள்ள தேவன் நியாயந்தீர்த்து அம்பலப்படுத்துறாரு. பாவத்துல இருந்து தப்பிச்சு, தேவனால முழுமையா இரட்சிக்கப்படுவதற்கான பாதைய, அதாவது, உண்மையிலேயே மனந்திரும்புவது எப்படி, மாம்சத்த வெறுத்து சத்தியத்தைக், கைக்கொள்வது எப்படி, நேர்மையான நபரா இருப்பது எப்படி, தேவனோட சித்தத்த செய்வது எப்படி, தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுவது எப்படி, தேவனை அறிவதையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், தேவன் மீது அன்பு வைப்பதையும், இன்னும் அதிகமானவைகளையும் அடையுறது எப்படி என்பதப் போன்ற பாதைய அவர் நமக்குக் காட்டுறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள், நியாயப்பிரமாண காலத்திலும், கிருபையின் காலத்திலும் உள்ள தேவனோட வார்த்தைகளை விட அதிகமாகவும் உயர்ந்ததாகவும் இருக்கு, அவைகள் எல்லாமே தேவனோட இரட்சிப்பை அடைய, நாம பெற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்கள். அவைகள் நம்பமுடியாத அளவில் கண்களைத் திறப்பதாகவும் நிறைவேறுவதாகவும் இருக்கு, எல்லாவற்றிலும் பயிற்சிக்கான ஒரு பாதைய நமக்குத் தருது. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல, நம்மோட விசுவாசத்துல இருக்கிற எல்லாப் போராட்டங்களுக்கும், கேள்விகளுக்கும், ஒவ்வொரு பதிலையும் தீர்வையும் நாம பாக்கறோம். சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில இருந்து வர்ர மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பது ராஜ்யத்தின் காலத்துக்கான வேதாகமமாய் இருக்கு, இதுதான் கடைசி நாட்கள்ல தேவன் மனுஷனுக்கு கொடுத்திருக்கிற நித்திய ஜீவனுக்கான வழி. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளைப் புசிச்சு, பானம்பண்ணுவதாலும், கடைபிடிப்பதாலும், அவருடைய வார்த்தைகளால நியாயந்தீர்க்கப்படுவதாலயும், சிட்சிக்கப்படுவதாலயும், சில சத்தியங்களப் புரிஞ்சுக்கறதாலயும், தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தேவனப் பத்திய உண்மையான புரிதலைப் பெற்றுக்கொள்ளுறாங்க. அவங்களோட சீர்கெட்ட மனநிலைகள் சுத்திகரிக்கப்பட்டு, பல்வேறு அளவுகள்ல மாற்றப்பட்டிருக்குது, இறுதியில, அவங்க பாவத்தின் கட்டுகள்ல இருந்து தப்பிச்சு, சாத்தானை தோற்கடிச்ச சாட்சிய பகருறாங்க. பேரழிவுகளுக்கு முன்பே தேவனால முழுமையாக்கப்பட்ட ஜெயங்கொள்பவர்கள் அவங்கதான். சர்வவல்லமையுள்ள தேவனோட நாமம், கிரியை, வார்த்தைகள் வேதாகமத்துல பதிவு செய்யப்படாம இருக்கலாம், ஆனா, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையாலும் வார்த்தைகளாலும் அடையப்பட்ட உண்மையான விளைவுகளாகிய பலன்கள், வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களை முழுவதுமாக நிறைவேற்றுது. சர்வவல்லமையுள்ள தேவனோட தோற்றத்தையும் கிரியையயும் உலகத்துக்கு சாட்சியாக சொல்ற, தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களோட சாட்சிகளின் காணொளிகளும் திரைப்படங்களும் இப்ப இணையத்தில இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள், கிழக்கிலிருந்து மேற்கு வரை பிரகாசிச்சு, முழு உலகத்தையும் ஒளிரச் செய்யற ஒரு பெரிய வெளிச்சத்த போன்றதா இருக்கு. உலகத்துல ஒவ்வொரு மூலையிலிருந்தும் சத்தியத்தை நேசிக்கற அதிகதிகமான ஜனங்கள் உண்மையான வழியை ஆராய்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனிடத்துக்குத் திரும்புறாங்க. எந்த சக்தியாலும் தடுக்க முடியாத அளவுக்கு உலகையே ஆட்டிப்படைக்கும் பெரும் அலை இது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றதப் போல், “ஒரு நாள், முழு பிரபஞ்சமும் தேவனிடம் திரும்பும் போது, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அவருடைய கிரியையின் மையம் அவருடைய பேச்சுக்களைப் பின்பற்றும். மற்ற இடங்களில், சிலர் தொலைபேசியைப் பயன்படுத்துவார்கள், சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் படகில் கடல் கடந்து செல்வார்கள் மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் பெற ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் போற்றுவார்கள், மற்றும் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தேவனிடம் நெருங்கி வருவார்கள், தேவனை நோக்கிக் கூடிவருவார்கள், அனைவரும் தேவனை வணங்குவார்கள், இவை அனைத்தும் தேவனுடைய செயல்களாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியிலுள்ள தேவனை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் மெய்யான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை தலை வணங்கினார்கள் ஏனென்றால், உண்பதற்கு ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் மெய்யான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர், மேலும் ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள். தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் மகிமையை அடையும் காலமாக அது இருக்கும்: பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்து ஜனங்களும் இந்தக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ‘மனிதனை’ வணங்குவார்கள். அது தேவனுடைய மகிமையின் நாளாக இருக்காதா? … முழு ராஜ்யமும் சந்தோஷப்படும் நாள் தேவனுடைய மகிமையின் நாளாக இருக்கும், மேலும் உங்களிடம் வந்து தேவனுடைய நற்செய்தியைப் பெறுபவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார், அவ்வாறு செய்யும் நாடுகளும் ஜனங்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். எதிர்காலத்தின் போக்கு இவ்வாறு இருக்கும்: தேவனுடைய வாயிலிருந்து பேச்சுக்களைப் பெறுபவர்களுக்கு பூமியில் நடக்க ஒரு பாதை இருக்கும் மற்றும் அவர்கள் வணிகர்களாக அல்லது விஞ்ஞானிகளாக, அல்லது கல்வியாளர்களாக அல்லது தொழிலதிபர்களாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் இல்லாதவர்களுக்கு ஓர் அடி கூட எடுத்து வைப்பது கடினமானதாக இருக்கும் மற்றும் அவர்கள் மெய்யான வழியை நாடக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதன் பொருள்தான், ‘சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது’ என்பதாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது”). ராஜ்யத்தின் காலம் வார்த்தையின் காலமா இருக்கு. தேவன் தம்மோட வார்த்தைகளை மனிதகுலத்தை ஜெயங்கொள்ளவும், சுத்திகரிக்கவும், இரட்சிக்கவும் பயன்படுத்துராரு, ஜெயங்கொள்பவர்களின் கூட்டத்த முழுமைப்படுத்தியிருக்காரு. இது தேவனோட வார்த்தைகளின் அதிகாரத்தையும் வல்லமையையும் முழுமையாகக் காட்டுது. ஆனா, மத உலகம் வேதாகமத்தப் பிடிச்சிக்கிட்டு இருக்கு, சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் ஏத்துக்க மறுக்குது. இந்த ஜனங்கள் பாவம் செய்தல், அறிக்கையிடுதல், மறுபடியும் பாவம் செய்தல்னு தங்களோட பழைய வாழ்க்கையில சிக்கியிருக்காங்க, ஏற்கனவே தேவனோட கிரியையினால அகற்றப்பட்டு, பேரழிவுகளுக்குள்ள விழுந்து, அழுதுக்கிட்டும் பற்களக் கடிச்சிக்கிட்டும் இருக்காங்க. கர்த்தர் மேகத்தின் மீது வந்து நித்திய ஜீவனுக்காக பரலோகராஜ்யத்துக்குள்ள அவங்கள எடுத்துக்குவார்னு அவங்க இன்னும் காத்துக்கிட்டு இருக்காங்க. அது ஆசையால நெறஞ்ச எண்ணமல்லவா? கர்த்தராகிய இயேசு சொன்னதப் போலவே, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை(யோவான் 5:39-40). வேதாகமத்தப் பற்றிக்கொண்டிருப்பவங்க சத்தியத்தையும் ஜீவனையும் பெற மாட்டாங்க. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவங்களும், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவங்களும், அவருக்குக் கீழ்ப்படிகிறவங்களுமே சத்தியத்தையும் ஜீவனையும் பெறுவாங்க. கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் இப்போது மனிதகுலத்தை சுத்திகரிக்கவும் முழுமையாக இரட்சிக்கவும் சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. நமக்கு சத்தியமும் ஜீவனும் வேண்டுமென்றால், நாம வேதாகமத்துக்கு வெளியே வந்து தேவனோட அடிச்சுவடுகளைப் பின்பற்றணும், சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் ஏத்துக்கிட்டு அதற்குக் கீழ்ப்படியணும். பாவத்துக்கு விலகி, தேவனால முழுமையாக இரட்சிக்கப்படுவதுக்கான ஒரே வழியும், பேரழிவுகள்ல இருந்து தேவனால பாதுகாக்கப்பட்டு, அவரோட ராஜ்யத்துக்குள் நுழைவதற்கான ஒரே வழியும் இது மட்டுந்தான். வேதாகமத்த விட்டுவிடாமல், தேவனோட கடந்தகால கிரியைகள்லயும் வார்த்தைகள்லயும் சிக்கித் தவிப்பவங்க, கடைசி நாட்கள்ல தேவன் நமக்குக் கொடுக்கிற சத்தியத்தின் வழியை ஏற்க மறுப்பவங்க, மனிதகுலத்தை முழுமையாக இரட்சிக்கும் தேவனோட கிரியைய முழுவதுமா இழந்துபோவாங்க, அவங்க பேரழிவுகள்ல விழுந்து தண்டிக்கப்படக் கூடியவங்களா மட்டுமே ஆவாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்வதப் போல, “தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இன்னுமொரு பத்தியுடன் நாம இதை முடிக்கலாம்: “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தமிழ் பிரசங்க குறிப்புகள்: ஒன்றான மெய் தேவன் யார்?

ஒரே உண்மையான தேவனைக் கண்டுபிடிப்பதற்கான வழி இதுதான், தேவனின் சிம்மாசனத்தின் முன் பேரானந்தம் அடைந்து, முழு இரட்சிப்பைப் பெறுங்கள். கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.