தமிழ் பிரசங்க குறிப்புகள்: ஒன்றான மெய் தேவன் யார்?

நவம்பர் 2, 2021

இந்த நாட்கள்ல பெரும்பாலான ஜனங்களுக்கு விசுவாசம் இருக்கு, ஒரு தேவன் இருக்காருன்னு அவங்க நம்பறாங்க. அவங்க அவங்களோட இதயத்தில இருக்குற தேவன நம்பறாங்க. காலப்போக்குல, வேற வேற இடங்கள்ல இருக்கற ஜனங்க, நூத்துக்கணக்கான இல்ல ஆயிரக்கணக்கான வித்தியாசமான தேவர்கள கூட நம்ப ஆரம்பிச்சாங்க. இவ்ளோ தேவர்கள் இருக்க முடியுமா? நிச்சயமா இருக்க முடியாது. அப்படின்னா எத்தன பேர் இருக்காங்க? யாரு மெய்யான தேவன்? எந்த ஒரு புகழ் பெற்ற இல்ல பிரபலமானவங்க கூட இதுக்குத் தெளிவான பதில சொல்ல முடியாது, ஏன்னா எந்த மனுஷனாலும் தேவனப் பாக்கவோ, இல்ல அவரோட நேரடியா தொடர்பு கொள்ளவோ முடியாது. ஒவ்வொருத்தருக்கும் குறுகிய ஆயுள் காலம் இருக்கு, அதோட அவங்க அனுபவிக்கிறது சாட்சியமளிக்கறது எல்லாமே ரொம்ப குறைவாத்தான் இருக்கு, அப்படின்னா தேவனுக்குத் தெளிவான சாட்சிய யாரால கொடுக்க முடியும்? சாட்சி அளிக்க முடியறவங்க ரொம்ப குறைவானவங்களா தான் இருக்காங்க. தேவனுக்கு சாட்சியமளிக்கும் ரொம்ப சிறப்பான, அதிகாரப்பூர்வமான காரியம் வேதாகமம் தான்னு நமக்குத் தெரியும். தேவன் தான் எல்லாத்தயும் சிருஷ்டிச்சாரு, மனக்குலத்த சிருஷ்டிச்சதுல இருந்து, அவர் பூமியில மனுஷனோட வாழ்க்கைய வழிநடத்துறத நிறுத்தவே இல்ல, அவர் மனுஷனுக்கான நியாயப்பிரமாணங்களயும் கட்டளைகளயும் கொடுத்தாருன்னு சாட்சியம் அதுல இருக்கு, அதோட கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த மீட்க வந்தாருன்னு மாம்சத்தில் இருக்குற தேவனுக்கு அது சாட்சியமளிக்குது. மனுக்குலத்த முழுமையா இரட்சிக்கவும், மனுஷன ஒரு அழகான இலக்குக்குக் கூட்டிப் போகவும், நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யறதுக்கு, கடைசி நாட்கள்ல தேவன் திரும்பி வருவாருன்னு அது தீர்க்கதரிசனமா சொல்லுது. அதனால வேதாகமம் சாட்சி சொல்ற தேவன் தான் சிருஷ்டிகர், ஒன்றான மெய்த் தேவன்னு தெளிவாகுது. இது போதிய ஆதாரமுள்ளதாக இருக்கு. சிலர் கேக்கறாங்க, “வேதாகமம் சாட்சியமளிக்கும் இந்தத் தேவன் உண்மையில யாரு? அவரோட நாமம் என்ன? அவர நாம எப்படி கூப்பிடுவோம்?” அவர் யேகோவான்னு அழைக்கப்பட்டாரு, அதுக்கப்புறம் மாம்சத்தில அவரு கர்த்தராகிய இயேசுன்னு அழைக்கப்பட்டாரு, அதுக்கப்புறம் வெளிப்படுத்துதல் சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ல வர்ற சர்வவல்லமையுள்ள தேவன்னு தீர்க்கதரிசனம் உரைக்குது. இந்த தேவன்தான் வானத்தயும் பூமியயும் எல்லாத்தயும், மனுக்குலத்தயும் சிருஷ்டிச்சவர். அவருதான் எப்போதும் மனுக்குலத்த வழிநடத்தி, இரட்சிக்கிற ஒன்றான மெய்த் தேவன். அவர் நித்தியமானவர், அவருக்கு எல்லாக் காரியங்கள் மேலயும் ராஜ்யபாபாரம் இருக்கு, எல்லாத்தயும் ஆளுறவர். அதனால இந்த சிருஷ்டிகரும் ஒன்றான மெய்த்தேவனுமான இவர தவிர யாரா இருந்தாலும் அது பொய்யான தேவன்தான். சாத்தான் ஒரு பொய்யான தேவன், அவனத் தொடர்ந்து விழுந்தபோன அந்த தூதர்கள் எல்லாருமே விதிவிலக்கே இல்லாம ஜனங்கள வஞ்சிக்க, தேவனப் போல ஆள்மாறாட்டம் செய்றாங்க. உதாரணமா புத்தர், குவான்யின், டாவோயிசத்தோட ஜேட் பேரரசர் எல்லாருமே பொய்யான தேவர்கள் தான். கடந்தகால பேரரசர்களால நியமிக்கப்பட்ட நெறைய தவறான தேவர்கள் இருக்காங்க, மத்த மதங்களோட தேவர்களப் பத்தி விரிவா பேச வேண்டிய அவசியமில்ல. ஆக அவங்க பொய்யான தேவர்கள்னு நாம ஏன் சொல்றோம்? ஏன்னா அவங்க வானத்திலயும் பூமியிலயும் இருக்குற எல்லாத்தயும் சிருஷ்டிக்கல, மனுக்குலத்தயும் சிருஷ்டிக்கல. இதுதான் ரொம்ப வலுவான ஆதாரம். எல்லாத்தயும் சிருஷ்டிக்க முடியாத இல்ல எல்லாத்தயும் ஆளுக செய்ய முடியாத எல்லாருமே பொய்யான தேவர்கள் தான். ஒரு பொய்யான தேவன் எல்லாத்தையும் நான்தான் சிருஷ்டிச்சேன்னு சொல்லத் துணிவான்னு நினைக்கிறீங்களா? இல்ல. மனுஷங்கள சிருஷ்டிச்சேன்னு சொல்லத் துணிவானா? அப்படி சொல்லத் துணியமாட்டான். சாத்தான்கிட்ட இருந்து மனுக்குலத்த அவனால இரட்சிக்க முடியும்னு சொல்லிக் கொள்ள அவனுக்குத் தைரியமிருக்குமா? நிச்சயமா இருக்காது. பேரழிவுகள் உண்மையில வரும்போது, நீங்க ஒரு பொய்யான தேவன்கிட்ட முறையிட்டா, அது தோன்றுமா? அதனால தோன்ற முடியாது, அது ஒளிஞ்சுக்கும், சரிதான? ஆக பொய்த் தேவர்களால மனுக்குலத்த இரட்சிக்க முடியாதுங்கறதயும் அவைகள நம்பறது வீணானதுங்கறதயும் நம்மால பாக்க முடியும். அவர்கள நம்பறது நம்மளயே நாம கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும், அதோட அது அழிவுல மூழ்கறதுல தான் முடியும். இதனால தான் எல்லாத்தயும் சிருஷ்டிச்ச மெய்யான தேவன் யாருன்னு தீர்மானிக்கிற முக்கியத்துவம் ரொம்ப ரொம்ப முக்கியமானது.

ஆதியாகமம் 1:1 என்ன சொல்லுதுன்னு நாம பாக்கலாம், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” இதுதான் வேதாகமத்தோட முதல் வசனம். இது நம்ப முடியாத அளவுக்கு அதிகாரப்பூர்வமாவும் அர்த்தமுள்ளதாவும் இருக்கு. இது வானத்தயும் பூமியயும் மனுக்குலத்தோட எல்லாத்தயும் சிருஷ்டிச்ச தேவனோட இரகசியத்த பகிர்ந்துக்குது. தேவன் தம்மோட வார்த்தைகளால வெளிச்சத்தயும் காற்றையும் சிருஷ்டிச்ச, அதோட எல்லா விலங்குகளயும் தாவரங்கள் முதலானவைகளயும் அப்புறம் மனுஷனையும் தன்னோட சொந்தக் கரங்களால சிருஷ்டிச்சதோட ஒரு ஆவணம்தான் ஆதியாகமம். தேவன் எல்லாத்தயும் சிருஷ்டிச்சாரு, அவரு எல்லாத்தயும் பராமரிச்சு போஷிக்கிறாரு. நாம பிழைக்கறதுக்காக எல்லாத்தயும் நமக்குத் தர்றாரு. மனுக்குலமும் மத்த எல்லா உயிரினங்களும் தேவனால நியமிக்கப்பட்ட சட்டங்களின் கீழ வாழுது. இதுதான் சிருஷ்டிகரோட தனித்துவமான வல்லமையும் அதிகாரமும், இது எந்த மனுஷனோ, தூதனோ, இல்ல சாத்தானோட பொல்லாத ஆவியோ என்னைக்கும் கொண்டிருக்கவோ இல்ல அடையவோ முடியாத ஒன்னு. நாம உறுதியா சொல்லலாம் எல்லாத்தயும் மனுக்குலத்தயும் சிருஷ்டிக்க முடிஞ்ச ஒரே ஒருவர் ஒன்றான மெய்த் தேவனான சிருஷ்டிகர் மட்டுந்தான்.

தேவன் எல்லாத்தயும் சிருஷ்டிச்சாரு, அவர் மனுக்குலத்த சிருஷ்டிச்சாரு; அவர் எல்லாத்தயும் ஆளுகை செய்யறாரு. இதுக்கிடையில அவர் மனுக்குலம் முழுவதயும் வழிநடத்தி இரட்சிக்கிறாரு. வேதாகமம் என்ன சொல்லுதுன்னு நாம பாக்கலாம். ஆதியில, தேவன் மனுக்குலத்த சிருஷ்டிச்சாரு, ஆதாமும் ஏவாளும் சாத்தானால சோதிக்கப்பட்டதுக்கப்பறம் மனுஷன் பாவத்தில வாழ்ந்தான். ஆதாம் ஏவாளோட சந்ததியினர் பூமியில பெருகுனாங்க, ஆனா அவங்களுக்கு எப்படி வாழணும்னோ இல்ல உண்மையான தேவன எப்படி ஆராதிக்கணும்னோ தெரியல. அவரோட நிர்வாகத் திட்டத்தோட அடிப்படையில, தேவன் நியாயப்பிரமாணத்துக் காலத்தோட தன்னோட கிரியையத் தொடங்குனாரு, நியாயப்பிரமாணங்களயும் கட்டளைகளயும் கொடுத்து, பாவம்னா என்ன, எப்படி வாழணும், எப்படி யேகோவா தேவன ஆராதிக்கணும்னு அவங்க தெரிஞ்சுக்கறதுக்காக அவங்க என்னப் பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு மனுக்குலத்துக்குக் கற்பிச்சாரு. இப்படித்தான் மனுக்குலத்த ஜீவனுக்கான சரியான பாதையில தேவன் வழிநடத்தினாரு. நியாயப்பிரமாணத்தின் காலத்தோட பிற்பகுதியில, மனுக்குலம் சாத்தானால ரொம்ப ஆழமா சீர்கெடுக்கப்பட்டுது அவங்களால நியாயப்பிரமாணத்தை பின்பற்ற முடியல, அதிகதிமா பாவம் செஞ்சாங்க. கொடுக்கறதுக்கு போதுமான பாவ பலிகள் கூட இல்ல. அப்படி போயிருந்தா, மனுக்குலம் முழுசுமே தண்டிக்கப்பட்டு, நியாயப்பிரமாணத்தின் கீழ கொல்லப்பட்டுருப்பாங்க. மனுக்குலத்த இரட்சிக்க, தேவன் கர்த்தராகிய இயேசுவா மாம்சமானாரு. மனுஷனோட பாவங்கள ஏத்துக்கிட்டு, நம்மோட பாவநிவாரணப்பலியா அவர் மனுக்குலத்துக்காக தனிப்பட்ட முறையில சிலுவையில அறையப்பட்டாரு. அதுக்கப்புறம் தங்களோட பாவங்களுக்காக யாருமே பாவநிவாரணப்பலிகள கொடுக்க வேண்டியதா இல்ல. அவங்க கர்த்தரை நம்பி, அறிக்கப் பண்ணி, மனந்திரும்பற வரைக்கும் அவங்களோட பாவங்கள் மன்னிக்கப்பட்டுது, அதோட தேவன் கொடுக்கிற எல்லாத்தயும் அனுபவிக்க அவங்க தேவன் முன்னாடி வர முடிஞ்சது. கர்த்தராகிய இயேசுவோட பாவ நிவாரண பலி இல்லைன்னா, எல்லாருமே நியாயப்பிரமாணத்தின் கீழ ஆக்கினைக்குட்பட்டுக் கொல்லப்பட்டுருப்பாங்க, அதோட நாம இன்னிக்கு வரைக்கும் இங்க இருக்க வழியே இருந்திருக்காது. அதனால கர்த்தராகிய இயேசு முழு மனுக்குலதோட மீட்பர்னும், ஒன்றான மெய்த்தேவனோட தோற்றம்னும் நமக்கு தெரியும். அவருடைய ஆவிதான் யேகோவா தேவனோட ஆவி. அவர்தான் மாம்சத்தில யேகோவா தேவனோட தோற்றம். இன்னும் சாதாரணமா சொல்லனும்னா, யேகோவா தேவன் மனுக்குலத்த மீட்க ஒரு மனிதனா உலகத்துக்கு வந்தாரு, அவர்தான் ஒன்றான மெய்த்தேவன்.

கிருபையின் காலத்தில, கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய செய்தார், மேலும் கர்த்தர நம்பின எல்லாரோட பாவங்களும் மன்னிக்கப்பட்டுருச்சு. பாவங்கள் மன்னிக்கப்பட்டதுக்கான சமாதானத்தயும் சந்தோஷத்தயும், தேவன் மனுஷனுக்குக் கொடுக்குற எல்லா கிருபையயும் அனுபவிச்சாலும், மனுக்குலம் பாவம் செய்றத நிறுத்தவே இல்ல. ஜனங்க பாவம் செய்றது, பாவத்த அறிக்கசெய்றது, அப்புறம் மறுபடியும் பாவம் செய்றதுங்கற இந்த சுழற்சியிலயே வாழ்றாங்க. அவங்க பரிசுத்தத்த அடையல, தேவனோட ராஜ்யத்துக்குள்ள நுழையத் தகுதியானவங்களாவும் மாறல. கடைசி நாட்கள்ல மனுஷன பாவத்திலிருந்து முழுமையா இரட்சிக்கவும், அவங்கள சுத்திகரிக்கவும், அவங்கள அவரோட ராஜ்யத்திற்குள்ள கூட்டிட்டுப் போகவும், திரும்பவும் வருவேன்னு கர்த்தராகிய இயேசு வாக்களிச்சாரு. அவர் வாக்குப்பண்ணின மாதிரியே, இப்போ தனிப்பட்ட முறையில மாம்சத்தில பூமிக்கு வந்துருக்காரு. அவர் சத்தியத்த வெளிப்படுத்தி, கடைசி நாட்களோட நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுட்டிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவன். சர்வவல்லமையுள்ள தேவன் தேவனோட 6000 ஆண்டு நிர்வாகத் திட்டத்தோட இரகசியங்கள வெளிப்படுத்தி, மனுஷனோட பாவத்தோட, தேவன எதிர்க்கறதோட காரணத்தைப் பத்தின எல்லாத்தையும் மனுக்குலத்துக்கு சொல்லி, சாத்தான் எப்படி மனுஷன சீர்கெடுக்கறான், தேவன் எப்படி படிப்படியா மனுஷன இரட்சிக்க கிரியை செய்றாரு, சுத்திகரிக்கப்பட்டு, அவருடன் ராஜ்யத்துக்குள்ள நுழைய எப்படி விசுவாசத்த செயல்படுத்தறது, தேவனுக்கான கீழ்ப்படிதலயும் அன்பயும் எப்படி அடையறது, அதோட ஒவ்வொரு வகையான நபரோட முடிவும் இறுதி இலக்கும் என்னதுங்கறதயும் பத்தி சொல்லி இலட்சக்கணக்கான வார்த்தைகள பேசியிருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவனால பேசப்பட்ட சத்தியங்கள்ல இத்தன செழிப்பான வகைகள் இருக்கு, எதுவுமே குறைவில்ல. சர்வவல்லமையுள்ள தேவன் எத்தன சத்தியங்கள வெளிப்படுத்தயிருக்காருன்னு பாத்து, அவரு திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுன்னு நாம உறுதிப்படுத்த முடியும், ஏன்னா கர்த்தர் தீர்க்கதரிசனம் உரச்சிருக்காரு, “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:13). சர்வவல்லமையுள்ள தேவன் கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனத்த நிறைவேற்றுகிற பல சத்தியங்கள வெளிப்படுத்தி இருக்காரில்லையா? இது மாம்சத்தில கிரியை செய்ய திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவோட ஆவின்னு நிரூபிக்குது இல்லையா? அதனால சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே ஆவியக் கொண்டிருக்காங்க, சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்த முழுமையா இரட்சிக்க பூமிக்கு வந்த இரட்சகர். தேவனால மட்டுந்தான் சத்தியத்த வெளிப்படுத்த முடியும். தேவனத் தவிர, எந்த மனுஷனாலும் இத நிச்சயமா செய்ய முடியாது. மனுக்குலத்தோட முழு வரலாற்றுலயும், எந்த மனுஷனாலும் சத்தியங்கள வெளிப்படுத்த முடியல. அந்த புகழ்பெற்ற பெரிய பிரபலமானவங்களால, அந்த பிசாசுகளால, அதோட தேவர்களப் போல ஆள்மாறாட்டம் செய்யற பொல்லாத ஆவிகளால சொல்லப்பட்ட எல்லாமே சத்தியத்தோட ஒரு வார்த்தகூட இல்லாத தவறான கருத்துக்களும் தவறா வழிநடத்தற பொய்களாவும் இருக்கு. தேவனால மட்டுந்தான் சத்தியத்த வெளிப்படுத்தி மனுக்குலத்த இரட்சிக்க முடியும். அதில எந்த சந்தேகமும் இல்ல.

வானங்களயும் பூமியயும் எல்லாத்தயும் தேவன் சிருஷ்டிச்சாரு, அதோட அவர் மனுக்குலத்தயும் சிருஷ்டிச்சாரு. இத்தன காலமும் மனுக்குலத்த வழிநடத்தவும் இரட்சிக்கவும் அவர் பேசிக்கிட்டும் கிரியை செஞ்சுட்டும் வர்றாரு. இந்த தேவன் தான் சிருஷ்டிகர்னு, ஒன்றான மெய்த்தேவன்னு வானத்தயும் பூமியயும் எல்லாத்தையும் சிருஷ்டிக்கக் கூடியவரும் மனுக்குலத்தின் விதிய ஆளுகை செய்றவருமான சிருஷ்டிகர் மட்டுமே ஒன்றான மெய் தேவன். தேவன் மனுக்குலத்த சிருஷ்டிச்சாரு, மனுஷனோட தலவிதியிலும் முன்னேற்றத்திலும் தேவன் மட்டுந்தான் அவரையே ஈடுபடுத்திக்கறாரு. உலகத்த சிருஷ்டிக்கும் கிரியைய முடிச்சதிலிருந்து, தேவன் மனுக்குலத்தின் மேல கவனத்த செலுத்தி, நம்ம மேய்ச்சி, நமக்கு தேவயானதெல்லாம் கொடுத்து, மிக அதிகமாக நமக்கு கொடுத்திட்டு வர்றாரு. நம்மள சிருஷ்டிச்சப் பிறகு நம்ம விட்டு அவர் விலகிப்போகல, நம்ம அலட்சியப்படுத்தவுமில்ல. அதிகாரப்பூர்வமா மனுஷங்க பூமியில ஜீவிக்க ஆரம்பிச்சப்ப தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியைய ஆரம்பிச்சாரு, பூமியில மனுஷனோட ஜீவிதத்த வழிநடத்தும் கட்டளைகள வெளியிட்டாரு. நியாயப் பிரமாணத்த கடைபிடிக்க முடியாத வகையில மனுஷன் சாத்தானால மிக ஆழமா சீர்கெடுக்கப்பட்ட போது, நியாயப் பிரமாணத்துக்குக் கீழ ஒவ்வொருவரும் ஆக்கினைத்தீர்ப்ப எதிர்கொண்டாங்க மேலும் திரும்ப முடியாத நிலையில இருந்தாங்க, ஆகையினால மனுக்குலத்தின் பாவத்த மன்னிச்சு தேவன் அருளிய கிருபையையும் ஆசீர்வதங்களயும் அனுபவிக்க அவங்கள அனுமதிக்க தேவன் கர்த்தராகிய இயேசுவா மாம்சமாகி, தனிப்பட்ட முறையில மீட்பின் பணிய செஞ்சு முடிச்சாரு. அந்தக் காலம் முடிஞ்சப்போ, கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யவும், பாவத்தில இருந்தும், சாத்தானின் வல்லமைகளில் இருந்தும் மனுக்குலத்த முழுசா இரட்சிக்கவும், மனுக்குலத்த ஒரு அழகான சென்றடையுற இடத்துக்குள்ள வழிநடத்தவும் தேவன் மீண்டும் ஒருமுற இப்ப சர்வவல்லமையுள்ள தேவனா மனுவுருவெடுத்தாரு. ஒவ்வொரு காலத்திலும் தேவனுடைய கிரியைக்கு வெவ்வேறு பேர் இருந்தாலும், அவர் வெவ்வேறு கிரியைய முடிச்சிருந்தாலும், அது எல்லாமே ஒரே தேவனால செய்யப்பட்டதுதான். அவருக்கு ஒரே ஆவிதான் உண்டு, மேலும் அவரே ஒன்றான மெய் தேவன். இத மறுக்க முடியாதது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்ற மாதிரி, “தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தைச் சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அவசியம் செய்ய வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்”). “ஆதி முதல் இன்று வரை செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் எல்லாமே தேவனாலேயே செய்யப்பட்டன, அவை ஒரே தேவனாலேயே செய்யப்பட்டன. மூன்று கட்ட கிரியைகளின் உண்மை என்பது முழு மனுக்குலத்திற்கான தேவனுடைய தலைமைத்துவத்தைப் பற்றிய உண்மையாகும், இது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். மூன்று கட்ட கிரியைகளின் முடிவில், சகலமும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்பும். ஏனென்றால், முழு பிரபஞ்சத்திலும் இந்த ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார், வேறு எந்த மதங்களும் இல்லை. உலகைச் சிருஷ்டிக்க முடியாதவரால் அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது, அதேநேரத்தில் உலகைச் சிருஷ்டித்தவர் நிச்சயமாக அதை முடிவுக்குக் கொண்டுவர வல்லவராய் இருப்பார். ஆகையால், ஒருவரால் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல், மனுஷனை அவனுடைய மனதை வளர்த்துக் கொள்ள உதவ மட்டுமே முடிந்தால், அவர் நிச்சயமாக தேவனாக இருக்க மாட்டார், நிச்சயமாக மனுக்குலத்தின் கர்த்தராக இருக்க மாட்டார். அவரால் இவ்வளவு பெரிய கிரியையைச் செய்ய முடியாது. இதுபோன்ற கிரியையைச் செய்யக்கூடியவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார், இக்கிரியையைச் செய்ய முடியாத எல்லோருமே நிச்சயமாக எதிரிகளாக இருக்கின்றனரே தவிர, அவர்கள் தேவன் அல்ல. தீய மதங்கள் அனைத்தும் தேவனுடன் இணக்கமாக இல்லை. மேலும், அவை தேவனுடன் இணக்கமாக இல்லை என்பதனால், அவை தேவனுடைய எதிரிகளாக இருக்கின்றன. கிரியைகள் அனைத்தும் இந்த ஒரு மெய்தேவனாலேயே செய்யப்படுகின்றன, மேலும் முழு பிரபஞ்சமும் இந்த ஒரே தேவனாலேயே கட்டளையிடப்படுகிறது. அவருடைய கிரியை இஸ்ரவேலில் அல்லது சீனாவில் செய்யப்பட்டாலும், கிரியை ஆவியானவரால் அல்லது மாம்சத்தினால் செய்யப்பட்டாலும், எல்லாமே தேவனாலேயே செய்யப்படுகிறது, வேறு ஒருவராலும் செய்ய முடியாது. ஏனென்றால் அவரே முழு மனுக்குலத்தின் தேவனாக இருக்கிறார், அதனால் அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் சுதந்திரமாகவும், தடையின்றியும் கிரியை செய்கிறார். இதுவே எல்லா தரிசனங்களிலும் மிகவும் பெரியதாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்”). ஒரே ஒரு தேவன், ஒரே ஒரு சிருஷ்டிகர் தான் இருக்காருங்கறதயும் எல்லாத்தயும் சிருஷ்டிக்க, மனுக்குலத்தோட மொத்த விதிகளயும் ஆளுக செய்ய, பூமியில மனுகுலத்தோட வாழ்க்கைய வழிநடத்த, மனுஷன இரட்சிக்க, மனுஷன ஒரு அழகான இலக்குக்குள்ள வழிநடத்த, தேவன் ஒருவரால மட்டுந்தான் முடியும்னு நாம தேவனோட வார்த்தைகள்ல பாக்க முடியும். வெளிப்படுத்துதல்ல சொல்லப்படற மாதிரி, “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்(வெளிப்படுத்தல் 22:13). பொய்யான தேவர்களால எல்லாத்தயும் சிருஷ்டிக்க முடியாது, அவங்களால மனுகுலத்த இரட்சிக்கவும் முடியாது, ஒரு யுகத்த முடிவுக்குக் கொண்டு வரவும் முடியாது. மெய்யான தேவன் செய்ற கிரியைய ஒரு பொய்யான தேவனால ஒருபோதும் செய்ய முடியாது. ஒரு பொய்யான தேவனால சில அடையாளங்களயும் அற்புதங்களையும் காட்ட மட்டும்தான் முடியும், இல்ல ஜனங்களத் தவறா வழிநடத்த சீர்கெடுக்க மதங்களுக்கு எதிரா கருத்துக்களயும் மூடநம்பிக்கைகளயும் பரப்ப முடியும். அவங்க ஜனங்கள வெல்ல சில சின்ன நன்மைகளக் கொடுக்க முடியும், அதோட ஜனங்கள அவங்களுக்காக தூபங்காட்டி அவங்கள தேவனா ஆராதிக்க வைக்க முடியும். ஆனா பொய்யான தேவர்களால பாவங்கள மன்னிக்கவோ இல்ல ஜனங்களோட சீர்கேட்ட சுத்திகரிக்க சத்தியங்கள வெளிப்படுத்தவோ முடியாது. குறிப்பா அவங்களால மனுக்குலத்த சாத்தானோட வல்லமைகள்கிட்ட இருந்து இரட்சிக்க முடியாது. பொய்யான தேவர்கள் மெய்த்தேவனப் போல ஆள்மாறாட்டம் செய்யத் துணியறது அவங்க உச்சகட்டமா பொல்லாதவங்களாவும் வெட்கமில்லாதவங்களாவும் இருக்கறத காட்டுது. கடைசில அவங்க தேவனால விலங்கு போடப்பட்டு பாதாளக் குழியில வீசப்படுவாங்க, அவங்க தண்டிக்கப்படுவாங்க. தேவனுக்கு எதிராப் போற எல்லாருமே கடைசியில அவரால முழுவதுமா அழிக்கப்படுவாங்க.

அதனால, மெய்த்தேவன தேட, எல்லாத்தயும் படைச்ச எல்லாத்தயும் ஆளுகை செய்யற ஒருத்தர சத்தியத்த வெளிப்படுத்தி மனுக்குலத்த இரட்சிக்க கிரியை செய்யற ஒருத்தர நீங்கத் தேடணும். இதுதான் முக்கியம். இந்த ஒன்றான மெய்த்தேவன விசுவாசிச்சு, ஆராதிச்சு, அவர் வெளிப்படுத்திய சத்தியங்கள ஏத்துக்கிட்டு, சத்தியத்த உங்க ஜீவனா அடையறது மூலமா மட்டுந்தான் நீங்க பாவத்தில இருந்து விடுவிக்கப்பட்டு, தேவனோட இரட்சிப்ப அடைஞ்சு, அந்த அழகான சென்றடையும் இடத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். உண்மையான தேவன் யார்னு உங்களுக்குத் தெரியலைனா, நீங்க தேடி ஆராயணும். ஏதோ சில அதிசயங்கள நடத்தறதால இல்ல சில நோய்களக் குணப்படுத்தறதுனுல பொய்யான தேவர்கள நாம ஒன்றான மெய்த்தேவனா தப்பா புரிஞ்சுக்க முடியாது. அது ஒரு தடையா இருக்கும், ஏன்னா அவங்க எல்லாம் மெய்த்தேவன் கிடையாது. பொய்யான தேவன ஆராதிக்கிறது தேவன தூஷிக்கிறது, அது தேவனுக்கு எதிரானது அதேட மெய்த்தேவனுக்குத் துரோகம்பண்றதுக்கு சமம். தேவனோட மனநிலை எந்தவொரு மனுஷ அவமானத்தயும் பொறுத்துக்காது, அதனால ஒரு பொய்யான தேவன நம்பற எல்லாருமே தேவனால தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பழைய உலகம் தொடர்ந்து இருக்கும் வரை, நான் அதன் தேசங்களின் மீது என் கோபத்தை வெளிப்படுத்துவேன், பிரபஞ்சம் முழுவதும் எனது நிர்வாக ஆணைகளை வெளிப்படையாக பிரகடனம் பண்ணுவேன், அவற்றை மீறுபவர் எவராக இருந்தாலும் அவர் தண்டனை பெறுகிறாரா என்று பார்ப்பேன்: நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனிதக் காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றைப் புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்தச் சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?

கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இதயெல்லாம் இண்டர்நெட்டுல போட்டு அது உலகம்...

மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

விதின்னு சொன்னாலே, பணம், அந்தஸ்து இருந்தா, வெற்றி அடஞ்சா நல்ல விதின்னும், ஏழைங்க, தாழ்ந்தவங்க, பேரழிவால கஷ்டத்தால பாதிக்கபட்டவங்க எல்லாரும்...

மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்?

நாம ஏற்கெனவே சில தடவ கடைசி நாட்கள்ல செய்யப்படும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியயப் பத்திப் பேசி இருக்கோம். நாம இன்னைக்கு யார் இந்த...

சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி முழுசா 30 ஆண்டுகள் ஆயிருச்சி 1991 இல் கிரியை செய்யவும், சத்தியத்த...

Leave a Reply