தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

ஏப்ரல் 24, 2021

By Zhang Lan, South Korea

தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு கொண்டு வந்தார், மேலும் மனிதகுலம் அனைத்தையும்@கிழக்கிற்கு கொண்டு வந்தார். அவர்கள் ஒளியுடன் மீண்டும்@ஒன்றிணைக்கப்படவும், இணைந்திருக்கவும் அவர்கள் அனைவரையும் வெளிச்சத்திற்கு@கொண்டு வந்தார். எனவே, அவர்கள் இனி அதைத் தேட வேண்டியதில்லை. தேடும் அனைவரையும் மீண்டும் ஒளியைக் காணவும், இஸ்ரவேலில் அவருக்கு இருந்த@மகிமையைக் காணவும் அனுமதிப்பார்; வெகு காலத்திற்கு முன்பே ஒரு வெள்ளை மேகத்தின்@மீது மனிதகுலத்தின் மத்தியில் வந்துள்ளார் என்பதை அவர்கள் காண தேவன் அனுமதிப்பார். எண்ணற்ற வெள்ளை மேகங்களையும், அவற்றின் ஏராளமான கொத்துக்களில்@பழங்களையும் பார்க்க அவர்களை அனுமதிப்பார், மேலும், அதற்கும் மேலாக, அவர்களை இஸ்ரவேலின்@தேவனாகிய யேகோவாவைப் பார்க்க அனுமதிப்பார். யூதர்களின் எஜமானரையும்,@எதிர்பார்க்கப்படுகிற மேசியாவையும், யுகங்கள் முழுவதும் ராஜாக்களால்@துன்புறுத்தப்பட்ட அவரது முழு தோற்றத்தையும் அவர்கள் காண அனுமதிப்பார். முழு பிரபஞ்சத்திலும் தேவன் கிரியை செய்வார்@மேலும் மாபெரும் கிரியையைச் செய்வார், கடைசி நாட்களில் அவரது மகிமை அனைத்தையும் மற்றும் அவரது கிரியைகள் அனைத்தையும்@மனிதனுக்கு வெளிப்படுத்துவார். அவருக்காக பல வருடங்கள்@காத்திருந்தவர்களுக்கும், ஒரு வெள்ளை மேகத்தின் மீது வர@வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும், மீண்டும் ஒரு முறை@தோன்ற வேண்டும் என்று ஏங்கிய இஸ்ரவேலுக்கும், தேவனைத் துன்புறுத்திய@எல்லா மனிதர்களுக்கும் அவரது மகிமையான முகத்தை முழுமையாக காண்பிப்பார். எனவே அவர் நீண்ட காலத்திற்கு முன்பே@அவரது மகிமையை எடுத்துக்கொண்டு விட்டார் மேலும் அதனை கிழக்கிற்குக் கொண்டு வந்தார்,@அதனால் அது யூதேயாவில் இல்லை என்றும் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்.@ஏனென்றால் கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன!(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்).

இந்த வீடியோ என்னை மெய்மறக்க வச்சிருச்சு. தேவன் கடைசிக் காலத்தில தன்னோட மகிமைய இஸ்ரவேல்ல இருந்து கிழக்கிற்கு கொண்டுவர்றார். தேவனை எதிர்க்கிற நாடுகள்லேயே அதிகமா எதிர்க்கிற சீனாவுல அவர் தோன்றியிருக்கார், பிரபஞ்சம் முழுக்க இருக்கிற எல்லா மக்களையும் ஜெயங்கொண்டு இரட்சிக்க தன்னோட கிரியைய செய்து, சத்தியத்த வெளிப்படுத்துறார். இதுதான் தேவனோட சர்வவல்லமையும் ஞானமுமாகும். சீனாவுல தேவனோட தோன்றுதலும் கிரியையும் ஆழமான அர்த்தம் கொண்டதா இருக்கு. கடந்த காலத்தில, தேவனோட கிரியை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. என்னோட கருத்துக்களின் அடிப்படையில, கர்த்தர் திரும்பி வரும்போது இஸ்ரவேல்ல தோன்றுவார்னு நினைச்சேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளைப் படிச்ச பிறகுதான் சீனாவுல அவர் தோன்றி கிரியை செய்யிற இரகசியத்த நான் புரிஞ்சுகிட்டேன்.

கர்த்தர்மேல விசுவாசம் வந்ததுக்கப்புறம், நான் ஒரு உற்சாகமான தேடுபவனா இருந்தேன். எனக்கு நேரம் கிடைச்சப்ப எல்லாம் நான் திருச்சபையில தன்னார்வத் தொண்டு செய்வேன், மேலும் ஒவ்வொரு மாசமும் தவறாம தசமபாகமும் கொடுத்தேன். 2011 ஏப்ரல்ல, நான் வேலைக்காக தென் கொரியா வந்தேன், நான் வேலையில எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில கலந்துக்குவேன். ஆனா போதகரோட பிரசங்கங்க மட்டும் எப்பவுமே அதே பழைய பிரச்சங்கமாவே இருந்தன. சபையில இருக்கிறவங்க தலையாட்டுவாங்க இல்லைனா அவங்களுக்குளேயே அரட்டை அடிச்சு முடிச்சுப்பாங்க. அங்க எந்தவிதமான இன்பமான சூழலும் இருக்காது. காலப்போக்கில, நான் ஆராதனைகளுக்கு போறத நிறுத்தினேன். ஆனா நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால, நான் அதுல கலந்துக்காம இருக்கிறது எனக்கு சரியாபடல. அதனால நான் தொடர்ந்து போனும்னு நானே என்னை கட்டாயப்படுத்தினேன். அப்புறம் தற்செயலாக ஒரு நாள், என்னோட பழைய திருச்சபை தோழி சகோதரி ஜாவோவை சந்திச்சேன். அவங்க என்னை மீண்டும் தன்னோட வீட்டுக்கு கூப்பிட்டாங்க, அவங்களோட தோழி சகோதரி லியும் அவங்ககூட வந்தாங்க. சகோதரி லீய நான் அப்பதான் முதல்தடவ சந்திக்கிறேன் ஆனா நல்லா பழகினோம். நாங்க எங்க சூழ்நிலைகளைப் பத்தியும் திருச்சபையில பாழடஞ்சு இருக்கிற விஷயங்கள பத்தியும் பேசினோம். தேவன் புது கிரியை செய்யிறதனால எப்படி திருச்சபை பாழடஞ்சுது, பரிசுத்த ஆவியானவரோட கிரியை எப்படி மாறுச்சு, அப்புறம் தேவனை வரவேற்க, நாம புத்தியுள்ள கன்னிகைகளா மாறனும், தேவனோட தோற்றத்த பார்க்கவும், அவரோட குரல கேட்கவும் ஏங்கணும்னு சொல்லி, சகோதரி லீ எங்களோட ஐக்கியமானாங்க. அவங்க சொன்னது ரொம்ப அறிவொளி தர்றதா இருந்துச்சு. அப்புறம், சகோதரி லி சொன்னாங்க: “கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பிவந்துட்டார், அவர் மாம்சத்தில் சர்வவல்லமையுள்ள தேவனா மனுவுருவெடுத்திருக்கார், மேலும், அவர் சீனாவில தன்னோட கிரியையை செய்றதுக்கும், சத்தியத்த வெளிப்படுத்தறதுக்கும், நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு கிரியைகளைச் செய்யவும் அவர் தோன்றியிருக்கார். சர்வவல்லமையுள்ள தேவன் ராஜ்யத்தின் காலத்தைத் தொடங்கி கிருபையின் காலத்தை முடிச்சுட்டார். கடைசிக் காலத்தில அவரோட கிரியைய ஏத்துக்கிறவங்க எல்லோரும் தேவனோட சிங்காசனத்திற்கு முன்னாடி கொண்டுவரப்படுவாங்க; அவங்க தேவனோட வார்த்தையைப் பெற்று, ஆட்டுக்குட்டியானவரோட திருமண விருந்தில கலந்துக்கறாங்க.” சகோதரி லீ சொன்னதைக் கேட்டு நான் ரொம்ப அதிர்ச்சியடைஞ்சேன், அவங்கள நம்புறதுல சிரமப்பட்டேன்: கர்த்தர் திரும்பிவந்துட்டாரா? அவர் சீனாவுக்கு வந்திருக்காரா? என்னோட கருத்துக்களின் அடிப்படையில, கர்த்தர் திரும்பி வரும்போது இஸ்ரவேல்ல தோன்றுவார்னு நினைச்சேன். மேலும் அது வேதாகமத்தில இப்படி கூறப்பட்டிருக்கு: “அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்(சகரியா 14:4). கடைசிக் காலத்தில, கர்த்தர் இஸ்ரவேல்ல இருக்கற ஒலிவ மலைக்குத்தான் வரணும். அவர் சீனாவுல எப்படி இருக்க முடியும்? சகோதரி லி கிட்ட என்னோட குழப்பத்த பத்தி கேட்டேன்.

அவங்க சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க: “கர்த்தருடைய வருகையின் தீர்க்கதரிசனங்கள் எல்லாமே இரகசியமானவை, அதுங்களோட அர்த்தத்த நம்மால புரிஞ்சுக்க முடியாது. ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறுனதுக்கு அப்புறமும், தேவன் தன்னோட கிரியைய எப்படி செய்திருக்கிறார்னும் பார்த்ததுக்கு அப்புறமும் தான் அந்த தீர்க்கதரிசனத்தோட அர்த்தம் என்னங்கிறத நாம புரிஞ்சுக்க முடியும். தீர்க்கதரிசனங்களோட நேரடி அர்த்தத்தைப் பயன்படுத்தி தேவனோட கிரியைய நாம வரையறுக்கக் கூடாது, ஏன்னா அப்படி செய்யறதால நாம தேவனை எதிர்க்க வாய்ப்பிருக்கு. பரிசேயரை உதாரணமா எடுத்துக்கங்க. மேசியாவோட வருகையின் தீர்க்கதரிசனத்தோட நேரடி அர்த்தத்தை அவங்க பிடிச்சுக்கிட்டு, கர்த்தர் வந்தபோது அவர் மேசியானுதான் அழைக்கப்படணும், மேசியானு பெயரிடப்படாத யாரும் கிறிஸ்துவா இருக்க முடியாதுனு நினைச்சாங்க. இதன் விளைவா, அவங்க கர்த்தராகிய இயேசுவின் கிரியைய எதிர்த்து, கண்டனம் செஞ்சு, தேவனோட இரட்சிப்பை இழந்தாங்க. வேதாகமத்தோட நேரடி விளக்கத்தின் அடிப்படையில தேவனின் கிரியைய நாம வரையறுத்து, தேவனோட தோற்றம் மற்றும் கிரியையின் சத்தியங்கள ஆராயலைனா, பரிசேயர்களைப் போலவே நாமும் தவறு செய்வோம். கடைசிக் காலத்தில, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யறார் சர்வவல்லமையுள்ள தேவன், மேலும் அவர் கிழக்கில தோன்றும் ஒரு பிரகாசமான ஒளி போல, மனுக்குலத்தை தூய்மைப்படுத்தற மற்றும் இரட்சிக்கிற எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்துறார். வெறும் 20 ஆண்டுகள்ல, கடைசிக் காலத்தில சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியை சீனா முழுவதும் பரவியிருக்கு, இப்போ உலகெங்கிலும் இருக்கிற பிற நாடுகளைக் கூட அடைஞ்சுருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்பான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை, 20 க்கும் மேற்பட்ட மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுக்க இருக்கிறவங்க தேடவும் ஆராயவும் ஆன்லைன்ல வெளியிடப்பட்டிருக்கு. கடைசிக் காலத்தில சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையானது கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனத்த முழுமையா நிறைவேற்றியிருக்கு: ‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). மற்றும் மல்கியா புத்தகம் 1:11 ‘சூரியன் உதிக்கின்ற திசை முதல், அது மறைகின்ற திசை வரைக்கும், எனது நாமம் புறஜாதிகளுக்குள்ளே மகத்துவமானதாயிருக்கும் என்று…, சேனைகளின் யேகோவா சொன்னார்.’” இதைக் கேட்டதும், எனக்கு உடனடியா புரிஞ்சுது: தேவன் இஸ்ரவேல்ல திரும்பிவராம, சீனாவுல திரும்பிவந்திருக்கார், மேலும் இதை வேதாகமம் நீண்ட காலத்திற்கு முன்னாடியே தீர்க்கதரிசனம் சொல்லிருக்கு.

அடுத்து, சகோதரி லி சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பகுதியை எனக்கு வாசிச்சாங்க: “உண்மையில், தேவன் எல்லாவற்றிற்கும் எஜமானர். அவரே சகல சிருஷ்டிகளின் தேவன். அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு மட்டுமோ, யூதர்களுக்கு மட்டுமோ தேவனாக இல்லை; அவர் சகல சிருஷ்டியின் தேவனாக இருக்கிறார். முந்தைய இரண்டு கட்டங்களில் அவருடைய கிரியை இஸ்ரவேலில் நடந்தது, இது ஜனங்களிடையே சில கருத்துக்களை உருவாக்கியது. யேகோவா இஸ்ரவேலில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், இயேசு தாமே யூதேயாவில் தம்முடைய கிரியையைச் செய்தார் என்றும், மேலும், அவர் கிரியைக்காக மாம்சமனார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்—எதுவாக இருந்தாலும், இந்த கிரியை இஸ்ரவேலுக்கு அப்பால் செல்லவில்லை. தேவன் எகிப்தியர்களிடமோ அல்லது இந்தியர்களிடமோ கிரியையை நடப்பிக்கவில்லை; அவர் இஸ்ரவேலரிடத்தில் மட்டுமே கிரியை செய்தார். இவ்வாறு ஜனங்கள் பல்வேறு கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், மேலும் தேவனின் கிரியையை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் சித்தரிக்கிறார்கள். தேவன் கிரியை செய்யும் போது, தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடமும், இஸ்ரவேலிலும் அவர் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இஸ்ரவேலரைத் தவிர, தேவன் வேறு யாரிடத்திலும் கிரியை செய்வதில்லை, அவருடைய கிரியைக்கு இதைவிட பெரிய வாய்ப்பும் இல்லை என்கின்றனர். தேவன் மனுஷரூபமானதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள், அவரை இஸ்ரவேலின் எல்லைகளுக்கு அப்பால் செல்ல அனுமதிப்பதில்லை. இவை அனைத்தும் மனித கருத்துக்கள் இல்லையா? தேவன் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், சகல சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார், அதனால் அவர் தனது கிரியையை இஸ்ரவேலுக்கு மட்டும் என்று எப்படி கட்டுப்படுத்த முடியும்? அப்படியானால், சகல சிருஷ்டிகளையும் அவர் சிருஷ்டித்ததன் நோக்கம் என்ன? அவர் உலகம் முழுவதையும் சிருஷ்டித்தார், இஸ்ரவேலில் மட்டுமல்ல, அவர் தனது ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தை பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் நிறைவேற்றியுள்ளார். … தேவன் மனித கருத்துக்களின்படி செயல்பட்டால், அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், இதனால் அவர் தனது கிரியையை புறஜாதியின தேசங்களுக்கு இடையே விரிவுபடுத்த இயலாது, அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருப்பார், மேலும் சகல சிருஷ்டிகளின் தேவனாக இருக்க மாட்டார். யேகோவாவின் பெயர் புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் பிரசித்திப்படுத்தப்படும், அது புறஜாதியின தேசங்களுக்கும் பரப்பப்படும் என்று தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டன. இந்த தீர்க்கதரிசனம் ஏன் உரைக்கப்பட்டது? தேவன் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருந்ததால், அவர் இஸ்ரவேலில் மட்டுமே கிரியைப் புரிவார். மேலும், அவர் இந்த கிரியையைப் பரப்புவதில்லை மற்றும் அத்தகைய தீர்க்கதரிசனத்தை அவர் உரைக்கமாட்டார். அவர் இந்த தீர்க்கதரிசனத்தை உரைத்தது முதற்கொண்டே, அவர் நிச்சயமாக தனது கிரியையை புறஜாதியினர் நடுவிலும், ஒவ்வொரு தேசத்துக்கு நடுவிலும் மற்றும் அனைத்து தேசங்களிலிலும் பரப்புவார். அவர் இதைச் சொன்னது முதல், அவர் அதைச் செய்ய வேண்டும்; இதுவே அவருடைய திட்டம், ஏனென்றால் அவர் வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த கர்த்தராக இருக்கிறார், மேலும் அவரே சகல சிருஷ்டிகளுக்கும் தேவன். அவர் இஸ்ரவேலர்கள் நடுவிலோ அல்லது யூதேயா முழுவதிலுமோ செய்கிற கிரியையைப் பொருட்படுத்தாமல், அவர் கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், மற்றும் சகல மனிதகுலத்தின் கிரியையாகவும் இருக்கிறது. அவரது கிரியை இன்று சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில்—ஒரு புறஜாதியின தேசத்தில்—சகல மனித குலத்தின் கிரியையாக இன்னும் இருக்கிறது. பூமியில் அவரது கிரியைக்கு இஸ்ரவேல் அடித்தளமாக இருக்கக்கூடும்; அதேபோல், புறஜாதியின தேசங்களுக்கு நடுவில் சீனாவும் அவருடைய கிரியைக்கான அடித்தளமாக இருக்க முடியும். ‘புறஜாதி தேசங்களுக்கு நடுவில் யேகோவாவின் நாமம் பிரசித்திப்படுத்தப்படும்’ என்ற தீர்க்கதரிசனத்தை அவர் இப்போது நிறைவேற்றவில்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்”).

அப்புறம் சகோதரி லி சொன்னாங்க: “தேவன்தான் எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் கர்த்தர், அவர் முழு பிரபஞ்சத்தையும் ஆண்டு எல்லா மனிதர்களின் தலைவிதிக்கும் தலைமை தாங்குறார். தேவன், இஸ்ரவேலரோட தேவன் மட்டுமல்ல, ஆனா அதுக்கும் மேல அவர் எல்லா படைப்புகளுக்கும் தேவன். எந்தவொரு தேசத்துலயும் எந்த மக்களிடையேயும் தன்னோட கிரியையச் செய்ய தேவனுக்கு உரிமை இருக்கு. ஆனா அவர் எந்த நாட்டுல தோன்றி கிரியை செஞ்சாலும், அவரோட கிரியையானது எல்லா மனிதருக்காவும், அவங்களோட வளர்ச்சியில அவங்கள வழிநடத்துறதுக்காகவும் செய்யப்படுது. உதாரணமா, நியாயப்பிரமாண காலத்தில மோசேயை இஸ்ரவேல்ல தன்னோட நியாயப்பிரமாணத்தை அறிவிக்கப் பயன்படுத்தி நியாயப்பிரமாண காலத்த தொடங்கினார் யேகோவா தேவன். அப்புறம், எல்லா தேசங்களும் மக்களும் அவரோட பெயரை பெருசா மதிக்கணும்னு இந்த நிலத்தை ஒரு மையமா பயன்படுத்தி, படிப்படியா தன்னோட கிரியைய மத்த நாடுகளுக்கும் விரிவுபடுத்தினார். கிருபையின் காலத்தில, கர்த்தராகிய இயேசு யூதேயாவுல மீட்பின் கிரியையச் செய்தார். ஆனா கர்த்தராகிய இயேசு யூதர்களை மட்டும் மீட்டெடுக்கல, மனுக்குலம் அனைத்தையும் மீட்டெடுத்தார். இப்போ இரண்டாயிரம் ஆண்டுக்கு அப்புறம், கர்த்தருடைய சுவிசேஷமானது உலகத்தோட ஒவ்வொரு மூலையிலும் பரவியிருக்கு. கடைசிக் காலத்தில, சர்வவல்லமையுள்ள தேவன் தன்னோட கிரியைய பிரபஞ்சம் முழுவதும் விரிவாக்கறதுக்கு முன்னாடி சீனாவை தன்னோட கிரியைக்கான சோதனை தளமாக பயன்படுத்துறார். இப்போ சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் கிரியையும் கிழக்கிலிருந்து பிரகாசிக்கும் ஒரு பிரகாசமான ஒளி போன்றது, மேலும் அது மேற்குல இருக்கிற எல்லா நாடுகளையும் சாட்சியங்களுடன் ஒளிரச் செய்யுது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்ல ஏராளமான மக்கள் தேவனோட குரலைக் கேட்டிருக்கிறாங்க, அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் ஏத்துக்க தேவனோட சிங்காசனத்துக்கு முன்னாடி வந்திருக்கிறாங்க. எந்த காலமா இருந்தாலும் மக்களுக்கு இடையில, இல்லைனா ஒரு நாட்டுல தோன்றி கிரியை செய்யனும்னு தேவன் தீர்மானிக்கும்போது, அவர் எப்போதும் முதல்ல கிரியை செய்ய ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார், அப்புறம் இந்த இடத்தை ஒரு உதாரணமா பயன்படுத்தி, மனிதனை இரட்சிக்கும் அவரோட கிரியைய நிறைவேத்த படிப்படியா அவரோட கிரியைய மத்த இடங்களுக்கும் விரிவுபடுத்துறத நம்மால பார்க்க முடியுது. தேவனோட கிரியையின் பின்னணியில இருக்கிற கொள்கை இதுதான். நம்மோட கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின்படி பார்த்தா, தேவன் இஸ்ரவேலில் நியாயப்பிரமாணத்தின் காலத்திலும் கிருபையின் காலத்திலும் கிரியை செஞ்சதால, தேவன் இஸ்ரவேலின் தேவனாக மட்டுமே இருக்கணும்னும், சுவிசேஷமானது இஸ்ரவேலிலிருந்து மட்டும்தான் வெளிவர முடியும்னும், இஸ்ரவேல் மக்கள் மட்டும்தான் தேவனால் உண்மையா தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்னும், அவரோட ஆசீர்வாதங்களுக்கு தகுதியானவங்கனும், தேவன் புறஜாதி தேசங்கள்ல தோன்றி கிரியை செய்ய மாட்டார்னும் நாம நினைக்கிறது, நாம தேவனை வரம்புக்கு உட்டுபடுத்துவதா இல்லையா? தேவன் சொன்னார்: ‘எனது நாமம் புறஜாதிகளுக்குள்ளே மகத்துவமானதாயிருக்கும் என்று,’ அப்ப இது எப்படி நிறைவேத்தப்பட்டு முடிச்சுவைக்கப்படும்? மக்களோட கருத்துக்கள நொறுக்கறக்கும், விதிகளின்படி செயல்படாம தன்னோட சொந்த திட்டத்தின் படி செயல்படுறத காட்டுறதுக்கும் தேவன் கடைசிக் காலத்தில மாம்சமாகியிருக்கார், நாத்திகத்தால ஆளப்படுற சீனாவுல தன்னோட கிரியையச் செய்றார். அவர் இஸ்ரவேல் மக்களை மட்டுமல்ல, புறஜாதியாரையும் இரட்சிக்கிறார்னும் அவர் நமக்குக் காட்டுறார். தேவன், ஒரேயொரு நாட்டின் அல்லது மக்களின் தேவன் இல்ல, அவர் எல்லா மனிதர்களுக்கும் தேவன்தான். தேவன் எங்க தோன்றி கிரியை செய்றாரோ, அது எப்போதும் முக்கியமானதுதான், மனிதனை இரட்சிப்பதற்கான நோக்கத்த சிறப்பா செய்யும் இடத்தைத்தான் அவர் எப்போதும் தேர்ந்தெடுப்பார்.”

சகோதரி லியின் பேச்சு என்னை வெட்கப்பட வச்சுது. நியாயப்பிரமாணத்தின் காலத்திலும், கிருபையின் காலத்திலும் தேவன் தன்னோட கிரியையச் செய்ததால, தேவன் இஸ்ரவேல்ல மட்டுமே தோன்றுவார்னு நான் நினைச்சேன். கடைசிக் காலத்தில தேவன் திரும்பவும் இஸ்ரவேல்ல தன்னோட கிரியையச் செய்திருந்தா, அவரை இஸ்ரவேலர்களோட தேவனா நான் வரையறுத்திருப்பேன், அது தேவனை எல்லா மனிதர்களுக்குமான ஆட்சியாளர் அப்படிங்கிறத மறுப்பதா இருந்திருக்கும்! அது தேவனை எதிர்க்குது! தேவன் தோன்றி கிரியை செய்யுற இடமானது அவருடைய திட்டத்தையும் அவருடைய ஞானத்தையும் எப்பவுமே பிரதிபலிக்குது. தேவனோட கிரியை பத்தி கருத்துத் தெரிவிக்கவும் வரையறுக்கவும் நமக்கு தகுதியில்ல. ஆனா எனக்கு மனசுல இன்னும் சில விஷயங்க இருக்கு. சீனா ஒரு நாத்திக அரசாங்கத்தால நடத்தப்படுற நாடு. தேவனை மறுத்து எதிர்க்கும் ரொம்ப மோசமான நாடு இது. தேவன் இஸ்ரவேல்ல தோன்றி கிரியை செய்ய விரும்பலைனா, கிறிஸ்துவம் பிரதான மதமாக இருக்கும் அமெரிக்கா இல்லைனா இங்கிலாந்து போன்ற நாடுகள்ல அவர் ஏன் கிரியை செய்யல? எல்லா இடங்களையூம் விட்டுட்டு தன்னோட கிரியையச் செய்ய அவர் ஏன் சீனாவை தேர்வு செய்றார்? இந்த கேள்விகளை நான் சகோதரி லிகிட்ட கேட்டேன்.

சகோதரி லி இப்படி பதில் சொன்னாங்க: “தேவன் தன்னோட கிரியையின் தேவைகளை அடிப்படையா வச்சுத்தான் எந்த நாட்டிலும் இடத்திலும் தன்னோட கிரியையச் செய்யணும்னு தேர்வு செய்றார். அவருடைய தேர்வுக்கு பின்னால எப்பவும் ஒரு சிறப்பு அர்த்தம் இருக்கும். சர்வவல்லமையுள்ள தேவன் இதைப் பத்தி தெளிவா பேசியிருக்கிறார்.” சகோதரி லி சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பகுதியை எனக்கு வாசிச்சார், “உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியைகள் எல்லா இடங்களிலும் பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டன, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்த்தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள் தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். … சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்த சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாக கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். உண்மையில், கிரியை உங்களிடையே வெற்றிகரமாக முடிந்ததும், இது பிரபஞ்சம் முழுவதும் ஜெயம் பெற்றதற்குச் சமமாக இருக்கும். நான் ஏன் உங்களை மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் செயல்படுத்துகிறேன் என்பதன் முக்கியத்துவம் இதுதான். கலகத்தன்மை, எதிர்ப்பு, தூய்மையற்ற தன்மை, அநீதி ஆகிய இவை அனைத்தும் இந்த ஜனங்களிடையே காணப்படுகின்றன, அவர்களில் மனுஷகுலத்தின் கலகத்தன்மை முழுவதும் குறித்துக்காட்டுகின்றன. அவர்களுக்குள் ஏதோவொன்று இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் ஜெயங்கொள்ளுதலின் மாதிரியாக கருதப்படுகின்றனர், மேலும் அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுக்கு மாதிரிகளாகவும், விளக்கமாதிரிகளாகவும் மாறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)”).

அப்புறம் சகோதரி லி சொன்னாங்க: “தேவன் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னோட கிரியையின் தேவைகளை அடிப்படையா வச்சுத்தான் இடத்தையும் இலக்கையும் தேர்வு செய்றார். இது எப்போதும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தோட, எப்போதும் மனுக்குலத்தோட இரட்சிப்புக்காகவே செய்யப்படுது. உதாரணமா, இஸ்ரவேலர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பதால தேவன் இஸ்ரவேல்ல கிரியையோட முதல் இரண்டு கட்ட கிரியையச் செய்தார். அவங்க தேவனை விசுவாசிச்சு வணங்கினாங்க, அவங்க இருதயத்தில தேவனுக்குப் பயந்தாங்க, எல்லா மனிதர்களை விட குறைந்தளவு சீர்கெட்டவங்களா இருந்தாங்க. இதனால தேவ வழிபாட்டாளர்களிடையே கிரியை செய்றது மூலம் ஒரு முன்மாதிரியான குழுவை உருவாக்குவது தேவனுக்கு ரொம்ப எளிதானது. இந்த வழியில, தேவனோட கிரியை விரைவாவும் சுமுகமாவும் பரவக்கூடும், இதனால மனிதர்கள் எல்லோரும் தேவனோட இருப்பையும் கிரியையையும் பத்தி தெரிஞ்சுக்க முடியும், மேலும் அதிகமான மக்கள் தேவனுக்கு முன்னாடி வந்து அவரோட இரட்சிப்பையும் பெற முடியும். தேவனோட கிரியையின் முதல் இரண்டு கட்டங்க இஸ்ரவேல்ல செய்யுறது உண்மையிலேயே அடையாளமா இருந்துச்சு. தேவன் தன்னோட கிரியையின் தேவைகளுக்கு ஏற்ப இஸ்ரவேலை முழுமையா தேர்ந்தெடுத்தார். கடைசிக் காலத்தில, நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்புக்கான கிரியைகள தேவன் செய்யுறார். மனுக்குலத்தோட சீர்கேட்டையும் அநீதியையும் நியாயந்தீர்க்கவும் அம்பலப்படுத்தவும் அவர் சத்தியத்த வெளிப்படுத்தி, அவரோட நீதியுள்ள, கோபமான மற்றும் இடறலடையாத மனநிலையை எல்லா மனிதருக்கும் காட்டுறார். அதனால அவர் ரொம்ப சீர்கெட்டுப்போன, தேவனை எதிர்க்கிற மக்களை ஒரு உதாரணமாக தேர்ந்தெடுக்கணும். அப்படி செய்யுறதுனால மட்டுமே தேவனோட கிரியையால சிறந்த முடிவை அடைய முடியும். எல்லோருக்கும் தெரிஞ்சமாதிரி, எல்லா மனிதர்கள விடவும், சீனர்கள் தான் ரொம்ப கீழானவங்க, சாத்தானால ரொம்ப சீர்கெட்டுப்போனவங்க. அவங்கதான் எல்லா மனிதர்கள விடவும் ரொம்ப அசுத்தமான, தாழ்மையான, தேவனை மறுக்கற, தேவனை எதிர்க்கற இனமா இருக்காங்க. அவங்கதான் சீர்கெட்டுப்போன மனிதர்கள் எல்லோருக்கும் முன்னோடி. சீனாவில் நியாயத்தீர்ப்புக்கான கிரியையச் செய்றதுனாலயும், சீன மக்களோட சீர்கெட்ட மனநிலையை குறிவைக்கறதுனாலயும், தேவன் மனுக்குலத்த ரொம்ப முழுமையாவும் கூர்மையாவும் வெளிப்படுத்துறார், அவர் வெளிப்படுத்தும் சத்தியம், அவரோ பரிசுத்தமான மற்றும் நீதியான மனநிலையை வெளிப்படுத்த மிகவும் முழுமையானதாவும், மிகவும் திறனுள்ளதாவும் இருக்கு. மொத்த மனுக்குலத்தையும் ஜெயங்கொள்றதுக்கும் இரட்சிக்கிறதுக்கும் சீனாவோட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவரோட பரிசுத்தமான மற்றும் நீதியான மனநிலையை பார்க்க அனுமதிக்கிறதுக்கும் தேவன், சீனாவோட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடனான தன்னோட கிரியையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்த பயன்படுத்துறார், இதன்மூலம் அவங்க எல்லோரும் தேவனைப் புகழ அவர் முன்னாடி வர்றாங்க. இதுதான் தேவனோட கிரியையின் ஞானம். ரொம்ப சீர்கெட்டவங்களை தேவனால பரிபூரணமாக்க முடிஞ்சா, மீதமிருக்கிற மனுக்குலத்தை பரிபூரணமாக்குவது சாத்தியம்தான், சாத்தானும் முழுமையா தோற்கடிக்கப்படுவான். சீனாவுல கிரியை செய்யுறதால, தேவன் மிகச் சிறந்த சாட்சியையும் மிகப் பெரிய மகிமையையும் பெறுவார். இஸ்ரவேல் மக்கள், அல்லது அமெரிக்கா அல்லது இங்கிலாந்து மாதிரி பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடுகள் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தின் பிரதான எடுத்துக்காட்டுகள் இல்லை என்பதால, தேவன் அவர்கள் மேல கிரியை செய்து அவங்கள பரிபூரணமாக்குவது எல்லா மனித இனத்தையும் ஜெயகொண்டு இரட்சிக்கிறதுக்கான இறுதி இலக்கை அடைய முடியாது. எனவே தேவன் நியாயத்தீர்ப்புக்கான கிரியையோட தேவைகளுக்கு ஏற்ப சீனர்களோட இணைஞ்சு கிரியை செய்யுறது தான் ரொம்ப பிரதிநிதித்துவம் வாய்ந்ததாவும் அர்த்தமுள்ளதாவும் இருக்கு. தேவனோட கிரியையின் இலக்கு மற்றும் இடத்தில இருந்து மற்றும் அதோட ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கிற அதோட இறுதி விளைவுல இருந்து, தேவனோட கிரியையானது உண்மையிலேயே ஞானமானதாவும் அற்புதமானதாவும் இருப்பத நம்மால பார்க்க முடியும்!”

இதைக் கேட்டு நான் உற்சாகமா சொன்னேன், “ஆமா, இஸ்ரவேல் நாடு தேவனை வணங்குற ஒரு நாடு, அங்க இருக்கிற மக்கள்தான் மனிதர்களிடையே ரொம்ப குறைவா சீர்கெட்டுப்போனவங்க. கர்த்தர் இஸ்ரவேல்ல கிரியை செய்ய திரும்பிவந்தா, தேவனோட ஜெயங்கொள்றதுக்கான கிரியை ஒரு நல்ல பலனை அடையாது. எல்லா நாடுகளை விடவும் ரொம்ப பின்தங்கிய நாடாவும் தேவனை எதிர்க்கும் நாடாவும் இருக்கிறது சீனா, அதனால சீனர்களை ஜெயிக்கறதன் மூலம், அவரோட ஜெயிக்கிற கிரியை ரொம்ப பெரிய பலனை அடைவது மட்டுமல்லாம, அவர் தன்னோட சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துறார். கடைசிக் காலத்தில தேவன் சீனாவுல கிரியை செய்யுறது உண்மையிலேயே எவ்வளவு முக்கியமானதுங்கிறதை நான் இப்ப பார்க்கிறேன்! தேவனோட கிரியை பத்தி எனக்குத் தெரியல ஆனா என்னோட சொந்த கருத்துகளையும் கற்பனைகளையும் பயன்படுத்தி தேவனோட கிரியைய வரையறுத்தேன்—நான் எவ்வளவு திமிர்பிடிச்சவனா இருந்திருக்கேன்!”

சகோதரி லி தொடர்ந்தாங்க: “தேவன் தன்னோட கிரியைய எப்படி செய்தாலும் எங்கு செய்தாலும், தேடுறதுக்கு எப்பவும் இரகசியமும் சத்தியமும் இருக்கு. கர்த்தருடைய வருகையை நாம எப்படி வரவேற்கணும் அப்படிங்கிறத பொறுத்தவரையில, கர்த்தராகிய இயேசு நம்மகிட்ட இப்படி சொல்லியிருக்கார்: ‘நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது(யோவான் 10:27). ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). அதனால, கர்த்தரோட வருகையை வரவேற்கறதுலயும், அவரோட தோன்றுதலைத் தேடுறதுலயும், சத்தியதோட வெளிப்பாடு இருக்குதான்னும் தேவனோட குரல் இருக்குதான்னும் பார்க்கிறது தான் ரொம்ப முக்கியமானது. சத்தியம் எங்கு வெளிப்படுத்தப்பட்டாலும், அங்கயும் தேவனோட குரல் இருக்கும், அதோட அவரோட தோன்றுதலும் கிரியையும் இருக்கும். இது முற்றிலும் உண்மை. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றது போல, ‘எது ஒன்றை கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தன்னை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய தன்மை ஒருபோதும் மாறாது. தேவனின் மனநிலை அவருடைய கால்தடங்கள் எங்கு இருந்தாலும் மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் கால்தடங்கள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழு பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும்தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் கால்தடங்களும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும்.’” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் என்னோட குழப்பத்தை முழுமையா தீர்த்துச்சு. தேவனோட தோன்றுதலையும் கிரியையையும் அந்த வார்த்தைங்க வெளிப்படுத்தி, என்னோட முந்தைய கருத்துக்களை தீர்க்கமாக மறுத்துச்சுங்க. பல ஆண்டுகளா கர்த்தருடைய வருகையை வரவேற்க நான் ஏங்கியிருக்கேன், ஆனா நான் என்னோட கற்பனையாலயும் வேதாகமத்தோட நேரடி வார்த்தைகளாலயும் தேவனோட தோன்றுதலையும் கிரியையையும் வரையறுப்பதை ஒருபோதும் உணரலை. நான் எவ்வளவு அறியாமையோட, குருடனா இருந்திருக்கிறேன்! கூட்டம் முடிஞ்சதும், சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தின மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையோட பிரதியை சகோதரி லி கிட்ட கேட்க நான் முன்முயற்சி எடுத்தேன்.

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளைப் படிப்பதன் மூலம், அவருடைய வார்த்தைகள் வேதாகமத்தோட பல இரகசியங்கள எப்படி அவிழ்த்து விடுதுங்கிறத நான் கண்டேன், மனுக்குலத்தோட இரட்சிப்புக்கான தேவனோட ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம், வேதாகமத்தோட சத்தியம் மற்றும் உள்கதை, தேவனோட நாமங்களின் அர்த்தங்கள், மனுவுருவெடுத்ததுக்கான இரகசியங்கள், எல்லா வகையான மக்களின் பலன்களையும் இலக்கையும் தேவன் எப்படி அமைப்பார், இந்த யுகம் எப்படி முடிவுக்கு வரும், கிறிஸ்துவின் ராஜ்யம் இங்கே பூமியில் எப்படி உணரப்படும், இப்படி இன்னும் பலவற்றை நான் கண்டேன். தேவனைத் தவிர வேறு யாராலயும் இந்த மர்மங்களை அவிழ்க்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தும் வார்த்தைகள் அதிகாரம், வல்லமை மற்றும் மகத்துவத்தால நிறைஞ்சிருக்கு. அவை உண்மையிலேயே தேவனோட வார்த்தைகள் தான். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுனு நான் உறுதியா நம்புறேன். நான் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய தயக்கமில்லாம ஏத்துக்கிட்டேன், இப்போ ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகளைப் பின்பற்றுறேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ சாட்சி | வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா

பேரழிவுகளுக்கு முன்பதாக தங்களைப் பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீது திரும்ப வருவார் என்று கர்த்தரை...

கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 22:12). இப்போது, அவர் திரும்புவதற்கான எல்லா விதமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன, மேலும் பல சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது என்ற முன்னறிவிப்புகள் உள்ளன. கர்த்தர் ஏற்கனவே திரும்பிவிட்டாரா? கர்த்தரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்றைய நற்செய்தி: நோவாவின் நாட்கள் இறுதி காலங்களில் நெருங்குகின்றன—தேவனின் தோற்றத்தை நாம் எவ்வாறு தேட வேண்டும்?

தேவனின் எச்சரிக்கை இங்கே. நோவாவின் நாட்களின் அறிகுறிகள் கடைசி நாட்களில் தோன்றின. ஆகவே, கடைசி நாட்களின் பேழைக்குள் நுழைய தேவனின் தோற்றத்தை நாம் எவ்வாறு தேட வேண்டும்? வழியைக் கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.

தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

By Danchun, the United States சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய...

Leave a Reply