மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்?

ஆகஸ்ட் 20, 2021

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 வைரஸானது உலகை உலுக்கி, உலகை பீதிக்குள் ஆழ்த்தியது. மேலும், ஆப்பிரிக்காவில் பரவிய பெரும் எண்ணிக்கையிலான வெட்டுக்கிளிகள் அதிர்ச்சியளித்தன. வாதை மற்றும் பஞ்சத்தின் வருகையால், எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்ற கர்த்தரை நம்புகிறவர்கள் கர்த்தருடைய வருகையின் நாள் சமீபத்திருக்கிறது என்பதையும், தேவனுடைய ராஜ்யம் வரப்போகிறது என்பதையும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு ஒரு முறை சொன்னார், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது(மத்தேயு 4:17). இதைத் தான் நம் ஒவ்வொருவரிடமும் கர்த்தர் கேட்கிறார். நாம் மெய்யாகவே மனந்திரும்பினால் மட்டுமே, நாம் தேவனால் பாதுகாக்கப்படுவோம் மற்றும் பெரும் உபத்திரவத்திற்கு முன் பரலோக ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்படுவோம். அப்படியானால் மெய்யான மனந்திரும்புதல் என்றால் என்ன, நாம் அதை எவ்வாறு அடைய முடியும்?

மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்?

நல்ல நடத்தையானது மெய்யான மனந்திரும்புதலைக் குறிக்கிறதா?

மனந்திரும்புதலைப் பற்றி குறிப்பிடுகையில், கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் பலர் கூறுவார்கள், “இப்போது நாம் கர்த்தரை விசுவாசிக்கிறதால், சத்தியம் செய்வதோ சண்டையிடுவதோ இல்லை, நாம் மற்றவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருக்கிறோம், நாம் கர்த்தரிடம் அடிக்கடி ஜெபித்து பாவத்தை அறிக்கையிடுகிறோம், நாம் கர்த்தருக்காக கிரியை செய்கிறோம் மற்றும் நம்மையே பயன்படுத்துகிறோம், மேலும் நாம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட கர்த்தருடைய நாமத்தை மறுதலிக்கவில்லை. இந்த நல்ல நடத்தையானது நாம் மெய்யாகவே மனந்திரும்பியிருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. கர்த்தர் திரும்பி வரும்போது, நாம் அவருடன் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். நாம் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்த பிறகு, நாம் நமது தீய பழக்கங்களைப் புறந்தள்ளினோம்; நாம் தாழ்மையுள்ளவர்களாகவும், சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும் மாறினோம், மற்றவர்களுக்கு உதவினோம், மேலும் சுவிசேஷத்தைப் பரப்புவதற்காகவும் கர்த்தருக்கு சாட்சி கொடுப்பதற்காகவும் நம்மால் காரியங்களை விட்டுக்கொடுத்து நம்மையே பயன்படுத்த முடிந்தது. உண்மையிலேயே நமது நடத்தையில் சில மாற்றங்கள் இருந்தன, ஆனாலும் நாம் பாவத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை என்பது மறுக்க முடியாததே, நாம் இன்னும் தப்பிக்க முடியாமல் அடிக்கடி பாவத்தின் மத்தியிலேயே ஜீவிக்கிறோம். உதாரணமாக, நமது முதன்மையான விருப்பங்களைப் பாதிக்காத, நம்மைப் புண்படுத்தும் எதையாவது யாராவது சொல்லும் போது, நாம் பொறுமையோடிருக்கலாம், மேலும் நாம் அவர்களை குறைகூறாமல் இருக்கலாம். ஆனால் யாராவது நமது கெளரவமும் அந்தஸ்தும், பாதிப்படையும்படி எதையாவது சொல்லி நம்மைச் சங்கடப்படுத்தும் போது, நாம் அவர்களை விமர்சித்து எதையும் சொல்லாவிட்டாலும், நமது இருதயங்களில் அவர்கள் மீது வெறுப்பும் தப்பெண்ணமும்கொள்கிறோம், மேலும் நாம் பழிவாங்குவதைப் பற்றிகூடசிந்திக்கிறோம். பல காரியங்களில், நாம் எந்த பெரிய தீமையும் செய்யாதது போல தோன்றினாலும், நமது இருதயங்கள் தீய எண்ணங்களை அடிக்கடி காட்டிக் கொடுக்கின்றன. சில நேரங்களில், நாம் ஒரு காலத்திற்கு சகிப்புத்தன்மை மற்றும் சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கலாம், ஆனால் காரியங்கள் மோசமாகிற உடனே, நாம் இன்னும் தீமை செய்ய உடன்படுகிறோம். இதுபோன்ற காரியங்கள் அம்பலப்பட்டு நமக்குள் வெளிப்படுத்தப்படும் போது, நாம் இன்னும் பாவத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டியிருக்கும் போது, நாம் மெய்யாகவே மனந்திரும்பியிருக்கிறோம் என்று சொல்ல முடியுமா?

தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்தியை வாசிப்போம், “வெறும் நடத்தை மாற்றங்கள் நிலைநிற்காது; ஜனங்களுடைய வாழ்க்கையின் மனநிலையில் மாற்றங்கள் இல்லையெனில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், அவர்களின் தீய மறுபக்கம் அவர்களையே வெளிப்படுத்திவிடும். அவர்களது நடத்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கான ஆதாரம் உணர்ச்சி வேகமாகவும், அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் சில கிரியைகளுடன் இணைந்ததாகவும் இருக்கிறபடியால், அனலாய் மாறுவதும் அல்லது தற்காலிகமாக தயவை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு மிகவும் எளிதாகும். அவிசுவாசிகள் கூறுகிறபடி ‘ஒரு நல்ல செயலைச் செய்வது எளிது; வாழ்நாள் முழுவதும் நல்ல செயல்களைச் செய்வது கடினம்.’ ஜனங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல செயல்களைச் செய்ய இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவரின் நடத்தையானது வாழ்க்கையால் வழிநடத்தப்படுகிறது. ஒருவரது வாழ்க்கை எப்படியோ அப்படியே ஒருவரது நடத்தையும் இருக்கிறது, இயற்கையாகவே வெளிப்படுவது மட்டுமே வாழ்க்கையையும் ஒருவரின் இயல்பையும் குறிக்கிறது. போலியான விஷயங்கள் நீடிக்காது. தேவன் மனுஷனை இரட்சிப்பதற்காகக் கிரியை செய்யும்போது, அது மனிதனை நல்ல நடத்தையினால் அலங்கரிப்பதற்காக அல்ல; ஜனங்களுடைய மனநிலையை மறுரூபப்படுத்துவதும் புதிய ஜனங்களாக அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்வதுமே தேவனுடைய கிரியைக்கான நோக்கமாகும். … நன்றாக நடந்து கொள்வதென்பது தேவனுக்குக் கீழ்ப்படிவது போன்றதல்ல, கிறிஸ்துவுடன் இணக்கமாக இருத்தலுக்கு இது சமமானதுமல்ல. நடத்தையில் மாற்றங்கள் என்பது உபதேசத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மிகுந்த ஆர்வத்தினால் பிறப்பதும் ஆகும். அவை தேவனைப் பற்றிய உண்மையான அறிவையோ அல்லது சத்தியத்தை அடிப்படையாகக்கொண்டோ அமைக்கப்படவில்லை, அவை பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை அடிப்படையாகக் கொண்டும் அமைக்கப்படவில்லை. சில நேரங்களில் ஜனங்கள் செய்கிற சில காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுகிறவைகளாய் இருக்கும் போதிலும், அது வாழ்க்கையின் வெளிப்பாடு அல்ல, இது தேவனை அறிந்து கொள்வதைப் போன்றதல்ல. ஒரு நபரின் நடத்தை எவ்வளவு நன்றாக இருந்தாலும், அது அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிகிறார்கள் அல்லது சத்தியத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை நிரூபிப்பதில்லை. நடத்தை மாற்றங்கள் ஒரு தற்காலிக மாயையே அல்லாமல் வேறொன்றும் அல்ல. அவைகள் வைராக்கியத்தின் வெளிப்பாடுகளாக மட்டுமே இருக்கிறது. அவைகளை வாழ்க்கையின் வெளிப்பாடுகளாகக் கணக்கிட முடியாது(கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகளில் உள்ள “வெளிப்புற மாற்றங்கள் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு இடையிலான வேறுபாடு”).

நாம் தேவனை விசுவாசிக்க ஆரம்பித்த பிறகு நமது நடத்தை மேம்பட்ட போதிலும், நமது ஜீவியத்தின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதாக இது அர்த்தமாகாது என்பதை தேவனுடைய வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. பெரும்பாலான நல்ல நடத்தையானது ஆர்வத்தினால் ஏற்படும் பலனாகும், அது உபதேசம் மற்றும் விதிகளினால் பிறந்த நடத்தையாகும், அல்லது அது பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவதால் எழும் ஒரு நடைமுறையாகும். அது நாம் சத்தியத்தைப் புரிந்துகொள்வதால் அல்ல, நமக்கு தேவனைப் பற்றிய அறிவு இருப்பதால் அல்ல, தேவனைத் திருப்திப்படுத்தவும் நேசிக்கவும் நாம் கொண்டிருக்கும் விருப்பத்திலிருந்து இயல்பாக வரும் ஒரு நடைமுறை அல்ல. நாம் சாத்தானால் ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கிறோம், நாம் ஆணவம், தந்திரம், தீமை, கடுமை மற்றும் பகைமை ஆகிய ஒவ்வொரு விதமான சாத்தானிய சீர்கெட்ட மனநிலையால் நிறைந்திருக்கிறோம். இந்த மனநிலைகளைச் சரிசெய்யாமல் விட்டு விட்டால், நாம் சில விதிகளைக் கடைபிடிக்க முடிந்தாலும் மற்றும் நாம் வெளிப்புறத்தில் பக்தியுள்ளவர்களாகத் தோன்றினாலும், இது நீண்ட காலம் நீடிக்காது. மேலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, பாவம் செய்வதிலிருந்து நம்மை நாமே தடுக்க முடியாது. உதாரணமாக, நாம் நமது இறுமாப்பான மற்றும் ஆணவமான சாத்தானிய சுபாவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, எப்போதும் மற்றவர்கள் நம்மைக் கனப்படுத்த வைக்க முயற்சி செய்கிறோம், மேலும் மற்றவர்கள் நாம் சொல்வதைச் செய்யாத போது, நாம் பெருங்கோபமுற்று அவர்களுக்கு விரிவுரை செய்ய ஆரம்பிக்கிறோம். நமது வஞ்சக சுபாவத்தால் இயக்கப்படுகிறோம், நாம் செய்யும் சகலமும் நமது சொந்த நலன்களையே கருத்தில் கொண்டுள்ளது; வீட்டில் எல்லாம் சுமூகமாக நடக்கும் போது, நாம் சகலத்தையும் விட்டுக்கொடுத்து தேவனுக்காக நம்மைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம், மேலும் நம்மால் எந்தக் கஷ்டத்தையும் சகித்துக்கொள்ள முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்டம் வரும் போது, நம்மைப் பாதுகாக்காததற்காக தேவனைக் குற்றஞ்சாட்டுகிறோம். நாம் கைவிட்டதைக் குறித்து கூட வருத்தப்பட ஆரம்பிக்கலாம், மேலும் தேவனைக் காட்டிக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்கலாம். பட்டியல் நீள்கிறது. நமது சீர்கேடான மனநிலைகள் சரிசெய்யப்படாமல் விடப்பட்டால், நம்மால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியவோ முடியாது, மேலும் அவரை எதிர்க்கவும் கூட செய்யலாம் என்பதை இது காண்பிக்கிறது. உதாரணமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிசேயர்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெளிப்புறமாக, அவர்கள் எந்தத் தீங்கும் செய்ததாகத் தோன்றவில்லை. அவர்கள் வெகுதூரம் பயணித்து சுவிசேஷத்தைப் பரப்பினர், பெரும்பாலும் ஜனங்களுக்கு வேதவசனங்களை விளக்கினர், மேலும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். பெரும்பாலான அவர்களுடைய நடத்தை நன்றாகவே இருந்தது, ஆனால் கர்த்தராகிய இயேசு தோன்றி தமது கிரியையைத் தொடங்கியபோது, அவர் வெளிப்புறத்தில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவும் தோன்றியதால், அவர் மேசியா என்று அழைக்கப்படாததால், மேலும் அவரைப் பற்றிய அனைத்தும் அவர்களுடைய கருத்துக்களுடன் முரண்பட்டதால், அவர்களுடைய இறுமாப்பு மற்றும் கர்வமான சாத்தானிய மனநிலைகள் வெளிப்பட்டன. அவர்கள் கர்த்தராகிய இயேசுவை வெளிப்படையாக நிந்தித்தனர் மற்றும் தூஷணம் செய்தனர், மேலும் இறுதியாக, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைய ரோம அதிகாரிகளுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர்.

நமது வெளிப்புற நடத்தையில் மாற்றங்கள் காணப்பட்டாலும், நமது உள்ளார்ந்த ஜீவியத்தின் மனநிலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நாம் இன்னும் நமது சாத்தானிய சீர்கெட்ட மனநிலைகளால் ஆளப்படுவோம் மற்றும் எந்த நேரத்திலும் பாவத்தைச் செய்யவும் தேவனை எதிர்க்கவும் உடன்பட்டிருப்போம் என்பதை மேலுள்ளவைக் காட்டுகிறது. இதுபோன்ற ஜனங்களும் மெய்யாகவே மனந்திரும்புவதுமில்லை மற்றும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அடிப்படையில் தகுதியற்றவர்களாகவும் இருக்கின்றனர். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது போல, “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35).

மெய்யான மனந்திரும்புதல் என்றால் என்ன?

அப்படியானால் மெய்யான மனந்திரும்புதல் என்றால் என்ன? வேதாகம் சொல்லுகிறது, “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்(வெளிப்படுத்தல் 22:14). “நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவியராகமம் 11:45). தேவன் பரிசுத்தர். அவர் மனுஷனுடைய பாவங்களை வெறுக்கிறார், ஆகையால் மெய்யான மனந்திரும்புதலுக்கான தரமானது இறுமாப்பு, தந்திரம், தீமை மற்றும் கடுமைத்தன்மை ஆகிய ஜனங்களிடமுள்ள பல்வேறு சாத்தானிய மனநிலைகள் சுத்திகரிக்கப்பட்டு மாற்றப்படும் போது, அவர்களுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றும் போது, மற்றும் இனிமேல் அவர்கள் பாவம் செய்யாமல் அல்லது தேவனை எதிர்க்காமல், ஆனால் தேவனுக்கு மெய்யாகக் கீழ்ப்படிந்து, பயபக்தியுடன் வணங்கி, அவர்கள் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டிருப்பதாகும். இதுபோன்ற ஜனங்கள் மட்டுமே மெய்யாகவே மனந்திரும்பியிருக்கின்றனர்.

நாம் ஏன் கர்த்தர் மீதான நமது விசுவாசத்தில் மெய்யான மனந்திரும்புதலை அடையவில்லை

“கர்த்தருடைய மீட்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம், எங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன, ஆனாலும் எங்களால் மெய்யான மனந்திரும்புதலை அடைய முடியவில்லை, அது ஏன்?” என்று சிலர் கேட்கலாம். கிருபையின் காலமே இதற்கு முக்கிய காரணமாகும், இக்காலத்தில் கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியையைச் செய்தார், இது ஜனங்களுடைய சீர்கெட்ட மனநிலைகளை மாற்றும் கிரியை அல்ல. தேவனுடைய வார்த்தைகளின் மற்றொரு பத்தியை வாசிப்போம், “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும்(மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரை). கிருபையின் காலத்தில், கர்த்தராகிய இயேசு மனுக்குலத்தின் மீட்பின் கிரியையை மட்டுமே செய்தார் என்பதை இது நமக்குத் தெரிவிக்கிறது, ஜனங்களைப் பாவங்களை அறிக்கை செய்யவும் மனந்திரும்பவும் வைப்பதே இதன் விளைவாகும். மீட்பின் கிரியையின் ஒரு பகுதியாக, கர்த்தராகிய இயேசு மனந்திரும்பும் வழியைப் பேசினார், பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புவது எப்படி, சிலுவையை எடுத்துக் கொண்டு கர்த்தரைப் பின்பற்றுவது எப்படி என்று அவர் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அப்படியே, அவர்களும் தங்களிடத்தில் அன்பு கூருவதைப் போலவே மற்றவர்கள் மீதும் அன்புகூர அவர்கள் தாழ்மையுடனும், பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும் மற்றும் ஜனங்களை ஏழெழுபது முறை மன்னிக்க வேண்டும், மற்றும் பலவற்றையும் செய்ய வேண்டும். இவை அனைத்தும் அந்த நேரத்தில் ஜனங்களுடைய நிலையின் அடிப்படையில் மனுஷனிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் ஆகும்; ஜனங்கள் பாவம் செய்த போது, அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்ப கர்த்தராகிய இயேசுவுக்கு முன்பாக வந்தனர், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன, மேலும் அவர்கள் தேவனுக்கு முன்பாக வந்து தேவனை ஆராதிப்பதற்கு தகுதி பெற்றனர். கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய அனைத்தும் அக்கால ஜனங்களால் புரிந்துகொள்ளக்கூடிய சத்தியங்களாக இருந்தன. ஆனால் இது ஜனங்களுடைய மனநிலைகளை மாற்றுவதுடன் தொடர்புடையதாக இல்லை, ஆகையால் நாம் வேதாகமத்தை எவ்வளவு வாசிக்கிறோம், நமது பாவங்களை எப்படி அறிக்கையிட்டு மனந்திரும்புகிறோம் அல்லது நம்மை நாமே எப்படி ஜெயங்கொள்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், நாம் பாவத்திலிருந்து விடுபட்டு, மெய்யான மனந்திரும்புதலை அடைய இயலாமல் இருக்கிறோம்.

மெய்யான மனந்திரும்புதலை அடைவது எப்படி

அப்படியானால், நாம் எப்படி மெய்யான மனந்திரும்புதலை அடைய முடியும்? கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார், “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:12-13). “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:48). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்(யோவான் 17:17). அக்கால ஜனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்ததினால், கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு அதிகமான சத்தியங்களை வெளிப்படுத்தவில்லை அல்லது நமது சாத்தானிய சுபாவங்களைத் தீர்க்க ஒரு வழியைக் கொடுக்கவில்லை என்பதை இந்த வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. இவ்வாறு, கர்த்தர் தாம் கடைசி நாட்களில் திரும்பி வருவதாகவும், அதிகமான மற்றும் மேலான சத்தியங்களை வெளிப்படுத்துவதாகவும், மனுஷனை நியாயந்தீர்க்கும் மற்றும் சுத்திகரிக்கும் கிரியையை அவர் செய்வார் என்றும், இதன் மூலம் நம்மை நாமே பாவத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ளவும், சுத்திகரிக்கப்பட்டு மாற்றங்களை அடையவும் நம்மை அனுமதிப்பார் என்றும், மேலும் கர்த்தருடைய வருகையில் நியாயத்தீர்ப்பின் மற்றும் சுத்திகரிப்பின் கிரியையை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே நாம் மெய்யான மனந்திரும்புதலை அடைய முடியும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

இன்று, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறார்: அவர் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறார். கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியை என்னும் அஸ்திபாரத்தின் மீது, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையை சர்வவல்லமையுள்ள தேவன் செய்திருக்கிறார், அவர் மனுக்குலத்தின் இரட்சிப்புக்குத் தேவையான சகல சத்தியங்களையும் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவர் நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், கடைசி நாட்களில் அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்பவர்களை பரிபூரணமாக்கவும் வந்திருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களில், மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனுக்குச் சம்பூரணமாகக் கீழ்ப்படிவதை நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்தை வெளிப்படுத்தி, கடைசி நாட்களில் மனுஷனை நியாயந்தீர்க்கும் மற்றும் சுத்திகரிக்கும் கிரியையைச் செய்யும் போது, அவர் மனந்திரும்புதலை கடைப்பிடிப்பதற்கான பல வழிகளைச் சொல்லாமல், நியாத்தீர்ப்பின் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார், தேவனுக்குக் கீழ்ப்படியாத மற்றும் எதிர்க்கும் நமது சுபாவங்களையும் சாராம்சங்களையும் மற்றும் நமது சீர்கேடு குறித்த உண்மையையும் அம்பலப்படுத்துகிறார். எப்படி நேர்மையாக இருக்க வேண்டும், தேவனுக்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும், தேவன் மீது எப்படி அன்புகூர வேண்டும் போன்ற பல்வேறு சத்தியங்களை நமக்குத் தருகிறார், இதன் மூலம் நமக்கு நடக்கும் சகல காரியங்களிலும் நடப்பதற்கான ஒரு பாதையை அவர் நமக்குக் கொடுக்கிறார். தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பை அனுபவிப்பதன் மூலம், நாம் சாத்தானால் எவ்வளவு ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், நமது சுபாவங்களும் சாராம்சங்களும் இறுமாப்பு, சூழ்ச்சி, தீமை மற்றும் கடினத்தன்மை ஆகிய சாத்தானிய மனநிலைகளால் நிரம்பியிருக்கின்றன என்பதையும் நாம் படிப்படியாக பார்ப்போம். இந்த காரியங்களின் படி ஜீவிப்பதால், நாம் ஜீவிப்பதில் மனிதத்தன்மை எதுவும் இருப்பதில்லை, நாம் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறோம், மேலும், நாம் தேவனால் வெறுக்கப்படுகிறவர்களாக, அருவருக்கப்படுகிறவர்களாக இருக்கிறோம். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளுக்கு மத்தியில், நாம் இழிவானவர்களாகவும் பொல்லாதவர்களாகவும், தேவனுக்கு முன்பாக வாழ்வதற்குத் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறோம் என்பதை நாம் பார்க்கிறோம், அப்போதுதான் நாம் நமது பாவங்களை வெறுக்கவும் மற்றும் மனந்திரும்ப விரும்பவும் ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில், எந்தக் குற்றத்தையும் சகித்துக்கொள்ளாத தேவனுடைய நீதியான மனநிலையும், நாம் சத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், நாம் நிச்சயமாக தேவனால் வெறுக்கப்பட்டு புறந்தள்ளப்படுவோம் என்பதும் நமக்குத் தெரிய வரும். அப்போதுதான் தேவன் மீதான பயம் நம்மில் பிறக்கிறது, நாம் மாம்சத்தை விட்டுவிட்டு சத்தியத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறோம், தேவனுக்குக் கீழ்ப்படியும் சில யதார்த்தங்களை நாம் படிப்படியாக பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம், நாம் இனிமேல் தேவனுக்கு எதிராக கலகம் செய்வதோ அல்லது அவரை எதிர்ப்பதோ இல்லை.

தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை அனுபவிக்கும் நாம் பாவத்திலிருந்து முழுமையாக தப்பிக்கிறோம், நாம் இனிமேல் சாத்தானிய சுபாவங்களால் கட்டப்படுவதில்லை, மேலும் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றவும் தேவனுக்குக் கீழ்ப்படியவும் தேவனை ஆராதிக்கவும் நமக்கு சுதந்திரம் உள்ளது. அப்போதுதான் நாம் மெய்யாகவே மனந்திரும்பி மாறிவிட்டோம் என்று சொல்ல முடியும், மேலும் அப்போதுதான் நாம் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கத் தகுதி பெற்றிருப்போம். தெளிவாகக் கூறுவதென்றால், கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை ஏற்றுக்கொள்வதே மெய்யான மனந்திரும்புதலையும் மாற்றத்தையும் அடைவதற்கான ஒரே வழியாகும். இந்த நேரத்தில், மெய்யான மனந்திரும்புதலை அடைவதற்கான வழியை நீங்கள் இப்போது பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், அப்படியானால் நாம் இப்போது என்ன தேர்வுகளைச் செய்ய வேண்டும்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 22:12). இப்போது, அவர் திரும்புவதற்கான எல்லா விதமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன, மேலும் பல சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது என்ற முன்னறிவிப்புகள் உள்ளன. கர்த்தர் ஏற்கனவே திரும்பிவிட்டாரா? கர்த்தரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.