வேதாகமம் மற்றும் தேவனுக்கு இடையில் இருக்கும் தொடர்பை இப்போது நான் புரிந்துகொள்ளுகிறேன்

ஜனவரி 21, 2024

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தினுடையது) வேதாகமத்தை வாசிப்பதாக இருந்து வருகிறது; வேதாகமத்திலிருந்து வெளியேறுவது என்பது கர்த்தர் மீதான நம்பிக்கை என்று ஆகிவிடாது, வேதாகமத்திலிருந்து வெளியேறுவது மதங்களுக்கு எதிரான கொள்கையும் வழக்கத்திற்கு மாறான நம்பிக்கையுமாக இருக்கிறது. ஜனங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்கும்போதும், இந்தப் புத்தகங்களின் அஸ்திபாரம் வேதாகமத்தைக் குறித்த விளக்கமாக இருக்க வேண்டும். அதாவது, நீ கர்த்தரை விசுவாசித்தால், நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமத்திற்கு வெளியே வேதாகமத்திற்கு தொடர்பில்லாத எந்த புத்தகத்தையும் நீ ஆராதிக்கக்கூடாது. நீ அவ்வாறு செய்தாயானால், நீ தேவனுக்குத் துரோகஞ்செய்கிறாய். வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாகப் பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது. … வேதாகமம் ஜனங்களுடைய மனதில் ஒரு விக்கிரகமாக மாறியுள்ளது, அவர்களுடைய மூளையில் அது ஒரு புதிராக மாறியுள்ளது. மேலும், வேதாகமத்திற்கு வெளியேயும் தேவனால் கிரியை செய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களால் முடியவில்லை, தேவனை வேதாகமத்திற்கு வெளியேயும் காண முடியும் என்பதை ஜனங்களால் நம்ப முடிவதில்லை, இறுதி கிரியையின்போது தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி புதியதாக ஆரம்பிக்க முடியும் என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இது ஜனங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை, அவர்களால் அதை கற்பனை செய்துபார்க்கவும் முடியவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு வேதாகமம் ஒரு பெரிய தடையாகவும், இந்த புதிய கிரியையை தேவன் விரிவுபடுத்துவதில் சிரமமாகவும் மாறியுள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). என் விசுவாசத்தில கர்த்தர அறிய வழக்கமா உதவியா இருந்தது வேதாகமம்தான், அதுதான் நம்ம விசுவாசத்தின் அடிப்படன்னு எங்க போதகர் அடிக்கடி சொல்வாரு. வேதாகமத்த விசுவாசிக்கிறது கர்த்தர விசுவாசிக்கிறதுன்னு நான் நினச்சேன் மேலும் நான் வார்த்தைய கர்த்தருக்கு மேலாகக்கூட கருதினேன். கர்த்தருடய வார்த்தய கடைப்பிடிப்பத பற்றிய சிந்தனை இல்லாமலேயே சில களைப்பூட்டுற பழைய வசனங்க கூட எப்போதும் எங்கிட்ட ஆயத்தமா இருக்கும். சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசிநாட்களின் கிரியைய நான் ஏற்றுக்கொண்டு அவருடய வார்த்தைகள் வெளிப்படுத்துறத பார்க்கும் வர, தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையில இருக்கும் தொடர்ப என்னால அறிய முடியல. என் விசுவாசத்தில இருந்த தவறுகள் கடைசியா சரியாச்சி.

கர்த்தர நல்லா புரிஞ்சிக்க, நான் வழக்கமா வேதாகமத்த வாசிச்சிக்கிட்டு வந்தேன், என்னால் முடிஞ்சப்ப எல்லாம் திருச்சபைக்குப் போனேன், என் ஓய்வு நேரங்கள்ல சில பிரசங்கங்களயும் தேடினேன். ஒரு தடவ உண்மையிலேயே நல்ல ஒரு திருச்சபை படத்த யுடியூப்ல கண்டுபிடிச்சேன் என் வீடு எங்கே இருக்குங்கிறது அதன் பேரு. அது இதயத்த தொட்டு நெகிழவச்சிது. படத்தில அவங்க வாசிச்ச வார்த்தைகள் குறிப்பா இதமாகவும் ஆனா அதிகாரம் கொண்டதாவும் தோணிச்சி. அவை எதில் இருந்துன்னு நான் ஆர்வமடஞ்சேன். அது சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபைன்னு நான் பார்த்தப்போ படத்த தயாரிச்ச இந்தத் திருச்சபய பத்தி மேலும் அறிஞ்சிக்க இணையத்தில பார்த்தேன். ஆனா இந்தத் திருச்சபய பத்தி எழுதப்பட்டிருந்த கொஞ்சம் மோசமான விஷயங்களையும் கண்டுபிடிச்சேன். மேலும் அந்த மோசமான விஷயங்க உண்மையா இல்லையான்னு என்னால தீர்மானிக்க முடியல. அதப் பத்தி இன்னும் கொஞ்சம் சிந்திச்சப் பிறகு, மத்தவங்க என்ன சொல்றாங்கங்கறத நம்பக் கூடாதுன்னு முடிவுசெஞ்சேன். “நீ கேக்குற எல்லாத்தயும் நம்பாத.” அத நானே சரிபாக்கணும்னு எனக்குத் தெரியும் பார்ப்போம் அது ஒரு நல்ல திருச்சபயான்னு. பாக்குறதுக்கு இன்னும் சில படங்கள நான் பதிவிறக்கினேன். இன்னும் ரெண்ட நான் பார்த்தேன், விழித்தெழுதல் மற்றும் ஏங்குதல். ரெண்டும் என்ன நெகிழச் செஞ்சிச்சி. அதில வாசிச்ச வார்த்தைங்க ரொம்ப வல்லமையாவும் அற்புதமாவும், பிரசங்கங்க ரொம்ப நடைமுறைக்கு ஏற்றதாவும் இருந்திச்சி. திருச்பைகள் பாழாதல் பத்தி எல்லாத்தையும், உண்மயிலேயே ரட்சிக்கப்படுதல்னா என்னங்கறதயும், தெரிஞ்சிக்கிட்டேன். கடைசி நாட்கள்ல தம் நியாயத்தீர்ப்பச் செய்ய கர்த்தராகிய இயேசு ஏற்கெனவே திரும்பி வந்துட்டார்னு அந்தப் படங்க சொன்னது இந்த வேதாகம தீர்க்கதரிசனத்த நிறவேத்துது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). நான் ரொம்ப உற்சாகமடஞ்சேன். அந்தப் படங்கள்ல வாசிக்கப்பட்ட வார்த்தைங்க திரும்பிவந்த கர்த்தரால உரைக்கப்பட்டது. அது வல்லமயாவும் நெகிழ்ச்சியாவும் இருந்ததுல ஆச்சரியமில்ல! நான் ஒரு செய்திய அனுப்பி அந்த சபயின் சில அங்கத்தினரோடு தொடர்ப ஏற்படுத்தினேன், அவங்க அன்பாவும் உண்மயாவும் இருந்தாங்க, அவங்க பிரசங்கங்க பிரகாசமாக்குறதா இருந்திச்சி. அவங்கக்கிட்ட பேசியது அற்புதமா இருந்திச்சி. நான் அவங்க கூடுகைகளுக்குப் போக ஆரம்பிச்சேன்.

ஒரு சாயங்காலம் சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபையின் அலைவரிசயில் இருந்து இன்னும் கொஞ்சம் படங்களப் பதிவிறக்கம் செய்ய நான் போயிக்கிட்டிருந்தேன். அவங்க தேர்வுகள நான் பார்த்துக்கிட்டிருந்தப்போ வேதாகமத்தில் இருந்து வெளியே வா ங்கற ஒண்ண பார்த்தேன். நான் குழப்பமடஞ்சேன், இதுக்கு என்ன அர்த்தம்? நாம் ஏன் வேதாக்மத்த விட்டு வெளிய வரணும்? வேதாகமம் இல்லாம மக்கள் எப்படி விசுவாசிச்சி தேவன அறிய முடியும்? போதகர் வழக்கமா சொல்லுவாரு நம்ம விசுவாசம் வேதாகமத்த அடிப்படயா கொண்டிருக்கணும், அதில இருந்து விலகிறது வேதப்புரட்டு. வேதாகாம்த்த விட்டுச்செல்வதா, அது கர்த்தருக்கு செய்யும் துரோகம் அல்லவா? அடுத்த சில நாட்களுக்கு வழிவிலகிப் போறதுக்குப் பயந்து, நான் அந்தத் திருச்சப படங்கள பார்ப்பதயும் அவங்க பாடல்கள கேட்பதயும் நிறுத்தினேன். ஆனா என்னால நினைக்காம இருக்க முடியல. “சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்திருக்கும் கர்த்தராகிய இயேசுன்னா மேலும் அவர நான் நிராகரிச்சிட்டா, கர்த்தர வரவேற்கும் என் வாய்ப்ப இழந்துவிடுவேன்லயா?” நான் ரொம்ப குழப்பமடஞ்சதால, ஜெபிச்சு, உபவாசிச்சேன். கர்த்த்ரக்கிட்ட எனக்கு காட்டுமாறு கேட்டேன் சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையாக திரும்பிவந்திருக்கும் அவரா. முதல் நாள் நான் உபவாசிச்சப்ப, தேவனிடம் இருந்து நான் எந்த உள்ளுணர்வயும் பெறல, ஆகயினால, நான் வேதாகமத்த பார்க்கலாம்னு நினச்சேன். நான் வெளிப்படுத்தல் 1:8 வாசிச்சேன், “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.” நான் வெளிப்படுத்தல் 11:16-17 ஐயும் வாசிச்சேன், “அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து; இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.” இந்த வசனங்கள் மூலம் தேவன் எனக்கு வழிகாட்டுறாருன்னு நான் திடீர்னு உணர்ந்தேன். “சர்வவல்லமையுள்ளவர்”னு கடைசி நாட்கள்ல தேவன் அழைக்கப்படுவார்னு வெளிப்படுத்தின விசேஷம் சொல்லுது. அது சர்வவல்லமையுள்ள தேவன் அல்லவா? இந்தக் கண்டுபிடிப்பு என்னை சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபையை ஆராய வச்சிச்சி. வேதாகமத்தில் இருந்து வெளியே வாவின் முழுமையயும் நான் பார்த்தேன், இதனால, உண்மயில அது எதப்பத்தியதுன்னு என்னால முழு ஊக்கமா அறிஞ்சிக்க முடியும்.

அந்தப் படத்தில சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில இருந்து ஒரு சுவிசேஷப் பிரசங்கி இதப் பகிர்ந்தார்: “ஏராளமான மதவாதிகள், ரட்சிப்பைக் கொண்டுவர தேவன் வேதாகமத்தில் இருந்து விலகமாட்டார்னும், மேலும் வேதாகமத்தில் இல்லாத எதுவும் வேதப்புரட்டேன்னும் சொல்றாங்க. எது உண்மயில முதல்ல வந்துது: வேதாகமா அல்லது தேவனுடய கிரியயா? ஆதியில் யேகோவா தேவன் எல்லாத்தயும் சிருஷ்டித்தார். உலகத்த வெள்ளத்தால நிறச்சாரு, சோதோமையும் கொமோராவையும் நெருப்பால அழிச்சாரு. இந்தக் கிரியய்களயெல்லாம் தேவன் செஞ்சிக்கிட்டிருந்தப்ப பழைய ஏற்பாடு இருந்திச்சா?” நான் நினச்சேன், “இத நீங்க கேக்கணுமா? தேவன் உலகத்த சிருஷ்டிச்சப்ப, உலகத்த வெள்ளாத்தால நிறச்சப்ப, சோதோமயும் கொமோராவயும் தரமட்டமா எரிச்சப்ப, வேதாகமம் இல்ல.” அவங்க தொடர்ந்தாங்க: “இந்தக் கிரியய எல்லாம் தேவன் செஞ்சப்ப ஒரு வேதாகமம் இல்ல. முதல்ல தேவனுடய கிரிய இருந்திச்சி, அது முடிஞ்ச பிறகு, அது வேதாகமத்தில பதியப்பட்டுது. கிருபயின் காலத்தில கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சிக்கிட்டிருந்தப்ப புதிய ஏற்பாடு இல்ல. அவர் தம்முடய கிரியய முடிச்சப்பிறகு அவருடய சீஷர்களால அது பின்னர் எழுதப்பட்டிச்சி. தேவனுடய கிரியயின் ஒரு வரலாற்றுப் பதிவே வேதாகமம் என்பது தெளிவு. தேவன் வேதாகமத்துக்கு ஏற்றமாதிரி கிரிய செய்யல, மேலும் அது அதனால் கட்டுப்படுத்தப்படல. அவருடய கிரிய அவருடய தெய்வீகத் திட்டத்தயும் மனுக்குலத்தின் தேவைகளயும் அடிப்படயா கொண்டது. அதனாலதான் வேதாகமத்தில இருக்கிறத வச்சி மட்டும் நாம தேவனுடய கிரியய சிந்திச்சிப் பார்க்க முடியாது மேலும் அவருடய கிரியய மட்டுப்படுத்த நம்மால வேதாகமத்த பயன்படுத்த முடியாது. வேதாகமத்துக்கு வெளியில இருக்கிற எதுவும் வேதப்புரட்டுன்னு நம்மால சொல்ல முடியாது. தேவனுக்கு தம்முடய கிரியயச் செய்யும் உரிம இருக்குது, மேலும் வேதாகமத்தின் எல்லைகளுக்கு வெளியிலேயும் அவரால கிரிய செய்ய முடியும்.”

இதக் கேட்டது கண்ணத் திறக்குறதா இருந்திச்சி. கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சப்ப புதிய ஏற்பாடு இல்ல. அவரு தம்முடய பெரும் கிரியய முடிச்ச பிறகுதான் மற்றவங்களால அது தொகுக்கப்பட்டிச்சி. உண்மயில வேதாகமம் தேவனுடய கடந்த கால கிரியயின் ஒரு பதிவே. இதப் பத்தி நான் ஏன் ஒருபோதும் முன்னாலயே சிந்திக்கல?

படத்தில இன்னொரு பிரசங்கியார் தொடர்ந்தாரு: “அதச் சொன்னோம்னா, வேதாகமத்துக்கு வெளியில இருக்கிற எதுவுமே வேதப்புரட்டுதான், தேவனுடய கடந்த கால கிரிய எல்லாத்தயுமே நாம நியாயமற்ற முறயில கண்டனம் செய்துகிட்டிருக்க மாட்டோமா? கர்த்தராகிய இயேசு வந்தப்போ, அவரு பழைய ஏற்பாட்ட அடிப்படையா கொண்டு கிரிய செய்யல, ஆனா அவரு அதுக்கு ரொம்ப மேல போனாரு, மனந்திரும்புறத பத்திய அவர் போதன, பிணியாளிங்கள சொஸ்தமாக்கினது, பிசாசுகள விரட்டினது, ஓய்வுநாள ஆசரிக்காதது, ஏழு எழுபதுதரம் மன்னிக்கிறது போன்ற பல. இதுல ஒண்ணும் பழய ஏற்பாட்டுல கூட இல்ல. சில பழய ஏற்பாட்டு பிரமாணங்கள முரண்படக் கூடச் செய்யுது. அதுக்கு கர்த்தராகிய இயேசுவின் கிரிய தேவனுடைய கிரிய இல்லன்னு அர்த்தமா? பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபாரகர்கள் எல்லாம் கர்த்தராகிய இயேசுவின் கிரியயயும் அவருடய வார்த்தைகளயும் வேதப்புரட்டுனு கண்டனம் செஞ்சாங்க, ஏன்னா அதெல்லாம் பழய ஏற்பாட்டுக்கு முற்றிலுமா இணக்கமா இல்ல. அவங்க எலாரும் தேவன எதுத்தாங்க. நாம தவறான மனிதக் கருத்தப் பின்பற்றி வேதாகமத்துக்கு வெளியில இருக்கிற எதயும் வேதப்புரட்டுனு நம்பினா, கர்த்தர் இயேசுவின் கிரியயயும் கண்டனம் செய்றோமில்லயா?”

வேதாக்கமத்துக்கு வெளியே இருக்கும் எதுவும் வேதப்புரட்டா என்பது பற்றிய கேள்விகளக் குறிச்ச சர்வவல்லமையுள்ள தேவனின் வர்த்தைகள அப்புறமா அவங்க வாசிச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நீ கிருபையின் காலத்தில் பழைய ஏற்பாட்டை புசித்துக் குடித்திருந்தால் மற்றும் கிருபையின் காலத்தின்போது பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவையானதை நீ கடைபிடித்திருந்தால், இயேசு உன்னைப் புறந்தள்ளி, உன்னைக் கடிந்துகொண்டிருந்திருப்பார். நீ பழைய ஏற்பாட்டை இயேசுவின் கிரியைக்கு பயன்படுத்தியிருந்தால், நீ ஒரு பரிசேயனாக இருந்திருப்பாய். இன்று, நீ பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை ஒன்றாகச் சேர்த்து புசித்துக் குடித்து, அதன்படி நடந்தால், இன்றைய தேவன் உன்னைக் கடிந்துகொள்வார். இன்றைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் நீ விழுந்து கிடக்கிறாய்! நீ பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் புசித்துக் குடித்தாயானால், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருக்கிறாய்! இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதைக் கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாணக் காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாணக் காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதைப் பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்குப் பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றிப் பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். … இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சைரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

படத்தில சுவிசேஷப் பிரசங்கிமார்கள் இதப் பகிர்ந்தாங்க: “வேதாகமம் தேவன் அல்ல. அது அவருடய முதல் ரெண்டு கட்ட கிரியயின் பதிவு மட்டும்தான், நியாயப் பிரமாணத்தின் காலத்திலயும், கிருபயின் காலத்திலயும் நடந்த தேவனுடய கிரியயின் ஒரு சாட்சி. மனுஷன ரட்சிக்கும் அவருடய எல்லா கிரியயயும் அது பிரதிநிதித்துவப்படுத்தல. வேதாகமத்துல தேவனுடய வார்த்தைகளின் பதிவு மிகவும் குறஞ்சதுதான். அதெல்லாம் தேவனுடய ஜீவித மனநிலயின் வெறும் துணுக்குகள்தான். அத அதன் எல்லா முழுமையோடும் அதால் காட்ட முடியாது. தேவன் ஒருபோதும் பழமையானவரல்ல, எப்போதும் புதியவர். ஒவ்வொரு காலத்திலும் அவர் புதிய கிரியய செஞ்சி புதிய வார்த்தைகள உரைக்கிறாரு. உதாரணமாக, கர்த்தராகிய இயேசு கிருபயின் காலத்தில் கிரிய செய்ய வந்தப்ப, அவர் தம்முடய புதிய கிரியயச் செய்ய பழைய ஏற்பாட்டுக்கு அப்பால போனார். தேவன் வேத வசனத்துக்கு ஏற்ப கிரிய செய்றதில்ல அல்லது அதக் குறிப்பிடுவதும் இல்ல. அவர பின்பற்றுகிற எல்லாரயும் வழிநடத்த அவரு வேத வசனத்துக்குள்ள பார்க்கிறதுமில்ல. தேவனுடய கிரிய எப்பவும் முன்னோக்கியே நகருது. தேவன் ஒரு புதிய காலத்த தொடங்கி புதிய கிரியயச் செய்யும்போது, அவரு மனுஷன ஒரு புதிய பாதயில வழிநடத்தி நம்க்கு அதிக சத்தியங்கள கொண்டுவராறு, இதனால நாம அவருடய முழு ரட்சிப்ப அடய முடியும். தேவன் அவருடய பழய கிரியயின் அடிப்படயில வெறுமனே நம்மள வழிநடத்துறதில்ல. அதாவது, தேவன் வேதாகமத்த வச்சி அவருடைய கிரியய செய்றதில்ல ஏன்னா அவரு ஓய்வு நாளுக்கும் கர்த்தர், மற்றும் வேதாகமத்துக்கும் கர்த்தர். அவருடய திட்டத்துக்கு ஏற்பவும், மனுக்குலத்தின் தேவைக்கு ஏற்பவும் புதிய கிரியயச் செய்ய வேதாகமத்தக் கடந்து போக அவருக்கு எல்லா உரிமயும் இருக்கு, ஒரு புதிய காலத்தில, தேவனுடய கிரிய பழய காலத்தில இருந்தது போலவே ஒருபோதும் இருக்காது. ஆகயினால, வேதாகமத்த விட்டு விலகிப் போறது வேதப்புரட்டுனு சொல்றது வெறுமனே தவாறானதுதான்.”

இதில இருந்து நியாயப் பிரமாண மற்றும் கிருபயின் காலத்தில நடைபெற்ற தேவனுடய கிரியயின் பதிவுகள்தான் பழய புதிய ஏற்பாடுகள், ஆனா தேவனுடய கிரிய எல்லாத்தயும் காட்டலன்னு நான் எடுத்துக்கிறேன். நான் வேதாகமத்த பின்னால விட்டுட்டா நான் விசுவாசிக்கலன்னு உண்மயிலேயே நெனச்சேன். நான் தேவனயும் வேதாகமத்தயும் சமமாக நடத்தி வந்திருக்கலயா? கர்த்தராகிய இயேசு கிரிய செய்தபோது அவர் பழய ஏற்பாட்டால வழிநடத்தப்படல. வேதவசனத்துக்கு அப்பால் போறது வேதப்புரட்டுனு நாம சொன்னா, அது கர்த்தராகிய இயேசுவின் கிரியய கண்டனம் செய்றதாகாதா? நான் கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சிக்கிட்டுருந்த காலத்துல பிறந்திருந்தா, இப்போதய என்னுடய தவறான நம்பிக்கையின் அடிப்படயில அவருடய கிரியய நான் எதிர்த்திருப்பேன். வேதாகமத்தில இருக்கிறத மட்டும் வச்சி நான் தேவனுடய கிரியயயும் வார்த்தைகளயும் மட்டுப்படுத்தி இருந்தா, பழய வேத வசனங்கள இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு கர்த்தராகிய இயேசுவ கண்டனம் செஞ்ச பரிசேயர்கள் செஞ்ச அதே தப்பதான் நானும் செய்வேனில்லயா?

படத்தில சுவிசேஷப் பிரசங்கிமார்கள் தேவனுடைய வார்த்தைகளின் இன்னொரு பகுதிய வாசிச்சாங்க: “நான் உனக்குப் போதிப்பது வேதாகமத்தின் சாராம்சமும் உள் சம்பவமும் மட்டுமேயாகும். நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்றோ அல்லது நீ போய் அது மதிப்பில்லாதது என்று அறிவிக்குமாறோ நான் கேட்டுக்கொள்ளவில்லை. நீ வேதாகமத்தைக் குறித்த சரியான அறிவையும் கண்ணோட்டத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்காதே! வேதாகமம் மனிதர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புத்தகம் என்கிறபோதிலும், இது பழங்கால பரிசுத்தவான்களும் தீர்க்கதரிசிகளும் தேவனுக்கு ஊழியம் செய்த பல கொள்கைகளையும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் சமீபத்திய அப்போஸ்தலர்களின் அனுபவங்களையும் ஆவணப்படுத்துகிறது. இவை அனைத்தும் உண்மையிலேயே இந்த ஜனங்களால் பார்க்கப்பட்டன மற்றும் அறிந்துகொள்ளப்பட்டன, மேலும் இவை மெய்யான வழியைப் பின்பற்றுவதில் இக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்புகளாக செயல்பட முடியும். … இப்புத்தகங்கள் இன்னும் காலாவதியானவையாகவும், இன்னும் பழங்காலத்திற்குரியவையாகவும் இருக்கின்றன. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை ஒரு காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, நித்தியகாலத்திற்கும் அல்ல. தேவனுடைய கிரியை எப்போதுமே வளர்ந்து கொண்டே இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் காலத்திற்குள் மட்டுமே இதை நிறுத்திவிட முடியாது அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்ட கிருபையின் காலத்திலேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. ஆகவே, இப்புத்தகங்கள் கிருபையின் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, கடைசி நாட்களின் ராஜ்ய காலத்திற்கு அல்ல. இவற்றால் கிருபையின் காலத்தின் விசுவாசிகளுக்கு மட்டுமே வழங்க முடியும், ராஜ்ய காலத்தின் பரிசுத்தவான்களுக்கு அல்ல. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை இன்னும் காலாவதியானவையாகவே இருக்கின்றன(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)”).

இதக் கேட்டு, வேதாகமம் சொல்றத சர்வவல்லமையுள்ள தேவன் குறைக்கலங்கறதப் பாத்தேன், வேதாகமம் தேவனுடய கடந்தகாலக் கிரியயின் ஒரு பதிவு மட்டும்தான், அது அவர் செஞ்ச கிரியயயும் அதுக்காக மனுஷன் திருப்பிச் செய்யவேண்டும்னு அவர் எதிர்பார்ப்பதயும் புரிஞ்சிக்க நமக்கு உதவலாம். ஆனா தேவன் புதிய கிரியய செஞ்சிக்கிட்டிருக்காரு மேலும் வேதாகமம் காலாவதி ஆகிவிட்டிருச்சி. இன்னைக்கு மக்களுக்கு தேவயானத அதால வழங்க முடியாது. வேதாகமத்தில் இருந்து வெளியே வா ங்ற திருச்சபயின் படத்த முதல்ல நான் பாத்தப்ப ஓர் எதிர்ப்புணர்வ அடஞ்சேன். நம்ம விசுவாசம் வேதாகமத்த அடிப்படயா கொண்டிருக்கணும்னும் தேவன எப்படி விசுவாசிப்பதுங்கறத அறிய அதுதான் ஒரே வழின்னும் நான் நெனச்சேன். வேதாகமத்த பின்னால விட்டுவிடுறது தேவன விட்டுவிடுறதுன்னு நான் நெனச்சேன். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியய பத்தி கத்துக்க நான் எதிர்ப்புள்ளவனா இருந்தேன். வேதாகமம் தேவன் பிரதிநிதித்துவப்படுத்திச்சின்னும் அது விசுவாசத்தின் மையம்னும் நான் நெனச்சேன். என் இருதயத்தில வேதாகமம் தேவனுடய இடத்த எடுத்துருச்சிங்கறத இது காட்டிச்சி. நான் உண்மயா தேவன விசுவாசிக்கல—நான் வேதாகமத்ததான் விசுவாசிச்சேன். எனக்கு தேவனும் வேதாகமமும் சமமா இருந்திச்சி, அவருடய கிரிய வேதாகமத்தில மட்டுந்தான் இருக்க முடியும். இதில்லாம வேறெதுவும் வேதப்புரட்டுனு நான் நெனச்சேன். நான் தேவன மட்டுப்படுத்தி தூஷிக்கலயா? என்னுடைய சிந்தனைகளில கலக்கமடஞ்சி, அந்தப் படத்த எனக்குக் காட்டியதுக்காக நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். இல்லாம இருந்திருந்தா, பயங்கரமான விளைவுகள் இருந்திருக்கும்.

படத்தில சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டவங்க பின்னால சொன்னாங்க: “வேதாகமத்தால நித்திய ஜீவன கொடுக்க முடியாது…” நான் ஸ்தம்பித்துப் போனேன். வேதாகமத்தில இருந்து நித்திய ஜீவன் இல்லயா? அது எப்படியா இருக்க முடியும்? அடுத்ததா அவங்க சொன்னத நான் கவனிச்சிக் கேட்டேன். “பொதுவான விசுவாசம் வேறு விதமா சொல்லுது, ஆனா இது ஒரு மறுக்கமுடியாத உண்ம. கர்த்தராகிய இயேசு நமக்குச் சொன்னது என்னன்னா, பல ஆண்டுகளுக்கு முன்னால அவரு பரிசேயர்கள கடிஞ்சிக்கிட்டபோது: ‘வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை (யோவான் 5:39-40). கர்த்தராகிய இயேசு நமக்குச் சொன்னது என்னன்னா, வேத வசனங்கள்ல நித்திய ஜீவன் இல்ல. ஏன்னா வேத வசனங்க தேவனுக்கு சாட்சி மட்டுமே பகருது. மக்கள் சத்தியத்தயும் ஜீவனயும் விரும்பினால், வேதாகமம் போதுமானதேயல்ல. கிறிஸ்துவிடம் இருந்து மட்டுமே சத்தியத்தயும் ஜீவனயும் அடய முடியும். பழய ஏற்பாட்ட இறுகப் பற்றிக்கிட்டிருந்த பரிசேயர்கள ஞாபகம் இருக்கா? அவங்க நித்திய ஜீவன அடையல, மேலும் அவங்க கர்த்தராகிய இயேசுவ எதுத்துக் கண்டனம் செஞ்சதுக்காக தண்டிக்கப்பட்டாங்க. ஆனா கர்த்தராகிய இயேசுவ பின்பற்றினவங்க வேத வசனங்கள இறுகப் பற்றிக்கிட்டு இருக்கல, அவங்க தேவனுடய அக்கால எல்லா கிரியைகளயும் வார்த்தைகளயும் முடிவா ஏத்துக்கிட்டவங்க, கர்த்தராகிய இயேசுவால மீட்கப்பட்டாங்க. ஆகயினால கிறிஸ்துவயும் தேவனுடைய அடிச்சுவடுகளயும் பின்பத்துறதுதான் உண்மையில நித்திய ஜீவன அடயுறதுக்கான ஒரே வழி. நாம வேதாகமத்தக் கண்மூடித்தனமா பின்பத்துனா நாம தேவனுடய ஒப்புதலப் பெற முடியாதது மட்டுமில்லாம, அது பவுல் சொன்னது போல அப்படியே இருக்கும், ‘வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது’ (கலாத்தியர் 3:22) மேலும் நாம் ரட்சிப்ப இழப்போம். ஒவ்வொரு காலத்திலயும் தேவன் புது கிரியய செய்றாரு. யேகோவா தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தில கட்டளைகள பிறப்பிச்சாரு ஆகயினால, தேவன எப்படி சரியாக ஆராதிப்பது, உலகத்துல எப்படி வாழறதுங்கறத இஸ்ரவேலர்கள் அறிந்தனர், பாவம்னா என்னங்கறதயும், தங்கள் பாவங்கள் எல்லாத்துக்காகவும் தண்டிக்கப்படுவாங்கங்கறதயும் அவங்க அறிஞ்சும் இருந்தாங்க. கிருபயின் காலத்துல, தனிப்பட்ட முறையில தம்மயே கொடுத்து கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியச் செஞ்சாரு. நியாயப் பிரமாணத்தின் கீழ் மன்னிக்கப்படுறதுக்கும் ஆக்கினயில இருந்து தப்பிக்கிறதுக்கும் ஜனங்க அறிக்க செஞ்சி மனந்திரும்ப மட்டுந்தான் செய்யணும். இருந்தாலும், கர்த்தராகிய இயேசுவின் மீட்பு நம்ம பாவங்கள மன்னிக்க மட்டுந்தான் செய்யும். ஆன நம்முடய சுபாவம் மையத்தில இன்னும் பாவத்தன்ம கொண்டதாகத்தான் இருக்குது. நாம அடிக்கடி நம்முடய அகந்தயான, வஞ்சக, தீய சாத்தானின் சுபாவத்த வெளிப்படுத்துறோம் மேலும் நம்மளால பாவஞ்செஞ்சு தேவன எதிர்க்காம இருக்க முடியல. அதனாலதான் கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த பாவத்தில இருந்து முழுவதுமா சுத்திகரித்து ரட்சிக்கவும், நியாயத்தீர்ப்பக் கொண்டுவரவும் அவரு மீண்டும் வருவாருன்னு தீர்க்கதரிசனமா சொன்னாரு. கடைசி நாட்கள்ல, கர்த்தராகிய இயேசுவின் மீட்பை அடிப்படையா கொண்டு தேவனுடைய வீட்ல இருந்து ஆரம்பிச்சி, சர்வவல்லமையுள்ள தேவன் நியாய்த்தீர்ப்பக் கொண்டுவர்றாரு. மனுஷன ரட்சித்து சுத்திகரிக்க அவரு எல்லா சத்தியங்களயும் வெளிப்படுத்தி, அவருடைய நிர்வாகத்திட்டத்த பிரகாசிப்பிக்கிறாரு. அவரு மனுக்குலத்தின் சாத்தானிய மனநிலயயும் சுபாவத்தயும் நியாயந்தீர்த்து வெளிப்படுத்தி, எந்தக் குற்றத்தையும் சகித்துக்கொள்ளாத தம்முடய பரிசுத்தமும் நீதியுமுள்ள மனநிலயக் காட்டுறாரு. சர்வவல்லமையுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள், நியாயப்பிரமாணத்தின் காலத்தில அல்லது கிருபையின் காலத்துல ஒருபோதும் பேசப்படாதவை. தேவன் நமக்கு அளிக்கும் இந்த வார்த்தைகள் நித்திய ஜீவனுக்கான வழி. கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனம் உண்மயாகுது: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13).”

அப்புறமா அவங்க சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் இன்னொரு பகுதியை வாசிச்சாங்க. “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபையின் சுவிசேஷகர் இந்த வார்த்தைகள பகிர்ந்துக்கிட்டார்: “நாம நாம்முடய விசுவாசத்தில வேதாகமத்த மட்டும் பற்றிக்கிட்டு, கடைசி நாட்களின் தேவனுடய உரைகள ஏத்துக்கலனா, நாம ஒருபோதும் தேவனுடய ஜீவ தண்ணிரால போஷிக்கப்பட முடியாது. தேவனுடய நியாயத்தீர்ப்பு இல்லாம, பாவம் செய்றது பாவ அறிக்க பண்றதுன்ன தீய சுழற்சியில இருந்து நம்மால தப்பிக்க முடியாது. பாவக்கட்டில இருந்து தப்பிக்காம பரலோக ராஜ்யத்துக்குள்ளாற யாரும் எப்படி பிரவேசிக்க முடியும்? கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிட்டா மட்டுந்தான் நாம தேவனுடய வார்த்தைகளால போஷிக்க[ப்படுவோம், சத்தியத்த அறிஞ்சி, நம்முடய சீர்கேட்ல இருந்து விடுவிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவோம். அதன் பின்ன நம்மளால பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்.”

நான் பாத்து கவனிச்சு கேட்டப்போ ரொம்ப பிரகாசமாவும் உற்சாகமாகவும் உணர்ந்தேன். அந்த ஐக்கியம் நடமுறைக்கு ஏற்றதா இருந்திச்சி. நித்திய ஜீவன் வேதாகமத்தில இல்ல—அது தேவனுக்கு வெறும் சாட்சியே. அது தேவன பிரதிநிதித்துவப் படுத்தல, அல்லது அவருடைய ரட்சிப்பின் கிரியய அது பதிலீடு செய்யவுமில்ல. கிறிஸ்து மட்டுமே வழியும், சத்தியமும், ஜீவனுமா இருக்காரு. கிறிஸ்து மட்டுமே உண்மயில நமக்கு சத்தியத்தயும் ஜீவனயும் கொடுக்க முடியும். கடைசி நாட்களின் கிறிஸ்து, சர்வவல்லமையுள்ள தேவன், மனுஷன ரட்சிக்க சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. நான் ரொம்ப முட்டாள்தனமா இருந்திருக்கேன்! என்னால வேதாகமத்த விட முடியாம இருந்திருக்கேன். இது ரொம்ப நன்றிக்குரியது சர்வவல்லமையுள்ள தேவன் தேவனுடைய குரலக் கேட்கவும் விசுவாசத்த பத்திய என் முட்டாள்தனமாக கருத்த கைவிடவும் வழிகாட்டினாரு. நான் கடைசியா சர்வவல்லமையுள்ல தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தருடைய வருகையைப் பொறுத்தவரை ஒருவர் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?

கர்த்தரோட வருகைய வரவேற்கறதுக்கு முக்கியமானது என்னது? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” (யோவான்...

இன்றைய நாளுக்கான கத்தோலிக்க சிந்தனை: கத்தோலிக்க வழிபாட்டு முறையைக் கடைப்பிடிப்பது கர்த்தருக்கு ஏற்புடையதா?

ஜெங்சின், ஆஸ்திரேலியா ஆசிரியரின் குறிப்பு: இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனை விசுவாசிக்கும் அனைவரும் வழிபாட்டு முறைமை, பாவசங்கீர்த்தனம்,...

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

Leave a Reply