தேவனுடைய நாமம் உண்மையாகவே இரகசியமானது

ஏப்ரல் 24, 2021

By Jack, Canada

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையை தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). ஒவ்வொரு காலத்திலேயும் அவர் எடுத்துக்கொள்ற ஒவ்வொரு நாமத்துக்கும் அர்த்தம் இருக்குன்னு தேவனோட வார்த்தைகள் நமக்கு காட்டுது. ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு காலத்தயும், கிரியையோட ஒரு கட்டத்தயும் குறிக்குது. அவரோட கிரியைக்கு தகுந்த மாதிரி தேவனோட நாமம் மாறுது. ஆனா அவரோடநாமங்க மாறினாலும் அவரோட மனநிலையும் சாராம்சமும் மாறாது. தேவன் எப்போதுமே தேவன்தான். நான் எப்பவுமே வேத வசனங்களோட நேரடி அர்த்தத்த பிடிச்சிக்குவேன். என்னோட கருத்துக்கள்ல சிக்கி, கர்த்தராகிய இயேசுவோட நாமம் மாறவே முடியாதுன்னு நான் நெனச்சேன். அப்புறம் நான் ஒரு படத்த பார்த்து தேவனோட நாமங்களோட இரகசியங்கள கத்துக்கிட்டேன். ஆட்டுக்குட்டியானவரோட காலடி தடத்த பின்பற்றனுங்கறதுக்காக என்னோட கருத்துக்கள விட்டுட்டேன்.

நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில பிறந்தேன், நான் சின்ன வயசா இருந்ததுல இருந்து, என் குடும்பம் என் கிட்ட, கர்த்தராகிய இயேசு தான் ஒரே உண்மையான தேவன், அவரு நம்மோட இரட்சகர், அவருடைய நாமத்தில ஜெபிச்சாதான் நான் பரலோக ராஜ்யத்துற்கு போக முடியும்ன்னு சொன்னாங்க. நான் வளர்ந்த போது நான் இறையியல் பள்ளிக்குப் போனேன், எங்க போதகர் எங்ககிட்ட “இயேசு கிறிஸ்து நம்மோட இரட்சகர். அவரோட நாமம் எப்பவும் மாறாது. அது ஏன்னா, பைபிள் சொல்லுது ‘இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ (எபிரெயர் 13:8). அதனால நாம கர்த்தராகிய இயேசுவோட பேர எல்லா நேரத்திலேயும் உயர்த்தனும். அவர் வரும்போது நிச்சயமா நாம எடுத்துக் கொள்ளப்படுவோம்.” னு எப்பவும் சொல்லுவாரு. இந்த வார்த்தைகள் கர்த்தரிடத்துல இருக்கற என்னோட விசுவாசத்த இன்னும் உறுதியாக்குச்சு. கர்த்தர் வரும்போது நான் ராஜ்யத்துல எடுத்துக்கொள்ளப்படுனு, அதுக்காக நான் ரொம்ப உற்சாகமா என்னயே பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

ஏப்ரல் 2015ல இறையியல் பள்ளியில பட்டம் வாங்குனதுக்கு அப்புறம், உள்ளூர் விசுவாசிகள வழிநடத்த ஆரம்பிச்சேன். ஆனா ஆராதனைக்கு ரொம்ப ரொம்ப கொஞ்சம் பேர்தான் வந்தாங்க. செலவுகள கூட பார்க்க முடியாத அளவுக்கு காணிக்கைகள் ரொம்பவே குறைவா இருக்குதுங்கறத திருச்சபையோட மேலாளர் கவனிச்சாரு. அதனால அவரு விசுவாசிகளுக்கு கடன்கொடுக்க ஆரம்பிச்சாரு. அவங்களால வட்டியோட பணத்த திருப்பிக் கொடுக்க முடியலன்னா, நிதி அதிகாரி அவங்களோட சண்ட போடுவாரு. அதுக்கப்புறம் அவங்களுக்கு ஆராதனைகளுக்கு வர உண்மையாவே பிடிக்காம போய்டும்.

திருச்சபைய புத்துணர்ச்சி அடைய வைக்கணுங்கற முயற்சியில, நான் உள்ளூர் ஜனங்களுக்கு சுவிசேஷத்த சொல்ல ஆரம்பிச்சேன். விசுவாசிகள வீடுகள்ல சந்திச்சேன், அவங்களுக்காக கூட்டங்கள ஒழுங்குபடுத்தினேன். வாரத்தில இரண்டு மூன்று தடவ உபவாசமும் இருந்து என் ஊழியத்தில முன்னேற என்ன வழிநடத்துங்கன்னு கர்த்தர்கிட்ட கேட்டு ஜெபிப்பேன். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு நான் உழைச்சாலும், அப்பவும் சபைக்கு வர்றவங்க ரொம்ப குறைவாத்தான் இருந்தாங்க. திருச்சபையோட காலியான நிலைய பாக்கும்போது, என் உள்ளம் பலவீனமா உணர்ந்துச்சு, என் நம்பிக்க ரொம்ப ரொம்ப குறைஞ்சுது. அதுக்கப்புறம் ஜெபத்துல, வேதம் வாசிக்கிறதுல, உபவாசத்துல என்னோட முயற்சிகள, இரண்டு மடங்காக்குனேன்‌. அதோட, கொஞ்சம் மத சம்பந்தமான படங்கள பதிவிறக்கம் பண்ணி, பார்த்தேன். ஆனா அப்பவும், என்னால பரிசுத்த ஆவியானவரோட கிரியைய உணர முடியல. அப்பவும் ஆவியில வெறுமையாவும், இருள்ல இருப்பதாவும் உணர்ந்தேன். வேதனைல, கர்த்தர் கிட்ட, “ஓ கர்த்தாவே! பைபிள் சொல்லுது, உங்க நாமத்தில கேக்கிற வரைக்கும் நீங்க எங்களுக்கு கொடுப்பீங்கன்னு. திருச்சபை ரொம்ப ரொம்ப காலியா இருக்கு. உங்க நாமத்தில் ஜெபம் பண்ணிட்டே இருக்கேன், அப்புறம் ஏன் என்னால உங்க பிரசன்னத்த உணர முடியல? கர்த்தாவே, நீங்க எங்க இருக்கீங்க?” ன்னு சத்தமா கத்துனேன். நல்லவேளை, தேவன் என் ஜெபத்த கேட்டாரு.

பிப்ரவரி 2016ல ஒரு நாள், “வேதத்த பத்தின ரகசியத்த வெளியிடு” அப்படிங்கற ஒரு படத்த நான் யூடியூப்ல பார்த்தேன். வேதத்துக்குப் பின்னால இருக்கற ரகசியத்த ரொம்பத் தெளிவா அது விளக்குச்சு. அத பார்த்தது, வேதத்தப் பத்தின ஒரு புதிய புரிதல கொடுத்துச்சு. என்னோட உள்ளத்த வெளிச்சமாக்குச்சு. ஆனா இந்த வார்த்தைகள் எங்கு இருந்து வந்துச்சு அப்படின்னு நா ஆச்சரியப்பட்டேன். வேதத்தில அவைகளெல்லாம் இல்லையே. நான் அதுக்கப்பறம், அந்த வீடியோவ பதிவிறக்கம் பண்ணி, நிறைய தடவை பார்த்தேன், அத பாக்க பாக்க, எனக்கு அது ரொம்ப புடிச்சது. அந்த ஐக்கியம் முழுசுமே வேதத்தோட முழுமையா ஒத்துப்போச்சு. “கிழக்கத்திய மின்னல்” னால அது உருவாக்கப்பட்டதுன்னு நான் கண்டுபிடிச்சேன். அதனால “கிழக்கத்திய மின்னல்” படங்கள தேட ஆரம்பிச்சேன். அப்போ தேவனுடைய நாமம் மாறிவிட்டதோ?! அப்படிங்கிற ஒரு படம் இருக்கிறத பாத்து, அப்படியே ஆடிப்போயிட்டேன். அந்தத் தலைப்பு என்ன உண்மையாவே இழுத்துச்சு, அதனால அப்பவே அத பதிவிறக்கம் பண்ணி பார்த்தேன். படத்தோட பாதியில, கடைசி நாட்கள்ல தேவன் வரும்போது, அவர இயேசுன்னு கூப்பிட மாட்டாங்க. ஆனா, அவருக்கு ஒரு புது நாமம் இருக்கும்னு அதுல சொல்லப்பட்டுச்சு. இது எனக்கு பயங்கர அதிர்ச்சியா இருந்துச்சு. நான் நெனச்சேன் “அது உண்மையா இருக்க முடியாதுனு! பைபிள் ரொம்ப தெளிவா சொல்லுது ‘இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’ (எபிரெயர் 13:8). தேவனோட நாமம் எப்படி மாறும்? கடந்த 2000 வருஷங்களா, ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில ஜெபிக்கிறாங்க, கிரியை செய்றாங்க. அது எப்பவும் மாறல. எப்படி கிழக்கத்திய மின்னல் தேவனோட நாமம் மாறிடுச்சுன்னு சொல்ல முடியும்?”

அதுக்கப்புறம், படத்தில, சகோதரி யாங் சொல்றத கேட்டேன்: “வேதம் சொல்லுது ‘இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.’ அப்படின்னா தேவனோட மனநிலையும், அவரோட சாராம்சமும் நித்தியமானது, மாறாததுன்னு அர்த்தம். அவரோட நாமம் எப்பவுமே மாறாதுன்னு அதுக்கு அர்த்தமில்ல.” அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல ஒரு பத்திய படிச்சாங்க. நாம அத பார்க்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாரத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? … ஆகவே, ‘தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,’ என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் ‘தேவன் மாறாதவர்’ என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). அப்புறம் சகோதரி யாங்க் சொன்னாங்க: மனுகுலத்த இரட்சிக்கிற தேவனோட கிரியையின் போது, அவர் வேற வேற கிரியைய செய்யறாரு, வேற வேற காலங்கள்ல வேற வேற பேர்களை எடுத்துக்கிறாரு. ஆனா அவரோட சாராம்சம் எப்பவுமே மாறாது. தேவன் எப்பவுமே தேவனா தான் இருப்பாரு. அப்படின்னா, தேவனோட நாமம் யேகோவான்னாலும் இல்ல இயேசுன்னாலும், அவரோட சாராம்சம் அதேதான். அதே தேவன் தான் எப்பவும் கிரிய செய்றார். யூத பரிசேயர்களுக்கு, ஒரு காலத்தில இருந்து இன்னொரு காலத்துக்கு தேவனோட கிரியை மாறும்போது அவரோட நாமம் மாறும்னு தெரியாது. அவங்க நினைச்சாங்க யேகோவா மட்டுந்தான் அவங்க தேவன், இரட்சகர்னு. பல தலைமுறையா அவங்க, ‘யேகோவா மட்டுந்தான் தேவன்; யேகோவாவ தவிர வேற இரட்சகர் இல்ல’ங்கற நம்பிக்கைய பிடிச்சுட்டு இருந்தாங்க.’ அதனால தேவன் இயேசுங்கற நாமத்தில மீட்பின் கிரியைய செஞ்சபோது, அவங்க காட்டுத்தனமா கண்டனம் பண்ணி எதிர்த்தாங்க, முடிவில அவர சிலுவையில அறஞ்சாங்க. அவங்க ரொம்ப கொடூரமான குற்றத்த செஞ்சாங்க, தேவனால தண்டிக்கப்பட்டாங்க. ஒருத்தரால கூட தேவனோட ஞானத்த புரிஞ்சுக்கவும், அவர வரையறுக்கவும் முடியாது. கடைசி நாட்கள்ல, அவரு அவரோட கிரியையும் நாமத்தையும் மாத்திட்டாரு அப்படிங்கிறதுனால, நாம தேவனோட சாராம்சத்தையும் இல்ல ஒரே தேவனோட கிரியையும் ஏத்துக்கலைனா, அது அபத்தமானது, அறிவில்லாதது! ஒவ்வொரு காலத்திலேயும் தேவன் எடுத்துக்கற நாமத்துல ஒரு அர்த்தம் இருக்கு, அது மனுஷனுக்கான பெரிய இரட்சிப்பு.”

படத்தோட இந்த கட்டத்துல, தேவனோட நாமம் மாறலாம்னும், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” பைபிள் சொல்ற தேவனோட மாறாத சாராம்சத்தையும், மனநிலயையும் குறிக்குதுனும் நான் உணர்ந்தேன். ஆனா அதுக்காக தேவனோட நாமமும், கிரியையும் எப்போதும் மாறாதுன்னு அர்த்தம் இல்ல. அவரோட கிரியைக்குத் தேவப்படுற மாதிரி தேவனுடைய நாமம் மாறுது. “நான் வேதத்தோட நேரடியான அர்த்தத்தில இருந்து காரியங்களை புரிஞ்சுகிட்டேன்.” தேவனோட நாமம் எப்பவும் மாறாதுன்னு நெனச்சேன்—அது என்னோட கற்பனதாங்கறது எனக்கு புரிஞ்சுது! பரிசேயர்கள், யேகோவா தங்களோட தேவன்னும், யேகோவாங்கற நாமம் எப்பவும் மாறாதுன்னும் வலியுறுத்துனாங்க. அதனாலதான் அவங்க, கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தபோதும், மேசியான்னு அழைக்கப்படாத யாரும் தேவன் இல்லன்னு நம்புனாங்க. அதோட அவங்க வேணுமுனே கர்த்தராகிய இயேசுவ எதிர்த்தாங்க, கண்டனம் பண்ணாங்க, கடைசில அவரோட இரட்சிப்ப இழந்து போனாங்க. என்னோட சொந்த கண்ணோட்டத்த ஒதுக்கி வச்சுட்டு, படத்துல வர நட்புறவ கவனமா கவனிக்கனும்னு உணர்ந்தேன். அப்பதான் நானும் பரிசேயர்கள போல, என்னோட சொந்த கற்பனைகளால, கர்த்தரை எதிர்க்கல.

அப்புறம் முக்கிய கதாபாத்திரம் இன்னொரு கேள்விய கேட்டாங்க: “அப்போ ஒவ்வொரு காலத்திலேயும் தேவனோட நாமத்தோட முக்கியத்துவம் என்ன?” நான் எனக்குள்ளயே நெனச்சேன் “இது ஒரு அருமையான கேள்வி, எனக்கும் தெரியாது. ஒவ்வொரு காலத்துக்குமான தேவனோட நாமத்தில அர்த்தம் இருக்குன்ற ஐக்கியத்த அவங்க பகிர்ந்துட்டாங்க. அது எல்லாமே மனுக்குலத்தோட இரட்சிப்புக்காகத்தான், அப்ப உண்மையாவே, தேவனோட நாமங்களோட முக்கியத்துவம்தான் என்ன?” சுவிசேஷகர்கள்ல ஒருத்தங்களான சகோதரி யாங்க் தேவனோட வார்த்தைகள்ல சிலத படிச்சாங்க. “சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “யேகோவா’ என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். ‘இயேசு’ என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். … கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. ‘யேகோவா’ என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் வணங்கப்படும் தேவனுக்கான மரியாதையாகும். ‘இயேசு’ என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

சகோதரி ஃபெங்க் அப்பறம் ஐக்கியப்பட்டாங்க “நியாயப்பிரமாணத்தின் காலத்தில தேவனுடைய நாமம் யேகோவா. அது அந்தக் காலத்தோட ஜனங்களுக்கு அவர் வெளிப்படுத்தின மகத்துவம், கோபம், தண்டனை, இரக்கம் ஆகிய மனநிலைகள குறிச்சுது. நியாயப்பிரமாணத்தின் காலத்தில தேவன் தன்னுடைய கிரியைய யேகோவாங்கற நாமத்துல தொடங்கினாரு. அவர் நியாயப்பிரமாணமங்களயும் கட்டளைகளயும் கொடுத்து, பூமியில மனுக்குலத்த அவங்க வாழ்க்கையில வழிநடத்தினாரு. அவங்க கண்டிப்பா நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்ப்படியனும், அவர ஆராதித்து உயர்த்தறதுக்கு கத்துக்கணும்னு வற்புறுத்ததுனாரு. நியாயப்பிரமாணத்த யாரெல்லாம் பின்பற்றுறாங்களோ, தேவனுடைய ஆசீர்வாதங்களும் கிருபையும் அவங்கள தொடரும். ஆனா நியாயப்பிரமாணத்த யாரெல்லாம் மீறங்ராகளோ, அவங்க கல்லெறிந்து கொல்லப்படுவாங்க, இல்லனா பரலோக அக்கினியால எரிக்கப்படுவாங்க. அதனால யேகோவாவோட நாமத்த நியாயப்பிரமாணத்திற்கு கீழே இருந்த இஸ்ரவேலர்கள் அத உண்மையா காத்து கனப்படுத்துனாங்க. ஆயிரக்கணக்கான வருஷங்களா யேகோவாவோட வழிநடத்துதல் கீழ வாழ்ந்தாங்க. நியாயப்பிரமாணத்தின் காலத்தோட முடிவில ஜனங்க ரொம்ப சீர்கேடாவும் பாவம் செய்றவங்களாவும் மாறிட்டாங்க. அவங்களால நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய முடியல. அத மீறுனதுனால ஒவ்வொருத்தரும் தண்டனைய பெற வேண்டிய தொடர் ஆபத்துல இருந்தாங்க. அதனால தான் இயேசுங்கற நாமத்துல தேவன் மீட்பின் கிரியயோட படிநிலைய ஆரம்பிச்சாரு. அவர் நியாயப்பிரமானத்தின் காலத்த முடிச்சு, கிருபையின் காலத்த தொடங்கினாரு. கிருபையின் காலத்துல, இயேசு அன்பான இரக்கமான மனநிலைய வெளிப்படுத்தினாரு. அவர் மனுஷன் மேல அளவில்லாத கிருபைய கொடுத்தாரு. முடிவில சாத்தானிடத்துல இருந்து மனுஷன மீட்பதற்காக சிலுவையில அறையப்பட்டாரு. அதுக்கப்புறம் மனுஷன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க ஆரம்பிச்சான், இயேசுவின் நாமத்த பரிசுத்தமானதுன்னு ஆராதிக்க ஆரம்பிச்சான். அதோட தேவனோட மன்னிப்பையும், அளவில்லாத கிருபையும் அனுபவிக்க ஆரம்பிச்சான். தேவனோட கிரியையோட முன்னாடி இரண்டு நிலைகளையும் பாக்கும்போது, தேவன் ஒவ்வொரு காலத்திலேயும் எடுத்துக்கிற நாமத்துக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்குன்னு தெரியுது. அது அந்தக் காலத்துல தேவன் வெளிப்படுத்தின கிரியையும் மனநிலையையும் குறிக்குது. கிருபையின் காலத்தில, கர்த்தர் வந்தபோது அவர இயேசுன்னு கூப்பிடாம யேகோவான்னு கூப்பிட்டிருந்தா, அப்பறம் நியாயப்பிரமாணத்தின் காலத்தோட, தேவனின் கிரியை நின்னு போயிருக்கும். சீர்கேடான மனுக்குலம் தேவனோட மீட்ப எப்பவும் அடைஞ்சிருக்காம, நியாயப்பிரமாணத்த மீறுனதுக்காக ஆக்கினயையும் தண்டனையையும் அடைஞ்சிருப்பாங்க. அப்படியே, கடைசி நாட்கள்ல தேவன் இன்னும் இயேசுங்கற நாமத்த கொண்டிருந்தார்னா, இந்த சீர்கேடான மனுக்குலம் அவங்க பாவங்களுக்கான மன்னிப்ப மட்டுந்தான் பெறும். அவங்க எப்பவும் சுத்திகரிப்ப அடைய முடியாம, தேவனோட ராஜ்ஜியத்தில நுழைய முடியாம போயிருவாங்க. இது ஏன்னா கர்த்தராகிய இயேசுவோட மீட்புனால மனுக்குலத்தோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கு, ஆனா அவங்க பாவ சுபாவம் அப்படியே தான் இருக்கு. அவங்க எப்பவும் பாவம் பண்ணி தேவன எதிர்க்கிறாங்க, அவங்க தேவனாலே முழுமையா ஆதாயப்படுத்தப்படல. அதனாலதான் கடைசி நாட்கள்ல தேவன் மறுபடியும் மாம்சமாகி, கர்த்தராகிய இயேசுவோட அடித்தளத்துல, மனுக்குலத்த நியாயம்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், பாவத்திலிருந்து முழுசா மனுஷன இரட்சிக்கறதுக்கு, கிரியையோட புதிய அடிய எடுத்து வெச்சாரு. அவரு ராஜ்யத்தின் காலத்த ஆரம்பிச்சு, கிருபையின் காலத்த முடிச்சாரு. தேவனுடைய கிரிய, முன்னேற முன்னேற, காலம் மாறிடுச்சு. அவருடைய கிரிய வேறுபட்டுச்சு. அதுக்கு தகுந்த மாறி அவரோட நாமம் மாறிடுச்சு.”

இந்த கட்டத்துல, “அப்போ, தேவன் ஒவ்வொரு காலத்துலயும் ஒரு நாமத்த எடுத்துகிட்டடார்னா, அதுக்கு பின்னால ஏதோ அர்த்தம் இருக்குன்னு நான் நெனச்சேன் ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு காலத்த குறிக்குது நியாயப்பிரமாணத்தின் காலத்துல தேவன் எடுத்துக்கிட்ட யேகோவாங்குற நாமம் மகத்துவம், கோபம், தண்டனை, இரக்கம் ஆகிய தேவனோட மனநிலைமைகள குறிச்சுது. கிருபையின் காலத்தில அவர் எடுத்துக்கொண்ட இயேசுங்கற நாமம் அவரோட இரக்கமுள்ள, அன்புள்ள மனநிலைகள குறிச்சுது. கடைசி நாட்கள்ல மனுக்குல சுத்திகரிப்பு, முழு இரட்சிப்போட கிரியையை செய்யறதுக்கு தேவன் வர்றார். தேவனோட கிரியை மாறும்போது அவரோட நாமமும் மாறுது. தேவனோட நாமங்களுக்குள்ள இவ்ளோ ரகசியங்கள் இருக்கும்னு நான் எப்பவுமே நினைச்சதில்ல.” என்னோட ஆர்வம் இன்னும் வளர்ந்துச்சு, அதனால நான் காணொளிய பார்த்துகிட்டே இருந்தேன்.

அதுக்கப்புறம் சகோதரி ஃபெங் கடைசி நாட்கள்ல தேவனோட நாமம் சர்வவல்லமையுள்ள தேவன்னு சொன்னாங்க. வெளிப்படுத்துதல் 1:8-அ குறிப்பிட்டாங்க. “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.” கூடவே வெளிப்படுத்துதல் 11:16-17 சொல்லுது: “அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து; இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.” வெளிப்படுத்துதலில் 4:8, 16:7, அப்புறம் 19:6-ல இருக்குற மாறி வேற நிறைய தீர்க்கதரிசனங்களும் இருக்கு. கடைசி நாட்கள்ல தேவனுடைய புதிய நாமம், “சர்வவல்லவர்” னு இருக்கும், அத, சர்வவல்லமையுள்ள தேவன்-னும் சொல்லலாம்.

கேட்டுட்டு இருக்கும்போதே, அத உறுதிப்படுத்த, நா என் வேதாகமத்த திருப்பி பார்த்தேன். அதுல எல்லாத்தலயுமே “சர்வவல்லவர்” ங்கற நாமம் இருந்துச்சு. அதிர்ச்சியாகி, நான் நினைச்சேன், “அப்போ, ரொம்ப காலத்துக்கு முன்னாடியே, கடைசி நாட்களோட தேவனுடைய நாமம் வேதத்தில தெளிவா குறிப்பிடப்பட்டிருக்கு. வெளிப்படுத்துதல்-ல நாலு ஜீவன்களும் தேவன இரவும் பகலும் துதிச்சுக்கிட்டே இப்படி சொல்லுது ‘இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன(வெளிப்படுத்தல் 4:8). அவைகள் சர்வ வல்லமையுள்ள தேவனோட நாமத்த துதிச்சுட்டு இருந்துச்சு. சர்வ வல்லவர்-ங்கற நாமம் வேற நிறைய இடத்திலயும் குறிப்பிடப்பட்டிருக்கு. கடைசி நாட்கள்ல, ‘சர்வவல்லமையுள்ள தேவன்’ ங்கற நாமம் வெளிப்படுத்துதல்ல இருக்கிற தீர்க்கதரிசனங்களோட முழுசா ஒத்துப்போகுது. நா இவ்வளவு வருஷங்களா கர்த்தரை விசுவாசிச்சேன், நிறைய வசனங்கள படிச்சிருக்கேன். இந்த ரகசியங்களை எப்படி நான் கவனிக்காம விட்டேன்?”

நான் தொடர்ந்து பார்த்துகிட்டே இருந்தேன். சுவிசேஷத்த சொல்ற ஒரு கதாபாத்திரம் இப்படி சொல்றத பார்த்தேன்: “தேவன் ஞானமுள்ள தேவன். அவர் செய்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் பெரிய முக்கியத்துவம் இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன்-ங்கற நாமம் கடைசி நாட்கள்ல அவர் வெளிப்படுத்துற அவரோட கிரியையும் மனநிலையயும் முழுசா குறிப்பிடுது. தேவன் அவராவே இந்த ரகசியங்கள நமக்கு வெளிப்படுத்தாட்டி, எத்தன வருஷம் நாம வேதத்த படிச்சாலும் நம்மளால அத புரிஞ்சிக்க முடியாது.” அதுக்கப்புறம், அவரு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல ஒரு பத்திய படிச்சாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான் தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான் தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானம், பூமி, கடல் என எல்லா உயிரினங்களுக்கும் நான் தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

அதுக்கப்புறம் அவர் சொன்னார்: “கடைசி நாட்கள்ல, தேவன், சர்வ வல்லமையுள்ள தேவன்-ங்கற நாமத்தில ராஜ்யத்தின் காலத்தோட அவரோட நியாயந்தீர்க்குற கிரியைய செய்யறாரு. பாவம் பண்ற, தேவன எதிர்க்கிற மனுஷனோட சாத்தானிய சுபாவத்த வெளிப்படுத்தறதுக்கும், நம்மோட கீழ்படியாமைய, அநீதிய நியாயந்தீர்க்கறதுக்கும் அவரு சத்தியத்த வெளிப்படுத்துறாரு. இந்த வார்த்தைகளால நம்மோட சுபாவத்தயும் சாராம்சத்தயும் நாம தெரிஞ்சுக்க முடியும். நாம சாத்தானால எவ்வளவு ஆழமா கெடுக்கப்பட்டிருக்கோம்-ன்ற சத்தியத்த பாத்து, நம்ம சீர்கேட்டோட வேரயும் புரிஞ்சுக்க முடியும். தேவனோட நீதியான, புண்படுத்தமுடியாத மனநிலையயும் தெரிஞ்சுக்கலாம். நம்ம மன நிலைமைகள மாத்தறதுக்கு அவரு, பொல்லாப்ப விட்டு, சத்தியத்த பின்பற்றவும், நம்மோட மனநிலமைகள் மாறவும், தேவனாலே இரட்சிக்கப்படுவும், வழிய காட்றாரு. மனுக்குலத்த நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், நம்ம சுபாவத்தின்படி நம்மல பிரிச்சு, நல்லதுக்கு பரிசு கொடுத்து, கெட்டத தண்டிச்சு, சீர்கேடான மனுக்குலத்த பாவத்திலிருந்து முழுசா இரட்சிக்கறதுக்கு தேவனோட ஆறாயிரம் வருஷ இரட்சிப்பு திட்டத்த முடிக்கிறதுக்கு, தேவன் வந்திருக்காரு. கடைசி நாட்கள்ல, தேவன் அவரோட நீதியான, மகத்துவமான, கோபமான, குற்றத்த பொறுக்காத மனநிலயோட வெளிப்பட்டிருக்காரு. அவர் தன்னோட இயல்பான மனநிலைய, அவர் கிட்ட என்ன இருக்கு, அவர் யாரு அப்படிங்கறத வெளிப்படையா எல்லாருக்கும் வெளிப்படுத்தியிருக்காரு. மனுக்குலம் அத்தன பேரோட சீர்கேட்டையும் அநீதியையும் நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும், பாவத்திலிருந்து நம்மள முழுசா இரட்சிக்கவும், மனுஷனோட உண்மையான சாயல திரும்பத்தரவும் வந்திருக்காரு. அவர் எல்லாத்தயும் படைக்க மட்டுமில்ல, அவர் எல்லாத்தயும் ஆளவும் செய்றாருன்னு எல்லாரும் பாக்கணும்னு அவர் விரும்பறார். அவர் மனுக்குலத்தோட பாவநிவாரண பலி மட்டும் இல்ல, அவரால நம்மள பூரணப்படுத்தவும் மறுரூபப்படுத்தவும், சுத்திகரிக்கவும் முடியும். அவரே முதலும் முடிவுமானவர். அவரோட அற்புதத்தன்மயயும், இல்ல, அவரோட செயல்களயும் ஒருவராலும் புரிஞ்சுக்க முடியாது. அதனாலதான் கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன்-ங்கற நாமம் ரொம்ப பொருத்தமா இருக்கு. அவரோட நாமத்தில ஜெபிக்கிற அவரோட வார்த்தைகள படிக்கிற யாராயிருந்தாலும், அவரோட வழிநடத்தலையும், பரிசுத்த ஆவியானவரோட கிரியையயும் பெற்றுக்க முடியும், வாழ்க்கைக்கான தேவனோட வளமான போஷிப்பையும், தண்ணீர் பாய்ச்சலயும் அனுபவிக்க முடியும். மதசார்ந்த உலகம் இப்போ தனிமைய அனுபவிக்குது. ஜனங்களோட விசுவாசம் தணிஞ்சிட்டிருக்கு, ஆவிக்குரிய காரியத்துல அவங்க ரொம்ப சோர்வாவும், பிந்தியும் இருக்காங்க, போதிக்கிறவங்க ஒன்னும் இல்லாம இருக்காங்க, ஜனங்க ஜெபத்தில அசைக்கப்படறதில்ல. எல்லாத்துக்கும் மேல, அதிக அதிகமான ஜனங்க, உலக இச்சைகளுக்கு அடிபணியறாங்க. அவங்க ஆட்டுக்குட்டியானவரோட இசைஞ்சு இல்ல. ஜீவத் தண்ணீர்களோட போஷிப்ப அவங்க பெறதில்ல. அவங்க இருளுக்குள்ள விழுந்து, அவங்க வழிய இழந்தறாங்க.”

எனக்கு இத பாக்குறதுல ரொம்ப உற்சாகமாய் இருந்துச்சு. சர்வ வல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் உண்மையாவே ரொம்ப அதிகாரமுடையது. குறிப்பா இது: “என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள்.” இந்த வார்த்தைகள தேவனோட மகத்துவமும் நீதியும் நிறைஞ்சிருக்கு. தேவனைத் தவிர வேற யாராலயும் இப்படிப்பட்ட அதிகாரமும் மகத்துவமும் நிறைஞ்ச காரியத்த சொல்ல முடியாது. கர்த்தராகிய இயேசு உண்மையாவே திரும்ப வந்துட்டாரு-ங்கற இது, தேவனோட சத்தங்கறது எனக்கு தெரியும். என்னோட ஆராதனையிலும், வீட்டு ஊழியத்துலேயும் நா நிறைய கொடுத்திருக்கேன் அதனால விசுவாசிகள், தேவனுக்கு செவிசாய்த்து, ஆராதனைகள்ல கலந்துக்குவாங்க. வாரத்துல ரெண்டு அல்லது மூணு தடவ உபவாசமிருந்து ஜெபிச்சிருக்கேன், ஆனா திருச்சபை புத்துயிரடையவே இல்ல. என்னோட தனிப்பட்ட விசுவாசம் கூட குறைஞ்சிட்டே வந்தது, என்னால, என் பக்கத்துல, கர்த்தர உணர முடியல. இப்ப எனக்கு தெரியும் சர்வவல்லமையுள்ள தேவன்-ங்கற நாமத்தில, தேவன் மனுக்குலத்த நியாயந்தீர்க்கிற, சுத்திகரிக்கிற வேலையோட புதிய கட்டத்த செஞ்சிட்டு இருக்காரு. கர்த்தரை விசுவாசிக்கிற நாம, தேவனோட புதிய கிரியையோட இணைஞ்சுக்கல. தேவனோட இப்போதைய வார்த்தைகளோட போஷிப்பும், இல்ல ஆவியானவரோட வழிநடத்தலும் நமக்கு கிடைக்கல. நாம இருள்ல விழுந்தோம். சர்வ வல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் இரட்சிப்ப நாம ஏத்துட்டு, அவரோட நாமத்தில ஜெபம்பண்ணி, அவரோட வார்த்தைகள படிக்கிறதுனால மட்டுந்தான் நம்மால பரிசுத்த ஆவியானவரோட வழிநடத்தலயும் கிரியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அவங்க படத்தோட கடைசில, சர்வ வல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல, இன்னொரு பத்திய படிச்சாங்க. “யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்த தற்போதையக் கட்டம் வரை, என இந்த மூன்றுக் கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியை தான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்றுக் கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). அதுக்கு மேலயும் அப்பறம் எனக்கு புரிஞ்சுது யேகோவா, இயேசு, சர்வ வல்லமையுள்ள தேவன் எல்லாருமே ஒரே தேவன் தானு. தேவனுக்கு வேற வேற நாமம் இருக்குற, ஒவ்வொரு காலத்திலும் வேற வேற கிரியையை செய்யறாரு. ஆனா அவர் எப்பவுமே ஜனங்களோட தேவைகளப் பொறுத்து கிரியை செய்றாரு. தேவனால மட்டுந்தான் இந்த ரகசியங்கள வெளிப்படுத்த முடியும். என் இதயத்தில எனக்கு தெரியும், திரும்ப வந்த கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவன்னு. சர்வவல்லமையுள்ள தேவனோட நாமத்த ஏத்துக்கறது கர்த்தராகிய இயேசுவுக்கு துரோகம் பண்றது இல்ல, ஆனா ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகள பின்பற்றுவது தான் அது. வெளிப்படுத்துதல் சொல்ற மாதிரியே, “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே(வெளிப்படுத்தல் 14:4).

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில இருக்கற சகோதரர சகோதரிகளோட நான் பழக ஆரம்பிச்சேன். அவங்களோட கொண்ட கூடுகையினாலும் நட்புறவினாலும் நான் சில உண்மைகள புரிஞ்சுட்டேன். என் விசுவாசத்தில இருந்த நிறைய புதிர்களுக்கு பதில் கிடைச்சிருக்கு. எனக்கு நிறைய ஆவிக்குரிய ஆகாரம் கெடச்சுது. உண்மையாவே நான் சிங்காசனத்துனக்கு முன்னாடி எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரோட விருந்தில கலந்துகிட்ட மாதிரி உணர்றேன். நான் உண்மையாவே சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி சொல்றேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

Christian Testimony | தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

முக்கிய கதாபாத்திரமான ஒரு பக்தியுள்ள விசுவாசியானவள் கர்த்தர் திரும்பி வருவதற்காக ஏங்குகிறாள். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டதாக...

Christian Testimony | தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது (Tamil Subtitles)

கதையின் நாயகி எப்பொழுதும் உற்சாகமாக தேவனுக்காக தன்னை செலவழித்து, தேவன் திரும்புவதற்காக காத்திருக்கிறார். பின்னர் தற்செயலாக, தேவன் ஏற்கனவே...

கிறிஸ்தவ சாட்சி | வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா

பேரழிவுகளுக்கு முன்பதாக தங்களைப் பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீது திரும்ப வருவார் என்று கர்த்தரை...

Leave a Reply