நான் இனிமேல் தேவனை வரம்புக்குட்படுத்த மாட்டேன்

செப்டம்பர் 28, 2023

நான் சின்ன வயசிலிருந்தே என்னோட அம்மாவோட சேந்து கர்த்தராகிய இயேசு மேல விசுவாசம் வச்சு, அவரோட அபரிவிதமான கிருபைய அனுபவிச்சேன். இது மனுக்குலத்து மேல கர்த்தராகிய இயேசுவுக்கிருந்த ஆழமான இரக்கத்தயும் அன்பயும் பத்திய ஒரு ஆழமான உணர்வ எனக்குக் கொடுத்துது. நான் எப்பவுமே அவர்கிட்ட கிருப கேட்டு வேண்டுவேன். நான் பிரச்சினைகள சந்திச்சப்பவெல்லாம், நான் கர்த்தர்கிட்ட ஜெபிப்பேன். நான் பாவம் செஞ்சிருந்தப்போ, நான் பாவத்த அறிக்கையிட அவருக்கு முன்னால வருவேன். கர்த்தர் இரக்கமுள்ளவராவும் அன்பானவராவும் இருக்கறதனால, அவர் எப்பவும் என்னோட பாவங்கள மன்னிப்பார்.

2019 மே மாசத்தில ஒருநாள், நான் ஃபேஸ்புக்ல சகோதரிகள் டயானாங்கறவங்களயும் வனிசாங்கறவங்களயும் சந்திச்சேன். நாங்க ஒன்னா சேந்து வேதாகம பாடக் குழுவில பங்கேற்றோம், வேதாகமம் குறிச்ச வனிசா அவங்களோட ஐக்கியம் ரொம்ப நுண்ணறிவுள்ளதா இருந்தத நான் கண்டேன். ஒரு தடவ, ஒரு கூடுகையில, வனிசா அவங்க இப்படிச் சொன்னாங்க: “கர்த்தர் தாம் கடைசிநாட்கள்ல திரும்பவும் வருவதா சொல்லியிருக்காரு, அதனால நம்மால எப்போது அவர வரவேற்க முடியும்? கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது(யோவான் 10:27). ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). அதோட, ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). இந்தப் பத்திகள்லயிருந்து கடைசி நாட்கள்ல கர்த்தர் வர்றப்போ, அவர் தம்மோட வார்த்தைகள வெளிப்படுத்துவார்ங்கறத நாம பாக்க முடியும். கடைசி நாட்கள்ல கர்த்தர வரவேற்கறதுக்கு கர்த்தரோட சத்தத்தக் கவனமா கேக்கறதுதான் முக்கியம். நாம தேவனோட சத்தத்தக் கேக்கறப்ப, புத்தியுள்ள கன்னிகைகளப் போலயே நம்மால கர்த்தர வரவேற்க முடியும்.” வனிசா அவங்களோட ஐக்கியத்த கேட்டப்ப நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இப்படிப்பட்ட நுண்ணறிவுள்ள வார்த்தைகள நான் கேட்டதே இல்ல. கர்த்தர வரவேற்கறதுக்கான திறவுகோல அவங்க அடையாளங்கண்டாங்க. நான் இதுக்கு முன்னால இத ஒருபோதும் உணர்ந்ததில்ல. அதுக்கப்புறமா, வனிசா அவங்க ரொம்ப உயிரோட்டமான ஒரு பாடல் காணொளிய எனக்குக் காட்டுனாங்க. காணொளியோட முடிவில, அது “சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை” அப்படின்னு சொன்னத நான் பாத்து, ஆர்வமானேன். வேதாகம வகுப்பு முடிஞ்சப்போ, நான் அவசரமா ஆன்லைன்ல தேடுனேன். நான் நெறைய எதிர்மறையான தகவல்களப் பாத்தேன், அதனால அதிகமா அறிஞ்சிக்கிட டயானா அவங்கள அவசரமா தொடர்பு கொண்டேன். கர்த்தர வரவேற்கறது ரொம்பப் பெரிய விஷயம்னும், வதந்திகளக் கண்டு தடுமாற வேண்டாம்னும் டயானா அவங்க என்னை ஊக்கப்படுத்தினாங்க. நான் முதல்ல என்னோட கவலைகள ஒதுக்கி வச்சுட்டு, இது மெய்யான வழியான்னு பாக்க தாழ்மையோட தேடணும். கொஞ்ச நாளுக்கப்புறமா, ஒரு கூடுகையில கலந்துக்குமாறு டயானா அவங்க என்னை அழைச்சாங்க. நான் போகவா வேண்டாமா? அப்படின்னு நான் ரொம்ப முரண்பாடா உணந்தேன். வனிசா அவங்களோட வேதாகமத்தக் குறிச்ச ஐக்கியம் உண்மையிலே நுண்ணறிவுள்ளதா இருந்துது, நான் அதிகமா கேக்க விரும்புனேன், ஆனா அவங்க பிரசங்கிக்கறது மெய்யான வழியா இருக்காதோன்னு நான் கவலப்படவும் செஞ்சேன். என்னோட தயக்கத்துக்கு மத்தியில, நான் கர்த்தர்கிட்ட அவரோட வழிநடத்துதலக் கேட்டு ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, நான் கூடுகையில கலந்துக்கிட்டேன்.

கூடுகையப்போ, வனிசா அவங்க என்கிட்ட உற்சாகமா இப்படிச் சொன்னாங்க: “கர்த்தராகிய இயேசு ஏற்கனவே மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்துருக்கார். சர்வவல்லமையுள்ள தேவன் கிருபையின் காலத்த முடிச்சு, ராஜ்யத்தின் காலத்த ஏற்படுத்தியிருக்கார், மில்லியன் கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தியிருக்கார், கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் பணியின் அஸ்திவாரத்தின் மேல, மனுக்குலத்த முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்கறதுக்காக அவர் தேவனோட வீட்டிலிருந்து துவங்கி நியாயத்தீர்ப்புக் கிரியையச் செஞ்சிக்கிட்டிருக்கார். சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துற வார்த்தைகளெல்லாமே சத்தியம், அவை தேவனோட மனுவுருவாதல், அவரோட மூன்று கட்ட கிரியைகள், வேதாகமத்தின் உள் சம்பவம் ஆகியவற்ற வெளிப்படுத்துது. அவரோட வார்த்தைகள் மனுக்குலத்தோட பாவத்தின் பிறப்பிடத்தயும், சாத்தான் எப்படி மனுக்குலத்த சீர்கெடுக்கறான்கறதயும், தேவன் எப்படி மனுக்குலத்த முன்னேற்ற நிலைகள்ல இரட்சிக்கறார்ங்கறதயும், கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்புக் கிரியையோட அர்த்தத்தயும் சொல்லுது. விசுவாசிகள் இரட்சிப்ப அடையறதுக்கான வழிகளயும் தேவன் நமக்குக் காட்டியிருக்கார். உதாரணமா, நம்மோட சீர்கேட்டக் களைவதற்கு தம்மோட வார்த்தைகளின் நீயாத்தீர்ப்ப எவ்வாறு அனுபவிச்சறியறதுங்கறதயும், சத்தியத்த கடைப்பிடிச்சு நேர்மையானவங்களா இருக்கறது எப்படிங்கறதயும், அவரோட சித்தத்தச் செய்றவங்களா மாறுறதுக்கு அவருக்குப் பயந்து, தீமையிலிருந்து விலகுறது எப்படிங்கறதயும், இன்னும் பலவற்றயும் அவர் விளக்குறார். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் கிரியைகளும் கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனத்த நிறைவேற்றியிருக்குது: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). ‘என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:48). ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17).” கர்த்தராகிய இயேசு மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்காருன்னு சகோதரி சொன்னதக் கேட்டதும்? நான் அத விசுவாசிக்கத் துணியல, அதனால நான் அமைதியா தேவனிடம் ஜெபிச்சேன், தேவன் எப்படி சொன்னாருங்கறத நெனச்சுப் பாத்தேன்: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது(மத்தேயு 5:3). “தேவன் திரும்பி வர்றது பெரிய விஷயம், என்னால கண்மூடித்தனமா எந்த முடிவுக்கும் வர முடியாது. நான் தாழ்மையா தேடறவளா இருக்கணும், தொடர்ந்து கேக்கணும்” அப்படின்னு நான் நெனச்சேன்.

அதுக்கப்புறமா, வனிசா அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய என்னை வாசிக்கச் சொன்னாங்க. “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). நான் வாசிச்சப்போ, இந்த வார்த்தைகள்ல ஏதோ வித்தியாசம் இருந்ததா உணர ஆரம்பிச்சேன், அவற்றின் மேல ஒரு குறிப்பிட்ட பயபக்திய என்னால உணராம இருக்க முடியல: இந்த வார்த்தைகள் ரொம்பக் கடுமையா இருந்துது. ஒவ்வொரு வார்த்தயும் சொற்றொடரும் அதிகாரமும் வல்லமையும் நெறஞ்சிருந்துது. அவை எந்த சாதாரண மனுஷனும் சொன்ன வார்த்தைகள் போல தெரியல. தேவனால மட்டுந்தான் இப்படி பேச முடியும். ஆனா அதுக்கப்புறமா நான் மேலும் நெனச்சேன், “அது சரியில்ல, தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர். அவரோட வார்த்தைகள் ஆறுதலும் மென்மையும் நெறஞ்சவை. ஆனா இந்த வார்த்தைகள் ரொம்பக் கடுமையா இருக்கு, அவை மனுக்குலத்தோட சாபமோ அல்லது ஆக்கினையோ போல இருக்கு. இவை உண்மையில தேவனோட வார்த்தைகதானா? இந்த வார்த்தைகள் அவ்வளவு அதிகாரம் நெறஞ்சவையா இருந்தா, அவை தேவனோட வார்த்தைகளா இருக்கணும், இல்லயா? ஆனா சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையிலே திரும்பி வந்திருக்கற கர்த்தராகிய இயேசுவா இருந்தா, அவரப் போலவே இவரும் பேசணும். அவர் இரக்கமுள்ளவராவும் அன்பானவராவும் இருக்கணும், அவரோட வார்த்தைகள் மென்மையாவும் அக்கறையுள்ளதாவும் இருக்கணும். ஆனா சர்வவல்லமையுள்ள தேவனோட பேச்சு ரொம்பக் கடுமையா இருக்கு, அவர் உண்மையிலே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவா இருக்க முடியுமா?” அப்படின்னும் நான் நெனச்சேன். நான் ரொம்ப குழப்பமடைஞ்சேன்.

அதுக்கப்புறமா, என்னோட சந்தேகங்கள வனிசா அவங்ககிட்ட சொன்னேன், அவங்க என்கிட்ட பொறுமையா ஐக்கியப்பட்டு இப்படிச் சொன்னாங்க: “தேவன் இரக்கமுள்ளவர்னும், அன்பானவர்னும், அவர் நம்மகிட்ட மென்மையான அக்கறையுள்ள விதத்தில பேசுகிறார்னும், அதனால அவரோட வார்த்தைகள் கடுமையா இருந்தா, அவை தேவனோட வார்த்தைகள் இல்லன்னும் நாம எப்பவும் நம்புறோம். ஆனா இந்த யோசனை உண்மையிலே உண்மைகளோடயும் சத்தியத்தோடயும் ஒத்துப்போகுதா? உண்மையில, ஒவ்வொரு காலத்திலும், தேவன் அக்கறையுள்ளதும் ஊக்கமளிப்பதுமான வார்த்தைகள மட்டுமல்லாம, ஜனங்களக் கடிந்துகொள்ற, நியாயந்தீர்க்குற மற்றும் சபிக்குற வார்த்தைகளயும் பேசியிருக்கார். நாம இதில கவனம் செலுத்தறதில்லங்கறதுதான் உண்ம. இது வேதாகமத்தில எப்படி பதிவு செய்யப்பட்டிருக்குன்னு பாப்போம்: யேகோவா தேவன் சொன்னார்: ‘அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்; திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்(ஏசாயா 56:10-11). அதோட கர்த்தராகிய இயேசு சொன்னார், ‘சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?(மத்தேயு 23:33). ‘பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்(மத்தேயு 7:6). இந்த மாதிரி இன்னும் பல வசனங்கள் இருக்கு. இந்த வசனங்கள்லயிருந்து, நியாயப்பிரமாணத்தின் காலத்திலயும், கிருபையின் காலத்திலயும், தேவன் ஜனங்களக் கண்டிச்சார், கடிஞ்சுகொண்டார், சபிச்சார்ங்கறத நம்மால பாக்க முடியும். அவரோட வார்த்தைகள் கடுமையாவும், உணர்வக் குத்துறதா தெரிஞ்சாலும், அவையெல்லாமே சத்தியம், எல்லாமே தேவன எதிர்க்குற மற்றும் தேவனோடு கலகம் செய்யுற ஜனங்களோட சாரத்த வெளிப்படுத்திச்சு. உண்மையில, தேவனோட வார்த்தைகள் மென்மையாவோ கடுமையாவோ இருந்தாலும், அவையெல்லாம் தேவனோட மனநிலையின் வெளிப்பாடுகளா இருக்கு. நாம தேவனோட மனநிலையப் புரிஞ்சிக்காம, அவர இரக்கமுள்ளவராவும், அன்புள்ளவராவும் வரம்புக்குட்படுத்துனா, அவர் கடுமையா பேசுறப்போ நாம சில கருத்துகள உருவாக்குவோம், தேவன் மென்மையான முறையிலதான் பேசுவார், இப்படிக் கடுமையான தொனியில பேச மாட்டார், அதனால, அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவனோட வார்த்தைகளா இருக்க முடியாதுன்னு நெனைப்போம். வார்த்தைகள் மென்மையானதா கடுமையானதாங்கறதன் அடிப்படையில நாம தீர்மானிக்கறது தவறானதாவும், நம்மோட சொந்த கருத்துகளோட மற்றும் நம்பிக்கைகளோட விளைவா இருக்குது. உதாரணமா, நம்மோட பெற்றோர் நம்மகிட்ட மென்மையா பேசுறப்போ மட்டுமே நாம அவங்கள நம்மோட பெற்றோரா அடையாளங்கண்டுட்டு, ஏதாவது தவறு செஞ்சதுக்காக அவங்க நம்மள கடுமையா பேசி திட்டுறப்போ அவங்கள நம்மோட பெற்றோரா அடையாளங்காணலன்னா, அது முட்டாள்தனமா இருக்காதா?” சகோதரியோட ஐக்கியத்தக் கேட்டதுக்கப்புறமா, இந்த விஷயத்தில நான் ரொம்பத் தெளிவா உணர்ந்தேன். நான் இப்படி நெனச்சேன்: “அது சரி, நம்மோட பெற்றோர் நம்மகிட்ட மென்மையாவோ அல்லது கடுமையாவோ பேசுனாலும், அவங்க எப்பவும் நம்மோட பெற்றோர்தான? யேகோவா தேவனும் கர்த்தராகிய இயேசுவும் முன்னால கடுமையாப் பேசியிருக்காங்க, நான் ஏன் இத முன்னாடி கவனிக்கல? தேவனோட வார்த்தைகள அவை மென்மையா இருக்குதா அல்லது கடுமையா இருக்குதாங்கறதன் அடிப்படையில தீர்மானிக்கறது உண்மையிலே தவறானதுன்னு நான் ஊகிச்சேன்.” நான் இத உணர்ந்ததுக்கப்புறமா, நான் எதிர்ப்பா உணரல. ஆனா மனுக்குலத்த அம்பலப்படுத்தி நியாயந்தீர்க்கற தேவனோட வார்த்தைகளோட பத்திகள நான் வாசிச்சப்பவெல்லாம், நான் கண்டனம் செய்யப்பட்டதப் போல அவற்ற கடுமையானதா உணந்தேன். நான் தொடந்து தடுமாறிக்கிட்டே இருந்தேன்: கர்த்தராகிய இயேசு இரக்கமுள்ளவர் அன்புள்ளவர், அப்படின்னா ஏன் சர்வவல்லமையுள்ள தேவன் ரொம்பக் கடுமையாவும், எப்போதும் ஜனங்ககிட்ட கோபப்படுறவராவும் இருக்காரு? ஒரு தடவ ஒரு கூடுகையின் போது, நான் ஒரு வனேசாகிட்ட என்னோட கேள்வியக் கேட்டேன்: “சர்வவல்லமையுள்ள தேவனயும் கர்த்தராகிய இயேசுவயும் ஒரே தேவனா என்னால பாக்க முடியல—அவங்களோட மனநிலை அப்படியே ரொம்ப வித்தியாசமா இருக்கு. கர்த்தராகிய இயேசுவ நான் கற்பனை செய்றப்போ, தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவராவும் அன்புள்ளவராவும் இருக்காருங்கற நெனைக்கறேன், ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் ரொம்பக் கடுமையாதெரியறாரு, அவர் சொல்றதில பெரும்பாலானவைங்க ஜனங்கள அம்பலப்படுத்துறதுமா, பகுத்தறியறுதுமா இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஏன் ரொம்ப வித்தியாசமா இருக்காங்க?”

சகோதரி ஐக்கியப்பட்டு இப்படிச் சொன்னாங்க: “ஜனங்களுக்குப் பெரும்பாலும் இந்தக் குழப்பம் இருக்கு, அவங்க தேவனோட மனநிலையப் புரிஞ்சிக்கிடாததுதான் அதுக்கு முக்கிய காரணம். நாம தேவனோட முந்தைய கிரியைய சற்று திரும்பிப் பாப்போம். தேவனோட நீதியான மனநிலையக் குறிச்சி நாம கொஞ்சம் புரிதல அடைஞ்சதும், இந்தப் பிரச்சினை தானாவே தீர்க்கப்பட்டுறும். சோதோம் மற்றும் நினிவே ஜனங்கள் செய்த அக்கிரமத்த தேவன் கண்டப்ப, அவரோட மனநிலை கோபமடைஞ்சுது, அவர் இந்த ரெண்டு பட்டணங்களயும் அழிக்க முடிவு செஞ்சார்ங்கறது நம்ம எல்லாருக்கும் தெரியும். அவற்ற அழிக்கறதுக்கு முன்னாடி, தேவன் ரெண்டு தேவதூதர்கள சோதோமுக்கு அனுப்புனார், லோத்து மட்டுந்தான் அவங்கள உபசரிச்சான். மத்த குடிமக்கள் தேவதூதர்கள வரவேற்கலங்கறது மட்டுமல்லாம, அவங்களக் கொல்லவும் விரும்புனாங்க. தேவன் அவங்களோட அக்கிரமத்தக் கண்டு கோபமானார். தேவதூதர்கள் லோத்தயும் அவனோட குடும்பத்தயும் காப்பாத்துனதுக்கப்புறமா, தேவன் வானத்திலயிருந்து அக்கினியப் பொழியச்செஞ்சு, பட்டணத்திலுள்ள எல்லா ஜனங்களயும், மிருகஜீவன்களயும், செடிகொடிகளயும் அழிச்சார். இப்போ நினிவேயப் பத்தி பாப்போம், தேவன் இந்தப் பட்டணத்தயும் அழிக்கத் திட்டமிட்டார், அதனால தம்மோட செய்தியத் தெரிவிக்க யோனாவ அனுப்புனார்: ‘இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும்(யோனா 3:4). நினிவேயோட ராஜா இந்தச் செய்திகளக் கேட்டப்போ, அவன் தன்னோட நகரத்தின் ஜனங்கள இரட்டுடித்தி, சாம்பல்ல உட்கார்ந்து, உபவாசமும், ஜெபமும் செஞ்சு, அவங்க செஞ்ச பொல்லாப்ப விட்டுட்டு தேவன்கிட்ட மனந்திரும்புமாறு வழிநடத்துனான். தேவன் இதப் பாத்தப்போ, அவர் தம்மோட கோபத்த விலக்கி, இரக்கத்தோட அவங்கள அழிவிலிருந்து தப்புவிச்சார். நினிவே மற்றும் சோதோம் மீதான தேவனோட மாறுபட்ட அணுகுமுறைகள்லயிருந்து, தேவனோட மனநிலை உண்மையானதுன்னும் தெளிவானதுன்னும் நம்மால பாக்க முடியும். அவர் அன்புள்ளவராவும் இரக்கமுள்ளவராவும் இருக்கறது மட்டுமல்லாம, மாட்சிமையுள்ளவராவும் கோபமுள்ளவராவும் இருக்காரு. ஜனங்க பாவம் செய்றப்போ, மனந்திரும்புறதுக்கு அவங்களுக்கு தேவன் ஒரு வாய்ப்பக் கொடுத்து, அவரோட அன்பான மற்றும் இரக்கமுள்ள மனநிலைய அவங்களுக்குக் காட்டுறார். ஜனங்க பிடிவாதமா இருந்து, மனந்திரும்ப விரும்பாதப்போ, அவங்க பிடிவாதமா தேவன எதிர்த்து, அவருக்கு எதிரா கூக்குரலிடுறப்பகூட, தேவன் தம்மோட கோபத்த அவங்க மீது கட்டவிழ்த்துவிடறாரு, தம்மோட நீதியான மற்றும் மாட்சிமையான மனநிலைய வெளிப்படுத்துறார். இது தேவனோட நீதியான மனநிலை அன்பாவும் இரக்கமுள்ளதாவும் இருக்கறது மட்டுமல்லாம, மாட்சிமையுள்ளதாவும் கோபமுள்ளதாவும் இருக்குங்கறத பாக்க நமக்கு உதவுது. இந்த ரெண்டு அம்சங்களும் தேவனோட இயல்பான மனநிலையில அடங்கியிருக்கு.

கர்த்தராகிய இயேசு தம்மோட கிரியையச் செஞ்ச கிருபையின் காலத்த இப்போ எடுத்துக்குவோம். ஜனங்க பாவம் செஞ்சு, பாவத்த அறிக்கையிட்டு மனந்திரும்புறதுக்கு கர்த்தருக்கு முன்னால வந்தப்போ, அவர் அவங்களோட பாவங்கள நீக்கி, அவங்களுக்கு அபரிவிதமான கிருபைய அளிச்சார், ஆகையினால, கர்த்தரோட மனநிலை அன்புள்ளதாவும், இரக்கமுள்ளதாவும் மட்டுமே இருக்குன்னும், கோபமுள்ளதாவும் சபிக்கிறதாவும் இல்லன்னும் பலர் நம்புறாங்க. உண்மையில, இவை ஜனங்களோட கருத்துகளாவும் கற்பனைகளாவும் மட்டுந்தான் இருக்கு. கர்த்தரைக் கண்டனம் செஞ்சு, விரோதிச்சு அவர வெளிப்படையா எதிர்க்கக் கூட செஞ்ச பரிசேயர்களப் பொறுத்த வரையில கர்த்தராகிய இயேசு கோபம் நிறஞ்சவரா இருந்தார். அவர் அவங்களக் கண்டனம் செஞ்சார், சபிச்சார், அவங்க மேல ஏழு துன்பங்கள அறிவிச்சார். அவங்க மேல அவர் கொஞ்சங்கூட இரக்கம் காட்டவேயில்ல. இதுல இருந்து, சிருஷ்டிப்பின் காலத்திலயிருந்து இன்னைக்கு வரைக்கும், தேவன் எப்பவும் மனுக்குலத்துக்கு தமது நீதியான மனநிலையயே வெளிப்படுத்தியிருக்கார். தேவன் அன்புள்ளவராவும், இரக்கமுள்ளாவராவும் இருக்காரு, ஆனா மாட்சிமையுள்ளவராவும், கோபமுள்ளவராவும், சபிக்கிறவராவும், தண்டிக்கிறவராவும் இருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்ற மாதிரியே, ‘தேவனுடைய தயவும் சகிப்புத்தன்மையும் உண்மையில் உள்ளன. ஆனால் தேவனுடைய பரிசுத்தமும் நீதியும் அவர் கோபத்தை கட்டவிழ்த்துவிடும்போது, மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யாத தேவனுடைய பக்கத்தைப் பார்க்கிறான். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மனிதன் பூரணமாக வல்லமை பெற்றவனாகவும், தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படும் போதும், மனிதனிடம் தேவன் காட்டிய தயவில் தேவன் அளவில்லாதவராக இருக்கிறார். மனிதன் அவருக்கு எதிராகக் கேடு, வெறுப்பு மற்றும் பகை ஆகியவற்றால் நிறைந்திருக்கும்போது, தேவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மிகுந்த கோபத்தில் இருக்கிறார்? மனிதனுடைய எதிர்ப்பையும் தீய கிரியைகளையும் தேவன் இனி பார்க்காத வரையில், அவருடைய கண்களுக்கு முன்பாக அவை இல்லாத வரையில், அவருடைய கோபம் நீடிக்கும். அப்போது தான் தேவனுடைய கோபம் மறைந்து போகும். … அவர் அன்பான, அழகான மற்றும் நல்ல காரியங்களுடன் சகிப்புத்தன்மையுடனும் தயவுடனும் இருக்கிறார். தீய, பாவமான, பொல்லாத காரியங்களிடம் அவர் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். அவர் தம்முடைய கோபத்தில் இடைவிடாமல் இருக்கிறார். தேவனுடைய மனநிலையின் இரண்டு முக்கிய மற்றும் மிக முக்கியமான அம்சங்கள் இவை. ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபம் ஆகியவை தொடக்கம் முதல் இறுதி வரை தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). தேவனோட வார்த்தைகளின் மூலமா, ‘ஏராளமான தயவு மற்றும் மிகுந்த கோபம்’ ஆகியவை தேவன் மனுக்குலத்துகிட்ட தொடர்ந்து காட்டுற தேவனோட மனநிலையின் ரெண்டு அம்சங்களா இருக்குங்கறத நம்மால பாக்க முடியும். அவரோட மனநிலையின் இந்த ரெண்டு அம்சங்களும் முரண்பட்டவையல்ல. அவையெல்லாம் அவரோட இயல்பான மனநிலையின் ஒரு பகுதியா இருக்கு. கடந்த காலத்தில நாம அவரோட கிருபைய அனுபவிச்சிருக்கோம் அப்படிங்கற அடிப்படையில தேவன் இரக்கத்த மட்டுமே காட்டக்கூடியவர், கோபப்படாதவர்ன்னு நாம அவர வரம்புக்குட்படுத்தக் கூடாது. இவ்விதமான புரிதல் ரொம்ப ஒருதலப்பட்சமானது.” இதக் கேட்டதுக்கப்புறமா, தேவன் அன்புள்ளவராவும் இரக்கமுள்ளவராவும் இருக்கறது மட்டுமல்லாம, மாட்சிமையுள்ளவராவும், கோபமுள்ளவராவும், சபிக்கிறவராவும் இருக்காருங்கறத நான் உணந்தேன். இவையெல்லாம் தேவனோட இயல்பான மனநிலையோட அம்சங்கள். தேவனோட மனநிலைய நான் ரொம்பக் குறைவாப் புரிஞ்சிக்கிட்டதனாலதான் தேவன் இரக்கமுள்ளவராவும் அன்புள்ளவராவும் மட்டுந்தான் இருக்காருங்கற ஒருதலைப்பட்சமான நம்பிக்கைய நான் ஆதரிச்சேன். இவை உண்மையிலே என்னோட கருத்துகளாவும் கற்பனைகளாவும்தான் இருந்துது, யதார்த்தத்தோட ஒத்துப் போகல. என்னோட புரிதல ஆழப்படுத்த நான் இன்னும் அதிகமான ஐக்கியத்தக் கேட்கணுங்கறத உணந்தேன்.

சகோதரி தன்னோட ஐக்கியத்தத் தொடர்ந்து, இப்படிச் சொன்னாங்க: “ஒவ்வொரு காலத்திலயும் தேவன் வெளிப்படுத்துற மனநிலைங்கறது தேவனோட இரட்சிப்பின் கிரியையோட தேவைகளோட அடிப்படையிலயும், சீர்கெட்ட மனுக்குலத்தோட தேவைககளோட அடிப்படையிலயும் இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இந்த ரெண்டு பத்திகளும் இதத் தெளிவுபடுத்த நமக்கு உதவும்: ‘இயேசு செய்த கிரியை அந்தக் காலத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதுமாக இருந்தது. ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம், கிருபை மற்றும் தயை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய எல்லாவற்றையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம், மற்றும் அன்பான தயை ஆகியவற்றை அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்தக் காலக்கட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்தக் காலம் முழுவதும் நிறைந்திருந்தன(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை”). ‘யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். ஆகையால், இது போன்ற ஒரு மனநிலையானது யுகத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய யுகத்தின் கிரியையின் பொருட்டு அவரது மனநிலையின் வெளிப்பாடு மற்றும் காண்பிக்கப்படுவது வெளிப்படும்படி செய்யப்படுகிறது. தேவன் தன்னுடைய மனநிலையைத் தன்னிச்சையாகவும் முக்கியத்துவமும் இல்லாமலும் வெளிப்படுத்துகிறார் என அர்த்தமாகாது. கடைசிக் காலத்தில் மனுஷனின் விளைவுகளை வெளிப்படுத்துவதில், தேவன் இன்னும் மனுஷனுக்கு எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் அளித்து, அவனிடம் தொடர்ந்து அன்பாக இருந்து, மனுஷனை நீதியான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தாமல், அதற்குப் பதிலாகச் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைக் காட்டி, மனுஷன் எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்திருந்தாலும், சிறிதளவும் நியாயமான நியாயத்தீர்ப்பு இல்லாமல் அவனை மன்னிப்பார் என்று வைத்துக்கொண்டால்: தேவனின் ஆளுகை அனைத்தும் எப்போது முடிவிற்குக் கொண்டுவரப்படும்? இதுபோன்ற ஒரு மனநிலை மனுஷகுலத்திற்கான பொருத்தமான இலக்கிற்கு ஜனங்களை எப்போது வழிநடத்த முடியும்? உதாரணமாக, எப்போதும் அன்பாக இருக்கும் ஒரு நீதிபதி, கனிவான முகத்தையும், மென்மையான இருதயத்தையும் கொண்ட ஒரு நீதிபதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஜனங்கள் செய்த குற்றங்களைப் பொருட்படுத்தாமல் அவர்களை நேசிக்கிறார், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் அவர் அன்பு பாராட்டுகிறார். அவ்வாறான நிலையில், எப்போது அவரால் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்க முடியும்? கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது’” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).

சகோதரி ஐக்கியப்பட்டு இப்படிச் சொன்னாங்க: “நியாயப்பிரமாணத்தின் காலத்தில, சாபங்கள், எரித்தல், கடுங்கோபம் ஆகியவை மேலோங்குன மனநிலையோட யேகோவா தேவன் தம்மை வெளிப்படுத்துனார். அந்த நேரத்தில, ஜனங்களுக்கு புரிதல்ல ஒரு பெரிய குறைபாடு இருந்துது. பாவம்னா என்ன, அவங்க எப்படி வாழணும், அல்லது தேவனை எப்படி ஆராதிக்கணும்னு அவங்களுக்குத் தெரியாம இருந்துச்சு, அதனால அந்த நேரத்தில அவங்களோட தேவைகளின் அடிப்படையில, ஜனங்கள அவங்களோட வாழ்க்கையில வழிநடத்த தேவன் நியாயப்பிரமாணங்களயும் கட்டளைகளயும் கொடுத்தார். தேவனோட நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிஞ்சவங்க அவரோட இரக்கத்தப் பெற்றாங்க, ஆனா நியாயப்பிரமாணத்த மீறுனவங்க தேவனோட பரலோக அக்கினியினால சுட்டெரிக்கப்பட்டாங்க அல்லது கல்லெறிந்து கொல்லப்பட்டாங்க. ஆனாலும், நியாயப்பிரமாண காலத்தோட முடிவில, ஜனங்க மேலும் மேலும் சீர்கெட்டுப்போய், பாவம் செஞ்சு தங்களயும் மீறி நியாயப்பிரமாணத்த மீறுனப்போ, அவங்களோட செயல்கள் அக்கால நியாயப்பிரமாணத்தால நியாயந்தீர்க்கப்பட்டிருந்தா அவங்க எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் கீழ கொல்லப்பட்டிருப்பாங்க. அதனால, கிருபையின் காலத்தில, மனுக்குலத்த அவங்ளோட தேவைகளுக்கு ஏற்ப மீட்க தேவன் தாமே மாம்சமாகி, அவரோட இரக்கத்தயும் அன்பான மனநிலையயும் காண்பிச்சாரு, ஜனங்களுக்கு அபரிவிதமான கிருபையக் கொடுத்தாரு. அவர் அவங்கள அளவற்ற இரக்கத்துடனும் அன்புடனும் நடத்தினார், அவங்களோட பாவங்களச் சகிச்சு, மன்னிச்சார், கடைசில எல்லா ஜனங்களயும் அவங்களோட பாவங்கள்லயிருந்து மீட்க சிலுவையில அறையப்பட்டார். அவர் அவங்களோட தண்டனைகள மன்னிச்சு, தொடந்து வாழ அனுமதிச்சார். கிருபையின் காலத்தில, சாபங்கள், எரித்தல், கடுங்கோபம் போன்ற வடிவங்கள்ல தேவன் தம்மோட மனநிலைய தொடந்து வெளிப்படுத்தியிருந்தா, ஜனங்களோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது, நியாயப்பிரமாணத்தின் கீழயிருந்த ஜனங்க ஒருபோதும் மீட்கப்பட்டிருக்க மாட்டாங்க, மனுக்குலம் ஒண்ணுமில்லாம போயிருந்திருக்கும், இன்னைக்கு இருக்கற மாதிரி இருந்திருக்காது. அதனால கிருபையின் காலத்தில தேவன் தமது இரக்கமுள்ள அன்பான மனநிலைய வெளிப்படுத்துனார். ஜனங்க அவருக்கு முன்னால வந்து அவரோட மீட்பை ஏத்துக்கிடற வரைக்கும், அவர் அவங்களோட பாவங்கள மன்னிப்பார். கடைசி நாட்கள்ல, ஜனங்கள் மேலும் மேலும் சீர்கெட்டவங்களா மாறியிருக்காங்க. கர்த்தராகிய இயேசுவோட மீட்பப் பெற்றிருந்தாலும், நம்மோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், அகந்தை, துரோகம், பொல்லாப்பு, பிடிவாதம், தீய குணம் போன்ற நம்மோட பாவ சுபாவங்கள் எல்லாம் இன்னும் நமக்குள்ள ஆழமா வேரூன்றியிருக்கு. நம்மோட சாத்தானிய மனநிலை இன்னும் முற்றிலுமா அழிக்கப்படல, அதனால நாம் இன்னும் அடிக்கடி பொய் சொல்றோம், பாவம் செய்றோம், தேவனுக்கு எதிரா கலகம் செய்றோம், அவர எதிர்க்கறோம். தேவனோட ராஜ்யத்தில பிரவேசிக்க நாம இன்னும் தகுதியுள்ளவங்களாகல. மனுக்குலத்த இரட்சிக்கவும், பாவத்திலயிருந்து நம்மை முற்றிலுமா விடுவிக்கவும், தேவன் மீண்டும் ஒருமுற மனுவுருவெடுத்திருக்கார், நம்மளோட சாத்தானிய மனநிலைகளவேரோட பிடுங்கி, பாவத்திலயிருந்து நம்மள சுத்திகரிச்சு, தேவனுக்கு உண்மையா கீழ்ப்படியவும், ஆராதிக்கவும் உதவிசெஞ்சு, கடைசில நம்மள அவரோட ராஜ்யத்துக்கு அழச்சுட்டுப் போக கர்த்தராகிய இயேசுவோட கிரியையோட அஸ்திபாரத்தின் மேல நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு கிரியையச் செய்துகிட்டிருக்கார். அவரோட கிரியைகளோட தேவைகள் நிமித்தமா, தேவன் இனிமேல தம்மோட இரக்கமுள்ள அன்பான மனநிலைய வெளிப்படுத்துறதில்ல, அதுக்குப் பதிலா மனுஷனோட சீர்கெட்ட மனநிலைகள நியாயந்தீர்க்கவும் அம்பலப்படுத்தவும் அவரோட நீதியான, மாட்சிமையான மற்றும் கடுங்கோபமான மனநிலைய வெளிப்படுத்த விரும்புறார். அப்படிச் செய்றதன் மூலமா மட்டுந்தான், அவரால மனுக்குலத்த மறுரூபமாக்கி சுத்திகரிக்க முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலயும் தேவன் வெளிப்படுத்துற மனநிலை வித்தியாசமா இருந்தாலும், தேவனோட சாராம்சம் ஒருபோதும் மாறாது. சீர்கேடான மனுக்குலத்தோட தேவைகளுக்கு ஏற்ப தேவன் தமது கிரியையச் செய்றார் மற்றும் அவரோட மனநிலைய வெளிப்படுத்துறார், தேவன நல்லா புரிஞ்சிக்கவும் அறிஞ்சிக்கவும் ஜனங்களுக்கு உதவுறார், அதனால அவங்க அவரயும் அவரோட மனநிலையயும் வரம்புக்குட்படுத்தறதில்ல. சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் வெவ்வேறு மனநிலைகள வெளிப்படுத்துறதனால ஒரே தேவன் இல்லன்னு நாம நெனைக்கக்கூடாது.”

சகோதரியோட ஐக்கியத்தக் கேட்டதுக்கப்புறமாதான் அவரோட இரட்சிப்பின் கிரியையோட தேவைகளின் அடிப்படையிலயும் சீர்கெட்ட மனுக்குலத்தோட தேவைகளின் அடிப்படையிலயும் ஒவ்வொரு காலத்திலயும் எந்த மாதிரியான மனநிலைய வெளிப்படுத்தணுங்கறத தேவன் தீர்மானிக்கறார்ங்கறத நான் உணந்தேன். கடைசி நாட்கள்ல தம்மோட நியாயத்தீர்ப்புக் கிரியைல, சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்கறதுக்கு தம்மோட நீதியான மாட்சிமையான மனநிலைய வெளிப்படுத்துறார். அவர் வெளிப்படுத்துற மனநிலை கர்த்தராகிய இயேசுவிலிருந்து வேறுபட்டதா இருந்தாலும், சீர்கேடான மனுக்குலத்தோட தேவைகள சந்திக்க அது இன்னும் வெளிப்படுத்தப்படுது. சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராக இயேசுவும் ஒரே தேவன்தான். சகோதரியோட ஐக்கியம் ரொம்பத் தெளிவா இருந்துது, என்னோட குழப்பத்தயெல்லாம் தீர்த்துது.

அடுத்த கூடுகையில, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் மற்றொரு பத்திய வனிசா எனக்கு வாசிச்சிக் காண்பிச்சாங்க: “மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார். சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனைப் பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள். அவர்கள், ‘தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா? தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், மனுஷன் கண்டிக்கப்படமாட்டானா? பின்னர் எப்படி அவன் இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?’ என்கிறார்கள். தேவனின் கிரியையை அறியாத ஜனங்களின் வார்த்தைகள் அப்படியாக இருக்கின்றன. தேவன் மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் சபிக்கிறார், அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார். அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும், மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மனுஷனுக்குள் இருக்கும் பிரத்தியேகமானவற்றை இந்தக் கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், ஆனாலும் அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம், அவர் மாம்சத்தின் சாராம்சத்தைப் பற்றிய ஆழமான அறிவை மனுஷனுக்கு அளிக்கிறார், இதனால் தேவன் முன்பாக மனுஷன் கீழ்ப்படிகிறான். மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது, அது கீழ்ப்படியாதது, அது தேவனுடைய சிட்சைக்கான பொருளாகவும் இருக்கிறது. ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும், மேலும் எல்லா வகையான புடமிடுதலையும் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் தேவனின் கிரியையானது பயனுள்ளதாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்”). வனிசா அவங்க தன்னோட ஐக்கியத்தில இதத்தான் சொன்னாங்க. அவங்க இப்படிச் சொன்னாங்க: “கடைசி நாட்கள்ல, தேவனோட நியாயத்தீர்ப்புக் கிரியைதான் மனுக்குலத்த அவர் இரட்சிக்கிறதுல இருக்குற கடைசி படி, இதுதான் அவரோட 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தோட ஆகக் கடைசி. அவரோட நீதியான மற்றும் மாட்சிமையான மனநிலைய வெளிப்படுத்துறதில, அவர் முழு யுகத்தயும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர்றார், ஒவ்வொருத்தரயும் அவரவர் வகைக்கு ஏற்ப, நல்லவங்கள நல்லவங்களுடனும், பொல்லாதவங்கள பெபால்லாதவங்களுடனும் வகைப்படுத்துறார். தேவன் தம்மோட இரக்கமுள்ள அன்பான மனநிலைய மட்டுமே வெளிப்படுத்தியிருந்தா, நாம எவ்வளவு பாவங்கள் செஞ்சிருந்தாலும், எப்பவும் நம்மள சகிச்சிக்கிட்டும், பொறுத்துக்கிட்டும், மன்னிச்சிக்கிட்டும் இருந்தா, நாம ஒருபோதும் பாவத்திலயிருந்து விடுபட மாட்டோம், நாம என்றென்றும் சாத்தானோட ஆதிக்கத்துக்கும் அழிவுகளுக்கும்தான் உட்பட்டவங்களா இருப்போம். அதோட, தேவனோட இரட்சிப்பின் கிரியை ஒருபோதும் நிறைவேறாது, நல்லதும் கெட்டதும் சரியா வேறுபடுத்தவே படாது. அதனால, கடைசி நாட்கள்ல, தேவன் தம்மோட கிரியைல நீதியான, மாட்சிமையான, கடுங்கோபமான மனநிலைய வெளிப்படுத்துறார். அவரோட கடுமையான மொழில ஜனங்களோட சாத்தானிய சுபாவங்கள அம்பலப்படுத்துறார். சத்தியத்த நேசிக்கிறவங்க தங்களைத் தாங்களே அறிஞ்சுகொள்றாங்க, அவங்க தேவனோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிடறாங்க, எந்தக் குற்றத்தயும் பொறுத்துக்கொள்ளாத தேவனோட நீதியான மனநிலைய புரிஞ்சிக்கிறாங்க, இப்படியா, தேவன் மேல பயபக்திய வளர்த்து, தீமைய விட்டு விலகறாங்க, கடைசில மனநில மாற்றத்த அடையறாங்க. சத்தியத்தில சலிப்படைஞ்சு, தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் புறக்கணிக்கறவங்களப் பொறுத்தவரையில, அவங்க தேவனால அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுறாங்க. இவ்விதமா, எல்லாரும் அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுறாங்க.”

கர்த்தராகிய இயேசு கடுமையா இருந்து ஜனங்கள நியாயந்தீர்க்காம, அவங்க மேல இரக்கத்தயும் அன்பயும் காட்டி, தம்மோட மீட்பின் கிரியயச் செஞ்சதப் போலவே சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட நியாயத்தீர்ப்புக் கிரியைய செஞ்சிருந்தா, ஒவ்வொருத்தரயும் அவரவர் வகைக்கு ஏற்ப அவரால வகைப்படுத்த முடியாது, நம்மோட பாவமும் தேவன எதிர்க்குற சுபாவமும் ஒருபோதும் நீங்காது, நாம ஒருபோதும் இரட்சிக்கப்படவோ அல்லது தேவனோட ராஜ்யத்தில பிரவேசிக்கவோ மாட்டோம்ங்கறத நான் உணந்தேன். அதனால, கடைசி நாட்கள்ல தேவன் நீதி, மாட்சிமை, நியாயத்தீர்ப்பு, சிட்சை ஆகியவற்றால வகைப்படுத்தப்படுற மனநிலைய வெளிப்படுத்துறதில ஆழமான அர்த்தம் இருக்கு!

அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இரணடு பத்திகள வாசிச்சோம், இது சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையயும் கடைசி நாட்கள்ல அவர் வெளிப்படுத்துற மனநிலையயும் பத்திய இன்னும் சிறப்பான புரிதல எனக்குக் கொடுத்துச்சு. “இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். … தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்”). “என் வார்த்தைகள் கடுமையானவையாக இருந்தாலும், அவை எல்லாம் மனிதனுடைய இரட்சிப்புக்காகக் கூறப்படுகின்றன, ஏனெனில் நான் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேனே தவிர மனிதனுடைய மாம்சத்தைத் தண்டிக்கவில்லை. இந்த வார்த்தைகள் மனிதனை ஒளியில் வாழவும், ஒளி இருக்கிறது என்பதை அறியவும், ஒளி விலைமதிப்பற்றது என்பதை அறியவும், இன்னும் அதிகமாக இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு நன்மையானவை என்பதை அவர்கள் அறிவதோடு தேவனே இரட்சிப்பு என்றும் அறியச் செய்கின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த பல வார்த்தைகளை நான் கூறியிருந்தாலும், உண்மையில் அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அது உனக்குச் செய்யப்படவில்லை. நான் என் கிரியையைச் செய்யவும் என் வார்த்தைகளைக் கூறவும் வந்திருக்கிறேன், என் வார்த்தைகள் கண்டிப்பானவையாக இருந்தாலும், அவை உங்கள் சீர்கேடு மற்றும் உங்கள் மாறுபாட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பாகப் பேசப்படுகின்றன. சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து மனிதனை இரட்சிப்பதே நான் இதைச் செய்வதற்கான நோக்கமாக இருக்கிறது; நான் மனிதனை இரட்சிக்க என் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் வார்த்தைகளைக் கொண்டு மனிதனுக்குத் தீங்கு செய்வது என் நோக்கமல்ல. என் கிரியையில் முடிவுகளை அடையவே என் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன. இத்தகைய கிரியை மூலமே மனிதர் தங்களை அறிந்து தங்களது மாறுபாடான மனநிலையில் இருந்து விடுபட்டு வருவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்”). வனிசா ஐக்கியப்பட்டு இப்படிச் சொன்னாங்க: “தேவனோட வார்த்தைகள் மூலமா, கடைசி நாட்கள்ல ஜனங்கள நியாயந்தீர்க்கவும் சுத்திகரிக்கவும் தேவன் தமது வார்த்தைகளப் பயன்படுத்துறார்ங்கறத நம்மால பாக்க முடியும். அவரோட வார்த்தைகள் எவ்வளவு கடுமையாவும் காயப்படுத்துவதாவும் இருந்தாலும், அவை எல்லாமே நம்மோட சீர்கேட்டக் குறிச்ச உண்மைய அடையாளங்காணவும். சாத்தானோட அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்படவும், தேவனோட இரட்சிப்பப் பெறவும் உதவறதையே நோக்கமா கொண்டிருக்கு. தேவனோட மனநிலை நீதியுள்ளதுன்னும் பரிசுத்தமானதுன்னும், அதேநேரத்தில சாத்தானால ரொம்ப ஆழமா சீர்கெடுக்கப்பட்ட மனுஷங்களாகிய நாம பொல்லாத உலகப் போக்குகளப் பின்பற்றுறோம், ஒரு உண்மையான நபருக்குரிய சாயல் கொஞ்சங்கூட இல்லாம பணத்தயும் தனிப்பட்ட ஆதாயத்தயும் தேடறதுல ஒருத்தருக்கொருத்தர் சண்டையிட்டுக் கொள்றோம் சூழ்ச்சி செய்யறோங்கறது நம்ம எல்லாருக்கும் தெரியும். கர்த்தர விசுவாசிக்கறவங்களால கூட தேவன் கேக்கறத கடைப்பிடிக்க முடியல, பெரும்பாலும் தேவன்கிட்ட கிருபையயும் ஆசீர்வாதங்களயும் கேக்கறாங்க. அவங்க எந்தப் பங்களிப்பயும் பரலோகத்தில பிரவேசிக்கறதுக்காகவும் நித்திய ஜீவனப் பெறுவதுக்காகவும் தான் செய்யறாங்களே தவிர, அவங்க கர்த்தர நேசிக்கறதனாலயும், அவர திருப்திப்படுத்த முயற்சிக்கறதனாலயும் செய்யறதில்ல. அவங்களோட இழிவான நோக்கங்கள நிறைவேத்திக்க கர்த்தரப் பயன்படுத்துறதுக்காகவே இவையெல்லாம் செய்யப்படுது. சில மதத் தலைவர்கள் வெளிப்புறத்தில தேவனோட தாழ்மையான, பொறுமையான, உற்சாகமுள்ள ஊழியக்காரங்களாத் தெரியறாங்க, ஆனா அவங்களோட பிரசங்கங்கள்ல, அவங்க பெரும்பாலும் மத்தவங்களோட பாராட்டயும் மரியாதையயும் பெற தங்களத் தாங்களே உயர்த்திக் கொண்டு சாட்சி கொடுக்குறாங்க. தேவன் தம்மோட கிரியையச் செய்றதுக்காக மீண்டும் மனுவுருவெடுத்து தோன்றனப்போ, யாரும் அவர வரவேற்கல, முழு மத உலகமும் அவரோட வருகைய கண்டனம் செஞ்சு எதிர்க்க நாத்திக அரசாங்கத்தோட கைகோர்த்துக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை இழிவுபடுத்துறதுக்கும், மெய்யான வழிய ஆராயவிடாம ஜனங்களத் தடுக்கறதுக்கும் வேணும்னே பொய்களப் பரப்புச்சு. அதாவது, முழு மனுக்குலமும் தேவன கண்டனம் செஞ்சுகிட்டும் எதிர்த்திக்கிட்டும், அவரோட வருகைய புறக்கணிச்சுக்கிட்டும் இருக்காங்க. வேதாகமம் சொல்ற மாதிரியே, ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது(1 யோவான் 5:19). சீர்கெட்ட மனுக்குலம் எல்லா வகையிலயும் தேவன எதிர்க்குது. அவங்க எல்லாரும் சாத்தானுக்கும் விஷப் பாம்புகளுக்கும் ஒப்பானவங்க. மனுக்குலத்தோட சீர்கேடு பத்திய உண்மைய அம்பலப்படுத்த தேவன் தம்மோட கடுமையான வார்த்தைகள வெளிப்படுத்துறப்போ, சத்தியத்த நேசிக்கிறவங்களால மட்டுந்தான் தேவன எதிர்க்குற மற்றும் தேவன காட்டிக் கொடுக்குற தங்களோட சாத்தானிய சுபாவத்த உண்மையில அடையாளங் காணவும், அவங்க தங்களோட விசுவாசத்தில தேவன அறிய முயற்சிக்கலங்கறதயும், அவங்க ஆசீர்வாதங்களப் பெறுவது மற்றும் தேவனோட ஒப்பந்தங்கள் செய்றது போன்ற இழிவான நோக்கங்கள மட்டுமே கொண்டிருக்காங்கறதயும் உணர முடியும். சாத்தானால உண்டான தங்களோட ஆழமான சீர்கேடு பத்திய அருவருப்பான உண்மைய அவங்க தெளிவா பாத்து, தேவனிடம் உண்மையா மனந்திரும்பி, தேவனோட வேண்டுகோள்கள்படி செயல்பட சத்தியம் செய்றாங்க, கடைசியா கொஞ்சம் மனித சாயலப் பெற்றுக்கொள்றாங்க. தேவனோட வார்த்தைகள் எவ்வளவு கடுமையாவும் காயப்படுத்துறதாவும் இருந்தாலும், அவையெல்லாம் நம்மோட சீர்கேட்டப் பத்திய உண்மைய அம்பலப்படுத்துதுங்கறதயும், அவையெல்லாம் நம்மோட உணர்வற்ற ஆவிகள உயிர்ப்பிக்கிறதுக்கும், நம்மோட சீர்கெட்ட சாராம்சங்கள அடையாளங்காணுறதுக்கும், பாவத்தோட கட்டுகள்ல இருந்து முழுசா விடுபட்டு, சுத்திகரிக்கப்படுறதுக்கு நமக்கு உதவறதுக்காகவே இருக்குங்கறதயும் இதுலயிருந்து நம்மால பாக்க முடியும். தேவனோட கடுமையான வெளிப்பாட்டு மற்றும் நியாயத்தீர்ப்பு வார்த்தைகள் நம்மையே நாம அறிஞ்சிட்டு, இரட்சிக்கப்படுற நம்மோட செயல்முறையில ரொம்ப பயனுள்ளதா இருக்கு!”

வனிசா அவங்களோட ஐக்கியத்தக் கேட்டதுக்கப்புறமா, நம்மோட உண்மையான சுயங்கள அம்பலப்படுத்தறதுக்காக கடைசி நாட்கள்ல தேவன் பல கடுமையான வார்த்தைகள வெளிப்படுத்தியிருக்காருங்கறத கடைசியா உணந்தேன். இது அவரோட இரட்சிப்பு, கண்டனம் அல்ல. ஆசீர்வாதங்களயும் கிருபையயும் பெறுவதுக்காக மட்டுமே நான் தேவன எப்படி விசுவாசிச்சேங்கறதயும், தேவன இரக்கமுள்ளவராவும் அன்புள்ளவராவும் வரம்புக்குட்படுத்தக் கூட செஞ்சேங்கறதயும், அவர் கடுமையா பேசினப்போ நான் எப்படி அவர அடையாளங்காணத் தவறினேங்கறதயும் நெனச்சுப் பாத்தேன். நான் ரொம்ப பகுத்தறிவில்லாம இருந்தேன்! அதுலயிருந்து, தேவனோட கடுமையான மற்றும் நியாயத்தீர்ப்பு நிறைந்த வார்த்தைகள என்னால ஏத்துக்க முடிஞ்சது, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள இன்னும் அதிகமா படிக்க விருப்பமுள்ளவளா இருந்தேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கற கர்த்தராகிய இயேசுங்கறத நான் உறுதியா அறிஞ்சிக்கிட்டேன்.

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியை உண்மையா இருக்குங்கறத உறுதிப்படுத்திக்கிட்டதுக்கப்புறமா, நான் கூடுகைகள்ல சுறுசுறுப்பா கலந்துக்கிட்டு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள தினமும் வாசிச்சேன். ஒரு நாள், தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் பாத்தேன். “கிருபையின் யுகத்திலேயே ஜனங்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் தங்களது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுபட மாட்டார்கள், ஒருபுறம் தேவனின் ஆழ்ந்த மனநிலையை மட்டும் தெரிந்துகொள்வார்கள். ஜனங்கள் எப்பொழுதும் ஏராளமான கிருபையின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், ஆனால் தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ அனுமதிக்கும் ஜீவவழி இல்லை என்றால், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்திலான விசுவாசத்தில் உண்மையாக எதையும் பெறமாட்டார்கள். இந்த வகையான விசுவாசம் உண்மையில் பரிதாபகரமானது. நீ இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், ராஜ்யத்தின் யுகத்தில் மனுஷனாக அவதரித்த தேவனின் ஒவ்வொரு படியையும் நீ அனுபவித்து முடிக்கும்போது, பல ஆண்டுகளாக நீ கொண்டிருந்த ஆசைகள் இறுதியாக உணரப்பட்டுள்ளன என்பதை நீ உணருவாய். இப்போதுதான் நீ உண்மையிலேயே தேவனை நேருக்கு நேர் பார்த்திருக்கிறாய் என்று நீ உணருவாய்; இப்போதுதான் நீ அவருடைய முகத்தைப் பார்த்திருக்கிறாய், அவருடைய தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய், அவருடைய கிரியையின் ஞானத்தைப் பாராட்டியிருக்கிறாய், அவர் எவ்வளவு உண்மையானவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாய். கடந்த காலங்களில் ஜனங்கள் பார்த்திராத அல்லது வைத்திருக்காத பல விஷயங்களை நீ பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணருவாய். இந்த நேரத்தில், தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது என்றால் என்ன, தேவனின் சித்தத்திற்கு இணங்குவது என்றால் என்ன என்பதை நீ தெளிவாக அறிந்து கொள்வாய். நிச்சயமாக, நீ கடந்த காலக் கருத்துக்களுடன் ஒட்டிக்கொண்டு, தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தின் உண்மையை நிராகரிக்கிறாய் அல்லது மறுக்கிறாய் என்றால், நீ வெறுங்கையுடன்தான் இருப்பாய், எதையும் பெறமாட்டாய், இறுதியில் தேவனை எதிர்த்ததற்காக நீ குற்றவாளி என்று அறிவிக்கப்படுவாய். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: ‘அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது’ (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்குத் தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனோட வார்த்தைகள் மூலமா, வெளிப்படுத்தல்ல யோவான் கண்ட தரிசனம் எப்படி கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பு வார்த்தைகள், அக்கினிச் சுடரப் போலவும் அல்லது கூரான வாள் போலவும் இருக்குங்கறதயும், தேவனோட நீதியான மனநிலையால நிறஞ்சிருக்கறதயும் முன்னறிவிச்சுதுன்னு நான் உணந்தேன். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிடறவங்களால மட்டுந்தான் தேவனோட நீதியான மனநிலைய உண்மையிலே புரிஞ்சிக்கவும், மனுக்குலத்த நீயாயந்தீர்த்து இரட்சிக்க அவரோட வார்த்தைகளப் பயன்படுத்துறதுல இருக்குற அவரோட வாஞ்சையுள்ள நோக்கத்தப் புரிஞ்சுக்கவும் முடியும். நான் உணர்ந்ததன் மூலமா ஆழமா நெகிழப்படுறத என்னால தவிர்க்க முடியல: “சர்வவல்லமையுள்ள தேவனே! உம்மோட வார்த்தைகளின் வெளிப்பாடு மற்றும் நீயாத்தீர்ப்பின் மூலமா, நீங்க அன்பானவரும் இரக்கமுள்ளவரும் மட்டுமல்லாம, மாட்சிமையுள்ளவராவும் கடுங்கோபமுள்ளவராவும் இருக்கீங்கங்கறத நான் பாத்திருக்கேன். இவையெல்லாம் உம்மோட இயல்பான நீதியான மனநிலையின் அம்சங்களா இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனே! உம்மோட வார்த்தைகள் உண்மையில விலையேறப்பெற்றவை. என்னை நானே அறிஞ்சிகிடறதுக்கு உம்மோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் நான் கட்டாயம் ஏத்துக்கிடணும். இப்ப இருந்து, நான் உம்மோட வார்த்தைகளப் புசிச்சுப் பானம்பண்ணுவேன், உம்மோட வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் ஏத்துக்கிட்டு, சத்தியத்தத் தேடுற பாதையில நடப்பேன்!”

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நான் கிட்டத்தட்ட ஒரு அந்திக்கிறிஸ்துவின் பக்கமாக நின்றேன்

2021 ஆவது வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். மூணு மாசங்களுக்கு அப்புறமா, நானும்...

புதிதாக வந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது நான் வெளிப்படுத்தப்பட்டேன்

சுவிசேஷம் பரவுறப்போ, கடைசி நாட்கள்ல அதிகமான ஜனங்கள் தேவனோட கிரியைய ஆராயுறாங்க. அதனால அதிகமான ஜனங்கள் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு புதுசா...

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன்....