பரலோக ராஜ்யத்திற்கான பாதையை நான் கண்டுபிடித்தேன்

ஏப்ரல் 24, 2021

By Mengai, Taiwan

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயத்தீர்ப்பின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரை). தேவனுடைய வார்த்தைகள் தெளிவானவை. மனுஷனுடைய பாவங்கள மன்னிக்கிற மீட்பின் வேலைய கர்த்தராகிய இயேசு செஞ்சாரு. நம்மோட பாவ சுபாவம் இன்னும் அப்படியே தான் இருக்கு. சத்தியத்தை நமக்கு கொடுக்கறதுக்கும், நம்மோட பாவ சுபாவங்கள சரி பண்றதுக்கும், நாம பாவத்தை தூக்கி வீசறதுக்கும், தேவன எதிர்க்காம இருக்கிறதுக்கும், கர்த்தர் இன்னுமே அவரோட நியாயந்தீர்க்குற வேலையையும் சுத்திகரிக்கும் வேலையையும் செய்ய வேண்டியதா இருக்கு. அப்போ நாம தேவனுக்கு கீழ்ப்படிவோம், அவருக்குப் பயப்படுவோம். தேவனுடைய ராஜ்யத்துக்கு போறதுக்கு அதுதான் ஒரே வழி. நா தேவனுடைய கிரியையை புரிஞ்சுக்கல. நான் நினைச்சேன், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுருச்சு, நாம பரலோகத்துல நுழையலாமும்னு. ஆனா, பத்து வருஷமா விசுவாசத்தில வாழ்ந்தாலும், நான் இன்னும் பாவத்தில தான் வாழ்ந்துட்டிருந்தேன். தேவன் பரிசுத்தர், பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. அதனால, பாவத்தில வாழற ஒருத்தர் தேவனுடைய ராஜ்யத்தில எடுத்துக்கொள்ளப்படுவாங்களா? நான் குழம்பிப் போயிட்டேன். எனக்குப் புரியல. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளப் படிக்கும்போது, எனக்குப் புரிஞ்சுது, தேவனுடைய கிரியைல ரொம்ப முக்கியமான ஒரு படிக்கட்ட நான் கவனிக்காம விட்டுட்டேன்னு— கடைசிநாட்கள்ல நடக்கப் போகிற அவரோட நியாயத்தீர்ப்பின் கிரியை தான் அது. நம்முடைய விசுவாசத்தில, நாம தேவனுடைய நியாயத்தீர்ப்ப அனுபவிக்கனும், அப்பதான் நாம சுத்தமாக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, ராஜ்யத்துக்குள்ள நுழைய முடியும்.

எனது பெற்றோருடன் சபைக்கு சென்று வரும்@முறையுடன் நான் வளர்ந்தேன். மத்தவங்க கர்த்தரோட வார்த்தைகள சொல்றத கேட்க எனக்கு புடிக்கும். கல்யாணத்துக்கப்புறம், நானும் என் கணவரும், சபையோட வேலைய முதன்மையாக எடுத்து செய்வோம். சப ஆராதனைகள்ல ரொம்ப உற்சாகமா ஈடுபடுவோம். ஆனா நாளாகநாளாக, பாஸ்டரோட பிரசங்கங்கள் எல்லாம், ரொம்ப வறட்சியாவும், சலிப்பாவும் இருந்ததா உணர்ந்தேன். அப்புறம், அவரு எப்பவும் நன்கொடை கேட்டுட்டே இருந்தாரு. எங்க வாழ்க்கையவிட, அவரு பணத்த பத்திதான் ரொம்ப கவலபட்டாரு. பாஸ்டர்களும் மூப்பர்களும் பலிபீடத்தில் வாதாடுவாங்க, அப்புறம் ஒருத்தருக்கு விரோதமா இன்னொருத்தர் சதித்திட்டம் போடுவாங்க. ரொம்பக் குறைவான ஜனங்கதான் ஆராதனைக்கு வருவாங்க. அப்படி வர்றவங்ககூட, மேலோட்டமா பேசிப்பாங்க, பிரசங்கம் நடக்கும்போது தூங்குவாங்க. கர்த்தரோட வழிநடத்துதல என்னால உணரவே முடியல. சபை ஆராதனைக்குப் போறது எனக்கு ரொம்ப சலிப்பா இருந்துச்சு. என்னால தேவனுடைய வார்த்தைகள கடப்பிடிக்க முடியல. நான் பாவத்தில தான் வாழ்ந்துட்டிருந்தேன். என் கணவர் வீட்டுக்கு வந்த உடனே, ஆன்லைன் விளையாட்டில மூழ்கிருவாரு, அத பார்க்கும்போது என்ன செய்யறதுன்னு தெரியாம, இத செய்ங்க, அத செய்ங்கன்னு அதிகாரம்பண்ணி, நைநை-ன்னு நச்சரிக்க ஆரம்பிச்சு, அவரத் திட்டுவேன். அவரு என்ன கவனிக்கவே மாட்டாரு. எனக்கு இன்னும் கோவம் வரும். அவர் ஏதாவது ஒரு காரியத்த மெதுவா செய்யறத பார்த்தன்னா, அவரோட இயலாமைய குறசொல்லுவேன். அவர் திருப்பி என்ன குறசொல்லுவாரு—“இத்தன வருஷம் நீ விசுவாசியா இருந்துகூட நீ மாறவே இல்லன்னு.” என் மனசு குத்துச்சு, நான் கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள நினைச்சேன்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?(மத்தேயு 7:3-4). கர்த்தர் சொல்றாரு, நாம மத்தவங்க கிட்ட இருக்குற தவறுகள பாக்கக்கூடாது. ஆனா நம்மகிட்ட இருக்கிற தப்ப ஆராஞ்சு பாக்கணும். ஆனா என்னால் என் கணவரையும், அவரோட நடத்தையையும், சகிச்சுக்க முடியல. நான் ரொம்ப கோபப்பட்டு அவரோட சண்ட போடுவேன். எங்க உறவு அப்படியே சீரழிஞ்சுட்டு இருந்துது. நான் ரொம்ப வேதனப்பட்டேன். தேவன் சொன்னார்: “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:44). தேவன் பரிசுத்தர். பரிசுத்தம் இல்லாதவங்க அவர பாக்க முடியாது. ஆனா, என்னால கர்த்தருடைய வார்த்தைகள கடபிடிக்க முடியல. நான் தொடர்ந்து பாவம் செஞ்சுட்டே இருந்தேன், என்னால அதனோட பிடியிலிருந்து தப்பிக்க முடியல. என்ன போல இருக்குற ஒருத்தரால, எப்படி பரலோக ராஜ்யத்துக்குள்ள நுழைய முடியும்? இந்த எண்ணம், என்ன நிலையற்றவளா உணரவைச்சுது.

ஒருநாள் ஆராதன முடிஞ்ச உடனே, என் பிரச்சனைய பத்தி பாஸ்டர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னாரு, “கவலைப்படாதீங்க, நாம அடிக்கடி பாவம் பண்ணாலும் கர்த்தராகிய இயேசு நம்ம பாவங்கள மன்னிச்சுட்டாரு. நாம கர்த்தரிடத்தில தொடர்ந்து ஜெபம் பண்ணி, அறிக்கபண்ணிட்டே இருந்தா, அவரு நம்மள பரலோக ராஜ்யத்திற்கு கூட்டிட்டுப் போவாரு.” அவருடைய வார்த்தைகள் என்னோட குழப்பத்த தீர்க்கல. வேதம் சொல்லுது, “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபிரெயர் 12:14). “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்(எபிரெயர் 10:26). நாம மனப்பூர்வமாக பாவம் செஞ்சா, நம்ம பாவங்களுக்காக செலுத்தறதுக்கு வேற எந்த பலியும் இல்லன்னு தெளிவா எழுதிருக்கு. தொடர்ந்து பாவம் செய்றவங்க பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவாங்களா? எப்படி பாவம் பண்றத நிறுத்தணும்னு எனக்குத் தெரியல. அதனால, பொறுமையா இருக்கவும், மன்னிக்கவும், ரொம்ப முயற்சி பண்ணேன், ஆனா என்னால அத கடபிடிக்க முடியல. அதனால திரும்பவும் பாஸ்டர்கிட்ட உதவி கேட்டேன். அவரு, தலைய ஆட்டி, இப்படி சொன்னாரு, “அறிக்க செய்வதத் தவிர, பாவத்துக்கான வேற எந்த வழியும் எனக்கு தெரியல. பவுல் கூட இப்படி சொல்லிருக்காரு, ‘நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்’ (ரோமர் 7:18-19). நம்மால பாவம் பண்ணாம இருக்க முடியாது. அதனால நீங்க மனந்திரும்பி, இன்னும் கர்த்தரிடத்தில் பாவத்த அறிக்க செய்ங்க, நான் உங்களுக்காக அதிகமாக ஜெபித்து கொள்றேன்” ன்னு சொன்னாரு. பாஸ்டர் இப்படி சொன்னதக் கேட்ட உடனே, நான் ரொம்ப சோர்ந்துட்டேன். நான் கர்த்தரிடத்தில் இப்படி ஜெபிச்சேன்: “ஓ கர்த்தரே! நான் பாவம் செய்ய விரும்பல, ஆனா என்னால பாவம்பண்ணாம இருக்க முடியல. பாவத்தில வாழ்றது வேதனையா இருக்கு. ஆனா, எப்படி இத நிறுத்தறதுன்னு எனக்குத் தெரியல. நீங்க என்ன கைவிட்டுருவீங்களோன்னு எனக்குப் பயமா இருக்கு. கர்த்தரே! தயவுசெஞ்சு எனக்கு உதவி செய்ங்க.”

எங்க மனுஷன் முடிக்கிறானோ, அங்க கர்த்தர் தொடங்குவாரு. 2018-ல ஒருநாள், சூசன்-ங்கற ஒரு சகோதரிய நான் ஆன்லைன்ல சந்திச்சேன். நாங்க வேதத்த குறிச்சு கலந்தாய்வு செய்தோம். வேதத்த பத்தின அவங்க அறிவும் அவங்க ஐக்கியமும் ரொம்ப தெளிவா இருந்துச்சு. அதனால, என்னோட கவலையையும் பிரச்சனையையும் அவங்ககிட்ட சொன்னேன். நான் அவங்க கிட்ட கேட்டேன்: “பல வருஷமா நான் விசுவாசியா இருக்கேன், ஆனா எல்லா நேரமும் நான் பாவம் பண்றேன். நான் பரலோக ராஜ்யத்திற்குள நுழைய முடியுமான்னு கவலையா இருக்கு. எங்க பாஸ்டர், ‘கர்த்தராகிய இயேசு நம்மள மன்னிச்சுட்டாரு. அதனால நாம ஜெபம்பண்ணி பாவத்த அறிக்கபண்ணா, அவர் வரும்போது நம்மள பரலோகத்துக்கு கூட்டிட்டு போவாரு’ ன்னு சொல்றாரு. என் மனசு குழப்பமா இருக்கு. இதப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?” அந்த சகோதரி சூசன் சொன்னாங்க: “நாம மன்னிக்கப்பட்டுருக்கோங்கறது உண்மைதான், ஆனா, அதுக்காக, நாம சுத்தமாயிட்டோம், இல்ல பாவத்திலிருந்து விடுதலை ஆயிட்டோம்னு அர்த்தமில்ல. கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35). ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை(மத்தேயு 7:21). நாம மன்னிக்கப்பட்டதால தேவனுடைய ராஜ்யத்தில நுழைய முடியும்ன்னு கர்த்தர் ஒருபோதும் சொன்னது கிடையாது. பிதாவோட சித்தத்த செய்யறவங்க மட்டுந்தான் பரலோகத்துல நுழைய முடியும்னு அவர் நமக்கு சொல்லிருக்காரு. பாவங்கள் மன்னிக்கப்பட்டதனால தேவனுடைய ராஜ்யத்தில பிரவேசிக்கலாங்கற மனுஷனோட யோசனை ஆதாரமில்லாதது. பல வருஷமா விசுவாசியா இருக்கற நாம ஒரு காரியத்த பாக்கறோம்: ஜனங்களுக்கு விசுவாசம் உண்டாகி, அவங்க பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்ட பிறகும், அவங்க தொடர்ந்து பாவம் பண்ற நிலையிலே வாழ்றாங்க, அப்பறம் அத அறிக்கையிடுறாங்க. இது எத காண்பிக்கதுன்னா இது பாவத்தோட கட்டுகளயும், கட்டுப்பாட்டையும் உடைக்கிறதுக்கும், இல்ல நாம சுத்திகரிக்கப்படுவதுக்கும் சமமில்ல. தேவன் பரிசுத்தமானவர். பாவம் செய்றவங்களும், அவர எதிர்க்கிறவங்களும், அவரோட ராஜ்யத்துக்குள்ள நுழைய முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியறவங்களும், அவரோட சித்தத்த செய்யறவங்களும் மட்டுந்தான் அங்க நுழைய முடியும்.” அவங்க ஐக்கியத்தை கேக்கும்போது, நான் நினைச்சேன்: “ஆமா! பரலோக ராஜ்யத்துக்குள்ள தேவன் பாவிகள அனுமதிச்சா, அவருடைய பரிசுத்தம் எப்படி வெளிப்படும்?”

அவங்க தொடர்ந்து இப்படி சொன்னாங்க: “நாம ஜெபிச்சு, பாவத்த அறிக்கப்பண்ணி, கர்த்தருடைய போதனைகள கைக்கொண்டாலும், நாம எவ்ளோ முயற்சி பண்ணாலும், நாம இன்னும் பாவத்தால கட்டுப்படுத்தப்படறோம். இதுக்கு பின்னால இருக்கிற காரணம் என்ன?” அப்பறம் அவங்க ஆண்டவருடைய வார்த்தைகள படிச்சாங்க. “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரை). “மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். பெரும்பாலானவர்கள் காலையில் பாவம் செய்து விட்டு மாலையில் பாவ அறிக்கை செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்” “இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் செல்கின்றது”).

இது படிச்சதுக்கப்பறம் சகோதரி சூசன் தொடர்ந்து சொன்னாங்க: “நாம மீட்ப பெற்றுக் கொண்டு, நம்ம பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், நம்மள பாவம் செய்ய வைக்கிற நம்முடைய சாத்தானிய சுபாவங்கள் இன்னும் முடிவுக்கு வரல. அதனாலதான் நாம பாவம் செய்றோம், தேவன எதிர்க்கிறோம். நம்மால கர்த்தருடைய வார்த்தைகள கடைப்பிடிக்க முடியல. கிருபையின் காலத்தில, நம்மள பாவத்திலிருந்து விடுதலையாக்குற கர்த்தராகிய இயேசுவோட மீட்பு, நியாயப்பிரமாணத்தோட ஆக்கினைல இருந்து நாம தப்பிக்கும்படியாவும், தேவனுக்கு முன்னால வரத்துக்கு தகுதிபடுத்தறதாவும், அவருடைய கிருபைய அனுபவிக்க வைக்கிறதாயும் இருக்குது. அவரு நம்ம பாவங்கள மன்னிச்சுட்டாலும், நம்மோட சாத்தானிய சுபாவம் முடிவுக்கு வரல. நாம இன்னுமே திமிருபுடிச்சவங்களாவும், ஏமாத்துறவங்களாவும், கெட்டவங்களாவும் இருக்கோம். நம்மள பத்திதான் நாம அதிகமா நினைக்கிறோம். நாமதான் எல்லாம் முடிவுகளையும் எடுக்கணும்னு, நாம நினைக்கிறது தான் நடக்கனும்னு எதிர்பார்க்கறோம். நமக்கு பிடிக்காதத யாராவது செய்யும்போது, நாம அவங்கள திட்டறோம், அடக்கறோம். நாம பொய் சொல்லி ஏமாத்தறோம், நாம தேவனிடத்தில ஜெபிக்கிறதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். தேவனுக்குக் கீழ்ப்படியறதையும், அவர நேசிக்கறதையும் பத்தி பேசுவோம், ஆனா எல்லாத்தையும் நம்ம லாபத்துக்காகத் தான் செய்வோம். நம்மள நாமே பயன்படுத்தறது, அர்ப்பணிக்கிறது எல்லாமே தேவனுடைய ஆசீர்வாதத்துக்காகத் தான்‌. நாம ஆசீர்வதிக்கப்படும்போது நமக்கு சந்தோஷம்தான், ஆனா கஷ்டம் வந்துச்சுன்னா, குறை சொல்றோம், தேவன மறுதலிக்ககூட செய்றோம். இந்த சீர்கேடான மனநிலம பாவத்தவிட ரொம்ப மோசமானது. அது முடிவுக்கு வரலைன்னா, நாம தீம செஞ்சு தேவன எதிர்ப்போம். நாம இன்னும் பாவம் நிறஞ்சு இருக்கோம். ஆண்டவரோட ராஜ்ஜியத்துக்கு நாம எப்படி தகுதியாவோம்? அதனாலதான், கர்த்தராகிய இயேசு திரும்ப வருவேன்னு வாக்கு பண்ணாரு. சர்வவல்லமையுள்ள தேவனே, அனுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு. மனுக்குலத்த இரட்சிக்கறதுக்கு அவர் எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்தியிருக்காரு. அவரு நியாயத்தீர்ப்பின் வேலையச் செய்யறாரு. இது எதுக்குன்னா, மனுகுலத்தோட சீர்கெட்ட சுபாவத்த முடிவுக்கு கொண்டு வரத்துக்கும், பாவம் செய்ற, தேவன எதிர்க்கிற பிரச்சனைய வேரோட பிடுங்குவதற்கும், நம்மள பரிசுத்தப்படுத்தவும், இரட்சிக்கவும், அவருடைய ராஜ்யத்திற்குள்ள கொண்டு வரவும் அப்படி செய்யறாரு.” “கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியை நிறைவேற்றுது. ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). ‘நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்’“ (யோவான் 12:47-48). “1 பேதுரு சொல்கிறது: ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). நாம தேவனோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்கறது மூலமா, நம்மனால சத்தியத்த அடைய முடியும். நாம சுத்தமாக்கப்படலாம், அப்பதான் நம்மனால தேவனுடைய ராஜ்யத்துற்குள நுழைய முடியும்.”

சகோதரி சூசனோட ஐக்கியம், வெளிச்சம் நிறைந்ததாவும் வேதத்துக்கு உண்மையாவும் இருந்தது. நான் ஒத்துக்கிட்டேன். கிருபையின் காலத்தில, கர்த்தராகிய இயேசு மீட்பின் வேலைய மட்டுமே செஞ்சாரு. ஆனா அது மனுகுலத்தோட பாவ சுபாவத்த முடிவுக்கு கொண்டுவரல. நம்மோட விசுவாசம் நம்ம பாவங்கள, மன்னிக்க மட்டுந்தான் செய்யும். நம்ம பாவத்தன்மைய முடிவுக்கு கொண்டுவரதுக்கும், நாம சுத்தமாகறதுக்கும், நாம கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்கணும். என் கண்கள் திறந்திடுச்சு. தேவனோட கிரியைல, நான் அனுபவிக்காத ஒரு கட்டம் இருந்துச்சு. கர்த்தராகிய இயேசு ஏற்கனவே அனுப்பப்பட்டுருக்காரு, நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யறதுக்கும், மனுக்குலத்த பரிசுத்தப்படுத்தி, இரட்சிக்கவும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள நம்மல கொண்டு வரவும் சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காருன்னு நான் கேட்டிருக்கேன். நான் உற்சாகமா உணர்ந்தேன், நான் உடனே, சகோதரி சூசன்கிட்ட இப்படி கேட்டேன், “ஆண்டவரோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி நம்மள சுத்திகரிக்குது?”

அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட சில வார்த்தைகள எனக்காக படிச்சாங்க. “தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனின் கிரியை முதன்மையாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதாகும். இந்த அஸ்திவாரத்தின் மேல், அவர் மனுஷனிடம் அதிக சத்தியத்தைக் கொண்டுவருகிறார், மேலும் கடைபிடிப்பதற்கான பல வழிகளையும் அவனுக்குச் சுட்டிக்காட்டுகிறார், இதன் மூலம் மனுஷனை ஜெயங்கொண்டு அவனது சொந்த சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை இரட்சிக்கும் அவரது நோக்கத்தை அடைகிறார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியைக்குப் பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்(மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரை). “கடைசி நாட்களில், மனிதனுக்கு போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறுபிரிக்கவும் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படி சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாக பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம்பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம்பண்ணுதல் போன்ற இந்த முறைகளை சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனிதன் முற்றிலும் பறிக்கப்பட்டு இழந்துபோவான் என்பது சத்தியத்துடனான காரியமாயிருக்கிறது. இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனுக்கு சம்பூரணமாகக் கீழ்ப்படிவதை நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிதகமாக புரிந்துகொள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தை கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்த கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

சகோதரி சூசன் அவங்களோட வார்த்தைகள தொடர்ந்தாங்க. “நியாயத்தீர்ப்பின் வேலைய செய்யறதுக்கும், மனுக்குலத்த சுத்தப்படுத்தறதுக்கும், இரட்சிப்பதுக்கும், அவருடைய முழு கிரியையோட இரகசியங்கள வெளிப்படுத்தறதுக்கும் கடைசி நாட்கள்ல, தேவன் சத்தியத்த வெளிப்படுத்துறார். அவரு மனுக்குலத்தோட சீர்கேட்டின் உண்மைய வெளிப்படுத்தி இருக்காரு, தேவன எதிர்க்கிற நம்ம சுபாவங்கள அவர் வெளிப்படுத்தி, அத துண்டிச்சிட்டாரு. நம்ம சுபாவங்கள்ல இருக்கிற சாத்தானோட விஷத்தன்மை என்னன்னு நமக்குச் சொல்லியிருக்காரு. இந்த விஷங்கள், எப்படிப்பட்ட சீர்கேடான நிலையயும், எண்ணங்களையும் கொடுக்கும் என்பதயும், அவைகள எப்படி முடிவுக்குக் கொண்டுவருவதுன்னு சொல்லியிருக்காரு. தேவனுக்குக் கீழ்ப்படிவதுன்னா என்ன, தேவன உண்மையா நேசிக்கிறதுன்னா என்ன, நேர்மையான நபரா எப்படி இருக்கணும்னு எல்லாம், அவரோட வார்த்தைகள் தெளிவுபடுத்துது. நம்ம கிட்ட இருக்குற சீர்கேட்ட எப்படி விடறது, எப்படி இரட்சிப்ப அடையறதுன்னு அவை நமக்குக் காட்டுது. தேவனோட பரிசுத்தமான, நீதியான மனநிலையயும் அது வெளிப்படுத்துது. தேவனோட நியாயத்தீர்ப்பையும், தண்டனையையும் அனுபவிப்பது மூலமா, நாம சத்தியத்த புரிஞ்சுக்குறோம். நம்ம சீர்கேட்டோட சாரத்த புரிஞ்சு கொள்ள ஆரம்பிக்கிறோம். அதுக்கப்புறம் சாத்தான் நம்மள எப்படி கெடுத்துருக்கான்னு புரிஞ்சு அத வெறுக்க ஆரம்பிக்கிறோம். தேவனுக்கு முன்பாக விழுந்து, மனந்திரும்பி, சத்தியத்த கடைபிடிக்கிறோம். நம்முடைய சீர்கேடான மனநிலமைகள் கொஞ்ச கொஞ்சமா மாறுது, பயபக்திய அடையறோம், பாவத்துக்கு கீழ்ப்படியறதும், தேவன எதிர்க்கறதும் குறையுது.” சகோதரி சூசன் அவங்களோட தனிப்பட்ட அனுபவத்த பகிர்ந்திட்டாங்க. அவங்க எப்பவுமே, தான் மத்தவங்களவிட, ரொம்ப திறமையானவள்னு நினைச்சாங்க. அவங்க ரொம்ப சுயநலமாவும், தன்னோட கருத்துக்கள மத்த ஜனங்கள ஒத்துக்க வெக்க, அவைகள அவங்க மேல திணுச்சாங்க. யாரு அவங்கள எதிர்த்தாலும், அவங்க, அவங்கள விலக்குனாங்க, கடிஞ்சு கொண்டாங்க. அது அவங்கள எதிர்த்தவங்கள காயப்படுத்தி, தடைபண்ணுச்சு. தேவனின் வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பு, வெளிப்பாடுகள் மூலமா அவங்களுக்கு ஒன்னு புரிஞ்சுது, “நான் தான் எல்லாத்துக்கும் மேலயும் ஆளுக செய்யணு” ங்கிற சாத்தானுடைய நியாயங்கள்படி, தான் வாழ்தோங்கறத அவங்க உணர்ந்தாங்க. அவங்க நம்பமுடியாத அளவுக்கு, பிடிவாதமாவும், ஆணவமாவும் இருந்தாங்க. தான் சொல்வது தான் சத்தியங்கறது போல, தன்னோட யோசனைக்கு மத்தவங்க கீழ்ப்படியனும்னு விரும்புனாங்க. அவங்க தேவனிடத்தில பயபக்தி இல்லாமலும், நியாயமில்லாமலும் இருந்தாங்க. இது தேவனையும், ஜனங்களயும் வெறுப்படைய வைச்சுது. ஜனங்க எப்போதுமே அவங்கள கவனிக்கனும்னு நினைச்சாங்க, அது சாத்தானோட ஒரு மனநிலை. சாத்தான் ரொம்ப கர்வம் உள்ளவன். அவனுக்கு தேவனோட சமமா இருக்கணும்னு விருப்பம். அவனுக்கு அதிகாரம் பண்ணவும், ஜனங்க தன்ன கவனிக்கணும், தனக்கு மரியாத கொடுக்கணும்னு விருப்பம். அதனால தேவன் அவன சபிச்சாரு. தன்னோட பிரச்சனையோட தன்மையையும் விளைவுகளையும் உணர்ந்தோன, அவங்க பயந்தாங்க, தன்னயே வெறுத்தாங்க, அப்புறம் சத்தியத்த கடப்பிடிச்சாங்க. மத்தவங்களோட மென்மையா நடந்துகொள்ள ஆரம்பிச்சாங்க. அதுக்கப்பறம், மத்தவங்கள அவங்க கீழ பாக்காம, அவங்கள அடக்கிறத விட்டுட்டாங்க. மத்த ஜனங்களோட யோசனைகள அவங்களால ஏத்துக்க முடிஞ்சது, ஜனங்களோட இருந்த அவங்க உறவு மேம்பட்டுச்சு. தேவனுடைய வார்த்தைகள்ல இருந்த அவங்க ஐக்கியத்தையும், அவங்களோட அனுபவத்தையும் கேக்கும்போது, என்னுடைய உள்ளம் வெளிச்சமடஞ்சுது. அப்போ, தேவன் அவரோட வார்த்தைகள, நம்மோட சீர்கேடான நிலைமய நியாயந்தீர்க்கறதற்கும், சுத்தம் பண்றதுக்கும் உபயோகப்படுத்துறாரு. நம்மள இரட்சிக்கிற தேவனோட கிரியை, நடைமுறைக்கு ஏத்தது. நான் பல வருஷமா விசுவாசிச்சேன், ஆனா பாவத்திலிருந்து விடுதல பெற முடியல. நான் ரொம்ப வேதனையில இருந்தேன், ஆனா பாதையை கண்டுபுடிச்சிட்டேன்!

அதுக்கப்பறம், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள படிக்கவும், படங்களப் பார்க்கவும், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையோட பாடல்கள கேக்கவும் ஆரம்பிச்சேன். தேவனுடைய வார்த்தைளோட ஐக்கியப்பட, கூடுகைகள்லேயும் சேர்ந்தேன்‌. பரிசுத்த ஆவியானவரோட கிரியைய என்னால உணர முடிஞ்சுது. எனக்கு முன்னெப்பவும், தெரியாம இருந்த இரகசியங்களையும், சத்தியங்களையும் புரிஞ்சிக்கிட்டேன். நான் அத அனுபவிச்சிட்டிருந்தேன். அனுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு, சர்வவல்லமையுள்ள தேவன்னு எனக்குத் தெரியும்!

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அதிகமா படிச்சேன். என்னோட ஆணவமான மனநிலமய பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன். நான் ரொம்ப திமிரா நடந்தேன், மத்தவங்கள திட்டினேன் அது சாத்தானுடைய மனநிலை. தேவன் அத வெறுக்கறாரு. நான் மனந்திரும்ப தேவனிடம் ஜெபிச்சேன். நான் இனிமே அப்படி நடந்துக்க கூடாதுன்னும், மத்தவங்களோட தப்பு மேல குறியா இருக்ககூடாதுன்னும் விரும்பினேன். அது நியாமமில்லாதது. என் கணவர் எனக்குப் பிடிக்காத ஏதாவது செய்யறத பாக்கும்போது, என் இதயத்த அமைதிப்படுத்தவும், அவர்கிட்ட அமைதியா பேசவும் நான் ஜெபிப்பேன். ஒருநாள், என் கணவர் என்கிட்ட, “சர்வவல்ல தேவன நம்ப ஆரம்பிச்சதுல இருந்து, நீ மாறிட்ட. நீ எப்பவும் கோவப்படர மாதிரி இப்போ படறது இல்ல, உன்னால எல்லா காரியத்துலயும் அமைதியா பேச முடியுது” ன்னு சொன்னாரு. நான் என் உள்ளத்துக்குள்ள தேவனுக்கு நன்றி சொன்னேன். எனக்குத் தெரியும், என்னோட சாதனை எல்லாம் தேவனோட வார்த்தைகளாலதான்னு. எனக்கு என்ன ஆச்சரியம்னா, என் கணவர் இதப் பாத்தபோது, சர்வ வல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள படிக்க ஆரம்பிச்சாரு, அவர ஏத்துக்கிட்டாரு. தேவனுடைய வார்த்தைகள் மூலமா, என் கணவர், ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் சாத்தான் ஜனங்கள கவர்ந்திழுக்கிறான், கட்டுப்படுத்துகிறான், அப்பறம் அவங்கள கெடுக்கறான்னு உணர்ந்துட்டாரு. ஆன்லைன் விளையாட்டுகள விளையாடறதுனால வர்ற ஆபத்த அவர் புரிஞ்சு கொள்ள ஆரம்பிச்சாரு, அதுக்கு மேல, அவரு, அதனால ஈர்க்கப்படல. நாங்க அதுக்கப்புறம் சண்டைபோடறதில்ல. நாங்க தேவனோட வார்த்தைகள படிச்சோம், ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ள ஆரம்பிச்சோம். நாங்க ஒரு கஷ்டத்த சந்திக்கும்போது, ஒரு தீர்வை அடையறதுக்கு, தேவனுடைய வார்த்தையில இருந்து சத்தியத்தைத் தேடறோம். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை மட்டுந்தான் எனக்குத் தேவைனும், அது நம்மள சுத்தப்படுத்தறதும், முழுமையா இரட்சிக்கிறதும் ரொம்ப முக்கியமானதுன்னும் நான் உணர்ந்தேன். பரலோக ராஜ்யத்துக்குப் போகிற வழிய நான் கண்டுபிடிச்சிட்டேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

ஆவணப்படம் | சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றல் மற்றும் கிரியை (பகுதி ஒன்று)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு கூறினார், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17). (© BSI)...

Christian Movie | தேவபக்திக்குரிய இரகசியம் | The Lord Jesus Has Returned in the Flesh (Tamil Subtitles)

லின் போயன் சீனாவிலுள்ள ஒரு வீட்டு திருச்சபையில் ஒரு மூப்பராக இருந்தார். ஒரு விசுவாசியாக இத்தனை வருடங்களாக, கர்த்தருக்காக துன்பப்படுவதை அவர்...

Leave a Reply