கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

அக்டோபர் 20, 2021

ஜின்காவோ, அமெரிக்கா

தொலைந்து போனதாக மற்றும் திசைகெட்டுவிட்டதாக உணர்கிற, ஓர் இருண்ட மற்றும் பாழடைந்த திருச்சபை

நான் தேவனை விசுவாசிப்பதற்கு முன்பு, சில ஆரோக்கியமற்ற சமூகப் போக்குகளின் செல்வாக்கினால் நான் பாதிக்கப்பட்டேன், அது என்னை சூதாட்டத்தைத் தொடங்க வைத்தது, அந்த நிகழ்வுகளில், நான் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல், என்னைத் துன்பத்திலும் வேதனையிலும் ஆழ்த்திய பல உடல்நலப் பிரச்சனைகளையும் வளர்த்துக் கொண்டேன். 1998ல், கத்தோலிக்க மதத்திற்கு மாறிய பிறகு, நான் சூதாட்டத்தை விட்டு விட்டேன், என் உடல் நலமும் மேம்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் தினமும் ஜெபம் செய்தேன், காலை மற்றும் மாலை ஒப்புவித்தல் செய்தேன், வழிபாடுகளில் கலந்து கொண்டேன் மற்றும் மிக மகிழ்ச்சியாகவும் நிலையாகவும் உணர்ந்தேன். 2011ல், நான் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தேன், நான் எப்பொழுதும் அலுவலாகவும், வேலையின் நிமித்தம் சோர்வாகவும் இருந்த போதிலும், நான் தொடர்ந்து ஆராதனைகளில் கலந்து கொண்டேன். அந்த நேரத்தில், “தேவன் ஏற்கனவே திரும்பி விட்டார் என்று கிழக்கத்திய மின்னல் வாதாடிக் கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் அவர்களை நம்ப கூடாது, உங்களுக்கு அறிமுகம் இல்லாத குழுக்களில் நீங்கள் கலந்து கொள்ள கூடாது. இப்போது பலரும் பொய்யான வழியைப் போதிக்கிறார்கள், நீங்கள் உங்கள் பயணத்தின் பாதிவழியில் திருடப்பட்டு தேவனுக்குத் துரோகம் செய்தால், நீங்கள் வீணாக விசுவாசித்திருப்பதுமன்றி, நீங்கள் நிச்சயம் நரகத்திற்கும் பாத்திரமாவீர்கள்….” என்று பாதிரியார்கள் எப்போதும் எங்களிடம் சொல்வார்கள். “நான் தேவனுடைய கிருபையை அனுபவித்திருக்கிறேன், அதனால் நான் நன்றியற்றவனாகவும் விசுவாசமற்றவனாகவும் அவருக்குத் துரோகஞ்செய்யக் கூடாது, அது மனச்சாட்சியற்றதாய் இருக்கும்! என்னுடைய மேன்மை நிலை சிறியது மற்றும் நான் பகுத்தறிய முடியாதவன், அதனால் நான் மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் பழகாமல் இருப்பது நல்லது. அப்படிச் செய்தால், நான் பொய்யான வழியைப் பிரசங்கிக்கும் மக்களுடன் கலந்து விட மாட்டேன்” என்று நான் மனதிற்குள் நினைத்தேன். அதன்பின், நான் மற்றவர்களுடனான உணர்வுப்பூர்வமானத் தொடர்பை தவிர்த்து, நான் தேவனை நம்புகிறேன் என்று மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்த யாரிடமும் சொல்லவில்லை. நான் திருச்சபை ஆராதனைகளில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.

ஆனாலும், எங்கள் திருச்சபை பழமைக்கு எதிரான நிலைக்கு அடிபணிந்து போவதை நான் மெதுவாகக் கவனிக்க ஆரம்பித்தேன். திருச்சபையில் இருக்கும் எனது பழைய நண்பர்கள் சிலர் திருச்சபைக்கு தங்கள் குடும்பத்தின் மூதாதையரின் பெயர் பதிக்கப்பட்ட கற்களைக் கொண்டு வர ஆரம்பித்து, அதை பலிபீடத்தின்மேல் வைத்து தூபங்காட்டி காணிக்கை படைத்தனர். நான் எனக்குள் நினைத்தேன், “திருச்சபை தேவனை ஆராதிப்பதற்கான ஒரு இடமல்லவா? நீங்கள் ஏன் உங்கள் இறந்த முன்னோர்களை இங்கு ஆராதிக்கிறீர்கள்? இது தேவனுடைய கட்டளைகளுக்கு ஏற்ப இல்லையே!” ஆனாலும் எங்கள் பாதிரியார்கள் இவ்வழியில் செயல்படுவதை நிறுத்தவில்லை, இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மேலும் என்னவென்றால் ஆராதனையின் போது ##ஜனங்களின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது, மேலும் வருபவர்களும் உறங்கி விடுவார்கள் அல்லது தங்கள் தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். தேவனை ஆராதிப்பது வெறும் சடங்கின் வழக்கமான செயல்பாடாகவும், எவ்வித சிரத்தையற்று செய்யப்படும் வகையாகவும் இருந்தது. பொய்யான வழிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை நமது பாதிரியார்கள் வலியுறுத்தவில்லையென்றால், அவர்கள் ஒரு புதிய திருச்சபையைக் கட்டுவதற்கு பணம் திரட்டுவது பற்றி பேசிக்கொண்டு மற்றும் அடிக்கடி தன் பகுதி உறுப்பினர்களை நன்கொடை அளிக்க கட்டாயப்படுத்திக் கொண்டிருப்பார்கள். பாதிரியார்கள் நன்கொடையாளர் பெயரையும் நன்கொடை அளித்த தொகையையும் அனைவரும் பார்க்கும்படி சுவரில் பதிப்பார்கள். இந்தக் குறிப்பிட்ட நடைமுறை எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன், “இந்த திருச்சபையில் ஏதாவது பிரச்சனையா? மற்ற திருச்சபைகளில் பெரும்பாலும் இது போன்ற நடைமுறைகள் இல்லையே? ஒருவேளை நான் வேறு சில திருச்சபைகளைச் விசாரிக்க வேண்டுமோ?” இருப்பினும் பாதிரியார்கள் எப்போதும் பொய்யான வழியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்து, நான் மீண்டும் தயங்கினேன்…

திருச்சபை ஏன் இருண்டதாகவும் பாழிடமாகவும் ஆனது?

2018 மே மாதத்தில், நான் சகோதரி லீயைச் சந்தித்தேன். நாங்கள் அடிக்கடி வேதாகமம் பற்றி ஒன்றாகக் கலந்துரையாடினோம், திருச்சபையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் ஒத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தோம். நாங்கள் நன்றாகப் பழகினோம், அதனால் வேறு சில திருச்சபைகளை விசாரிக்கப் போகும் என் யோசனையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். சகோதரி லீ மிகவும் நல்ல பிரசங்கங்களை வழங்கிய ஒரு சகோதரரைத் தான் அறிந்திருப்பதாகச் சொல்லி, அதைக் கேட்டு கவனிக்க என்னை அவர்களுடன் வரும்படி கேட்டார்கள். நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன்.

சில நாட்களுக்குப் பிறகு சகோதரி லீயை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது, சகோதரர் லியு மற்றும் வேறு சில சகோதரிகளை நான் சந்தித்தேன். திருச்சபையின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய இந்த தலைப்பு பேசப்பட்ட போது, எனது சமீபத்திய சில குழப்பங்களைப் பற்றி நான் அவர்களிடம் மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டேன், “சகோதரர் லியு, திருச்சபை ஏன் மிகவும் இருண்டதாகவும் பாழிடமாகவும் மாறிவிட்டது? பாதிரியார்கள் ஏன் ஜனங்கள் தங்கள் மூதாதையரின் பலகைகளைப் பலிபீடத்தின் மீது வைக்க அனுமதித்து மற்றும் அவர்களைத் தூபப்பலிகளைக் கொடுக்கக் கூட அனுமதிக்கிறார்கள்?”

சகோதரர் லியு ஐக்கியப்பட்டு இவ்வாறு பகிர்ந்தார், “சகோதரி, நீங்கள் ஒரு முக்கிய பிரச்சனையை எடுத்து வந்திருக்கிறீர்கள். திருச்சபை மிகவும் பாழடைந்து விட்டது. வழக்கத்திற்கு மாறான நடைமுறைகள் அதிகரித்துவிட்டன, பாதிரியார்கள் கட்டளைகளைக் கடைபிடிப்பதில்லை, தேவனுடைய வார்த்தையை நடைமுறைப்படுத்துவதில்லை மற்றும் அவர்களின் பிரசங்கங்களில் நம்பகத்தன்மை இருப்பதில்லை. மேலும் என்னவென்றால் அப்பகுதியைச் சார்ந்த திருச்சபை உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர் மற்றும் கூட்டங்கள் இருக்கும் போது கூட, ஜனங்கள் வெறுமனே எந்த சிரத்தையற்று இருப்பதாகவும் மற்றும் அவர்கள் உண்மையாக தேவனை ஆராதிக்காமல் இருப்பதாகவும் தெரிகிறது. அவர்கள் பரிசுத்த ஆவியின் ஒழுக்கம் இல்லாமல் பாவத்தில் வாழ்கிறார்கள்…. திருச்சபை சிலகாலமாக இருண்டதாக பாழடைந்ததாக இருப்பதையும், பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளின்றி இருப்பதையும் இது காண்பிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் காலத்தை நினைத்து பார்த்தால், அந்தக் காலத்தில் ஆலயம் முதலில் தேவனுடைய மகிமையால் நிரம்பியிருந்தது, தேவனுடைய மகிமையை மறுக்க ஒருவரும் துணியவில்லை, ஆலயத்திற்குள் அனைவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்படிந்தனர். பின்னர், ஆலயத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதை நிறுத்தியவுடன், அது எருதுகள், செம்மறியாடுகள் மற்றும் புறாக்கள் விற்கப்படும் ஒரு குழப்பமான, அழுக்கான சந்தையாக மாறிப் போனது. திருச்சபையின் நிலைமையானது நியாயப்பிரமாணக் காலத்தின் பிற்பகுதியில் இருந்த திருச்சபையின் நிலைமையிலிருந்து அந்த அளவு வேறுபட்டதல்ல என்று இப்போது தோன்றுகிறது. அப்படியானால் திருச்சபை ஏன் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைக்குள் விழுந்துள்ளது? உண்மையில், தேவன் ஏற்கனவே வேறொரு இடத்தில் ஒரு புதிய கிரியையை ஆரம்பித்து விட்டதால், அதனால் பரிசுத்த ஆவியானவர் பழைய கிரியையைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு, புதிய கிரியைக்கு சென்றுவிட்டார் என்பதே காரணம். நாம் தேவனுடைய புதிய கிரியையுடன் ஒத்துப்போகவில்லை, நம்முடைய ஆவிகள் போஷிக்கப்படவில்லை, நம் தேவனுக்கு பயப்படுவதில்லை, நாம் அவரை அதிருப்திபடுத்தினோம், ஆனால் பரிசுத்த ஆவியானவரால் கண்டிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படவில்லை, அதனால் நமது ஆவிக்குரிய நிலைமை என்றென்றும் இருண்டு போனது. இது பின்வரும் வேதாகமத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது, ‘உங்களுக்கு அறுவடை செய்ய இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் போதே, உங்களுக்கு மழையை வரவிடாமல் நிறுத்தி வைத்துவிட்டேன். மேலும் ஒரு நகரத்தில் மழை பொழியச் செய்தேன், மற்றொரு நகரத்தில் மழையைப் பொய்த்துப் போகச் செய்தேன். ஒரு நிலத்தில் மழை பெய்தது, மற்றொரு நிலத்தில் மழைப் பொய்த்து வறண்டு போனது. மூன்று நகரங்களைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் குடிக்க ஒரு நகரத்திற்குப் போனாலும் அவர்களுடைய தாகம் தீரவில்லை. ஆனாலும் நீங்கள் என்னிடம் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்கிறார்(ஆமோஸ் 4:7-8) இயேசு கிறிஸ்து விதைகளை விதைக்கும் கிரியையைச் செய்கிறார். அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமது விதைகளை விதைத்து வருகிறார். இப்போது, கடைசி காலங்களில், அறுவடையின் நேரம் நம்மிடம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தேவன் ஏற்கனவே திருச்சபையை விட்டு வெளியேறி புதிய காலத்தில் அறுவடை கிரியையை தொடங்கிவிட்டார். ‘ஒரு நகரத்தில் மழை பொழிய’ மற்றும் ‘ஒரு நிலத்தில் மழை பெய்தது’ ஆகிய சொற்றொடர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கும் திருச்சபையைக் குறிக்கிறது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமும் அவருடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்வதின் மூலமும் மட்டுமே நாம் பரிசுத்த ஆவியின் கிரியையைப் பெற்றுக் கொள்ள முடியும்.”

சகோதரர் லியு உண்மை என்று கூறியது போல பரிசுத்த ஆவியானவர் மிக சாத்தியமாகத் திருச்சபையை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், திருச்சபையில் உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருந்தால், அதன் திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் திருச்சபையின் சட்டங்களைப் பின்பற்றுவார்கள், தேவனுடைய போதனைகளைக் கடைப்பிடிப்பார்கள், மற்றும் தேவனை அதிருப்திப்படுத்தும் எதையும் செய்யத் துணிய மாட்டார்கள். இருப்பினும், தற்போது, திருச்சபை உறுப்பினர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒழுங்குபடுத்தப்படாமல் பொய்யான விக்கிரகங்களை வணங்கினர். இப்படி, திருச்சபை உண்மையிலேயே பாழடைந்து இருளில் மூழ்கியதாக எனக்குத் தோன்றியது.

அடுத்து சகோதரர் லியு ஒரு பேனா மற்றும் காகிதத்தை எடுத்து மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் கிரியையின் மூன்று நிலைகளை விளக்கும் ஒரு படத்தை வரைந்தார் (நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம்). அவர் தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்தின் பின்னணி உள்ளடக்கம், பொருள் மற்றும் அடையப்பட்ட விளைவு பற்றிய விரிவான விளக்கத்தை அளித்தார். இப்படி எந்தப் பாதிரியாரும் பேசுவதை நான் கேள்விப்பட்டதே இல்லை, அவருடைய ஐக்கியம் என்னைப் போஷித்ததையும், குறிப்பாக புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்ததையும் கண்டேன். அதன் பின்பு, சகோதரர் லியு தேவன் ஏற்கனவே திரும்பி வந்ததாகவும், சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்பட்டதாகவும் ஏற்கனவே ஏராளமான வார்த்தைகளை வெளியிட்டதாகவும், மற்றும் நியாயத்தீர்ப்பு மற்றும் மீட்பின் கிரியையினுடைய அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட தேவனுடைய கிரியையின் புதிய கட்டமான நியாயந்தீர்க்கும் மற்றும் சுத்திகரிக்கும் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார் எனவும் என்னிடம் சாட்சியமளித்தார். இந்தக் கட்டத்தில், சகோதரர் லியு கிழக்கத்திய மின்னலின் போதனைகளைப் போதிக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். கிழக்கத்திய மின்னல் ஒரு பொய்யான வழி என்று எங்கள் பாதிரியார்கள் கண்டித்ததை நான் நினைவுகூர்ந்து, நான் சகோதரர் லியுவைக் குறித்து ஜாக்கிரதைப்பட்டு, அந்தக் கட்டத்திலிருந்து அவர் சொன்ன எதையும் பெரிதாகக் கவனிக்கவில்லை.

மெய்யான வழியைத் தீர்மானிப்பது எப்படி (1)

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு, சகோதரி லீ மற்றொரு பிரசங்கத்தைக் கேட்க வரும்படி என்னை அழைத்தார்கள், ஆனால் நான் ஒரு காரணம் கூறி மறுத்துவிட்டேன். இருப்பினும் அவர்களை நிராகரித்த பிறகு நான் அமைதியற்றும் முரண்பட்டும் உணர்ந்தேன். நான் நினைத்தேன், “பாதிரியார்கள் கிழக்கத்திய மின்னல் ஒரு பொய்யான வழி என்று சொன்னார்கள், ஆனால் அவர்களின் பிரசங்கங்களைக் கேட்டபின், அவர்கள் சொல்வதில் எந்தத் தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் என்னவென்றால், சகோதரர் லியு நியாயமாகப் பேசினார் மற்றும் தன்னை ஆதரிக்கப் போதுமான ஆதாரங்களையும் வழங்கினார். தேவன் விதைகளை விதைப்பவர்—அவர் விதைத்த விதைகளிலிருந்து அவர் அறுவடை செய்யாவிட்டால், அவருடைய கிரியை வீணாகிவிடும். சர்வவல்லமையுள்ள தேவன் செய்யும் கிரியையானது அறுவடையின் கிரியை என்றும் சகோதரர் லியு கூறினார். இதுவே மெய்யான வழி என்றால், தேடுவதற்குப் பதிலாக நான் அதை நிராகரித்தால், கடைசி நாட்களில் தேவனுடைய இரட்சிப்பை நான் இழந்திருக்க மாட்டேனா? இது ஆகாது, எனது கேள்விகளுக்கான பதில்களை நான் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று. இந்தத் தீர்மானத்தை எடுத்த பிறகு, நான் சகோதரி லீயைத் தொடர்புகொண்டு, அவர்களோடு சென்று மற்றொரு பிரசங்கத்தைக் கேட்க ஏற்பாடு செய்தேன். நான் சகோதரர் லியுவைப் பார்த்தவுடன், “சகோதரரே, கடைசி நாட்களில் பலரும் பொய்யான வழிகளைப் பிரசங்கிக்கிறார்கள் என்று எங்கள் பாதிரியார்கள் கூறியுள்ளனர், மேலும் மற்ற மதப்பிரிவுகளின் பிரசங்கங்களை, குறிப்பாக கிழக்கத்திய மின்னலின் பிரசங்கங்களைக் கவனிக்கக் கூடாது என்றும், இல்லையென்றால் நாங்கள் வஞ்சிக்கப்படுவோம் என்றும் சொன்னார்கள். இருப்பினும் நீங்கள் சொன்னது மிகவும் ஒளியூட்டுவதாக நான் கண்டுகொண்டேன், நான் மீண்டும் ஒருமுறை தேட விரும்புகிறேன். கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் கிரியை மெய்யான வழி என்பதை நான் எப்படி உறுதியாக நம்ப முடியும்?” என்று கேட்டேன்.

சகோதரர் லியு புன்னகைத்துவிட்டு, “தேவனுக்கு நன்றி! மெய்யான வழிக்கும் பொய்யான வழிக்கும் இடையில் வேறுபாடு காண்பது சத்தியத்தின் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். சத்தியத்தின் இந்த அம்சத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால், நாம் எளிதில் வஞ்சிக்கப்பட்ட மாட்டோம், மற்றும் மெய்யான வழியைத் தேடிக் கண்டுபிடித்து, சரியான நேரத்தில் நம்மால் தேவனுடைய வருகையை வரவேற்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை சத்தியத்தின் இந்த அம்சத்தை மிகத் தெளிவாக விளக்குகிறது. நாம் அதைப் பார்க்கலாம்” என்றார். சகோதரர் லியு பேசிக்கொண்டே அவரது கணினியில் ஒரு ஆவணத்தைத் திறந்து பின்வருவதை வாசித்தார்: “உண்மையான வழியைத் தேடுவதில் மிக அடிப்படையான கொள்கை எது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த வழியில் இருக்கிறதா இல்லையா என்பதையும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கின்றனவா, யார் சாட்சி கொடுக்கக்கூடும், அது உனக்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதையும் நீ காண வேண்டும். உண்மையான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அறிவைத்தரும் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் மிகவும் அடிப்படையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறுவதாகும். தேவன் மீதான ஜனங்களுடைய விசுவாசத்தின் சாராம்சமானது தேவனுடைய ஆவியின் மீதான விசுவாசமாகும், ஏனென்றால் மாம்சத்தில் வந்த தேவனில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசமும் கூட, தேவனுடைய ஆவியின் உருவகமாக இந்த மாம்சத்தில் இருக்கிறது, அதாவது அத்தகைய விசுவாசம் இன்னும் ஆவியானவர் மீதான விசுவாசமாக இருக்கிறது. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இந்த மாம்சம் ஆவியானவரிலிருந்து வந்தது, மேலும் வார்த்தை மாம்சமாகி விட்டதால், மனிதனது விசுவாசத்தில் தேவனின் உள்ளார்ந்த சாராம்சம் இன்னும்கூட இருக்கிறது. எனவே, இது உண்மையான வழியா இல்லையா என்பதை வேறுபடுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு இந்த வழியில் சத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். சத்தியமானது இயல்பான மனிதகுலத்தின் ஜீவன மனநிலையாக இருக்கிறது, அதாவது, தேவன் ஆரம்பத்தில் மனிதனை உருவாக்கியபோது அவனுக்குத் தேவைப்பட்டது முழுவதுமான (மனித உணர்வு, நுண்ணறிவு, ஞானம் மற்றும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை அறிவு உள்ளடக்கிய) மனிதகுலம் ஆகும். அதாவது, இந்த வழி ஜனங்களை இயல்பான மனிதகுல ஜீவனத்திற்கு இட்டுச் செல்லுமா இல்லையா என்பதையும் சத்தியமா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும், இயல்பான மனிதகுலத்தின் பொருளுக்கு ஏற்ப உரைக்கப்படுபவை தேவைப்படுகிறது, இந்த சத்தியம் உண்மையாகவும் வழக்கத்துக்குரியதாகவும் இருக்கிறதாஇல்லையா, இது மிகவும் சரியான நேரமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு சத்தியம் இருந்தால், அது ஜனங்களை இயல்பான மற்றும் உண்மையான அனுபவங்களுக்கு இட்டுச் செல்ல முடியும்; மேலும், ஜனங்கள் இன்னும் சாதாரணமாகி விடுகிறார்கள், அவர்களின் மனித உணர்வு இன்னும் முழுமையடைகிறது, மாம்சத்தில் அவர்களின் ஜீவனம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு இன்னும் ஒழுங்காக மாறுகிறது, மேலும் அவர்களின் உணர்வுகள் இன்னும் இயல்பாக மாறுகின்றன. இதுதான் இரண்டாவது கொள்கை. வேறு ஒரு கொள்கையும் உள்ளது, அதாவது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகரித்து வருகிறதா இல்லையா, அத்தகைய கிரியையையும் சத்தியத்தையும் உணர்வதா இல்லையா என்பது அவர்களில் தேவனின் அன்பை தூண்டுவதோடு அவர்களை தேவனுடன் எப்போதும் நெருங்கி வரச்செய்வதாகும். இதில் இந்த வழி உண்மையான வழியா இல்லையா என்பதை அளவிட முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்”).

சகோதரர் லியு ஐக்கியப்பட்டு சொன்னார், “சகோதரி, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை மெய்யான வழியை வேறுபடுத்திக் காண்பிக்க மூன்று கொள்கைகளைத் தெளிவாக வரையறுக்கிறது. முதலில், இவ்வழியானது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். மெய்யான வழி பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த வழியை ஜனங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, தேவன் மீதான அவர்களின் நம்பிக்கையும் தேவனுக்காக அவர்களது அன்பும் இன்னும் அதிகமாகி, திருச்சபை மிகப்பெரிய அளவில் செழிக்கிறது. இது கர்த்தராகிய இயேசு தனது கிரியையைச் செய்ய வந்தபோது நடந்ததைப் போன்றதே, சகோதர சகோதரிகள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றும் வரையிலும், அவர்கள் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தையும் வழிகாட்டுதலையும் பெறுவார்கள், மேலும் அவர்கள் தேவனுக்கு விரோதமாக செயல்பட்டால் அவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள். தேவனை உண்மையாக நம்பிய அந்தச் சகோதர சகோதரிகள் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகளை அனுபவித்து, நிலையாகவும், சமாதானமாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் உணர்ந்தனர். தேவன் மீதான அவர்களின் விசுவாசம் இன்னும் ஆழமாக வளர்ந்தது மற்றும் அவர்கள் எவ்விதமான துன்பங்களை எதிர்கொண்டாலும், அவர்கள் வேதத்தை வாசிப்பதிலும், ஆராதனைகளில் கலந்து கொள்வதிலும், சுவிசேஷத்தைப் பரப்புவதிலும் தொடர்ந்து நிலைத்திருந்தனர். மேலும் என்னவென்றால், ரோமானிய அரசாங்கமும் பரிசேயர்களும் எப்படிக் கண்டனம் செய்தாலும், கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷம் தொடர்ந்து பெரிய அளவில் பரவியது மற்றும் ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடைசி நாட்களில், கர்த்தராகிய இயேசு அவருடைய வார்த்தைகளை வெளியிடுவதற்கும், நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்வதற்கும் மாம்சத்தில் திரும்பியுள்ளார். சகோதர சகோதரிகளாகிய நாங்கள் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைப் பின்பற்றுகிறோம், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையைப் படிக்கிறோம், மற்றும் அனைவரும் ஜீவனுக்கான ஜீவத்தண்ணீரின் வழங்குதலை முழுமையாக அனுபவித்திருக்கிறோம். நாங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் நாங்கள் தேவனைத் தேடுகிறோம், தேவன் சத்தியத்தைப் புரிந்துகொள்ள எங்களை அனுமதித்து, எந்தப் பாதையில் நாங்கள் செல்ல வேண்டும் என்பதையும் காண்பித்து, எங்களை வழிநடத்துகிறார் மற்றும் ஒளியூட்டுகிறார். இருப்பினும் நாங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் எங்களுடைய சொந்த கருத்துக்களின்படி செயல்படும்போது, தேவன் எங்களைத் தண்டிக்கவும் ஒழுங்குபடுத்தவும் பல்வேறு சூழ்நிலைகள், மக்கள், விஷயங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, நாங்கள் எங்களுடைய சீர்கேட்டை கண்டுணரவும், சத்தியத்தைத் தேடவும், தேவனுடைய நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும், மேலும் எங்களுடைய சொந்த சீர்கேட்டைக் காட்டிக் கொடுக்கவும், தேவனுடைய வார்த்தையின்படி செயல்படத் தயாராகவும் எங்களை அனுமதிக்கிறார். தேவனுடைய கிரியையை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதன் மூலம், தேவன் எப்படி மெய்யான ஜீவிக்கிற தேவனாய் இருக்கிறார் என்பதைக் காண்கிறோம், மேலும் அவர் மீதான விசுவாசம் இன்னும் ஆழமாக வளரும்போது, படிப்படியாக எங்கள் இருதயங்களில் அவருக்குப் பயப்படத் தொடங்குகிறோம். மத உலகின் தாக்குதல்கள் மற்றும் நியாயத்தீர்ப்புகள் மற்றும் சிசிபி தலைமையிலான கொடூரமான துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், எங்கள் சகோதர சகோதரிகள் இன்னும் உறுதியாக சர்வ வல்லமையுள்ள தேவனைப் பின்பற்றி, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை உற்சாகமாகப் பரப்புகின்றனர். மேலும் என்னவென்றால், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை, மத உலகம் மற்றும் சிசிபி அரசாங்கத்தின் துன்புறுத்தலுக்கு உட்பட்டிருந்தாலும், அது இன்னும் அதிக அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது. வெறும் குறுகியதான இருபது வருடங்களில், தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷமானது சீனாவின் முழு நிலப்பரப்பிலும் பரவியது மட்டுமல்லாமல், கடல் தாண்டியுள்ள பல தேசங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இவை அனைத்தும் தேவனுடைய கிரியையின் விளைவாகும். தேவனிடமிருந்து வருவது செழிக்கும்!”

சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையும் சகோதரர் லியுவின் ஐக்கியமும் மிகவும் நியாயமானதாக இருப்பதை நான் கண்டேன், மெய்யான வழியானது மாறாமல் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டுள்ளது. நான் முதல் முதலில் தேவனை நம்பத் தொடங்கியதை நினைக்கிற போது, என் விசுவாசம் ஆழமாக இருந்தது, நான் ஜெபம் மற்றும் வேதவாசிப்பினால் மகிழ்வுற்றேன், மேலும் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்தவதையும் ஒளியூட்டுவதையும் என்னால் உணர முடிந்தது. இருப்பினும், இப்போது, தேவனுடைய பிரசன்னத்தை என்னால் உணர முடியவில்லை, மேலும் என் விசுவாசம் பலவீனமாக இருந்தது. மேலும் என்னவென்றால், மற்றவர்களும் இதே பிரச்சனையை அனுபவித்ததை நான் கவனித்தேன்: பாதிரியாரின் பிரசங்கங்கள் ஒளியூட்டுவதாக இருக்கவில்லை, எனது திருச்சபை நண்பர்கள் பொதுவான சமூகப் போக்குகளைப் பின்பற்றி தங்கள் முன்னோர்களுக்கு தூபக் காணிக்கைகளைச் செலுத்தினர். திருச்சபை கிளர்ச்சி நிலையில் இருந்தது. சகோதரர் லியுவோ கடைசி நாட்களில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டார், சத்தியத்தின் பெரும்பகுதியை புரிந்துகொண்டார், மேலும் நான் முன்பு கேள்விப்படாத அல்லது புரிந்து கொள்ளத் தவறிய உள்ளுணர்வுகளை உருவாக்கி ஒளியூட்டும் விதத்தில் ஐக்கியப்பட்டார். மேலும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை செழித்து வளர்ந்தது. மத உலகம் எப்படி பொய்களைப் பரப்பி அவற்றைத் தாக்கினாலும், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியை மெய்யான வழியாக இருக்க முடியுமா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க ஜெபம்: ஜெபமாலை ஜெபத்தை எப்போதும் ஜெபிப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பாரா?

கிளாரி, பிலிப்பைன்ஸ் நான் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன், நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எனது பெற்றோருடன் இணைந்து அனைத்து...

கிறிஸ்தவ சிந்தனை: கிறிஸ்தவம் ஏன் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது?

அநேக மக்கள் குழப்பமடைகிறார்கள்: கர்த்தரை நம்புபவர்கள் அனைவரும் பைபிளைப் படிக்கிறார்கள், அப்படியானால் கிறிஸ்தவத்தில் ஏன் பல பிரிவுகள் உள்ளன? விடை காண இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

இன்றைய நாளுக்கான கத்தோலிக்க சிந்தனை: கத்தோலிக்க வழிபாட்டு முறையைக் கடைப்பிடிப்பது கர்த்தருக்கு ஏற்புடையதா?

ஜெங்சின், ஆஸ்திரேலியா ஆசிரியரின் குறிப்பு: இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனை விசுவாசிக்கும் அனைவரும் வழிபாட்டு முறைமை, பாவசங்கீர்த்தனம்,...

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...