புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

ஜூலை 3, 2021

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய பிரசன்னமாகுதலைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீங்களே அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். ‘கூடாத காரியம்’ பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது”). கர்த்தரை வரவேற்பதற்கான திறவுகோல் தேவனின் சத்தத்தைக் கேட்பதில் அக்கறை செலுத்துவதும், அதன் அடிப்படையில் கர்த்தரை அறிவதும் வரவேற்பதும் ஆகும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளில் தேவனின் சத்தத்தை அறிந்துகொண்டவர்கள் தேவனின் சிங்காசனத்துக்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டு, கர்த்தருடைய விருந்தில் அவருடன் கலந்துகொள்வாங்க. அவர்கள் தான் புத்தியுள்ள கன்னிகைகள், ஜனங்களில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவங்க. என்னோட முந்தைய விசுவாசத்தில், நான் வேதாகமத்துல உள்ள வார்த்தைகளில் எழுத்தியல் பூர்வ விஷயங்களை பிடிச்சிக்கிட்டு இருந்தேன், கர்த்தர் ஒரு மேகத்தின் மீது வந்து என்னை ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஏங்கிகிட்டு இருந்தேன். கர்த்தர் திரும்ப வந்துட்டார்ன்னு கேள்விப்பட்ட போது, நான் அதைக்குறித்து ஆய்வு பண்ணவுமில்ல அல்லது தேவனின் சத்தத்தைக் கேக்கவுமில்ல. கிட்டத்தட்ட ஒரு புத்தியில்லாத கன்னிகையைப்போல மாறி, கர்த்தருடைய வருகையை வரவேற்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். தேவனின் வழிகாட்டுதலுக்கு நன்றி, நான் தேவனின் சத்தத்தைக் கேட்டேன் மற்றும் ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாண விருந்துல பங்குபெற்றேன்.

ஏப்ரல் 2018 -ல் ஒரு நாள், கர்த்தருக்குள்ளான ஒரு சகோதரி எனது நல்ல நண்பரான மிரில்லேக்கு “எனது வீடு எங்கே”, என்னும் ஒரு திரைப்படத்தை அனுப்பினார், அது மிக நன்றாக இருந்தது மற்றும் யதார்த்தமானதாக இருந்தது. மிரில்லே வந்துவிட்டார், எனவே நாங்க ரெண்டுபேரும் அதை ஒன்றாகப் பார்க்க முடிந்தது. முக்கியமான கதாபாத்திரம் வலியிலும் மனவேதனையிலும் இருந்தபோது, அவர் கட்டியான ஒரு புத்தகத்தை திறக்கிறதயும் அந்த பக்கங்கள்ல மீண்டுமாய் வாழ்க்கைக்கான நம்பிக்கையை கண்டுபிடிச்சத்தையும் நான் பார்த்தேன். ஆனா அவர் வாசித்தது வேதாகமம் அல்ல, அதுல உள்ளது எல்லாம் எங்களுக்கு புதிதா இருந்தது. ஆச்சரியத்தோட, நாங்க தொடர்ந்து பார்த்தோம். பின்னர் முக்கிய கதாபாத்திரம் குழப்பத்துல இருந்தாங்க, அவருடைய திருச்சபை சகோதர சகோதரிகள் அவருக்கு உதவ வந்தாங்க. அவங்க இந்த புத்தகத்த ஒன்றாகப் படித்து, ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி உதவுனாங்க. கதையின் மையக்கருத்து வெளிப்படுத்தப்பட்டத பார்த்தபோது நான் கண்ணீர் விட்டேன். நம்ம இருண்ட சமுதாயத்தில் உள்ள அனைத்து வித சுயநலமான மக்களிடமிருந்தும் திரைப்படத்தில் உள்ளவங்க வித்தியாசமாக இருப்பத நான் உணர்ந்தேன், அவங்க வாசித்தது சிறப்பானதா தோணிச்சு. நாங்க உண்மையிலே அந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம். வீடியோவுக்கு கீழே கொடுக்கப்பட்ட தகவலை படிச்சோம். ஆனா அது கர்த்தராகிய இயேசு ஏற்கனவே தோன்றியிருக்கிறார் என்று சொன்னபோது, என்னால அத நம்பவே முடியல, நான் நினைச்சேன் அதற்கு “வழியே இல்ல! அப்போஸ்தலர் 1:11 சொல்கிறது: ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.’ கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின்மேல் எடுத்துக்கொள்ளப்பட்டார் அவர் கடைசி நாட்களில் திரும்ப வரும்போது, மீண்டும் ஒரு மேகத்தின்மேல் மகிமையோடு வருவார். இது இன்னும் நடைபெறவில்லை, ஆனா இது கர்த்தராகிய இயேசு தோன்றி இருக்கிறார் என்று சொல்லுது. இது வேதாகமத்தில் சொல்லப்பட்டதுல இருந்து மாறுபட்டதாக இருக்கு.” நான் என்ன நினைச்சுகிட்டு இருந்தேன்னு மிரில்லேயிடம் சொன்னேன். அவரும் நான் சொன்னதுக்கு சம்மதித்தார். அதற்கப்புறம் நாங்க சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய பாக்கல, அந்த திரைப்படத்தை மட்டும் சில முறைப் பார்த்தோம்.

சிறிது நேரம், நான் கர்த்தர் திரும்பி வந்த செய்தியைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன், பின்னர் அது மிரில்லேயிக்கும் எனக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. திரைப்படத்தில் அவங்க வாசிச்ச அந்த வார்த்தைகள் அவர்களுக்கு எப்படி நம்பிக்கையையும் உறுதியையும் கொடுத்தது என்பதையும், அது யாராலும் சொல்லக்கூடிய ஒன்றைப் போல எப்படி ஒலிக்கல என்பதையும் பற்றி பேசினோம். எல்லா மத உலகிலும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மட்டுமே கர்த்தருடைய வருகைக்கு சாட்சியமளிக்கிறது, எனவே காரியங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல. கர்த்தர் ஒரு மேகத்தின் மீது திரும்பி வருவார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறினதை ஞாபகப்படுத்தினோம், போதகர்களும் மூப்பர்களும் இதையேச் சொன்னார்கள். கர்த்தர் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார்ன்னு இந்த திருச்சபை ஏன் கூறியது? இது எல்லாம் என்ன? நாம அதை கவனிக்கலாமா வேண்டாமா? நான் மிகவும் முரண்பட்டதாக உணர்ந்தேன், எனவே மிரில்லேயும் நானும் ஒன்றாக ஜெபித்தோம், சரியானத தேர்வு செய்ய எங்களுக்கு வழிகாட்டும்படி கர்த்தரிடம் கேட்டோம். பின்பு, “தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறவர், அவர் விரும்பியதைச் செய்ய வல்லவர். நாம் சிந்திக்கவும் யோசிக்கவும் மட்டுமே முடிவதை வச்சு அவருடைய கிரியை மட்டுப்படுத்துவது எப்படி?” என்று நான் நினைத்தேன். “சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலேயே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு எனில், நான் விசாரிக்காமல், கர்த்தரை வரவேற்கும் வாய்ப்பை இழந்துவிட்டால், இதற்காக என் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவேன்.” கடைசிநாட்களில் சர்வ வல்லமையுள்ள தேவனின் கிரியை கவனிக்க முடிவு செய்தோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் இணையதளத்தின் மூலமா அன்னாள் என்னும் சகோதரியை தொடர்பு கொண்டோம். அவர் எங்களை சகோதரர் பியருக்கு அறிமுகப்படுத்தினார், நாங்கள் ஒன்றாக கர்த்தருடைய வருகையைப் பற்றி விவாதித்தோம்.

அந்தக் கூட்டத்தில், “அப்போஸ்தலர் 1:11 இல் கர்த்தர் பரமேறிச் சென்றபடியே மீண்டும் வருவார் என்று கூறுகிறது,” என்று என் குழப்பத்தைப் பற்றி அவர்களிடம் சொன்னேன், “வெண்மையான மேகத்தின்மேல் அவர் பரமேறிச் சென்றார், நிச்சயமாக அவர் கடைசி நாட்களில் திரும்பும்போது ஒரு வெண்மையான மேகத்தின் மீது வர வேண்டும். திருச்சபையில் உள்ள நம் போதகரும் மூப்பர்களும் இதைத்தான் சொல்கிறார்கள், நாங்களும் இதைத்தான் நம்புகிறோம். கர்த்தர் ஒரு வெண்மையான மேகத்தில் வருவதை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை, அவர் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார் என்று நீங்க எப்படி சொல்லமுடியும்?”

சகோதரர் பியர் சொன்னார், “ஒரு மேகத்தின் மீது கர்த்தர் வருகிறார் என்னும் தீர்க்கதரிசனம் நிறைவேறும், ஆனால் ஒரே ஒரு தீர்க்கதரிசனத்தை மட்டும் பார்த்து கர்த்தர் திரும்பி வருகிறதை நாம் வரையறுக்க முடியாது. அவை வெறுமனே கர்த்தர் ஒரு மேகத்தில் வருவதைப் பற்றிய வேதாகம தீர்க்கதரிசனங்கள் மட்டும் இல்லை, ஆனால் அவர் இரகசியமாக வருவது பற்றியும் குறிப்பிடுகிறது. உதாரணமாக, வெளிப்படுத்தல் 3:3: ‘நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.’ வெளிப்படுத்துதல் 16:15: ‘இதோ, திருடனைப்போல் வருகிறேன்.’ மத்தேயு 25:6: ‘நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.’ மேலும் மாற்கு 13:32, சொல்லுகிறது: ‘அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.’ இந்த தீர்க்கதரிசனங்கள் ‘திருடனைப்போல்’ என்று குறிப்பிடுகிறது. ‘திருடனைப்போல்’ என்பதன் அர்த்தம், இரகசியமாக ஒருவரும் அறியாமல், அவரைக் காணும்போது ஒருவரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத படி இருப்பதைக் கூறுகிறது. இந்த தீர்க்கதரிசனங்கள் கூறுவது கர்த்தர் இரகசியமாக வருவார் என்பதாகும். மனுஷகுமாரனின் வருகையைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் உள்ளன, லூக்கா 12:40 போன்றவை: ‘அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.’ மற்றும் 17:24–25: ‘மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ இங்கே ‘மனுஷகுமாரன்’ என்பது சாதாரண மனிதத்தன்மையுடன் மனிதரில் பிறந்தவர் என்று பொருள். எந்த ஆவியையும் அல்லது ஆவிக்குரிய சரீரத்தையும் ‘மனுஷகுமாரன்’ என்று அழைக்க முடியாது. யேகோவா தேவன் ஆவியாயிருக்கிறார், எனவே அவரை ‘மனுஷகுமாரன்’ என்று அழைக்க முடியாது. கர்த்தராகிய இயேசு ‘மனுஷகுமாரன்’ என்றும் ‘கிறிஸ்து’ என்றும் அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் சாதாரண மனுஷகுமாரனாக வாழ்ந்த மாம்சத்தில் உள்ள தேவனுடைய ஆவியானவர். ஆகவே, கர்த்தரால் குறிப்பிடப்பட்ட மனுஷகுமாரனின் வருகை, அவர் திரும்பி வரும்போது தேவன் மாம்சத்தில் மனுஷகுமாரனாக வருவார் என்பதாகும். குறிப்பாக, ஒரு வசனம் கூறுகிறது, ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ கர்த்தர் திரும்பி வரும்போது மாம்சத்தில் வருவார் என்பதற்கு இது மேலும் சான்றாக இருக்கிறது. கர்த்தர் மாம்சத்தில் வரவில்லை, ஆனால் கர்த்தராகிய இயேசுவின் ஆவி வடிவத்தில் அவர் உயிர்த்தெழுந்த பிறகு தோன்றியிருந்தால், எல்லோரும் மிகவும் பயப்படுவார்கள், ஒருவரும் அவரை எதிர்க்கவோ கண்டிக்கவோ மாட்டார்கள். அவர் இந்த தலைமுறைக்காக பாடு அனுபவிக்கவோ அல்லது நிராகரிக்கப்படவோ அவசியமிருக்காது. ஆகவே தேவன் மனுஷகுமாரனாக மாம்சம் எடுப்பதும் இரகசியமாக வருவதும் கடைசி நாட்களில் கர்த்தர் வருகிற வேறொரு வழியாகும்.”

இந்த கட்டத்தில், நான் நினைத்தேன், “இது நினைத்துப் பார்க்க முடியாதது, நான் கற்பனை செய்தது போலல்ல. ஆனால் சகோதரர் பியர் தனது ஐக்கியத்தை ஆதாரங்களுடன் கூறினார், மேலும் அவர் சொன்ன அனைத்தும் வேதாகமத்திலும் கர்த்தருடைய தீர்க்கதரிசனங்களுடனும் ஒத்துப்போனது. அவர் மிகவும் உறுதியாய் இருந்தார்.” நான் இந்த வசனங்களை பலமுறை படித்திருக்கிறேன், ஆனால் அவை கடைசி நாட்களில் இரகசியமாக மாம்சமான கர்த்தரைப் பற்றியது என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை. எனது பழைய யோசனைகள் துண்டுகளாக வீசப்பட்டன.

மிரில்லேயும் சிந்தனையுடன் தலையசைத்துக் கொண்டிருந்தார், “ஆம், நீங்க சொல்வது கர்த்தரின் வார்த்தைகளுக்கு ஏற்ப உள்ளது” என்றார்.

ஆனால் நான் ஒரு காரியத்தைப் பற்றி குழப்பமடைந்திருந்தேன், எனவே நான் அவரிடம் கேட்டேன், “கர்த்தர் மனுஷகுமாரனாக மாம்சத்தில் இரகசியமாக வந்தால், அவர் ஒரு மேகத்தின் மீது வரும் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறும்? இது ஒரு முரண்பாடு, இல்லையா?”

அதற்கு சகோதரர் பியர் பதிலளித்தார், “இந்த இரண்டு வகையான தீர்க்கதரிசனங்களுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை, ஏனெனில் கர்த்தருடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒன்றுமில்லாமல் போகாது. அவருடைய தீர்க்கதரிசனங்கள் எப்பொழுதும் நிறைவேறும். அதாவது தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டங்களுக்கு ஏற்ப அவை நிறைவேற்றப்படுகின்றன என்பதாகும். திரும்பி வந்த கர்த்தரின் தோன்றுதலுக்கும் கிரியைக்கும் கட்டங்கள் உள்ளன. முதலில், அவர் மனுஷகுமாரனாக மாம்சம் எடுத்து இரகசியமாக உலகத்திற்கு வருகிறார், பின்னர் அவர் ஒரு மேகத்தின் மீது எல்லோரும் காணும் வண்ணமாக வெளிப்படையாகத் தோன்றுகிறார்.”

குழப்பத்தில், நான் கேட்டேன், “முதலில் அவர் ரகசியமாக வருகிறார், பின்னர் வெளிப்படையாகத் தோன்றுவாரா? தயவுசெய்து இதை மேலும் விளக்க முடியுமா, சகோதரரே?”

சகோதரர் பியர் தொடர்ந்து கூறினார், “கடைசி நாட்களில் தேவன் ஒரு ஜெயங்கொள்ளுகிறவர்களின் கூட்டத்தைப் பெறுவார் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. இந்த குழுவை உருவாக்குவது தேவன் இரகசியமாக வரும்போது அவர் செய்யும் கிரியைக்கு ஒருங்கிணைந்ததாகும். தேவன் முதலில் மாம்சம் எடுத்து, கடைசி நாட்களில் இரகசியமாக வந்து சத்தியத்தை வெளிப்படுத்தவும், தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யவும், பேரழிவுகளுக்கு முன்பாக ஒரு ஜெயங்கொள்ளுகிறவர்களின் கூட்டத்தை உருவாக்கவும் செய்கிறார். பிறகு, தேவன் பேரழிவுகளை கட்டவிழ்த்து விடுவார், அவர் நல்லவர்களுக்கு வெகுமதியையும் துன்மார்க்கருக்கு தண்டனையையும் அளிப்பார். பேரழிவுகளுக்குப் பிறகு, தேவன் ஒரு மேகத்தின் மீது சகல தேசமும் ஜனங்களும் காணும்படியாக வெளிப்படையாகத் தோன்றுவார்.” “தேவன் மாம்சத்தில் இரகசியமாக கிரியை செய்கையில், அவர் தோன்றுதலுக்கு ஏங்கி காத்திருக்கிற உண்மையான விசுவாசிகள் அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு சர்வவல்லமையுள்ள தேவனிடம் திரும்புவார்கள். தேவனுடைய வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, ஜெயங்கொள்ளுகிறவர்களாக உருவாக்கப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகள் இவர்கள் தான், இவர்கள் பேரழிவுகளிலிருந்து தப்புவார்கள்.” “கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அதை எதிர்த்து கண்டனம் செய்பவர்கள், தேவன் ஒரு மேகத்தின் மீது வெளிப்படையாகத் தோன்றும்போது, அவர்கள் எதிர்த்ததும் கண்டனம் செய்ததும் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதை அவர்கள் காண்பார்கள், அவர்கள் தங்கள் மார்பகங்களை அடித்துக்கொண்டு, அழுவார்கள், பற்களைக் கடிப்பார்கள். இது ஒரு மேகத்தின் மீது வருவார் என்று சொல்லுகிற கர்த்தருடைய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும்: ‘அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்(மத்தேயு 24:30). ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7).”

சகோதரர் பியர் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் ஒரு பகுதியை வாசித்தார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லோருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது அது இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசுவின் வருகை ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, திமிரான நபராக நீங்கள் இருக்கக்கூடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருக்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

அப்போது எனக்கு புரிந்தது. கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் முதலில் இரகசியமாக வந்து ஜெயங்கொள்ளுகிற ஒரு குழுவை உருவாக்குகிறார், அதன் பின்னர் அவர் பெரும் பேரழிவுகளை மழையாய்ப் பொழிகிறார், வெகுமதியையும் தண்டனையையும் அளிக்கிறார். அதன்பிறகு, அவர் மிகுந்த மகிமைப் பொருந்தினவராய் ஒரு மேகத்தின் மீது சகல தேசங்களுக்கும் மக்களுக்கும் காணும்படியாக வெளிப்படையாகத் தோன்றுகிறார். இந்த இரண்டு வகையான தீர்க்கதரிசனங்களுக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை. நான் மிகவும் குருடனாக இருந்தேன்! கர்த்தருடைய வருகை எவ்வளவு பெரிய விஷயம், நான் அதைப் பார்க்க மறுத்துவிட்டேன், அதற்கு பதிலாக கர்த்தர் ஒரு மேகத்தின் மீது வருவதைப் பற்றிய வசனங்களைப் பிடித்துக்கொண்டு, தேவனின் சத்தத்தைக் கேட்காமல் இருந்தேன். நான் கிட்டத்தட்ட ஒரு புத்தியில்லாத கன்னிகையாகிவிட்டேன், கர்த்தருடைய வருகையை வரவேற்கும் வாய்ப்பையும் இழந்தேன். அது ஒரு நெருக்கமான அழைப்பாய் இருந்தது!

எனவே நான் சகோதரர் பியரிடம் கேட்டேன், “கர்த்தர் மாம்சத்தில் திரும்பிவிட்டார்ன்னு நீங்க சாட்சியமளிக்கிறீங்க, ஆனால் இந்த ‘மாம்சமாகுதல்’ என்றால் என்ன?” அவர் பிறகு சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் இரண்டு பத்திகளை வாசித்தார்: “‘மனுஷரூபமெடுத்தல்’ என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன்னிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”). “சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். ‘உணரப்படுவது’ என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும்.(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”).

அவர் தொடர்ந்து சொன்னார், “தேவன் மாம்சத்தில் வருதல் என்பது தேவனின் ஆவியானவர் மாம்சத்தை தரித்துக்கொள்ளுதல், நம்மைக் இரட்சிப்பதற்காக மனிதர்களிடையே கிரியை செய்வதற்கும் பேசுவதற்கும் வந்த பரலோகத்தின் தேவன் அவர். தேவனின் மனநிலையும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் அவரிடம் என்ன இருக்கிறது என்கிற அனைத்தும் மாம்சத்தில் உணரப்படுகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுதல் முற்றிலும் சாதாரணமானதாகும், வல்லமையுள்ளது அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. அவர் சாதாரண மனிதத்தன்மை கொண்டவர், அவர் மக்களுடன் உண்மையான தொடர்புக்கு வருகிறார், அவர் நம்மிடையே வாழ்கிறார். அவர் மாம்சத்தில் வந்த தேவன் என்று யாரும் சொல்ல முடியாது.” “ஆனால் கிறிஸ்து தேவனின் ஆவியானவருடைய உடலாக இருக்கிறார் மற்றும் மொத்த தெய்வீகத்தன்மையையும் கொண்டுள்ளார். அவரால் சத்தியத்த வெளிப்படுத்த முடியும், தேவனின் சொந்த கிரியையைச் செய்யமுடியும், தேவனின் மனநிலையையும், மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் அவரிடம் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்த முடியும். அவர் மனிதனுக்கு சத்தியத்தையும், வழியையும், மற்றும் ஜீவனையும் தருகிறார், மேலும் சீர்கெட்ட மனிதகுலத்தை சுத்திகரித்து என்றென்றுமாய் இரட்சிக்கவைக்க முடியும். எந்தவொரு மனிதனுக்கும் இந்த பண்புகள் இல்லை அல்லது இவற்றை அடையவும் முடியாது.” “மாம்சத்தில் வந்த கர்த்தராகிய இயேசு ஒரு சாதாரண மனிதராகத் தோன்றினார், ஆனால் சாராம்சத்தில் அவர் மாம்சத்தால் உணரப்பட்ட தேவனின் ஆவியானவர் ஆவார். அவர் எப்போதும் சத்தியத்தை வெளிப்படுத்தி மக்களைப் போஷித்து நடத்த முடிந்தது. அவர் மக்களுக்கு மனந்திரும்புதலுக்கான வழியைக் கொடுத்தார். அவரால் தேவனுடைய சொந்த கிரியையைச் செய்து மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. எனவே தேவனின் மாம்சமாகுதல் எந்தவொரு சிருஷ்டியையும் போலல்லாது, அவருடைய சாராம்சம் தேவனுடையதாகவே இருந்தது.”

இந்த கட்டத்தில், மாம்சத்தில் வருதல் என்பது பேசுவதற்கும் கிரியை செய்வதற்கும் தேவன் மனிதனாக மாறி உலகத்திற்கு வருகிறார் என்பதை நான் இறுதியாக புரிந்துகொண்டேன். இந்த மாம்சம் சாதாரண மனிதத்தன்மையையும் மொத்த தெய்வீகத்தன்மையையும் கொண்டுள்ளது. அவர் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவரால் சத்தியத்த வெளிப்படுத்தவும், மனிதகுலத்தை இரட்சிக்க தேவனின் கிரியையைச் செய்யவும் முடியும். அதுதான் கிறிஸ்து! நான் எப்போதும் “இயேசு கிறிஸ்து” என்ற பெயரைச் சொல்வேன், ஆனால் கிறிஸ்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் மிகவும் அறியாமையில் இருந்தேன்.

சகோதரர் பியர் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் ஒரு பத்தியை எங்களுக்கு வாசித்தார்: “மனுஷனைத் தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாக கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள் தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாக பரிசுத்தப்படுத்த முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”).

பிறகு அவர் இந்த ஐக்கியத்தைப் பகிர்ந்து கொண்டார்: “கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியையால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கருதினாலும், நம்முடைய சாத்தானிய சுபாவம் அப்படியே இருந்தது. ஆணவம், வஞ்சகம், தீமை போன்ற நமது சாத்தானிய சீர்கெட்ட மனநிலைகளால் நாம் இன்னும் வாழ்கிறோம். நாம் நம்முடைய சொந்த நலன்களுக்காக பொய் சொல்கிறோம், ஏமாற்றுகிறோம், ஒருவருக்கொருவர் இலாப நோக்கத்திற்காக மற்றவர்களுடன் போட்டியிடுகிறோம். நம்மால் பாவம் செய்து தேவனை எதிர்ப்பதே அல்லாமல் வேறொன்றும் செய்யமுடியாது. நாம தியாகங்கள் மற்றும் துன்பங்களை அனுபவிப்பது போல் தோன்றினாலும், நாம உண்மையில் தேவனோடு ஒப்பந்தங்களை செய்கிறோம், ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்று நம்புகிறோம். தேவனுடைய சித்தத்தை நாம் செய்வதே இல்லை. தேவன் பரிசுத்தர், ஜனங்களோ நம்மைப் போன்ற இழிந்த மற்றும் சீர்கெட்டுப்போனவர்கள், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள். மனிதனை அவர்களின் பாவ சுபாவங்களிலிருந்து இரட்சிக்க தேவன் கடைசி நாட்களில் மீண்டும் மாம்சத்தில் வந்துள்ளார். அவர் நம்முடன் உண்மையான தொடர்பைக் கொண்டிருக்கிறார், நம்மைக் காப்பதற்கும் மேய்ப்பதற்கும் அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் நம்முடைய சாத்தானிய மனநிலையையும் சுபாவத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார், மற்றும் நியாயந்தீர்க்கிறார். நம்முடைய மனநிலையை மாற்றுவதற்கான பாதையையும் அவர் நமக்குக் காட்டுகிறார், மேலும் சாதாரண மனிதத்தன்மையோடு எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு அவரை மகிழ்விக்கும் நேர்மையான மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்கிறார். தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பை அனுபவிப்பதன் மூலம், நம்முடைய சீர்கேட்டையும் சாத்தானிய சுபாவத்தையும் உண்மையாக அறிந்து வெறுக்கிறோம், மனந்திரும்பி அவருடைய வார்த்தையின் படி வாழ விரும்புறோம். நாம படிப்படியாக சில சீர்கெட்ட மனநிலைகளைத் தள்ளிவிட்டு, சில மனித சாயலுக்கொத்த நிலையில் வாழத் தொடங்குகிறோம்.” “மாம்சத்தில் வந்த தேவனால் மட்டுமே அவருடைய கிரியையில் இதை அடைய முடியும்.” “கடைசி நாட்களில் தேவன் தம்முடைய ஆவியின் வடிவத்தில் யேகோவா தேவனைப் போன்று பேசவும் கிரியை செய்யவும் வந்தால், அவரால் மனிதனைச் சுத்திகரித்து இரட்சிக்க முடியாது. ஏனென்றால், தேவனுடைய ஆவியை மக்கள் பார்க்கவோ தொடவோ முடியாது, மற்றும் அவர் அவர்களிடம் நேரடியாகப் பேசினால் அவர்கள் அவரைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலும் என்னவென்றால், தேவனுடைய ஆவியானவர் மிகவும் பரிசுத்தமானவர், சீர்கெட்ட மனிதகுலம் அவருக்கு அருகில் செல்ல முடியாது, மாறாக இழிவு நிலை மற்றும் சீர்கேடுடன் இருப்பதற்காக அவரால் அடிக்கப்படுவோம். யேகோவா தேவன் சீனாய் மலையில் இடி முழக்கங்களுடன் தோன்றினார் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. சீனாய் மலையின் மீது புகை, இடி, மின்னல், எக்காள சத்தம் ஆகியவற்றை இஸ்ரவேலர்கள் கண்டார்கள், கேட்டார்கள். அவர்கள் வெகு தொலைவில் நின்று மோசேயை நோக்கி: ‘நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்’ (யாத்திராகமம் 20:19). தாவீது இஸ்ரவேலரை யூதாவின் பாலாவிலிருந்து வழிநடத்தி, தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, எருதுகள் தடுமாறின, ஊசா பெட்டியை விழாமல் பிடிக்க முற்பட்டான், தேவனுடைய ஆவியால் கொல்லப்பட்டான். (1 Chronicles 13:9–10 ஐப் பாருங்கள்). கடைசி நாட்களில் வாழும் மனிதகுலம் சாத்தானால் ஆழமாக சீர்கெட்டுப்போய் உள்ளது. தேவன் ஆவியியானவராக கிரியைச் செய்ய வந்தால், ஒருவரும் பிழைக்க மாட்டார்கள். நாம் அசுத்தமானவர்களாகவும் சீர்க்கெட்டவர்களாகவும் இருப்பதற்காக அனைவரும் தேவனால் கொல்லப்படுவோம். ஆகவே, சீர்கெட்ட மனிதர்களாகிய நம்முடைய தேவைகளின்படி, நம்மை இரட்சிப்பதற்காக தேவன் மிகவும் பயனுள்ள வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்—அவர் மாம்சமாகி, சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், சீர்கெட்ட மனிதகுலத்தை நியாயந்தீர்க்கிறார், மற்றும் சுத்திகரிக்கிறார். இது தேவனின் மனிதனுக்கான மிகப்பெரிய அன்பும் இரட்சிப்புமாகும்!”

இந்த கட்டத்தில் நான் மிகவும் அசைக்கப்பட்டதாக உணர்ந்தேன், நான் உற்சாகமாக சொன்னேன், “மெய்யாகவே கடைசி நாட்களில் கிரியை செய்வதற்கு தேவன் மனுஷகுமாரனைப்போல மாம்சத்தில் வருவது நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கிறது. சீர்கெட்டுப்போன மனிதகுலத்திற்கு இதுவே மிகப்பெரிய இரட்சிப்பாய் இருக்கிறது!” தேவன் கிரியை செய்த வழிகளை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவருடைய சத்தத்துக்கு நான் செவிசாய்க்கவில்லை, அதனால் நான் அவரை அறியவோ வரவேற்கவோ முடியவில்லை. கர்த்தர் ஒரு மேகத்தின் மீது வந்து எங்களை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நான் முட்டாள்தனமாக காத்திருந்தேன். நான் எவ்வளவு முட்டாளாக இருந்தேன்!

பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை வாசித்தோம், புத்தியுள்ள கன்னிகைகள் என்றால் என்ன, புத்தியில்லாத கன்னிகைகள் என்றால் என்ன, தேவன் எப்படித் தோன்றுகிறார், தேவனுடைய நாமங்கள், அவருடைய மாம்சத்தின் வருகைகள் மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பின் மர்மங்கள் கடைசி நாட்களில் எவ்வாறு கிரியை செய்கின்றன என்பதையும் அறிந்து கொண்டோம். மனிதகுலத்தை காப்பாற்ற தேவன் மூன்று கட்ட கிரியைகளை செய்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், அதாவது நியாயப்பிரமாண காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகளால் மட்டுமே மனிதனை சாத்தானின் சக்தியிலிருந்து முற்றிலும் இரட்சிக்க முடியும். யேகோவா தேவன், கர்த்தராகிய இயேசு, மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன் ஆகிய அனைவரும் ஒரே தேவன் என்பதை நாம் கண்டோம். கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்திருக்கிறார் என்று அறிந்து நாம் அவரை ஏற்றுக்கொண்டோம். நாம் இறுதியாக கர்த்தரை வரவேற்றோம்! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 22:12). இப்போது, அவர் திரும்புவதற்கான எல்லா விதமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன, மேலும் பல சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது என்ற முன்னறிவிப்புகள் உள்ளன. கர்த்தர் ஏற்கனவே திரும்பிவிட்டாரா? கர்த்தரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

கிறிஸ்தவ பிரசங்கம்: பேரழிவுகள் நம்மீது உள்ளன—தேவனின் பாதுகாப்பைப் பெற அவரிடத்தில் மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிருப்பது எப்படி?

இப்போதெல்லாம், தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் பலர் தொடர்ந்து...

Leave a Reply

1 கருத்து