கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 2)
மெய்யான வழியைத் தீர்மானிப்பது எப்படி (2)
சகோதரர் லியு தனது ஐக்கியத்தைத் தொடர்ந்து, இவ்வாறு சொன்னார்: “மெய்யான வழியைத் தீர்மானிப்பதற்கான இரண்டாவது கொள்கை, இந்த வழியில் சத்தியம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அது சத்தியத்தை கொண்டிருந்தால், அது ஜனங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும், மேலும் அதிக அளவிலான இயல்பான மனசாட்சியுடனும், அறிதிறன் மற்றும் மனிதத்தன்மையுடன் வாழ அவர்களை அனுமதிக்க முடியும். இது கர்த்தராகிய இயேசு தனது கிரியையைச் செய்ய வந்து மனந்திரும்புதலின் வழியைக் கொடுத்து, தேவனை முழு இருதயத்துடனும் மனதுடனும் நேசிக்கும்படி நமக்கு அறிவுறுத்தியும், பொறுமையாக இருக்கவும், மற்றவர்களுடனான நமது தொடர்புகளில் பொறுமையாக இருக்கவும், நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்கவும், ஏழெழுபது முறை மற்றவர்களை மன்னிக்கவும், இன்னும் பலவற்றையும் நமக்குப் போதித்த போது நடந்ததைப் போன்றதேயாகும். நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தையின்படி செயல்படுகிறோம், மேலும் தேவனுக்காக எங்களையே பயன்படுத்தி, எல்லா இடங்களுக்கும் பயணம் செய்யும்படி எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். மேலும் என்னவென்றால், எங்கள் சகமனிதரிடம் நாங்கள் மென்மேலும் அன்பும் பொறுமையும் கொண்டு, பல நல்ல செயல்களைச் செய்கிறோம். கடைசி நாட்களில், மீட்பின் கிரியையைக் கட்டியெழுப்ப, சர்வவல்லமையுள்ள தேவன் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கவும் பரிசுத்தத்தை அடையவும் அனுமதிக்கும் அனைத்து சத்தியங்களையும் வழங்கியுள்ளார். இந்த வார்த்தைகள் சாத்தானால் செய்யப்படுகிற மனிதனுடைய சீர்கேட்டின் உண்மையான யதார்த்தத்தை அம்பலப்படுத்துகின்றன. அவை மனிதன் தேவனுக்கெதிராக எப்படி கிளர்ச்சி செய்து எதிர்த்தான் என்பதையும், தேவன் மீதான நம்பிக்கையை எப்படி ஒரு பரிவர்த்தனையாக மாற்றுகிறான் என்பதையும், ஜனங்கள் எப்படி உடந்தையிலும் சதியாலோசனைகளிலும் ஈடுபடுகிறார்கள், எப்படி ஒருவருக்கொருவர் கொடூரமாகக் கொலை செய்கிறார்கள் என்பதையும், இன்னும் பலவற்றையும் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை நம் வாழ்க்கையில் மன நிலையை மாற்றுவதற்கான வழியைக் காட்டுகிறது: உதாரணமாக, நம் சாதாரண மனிதத் தன்மையுடன் நாம் எப்படி வாழ வேண்டும், எப்படி நேர்மையான மனிதர்களாக இருக்க வேண்டும், தேவனுக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும், எப்படி தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், இன்னும் பலவற்றையும் அது நமக்குக் காண்பிக்கிறது. எங்கள் சகோதர சகோதரிகள் தேவனுடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவித்து, தங்களுடைய சீர்கேட்டின் உண்மையான தன்மையையும் தேவனுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் மூலத்தையும் புரிந்துகொள்ளத் தொடங்குகையில், அவர்கள் சாத்தானால் கிட்டத்தட்ட மீள முடியாத வகையில் சீர்கெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஒரு உண்மையான நபரின் தோற்றம் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் காண்கையில், தங்களுடைய சொந்த சாத்தானிய மனநிலையை வெறுக்கவும் எதிர்க்கவும் தொடங்கி, சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தும்போது, அவர்ளின் வாழ்க்கையின் மனநிலை பல்வேறு அளவுகளில் மாறத் தொடங்குகிறது. எங்கள் சகோதர சகோதரிகளால் எழுதப்பட்ட வாழ்க்கை அனுபவ சாட்சிக் கட்டுரைகள் அனைத்துமே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் இணையதளத்தில், மெய்யான வழியை ஆராய்ந்து தேடுகிற எவருக்கும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது. எங்களது சகோதர சகோதரிகள் சிலரின் அனுபவங்கள் தேவனுடைய அன்பு மற்றும் இரட்சிப்பிற்குச் சாட்சிகளாக திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் சகோதர சகோதரிகளின் அனுபவங்களிலிருந்து சர்வவல்லமையுள்ள தேவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள் ஜீவனும், சத்தியமும், வழியுமானவை என்றும், மனுக்குலத்தை மாற்றவும், சுத்திகரிக்கவும், இரட்சிக்கவும் அவைகளால் முடியும் என்பதையும் நாம் தெளிவாகக் காணலாம்.”
“இந்த விஷயங்களைப் பொறுத்தவரை, எனது சொந்த அனுபவங்களிலிருந்து சில உள்ளுணர்வுகளையும் நான் பெற்றுக் கொண்டேன். கடந்த காலங்களில், நான் பல வருடங்களாக ஒரு விசுவாசியாக இருந்ததையும், மற்றவர்களைவிட வேதாகமத்தை பற்றிய சுமாரான அளவு அறிவை அனுகூலமாகக் கொண்டிருந்தேன் என்ற உண்மையையும் அடிக்கடி கண்டேன். மற்றவர்களை விட நான் சிறந்தவன் என்று எப்போதும் நான் நினைத்தேன். திருச்சபையில் பணிபுரியும் போது, நான் என் சகோதர சகோதரிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. எனது யோசனைகள்தான் சரியானவை என்று நான் நினைத்தேன், அதனால் அடிக்கடி அந்த யோசனைகளின்படி மட்டுமே நான் செயல்பட்டேன். வீட்டிலும் எந்த வித்தியாசமும் இல்லை: எனது குடும்பம் எனக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் என் அபத்தமான சுயநீதியில் நான் மிகுந்த கோபமடைவேன். நான் பாவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நான் உணரும்போதெல்லாம் வருத்தப்படுவேன், ஆனால் அந்த உணர்வு கடந்து போனவுடன், நான் எனது பழைய வழிகளுக்கு மீண்டும் திரும்பி விடுவேன். நான் வேதனைப்பட்டேன், ஆனால் தீர்வாக ஒரு வழியையும் காண முடியவில்லை. கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்ட பிறகும், தேவனுடைய வார்த்தையை நான் படிக்க ஆரம்பித்ததன் மூலமும், நான் சாத்தானியக் கொள்கையான 'வானம் பூமி முழுவதிலும் நானே எனது சொந்தக் கர்த்தரானவர்' என்பதன்படி வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதை உணர ஆரம்பித்தேன். என்னுடைய சுபாவம் மிக மோசமான கர்வத்துடன் இருந்தது, நான் எப்பொழுதும் என்னுடைய மேல்நிலையைப் பகட்டாகக் காட்டிக் கொள்வேன், மேலும் மற்ற எவரை விடவும் நான் அதிகமாக புரிந்து கொண்டேன் என்றும், எனவே எல்லோரும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும் எப்போதும் நினைத்தேன், ஆனால் நானோ அவர்களின் எந்த ஆலோசனையையும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. நான் என் சக சகோதர சகோதரிகளை ஒடக்கவும் கெடுக்கவும் மட்டுமே செய்தேன் மற்றும் இயல்பான மனுக்குலத்திற்குத் தேவையான மனசாட்சியையும் அறிதிறனையும் முழுமையாக இழந்தேன். இது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தேவனுடைய வெறுப்பையும் ஈர்த்தது. நான் இதையெல்லாம் உணர்ந்தவுடன், நான் என்னையே வெறுக்கத் தொடங்கினேன், இனி என் ஆணவ இயல்புடன் வாழ நான் தயாராக இல்லை, ஆனால் தேவனுடைய வார்த்தைகளில் நடைமுறையின் பாதையைத் தேடினேன். தேவனுடைய வார்த்தையின் ஒரு பத்தியை நான் வாசித்தேன், அது இவ்வாறு சொல்கிறது, “சுயநீதியுள்ளவனாக இருக்காதே; உன் குறைபாடுகளை ஈடுசெய்ய மற்றவர்களின் பலத்தை எடுத்துக் கொள், தேவனுடைய வார்த்தைகளால் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று கவனித்துப் பார்; அவர்களின் வாழ்க்கைகள், செயல்கள் மற்றும் பேச்சு ஆகியவை முன்மாதிரியானவைகளா என்று பார்க்கவும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 22”). இந்த வார்த்தைகள் என் வழிதவறிய இருதயத்திற்கு வழிகாட்டின. இப்போது எங்கள் கடமைகளை நிறைவேற்ற சகோதர சகோதரிகளுடன் ஒத்துழைக்கும் போது, நான் தேவனிடம் ஜெயிப்பேன், என் சொந்த எண்ணங்களைக் கவனமாக ஒதுக்கி வைத்து, மற்றவர்களின் கருத்துக்களை தளரா ஊக்கத்துடன் கவனித்துக் கேட்டு, மற்றவர்களின் வலிமைகளை உள்வாங்கிக் கொள்வேன். வீட்டிலும் எனது தனிப்பட்ட எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒதுக்கி வைப்பதையும் பயிற்சி செய்தேன். நான் எனது குடும்பத்தினரிடம் அதிகாரத்தோடு பேசுவதை நிறுத்தி, அனைவருடனும் நன்றாகப் பழகினேன். சர்வவல்லமையுள்ள தேவன் மீது விசுவாசம் வைத்த பிறகு, நான் எவ்வளவு நன்றாக மாறி விட்டேன் என்பதை என் மனைவி பார்த்தபோது, அவளும் கடைசி நாட்களில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டாள். நான் கொண்ட நேர்மறையான மாற்றங்கள் அனைத்தும் தேவனுடைய கிரியையின் விளைவாகும் என்பதை நான் அறிவேன், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை சத்தியமானது என்றும், நம்முடைய சீர்கெட்டிருக்கிற மனநிலைகளை அவைகளால் மறுரூபப்படுத்த முடியும் என்றும், இன்னும் அதிக மனிதச்சாயலுடன் வாழ அவை நம்மை அனுமதிக்க முடியும் என்றும் நான் உணர்ந்தேன்.”
சகோதரர் லியுவின் அனுபவங்களைக் கேட்டு நான் ஆழ்ந்த தெளிவை உணர்ந்து உற்சாகமாகச் சொன்னேன், “சகோதரர் லியு, மெய்யான வழி பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றிருக்கும், மேலும் தேவன் மீதான நமது விசுவாசம் இன்னும் ஆழமாக வளரவும், நம்முடைய ஆவிக்குரிய நிலைமை தொடர்ந்து மேம்படவும் அனுமதிக்கும் என்பதை உணர உங்களின் ஐக்கியம் எனக்கு உதவியது. மெய்யான வழி சத்தியத்தைக் கொண்டிருக்கும், சத்தியமானது நாம் அடிக்கடி பாவம் செய்யாமல் இருக்கச் செய்கிறது, மேலும் அதிகதிகமாக மனிதச் சாயலுடன் வாழவும் அனுமதிக்கிறது. திருச்சபையில் உள்ள உங்கள் சகோதர சகோதரிகளின் அனுபவ சாட்சிகளை நான் இன்னும் படிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்பொழுது அளித்த ஐக்கியத்தில் இருந்து, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை மற்றும் கிரியை உண்மையில் ஜனங்களை மாற்றும் என்பதை நான் ஏற்கனவே காண்கிறேன். நான் தொடர்ந்து ஆராய்ந்தறிய விரும்புகிறேன்!”
மெய்யான வழியைத் தீர்மானிப்பது எப்படி (3)
சகோதரர் லியு இதைக் கேட்டபோது, அவர் உற்சாகமாகத் தலையை அசைத்துச் சொன்னார், “மெய்யான வழியைத் தீர்மானிப்பதற்கான மூன்றாவது கொள்கை, தேவனைப் பற்றி ஜனங்களுக்கு அதிகப் புரிதலை ஏற்படுத்தவும், தேவனுடனான ஜனங்களின் உறவை இன்னும் அதிக நெருக்கமாக்கவும் இந்த வழியால் கூடுமா என்பதைப் பார்க்க வேண்டும். இது கர்த்தராகிய இயேசுவின் சீஷர்கள் அவருடைய கிரியையின் மூலமாக மனுக்குலத்தின் மீதிருந்த கர்த்தருடைய இரக்கத்தைக் கண்டறிய முடிந்து, அவருடைய மிகுந்த அன்பால் ஆழமாக நெகிழ்ந்துபோய், மனுக்குலத்தின் மீட்பர் கர்த்தராகிய இயேசு என்பதை உணர்ந்து, மேலும் அவரைப் பின்பற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருடைய சுவிசேஷத்தைப் பரப்ப இவ்வாறு விருப்பமுற்றதைப் போன்றதாகும். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவன் தேவனுடைய நோக்கங்களையும் மனுக்குலத்திடம் எதிர்பார்க்கும் கோரிக்கைகளையும் தெளிவுபடுத்துகிற சத்தியத்தை வெளியிட்டார். உதாரணமாக, மனிதன் நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்றும், அவன் தேவனுக்குப் பயப்பட வேண்டும் மற்றும் தீமையை விட்டு விலக வேண்டும் மற்றும் சத்தியத்தைத் தேடி நீதியோடு இருக்க வேண்டும் என்றும் தேவன் கோருகிறார். அதே நேரத்தில், சர்வவல்லமையுள்ள தேவன் தேவனுடைய மனநிலையை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார், தேவனுடைய நீதியுள்ள மனப்பான்மையை, அவருடைய இரக்கத்தையும் அன்பையும், மற்றும் அவருடைய பரிசுத்த சாராம்சத்தையும் அறிந்துகொள்ள நம்மை அனுமதிக்கிறார். தேவனுடைய வார்த்தையில் இருந்து தேவனுடைய சந்தோஷங்கள் மற்றும் துயரங்கள், எப்படிப்பட்ட நபரை தேவன் நேசிக்கிறார் மற்றும் எந்த வகையினரை வெறுக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம், மேலும் தேவனுடைய மனப்பான்மை எப்படி அன்பாகவும் இரக்கமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், மகத்துவமானதாகவும், கோபம் நிறைந்ததாகவும், நீதியாகவும், மீற முடியாததாகவும் இருக்கிறது என்பதையும் காண்கிறோம். இது மனிதனைப் பயத்துடன் இருக்கவும், இருதயத்தில் தேவனை அதிகமாய் நேசிக்கவும் கட்டாயப்படுத்துகிறது. இப்போதே, எங்கள் சகோதர சகோதரிகள் பலரும் பெரும் இடுக்கண்களை எதிர்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தேவனைப் பின்பற்றவும், தேவனுக்காகப் பயன்படவும், வெற்றிகரமான சாட்சியத்தை அளிக்கவும் தங்கள் உயிரையும் கூட மகிழ்ச்சியுடன் பணயம் வைப்பார்கள். இதற்கெல்லாம் காரணம், அவர்கள் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை அனுபவித்திருக்கிறார்கள், மற்றும் தேவனைப் பற்றிய உண்மையானப் புரிதலுடன் வருகிற சில பலன்களை அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் சொன்ன பிறகு, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியை மெய்யான வழியா என்பதை நாம் அனைவரும் தீர்மானிக்க முடியும் என்று நான் இப்போது நம்புகிறேன்?”
பாதிரியார்கள் ஏன் மெய்யான வழியைக் கண்டித்தனர்
நான் தலையசைத்து என்னுள் நினைத்தேன், “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையானது பொய்யான வழியையும் மெய்யான வழியையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கான மிகத் தெளிவான விவரத்தை உண்மையாகவே அளிக்கிறது. கடந்த காலத்தில் மனுக்குலத்தின் மீட்பிற்காக கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார், அவருடைய கிரியை தான் மெய்யான வழி என்பதை மட்டும் நான் அறிந்திருந்தேன். தேவனுடைய கிருபையின் ஈவை அனுபவித்து, சூதாட்டத்தை விட்டுவிட்ட பிறகு, தேவனுடைய பெரும் அன்பின் ஆழமான உணர்வு எனக்குக் கிடைத்தது. இருப்பினும், மெய்யான வழியையும் பொய்யான வழியையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இன்றுதான், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையை ஐக்கியப்பட்டதின் மூலமாக நான் இறுதியாகப் புரிந்துகொண்டேன். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை உண்மையில் சத்தியம் என்று தெரிகிறது!” இந்த முடிவுக்கு வந்த பிறகு, நான் உற்சாகமாகச் சொன்னேன், “இந்த ஐக்கியத்தின் மூலம், இதன் விளைவாக, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியை மெய்யான வழி என்றும், சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையில் திரும்பிவந்த கர்த்தராகிய கிறிஸ்து என்றும் முழுமையாகப் புரிந்துகொண்டேன். இருப்பினும், எனக்கு இன்னும் ஒரு கேள்வி உள்ளது: சர்வ வல்லமையுள்ள தேவன் திரும்பிவந்த தேவன் என்று நீங்கள் கூறுகிறீர்கள், அப்படியானால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வழியை ஆராய்ந்தறிய பாதிரியார்கள் ஏன் எங்களை அனுமதிக்காமல், மேலும் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைக் கண்டிக்கவும்கூடச் செய்கிறார்கள்?”
சகோதரர் லியு தலையை அசைத்துச் சொன்னார், “பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவை எதிர்த்ததற்கான முக்கிய காரணத்தை நாம் புரிந்துகொண்டால், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வழியை ஆராய்ந்தறிய பாதிரியார்கள் ஏன் உங்களைத் தடை செய்வார்கள் என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்காது. சகோதரி, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையின் மற்றொரு பத்தியை நாம் வாசிப்போம்.” அவர் இதைச் சொல்லி தேவனுடைய வார்த்தையின் புத்தகத்தைத் திறந்து என்னிடம் கொடுத்தார். நான் வாசித்தேன், “பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை மட்டும் பற்றிப்பிடித்துக்கொண்ட தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்த விசுவாசம் போலித்தனமானது மற்றும் கேலிக்குரியது அல்லவா?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).
நான் படித்து முடித்த பிறகு, சகோதரர் லியு கூறினார்: “பரிசேயர்களைப்பற்றிய சர்வவல்லமையுள்ள தேவனின் வெளிப்பாட்டில் இருந்து, பரிசேயர்கள் குறிப்பாக கர்வம் மற்றும் சுயநீதியுள்ளவர்கள் என்றும், மேலும் அவர்கள் சத்தியத்தை வெறுக்கும் தன்மையைக் கொண்டிருந்ததையும் நாம் காணலாம். அந்தச் சமயத்தில், கர்த்தராகிய இயேசு தனது கிரியையைச் செய்து, மனந்திரும்புதலுக்கான வழியை அளித்து, பிணியாளிகளைக் குணமாக்கி, அசுத்த ஆவிகளை விரட்டி, மேலும் பல அற்புதங்களையும் செய்து கொண்டிருந்தார். திறந்த மனதுடன் தேடின எவரும் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளிலிருந்தும் கிரியையிலிருந்தும் அவர் தீர்க்கதரிசனத்தின் மேசியா என்று பார்க்க முடிந்தது, இதனால் அவரைப் பின்பற்ற தீர்மானித்தனர். பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைக்கும் கிரியைக்கும் வல்லமையும் அதிகாரமும் உண்டு என்பதைத் தெளிவாகக் கண்டனர், ஆனாலும் அவர்கள் தேடவும் ஆராய்ந்தறியவும் மறுத்தனர். மாறாக, அவர்களுடைய கொடூரமான திமிர்பிடித்த மனநிலை காரணமாக, அவர்கள் தங்கள் சொந்தத் தத்துவங்களையும் கருத்துக்களையும் பிடித்துக்கொண்டனர், மேலும் மேசியா வரும்போது அவர் நிச்சயமாக அரண்மனையிலிருந்து ஆற்றலும் அதிகாரத்தையும் தாங்கினவராய், கம்பீரமான பிரசன்னத்துடன் எழும்புவார் என்று நம்பினர். ரோமானிய அரசாங்கத்தை கவிழ்த்துப் போட அவர் தங்களை வழிநடத்துவார் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும் கர்த்தராகிய இயேசு வந்தபோது அவர் ஒரு தச்சரின் குடும்பத்தில் பிறந்தார், சராசரி தோற்றத்தைக் கொண்டிருந்ததார், மற்றும் நிச்சயமாக ரோமானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் பரிசேயர்களை அவர் வழி நடத்தவில்லை. மாறாக ஏற்றுக்கொள்பவர்களாக, பொறுமையுள்ளவர்களாக, தங்கள் எதிரியையும் நேசிப்பவர்களாக இருக்க ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இந்தக் காரணங்களுக்காக பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவை, அவர் வெறுமனே மனிதர் என்று கூறி கண்டனம் செய்தனர். குறிப்பாக இயேசுவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதை பரிசேயர்கள் கவனித்தவுடன், அவர்கள் தங்கள் சொந்த நிலையையும் வருமானத்தையும் பாதுகாக்கும்படி, கர்த்தராகிய இயேசுவை அவதூறு மற்றும் கண்டனம் செய்யும் பொய்களை பரப்புவதில் தங்கள் எல்லா முயற்சிகளையும் பயன்படுத்தினர். இறுதியில் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்து தேவனுடைய தண்டனையை அனுபவித்தனர்.”
“இப்போது வரை, மத உலகிலுள்ள பல தலைவர்கள் மீண்டும் பரிசேயர்களின் பாத்திரத்தை வகிக்கின்றனர். சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி, அவருடைய கிரியையை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறார். சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் இணையத்தின் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே வெளியிடப்பட்டன, மேலும் சத்தியத்தை நேசிப்பவர்கள் மற்றும் தேவனுடைய தோற்றத்திற்காக நாடித் தேடுபவர்கள் இந்த வார்த்தைகளைப் பார்த்தவுடன், அவர்கள் தேடவும் ஆராயவும் வந்து, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை முடிவில் ஏற்றுக்கொண்டார்கள். ஏன் இந்தப் பாதிரியார்கள் விசாரிக்காமல், மாறாக அவர்கள் திரும்பி வந்த தேவனைப் பற்றி பொய்களைப் பரப்பவும், அவதூறு செய்யவும், கண்டனம் பண்ணவும், எதிர்க்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்? அது உண்மையில், தங்கள் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க முயற்சிக்கும் காரணத்தினாலும், அவர்கள் பொய்யான வழியால் வஞ்சிக்கப்படுவர்கள் என்றும் கவலைப்படுவதினாலேயா? உண்மையில், இது விசுவாசிகளை வஞ்சிக்கவும், சிக்கவைக்கவும் அவர்கள் பயன்படுத்தும் ஒரு தவறான நியாயமாகும். அவர்கள் உண்மையிலேயே தங்கள் சகோதர சகோதரிகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றிருந்தால், தேவன் திரும்பி விட்டார் என்று அவர்கள் கேள்விப்பட்ட உடனேயே, தேடுவதிலும் ஆராய்வதிலும் வழியை நடத்தி, தங்கள் சகோதர சகோதரிகளுடன் பொய்யான வழியையும் மெய்யான வழியையும் வேறுபடுத்துகிற சத்தியத்தைக் குறித்து ஐக்கியப்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் செய்தது அதுவல்ல. மாறாக, பாதிரியார்கள் மோசமான கர்வம் உள்ளவர்களாகவும் வஞ்சிப்பவர்களாகவும் இருந்து, தங்கள் சொந்தத் தத்துவங்கள் மற்றும் கருத்துக்களைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு, வேதாகம வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, மேலும் தேவன் திரும்பி வந்ததாகக் கூறப்படும் எந்த ஒரு கூற்றும் பொய்யாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அவர்கள் சத்தியத்தைக் கிட்டத்தட்ட தேடவே இல்லை. மேலும் என்னவென்றால், சர்வவல்லமையுள்ள தேவன் வழங்கிய வார்த்தையைச் சகோதர சகோதரிகள் கேட்டு, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்ட பிறகு, தங்களைப் பின்பற்றவும் ஆராதிக்கவும், நன்கொடையாகப் பணம் கொடுக்கவோ யாரும் இருக்க மாட்டார்கள் என்று பெரிதும் பயந்தனர். அவர்கள் தங்கள் சொந்த நிலை மற்றும் வாழ்வாதாரங்களை விட்டுக் கொடுப்பதை விட, எண்ணற்ற சகோதர சகோதரிகளின் வாழ்க்கையைப் பறிக்க விரும்புகிறார்கள். இது அவர்களின் சத்தியத்தை வெறுக்கும் அந்திக்கிறிஸ்துவின் இயல்பை முற்றிலும் அம்பலப்படுத்துகிறது. இந்தப் பாதிரியார்களின் தேவனை எதிர்க்கிற, சத்தியத்தை வெறுக்கிற, இயல்பையும் சாராம்சத்தையும் நாம் உணரத் தவறி, உண்மையான வழியை நிராகரிப்பதிலும் கண்டனம் செய்வதிலும் அவர்களைப் பின்பற்றினால், தேவனை நம்புகையில் தேவனை எதிர்க்கும் வழியில் நாம் அவர்களை நிச்சயம் பின்பற்றுவோம், இறுதியில் அழிவையும் சந்திப்போம்!”
சகோதரர் லியுவின் ஐக்கியத்தைக் கேட்ட பிறகு, பரிசேயர்களின் தேவனை எதிர்க்கிற மற்றும் கண்டிக்கிற மூலகாரணத்தை நான் புரிந்து கொண்டேன். மற்றத் திருச்சபைகளில் பிரசங்கங்களைக் கேட்க பாதிரியார்கள் எங்களை அனுமதிக்காததற்கும், கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையைக் கண்டனம் செய்வதற்குமான காரணம் என்னவென்றால், எல்லா விசுவாசிகளும் தேவனுடைய வருகையை வரவேற்றால், அவர்களைப் பாதுகாக்கவும், நிதி ரீதியாக ஆதரிக்கவும் ஒருவரும் மீதம் இருக்க மாட்டார்கள் என்று அவர்கள் பயந்ததே என்று நான் கண்டேன். எனவே, பாதிரியார்கள் நன்கொடையைப் பற்றி பிரசங்கிப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்ததும் மற்றும் எங்களை நன்கொடையளிக்கக் கட்டாயப்படுத்த சாத்தியமான எல்லா முறையையும் பயன்படுத்தினர் என்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாதிரியார்கள் தங்கள் சொந்த அந்தஸ்து மற்றும் செல்வத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர் மற்றும் திருச்சபை மக்களின் வாழ்க்கையை சிறு தயக்கத்துடன் பறித்தனர். அவர்கள் பரிசேயர்களிடமிருந்து சிறிதளவேனும் வேறுபட்டவர்களா? அவருடைய வழிகாட்டுதலுக்காக தேவனுக்கு நன்றி, அது பாதிரியார்களின் சத்தியத்தை வெறுக்கும் சாராம்சத்தைப் பகுத்தறிய எனக்கு உதவியது.
திருச்சபையை விட்டு வெளியேறி தேவனுடைய வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்பது
அந்தச் சந்திப்புக்குப் பிறகு, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையைக் குறித்து என் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட அவர்களைச் சந்திப்பேன், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் சுவிசேஷத் திரைப்படங்களை பார்ப்பேன். ஒரு சமயம், கடைசி நாட்களில் தேவனுடைய வருகையை வரவேற்கும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சகோதர சகோதரிகளின் சர்வதேசக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். சிசிபி மற்றும் பாதிரியாரின் பொய்களால் தன் குடும்பம் எப்படி ஏமாற்றப்பட்டது என்பது பற்றியும், மேலும் கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து தன்னை அவர்கள் திசைத் திருப்பியதைப் பற்றியும் ஒரு சகோதரி ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார். இறுதியில் அவள் சர்வ வல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவதற்கான அதிக விசுவாசத்தை அவளுக்குக் கொடுத்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையைப் படித்ததன் மூலம், சத்தியத்திலிருந்து பொய்களை வேறுபடுத்த இறுதியில் கற்றுக் கொண்டாள். இந்தச் சகோதரியின் அனுபவம் எனக்கு மிகவும் ஊக்கமளித்ததாக இருந்தது. நான் நினைத்தேன், “இந்த எல்லா இடையூறுகளையும் மற்றும் கவனச்சிதறல்களையும் எதிர்கொண்ட இந்த சகோதரி, அப்போதும் தன் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும் சர்வ வல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவும் முடிந்ததே. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையினால் அவளுக்குள் முதலீடு செய்யப்பட்ட வல்லமையின் மூலமாக இதை அவளால் செய்ய முடிந்தது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைக்கு உண்மையிலேயே அதிகாரமும் வல்லமையும் உண்டு!” அதன் பின்னர், சிசிபியால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட சகோதர சகோதரிகளின் அனுபவங்களை விவரிக்கும் பல காணொளிகளை நான் பார்த்தேன். சிசிபியின் சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளுக்கு மத்தியிலும் கூட இந்தச் சகோதர சகோதரிகள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தைப் பிடித்துக்கொள்ளவும், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தி கொடுமையையும் சித்திரவதையும் மேற்கொண்டு, தங்கள் சாட்சியில் எப்படி நிலையாக நின்றார்கள் என்று பார்க்கும்போது நான் ஆச்சரியப்பட்டேன். இது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தையும் வல்லமையையும் குறித்த இன்னும் மேலான அறிவைக் எனக்குக் கொடுத்தது. தேடி ஆராய்ந்து அறிந்த காலத்திற்குப் பிறகு, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கிரியை மெய்யான வழி என்றும், சர்வ வல்லமையுள்ள தேவன் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு என்றும் கேள்விகளின்றி உறுதி செய்து கொண்டேன்.
சமீபத்தில், நான் ஏற்கனவே சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில் நுழைந்து தேவனுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்டேன். நான் ஒவ்வொரு நாளும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையைப் படித்து, தேவனுடைய பிரசன்னத்தின் பேரின்பத்தை மீண்டும் உணர்ந்து, நான் முதலில் தேவன் மீது விசுவாசம் வைத்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்ற போது உண்டான சமாதானம் மற்றும் பாதுகாப்பான அந்த உணர்வை அனுபவிக்கிறேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?