கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?

அக்டோபர் 15, 2021

கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இதயெல்லாம் இண்டர்நெட்டுல போட்டு அது உலகம் முழுதையும் அசைச்சிருக்குது, சர்வவல்லமையுள்ள தேவனையும் அவருடைய கிரியையையும் அதிக அதிகமான ஜனங்க ஆராய்ச்சிப் பண்றாங்க. ஒண்ணு தெளிவா இருக்கு என்னன்னா, தேவன் மனுவுருவா வர்றதும் சத்தியத்த வெளிப்படுத்துறதும் தேவனுடைய வார்த்தைகளுக்கு இருக்கிற வல்லமையையும் தேவனின் சர்வவல்லமையையும் முழுசா நிரூபிக்குது. மெய்யான வழிய ஆராயும்போது, சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துற வார்த்தைகள் அதிகாரமுள்ளதாகவும், வல்லமையாகவும் இருக்கிறத பல ஜனங்களும் பாக்குறாங்க, இதெல்லாந்தான் சத்தியம், ஏன்னா இதெல்லாம் தேவனிடத்தில இருந்து வருது, அவங்கல்லாம் நம்பிடுறாங்க, அப்புறம் சந்தேகம் ஒண்ணும் இருக்கிறதில்ல. ஆனாலும், கடைசி நாட்களின் கிறிஸ்து, சர்வவல்லமையுள்ள தேவன், பெண்ணுன்னு அவங்க கேள்விப்படும்போது பலரும் அவங்கவுங்க தலைய அசைக்கிறாங்க, அவர ஏத்துக்க மறுக்கிறாங்க கர்த்தராகிய இயேசு வந்தப்ப அவரு ஆணா இருந்தார்னு அவங்க நினைக்கிறாங்க அந்தக்காலத்தில, பரிசுத்த ஆவியானவரும் கர்த்தராகிய கிறிஸ்து ஒரு “நேச குமாரனா” இருந்தார்னு சாட்சி கொடுத்தார் வேதாகமத்திலேயும் அப்படிப்பட்ட பதிவுகள் இருக்குது. அது என்னன்னா கர்த்தர் திரும்பி வரும்போது, யூத இனத்து கர்த்தராகிய இயேசுவின் சாயலில அவர் ஒரு ஆணா இருப்பார். நிச்சயமா ஒரு பெண்ணா இருக்க மாட்டார். சர்வவல்லமையுள்ள தேவன் எவ்வளவு சத்தியத்த வெளிப்படுத்தினாலும் எவ்வளவு பெரிய கிரியைய அவர் செஞ்சாலும், அவங்க ஏத்துக்க மறுக்கிறாங்க, தேடி ஆராய்வதப் பத்தி சொல்ல வேண்டியதே இல்ல. அவங்க எப்படி சிந்திக்கிறாங்கன்னா, “சர்வவல்லமையுள்ள தேவன் ஆணா இருந்தா நான் விசுவாசிப்பேன், ஆனா அவர் பெண்ணா இருந்தா, நீங்க என்ன சொன்னாலும், நான் எப்பவும் விசுவாசிக்கவே மாட்டேன் ஏன்னா கர்த்தராகிய இயேசு ஒரு ஆணாத்தான் இருந்தார்.” இந்தக் காரணத்தினால, அவங்க கர்த்தரின் வருகைய வரவேற்கும் வாய்ப்ப இழந்து பேரழிவுல விழுறாங்க, இது ரொம்ப பரிதாபமானது. ஆக, இந்த மதவாதிங்களோட அறிக்கைகளும் கண்ணோட்டங்களும் சரிதானா? அதெல்லாம் வேதாகம தீர்க்கதரிசனத்தோட ஒத்துப்போகுதா? தேவனுடைய வார்த்தையில அதுக்கெல்லாம் அடிப்பட இருக்குதா? ஒண்ணுமே இல்ல. இது ஏன்னா திரும்பி வரும்போது அவரு ஆண இருப்பரா அல்லது பெண்ணா இருப்பாரான்னு கர்த்தராகிய இயேசு குறிப்பா சொல்லல, பரிசுத்த ஆவியானவரும் மனுஷ குமாரன் திரும்பி வரும்போது அவர் ஆணா இருப்பாரா அல்லது பெண்ணா இருப்பாரான்னு சாட்சி கொடுக்கல. கடைசி நாட்கள்ல தேவன் திரும்பி வரும்போது அவரு ஆணா இருப்பாரா அல்லது பெண்ணா இருப்பாரான்னு வேதமும் தீர்க்கதரிசனம் சொல்லல. இது போதுமான நிரூபணமா இருக்குது அதாவது, மனுஷன் சொல்றதுக்கும் பாக்குறதுக்கும் வேத ஆதாரம் இல்ல அதெல்லம் ஜனங்களுடைய கருத்துக்களும் கற்பனைகளுமே தவிர வேறு ஒண்ணுமில்ல. பலரும் கேக்குறாங்க “கடைசி நாட்கள்ல மனுவுருவான தேவன் ஏன் ஆணா இல்லாம பெண்ணா இருக்காரு?” இதுக்கு, இந்தக் கேள்விக்கான என்னுடைய தனிப்பட்ட சில புரிதல நான் பகிர்றேன்.

கடைசி நாட்கள்ல மனுஷ குமாரனா தேவன் மனுவுருவா வர்றதப் பத்தி வேதாகமத்தில பல தீர்க்கதரிசனங்க இருக்கு, ஆனா கடைசி நாட்கள்ல திரும்பி வரும்போது கர்த்தர் ஆணா இருப்பாரா அல்லது பெண்ணா இருப்பாரான்னு அது குறிப்பிட்டுச் சொல்லல. “மனுஷகுமாரனுடைய வருகை,” “மனுஷகுமாரன் வருவார்,” னு மட்டுந்தான் அது சொல்லுது மேலும் “மனுஷகுமாரன் தம்முடைய நாளிலே.” இன்று, சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கார், அதிக சத்தியங்கள வெளிப்படுத்தி இருக்கார், மேலும் கடைசி நாட்கள்ல் நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்றாரு, இது இந்த தீர்க்கதரிசனங்கள நிறைவேற்றுது. இருந்தாலும் கடைசி நாட்களின் கிறிஸ்து பெண்ணாக இருப்பத ஜனங்க கண்ட உடன அவங்கள அது ஆச்சரியப்படுத்துது. இது நம்ம கருத்துக்களுக்குப் பொருந்தவே இல்லையே. இது தேவனுடைய தோற்றமும் கிரியையுமா இருப்பதால, அதப் பத்திய கருத்துக்கள் ஜனங்கக்கிட்ட இருப்பது இயல்பானதுதான். கர்த்தராகிய இயேசு வந்தபோது ஜனங்கக்கிட்ட இன்னும் பெரிய அளவில தவறான புரிதல் இருந்தது. ஆனா ஏதோ ஒண்ணப் பத்தி ஜனங்கக்கிட்ட அதிகமா கருத்து இருந்தா, அந்த விஷயம் அதிக இரகசியமானதா இருக்குது. இந்த இரகசியங்கள தேவன் வெளிப்படுத்தலைனா, நம்மால அதையெல்லாம் எப்பவும் புரிஞ்சுக்க முடியாது. அதனால, சர்வவல்லமையுள்ள தேவன் என்ன சொல்றாருன்னு பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). “தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண் ரூபத்தில் வந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவருடைய ரூபம் பெண்ணாக இருக்கிறது. இதிலிருந்து, தேவன் தமது கிரியையில் பயன்படுத்துவதற்காகவே ஆண் பெண் இருபாலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளில இருந்து நாம என்ன பாக்கிறோம்னா தேவனின் மனுவுரு ஆணா இருந்தாலும் சரி அல்லது பெண்ணா இருந்தாலும் சரி, அது முக்கியத்துவமானது. தேட வேண்டிய ஒரு சத்தியம் அதில இருக்குது தேவ சித்தத்தப் புரிஞ்சிக்கவும் தேவனுடைய மனநிலைய அறியவும் அது நம்ம அனுமதிக்கலாம். மனுவுருவான தேவன் எப்பவுமே ஆணா இருந்தா அதன் விளைவு என்னவா இருக்கும்? தேவன் நித்தியமா ஆண்தான் ஒருபோதும் பெண்ணில்லன்னு ஜனங்க வரையற செஞ்சிடுவாங்க, மேலும் பெண்கள் பாகுபடுத்தப்படுவதோடு அவங்களால சமூகத்தில முழு அங்கத்தினர்களாக வாழ முடியாது. அது பெண்களப் பொறுத்தவரையில நியாயமானதா? தேவன் நீதியுள்ள தேவன், மேலும் தேவன் மனுஷனையும் மனுஷியையும் சிருஷ்டித்தாரு, ஆக தேவன் அவருடைய முதல் மனுவுருவாதலில ஒரு ஆணாக வந்தாரு மேலும் கடைசி நாட்கள்ல தேவன் பெண்ணாக மனுவுருவானாரு. இது ரொம்ப முக்கியத்துவமானது. இதுக்காக எல்லா பெண்களும் மகிழ்ச்சியோடு களிகூரணும், இனிமேலும் கருத்துக்களப் பிடிச்சிக்கிட்டு இருக்கக்கூடாது. ஒரு பெண்ணால இன்னும் மனுவுருவான பெண் தேவன நிராகரிச்சு அவருக்கு எதிரா பாகுபாட்டக் கடைபிடிக்க முடியும்னா அப்புறம் அந்தப் பெண் ரொம்பப் பரிதாபத்துக்குரியவதான்! உண்மையில, தேவனின் மனுவுருவாதல் பெண் அல்லது ஆண் என்பது ஒரு விஷயமே இல்ல. அவரால சத்தியத்த வெளிப்படுத்தி இரட்சிப்பின் கிரியைய செய்ய முடிவதுதான் முக்கியம். ஆணா இருந்தாத்தான் மனுவுருவான தேவனால தேவனின் கிரியையைச் செய்ய முடியும்னும், அவரு பெண்ணுன்னா அவரால தேவனுடைய கிரியைய செய்யமுடியாதுன்னும் ஜனங்க நினைக்கக் கூடாது, இந்த மாதிரி நினைப்பது பிற்போக்கானது, அறியாமையும் கூட. இன்னைக்கு, ஆணால் செய்யக்கூடிய எதையும் பெண்ணாலையும் செய்ய முடியுங்கிறத நாமெல்லாம் பாத்துட்டோம். உதாரணமா: ஆணால விமானத்த ஓட்ட முடியும், பெண்ணாலயும்தான். ஆணால விண்வெளி வீரராக முடியும், பெண்ணால கூடத்தான். ஆணால ஜனாதிபதியாக முடியும்னா பெண்ணாலும் முடியும். ஆண் வியாபாரத்த நடத்தலாம், தொழில நிர்வகிக்கலாம், பெண்ணாலும் வியாபரத்த நடத்தி தொழில நிர்வகிக்க முடியும். பெண்கள் ஆண்கள விடத் திறமை குறஞ்சவங்க இல்லன்னு இந்த உண்மை நிரூபிக்குது. இப்படி இருக்க, மனுவுருவான தேவன் ஏன் ஆணாக மட்டும்தான் இருக்க முடியும், பெண்ணாக ஏன் இருக்க முடியாது? சர்வவல்லமையுள்ள தேவனப் பாருங்க, அவர் எவ்வளவு சத்தியத்த வெளிப்படுத்தி எவ்வளவு கிரியைய செஞ்சிருக்காரு. பெண்ணாக இருக்கிறது தேவனுடய கிரியைய எந்தவிதத்திலாவது தடை செஞ்சிருக்கா? கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்புக் கிரிய கர்த்தராகிய இயேசு செய்தத விட மிகவும் பெரிதாக இருக்குது. கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்தினத விட அதிக ஆழமான சத்தியத்த சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்காரு. இந்த உண்மை எல்லாருக்கும் வெளிப்படையா தெரியுது, இருந்தாலும் ஜனங்களால அத ஏன் அங்கீகரிக்க முடியல? இன்னைக்கு எத்தன பெண்கள் ஒடுக்கப்பட்டிருக்காங்க, பாகுபடுத்தப்பட்டிருக்காங்க, உலகத்தில துன்பப்பட்டுக்கிட்டிருக்காங்க? அவங்களுக்கு ஆண்களுக்கு நிகரா சம அந்தஸ்து வேணும், அதவிட மேலா, அவங்களுக்கு இரட்சிப்பும் சுதந்திரமும் வேணும். நம்ம பெண் தோழியர்கள் யாரால் இரட்சிக்கப்பட முடியும்? இன்னைக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கார் மிக ஆழமா சீர்கெட்டுப் போயிருக்கும் இந்தத் தீய உலகத்தயும் மனுக்குலத்தயும் நியாயந்தீர்க்கும் சத்தியத்த அவர் வெளிப்படுத்தியிருக்கார். மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் பெண்ணா இருப்பத சத்தியத்த வெளிப்படுத்தக் கூடியத, கடைசி நாட்களில நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்வத பாத்திருக்கும் பல பெண்கள் இருக்காங்க, அதனால் ஒரு பெண்ணா இருப்பதனால பெருமையா உணர்றாங்க. அவங்க அவங்களுடைய தலைகள நிமிர்த்தி வச்சிருக்காங்க, அவங்க ஒரு சுதந்திரமான விடுதல உணர்வை அடைஞ்சிருக்காங்க, மேலும் அவங்க எல்லாரும் சர்வவல்லமையுள்ள தேவன் கொண்டாடித் துதிக்கிறாங்க. பெண்ணா வந்த அந்த மனுவுருவான தேவன் தேவனின் நீதியான மனநிலையைக் காட்டுறாரு. தேவன் ஒருவரே மனுக்குலத்த உண்மையிலேயே நேசிக்கிறாரு மேலும் தேவன் ஒருவரால மட்டுமே ஜனங்களை நியாயமா நடத்த முடியும். தேவன் மிகவும் நேசிக்கக்கூடியவரா இருக்கிறாரு! இப்போ நாம இன்னொரு விஷயத்த சிந்தித்துப் பாப்போம். ஆணாகிய கர்த்தர் இயேசுவால் ஜனங்களோட பாவத்த சுமக்க முடிந்தது மேலும் சிலுவையில அறையப்பட்டு மீட்பின் பணிய முடிச்சாரு. கர்த்தராகிய இயேசு பெண்ணாக வந்திருந்தா, சிலுவையில அறையப்பட்டு மீட்பின் பணிய அவரால செஞ்சு முடிச்சிருக்க முடியுமா? அவரால முடிஞ்சிருக்குங்கிறதில சந்தேகமே இல்ல. தேவன் மனுஷரூபமெடுப்பதுன்னா தேவனின் ஆவி ஒரு மனுஷ கூட்டுக்குள் வருவதுதான் மேலும் இந்தக் கூடு ஆண் அல்லது பெண் எதுவா இருந்தாலும் அவரே தேவனானவர். அவர் சத்தியத்த வெளிப்படுத்திக் கிரியைய செய்றாரு, அது எல்லாமே தேவனுடைய ஆவியால செய்யப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுது. ஆகையால தேவனுடைய மனுவுருவான மாம்சம் ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி தேவனுடைய அடையாளத்தப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேவனுடைய கிரியையச் செய்யவும் அவருக்குத் தகுதி இருக்கு மேலும் முடிவா, அந்தக் கிரியை முடிக்கப்படும், தேவனே மகிமை அடைவாரு. இது சர்வவல்லமையுள்ள தேவன் சொல்ற படிதான். “இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியையானது தனக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன”). இதுக்கு அர்த்தம் மனுவுருவான மாம்சம் ஆணா இருந்தாலும் சரி அல்லது பெண்ணா இருந்தாலும் சரி அதில் பிரச்சினை இல்ல. சத்தியத்த வெளிப்படுத்தி தேவன் விரும்புகிற கிரியைய முடிக்க முடிகிற வரை அது மட்டுமில்லாம மனுக்குலத்த சுத்திகரித்து இரட்சிக்கிற வரை அவர்தான் மனுவுருவான தேவன். மனுவுருவான தேவன் ஆணாகத்தான் இருக்க முடியும் பெண்ணாக இருக்க முடியாதுன்னு ஜனங்க நினச்சா அது ஜனங்களுடைய விதிகள், கருத்துகள் மற்றும் கற்பனைகளின் ஒரு சுத்தமான தயாரிப்பில்லையா? தேவன் ஆணத்தான் சிருஷ்டித்தார் பெண்ண சிருஷ்டிக்கலன்னு அவங்க நினைக்கிறாங்களா? ஏன்னா இந்த மனுவுருவான தேவன் பெண்ணா இருக்காரு. அவர் எவ்வளவு சத்தியத்த வெளிப்படுத்தினாலும் அல்லது எவ்வளவு பெரிய கிரியைய செஞ்சாலும், ஜனங்க அவர அங்கீகரிக்கல அல்லது ஏத்துக்கல. இதுக்குக் காரணம் ஜனங்க பெண்களுக்கு எதிரா சுத்தமா பாகுபாடு காட்டுறாங்க என்பதுதானே? இது மனுக்குலத்தின் ஒரு சீர்கேடான மனநில இல்லயா? தேவன் எப்படித் தோன்றி கிரியை செய்யணும்னு தேர்ந்தெடுக்க ஜனங்களுக்கு ஒரு உரிமையும் இல்ல. அவர் தேவனின் மனுவுருவாக இருக்கிற வரை, அவர் சத்தியத்த வெளிப்படுத்தி தேவனுடைய கிரியையை செய்ற வரை மாம்சம் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஜனங்க ஏத்துக்கிட்டுக் கீழ்ப்படியணும். இதுதான் நியாயமான மற்றும் ஞானமான வழி. தேவன் சர்வவல்லமையுள்ளவர் மேலும் சர்வஞானம் கொண்டவர் மேலும் தேவனின் சிந்தனைகள் மனுஷனின் சிந்தனைகள விட மேலானவையா இருக்கு. தேவனுடைய கிரியைகள புரிஞ்சிக்க முடியும்னு மனுஷனால எப்படி நம்ப முடியும்? பழைய காலத்தில இருந்து இப்ப வரை தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் மனுஷ எண்ணங்கள விஞ்சி எதிராத்தான் போயிருக்கு. கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செய்தப்போ, அவருடைய தோற்றம், பிறப்பு மற்றும் குடும்பம் எல்லாமே மனுஷ எண்ணங்களுக்கு மாறாவே இருந்திச்சு. இதனாலத்தான் வேதத்தில தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட மேசியா இவர்தான்னு பரிசேயர்கள் ஏத்துக்கல்ல மேலும் கடைசியா அவர சிலுவையில அறைஞ்சாங்க கொடிய பாவத்த செஞ்ச அவங்க தேவனால தண்டிக்கவும் சபிக்கவும் பட்டாங்க. அது இரத்தத்தால கிரயம் செலுத்தப்பட்ட சிந்தனயக் கிளறும் பாடம். ஆக, தேவனுடைய தோற்றம் மற்றும் கிரியைய உள்ளடக்கிய எல்லாமே ஒரு பெரிய நிகழ்வாவும் இரகசியமுமாவும் இருக்குது. ஜனங்க சத்தியத்தத் தேடாம, அவங்க கருத்துக்களையே விடாம வலியுறுத்தி, இலேசா மதிப்பிட்டு முடிவுசெஞ்சா, அவங்க தேவனுடைய மனநிலைய புண்படுத்தக் கூடிய நிலையில இருக்காங்க நீங்க தேவனால நிராகரிக்கப்பட்டு நீக்கப்பட்டால் மேலும் அவரது இரட்சிப்பை இழந்தால், அதைவிடப் பெரிய வருத்தம் உங்களுக்கு வேறு எதுவும் இருக்காது.

இன்னைக்கு, இன்னும் எண்ணமுடியாத ஜனங்க சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றத்தையும் கடைசி நாட்களின் கிரியையும் அவர் பெண்ணா இருப்பதால ஏத்துக்க மறுக்கிறாங்க, மேலும் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்கதான் சத்தியம்னு அறிஞ்ச பின்னும் கூட அவர ஏத்துக்கிறதில்ல. இங்கே இருக்கும் பிரச்சினை என்ன? இந்த ஜனங்களின் எண்ணங்கள் ஏன் இவ்வளவு வலிமையா இருக்கு? இது எல்லாத்துக்கும் மேலா, அவங்க ஏன் சத்தியத்தையும் சத்தியத்தின் வெளிப்பாட்டையும் மதிக்கிறதில்ல? ஜனங்களாக, சிருஷ்டிகளாம் மனுக்குலத்தின் அங்கத்தினர்களாக, நாம நியாயமான முறையில தேவனையும் அவருடைய கிரியையையும் நடத்தணும். சர்வவல்லமையுள்ள தேவன்தான் மனுவுருவான தேவன்னு நமக்குத் தெளிவாகத் தெரிஞ்சிருந்தும் மேலும் சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைங்கதான் சத்தியம்னு நாம தெளிவா அறிஞ்சிருந்தும் இன்னும் நம்ம எண்ணங்களையே நாம பிடிச்சுத் தொங்கிக்கிட்டு அவர் பெண்ணா இருப்பதாலேயே அவரை ஏத்துக்க மறுத்தா இது ஒரு தீவிரமான பிரச்சினை. இப்படிச் செய்றது தேவன மறுத்து எதிர்ப்பதுக்கு சமம். மனுவுருவான தேவனையும் அவர் வெளிப்படுத்தும் சத்தியத்தையும் அங்கீகரிக்க மறுப்பது என்பது எண்ணங்கள் மற்றும் கற்பனைகளின் வெறும் ஒரு பிரச்சினை என்பதையும் தாண்டிப் போகுது. இது உங்கள ஒரு அந்திகிறிஸ்து ஆக்குது, அவன் தேவனின் எதிரி, சபிக்கப்பட வேண்டிய ஒருவன்! வேதத்தில் கூறப்படுவது போல: “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்” (2 யோவான் 1:7). “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது” (1 யோவான் 4:3). ஆகவே, நாம் நிச்சயமாக அறியலாம் அதாவது, மனுஷ குமாரனின் வருகைய ஏத்துக்காத எவனொருவனும் மேலும் திரும்பி வந்த மனுவுருவான தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஒரு அந்திக்கிறிஸ்தே. தேவன் திரும்பி வரும்போது அந்திக்கிறிஸ்துவை இரட்சிப்பார்னு நீங்க நினைக்கிறீங்களா? நிச்சயமா இல்ல. அதனால, அந்திக்கிறிஸ்துக்களின் முடிவு என்ன? அந்திக்கிறிஸ்து செய்யும் தவறு என்ன? அவங்க வெறும் ஒரு நபர மட்டும் எதிர்க்கல, அவங்க கடைசி நாட்களின் கிறிஸ்துவை எதிர்க்கிறாங்க, தேவனையே எதிர்க்கிறாங்க. சர்வவல்லமையுள்ள தேவனை நிந்தித்து நியாயந்தீர்ப்பதன் சாராம்சம் என்ன? அது பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷணம். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் இந்தப் பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படாது.

இன்னைக்கு பலரும் தேவன விசிவாசிக்கிறாங்க ஆனா தேவனுடைய கிரியையைப் பத்தி அவங்களுக்குத் தெரிவதில்ல, மனுஷ குமாரன்னா என்ன, மனுவுருவாவதுன்னா என்ன, அல்லது ஒரே மெய் தேவன் யார்னு அவங்களுக்குத் தெரியாது. இது போல, மனுவுருவான தேவனை எதிர்ப்பதும் எளிதுதான். ஆகவே, தேவனின் கிரியைய வரையறுக்க நம்ம எண்ணங்களையும் கற்பனைகளையும் ஒருபோதும் நாம பயன்படுத்தக் கூடாது. அதுக்குப் பதிலாக, நாம சத்தியத்த தேடி நம்ம எண்ணங்கள அகற்றணும். இந்த வகையில மட்டுந்தான் தேவனுடைய ஆசீர்வாதத்த நம்மால பெறமுடியும். தேவனின் இரண்டு மனுவுருவெடுத்தலின் போதும் நடைபெற்ற கிரியையின் முக்கியத்துவம் மிக விரிவானதும் ஆழமானதுமாகும். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லியிருப்பது இதுதான். “தேவன் வெறுமனே பரிசுத்த ஆவியாக மட்டும் இல்லை, அவர் ஆவியாகவும், ஏழு மடங்கு வலுவூட்டப்பட்ட ஆவியாகவும் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய ஆவியாகவும் இருக்கிறார், ஆனாலும் அவர் ஒரு மனிதராகவும் இருக்கிறார்—அவர் ஒரு சாதாரண மனிதராகவும், விதிவிலக்காக பொதுவான மனிதராகவும் இருக்கிறார். அவர் ஆணாக மட்டுமல்ல, பெண்ணாகவும் இருக்கிறார். அவர்கள் இருவரும் மனிதர்களுக்குப் பிறந்தவர்கள், ஒருவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், மற்றொருவர் ஆவியிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு மனிதனுக்குப் பிறந்தவர் என்பதில் அவர்கள் வேறுபடுகிறார்கள். தேவனின் மனுவுரு மாம்சங்கள் இருவரும் பிதாவாகிய தேவனின் கிரியையைச் செய்வதில் ஒத்திருக்கின்றார்கள், மேலும் ஒருவர் மீட்பின் கிரியையைச் செய்யும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கிறார் என்பதில் இருவரும் வேறுபடுகின்றார்கள். இருவரும் பிதாவாகிய தேவனையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஆனால் ஒருவர் அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்த மீட்பர், மற்றொருவர் கோபமும் நியாயமும் நிறைந்த நீதியின் தேவன். ஒருவர் மீட்பின் கிரியையைத் தொடங்கிய தலைமை தளபதியாக இருக்கும்போது, மற்றொருவர் ஜெயத்தின் கிரியையைச் செய்கின்ற நீதியுள்ள தேவனாக இருக்கிறார். ஒருவர் ஆதியென்றால், மற்றொருவர் அந்தம். ஒருவர் பாவமில்லாத மாம்சமாக இருக்கும்போது, மற்றொருவர் மீட்பை நிறைவு செய்து, கிரியையைத் தொடர்கின்ற, ஒருபோதும் பாவம் செய்யாத மாம்சமாக இருக்கிறார். இருவரும் ஒரே ஆவியால் ஆனவர்கள், ஆனால் அவர்கள் வெவ்வேறு மாம்சங்களில் வாசம்பண்ணுகிறார்கள், மற்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தார்கள், மேலும் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் அனைத்து கிரியைகளும் பரஸ்பர நிறைவை உண்டாக்கி, ஒருபோதும் முரண்படுவதில்லை, மற்றும் அவை ஒரே சுவாசத்தில் பேசப்படலாம். இருவருமே ஜனங்கள்தான், ஆனால் ஒருவர் ஆண் குழந்தையாகவும், மற்றொருவர் பெண் குழந்தையாகவும் இருந்தார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளில் இருந்து நாம் பார்ப்பது என்னன்னா, மனுக்குலத்த இரட்சிக்கும் கிரியையைச் செய்ய மனுவுருவெடுத்து தேவன் வரும்போது தேவன் ஆணா அல்லது பெண்ணா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, அவர் எந்தக் குடும்பத்தில இருந்து வர்றார், அல்லது பார்க்க அவர் எப்படி இருக்கிறார். ஆகிய இதுவெல்லாம் முக்கியமில்ல. எது மிக முக்கியம்னா, தேவனின் கிரியைய அவர் செய்ய முடியறதும், தேவ சித்தத்த நிறைவேற்றுறதும் தேவனுக்கு மகிமையக் கொண்டு வர்றதும்தான். இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால, யூதேயாவில இருந்த ஒரு மிகவும் சாதாரண குடும்பத்தில ஒரு மாட்டுத்தொழுவத்தில் கர்த்தராகிய இயேசு பிறந்தார். இதப் பத்தி ஜனங்களுக்கு எண்ணங்கள் இருந்திச்சி. நாசரேத்தில இருந்த ஒரு தச்சரின் மகனாகப் பிறந்ததுக்கு கர்த்தராகிய இயேசுவை அவங்க எல்லாரும் நியாயந்தீர்த்தாங்க அந்தக் காரணத்தினால அவருடைய கிரியைய ஏத்துக்க மறுத்தாங்க. முடிவு என்னன்னா, தேவனால் சபிக்கப்பட்டு அவங்களுடைய இரட்சிப்ப இழந்தாங்க. கடைசி நாட்களில சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கிறார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில பிறந்தார் மற்றும் அவருக்கு ஒரு ஆசிய தோற்றம் உள்ளது. வெளிப்புறத்தில, அவர் ஒரு சாதாரண நபரைப் போலத் தோற்றமளிக்கிறார். ஆனா அவர் ஏராளமான சத்தியத்த வெளிப்படுத்துறார், கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ராறு, ஜனங்கள ஜெயங்கொள்ளுராறு மேலும் ஜெயங்கொள்ளுவோரின் ஒரு குழுவ உருவாக்குறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் செய்துள்ள இப்படிப்பட்ட வல்லமையான கிரியையால முழு உலகமும் அசைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான வருஷங்களா மனுக்குலத்த சீர்கெடுத்து வந்த சாத்தானின் சரித்திரம் முடிவடைந்தது மற்றும் ஒரு புதிய யுகம் தொடங்கிடிச்சி. பெண்ணாக மனுவுருவெடுத்து தேவன் வருவது பற்றிய எண்ணங்களைக் கொண்டிருக்க ஜனங்களை எது தகுதிப்படுத்துது? இப்படிப்பட்ட ஜனங்க மூர்க்கத்தனமானவங்க, பகுத்தறிவற்றவங்க. இன்னைக்கு, சர்வவல்லமையுள்ள தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகம் முழுதும் பிரசங்கிக்கப்படுது. தேவனுடைய கிரியையின் படிகள் பிருமாண்டமானது, வல்லமையானது மற்றும் தடுக்க முடியாதது மேலும் தேவனின் வார்த்தைகள் எல்லாத்தையும் நிறைவேத்தும். தேவனுடைய நீதியான மனநிலை, சர்வவல்லமை மற்றும் ஞானத்தை அது முழுமையா வெளிப்படுத்துது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்வது போல: “தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்தச் சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களைக் கொண்டுவரும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி மற்றும் செய்து முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவரைத் தவிர்க்கவும் என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்குப் பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுவுருவெடுத்தல் இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்தச் சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பிருக்காது, அல்லது அதைக் காண நீங்கள் தகுதியடைந்திருக்க மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுப்போக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுவுருவாக இருக்கும் இந்தச் சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

நீங்கள் இன்று வந்துவிட்டீர்கள் என்ற உண்மைக்கு இந்த மாம்சமே காரணமாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் நீங்கள் ஜீவனோடு வாழ வாய்ப்பு உள்ளது. இந்தச் சாதாரண மனிதரால் இந்த நல்ல அதிர்ஷ்டம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்தச் சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சித்த அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்து கொடுத்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவரும் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தைப் பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா? அவருடைய வாயிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நீங்கள் நிராகரித்து, உங்களிடையே அவர் ஜீவிப்பதை வெறுக்கிறீர்கள் என்றால், இறுதியில் உங்களின் நிலை என்னவாகும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”).

ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனைப் புறம்பாக்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், புறம்பாக்கப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பதற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். ‘வார்த்தைகள்’ என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்”).

நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இரட்சகர் திரும்பிவரும்போது அவர் இன்னும் இயேசு என்றே அழைக்கப்படுவாரா?

கடைசி நாட்களில, இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கெனவே உலகத்துக்கு சத்தியத்த வெளிப்படுத்தியும், தோன்றியும் மனுக்குலத்த முழுசா இரட்சிக்க...

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....

மனுக்குலத்தை இரட்சிக்கவும் நம்முடைய விதியை முற்றிலுமாக மாற்றவும் யாரால் முடியும்?

விதின்னு சொன்னாலே, பணம், அந்தஸ்து இருந்தா, வெற்றி அடஞ்சா நல்ல விதின்னும், ஏழைங்க, தாழ்ந்தவங்க, பேரழிவால கஷ்டத்தால பாதிக்கபட்டவங்க எல்லாரும்...

தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க...

Leave a Reply