கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

பிப்ரவரி 3, 2022

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல இருந்தும் பேரழிவுகள்ள இருந்தும் தங்களை இரட்சித்து, பரலோக ராஜ்யத்திற்கு கூட்டிட்டுப்போக அவர் மேகத்துல திரும்பிவந்து அவங்கள வானத்துக்குக் கூட்டிட்டுப் போவார்ன்னு விசுவாசிகள் வாஞ்சையோடு காத்துக்கிட்டுருக்கறாங்க. அவங்க வானத்தப் பாத்து, ஓயாம ஜெபிச்சு, மேகத்துல கர்த்தரைப் பாக்கக் காத்துக்கிட்டே இருக்காங்க, வேறெதையும் பாக்கத் துணிவதில்ல, ஏன்னா, கர்த்தர் வருவார்னும் அவங்க பேரழிவுல தள்ளப்படுவாங்கன்னும் பயப்படுறாங்க, பேரழிவுகள் வந்துருச்சுங்கிற பாக்கறதே அவங்களுக்குக் கொடூரமா இருந்துச்சு, ஆனா அவங்க இன்னும் கர்த்தராகிய இயேசு வானத்துலயிருந்து வர்றத வரவேற்கல. கர்த்தராகிய இயேசு உண்மையிலேயே வருவாரான்னு நிறைய பேர் சந்தேகப்படுறாங்க. ஒருவேளை தாங்கள் கர்த்தரால பேரழிவுகளுக்குள்ள தள்ளப்பட்டிருக்கலாம்னு நெனச்சு சிலர் சங்கடமா உணர்றாங்க. உதவியற்ற நிலமைய உணர்ந்து, பல போதகர்கள் தங்களோட கதைகளை மாத்தி, பேரழிவுகளுக்கு நடுவிலோ அல்லது அதுக்கு அப்புறமோ கர்த்தர் வருவார்னு சொல்றாங்க. சிலர் உரிமையா கர்த்தர் 2028 அல்லது 2030 ஆவது வருஷத்துல வருவார்னு சொல்லத் துணியறாங்க. வனசத்தோட இந்த விளக்கங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்குதுங்கற நம்பிக்கையோட, விசுவாசிகள பேரழிவுகளுக்குள்ள தள்ளிவிட முடியும். ஆனா, அவங்க எவ்வளவு காலம் விசுவாசம் வச்சிருந்தாங்கங்கறதோ அல்லது எவ்வளவு கடினமாக உழச்சிருக்காங்கங்கறதோ ஒரு பொருட்டல்ல, அவங்க கர்த்தரை வரவேற்கல. இது எவ்வளோ கடினமா இருக்குதுங்கறத நம்மால கற்பனை செய்ய முடியுது. விசுவாசிக்கிற ஜனங்க எல்லாருக்கும் வேதம் என்ன சொல்லுதுன்னு தெரியும், பேரழிவுக்கு உள்ளாகறதும், அழுகையும் பற்கடிப்பும் அவமானத்தின் அடையாளம்னும், அதே சமயத்துல, உன்னோட விசுவாசத்துல உள்ள வெற்றியும் தோல்வியும் பேரழிவுகளுக்கு முன்னாடியே கர்த்தர வரவேற்பதன் மூலம்தான் தீர்மானிக்கப்படுது. அப்புறம் ஏன் மத உலகத்துல உள்ளவங்க கர்த்தர வரவேற்காம, பேரழிவுகள்ல விழுந்திருக்காங்க? கர்த்தர் உண்மையில்லாதவராக இருக்க முடியுமா, அதனால்தான் அவர் இன்னும் தோன்றலயா? கண்டிப்பா, அப்படி இல்ல. மத உலகம் கர்த்தர வரவேற்கத் தவறியதால அவர் திரும்பி வரலன்னு அர்த்தமல்ல. உண்மையிலேயே, அவர் ரொம்ப காலத்திற்கு முன்னாடியே மாம்சத்துல திரும்பிவந்து, மனுஷகுமாரனா தோன்றி கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு. எல்லா சபைப் பிரிவுகளையும் சேர்ந்த நிறைய ஜனங்கள் தேவனோட குரலக் கேட்டு கர்த்தர வரவேற்றிருக்காங்க. ஆனா, அவர் மேகத்தின் மீது வருவார்ங்கற கருத்துடைய மதத்தில் உள்ள ஜனங்கள் இன்னும் கர்த்தர வரவேற்கல. 1991 ஆவது வருஷத்தில் இருந்தே, கிழக்கத்திய மின்னலானது சர்வவல்லமையுள்ள தேவனுடைய தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சி கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. மூப்பது வருஷமா அதுவே அவங்களோட சாட்சியாக இருந்திருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன் மில்லியன்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தியிருக்கிறாரு சத்தியத்தை விரும்புற எல்லா சபைப் பிரிவுகள்ல உள்ளவங்களும் அவரோட வார்த்தைகள வாசிச்சு, அவைகள முற்றிலுமா சத்தியம்னு உணர்ந்திருக்காங்க, அவங்க தேவனோட குரலக் கேக்குறோங்கறத உணர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பா வந்து, கர்த்தர வரவேற்குறாங்க. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் ரொம்ப காலமா இணையத்துல இருக்கு, கிழக்கிலிருந்து மேற்கு வரை ஒரு பெரிய ஒளி போல பிரகாசிச்சு, முழு உலகத்தையும் ஒளிரச் செய்யுது, அது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள முழுமையா நிறைவேற்றுது: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). சர்வவல்லமையுள்ள தேவனுடைய தோற்றமும் கிரியையும் உலகம் முழுவதையும் உலுக்கியிருக்குது, அதே சமயத்துல, மத உலகத்தின் அந்திக்கிறிஸ்துவோட கூட்டத்தினர் தேவனுடைய தோன்றலையும் கிரியையையும் ஆராயாமலேயே கிழக்கத்திய மின்னலை நியாயந்தீர்த்தும், கண்டனம் செய்தும், எதிர்த்தும் வர்ராங்க. அவங்களோட ஒரே எண்ணம், மேகத்தின் மீது வராத எந்த கர்த்தராகிய இயேசுவும் பொய்யானவர்ங்கறதும், மனுவுருவெடுத்து வரும் கர்த்தர் ஒரு கள்ளக்கிறிஸ்துவாக இருப்பார்ங்கறதும் தான். நாம எல்லாராலும் பார்க்க முடியுறது என்னன்னா மத உலகம் கர்த்தர வரவேற்காம, பேரழிவில் விழுந்துபோயிருக்க காரணம், அவரை வரவேற்பதற்கு கர்த்தராகிய இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்கள அவங்க முழுவதுமா பின்பற்றாம, தங்களோட சொந்த கருத்துக்கள் சொல்றபடி, கர்த்தர் ஒரு மேகத்தின் மீதுதான் திரும்பி வரணும்னு தன்னிச்சையா முடிவு செய்யறது தான். கர்த்தரோட சொந்த வார்த்தைகளை கடைபிடிக்காம, கர்த்தரே வந்து தங்களை நேரடியா பரலோக ராஜ்யத்துக்குள்ள கூட்டிட்டுப் போவார்னு அவங்க ஏங்கிக்கிட்டு இருக்காங்க. கர்த்தர வரவேற்பது போன்ற முக்கியமான ஒரு விஷயத்துல இவ்வளவு பயங்கரமான தவறு செய்வது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான வாய்ப்ப இழப்பதைக் குறிக்குது, அவங்க பேரழிவுகள்ல சிக்கி, அழுதுக்கிட்டும் தங்களோட பற்களக் கடிச்சிக்கிட்டும் இருப்பாங்க. இந்த வசனம் தேவனோட இந்த வார்த்தைகள நிறைவேற்றுது: “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்(ஓசியா 4:6).

கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீது வருகிறாரா அவர் கிரியை செய்ய, மனுவுருவான மனுஷகுமாரனாகத் தோன்றுகிறாராங்கறத தெரிஞ்சுக்க, முதல்ல நாம ஆழ்ந்த மூச்சு விட்டுட்டு, கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையப் பத்திய தீர்க்கதரிசனங்கள்ல சிலவற்றை ஆழ்ந்து சிந்திக்கணும், அப்ப நாம அதிகமா வெளிச்சம் பெற்றவங்களாக நம்மல நாமே பாக்க முடியும். சில வசனங்களப் பார்ப்போம். “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்(மத்தேயு 24:44). “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்(மத்தேயு 24:37). “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). “நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்(வெளிப்படுத்தல் 3:3). “இதோ, திருடனைப்போல் வருகிறேன்(வெளிப்படுத்தல் 16:15). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). இவைகள நாம தீவிரமா சிந்துச்சுப் பாத்தா, கர்த்தரோட வருகையப் பத்திய தீர்க்கதரிசனங்கள் எப்போதும் இப்படிக் குறிப்பிடப்படிருப்பது எளிதாய் விளங்கும் “மனுஷகுமாரன்,” “மனுஷகுமாரனுடைய வருகை,” “மனுஷகுமாரன் வருவார்,” “மனுஷகுமாரன் தம்முடைய நாளிலே,” “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.” கர்த்தராகிய இயேசு “மனுஷகுமாரனுடைய வருகை” ன்னு பல முறை சொன்னாரு அதனால தான் கடைசி நாட்களின் கர்த்தர வரவேற்பது நமக்கு ரொம்ப முக்கியமானது. அப்படினா, “மனுஷகுமாரன்” என்பது யாரக் குறிக்குது? நிச்சயமா, இது மனுஷகுமாரனாக மாம்சத்தை தரித்திருக்கிற தேவனுடைய ஆவியானவரக் குறிக்குது. இது தேவனோட மனுவுருவாதலப் பத்தியதாக மட்டுந்தான் இருக்க முடியும். “திருடனைப்போல்” திரும்பி வருவேன்னு என்று கர்த்தர் பலமுறை சொன்னாரு. அப்படின்னா, இந்த “திருடனைப்போல்” என்பதின் அர்த்தம் என்ன? அப்படின்னா, கர்த்தர் அமைதியாகவும், இரகசியமாகவும் வர்றார்னு அர்த்தம்—ஜனங்களுக்குத் தெரியாத போது, தேவன் மனுஷகுமாரனாக மாம்சமாகி, பேசவும் கிரியை செய்வும் இரகசியமாக இறங்கி வர்றாரு. கடைசி நாட்கள்ல கர்த்தரோட வருகை மனுஷகுமாரனா இருக்குதுங்கறத நாம் உறுதியாக நம்பலாம், இது பேரழிவுகளுக்கு முன்னாடியே, அதாவது உலகம் அதோட இருண்ட கட்டத்துல இருக்கும் போதே நடக்குது. “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). கிழக்கத்திய மின்னல் 1991 முதல் 2021 வரைக்கும் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாட்சி பகர்ந்து வருது, அப்புறம், இந்த 30 ஆண்டுகள்ல, அவங்க சிசிபி யோட வெறித்தனமான அடக்குமுறைக்கும், கைதுகளுக்கும், தீங்குகளுக்கும் உட்பட்டிருக்காங்க. சிசிபி அதன் நாடு தழுவிய பிரச்சார இயந்திரங்களக் கூட பயன்படுத்துச்சு, “சர்வவல்லமையுள்ள தேவன்” என்ற நாமத்த பரப்பி, கிழக்கத்திய மின்னல் உலகம் முழுவதும் சாட்சி பகருது, அதை எல்லாருக்கும் அறிமுகமான வீட்டுப் பெயரா மாத்துது. இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த நிறைவேற்றுது: “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). கிழக்கத்திய மின்னல் பல ஆண்டுகளா சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாட்சி பகர்ந்த பிறகு, சத்தியத்தை நேசிச்ச எல்லா சபைப் பிரிவுகளைச் சேர்ந்த ஜனங்களும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் படிச்சு, அவைகள் சத்தியம்னும் திருச்சபைகளுக்குச் சொல்லப்பட்ட பரிசுத்த ஆவியானவரோட வார்த்தைகள்னும் உணர்ந்தாங்க. அவங்க தேவனோட குரலக் கேட்டு, சர்வவல்லமையுள்ள தேவனை மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டாங்க. அவங்க புத்தியுள்ள கன்னிகைகள் அவங்க தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பா உயர்த்தப்பட்டு, கர்த்தருடைய விருந்துல கலந்துகொண்டவங்க. சர்வவல்லமையுள்ள தேவனை நியாயந்தீர்த்து கண்டனம் செய்றவங்க கூட நிறைய இருக்காங்க. அதுக்கப்புறம், அவரோட வார்த்தைகளப் படிச்சவங்க தேவனோட குரலக் கேட்டு தேவனுக்கு முன்பா வந்தாங்க. சர்வவல்லமையுள்ள தேவனை எதிர்த்ததற்காகவும் கண்டனம் செய்ததற்காகவும் அவங்க வருத்தத்தால நிறைஞ்சிருந்தாங்க. ஆட்டுக்குட்டியானவரோட கல்யாண விருந்துல கலந்துகொள்ற இந்த புத்தியுள்ள கன்னிகைகள், சர்வவல்லமையுள்ள தேவனே கடைசி நாட்கள்ல இறங்கிவந்திருக்கும் மனுஷகுமாரனின் தோற்றம்னு சாட்சியளிக்கிறாங்க. ஆனா, வசனத்தோட நேரடியான அர்த்தத்தப் பிடிச்சுக்கிட்டு, மேகத்தின் மீது வர்ர கர்த்தரைத் தவிர வேறு யாரையும் ஏத்துக்க மறுப்பவங்க புத்தியில்லாத கன்னிகைகள் அவங்க பேரழிவுல விழுந்துக்கிட்டு இருக்காங்க. மிகப்பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு மேகத்துல தோன்றுவதைப் பாக்க மட்டுமே அவங்களால காத்திருக்க முடியும். இவங்க கர்த்தர வரவேற்காததுக்கு முக்கிய காரணம், அவங்க மனுஷர்களிடத்துல இருந்து வரும் வேதாகமத் தீர்க்கதரிசனங்களை மட்டுமே நம்புறாங்க, கர்த்தராகிய இயேசுவின் சொந்த வாயிலிருந்து வர்ற தீர்க்கதரிசனங்களை அல்ல. கர்த்தர் மேகத்தின் மீது வர்ரத மட்டுமே அவங்க ஏற்றுக்கொள்வாங்க. ஆனால் தேவன் மனுஷகுமாரனா மாம்சத்தில் தோன்றுவதையும் கிரியை செய்வதையும் அவங்க நிராகரிக்கிறாங்க. அவங்க ரொம்பவே தவறா வழிநடத்தப்பட்டவங்களும் புத்தியில்லாதவங்களுமா இருக்காங்க! கர்த்தர் அவரோட வருகையப் பத்திப் பேசும்போது, “மனுஷகுமாரன்” அப்டின்னு பலமுறை குறிப்பிட்டாரு, ஆனா பல “புத்திசாலியான”, “ஞானவான்களாகிய” போதகர்களும் வேதாகம அறிஞர்களும் மனுஷகுமாரனப் பத்திய கருத்த குழப்பி, ஒரு பெரிய தவற செஞ்சிருக்காங்க. அவங்க தங்களோட சொந்த புத்திசாலித்தனத்தாலயே பாதிக்கப்பட்டவங்களா இருக்காங்க! சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கிறாரு, ஆனா, அவங்க இன்னும் அவர மனுஷகுமாரனா பாக்க மறுக்குறாங்க. இது வெறும் குருட்டுத்தனம் இல்லையா? அவர் மனுவுருவான தேவன் இல்லைனா, அவரால எப்படி பல சத்தியங்களை வெளிப்படுத்த முடியும்? கர்த்தராகிய இயேசு மேகத்தின் மீது இறங்கிவர்றத மட்டுமே அவங்களால ஏத்துக்க முடியுங்கற கருத்த அவங்க இன்னும் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, அதனாலதான் அவங்க எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்ப இழக்குறாங்க, பேரழிவுல விழறாங்க. அது ஒரு நித்திய வருத்தமா இருக்கும்.

கர்த்தர் மனுவுருவான மனுஷகுமாரனா கிரியை செய்ய திரும்பி வந்திருக்கிறாருங்கறத நம்ம எல்லாராலையும் பாக்க முடியும். இது யாராலும் மறுக்க முடியாத எதிர்க்க முடியாத உண்மை. ஆனா, அநேக ஜனங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 1:7 இல் “இதோ, மேகங்களுடனே வருகிறார்” என்பது கர்த்தர் மேகத்தின் மீது இறங்கி வருவாருங்கற அர்த்தமுள்ளதா இருக்குன்னு நெனச்சு, கேக்குறாங்க. மேகங்களோடு வருவார்ன்னு சொல்வதும், மனுஷகுமாரனாக வருவார்ன்னு சொல்வதும் முரண்படுது இல்லையா? அது அப்படித் தோன்றலாம், ஆனா உண்மையிலயே இங்கே எந்த முரண்பாடும் இல்ல. இது மனுஷனோட புரிதலுக்கு ஒரு சவால் மட்டுந்தான். எந்த வேதாகமத் தீர்க்கதரிசனங்களும் முழுவதுமா நிறைவேறும், ஆனா, அதுக்கு ஒரு குறிப்பிட்ட செயல்முறையும், படிகளும் இருக்கு. மனுஷகுமாரனின் தோற்றத்துக்கும் கர்த்தர் மேகத்தின் மீது வருவதுக்கும் ஒரு முறை இருக்குது. கர்த்தர் முதல்ல மனுவுருவாகி இரகசியமா வந்து கிரியை செய்யுறாரு, அதுக்கப்புறம், அவர் வெளிப்படையா ஒரு மேகத்துல தோன்றுகிறாரு. இது ஏன் ரெண்டு படிகள்ல நடக்குது? இதற்கிடையில என்ன நடக்குது? இதுக்குள்ள மறைபொருள்கள் இருக்கு. முதல்ல, கர்த்தராகிய இயேசு என்ன தீர்க்கதரிசனம் சொன்னாருன்னு பாப்போம். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்(யோவான் 17:17). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22, 27). மேலும் “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் முழுவதுமா நிறைவேறியிருக்கு. மனிதகுலம் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல மனுஷகுமாரன் இரகசியமாக வந்து கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்து, பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு. அவர் சத்திய ஆவியானவரா, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள எல்லா சத்தியங்களுக்குள்ளும் வழிநடத்துபவரா இருக்காரு பேரழிவுகளுக்கு முன்னாடியே ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள பரிபூரணப்படுத்தியிருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் உலகத்தோட எல்லா நாடுகளிலும் பரவியிருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன் சாத்தானை தோற்கடிச்சு எல்லா மகிமையையும் பெற்றிருக்கறார்ங்கறத இது காட்டுது. இப்ப, பெரிய பேரழிவுகள் தொடங்கிருச்சு, தேவன் ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள பரிபூரணப்படுத்தியிருக்காரு, அவருடைய பெரிய கிரியை நிறைவடைந்திருக்குது. பேரழிவுகளுக்குப் பிறகு, தேவன் எல்லா ஜனங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் வெளிப்படையா ஒரு மேகத்துல தோன்றுவாரு. அந்த நேரத்துல, மனுஷகுமாரன் தோன்றுதல், கர்த்தர் மேகத்தின் மீது வருதல் என்கிற இந்த தீர்க்கதரிசனங்கள் முழுவதுமா நிறைவேறும். சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி, தேவனுடைய வீட்ல இருந்து ஆரம்பிச்சு அவரோட நியாயத்தீர்ப்பைத் தொடங்கியிருப்பதால, சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்டவங்க தினமும் தேவனோட வார்த்தைகளை புசித்துப் பானம்பண்ணுறாங்க, தேவனோட நியாயத்தீர்ப்பையும் சுத்திகரிப்பையும் ஏத்துக்கிட்டதனால, அவங்க படிப்படியா பாவத்துல இருந்தும் சாத்தானோட ஆதிக்கத்துல இருந்தும் தப்பித்துக்கொள்றாங்க. தேவன் அவங்கள பேரழிவுகளுக்கு முன்னாடியே ஜெயங்கொள்பவர்களா ஆக்கியிருக்காரு, அவங்கதான் முதல் பலன்களாவும் இருக்காங்க. இது வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்கதரிசனங்கள முழுமையாக நிறைவேற்றுது: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). “இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்(வெளிப்படுத்தல் 14:4). சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்ய இரகசியமாக வந்து முழுசா மூப்பது வருஷங்களாச்சு. அவர் வேதாகமத்தின் எல்லா மறைபொருளையும் தேவனோட 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு. மனுஷனோட சீர்கேடான சாராம்சத்தை நியாயந்தீர்ப்பதுக்கும் அம்பலப்படுத்துவதுக்கும் அவர் நிறையவே சொல்லியிருக்கிறாரு, இந்த வார்த்தைகள், பாவத்தையும் சாத்தானோட ஆதிக்கங்களயும் தூக்கி எறியவும், முழுமையா இரட்சிக்கப்படவும் நம்மல அனுமதிக்கிற சத்தியத்தின் வழியா இருக்கு. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் எல்லாரும் சர்வவல்லமையுள்ள தேவனால நியாயந்தீர்க்கப்படுறாங்க, சிட்சிக்கப்படுறாங்க, சுத்திகரிக்கப்படுறாங்க, கையாளப்படுறாங்க, சோதிக்கப்படுறாங்க மற்றும் புடமிடப்படுறாங்க, தங்களோட சொந்த சீர்கேட்டத் தெளிவாப் பாத்து, அதை மறைக்க எந்த இடமும் இல்லாம வெட்கப்பட்டு, தங்களைத் தாங்களே வெறுத்து இகழ்ந்து, வருத்தத்தால நிறைஞ்சவங்களா, தேவனுக்கு முன்னால தலைவணங்குறாங்க. தேவனோட நீதியுள்ள மனநிலை எந்த குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாதுங்கறதையும், அது தேவனுக்கான பயபக்தியை ஏற்படுத்துதுங்கறதையும் அவங்க பாக்கறாங்க, படிப்படியா தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுறாங்க, உண்மையிலேயே மனந்திரும்பி மாறுதலை அடையுறாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் பேரழிவுகளுக்கு முன்னாடியே ஒரு கூட்டஜெயங்கொள்பவர்கள பரிபூரணமாக்கி, முதல் பலனைப் பெற்றிருக்கிறாரு. இந்த ஜெயங்கொள்பவர்களின் சாட்சிகள் ஒளிநாடாக்களாகவும் திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன, இவை இணையத்தில் கிடைக்கின்றன, அவைகளைப் பாக்கறவங்க எல்லாரையும் அவைகள் நம்பவைக்கறவைகளா இருக்குது. இதுதான் கடைசி நாட்கள்ல தேவனோட தோற்றமும் கிரியையுமா இருக்குங்கறது தெளிவா இருக்குது இல்லையா! சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தி, இவ்வளவு பெரிய கிரியைகளைச் செய்திருக்கிறாரு. முழு உலகத்தையும் மட்டுமல்ல, முழு பிரபஞ்சத்தையும் உலுக்கியிருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவன் உலகத்தை மாற்றியிருக்காரு, பழைய காலத்துக்கு முடிவ கொண்டு வந்து, புதிய காலத்தத் தொடங்கியிருக்கிறாரு. ராஜ்யத்தின் காலம் தொடங்கியிருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனே, திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசுவாகிய மனுஷகுமாரனோட தோற்றம் என்பத இது நிரூபிக்குது. நம்முடைய இரட்சகர் தோன்றி கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு! தேவனுடைய வீட்ல இருந்து தொடங்கும் நியாயத்தீர்ப்புக் கிரியை ஏற்கனவே பெரும்பாலும் முடிஞ்சிருச்சு, அதன் மூலம் பெரிய பேரழிவுகள் ஏற்பட்டிருக்கு. பேரழிவுகள் ஏற்கனவே தொடங்கிருச்சுன்னு நம்மால சொல்ல முடியும் அவைகள் பெருக மட்டுமே செய்யும். தேவனை எதிர்க்குற பொல்லப்பு செய்யுற எல்லாரும், பொல்லாத கூட்டத்தினரும் பேரழிவுகளில் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவாங்க, அதே நேரத்துல, கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பு மூலமாவும் சிட்சை மூலமாவும் சுத்திகரிக்கப்பட்டவங்க பேரழிவுகளுக்கு மத்தியில தேவனால பாதுகாக்கப்பட்டு பத்திரமாகக் காக்கப்படுவாங்க. பேரழிவுகள் முடியும் போது, சாத்தானோட இந்த பொல்லாத உலகம் அழிக்கப்படும், அதன் பிறகு தேவன் ஒரு மேகத்துல வெளிப்படையா எல்லா ஜனங்களுக்கும் தோன்றுவாரு. இது வெளிப்படுத்தின விசேஷம் 1:7 இல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா இருக்கும்: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.” கோத்திரத்தாரெல்லாரும் ஏன் புலம்புவாங்க? ஏன்னா, சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தி, இவ்வளவு பெரிய கிரியையச் செய்திருக்கிறாரு. அவங்க அதைப் பாக்க மறுத்தது மட்டுமல்லாம, அவங்க மத உலகின் அந்திக்கிறிஸ்து கூட்டத்தோட சேந்துக்கிட்டு, அவரைத் திட்டுனாங்க, நியாயந்தீர்தாங்க, அப்புறம் நிந்திச்சாங்க. அவங்க தேவனோட மனநிலையை புண்படுத்தியிருக்காங்க அப்புறம் பேரழிவுகள்ல விழுந்திருக்கிறாங்க. அவங்க மார்பில் அடிச்சுக்கிட்டு, அழுகையிலும், பற்கடிப்புலையுந்தான் இருப்பாங்க. இது வெளிப்படுத்தின விசேஷத்தின் “பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்” என்ற சோகமான தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா இருக்கும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், சிட்சையையும் ஏத்துக்கிட்டு சுத்திகரிக்கப்பட்டு பரிபூரணப்படுத்தப்பட்டவங்க, தேவன் வெளிப்படையா தோன்றுவதப் பாத்து, தேவனோட சர்வவல்லமை, ஞானம், நீதியத் துதிச்சு, கட்டுப்படுத்த முடியாம மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டிருப்பாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுவதப் போல: “தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்குத் துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்குத் தந்திடாத மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து”).

மனித குலத்தை முழுமையாக சுத்திகரிச்சு இரட்சிக்க, சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல நடக்கும் அவருடைய நியாயத்தீர்ப்புக் கிரியைக்காக சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. இரட்சிக்கப்படுவதுக்கும் தேவனோட ராஜ்யத்துக்குள்ள நுழைவதுக்கும் இதுதான் மனிதகுலத்துக்கான ஒரே ஒரு வாய்ப்பு, முழு வாழ்நாளுக்கும் இந்த ஒரு வாய்ப்புதான் இருக்கு. பெரிய பேரழிவுகள் தொடங்குகின்றன. விழித்தெழுந்து, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய தாமதமில்லாம பாக்கறவங்க சரியான நேரத்துல இருப்பாங்க, ஏன்னா, சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றாரு, “நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26”). சில ஜனங்கள் தேவனோட குரலைக் கேட்டு, அவரோட செயல்களைப் பாத்து, தேவனுக்கு முன்பா வருவாங்க, பேரழிவுகளுக்கு மத்தியில அவரோட இரட்சிப்பப் பெறுவாங்க என்பத நம்மால பாக்க முடியுது. இதுதான் பேரழிவுகள்ல இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதுங்கிறது, மேலும், இதுதான் அவங்களோட கடைசி வாய்ப்பாவும், அதோடுகூட மனித குலத்திற்கான தேவனோட மாபெரும் இரக்கமாகவும் இருக்கு. எதைத் தேர்வு செய்யணும்னு புத்திசாலிகளுக்குத் தெரியும். கர்த்தர் மேகத்துல வருவார்னு ஆசையுடன் காத்திருப்பவங்க சுய ஆதாரத்தக் கொண்டிருக்கிற ஒரு முடிவைத்தான் பெற்றிருப்பாங்க. இன்று சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல கடைசியா இன்னும் ஒரு பகுதியப் பார்ப்போம். “நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசு திரும்பி வருவது ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, அகந்தையுள்ள நபராக நீங்கள் இருக்கக்கூடாது, மாறாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்திற்காக ஏங்குகிற மற்றும் அதைத் தேடுகிற ஒருவராக இருக்க வேண்டும்; இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி முழுசா 30 ஆண்டுகள் ஆயிருச்சி 1991 இல் கிரியை செய்யவும், சத்தியத்த...

தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க...

மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்?

நாம ஏற்கெனவே சில தடவ கடைசி நாட்கள்ல செய்யப்படும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியயப் பத்திப் பேசி இருக்கோம். நாம இன்னைக்கு யார் இந்த...

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....

Leave a Reply