விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

டிசம்பர் 28, 2021

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி. பலரும் தொடர்ந்து மனக்கவலயிலேயே இருக்காங்க, கர்த்தர் ஒரு மேகத்தில வந்து வானத்துக்கு எடுத்துக்கிட்டு போவாருன்னும், பேரழிவால வரும் துன்பத்தில இருந்து தப்பிச்சி மரணத்த தவிர்க்கலாம்னும் விசுவாசிங்க ஆவலோட காத்திக்கிட்டுருக்காங்க. அவங்களுக்கு அவங்க ஏன் இன்னும் கர்த்தர சந்திக்க எடுத்துக்கப்படலேன்னு தெரியல, அதனால நாள் முழுசா வானத்த உத்துப்பாத்துக்கிட்டு இருக்காங்க ஆனா ஒண்ணுமே தெரியல. பலரு முற்றிலுமா, குறிப்பா சபை குருமாருங்களுடய உயிரு பெருந்தொற்றால போறத பாத்து துயரத்தில இருக்காங்க. அவங்க, கர்த்தரால கைவிடப்பட்டு பேரழிவில மாட்டினதாவும், அவங்க உயிர்பிழைக்கிறது உறுதியில்லேன்னும் சஞ்சலத்துல இருக்காங்க. அவங்க குழப்பமாவும் கலக்கமாவும் உணர்றாங்க. பேரழிவுக்கு முன்னால கர்த்தராகிய இயேசு வந்து அவற்றுல அழிஞ்சி போகமா இருக்க நம்ம வானத்துக்கு எடுத்துக்கிட்டுப் போவார்னு வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனம் சொல்லுது. இது நம்ம நம்பிக்க. பேரழிவுக்குத் தப்பி நித்திய ஜீவன அடயறது நம்ம விசுவாசம். ஆனா பேரழிவுகள் மழை போலக் கீழ பொழிய ஆரம்பிச்சிருச்சி, அப்படின்னா விசுவாசிங்கள வரவேற்க கர்த்தர் ஏன் ஒரு மேகத்தில வரல? நம்முடைய விசுவாசத்தின் மூலமா, நம்முடைய பாவங்க மன்னிக்கப்பட்டிருக்கிறது மட்டுமல்லாம நாம ரட்சிப்பால நீதிபரராக்கப்பட்டு கிருபைய பெற்றிருக்கோம். நாம ஏன் பரலோக ராஜ்யத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படல? நாம பல வருஷங்களா கர்த்தருக்காக வேதனயோட காத்திருந்து நிறய துன்பப்பட்டிருக்கோம். அவர சந்திக்கவும், பேரழிவின் துன்பங்கள்ல இருந்து நாம தப்பிக்கவும் நம்மள எடுத்துக்கிட்டுப் போக அவரு ஏன் நமக்காக வரல? அவரு நிஜமாவே நம்மள கைவிட்டுட்டாரா? பல விசுவாசிங்கக்கிட்ட இருக்கிற கேள்விங்க இதுதான். நல்லது, விசுவாசத்தின் மூலமா ரட்சிக்கப்படுறது உண்மையிலே நம்மள ராஜ்யத்துக்குள்ள கொண்டு போகுமா? இந்த விஷயத்தப் பத்தி என்னுடைய தனிப்பட்ட புரிதல்ல கொஞ்சத்த பகிர்றேன்.

ஆனா இதப்பத்தி ஐக்கியப்படுறதுக்கு முன்னாடி நாம முதல்ல ஒரு விஷயத்த தெளிவாக்கிக்குவோம். விசுவாசத்தின் மூலமா நீதிமான் ஆக்கப்படுறதுங்கிற இந்த கருத்து தேவனுடைய வார்த்தையால எங்கயாவது ஆதரிக்கப்பட்டிருக்கா? அவரோட ராஜ்யத்துக்குள்ள நாம பிரவேசிக்கனும்னா விசுவாசத்தால நீதிமானாக்கப்படுனும்ன்னு எப்போதாவது கர்த்தராகிய இயேசு சொன்னாரா? அவரு ஒருபோதும் சொல்லல. இதுக்கு எப்போதாவது பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுத்திருக்காரா? இல்ல. அதனால இந்த கருத்து முழுசா ஒரு மனுஷ எண்ணமேங்கறத நாம உறுதியா சொல்லலாம், ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க நம்மளால அத சார்ந்திருக்க முடியாது. உண்மயில, கர்த்தராகிய இயேசு ராஜ்யத்துக்குள்ள யாரால பிரவேசிக்க முடியுங்கறதில ரொம்ப தெளிவா இருந்தாரு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்(மத்தேயு 7:21-23). “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35). “நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரெயர் 12:14). கத்தராகிய இயேசு நம்மிடம் தெளிவா சொன்னாரு அதாவது தேவனுடய சித்தப்படி செய்றவங்கதான் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்னு, அதாவது பாவத்துக்குத் தப்பி, சுத்திகரிக்கப்பட்டவங்களுக்குதான் ராஜ்யத்தில ஒரு இடம் கிடைக்கும். பிரவேசிக்க அது ஒண்ணுதான் தர அளவீடு. பாவத்தில இருந்து மீட்கப்பட்டு, விசுவாசத்தினால நீதிமானாக்கப்படுறதுனால ஒருத்தரு தேவனுடய சித்தப்படி செய்றாருன்னு அர்த்தமாகுமா? அவங்க அதுக்கப்புறம் பாவம் செய்ய மாட்டாங்க அல்லது தேவன எதிர்த்து கலகம் செய்ய மாட்டாங்கன்னு அர்த்தமாகுமா? நிச்சயமா இல்ல. கர்த்தர விசுவாசிக்கிறவங்க எல்லாரும் நாம மீட்கப்பட்டு விசுவாசத்தினால நீதிமானாக்கப்பட்டிருந்தாலும், நாம தொடர்ந்து பாவம் செய்றோம், பகல்ல பாவம் செஞ்சு இரவில அறிக்கயிடுற ஒரு சுழற்சியில ஜீவிக்கிறோங்கற உண்மையப் பாக்க முடியும். பாவத்தில இருந்து தப்பிக்க முடியாத வேதனயோடு நாம வாழறோம்—நம்மால ஒண்னும் செய்ய முடியல. எல்லா சபைப் பிரிவுக்குள்ளும் பொறாமப்படுற, சண்டபோடுற, பேருக்கும் ஆதாயத்துக்கும் போராடுற, ஒருத்தர ஒருத்தர் மோசமா பேசுற ஜனங்க இருக்காங்க. இதப் பரவலா பாக்கலாம். பெரும்பாலன ஜனங்களுடய விசுவாசம் முற்றிலுமா தேவனுடைய கிருபய பெறும் பேராசயாலதான் ஏற்பட்டிருக்கு, ஆனா அவரு சொல்றமாதிரி அவங்க செய்றதில்ல. நெருக்கடிய சந்திக்கும்போது அவங்க சபைக்கு ஓடுறாங்க, ஆனா சமாதானமா இருக்கும்போது உலகப் போக்குகள பின்பத்துறாங்க. சபைகள் விருந்துக்கு மேல விருந்தா நடத்துது. ஒருத்தரும் சத்தியத்தக் குறித்து ஐக்கியப்பட்டு தனிப்பட்ட சாட்சிய பகிர்றது இல்ல, ஆனா யார் அதிக கிருபய, பெரிய ஆசீர்வாதங்கள பெறுராங்க என்பதில் மட்டுந்தான் போட்டிப் போடுறாங்க. மிகப்பெரிய பேரழிவுகள் வந்துக்கிட்டிருக்கிறப்போ தங்கள ஒரு மேகத்தின் மேல வந்து எடுத்துக்க கர்த்தர் வரலங்கறத பாக்கிறப்போ, பலருடய விசுவாசமும் அன்பும் தணிஞ்சி போகுது. அவங்க தேவன குறசொல்லி நியாயந்தீர்க்க ஆரம்பிக்கிறாங்க. சிலர் அவர மறுதலிச்சி அவருக்கு துரோகம் செஞ்சிருக்காங்க. இந்த உண்மைங்க நமக்கு பாவங்கள் மன்னிக்கப்படுறதும், ரட்சிப்பைக் கிருபையால் பெறுறதும் ஜனங்க நல்லமுறயில நடந்துக்கிறத காட்டலாம், ஆனா அவங்க பாவத்தில இருந்து ஒட்டுமொத்தமா தப்பிச்சிட்டாங்கன்னும், தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டாம்னும், மேலும் அவங்க குறிப்பா சுத்திகரிக்கப்பட்டு ராஜ்யத்துக்கு தகுதியானவங்க ஆயிட்டாங்கன்னும் அர்த்தமில்ல. அது விருப்ப சிந்தனதான். ஆகையால இப்போ நாம இந்த உண்மைய ஆராய்ஞ்சி கர்த்தராகிய இயேசு பிரசங்கம் செய்து அவருடய நாமத்தினால பிசாசுகள துரத்துறவங்க அக்கிரம செய்கைக்காரங்கன்னும், அவங்கள அவருக்கு ஒருபோதும் தெரியாதுன்னும் ஏன் சொன்னாருன்னும் புரிஞ்சிக்கலாம். ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப் பட்டாலும் அவங்க இன்னும் பாவம் செஞ்சிக்கிட்டே இருக்காங்க, மேலும் அவங்க கர்த்தர குற சொல்லி நியாயந்தீர்க்காங்க. கர்த்தர் இன்னும் வரலங்கறதப் பாக்கும்போது அவங்க அதிகமா குறசொல்றாங்க, அவர மறுதலிச்சி அவர காட்டிக் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் சிலர் கர்த்தர் அவங்கள ராஜ்யத்துக்குள்ள இனிமேலும் எடுக்கலேன்னா, கர்த்தரோடு பேசப்போறதா சொல்றாங்க. இந்த ஜனங்க கர்த்தராகிய இயேசுவ எதிர்த்து ஆக்கினத் தீர்ப்புக்கு உள்ளாக்கின பரிசேயர்கள விட கொஞ்சமும் மேலானவங்க இல்ல, அல்லது அத விட மோசமானவங்களா இருக்காங்க. அவங்க எப்படி நடந்துக்கிறாங்கன்னு மத்த ஜனங்களால ரொம்ப தெளிவா பாக்க முடியும், தேவனுடய கண்கள்ல சந்தேகமில்லாம அவங்க பொல்லாப்பு செய்றவங்கதான். தேவன் பரிசுத்தமானவரு, நீதியுள்ளவரு, ஆகையினால தொடர்ந்து பாவம் செய்றவங்கள, தேவன நியாயந்தீர்த்து எதிர்க்கிறவங்களா தேவன் பரலோகத்துக்குள்ள அனுமதிப்பாரா? நிச்சயமா இல்ல. அதனால, விசுவாசத்தினால நீதிமானாக்கப்பட்டு ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சிடலாங்ற ஜனங்களுடய விசுவாசம் கர்த்தருடய வார்த்தைங்களுக்கும் சத்தியத்துக்கும் எதிரா இருக்கிற ஒரு கருத்துதான். அது முற்றிலுமா நம்ம ஆடம்பரமான ஆசைகள்ல இருந்து வரும் மனுஷனுடய கருத்தும் கற்பனையுந்தானே தவிர வேறல்ல.

இந்தக் கட்டத்தில, அதாவது கிருபயினால விசுவாசத்தின் மூலமா ரட்சிக்கப்படுறதுக்கு வேத ஆதாரம் இருக்குன்னு சிலர் சொல்லலாம்: “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8). ஆகையினால அந்த வழியில நம்மால ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியலேன்னா, “ரட்சிக்கப்படுதலுக்கு” உண்மையில அர்த்தம் என்ன? சத்தியத்தின் இந்த ரகசியத்தப் பத்தி சர்வவல்லமையுள்ள தேவன் நமக்குச் சொல்றாரு. அவருடய வார்த்த என்ன சொல்லுதுன்னு நாம பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)”). “மனுஷன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளிலிருந்து எவ்வாறு அவன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. … மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). இதில இருந்து நாம பார்ப்பது என்னன்னா கர்த்தராகிய இயேசு மனுக்குலத்தின் பாவநிவாரணபலியாக சிலுவயில அறயப்பட்டு, நம்மள பாவத்தில இருந்து மீட்டாரு. நம்ம பாவங்க மன்னிக்கப்படுறதுக்காக நாம செய்ய வேண்டியதெல்லாம் கர்த்தரிடத்தில அறிக்கையிட்டு மனந்திரும்புறதுதான். நாம இனி ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு நியாயப்பிரமாணத்தின் படி மரணத்துக்கு உட்படுறதில்ல. நம்மள இனிமேலும் கர்த்தர் பாவிகளா பாக்குறதில்ல, சாத்தான் இனிமேலும் நம்ம மேல குற்றம் சுமத்திறதில்ல. ஜெபத்தில கர்த்தருக்கு முன்னால வர நாம அனுமதிக்கப்படுறோம் அவர் அளிக்கிற சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அவருடைய திரளான கிருபையோடு அனுபவிக்கிறோம். “ரட்சிக்கப்படுதல்னா” இங்க அர்த்தம் இதுதான். விசுவாசத்துனால ரட்சிக்கப்படுதல்ங்கறதுக்கு, பாவத்தில இருந்து ரட்சிக்கப்பட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ ஆக்கினைத் தீர்ப்புக்கு உள்ளாகிறதில்லங்கறது மட்டுந்தான் அர்த்தம். அது ஜனங்க கற்பன செய்ற மாதிரி ஒரு தடவ ரட்சிக்கப்பட்டா, அவங்க எப்போதுமே ரட்சிக்கப்பட்டவங்களா ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க தகுதிபெற்றவங்களா இருப்பாங்கன்ற மாதிரி இல்ல. “ரட்சிக்கப்படுதல்ங்கறத” பவுல் விவரிச்சதா வேதாகமம் குறிப்பிடுது, ஆனா கர்த்தராகிய இயேசுவோ அல்லது பரிசுத்த ஆவியானவரோ அதப்பத்தி ஒருபோதும் சொல்லல. வேதாகமத்தில பதிவு செய்யப்பட்டுள்ள மனுஷங்க சொன்னவைகள நாம ஆதாரமா பயன்படுத்த முடியாது, கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள மட்டுமே பயன்படுத்தணும். சிலர் கேக்கலாம் கர்த்தர் நம்ம பாவங்கள மன்னிச்சிட்டதால, தேவன் நம்ம இனிமேலும் பாவிகளா பாக்குறதில்ல, நம்ம நீதிமான்கள்னு அழைச்சிருக்காரு, ஆகவே நாம ஏன் ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்பட முடியாது? தேவன் நம்ம நீதிமான்கள்னு அழைச்சது உண்மதான், ஆனா நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாலேயே நாம ராஜ்யத்துக்குத் தகுதி உள்ளவங்கன்னும், அல்லது நாம மன்னிக்கப்பட்டதனால, எந்த வகயான பாவத்த செஞ்ச்சாலும் நாம பரிசுத்தவான்கள்னும் அவரு சொல்லல. நாம புரிஞ்சிக்க வேன்ண்டியது என்னன்னா, தேவனுடைய மனநில பரிசுத்தமானதும் நீதியானதுமாகும், தொடர்ந்து பாவம் செய்ற ஒருத்தன அவர் பரிசுத்தவான்னு ஒருபோதும் சொல்ல மாட்டாரு, அல்லது இன்னும் பாவியா இருக்கிற ஒருத்தன பாவமில்லாதவன்னும் சொல்ல மாட்டாரு. பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒரு விசுவாசி கூட தேவன எதிர்த்து தூஷணம் சொன்னா ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்படலாம். வேதம் சொல்றபடியே, “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்(எபிரெயர் 10:26). கத்தராகிய இயேசுவ நியாயந்தீர்த்து, ஆக்கினைக்குள்ளா தீர்த்து, அவர எதிர்த்ததால பரிசேயர்கள் அவரால சபிக்கப்பட்டாங்க. இது உண்ம இல்லயா? எந்த குற்றத்தயும் தேவனுடய மனநில சகிக்காதுங்கறது எல்லா விசுவாசிங்களுக்கும் தெரியும், மற்றும் கர்த்தராகிய இயேசு கூறினாரு, “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை(மத்தேயு 12:31-32). பாவங்கள் மன்னிக்கப்படுவது உண்மயில தேவனுடய கிருபயே, ஆனா மன்னிக்கப்பட்ட பிறகு தேவனுடய மனநிலைக்கு எதிரா ஜனங்க தொடர்ந்து குற்றம் செஞ்சா, அவங்க சபிக்கப்பட்டு தேவனால தண்டிக்கப்படலாம். மீண்டும் நாம தேவன சிலுவயில அறஞ்சா விளைவு கடுமையா இருக்கும். ஆனா தேவன் அன்பானவரு, இரக்கமுள்ளவரு, ஆகையினால அவரு நம்மள பாவத்தில இருந்தும் தீமையில இருந்தும் ரட்சிக்க விரும்புறாரு, அதனால நாம பரிசுத்தமாகிறோம். அதனாலதான் தம்முடய மீட்பின் பணிய முடிச்ச பிறகு திரும்பவும் வருவேன்னு கர்த்தராகிய இயேசு வாக்குத்தத்தம் பண்ணினாரு. அவர் ஏன் திரும்ப வருவாரு? முழுசா மனுக்குலத்த பாவத்தில இருந்தும் சாத்தானின் வல்லமயில இருந்தும் ரட்சிப்பதனால, நாம தேவன நோக்கித் திரும்பி அவரால ஆதாயப்படுத்தப்படுறதுக்காக. கர்த்தருடைய வருகய வரவேற்கிற ஒரு விசுவாசிக்கு மட்டுந்தான் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஏதோ ஒரு நம்பிக்க இருக்குது. இந்தக் கட்டத்தில சிலர் ஆச்சரியப்படலாம், நம்ம பாவங்கள்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதால, நாம எப்படி உண்மயிலேயே பாவத்தில இருந்து தப்பி பரிசுத்தமாயி ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்? இது நம்மள முக்கிய கருத்துக்குக் கொண்டு வருது. கர்த்தராகிய இயேசுவுடைய மன்னிப்ப ஏத்துக்கிறது மட்டும் போதாது. நாம கர்த்தருடய வருகய வரவேத்து அவருடய கிரியயின் அடுத்த படிநிலய ஏத்துக்கிட்டாத்தான் பாவத்தில இருந்து தப்பிக்கவும், முழுசா தேவனால ரட்சிக்கப்படவும், இந்த வகயில ராஜ்யத்துக்கு தகுதியாவும் மாற முடியும். கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் சொன்னது போல, “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22, 27). மேலும் “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). இத நாம கவனமா சிந்திச்சிப் பார்த்தா, மனுஷ குமாரனா கடைசி நாட்கள்ல கர்த்தராகிய இயேசு திரும்பிவந்து சத்தியங்கள வெளிப்படுத்தி, நியாயத்தீர்ப்புக் கிரியய செஞ்சி, எல்லா சத்தியங்களுக்குள்ளாவும் நம்மள வழிநடத்திறதால, நாம பாவத்தில இருந்தும் சாத்தானின் வல்லமைகள்ல இருந்தும் முழுசா விடுதலையாயி முழு ரட்சிப்ப அடய முடியும்னு நாம பாக்கலாம். ஆகையினால கடைசி நாட்களின் தேவனுடைய நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிட்டு, நம்முடய சீர்கேட்டில இருந்து சுத்திகரிக்கப்படுறதுதான் பரலோக ராஜ்யத்துக்குள்ள போறதுக்கு ஒரே வழி. சர்வவல்லமையுள்ள தேவனுடைய இன்னும் ஒரு சில பத்திகள நாம பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் எல்லாத்தையும் தெளிவாக்கலையா? கிருபயின் காலத்தில கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய செஞ்சாரு, அது மனுஷனுடய பாவங்கள மன்னிச்சி அவற்றில இருந்து நம்ம மீட்கறதுக்குதான்—அது உண்ம. ஆனா ஜனங்களுடய பாவ சுபாவத்துக்கு தீர்வு காண முடியல நாம தொடர்ந்து தேவன எதுக்குறோம், அதனால அத முழுசா ரட்சிப்படஞ்சதா சொல்ல முடியாது. கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவன் வந்து, பல சத்தியங்கள வெளிப்படுத்தி, கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணிய அஸ்திபாரமா கொண்டு தேவனுடய வீட்டில இருந்து ஆரம்பிச்சி நியாயத்தீர்ப்புக் கிரியய செய்திக்கிட்டிருக்காரு. முழுசா மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்கவும் நம்மள தேவனுடய ராஜ்யத்துக்குள்ள கொண்டு செல்லவும் அவர் வந்திருக்காரு. தேவனுடய கடைசி நாட்களின் நியாய்த்தீர்ப்பு கிரிய மனுஷன ரட்சிக்கும் கிரியயின் மிக முக்கியமானதும் அடிப்படயானதுமா இருக்கு, மேலும் நம்மள சுத்திகரிக்கவும் முழுசா ரட்சிக்கவும் இருக்கும் ஒரே வழியா இருக்கு. இது ஒரு பொன்னான வாய்ப்பு, நாம பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஒரே வாய்ப்பு. நாம என்ன சொல்ல முடியும்னா தேவனுடய வீட்ல இருந்து ஆரம்பிக்கும் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியதான் விசுவாசிகள எடுத்துக்கொள்ளப்படும் கிரிய. தேவனுடய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலந்தான் நம்முடய சீர்கேடு சுத்திகரிக்கப்படும், மேலும் பேரழிவுகளில் இருந்து நாம பாதுகாக்கப்படுவதோடு தேவனுடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்போம். இதுதான் உண்மயிலேயே எடுத்துக்கொள்ளப்படுதல். நாம இந்த கிரியயில தொடரலனா, நாம எவ்வளவு நாளா விசுவாசிச்சாலும், எவ்வளவு துன்பம் அடஞ்சாலும் கிரயம் கொடுத்தாலும், எல்லாம் வீண்தான். அது பாதியில விடுறது, நம்முடைய முந்திய முயற்சி எல்லாம் வீணாப் போகும். நாம பேரழிவுக்குள்ள விழுந்து, அழுதுபுலம்பி பற்கள கடிப்போம். தேவன் இன்னும் தமக்கெதிரா கலகம் பண்ணும் ஒருத்தன தம்முடய ராஜ்யத்துக்குள்ள ஒருபோதும் கொண்டுவர மாட்டாரு. அது அவருடய நீதியான மனநிலயால தீர்மானிக்கப்படுது.

சிலர் கேக்கலாம் மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்கும் இந்த நியாயத்தீர்ப்புக் கிரியய சர்வவல்லமையுள்ள தேவன் எப்படிச் செய்றாருன்னு. அதப் பத்தி அவரு என்ன சொல்றாருங்கறதப் பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவன் லட்சக்கணக்கான வார்த்தைகள் மூலம், நம்முடய சீர்கேட்ட சுத்திகரிக்கவும் நம்முடய ரட்சிப்புக்கும் தேவயான எல்லா சத்தியங்களயும் சொல்லியிருக்காரு. அவர் நியாயந்தீர்த்து நம்முடய பாவம், தேவனுக்கு விரோதமான சாத்தானின் சுபாவம், நம்முடய சீர்கேடான மனநிலைகளின் எல்லா அம்சங்களயும் வெளிப்படுத்துறாரு, மேலும் அவரு நம்முடய ஆழமான, மிகவும் மறைவா இருக்கிற, வெறுக்கத்தக்க நோக்கங்களயும் எண்ணங்களயும் வெளிப்படுத்துறாரு. தேவனுடய வார்த்தைகள எவ்வளவு அதிகமா வாசிக்கிறோமோ அவ்வளவு அதிகமா அந்த நியாயத்தீர்ப்ப அனுபவிக்கிறோம், மேலும் சாத்தான் நம்மள நம்பமுடியாத வகயில ஆழமா சீர்கெடுத்திருக்கிறான்னும், நாம எவ்வளவு மூர்க்கமாவும் மாறுபடுகிறவர்களாவும் இருக்கோம்னும் பாக்கலாம். நாம ரொம்ப வஞ்சகமாவும், சுயநலமாவும், பேராசையுடனும் இருக்கோம், எல்லாத்திலேயும் சாத்தானின் தத்துவங்களோடும் விதிகளோடும் வாழறோம், நம்முடய சொந்த நலங்கள மட்டுமே பாதுக்காக்கிறோம். சபயில நம் விசுவாசம், பணியும் கூட பிரதிபலன்களுக்கும் ராஜ்யத்துள்ள நுழையவும் மட்டுமே இருக்கு. நமக்கு மனசாட்சியும் பகுத்தறிவும் இல்ல, ஆனா முழுசா சாத்தானின் சாயலோடவே ஜீவிக்கிறோம். தேவனுடய நியாயத்தீர்ப்பு, சிட்சை மூலம், எந்தக் குற்றங்களயும் சகித்துக்கொள்ளாத அவருடைய நீதிய நம்மால கடைசியில பாக்க முடியும். தேவன் உண்மையில நம்முடய இருதயங்களுக்குள்ளயும் மனசுக்குள்ளயும் பாக்குறாரு, நாம அத சொல்லலன்னா கூட, நாம என்ன சிந்திக்கிறோம், நம்ம இருதயங்களின் ஆழத்துக்குள்ள இருக்கிற சீர்கேடு எல்லாத்தயும் தேவன் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவாரு. எங்கயும் மறைக்க முடியாம, நாம ரொம்ம வெட்கமடையுறோம், மேலும் தேவனுக்கு பயப்படுற பயம் நமக்கு அதிகரிக்குது. நம்முடய இருதயத்தில் இருக்கிறதப் பத்தி நாம ஜெபிக்கலாம், நம்முடைய தவறான சிந்தனைகளயும் எண்ணங்களயும் பத்தி நேர்மயா வெளிப்படுத்தலாம், ஒரு மனசாட்சியயும் பகுத்தறிவயும் பெறலாம். நாம ஒரு பொய்ய சொல்லிட்டா நேரடியா அத வெளிப்படுத்தி, சீர்செய்யலாம். இந்த வகயில தேவனுடய வார்த்தைகள அனுபவிக்கும்போது, நம்முடைய சீர்கெட்ட மனநிலைகள் படிப்படியா சுத்திகரிக்கப்பட்டு மாற்றப்படுது, மேலும் நாம மனுஷ சாயல்ல வாழ முடியும். சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு மூலம், மனுஷன ரட்சிக்கும் தேவனுடைய கிரிய எவ்வளவு நடைமுறையானதுன்னு நாம் ஆழமா உணரலாம். இது இல்லாம, நம்மால ஒருபோதும் நம்முடைய உண்மையான சீர்கேட்ட பாக்க முடியாது, மேலும் நாம ஒருபோதும் உண்மையா மனந்திரும்பவோ மாறவோ மாட்டோம். நம்முடய சொந்த கடின உழைப்பு மற்றும் சுய கட்டுப்பாட்டால தீமையில இருந்து தப்பிக்க முடியாதுங்கறத நம்மால பாக்க முடியும், ஆனா நாம தேவனால நியாயந்தீர்க்கப்படணும், சிட்சிக்கப்படணும், சோதிக்கப்படணுங்கிறது கட்டாயமானது. மேலும் நாம கிளைநறுக்கப்படணும், கையாளப்படணும் ஒழுங்குபடுத்தப்படணும். நம்முடய ஜீவிய மனநிலைகள் உண்மையா மாறவும் நாம தேவனுக்கு உண்மயா கீழ்ப்படிந்து பயப்படவும் அதுதான் ஒரே வழி. ஆக நாம நம்ம விசுவாசத்தில கர்த்தராகிய இயேசுவின் மீட்ப மட்டுமே வச்சிருந்தா, நம்முடய பாவங்கள் மன்னிக்கப்படும் நாம விசுவாசத்தால நீதிமான்கள் ஆக்கப்படுவோம் ஆனா ராஜ்யத்துக்கு தகுதியத்தவங்களா இருப்போம். நாம் இன்னும் கர்த்தருடய வருகய வரவேத்து சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கணும் அதனால சீர்கேட்ட கைவிட்டு நம்முடைய பாவ சுபாவத்த முழுசா தீர்க்க முடியும். அதனால, நியாயத்தீர்ப்புக் கிரியய செய்யும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் மறுபடியும் வந்துள்ள கர்த்தராகிய இயேசு. மனுக்குலத்த முழுசா ரட்சிக்க தனிப்பட்ட முறையில கிரிய செய்ய கீழே வந்திருக்கிற அவர்தான் ரட்சகர். எல்லா மதப் பிரிவுகளில இருந்தும் விசுவாசிங்க தேவனுடய சத்தத்தக் கேட்டு சர்வவல்லமையுள்ள தேவன் ஏத்துக்கிறாங்க. அவங்கதான் புத்தியுள்ள கன்னிகைகள், அவங்க ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்தில கலந்துக்கிறாங்க. ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் நிராகரிக்கிறவங்க புத்தியில்லாத கன்னிகைகளாகி அழுதுகொண்டே பேரழிவுகளில விழுவாங்க. இப்போ நாம பாக்கணும் ஏன் மத உலகம் கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மேல கீழே வர்றத பாக்கல. அவங்க வலுக்கட்டாயமா எழுத்துபூர்வமான வேதத்தப் பிடிச்சி பிடிவாதமா தொங்கிக்கிட்டிருக்காங்க, அவங்களுடய சொந்த எண்ணங்களின் அடிப்படையில கர்த்தர் மேகத்துல வந்து அவங்கள எடுத்துகொள்றதில உறுதியாயிருக்காங்க. ஆனா உண்மையா கர்த்தர் கிரிய செய்ய ரகசியமா வந்திட்டார். சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்கிற மிக அதிகமான சத்தியங்கள அவங்க பின்பற்ற மறுக்கிறாங்க. அவங்க கேக்குறாங்க ஆனா கவனிக்கல, பாக்குறாங்க புரிஞ்சிக்கல. அவங்க குருட்டுத்தனமா எதிர்த்து சர்வவல்லமையுள்ள தேவன் கண்டனம் செய்றாங்க. ரட்சகராகிய இயேசு ஒரு மேகத்தின் மேல கீழே வருவாருன்னு அவங்க வானத்த உத்துப் பாத்து காத்திருக்காங்க. இது அவங்களுக்குப் பேரழிவ கொண்டு வரும். யார குத்தம் சொல்றது?

இன்னைக்கு, அவரது கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையால சர்வவல்லமையுள்ள தேவன் ஜெயங்கொள்ளும் ஒரு குழுவ நிறைவாக்கியிருக்காரு. பேரழிவுகள் தொடங்கிருச்சி, தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்க சர்வவல்லமையுள்ள தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷத்த பரப்புறதல மும்முரமா ஈடுபட்டிருக்காங்க, தேவனின் தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சி கொடுத்துக்கிட்டிருக்காங்க. இன்னும் அதிக அதிகமாக ஜனங்க மெய்யான வழிய ஆராய்றாங்க, ஏத்துக்கிறாங்க, அதிக அதிகமான நாடுகள்ல சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டு வருது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் உலகம் முழுதும் பரப்பப்பட்டு சாட்சி அளிக்கப்படுது. சத்தியத்துக்கும் தேவனுடைய தோற்றத்துக்கும் தாகமா இருக்கிறவங்க அவருடைய சிங்காசனத்துக்கு முன்னாக ஒருவர் பின் ஒருவரா வராங்க. இதத் தடுக்க முடியாது! இது இந்த வேத தீர்க்கதரிசனத்த பூர்த்திசெய்யுது: “கடைசி நாட்களில் யேகோவாவின் வீடாகிய மலையானது மலைகளின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டு குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வரும்(ஏசாயா 2:2). ஆனா சர்வவல்லமையுள்ள தேவன எதிர்க்கும் மத உலகத்தின் அந்திக்கிறிஸ்துவின் அந்த வல்லமைகள், மேலும் அவங்களால தவறா வழிநடத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுற பெயரளவிலான விசுவாசிங்க ஏற்கெனவே பேரழிவுகளுக்கு பலியாகி எடுத்துக்கொள்ளப்படும் தங்கள் வாய்ப்ப இழக்குறாங்க. அவங்க அழுது தங்கள் பற்கள கடிக்கிறாங்க. இது உண்மயிலேயே ஒரு சோகந்தான். இன்னைக்கு முடிக்கிறதுக்கு முன்னாடி நாம் தேவனுடய வார்த்தைகளின் வாசிப்பு வீடியோவப் பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

மதத் தலைவர்களைப் பின்பற்றுவது தேவனைப் பின்பற்றுவதா?

2,000 ஆண்டுகளுக்கு முன்பு, நம் இரட்சகர் கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியைச் செய்ய வந்தாரு, யூத நம்பிக்கையுள்ளவங்களான பிரதான ஆசாரியர்கள்,...

கடைசி நாட்களில் தேவன் ஏன் ஆவிவடிவத்தில் வராமல் மனுஷரூபத்தில் வருகிறார்?

இரட்சகரான, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ள தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சத்தியங்கள வெளிப்படுத்தியதில் இருந்து அநேக மக்கள்...

தமிழ் பைபிள் பிரசங்கம்: நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன—கர்த்தர் திரும்பி வரும்போது நம்மை நேரடியாகத் தமது ராஜ்யத்துக்குள் கொண்டுசெல்வாரா?

இந்த தமிழ் பைபிள் பிரசங்கக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள். பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கான சரியான வழியை அது உங்களுக்குச் சொல்லும்.