கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை மீட்டுவிட்டார், ஆனாலும் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரும்போது நியாயத்தீர்ப்பு பணியை அவர் ஏன் செய்ய வேண்டும்?

டிசம்பர் 14, 2021

2,000 வருடங்களுக்கு முன்பு, மனித குலத்தைப் பாவங்கள்ல இருந்து மீட்பதற்காக கர்த்தராகிய இயேசு மனுஷ ரூபத்துல சிலுவைல அறையப்பட்டார், பாவத்துக்கான பலியா செயல்பட்டு, அவரோட மீட்பு பணியை நிறைவேற்றினார். அவர் கடைசி நாட்கள்ல திரும்பி வருவதா உறுதியளித்தார், அதுனால, விசுவாசிகள் எல்லாரும் கர்த்தரோட வருகையை எதிர்பார்த்து காத்துகிட்டிருக்காங்க, கர்த்தர விசுவசிக்கரதால, அவங்களோட பாவங்கள் எல்லாமே மன்னிக்கப்பட்டதாவும், அவர் அவங்கள பாவிகளா நினைக்கறதில்லைனும் நினைச்சுகிட்டிருக்காங்க. அவங்க முழுசா தயாரா இருக்கறதாவும், மேல கர்த்தரோட ராஜ்யத்துக்கு அவங்க எடுத்துக்கொள்ளப்பட கர்த்தரோட இரண்டாம் வருகைக்காக காத்திருந்தா போதும்னும் அவங்க நினைச்சுகிட்டிருக்காங்க. அதனால தான் ஜனங்கள் எப்போதும் வானத்தையே உத்துபாத்துகிட்டிருக்காங்க, அவர் திடீர்னு ஒரு மேகத்து மேல தோன்றி, அவங்க எல்லாத்தையும் அவர சந்திக்கறதுக்காக மேல பரலோகத்துக்குள்ள எடுத்துக்குவாருனு அந்த நாளுக்காக காத்துகிட்டிருக்காங்க. ஆனா அவங்க ரொம்பவும் அதிர்ச்சி அடையும் வகையில, பேரழிவுகள் தொடங்குறத அவங்க பாத்துகிட்டிருகாங்க, ஆனா கர்த்தர அவங்க இன்னும் வரவேற்கல. உண்மைல என்ன நடக்குதுனு யாருக்கும் தெரியல. கர்த்தர் ஒரு மேகத்து மேல வருவத அவங்க பாக்கலைனாலும், சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷ ரூபத்துல திரும்பி வந்துட்டதா கிழக்கத்திய மின்னல் தொடர்ந்து சாட்சி சொல்லுறத அவங்க பாத்தாங்க. அவர் சத்தியங்கள வெளிப்படுத்தி, தேவனின் சபையில தொடங்கி நியாயத்தீர்ப்பு பணிய செஞ்சுகிட்டிருக்கார். சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றுதலும் கிரியையும் ஒட்டுமொத்த ஆன்மீக உலகையும் அதிர வச்சு, ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திச்சு. மனுவுருவான தேவனின் நியாயத்தீர்ப்பு கிரியை, ஜனங்களின் கருத்துகளுக்கும் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதா இருக்குது. பலர் என்ன கேட்குறாங்கனா: கர்த்தராகிய இயேசு அவரோட மிகப்பெரிய மீட்பு பணிய ஏற்கனவே நிறைவு செஞ்சுட்டார், தேவன் நம்மள நீதிமான்னும் சொல்லிட்டார், அப்புறம் ஏன் அவர் கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பு பணியைச் செய்யணும்? அது சாத்தியமில்லனு அவங்க நினைக்கிறாங்க. மதம் சார்ந்த சமூகம் சர்வவல்லமையுள்ள தேவனை எதுக்குறாங்க கண்டனமும் செய்றாங்க, அவரோட பணிய ஆழமா பார்க்க மறுக்குறாங்க, கர்த்தர் ஒரு மேகத்தின் மேலே தோன்றி அவங்கள அவரோட ராஜ்யத்திற்குள்ள எடுத்துச்செல்வார்னு எல்லோரும் ஆர்வமா காத்துகிட்டிருக்காங்க, பேரழிவுகள்ல இருந்து தப்பிக்கலாம்னு நம்புறாங்க. ஆனா, தேவனுடைய பணி பரந்ததாவும் வலிமையானதாவும் இருக்கிறதால, யாராலும் அத தடுத்து நிறுத்த முடியாது. சர்வவல்லமையுள்ள தேவன் ஜெயங்கொள்பவர்களின் ஒரு குழுவை உருவாக்கினார், பேரழிவுகள் தொடங்கிடுச்சு, அதே நேரத்துல, மதம் சார்ந்த உலகம் பேரழிவுக்குள்ள மூழ்குது, அவங்க அழுதுகிட்டே பற்களை கடிக்குறாங்க. பேரழிவுகளுக்கு முன்னால அவங்க மேலே எடுத்துக்கொள்ளப்படாத காரணத்துனால, பேரழிவின்போது அல்லது அதற்கு அப்புறம் அது நடக்கும்னு அவங்க நம்புறாங்க. பேரழிவுகளுக்கு முன்னால அவங்க ஏன் கர்த்தரை வரவேற்கல? அவங்க என்ன தப்பு செஞ்சாங்க? கர்த்தராகிய இயேசு அவரோட சத்தியத்தை மீறி, பேரழிவுகளுக்கு முன்னாலயே விசுவாசிகளை அவரோட ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ள தவறி, அவர்களை முழுசா ஏமாத்திட்டாரா? அல்லது, வேத தீர்க்கதரிசனங்களை ஜனங்கள் தவறா புரிஞ்சு வச்சிருக்காங்களா, கர்த்தர் ஒரு மேகத்தின் மேலே வருவாருங்கற அவங்க கருத்துகளையே நம்பி, தேவனின் குரலை கேட்க மறுக்கறாங்க, அதுனால அவங்க கர்த்தரை வரவேற்க தவறி பேரழிவுக்கு பலியாகுறாங்க? பேரழிவுகளுக்கு முன்னால கர்த்தர் ஏன் ஒரு மேகத்து மேல வந்து விசுவாசிகளை மேலே எடுத்துசெல்லலேனு எல்லோரும் இப்போ குழப்பத்துல இருக்காங்க. இன்னைக்கு, மனுஷகுமாரனாக கடைசி நாட்களில் மனுவுருவான தேவனின் நியாயத்தீர்ப்பு கிரியைய பத்திய என்னோட தனிப்பட்ட புரிதல நான் பகிர்ந்துக்குறேன்.

வேதத்த பத்தி நல்லா தெரிஞ்சவங்க, பெரும்பாலான வேத தீர்க்கதரிசனங்கள் இரண்டு விஷயங்கள முன்னறிவிப்பதா புரிஞ்சுக்குறாங்க: கர்த்தர் திரும்பி வருவார், கடைசி நாட்களில் அவர் நியாயத்தீர்ப்ப மேற்கொள்வார். இந்த இரண்டு விஷயங்களும் ஒரே விஷயம் தான், அது, கடைசி நாட்கள்ல தேவன் அவருடைய நியாயத்தீர்ப்பு கிரியைய செய்றதுக்கு மாம்சத்தில வருவார் என்பதாம். சிலர் கண்டிப்பா கேட்பாங்க இதை சொல்றதுக்கு வேத ஆதாரம் எதாவது இருக்கானு. கண்டிப்பா ஆதாரம் இருக்கு. இத பத்திய 200 அல்லது அதுக்கும் மேற்பட்ட வேத தீர்க்கதரிசனங்கள் இருக்கு. ஒரு உதாரணத்த பாப்போம், பழைய ஏற்பாட்டுல இருக்கற மாதிரி: “அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்(ஏசாயா 2:4). “அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்(சங்கீதம் 96:13). இது புதிய ஏற்பாட்டிலும் சொல்லப்படுது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). கர்த்தராகிய இயேசுவும், கடைசி நாட்களில் தான் திரும்பி வந்து நியாயத்தீர்ப்பு கிரியைய மேற்கொள்ளுறதா தனிப்பட்ட முறையில் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்காரு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:27). வெளிப்பாட்டு தீர்க்கதரிசனங்கள்: “மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது(வெளிப்படுத்தல் 14:7). இந்த தீர்க்கதரிசனங்கள் ரொம்ப தெளிவா, கர்த்தர் மனுஷகுமாரனாதிரும்பி ப செய்வார்னு சொல்லி இருக்கு. இது பத்தி சந்தேகமே இல்லை. கிருபையின் காலத்துல கர்த்தராகிய இயேசு தெளிவா தீர்க்கதரிசனம் வழங்கியிருப்பத நாம பாக்கலாம், அதாவது, அவருடைய நியாயத்தீர்ப்பு கிரியைக்காக அவர் கடைசி நாட்கள்ல மனுஷகுமாரனா திரும்பி வருவார். வெளிப்பாடுகள் தெளிவா சொல்லியிருக்க தீர்க்கதரிசனம் என்னனா, “அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது.” இந்த தீர்க்கதரிசனங்கள், கடைசி நாட்கள்ல கர்த்தர் மனுஷகுமாரனா மனுஷ ரூபம் பெற்று, நியாயத்தீர்ப்பு கிரியைய செய்யுறதுக்கு தானே நமக்கிடையே வர்றார்னு காட்டுது. இது ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே தேவனால தெளிவா திட்டமிடப்பட்டிருக்கு, இத ஒருத்தராலும் மறுக்க முடியாது. நியாயத்தீர்ப்புக் கிரியைக்காக சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியங்கள வெளிப்படுத்தி இருக்காரு, அவரு மிக அதிகமான வார்த்தைகளப் பேசி ஜெயங்கொள்றவங்களின் ஒரு குழுவ ஏற்படுத்தி இருக்காரு. இந்த தீர்க்கதரிசனங்கள் முழுசா நிறவேறிடிச்சிங்கிறத இது காட்டுது. நாம இப்ப பொதுவான மத நம்பிக்கய பாப்போம் அதாவது கர்த்தர் தம்முடைய மீட்பின் பணிய முடிச்சிட்டாரு, அதனால அவரு கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றது சாத்தியமில்ல. இதுக்கு வேதாகமத்துல ஏதாவது ஆதாரம் இருக்கா? கர்த்தராகிய இயேசு இதச் சொன்னாரா? இல்லவே இல்ல. இப்படிப்பட்ட கருத்துக்கள் மனுஷ எண்ணங்களும் கற்பனைகளுமே தவிர வேறொண்ணுமில்ல—அதெல்லாம் விருப்ப சிந்தனைங்கதான். அதெல்லாம் வேதாகமத்துல இருக்கிற தீர்க்கதரிசனங்களுக்கு முழுசா மாறா இருக்கு, தேவனுடய வார்த்தைங்க ஒண்ணும் அத ஆதரிக்கல. இப்படிச் சிந்திக்கிறது முழுசும் முட்டாள்தனமானது! வேதாகமத்துல இருக்கிற கர்த்தருடய வார்த்தைகளயும் தீர்க்கதரிசனங்களயும் ஜனங்களால ஏன் ஆர்வமா பின்பத்த முடியல, ஆனா அதற்குப் பதிலா தங்களுடய சொந்தக் கருத்துகளினால தேவனுடய கடைசிநாட்களின் கிரியைய நியாயந்தீர்க்கிறதிலயும் கண்டனம் செய்றதிலயும் ஏன் பிடிவாதமா இருக்காங்க? இது தான்தோன்றித்தனமாவும் முரட்டுத்தனமாவும் இல்லயா? மனுஷகுமாரனின் வருகயப் பத்தியும் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு பத்தியும் வேதாகமத்தில நிறைய தீர்க்கதரிசனங்கள் இருக்கு, ஆகையினால அவங்க கண்முன்னாலேயே இருக்கும் வேதவசனத்த ஜனங்க ஏன் பாக்க மாட்டேங்கறாங்க? வேதாகமம் சொல்ற மாதிரி, “காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே(மத்தேயு 13:14-15). கடைசிநாட்கள்ல தேவன் ஏன் நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாருன்னும், மனுஷகுமாரன் ஏன் கிரிய செய்ய தோன்றுறாருன்னும் ஞானமுள்ளவங்க தேடி ஆராய வேணும். வேதாகம தீர்க்கதரிசனங்கள உண்மையிலேயே புரிஞ்சிக்க நாம இந்தக் கேள்விகளுக்குப் பதிலச் சொல்லணும்.

இப்போ நாம கர்த்தர் ஏன் மனுக்குலத்தை மீட்ட பிறகு நியாயத்தீர்ப்புக் கிரியய செய்ய மறுபடியும் மனுஷரூபமெடுக்கிறாருன்னு பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் இந்த ரகசியத்த ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்காரு. இதப்பத்தி சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் என்ன சொல்லுதுன்னு நாம பாப்போம். “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்கு, இல்லயா? கிருபயின் காலத்தில கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த மீட்டாரு, ஆகையினால கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக்கு ஏன் மறுபடியும் வர்றாரு? இது ஏன்னா கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய மட்டுந்தான் முடிச்சாரு, தேவனின் ரட்சிப்பின் கிரியையில வெறும் பாதியத்தான் முடிச்சாரு. இது மனுஷன பாவத்தில இருந்து மீட்பத நிறைவேற்றிச்சு, ஆகையினால கர்த்தரோடு ஜெபித்து ஐக்கியம் கொள்ளவும், அவருடய கிருபயயும் ஆசீர்வாதத்தயும் அனுபவிக்கவும் தகுதி பெற்றிருக்கோம். நம்முடய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் சமாதானத்தயும் மகிழ்ச்சியையும் நாம அனுபவிக்கிறோம், ஆனா நாம இன்னும் எப்பவும் பாவம் செய்யுறோம், பாவம் செய்றது, பாவத்த அறிக்க இடுறது, மறுபடியும் பாவம் செய்யுறதுங்கற சுழற்சியில மாட்டிக்கிட்டோம். பாவத்தின் கட்டுகள் மற்றும் பிடிகள்ல இருந்து யாராலும் தப்ப முடியாது, ஆனா நாம அதோடு போராடி வாழுறோம். அது வேதனயானது, தப்பிக்க ஒரு வழியும் இல்ல. இது எத காட்டுதுன்னா கர்த்தர் நம்முடய பாவங்கள மன்னிச்சாலும், நம்முடய பாவ சுபாவம் இன்னும் இருக்குது; நம்முடய சீர்கெட்ட மனநில இன்னும் இருக்குது. நாம எந்த நேரமும் தேவனுக்கு எதிரா கலகம் செஞ்சி, எதிர்த்து அவர நியாயந்தீர்க்க வாய்ப்பிருக்கு. இது ஒரு மறுக்க முடியாத உண்ம. ஒருத்தரு எவ்வளவு நாளா விசுவாசியா இருந்தாலும், அவரால பாவத்தில இருந்து தப்பிச்சி பரிசுத்தம் அடையவோ தேவன தரிசிக்க தகுதியடயவோ முடியாது. இது கர்த்தருடய தீர்க்கதரிசனத்த முழுசா நிறவேத்துது: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்(மத்தேயு 7:21-23). மேலும் அது எபிரேயர் 12:14 ல சொல்லுது, “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” தேவனோட சித்தத்த செய்றவங்கதான் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியுங்கறத நாம பாக்க முடியும். ஆனா கர்த்தர் ஏன் பிரசங்கிச்சி தம்முடய நாமத்தால் பிசாசுகள துரத்துறவங்க அக்கிரம செய்கைக்காரங்கன்னு சொன்னாரு? இது பலருக்கும் குழப்பமா இருக்கலாம். இதுக்கு என்ன அர்த்தம்னா தங்களோட விசுவாசத்த அறிக்கையிட்டாலும் அவங்க இன்னும் பாவம் செஞ்சிக்கிட்டிருக்காங்க, உண்மயிலேயே மனந்திரும்பல. எவ்வளவு தூரத்துக்கு அவங்க பிரசங்கிச்சி, கர்த்தருடய நாமத்தினால பிசாசுகள துரத்தி இருந்தாலும், எவ்வளவு அற்புதங்கள செய்திருந்தாலும், அவங்களுக்குக் கர்த்தருடய அங்கீகாரம் இல்ல. கர்த்தருடய கண்களில அந்த மாதிரி ஜனங்க அக்கிரம செய்கைக்காரங்களா இருக்காங்க. அவங்க கர்த்தருடய நாமத்தால செயல்கள செய்யலாம், ஆனா இது கர்த்தருக்கு ஒரு அவமானம், அத அவரு வெறுக்கிறாரு. பாவங்கள் மன்னிக்கப்பட்ட இந்த ஜனங்க ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க தகுதியானவங்களா? நிச்சயமா இல்ல. அவங்க இன்னும் அவங்கள கர்த்தர் வந்து வானத்துக்கு எடுத்திட்டு போகும் நாளப் பத்தி கனவு கண்டிட்டிருக்காங்க. இது ஒரு மனுஷக் கற்பன. தெளிவா, கர்த்தராகிய இயேசு அவரது வருகய தீர்க்கதரிசனமா சொல்றது அவர சந்திக்க ஜனங்கள நேரடியா வானத்துக்கு எடுத்துக்கப்போறதா அர்த்தம் இல்ல, ஆனா அவரு நியாயத்தீர்ப்பு செஞ்சி, ஜனங்கள அவங்களோட பாவ சுபாவத்திலயும் சீர்கேட்டிலயும் இருந்து சுத்திகரிப்பாரு, பாவத்தில இருந்தும் சாத்தானின் வல்லமைகளில இருந்தும் முழுசா நம்மள ரட்சிப்பாரு, ஒரு அழகான சென்று சேருமிடத்துக்கு கொண்டுபோவாரு. கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்பு கிரியையின் அர்த்தம் இதுதான், இப்ப கிருபயின் காலத்தில மீட்பின் பணி நம்மள வெறுமனே பாவத்தில இருந்து மீட்கவேன்னு நம்மால பாக்க முடியுதுங்கறதில நான் உறுதியா இருக்கேன், ஆகவே நம்மோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. இது ரட்சிப்பின் கிரியயில பாதிய முடிச்சிருக்கு, மேலும் கடைசி நாட்கள்ல தேவன் கிரியயின் பெரிய படிநிலயச் செய்றாரு. கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணியின் அஸ்திபாரத்தின் மேல, கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியைக்காக சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷன பாவத்தில இருந்து முழுசா சுத்திகரிச்சி ரட்சிக்கவும், சாத்தானின் வல்லமைகள்ல இருந்து விடுவிக்கவும் சத்தியத்த வெளிப்படுத்துறாரு. இங்க நாம பாக்குறுது என்னன்னா கர்த்தராகிய இயேசுவின் மீட்பு கடைசிநாட்கள்ல தேவனின் நியாயத்தீர்ப்புக்கு முழுசா வழியமைக்குது. இது அடிப்படயான கிரிய. மேலும் சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரிய மனுக்குலத்த ரட்சிக்கும் தேவனுடய நிர்வாகத் திட்டத்தில மிகவும் முக்கியமான படிநில மேலுமது காலத்த முடிவுக்குக் கொண்டு வரும். கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணிய மட்டும் ஏத்துக்கிட்டு சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்புக் கிரியய ஏத்துகாம இருக்கிறதுங்கிறது விசுவாசப் பாதையில் பாதி வழியில நிக்கிற மாதிரி, மேலும் கடைசி படிநிலதான் மிகவும் முக்கியமானது அது நம்முடய விதியயும் பலன்களயும் தீர்மானிக்கும். இந்த படிநிலய எடுக்காம இருக்கிறது பாதிவழியில விட்டுட்டு முந்திய முயற்சிகள எல்லாம் வீணாக்கிறதாயிருக்கும். ஒரு பயணத்தின் கடைசிப் பகுதிதான் பெரும்பாலும் கஷ்டமானதுன்னு எல்லாரும் புரிஞ்சிக்குவாங்கன்னு நினைக்கிறேன். உங்க விசுவாசப் பாதையில இந்த கடைசிக் கட்டந்தான் ரொம்பவும் முக்கியமானது மட்டுமில்லாம உங்க விதியயும் முடிவு பண்ணும். விசுவாசிகளாகிய நமக்கு, தேவனின் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியதான் நம்முடய பலனையும் விதியயும் தீர்மானிக்குது. இத ஜனங்க ஏத்துக்கலேனா அவங்க தேவனால ஒழிக்கப்படுவாங்க; அது உண்மயிலேயே சோகமானது. அதனால நாம உறுதியா இருக்கலாம், ஒருத்தரு எவ்வளவு காலமா விசுவாசியா இருந்தாலும், அவங்க சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கலேனா, தேவன் அவங்கள ஒழிப்பாரு, அவங்க புத்தியில்லாத கன்னிகைகளா பேரழிவுக்குள்ள விழுந்து அழுது தங்களுடய பற்கள கடிப்பாங்க. ஏராளமான முந்தைய அசுவிசுவாசிங்க சர்வவல்லமையுள்ள தேவனுடய கிரியய நேரடியா ஏத்துக்கிட்டு கடைசி நாட்களின் தேவனுடய ரட்சிப்ப அடஞ்சிருக்காங்க. இவங்கதான் அதிர்ஷ்டம் செஞ்சவங்க, இவங்க சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்காம ஒழிக்கப்பட்ட அந்த விசுவாசிங்களுக்கு ஈடுகட்டுறாங்க. விசுவாசிங்களுக்கு அதுதானே மிகப்பெரிய வருத்தத்துக்குரியதா இருக்கும்? இவ்வளவு ஆண்டுகளா கர்த்தருக்காகக் காத்திருந்திட்டு, சர்வவல்லமையுள்ள தேவன் நியாயத்தீர்ப்புக் கிரியய செஞ்சு ஏராளமான சத்தியங்கள வெளிப்படுத்துறத பாத்த பின்னும் அவங்க ஏத்துக்க மறுக்கிறாங்க, பதிலா முட்டாள்தனமா கர்த்தர் ஒரு மேகத்தில வருவாருன்னு காத்திருந்து தேவனுக்குப் போட்டி வைக்கிறாங்க. முடிவா அவங்க எல்லாரும் தங்களுடய ரட்சிப்பின் வாய்ப்ப இழந்து போவாங்க. ஒரு விசுவாசிக்கு அதுதானே ரொம்பவும் வருத்தத்துக்குரிய ஒண்ணு?

சிலர் கேக்கலாம் மனுக்குலத்த முழுசா ரட்சிக்க சர்வவல்லமையுள்ள தேவன் எப்படி நியாயத்தீர்ப்புக் கிரியயும் சுத்திகரித்தலயும் செய்றாரு. இது சம்பந்தப்பட்ட சத்தியங்கள குறிச்சி ஐக்கியப்பட ஏராளமா இருக்கு, ஆகயால இன்னைக்கு மேலோட்டமா பாக்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்க ரொம்ப தெளிவா இருக்கு அதாவது கடைசிநாட்கள்ல அவருடய நியாயத்தீர்ப்புங்கறது முக்கியமா சத்தியத்த வெளிப்படுத்தி மனுக்குலத்தின் சீர்கெட்ட சாராம்சத்த நியாயந்தீர்க்கிறதுதான், நம்மளுடய சீர்கேட்ட வெளிப்படுத்திறதனால நாம சிந்திச்சி நம்மளயே அறிஞ்சி, நம்முடய சொந்த சீர்கேட்ட பாக்கமுடியும். அப்ப நாம வருத்தப்பட்டு, நம்மளயே வெறுத்து, நம்முடய மாம்சத்த வெறுத்து, உண்மயான மனந்திரும்புதல அடைவோம். இந்த நியாயத்தீர்ப்புக் கிரிய ஜனங்களுக்குப் புரியிற மாதிரி ஏதோ சில சத்தியங்கள வெளிப்படுத்துறது மட்டுமல்ல, ஆனா தேவன் சத்தியத்தின் பல அம்சங்கள வெளிப்படுத்துறாரு. இந்த எல்லா சத்தியங்களும் மனுக்குலத்த நியாயந்தீர்த்து, வெளிப்படுத்தி, கிளைநறுக்கி, கையாளுவதோடு, நம்மள சோதிச்சி சுத்திகரிக்குது. குறிப்பா தேவனுடய வார்த்தைங்க மனுஷனின் சீர்கேடான சாராம்சத்த நியாயந்தீர்த்து வெளிப்படுத்துது மனுக்குலத்தின் சாத்தானிய மனநிலைகளயும், நம்முடய சுபாவத்தயும் சாராம்சத்தயும் தெளிவா வெளிப்படுத்துது. இந்த வார்த்தைங்கள படிக்கிறது உறைக்கிற மாதிரி இருக்குது, அதெல்லாம நம்ம இருதயத்துக்குள்ள நேரா போகுது. மனுஷங்கன்னு சொல்லத் தகுதி இல்லாத அளவுக்கு நாம எவ்வளவு ஆழமா சீர்கெட்டிருக்கோம்னு நாம பாக்கிறோம். நமக்கு ஒளிஞ்சிக்கிறதுக்கு இடமில்ல, தேவ கோபத்தில இருந்து தப்ப நாம பூமியின் வெடிப்புக்ளுக்குள்ள போய் ஒளிஞ்சிக்க விரும்புறோம். நம்முடய சொந்த சீர்கேட்ட குறித்த உண்மைய பாக்குறதுக்கு இந்த நியாயத்தீர்ப்பின் மூலம் பிரவேசிக்கிறதுதான் ஒரே வழி, அதுக்கப்புறம் நாம வருத்தத்தால் நிறஞ்சி நாம தேவனுடய ஆசீர்வாதங்களுக்கும், அவருடைய ராஜ்யத்துக்குள்ள கொண்டுபோகப் படுறதுக்கும் தகுதியில்லாதவங்கன்னு அறிஞ்சிக்கிறோம். இவ்வளவு தூரம் சீர்கேடான நமக்கு தேவனப் பாக்க தகுதியில்ல. தேவனுடய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாம நாம நம்மள ஒருபோதும் உண்மயா அறிஞ்சிக்க முடியாது, ஆனா நம்மோட பாவங்கள அறிக்க செஞ்சு சும்மா உதட்டளவிலதான் சேவ செய்வோம், முழுசா நாம சாத்தானிய மனநிலயிலதான் வாழ்றோம்கறத அறிய மாட்டோம். நாம தொடர்ந்து தேவன எதித்து கலகம் செஞ்சிட்டு, பரலோகத்துக்குப் போயிடலாம்னு இன்னும் நினச்சிக்கிட்டிருக்கோம். இது வெட்கக் கேடானது, மாயயானது, சுத்தமா சுய விழிப்புணர்வு இல்லாதது. சர்வவல்லமையுள்ள தேவனின் நியாயத்தீர்ப்பயும் சுத்திகரிப்பயும் அனுபவிக்கிற நமக்கு அவருடய வார்த்தைங்கதான் சத்தியமும், விலைமதிப்பில்லாதவையுங்கிற நேரடியான அறிவு இருக்கு! தேவனால வெளிப்படுத்தப்படுற சத்தியங்கள்தான் நம்முடய சீர்கேட்ட சுத்திகரிச்சி பாவத்தில இருந்து நம்ம ரட்சிக்க முடியும். அவருடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்ப அனுபவிக்கிறதனால மட்டுந்தான் நம்முடய சீர்கேடான மனநில சுத்திகரிக்கப்பட்டு மாற்றம் அடயும், அதனால நாம் தேவனுடய சித்தத்த செய்றவங்களாகி ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க தகுதியாவோம். சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியதான் நமக்கு வழியயும், சத்தியத்தயும், ஜீவனயும் கொண்டு வருது. சர்வவல்லமையுள்ள தேவனின் கிரிய மூலந்தான் நாம சத்தியத்தயும் ஜீவனயும் அடஞ்சி தேவனுக்கு முன்னால ஜீவிக்க முடியும், இதுதான் தேவனிடத்தில இருந்து கிடைக்கும் மாபெரும் ஆசீர்வாதம்!

நம்ம ஐக்கியத்தின் இந்தக் கட்டத்தில நம்மில பலர் மனுக்குலத்த ரட்சிக்கும் தேவனுடய கிரிய நாம நினச்ச மாதிரி சுலபமானது இல்லன்னு புரிஞ்சிக்குவோம்னு நம்புறேன். நம்மள மீட்கிறது, நம்முடய பாவங்கள மன்னிக்கிறது அவ்வளவுதாங்கிறது இல்ல, அவருடய ரட்சிப்பின் கிரிய நம்ம தீமையில இருந்தும் பாவத்தில இருந்தும், சாத்தானின் பிடியில இருந்தும் முழுசா ரட்சிக்கிறதுதான் அதனால் நம்மால தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர ஆராதிக்க முடியும். நியாயத்தீர்ப்புக் கிரியதான் இத அடயும் ஒரே வழி. இப்ப சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்புக் கிரியய செஞ்சிக்கிட்டிருக்காரு. அவருடய இந்தக் கிரிய நிச்சயமா பிருமாண்டமானது, ஒப்பிட முடியாதது! சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைங்க முழு உலகத்தயும் அசச்சி பிரபஞ்சத்தக் குலுக்கிருச்சி. கடைசி நாட்கள்ல தேவனின் மாபெரும் கிரியயின் மேல எல்லாருடய கண்களும் இருக்கு, அது உலகத்த அதிர்ச்சி அடய வச்சிருச்சி. சத்தியத்த நேசிக்கிறவங்க எல்லாரும் கடைசி நாட்களின் தேவனுடய கிரியய ஆராஞ்சு பாக்குறாங்க, சத்தியத்த நேசிக்காதவங்க மட்டுந்தான் கண்ண மூடிக்கிட்டு தேவனுடய கிரியய அலட்சியம் பண்றாங்க. ஆனா தேவனுடய கிரிய ஒருபோதும் மத உலகத்தாலோ அவிசுவாசிகளாலோ பாதிக்கப்படாது. அது முன்னேறிப் போகுது, நிறுத்த முடியாதது. கண்ணிமைக்கும் நேரத்தில பேரழிவுகள் தொடங்கிருச்சி, கடைசிநாட்களின் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரிய உச்சத்தில இருக்கு. அவரப் பின்பத்துறவங்களுக்கு நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில இருந்து ஆரம்பிச்சி, சிலர பரிபூரணப்படுத்தி பலர வெளியேத்துது. மத்தவங்களுக்கு, அது பேரழிவுகள பயன்படுத்தி படிப்படியா தேவன எதிர்க்கும் தீயவர்கள கையாளுது, சாத்தானின் ஆளுகையின் கீழ இருக்கும் இந்த பொல்லாத காலத்த முற்றிலுமா முடிவுக்குக் கொண்டு வருது. அதுக்கப்புறம் நாம ஒரு புதிய காலத்த வரவேத்து அதுக்குள்ள பிரவேசிப்போம், அதில கிறிஸ்துவின் ராஜ்யம் பூமியில உருவாகுது. இன்னும் கர்த்தர் ஒரு மேகத்தின் மேல வருவார்னு ஏங்கிக்கிட்டு இருக்கிறவங்க பேரழிவில சிக்கி அழுது பற்களக் கடிப்பாங்க, வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனம் நிறைவேறும், “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). சர்வவல்லமையுள்ள தேவனும் சொல்லுகிறார், “நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இரட்சகர் திரும்பிவரும்போது அவர் இன்னும் இயேசு என்றே அழைக்கப்படுவாரா?

கடைசி நாட்களில, இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கெனவே உலகத்துக்கு சத்தியத்த வெளிப்படுத்தியும், தோன்றியும் மனுக்குலத்த முழுசா இரட்சிக்க...

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

தமிழ் பிரசங்க குறிப்புகள்: ஒன்றான மெய் தேவன் யார்?

ஒரே உண்மையான தேவனைக் கண்டுபிடிப்பதற்கான வழி இதுதான், தேவனின் சிம்மாசனத்தின் முன் பேரானந்தம் அடைந்து, முழு இரட்சிப்பைப் பெறுங்கள். கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.

சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி முழுசா 30 ஆண்டுகள் ஆயிருச்சி 1991 இல் கிரியை செய்யவும், சத்தியத்த...