சர்வவல்லமையுள்ள தேவன் மீது வைக்கும் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவுக்குச் செய்யும் துரோகமாகுமா?

டிசம்பர் 28, 2021

கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி முழுசா 30 ஆண்டுகள் ஆயிருச்சி 1991 இல் கிரியை செய்யவும், சத்தியத்த வெளிப்படுத்தவும் ஆரம்பிச்சாரு. “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யை அவரு வெளிப்படுத்தியிருக்காரு, அவருடய லட்சக்கணக்கான வார்த்தைகள் எல்லாம் ஆன்லைன்ல இருக்கு, கிழக்குல இருந்து மேற்கா ஒரு பெரிய வெளிச்சம் போல பிரகாசிக்குது, முழு உலகத்தயும் அசைக்குது. சத்தியத்த நேசிக்கும் அனைத்து சபை பிரிவுகள்ள இருக்கும் அநேகர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை, பரிசுத்த ஆவியானவர் சபைகளுடன் பேசுகிறார்ங்கறத பார்த்திருக்காங்க. தேவனுடைய சத்தத்தக் கேட்டு, அவங்க சர்வவல்லமையுள்ள தேவன ஆவலோட ஏத்துக்கிட்டிருக்காங்க. அவங்க தேவனுடய சிங்காசனத்துக்கு முன்பா உயர்த்தப்பட்டு ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துல பங்குபெறுறாங்க, தினமும் தேவனுடைய தற்போதைய வார்த்தைகள புசித்து, குடித்து, ஜீவ தண்ணீரின் வாழ்வாதாரத்த அனுபவிக்குறாங்க. அவங்க இதயங்கள் மேலும் மேலும் பிரகாசிக்கப்பட்டிருக்கு மற்றும் அவங்க பல சத்தியங்கள கத்திருக்காங்க. அவங்களுக்கு தேவனுடய தனிப்பட்ட வழிகாட்டலும் மேய்த்தலும் இருக்கு. அவர்களுடைய சீர்கெட்ட மனநிலைகள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு மாற்றப்படுது அவங்கக்கிட்ட அழகான சாட்சிகள் இருக்கு. அவங்க பேரழிவுகளுக்கு முன்னால முதல் பலனா ஜெயங்கொள்றவங்களா ஆக்கப்பட்டு, தேவனுடய அங்கீகாரத்தயும் ஆசீர்வாதங்களயும் ஆதாயம் செஞ்சிருக்காங்க. இன்னக்கி, சர்வவல்லமையுள்ள தேவனுடைய சபை, ஒரு வசந்தகால மழைக்குப் பின்னால உண்டாகிற முதல் முளைகள போல உலகெங்கும் உள்ள நாடுகள்ல வளந்துகிட்டு இருக்கு, தேவனுடய தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் தங்கள் அனைத்தையும் தேவனுடய ராஜ்ய சுவிசேஷத்த பரப்ப ஊத்துறாங்க, சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்திற்கு சாட்சியாக. எல்லா நாடுகள்ல இருந்தும், எல்லா பிராந்தியங்கள்ல இருந்தும், எல்லா பிரிவுகள்ல இ ருந்தும் அதிகமான மக்கள் தேவனுடய கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிறாங்க. இந்த ராஜ்யத்தின் சுவிசேஷம் நிறுத்தமுடியாத ஆற்றலோடயும் வேகத்தோடயும் பரவி, விரிவடைஞ்சிக்கிட்டு வருது. முற்றிலும் வேதாகம தீர்க்கதரிசனங்கள நிறைவேத்திக்கிட்டிருக்குது: “கடைசி நாட்களில் யேகோவாவின் வீடாகிய மலையானது மலைகளின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டு குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வரும்(ஏசாயா 2:2). “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). இருந்தாலும், அநேக விசுவாசிகள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள வாசித்து, அவைகள் எல்லாம் உண்மங்கிறத ஒத்துக்கிட்டாலும், சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு வழக்கமான நபர் போல் இருப்பதாலும் ஒரு மேகம் மீது வரும் கர்த்தராகிய இயேசுவாக இல்லாததாலும், அவர ஏற்கிற தைரியம் அவங்களுக்கு இல்ல. சிலர் வேதத்தின் எழுத்தியல் பிரகாரமான வார்த்தைகள பிடிச்சிகிறாங்க, பின்வரும் வசனத்த எடுத்துகிட்டு “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8) கர்த்தராகிய இயேசுவின் நாமம் ஒருபோதும் மாறாதுன்னு அர்த்தப்படுத்துறாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் இயேசு என்று அழைக்கப்படல்லன்குறதயும், வேதம் ஒருபோதும் “சர்வவல்லமையுள்ள தேவன்” என்ற பெயரைக் குறிப்பிடலைங்கறதையும் வச்சி, அவங்க அவரை ஏத்துக்க மாட்டாங்க. அவங்க சொல்றாங்க அவங்க அவர ஏத்துக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள மட்டுமே வாசிச்சி, வேதத்த வாசிக்கலன்னா, இயேசுவின் நாமத்தில ஜெபிக்குறத நிறுத்திட்டாங்கன்னா, இது தெளிவா கர்த்தராகிய இயேசுவ காட்டிகுடுக்குறதாகும். தேவன் மீது விசுவாசம் கொண்டு இத்தன வருஷங்களுக்கு பிறகும், அவரது பல கிருபைகள் அனுபவிச்ச பிறகும், அவங்களால அவர காட்டிக்கொடுக்க முடியாது. இது அவங்களுடய நியாயபடுத்தல். சர்வவல்லமையுள்ள தேவன் விசுவாசிக்குறவங்கள, கர்த்தராகிய இயேசுவின் துரோகிகள்ன்னும், விசுவாச துரோகிகள்ன்னும் கண்டனம் செய்றாங்க, இது பலர மெய் வழிய ஆராய்றதிலிருந்து தடுத்துறுக்குது, அவுங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளே சத்தியம்ன்னும், தேவனுடய சத்தம்ன்னும் ஒத்துக்கலாம், ஆனால் அவங்களுக்கு இன்னும் அவர ஏத்துக்கிற தைரியம் இல்ல. விளைவா, அவுங்க தங்க வாழ்க்கையில பேரழிவுகளுக்கு பலியாறாங்க. இது உண்மையில சோகமானது, முட்டாள்தனமானது, அறியாமயானது. இது வேதத்துல வேறு ஏதோ ஒண்ண நிறைவேத்துது: “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்” (நீதிமொழிகள் 10:21). “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்(ஓசியா 4:6). எனவே சர்வவல்லமையுள்ள தேவன் ஏத்துக்கறது உண்மையில் கர்த்தராகிய இயேசுவுக்கு துரோகம் செய்றதா, இல்லையா? இதப்பத்தி கொஞ்சம் ஐக்கியப்படுவோம்.

சர்வவல்லமையுள்ள தேவன் ஏத்துக்குறது கர்த்தருக்கு துரோகம் செய்றதுன்னு பலர் நினைக்கிறாங்க. இந்த பிரச்சினையை அணுக சிறந்த வழிதான் என்ன? அவங்களுடய நாமங்கள் வித்தியாசமானவை என்ற உண்மயின் படி மட்டுமே நம்மால போக முடியாது, அவங்க ஒரே ஆவியா, ஒரே தேவன்தான் கிரிய செய்ராறாங்கறத நாம கண்டறிஞ்சாகணும். நியாயப்பிரமாண காலத்துல, யெகோவா தேவன் கிரிய செஞ்சிகிட்டுருந்தார், கிருபையின் காலத்துல கர்த்தராகிய இயேசு கிரிய செய்தாரு. அங்கே தேவனுடய நாமம் மாறியிருப்பத நம்மால பாக்க முடியும், அவர் இனியும் யேகோவான்னு அழைக்கப்படல, மாறா இயேசுன்னு அழைக்கப்படுறார். ஆனால், கர்த்தராகிய இயேசு யேகோவாவைவிட வித்தியாசமான தேவன்ன்னு உங்களால சொல்ல முடியுமா? கர்த்தராகிய இயேசுவ விசுவாசிப்பது யேகோவா தேவனக் காட்டிக்கொடுப்பதுன்னு சொல்ல முடியுமா? இல்லவே இல்ல. ஆனா யூத மதத்தில உள்ள பெரும்பாலான மக்கள் கர்த்தராகிய இயேசுவ ஏத்துக்க மறுத்துட்டாங்க. ஏத்துக்கிறது யேகோவாவ காட்டிகொடுப்பதாகும்னு சொல்லி, அவங்க அவர சிலுவையிலஅறையக் கூட உதவி செஞ்சாங்க. அது ஏன்? ஏன்னா கர்த்தராகிய இயேசு மாம்சத்துல வந்து கிரிய செய்த யேகோவா தேவனுடைய ஆவின்னு அவுங்க உணரல. அவருடைய நாமம் வேறு, ஆனால் கர்த்தராகிய இயேசுவும் யேகோவாவும் ஒரே ஆவி, ஒரே தேவன். பிலிப்பு கர்த்தராகிய இயேசுவிடம் சொன்னதாக வேதத்துல பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதமான கத இது, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்” (யோவான் 14:8). இயேசு பதில் சொன்னார், “பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்(யோவான் 14:9-10). கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருந்திச்சி. அவரும், யேகோவாவும் ஒரே தேவன் தான், அவருடய ஆவி யேகோவாவின் ஆவி. ஒன்றான மெய் தேவனாகிய யேகோவா தேவனின் சாயல்தான் கர்த்தராகிய இயேசு. மேலும், கர்த்தராகிய இயேசுவ விசுவாசிப்பது யேகோவா தேவனுக்குச் செய்யும் துரோகமாகாது, ஆனா அவருக்குக் கீழ்ப்படிவதாகும். இது தேவனுடய சித்தத்துக்கு ஏத்ததுதான். ஆவியயும், அவருடய கிரியையும் புரியாம, உங்க விசுவாசத்துல நீங்க ஒரு நாமத்தயும், வேதத்தின் எழுத்தியல்படி எழுத்தயும் பற்றிக் கிட்டா, நீங்க வழி விலகி போகலாம், தேவன எதுக்கலாம். அப்ப, நீங்க தேவன காட்டி கொடுக்கும் முனைப்போடு இருக்கலாம், அதனுடய விளைவு நினச்சி பாக்க முடியாது. தேவன் தோன்றி கிரிய செய்தப்ப, யூத மத மக்கள் அவர நிராகரிச்சாங்க. அது யேகோவா தேவன நிராகரிப்பதாகாதா? அவங்க செயல்களின் சாரம் துரோகமாகும், அதனாலதான் இஸ்ரயேலர்கள் தேவனால சபிக்கப்பட்டாங்க. கர்த்தராகிய இயேசு தோன்றி, கிரிய செய்வதுக்கு ரொம்ப நாளக்கி முன்னால, அவரபத்திய வேத தீர்கதரிசனம் இப்படி சொல்லுது, “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்(மத்தேயு 1:23). அவரு வந்தப்போ, அவர் இம்மானுவேல்ன்னு அழைக்கப்படல—அவர் இயேசு ன்னு அழைக்கப்பட்டாரு. யூதாயிசத்த சேந்த பரிசேயர்கள், வேதத்த எழுத்தியல்படி பிடிச்சிக்கிட்டாங்க, தேவனுடய புதிய நாமம் இணையா இல்லாததுனால, அவர மறுதலிக்கவும், ஆக்கினக்குள்ளாதீக்கவும் தங்களால முடிஞ்சத செஞ்சாங்க. கத்தராகிய இயேசுவின் போதனைகள் எவ்வளவு அதிகாரமுடயதா இருந்தாலும், அவர ஏத்துக்க அவுங்க மறுத்துட்டாங்க, கடைசியில, அவர சிலுவயில அறஞ்சி, பெரிய குத்தத்த செஞ்சிட்டாங்க, தேவனால சபிக்கப்பட்டு தண்டிக்க பட்டாங்க. உண்மயிலே இது சிந்திக்ககூடிய ஒரு பாடம்! கர்த்தர வரவேற்பத பொருத்தமட்டுல, வேதத்தின் எழுத்தியல்படி அப்புடியே கடபிடிப்போமா, இல்லனா கர்த்தராகிய இயேசுவின் நாமத்த மட்டுமா? அத செய்றது தேவன எதுக்கவும் ஆக்கினக்குள்ளதீக்கவும் எல்லாத்தயும் ரொம்ப எளிதாக்குதா. இதபத்தி அநேக விசிவாசிகளுக்கு உள்பார்வ இல்ல, எனவே, வேதத்துல உள்ள எழுத்தியல்படி, இயேசு என்கிற நாமத்தயும் இறுக பிடிச்சுக்கிறாங்க, மெய் வழிய ஆராயும் போது, “சர்வவல்லமையுள்ள தேவங்கற நாமத்துக்கு வேத ஆதாரம் இருக்கா?” ன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. “சர்வவல்லமையுள்ள தேவன்கிற நாமம் வேதத்துல இல்லனா, நான் அவர ஏத்துக்க மாட்டேன்.” சர்வவல்லமையுள்ள தேவன்கிற நாமம் வேதத்துல இல்லனா நீங்க அவர ஏத்துக்க மாட்டீங்கனா, கர்த்தராகிய இயேசுவின் நாமம் பழைய ஏற்பாட்டுல இல்ல, அப்படினா ஏன் அவர விசுவாசிக்கிறீங்க? இது முரண்பாடா இல்லயா? அநேக மக்கள் வேதத்த உண்மயா புரிச்சிக்கலன்குறது தெளிவா தெரியுது, ஆனா, வேதத்தின் எழுத்தியல்படியாவும், சட்டதிட்டங்களயும் கண்மூடித்தனமா பிடிச்சிக்குறாங்க. அவுங்க ஜெபிப்பதில்ல, தேவனுடய வார்த்தயிலருந்து சத்தியத்தயோ இல்லனா பரிசுத்த ஆவியின் உறுதிப்படுத்துதலயோ தேடுறதில்ல, மேலும் இது இறுதியில் அவங்கள அழிச்சிடும். சொல்லப்போனா, சர்வவல்லமையுள்ள தேவன்ன்னு நாமம் கொண்ட தேவன் தோன்றி கடைசி நாட்கள்ல, கிரிய செய்றத பத்தி வேதாகம தீர்கதரிசனங்கள் இருக்குது. “புறஜாதியார் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; நீ ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்படுவாய், யேகோவாவின் வாயே அந்த நாமத்தைச் சூட்டும்(ஏசாயா 62:2). “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கி வருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்(வெளிப்படுத்தல் 3:12). “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்(வெளிப்படுத்தல் 1:8). “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்(வெளிப்படுத்தல் 11:17). “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்(வெளிப்படுத்தல் 19:6). வெளிப்படுத்தல் 4:8, 16:7 லயும், இன்னும் அதிகமாவும் நீங்க பாருங்க. கடைசி நாட்கள்ல தேவனுக்கு “சர்வவல்லமயுள்ள” என்கிற, அதாவது சர்வவல்லமையுள்ள தேவன் என்கிற புதிய நாமம் இருக்கும்ன்னு இந்த வேத வாக்கியங்கள் தீர்கதரிசனம் உரைக்குது. கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவன் என்கிற நாமத்தில தேவன் தோன்றி கிரிய செய்வார்ங்கிறத நம்மால பாக்க முடியும், இத தேவன் ரொம்ப காலத்துக்கு முன்னாலே திட்டமிட்டுட்டாரு. சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்ட எல்லாரும் தேவனுடய சத்தத்த கேட்டுருக்காங்க மேலும் சர்வவல்லமையுள்ள தேவன் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவா அங்கிகரிச்சிருக்காங்க. அவுங்க தேவன வரவேத்திருக்காங்க, அவருடய சிங்காசனத்துக்கு முன்னால எடுக்கப்பட்டிருக்காங்க, மேலும் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துல பங்கெடுப்பாங்க. நேர்த்தியான விசுவாசத்த கொண்ட உண்மயான விசுவாசிகள் இருக்கத்தான் செய்றாங்க. இறுதியா, அவுங்க கர்த்தர வரவேற்று, ஆதாயம் செஞ்சிருக்காங்க. கர்த்தர வரவேற்க தவறினவுங்க தங்கள் விசுவாசத்த இழந்து, முடிஞ்சி போவாங்க. அவுங்க கர்த்தர இழந்து போவாங்க. இயேசுவின் நாமத்த பிடிச்சி வச்சிருக்கவுங்க அவர் வரும் போது, கர்த்தருடய சத்தத்த கண்டுபிடிக்க மாட்டாங்க, சர்வவல்லமையுள்ள தேவன், ஆவியான கர்த்தராகிய இயேசுவா தோன்றி கிரிய செய்றத அவுங்க அங்கிகரிக்க மாட்டாங்க. கர்த்தராகிய இயேசுவின் வருகய ஏத்துக்கிடாம, அவர அங்கிகரிக்காம அவுங்க கர்த்தர விசுவாசிக்காங்க. அது தேவன எதுப்பதாகும், அவுங்கதான் கர்த்தராகிய இயேசுவுக்கு உண்மயிலே துரோகம் பண்றாங்க. கர்த்தருக்குத் துரோகம் பண்றதுன்னா என்ன? அதாவது, அவர அறிஞ்சிக்காமலேயே அவர விசுவாசிப்பதாகும்! இப்ப எல்லாம் தெளிவாயிரிச்சி, சரிதானே?

ஏன் கர்த்தருடய நாமம் மாறிக்கிட்டே இருக்கு? ஒவ்வொரு காலத்திலயும் ஏன் அவரு புதிய நாமத்த கொண்டிருக்ககாரு? சத்தியத்தின் ரகசியம் இதுக்குள்ள தான் இருக்கு. இத கொஞ்சம் விளக்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்தைகள பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவது தான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? … ஆகவே, ‘தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல,’ என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் ‘தேவன் மாறாதவர்’ என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).

‘யேகோவா’ என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். ‘இயேசு’ என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். … கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. ‘யேகோவா’ என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் தேவன் என்று அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. ‘இயேசு’ என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

ஒவ்வொரு காலத்திலயும் அவருடய கிரியைக்கு தேவன் பயன்படுத்தும் நாமத்தயும் அவருடய நாமத்த சுற்றி இருக்கும் ரகசியத்தின் சத்தியத்தயும் சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்தைகள் தெளிவா விளக்குது. காலத்தோடு கூடயும், அவர் செய்ற கிரியையோடயும் தேவனுடய நாமம் மாறுது. அவருடய ஒவ்வொரு நாமமும், அந்த காலத்துல அவர் செய்ற கிரியைய பிரதிநிதித்துவப்படுத்துது. அவருடய நாமமும், கிரியையும் மாறுனாலும், அவருடய சாரம் ஒருபோதும் மாறாது—தேவன் எப்பாதும் தேவன் தான். பிரமாணத்தின் காலத்தில அவரு யேகோவாவா கிரிய செஞ்சாரு, பிரமாணத்த கொடுத்தாரு, பூமியில மனுக்குலத்தின் வாழ்க்கைக்கு வழி வகுத்தாரு, பாவம்னா என்னன்னும், யேகோவா தேவன எப்படி ஆராதிக்கணும்ன்னும் மக்களுக்கு கற்பிச்சாரு. கிருபயின் காலத்துல, மனுஷகுமாரனா தேவனுடய ஆவியானவர் மாம்சத்தில வந்தாரு. அவர் சத்தியத்த வெளிப்படுதிதினாரு, இயேசு என்னும் நாமத்தில மீட்பின்பணிய செஞ்சாரு. இறுதியில, அவர் சிலுவயில அறையப்பட்டு, மனுக்குலத்தின் பாவ நிவாரணபலியாகி, நம்ம பாவத்திலருந்து மீட்டாரு. இப்போ, கடைசி நாட்கள்ல, தேவன் மீண்டும் மாம்சமாயிருக்காரு சர்வவல்லமையுள்ள தேவன்குற நாமத்தில கடைசி நாட்களின் நியாயதீர்ப்பின் கிரியைய செஞ்சிக்கிட்டு இருக்காரு, மனுக்குலத்த நியாயந்தீர்கவும், சுத்திகரிக்கவும் சத்தியத்த வெளிப்படுத்திக்கிட்டு இருக்காரு, நம்ம முழுமயா பாவத்துல இருந்தும், சாத்தானின் வல்லமயில இருத்தும் இரட்சிக்கிறாரு, இருண்ட, தீய பழைய உலகத்துக்கு முடிவு கட்டுறாரு. மனிதன அழகான சென்றடையும் இடத்துக்கு வழி நடத்துவாரு. மனுக்குலத்த இரட்சிப்பதுக்கான 6,000 வருட நிர்வாகத் திட்டம் இப்படித்தான் முழுமயா நிறைவேறும். தேவனுடய கிரியயின்உண்ம, யேகோவா, இயேசு, சர்வவல்லமையுள்ள தேவன்குற மூன்று நாமங்கள நமக்கு காண்பிக்குது ஒவ்வொண்ணும், மனுக்குலத்த இரட்சிக்க தேவனுடய கிரியைய பிரதிநிதித்துவப்படுத்துது. வெளிய, தேவனுடய நாமமும், அவருடய கிரியையும் மாறுறதா காட்சியளிக்குது, ஆனா, தேவனுடய சாரம் மாறுவதில்ல. தேவனுடய மனநிலயும், அவரிடம் உள்ளதும், அவர் என்னவா இருக்காரு என்பதும் ஒருக்காலும் மாறாது. ஒரே தேவனா இருந்து, மனுக்குலத்த நடத்துராரு, மீட்கிறாரு, முழுமயா சுத்திகரிக்காரு, இரட்சிக்கிறாரு. யேகோவா தேவனுடய கிரியைய பழைய ஏற்பாட்டுல, நியாயப்பிரமான காலத்துல இருந்து நாம பாக்கும் போது, கிருபயின் காலத்துல, கர்த்தராகிய இயேசுவின் வார்தைகள்லயும், இப்போ, ராஜ்யத்தின் காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்தைகள்ளயும், சத்தியங்கள் முழுமயும் ஒரே ஆவியிலருந்து வருவதயும், அவைகள் அதே ஆவியின் பேச்சாக இருப்பதயும் நம்மால பாக்க முடியும், ஏன்னா, வெவ்வேறு காலங்கள்ல, அவருடய பேச்சுகள் அன்பயும் அவருடய நீதியுள்ள மனநிலயையும் உள்ளடக்கமா கொண்டுருக்கு. தேவன்கிட்ட என்ன இருக்கோ, அவரு என்னவா இருக்காறோ எல்லாம் அவைகளுக்குள்ளதான் இருக்கு. தேவனுடய அன்பு, தேவனுடய மனநில, தேவன்கிட்ட என்ன இருக்கோ, அவரு என்னவா இருக்காறோ எல்லாம், ஒரே தேவனுடய சாரம், உடமை, ஒரே தேவனுடய ஆளுமயா மொத்தமா இருக்கு. கிருபயின் காலத்துல, கர்த்தராகிய இயேசு பேசுவத கேப்பது, யேகோவா தேவன் பேசுவத கேப்பது போல தான். சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்தைகள நாம கவனிக்கும் போது, கர்த்தராகிய இயேசு தனிப்பட்ட முறையில நம்மகிட்ட பேசுறது போல தான், யேகோவா தேவன் நம்மகிட்ட பேசுறாரு. இது தேவனுடய மூணு நிலைகளிலான கிரியையும் ஒரே தேவனால நிறைவேதப்படுதுங்குறத நிருபிக்குது. தேவனுடய நாமங்கள் மாறுது, ஆனா, அவருடய சாரம், அவர்கிட்ட என்ன இருக்கோ, அவர் என்னவா இருக்காறோ, அவர் வெளிப்படுத்தும் நீதியுள்ள மனநில, எந்த மாற்றமும் இல்லாம அது எல்லாம் ஒண்ணாகத்தான் இருக்கு, சர்வவல்லமையுள்ள தேவனுடய இன்றைய எல்லா கிரியைகளும், கர்த்தராகிய இயேசுவின் கிரியைகள தொடருது. இது மீட்பின் பணிங்கற அஸ்திவாரத்தின் மேல செய்யப்படும் கிரியயின் ஒரு கட்டமான இது ஆழமானது மற்றும் உயர்ந்தது—மனுக்குலத்த முழுமயா சுத்திகரிக்கவும், இரட்சிப்பதற்குமான கிரிய. சர்வவல்லமையுள்ள தேவன் ஏராளமான சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு, வேதத்துல உள்ள ரகசியங்கள வெளிப்படுத்துனது மட்டுமல்ல மனுக்குலத்த இரட்சிப்பதற்கான 6,000 வருட நிர்வாகத் திட்டத்தயும், அதாவது, அவருடய நிர்வாக கிரியையில அவருயைய குறிக்கோள், மனிதன இரட்சிக்க அவருடய மூணுநிலைகளிலான கிரியைய அவர் எப்படி பயன்படுத்துறாரு, மாம்சமாகுதலின் ரகசியம், மனுக்குலத்த எப்படி நியாயந்தீர்க்கிறாரு, சுத்திகரிக்கிறாரு, முழுமயா ரட்சிக்கிறாரு எப்படி ஒவ்வொரு வகையான நபருடய முடிவும், சென்று சேரும் இடமும் தீர்மானிக்க படுது, எப்படி கிறிஸ்துவின் ராஐ்யம் பூமியில் நிறைவேறுது என்பது தவிர மேலும் பலவற்ற விளக்கியிருக்காரு. மனிதன் சாத்தானால் சீர்கெட்ட சத்தியத்தையும் தேவன் வெளிப்படுத்துறாரு, மனிதனுடய சாத்தானிய, தேவனுக்கு விரோதமான சுபாவத்தயும் அவர் நியாயந்தீரக்காரு, அம்பலப்படுத்துறாரு. மனுக்குலம் நடைமுறை படுத்த வேண்டிய சத்தியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும், அவர் விளக்குறாரு, சீர் கேட்ட உதறிவிடவும், நம்ம மனநிலய மாத்தவும் நடைமுற வழிய கொடுக்குறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துற சத்தியங்கள் எல்லாம் மனிதன் சுத்திகரிக்க படவும், முழு இரட்சிப்ப அடயவும், கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த நிறவேற்றவும் மனிதனுக்கு தேவப்படுது: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்பின் கிரிய மனுக்குலத்த முழுமயா சுத்திகரிக்குது, இரட்சிக்குது தேவனால முன்குறிக்கப்பட்ட எல்லா மக்களும் இரட்சிக்கப்படவும் நியாயத்தீர்பின் மூலமாவும், சிட்சை மூலமாவும் சுத்தகரிக்கபடவும் அவர் முன்னால கொண்டுவருது. பேரழிவுக்கு முன்னால ஒரு குழுவான ஜெயங்கொள்றவங்கள அவரு ஏற்கனவே ஆயத்தபடுத்திட்டாரு. இப்போ, பெரும் பேரழிவுகள் ஆரம்பிச்சுடிச்சி, தேவன் நல்லவங்களுக்கு பிரதிபலன் கொடுக்கவும், தீயவங்கள தண்டிக்கவும் ஆரம்பிச்சுட்டாரு. தேவன எதுக்குற, சாத்தானால உண்டான எல்லாரும் அழிக்கபடுவாங்க, அதே சமயம், தேவனுடைய நியாயத்தீர்ப்புகளினால சுத்திகரிக்கபட்டவங்க தேவனால பேரழிவுகள் ஊடாகப் பாதுகாக்கபடுவாங்க. இந்த பேரழிவுகளுக்கு பின்பு, பூமியில தேவனுடைய ராஜ்யம் தோன்றும், வெளிப்படுத்துதல்ல இருக்கிற எல்லா தீர்கதரிசனங்களும் நிறைவேறும்: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார்(வெளிப்படுத்தல் 11:15). “அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்(வெளிப்படுத்தல் 19:6). “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன் தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது(வெளிப்படுத்தல் 21:3-4). சர்வவல்லமையுள்ள தேவன் அநேக சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு, பெரிய காரியங்கள சாதிச்சிருக்காரு. அவர் மாம்சத்தில் மனுஷகுமாரனா கிரியை செய்ய தோன்றிய தேவ ஆவி என்பத இது நிருபிக்குது. அவர் இயேசுன்னு அழைக்கபடல, அவர் யூத கர்த்தராகிய இயேசுவின் சாயல்லயும் இல்ல, ஆனா, சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுவுடையது—அவர் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு. சர்வவல்லமையுள்ள தேவன், கர்த்தராகிய இயேசு, யேகோவா எல்லாம் ஒரே தேவன்தான். இத நீங்க நேர்த்தியா புரிஞ்சிகிட்டா, சர்வவல்லமையுள்ள தேவன விசிவாசிப்பது கர்த்தராகிய இயேசுவுக்கு துரோகம் செய்றதுன்னு சொல்ல மாட்டீங்க, ஏன்னா, சர்வவல்லமையுள்ள தேவன் வரவேற்பது கர்த்தர வரவேற்பதும், ஆட்டுக்குட்டியின் அடிச்சுவடுகள பின்பற்றுவதும், தேவனுக்கு முன்பு உயர்த்தபடுவதும் ஆகும்! மத உலகில் அநேகர், இன்னும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்துக்கு பதிலா, வேதத்தினை எழுத்தியல்படி பிடிச்சிக்குறாங்க, மேகத்தின் மேல அவர் வர காத்திருக்காங்க, சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசிகால கிரியைய தேடவும் ஆராயவும் மறுக்குறாங்க. அவர் எவ்வளவு சத்தியங்கள வெளிப்படுத்தியிருந்தாலும், இது தேவனடைய ஆவியிலுருந்து வருதுங்குறதயும், இது தோன்றி கிரியை செய்யும் கர்த்தராகிய இயேசுவின் ஆவி ன்குறதயும் ஒத்துக்கொள்ள மறுக்குறாங்க. சத்தியத்த கொண்டு வர்ற சர்வவல்லமையுள்ள தேவன் அவுங்க ஆக்கினக்குள்ள தீக்கவும், நிராகரிக்கவும் செய்றாங்க. பரிசேயர்கள் செஞ்ச அதே தப்ப இவுங்களும் செய்யலியா? இது கர்த்தராகிய இயேசுவுக்கான அவுங்களுடய பயபக்தின்னு நினைக்றாங்க, ஆனா, கர்த்தர் அவுங்கள தீய செய்கைகாரங்களா ஆக்கினக்குள்ளா தீக்றாரு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்(மத்தேயு 7:22-23). அதனால கர்த்தர் அவங்கள அகற்றிப்போடுவாரு.

நாம முடிக்கிறதுக்கு முன்னால இன்னும் கொஞ்சம் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளப் பாப்போம். “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...

வேதாகம பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு சிலுவையில் “முடிந்தது” என்று சொன்னபோது உண்மையில் அவர் என்ன சொன்னார்?

ஆண்டவர் இயேசு சிலுவையில் கூறிய "முடிந்தது" என்பதன் உண்மையான அர்த்தத்தை இன்றைய பைபிள் பிரசங்கம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறது. நீங்கள் வசனத்தை சரியாகப் புரிந்துகொள்ள, படிக்க கிளிக் செய்யவும்.

தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குதுங்கறது மெய்தானா?

இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ல தோன்றி, கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு, மில்லியன்கணக்கான வார்த்தைகள அவர்...