இரட்சகர் திரும்பிவரும்போது அவர் இன்னும் இயேசு என்றே அழைக்கப்படுவாரா?

டிசம்பர் 28, 2021

கடைசி நாட்களில, இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கெனவே உலகத்துக்கு சத்தியத்த வெளிப்படுத்தியும், தோன்றியும் மனுக்குலத்த முழுசா இரட்சிக்க கிரிய செய்றதுக்காக வந்துட்டாரு. “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்ற புத்தகம் உலகத்துக்காக இணையத்துல வந்ததுல இருந்து, எல்லா இடத்துலையும் இருக்கிற ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள சத்தியம்ன்னு பார்த்தாங்க தேவனுடைய குரலக் கேட்டாங்க. அவங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய முகத்தப் பார்த்திருக்கமாட்டாங்க, ஆனா அவருடைய வார்த்தைகள் முழுசா பரிசுத்த ஆவியின் வார்த்தைகள்ன்னு உறுதியா இருக்கிறாங்க, இது தேவன் மனுக்குலத்துடன் பேசுவது, மேலும் வார்த்தை மாம்சத்தில் வெளிப்படுவது. அவங்க கடைசியா மனுஷகுமாரனுடைய தோன்றுதலுக்கும் கிரியைக்கும் சாட்சியா இருந்தாங்க, தேவனுடைய அடிச்சுவடைக் கண்டறிஞ்சாங்க. உற்சாகத்துல அவங்க எல்லாரும் செய்திகளப் பகிர்ந்து கொள்ள விரைஞ்சாங்க, சர்வவல்லமையுள்ள தேவனை சந்தோஷமா ஏத்துக்கிட்டு, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்னாடி வறாங்க. அவங்க அனுதினமும் தேவனுடைய அனுதின வார்த்தைகளப் புசிச்சிக் குடிச்சி, படிக்கும் போது அதிக பிரகாசம் அடையிறாங்க, தேவனுடைய வார்த்தைகளின் நீர்ப்பாய்ச்சுதலையும் மேய்ச்சலையும் அனுபவிக்கிறாங்க. அவங்க பல சத்தியத்தைக் கத்துக்கிட்டு, விசுவாசத்துல வளர்றாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் என்றப் பேரப் பரப்ப விரையிறாங்க, மனிதன இரட்சிக்கவே இரட்சகர் உலகத்துக்கு வந்திருக்கிறார்னு சாட்சி பகருறாங்க. அவங்க விசுவாசத்திலும் பலத்திலும் நிரம்பி வழியிறாங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்ல ஆறுதல் அடையிறாங்க. அவங்க வாழ்க்கையில தங்களோட நோக்கத்திலயும் திசையிலயும் சரியான இலக்கு வச்சிருக்காங்க, மேலும் தேவனுக்காக தங்களால இயன்றத செஞ்சு, தேவனுக்குச் சாட்சி பகருறாங்க. உலகம் முழுக்க நிறைய ஜனங்க சத்திய வழிய ஆராய்ஞ்சு வர்றாங்க. இப்போ எல்லா வகயான பேரழிவுகளும் அதிக அளவுல நடக்கத் தொடங்கிருச்சு, எல்லாரும் சத்திய வழியயும், பரிசுத்த ஆவியின் அடிச்சுவடுகளயும், இரட்சகரின் தோன்றுதல் மற்றும் கிரியையயும் தேட வேண்டிய கட்டாயத்தில இருக்காங்க. இது தவிர்க்க முடியாத போக்கு. உலகத்தில இருக்கிற ஒவ்வொரு நாட்டின் மத சமுதாயங்களில், பலர் சத்திய வழிய ஏத்துக்கிட்டு சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி அனுதினமும் வர்றாங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை பல நாடுகள்ல நிறுவப்பட்டு வருது ஏசாயாவிலுள்ள இந்த வசனத்த முழுமையா நிறைவேத்துது: “கடைசி நாட்களில் யேகோவாவின் வீடாகிய மலையானது மலைகளின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டு குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வரும்(ஏசாயா 2:2). பலர் சத்திய வழிய ஆவலோட ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்கிறப்ப, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியம்ன்னும் அவை அதிகாரமும் வல்லமையும் கொண்டதுன்னும் சிலர் உறுதிப்படுத்துனாங்க, ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண மனுஷனின் தோற்றம் கொண்டவரு, அவர் கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய வடிவில் தோன்றல அல்லது அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டலங்கறதப் பாத்து, அவங்க அதில சிக்கி அவர ஏத்துக்க மறுத்தாங்க. மற்றும் சிலர் சந்தேகப்படாம சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் அனைத்தையும் சத்தியம்ன்னு பார்த்தாங்க, ஆனா அவை வேதாகமத்துல பதிவு செய்யப்படாததால, சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுவாக திரும்பி வந்தாருன்னு அவங்களால உறுதியா நம்ப முடியல. இங்கதான் அவங்க சிக்கிக் கொண்டு, அவர ஏத்துக்கல. இன்னும் சிலர் சர்வவல்லமையுள்ள தேவனுடையவார்த்தைகள் சத்தியம்ன்னும், தேவனிடமிருந்து வந்தவைன்னும் ஒத்துக்கிறாங்க, ஆனா வேதாகமம் சொல்றதப் பார்த்தா “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8), இயேசுங்கற பெயர் ஒருபோதும் மாறாதுன்னு அவங்க நம்புறாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் இயேசுன்னு பெயரிடப்படலன்னு அவங்க நினைக்கிறாங்க மேலும் வேதாகமத்துல சர்வவல்லமையுள்ள தேவன் பெயர் எங்கயும் குறிப்பிடப்படல, அதனால அவர்தான் இரட்கர்ன்னு அவங்க ஏத்துக்கல. கர்த்தராகிய இயேசுவ ஏத்துக்கிறது சர்வவல்லமையுள்ள தேவனுக்கு செய்யும் துரோகமா அவங்க நினைக்கிறாங்க அதனால அவங்க அதில சிக்கிக் கொண்டு, அவர ஏத்துக்கமாட்டாங்க. இந்த மூன்று சூழ்நிலைகளும் ஒரு அடிப்படை பிரச்சனைக்குத் திரும்புது: சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண மனுஷனப் போல தெரிகிறார் அவர் சொல்றது எல்லாம் சத்தியம், மேலும் வல்லமையும் அதிகாரமும் கொண்டது ஆனா அவர் இயேசுன்னு அழைக்கப்படல, அவர் இயேசுவின் ஆவிக்குரிய வடிவமா தோன்றல. அதனால சர்வவல்லமையுள்ள தேவன் தான் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுன்னு அவங்க ஒத்துக்கமாட்டாங்க. இது மனித கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின் அடிப்படையில மட்டுமே புரிஞ்சிக்கக்கூடியது. ஆனா தேவனுடைய தோற்றமும் கிரியையும் மனுஷங்களால புரிஞ்சிக்க முடியாத பெரிய ரகசியங்களக் கொண்டிருக்கு. சத்தியத்தத் தேடாம, தேவனின் வார்த்தைக மற்றும் அவருடைய கிரியையின் சத்தியங்களின்படி விஷயங்களத் தீர்மானிக்காம, ஒருத்தரால சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியாது. கண்மூடித்தனமா வேதாகமத்தின் வசனத்தையும் அவற்றின் கருத்துக்களையும் அப்படியே பற்றிக்கிட்டு, சத்தியங்கள வெளிப்படுத்தும் கிறிஸ்துவை ஏற்க மறுப்பது சிந்திக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இது கர்த்தராகிய இயேசுவின் மீட்ப ஏற்க மறுத்த யூத மதத்தில் உள்ளவங்களப் போன்றது மற்றும் தண்டனைக்குரியது. இந்த வேதனையான பாடம் நீண்ட காலமாக நம் முன்ன இருக்கு. இப்போது இரட்சகர் வந்திட்டார், சத்தியத்தத் தேடத் தவறினாஎன்ன நடக்கும் என்பத நாம் கற்பனை செய்யலாம். சரி, இரட்சகர் திரும்பி வரும்போதும் “இயேசு” என்று அழைக்கப்படுவாரா? இந்த தலைப்பில என்னுடைய சொந்தப் புரிதல கொஞ்சம் பகுந்துக்கிறேன்.

முதல்ல இவர்தான் இறங்கி வந்த இரட்சகர்ன்னு எப்படி உறுதிப்படுத்துவதுன்னு நாம் புரிஞ்சிக்கணும். அவருக்கு கர்த்தராகிய இயேசுன்னு பெயர் இருக்குதா, அவர் கர்த்தராகிய இயேசு போல் இருக்கிறாரான்னு பாக்க முடியாது. முக்கியமான விஷயம் என்னென்னா, அவரால சத்தியத்தை வெளிப்படுத்த முடியுமா மற்றும் தேவனுடைய கிரியையைச் செய்ய முடியுமாங்கிறதுதான், அவரால மனுக்குலத்த சுத்திகரிச்சி இரட்சிக்க முடியுமானா. அவரால சத்தியத்த வெளிப்படுத்தி, தேவனுடைய சத்தத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்த இரட்சிக்கும் கிரியைய செய்ய முடியுற வரை, அவர் எப்படி அழைக்கப்படுறாருன்றது அல்லது எவ்வளவு சாதாரணமா இருக்கிறாருன்றது முக்கியமில்ல. இவர் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுன்னு மாம்சத்தில் உள்ள கடவுள்ன்னு நாம உறுதியா நம்பலாம். அவர் பூமிக்கு வந்த இரட்சகர். நாம அவருடைய பெயர் அல்லது அவரது வெளிப்புற தோற்றத்த வச்சி பாத்தா தவறா போறதுக்கு வாய்ப்பு அதிகம். நியாயப்பிரமாணத்தின் காலத்துல தேவன் யேகோவான்னு அழைக்கப்பட்டதும், கிருபையின் காலத்துல இயேசுன்னு அழைக்கப்பட்டதும் நம்ம எல்லாருக்கும் தெரியும். அவர் இனி யேகோவான்னோ, இயேசுன்னோ அழைக்கப்படப்போறது இல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசுவானவர் யெகோவா தேவனின் மனுஷ ரூபம். அவர் மனுஷகுமாரனா மாம்சத்தில தோன்றிய யெகோவா தேவன், தோன்றி கிரிய செய்ய மனுக்குலத்திடம் வந்தார். கர்த்தராகிய இயேசுவும் யேகோவா தேவனும் ஒரே ஆவியைப் பகிர்ந்து, ஒரே தேவனா இருக்கிறாங்க. கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய மனந்திரும்புதலின் வழியும் ராஜ்யத்தின் இரகசியங்களும், அவரது மீட்பின் பணியுடன், அவர் மாம்சத்தில் தோன்றிய தேவன் என்பதை முழுமையா, ஒரே மெய்யான தேவன் மற்றும் இரட்சகரின் தோற்றம்னு நிரூபிச்சிச்சி. யூத மதத்தில் இருந்தவங்களால அந்த நேரத்தில அதப் பார்க்க முடியல. அவங்கள்ல பலர் கர்த்தராகிய இயேசுவின் வழி வல்லமையும் அதிகாரமும் உடையதுன்னு உணர்ந்திருந்தாலும், அவர் “மேசியான்னு” அழைக்கப்படல, மேலும் அவர் ஒரு சாதாரண நபரப் போல தோற்றமளிச்சாரு, அவங்க அவர மறுத்து குற்றவாளியா தீர்த்தாங்க. கர்த்தராகிய இயேசுவின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அவங்க அதத் தேடவோ, ஆராய்ஞ்சு பாக்கவோ மாட்டாங்க, ஆனால் அவர நிந்தன செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் சிலுவையில அறையப்பட்டார். அவங்க தேவனால் சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க. அவங்க எங்க தவறு செஞ்சாங்க? மனுவுருவெடுத்தல்ன்னா என்னென்னு அவங்களுக்கு தெரியல, மனுவுருவெடுத்த தேவனின் தெய்வீகம் சத்தியத்த வெளிப்படுத்துவதன் மூலம் காட்டப்பட்டதுன்னு அவங்களுக்கு தெரியல, ஆகவே மனுஷகுமாரன் எவ்ளோ சத்தியத்த வெளிப்படுத்தியிருந்தாலும் சரி அல்லது அவரது கிரியை எவ்ளோ பெருசா இருந்தாலும் சரி, அவங்க அவர தேவனா ஒப்புக்கொண்டிருக்க மாட்டாங்க. அவங்க அவர மனுஷனா வரையறுத்தாங்க; அவங்க இத உறுதியா நம்பினாங்க மற்றும் விசுவாசிக்க மறுத்தாங்க. இதன் விளைவா, அவங்க தேவனுடைய இரட்சிப்பத் தவறவிட்டு, தண்டிக்கவும் சபிக்கவும் பட்டாங்க. இது மனிதனோட முட்டாள்தனம் மற்றும் அறியாம இல்லையா? இப்ப மத உலகில் பலர், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் சத்தியம்ன்னும் தேவனிடமிருந்து வருதுன்னும் உணர்ந்தாலும், அவங்க இன்னும் எழுத்துவடிவிலான வேதத்த பற்றிக்கொண்டிருக்கிறாங்க, அவங்களோட எண்ணங்களையும் கற்பனைகளையும் பின்பத்தி, தேவனுக்கு இயேசு என்று பெயரிடப்பட்டுள்ளதுன்னும், அது ஒருபோதும் மாறாதுன்னும், திரும்பி வரும்போது அவர் அப்படித்தான் அழைக்கப்படுவார்ன்னும் வலியுறுத்தினாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் இயேசுன்னு பெயரிடப்படாததால, மேலும் அவர் இயேசுவின் சாயல்ல மேகத்தின் மீது வராததால, இவர்தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுன்னு அவங்க ஏற்க மறுக்குறாங்க. யூத ஜனங்க செய்த அதே தவற இவங்களும் செய்றாங்க இல்லையா? இதன் விளைவா, அவங்க இன்னும் கர்த்தர வரவேற்கல, அதனால அவங்க பெரிய பேரழிவுகள்ல விழுந்து, தங்கள் மார்பில் அடிச்சி, அழுது, பல்லைக் கடிசிச்சிக்குவாங்க. பேரழிவுகளுக்கு முன் கர்த்தர வரவேற்கவும், எடுத்துக்கொள்ளப்படவும் இருந்த அவங்களுடைய விசுவாசம் முழுசா நிறைவேறாமப் போகும். இது வருத்தத்துக்குரியது இல்லையா? இயேசு என்ற தேவனுடைய பெயர் எப்பவும் மாறாதுன்றது உண்மையா? இதை வேதாகமம், தேவனுடைய வார்த்தை ஆதரிக்குதா? உண்மையில, கர்த்தர் ஒரு புதிய பெயருடன் வருவாருன்னு வேதாகமம் நீண்ட காலத்துக்கு முன்பே தீர்க்கதரிசனமா சொல்லிச்சு. ஏசாயா தெளிவா தீர்க்கதரிசனம் உரைக்கிறாரு: “புறஜாதியார் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; நீ ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்படுவாய், யேகோவாவின் வாயே அந்த நாமத்தைச் சூட்டும்(ஏசாயா 62:2). மற்றும் வெளிப்படுத்துதல் கூறுது: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்(வெளிப்படுத்தல் 3:12). இந்த ரெண்டு வசனங்களும் தேவன் ஒரு புதிய பெயரைக் கொண்டிருப்பதாக தெளிவா குறிப்பிடுது. இது ஒரு புதிய பேரு என்பதால, அவருக்கு இதுவர இல்லாத பேரு, கர்த்தர் திரும்பி வரும்போது அவர் இயேசுன்னு அழைக்கப்பட மாட்டார்ங்கறது உறுதி. அப்படின்னா அவருடைய புதிய பெயர் என்ன? அது சர்வவல்லமையுள்ள தேவன். இது வெளிப்படுத்துதலின் தீர்க்கதரிசனத்தோட முழுசா ஒத்துப்போகுது: “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்(வெளிப்படுத்தல் 1:8). “அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்(வெளிப்படுத்தல் 19:6). மற்றும் வெளிப்படுத்துதல் 4:8, 11:17, மற்றும் 16:7 போன்ற பல வசனங்கள்ல, “சர்வவல்லமையுள்ள” ங்கற பேரு குறிப்பிடப்பட்டிருக்கு. தெளிவா, கடைசி நாட்கள்ல கர்த்தர் வரும்போது அவர் சர்வவல்லவர்ன்னு சர்வவல்லமையுள்ள தேவன்னு அழைக்கப்படுவாரு. இதப்பத்தி எந்தச் சந்தேகமும் இல்ல. இயேசு என்ற தேவனின் பெயர் எப்பவும் மாறாது, நம்முடைய கடைசி நாட்களின் இரட்சகர் இயேசுன்னு அழைக்கப்படுவாங்கற இந்த விசுவாசங்கிறது, முழுதும் மனிதக் கருத்தாகும், அது யதார்த்தத்தோடு கொஞ்சமும் ஒத்துப்போறதில்ல.

இந்த நேரத்தில, சிலர் கேக்கலாம் தேவன் ஏன் தனது பேர மாத்தணும். இதற்குப் பின்னால உள்ள அர்த்தம் என்ன? சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்தின் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறாரு. இத நல்லாப் புரிஞ்சிக்க சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளப் பார்ப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவனின் நாமம் மாறுவதில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். பின் ஏன் யேகோவா என்ற நாமம் இயேசு என்றானது? மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, பின் ஏன் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் வந்தார்? தேவனுடைய நாமம் ஏன் மாறியது? இத்தகைய கிரியை வெகு காலத்திற்கு முன்னர் செய்யப்படவில்லையா? இன்று புதிய கிரியைகளை தேவன் செய்யாமலிருக்கிறாரோ? நேற்றைய கிரியையை மாற்ற முடியும், யேகோவாவின் கிரியையில் இருந்து இயேசுவின் கிரியை தொடர முடியும். முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாகப் பிற கிரியைகளால் நடைபெறுமா? யேகோவாவின் நாமம் இயேசு என்று மாற்றப்பட்டால், பின் ஏன் இயேசு என்ற நாமமும் மாற்றப்படக்கூடாது? இவற்றில் ஒன்றும் புதுமையானது அல்ல; மக்கள் மிகவும் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார். அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது. தேவனை இயேசு என்ற நாமத்தினால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று நீ நம்பினால், உனது அறிவு மிகவும் குறைந்தது என்றுதான் பொருள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?”).

ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”).

‘யேகோவா’ என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். ‘இயேசு’ என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். … இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

தேவன் தனது பெயரை மாற்றியதன் முக்கியத்துவத்தை இப்ப பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன். தேவன் எப்பவுமே புதியவர், பழையவர் அல்ல, அவருடைய கிரியை எப்போதும் முன்னோக்கி இருக்குது. காலம் மாறும்போது, அவருடைய கிரியை மாறும்போது அவருடைய பெயரும் மாறிக்கிட்டே இருக்குது. அவரது கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு புதிய காலத்திலும், தேவன் அவர் செஞ்சுகிட்டு இருக்கிற கிரியையையும் அந்தக் காலத்துக்கு அவர் வெளிப்படுத்துற மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்துறதுக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தோடு ஒரு பெயரை எடுத்துக்கிறாரு. இதப் பார்த்தா, நாம தேவனை யேகோவா மற்றும் இயேசுங்ற ரெண்டு பேர்களுக்குள்ள கட்டுப்படுத்தமாட்டோம். நம்ம சொந்த எண்ணங்க மற்றும் கற்பனைகளுக்குள்ள நாம தேவனை கட்டுப்படுத்தமாட்டோம். தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார்ங்கறது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியிருக்குன்னு நமக்கு தெரியும். அவர் முற்றிலும் ஞானமும் சர்வவல்லமையுமுள்ளவர்! எந்த மனித மொழியிலும் இத வெளிப்படுத்த முடியாது, ஒண்ணு அல்லது ரெண்டு பேரு எப்படி இருக்க முடியும்? தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பத எந்தப் பேர்களும் முழுசா குறிக்கல. இதனாலேயே தேவன் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பேர்ர்களப் பெறுறார். நியாயப்பிரமாணத்தின் காலத்தில தேவன் யேகோவான்னு அழைக்கப்பட்டாரு, அந்த பெயரில அவர் நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் வெளியிட்டாரு. அவர் பூமியில் மனுக்குலத்தின் வாழ்க்கையை வழிநடத்தினாரு, பாவம்ன்னா என்னன்றத அவங்க எப்படி வாழனும், யேகோவா தேவனை எப்படி வழிபடனுங்கறத அறிய அனுமதிச்சாரு. யேகோவாங்கறது தேவன் நியாயப்பிரமாணத்தின் காலத்துக்கு வச்ச பேரு, அது அந்தக் காலத்தில அவருடைய கிரியை, அவரது இரக்கத்தின் மனநிலை, மகத்துவம், மற்றும் அவர் அப்போது வெளிப்படுத்திய கடுங்கோபத்தையும் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்திச்சி. நியாயப்பிரமாணத்தின் காலத்தின் முடிவில, ஜனங்க அதிகமதிகமாக சாத்தானால் சீர்கெட்டு, அதிகமதிகமாக பாவம் செஞ்சாங்க. நியாயப்பிரமாணத்த யாராலும் பின்பத்த முடியல. அப்படியே போனா, அவங்க எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் கீழ் ஆக்கிணைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு மரணத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பாங்க. மனிதகுலத்த மீட்க, தேவன்தானே மனுஷகுமாரனாக மாம்சமாகி கிரியை செய்ய, இயேசுன்ற பெயரால மீட்பின் பணியச் செய்றாரு. அவர் கிருபையின் காலத்தை தொடங்கி, நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாரு. கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த மனந்திரும்புதலின் வழிக்குக் கொண்டு வந்து, நம் பாவங்களை மன்னிச்சு, நம்மீது சமாதானமும் மகிழ்ச்சியும், நம்பமுடியாத கிருபையையும் அருளினாரு. இறுதியில், அவர் சிலுவையில் அறையப்பட்டார், முழு மனுக்குலத்தையும் மீட்டார். கிருபையின் காலத்தின் தேவனோட பேரு இயேசு, மேலும் அது அந்த காலத்திற்கான அவரது மீட்பின் பணிய அவரோட அன்பின் இரக்கத்தின் மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்திச்சி. தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு நிலைகளிலிருந்து அவருடைய ஒவ்வொரு பேருக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் இருக்கிறதப் பார்க்கலாம். அவை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு தேவனின் கிரியையையும் மனநிலையையும் குறிக்குது. அதப் பத்தி சிந்திப்போம். கிருபையின் காலத்துல கர்த்தராகிய இயேசுவும் யேகோவான்னு பெயரை வச்சிருந்தாருன்னா, நியாயப்பிரமாணத்தின் காலத்துல தேவனுடைய கிரியை நின்றுபோயிருக்கும். அப்படியானா, சீர்கெட்ட மனுக்குலம் எப்பவுமே மீட்கப்பட்டிருக்காது, மேலும் நாம எல்லாரும் நம்ம பாவங்களுக்காக நியாயப்பிரமாணத்தின் கீழ் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, மரணத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கணும். இன்னைக்கு வரைக்கு இருந்திருக்கமாட்டோம். கடைசி நாட்களிலும் அப்படித்தான்—கர்த்தராகிய இயேசு இயேசுங்கிற பெயருடன் மீண்டும் வந்தா, தேவனுடைய கிரியை மீட்பின் கட்டத்திலயே நிற்கும், மேலும் ஜனங்க கர்த்தராகிய இயேசுவின் மீட்பையும் பாவ மன்னிப்பையும் மட்டுமே பெற முடியும். நம்ம எல்லாருக்குள்ளயும் இருக்கிற பாவ சுபாவத்தை தீர்க்க முடியாது. பாவத்தில் இருந்து விடுதலை பெறுறதுக்கு சுத்திகரித்துக்கப்படுறதுக்கு நமக்கு வேற வழியே இல்ல, நாம் ஒருபோதும் பரலோக ராஜ்யத்துக்கு தகுதியானவர்களா மாற மாட்டோம். கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களில் அவர் வருகையைப் பத்தி பலமுறை தீர்க்கதரிசனம் உரைச்சிருக்காரு, அவர் சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்தச் சுத்திகரிக்கவும், பாவத்திலிருந்து மனுக்குலத்த முழுவதுமா காப்பாத்தி, தேவனுடைய ராஜ்யத்துக்கு நம்மை அழைத்துச் செல்லவும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்வார். கர்த்தராகிய இயேசு சொன்னபடியே, “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). எனவே கடைசி நாட்களில், தேவன் ஒரு புதிய காலத்தையும் அவருடைய புதிய கிரியையையும் தொடங்கும்போது, அவர் உண்மையில் தொடர்ந்து இயேசுன்னு அழைக்கப்படுவாரா? நிச்சயமா இல்லை. கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக கிரியை செய்யவும், ராஜ்யத்தின் காலத்தை தொடங்கவும் கிருபையின் காலத்தை முடிக்கவும் மீண்டும் வந்திருக்கிறாரு. தேவனுடைய வீட்டில் தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யவும், மனுக்குலத்தப் பாவத்திலிருந்தும் சாத்தானின் வல்லமைகளிலிருந்தும் முழுமையா காப்பாத்தவும், ஜெயம் கொள்ளுகிறவர்கள் கூட்டத்தை முழுமையாக்கவும் அவர் சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. அதன் பிறகு, அவர் பொல்லாதவர்களத் தண்டிச்சி, நன்மை செஞ்சவங்களுக்கு வெகுமதிஅளிச்சி, இருண்ட, பொல்லாத பழைய காலத்த அழிச்சி, அதிக பேரழிவுகள உண்டாக்குவாரு, பின்புகிறிஸ்துவின் ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும். இது வெளிப்படுத்துதலின் தீர்க்கதரிசனங்கள முழுமையா நிறைவேத்துது: “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்(வெளிப்படுத்தல் 1:8). “அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்(வெளிப்படுத்தல் 19:6).

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”).

சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் தெள்ளத் தெளிவானது. யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன்ங்கறது எல்லாம் ஒரே உண்மையான தேவனுடைய பேர்கள். நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம், மற்றும் ராஜ்ஜியத்தின் காலத்தில் அவர் வெவ்வேறு பேர்களைக் கொண்டிருக்கிறார். அவருடைய கிரியையும் அவருடைய பெயரும் காலத்துக்கு ஏற்ப மாறினாலும், அவர் வெவ்வேறு வகைகளில் தோன்றினாலும், அவரது சாராம்சம் எப்பவுமே மாறாது, அவரது மனநிலையும், தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பதும் எப்பவுமே மாறாது. அவர் நித்தியமா ஒரே தேவன், ஒரே ஆவியானவர், மனுக்குலத்த வழிநடத்தவும், மீட்கவும், முழுமையா காப்பாத்தவும் கிரியை செய்றார். கடைசி நாட்களில், அவர் சர்வவல்லமையுள்ள தேவனாக மாம்சமாகி, அவர் இயேசுன்னு அழைக்கப்படலன்னாலும் அவர் ஒரு சாதாரண மனுஷனப் போல தெரிந்தாலும், மனுக்குலத்த சுத்திகரிச்சி காப்பாத்தும் அனைத்து சத்தியங்களயும் அவர் வெளிப்படுத்தியிருக்காரு. தேவனுடைய வீட்டில் தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றார். அவரது வார்த்தைகளின் மூலம் அவர் ஜனங்கள நியாயந்தீர்த்து வெளிப்படுத்துறாரு, சாத்தானாலும் நமது சாத்தானிய சுபாவங்களாலும் ஆழமான சீர்கேட்ட வெளிப்படுத்துறாரு, மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட வேண்டிய சத்தியத்தின் அனைத்து அம்சங்களையும் அவர் நமக்குக் காட்டுறாரு. அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளப் புசித்து குடிக்கிறாங்க, அவரது வார்த்தைகளால் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, நடத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, மற்றும் சுத்திகரிக்கப்படுறத ஏத்துக்கிறாங்க, மேலும் அவங்க சீர்கெட்ட மனநிலைகள் படிப்படியாக சுத்திகரிக்கப்பட்டு மாற்றப்படுது. அவங்க படிப்படியாக பொல்லாப்பிலிருந்தும் சாத்தானின் வல்லமைகள்ல இருந்தும் விடுவிக்கப்பட்டு, தேவனால் முழுசா இரட்சிக்கப்படுறாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் பேரழிவுகளுக்கு முன்னே ஜெயங்கொள்பவர்களின் கூட்டத்தப் பரிபூரணப்படுத்தி, தேவனுடைய ஞானத்தையும் சர்வ வல்லமையையும் முழுசாக் காட்டுறாரு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையின் போது, கம்யூனிஸ்ட் கட்சியின் சாத்தானிய வல்லமைகளால் இடைவிடாத கொடூரமான துன்புறுத்தல்களும் சிறைபிடிப்புகளும், அதோடு மத உலகின் அந்திகிறிஸ்து ஆதிக்கங்களின் வெறித்தனமான நிந்தையும் தூஷணமும் இருந்தபோதிலும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவி, உலகம் முழுசா பயணிக்குது. தேவனுடைய பெரிய கிரியை நிறைவு பெறுறத இது காட்டுது, சர்வவல்லமையுள்ள தேவன் சாத்தான முழுசா ஜெயிச்சி எல்லா மகிமையையும் பெறுறார்! பெரும் பேரழிவுகள் ஏற்கனவே தொடங்கிடுச்சி, மத உலகம் சீர்கேடு அடைஞ்சிருச்சி, ஆனா அவங்கள்ல பலரு இன்னும் பிடிவாதமா கர்த்தராகிய இயேசுன்ற பெயரிலேயே தொங்கிக்கிட்டு இருக்கிறாங்க, அவர் மேகத்தின் மீது வருவாருன்னு காத்திட்டு இருக்கிறாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் எவ்வளவுதான் சத்தியத்த வெளிப்படுத்தினாலும், அவருடைய கிரியை எவ்வளவுதான் பெருசா இருந்தாலும் அதை ஒத்துக்கவும், ஏத்துக்கவும் மறுக்கிறாங்க. அவங்க அவரது தோற்றத்தையும் கிரியையையும் வெறித்தனமா நிந்திச்சி எதிர்த்து நிக்கிறாங்க. மேசியான்ற பெயரை பிடிச்சிகிட்ட அந்த பரிசேயர்களிடமிருந்தும், கர்த்தராகிய இயேசுவை வெறித்தனமா எதிர்த்து நிற்கிறவர்களிடமிருந்தும் அவங்க எப்படி வேறுபட்டவங்க? அவங்க எல்லாருந்தான் அடிப்படையில தேவனை சிலுவையில் அறைஞ்சவங்க இல்லயா? அவங்க கர்த்தராகிய இயேசுன்ற பெயரை சும்மா பிடிச்சிட்டு இருக்கிறாங்க, ஆனா சர்வவல்லமையுள்ள தேவனை வெறித்தனமா நிந்திச்சி எதிர்த்து நிக்கிறாங்க. இறுதியில அவங்களுக்காக என்ன காத்திருக்குதுன்னு நினைக்கிறீங்க?

முடிப்பதற்கு முன், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் வீடியோவைப் பார்ப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பரிசேயர்கள் இயேசுவை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், ஆனாலும் ஜீவியத்தின் சத்தியத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவ வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்களால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று எப்படி கூறுகிறீர்கள்? அவர்களால் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் விதத்தை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை மட்டும் பற்றிப்பிடித்துக்கொண்ட தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் அகந்தையுள்ளவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உன் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், உன் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீ மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீ கிறிஸ்து அல்ல. இந்த விசுவாசம் போலியானது மற்றும் கேலிக்குரியது அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகாலப் பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீ எதிர்க்க மாட்டாய் என்று மெய்யாகவே உன்னால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பின்பற்ற இயலுமா? நீ கிறிஸ்துவை எதிர்ப்பாயா என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறாய் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்க்கவும், இயேசுவை நிராகரிக்கவும், அவரை அவதூறு செய்யவும் கூடியவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்யக்கூடியவர்களாவர். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்கக்கூடியவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதைக் குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களைப் பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணமாகவும், பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு வழங்கும் வார்த்தைகளின் அழிவாகவும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுவதுமாக இருக்கும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக உணர மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை உங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளாமல், வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையைக் கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனங்கள், நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை தூஷிப்பார்கள், மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க...

இரட்சகர் வரும்போது மனுக்குலத்த எப்படி இரட்சிப்பாரு?

தமிழில் இயேசுவைப் பற்றிய செய்தி: இரட்சகரின் வருகைக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? நீங்களும் ஒருவரா? இரட்சகர் வரும்போது மனிதனை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குதுங்கறது மெய்தானா?

இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ல தோன்றி, கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு, மில்லியன்கணக்கான வார்த்தைகள அவர்...