தேவன் ஏன் கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்?

ஜனவரி 7, 2023

பெருந்தொற்று இப்போ உலகம் பூராவும் பரவுது, பேரழிவுகள் மோசமாக. பூகம்பங்களையும், பஞ்சங்களையும், யுத்தங்களையும் பாத்திருக்கோம், விசுவாசிங்க எல்லாரும் ரட்சகரான கர்த்தராகிய இயேசுவின் வருகயயும் இந்தப் பேரழிவுகள்லேயிருந்து தப்பி அப்படியே வானத்தில உயர எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தர சந்திக்கிறதயும் ஆவலோடு எதிர்பாக்குறாங்க. ஆனா, இத்தன வருஷங்கள் காத்திருந்த பின்னும், இன்னும் அவங்க ரட்சகரான கர்த்தராகிய இயேசு மேகங்கள் மேல இறங்கி வர்றதப் பார்க்கல. எந்த ஒருவரும் கர்த்தர சந்திக்க வானத்தில உயர்த்தப்படுவதையும் பார்க்கல. இதனால பலருக்கும் ஏமாத்தம்தான். இப்போ மக்களெல்லாருக்கும் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கு அதாவது, கர்த்தராகிய இயேசுவ மேகங்களில் பார்ப்பதற்குப் பதிலா, கிழக்கத்திய மின்னல் சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்யும் சர்வவல்லமையுள்ள தேவனா கர்த்தர் மறுபடியும் வந்துள்ளதுக்கு திரும்பத்திரும்ப சாட்சி அளிக்குது. இந்தச் சாட்சி கவனத்த ஈர்க்குது. இருந்தாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அத்துமீறிய ஒடுக்குமுறை, அவதூறு, அதோட மத உலகத்திலிருக்கிற அந்திக்கிறிஸ்துகளோட தூஷணங்களால, மக்கள் மெய்யான வழியக் கண்டறியும் காரியத்த புறந்தள்ளினாங்க. எதிர்பாராவிதமா, சில வருஷங்கள்லேயே, கீழானவராப் பாக்கப்பட்ட மனுஷகுமாரன் அதிக சத்தியங்கள வெளிப்படுத்தினாரு மக்கள் நிறைய பேர் தேவனோட சத்தத்தக் கேட்டாங்க, சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றத் தயாரானாங்க. இது மத உலகத்த மட்டுமல்ல, அகில உலகத்தயும் அசைச்சிது. மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை மெய்யான ஒளியா கிழக்கிலிருந்து மேற்கு வரை பிரகாசிச்சு உலகத்த ஒளிமயமாக்குது, சத்தியத்த நேசிக்கிறவங்களும், தேவனின் தோன்றுதல மனப்பூர்வமா விரும்புறவங்களும் வெளிச்சத்துக்கு வந்து, தேவனோட குரலக் கேட்டு ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்துல கலந்துக்கிறாங்க. இந்த உண்மைக எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கு. “எப்படிப்பட்டவர் இவர்? இவர் எங்கேயிருந்துவந்தாரு? இத்தன வல்லமயான காரியத்த எப்படி செய்யறாரு?” நிறைய பேர் கேட்டாங்க: “கிழக்கத்திய மின்னல் உண்மையிலேயே தேவனோட கிரியையா? சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைங்க மனுக்குலத்திடம் பேசுற சிருஷ்டிகரோட குரலா இருக்குமோ?” ஆனா அவங்க, “கர்த்தர் வரும்போது அவர் செய்யக்கூடிய முதல் காரியம் விசுவாசிகள ஆகாயத்தில சந்திக்குமாறு உயர எடுத்துக்கறதுதான். அவரு தம்மோட விசுவாசிகள ஒருபோதும் பேரழிவில வீழ்றதுக்கு அனுமதிக்கமாட்டாரு நியாயத்தீர்ப்புக் கிரியய செய்ய பேசவும் மாட்டாரு. அது நடக்காது” அப்படின்னு நினைக்கிறாங்க. இன்னைக்கு, நெறைய பேர் திரைப்படங்க, கீர்த்தனைங்க, மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையோட சாட்சிக் காணொளிகள், எல்லாத்தையும் விட முக்கியமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளுடய வாசிப்புகளயும் பார்த்துக்கிட்டிருக்காங்க. அதில் ஏராளமான உள்ளடக்கம் அடங்கியிருக்கு, கானான்ல வாழ்க்கை உண்மையிலயே ஒரு அற்புதமான அனுபவம். இந்த உண்ம இது பரிசுத்த ஆவியானவரின் கிரியதானே தவிர ஒரு நபரால் இத நிறைவேத்த முடியாதுன்னு ஜனங்கள ஒத்துக்க வைக்குது. தேவனோட தோன்றுதலும் அவரோட கிரியையும் இல்லாம, இப்படிப்பட்ட பெரிய காரியங்கள யாராலயும் சாதிக்க முடியாது. இது கர்த்தரோட விசுவாசிங்க பலர ஆச்சரியப்பட வைக்குது: தேவன் ஏன் கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக் கிரியய செய்யறாரு? நம்மோட பாவங்க நமக்கு மன்னிக்கப்பட்டுருக்கு, தேவன் நம்மள நீதிமான்களா ஆக்கியிருக்காரு. அதனால நியாயத்தீர்ப்பையும் சிட்சையயும் நாம ஏன் அனுபவிக்கணும்? கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பு அவிசுவாசிகள குறிவெச்சே இருக்கணும். அப்படின்னா ஏன் தேவனோட வீட்டில நியாயத்தீர்ப்பு துவங்குது? இங்கே என்ன தான் நடக்குது? இன்னிக்கு இந்தத் தலைப்பு தான் நம்ம ஐக்கியத்துக்கானமையமா இருக்கும்.

ஐக்கியத்த தொடங்கறதுக்கு முன்னாடி, முதல்ல நாம தெளிவா இருக்கணும். கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக் கிரியய செய்ய தேவன் மனுஷகுமாரனா மனுவுரு எடுத்து வர்றதுங்கறது தேவனால வெகுகாலத்துக்கு முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டதா இருந்தது. மக்களோட கருத்துகளோ தடைகளோ இருந்தாலுங்கூட, கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்ப மனித சித்தத்தால மாத்த முடியாது, எந்த ஒரு தேசமோ அதிகாரமோ இதத் தடுக்க முடியாது. அதனால சில பேர் கேக்கலாம், கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியை தொடர்பா வேதாகம ஏதாவது அடிப்பட இருக்கா? நிச்சயமா வேதாகம அடிப்பட இருக்கு. அதுவும் அது ரொம்ப வலுவானது. வேதாகமம் முழுவதும் குறைஞ்ச பட்சமா இருநூறு இடங்கள்ல “நியாயத்தீர்ப்பு” பத்தின குறிப்புக இருக்கு. கர்த்தராகிய இயேசுவும் தனிப்பட்ட முறையில கடைசி நாட்கள்ல மனுவுருவான மனுஷகுமாரனா சத்தியத்த வெளிப்படுத்தவும் நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்யவும் அவரு திரும்பி வர்றத தீர்க்கதரிசனமா சொல்லியிருக்காரு. கர்த்தராகிய இயேசுவோட சில தீர்க்கதரிசனங்கள நாம இப்போ பாக்கலாம். “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். … அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22, 27). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). 1 பேதுரு 4:17 கூட இருக்கு, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” இந்த வார்த்தைகள் நிச்சயமா ரொம்பவே தெளிவா இருக்கு: “நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்,” “நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும்,” மேலும் “அவர் … சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.” கர்த்தர் கடைசி நாட்கள்ல மாம்சமாவாருன்னு நியாயத்தீர்ப்புக்கான கிரியய தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கிச் செய்யவும் வருவாருங்கிறத நாம புரிஞ்சுக்கலாம் மாம்சமாவாருன்னு காட்டுது, இது மறுக்க முடியாதது. இன்னைக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் இவ்ளோ சத்தியங்கள வெளிப்படுத்துறாரு தேவனோட வீட்லயிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியய செய்யறாரு, அது எதுக்குன்னா தேவனோட சிங்காசனத்துக்கு முன்னாடி வர்ற எல்லாரயும்நியாந்தீர்க்கவும், தேவனால தெரிஞ்சுகொள்ளப்பட்ட ஜனங்க எல்லா சத்தியங்களுக்குள்ளயும் பிரவேசிப்பதுக்கு வழிநடத்துறாரு. பேரழிவுக்கு முன்னாடி ஒரு சிறுகூட்ட ஜெயங்கொள்பவங்கள தேவன் உருவாக்கிருக்காரு. இது இந்தத் தீர்க்கதரிசனங்க எல்லாமே முழுமையா நிறைவேறி மீட்கப்பட்டிருக்குங்கறத காட்டுது.

சிலர் கேக்கலாம், “நாம விசுவாசிக, நம்மோட பாவங்க ஏற்கனவே மன்னிக்கப்பட்டுடுச்சு, அப்போ ஏன் இன்னும் தேவனோட நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் கடைசி நாட்கள்ல நாமஏத்துக்கணும்?” சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தியதோட ரகசியத்த வெளிப்படுத்துது. அதனால சர்வவல்லமையுள்ள தேவன் என்ன சொன்னாருன்னு நாம பாக்கலாம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். … மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்ப தெளிவா இருக்கு. கிருபையின் காலங்கள்ல கர்த்தராகிய இயேசு செஞ்சது மீட்பின் கிரியை. நமக்கு கர்த்தரிடம் விசுவாசம் இருந்தா, நம்மோட பாவத்த அறிக்கையிட்டு மனந்திரும்புனா, நம்ம பாவங்க மன்னிக்கப்படுது. நியாயப்பிரமாணத்த மீறியதுக்காக நாம இனி கண்டனம்பண்ணப்பட்டு மரண தண்டன அடையமாட்டோம், கர்த்தரோட அபரிமிதமான கிருபய நாம அனுபவிக்க முடியும். ஆனா, பாவமன்னிப்பு நம்மள பரிசுத்தமாக்குதா? பாவமன்னிப்புங்கறது நாம தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதல அடஞ்சிட்டோம்னு அர்த்தமா? இல்ல, அதுக்கு அந்த அர்த்தமில்ல. நம்ம எல்லாரும் விசுவாசிங்க பகல்ல பாவம் செஞ்சிட்டு அதுக்கப்புறம் ராத்திரியில பாவமன்னிப்பு கேப்பாங்கன்னு பாக்குறோம். இந்த ஒரு சுழற்சியில நாம மாட்டி வாழ்ந்துக்கிட்டிருக்கோம், நம்ம அறியாமலேயே அடிக்கடி பாவங்கள செஞ்சிக்கிட்டிருக்கோம். அப்புறம் கர்த்தர்கிட்ட, “நான்உண்மையாவே கஷ்டப்படுறேன், பாவத்தோட கட்டுப்பாட்டுள இருந்து என்னால ஏன் என்னை விடுவிச்சுக்க முடியல?” அப்படின்னு ஜெபிப்போம். கர்த்தருக்காக இந்த உலகச் சிக்கல்கள்லயிருந்து நம்மளையே நாம விடுவிச்சுக்கணும்ங்கறது எல்லாரோட விருப்பம், நாம கர்த்தரயும் மத்தவங்களயும் நேசிக்க விரும்புறோம், ஆனா, நாம செய்யறது நம்மளயும் அறியாமலயே செய்யறோம். அடிக்கடி பொய்பேசுற பிரச்சினைக்குக்கூட தீர்வு காண நம்மால முடியல. ஏன் இப்படி நடக்குது? ஏன்னா, மக்களுக்கு சீர்கேடான மனநிலைகளும் பாவசுபாவங்களும் இருக்கு, இதுதான் பாவத்துக்கான ஆணிவேர். நாம இந்த ஆணிவேரை ஒழிக்கலேன்னா, நாம எவ்வளோதான் நம்மளக் கட்டுப்படுத்திக்க முயற்சி செஞ்சாலும், நாம அப்பவும் நம்மள அறியாமலேயே பாவம் பண்றோம். சில பேரால கர்த்தருக்காக உண்மையா ஒப்புக்கொடுக்கவும், துன்பப்படவும், விலைக்கிரயம் செலுத்தவும், குறை எதுவும் சொல்லாம இருக்க முடிஞ்சாலும், அவங்க மனசு ஆழங்கள்ல, அவங்களால தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? அவங்க உண்மையிலேயே தேவன நேசிக்கிறாங்களா? பலபேர் இந்த விஷயத்த தெளிவா பாக்கிறதில்ல. ஆசீர்வாதங்கள பெறவும், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கவும், பலன்களப் பெறவும், மக்கள் பல நல்லகாரியங்களச் செய்யலாம், ஆனா, இதுமாதிரி நல்லகாரியங்கள்ல கலந்திருக்குற களங்கங்கள் என்ன? மறைமுக நோக்கங்களால அவை களங்கப்பட்டிருக்குதா? பேரழிவு வரும்போது, நாம உயர எடுத்துக்கப்படாம அதிலதள்ளப்பட்டோம்னா, நாம தேவனுக்கு எதிரா குறை சொல்வோமா? தேவன நிந்தன செஞ்சு அவரை மறுதலிக்கக்கூட செய்வமா? மனுஷனோட கருத்துகளுக்குத் தகுந்த மாதிரி தேவனோட கிரியை இருந்தா, நாம தேவனுக்கு நன்றி சொல்லி அவரப் துதிக்கிறோம், ஒருவேள நம்முடைய கருத்துகளுக்கும் தேவைக்கும் தகுந்த மாதிரி தேவனோட கிரியஇல்லாம இருந்தா, தேவன நாம நியாயந்தீர்த்து கண்டனம்கூட செய்வோமா? தம்மோட பேரச் சொல்லி பிசாசுகள துரத்துறவங்களுக்கு கர்த்தராகிய இயேசு சொல்றாரு, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்(மத்தேயு 7:23). அந்த ஜனங்க கருத்துகள உருவாக்கிக்கிட்டு கர்த்தர எதிர்த்து கண்டனம் செய்வாங்களா? இப்பவும் யூத குலத்து மனுஷ குமாரன் வடிவத்தில கர்த்தராகிய இயேசு, தேவாலயங்கள்ல சத்தியத்தப் வெளிப்படுத்த வந்திருந்தா, மத உலகத்துல இருக்குற எத்தன பேர் கர்த்தர மறுதலிச்சு விட்டுப் போவாங்க? எத்தன பேர் கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்தும் சத்தியங்கள ஏத்துக்குவாங்க? அவர்தான் ஒன்றான உண்மையான தேவன்னு சொல்லுவாங்க? எத்தன பேர் கர்த்தராகிய இயேசுவ தேவனா எண்ணாம மனிதன்னு கண்டனம் செய்வாங்க? இந்த உண்மைகளப் பத்தி சிந்திப்பது பயன் தரும். யூத மதம் சார்ந்த பரிசேயர்கள் பல தலைமுறைகளா தேவன விசுவாசிச்சாங்க, தேவனுக்கு பாவ நிவாரன பலிகள கொடுத்தாங்க. யேகோவா தேவன் கர்த்தராகிய இயேசுவா மனுஷரூபமெடுத்து வந்தப்போ, அவர்தான் யேகோவா தேவனின் தோற்றமா இருந்தார்னு பரிசேயர்களுக்கு ஏன் தெரியல? சத்தியத்த வெளிப்படுத்துன கர்த்தராகிய இயேசுவ அவங்க ஏன் ஆக்கினைக்குள்ளா தீர்த்தாங்க? ஏன் கர்த்தராகிய இயேசு சிலுவையில அறையப்பட்டடாரு? இந்த பிரச்சினைக்கான சாரம்சம் என்ன? பரிசேயர்கள் தேவன தலைமுறை தலைமுறையா விசுவாசிச்சும், அவங்க ஏன் அவர அடையாளம் கண்டுகொள்ளல? அவங்க ஏன் அவரை அப்பவும் எதிர்த்து கண்டனம் செஞ்சாங்க? கடைசி நாட்கள்ல மிக அதிகமான சத்தியத்த வெளிப்படுத்தி கிரியை செய்றதுக்கு தேவன் மாம்சமாகியிருக்கிறார்ங்கிறத நாமேபாத்தோம். அப்படின்னா மத உலகத்திலுள்ள ரொம்ப அதிகமான ஜனங்கள் ஏன் சர்வவல்லமையுள்ள தேவன வெறித்தனமா எதிர்க்கவும், கண்டனம் செய்யவும், தூஷணம் சொல்லவும்கூட செய்றாங்க. கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்து, இன்னும் யூத மனுஷகுமாரனோட உருவத்தக் கொண்டிருந்து, மத உலகத்தில சத்தியத்த வெளிப்படுத்தியிருந்தாருன்னா, அவர் திருச்சபையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டோ, இல்ல குற்றஞ்சாட்டப்பட்டோகூட கொலை செய்யப்பட்டிருந்திருக்க மாட்டாரா? அதுக்கு சாத்தியம் இருக்கு. கர்த்தராகிய இயேசுவப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனும் சத்தியத்த வெளிப்படுத்துறார், இரண்டுபேருமே சாதாரண மனுஷகுமாரங்கதான். மத உலகம் சர்வவல்லமையுள்ள தேவன மிக அதிகமா எதிர்க்குது, மனுஷகுமாரன் ரூபத்திலுள்ள கர்த்தராகிய இயேசுவிடம் அவங்க ரொம்ப வெளிப்படையா இருப்பாங்களா? மத உலகம் இன்னும் ஏன் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுறவங்கள தேவனுக்குப் பதிலா ஒரு நபர விசுவாசிக்கிறவங்களா நியாயந்தீர்க்குது? அவங்க கர்த்தராகிய இயேசுவின் காலத்தில பிறந்திருந்தாங்கன்னா, அவங்க கர்த்தராகிய இயேசுவ பின்பற்றுறவங்கள தேவனுக்குப் பதிலா ஒரு நபர விசுவாசிக்கிறவங்களா நியாயந்தீர்த்திருக்க மாட்டாங்களா? துல்லியமா இந்தப் பிரச்சனையோட சாராம்சம் என்ன? மனுஷங்ககிட்ட சாத்தானிய சுபாவங்கள் இருப்பதனாலயும், சீர்கேடான மனநிலைகள்படி வாழ்றதனாலயும்தான் இது நடக்குது. அதனாலதான் நாம தேவன எதிர்த்துக் கண்டனம் செய்றது கொஞ்சங்கூட விசித்திரமானதாவே இருக்கிறதில்ல. பலர் இத தெளிவா பாக்கிறதில்ல. நம்மோட பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவன் நம்மள குற்றமுள்ளவங்களா பாக்கலன்னா, நாம பரிசுத்தமாகிடுறோம்னு அவங்க நெனைக்கிறாங்க. நம்மோட பாவங்கள் மன்னிக்கப்பட்ட உடனே, நற்கிரியைகள் மூலமா தேவனோட அங்கீகாரத்த நாம பெறலாம்னு அவங்க நெனைக்கிறாங்க. இந்தக் கண்ணோட்டங்கள் ரொம்ப தவறானவை. பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவ எதிர்த்துக் கண்டனம் செய்தாங்கங்கிற உண்மையானது ஜனங்கள் சாத்தானிய சுபாவங்களயும் சீர்கேடான மனநிலைகளயும் கொண்டிருக்காங்கிறத தெளிவா பாக்குறதுக்கு போதுமானதா இருக்கு. அதனால நாம எத்தன வருஷம் தேவனை விசுவாசிச்சாலும், வேதாகமத்த எவ்வளவுதான் புரிஞ்சுக்கிட்டாலும், இல்ல எந்தக் காலத்தில நாம பிறந்திருந்தாலும், நாம எல்லாருமே இன்னும் சத்தியத்த வெறுக்கறோம், தேவன எதிர்க்கறோம், தேவன கண்டனம் செய்யறோம், தேவனுக்கு விரோதமா இருக்கறோம். இந்தக் காரணத்திற்காக மட்டுமே, கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை முக்கியமானதா இருக்கு! நம்மோட சாத்தானிய சுபாவங்களின் நிமித்தமா, மனுஷங்க தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் ஏத்துக்கணும். இந்த நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாம, நாம சீர்கெட்டவங்களாவே இருக்கறதனால, நாம எப்பவுமே பாவம் செஞ்சி தேவன எதிர்ப்போம். நாம ஒருபோதும் தேவனோடு இணக்கமாவோ இல்ல கீழ்ப்படிதலுள்ளவங்களாவோ இருக்க மாட்டோம். நம்மால ஒருபோதும் தேவனோட ராஜ்யத்துல பிரவேசிக்க முடியாது. தேவனோட மனநிலை நீதியானதுங்கறத நாம எல்லாருமே அறிஞ்சு புரிஞ்சுக்கிட்டாலும், சாத்தானால நாம ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்குற பயங்கரமான நிலையயோ, நாம தேவன எந்த அளவுக்கு எதிர்க்க முடியுங்கிறதயோ, இல்ல சத்தியத்த வெளிப்படுத்தக்கூடிய மனுஷகுமாரன நம்மால எவ்வளவு வெறுக்க முடியுங்கறதயோ, அதவாது, நம்மால சத்தியத்த எந்த அளவுக்கு வெறுக்க முடியுங்கறதயோ யாராலயும் பாக்க முடியாது. ஜனங்களால இந்தக் காரியங்கள பாக்கவே முடியாது. அதனால, கடைசி நாட்கள்ல செய்யப்படுற தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியைய பத்திய பல கருத்துகளயும் சந்தேகங்களயும் நாம எப்போதுமே கொண்டிருக்கோம். நமது பாவங்களுக்காக மன்னிக்கப்படுறதே நம்மை பரிசுத்தமாக்குறதா எல்லாரும் நெனைக்கிறாங்க. தேவன் நம்மள பாவிகளா பாக்கலன்னா, நாம பரிசுத்தமா இருக்கறோம். தேவனோட இரட்சிப்பின் கிரியை முழுமையானது, அவர் இனி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்ய வேண்டியதில்ல. கர்த்தராகிய இயேசு திரும்பி வர்றப்போ, அவர் நம்மள பரலோகராஜ்யத்துக்கு கூட்டிட்டுப் போவாரு, நாம பரலோகத்துக்குப் போனதும், தேவனுக்குக் கீழ்படியறதுக்கும் தேவனை என்றென்றைக்கும் ஆராதிக்கிறதுக்கும் நாம உறுதியா இருப்போம். இது அப்பட்டமான முட்டாள்தனமில்லயா? ஜனங்கள் பூமியில தேவன விசுவாசிச்சு, தேவனோட கிருபைய அனுபவிக்கறாங்க, ஆனாலும் அவங்க இன்னும் தேவனை நியாயந்தீர்த்து கண்டனம் செய்றாங்க. அப்படின்னா அவங்களால எப்படி பரலோகத்தில இருக்கிற தேவனுக்கு கீழ்ப்படிஞ்சி ஆராதிக்க முடியும்? அதுக்கு சாத்தியமே இல்ல. தேவனோட வார்த்தைகள் சொல்லுது, “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரெயர் 12:14). இந்த வரி தான் சத்தியமாவும் பரலோகத்தின் சட்டமாவும் இருக்கு! தேவன் ஏன் கடைசி நாட்கள்ல நியாத்தீர்ப்பின் கிரியைய செய்றாருங்கறத நாம இப்போ புரிஞ்சுக்கணும். தேவன் ஜனங்கள முழுசா இரட்சிக்கிறதுக்காகவும், நம்மோட சீர்கெட்ட மனநிலைகள சுத்திகரிச்சு மாற்றுறதுக்காகவும், அதோட பாவத்தில இருந்தும், சாத்தானோட வல்லமையில இருந்தும் நம்ம முற்றிலுமா மீட்கறதுக்காகவும் தேவன் வந்திருக்காது. மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிப்பதற்குத் தேவையான எல்லா சத்தியத்தயும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்கார், தேவனோட வீட்லயிருந்து துவங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுக்கிட்டு இருக்காரு. தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள்ல பல பேர் தேவனோட நியாயத்தீர்ப்பயும் சுத்திகரிப்பயும் அனுபவிச்சிருக்காங்க, இப்போ தங்களோட இருதயங்கள்ல இருந்து தேவனோட நீதியயும் பரிசுத்தத்தயும் துதிக்கறாங்க. ஜனங்கள் சாத்தானால எவ்ளோ ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்காங்கங்கறதயும், துல்லியமா அவங்க செய்யக்கூடிய பாவங்கள் என்னங்கறதயும், அவங்களால தேவன எவ்ளோ எதிர்க்க முடியுதுங்கறதயும் பாத்திருக்காங்க. அவங்க தங்களப் பத்திய உண்மையான புரிதல அடைஞ்சிருக்காங்க, தங்களோட சீர்கேட்டின் அருவருப்ப பாத்திருக்காங்க, அவங்க தேவனோட நியாயத்தீர்ப்ப அனுபவிக்காம, தங்களோட சீர்கெட்ட மனநிலைகள்ல வாழ்ந்தாங்கன்னா, அவங்க தேவனை எதிர்த்து, தேவனுக்கு துரோகம் செய்றாங்கங்கறதயும், பிசாசுகளா வாழ்றாங்கங்கறதயும், அவங்க நரகத்துக்கு அனுப்பப்பட்டு தேவனால தண்டிக்கப்படுவாங்கங்கறதயும், தேவனுக்கு முன்பா வாழ தகுதியற்றவங்கங்கறதயும் அவங்க உணர்றாங்க. அதனால அவங்க ஆழமான வருத்தத்த உணர்றாங்க, தங்களையே வெறுக்கறாங்க, உண்மையான மனந்திரும்புதலயும் மாற்றத்தையும் அடையறாங்க. நாம தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் அனுபவிக்கிறப்ப மட்டுந்தான், தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியைதான் அவரோட மாபெரும் இரட்சிப்புங்கிறதயும், மனுக்குலத்தின் மீதான மாபெரும் அன்புங்கிறதயும் நாம அறிஞ்சுக்குவோம்.

பலருக்கும் கடைசி நாட்கள்ல செய்யப்படற தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியையோட அர்த்தமே புரிவதில்ல, கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய முடிச்சதுக்கப்புறமா, மனுக்குலம் முழுமையா இரட்சிக்கப்பட்டுச்சுன்னும், மனுக்குலத்த இரட்சிக்கிற தேவனுடைய கிரியை முடிக்கப்பட்டிச்சுன்னும் நெனைக்கிறாங்க. ஆனா இது பெரிய தப்பு! சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை கிருபையின் காலத்த முடிச்சிருச்சு. அதே நேரத்தில, அது ராஜ்யத்தின் காலத்த துவக்கிருச்சு. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்போட ஒரு அம்சம் என்னன்னா ஜனங்கள முற்றிலுமா சுத்திகரிச்சு இரட்சிக்கறதாவும், பாவத்திலிருந்தும் சாத்தானோட வல்லமையில இருந்தும் நம்மள விடுவிச்சு, தேவனால முற்றிலுமா ஆதாயப்படுத்தப்படுறதுக்கு நமக்கு உதவுறதாவும் இருக்கு. இன்னொரு அம்சம் என்னன்னா ஒவ்வொரு வகையான ஜனங்களயும் அம்பலப்படுத்தி, அவங்களோட வகைக்கு ஏத்த மாதிரி அவங்கள பிரிச்சு, தேவன எதிர்க்கும் எல்லா பொல்லாத வல்லமைகளயும் அழிச்சு, இந்த அந்தகாரமான பொல்லாத பழைய காலத்த முடிவுக்குக் கொண்டு வர்றதுமா இருக்கு. இதுதான் கடைசி நாட்கள்ல உள்ள தேவனோட நியாயத்தீர்ப்புக் கிரியையோட முக்கியத்துவமா இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனோட இன்னொரு பத்திய நாம வாசிக்கலாம். “யுகத்தை முடித்துவைக்கும் அவரது இறுதிக் கிரியையில், தேவனின் மனநிலை ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு இவற்றில் ஒன்றாக இருக்கிறது, அதில் எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்கவும், அவரை நேர்மையான இருதயத்துடன் நேசிப்பவர்களைப் பரிபூரணமாக்கவும் அவர் அநீதியான அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். இது போன்ற ஒரு மனநிலையால் மட்டுமே யுகத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். கடைசிக் காலம் ஏற்கனவே வந்துவிட்டது. சிருஷ்டிப்பில் உள்ள சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். மனுஷரின் விளைவுகளையும் அவர்களின் இலக்கையும் தேவன் வெளிப்படுத்தும் தருணம் இது. ஜனங்கள் சிட்சைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் உட்படுத்தப்படாவிட்டால், அவர்களின் கீழ்ப்படியாமையையும் அநீதியையும் அம்பலப்படுத்த எந்த வழியும் இருக்காது. ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே அனைத்து சிருஷ்டிப்புகளின் விளைவுகளையும் வெளிப்படுத்த முடியும். மனுஷன் சிட்சிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பளிக்கப்படும்போது மட்டுமே அவனுடைய உண்மையான நிறங்களைக் காட்டுகிறான். தீமை தீமையுடனும், நன்மை நன்மையுடனும் வைக்கப்படுகின்றன, மனுஷர் அனைவரும் அவர்களது வகையின்படி பிரிக்கப்படுவர். ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், எல்லா சிருஷ்டிப்புகளின் விளைவுகளும் வெளிப்படும், இதனால் தீமை தண்டிக்கப்பட்டு, நன்மைக்கு வெகுமதி கிடைக்கப்பெறும், மேலும் எல்லா ஜனங்களும் தேவனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். இந்தக் கிரியைகள் அனைத்தும் நீதியான ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அடையப்பட வேண்டும். ஏனெனில் மனுஷனின் சீர்கேடு உச்சத்தை எட்டியிருக்கிறது மற்றும் அவனது கீழ்ப்படியாமை மிகவும் கடுமையானதாகிவிட்டது, முக்கியமாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு கடைசிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் தேவனின் நீதியான மனநிலையால் மட்டுமே மனுஷனை முழுமையாக மாற்றி, அவனைப் பரிபூரணப்படுத்த முடியும். இந்த மனநிலையால் மட்டுமே தீமையை அம்பலப்படுத்த முடியும், இதனால் அநீதியான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியும். … கடைசிக் காலத்தில், நீதியான நியாயத்தீர்ப்பால் மட்டுமே மனுஷனை அவர்களின் வகைக்கு ஏற்ப பிரித்து, மனுஷனை ஒரு புதிய ராஜ்யத்திற்குக் கொண்டு வர முடியும். இவ்வாறாக, தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் முழு யுகமும் முடிவுக்கு வருகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). கடைசி நாட்கள்ல, தேவன் சத்தியத்தக் கொண்டு நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றார், இது சத்தியத்தயும் தேவனயும் பத்தி எல்லா வகையான ஜனங்களோட மனப்பான்மைகளயும் வெளிப்படுத்துது. சத்தியத்த நேசிச்சு, தேவன் மீதான அன்ப பின்தொடர்றவங்கதான் தேவனோட இரட்சிப்புக்கும் பூரணப்படுத்தலுக்கும் இலக்குகளா இருக்காங்க. அவங்க தேவனோட சத்தத்த கேட்டு, அவரோட சிங்காசனத்துக்கு திரும்பி வந்து, தேவனோட வார்த்தைகள புசிச்சு பானம்பண்ணி தேவனோட நியாயத்தீர்ப்பயும், உபத்திரவங்களயும், புடமிடுதலயும் அனுபவிக்கிறாங்க, இறுதியா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தங்களோட சீர்கேடான மனநிலைகள்ல மாற்றத்த அடையறாங்க, அதுக்கப்புறமா அவங்க தேவனால பரிபூரணப்படுத்தப்பட்டு, ஜெயங்கெள்ளுகிறவங்களா அதாவது முதற் கனிகளா மாறுறாங்க. ஆனா தேவன எதிர்க்கிறவங்க தேவனால கைவிடப்படுறதுக்கும் நீக்கப்படுறதுக்கும் இலக்குகளா இருக்காங்க. அவங்க பிடிவாதமா வேதாகம வசனத்த இறுகப்பிடிச்சுக்கிட்டு இருக்காங்க, மேகங்கள்ல கர்த்தர் வருவாருன்னு வெறுமென காத்துக்கிட்டு இருக்காங்க, அதே நேரத்தில சர்வவல்லமையுள்ள தேவனை முட்டாள்தனமா எதிர்க்கிறாங்க. அதனால அவங்க எடுத்துக்கொள்ளப்படுற வாய்ப்ப இழக்குறாங்க, அவங்க பேரழிவுல விழுந்து அழுவாங்க. ஆசீர்வாதங்கள மட்டுமே தேடி, பேரழிவுகள தவிர்ப்பதற்காக மட்டுமே சர்வவல்லமையுள்ள தேவன விருப்பமில்லாம ஏத்துக்கிற மத்தவங்களும் இருக்காங்க. அவங்க வார்த்தைய மட்டுமே விசுவாசிக்கிறாங்க, அவங்களோட சுபவாங்கள சத்தியத்த வெறுக்கிறதா இருக்கு. அவங்க தேவன விசுவாசிச்சாலும், சத்தியத்த கடைபிடிக்கிறதேயில்ல, தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சையயும் ஏத்துக்கவோ அல்லது அவற்றுக்கு கீழ்ப்படியவோ மறுக்கறாங்க, அவங்களோட சீர்கேடான மனநிலைகள் ஒருபோதும் மாறவே மாறாது. இப்படிப்பட்டவங்க தேவனோட வீட்டுக்குள்ள பதுங்கியிருக்கற அவிசுவாசிகளாவும் பொல்லாப்பு செய்றவங்களாவும் இருக்காங்க, அவங்க எல்லாரும் அம்மபலப்படுத்தப்பட்டு நீக்கப்படுவாங்க. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியையானது ஒவ்வொரு வகையான நபரயும் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்குங்கறத இது காட்டுது. புத்தியுள்ள கன்னிகைகளும் புத்தியில்லாத கன்னிகைகளும், சத்தியத்த நேசிக்கறவங்களும் நேசிக்காதவங்களும், கோதுமையும் களைகளும், வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் வகைகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கு. தேவன் நல்லவங்களுக்கு வெகுமதியயும் பொல்லாதவங்களுக்கு தண்டனையயும் கொடுக்கறாரு, ஒவ்வொரு நபருக்கும் அவரவருடைய கிரியைகளுக்கு ஏற்ப திருப்பிக் கொடுக்கறாரு. இது முழுசா தேவனோட நீதியான மனநிலைய விவரிப்பதோட, வெளிப்படுத்துதலயும் நிறைவேத்துது, “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்(வெளிப்படுத்தல் 22:11). “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது(வெளிப்படுத்தல் 22:12).

சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கனவே பேரழிவுக்கு முன்னதாவே ஒரு கூட்ட ஜெயங்கொள்ளுகிறவர்கள உருவாக்கியிருக்காரு, தேவனோட வீட்டிலிருந்து ஆரம்பிக்கிற நியாயத்தீர்ப்பின் கிரியை மாபெரும் வெற்றிய அடைஞ்சிருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் பூமியிலுள்ள எல்லா தேசத்துக்கும் பரவி, உலகத்த அசச்சிருக்கு, தேவன் சாத்தான முறியடிச்சு மகிமைய அடைஞ்சிருக்காருங்கிறத இது நிரூபிக்குது. இதத் தொடர்ந்து, பேரழிவக் கொண்டுவந்து, எல்லா தேசங்களயும் ஜனங்களயும் நியாயந்தீர்க்க ஆரம்பிப்பாரு. பேரழிவு வர்றதுதான் இந்தப் பொல்லாத காலத்துல தேவனோட நியாத்தீர்ப்பாவும், மனுக்குலத்த இரட்சிக்க உதவுவதாவும். மெய்யான வழிய தேடி ஆராயறதுக்கும், இரட்சகரோட கிரியைய கண்டறியறதுக்கும், சர்வவல்லமையுள்ள தேவன்கிட்ட வந்து, அவரோட இரட்சிப்ப ஏத்துக்கிறதுக்கும் ஜனங்கள கட்டாயப்படுத்துவதற்கே தேவன் பேரழிவ பயன்படுத்துறார். அதே நேரத்தில, பொல்லாத வல்லமைகளயும் தேவன எதிர்க்கிற அக்கிரமக்காரர்களயும் தீர்க்கறதுக்காகவும், சாத்தான் அதிகாரம் கொண்டிருக்கிற இந்தப் பொல்லாத யுகத்த முற்றிலுமா முடிக்கவும் அவர் பேரழிவ பயன்படுத்துறார். கடைசில, தேவனோட நியாயத்தீர்ப்ப அனுபவிச்சிருப்பவங்களும் சுத்திகரிக்கப்பட்டிருப்பவங்களும் பேரழிவுக்கு மத்தியில பாதுகாக்கப்பட்டு அழகான சென்றடையற இடத்திற்கு கொண்டுவரப்படுவாங்க. இப்படித்தான் கடைசி நாட்கள்ல தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை செஞ்சு முடிக்கப்படும். அதுக்கப்புறம், ஒரு புதிய உலகம், கிறிஸ்துவோட ராஜ்யம் இந்தப் பூமியில் முற்றிலுமா உணரப்படும்.

கடைசியா, தேவனோட வார்த்தைகளோட வாசிப்பு வீடியோ ஒன்ன பாப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாகக் கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்தத் துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவுப் புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணாமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருக்குப் பங்காளிகளாகி, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் தராதரமில்லாத ஊழியத்தைச் செய்பவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாகக் கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் புறம்பாக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். … நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...

கடைசி நாட்களின் மனுவுருவான தேவன் ஏன் பெண்ணாக இருக்கிறார்?

கடைசி நாட்கள்ல மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்கார். இதயெல்லாம் இண்டர்நெட்டுல போட்டு அது உலகம்...

விசுவாசத்தின் மூலம் அடையும் இரட்சிப்பு தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசத்தை அளிக்கிறதா?

பெருந்தொற்று தீவிரமா பரவிக்கிட்டிருக்கு, அதுமட்டுமில்லாம, பூமியதிர்ச்சி, வெள்ளம், பூச்சிக் கூட்டம், பஞ்சமெல்லாம் ஏற்பட ஆரம்பிச்சிருச்சி....