கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியை எப்படி மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்யுது?

ஜனவரி 7, 2023

பேரழிவுகள் தங்கள் மேல இருப்பத மக்கள் உணர்ந்துருக்காங்க மேலும், மேகத்து மேல கர்த்தர் வர்றத எதிர்பாத்து படபடப்போடு காத்திருக்காங்க. வருஷக்கணக்கா காத்திருந்த பிறகும், அவர் வர்றத அவங்க இன்னும் பாக்கல. மாறா, கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடய நியாயந்தீர்க்கும் கிரியைக்கு கிழக்கத்திய மின்னல் சாட்சி கொடுப்பத அவங்க பாக்குறாங்க. இது அவங்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம். அவங்க நேரடியாவே எடுத்துகொள்ளப்பட்டு, கர்த்தர சந்திப்போம்னு நம்பிக்கிட்டு இருக்காங்க, அவரு வரும்போது நியாயத்தீர்ப்பின் கிரியய செய்வாருங்குறத ஒருபோதும் எதிர்பாக்கல. அவங்க அத ஏத்துக்க விரும்பல. அநேக மக்கள் மத உலகத்தோட அந்திக் கிறிஸ்துவின் வல்லமைகள பின்பற்றுறாங்க, தேவனுடய தோன்றுதலயும், கிரியையயும் நியாயந்தீர்த்து, கண்டனம் பண்றாங்க. அவங்க, “நம்ம பாவங்க மன்னிக்கப்பட்டிடுச்சி மேலும் நாம தேவனால நீதிமான்கள்ன்னு கருதப்படுறோம், அதனால, நமக்கு தேவனுடய நியாயத்தீர்ப்பு தேவயில்ல. கர்த்தர் எங்கள அவருடய ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குறதுக்கும், அங்க நாங்க அவருடய ஆசீர்வாதங்கள அனுபவிக்கவும் காத்துக்கிட்டு இருக்கோம்” அப்படின்னு நினக்கிறாங்க. அவங்க அவங்களோட கருத்துகள பிடிச்சிகிட்டு, சரியான பாதய தேடவும், ஆராயவும் விருப்பமில்லாம இருக்காங்க, இதனால தான் அவங்க இன்னும் கர்த்தர வரவேற்காம இருக்காங்க, ஆனா பேரழிவுக்குள்ள விழுந்துட்டாங்க. இது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள முழுமையா நிறைவேற்றுது: “உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்(மத்தேயு 25:29-30). ஆனா சத்தியத்த நேசிக்குற அநேகர் இருக்குறாங்க மேலும் சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள அவுங்க வாசிக்கும் போது, அவங்க அவ அவற்றோட வல்லமயயும், அதிகாரத்தயும் பாத்தாங்க, அவை எல்லாம் சத்தியம்ங்குறதயும் பாத்தாங்க. தேவனுடய சத்தத்த அவங்க அங்கிகரிச்சாங்க, அதுக்குமேலும் தங்களோட கருத்துகளால பின்னால இழுக்கப்படல, ஆனா, தொடர்ந்து சரியான வழிய ஆராஞ்சிக்கிட்டே இருந்தாங்க. அவங்களோட முதல் கேள்வி என்னவா இருந்திச்சின்னா அவங்களோட பாவம் மன்னிக்கப்பட்டிருக்கறப்போ, அவங்க தேவனால நீதிமான்கள்ன்னு கருதப்படுறப்போ, தேவன் ஏன் இன்னும் நியாயத்தீர்ப்பின் வேலய செய்யணும், அதோட கடைசி நாட்கள்ள அந்த கிரியயின் மூலமா மனுக்குலத்த தேவன் எப்படி சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் செய்றாரு. உண்மயான வழிய ஆராய்ற ஒவ்வொருவரும் புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான, ரொம்ப குழப்பமான கேள்விகள் ரெண்டு இருக்கு.

கடைசி நாட்கள்ல ஏன் தேவன் நியாயத்தீர்பின் கிரியைய செய்யணும் என்பதுல ஆரம்பிப்போம் ஏராளமான மத மக்களுக்கு இது குழப்பமா இருக்கு அவங்க “கர்த்தர் ஏற்கனவே நம்ம பாவங்கள மன்னிச்ருக்காரு, தேவன் நம்மள பாவிக்கள போல பாக்கல, எனவே, நாம நேரடியா அவருடய ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கப்பட முடியும், மேலும் நமக்கு தேவனுடய நியாயத்தீர்ப்பு தேவயில்ல” அப்படின்னு நினைக்கிறாங்க. இது ஒரு பெரிய தப்பு. மனிதனுடய பாவங்கள கர்த்தர் மன்னிச்சிட்டாருன்குறது உண்மதான், ஆனா, அந்த மன்னிப்பு நம்ம சுத்திகரிக்கப்பட்டுட்டோம் ன்னு அர்த்தமாகுமா? அது நாம தேவனுக்கான உண்மயான கீழ்ப்படிதல அடஞ்சிட்டோம்ன்னு அர்த்தமாயிருமா? அர்த்தமாகாது. இந்த உண்மய நாம எல்லாருமே பாத்துருக்கோம்: நம்ம பாவங்கள் மன்னிக்கப் பட்டுருந்தாலும் விதிவிலக்கில்லாம, விசுவாசிக பாவம் செய்றது மேலும் அறிக்கயிடுறது என்குற சுழற்சியில தான் வாழ்றாங்க, பகல்ல பாவஞ்செய்றாங்க, அப்புறம் ராத்திரி அறிக்கயிடுறாங்க, கர்த்தராகிய இயேசுவின் கற்பனைகள கைக்கொள்ள பிரயாசப்பட்டு, தோத்து போறாங்க, கர்த்தர நேசிக்கவும், கீழ்ப்படியவும் பிரயாசப்பட்டு தோத்து போறாங்க, நன்ம செய்ய தீர்மானிக்குறாங்க, ஆனா இன்னும் தங்களயும் மீறி பொய் சொல்லி பாவஞ்செய்றாங்க, தங்கள தாங்களே பாதுகாக்க எவ்வளவு கடினமா வேல செஞ்சாலும் தோத்து போறாங்க. மாம்சம் அதிகமா சீர்கெட்டதுன்னு நெறய பேர் உணருராங்க, மேலும் பாவத்துல வாழ்றது உண்மயிலே வேதனயானது. அதனாலபாவத்தின் கட்டுல இருந்து ஏன் தங்கள தானே விடுவிக்க முடியல? ஏன் பாவம் பாவம்ன்னு விடாம செஞ்சுகிட்டே இருக்கோம்? இது மனுஷனுடய பாவ சுபாவம் அப்புறம் சாத்தானிய மனநிலயினால தான். இவைதான் பாவத்தின் வேர். பாவத்தின் வேர கையாளாம, அதிலருந்து நம்மால ஒருகாலும் விடுதலயாக முடியாது, ஆனா தேவன நாம தொடர்ந்து எதுத்துக்கிட்டே இருப்போம், அவர கண்டனம்பண்ணுவோம், அவருக்கு விரோதியா இருப்போம். பரிசேயர்கள நினச்சி பாருங்க தலமுறைகளா அவங்களுக்கு விசுவாசம் இருந்திச்சி மேலும் பாவ நிவாரண பலிய தொடர்ந்து செலுத்திக்கிட்டே இருந்தாங்க. ஏன் யேகோவா தேவன் கர்த்தராகிய இயேசுவா மாம்சமானாரு மேலும் அநேக சத்தியங்கள வெளிப்படுத்தினாரு, கர்த்தராகிய இயேசு யேகோவா தேவனின் சாயல்ன்குறத அவங்க அங்கிகரிக்கல, ஆனா அவர கண்டனம்பண்ணி நியாயந்தீர்த்தாங்க, மேலும் சிலுவயில கூட அறஞ்சாங்க? பிரச்சனதான் என்ன? இப்போ இந்தக் கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் வந்து சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, எனவே ஏன் அநேக மத மக்கள் அத ஆராயக் கூட மறுக்குறாங்க, ஆனா பயித்தியகாரத் தனமா அவர கண்டனம்பண்ணி தூஷணம்பண்றாங்க, தேவன திரும்பவும் சிலுவயில அறைய தீர்மானமா இருக்காங்க? இது எல்லாம் எத அர்த்தப்படுத்துது? மக்களுடய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கறப்போ, அவங்க இன்னும் தங்களோட சாத்தானிய சுபாவத்தால ஆளுக செய்யப்படுறாங்க ன்குறத இது தெளிவா காட்டுது மேலும் எந்தக் கணத்திலயும் தேவன கண்டனம்பண்ணவும் எதுக்கவும் செய்யலாம். மனுக்குலத்தின் பாவத்தன்மைன்குறது வெறுமனே பாவச் செயல்கள் ன்குறது மட்டுமல்ல, ஆனா சத்தியத்த வெளிப்படுத்துற கிறிஸ்துவ சிலுவயில அறய விரும்பி தேவனுக்கு எதிரா நின்னு, சத்தியத்துக்கு எதிரா நின்னு, தேவனுக்கு எதிரா செயல்பட்டு, வேல செஞ்சு அவரோட எதிரியா மாறுறது, ரொம்ப பயங்கரமானது. இப்படிப்பட்ட தேவனுக்கு எதிரான அசுத்தமான கறபட்ட மக்கள் எப்படி அவருடய ராஜ்யத்துக்குத் தகுதியா இருக்க முடியும்? தேவன் நீதியுள்ளவர் மேலும் பரிசுத்தமுள்ளவர், அவருடய மனநில இடறலுண்டாக்க முடியாதது. யாருடய பாவங்கள் மன்னிக்கப்பட்டுருக்கோ, அவங்க நியாயத்தீர்ப்பின் கிரிய மூலமா சுத்திகரிக்கப்படாம, ஆனா தொடர்ந்து பாவஞ்செஞ்சிக்கிட்டு மேலும் தேவன எதித்துகிட்டு இருந்தா, அவுங்க ஒருக்காலும் தேவனுடய ராஜ்யத்துக்கு தகுதியாக மாட்டாங்க—இதுல எந்தச் சந்தேகமும் இல்ல. இது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள நிறைவேற்றுது: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை(மத்தேயு 7:21). “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35). எபிரேயர் 12:14ம் உள்ளது: “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” அதனால தான் கர்த்தராகிய இயேசு அவருடய மீட்பின் பணியின் போது அவர் திரும்பவும் வருவார்னுனு பல முற சென்னாரு. அப்போ இங்க என்ன செய்ய இருக்காரு? அது சத்தியத்த வெளிப்படுத்தவும் மேலும் அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யவும் பாவத்திலருந்தும், சாத்தானிய வல்லமயிலருந்தும் மனுக்குலத்த முழுமயா ரட்சிக்கறதுக்குந்தான், அதனால தேவன் பக்கமா நாம முழுமயா திரும்ப முடியும் மேலும் கீழ்ப்படிகிற, தேவன ஆராதிக்குற மக்களா மாற முடியும். பின்பு அவர் நம்மள ஒரு அழகான இடத்திற்குள கொண்டு செல்வாரு. கர்த்தராகிய இயேசு தீர்கதரிசனமா சென்னது போல: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). மேலும், “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). கடைசி நாட்கள்ல நியாயத்தீர்பின் கிரியய செய்றத ரொம்ப நாளக்கி முன்னாலயே தேவன் திட்டம் பண்ணுனாருன்னு நம்மால இங்க பாக்க முடியும் மேலும் முழுமயா இரட்சிக்கப்பட அதுதான் சீர்கெட்ட மனுக்குலத்துக்கு தேவ. கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்த வெளிப்படுத்தவும் தேவனுடய வீட்டில ஆரம்பிச்சி, நியாயத்தீர்ப்பின் கிரியய செஞ்சிக்கிட்டும் இருக்கார். தேவனால தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துற, மனிதர்கள் மத்தியில வந்த சத்திய ஆவி அவர். இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள முழுமயா நிறைவேற்றுது. ஏன் தேவன் கடைசி நாட்கள்ல நியாயத்தீர்பின் கிரியைய செய்யனும் ன்குறதுல மேலும் தெளிவு பெற சர்வவல்லமையுள்ள தேவனுடய சில வார்த்தைகள நாம இப்ப வாசிப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).

மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். … மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. … மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”).

கிருபயின் காலத்துல, கர்த்தராகிய இயேசுவே சிலுவயில அறயப்பட்டு, மனுக்குலத்தோட பாவ நிவாரண பலியானாரு மேலும் மனுக்குலத்த பாவத்துலருந்து மீட்டாரு. அப்போதுலருந்து, மனிதனுடய பாவங்கள் மன்னிக்கப்பட்டன மேலும் தேவன் நம்ம பாவிகளா பாக்கல, எனவே, நம்மால தேவன் கிட்ட நேரடியா ஜெபிக்கவும் அவருக்கு முன்னால வரவும் முடியுது. ஆனா இனியும் தேவன் மனிதன பாவமா பாக்கலன்குறது அவரு நம்ப பாவத்த மன்னிச்சிட்டாருன்கிறத அர்த்தப்படுத்துது, நாம இப்போ பாவத்திலருந்து விடுதல பெற்று முழுமயா பரிசுத்தமாயிட்டோம்ன்குறத இல்ல. நமக்கு இன்னும் பாவ சுபாவமும் ஒரு சாத்தானிய மனநிலயும் இருக்கு. கடைசி நாட்கள்ல தேவனுடய நியாயத்தீர்ப்பின் கிரியையினூடா நாம போகணும் அதனால நம்ம சீர் கெட்ட மனநில கழுவப்பட முடியும் மேலும் நாம முழுமயா இரட்சிக்கபட முடியும். கிருபயின் காலத்துல தேவனுடய மீட்பின் கிரிய கடைசி நாட்கள்ல அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு வழி உண்டாக்குச்சு. அதாவது, அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியை கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியையின் அடித்தளத்தின் மீது செய்யப்பட்டுது. தேவனுடய மீட்பின் கிரிய அவருடய இரட்சிப்பின் கிரியயில பாதிய மட்டும் நிறவேத்திடுச்சி. கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடய நியாயத்தீர்ப்பின் கிரிய தான் மனுக்குலத்த முழுமயா சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் முடியும், மேலும் இது தேவனுடய இரட்சிப்பின் கிரியயில முக்கியமான கட்டமாகும். கடைசி நாட்கள்ல, தேவனுடய நியாயத்தீர்ப்பயும் சுத்திகரித்தலயும் நாம அனுபவிச்சி, முழுமயா பாவத்திலருந்து விடுவிக்கபட்டு சுத்திகரிக்கப்படணும், மேலும் உண்மயா தேவனுக்கு கீழ்ப்படியணும் அவருடய ராஜ்யத்துக்குத் தகுதியா இருக்க தேவனுடய சித்தத்த செய்யணும்.

இந்த நேரத்துல, ஏன் தேவன் அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியய கடைசி நாட்கள்ல செய்றாருன்குற ஒரு சிறந்த புரிதல் இருக்கும்ன்னு நான் நினக்குறேன். எப்படி இந்தக் கிரிய சுத்திகரிச்சி மனுக்குலத்த இரட்சிக்குதுன்னு சிலர் ஆச்சரியப்படலாம். சர்வவல்லமையுள்ள தேவன் அதப்பத்தி என்ன சொன்னாரு ன்னு பாப்போம். “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

ஜனங்களால் தங்கள் சொந்த மனநிலையை மாற்ற முடியாது; அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்புக்கும், சிட்சைக்கும், துன்பத்திற்கும், சுத்திகரிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும், அல்லது அவருடைய வார்த்தைகளால் கையாளப்பட வேண்டும், ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், கிளைநறுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் உண்மையையும் அடைய முடியும், மேலும் அவரைக் குறித்த அக்கறையில்லாமல் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தைகளின் சுத்திகரிப்பின் கீழ் தான் ஜனங்களுடைய மனநிலைகள் மாறுகிறது. அவருடைய வார்த்தைகளின் வெளிப்பாடு, நியாயத்தீர்ப்பு, ஒழுக்கம் மற்றும் கையாளுதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அவர்கள் இனிமேல் மூர்க்கமாக செயல்படத் துணியாமல், மாறாக உறுதியானவர்களாகவும் அமைதியானவர்களாகவும் மாறுவார்கள். மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால் அவர்களால் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுக்கும், அவருடைய கிரியைக்கும் கீழ்ப்பணிய முடிகிறது. அது மனித கருத்துக்களுக்கு ஒத்துப்போகாவிட்டாலும் கூட, அவர்களால் இந்தக் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு விருப்பத்துடன் கீழ்ப்படிய முடிகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தங்கள் மனநிலையில் மாற்றம் அடைந்தவர்களே தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பவர்கள்”).

மனிதனைப் பரிபூரணப்படுத்துவதில் தேவனுக்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவர் மனிதனின் சீர்கேடான மனநிலையைக் கையாள அனைத்து வகையான சூழல்களையும் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனை அம்பலப்படுத்த பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்துகிறார்; ஒரு விஷயத்தில், அவர் மனிதனைக் கையாள்கிறார், மற்றொன்றில் மனிதனை அம்பலப்படுத்துகிறார், மற்றொன்றில் மனிதனை வெளிப்படுத்துகிறார், மனிதனுடைய இருதயத்தின் ஆழங்களில் உள்ள ‘இரகசியங்களைத்’ தோண்டியெடுத்து வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதனுடைய பல நிலைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மனிதனின் சுபாவத்தைக் காட்டுகிறார். வெளிப்படுத்துதல் மூலம், மனிதனைக் கையாள்வதன் மூலம், மனிதனின் சுத்திகரிப்பு மற்றும் சிட்சையின் மூலம், இப்படி தேவன் பல முறைமைகளில் மனிதனைப் பரிபூரணப்படுத்துகிறார், இதனால் தேவன் யதார்த்தமானவர் என்பதை மனிதன் அறிகிறான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “செயல்படுத்தலில் கவனம் செலுத்துபவர்களை மட்டுமே பரிபூரணப்படுத்த முடியும்”).

எப்படி தேவன் அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றாரு ன்குறதுக்கு இது கொஞ்சம் விளக்க உதவுது, சரிதானே? தேவனுடைய கடைசி நாட்களின் நியாயந்தீர்க்கும் கிரியயில, மனிதனுடய சீர்கெட்ட சாரத்தயும், நம்ம சாத்தானிய மனநிலயயும் நியாயந்தீர்க்கவும் அம்பலப்படுத்தவும் அவரு முக்கியமா சத்தியத்த வெளிப்படுத்துறாரு, அதனால நம்முடய சீர்கேட்ட பத்தின உண்மைய நாம் பாக்கலாம், மனப்பூர்வமா மனந்திரும்பலாம், நம்மயே வெறுத்து அருவருக்கலாம், மாம்சத்த கைவிட்டு, தேவனுடய வார்த்தய பயிற்சி செய்யலாம், உண்மயான மனந்திரும்புதலயும் மாற்றத்தயும் அடயலாம். சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள் இறுமாப்பு, வஞ்சனை, மேலும் பொல்லாப்பு போன்ற மனுஷனுடய சீர்கெட்ட மனநிலயயும், அதோட நம்ம விசுவாசத்துல உள்ள நோக்கங்களயும் கலப்படங்களயும், முழுமயுமா அம்பலப்படுத்துது, நம்முடய ரொம்ப ஆழமான, மிக மறைவான எண்ணங்களயும் உணர்வுகளயும் கூட அம்பலமாக்குது. இவை எல்லாம் துல்லியமா வெளிப்படுத்தப்படுது. சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள வாசிப்பது, நம்ம முகத்துக்கு எதிரே தேவன் நம்ம நியாயந்தீர்ப்பது போல இருக்கு. நம்ம அசுத்தம், சீர்கேடு அருவருப்பான சுயங்கள எல்லாம் தேவனால முழுசா வெளிப்படுத்தப்பட்டு, இது நம்மள வெக்கப்படவும், எங்கேயும் மறைக்க முடியாம, தேவனக்கு முன்னால வாழ தகுதியற்றவனா ஆக்குதுங்கறத நாம பாக்குறோம். மனிதன அவரோட வார்த்தயினால அம்பலப்படுத்துறப்போ, தேவன் நிஜமான சூழ்நிலைகளயும் ஏற்படுத்துறாரு, பின்னால, நாம கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு உண்மயினால் சோதிக்கப்படறோம், அப்படினாதான் நம்மள பத்தி சிந்துச்சு, நம்மள தெரிஞ்சுக்க முடியும். யதார்த்தத்தால அம்பலப்படுத்தபட்டு, பின்னர் கூடுதலா தேவனுடய வார்த்தயினால அம்பலமாக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டவர்களா, நம்முடய சாத்தானிய சுபாவத்தால வாழும் அருவருப்ப நம்மால மிகத் தெளிவா பார்க்க முடியும். நாம வருத்தத்தால நிரம்பி, நம்மள நாமே வெறுக்குறோம், மேலும் படிப்படியா மெய் மனந்திரும்புதல வளத்துக்குறோம். பின்னால, நம்ம சீர்கெட்ட மனநில சுத்திகரிக்கப்பட்டு மாறுறோம். அடுத்தபடியா, எப்படி தேவன் அவருடய நியாயதீர்ப்பின் கிரியைய செய்றாருன்குறத குறித்த ஒரு தெளிவான யோசனய பெற மனிதனுடய சீர்கெட்ட மனநிலய அம்பலமாக்குற தேவனுடய சில வார்த்தகள நாம கேப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையைப் பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட்செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”).

தேவனைப் பின்பற்றுபவர்களில் பலர் எப்படி ஆசீர்வாதங்களைப் பெறுவது அல்லது பேராபத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். தேவனுடைய கிரியை மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டவுடன், அவர்கள் அமைதியாகி அனைத்து ஆர்வத்தையும் இழக்கிறார்கள். இத்தகைய கடினமான சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவர்களுடைய வாழ்க்கை வளருவதற்கு அல்லது எந்த நன்மையையும் அளிப்பதற்கு உதவாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் விளைவாக, தேவனுடைய நிர்வகித்தலைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அதற்கு அவர்கள் கொஞ்சம் கவனத்தை மட்டுமே கொடுக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்றாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை, மேலும் அவர்கள் அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பெறுகிறதுமில்லை. அத்தகையவர்களுக்கு தேவனைப் பின்பற்றுவதில் ஒரே ஒரு எளிய நோக்கம் மட்டுமே உள்ளது, அந்த நோக்கம் என்னவெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒன்றேயாகும். இந்த நபர்களால் இந்த நோக்கத்துடன் நேரடியாக சம்பந்தப்படாத வேறு எதிலும் கவனம் செலுத்துவதற்குக் கவலை கொள்ள முடிவதில்லை. ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக தேவனை நம்புவதை விட வேறே நியாயமான குறிக்கோள் எதுவும் அவர்களுக்கு இல்லை—அதுதான் அவர்களுடைய விசுவாசத்தின் மதிப்பு. இந்த நோக்கத்திற்கு ஏதேனும் பங்களிப்பு செய்யாவிட்டால், அவர்கள் அதில் முழுவதுமாக அசைவற்று இருப்பார்கள். இன்று தேவனை நம்புகிற பெரும்பாலானோரின் நிலை இதுதான். அவர்களின் நோக்கமும் விருப்பமும் நியாயமானதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அவர்கள் தேவனை நம்புவதால், அவர்கள் தேவனுக்காகச் செலவு செய்கிறார்கள், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இளமையைத் துறக்கிறார்கள், குடும்பத்தையும் வாழ்க்கையையும் கைவிடுகிறார்கள், வீட்டிலிருந்து தொலைவில் பல வருடங்கள் தங்களைத் தாங்களே மும்முரமாக அலுவல் உள்ளவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய இறுதி இலக்கின் பொருட்டு, அவர்கள் தங்கள் சொந்த நலன்களையும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தையும், அவர்கள் தேடும் திசையையும் கூட மாற்றுகிறார்கள்; ஆயினும் அவர்கள் தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நோக்கத்தை மாற்ற முடியாது. அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை நிர்வகிப்பதற்காக ஓடுகிறார்கள்; சாலை எவ்வளவு தூரம் இருந்தாலும், வழியில் எத்தனை கஷ்டங்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், அவர்கள் விடாமுயற்சியுடன் மரணத்திற்கும் பயப்படாமல் இருக்கின்றனர். இந்த வழியில் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்க என்ன வல்லமை அவர்களைத் தூண்டுகிறது? அது அவர்களின் மனசாட்சியா? இது அவர்களின் சிறந்த மற்றும் உன்னதமான தன்மையா? இது தீய சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கு இருக்கும் உறுதியா? இது வெகுமதியைத் தேடாமல் தேவனுக்குச் சாட்சி கொடுக்கும் அவர்களின் நம்பிக்கையா? இது தேவனுடைய விருப்பத்தை அடைய எல்லாவற்றையும் விட்டுவிட தயாராக இருக்கும் அவர்களின் விசுவாசமா? அல்லது இது ஆடம்பரமான தனிப்பட்ட கோரிக்கைகளை எப்போதும் கைவிடுகின்ற அவர்களின் பக்தியின் ஆவியா? தேவனுடைய நிர்வாகக் கிரியையை ஒருபோதும் புரிந்துகொள்ளாத ஒருவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பது என்பது ஒரு அதிசயம்! இப்போதைக்கு, இந்த மக்கள் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றி விவாதிக்க வேண்டாம். எவ்வாறாயினும், அவர்களின் நடத்தை நம்முடைய பகுப்பாய்விற்கு மிகவும் தகுதியானதாக இருக்கிறது. அவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய நன்மைகளைத் தவிர, தேவனைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் அவருக்காக இவ்வளவு கொடுப்பதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா? இதில், முன்பே அடையாளம் காணப்படாத ஒரு பிரச்சனையை நாம் கண்டுபிடிக்கிறோம்: தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அங்கு இல்லை, மாறாக தர்மமும் கருணையும் மட்டுமே உள்ளது. எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லை, மாறாக அடக்கிவைத்துள்ள கோபமும் வஞ்சனையுமே உள்ளது. எந்த நெருக்கமும் இல்லை, மாறாக ஒரு கடந்து செல்லமுடியாத ஒரு இடைவெளி மட்டுமே உள்ளது. இப்போது காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டதால், அத்தகைய போக்கை மாற்றக்கூடியவர் யார்? இந்த உறவு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ள எத்தனை பேர் உள்ளனர்? ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஜனங்கள் மூழ்கும்போது, தேவனுடனான இத்தகைய உறவு எவ்வளவு சங்கடமானதாகவும், கூர்ந்துபார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நான் நம்புகிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்”).

சுயத்தை அறிந்து கொள்வதற்கான உண்மைக்கு அதிக முயற்சியை அர்ப்பணிப்பது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் ஏன் தேவனின் நன்மைகளைப் பெறவில்லை? உங்கள் மனநிலை ஏன் அவருக்கு அருவருப்பானது? உங்கள் பேச்சு ஏன் அவருடைய வெறுப்பைத் தூண்டுகிறது? நீங்கள் கொஞ்சம் விசுவாசத்தை வெளிக்காட்டியவுடன், நீங்கள் உங்கள் சொந்தப் புகழைப் பாடுகிறீர்கள், மேலும் ஒரு சிறிய பங்களிப்புக்கு வெகுமதியைக் கோருகிறீர்கள்; நீங்கள் கொஞ்சம் கீழ்ப்படிதலைக் காட்டும்போது மற்றவர்களைக் குறைத்துப் பார்க்கிறீர்கள், ஏதோ சிறிய பணியைச் செய்து முடித்தபின் தேவனை அவமதிக்கிறீர்கள். தேவனை உபசரிக்க, நீங்கள் பணம், பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைக் கேட்கிறீர்கள். இது ஒன்று அல்லது இரண்டு நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுப்பதற்கு உங்கள் மனதை வலிக்கச் செய்கிறது; நீங்கள் பத்து கொடுக்கும்போது, நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறவும், மேலும் மேன்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். உங்களுக்கு இருப்பதைப் போன்ற ஒரு மனுஷத்தன்மையைப் பற்றி பேசுவதோ கேட்பதோ நிச்சயமாகத் தீங்குவிளைவிக்கும். உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பாராட்டத்தக்கதாக ஏதாவது இருக்கிறதா? தங்கள் கடமையைச் செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்; வழிநடத்துபவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள்; தேவனை வரவேற்பவர்கள் மற்றும் வரவேற்காதவர்கள்; காணிக்கை அளிப்பவர்கள் மற்றும் அளிக்காதவர்கள்; பிரசங்கிப்பவர்கள், வார்த்தையைப் பெறுபவர்கள், மேலும் பலர்: அத்தகைய மனுஷர்கள் அனைவரும் தங்களைப் புகழ்ந்து கொள்கிறார்கள். இது நகைப்புக்குரியதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீங்கள் தேவனை நம்புகிறீர்கள் என்பதை முழுவதுமாக அறிந்திருந்தாலும், உங்களால் தேவனுக்கு இணக்கமாய் இருக்க முடியவில்லை. நீங்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரே மாதிரியாகப் பெருமை பேசுகிறீர்கள். உங்களிடம் இனி சுய கட்டுப்பாடு இல்லை என்ற அளவுக்கு உங்கள் உணர்வு மோசமடைந்துள்ளதாக நீங்கள் உணரவில்லையா? இது போன்ற உணர்வோடு, தேவனுடன் ஐக்கியப்படும் தகுதி உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் நீங்கள் உங்களுக்காகப் பயப்படவில்லையா? உங்கள் மனநிலை ஏற்கனவே நீங்கள் தேவனுடன் இணைந்து இருக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. இது அவ்வாறு இருக்கையில், உங்கள் விசுவாசம் நகைப்புக்கு உரியதாய் இருக்காதா? உங்கள் விசுவாசம் அபத்தமானது இல்லையா? உன் எதிர்காலத்தை நீ எவ்வாறு அணுகப் போகிறாய்? எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நீ எவ்வாறு தேர்வு செய்யப் போகிறாய்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராதவர்கள் நிச்சயமாகவே தேவனின் எதிராளிகள்”).

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை சரித்திர புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு, தேவனை எதிர்க்கும் ஒரு பிசாசாய் அவன் மாறிவிட்டான். மனிதனே கூட தனது கலகத்தனமான நடத்தையைப் பற்றிய முழு கணக்கை ஒப்புவிக்க இயலாது—ஏனென்றால் மனிதன் சாத்தானால் ஆழமாய்க் கெடுக்கப்பட்டிருக்கிறான், எங்கே திரும்புவது என்று அவனுக்குத் தெரியாத அளவிற்கு சாத்தானால் திசைமாறி நடத்தப்பட்டிருக்கிறான். இன்றும் கூட மனிதன் இன்னமும் தேவனுக்குத் துரோகம் செய்கிறான். மனிதன் தேவனைப் பார்க்கும்போது, அவருக்குத் துரோகம் செய்கிறான். தேவனை அவனால் பார்க்க முடியாதபோதும் கூட அவன் அவருக்குத் துரோகம் செய்கிறான். இவர்கள் தேவனுடைய சாபங்களையும் தேவனுடைய கோபத்தையும் பார்த்தவர்களாய் இருந்தாலும்கூட, அவருக்கு இன்னும் துரோகம் செய்கிறார்கள். அதனால் மனிதனுடைய அறிவு அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் மனிதனுடைய மனசாட்சியும் அதன் உண்மையான செயல்பாட்டை இழந்து விட்டது என்றும் நான் கூறுகிறேன். நான் நோக்கிப் பார்க்கும் மனிதன், மனித உடையில் இருக்கும் ஒரு மிருகம், அவன் ஒரு விஷப்பாம்பு, மேலும் அவன் எவ்வளவு பரிதாபமாய் என் கண்கள் முன் தென்பட முயற்சித்தாலும், அவனிடத்தில் ஒருபோதும் நான் இரக்கம் காட்ட மாட்டேன். ஏனென்றால் மனிதனுக்கு, கருப்பு வெள்ளைக்கும், சத்தியத்திற்கும் சத்தியமல்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறித்த புரிதல் இல்லை. மனிதனுடைய உணர்வு மிகவும் மரத்துப்போய்விட்டது, என்றாலும் இன்னமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறான்; அவனுடைய மனிதத்தன்மை மிகவும் இழிவானதாக இருக்கிறது, அப்படியிருந்தும் அவன் ஒரு ராஜாவின் ராஜரீகத்தைக் கொண்டிருக்க விரும்புகிறான். அப்படிப்பட்ட உணர்வைக் கொண்டிருக்கும் அவன் யாருக்கு ராஜாவாக முடியும்? அப்படிப்பட்ட மனிதத்தன்மையுடைய அவன் எப்படி சிங்காசனத்தின் மேல் அமர முடியும்? உண்மையாகவே மனிதனுக்கு வெட்கமே இல்லை. அவன் ஒரு அகந்தையுள்ள துன்மார்க்கன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உங்களிடம் ஒரு யோசனை கூறுகிறேன். முதலாவது நீங்கள் ஒரு கண்ணாடியைக் கண்டுபிடித்து, உங்களின் சொந்த அருவருப்பான பிம்பத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்துகிறேன்—ஒரு ராஜாவாக இருப்பதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது? ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரின் முகம் உனக்கு இருக்கிறதா? உன்னுடைய மனநிலையில் சிறிதளவேனும் மாற்றமில்லை, எந்த ஒரு சத்தியத்தையும் நீ கைக்கொள்ளவும் இல்லை, அப்படியிருந்தும் அற்புதமான நாளைக்காக நீ ஆசைப்படுகிறாய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்”).

சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்தைகள் ரொம்ப நடைமுறையானவை மேலும் ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப நிஜமானவை, நம்ம விசுவாசத்தில இருக்குற கலப்படங்கள மேலும் தீய நோக்கங்கள அதோட தேவன எதிர்க்குற நம்முடய சுபாவத்தயும் வெளிப்படுத்துது. தேவனுக்காக நம்மால தியாகங்கள செய்யவும், பாடுபடவும், வில கிரயம் செலுத்தவும் முடிஞ்சுது, அதனோட அர்த்தம் நாம பக்தியுள்ள, கீழ்படிதலுள்ளவங்களா இருந்தோம் அதோட தேவனுடய அங்கிகாரத்தயும் பெற முடியும்னு எப்பவும் நெனச்சோம். ஆனா, தேவனுடய வார்த்தைகளோட நியாயந்தீர்க்குற கிரியையின் மூலம், நாம சிந்திச்சி நம்மள தெரிஞ்சுக்கிறோம், நம்மளோட தியாகங்க எல்லாமே கறைபட்டது, வெறுமனே ஆசீர்வாதங்கள பெற்றுக்கொள்வதற்கானதுங்கறத பாக்குறோம். தேவன் நம்மள சமாதானமுள்ள வாழ்கையினால ஆசீர்வதிக்கும் போது, நாம அவருக்குக் கீழ்ப்படியறோம் அவருக்காக வேல செய்றோம், ஆனா வேதனயும் பேரழிவும் தாக்கும் போது, நாம தேவன தவறா புரிஞ்சிக்கிறோம், நம்மள பாதுகாக்காததுக்காக அவர குற செல்றோம், அவருக்காக வேல செய்றத கூட நிறுத்துறோம். பின்னால நம்முடய விசுவாசமும் தியாகங்களும் முழுமயா பரிவர்த்தன தொடர்பானது, தேவனிடத்திலருந்து கிருபயயும், ஆசீர்வாதங்களயும் பறிக்கத் தான்னு நாம பாக்குறோம். இது தேவன வஞ்சிக்குறதும் பயன்படுத்துறதும் ஆகும். இதுரொம்ப சுயநலமானது தந்திரமானது! நாம ஒட்டு மொத்தமா மனசாட்சியும், நியாயமும் இல்லாம, மனுஷன்னு கூப்பிடப்படுவதுக்குக் கூடத் தகுதியில்லாம. ரொம்ப அசுத்தமாவும் சீர்கெட்டும் போய் இருக்கோம், நாம இன்னும் ஆசீர்வதிக்கப்படுவதுக்கும் தேவனுடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கவும் உரிம இருப்பதா நினக்குறாங்க. இது வெட்க கரமானது நியாயமில்லாதது. தேவனுடய நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்பாட்டின் வார்த்தைகள் நமக்கு அவருடய நீதியையும், அவமதிக்க முடியாத பரிசுத்த மனநிலயயும் காட்டுது, அதோட தேவன் நம்மகிட்ட கேக்குறதெல்லாம் நம்முடய உண்மயயும் பக்தியயும் தான். விசுவாசத்த கொண்டு, இப்படிப்பட்ட தோக்கங்கள் மற்றும் அசுத்தங்களோட கடமய செய்றது தேவன வஞ்சிப்பதும் எதிர்ப்பதுமாகும், இது அவருக்கு அருவருப்பும் தூர்நாற்றமுமா இருக்கும். இந்த வகயான விசுவாசத்த தேவன் அங்கிகரிக்குறது இல்ல. தேவனுடய வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பின் மூலமா கையாளப்பட்டு மேலும் அநேக முறை பரிட்சிக்கபட்ட பிறகு, இறுதியா நம்முடய சீர்கேட்டின் சத்தியத்த நம்மால பாக்க முடியும், உண்மயா நம்மள வெறுத்து, வருத்தப்பட்டு மேலும் தேவனுக்கு முன்னால மனந்திரும்புதல்ல தாழ விழ முடியும். தேவனுடய நீதியுள்ள தன்மயயும் மேலும் அவரு நம்ம இருதயங்களயும், மனங்களயும் உண்மயா பாக்குறாரு, நம்மள முற்புறமும் பின்புறமும் அறிகிறாருங்கறத நாம பாக்க முடியுது. நாம ழுழுமயா ஒத்துகொள்றோம் மேலும் தேவனுக்கான பக்தியுள்ள இருதயத்த வளத்துக்குறோம். விசுவாசத்த பத்தின நம்ம கண்ணோட்டம் மாறுது, அதிக பகட்டு ஆசைக இல்லாம அதிக தூய்மயா நம்ம கடமய அணுகுறோம், தேவனுடய ஏற்பாடுகளுக்கு கீழ்ப்படிவதில சந்தோஷப்படுறோம் மேலும் தேவன் நம்மள ஆசீர்வதிச்சாலும் ஆசீர்வதிக்காட்டாலும், ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள பெற்றாலும் பெறாவிட்டாலும் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியின் கடமய செய்றோம். நாம எதினால உண்மயா உருவாக்கப்பட்டோம்ன்குறத பாத்தவுடனே, நாம முன்னால இருந்தத போல இறுமாப்பா இறுக்குறதில்ல. வார்த்தயிலயும் செயலிலயும் நியாயமா மாறுறோம், சத்தியத்த தேடுறோம் அதுக்குக் கீழ்ப்படியுறோம். இது தான் தேவனுடய நியாயத்தீர்ப்பு, சிட்சை, இது படிப்படியா நம்ம சீர்கேட்ட கழுவுது மாத்துது. நம்மில தேவனுடய வேலய அனுபவமாக்குறவங்களுக்கு அவருடய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு எவ்வளவு நடைமுறையானது, எப்படி இது உண்மயிலே மனிதன சுத்திகரித்து இரட்சிக்குதுன்னு உண்மயிலே தெரியும். இந்த நியாயத்தீர்ப்பும் கிளை நறுக்குதலும் இல்லாம, நாம நம்முடய சொந்த சீர்கேட்ட உண்மயா ஒருபோதும் பாக்க மாட்டோம், ஆனா நம்ம பாவம் மன்னிக்கப்பட்டுடுச்சு, தேவனுடய அங்கிகாரம் நமக்கு இருந்துச்சு, அதனால தேவனுடய ராஜ்யத்துக்குள்ள நம்மால நுழைய முடியும்னு நெனச்சுக்கிட்டு, முடிவில்லா பாவஞ்செய்தல்லயும் அறிக்கயிடுதல்லயும் சிக்கிக்கிடுவோம். இது உண்மயிலே மதியீனமானது பரீதாபமானது! தேவனுடய நியாயத்தீர்ப்புக்காக நன்றி, நம்மால நம்மள உண்மயா அறிய முடியுது, நாம அநேக சத்தியங்கள கத்துக்குறோம், நம்ம சீர்கெட்ட மனநில சுத்திகரிக்கப்பட்டு மாற்றப்பட்டுருக்கு. இது நம்ப முடியாத அளவுக்கு விடுதலயா இருக்கு. தேவனுடய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நமக்கு ரொம்ப அதிகமா கொடுக்குது. அவை நமக்கான தேவனுடய உண்மயான அன்பு, அவருடய மிகப்பெரிய இரட்சிப்பு. சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்த வெளிப்படுத்த, அவருடய நியாயத்தீர்ப்பின் கிரியய செய்ய ஆரம்பிச்சும் 30 முழுமயான ஆண்டுகள் ஆயிடுச்சு, பேரழிவுக்கு முன்னால முதல் கனிகளாகிய ஒரு கூட்ட ஜெயங்கொள்றவங்கள அவர் ஏற்கனவே ஆயத்தம் செஞ்சிட்டாரு. இது வேதாகம தீர்கதரிசனங்கள முழுமயா நிறவேத்துது: “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்(வெளிப்படுத்தல் 14:4). தேவனால தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் அவருடய நியாயத்தீர்ப்பு, சிட்ச, உபத்திரவங்கள் மேலும் சுத்திகரித்தல அனுபபவிச்சிருக்காங்க, அவங்களோட சீர்கெட்ட மனநிலைகள் சுத்திகரிக்கப்பட்டுருக்கு, கடைசியில அவங்க சாத்தானிய வல்லமகள்ல இருந்து விடுவிக்கப்பட்டுருக்காங்க. தேவனுக்கு கீழ்ப்படியவும், ஆராதிக்கவும் அவங்க வந்திருக்காங்க, தேவனுடய பெரிய இரட்சிப்ப பெற்றிருக்காங்க. தேவனுடய கடைசி நாட்களின் கிரியைக்கு எல்லா மனுக்குலத்துக்கும் சாட்சியா அவங்க அனுபவங்களும், சாட்சியங்களும் படங்களாவும் காணொளிகளாவும் மாத்தப்பட்டு, பாக்குறவங்க இருதயத்துல எந்தச் சந்தேகத்தயும் வரவிடாம ஆன்லைன்ல இருக்கு, சர்வவல்லமையுள்ள தேவனுடய ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சத்தின் மூல முடுக்கெல்லாம் பரவியிருக்கு, மேலும் தேவனால தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள எல்லா இடத்துக்கும் பரப்புறாங்க. ராஜ்யத்தின் சுவிசேஷத்தின் இந்த பயங்கரமான எல்லயற்ற பரப்புதல் நம்ம மேல இருக்கு. தெளிவா, தேவனுடய வீட்டில தொடங்குற நியாயத்தீர்ப்பின் கிரிய எற்கனவே பெரிய வெற்றி பெற்றுருக்கு. தேவன் சாத்தான ஜெயிச்சி எல்லா மகிமயயும் பெற்றிருக்கார். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றது போல, “தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்”). “கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...

வேதாகம பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு சிலுவையில் “முடிந்தது” என்று சொன்னபோது உண்மையில் அவர் என்ன சொன்னார்?

ஆண்டவர் இயேசு சிலுவையில் கூறிய "முடிந்தது" என்பதன் உண்மையான அர்த்தத்தை இன்றைய பைபிள் பிரசங்கம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறது. நீங்கள் வசனத்தை சரியாகப் புரிந்துகொள்ள, படிக்க கிளிக் செய்யவும்.

கடைசி நாட்களில் தேவன் ஏன் ஆவிவடிவத்தில் வராமல் மனுஷரூபத்தில் வருகிறார்?

இரட்சகரான, சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ள தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியைக்காக சத்தியங்கள வெளிப்படுத்தியதில் இருந்து அநேக மக்கள்...

Leave a Reply