கஷ்டமான சூழலின் சோதனை

ஜனவரி 7, 2023

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன். என்னைச் சுத்தி இருந்தவங்க எல்லாருமே கிறிஸ்தவங்களா இருந்தாங்க, அதனால நானும் கிறிஸ்தவனா இருந்தேன். ஆனா, நான் தேவனைப் பத்திய தகவல்களக் கத்துக்கவும், தேடவும் ஏங்குனப்போ, சில கேள்விகள சிந்திக்க ஆரம்பிச்சேன்: நாம ஏன் தேவனை விசுவாசிக்கிறோம்? தேவனை நாம எப்படி அறிஞ்சுக்கறது? இந்த இருண்ட பொல்லாத உலகத்துல, உண்மையிலயே சத்தியம் எங்க இருக்குது? ஜனங்க ஏன் வாழ்க்கையில கஷ்டங்கள சந்திக்குறாங்க? இந்தக் கேள்விகள்லாம் ஒன்னுக்குப் பின் ஒன்னா மர்மமா இருந்துச்சு, எனக்குப் பதில்களே கிடைக்கல. அதிர்ஷ்டவசமா, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேஷத்த நான் ஏத்துக்கிட்டதுக்கு அப்புறமா, இந்தக் குழப்பமான விஷயங்களுக்கெல்லாம் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல பதில்களக் கண்டுபிடிச்சேன். தேவனோட வார்த்தைகளயும் கிரியையயும் அனுபவிப்பதன் மூலமா, விசுவாசத்துல, ஜனங்கள் தேவனைப் பத்திய அறிவையும், கீழ்ப்படிதலயும், தேவனிடத்துல அன்பையும் அடைய முடியும்ங்கறத நான் கத்துக்கிட்டேன். கடைசி நாட்கள்ல, ஜனங்கள பரிபூரணப்படுத்துவதுக்கும் அவங்களோட சீர்கேட்ட சுத்திகரிப்பதுக்கும் தேவன் நியாயத்தீர்ப்பயும், சிட்சையயும், உபத்திரவங்களயும் புடமிடுதலயும் பயன்படுத்துறாருங்கறத நான் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, எனக்கு உபத்திரவங்கள் வரணும்னு ஜெபிச்சேன். சீன சகோதர சகோதரிகளப் போல சாத்தானிய ஆட்சியின் அடக்குமுறைக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகும்படியும், ஜீவனுள்ள சாட்சியக் கொடுக்கும்படிக்கும் அதோடு, கஷ்டங்கள் மூலமா தேவனால ஒரு ஜெயங்கொண்டவனா மாற்றப்படும்படிக்கும், நான் சீனாவுல பிறந்திருக்கணும்னு கூட ஆசப்பட்டேன். ஒருதடவ எனக்கு அந்த விழிப்புணர்வு வந்துச்சு, சீக்கிரமாவே எனக்கு ஒரு விஷயம் நடந்துச்சு.

பெருந்தொற்று காரணமா, நான் வேலை செஞ்சுக்கிட்டிருந்த நிறுவனத்த மூடிட்டாங்க, எனக்கு வேலை போயிருச்சு. நான் வேற பல நிறுவனங்கள்ல வேலை தேட முயற்சி செஞ்சேன். ஆனா, நேர்காணலுக்காக என்னைய யாருமே கூப்பிடல. காலம் கடந்து போகப் போக, காரியங்கள் மோசமாகிக்கிட்டே போச்சு. எனக்கு எந்த வருமானமோ, சாப்பாடு வாங்க பணமோ இல்ல. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. அதுக்கு முன்னாடி, நான் ஆன்லைன் கூடுகைகள்ல சேர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சுக்கிட்டு, திருச்சபைத் திரைப்படங்களப் பார்த்துட்டு, வேலையில இருந்து வந்ததுக்கப்புறமா, மத்தவங்களோட சேர்ந்து என்னோட கடமைய செய்வேன். இதெல்லாம் எனக்கு ரொம்ப முக்கியமான விஷயங்களா இருந்துச்சு விசுவாசத்தக் கடைப்பிடிக்க அது ஒரு சிறந்த வழியா இருந்துச்சுன்னு நான் உணர்ந்தேன். ஆனா, இப்போ நான் இந்த சோதனையக் கடந்து போறேன், நான் ஒரே மெய்யான தேவனை விசுவாசிச்சதால, அவர் நிச்சயமா என்னைப் பார்த்துக்குவாருன்னும் எனக்கு உதவுவாருன்னும் நான் நெனச்சேன். அதோட, எனக்கு ஒரு வேலையத் தரும்படி கேட்டு, நான் தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் ஒரு விசுவாசியா இருந்ததால, நான் எதக் கேட்டாலும் தேவன் எனக்குத் தருவாருன்னு நெனச்சேன், ஆனா, தேவன் அப்படிச் செய்யல. எனக்குக் கொஞ்சம் பலவீனமாவும் குழப்பமாவும் இருந்துச்சு. நான் தேவனோட வார்த்தைகள தினமும் வாசிச்சு ஜெபிச்சேன், அப்படியிருந்தும், நான் கஷ்டப்பட்டபோது, ஏன் தேவன் எனக்கு உதவல? எனக்குள்ள அப்படி யோசிச்சபோது, நான் யோபைப் பத்தி சிந்துச்சுப் பார்த்தேன். அவன் தன்னோட எல்லா உடைமைகளயும் இழந்துட்டபோதும், அவனால அப்பவும் தன்னோட சாட்சியில உறுதியா நிற்க முடிஞ்சுச்சு. நன்மையும் தீமையும் எல்லாமே தேவன் ஏற்படுத்தியதுதான்னு யோபு நம்புனான், அவன் ஒருபோதும் குறைசொன்னதில்ல. தனக்கு பொருளாதார ஆசீர்வாதங்களக் கொடுத்ததுக்காக அவன் தேவனுக்கு நன்றி சொன்னான், தேவன் அந்த ஆசீர்வாதங்கள எடுத்துக்கிட்டபோதும் கூட, அவன் அப்பவும் யேகோவா தேவனோட நாமத்தத் துதிச்சான். உண்மையிலயே, யோபுவோட விசுவாசத்தயும் ஜெபங்களயும் பத்தி நினைக்கும்போது, என்னோட நம்பிக்கைக எவ்ளோ அற்பமானதா இருந்துச்சுங்கறதயும், அது யோபுவோட விசுவாசத்தோடு ஒப்பிட முடியாததுங்கறதயும் நான் உணர்ந்தேன். நான் யோபுவோட முன்மாதிரியப் பின்பற்றி, அவனப் போலவே தேவனோட ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியணும்ங்கறது எனக்குத் தெரியும். ஆனா, சாப்பிடறதுக்குப் போதுமானது இல்லங்கற சூழ்நிலையப் பத்தி யோசிக்கும்போது, எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. ரொம்ப முக்கியமா, நான் சர்வவல்லமையுள்ள தேவனை மூணு மாசங்களுக்கு முன்னாடிதான் ஏத்துக்கிட்டேன், அதோடு, தேவனோட வார்த்தைகள அதிகமாப் புரிஞ்சுக்கல. என்னோட கைபேசி டேட்டா அளவு ஒதுக்கீட்டப் பயன்படுத்திட்டேன், அதனால, என்னால ஆன்லைன் கூடுகைகள்ல கலந்துக்க முடியல. என்னால செய்ய முடிஞ்சதெல்லாம், “தேவனே, நான் பட்டினி கிடந்து சாகணுமா கூடாதாங்கறது உம்முடைய கையில இருக்கு. நான் மரிச்சாலும் கூட உமது ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவேன்” அப்படின்னு தேவனிடத்துல மன்றாடுறதுதான். அப்படி ஜெபிப்பது எனக்கு நிம்மதியக் கொடுத்துச்சு. அதே நாள்ல, என் ஜெபத்துக்குப் பிறகு, எதிர்பாராத ஒரு காரியம் நடந்துச்சு. என்னோட மாமா எனக்கு போன் பண்ணி அவரோட கட்டுமான நிறுவனத்துக்கு வேலைக்கு சேர விரும்புறியான்னு கேட்டாரு. கட்டுமானப் பணிகள் சோர்வடயச் செய்றதா இருந்தாலும், ஒரு வார வேலைக்கு அப்புறம், கொஞ்ச நாளுக்கு எனக்கு வேண்டிய போதுமான பணத்த சம்பாதிச்சேன். நான் உண்மையிலயே தேவனுக்கு நன்றி சொன்னேன்! இந்த சூழ்நிலையில, எனக்கு வேலை தேட உதவணும்னு சொல்லி நான் தேவனிடத்துல கேட்டப்போ அவர் ஏன் அதச் செய்யல, ஆனா, நான் கீழ்ப்படியத் தயாராக இருப்பதா ஜெபிச்சபோது, அவர் எனக்கு உதவி செஞ்சுட்டாரே அப்படின்னு நான் சிந்திக்க ஆரம்பிச்சேன்.

அதுக்கப்புறமா ஒரு நாள், இதப் பத்திய ஒரளவு புரிதல எனக்குக் கொடுத்த தேவனோட வார்த்தைகள் சிலவற்ற நான் வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையைப் பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட்செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”). “தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அங்கு இல்லை, மாறாக தர்மமும் கருணையும் மட்டுமே உள்ளது. எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லை, மாறாக அடக்கிவைத்துள்ள கோபமும் வஞ்சனையுமே உள்ளது. எந்த நெருக்கமும் இல்லை, மாறாக ஒரு கடந்து செல்லமுடியாத ஒரு இடைவெளி மட்டுமே உள்ளது. இப்போது காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டதால், அத்தகைய போக்கை மாற்றக்கூடியவர் யார்? இந்த உறவு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ள எத்தனை பேர் உள்ளனர்? ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஜனங்கள் மூழ்கும்போது, தேவனுடனான இத்தகைய உறவு எவ்வளவு சங்கடமானதாகவும், கூர்ந்துபார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நான் நம்புகிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்”). தேவனோட வார்த்தைகள் ஆசீர்வாதங்களுக்கான நம்மளோட நோக்கங்களயும், சீர்கெட்ட மனநிலைகளயும் வெளிப்படுத்துது. நிறைய பேர் தங்களோட விசுவாசத்துல உண்மையிலயே தேவனிடத்துலருந்து வரும் சௌகரியத்தத் தேடுறாங்க. அவங்க எந்த துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க விரும்புறதில்ல, அவங்க விரும்புற எல்லாத்தையும் தேவன் கொடுப்பார்ன்னு அவங்க நம்புறாங்க. ஆனா, அவங்க தேவனை திருப்திப்படுத்துறாங்களா இல்லையாங்கறதப் பத்தி கவலப்படுறதில்ல. அவங்களப் பொறுத்தவரையில, தேவனுக்குக் கீழ்ப்படியறதும் அவரோட கோரிக்கைகள நிறைவேத்தறதும் முக்கியமல்ல. ரொம்ப முக்கியமான விஷயம் என்னான்னா, தேவன் அவங்க விரும்புறதக் கொடுக்குறாருங்கறதுதான். கர்த்தர் மீதான என்னோட விசுவாசத்துல, தேவனோட ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கணும்னு சொல்லி போதகர்களும் மூப்பர்களும் அடிக்கடி பிரசங்கிச்சாங்க. ஆனா, அந்த வகையான பின்தொடர்தல் தேவனுடனான நம்மளோட உறவக் கறைபடுத்திவிடுது. இப்படி தேவனோட வார்த்தைகள் வெளிப்படுத்துவதப் போல: “தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது.” தேவனோட வார்த்தைகள் சத்தியமா இருக்குது, அதனால, நான் என்னைப் பத்தி சிந்திச்சுப் பார்த்தேன். என்னோட விசுவாசமும் தேவனோட ஆசீர்வாதத்தப் பெறுவதுக்காகத்தாங்கறத நான் பார்த்தேன். அந்த எண்ணம் என்னோட உள்ளத்தின் ஆழத்துக்குள்ள மறஞ்சிருந்துச்சு. தேவன் பூமிக்குத் திரும்பி வந்திருப்பதால, அவர ஏத்துக்கற எல்லாரையும் அவர் நிச்சயமா ஆசீர்வதிப்பாருன்னு நான் நெனச்சேன். கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டதால, ஆசீர்வாதங்க ரொம்ப தூரத்துல இருக்க முடியாதுன்னும், என்னோட வாழ்க்க ரொம்ப நல்லா வரப்போகுதுன்னும் நான் நெனச்சேன். இருந்தாலும், விஷயங்கள் அப்படி மாறல. நான் கஷ்டங்கள சந்திச்சேன், என்னோட வாழ்க்க ரொம்பவே கஷ்டமாகிருச்சு, அதனால, நான் பலவீனமாவும் எதிர்மறையாவும் ஆனேன். எனக்கு வருமானம் இல்லை, சாப்பாடு இல்லை. ஆன்லைன் கூடுகைகள்ல கலந்துக்க என்னால இணையத்தப் பயன்படுத்த முடியல. என்னோட விசுவாசத்த என்னால எப்படி தொடர்ந்து கடைப்பிடிக்க முடியும்? நான் அதிருப்தி அடஞ்சேன், தேவன் என் மேல் அக்கறையா இல்லங்கறதப் போல இருந்துச்சு. நான் வேலை தேடிக்கிட்டு இங்கயும் அங்கயும் ஓடி, தேவனோட உதவிக்காக ஜெபிச்சேன். ஆனா, தேவன் பதிலளிக்கவே இல்ல, நான் ஜெபித்துல கேட்டத அவர் எனக்குக் கொடுக்கல. தேவன் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு: அவர் மெய்யான தேவன்தானா? இது தேவன் சொல்வதப் போலவே இருக்குது: “நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான்.” தேவனோட வார்த்தைகளின் வெளிப்பாடு நான் வெளிப்படுத்தியதப் பாத்து என்னைய வெட்கப்பட வச்சுச்சு. ஆசீர்வாதங்களுக்காக விசுவாசிப்பது தவறான பார்வைங்கறதயும், தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. ஏன்னா, தேவனை ஆசீர்வாதங்களத் தருபவராவும் என்னைய ஆசீர்வாதங்களப் பெறுபவனாவும் நான் பார்த்தேன். நான் விரும்புனபடி தேவன் எனக்கு ஒரு நல்ல வேலையத் தராதப்போ, நான் அவரக் குற்றஞ்சாட்டி, அவர் என் மேல அக்கறையா இல்லன்னு நெனச்சேன். விசுவாசத்தப் பத்திய என்னோட பார்வை எவ்ளோ அபத்தமானதாவும், அறியாமையானதாவும் முட்டாள்தனமானதாவும் இருந்ததுங்கறத நான் பார்த்தேன். நான் சின்ன வயசுல இருந்தே எப்படி கூடுகைகளுக்குப் போவேன்னு நெனச்சுப் பார்த்தேன், நான் கேள்விப்பட்டதெல்லாம், “தேவன் உனக்குப் பெரிய ஆசீர்வாதங்களத் தருவார்! நீங்க ஒரு விசுவாசியா இருந்தால், தேவன் உங்கள ஆசீர்வதிப்பாரு. ஜெபியுங்க, தேவனிடத்துல காரியங்களக் கேளுங்க, அவர் நிச்சயமா பதிலளிப்பாரு” அப்படிங்கறதுதான். நான் மத உலகத்துல இருந்தும், என்னோட பெற்றோர்கிட்டயிருந்தும் என்னைச் சுற்றியுள்ள மத்தவங்ககிட்டயிருந்தும் நான் கேள்விப்பட்டிருந்த அந்த விஷயங்கள் என் மேல பெரிய தாக்கத்த ஏற்படுத்தியிருந்துச்சு, அதோடு, தேவனோட ஆசீர்வாதங்களப் பெறவும் உலகத் துன்பங்கள்ல இருந்து விடுபட்டு இருக்கவும் நான் விசுவாசிச்சா மட்டும் போதும்ணு என்னைய நெனைக்க வச்சுச்சு. இதுக்கு முன்னாடி, விசுவாசத்துல, ஆசீர்வாதங்களுக்கான ஆசையக் கொண்டிருப்பது தப்புன்னு நான் ஒருபோதும் நினைக்கல, உண்மையிலயே, அது ஒரு சாத்தானிய மனநிலைன்னு நான் உணரல. ஜனங்களோட சீர்கேட்ட அம்பலப்படுத்துற தேவனோட வார்த்தைகள வாசிக்கிறவரைக்கும் எனக்கு இதப் பத்திய புரிதல் இல்லாம இருந்துச்சு. விசுவாசம்ங்கறது உண்மையில பொருளாதார ஆசீர்வாதங்களப் பெறுவது மட்டுந்தானா? போதுமான அளவு பணத்தோடும் பொருள் உடமைகளோடும் இருக்கிறவங்கதான் தேவன் அங்கீகரிக்கிறவங்களா? அப்படின்னு என்னைய நானே கேட்டுக்கிட்டேன். அப்படின்னா, ஏன் கர்த்தராகிய இயேசு யோவான் 6:27 ல, “அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்” அப்படின்னு சொன்னாரு? அதோடு கூட அவர் சொன்னாரு, “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்(மத்தேயு 6:19-21). எப்பவுமே தேவனிடத்துல பொருளாதார ஆசீர்வாதங்களக் கேட்டுக்கிட்டு இருப்பது மனிதகுலத்தோட வீணான ஆசை—அது சீர்கேடு, தேவன் அத வெறுக்குறாருங்கறத அப்போ நான் உணர்ந்துக்கிட்டேன். இது முழுக்க முழுக்க சாத்தான் மனுஷன தவறா வழிநடத்தி, தேவனோட அடையாளத்த அறியவிடாமலும் குறிப்பா, தேவன் நம்மளோட தலைவிதிய ஆளுறாருங்கறதத் தெரிஞ்சுக்கவிடாமலும் நம்மள தடுப்பதாலதான் நம்மால சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிய முடியல. எல்லாம் சுமுகமாக நடக்கும்போது, நாம தேவனுக்கு நன்றி செலுத்துறோம், அவரைத் துதிக்கிறோம், ஆனா, நாம வாழ்க்கையில கஷ்டங்கள சந்திக்கறப்போ, தேவன் நம்மளோட கோரிக்கைகள நிறைவேத்தாதப்போ, நாம தேவனை தவறா புரிஞ்சுக்கிட்டு அவரை குறை சொல்லுறோம். இது எனக்கு ஆபிரகாம நினைவுபடுத்துச்சு. அவன் தேவனிடமிருந்து வரும் எதுக்குமே கீழ்ப்படியத் தயாரா இருந்தான். நல்லதோ கெட்டதோ, தனக்குன்னு தனிப்பட்ட விருப்பம் அவனுக்கு இல்ல. தேவன் ஆபிரகாம்கிட்ட அவனோட மகனை பலியா பயன்படுத்தச் சொன்னப்போ, தேவன் சொன்னபடியே, அதச் செய்ய ஆபிரகாம் தயாரா இருந்தான். அது அவனுக்கு ரொம்பவே வேதனையா இருந்துச்சு, ஆனா அவன், “ஏன் என்கிட்ட இருந்து இதக் கேக்குறீங்க? நீங்க எப்படி என்னை இப்படி நடத்தலாம்?” அப்படின்னு தேவனிடத்துல கேக்கவே இல்ல. தேவன் என்ன கேட்டாலும் சரி, தான் கீழ்ப்படியணும்ங்கறத ஆபிரகாம் விசுவாசிச்சான். தேவன் சிருஷ்டிகரா இருக்காருங்கறதும், அவன் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்தான்ங்கறதும், அதனால, அவன் நிபந்தனயில்லாம கீழ்ப்படியணும், தேவன் கிட்டயிருந்து வரும் கட்டளைகளோ கோரிக்கைகளோ எதுவா இருந்தாலும் ஏத்துக்கணும்ங்கறதும் அவனுக்குத் தெரியும். ஆபிரகாமோட விசுவாசம் தேவனோட அங்கீகாரத்தப் பெற்றுக்கிச்சு. ஆனா, இன்னைக்கு இருக்கிற ஜனங்கள் ஆபிரகாம்ல இருந்து முற்றிலுமா வித்தியாசமானவங்க. நாம எப்போதுமே பொருளாதார ஆசீர்வாதங்களப் பத்திய எண்ணங்கள்ல மூழ்கி இருக்கறோம், தேவனோட சித்தத்தப் புறக்கணிக்கிறோம். கர்த்தராகிய இயேசு நமக்கு அறிவுரை சொல்லியிருக்காரு, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்(மத்தேயு 6:33). நாம பொருளாதார ஆசீர்வாதங்களத் தேடக்கூடாது, அதுக்குப் பதிலா, நாம தேவனோட சித்தத்தச் செய்யவும், சத்தியத்தப் பின்தொடரவும், நம்மளோட கடமைகள சிறப்பா செய்யவும் நாடணும். அதுதான் முக்கியம். தேவன் சிருஷ்டிகரா இருக்காரு. அவருக்கு நம்மளோட எண்ணங்கள் நல்லாத் தெரியும், நமக்கு என்ன தேவைன்னும் அவருக்கு நல்லாத் தெரியும். ஆனா, சாத்தானோட சீர்கேட்டினால, மனிதகுலத்தோட எண்ணங்கள் முழுவதும் பேராசையாலும் பொருளாதார ஆசீர்வாதங்களாலும் நிரம்பியிருக்குது. அதனால, தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அவரை திருப்திப்படுத்தணும் அப்படிங்கறதுக்காக நாம அவர விசுவாசிக்கறதில்ல, அதுக்கு மாறா, ஆசீர்வாதங்களப் பெறுவதுக்கும் நம்மளோட சொந்த விருப்பங்களத் திருப்திப்படுத்துவதுக்கும் மட்டுந்தான் விசுவாசிக்கிறோம். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் வெளிப்படுத்துவதப் போல, “எல்லா சீர்கெட்ட மனிதர்களும் தங்களுக்காகவே வாழ்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்—இதுவே மனித இயல்பின் சுருக்கமான வரையறையாகும். ஜனங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவே தேவனை விசுவாசிக்கிறார்கள்; அவர்கள் காரியங்களை விட்டுவிட்டு தங்களை தேவனுக்கு என்று ஒப்புக்கொடுப்பது, ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே, மேலும் அவர்கள் அவருக்கு உண்மை உள்ளவர்களாக இருப்பது, பிரதிபலன் பெறுவதற்காகவே. மொத்தத்தில், இது எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டு, பிரதிபலன் பெற்று, பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்காகவே செய்யப்படுகின்றன. சமூகத்தில், மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகவே வேலை செய்கிறார்கள், மற்றும் தேவனுடைய வீட்டில், ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே ஜனங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு அதிகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறார்கள்: மனிதரின் சாத்தானிய சுபாவத்துக்கு இதைவிடச் சிறந்த சான்று எதுவும் இல்லை(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் என்னைப் பத்திய துல்லியமான உண்மைய வெளிப்படுத்தின. என்னோட அறியாமையயும் சுயநலத்தயும் நான் பார்த்தேன், நான் விரும்பாத ஒண்ண சந்திச்சப்போ எப்படி நான் ஜெபிச்சு தேவனுக்குக் கீழ்ப்படியணுங்கறதயும், நான் கிருபைக்கும் ஆசீர்வாதங்களுக்கும் பின்னாடி ஓட முடியாதுங்கறதயும் கத்துக்கிட்டேன். ஆனா, கொஞ்ச நாட்கள்லயே நான் மறுபடியும் அதே பிரச்சனையில சிக்கிக்கிட்டேன். நான் என் மாமா வீட்ல ஒரு வாரம் மட்டும் வேல செஞ்சிட்டு, அப்புறம் வேலைய விட்டுட்டு, அதுக்கப்புறமா, நான் வெறுமனே வீட்ல இருந்து என் கடமையில கவனம் செலுத்துனதால, சீக்கிரமாவே என்னோட பணம் தீர்ந்துபோயிருச்சு. என்னோட அடுத்த வேளை சாப்பாடு எங்கருந்து வரும்னோ இல்லேன்னா நான் எப்படி வேலை தேடப் போறதுன்னோ எனக்குத் தெரியல ஏன்னா, எனக்குப் பட்டமோ அல்லது வேலைக்கான எந்தத் தகுதிகளோ இல்லை. என்னோட கைபேசித் திட்டத்துல அதிக டேட்டாவை வாங்குறதுக்கு என் பெயர்ல எதுவும் இல்லை, பணமும் இல்ல. கூடுகைகள்ல கலந்துக்கவும் கடமையச் செய்யவும் உண்மையிலயே எனக்கு இணையதளம் தேவைப்பட்டுச்சு. இதப் பத்தி நெனச்சது என்னைய மறுபடியும் பலவீனமா உணர வெச்சுது, அதோடு, என்னால எந்த வாய்ப்பயும் பார்க்க முடியலன்னு தோனுச்சு. அப்போதான், என்னோட அம்மா சொன்னாங்க பெருந்தொற்று காரணமா, வாழுறதுக்கு அவங்களுக்கு எதுவுமே இல்ல, என்னால அவங்களுக்கு சில பொருட்களக் கொடுக்க முடியும்ன்னு அவங்க நம்புனாங்க. என் அம்மாவும் நான் இருந்த அதே கஷ்டத்துல இருந்தாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டது என்னை சோர்வடையச் செய்வதாவும் வேதனையாவும் இருந்துச்சு. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. மத்தவங்கள விட நான் ரொம்ப கஷ்டப்பட்டதாவும், என் வாழ்க்க ரொம்பவே கடினமா இருந்துச்சுன்னும் நெனச்சேன். தேவனோட சித்தத்தப் பத்தி என்னால தெளிவாப் புரிஞ்சுக்க முடியல. நான் தினமும் என்னோட கடமையில மும்முரமா இருந்ததால, தேவன் என்னை கவனிச்சுக்கணும், அப்படியிருக்க, என்னோட நிலைம ஏன் தொடர்ந்து மோசமடஞ்சு வந்துதுன்னு நெனச்சேன்?

அந்த நேரத்துல, நான் தேவனோட வார்த்தைகள அதிகமாக வாசிச்சேன், நிறையா துதி பாடல்களக் கேட்டேன். அவைகள்ல, தேவனோட வார்த்தைககளோட ரெண்டு பத்திகள் அவரோட சித்தத்தப் புரிஞ்சுக்க எனக்கு உதவுச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மக்கள் தேவன் மீதான தங்களின் விசுவாசத்தில், எதிர்காலத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறவே விரும்புகிறார்கள்; இதுவே அவர்கள் விசுவாசத்தில் உள்ள அவர்களின் குறிக்கோளாகும். எல்லா மக்களுக்கும் இந்த நோக்கமும் நம்பிக்கையும் உண்டு, ஆனால் அவர்களின் சுபாவத்தில் உள்ள சீர்கேடுகள் உபத்திரவங்கள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும். எந்தெந்த அம்சங்களில் எல்லாம் நீங்கள் சுத்திகரிக்கப்படாமல் சீர்கேட்டை வெளிப்படுத்துகிறீர்களோ, இந்த அம்சங்களில்தான் நீங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும்—இது தேவனுடைய ஏற்பாடாகும். தேவன் உனக்காக ஒரு சூழலை உருவாக்கி, நீ சுத்திகரிக்கப்படும்படி உன்னைக் கட்டாயப்படுத்துகிறார், இதனால் உன்னுடைய சொந்த சீர்கேட்டை நீ அறிந்து கொள்ள முடியும். இறுதியில், நீ மரிக்கவும் உன்னுடைய திட்டங்களையும் ஆசைகளையும் விட்டுவிட்டு, தேவனுடைய இறையாண்மைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியும் நிலையை எட்டுகிறாய். ஆகையால் மக்களுக்குப் பல வருட சுத்திகரிப்பு இல்லையென்றால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான துன்பத்தைச் சகிக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் எண்ணங்களிலும் இருதயங்களிலும் இருக்கிற மாம்ச சீர்கேட்டின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது. ஜனங்கள் எந்தெந்த அம்சங்களில் இன்னும் சாத்தானின் அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிறார்களோ, எந்தெந்த அம்சங்களில் இன்னும் அவர்களுடைய சொந்த ஆசைகளையும் அவர்களுடைய சொந்தக் கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்களோ, அந்த அம்சங்களில்தான் அவர்கள் பாடுபட வேண்டும். பாடுகளின் வாயிலாக மட்டுமே பாடங்களை கற்றுக்கொள்ள முடியும், அதாவது சத்தியத்தை அடைய முடியும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், வேதனையான உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலமே பல சத்தியங்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் அடையாளங்கண்டு கொள்ளவும், அல்லது வசதியான மற்றும் சுலபமான சூழலில் அல்லது சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது தேவனுடைய நீதியான மனநிலையைப் புரிந்துகொள்ளவும் ஒருவராலும் முடியாது. அது சாத்தியமற்றதாகும்!(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). “ஜனங்கள் எப்பொழுதும் தங்களுக்குள் தேவனிடம் வீணான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் எப்பொழுதும், ‘நாங்கள் எங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறி, கடமைகளைச் செய்கிறோம், ஆகையால் தேவன் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்; தேவன் கோருவதை நாங்கள் செய்கிறோம், ஆகையால் தேவன் எங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தேவனை விசுவாசிக்கையில் பலருடைய இருதயங்களிலும் இதுபோன்ற காரியங்கள் இருக்கின்றன. … ஜனங்கள் மிகவும் உணர்ச்சியற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை, ஆனாலும் அவர்கள் தேவனை குறை கூறுகிறார்கள். அவர்கள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வதில்லை. ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஆனாலும் அவர்கள் சத்தியத்தின்மீது விருப்பங்கொள்ளாமல், மாம்சீக இன்பங்களுக்காக ஏங்குகின்றனர். அவர்கள் எப்பொழுதும் ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையின் அனுபவம் ஆகியவற்றின் மீதே நாட்டமுள்ளவர்களாக இருக்கின்றனர், மேலும் மனுஷனிடம் தேவன் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் பெரிதானவை என்றே எப்பொழுதும் குறை கூறுகின்றனர். அவர்கள் தேவன் தங்களைக் கிருபையோடு நடத்த வேண்டும் என்றும், தங்களுக்கு அதிகக் கிருபையைக் கொடுக்க வேண்டும் என்றும், மேலும் தங்களுடைய மாம்சீக சரீர இன்பத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அவர்கள் உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கிறவர்களா? … இந்தக் காரியங்களைக் கூறுவதென்றால், ஜனங்களுக்குக் கொஞ்சங்கூட அறிவும் விசுவாசமும் இல்லை. இவை அனைத்தும் தங்கள் வீணான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் தேவன் மீது மனுஷன் கொண்டிருக்கும் அதிருப்தியிலிருந்து உருவாகின்றன; இவை அனைத்தும் மனுஷனின் இருதயத்திலிருந்து வெளியே கொட்டப்படும் காரியங்களாக இருக்கின்றன, மேலும் இவை முற்றிலும் மனுஷனுடைய சுபாவத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவையாக இருக்கின்றன. இந்தக் காரியங்கள் மனுஷனுக்குள் இருக்கின்றன, மேலும் அவர்கள் இவற்றை அப்புறப்படுத்தவில்லை என்றால், இவை அவர்களை எந்த நேரத்திலும் அல்லது எந்த இடத்திலும் தேவனைக் குற்றப்படுத்த மற்றும் அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யலாம். தேவனுக்கு எதிராக தேவதூஷணம் செய்யக்கூடியவனாக மனுஷனும் இருப்பான், மேலும் அவர்கள் எங்கேயும், எந்த நேரத்திலும், மெய்யான வழியிலிருந்து விலகிச் செல்லலாம். இது ஒரு இயல்பான நிகழ்வாகும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள்ல இருந்து நான் ஒரு காரியத்தக் கத்துக்கிட்டேன். தினமும் என்னோட கடமையில கவனம் செலுத்தறதால, ஒரு கட்டத்துல நான் என்னோட குடும்பத்த கவனிக்காம இருந்தேன். அப்படி என்னைய ஒப்புக்கொடுப்பதால, தேவன் எனக்குப் பலன் அளிக்கணும், என்னைய ஆசீர்வதிக்கணும்னு நெனச்சேன். நான் தேவனிடத்துல இருந்து ஏராளமான பலன்களப் பெற விரும்பல, சமாளிக்கறதுக்கு எனக்கு ஒரு வேலை கிடச்சா போதும், எனக்கு வேலை கிடச்சதுக்கப்புறமா, என்னோட கடமைய என்னால சிறப்பா செய்ய முடியும். அது ரொம்ப அதிகமானது இல்லன்னும், நியாயமான கோரிக்கைதான்னும் நான் நெனச்சேன். ஆனா, தேவனோட வார்த்தைகள சிந்திச்சுப் பார்த்தப்போ, அந்த ஆடம்பரமான விருப்பங்களும் ஆசைகளும் நான் தேவனுக்குக் கீழ்ப்படியாம இருந்ததக் காட்டுச்சுங்கறத நான் பார்த்தேன். தேவன் எனக்காக இதையும் அதையும் செய்யணும்னு நான் கேட்டேன். ஒருவர் எப்போதும் தேவனிடத்துல நியாயமற்ற கோரிக்கைகளக் கொண்டிருந்தா, சத்தியத்தக் கடைப்பிடிப்பது அவங்களுக்கு கடினமா இருக்கும், அவங்களோட கோரிக்கைகள் நிறைவேறாதப்போ அவங்க தேவனுக்கு துரோகம் செஞ்சு அவர விட்டுட வாய்ப்பிருக்கு அப்படிங்கறத தேவனோட வார்த்தைகள் எனக்குக் காட்டுச்சு. அப்பத்தான் நான் சந்திச்ச கஷ்டங்கள், வெளியில இருந்து பார்த்தால், நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்ங்கறதப் போலவும், அது ரொம்பவே பரிதாபமானதுங்கறதப் போலவும் இருந்துச்சு, ஆனா, உண்மையில, நான் துன்பத்தின் சோதனையக் கடந்துபோய்க்கிட்டு இருந்தேன்ங்கறது புரிஞ்சுச்சு. என்னால அதத் தாங்க முடியலன்னு நெனச்சேன், ஆனா, தேவன் என்னையக் கைவிடல. அதன் மூலமாதான், என்னோட விசுவாசத்துல இருந்த என்னோட தப்பான நோக்கங்களயும் களங்கத்தயும் என்னால பாக்கவும், ஜனங்கள பின்பற்றணும்னு சொல்லி தேவன் எதிர்பாக்குற சரியான திசைய நோக்கி அவற்றத் திருப்பவும் முடிஞ்சுச்சு. அதிகமா பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு நல்ல வேலை எனக்கு வேணும்னு நான் விரும்பலயா? எனக்கு அதிகமான மொபைல் டேட்டாவும் என்னோட அடிப்படைத் தேவைகளும் சந்திக்கப்படணும்னு நான் விரும்பலயா? நான் என்னோட கடமையத் தடையில்லாமலும் தொந்தரவு இல்லாமலும் செய்யணும்னு நான் விரும்பலயா? அப்படின்னு என்னால ஆச்சரியப்படாம இருக்க முடியல. ஆமா, நான் விரும்புனேன். அப்படியிருக்க, நான் இதயெல்லாம் பெறுவேன்னு நம்புறதால, தேவன் ஏன் எனக்கு அவற்றப் பெற ஏற்பாடு செய்ய மாட்டாரு? நான் அந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலி இல்லையா, அந்த அளவுக்கு துரதிர்ஷ்டசாலியா? நிச்சயமா இல்ல—நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலிதான். இது என் மீது வர்ற தேவனோட அன்பா இருந்துச்சு. என்னை சத்தியத்தத் தேட வைக்கவும், பாடங்களக் கத்துக்க வைக்கவும், என்னோட விசுவாசத்துல இருக்குற களங்கங்கள சுத்திகரிக்க வைக்கவும் தேவன் எனக்கு அந்தச் சூழ்நிலைய அமச்சுக் கொடுத்தாரு. எந்தத் துன்பத்தையும், பாதகமான சூழ்நிலைகளயும் அனுபவிக்காம, நான் என்னோட விசுவாசத்த முழுவதுமா நல்ல, வசதியான சூழல்ல கடைப்பிடிச்சிருந்தா தேவன் மீதான என்னோட விசுவாசமும் அன்பும், நோக்கங்களயும், ஆசைகளயும் களங்கங்களயும் கொண்டிருக்கும், தேவன் அத ஏத்துக்க மாட்டாரு. எந்தச் சூழ்நிலையிலயும் ஜனங்கள் தம்மிடத்துல உண்மையானவங்களா இருக்கணும்னும், நாம அவரிடத்துல பக்தியுள்ளவங்களாவும் கீழ்ப்படிதலோடும் இருக்கணும்னும் தேவன் எதிர்பாக்குறாரு. இது ஒரு குழந்தையப் போலானது. அவங்களோட அப்பா தங்களுக்கு வசதியான பொருளாதார வாழ்க்கையக் கொடுக்கும்போது மட்டும் அவங்க அவரை நேசிச்சு, அப்படி இல்லாதப்போ, தங்களோட அப்பாவ வெறுத்து, “நான் விரும்புற எல்லாத்தயும் நீங்க கொடுக்கலேன்னா, நான் உங்கள மதிக்க மாட்டேன், உங்கள என்னோட அப்பாவா ஏத்துக்க மாட்டேன்” அப்படின்னு சொன்னா, அது எப்படிப்பட்ட குழந்தை? அது மனசாட்சியும் பகுத்தறிவும் இல்லாத ஒரு அன்பற்ற குழந்தை. தேவனுக்கே நன்றி! நானும் அப்படிப்பட்ட சூழ்நிலையத்தான் சந்திச்சுக்கிட்டிருந்தேன். என்னோட விசுவாசத்துல உள்ள களங்கங்களச் சுத்திகரிக்க அந்த விஷயங்களக் கடந்து போறது எனக்கு வேண்டிய ஒண்ணாத்தான் இருந்துச்சு.

நான் தேவனோட வார்த்தைகள்ல வேறொரு காரியத்தயும் வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்று தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்பது என்ன? தேவனின் வார்த்தையை உங்களுடைய வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதும், அவரைப் பற்றிய உண்மையான அன்பை அடைவதற்காக தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாய் அறிந்து கொள்வதும் ஆகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தேவன் மீதான விசுவாசம் என்பது நீ தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனை நேசிப்பதும், தேவனின் ஒரு சிருஷ்டியால் செய்யப்பட வேண்டிய கடமையைச் செய்வதுவும் என்று கூறலாம். இது தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் ஆகும். தேவனின் அருமையைப் பற்றிய அறிவை நீ அடைய வேண்டும், தேவன் ஆராதிப்பதற்கு எவ்வளவு தகுதியானவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளில், தேவன் எவ்வாறு இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார், அவற்றை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார். இவை தேவன் மீதான உன் விசுவாசத்தின் அத்தியாவசியமானவை. தேவன் மீதான விசுவாசம் என்பது முக்கியமாக மாம்சத்திற்குரிய வாழ்க்கையிலிருந்து தேவனை நேசிக்கும் வாழ்க்கைக்கு மாறுவது ஆகும். அது சீர்கெட்ட வாழ்க்கையிலிருந்து தேவனின் வார்த்தைகளுக்குள் வாழ்வதுவரை ஆகும். அது சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து வெளிவந்து தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது ஆகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் மாம்சத்திற்குக் கீழ்ப்படியாமையையும் அடைய முடிவது ஆகும். இது உன் முழு இருதயத்தையும் பெற தேவனை அனுமதிப்பது, உன்னை பரிபூரணமாக்க தேவனை அனுமதிப்பது, மேலும் சீர்கேடு நிறைந்த சாத்தானின் மனநிலையிலிருந்து உன்னை விடுவிப்பதும் ஆகும். தேவன் மீதான விசுவாசம் முக்கியமாக இருப்பதால், தேவனின் வல்லமையும் மகிமையும் உன்னிடத்தில் வெளிப்படும், இதனால் நீ தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், தேவனின் திட்டத்தை நிறைவேற்றவும், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு சாட்சி அளிக்கவும் முடியும். தேவன் மீதான விசுவாசம் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணும் விருப்பத்தைச் சுற்றி இருக்கக்கூடாது, அது உன் சுய மாம்சத்திற்காகவும் இருக்கக்கூடாது. இது தேவனை அறிந்துகொள்வதையும், பேதுருவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், ஒருவர் இறக்கும் வரை தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் பற்றியதாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் இவையே. தேவனை அறிந்து அவரை திருப்திப்படுத்துவதற்காக ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ண வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் புசித்துப் பானம்பண்ணுவது உனக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவைத் தருகிறது, அதன்பின்தான் உன்னால் அவருக்குக் கீழ்ப்படிய முடியும். தேவனைப் பற்றிய அறிவால் மட்டுமே உன்னால் அவரை நேசிக்க முடியும், மேலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோள் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்”). சர்வவல்லமையுள்ள தேவனை நான் விசுவாசிச்ச உடனேயே, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் வாசிச்சேன், ஆனா, அந்த நேரத்துல உண்மையிலயே எனக்கு அது புரியல. அந்தக் கடினமான நேரங்களயெல்லாம் கடந்து வந்த பிறகுதான் தேவனோட சித்தத்தப் பத்தி எனக்குக் கொஞ்சம் புரிஞ்சுச்சு. சரியான விசுவாசம்ங்கறது, நான் தேவனுக்காக என்னையவே ஒப்புக்கொடுக்கற வரை, அவர் என்னைக் கவனிச்சுப் பாதுகாத்துக்கணும், என்னோட தேவைகளப் பூர்த்தி செய்யணும்னு நான் நெனச்சிருந்ததப் போல இல்ல. விசுவாசத்தப் பத்திய அப்படிப்பட்ட பார்வை சரியானது இல்ல. நம்மளோட விசுவாசத்துல, நாம தேவனோட வார்த்தைகள அனுபவிச்சு, எல்லாத்துலயும் அவரை திருப்திப்படுத்தணும். தேவன் கொடுத்தாலும் சரி, எடுத்தாலும் சரி, நாம அவருக்குக் கீழ்ப்படிஞ்சு நம்மளயே உண்மையா கொடுக்கணும். ஜனங்களோட விசுவாசத்துல, அவங்க பின்தொடர்றது எல்லாமே, தேவனை அவரோட வார்த்தைகளின் மூலமா அறிஞ்சுக்கறதும், அவரோட ஆளுகைக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியறதுமா இருந்தால், தேவன் அத்தகைய விசுவாசத்த அங்கீகரிக்குறாரு. கடைசிவர தேவனை நேசிச்சு, சாகும்வர அவருக்குக் கீழ்ப்படிந்த பேதுருவப் போல இருக்குற யாரா இருந்தாலும், அவன்தான் தேவன் பரிபூரணப்படுத்துற நபர். நல்லவேளையா, இந்தச் சூழ்நிலையின் மூலமா விசுவாசத்தப் பத்திய சரியான பார்வையத் தெரிஞ்சுக்க தேவன் என்னையப் பிரகாசிப்பிச்சாரு, அதோடு, இது எனக்கு நெறஞ்ச சமாதானத்தயும் அமைதியயும் கொடுத்துச்சு. நான் தேவனிடத்துல ஒரு கீழ்ப்படிதலின் ஜெபம் செஞ்சு, அந்தக் கஷ்டத்தத் தாங்குற பலத்த எனக்குக் கொடுங்கன்னு சொல்லி அவர்கிட்ட கேட்டேன்.

ஆச்சரியம் என்னான்னா, அடுத்த நாள், என்னோட மாமா எனக்குக் கொஞ்சம் பணம் அனுப்பி, கொஞ்சம் சாப்பாடும் மொபைல் டேட்டாவும் வாங்க உதவுனாரு. எனக்கு ஒரு வழியக் கொடுத்த தேவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.

அதுமட்டுமல்லாம, எப்படியோ எனக்குப் பகுதி நேர வேலையும் கிடச்சுச்சு. அது அவ்ளோ சுலபமான வேலை இல்ல, ஆனாலும், என்னோட அடிப்படைத் தேவைகளப் பூர்த்தி செய்யற அளவுக்கு என்னால சம்பாதிக்க முடிஞ்சுச்சு. அத தேவன் எனக்காக ஏற்பாடு செஞ்சிருந்தார்ன்னு எனக்குத் தெரியும். தேவனோட திட்டங்களயும் ஏற்பாடுகளயும் ஏத்துக்கறதும் அதுக்குக் கீழ்ப்படியறதும் யதார்த்த வாழ்க்கையின் மூலமா நாம கத்துக்க வேண்டிய ஒரு அடிப்படை பாடம்ங்கறதயும் நம்மளோட அனுபவங்களின் மூலமா தேவனோட சர்வவல்லமையுள்ள ஆளுகையயும் இரகசிய வழிகளயும் தெரிஞ்சுக்க அது நமக்கு உதவும்ங்கறதையும் நான் உண்மையிலயே உணர்ந்தேன். வாழ்க்கையில எல்லா வகையான பிரச்சினைகள்லயும் நாம கொண்டிருக்க வேண்டிய அணுகுமுறை இதுதான். அது தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய எனக்கு நினைவூட்டுச்சு. “அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய ராஜரீகத்தையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக் கொள்ள வேண்டும். ‘காத்திருத்தல்’ என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். ‘தேடுவது’ என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனை மிகுந்த நோக்கங்களைக் கவனித்து புரிந்து கொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகளையும் புரிந்து கொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்து கொள்வதாகும். ‘கீழ்ப்படிதல்’ என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக் கொள்வது, அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக் கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் குறிக்கிறது. தேவனுடைய ஏற்பாடுகள் மற்றும் ராஜரீகத்தின்கீழ் உள்ள அனைத்தும் இயற்கையான விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. மேலும், உனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கட்டளையிட தேவனை அனுமதிக்க நீ தீர்மானித்தால், நீ காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், நீ தேட கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீ கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய விரும்பும் ஒவ்வொரு நபரும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை இதுதான், தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணம் இதுதான். அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்க, அத்தகைய குணத்தைக் கொண்டிருக்க, நீ கடினமாக உழைக்கவேண்டும். உண்மையான யதார்த்தத்திற்குள் நீ நுழைவதற்கு ஒரே வழி இதுதான்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் முன்பே வாசிச்சிருந்தேன், ஆனா, சில கஷ்டமான காலங்கள அனுபவிச்சதுக்கு அப்புறமா அத மறுபடியும் வாசிச்சப்போ, வித்தியாசமா உணர்ந்தேன். ஒரு பிரச்சனைய எதிர்கொள்ளுறப்போ ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய முதல் அணுகுமுறையே தேவனோட சித்தத்த நாடுறதும், காத்திருப்பதும் கீழ்ப்படியறதுதான்ங்கறத தேவனோட வார்த்தைகள்ல இருந்து என்னால பார்க்க முடிஞ்சுச்சு. ஆனா, இது ஒண்ணுமே செய்யாம காத்திருக்கறது அல்ல. அதுல ஜெபிக்கறதும், தேவனோட வார்த்தைகள வாசிக்கறதும், தேவனோட சித்தத்தத் தேடுறதும், அதோடு, உங்களப் பத்தி சிந்திச்சுப் பாக்கறதும் அடங்கும். இது மூலமா, உங்களோட சரியான நிலைமய நீங்க தெரிஞ்சுக்கலாம், அதோடு, நீங்க எதுல பிரவேசிக்கணும்ங்கறதப் புரிஞ்சுக்கலாம். இப்படிப்பட்ட தேடுதல் மூலமாவும் அனுபவத்தின் மூலமாவும், தேவனோட சர்வவல்லமையுள்ள ஆளுகையயும் அவரோட உண்மையான செயல்களயும் நம்மால பார்க்க முடியும்.

முதல்ல, நான் அந்தக் கடினமான பகுதி நேர வேலைய ஒரு மாசம் மட்டுந்தான் செய்ய விரும்புனேன், அதனால, சமாளிக்கறதுக்கு என்னால போதுமான அளவு சம்பாதிக்க முடியும் அதோட, மீதியுள்ள நேரத்த என்னோட கடமைய செய்ய பயன்படுத்த முடியும். ஆனா, என்னோட கைபேசியில ஒரு பிரச்சன இருந்துச்சு. இன்னும் ஒரு மாசம் வேலை செஞ்சா இன்னொரு கைபேசியும் மடிக்கணினியும் வாங்கலாம்னு நெனச்சேன். ஆனா, நான் ஒரு திருச்சபைத் தலைவரா இருந்ததால, கையாளறதுக்கு எனக்கு நிறைய திருச்சபைப் பணிகள் இருந்துச்சு. என்னோட கடமையச் செய்றதுதான் எனக்கு ரொம்ப முக்கியமான காரியமா இருந்துச்சு—அது என்னோட முன்னுரிமையா இருந்துச்சு, அதனால, என்னோட வேலைய விட்டுட முடிவு செஞ்சேன். மேலிடத் தலைவி என்னோட நிலமைய தெரிஞ்சுக்கிட்ட பிறகு, அவங்க, என்னோட கடமைய சிறப்பா செய்ய எனக்கு உதவறதுக்காக, ஒரு மடிக்கணினியயும் இணைய அலைவரிசையயும் வாங்க திருச்சபை எனக்கு உதவக்கூடும்ன்னு சொன்னாங்க. அதைக் கேட்ட நான் ரொம்ப உற்சாகமாக இருந்தேன்—என்னால வெளிப்படுத்தக் கூடியத விட நான் ரொம்ப உற்சாகமாக இருந்தேன். இது முழுக்க முழுக்க தேவனோட கிருபைன்னும், நான் என்னோட கடமைய சிறப்பா செய்ய தேவன் எனக்கு ஒரு பாதையத் திறக்குறாருன்னும் எனக்குத் தெரியும். தேவன் எனக்கு எந்த விஷயங்களயும் கடினமாக்கலங்கறத நான் பார்த்தேன். நான் உண்மையாவும் கீழ்ப்படிதலோடும் இருக்கணும்னு மட்டும்தான் தேவன் விரும்புனாரு. கஷ்டமான காலங்கள்ல தேவனோட அன்பை நான் தனிப்பட்ட முறையில அனுபவிச்சேன். இதுக்கு முன்னாடி, தேவன் மனுஷன் மேல வச்சிருந்த அன்பப் பத்தி நான் கற்பன செஞ்சிருந்தது தெளிவில்லாததா இருந்துச்சு, யதார்த்தத்தோடு ஒத்துப்போகல. அந்த யதார்த்த வாழ்க்கை சூழ்நிலைகள் மூலமா இந்தப் பாடங்களக் கத்துக்கிட்ட பிறகுதான் நான் அத உண்மையா புரிஞ்சுக்கிட்டேன். இந்தச் சூழ்நிலைகள் மூலமா, நான் என்னோட அறியாமையயும் சுயநலத்தயும் பார்த்தேன். இது விசுவாசத்தப் பத்திய என்னோட தவறான பார்வைகள படிப்படியா மாத்தி சரியான பாதையில போக வழிவகுத்துச்சு. அது உண்மையிலயே தேவன் என்மீது வச்ச அன்பா இருந்துச்சு. கஷ்டமான காலங்கள்ல இருக்க வேண்டிய சரியான அணுகுமுறையயும் தேவனை எப்படி அணுகுவதுங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இதுக்கு முன்னாடி நான், எனக்கு விசுவாசம் இருக்குற வரை, தேவன் எனக்கு எல்லாத்தையும் குடுக்கணும்னு எப்பவுமே நெனச்சேன். விசுவாசிப்பதால, நாம எப்பவுமே தேவனிடத்துல எதையாவது கேட்டுக்கிட்டே இருக்கக் கூடாதுங்கறதயும், அதுக்குப் பதிலா, நாம தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு, எல்லாத்துலயும் அவரோட சித்தத்த நிறைவேத்தணும்ங்கறதயும் இப்ப நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள்லயே, நான் வேற ஒரு சோதனைய சந்திச்சேன். அந்த வேலையில சேர்ந்து ஒரு மாசம் கழிச்சு, எனக்கு சம்பளம் கிடச்ச அன்னைக்கு, திடீர்னு தெருவுல போகுறப்போ என்னோட பணத்தக் கொள்ளையடுச்சுட்டாங்க. என்னோட சம்பளத்துல பாதிய பறிச்சுட்டாங்க. ஆனா, தேவனோட பாதுகாப்புக்கு நன்றி, அவங்ககிட்ட கத்திகள் இருந்தாலும், அவங்க என்னையக் காயப்படுத்தல. தேவன் தன்னோட நல்ல நோக்கத்தாலதான் அத நடக்க அனுமதிச்சாருன்னு எனக்கு உடனே தோணுச்சு. யோபு மிகப் பெரிய ஐசுவரியவானா இருந்தான், ஆனா, அவனோட உடமைகள் எல்லாமே எடுத்துக்கொள்ளப்பட்டு, அவனோட பிள்ளைகள் எல்லாருமே மரிச்சப்போ, அவன் நிபந்தனையில்லாம கீழ்ப்படிஞ்சு, எந்தக் குறையும் சொல்லாம, இன்னும் தேவனோட நாமத்தத் துதிச்சான். நான் பணக்காரனா இல்ல—நான் ஒரு சாதாரண நபரா இருந்தேன். கொஞ்சம் பணம் திருடப்பட்டுச்சு, எனக்கு அது தேவைப்பட்டாலும் கூட, நான் செய்யுறதுக்கான நிறைய திட்டங்கள வச்சிருந்தாலும் கூட, விசுவாசத்துலயும் கீழ்ப்படிதல்லயும் யோபின் முன்மாதிரியப் பின்பற்ற நான் தயாரா இருந்தேன். “தேவனே, நீர் புரிஞ்சுக்க முடியாதவர். என்ன நடந்துச்சுன்னு என்னால முழுமையா புரிஞ்சுக்க முடியல. ஆனா, உமது சித்தம் அதுல மறஞ்சிருக்குன்னு நான் விசுவாசிக்கிறேன். உம்மோட ஏற்பாட்டுக்குக் கீழ்ப்படிய நான் தயாரா இருக்கேன். நான் எதிர்மறையான நிலைக்கு ஆளாகாம இருக்கும்படி தயவு செஞ்சு என்னோட இருதயத்தத் தொட்டு என்னை வழிநடத்துங்க” அப்படின்னு நான் ஜெபிச்சேன். என்னோட ஜெபத்துக்குப் பிறகு, எதுவுமே நடக்காதது போல நான் ரொம்பவே அமைதியா உணர்ந்தேன். எப்பொழுதும் போல எந்த வருத்தமும் கவலயும் இல்லாம என்னோட கடமைய நிதானமா செஞ்சு வந்தேன். தேவனோட ஆளுகையப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி இருந்த என்னோட அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்க்கயில, அது முற்றிலுமா வேறுபட்டதா இருந்துச்சு. ஏன்னா, என்னைச் சுத்திக்கரிக்கவும் இரட்சிக்கவும் தேவன் காரியங்கள ஏற்பாடு செஞ்சாருங்கறத நான் கத்துக்கிட்டேன். அது தேவனோட அன்பப் பத்திய என்னோட புரிதல ஆழமாக்குச்சு. தேவனோட அன்பின் வெளிப்பாடு நமக்குப் பொருளாதார ஆசீர்வாதங்கள கொடுப்பதுக்காக மட்டும் அல்ல. ஏன்னா அந்த பொருட்கள் நம்மளோட மாம்ச விருப்பங்கள மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். தேவனோட மெய்யான அன்புங்கறது, அவரோட வார்த்தைகளோட நியாயத்தீர்ப்பு, உபத்திரவங்கள், புடமிடுதல அனுபவிக்கறது மூலமாநாம சத்தியத்தக் கத்துக்கறதுக்காகவும் நாம ஏன் விசுவாசிக்கணும், தேவன கனம்பண்ணுறதும் பொல்லாப்புக்கு விலகுறதும் எப்படி, தேவன நேசிக்கறதும் திருப்திப்படுத்துறதும் எப்படிங்கறதத் தெரிஞ்சுக்கறதுக்காகவும், கடைசியா, தேவனோட எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியணும்ங்கறதுக்காகவும்தான். இது தேவனோட வார்த்தைகள் சிலவற்ற எனக்கு நினைவுபடுத்துது. “தேவன் மீதான மனுஷனின் அன்பானது தேவனின் சுத்திகரிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்படுகிறது. நீ தேவனின் கிருபையை மட்டுமே அனுபவித்து, அமைதியான குடும்ப வாழ்க்கை அல்லது பொருள் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்து, நீ தேவனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தை வெற்றிகரமானதாகக் கருத முடியாது. தேவன் ஏற்கனவே மாம்சத்தில் ஒரு கட்ட கிருபையின் கிரியையை மேற்கொண்டுள்ளார், ஏற்கனவே மனுஷனுக்குப் பொருள் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார், ஆனால் மனுஷனைக் கிருபை, அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மட்டுமே பரிபூரணமாக்க முடியாது. மனுஷனின் அனுபவங்களில், அவன் தேவனின் சிறிதளவு அன்பை எதிர்கொள்கிறான், தேவனின் அன்பையும் இரக்கத்தையும் காண்கிறான், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றை அனுபவித்திருப்பதால், தேவனின் கிருபை அவருடைய அன்பு மற்றும் இரக்கம் ஆகியவற்றால் மனுஷனை பரிபூரணமாக்க இயலாது என்பதையும், அவற்றால் மனுஷனுக்குள் எது சீர்கெட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த முடியாது என்பதையும், அவற்றால் மனுஷனை அவனது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விரட்டவோ, அல்லது அவனது அன்பையும் விசுவாசத்தையும் பரிபூரணமாக்கவோ இயலாது என்பதையும் அவன் காண்கிறான். தேவனுடைய கிருபைக்கான கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கிரியையாகத்தான் இருக்கிறது, மேலும் தேவனை அறிந்து கொள்வதற்காக மனுஷன் தேவனின் கிருபையை அனுபவிப்பதை சார்ந்திருக்க முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்”). “மனுஷனை தேவன் பரிபூரணமாக்குவது எவ்வாறாக நிறைவேற்றப்படுகிறது? இது அவருடைய நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், கடுங்கோபமும், மகத்துவமும், நியாயத்தீர்ப்பும், சாபமும் கொண்டது, மேலும் அவர் மனுஷனை முதன்மையாக அவருடைய நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணமாக்குகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்”). தேவனோட வார்த்தைகள வாசிக்குறப்போ, கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியை உண்மையிலயே மனிதகுலத்த சுத்திகரிச்சு மாத்துறதுக்காகத்தான்ங்கறத நான் ஆழமா உணருறேன். நம்மளோட விசுவாசத்துல இருக்குற அசுத்தங்களும் நம்மளோட சீர்கெட்ட மனநிலைகளும் தேவனோட வார்த்தைககளோட நியாயத்தீர்ப்பு, உபத்திரவங்கள், புடமிடுதல் மூலமா மட்டுமே சுத்திகரிக்கப்பட முடியும். தேவனோட கிருபைய சார்ந்துக்கிட்டா மட்டும் அத அடைய முடியாது. தேவனோட வார்த்தைகள் இல்லாம, இந்தக் கஷ்டமான அனுபவங்கள் இல்லாம இந்த விஷயங்கள் எனக்கு ஒருபோதும் புரிஞ்சிருக்காது. சர்வவல்லமையுள்ள தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

ஒரு “நல்ல தலைவரின்” சிந்தனைகள்

என்னோட சின்ன வயசுலருந்தே என்னோட பெற்றோர், நட்போடு பழகணும், அணுகக்கூடியவளாவும் அனுதாபத்தோடும் இருக்கணும், மத்தவங்களுக்குப் பிரச்சனைகளோ...

என் குடும்பத்தின் துன்புறுத்தலை நான் எப்படி எதிர்கொண்டேன்

நான் சின்னவளா இருந்தப்போ, என் அம்மா அடிக்கடி: “ஒரு பொண்ணுக்கு, ஒரு நல்ல கணவனும் ஒரு இணக்கமான குடும்பம் அமையறத விட சிறந்த வாழ்க்க எதுவும்...

நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

நான் ஒரு ஏழ்மயான பின்தங்கின கிராமப்புற குடும்பத்தில பிறந்தேன். சிறு குழந்தையா இருந்தப்பவே, என்னோட அப்பா நான் கடினமா படிக்கணும், அப்பதான்...

மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கிறிஸ்தவத்துல ஆர்வமுள்ளவளா இருந்தேன். ஆனா என்னோட குடும்பத்தார் பௌத்த மதத்தச் சேர்ந்தவங்களா இருந்ததால நான்...

Leave a Reply