புதிய விசுவாசிகளுக்கு நீர்பாய்ச்சுவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்

ஜனவரி 7, 2023

இந்த வருஷம் ஜனவரியில, நான் திருச்சபையில் புதுசா வந்தவங்களுக்கு நீர்ப்பாய்ச்சிட்டு இருந்தேன். புதுசா வந்த சகோதரி ரேன் ஜியா அவங்க கணவர் ரெண்டு பேருக்கும் நான் பொறுப்பா இருந்தேன். மேற்பார்வையாளர் என்கிட்ட ரேன் ஜியாவோட கணவர் அப்ப தான் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய பத்தி ஆராயத் தொடங்கியிருந்தாரு, ஒரு சில கூட்டங்களுக்கு மட்டுந்தான் வந்திருந்தாரு அதோட அதிகமான ஆதரவும் நீர்ப்பாய்ச்சுதலும் தேவைப்படும்னு என்கிட்ட சொன்னாங்க.

நான் ரேன் ஜியாவோட வீட்டுக்குப் போன ரெண்டு தடவையும் அவங்களுக்கும் அவங்க கணவருக்கும் இடையில வாக்குவாதம் உண்டாச்சு. நான் ஆராஞ்சு பாத்தப்போ, உலகப் போக்குகள பின்பற்றுவதுக்காகவும் பக்தியுள்ள விசுவாசியா இல்லாததுக்காகவும் அவங்க தன்னோட கணவர இழிவா பாத்தாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகள வெக்கறது, அதோட மெய்யான வழிய அப்ப தான் ஆராய ஆரம்பிச்ச அவங்க கணவர் கிட்ட கோபமா பேசுறது அவரோட முன்னேற்றத்துக்குத் தடையா இருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு. ஒரு தடவ, நாம எப்படி சகிப்புத்தன்மையோடும் பொறுமையோடும் ஜனங்கள அணுகணும்ங்கறத பத்தி அவங்களோட நான் ஐக்கியப்பட்டேன். நான் ஆச்சரியப்படும்படியா, அவங்க கோபமடைஞ்சு, தான் ஏற்கெனவே ரொம்ப பொறுமையா இருப்பதா சொன்னாங்க. அதோட, “அவரு விசுவாசிக்க விரும்பலைன்னா அப்படியே இருக்கட்டும். குறஞ்சபட்சம் அப்படியாவது என் நிலைய அவரு பாதிக்காம இருக்கட்டும்” அப்படின்னுகூட சொன்னாங்க. அவங்க அப்படி சொல்றத கேட்டு அவங்க கணவர் திருச்சபைய விட்டு வெளிய போய்டுவாருன்னு நான் ரொம்ப கவலபட்டேன். நான் என்னோட மனசுல, “இந்த சகோதரி ரொம்ப மோசமா திமிர் பிடிச்சவங்களா இருக்காங்க. அவங்க எப்பவும் சத்தம்போட்டு தன்னோட கோபத்த வெளிப்படுத்தி தன்ன பத்தி மட்டுமே கவலைப்படறாங்க, மத்தவங்க எப்படி உணர்வாங்கங்கறத பத்தி கவலப்படறதில்ல. நான் அவங்களோட ஒரு தீவிரமான ஐக்கியம் வெக்கணும் அதோட இந்த நிலம எவ்ளோ மோசமானதுங்கிறத அவங்களுக்குத் தெரியப்படுத்தணும்” அப்படின்னு கொற சொன்னேன். ஆனா நான் என்னோட கருத்த சொன்னப்ப ரேன் ஜியா, “நான் கோபப்பட விரும்பல. ஆனா அவரு நாள் முழுவதயும் நண்பர்களோட வெளிய போறதிலயும் இல்ல மஹ்ஜோங் விளையாடறதிலயும் செலவழிக்கிறாரு, தேவனோட வார்த்தைய படிக்கிறதில்ல. நான் எத்தன தடவ சொன்னாலும் அவரு சுத்தமா கேக்கவே மாட்டேங்குறாரு” அப்படின்னு சொல்லி திருப்பி வாதாடுனாங்க. இது கேட்ட உடனே எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துச்சு. “நீங்க தெளிவா சீர்கேட்டோட அறிகுறிகள காட்டுறீங்க ஆனா நீங்க உங்க கணவர மட்டும் விமர்சிக்கிறீங்க. உங்களுக்கு உங்களப் பத்தி தெரியவே இல்ல!” அப்படின்னு நான் நினைச்சேன். அதனால ஜனங்களோட அகந்தையான மனநிலைய பத்திய தேவனோட வெளிப்பாட்டின் ஒரு பகுதிய நான் அவங்களுக்காகப் படிச்சேன் அதோட அந்தஸ்துக்கான அதிக ஆசையின் விளைவா இருந்த அவங்க கோபத்த விளக்கிக் காண்பிச்சேன். அவங்க சொன்ன மாதிரி செய்யாத கணவர இணங்க வெக்கிறதுக்கு கோபப்படுறதும் நிதானத்த இழக்கிறதும் ஒரு சீர்கேடான மனப்பான்ம, அதோட அது சரி செய்யப்படணும். அந்த நேரத்துல, அவங்க ரொம்ப அகந்தையா இருந்தத விருப்பமில்லாம ஒத்துக்கிட்டாங்க, ஆனா அதுக்கப்புறம், அவங்க அப்படியே தான் இருந்தாங்க, கொஞ்சம் கூட மாறல. அதுக்கப்புறம், நான் அவங்களோட இன்னும் அதிக தடவ ஐக்கியப்பட்டேன் அதோட அவங்க கணவர நியாயமா நடத்தவும், எப்பவும் அவருடய தவறுகளயே பாத்துக்கிட்டு இருக்காம, தன்ன பத்தி தெரிஞ்சுக்கும்படி அவங்கள ஊக்கப்படுத்துனேன். ஆனாலும் அந்தச் சகோதரி சாக்கு சொல்லிட்டே இருந்தாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. நான் முதல்ல அவங்க கணவர் மெய்யான வழியில நிலைப்பட அவருக்கு உதவ அவர நெறைய கூட்டங்கள்ல கலந்துக்க செய்யணும்னு விரும்புனேன், ஆனா எதிர்பாராத விதமா அந்தக் கூட்டங்க எல்லாமே நிறுத்தப்பட்டுருச்சு.

அந்த நேரத்துல, நான் வெறுமனே தொடர்ந்து புகார் பண்ணிட்டிருந்தேன், ரேன் ஜியாவ நியாயந்தீர்க்கவும் செஞ்சேன்: “அவங்க ரொம்ப திமிர் பிடிச்சவங்க அதோட கணவர எப்பவும் கடுமையா திட்டறாங்க. அவங்களுக்கு மோசமான மனிதத்தன்மை இருக்குது? நான் அவங்களோட பல தடவ ஐக்கிப்பட்டுட்டேன், ஆனா அவங்க சத்தியத்த கடைப்பிடிக்கிறதில்ல கூட்டங்கள நடத்த உதவுவறதில்ல நான் உண்மைல இதுக்கு மேல அவங்களுக்கு நீர்ப்பாய்ச்ச விரும்பல.” ஒரு தடவ, என் கூட கூட்டாளியா இருந்த ஒரு சகோதரி கிட்ட இந்தப் பிரச்சினைய பத்தி பேசினேன், என் மனக்குறைகள எல்லாம் கொட்டித் தீர்த்தேன். அந்தச் சகோதரி எனக்கு ஒரு அனுபவ சாட்சி காணொளிய பரிந்துர பண்ணாங்க. காணொளியில இருந்த தேவனோட வார்த்தையோட ஒரு பகுதி உண்மையில என் மனச தாக்குச்சு. தேவனின் வார்த்தை கூறுகிறது: “மெய்யான வழியை ஆராயும் மக்களை கவனத்துடனும் புத்திசாலித்தனத்தோடும் அன்பைச் சார்ந்திருந்தும் நடத்த வேண்டும். இது ஏனெனில் மெய்யான வழியை ஆராயும் எல்லோரும் அவிசுவாசிகள்—அவர்கள் மத்தியில் இருக்கும் மதம் சார்ந்த மக்களும் கிட்டத்தட்ட அவிசுவாசிகளே—மற்றும் அவர்கள் யாவரும் வலுவற்றவர்கள்: தங்கள் கருத்துகளுக்கு இணங்காத எதையும் அவர்கள் முரண்படும் வாய்ப்புண்டு, தங்கள் சித்தத்துக்கு இணங்காத எந்த ஒரு சொற்றொடரையும் அவர்கள் மறுக்கக்கூடும். ஆகவே, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பரப்புவதற்கு நமக்கு சகிப்புத்தன்மை வேண்டும். இதற்கு நமது தரப்பில் மிகவும் அன்பு தேவை, மேலும் இதற்குச் சில முறைகளும் அணுகுமுறைகளும் தேவை. இருந்தாலும், எது முக்கியம் என்றால், அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் படித்துக் காட்டுதலே, மனிதனை இரட்சிக்க தேவன் வெளிப்படுத்தும் அனைத்து சத்தியங்களையும் எடுத்துக்கூறுதல், மற்றும் தேவனுடைய குரலையும் சிருஷ்டிகரின் வார்த்தைகளையும் அவர்களைக் கேட்க வைத்தல். இதன்மூலம் அவர்கள் பலன்களை அடைவார்கள்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சுவிசேஷத்தைப் பரப்புவது பொறுப்புள்ள எல்லா விசுவாசிகளுக்கான கடமையாகும்”). சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடிய ஒவ்வொருத்தரயும் நாம அன்பான அக்கறையோட நடத்தணும், அவங்களுக்கு ஆழமான பொறுமையோடவும் அன்போடவும் உதவியும் ஒத்தாசயும் செஞ்சு, சத்தியத்த பத்தி அவங்களோட ஐக்கியப்பட்டு அவங்கள தேவனுக்கு முன்னாடி கொண்டு வரணும்னு தேவன் கேக்குறாரு. இதுதான் சுவிசேஷத்த பகர்ற ஒவ்வொருத்தரோட பொறுப்புகளும் கடமைகளும். தேவனோட ஒவ்வொரு வார்த்தையிலும் வாக்கியத்தில இருந்தும் மனுஷ வாழ்க்கை மேல அவருக்கிருந்த அன்பான அக்கறைய என்னால உணர முடிஞ்சுது. அதனாலதான் அவரு நம்மகிட்ட இந்தக் கோரிக்கைகள வெச்சாரு. மனுக்குலத்த பத்தின தேவனோட அன்பயும் புரிதலையும் பத்தி யோசிச்சு பார்த்தப்போ, நான் வெட்கப்பட்டேன். நான் ரேன் ஜியாவ எப்படி நடத்துனேன்னு யோசிச்சேன். அவங்க கணவர்கிட்ட அவங்க கோவப்பட்டதுக்காக அவங்க கூட நான் கொஞ்ச தடவ ஐக்கியப்பட்டு அவங்க எந்த முன்னேற்றத்தயும் அடையாதப்போ, எனக்குக் கோபம் வந்துச்சு, என்னோட சொந்த விருப்பத்தோட அடிப்படையில அவங்கள விமர்சனம்பண்ண தேவனோட வார்த்தையின் பகுதிகள கண்டுபிடிச்சு, அவங்க பிரச்சினைகள ஆராஞ்சு, என் விரக்திய பத்தி அவங்க கிட்ட கொட்டித் தீத்து, அவங்களோட சொந்த உணர்வுகளயும் இல்ல அவங்க வளர்ச்சி பற்றியும் கொஞ்சம் கூட சிந்திச்சுப் பாக்கவே இல்ல. நான் என் கூட்டாளிக்கு முன்னாடி அவங்களுக்கு மனிதத்தன்மையே இல்லன்னு கூட சொன்னேன். என்னோட அன்பான இரக்கம் எங்க இருந்துச்சு? ரேன் ஜியா கடைசி நாட்களோட தேவனோட கிரியைய வெறும் ஆறு மாசமா தான் ஏத்துக்கிட்டு இருந்தாங்க இன்னும் நிறைய சத்தியத்த புரிஞ்சுக்கல, அதனால பிரச்சினைகள எதிர்கொள்றப்போ சீர்கேட்ட வெளிப்படுத்தறது அவங்களுக்கு இயல்பானது தானே? சத்தியத்தக் கடைப்பிடிக்கிறதுக்கு அவங்களுக்கு நான் அன்போட வழிகாட்டுதல கொடுக்கலங்கிறது மட்டுமல்லாம, நான் உண்மைல அவங்கள அலட்சியம் பண்ணேன். எனக்கு உண்மைல மனிதத்தன்மையே இல்ல. இதயெல்லாம் யோசிச்சு பார்த்தப்போ, ரேன் ஜியாகிட்ட சில தடவ ஐக்கிப்பட்ட அப்புறமும் எந்தப் பலனும் கிடைக்காததுக்குக் காரணம் நான் அன்போட ஐக்கியத்த கொடுக்கல, அதோட அவங்க பிரச்சினைகள தீக்கறதுக்கு சத்தியத்த பயன்படுத்தலங்குறத நான் புரிஞ்சுகிட்டேன். அதுக்குப் பதிலா நான் அவங்கள ஆணவத்தோடு அலட்சியம் பண்ணி அதோடு கொறச்சி மதிப்பிடவும் செஞ்சேன் அதோட கோபத்துல அவங்கள திட்டினேன். நான் அந்த மாதிரி நடந்துக்கிட்டு, சத்தியத்தப் புரிஞ்சுக்கவும் அவங்களோட நிலைய மேம்படுத்தவும் அவங்களுக்கு உதவணும்னு எப்படி எதிர்பார்த்தேன்? நான் ஜெபத்துல தேவனுக்கு முன்னாடி வந்தேன், என்னோட நோக்கங்கள சரி செய்யவும் என்னோட சீர்கேடான மனநிலைக்கு ஏத்த மாதிரி ரேன் ஜியாவ நடத்துவத நிறுத்தவும் தயாரா இருந்தேன்.

ஒரு நாள் தேவனோடு வார்த்தைகள்ல ஒரு பகுதிய நான் பார்த்தேன். “பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பவர்கள் இந்த நிலைகள் குறித்து இன்னும் அதிகமான அளவில் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் அனுபவங்களை அல்லது பிரவேசிப்பதற்குரிய வழிகள் குறித்து மட்டும் அதிக அளவில் பேசுவதாக இருந்தால், அது உங்கள் அனுபவம் அதிக அளவில் ஒருதலைப் பட்சமானதாக இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் உண்மையான நிலையை அறியாமலும், சத்தியத்தின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமலும், மனநிலையில் ஒரு மாற்றத்தினை பெற முடியாது. பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கோட்பாடுகளை அறியாமலும் அல்லது அது எப்படிப்பட்ட கனிகளைத் தருகிறது என்பதை அறியாமலும் இருந்து கொண்டு, பொல்லாத ஆவிகளின் கிரியையினை நீங்கள் தெளிவாக உணருவது என்பது கடினமானதாக இருக்கும். நீங்கள் பொல்லாத ஆவிகளின் கிரியைகளை அம்பலப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மனிதனுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி அந்த பிரச்சினையின் உள்ளார்ந்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டும்; மக்களின் நடத்தையிலுள்ள பல வழிவிலகல்களையும், தேவன் மீதான விசுவாசத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும், இதனால் அவர்கள் அவைகளை அடையாளம் கண்டுகொள்ளுவார்கள். குறைந்தபட்சம், அவர்கள் தங்களை எதிர்மறையாகவோ அல்லது செயலற்றவர்களாகவோ உணரும்படி நீங்கள் செய்து விடக்கூடாது. ஆனாலும், பெரும்பாலான மக்களுக்கு உண்மையில் கஷ்டங்கள் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், நீ காரணம் அறியாதவனாகவோ அல்லது ‘ஒரு பன்றியை பாடுவதற்குக் கற்பிக்க முயற்சி செய்பவனாகவோ’ நீ இருக்கக்கூடாது; அது முட்டாள்தனமான நடத்தை ஆகும். மக்கள் அனுபவிக்கும் பல கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வல்லமையை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு மக்களிடத்தில் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திக்கின்றனர் என்பதையும் அவர்களது குறைபாடுகளையும் பற்றிய புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும், எந்தவொரு விலகலோ அல்லது தவறோ செய்யாமல் நீ அந்த பிரச்சினைக்கான முக்கிய காரணங்களை ஆராய்ந்து அதன் மூலக்காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்த வகையான நபர் மட்டுமே தேவனுக்கு செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைந்து செயல்படத் தகுதி பெற்றவர் ஆவார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்”). தேவனோட வார்த்தைகள யோசிச்சுப் பார்த்தப்போ, அது சுவிசேஷத்தப் பகிர்றதா இருந்தாலும் சரி இல்ல புதுசா வர்றவங்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதா இருந்தாலும் சரி, ஜனங்களோட உண்மையான பிரச்சினைகளயும் நிலைகளயும் குறிச்சு நாம எப்பவும் விழிப்புடன் இருக்கணும், அதோட அவங்க பிரச்சினைகள உண்மையாவே தீக்கறதுக்கு தொடர்புடைய சத்தியங்கள ஐக்கியம் கொள்ளணும்னு உணர்ந்துக்கிட்டேன். அவங்களோட சிரமங்கள நீங்க புரிஞ்சுக்காம உங்க சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையில ஐக்கியம் கொண்டீங்கன்னா, அவங்க பிரச்சினைகள நீங்க தீக்கத் தவறுவது மட்டுமில்லாம நீங்க அவங்கள காயப்படுத்தவோ இல்ல புண்படுத்தவோ கூட வாய்ப்பிருக்கு. சில நேரங்கள்ல புதுசா வர்றவங்க சீர்கேட்டோட எதிர்மறைப்போக்கோட அறிகுறிகள காட்டும்போது, அதோட பல தடவ ஐக்கியங்கொள்றதும் அவங்கள மேம்படுத்த உதவாதப்போ, அவங்க பிரச்சனைகளப் பத்தி சத்தியத்த நாம தெளிவா ஐக்கியப்படுத்துனோமா அப்படின்னு முதல்ல நாம சிந்திச்சுப் பாக்கணும். நாம சத்தியத்த தெளிவா ஐக்கியப்படுத்தாததுனால அவங்க பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படலைன்னா, அப்போ நாம நம்ம கடமைய செய்யல அதோட நம்ம பொறுப்புகள நிறைவேற்றல. நான் ரேன் ஜியாவ எப்படி நடத்துனேங்கறத என்னால நினைச்சு பாக்காம இருக்க முடியல. அவங்க கணவர் மேல கோபப்பட்டத பாத்த அந்த சமயங்கள்ல, அவங்க திமிர் பிடிசச்வங்களா இருந்ததாவும் அவங்க கணவர அதிகாரம் பண்றதாவும் நான் வெறுமனே நினைச்சிட்டேன், அதனால நான் அவங்கள தொடர்ந்து விமர்சனம் பண்ணேன் அதோட அவங்களோட சொந்த சீர்கேடான மனநிலைய ஒத்துக்க அவங்கள கட்டாயப்படுத்துனேன், ஆனா முடிவில அவங்களோட பிரச்சினைகள் அப்பவும் தீர்க்கப்படாமயே இருந்துச்சு. என்னோட எண்ணங்கள அமைதிப்படுத்தி இந்தப் பிரச்சினைய பத்தி தியானிச்சதுக்கு அப்புறம்தான், ரேன் ஜியா பொறுமைய இழந்து கோபப்பட்டுட்டே இருந்தததுக்கான காரணம் தன்னோட கணவர் சீக்கிரமா மெய்யான வழியில ஒரு அடித்தளத்த அமைச்சு, கூட்டங்கள்ல தொடர்ந்து கலந்துக்க ஆரம்பிச்சு, பிரச்சினைகள எதிர்கொள்ளும்போது தேவனோட பாதுகாப்ப பெற்றிருக்கணும்னு அவங்க எதிர்பார்த்ததுதான். அதனால அவங்க கணவர் நண்பர்களோட வெளிய போறதிலும் இல்ல மஹ்ஜோங் விளையாடறதிலும் மும்முரமா இருந்ததயும், தேவனோட வார்த்தைகள படிக்காம இருந்ததயும் அவங்க பார்த்தப்போ, அவங்க கோபப்படுவாங்க. இந்தப் பிரச்சனைய பத்தி நான் அவங்களோட ஐக்கியம் கொண்டிருக்கல, அதனால ஐக்கியத்தில இருந்து எந்தப் பலனயும் நான் பாக்கல. உண்மைல, முக்கியமான பிரச்சன என்கிட்ட தான் இருந்துச்சு. புதுசா வந்தவங்ககிட்ட ஐக்கியம் கொள்ள அவங்க பிரச்சனைய நான் அடையாளங்காணல, அதோட அவங்களுக்கு மோசமான மனிதத்தன்மைன்னும் சத்தியத்த ஏத்துக்கறதில்லைன்னும் நியாயந்தீர்க்கக் கூட செஞ்சேன், அதோட அவங்களுக்கு நீர்ப்பாய்ச்சக் கூட விரும்பல. உண்மையில என்னப் பத்தி எனக்குத் தெரியல அதோட மத்தவங்க மேல கொஞ்சங்கூட அன்பே இல்ல. இது உணர்ந்தப்போ, நான் ரொம்ப வெக்கமாவும் குற்ற உணர்ச்சியாவும் உணர்ந்தேன். ரேன் ஜியா பத்தின என்னோட அணுகுமுறைய நான் திருத்திக்க வேண்டி இருந்துச்சு, அவங்களோட உண்மையான நிலை சம்பந்தமா ஐக்கியப்படவும் அதோட அவங்க பிரச்சினைகள தீர்க்க சத்தியத்த பயன்படுத்துவும் வேண்டியிருந்துச்சு.

ஒரு நாள் கழிச்சு, மறுபடியும் எங்க கூட்டத்துக்கான நேரம் வந்துச்சு. நான் போனதும், ரேன் ஜியா குறை சொல்ல ஆரம்பிச்சாங்க, அவங்க கணவர் கூட்டத்துக்கு வருவேன்னு தெளிவா சொன்னதாவும் ஆனா அப்பவும் வீடு திரும்பல்லைன்னும் சொன்னாங்க. அவங்க அவர தேடும் அக்கறை இல்லாதவரா கொறச்சி மதிப்பிட்டாங்க அதோட அவர் மேல இருக்குற நம்பிக்கைய விட்டுட விரும்புனாங்க. அதனால அவங்களோட சூழ்நிலைய கருத்துல வெச்சு நான் அவங்களோட ஐக்கிப்பட்டேன். நான்: “உங்க கணவர கூடி வரச் சொல்றதும் தேவனோட வார்த்தைகள படிக்கச் சொல்றதும் நல்ல நோக்கமா இருந்துச்சு, ஆனா அவர் மேல நாம ரொம்ப அதிகமான எதிர்பார்ப்புகள வெக்க முடியாது. அவரு நீங்க சொல்றதக் கேக்காத போது நீங்க கோபப்பட்டீங்கன்னா, அவர் இணங்கிப்போக வாய்ப்பிருக்காது” அப்படின்னு சொன்னேன். “ஜனங்க சாத்தானால ரொம்ப ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்காங்க அதோட சத்தியத்த நேசிக்கிறதில்ல, அதனால அவங்க சத்தியத்த தேடுறதும் ஜீவப்பிரவேசமும் ரொம்ப மெதுவா தான் வருது. ஒரு சின்ன நுண்ணறிவு இல்ல புரிதல அடயறதுற்கு நெறைய ஐக்கியம், அனுபவம் அதோட பின்னடைவுகள் கூட தேவப்படும். அதனால நாம அன்போட ஜனங்களுக்கு உதவணும் அதோட மாற்றத்த ஏற்படுத்த அவங்களுக்கு நேரம் கொடுக்கணும். ஜனங்க அவங்களோட மனநிலைய மாத்தணும்னு தேவன் கேக்கறாரு, ஆனா அவர் எப்பவும் ஜனங்கள கட்டாயப்படுத்தறது இல்ல நடைமுறையில சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகள வைக்கிறதில்லன்னு நாம பாத்தோம். நாம எப்படி நம்ம சீர்கேடான மனநிலைகள்படி வாழ்றோம் அதோடு தேவனோட வார்த்தைகளுக்கு இணங்காம இருக்கிறோம் அப்படிங்கறது பாக்கும்போது, அவர் தம்மோட கோபத்த கட்டவிழ்த்து விடுறதில்ல, மாறா அவரோட வார்த்தைகளால நம்மள பிரகாசமாக்கி வழிநடத்துறாரு, விஷயங்கள கொஞ்சம் கொஞ்சமா அனுபவிச்சு உணர்ந்துக்கவும் அதோட சத்தியத்த படிப்படியா புரிஞ்சுகிட்டு மாற்றத்த அடையவும் நம்மள அனுமதிக்கிறாரு. அவரோட அணுகுமுற ரொம்ப மென்மையானதுன்னு நாம உணர்றோம். அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நம்மோட குடும்பம் சீக்கிரமா அடித்தளத்த அமைக்க, அவங்கள கூடுகைகள்ல கலந்துக்கவும், தேவனுடய வார்த்தைகள அதிகமா வாசிக்க வெக்கவும் நாம விரும்பினா, இதுதான் சரியான நோக்கம், ஆனா அவங்க கஷ்டங்களுக்கு நாம அனுதாபம் காட்டணும் அதோட பொறுமையோட அவங்கள வழிநடத்தி ஆதரிக்கணும். அப்பதான் அவங்க இணங்குவதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கும்.” நான் சொன்னதக் கேட்டு, ரேன் ஜியா ஒரு பெரிய பெருமூச்ச விட்டுட்டு: “நான் எப்பவும் என் கணவர அதிகமா கூடுகைகள்ல கலந்துக்க வைக்கிறதுக்கும் தேவனோட வார்த்தைகள அதிகமா படிக்க வெக்கவும் முயற்சி பண்றேன், இது அவருக்குச் சிறந்ததுன்னு நெனச்சு என்னோட அவர இணங்க வெக்க முயற்சி பண்றேன். நான் சொல்றது போல அவர் செய்யாதப்போ, நான் அப்படியே அவருமேல கோபத்துல வெடிக்கிறேன். அவர அப்படி நடத்துறது உண்மையில அவரக் காயப்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு. நான் தப்பு பண்ணிட்டேன். எதிர்காலத்துல நான் தேவனோட வார்த்தைகள்படி பயிற்சி செய்வேன் அதோட என்னோட சீர்கேடான மனப்பான்மைக்கு ஏத்த மாதிரி அவர் நடத்துவத நிறுத்துவேன்” அப்படின்னு பதில் சொன்னாங்க. ரேன் ஜியா கொஞ்சம் புரிதல்களப் பெற்றாங்க அதோட அவங்க முகத்துல புன்னகை இருந்ததயும் பாத்து நான் ரொம்ப மகிழ்ச்சியும் அடஞ்சேன். அதுக்கப்புறம் நாங்க தேவனோட வார்த்தையில ஒரு பகுதிய சேர்ந்து படிச்சோம். “நீ மற்றவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தேவனுடைய வார்த்தைகளில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது அல்லது குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது; எந்த மனப்பாங்கைக் கொண்டு தேவன் மனுக்குலத்தை நடத்துகிறாரோ அந்த மனப்பாங்கைத்தான் ஒருவரை ஒருவர் நடத்தும்போது ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவன் எவ்வாறு ஒவ்வொரு நபரையும் நடத்துகிறார்? சிலர் முதிர்ச்சி அடையாத வளர்ச்சியைக் கொண்டிருப்பார்கள்; அல்லது இளமையாக இருப்பார்கள்; அல்லது தேவனை ஒரு குறுகிய காலத்திற்குதான் விசுவாசித்திருப்பார்கள்; அல்லது சுபாவத்திலும் சாராம்சத்திலும் மோசமானவர்களாக இருக்க மாட்டார்கள், தீங்கிழைப்பவர்களாக இருக்க மாட்டார்கள், ஆனால் கொஞ்சம் அறியாமையுள்ளவர்களாக அல்லது திறன் குறைந்தவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்கள் மிக அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள், மேலும் சத்தியத்தைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள், ஜீவனுக்குள் பிரவேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள், அதனால் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யாமல் இருப்பதோ அல்லது அறியாமையான செயல்களைச் செய்யாமல் இருப்பதோ அவர்களால் முடியாமல் இருக்கிறது. ஆனால் தேவன் ஜனங்களின் கடந்துபோகும் முட்டாள்தனத்தின் மேல் கண்ணோக்கமாக இருப்பதில்லை; அவர் அவர்களுடைய இருதயங்களை மட்டுமே பார்க்கிறார். அவர்கள் சத்தியத்தைப் பின்தொடர்வதில் தீர்மானமாக இருந்தால், அப்போது அவர்கள் சரியாக இருக்கிறார்கள், மேலும் இதுவே அவர்களுடைய நோக்கமாக இருந்தால், அப்போது தேவன் அவர்களைக் கண்காணிக்கிறார், அவர்களுக்காகக் காத்திருக்கிறார், அவர்கள் பிரவேசிப்பதை அனுமதிக்க நேரத்தையும் வாய்ப்புகளையும் அளிக்கிறார். ஒரு மீறுதலின் காரணமாக தேவன் அவர்களைச் சாகடிப்பது இல்லை. அது ஜனங்கள் அடிக்கடி செய்வது; தேவன் ஒருபோதும் மக்களை அப்படி நடத்த மாட்டார். தேவன் ஜனங்களை அப்படி நடத்தவில்லை என்றால், பின் ஏன் மக்கள் மற்றவர்களை அப்படி நடத்துகிறார்கள்? இது அவர்களுடைய சீர்கேடான மனநிலையைக் காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களுடைய சீர்கேடான மனநிலைதான். அறியாத மற்றும் முட்டாள்தனமான மக்களை தேவன் எப்படி நடத்துகிறார், வளர்ச்சியில் முதிர்ச்சி அடையாதவர்களை அவர் எப்படி நடத்துகிறார், மனுக்குலத்தின் சீர்கேடான மனநிலையின் சாதாரண வெளிப்பாடுகளை அவர் எவ்வாறு நடத்துகிறார், மேலும் தீங்கிழைப்பவர்களை எவ்வாறு அவர் நடத்துகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவன் வெவ்வேறு மக்களை வெவ்வேறு வகையில் நடத்துகிறார், மேலும் வெவ்வேறு மக்களின் ஆயிரக்கணக்கான நிலைகளை நிர்வகிக்க அவரிடம் பல வழிகள் உள்ளன. நீ இந்தச் சத்தியங்களை புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்தச் சத்தியங்களை புரிந்துகொண்டு விட்டால், அதன் பின் உன்னால் எவ்வாறு விஷயங்களை அனுபவிப்பது மற்றும் மக்களை கொள்கைகளுக்கு ஏற்றபடி எவ்வாறு நடத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பெற, ஒருவர் அருகில் உள்ள ஜனங்கள், காரியங்கள் மற்றும் விஷயங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்”). நாங்க படிச்சு முடிச்சதும், ரேன் ஜியா அது ஒரு நல்ல பகுதின்னு சொன்னாங்க அதோட அவங்களோட அதிகமா நான் ஐக்கியப்படணும்னு கேட்டாங்க. நான் அவங்க கிட்ட ஐக்கியப்பட்டு “ஒருத்தரோட இருக்கிற நம்ம தொடர்பகள்ல அவங்களுக்கு குறைபாடுகளோ இல்ல சிக்கல்களோ இருக்கிறத நாம கவனிக்கறப்போ, அன்பான, நிதானமான முறையில அவங்கள நாம பக்குவப்படுத்த முடியும், அதோட அவங்க கிட்ட இருந்து அதிகமா எதிர்பார்க்கக் கூடாது. சத்தியத்த ஏத்துக்கறதுக்கு நாம அவங்களுக்கு கொஞ்சம் காலம் கொடுக்கணும் அதோட அவங்க மெதுவா மேம்பாடுகள அடையுறதுக்கு நாம காத்திருக்கணும். நாம சாத்தானால ஆழமா சீர்கெடுக்கப்பட்டிருக்கோம் அப்படிங்கறது தேவனுக்குத் தெரியும், அதோட சத்தியத்த ஏத்துக்கறதலயும் கடைப்பிடிக்கிறதலயும் நிறைய தடைகளும் சிரமங்களும் இருக்கு. சில நேரங்கள்ல, நாம சத்தியத்த புரிஞ்சுட்டாலும் கூட, நம்மால அத உடனடியா கடைப்பிடிக்க முடியாது. தேவன் நம்மோட திரும்பத் திரும்ப ஐக்கியப்படணும். சில நேரங்கள்ல நமக்குப் புரியாதுன்னு அவரு கவலப்படுறாரு, அதனால அவர் பொறுமையா நமக்கு உதாரணங்கள கொடுக்குறாரு, அதோட ஒரு புரிதல அடைய நம்மள வழிகாட்ட எல்லா வகையான முறைகளயும் பயன்படுத்துறாரு. சில நேரங்கள்ல அவரோட வார்த்தைகள் மூலமாவும் சில நேரங்கள்ல நம்ம சகோதர சகோதரிகள் சுட்டிக்காட்டுறது மூலமாவும் அவர் நம்மள வழிநடத்துறாரு. மத்த நேரங்கள்ல, நாம ரொம்ப உணர்ச்சியில்லாதவங்களாவும் கலகக்காரங்களாவும் இருக்கோம் அதோட எந்த அளவு ஐக்கியமும் பலன்கள தர்றதில்ல, அதனால சிட்சிச்சு, தண்டித்து ஒழுங்குபடுத்தி, கிளை நறுக்கி, நம்மள கையாளவும், நம்ம இருதயங்கள அசைக்கவும் நடைமுற சூழ்நிலைகள தேவன் ஏற்பாடு செய்றாரு” அப்படின்னு சொன்னேன். “தேவன் ரொம்ப மென்மையான அன்பான வழியில செயல்படுறாரு, அவர் செய்றதுல வலுக்காட்டாயமா திணிக்கறதாக எதுவும் இல்ல. சில சமயங்கள்ல, அவரு நம்மள கடுமையா சிட்சிச்சு, தண்டித்து ஒழுங்குப்படுத்தி, நியாயத்தீர்ப்பு செஞ்சு, நம்மள அம்பலப்படுத்தும்போது கூட, நாம அப்பவும் அவரோட அன்பயும் இரக்கத்தயும் உணர முடியும். நம்ம அனுபவங்கள் மூலமா தேவன் ஜனங்கள எப்படி ரொம்ப கொள்க ரீதியில நடத்துறாரு அதோட நிறைய சத்தியத்த கேட்ட பிறகும் நாம மேம்படத் தவறியதால நம்மள ஒருபோதும் எடுத்தேன்கவிழ்த்தேன்னு கைவிடுறதில்லன்னு பாக்குறோம். தேவனுக்கு மனுக்குலத்து மேல ரொம்ப நெறைய அன்பும் பொறுமையும் இருக்கு, அதோட மனுக்குலத்த இரட்சிக்க ஆழமான உண்மையான விருப்பம் அவருக்கு இருக்கு.”

ரேன் ஜியாவோட ஐக்கியம் கொண்டதுக்கப்புறம் நான் திடீர்னு: “தேவன் எதிர்பார்க்கிறதுலயிருந்து எனக்கு நானே எவ்ளோ பயிற்சி செஞ்சேன்? நான் அவங்கக்கிட்ட அவங்க கணவர எப்படி சரியா நடத்துவதுங்கறதப் பத்தி மட்டுந்தான் ஐக்கியம் கொண்டேன், ஆனா நான் அவங்கள சரியா நடத்துல! அவங்க கணவர்மேல கோவப்படுவதயும் அவங்ககிட்ட சில தடவ ஐக்கியப்பட்டும் அவங்க மேம்படலைங்கறதயும் நான் பார்த்தப்போ, அவங்க திமிர் பிடிச்சவங்க, மனிதத்தன்ம இல்ல, நெறைய பேசுறாங்க ஆனா செயல்ல ஒண்ணும் இல்ல, இன்னும் பலவாறும் நான் தனிப்பட்ட முறையில நியாயந்தீர்த்தேன்” அப்படின்னு நெனச்சேன். நான் வெளிப்படுத்தியத நெனைச்சு பாக்கும்போது, எனக்கு ரொம்பவும் வெக்கமா இருந்துச்சு. ரேன் ஜியா புதுசா வந்தவங்க, அதோட அதிக அனுபவம் இல்லாதவங்களா இருந்தாங்க, ஆனா நான் அவங்கள தன்னோட அகந்தையான சுபாவத்த அடையாளம் கண்டுக்க கட்டாயப்படுத்துனேன், அதோட அவங்க மாறணும்னு வற்புறுத்தி கேட்டேன். அவங்க எந்த மாற்றத்தயும் செய்யாதப்போ, நான் வெறுமனே அவங்கள சத்தியத்த தேடாத இல்ல ஏத்துக்காத ஒருத்தங்கன்னு கொறச்சி மதிப்பிட்டேன், அதோட அவங்களுக்கு மோசமான மனிதத்தன்மை இருக்குன்னு நியாயத்தீர்ப்பு கூட செஞ்சேன். நான் தெளிவா அவங்களோட நிலைய புரிஞ்சுக்கவே இல்ல அதோட அது தொடர்பா அவங்ககிட்ட ஐக்கியம் கொள்ளல, ஆனா அப்படியிருந்தும் ஏத்துக்கவும், கீழ்ப்படியவும் மாற்றங்கள செய்யவும் நான் அவங்களக் கட்டாயப்படுத்துனேன். உண்மையிலேயே நான் திமிர்பிடிச்சவளாவும் பகுத்தறிவு இல்லாதவளாவும் இருந்தேன். அப்பத்தான் நான் என்னோட சீர்கேடான மனநிலைய வெளிப்படுத்துனத உணர்ந்தேன், ரேன் ஜியாவோட நிலை என்னோட சொந்த சீர்கேட்ட பாக்க என்னை அனுமதிச்ச ஒரு கண்ணாடி மாதிரி இருந்துச்சு. அவங்க ஆறு மாசந்தான் தேவன நம்பிருந்தாங்க, அதனால தன்னப் பத்தி சிந்திக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் முடியாம போனது இயல்பானது தான். நான் பல வருஷங்களா விசுவாசத்துல இருந்திருந்தேன் அதோட பிரச்சனைகள தீர்க்க மத்தவங்களோட அடிக்கடி சத்தியத்த பத்தி ஐக்கியங்கொண்டேன், ஆனா நான் உண்மையில எவ்ளோ சத்தியத்த கடைப்பிடிச்சிருந்தேன்? உபதேசங்கள மட்டுமே பேசுற பரிசேயர்களப் போல நான் கடைப்பிடிக்காம பேசமட்டும் செய்றது ஒரு பெரிய ஏமாத்துத்தனமா இருந்துச்சுதானே? அந்தக் கட்டத்துல, தேவனோட வார்த்தைகள்ல ஒரு பகுதி என் நினைவுக்கு வந்துச்சு. “சிலர், பணி செய்யவும், பிரசங்கிக்கவும், அடுத்தவர்களுக்கு வழங்கவுமே சத்தியத்த்தினால் தங்களை தயார்படுத்திக்கொள்ளுகிறார்களே தவிர, தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்ல அவற்றை நடைமுறைப்படுத்துவதை பொருட்படுத்தவே மாட்டார்கள். அவர்களுடைய ஐக்கியம் முழு புரிதலோடும் சத்தியத்திற்கு ஏற்பவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் அதற்குத் தக்கதாக இருப்பதில்லை அல்லது அதைக் கடைப்பிடிக்கவோ அல்லது அனுபவிப்பதுமில்லை. இங்கு என்ன பிரச்சினை இருக்கிறது? அவர்கள் உண்மையிலேயே சத்தியத்தை தங்கள் ஜீவனைப் போல ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? இல்லை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவர் போதிக்கும் கோட்பாடு எவ்வளவு சுத்தமானதாக இருந்தாலும், அவர் சத்தியத்தின் யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறார் என்று அதற்கு அர்த்தமல்ல. சத்தியத்தினால் தயார் பட்டிருக்க, ஒருவர் முதலில் அதற்குள் தானே பிரவேசித்திருக்க வேண்டும், அவர்கள் அதைப் புரிந்துகொண்ட பின் கடைப்பிடிக்க வேண்டும். தங்கள் பிரவேசத்தில் ஒருவர் கவனம் செலுத்தாமல், சத்தியத்தைப் பிறருக்குப் பிரசங்கிப்பதனால் பகட்டாகக் காட்டிக்கொள்ளுவதை நோக்கமாகக் கொண்டால், அவர்களுடைய எண்ணம் தவறானதாகும். இப்படிச் செய்யும் பல தவறான தலைவர்கள் உள்ளனர், தாங்கள் புரிந்துகொள்ளும் சத்தியத்தை இடைவிடாமல் பிறரிடம் ஐக்கியம் கொள்ளுகிறார்கள், புதிய விசுவாசிகளுக்கு வழங்குகிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிக்குமாறும் தங்கள் கடமையை நன்றாகச் செய்யுமாறும், எதிர்மறையாக இருக்கக் கூடாது என்றும் மற்றவர்ளுக்குப் போதிக்கிறார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் சிறந்தவைதான்—அன்பானவைதான்—ஆனாலும்கூட அவர்களுடைய பிரசங்கிமார்கள் ஏன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை? அவர்களுக்கு ஏன் ஜீவப்பிரவேசம் இல்லை? உண்மையில், இங்கு என்ன நடக்கிறது? இப்படிப்பட்ட ஒரு நபர் சத்தியத்தை உண்மையிலேயே நேசிக்கிறாரா? இதைச் சொல்வது கடினம். இப்படித் தான் இஸ்ரவேலின் பரிசேயர்கள் வேதாகமத்தைப் பிறருக்கு விளக்கினார்கள், இருந்தாலும் அவர்களாலேயே தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செய்தபோது, அவர்கள் தேவனுடைய குரலைக் கேட்டார்கள் ஆனால் கர்த்தரை எதிர்த்தார்கள். அவர்கள் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்து தேவனால் சபிக்கப்பட்டார்கள். ஆகவே, சத்தியத்தை ஏற்காத அல்லது கடைப்பிடிக்காத எல்லாரும் தேவனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள். அவர்கள் எவ்வளவு இழிவானவர்கள்! அவர்கள் உபதேசிக்கும் கோட்பாடுகளின் வார்த்தைகளும் எழுத்துகளும் மற்றவர்களுக்கு உதவக்கூடுமானால், அது ஏன் அவர்களுக்கு உதவ முடியவில்லை? இத்தகைய ஒரு நபரை யதார்த்தமற்ற ஒரு மாயைக்காரன் என்று உறுதியாக நம்மால் கூற முடியும். அவர்கள் சத்தியத்தின் வார்த்தைகளையும் எழுத்துகளையும் பிறருக்கு வழங்குகிறார்கள், பிறரைக் கடைப்பிடிக்க வைக்கிறார்கள், ஆனால் தாங்கள் அதில் எள்ளளவும் கடைப்பிடிப்பதில்லை. இத்தகைய நபர் வெட்கமே இல்லாதவர் அல்லவா? அவர்களிடம் சத்தியத்தின் யதார்த்தம் இல்லை, ஆனால் பிறருக்கு கோட்பாடுகளின் வார்த்தைகளையும் எழுத்துகளையும் பிரசங்கிக்கும்போது அவர்கள் அவை இருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள். இது வேண்டுமென்றே செய்யப்படும் மோசடியும் தீங்கும் அல்லவா? இப்படிப்பட்ட ஒரு நபர் அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்பட்டிருந்தால், அதற்கு அவர்கள் தங்களையேதான் குற்றம் சொல்லிக்கொள்ள முடியும். அவர்கள்பரிதாபத்திற்கு தகுதியுடையவர்கர்ளாக இருக்க மாட்டார்கள்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள் என்னோட சொந்த நிலைய பத்தின சரியான விளக்கமா இருந்துச்சு. ரேன் ஜியாவுக்கு நீர்ப்பாய்ச்சிய என் நேரத்த நினைச்சு பார்த்தப்போ, நான் ஒரு சீர்கெட்ட மனநிலைப்படி வாழ்ந்திருந்தேன் அதோட அவங்கள நியாயமா நடத்தாம இருந்திருந்தேன். நான் பாத்ததெல்லாம் அவங்க எப்படி அவங்களோட அகந்தையான மனநிலைய வெளிபடுத்துனாங்க, சத்தியத்த ஏத்துக்காம இருந்தாங்கங்கறததான், ஆனா நான் என்ன சீர்கேட்ட வெளிப்படுத்தேனேன் அப்படிங்கறத பத்தி நான் கொஞ்சங்கூட சிந்திச்சுப் பாக்கல. என்னோட அசிங்கமான முகத்த நான் அடையாளங்காணல, அதோட வெட்கமில்லாமல் அவங்கள தேவனோட வார்த்தைகள வெச்சு விமர்சனம் பண்ணேன், அவங்க முன்னேற்றங்கள செஞ்சுக்கணும்னு வற்புறுத்திக் கேட்டேன். அது ஏதோ மத்த ஜனங்கள் அவங்களோட சீர்கேட்ட பத்தி சிந்திச்சுப் பாக்கணும், ஆனா நான் சீர்கெட்டவளா இல்ல அதனால சிந்திச்சுப் பாக்க வேண்டிய அவசியம் இல்லங்கற மாதிரி இருந்துச்சு. நான் உண்மையில என்னைத் தெரிஞ்சுக்கல அதோட ரொம்ப வெக்கமில்லாம இருந்தேன்! நான் மத்தவங்களோட ஐக்கியப்படவும் அவங்க பிரச்சினைகள தீக்கவும் தேவனோட வார்த்தைகள பயன்படுத்துனேன், ஆனா நான் கொஞ்சங்கூட என்னைப் பத்தி சிந்திக்கல பிரவேசத்த அடையல. பொய்யான பக்தியுள்ள பரிசேயர்கிட்ட இருந்து இது எந்த விதத்துல வேறயா இருந்துச்சு? நான் இப்படி என் கடமைய செய்யும்போது ஜனங்களுக்கு உதவியா என்னால இருக்கமுடியும்னு எப்படி எதிர்பார்த்தேன்?

அதுக்கப்புறம், ரேன் ஜியாவோட கணவர் திரும்பி வந்தப்போ, அவங்க அவர்கிட்ட: “என் சகோதரி இப்பதான் எனக்கு தேவனோட வார்த்தையில சில பகுதிகள படிச்சாங்க அதோட நான் தவறு செஞ்சேன்ங்கறத உணர்ந்துட்டேன். என்னோட அகந்தையான மனநிலையால நான் உங்கள அடக்கி வெச்சுட்டு இருந்தேன். எதிர்காலத்துல, தேவனோட வார்த்தைகள்படி பயிற்சி செய்வேன் அதோட சீர்கேடான மனநிலையோடு உங்கள நடத்துவத நிறுத்துவேன்” அப்படின்னு சொன்னாங்க. ரேன் ஜியாவால எப்படி தேவனோட வார்த்தைகள கடைப்பிடிக்க முடிஞ்சதுன்னு பார்த்தப்போ நான் இன்னும் அதிகமா வெக்கப்பட்டேன். முன்னாடி, சத்தியத்த ஏத்துக்காதவங்கன்னு நான் அவங்கள கொறச்சி மதிப்பிட்டிருந்தேன், ஆனா இப்போ நிலைமையோட யதார்த்தம் என் முகத்துல அறைஞ்சது மாதிரி இருந்துச்சு. வீட்டுக்கு போற வழியில, நான் எப்படி ரேன் ஜியா கொறச்சி மதிப்பிட்டு நியாயத்தீர்ப்பு பண்ணேன்னு யோசிச்சு பார்த்தேன், அதோட நான் ரொம்பவும் குற்ற உணர்ச்சிய அடஞ்சேன். இப்படி சொல்ற தேவனோட வார்த்தைகள நான் நினைச்சு பார்த்தேன்: “உன் இருதயத்தில் நீ உண்மையாக சத்தியத்தைப் புரிந்து கொண்டால், அப்போது சத்தியத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் தேவனுக்குக் கீழ்படிவது என்பதை நீ அறிவாய், மேலும் இயல்பாகவே சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான பாதையில் நடக்கத் தொடங்குவாய். நீ நடக்கும் பாதை சரியானதாகவும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்பவும் இருந்தால், அப்போது பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன்னை விட்டு விலகாது, இந்த விஷயத்தில் நீ தேவனைக் காட்டிக் கொடுக்கும் வாய்ப்பானது மிகக் குறைவாக இருக்கும். சத்தியம் இல்லாமல், பொல்லாப்பு செய்வது எளிது, நீ விரும்பாமல் கூட அதைச் செய்வாய். உதாரணமாக நீ அகந்தையும் இறுமாப்புமான மனநிலையைக் கொண்டிருந்தால், அப்போது தேவனை எதிர்க்க வேண்டாம் என்று கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, உன்னால் தடுக்க முடியாது, அது உன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீ அதை வேண்டுமென்றே செய்ய மாட்டாய்; நீ உன் அகந்தையான, இறுமாப்பான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் அதைச் செய்வாய். அகந்தையும் இறுமாப்பும் உன்னை தேவனை இழிவாகப் பார்க்கச் செய்து, முக்கியமற்றவராக பார்க்க வைக்கும்; அவை உன்னை நீயே உயர்த்த வைக்கும், தொடர்ந்து உன்னை வெளிக்காட்டிக் கொள்ளச் செய்யும், அவை உன்னை மற்றவர்களை இழிவுபடுத்த வைக்கும், உன்னைத் தவிர வேறு யாரையும் அவை உன் இருதயத்தில் விட்டு வைக்காது; அவை உன் இருதயத்தில் உள்ள தேவனுடைய இடத்தைப் பறித்துக் கொள்ளும், இறுதியில் உன்னை தேவனுடைய இடத்தில் உட்காரச் செய்து, ஜனங்கள் உனக்கு அடிபணிய வேண்டும் என்று கோர வைக்கும், மேலும் உன் சொந்த எண்ணங்கள், யோசனைகள் மற்றும் கருத்துகளை சத்தியமென்று வணங்கச் செய்யும். அகந்தையும் இறுமாப்புமான சுபாவத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற ஜனங்களால் எத்தனையோ பொல்லாப்புகள் செய்யப்படுகின்றன! தீமை செய்யும் பிரச்சினையைத் தீர்க்க, அவர்கள் முதலில் தங்கள் சுபாவத்தை மாற்ற வேண்டும். மனநிலையில் மாற்றம் இல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு அடிப்படையான ஒரு தீர்வைக் கொண்டுவர சாத்தியம் இருக்காது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சத்தியத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே ஒருவர் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியும்”). தேவனோட வார்த்தைகள பத்தி ஆழமா யோசிச்சுப் பாக்கும்போது, நான் என்னோட சொந்தச் சீர்கேடான மனப்பான்மைய இன்னும் தெளிவா பாத்தேன். ரேன் ஜியாவுக்கு நீர்ப்பாய்ச்சிய நேரத்த நினைச்சு பாக்குறப்போ, பலமுற ஐக்கியப்பட்டும் அவங்க மேம்பாடடையாத போது, நான் என்னைப் பத்தி சிந்திச்சுப் பாக்கல, நான் சிக்கல துல்லியமா அடையாளம் கண்டுட்டேன்னு கூட நினைச்சுட்டு ஐக்கிப்பட்டு அவங்க சூழ்நிலைய தீர்க்க முடியும். அவங்க ஏத்துக்கலைன்னா அவங்க சத்தியத்த ஏத்துக்காததுதான் காரணம்னு நினைச்சேன். நான் ரேன் ஜியாவ ஒரு சில சந்தர்ப்பங்கள்ல மட்டுந்தான் சந்திச்சிருந்தேன், அதோட அவங்கள பத்தி தெரியவே தெரியாது, ஆனா அப்பக்கூட ஏதோ எனக்கு சத்தியத்த பத்தி நல்ல புரிதல் இருந்த மாதிரியும், ஒரு சில தடவை சந்திச்சதுக்கு அப்புறமே ஒருத்தரோட சாராம்சத்த சரியா கண்டுபிடிச்சுக்க முடியும்ங்கிற மாதிரியும் நான் கவனக்குறைவா அவங்கள நியாயந்தீர்த்து கொறச்சி மதிப்பிட்டேன். திரும்பத் திரும்ப அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, நான் ஜனங்களோட பிரச்சனைகளோட அடிப்படையயும் சாரம்சத்தயும் புரிஞ்சுக்கல, அதோட ஜனங்களோட ஒட்டுமொத்த நடத்தை, சுபாவம், சாராம்சத்தோட அடிப்படையில அவங்கள நடத்தலைங்கறத உணர்ந்துட்டேன். நான் உண்மையாவே சத்தியத்த புரிஞ்சுக்கல ஆனாலும் நான் என்னை ஆழமா நம்புனேன் அதோட என்னோட நம்பிக்கைகள உறுதியா பிடிச்சுக்கிட்டேன். என்னைப் பத்தின கொஞ்ச அறிவு கூட எனக்கு இல்ல. புதுசா வர்றவங்கள என்னோட அகந்தையான மனநிலைக்கு ஏற்ப எப்பவும் நடத்துனேன்னா, குறஞ்சபட்சம், நான் அவங்க கிட்ட ஒரு சார்பு நிலைய வளத்துக்குவேன், அதோட அவங்கள கட்டுப்படுத்தவும் அவங்களுக்கு தீங்கு செய்யவும் அவங்களோட ஜீவப்பிரவேசத்த தாமதப்படுத்தவும் பொறுப்பாயிருவேன். மோசமான நிலையில, நான் அவங்கள நியாயந்தீர்த்து கொறச்சி மதிப்பிடுவேன், அதோட கவனக்குறைவா அவங்கள கைவிடவும் செய்வேன். அது நான் அவங்களுக்கு கடன்பட்ட நிலையா இருக்கும். இத உணர்ந்த நான் கொஞ்சம் பயப்பட்டேன், ஆனா எனக்கு நிம்மதியாவும் இருந்துச்சு. நான் அகந்தையோட அறிகுறிகள காட்டுனப்போ, என் கூட்டாளி அத சுட்டிக்காட்டுனாங்க, என்னோட சிக்கல அடையாளம் கண்டுட்டு சரியான நேரத்தில் மாற்றத்த ஏற்படுத்த என்னை அனுமதிச்சாங்க. இது தேவனோட பாதுகாப்பா இருந்துச்சு! அதுக்கப்புறம், வேலை தொடர்பான கோரிக்கைகள் காரணமா, நான் தற்காலிகமா திருச்சபைய விட்டு வெளியேற வேண்டி இருந்துச்சு. ஒரு மாசம் கழிச்சு, நான் ரேன் ஜியாவ மறுபடியும் பார்த்தப்போ, அவங்க சுவிசேஷத்த பரபரப்பும்போது எப்படி தேவனோட வார்த்தைகள அனுபவிச்சு உணர்ந்தாங்க, சாட்சி அளிச்சாங்கங்கறத பத்தி சொன்னாங்க. அவங்க உணர்ச்சிப் பெருமூச்சு விட்டு, தொடர்ந்து: “ஆனா சமீபமா, சுவிசேஷத்தை பகிர்றது மூலமா, தேவன பத்தி ஒவ்வொருத்தருக்கும் எப்படி பலவிதமான கருத்துகள் இருக்குங்கறதப் பாத்தேன். கடைசி நாட்களோட தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டு அவரு முன்னாடி வர்றது ஜனங்களுக்கு எளிதானது இல்ல. முன்னாடி, என் கணவர் தேடாம இருந்தார்னுதான் நான் எப்பவும் நினைச்சேன், அதோட பல காரியங்கள்ல இருந்து அவரு விலகி இருக்கணும்னு வற்புறுத்திக் கேட்டேன். நான் அவர்கிட்ட இருந்து ரொம்ப அதிகமா வற்புறுத்திக் கேட்டேன், அது என்னோட தவறா இருந்துச்சு. தேவனோட வார்த்தைகள் உண்மையிலயே ரொம்ப சிறந்தது அதோட நான் இன்னும் அவற்ற அதிகமா அனுபவிச்சு உணரணும்” அப்படின்னு சொன்னாங்க. நான் இதக் கேட்டப்போ, நான் அவங்களுக்காக ரொம்ப சந்தோஷப்பட்டேன், ஆனா நான் ரொம்ப வெக்கப்படவும் செஞ்சேன் அதோட நெகிழ்ச்சியடஞ்சேன். ஜனங்க சத்தியத்த ஏத்துக்கறதுக்கு உண்மையில நேரமும் அனுபவமும் தேவை. அதுக்கப்புறம் நீர்ப்பாய்ச்சுறப்போ, புதுசா வரவங்க சீர்கேட்டோட அறிகுறிகள காட்டுனா, அவங்க பிரச்சினைக்கான மூல காரணத்த கண்டுபிடிக்கிறதுல நான் கவனம் செலுத்துவேன், அதோட அவற்ற கையாள்றதுக்கான தொடர்புடைய கொள்கைகள தேடுவேன். அந்த நேரத்துல, எப்படி தேவனுக்கு முன்னாடி வர்றதும் ஒரு அடித்தளத்த போடுறதும் நேரம் எடுக்கிற ஒரு செயலா இருக்குங்கறதயும் நான் பார்த்தேன். அவங்களுக்கு நீர்ப்பாய்ச்சி ஆதரிக்கிற செயல்பாட்டுல, நான் என்னைப் பத்தியும் சிந்திச்சு என்னோட சரியில்லாத நிலைகள சரி செய்வேன், அவங்கள அன்போட ஆதரிச்சு, ஒரு அடித்தளம் போடவும் முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா தேவனுக்கு முன்னாடி வரவும் அவங்கள அனுமதிப்பேன். இந்த வழியில் என்னோட கடமையை செய்யறது என்னை உண்மையாவே அமைதியாவும் நிம்மதியாவும் உணர செஞ்சுது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...

நேர்மையான ஒரு அறிக்கையின் பலன்

ஜாவோ மிங், சீனா ஏப்ரல் 2011 இல், நாட்டின் மற்றொரு பகுதியில் ஒரு திருச்சபையில் யாவோ லான் என்ற தலைவரின் இடத்தை எடுக்க வேண்டியிருந்தது....

ஆசீர்வாதங்களைப் பின்தொடர்வது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதா?

2018 ஆம் வருஷத்துல, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைச்சுச்சு. கர்த்தரோட வருகைய வரவேற்கக்...