சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் எனக்கு சிரமங்கள் இருந்த சமயத்தில்

ஜனவரி 7, 2023

2020 ஆம் வருஷத்துல, நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டேன். கர்த்தருடைய வருகைய வரவேற்க முடிஞ்சது என்னோட மாபெரும் பாக்கியமா இருந்துச்சு. இந்த மிக முக்கியமான நற்செய்திய பரப்ப, நான் சுவிசேஷத்தப் பிரசங்கிக்க ஆரம்பிச்சேன், அவரோட சத்தத்தக் கேட்டதுக்கப்புறமா அதிகமான ஜனங்கள் தேவனிடத்துல திரும்பக் கூடும்னு நம்புனேன். ஆனாலும், 2022 ஆம் வருஷம் பிப்ரவரி மாசத்துல, மியான்மார் அரசாங்கம் மத நம்பிக்கைய ஒடுக்கியதால, என் திருச்சபை துன்புறுத்தப்பட்டுச்சு, அதோடு, சுவிசேஷப் பணி ரொம்பவே தடைபட்டுச்சு. கோழைத்தனத்தாலும் பலவீனத்தாலும் சில சகோதர சகோதரிகள் கூடுகைகள்ல கலந்துக்கல. சிலர் தங்களோட கடமைகள செய்யாம இருந்தாங்க, அதோடு, சுவிசேஷப் பணி அப்படியே நின்னு போயிருச்சு. அந்த நேரத்துல, நானும் என் கடமையில எதுவுமே செய்யாமத்தான் இருந்தேன். என் தலைவர் எனக்காக எத ஏற்பாடு செஞ்சாரோ அத மட்டுமே நான் செஞ்சுக்கிட்டிருந்தேன். நான் எப்பவும் போலத்தான் ஜனங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கிட்டு இருப்பதாநெனச்சேன், ஆனா, அவங்கதான் கூடுகைகள்ல சரியான முறையில கலந்துக்காமலும் தங்களோட கடமைகள செய்யாமலும் இருந்தவங்க. அதனால என்னால எதுவுமே செய்ய முடியல. அதோட, சில நேரங்கள்ல, இணையதள இணைப்பும் இல்ல, அதனால, வேலையப் பத்தித் தெரிஞ்சுக்க என் சகோதர சகோதரிகளோடு இணையதளத்தின் மூலமா தொடர்புகொள்ள முடியல, அதனால, நான் இணையதள இணைப்பைக் கண்டுபிடிக்க வெளியே செல்ல வேண்டியிருந்துச்சு. சில நேரங்கள்ல நான் ரொம்ப நேரம் தேடிய பிறகும், இணையதள இணைப்பு நல்லா கிடைக்காது, காலப்போக்குல, நான் அதுக்குமேல வேலையப் பத்தி தெரிஞ்சுக்க ஆன்லைன்ல போக விரும்பல. அந்த நேரத்துல, ஒரு சகோதரியின் உறவினருக்கு நான் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சேன். மூன்று பேர் கொண்ட அவங்க குடும்பம் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டாங்க. அதனால, நான் அங்கயே இருந்து பத்து நாட்களா அவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சினேன். இந்த புதுசா வந்த மூன்று பேருக்கும் தண்ணீர் பாய்ச்சினதுல நான் திருப்தியடஞ்சேன், அதோட, நான் அதுக்குமேல பிரசங்கிக்க விரும்பல. நான், “சுவிசேஷத்தப் பரப்புவது கடினம்ன்னு பக்கத்திலுள்ள கிராமங்கள்ல பல வதந்திகளச் சொல்லுறாங்க. மூன்று பேர் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு என்னால நல்லா தண்ணீர் பாய்ச்ச முடிஞ்சா, தங்களோட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்பிரசங்கம்பண்ண அவங்க என்னையக் கூட்டிட்டுப் போவாங்க. சுவிசேஷத்தப் பிரசங்கிக்க இது ஒரு நல்ல வழியா இருக்குல்ல?” அப்படின்னு நெனச்சேன். அதனால, என்னோட சகோதர சகோதரிகள் பக்கத்து கிராமங்கள்ல இருக்கிற சுவிசேஷத்த ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களப் பத்திச் சொல்லும்போது, அவங்களுக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிப்பது எப்படின்னு நான் எப்போதாவதுதான் பேசினேன். இது சுவிசேஷ பணிய நேரடியா பாதிச்சுது.

அதுக்கப்புறம் வேலை முடிஞ்சு நாங்க திரும்பிப்போனப்போ, எங்களோட திருச்சபையின் சுவிசேஷப் பணிகள் அந்த மாதத்துல நின்றுவிட்டதா தலைவர் சொன்னாரு, அதோடு, சில பிரச்சனைகளயும் குறிப்பிட்டாரு. இது எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு. அதுக்கப்புறம், நான் என் கடமையில முன்னேற்றத்தத் தேடாம, தற்போதைய நிலையில திருப்தியா இருந்தேன்னு ஒரு சகோதரி எனக்கு நினைவூட்டினாங்க. அது எனக்கு திடீர்னு ஏற்பட்ட விழிப்புணர்வா இருந்துச்சு. நான் என் கடமையில பாரமுள்ளவளாய் இருக்கலங்கறத உணர்ந்தேன். ஒரு திருச்சபைத் தலைவியா, ஒரு தலைவர் செய்ய வேண்டியத நான் செய்யல. அதோடு, நான் சிரமங்கள எதிர்கொள்ளவோ அல்லது தீர்க்கவோ இல்லை, இதன் விளைவா சுவிசேஷ வேலை பாதிக்கப்பட்டுச்சு. நான் அதப் பத்தி எவ்ளோ அதிகமா நெனச்சேனோ, அவ்வளவு மோசமா உணர்ந்தேன். நான் சிந்திச்சுப் பார்த்தப்போ, நான் தேவனுடைய வார்த்தையில வாசிச்சேன், “தற்போது திருச்சபைக்கான எந்தவிதமான பாரங்களையும் சுமக்காத சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த மாம்சத்தைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிற மந்தமும், அசட்டையுமாயிருக்கிற ஜனங்களாவர். அத்தகையவர்கள் மிகவும் சுயநலவாதிகள், மேலும் அவர்கள் குருடருமாவார்கள். இவ்விஷயத்தை நீ தெளிவாகக் காண முடியாவிட்டால், நீ எந்தப் பாரத்தையும் சுமக்க மாட்டாய். தேவனுடைய சித்தத்தைக் குறித்து எவ்வளவு அதிகமாகக் கவனமாய் இருக்கிறாயோ, அவ்வளவு அதிகமான பாரத்தை அவர் உன்னிடம் ஒப்படைப்பார். சுயநலவாதிகள் இதுபோன்ற விஷயங்களை அனுபவிக்க விரும்புவதில்லை; அவர்கள் விலைக்கிரயத்தைச் செலுத்த விரும்பவில்லை, இதன் விளைவாக அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை இழப்பார்கள். அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார்களல்லவா? நீ தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொண்ட ஒரு நபர் என்றால், நீ திருச்சபைக்காக உண்மையான பாரத்தை வளர்த்துக் கொள்வாய். உண்மையில், இதைத் திருச்சபைக்காக நீ சுமக்கும் பாரம் என்று சொல்வதற்குப் பதிலாக, உன் சொந்த வாழ்க்கையின் பொருட்டு நீ சுமக்கும் பாரம் என்று சொல்வது நன்றாக இருக்கும், ஏனென்றால் திருச்சபைக்காக நீ கொள்ளும் பாரத்தின் நோக்கம் என்னவென்றால் தேவனால் பரிபூரணமாகப்படுவதற்கு நீ இந்த அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆகையால் திருச்சபைக்காக மிகப் பெரிய பாரத்தை யாரெல்லாம் சுமக்கிறார்களோ, ஜீவனுக்குள் நுழைவதற்கு யாரெல்லாம் பாரத்தைச் சுமக்கிறார்களோ, அவர்களே தேவனால் பரிபூரணமாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். நீ இதைத் தெளிவாகக் கண்டிருக்கிறாயா? நீ இருக்கும் திருச்சபையானது மணலைப் போலச் சிதறடிக்கப்பட்டிருந்தும், நீ வருத்தமோ கவலையோ கொள்ளவில்லையெனில், உன் சகோதர சகோதரிகளும் இயல்பாக தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமல் இருக்கையில், நீ கண்டுகொள்ளாமல் இருப்பாயெனில், நீ எவ்வகையான பாரங்களையும் சுமக்கவில்லை. அத்தகையவர்கள் தேவன் பிரியப்படும் வகையானவர்கள் அல்லர். நீதிக்காக பசி தாகம் கொள்பவர்களும், தேவனுடைய சித்தத்தைக் குறித்து அதிகம் கவனம் கொள்பவர்களுமே தேவன் பிரியப்படும் ஜனங்களாவர்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணத்தை அடைவதற்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருங்கள்”). நான் தேவனுடைய வார்த்தைகளை சிந்திச்சுப் பார்த்தபோது, நான் ரொம்ப குற்ற உணர்வடஞ்சேன். நான் ஒரு திருச்சபைத் தலைவியா இருந்தேன், ஆனா, சுவிசேஷப் பணி நின்று போனதப் பார்த்தப்போ, நான் எந்த அவசரத்தயும் உணரல. நான் மேலோட்டமான சாக்குப்போக்குகளத் தேடினேன், என்கிட்ட நல்ல இணையதள இணைப்பு இல்லாததால, என்னால வேலையப் பத்தி தெரிஞ்சுக்க முடியலங்கறது புரிஞ்சுக்கக் கூடிய விஷயம்தான்னு நெனச்சேன். என்னோட சகோதர சகோதரிகள் கொடுத்த சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்களப் பொறுத்தவர, எல்லாருக்கும்சுவிசேஷத்த எப்படிப் பிரசங்கிப்பதுங்கறதப் பத்தி நான் எப்போதாவதுதான் எல்லார்கிட்டயும் ஐக்கியங்கொண்டேன். என்னோட சகோதரிகள் என்னுடன் வேலையப் பத்தி விவாதிக்க விரும்புனபோது, அவங்களால என்னையக் கண்டுபிடிக்க முடியல. திருச்சபையின் துன்புறுத்தலை எதிர்கொண்டு, என் சகோதர சகோதரிகள் பயந்தவங்களாவும் பலவீனமானவங்களாவும் இருந்தாங்க, அவங்களால வழக்கமா கூடிவரவோ தங்களோட கடமைகளச் செய்யவோ முடியல. ஆனா, நான் அதச் சரிசெய்ய சத்தியத்தத் தேடல. சுவிசேஷப் பணி நிறுத்தம் என்னோட நேரடியாத் தொடர்புடையதுங்கறத நான் கடைசியா உணர்ந்தேன். தேவனுடைய வார்த்தைகள் சொல்லுது, “தற்போது திருச்சபைக்கான எந்தவிதமான பாரங்களையும் சுமக்காத சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த மாம்சத்தைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டுகிற மந்தமும், அசட்டையுமாயிருக்கிற ஜனங்களாவர். அத்தகையவர்கள் மிகவும் சுயநலவாதிகள், மேலும் அவர்கள் குருடருமாவார்கள்.” தேவனுடைய வார்த்தையில விவரிக்கப்பட்டிருக்கிற சுயநலவாதி நான்தான் என்பத உணர்ந்தேன். திருச்சபைப் பணிகள் மீது நான் பாரம்கொள்ளல, நான் எப்பவுமே அப்போதைய நிலையில திருப்தி அடஞ்சேன், நான் என் சொந்த சௌகரியத்தப் பத்தி மட்டுமே கவலைப்பட்டேன், நான் கஷ்டப்படவோ அல்லது விலைக்கிரயம் செலுத்தவோ மறுத்தேன். திருச்சபையின் சுவிசேஷப் பணி பாதிக்கப்படுவதப் பார்த்தபோது, எனக்கு எந்த அவசர உணர்வும் கவலையும் ஏற்படல. என் கஷ்டங்கள்ல நான் பலவீனமாவும் செயலற்றவளாவும் ஆனேன். நான் உண்மையிலயே ரொம்பவே சுயநலவாதியா இருந்தேன். அரசாங்கத்தால துன்புறுத்தப்பட்ட மத்த இடங்கள்ல உள்ள திருச்சபைகளப் பத்தியும் நான் நெனச்சுப் பார்த்தேன், ஆனா, சகோதர சகோதரிகள் இன்னும் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு, புதிய திருச்சபைகளக் கட்டிக் கொண்டிருந்தாங்க, அதே சமயத்துல, எங்களோட திருச்சபையின் சுவிசேஷப் பணி நின்னுபோயிருந்துச்சு. நான் சுயநலவாதியாவும், இழிவானவளாவும், பாரங்கள சுமக்காதவளாவும், எந்தப் பொறுப்பயும் ஏத்துக்காதவளாவும் இருந்ததாலதான் இது எல்லாமே நடந்துச்சு. நான் தேவனுக்கு ரொம்பவே கடமைப்பட்டவளா உணர்ந்தேன். நான் பாரமுள்ளவளாய் இருந்த போது, யாராவது மெய்யான வழியை ஆராய்ஞ்சா, நான் உடனடியா ஒருத்தர சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஏற்பாடு செஞ்சேன், சகோதர சகோதரிகளுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டபோது, அவற்றைத் தீர்க்க சத்தியத்தக் குறிச்சு நான் ஐக்கியங்கொண்டேன். நான் எவ்வளவு அதிகமாக ஒத்துழச்சேனோ, அவ்வளவு அதிகமா பரிசுத்த ஆவியானவரோட கிரியை எனக்கு இருந்துச்சு, எங்களோட சுவிசேஷப் பணி பயனுள்ளதா இருந்துச்சு, நான் இலகுவாகவும் மகிழ்ச்சியாவும் உணர்ந்தேன். ஆனால் சமீப காலமா, நான் பாரமில்லாதவளா என்னோட கடமையச் செஞ்சதால, சுவிசேஷப் பணி பலனளிக்காம இருந்துச்சு. இந்த நேரத்துல, தேவனுடைய இந்த வார்த்தைகள நோக்கிப் பார்த்தேன், “திருச்சபைக்காக மிகப் பெரிய பாரத்தை யாரெல்லாம் சுமக்கிறார்களோ, ஜீவனுக்குள் நுழைவதற்கு யாரெல்லாம் பாரத்தைச் சுமக்கிறார்களோ, அவர்களே தேவனால் பரிபூரணமாக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.” கடைசியா நான் ஓரளவு புரிஞ்சுக்கிட்டேன். தேவனுடைய சித்தத்தக் கருத்தில் கொண்டவங்களும், திருச்சபைப் பணிகள்ல பாரத்தை கொண்டவங்களும் மட்டுந்தான் தேவனால பூரணப்படுத்தப்பட முடியும். என்னோட செயலற்ற நிலைய என்னால மாத்திக்க முடியலேன்னா, அது திருச்சபையோட பணியைப் பாதிப்பது மட்டுமல்லாம, கடைசியில நான் அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுவேன் என்பதயும் நான் உணர்ந்துக்கிட்டேன். இத நினைக்கும்போது, எனக்குக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதுக்கப்புறம், என்னால செயலற்றவளாவும் அலட்சியமாவும் இருக்க முடியல. நான் பாரமுள்ளவளா இருக்க எனக்கு உதவுமாறும், அவரோட சித்தத்தக் குறிச்சு கவனமா இருந்து, என்னோட கடமைய சிறப்பாச் செய்ய என்னை வழிநடத்தணும்னு தேவனிடத்துல ஜெபிச்சேன்.

அதுக்கப்புறம், சுவிசேஷத்தப் பிரசங்கிக்க வேறு எங்கு போலாம் என்பதப் பத்தி நான் மேற்பார்வையாளரோடும் குழு தலைவர்களோடும் பேசினேன். எல்லா ஜனங்களும் கர்த்தரை விசுவாசிச்ச ஒரு கிராமத்தக் கண்டு பிடிச்சோம். ஆனா, அந்த நேரத்துல போவதுக்குப் பொருத்தமான ஆள் இல்ல. “இந்த தடவ, நான் தேவனுடைய சித்தத்தக் கருத்தில் கொள்ளணும், முன்பு போல நான் எந்த பாரமும் இல்லாம இருக்க முடியாது. இந்த பொறுப்பை நான் முன்கூட்டியே ஏத்துக்கணும்” அப்படின்னு நான் நெனச்சேன். அதனால, அந்த கிராமத்துக்குப் போய் சுவிசேஷத்தப் பிரசங்கிக்க நானாவே முன்வந்தேன். ஆனா எனக்குக் கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு, ஏன்னா, இதுக்கு முன்னாடி, நான் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையப் பத்தி சாட்சி சொல்ல தனியா போனதில்ல. அதனால, என்னால தெளிவா பேச முடியுமான்னு கவலைப்பட்டேன். “அவங்களுக்கு அங்கு இணையதள இணைப்பு இருக்குதான்னு எனக்குத் தெரியல. சுவிசேஷத்தப் பிரசங்கிக்கும் சகோதர சகோதரிகளின் ஐக்கியத்த இணையம் வழியாக அனுமதிக்கக் கூடுமா?” அப்படின்னு நான் நெனச்சேன். என்னோட நிலை தவறானதுங்கறதையும், நான் ஜனங்கள சார்ந்து இருக்கேன் என்பதயும் உணர்ந்தேன், அதனால நான் என் இருதயத்துல ஜெபிச்சு, நான் அங்க சுவிசேஷத்தப் பரப்பும்போது, எனக்கு ஞானத்தயும் விசுவாசத்தயும் தரும்படி தேவனிடத்துல மன்றாடுனேன். நான் கிராமத்தை அடஞ்சப்போ, ஒரு சகோதரி என்னை நேரா மேயரோட வீட்டுக்கு பிரசங்கிக்கக் கூட்டிட்டுப் போனாரு. எதிர்பாராத விதமா, மேயர் என்னைய போதகரிடத்துல கூட்டிட்டுப் போக விரும்புனாரு. அதக் கேட்டதும் எனக்கு உற்சாகமா இருந்துச்சு, ஆனா, “நான் ஒருபோதும் சுவிசேஷத்தை தனியாகப் பிரசங்கிச்சதில்ல. போதகருக்குக் கருத்துகள் இருந்தா, நான் எப்படி அவருடன் ஐக்கியங்கொள்ளணும்? அவர் அத ஏத்துக்காதது மட்டுமல்லாம, உண்மையிலயே என்னை எதிர்த்தால் என்ன செய்றது? நம்மால அதுக்கப்புறமும் இந்த கிராமத்துல சுவிசேஷத்தப் பரப்ப முடியுமா?” அப்படின்னு எனக்கு சில கவலைகளும் இருந்துச்சு. நான் ரொம்பவே பயந்துபோயிருந்தேன். நான் போதகரோட வீட்டை அடைந்ததும், என் சகோதர சகோதரிகள உதவிக்குக் கூப்பிட விரும்புனேன். ஆனா, என்னோட கைபேசியில இணைய இணைப்பு இல்ல. எங்க தொடங்குவதுன்னு எனக்குத் தெரியல, அதனால, நான் தேவனிடத்துல மீண்டும் மீண்டும் ஜெபிச்சு, நான் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைக்குச் சாட்சியளிக்கும்படி, தேவன் என் கூடவே இருக்கணும்னு, எனக்கு விசுவாசம் தரணும்னு கெஞ்சி மன்றாடினேன். நான் ஜெபிச்சதுக்கப்புறமா, தேவனுடைய வார்த்தைகள நெனச்சுப் பார்த்தேன், “மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). அது உண்மதான். தேவன் சர்வவல்லமையுள்ளவர், ஜனங்களோட இருதயங்களும் ஆவிகளும் உட்பட, எல்லா ஜனங்களும், காரியங்களும், விஷயங்களும் தேவனுடைய கரங்கள்ல இருக்கு. அதனால, நான் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்துச்சு. நான், “தேவனே, இந்த போதகர் உமது ஆடாக இருந்தா, அவர் உமது சத்தத்தைப் புரிஞ்சுக்கிட்டு உமது கிரியைய ஏத்துக்குவாருன்னு நான் நம்புறேன்” அப்படின்னு சொல்லி, என்னோட மனசுக்குள்ள தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் ஜெபிச்சதுக்கப்புறமா, எனக்காக, தேவனால செய்யக் கூடாத காரியம் எதுவுமில்ல என்பது போல என்னோட இருதயத்துல ஒரு பலத்த உணர்ந்தேன். அதுக்கப்புறம், கர்த்தருடைய வருகையப் பத்திய தீர்க்கதரிசனங்களப் பத்திப் பேசுவதற்கு தற்போதைய பேரழிவுகள் மற்றும் உலக விவகாரங்களப் பயன்படுத்தினேன். இதக் கேட்டதுக்கப்புறமா, போதகர் ஒப்புக்கொண்டு, கர்த்தர் திரும்பி வந்திருக்கலாம் என்பதா உணர்ந்தாரு. அதக் கேக்குறதுக்கு, இன்னும் ரெண்டு போதகர்களக் கூட்டிட்டுவர அவரு ஜனங்கள அனுப்பினாரு. தெளிவாப் பேசி அவங்களோட பிரச்சனைகளத் தீர்த்துவைக்க முடியாதுன்னு நான் பயந்தேன், அதனால, தேவன் என்னை வழிநடத்த, என்னோட இருதயத்துல, நான் அவரை நோக்கி மீண்டும் மீண்டும் கூப்பிட்டேன். இஸ்ரவேலர்கள எகிப்திலிருந்து வெளியேற்றி வழிநடத்தும்படி தேவன் மோசேயிடம் கேட்டத நான் நெனச்சுப் பார்த்தேன். எகிப்தின் பார்வோன்கிட்ட போவது கடினமானதும் ஆபத்தானதும்னு மோசேக்குத் தெரியும். ஆனா, அவனோட அணுகுமுறையானது கீழ்ப்படிதலும் அர்ப்பணிப்புமா இருந்துச்சு. தேவன் அவனோட இருந்தாரு, அவனுக்கு ஆதரவா இருந்தாரு, தேவனுடைய வழிநடத்துதலால, மோசே இஸ்ரவேலர்கள எகிப்துலருந்து வெளியே கொண்டு வந்தான். அதுக்கப்புறம், நான் தாவீது கோலியாத்தத் தோற்கடிச்ச கதைய நெனச்சுப் பார்த்தேன். இஸ்ரவேலர்கள் கோலியாத்தப் பாத்தப்போ பயந்தாங்க. தாவீது மட்டுந்தான் முன் வந்து போராடத் துணிஞ்சான். தாவீது கோலியாத்துகிட்ட சொன்னான்: “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடம் வருகிறாய்: நானோ சேனைகளுடைய யேகோவாவின் நாமத்திலே உன்னிடம் வருகிறேன்” (1 சாமுவேல் 17:45). இதன் விளைவா, தாவீது கோலியாத்த ஒரே ஒரு கூழாங்கலால கொன்றான். இந்த ரெண்டு கதைகள்லருந்தும், கஷ்டங்கள் மத்தியில, உண்மையான விசுவாசத்தால மட்டுமே தேவனுடைய செயல்களப் பார்க்க முடியும்ங்கறதையும் ஜனங்களின் முடிவு தேவனுடைய ஆரம்பம் என்பதையும் தெரிஞ்சுக்கிட்டேன். இதை நெனச்சபோது எனக்கு தைரியம் வந்துச்சு.

இந்த நேரத்துல, மத்த ரெண்டு போதகர்கள் வந்தாங்க. கடைசி நாட்கள்ல தேவன் எப்படி மனுவுருவான மாம்சத்துல தோன்றி கிரியை செய்கிறார் என்பதப் பத்தியும், தேவனுடைய மனுவுருவாதல் என்பதன் பொருள், மனுவுருவாதல் என்றால் என்ன என்பதப் பத்தியும் அவங்களோடு ஐக்கியங்கொள்ள நான் வேதாகமத் தீர்க்கதரிசனங்களப் பயன்படுத்தினேன். நியாயத்தீர்ப்பு கிரியையயும் சுத்திகரிப்பு கிரியையயும் செய்ய தேவன் வந்தார்னும், கடைசி நாட்கள்ல தேவனுடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதாக இருக்குது, அவர் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு அப்படின்னும் கூட நான் சாட்சி சொன்னேன். நான் சொல்லி முடிச்சதும், முதல் போதகர் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அவர் தன் கண்ணீரத் துடச்சுகிட்டே, “நான் 40 வருஷங்களுக்கும் மேலா கர்த்தருக்காகப் பிரசங்கிச்சிருந்தேன், என் வாழ்க்கையின் பெரும்பகுதியில அவர் திரும்பி வருவதுக்காகக் காத்திருந்தேன். இப்போ, கர்த்தர் உண்மையிலயே திரும்பி வந்திருக்கிறாரு! இன்னைக்கு என்னால கர்த்தரை வரவேற்க முடிந்த உண்மைக்காக நான் தேவனுக்கு ரொம்பவே நன்றியுள்ளவனா இருக்குறேன்!” அப்படின்னு சொன்னாரு. போதகர் சொன்னதக் கேட்டு, நான் அவருடன் சேர்ந்து அழுதுட்டேன். நானும் கூட தேவனுக்கு ரொம்பவே நன்றியுள்ளவளா இருந்தேன். உண்மையிலயே, போதகர் சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடிய அளவுக்கு என்னோட ஐக்கியம் ரொம்பவே முழுமையானதா இல்ல, அதோட தேவனுடைய வார்த்தைகளப் புரிஞ்சுக்கறது முழுக்க முழுக்க தேவனுடைய வழிநடத்துதலின் காரணமாகத்தான் இருந்துச்சு.

போதகர் அதை ஏத்துக்கிட்டு, அன்றைக்கு ராத்திரியே முழு கிராமத்துக்கும் நான் பிரசங்கிக்கணும்னு விரும்புவதா சொன்னாரு. நான் ரொம்பவே உற்சாகமாக இருந்தேன், என் இருதயத்துல திரும்பத் திரும்ப தேவனுக்கு நன்றி சொன்னேன். அன்னைக்கு சாயங்காலத்துல, போதகரும் மேயரும் இரண்டு கிராமங்களின் கிராம ஜனங்கள ஒன்றாக் கூடிவரும்படி அழைச்சாங்க, கர்த்தருடைய வருகையப் பத்திய நற்செய்திய எல்லாருக்கும் சொன்னாங்க. அன்னைக்கு ராத்திரியே, 30-க்கும் மேற்பட்டோர் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டாங்க. “கர்த்தர் மீதான எங்களோட விசுவாசத்த அரசாங்கம் தடை செஞ்சு நாலு வருஷங்களாயிருச்சு. நாங்க எல்லாருமே வேதனையில வாழுறோம், கூடுகைகள நடத்தாம இருக்கோம். அப்படின்னு கிராம ஜனங்கள் சிலர் சொன்னாங்க. தேவனுக்கே நன்றி!” இன்னொரு கிராமவாசி மனம் நெகிழ்ந்து, “பல வருஷங்களா எங்களுக்கு ஒரு கூடுகை இல்லாமயே இருந்துச்சு. நீங்க எங்களுக்கு சுவிசேஷத்த அறிவிக்க வந்ததால, எங்களால தேவனுடைய சத்தத்தக் கேட்க முடியுது. இதுக்காக நான் தேவனுக்கு ரொம்பவே நன்றியுள்ளவனாக இருக்குறேன்” அப்படின்னு சொன்னாரு. ஒரே ராத்திரியில, சுவிசேஷம் கிராமம் முழுவதுமா பரவிருச்சு. நான் முதன்முறையா சுவிசேஷத்தப் பிரசங்கித்தபோதே, போதகர் அதை ஏத்துக்குவாருன்னும், அநேகர் அவரோடு சேர்ந்து ஏத்துக்குவாங்கன்னும் நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ரொம்பவே நம்பமுடியாததா இருந்துச்சு! இது பரிசுத்த ஆவியானவரோட கிரியையின் விளைவுங்கறது எனக்குத் தெரியும், ஆனாலும், நான் திறமையானவள்னும், என் கடமைய சிறப்பாச் செஞ்சேன்னும் அப்பவும் நெனச்சேன். சீக்கிரத்திலே, நான் பெருமைப்பட ஆரம்பிச்சேன், மறுபடியும் தற்போதைய நிலையில திருப்தி அடைய ஆரம்பிச்சேன். அதனால நான் இந்தப் புதுசா வந்தவங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதுக்கு பொறுப்பான சகோதரியக் கொண்டு மட்டுமே தண்ணீர் பாய்ச்ச விரும்புனேன், அதுக்கு மேல, நான் சுவிசேஷத்தப் பிரசங்கிக்கப் போக விரும்பல. அந்த நேரத்துல, நான் திருச்சபை பணியப் பத்தி அதிகமா கேட்டுக்கல, நான் முன்ப விட குறைவாகவே தேவனிடத்துல ஜெபிச்சேன்.

ஒரு நாள், நான் என்னோட கைபேசிய சார்ஜ் செஞ்சுக்கிட்டிருந்தேன், அது ஷார்ட் சர்க்யூட் ஆயிருச்சு. எனது சிம் கார்டை வேறொரு கைபேசியில போட்டேன், ஆனா, அதிர்ச்சியடையும் விதமா அந்த கைபேசியும் உடைஞ்சுபோச்சு. இந்த நேரத்துல, எனக்கு ஒரு பிரச்சனை இருப்பத உணர்ந்தேன், இது தேவனுடைய தண்டித்து திருத்துதலா இருக்கலாம்னும் உணர்ந்தேன். அதனால, நான் என் பிரச்சனைகளப் பத்தி சிந்திக்க ஆரம்பிச்சேன். நான் தேவனுடைய வார்த்தையில வாசிச்சேன், “பொதுவாக, நீங்கள் அனைவரும் சோம்பலான, உற்சாகமில்லாத, தனிப்பட்ட விதத்தில் தியாகம் செய்ய விரும்பாத நிலைக்குள்ளேயே இருக்கிறீர்கள்; அல்லது நீங்கள் செயலற்ற நிலையில் காத்திருக்கிறீர்கள், மேலும் சிலர் குறைகூறவும் செய்கிறீர்கள்; தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் சத்தியத்தைப் பின்தொடர்வது அவர்களுக்குக் கடினமாக உள்ளது. அத்தகைய ஜனங்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள் மற்றும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவரையும் பரிபூரணப்படுத்தவும் முடியாது, ஒருவரும் பிழைத்துக்கொள்ளவும் முடியாது. சாத்தானின் வல்லமைகளை எதிர்ப்பதற்கான ஒரு குறைந்தபட்ச மனஉறுதி கூட ஜனங்களுக்கு இல்லையென்றால், அப்பொழுது அவர்கள் நம்பிக்கைக்கு தூரமானவர்களாவர்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (7)”). “தேவனைச் செயலற்று பின்பற்றுபவராக இருக்காதே, உனக்கு ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களைத் தேட வேண்டாம். குளிருமில்லாமலும் அனலுமில்லாமலும் இருப்பதன் மூலம் நீ உன்னை நாசமாக்கி, உன் ஜீவனைத் தாமதப்படுத்துகிறாய். நீ இத்தகைய மந்தமான தன்மை மற்றும் செயலற்ற தன்மையிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும், மேலும் நேர்மறையான காரியங்களைப் பின்தொடர்வதிலும், உன் சொந்த பலவீனங்களை மேற்கொள்வதிலும் நீ திறமையானவனாகிட வேண்டும், இதனால் நீ சத்தியத்தைப் பெற்று சத்தியத்தின்படி வாழமுடியும். உன் பலவீனங்களைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை, உன் குறைபாடுகள் உன் மிகப்பெரிய பிரச்சினை அல்ல. நீ அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருந்து, சத்தியத்தைத் தேடுவதற்கான உன் விருப்பமின்மையே உனது மிகப்பெரிய பிரச்சினையும், மற்றும் உனது மிகப் பெரிய குறைபாடுமாகும். உங்கள் அனைவருக்குமான மிகப்பெரிய பிரச்சனை ஒரு கோழைத்தனமான மனநிலையாகும், இதன் மூலம் நீங்கள் காரியங்கள் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் மற்றும் செயலற்று காத்திருக்கிறீர்கள். இது உங்களுடைய மிகப்பெரிய தடையாகும், மேலும் நீங்கள் சத்தியத்தைத் தொடர்வதற்கான மிகப்பெரிய எதிரியாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”). தேவனுடைய வார்த்தைய வாசிச்சதுக்கு அப்புறமா, நான் என்னையப் பத்தி சிந்திச்சுப் பார்த்தேன். முழு கிராமத்துக்கும் சுவிசேஷம் பரவியதப் பார்த்தபோது, என்னோட கடமைய நிறைவேற்றுவதுல தேவன் திருப்தி அடஞ்சதா நான் நெனச்சேன், அதனால, நான் என் அப்போதைய நிலைமைய நெனச்சு பெருமையும், திருப்தியும் அடஞ்சேன். அதோட, நான் தொடர்ந்து சுவிசேஷத்தப் பரப்ப விரும்பல. நான் பலன்களப் பெற்றதுக்கு அப்புறமா, நான் இன்னும் முன்னேற்றத்தத் தேடல. தற்போதைய நிலையில திருப்தியா இருக்கணும்ங்கற என்னோட ஆசை ரொம்பவே வலுவா இருந்துச்சு. கடந்த காலத்துல, நான் சுவிசேஷ பணியத் தாமதப்படுத்தினேன், ஏன்னா நான் அப்போதைய நிலையில் திருப்தி அடஞ்சேன், இப்ப நான் அதத்தான் மறுபடியும் செஞ்சுக்கிட்டிருந்தேன். நம்ளோட முழு இருதயத்தயும் மனதயும் நம் கடமைகள்ல ஈடுபடுத்தணும்னு தேவன் கேட்குறாரு. என்னோட கடமையின் செயல்பாட்டுல தேவனால எப்படி திருப்தியடைய முடியும்? நான் என் கடமையில முன்னேறலேன்னா, பின்வாங்குறேன் என்பதையும், வாழ்க்கைப் பிரவேசத்துலயும், சுவிசேஷத்தப் பிரசங்கிப்பதன் முடிவுகளோட அடிப்படையிலும், நான் பின்தங்கியிருப்பேன் என்பதையும் நான் அப்பத்தான் புரிஞ்சிச்சுக்கிட்டேன். நான் எப்பவுமே அப்போதைய நிலையில திருப்தியா இருந்தேன், நான் சத்தியத்தப் பின்தொடரல, அதோட, நான் தேவனிடத்துல இருந்து விலகிப் போய்க்கிட்டிருந்தேன். ரொம்ப காலமாக, நான் இப்படித்தான் எனக்கே தீமை செஞ்சுக்கிட்டேன். அப்போதைய நிலையில் உள்ள திருப்திதான் சத்தியத்தப் பின்தொடருவதுக்கும் என் கடமைய செய்வதுக்கும் எனக்கு மிகப்பெரிய தடையா இருந்துச்சு, என்னை நானே அழிச்சுக்கிட்டு, எனக்கே தீங்கிழச்சுக்க மட்டுமே முடிஞ்சுது. தேவனுடைய வார்த்தைகள் சொல்வது போல், “குளிருமில்லாமலும் அனலுமில்லாமலும் இருப்பதன் மூலம் நீ உன்னை நாசமாக்கி, உன் ஜீவனைத் தாமதப்படுத்துகிறாய்.” அதோட, வெளிப்படுத்துதல் சொல்லுது, “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்(வெளிப்படுத்தல் 3:16). தேவனுடைய வார்த்தைப்படி நான் வெதுவெதுப்பான தண்ணீராய் இருந்தேன், நான் அனலுமில்லாம குளிருமில்லாம இருந்தேன், அப்போதைய நிலையில திருப்தியா இருந்தேன். நான் இப்படியே போய்கிட்டு இருந்தால், எனக்கு எந்த வாய்ப்பும் இருக்காது, நான் உண்மையிலயே புறம்பாக்கப்படுவேன். இத நெனச்சபோது எனக்குக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதனால மனந்திரும்பும்படி எதிர்காலத்துல நான் எப்படிப்பட்ட சிரமங்கள எதிர்கொண்டாலும், நான் முயற்சி செய்வேன், ஒருபோதும் பின்வாங்கமாட்டேன், எப்போதுமே அப்போதய நிலையில திருப்தி அடைய மாட்டேன்னு சொல்லி தேவனிடத்துல ஜெபிச்சேன்.

ஆனா, நான் பிரசங்கிப்பதுல சுறுசுறுப்பாக இருக்க ஆரம்பிச்சபோது, நான் வேற ஒரு பெரிய சிரமத்த சந்திச்சேன். எங்களப் பத்திப் புகார் கொடுத்துட்டாங்க, அதனால, சுவிசேஷத்தப் பிரசங்கிக்க ஆட்கள் வந்ததா நகர்ப்புற அரசாங்கத்துக்குத் தெரிஞ்சிருச்சு. எங்களக் கண்டுபிடிச்சிட்டா, நாங்க கிராம ஜனங்களோடும் மேயரோடும் கூட கைது செய்யப்பட வாய்ப்பு இருந்துது. மேயரும் கிராம ஜனங்களும் மாட்டிக்கொள்வோம்னு பயந்தாங்க. அதனால, அவங்க எங்கள வெளியேறச் சொன்னாங்க, காரியங்கள் அமைதியான பிறகு திரும்பி வரச் சொன்னாங்க. நான், “நாம போய்ட்டா இந்தப் புதிதா வந்தவங்களோட கதி என்ன ஆகும்? அவங்க இப்பத்தான் சுவிசேஷத்த ஏத்துக்கிட்டாங்க, அவங்களுக்கு எந்த அடித்தளமுமே இல்ல. ஆனா நாங்க ரெண்டு பேரும் தங்கினால், நாம சுலபமா அவங்களோட கவனத்தை ஈர்க்கக் கூடும்” அப்படின்னு நெனச்சேன். கடைசியா, தண்ணீர் பாய்ச்சும் சகோதரிய அனுப்பிவிட முடிவு செஞ்சோம், அதே சமயத்துல, புதிதாய் வந்தவங்களுக்கு ஆதரவா நான் தனியா கிராமத்துல தங்கியிருந்தேன். இந்த ஏற்பாடு ரொம்பவே பொருத்தமானதுன்னு எனக்குத் தெரிஞ்சாலும், நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஒரு தெரியாத இடத்துல நான் அப்படியே தனியாக இருப்பதப் போல உணர்ந்தேன். போதகருக்கு இன்னும் நிறைய கருத்துகள் இருந்துச்சு, மெய்யான வழியப் பத்தி முழுசா உறுதியா தெரிஞ்சுக்கல, கைது செய்யப்பட்டுருவோமோன்னு அவர் பயந்தாரு, அதனால, நானும் அங்கிருந்து போய்விடணும்னு விரும்புனாரு. நான் ரொம்பவே வேதனைப்பட்டேன். போதகரும் மேயரும் என்னையத் துரத்தி விட்டாங்க. எனக்கு ஒரு வீடு கூட இல்லாததப்போல் இருந்துச்சு. இந்த நிலையில வாழ்ந்த நான், ஜெபிக்கறதுக்குக் கூட உற்சாகமில்லாம இருந்தேன், வீட்டுக்குப் போகணும்னு எனக்குக் கொஞ்சம் ஏக்கமா இருந்துச்சு. நான் போதகரோடு ஐக்கியங்கொண்டபோது, அவருக்கு இன்னும் பல கருத்து இருந்ததப் பார்த்தேன். அதனால, போதகருக்கு நல்ல புரிதல் இல்லைங்கறதா நெனச்சேன். புதிதா வந்தவங்க சிலர், கைது செய்யப்பட்டுருவோமோ அப்படிங்கற பயத்தோட கூடுகைகளுக்கு வருவத நான் பாத்தபோது, அவங்களுக்கு ஆதரவு கொடுக்க நான் பாரமுள்ளவளா இல்ல. அந்த நேரத்துல, நான், “இந்தக் கொஞ்ச பேராவது வந்திருப்பது நல்லது. நான் அவங்கள கூப்பிட்டேன், ஆனா மீதமுள்ளவங்க வரல, அதனால நான் எதுவும் செய்ய முடியாது” அப்படின்னு நெனச்சேன். படிப்படியா, கூடுகைகள்ல தவறாம கலந்துக்கற புதிதா வந்தவங்க ரொம்பவே குறைய ஆரம்பிச்சாங்க, நான் சிரமத்துல மூழ்கி இன்னும் அதிக மனச்சோர்வடஞ்சேன். அதுக்கப்புறமா, என்னோட நிலையப் பத்தி ஒரு சகோதரிகிட்ட தொலைபேசியில பேசினேன். அவர் தேவனுடைய வார்த்தையின் ஒரு பத்தியை எனக்கு அனுப்புனாரு. “ஜனங்கள் சத்தியத்தைப் பெறாத போது இப்படித்தான் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் பேரார்வத்தால் வாழ்கிறார்கள், அது தக்கவைத்துக்கொள்வதற்கு மிகவும் கடினமானதாகும்: அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் யாராவது பிரசங்கிக்க வேண்டும் மற்றும் ஐக்கியம் கொள்ள வேண்டும்; அவர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கும் வழங்குவதற்கும் யாரும் இல்லை என்றவுடன் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒருவரும் இல்லாமல் போனவுடன், அவர்களின் இருதயங்கள் மீண்டும் உணர்வற்றுப் போகின்றன, அவர்கள் மீண்டும் ஒருமுறை தளர்ந்து போகிறார்கள். மேலும் அவர்களின் இருதயங்கள் தளர்ந்து போகும் போது, அவர்கள் தங்கள் கடமையில் குறைந்த திறனுடன் செயலாற்றுவார்கள்; அவர்கள் கடினமாக உழைத்தால், செயல் திறன் அதிகரிக்கிறது, அவர்களின் கடமையின் செயல்திறன் மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது, மேலும் அவர்கள் அதிகமாக பெற்றுக் கொள்கிறார்கள். இதுதான் உங்கள் அனுபவமாக இருக்கிறதா? … ஜனங்களுக்கு உறுதிப்பாடு இருக்க வேண்டும், உறுதிப்பாடு உள்ளவர்கள் மட்டுமே சத்தியத்திற்காக உண்மையாகப் பாடுபட முடியும், அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே, அவர்களால் தங்கள் கடமையைச் சரியாகச் செய்து தேவனைத் திருப்திப்படுத்த முடியும், மேலும் சாத்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்தவும் முடியும். நீ இந்த வகையான நேர்மையைக் கொண்டிருந்து, உன் சொந்த நலனுக்காக இல்லாமல், சத்தியத்தைப் பெறுவதற்கும் உன் கடமையைச் சரியாகச் செய்வதற்கும் மட்டுமே திட்டமிட்டால், அப்போது உன் கடமையின் செயல்பாடு இயல்பானதாக மாறும், மேலும் முழுவதும் நிலையானதாக இருக்கும்; நீ எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், உன்னால் உன் கடமையைச் செய்வதில் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்க முடியும். யார் அல்லது எது உன்னைத் தவறாக வழிநடத்த வந்தாலும் அல்லது தொந்தரவு செய்தாலும், உன் மனநிலை நன்றாக இருந்தாலும் அல்லது மோசமாக இருந்தாலும், உன்னால் உன் கடமையை இயல்பாகச் செய்ய முடியும். இவ்வாறு தேவன் உன்னைப் பற்றித் தமது மனதை அமைதிப்படுத்த முடியும், மேலும் பரிசுத்த ஆவியானவரால் சத்தியத்தின் கொள்கைகளைப் புரிந்து கொள்வதில் உன்னைப் பிரகாசிப்பிக்க முடியும், மேலும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதில் உன்னை வழிநடத்த முடியும், மேலும் இதன் விளைவாக, உன் கடமையில் உன் செயல்திறன் நிச்சயமாகத் தரத்திற்கு ஏற்றபடி இருக்கும். … எல்லாம் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்றும், மனிதர்கள் வெறுமனே அவருடன் ஒத்துழைத்து வருகின்றனர் என்றும் உனக்கு விசுவாசம் இருக்க வேண்டும். உன் இருதயம் உண்மையானதாக இருந்தால், தேவன் அதைப் பார்த்து, உனக்காக எல்லா பாதைகளையும் திறப்பார், கஷ்டங்களை இனிமேலும் கஷ்டம் இல்லாதவையாக ஆக்குவார். உனக்கு இருக்க வேண்டிய விசுவாசம் இதுவே. ஆகவே, நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்யும்போது, உன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி உன் முழு இருதயத்தையும் அதில் வைக்கும் வரையில், நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. தேவன் விஷயங்களை உனக்குக் கடினமாக்க மாட்டார் அல்லது உன்னால் முடியாததைச் செய்ய உன்னைப் பலவந்தப்படுத்த மாட்டார்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனை விசுவாசிப்பதில், அவருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுவதும் அனுபவிப்பதுமே மிக முக்கியமானது”). தேவனுடைய வார்த்தைய அறிஞ்சுக்கிட்டதன் மூலமா, நான் என் கடமைய ஆர்வத்துனால மட்டுந்தான் செஞ்சுக்கிட்டிருந்தேன் என்பதையும், நான் தேவனுக்கு விசுவாசமா இல்லங்கறதயும் புரிஞ்சுக்கிட்டேன். அரசாங்க துன்புறுத்தல் எங்களுக்கு வந்ததுக்கு அப்புறமா, மேயர் என்னைய அங்கிருந்து போகச் சொல்லிட்டாரு, புதிதா வந்தவங்க கைது செய்யப்பட்டுருவோமோன்னு பயந்து கூடுகைகள்ல கலந்துக்கல. இந்த சிரமங்கள் மத்தியில, நான் நேர்மறையான அணுகுமுறையக் கொண்டிருக்கல, தேவனுடைய வழிநடத்துதலத் தேடல, விசுவாசத்துல அவங்களால அடித்தளம் அமைக்க முடியும்படி, புதிதாய் வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச என்னால முடிஞ்சத செய்யவும் இல்ல. அதுக்குப் பதிலா, நான் செயலற்றவளா மாறி, புதிதாய் வந்தவங்கள்ல ஒரு சில மட்டும் பார்த்து திருப்தி அடஞ்சிட்டேன். துல்லியமா, பாரமுள்ளவளாய் இல்லாமலும், முன்னேற்றத்த நாடாமலும் என்னோட கடமையச் செய்ததால, புதிதாய் வந்தவங்களின் கூடுகைகள்ல அவங்களோட வருகை ரொம்பவே அதிகமா ஒழுங்கற்றதாக மாறுச்சு. இது தேவனுடைய வார்த்தைகள் சொல்வதப் போலவே இருக்குது, “அவர்களின் இருதயங்கள் தளர்ந்து போகும் போது, அவர்கள் தங்கள் கடமையில் குறைந்த திறனுடன் செயலாற்றுவார்கள்; அவர்கள் கடினமாக உழைத்தால், செயல் திறன் அதிகரிக்கிறது, அவர்களின் கடமையின் செயல்திறன் மிகவும் பயனுள்ளதாக மாறுகிறது, மேலும் அவர்கள் அதிகமாக பெற்றுக் கொள்கிறார்கள்.” அது ரொம்பவே சரியானது. நான் பாரமுள்ளவளாய் இருந்தபோது, விலைக்கிரயம் செலுத்தத் தயாரா இருந்தபோது, தேவனுடைய வழிநடத்துதலயும் ஆசீர்வாதங்களயும் என்னால பாக்க முடிஞ்சுச்சு, நான் சுவிசேஷத்தப் பிரசங்கிப்பதும் பயனுள்ளதா இருந்துச்சு. ஆனாலும், எனக்கு கஷ்டங்கள் வந்தபோது, நான் என் கடமையில பாரத்தைக் கொண்டிருக்கல, நான் பொறுப்பற்றவளாவும், பலவீனமாவும், செயலற்றவளாவும் இருந்தேன். அப்படியே, நான் என்னோட கடமையில பயனற்றவளாகிட்டேன். தேவனுடைய கிருபையால என்னால ஒரு கடமைய செய்ய முடிஞ்சுது. ஆனா, தேவனை திருப்திப்படுத்தும் அளவுக்கு என்னால அதச் சிறப்பா செய்ய முடியல. நான் ரொம்பவே கலகக்காரியா இருந்தேன்!

அதுக்கப்புறமா, தேவனுடைய வார்த்தையின் இன்னொரு பத்திய நான் வாசிச்சேன். “‘ஒருவர் தன் கடமையில் உறுதியாக இருப்பது’ என்றால் என்ன அர்த்தம்? ஒருவர் எவ்வளவுதான் கஷ்டங்களை எதிர்கொண்டாலும், தன் கைகளை நெகிழவிடாமல் இருப்பவர் அல்லது விட்டுவிட்டு ஓடிப்போகாதவர், அல்லது பொறுப்பைத் தவிர்க்காதவர் என்று அர்த்தம். தங்களால் முடிந்ததெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அதுதான் ஒருவர் தன் கடமைகளில் உறுதியாக இருப்பது என்பதாகும். உதாரணமாகச் சொல்லப்போனால், ஒன்றைச் செய்வதற்கு உனக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. உன்னைக் கவனிக்க யாரும் இல்லை அல்லது உன்னை மேற்பார்வை செய்து துரிதப்படுத்தவும் யாருமில்லை. உன்னுடைய கடமையில் உறுதியாக இருப்பதுஎன்றால் என்ன? (தேவனுடைய கண்காணிப்பை ஏற்று அவருக்கு முன் வாழ்தல்.) தேவனுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளுவதுதான் முதல் படி; அது அதன் ஒரு பகுதியாகும். அந்த விஷயத்தை உன் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் செய்வது அடுத்த பகுதி. உன் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் செயல்பட முடிவதற்கு நீ என்ன செய்ய வேண்டும்? நீ சத்தியத்தை ஏற்று அதைக் கடைப்பிடிக்க வேண்டும்; தேவனுக்குத் தேவையான எதையும் நீ ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டும்; உன் கடமையை உன்னுடைய சொந்த, தனிப்பட்ட விஷயமாகக் கருதி, யாருடைய அக்கறையும் அல்லது அவர்களுடைய தொடர் கவனிப்பும், பரிசோதனைகளும், துரிதப்படுத்தலும் அல்லது மேற்பார்வையும்—அல்லது அவர்களுடைய கையாளுதலும் கிளைநறுக்குதலும் கூடத் தேவைப்படாமல் நீ செய்ய வேண்டும். உனக்குள் நீயே, ‘இந்தக் கடமையைச் செய்வது என் பொறுப்பு. இது என் பங்கு, மேலும் நான் செய்வதற்காக இது என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதால், மேலும் கோட்பாடுகள் என்னிடம் கூறப்பட்டு நான் அவற்றைப் புரிந்துகொண்டதால், நான் தீர்மானமாக இருந்து ஒரே மனதாக அதைச் செய்வேன். அதை நன்றாகச் செய்வதற்காக நான் என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன். யாராவது “நிறுத்து” என்று சொன்னால் மட்டுமே நான் நிறுத்துவேன்; அதுவரை நான் ஒரே மனதாக அதைத் தொடர்ந்து செய்வேன்’ என்று சிந்திக்க வேண்டும். உன் முழு இருதயத்தோடும் மனதோடும் கடமையில உறுதியாக இருப்பதென்றால் இதுதான். இந்த வகையில்தான் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். ஆகவே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழுமனதோடும் தங்கள் கடமையை உறுதியாகச் செய்வதற்கு ஒருவர் எதைக் கொண்டிருக்க வேண்டும்? ஒரு சிருஷ்டிக்கு இருக்க வேண்டிய மனச்சாட்சி அவர்களுக்கு முதலில் இருக்க வேண்டும். அதுதான் குறைந்தபட்சமானது. அதற்கு மேல், அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு மனிதனாக, தேவனுடைய ஆணையை ஏற்க, ஒருவர் பக்தியுள்ளவராக இருக்க வேண்டும். ஒருவர் தேவனிடம் முழு பக்தி உள்ளவராக இருக்க வேண்டும், மேலும் அரை மனதாக இருக்கக் கூடாது அல்லது பொறுப்பை ஏற்கத் தவறக் கூடாது; ஒருவரின் சொந்த ஆர்வங்கள் அல்லது மனநிலைகளின்படி செயல்படுவது தவறாகும், அது உண்ம உடையவரா இருப்பது ஆகாது. உண்மயுடைவராக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது? உன் கடமைகளைச் செய்யும்போது, நீ மனநிலைகளால், சூழ்நிலைகளால், மக்களால், விஷயங்களால் அல்லது பொருட்களால் பாதிக்கப்படாமல் மற்றும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பது என்று அர்த்தம். உனக்குள் நீயே, ‘நான் இந்த ஆணையை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறேன்; அவர் அதை எனக்குக் கொடுத்திருக்கிறார். இதுதான் நான் செய்ய வேண்டியது. அது நல்ல முடிவுகளை எந்த விதத்தில் கொடுக்குமோ அவ்விதத்தில் அதை என் சொந்த விவகாரமாகக் கருதி, தேவனைத் திருப்திப்படுத்துவதை முக்கியமாகக் கொண்டு செய்வேன்’ என்று சிந்திக்க வேண்டும். இந்த நிலை உனக்கு இருக்கும்போது, நீ உன் மனச்சாட்சியால் கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், அதில் பக்தியும் உள்ளடங்கியுள்ளது. திறனிலும் முடிவுகளை அடைவதிலும் நோக்கம் கொள்ளாமல், கொஞ்சம் முயற்சியைச் செலுத்தினால் மட்டுமே போதுமானது என்று நினைத்து, அதைச் செய்து முடிப்பதில் மட்டுமே நீ திருப்தி அடைந்தால், பின் இது வெறும் மனச்சாட்சியின் தரமே மற்றும் அதை பக்தி என்று எண்ண முடியாது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனுடைய வார்த்தைகள வாசிச்சதுக்கு அப்புறம், என் கடமையில எப்படி தொடர்ந்து நிலைச்சிருப்பதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். இந்தக் கடமை என்னிடத்துல ஒப்படைக்கப்பட்டது, அதனால, வேறு யாருடைய மேற்பார்வையும் இல்லாமலேயே, அதைச் சிறப்பா செய்ய என்னால் முடிஞ்ச எல்லாத்தையும் செய்ய வேண்டியிருந்துச்சு. நான் சிரமங்கள எதிர்கொண்டாலும், எனக்கு விருப்பமா இருத்தாலும் இல்லேனாலும் நான் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் நான் தேவனுடைய பரிசோதனைய ஏத்துக்கிட்டு என்னோட கடமைய சிறப்பா செய்யணும். சுவிசேஷப் பணி தொடர்ந்து நடக்கும் வரை, நான் என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு, என்னோட கடமைய என் பணியாக நினைக்க வேண்டியிருந்துச்சு, என்னால விட்டுவிடவோ, பொறுப்பைத் தட்டிக்கழிக்கவோ, என்னோட மனநிலையின் அடிப்படையில செய்யவோ முடியல. அப்ப, நான் என் கடமையில தொடர்ந்து நிலைச்சிருப்பேன்.

அடுத்து, கூடுகைகள்ல கலந்துகொள்ளாத புதிதா வந்தவங்களோடு நான் ஐக்கியங்கொள்ள போனேன். “உங்களால் ராத்திரியில கூடுகைகளுக்கு வர முடியலேனா, பகல்ல உங்களுக்கு நேரம் இருக்கும்போது, உங்களோடு ஐக்கியங்கொள்ள என்னால வரமுடியும்” அப்படின்னு நான் சொன்னேன். இது புதிதா வந்தவங்கள்ல சிலரத் தொட்டுச்சு, அவங்க கூடுகைகளுக்கு வரத் தயாரா இருந்தாங்க. ஒரு நாள் இரவு, நான் போதகரோடும் கிராமவாசிகளோடும் ஒரு கூடுகைய ஏற்பாடு செஞ்சேன். நான், “இப்போ, தேவனுடைய பணி முடிவடையப் போகுது. அதனால, அரசாங்கத்தின் துன்புறுத்தல் காரணமா தேவனுடைய வார்த்தைகள வாசிக்க கூடிவருவதுக்கு நாம பயப்படக்கூடாது. நாம அப்படி பயந்தால், தேவனுடைய இரட்சிப்ப இழந்துடுவோம். இப்போ, பேரழிவுகள் அதிகரிச்சுக்கிட்டு வருது, சர்வவல்லமையுள்ள தேவனால மட்டுமே நம்மள இரட்சிக்க முடியும். தேவன் எல்லாத்தையும் ஆளுறார்னு நாம் விசுவாசிக்கணும், தேவன் மீது விசுவாசமா இருக்கணும், அதோட, நமக்கு முன் வரும் துன்புறுத்தலின் மத்தியில பின்வாங்கக் கூடாது. நான் உங்கள் கிராமத்துல சுவிசேஷத்த பிரசங்கிச்சேன், அவங்க என்னைக் கண்டுபிடிச்சா, என்னைக் கைது செஞ்சுருவாங்க. நான் ஒரு வாலிபப் பெண், கைது செய்யப்படுவத நெனச்சு பயப்படுறேன். அதனால, நான் ஏன் இங்கிருந்து போய்விடக்கூடாது? ஏன்னா இது என்னுடைய பொறுப்பா இருக்குது. நீங்க இப்போதான் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்த ஏத்துக்கிட்டிருக்கீங்க, கடைசியா நீங்க தேவனுடைய சத்தத்தக் கேட்டிருக்கீங்க. இந்த சிறிய துன்புறுத்தல் வந்துருக்குது, நீங்க என்னை இங்கிருந்து போகச் சொன்னீங்க, ஆனா, நான் என்னையப் பாதுகாத்துக்க இங்கிருந்துபோய், உங்க எல்லாரையும் கைவிட்டுட்டா, அது கடமையை அலட்சியம் செய்வதாய் இருக்கும்” அப்படின்னு சொன்னேன். நான் நேர்மையா பேசிய பிறகு, போதகர் கிராமத்து ஜனங்களிடத்துல, “இனிமேல் நாம அவரைப் பாதுகாக்கணும். அவர் இந்த கிராமத்துல சுவிசேஷம் சொல்லுறார்னு யாரிடத்திலேயும் சொல்லாதீங்க. யாராவது கேட்டால், எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லுங்க” அப்படின்னு சொன்னாரு. போதகர் சொன்னதக் கேட்டு நான் ரொம்பவே நெகிழ்ந்து போனேன். அவர் இன்னும் நிறைய மதக் கருத்துக்களக் கொண்டிருந்தாலும் கூட, அவர் தேடுவதுக்குத் தயாரா இருந்தாரு, அதனால, நான் அவரது கருத்துகள இலக்காகக் வச்சு ஐக்கியங்கொண்டேன், சகோதர சகோதரிகளும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சிலவற்றை போதகருக்கு அனுப்பி வச்சாங்க. போதகர் கவனமாக் கேட்டாரு, அவரோட சில கருத்துகள் தீர்க்கப்பட்டுச்சு. அதுக்கப்புறம், போதகர் தீவிரமா கூடுகைகளுக்கு வந்தாரு, அதோட, அவர் கிராமத்து ஜனங்ககிட்ட, “நீங்க எல்லாருமே கூடுகைகளுக்கு வரணும்னு நான் விரும்புறேன், கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைய நாம ஏத்துக்கணும், பின்பற்றணும், பின்வாங்காம இருக்கணும். சர்வவல்லமையுள்ள தேவன் தாம் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு!” அப்படின்னு சொன்னாரு. தேவனுக்கே நன்றி! இந்த அனுபவத்துக்கு அப்புறமா, எல்லாமே தேவனுடைய கரத்துல இருப்பத நான் உண்மையாவே பார்த்தேன். கடந்த காலத்துல, எல்லாமே தேவனுடைய கரத்துல இருக்குதுன்னு வெறுமனே நான் சொன்னேன். ஆனா இப்போ, எல்லாமே உண்மையிலயே தேவனுடைய கரங்கள்ல இருக்குதுங்கறதையும், ஜனங்க தேவனோடு உண்மையாக ஒத்துழைக்கும் வரை, தேவன் அவர்கள வழிநடத்துவாருங்கறதையும் நான் உணர்ந்துட்டேன். தேவனால் கூடாதது ஒன்றுமில்ல.

கொஞ்ச காலம் கழிச்சு, நகர்ப்புற அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து என்னையும் போதகரையும் நகர்ப்புற அரசாங்க அலுவலகத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நான் பதட்டமாவும் பயத்தோடும் இருந்தேன், ஆனா எல்லாமே தேவனுடைய கரங்கள்ல இருப்பத நான் நெனச்சுக்கிட்டேன். இந்தச் சூழல் எனக்கு வர தேவன் அனுமதிச்சதால, நான் கீழ்ப்படியணும். நாங்க சாலையில நடந்து போய்கிட்டு இருந்தபோது, நான் மௌனமா தேவனிடத்துல ஜெபிச்சு, தேவன் என்னோடு கூட இருக்கணும்னு மன்றாடினேன். நான் தேவனுடைய வார்த்தையை நெனச்சேன், “சாத்தான் எவ்வளவு ‘சக்திவாய்ந்தவனாக’ இருந்தாலும், அவன் எவ்வளவு துணிச்சலுள்ளவனாக மற்றும் லட்சியமுள்ளவனாக இருந்தாலும், சேதத்தை ஏற்படுத்தும் அவனுடைய திறன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், மனிதனைச் சீர்கெடச் செய்யும், கவரும் அவனுடைய நுட்பங்கள் எவ்வளவு பரந்த அளவில் இருந்தாலும், மனிதனை அச்சுறுத்தும் அவனுடைய தந்திரங்களும், திட்டங்களும் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவன் இருக்கும் வடிவம் எவ்வளவு மாறக்கூடியதாக இருந்தாலும், அவனால் ஒருபோதும் ஒரு உயிரினத்தைக் கூட உருவாக்க முடிவதில்லை, எல்லாவற்றையும் இருக்கச் செய்வதற்கான சட்டங்களையும் விதிகளையும் ஒருபோதும் அமைக்க முடிவதில்லை, மேலும் உயிருள்ள அல்லது உயிரற்ற எந்தவொரு பொருளையும் ஆளுகை செய்யவோ, கட்டுப்படுத்தவோ ஒருபோதும் முடிவதில்லை. பிரபஞ்சம் மற்றும் ஆகாயவிரிவுக்குள், அவனிடத்திலிருந்து பிறந்த நபரோ அல்லது பொருளோ ஒன்றுகூட இல்லை, அல்லது அவனால் இருக்கவுமில்லை; அவனால் ஆளப்படும் அல்லது அவனால் கட்டுப்படுத்தப்படும் நபரோ அல்லது பொருளோ ஒன்றுகூட இல்லை. மாறாக, அவன் தேவனுடைய இராஜ்யத்தின்கீழ் வாழ வேண்டியது மட்டுமல்லாமல், அதனோடுகூட, தேவனுடைய அனைத்து ஆணைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய அனுமதியின்றி, சாத்தானால் ஒரு சொட்டு நீரையோ அல்லது நிலத்தின் மேலிருக்கும் சிறு மணலைக் கூடத் தொடுவது கடினமாகும்; தேவனுடைய அனுமதியின்றி, நிலத்தின் மேலிருக்கும் எறும்புகளைக் கூட அவனால் சுதந்திரமாய் இடமாற்ற முடியாது, அதைவிட தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலத்தையும் இடமாற்ற முடியாது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I”). நான் தேவனுடைய வார்த்தைகள சிந்திச்சபோது, நான் அமைதியா இருந்தேன், நான் அதிகமா பயப்படல, அதோடு, எல்லாமே தேவனுடைய கரத்துல இருந்ததா நான் நம்புனேன்.

நகர்ப்புற அரசாங்க அலுவலகத்துல, போதகரும் நானும் விசாரணைக்காக ஒரு அறையில அடைக்கப்பட்டோம். அந்த நேரத்துல, போதகருக்கு ஒற்றைத் தலைவலி மறுபடியும் ஏற்பட்டுச்சு. அவருக்கு கொஞ்சமும் பெலனில்லாம இருந்துச்சு, அவரோட கைகளும் கால்களும் நடுங்குச்சு. அவர் வலியில இருந்தாரு, அவர் அங்கேயே மரிச்சுப்போயிருவாருன்னு கவலைப்பட்டாரு. நான் அவரோடு ஐக்கியங்கொண்டு, “நாம உண்மையிலேயே தேவனைப் பின்பற்றுறோமா இல்லையான்னு பார்க்க, இந்தச் சூழல் நமக்கு ஒரு பரீட்சையாக இருக்குது. எல்லாமே தேவனுடைய கரத்துல இருக்குது, தேவனுடைய அனுமதியில்லாம சாத்தான் நமக்கு எதுவும் செய்ய மாட்டான். அதனால, நாம விசுவாசத்தோடு இருக்கணும்” அப்படின்னு சொன்னேன். என் ஐக்கியத்துக்கு அப்புறமா, போதகர் கண்ணீர் விட்டு அழுதாரு. அவர், “தேவனுக்கே நன்றி! சகலமும் தேவனுடைய கரத்துல இருக்குது, தேவன் நம்மோடு இருக்கிறாரு, அதனால, நான் மரணத்துக்கு பயப்படக் கூடாது” அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறம் அவர், “அவங்க நம்மள விசாரிச்சா, நான் உங்கள என்னோட மகள்னும், என் வேலையில எனக்கு உதவி செய்ய நீங்க இங்கு வந்திருக்கீங்கன்னும் சொல்லுவேன்” அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. அதனால, இந்தச் சூழலை சமாளிக்கும் நம்பிக்கை எனக்கும் போதகருக்கும் இருந்துச்சு. கடைசியா, நகர்ப்புற ஆளுனர் எனக்கும் போதகருக்கும் 300 யுவான் அபராதம் விதிச்சு எங்கள விடுவிச்சுட்டாரு.

இந்தக் கைதுக்கு அப்புறம், தேவனுடைய சர்வவல்லமையுள்ள ராஜரீகத்தையும், ஜனங்களோட எல்லா இருதயங்களும் ஆவிகளும் தேவனுடைய கரங்கள்ல இருக்குதுங்கறதையும் நான் பார்த்தேன். சுவிசேஷத்தப் பிரசங்கிக்கும் பாதை கடினமானதாவும் ஆபத்தானதாவும் இருந்தாலும், இந்தக் காலகட்டத்துல, நான் கொஞ்சம் பக்குவமடஞ்சேன். கடந்த காலத்துல நான் துன்புறுத்தப்பட்டபோது, நான் செயலற்றவளா இருந்தேன். ஆனா இப்போ, நான் ஆபத்தை எதிர்கொண்டபோது, என்னால உற்சாகமா பொறுப்ப ஏத்துக்க முடிஞ்சுச்சு. இந்த மாற்றமும், இந்த விலையேறப்பெற்ற ஆதாயமும், என்னால வேறு வழியில பெற முடியாத விஷயங்கள். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச...

நான் கிட்டத்தட்ட ஒரு அந்திக்கிறிஸ்துவின் பக்கமாக நின்றேன்

2021 ஆவது வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். மூணு மாசங்களுக்கு அப்புறமா, நானும்...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...