மேற்பார்வையை ஏதிர்த்த பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

செப்டம்பர் 28, 2023

2021 இல், நான் திருச்சபையில் நீர்ப்பாய்ச்சும் பணிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். அந்த நேரத்தில், மேற்பார்வையிடவும் எங்கள் வேலையைப் பற்றிய தகவலை உடனுக்குடன் பெறவும் எங்கள் வேலையின் முன்னேற்றம் பற்றி எங்கள் தலைவர் அடிக்கடி கேட்பார். வேலையில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்றும் தலைவர் என்னிடம் கேட்பார். ஆரம்பத்தில், நான் தீவிரமாகப் பதிலளிப்பேன், ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, நான் பொறுமை இழக்க ஆரம்பித்தேன். “எங்கள் முன்னேற்றத்தைப் பற்றிய தகவலை தலைவருக்குத் தெரிவித்துக் கொண்டே இருப்பது அவ்வளவு தொந்தரவாக இருக்கிறது, அதோடு அது நிறைய நேரத்தை வீணடிப்பதாகவும் இருக்கிறது. என் பணியின் செயல்திறன் பாதிக்கப்படாதா? நான் மோசமான வேலைத் செயல்திறனைக் கொண்டிருந்தால், தலைவர் என்னைப் பணிநீக்கம் செய்துவிட மாட்டாரா?” என்று நான் நினைத்தேன். இதை உணர்ந்ததும் எங்களுடைய வேலையை தலைவர் மேற்பார்வையிடுவதற்கு நான் மிகவும் எதிர்ப்பாக மாறிவிட்டேன்.

ஒரு முறை, வேலை எப்படி போய்க்கொண்டிருந்தது என்று கேட்டு தலைவர் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பினார். அந்த மாதத்தில் எத்தனைபேர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், எத்தனை உறுப்பினர்கள் வழக்கமாகக் கூடுகைக்கு வரவில்லை என்றும், ஏன் வரவில்லை என்றும், அவர்கள் என்ன மதக் கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஐக்கியத்தின் மூலமாக நாங்கள் எப்படி அவற்றிற்குத் தீர்வு கண்டோம் என்றும் கேட்டார். இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டதனால், நான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தேன். செய்வதற்கு மிகவும் அதிகமான காரியங்கள் இருந்தன, நான் நீர்ப்பாய்ச்சும் ஊழியர்களுடன் கலந்தாலோசித்து, எல்லாவற்றையும் செய்ய வேண்டியதிருந்தது. இது எங்களுடைய வேலையை மிகவும் அதிகமாகத் தாமதப்படுத்தும், எனக்குள் எதிர்ப்புணர்வுஎழுந்தது: “நீங்கள் இந்தக் கேள்விகளுக்கு மிகவும் அதிகமான விவரங்களைக் கேட்கிறீர்கள்—இது எங்களை எவ்வளவு தூரத்துக்குத் தாமதப்படுத்தும்? எங்களுடைய நீர்ப்பாய்ச்சும் பணியில் எங்களுக்குப் பலன்கள் கிடைக்கவில்லை என்றால், நான் நடைமுறை வேலையைச் செய்யவில்லை என்றும், எனக்குத் தகுதியில்லை என்றும் சொல்லப்போகிறீர்களா?” என்னுடன் சக ஊழியர்களாக இருந்த சகோதரிகளுக்கும் சந்தேகங்கள் இருந்ததை நான் கவனித்தபோது, “இது தாமதத்தை ஏற்படுத்தும் என்று அவர்களும் நினைத்தால், நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பரிந்துரையை முன்மொழியலாம், அதன்பிறகு வேலையைச் செய்யும்போது இதுபோன்ற விரிவான கேள்விகளைத் தலைவர் கேட்க மாட்டார். அதன் மூலம் எனது வேலையில் உள்ள குறைபாடுகள் அதிகம் வெளிப்படாது” என்று நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். எனவே, “தலைவர் கேட்கும் இந்த விரிவான கேள்விகள் அனைத்திற்கும் அவர் உண்மையிலேயே எங்கள் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்” என்று நான் பாதி நகைச்சுவையாகச் சொன்னேன். நான் அதைச் சொன்னவுடனே, ஒரு சகோதரி அதை ஒப்புக்கொண்டு, “இது ஒரு குறுக்கு விசாரணை போல இருக்கிறது!” என்று சொன்னார். சகோதரி அவர்கள் நான் சொன்னதை ஒப்புக்கொண்டார் என்பதை நான் கேட்டவுடனே, நான் சிரித்துக்கொண்டே, “நாங்கள் ஏற்கனவே அலுவலாக இருக்கிறோம். இதுபோன்ற விரிவான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பது மிகவும் தொந்தரவாக உள்ளது. இது எங்கள் நீர்ப்பாய்ச்சும் பணியின் முடிவுகளைப் பாதிக்காதா?” என்று பதிலளித்தேன். மற்ற சகோதரிகளும் ஒப்புக்கொண்டு தலையை ஆட்டினர். “இதை நான் மட்டும் எதிர்க்கவில்லை என்பது போலத் தெரிகிறது. நமது பரிந்துரைகளைத் தலைவரிடம் வைக்கலாம், அதன்பிறகு அவர் எப்போதும் எங்கள் வேலையைப் பற்றிய தகவல்களைக் கேட்க மாட்டார்” என்று நான்உள்ளுக்குள் மகிழ்ந்தேன். எனது தூண்டுதலால், தலைவர் எங்கள் வேலையைப் பற்றிய தகவல்களைப் பெற வரும்போதெல்லாம், எனது சக ஊழியர்கள் முகம் சுழிப்பார்கள், அதோடு அவர்கள் பதிலளித்த போதும், ஒரு சில மேலோட்டமான கருத்துகளை மட்டுமே தெரிவித்தனர். எங்கள் பணியில் உள்ள சிக்கல்களையும் பிரச்சனைகளையும் பற்றிய விரிவான அறிக்கைகளை அவர்கள் கொடுக்கவில்லை, இதன் விளைவாக, நாங்கள் கொண்டிருந்த பிரச்சினைகளைத் தலைவரால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதோடு நீர்ப்பாய்ச்சும் பணியும் மேம்படவில்லை.

இன்னொரு முறை, நீர்ப்பாய்ச்சும் ஊழியர்களை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதைத் தலைவர் கவனித்தார், அதனால் அவர் பணியின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஐக்கியத்துடன், பயிற்சி செய்வதற்கான ஒரு சில பாதைகளையும் எங்களுக்குக் கொடுத்து எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்தத் திட்டத்திற்கு நாங்கள் பொறுப்பேற்கவில்லை என்பதையும், தாமதப்படுத்திக் கொண்டிருந்தோம் என்பதையும், பயனற்றவர்களாக இருந்தோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, புதிதாக வந்தவர்கள் பயிற்சி பெறவில்லை, இது நீர்ப்பாய்ச்சும் பணியை நேரடியாகப் பாதித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தத் துவங்குமாறும் மேலும் புதிதாக வந்தவர்களில் சிலரை விரைவில் நீர்ப்பாய்ச்சிகிறவர்களாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். நான் கடிதத்தைப் பார்த்ததும், “இது மிகவும் அதிகமாகக் கேட்பதாக இருக்கிறது. இந்தப் புதிதாக வந்தவர்கள் இப்போதுதான் தங்கள் கடமைகளைத் துவங்கியுள்ளனர்—அவர்களைப் பண்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல! ஜனங்களைப் பண்படுத்துவதில் உங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, உங்களால் எங்களை உங்கள் சொந்தத் தரத்தில் வைத்திருக்க முடியாது!” என்று எனக்குக் கொஞ்சம் எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது. ஆனால் அதன்பிறகு, “நான் நேரடியாகப் புகார் செய்தால், நான் திறமையான ஊழியர் இல்லை என்று அவர் நினைக்க மாட்டாரா? அது நடக்காது! இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் ஒட்டுமொத்தக் குழுவும் திறமையற்றவர்கள் என்பதை நான் அவருக்குக் காட்ட வேண்டும், அதனால் அவருக்குப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழி இருக்காது, நான் மட்டும் தனியாக பொறுப்பேற்க மாட்டேன்” என்று நான் நினைத்தேன். அதனால் நான் என் புருவத்தைச் சுருக்கி, பயந்த தொனியில், “தலைவரின் கோரிக்கைகள் கொஞ்சம் அதிகமாக உள்ளன. அவர் அளவுக்கு நமக்கு அனுபவம் இல்லை” என்று சொன்னேன். மற்ற சகோதரிகளும் உடனே தங்கள் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஒருவர், “தலைவருக்கு நல்ல திறன் உள்ளது, அவரது வேலையில் மிகவும் திறமையானவர், நம்மால் எப்படி அவருடன் நம்மை ஒப்பிட முடியும்?” என்று சொன்னார். “தலைவர் நம்மிடம் அதிகமாகக் கேட்கிறார், நம்மால் எப்படி இந்த வேலையைச் செய்து முடிப்பது நம்மால் எப்படி சாத்தியமாகும்?” என்று மற்றொருவர் சொன்னார். அனைவரும் ஒரேவிதமான எண்ணத்தில் இருப்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். தலைவருக்குப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரால் முழுக் குழுவையும் பணிநீக்கம் செய்ய முடியாது! மறுநாள் தலைவரின் கடிதத்திற்கு பதில் எழுதினேன், எங்கள் வேலையில் எங்களுக்கு இருந்த பிரச்சனைகளை விவரித்தேன், எங்களுடைய தற்போதைய நிலைமையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அவருக்குக் கொடுக்க முயற்சித்தேன். கடைசியில், “தற்போதைக்கு இதுவே எங்களால் செய்ய முடிந்தது. இதை மேலும் அதிகரிப்பது கடினமாக இருக்கும்” என்ற ஒரு வரியைச் சேர்த்தேன். இது எங்கள் ஒருமித்தக் கருத்து என்பதைத் தலைவர் அறிந்துகொள்ளும் விதத்தில் கடிதத்தில் “எங்கள்” என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். இதனால் தலைவர் எங்களை இவ்வளவு உயர்ந்த தரத்தில் வைத்து எண்ணமாட்டார். ஆனாலும், நான் ஆச்சரியப்படும் விதத்தில், அடுத்த கூடுகையின் போது, தலைவர் என்னைக் கையாண்டு, அம்பலப்படுத்தினார், நான் எனது கடமையில் ஒரு பாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், மேம்படும் உந்துதல் இல்லை என்றும், சகோதர சகோதரிகள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பினேன் என்றும், குழுக்களை உருவாக்கி என்னுடன் சேர்ந்து தலைவரை எதிர்க்க மற்றவர்களைத் தூண்டினேன் என்றும் சொன்னார். புதிதாக வந்தவர்களைப் பண்படுத்துவதை நான் தாமதப்படுத்துவதாகவும், திருச்சபையின் பணிகளைச் சீர்குலைப்பதாகவும், குழுவின் பணியில் நான் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். அதன் பிறகு கடைசியில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நான் மிகுந்த குற்ற உணர்வும் வருத்தமும் அடைந்தேன். நான் தொந்தரவு செய்துவிட்டேன், பொல்லாப்பு செய்துவிட்டேன், தேவனுக்கு இடையூறு செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். பிரச்சினைகள் வந்தபோது நான் சத்தியத்தைத் தேடவில்லை, அதோடு அனைவரையும் எதிர்மறையான மற்றும் செயலற்ற நிலையில் வாழ வழிவகுத்த கருத்துகளையும் பரப்பியிருந்தேன். திருச்சபையின் பணியை நான் உண்மையில் தடுத்திருந்தேன். பின்னர், சிந்திக்கும் போது, தேவனுடைய வார்த்தைகளின் இந்தப் பத்தியை நான் பார்த்தேன்: “தங்கள் இருதயத்தில் அந்திக்கிறிஸ்துகள் எப்போதும் கிறிஸ்துவின் தெய்வீக சாராம்சத்தைச் சந்தேகப்படுவதால், மேலும் எப்போதும் ஒரு கீழ்ப்படியாத மனநிலையைக் கொண்டிருப்பதனால், விஷயங்களைச் செய்யும்படி கிறிஸ்து அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் எப்போதும் கூராய்வுசெய்து அவற்றை விவாதித்து, அவை சரியா தவறா என்று தீர்மானிக்கும்படி ஜனங்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். இது ஒரு மோசமான பிரச்சினை, இல்லையா? (ஆம்.) அவர்கள் இந்த விஷயங்களைச் சத்தியத்துக்குக் கீழ்ப்படிதல் என்ற கண்ணோட்டத்தில் இருந்து அணுகுவதில்லை; அதற்குப் பதிலாக, தேவனுக்கு எதிராக இருந்தே அவர்கள் அணுகுகிறார்கள். இதுவே அந்திக்கிறிஸ்துகளின் மனநிலையாகும். கிறிஸ்துவின் கட்டளைகளையும் பணி ஏற்பாடுகளையும் கேட்கும்போது, அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதும் கீழ்ப்படிவதும் இல்லை, ஆனால் விவாதிக்கத் தொடங்குகிறார்கள். மேலும் அவர்கள் எதை விவாதிக்கிறார்கள்? கிறிஸ்துவின் வார்த்தைகளும் கட்டளைகளும் சரியா அல்லது தவறா என்றும், அவை நிறைவேற்றப்பட வேண்டுமா வேண்டாமா என்றும் அவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்களுடைய மனப்பாங்கு உண்மையில் இந்த விஷயங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒன்றாக உள்ளதா? இல்லை—அவர்களைப் போலவே இருக்கும்படி அவர்கள் அதிக ஜனங்களை இந்த விஷயங்களைச் செய்யக்கூடாது என்று ஊக்குவிக்க விரும்புகிறார்கள். மேலும் அவற்றைச் செய்யாமல் இருப்பது கீழ்ப்படிதல் எனும் சத்தியத்தை கடைப்பிடிப்பதாகுமா? நிச்சயமாக இல்லை. ஆக அவர்கள் என்ன செய்கிறார்கள்? (கலகம் செய்கிறார்கள்.) அவர்கள் மட்டும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யவில்லை, அவர்கள் ஒன்றிணைந்த கலகத்தையும் எதிர்நோக்குகிறார்கள். இதுவே அவர்களுடைய செயல்களின் இயல்பு, இல்லையா? ஒன்றிணைந்த கலகம்: அவர்களைப் போலவே எல்லோரையும் ஆக்குவது, எல்லோரையும் தங்களைப் போலவே சிந்திக்கச் செய்வது, அவர்கள் சொல்வதையே சொல்ல வைப்பது, அவர்களைப் போலவே முடிவெடுக்க வைப்பது, ஒன்றிணைந்து கிறிஸ்துவின் முடிவையும் கட்டளைகளையும் எதிர்ப்பது. இதுவே அந்திக்கிறிஸ்துகளின் செயல்முறை உத்தியாகும். அந்திக்கிறிஸ்துவின் நம்பிக்கை என்னவென்றால், ‘எல்லாருமே ஒன்றைச் செய்தால் அது ஒரு குற்றம் இல்லை,’ என்பதுதான், ஆகையினால் அவர்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்ய மற்றவர்களைத் தூண்டுகிறார்கள். இப்படி நடந்தால், தேவனுடைய வீடு அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று எண்ணுகிறார்கள். இது முட்டாள்தனம் அல்லவா? தேவனை எதிர்த்துப் போராடும் அந்திக்கிறிஸ்துகளின் சொந்தத் திறன் மிகமிகக் குறைவு, அவர்கள் முற்றிலும் தனியாக இருக்கிறார்கள். ஆகவே தேவனை கூட்டாக எதிர்க்க அவர்கள் மக்களைச் சேர்த்துக்கொண்டு, தங்கள் இருதயங்களில் ‘நான் ஒரு மக்கள் குழுவை ஏமாற்றி, அவர்களை என்னைப் போலவே சிந்தித்துச் செயல்படுமாறு செய்வேன். ஒன்றாக நாங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை நிராகரிப்போம், மேலும் தேவனுடைய வார்த்தைகளைத் தடைசெய்வோம், அவை பலனளிக்க விடாமல் தடுப்போம். யாராவது என்னுடைய பணியைப் பரிசோதிக்க வரும்போது, இப்படிச் செய்ய எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம் என்று சொல்லுவேன்—மேலும் அதன்பின் நீர் இதை எப்படிக் கையாளுவீர் என்று பார்ப்போம். இதை நான் உமக்குச் செய்யப்போவதில்லை, நான் இதை நிறைவேற்றப் போவதில்லை—நீர் எனக்கு என்ன செய்துவிடுவீர் பார்ப்போம்!’ என்று நினைக்கிறார்கள். … அந்திக்கிறிஸ்துகளில் வெளிப்படும் இந்த விஷயங்கள் எல்லாம் வெறுக்கத்தக்கவை இல்லையா? (அவை மிகவும் வெறுக்கப்படத்தக்கவை.) எது அவற்றை வெறுக்க தக்கவை ஆக்குகிறது? இந்த அந்திக்கிறிஸ்துகள் தேவனுடைய வீட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள், எங்கு அவர்கள் இருக்கின்றனரோ அங்கு கிறிஸ்துவின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதில்லை. நிச்சயமாகக் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மக்களால் கீழ்ப்படிய முடியாதபோது இன்னொரு வகையான சூழலும் அதில் அடங்கலாம்: சில ஜனங்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடியாது, அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களுக்குத் தெரியாது; எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களுக்கு நீ கற்பித்தாலும், அப்போதும் அவர்களால் முடியாது. இது வேறு ஒரு விஷயம். இப்போது நாம் ஐக்கியப்படும் தலைப்பு அந்திக்கிறிஸ்துகளின் சாராம்சம்; இது மக்கள் விஷயங்களைச் செய்யக் கூடியவர்களா அல்லது அவர்களது செயல்திறன் எப்படிப்பட்டவை என்பதோடு சம்பந்தப்பட்டதல்ல; இது அந்திக்கிறிஸ்துகளின் மனநிலை மற்றும் சாராம்சத்துடன் சம்பந்தப்பட்டது. அவர்கள் முற்றிலுமாகக் கிறிஸ்துவுக்கு, தேவனுடைய வீட்டின் பணி ஏற்பாடுகளுக்கு, மற்றும் சத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார்கள், அவர்களுக்குக் கீழ்ப்படிதல் இல்லை, எதிர்ப்பு மட்டும்தான் உள்ளது. இப்படித் தான் ஓர் அந்திக்கிறிஸ்து இருக்கிறான்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் பத்து (பகுதி நான்கு)”). தேவனுடைய வார்த்தைகளை வாசித்த உடன் நான் உணர்ந்தேன் அதாவது நான் செய்தது அவ்வளவு கடுமையான குற்றம் என்பதை. அந்திக்கிறிஸ்துகள் எவ்வாறு கலகத்தனமான மனநிலையைக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பற்றிய தேவனுடைய விளக்கத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், தேவனுடைய கோரிக்கைகளையும் தேவனுடைய வீட்டின் பணி ஏற்பாடுகளையும் குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அவற்றுக்குக் கீழ்ப்படியவோ தயாராக இல்லை, விரோதமும் எதிர்ப்பும் என்னில் நிறைந்திருக்கின்றன, அவற்றைக் கொண்டு மற்றவர்களை எதிர்த்து வஞ்சிக்கிறேன். என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்கையில், நானும் அவ்விதமான நடத்தையை வெளிப்படுத்தியிருந்தேன். தலைவர் எங்கள் பணி முன்னேற்றத்தை விரிவாக அறிந்துகொள்ள விரும்பியபோது, அது எனது கடமையைத் தாமதப்படுத்துவதாகவும், எனது பணியினால் கிடைக்கும் பலனில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நான் எரிச்சலும் கவலையும் அடைந்தேன். அதனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தலைவரைப் பற்றி பாரபட்சமான கருத்துக்களைப் பரப்பினேன், என்னுடன் சேர்ந்து அவருக்கு எதிராகக் கலகம் செய்ய மற்ற சகோதரிகளை ஒன்று திரட்டினேன். எங்களுடைய முன்னேற்றம் மிக மெதுவாக இருப்பதாகவும், எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் தலைவர் சுட்டிக்காட்டி, எங்களுடைய வேலையின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பகிர்ந்துகொண்ட போது, நான் எதிர்த்தேன், வாதாடினேன், கீழ்ப்படியவில்லை. தலைவர் எங்களை மிக உயர்ந்த தரநிலையில் வைத்திருப்பதாகவும், எங்களுடைய உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் நான் நினைத்தேன். எங்களுடைய செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்துத் தலைவர் ஐக்கியப்பட்டபோது, நான் செவிகொடுக்கவில்லை. தலைவரைப் பின்வாங்கச் செய்யவும், எங்கள் மேல் அவர் கொண்டிருந்த தரநிலையக் குறைக்கச் செய்யவும், எங்களுடைய வேலையின் மோசமான முடிவுகளுக்கு நான் மட்டும் காரணம் இல்லை என்பதை அவரை அறிந்துகொள்ளச் செய்வதற்கும், தலைவரின் கோரிக்கைகள் அளவுக்கு அதிகமாக உள்ளன என்ற கருத்தை நான் மற்றவர்களுக்கு மத்தியில் பரப்பினேன், தலைவர் எங்களை மிகவும் மோசமாக நடத்துகிறார் என்று அவர்களை நம்பச் செய்வதற்கு ஏவினேன், நான் மட்டும் பொறுப்பாகாதபடி என்னுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு அவர்களைத் தூண்டினேன். நான் மிகவும் சூழ்ச்சியுடன் இருந்தேன், மறைவான நோக்கங்களுடனும் சாத்தானிய துரோகத்துடனும் பேசினேன். என்னால் சிந்திக்க முடிந்ததெல்லாம் எனது நோக்கங்களை அடைய மற்றவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதாகத்தான் இருந்தது. எங்களிடம் இருந்த பிரச்சினைகளைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சரிசெய்து, எங்கள் பணியின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதற்காகவும் புதிதாக வந்தவர்களுக்குத் தங்கள் கடமையை முடிந்த அளவு விரைவில் செய்ய பயிற்சி அளிப்பதற்காகவுமே தலைவர் எங்கள் பணியின் விவரங்களைக் கேட்டார். அவர் தேவனுடைய கோரிக்கைகள் மற்றும் திருச்சபையின் ஏற்பாடுகளின்படி வேலை செய்து கொண்டிருந்தார், ஆனால் நான் கீழ்ப்படியாமல், எதிர்த்தேன். இது எனது தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்ல, இது திருச்சபையின் பணிக்கும் தேவனுடைய கோரிக்கைகளுக்கும் எதிராக இருந்தது. நான் முற்றிலும் தேவனுக்கு எதிராகச் செயல்பட்டேன். நாங்கள் எல்லோரும் ஒரே நம்பிக்கையைக் கொண்டிருக்கும்படியாகவும், திருச்சபையின் ஏற்பாடுகளுக்கு எதிராக ஒரே காரியத்தைக் சொல்லும்படியாகவும், என் பக்கமாக நிற்பதற்கு எல்லோரையும் வஞ்சிக்கவும் தூண்டிவிடவும் செய்தேன். நான் அந்திக்கிறிஸ்துவின் மனநிலையை வெளிப்படுத்தி, சாத்தானின் அடியாளாகச் செயல்பட்டேன். சகோதர சகோதரிகளை வஞ்சிக்க நான் எதிர்மறையாகப் பேசினேன், அவர்களுடைய முன்னேற்றத்திற்கான உந்துதலையும், அவர்களின் தற்போதைய நிலைக்குத் தீர்வு காண தயாராக இருப்பதையும் இழக்கச் செய்தேன், அவர்களுடைய வேலையில் செயல்திறனற்று மந்தமாக இருக்கச் செய்தேன். இதன் விளைவாக, நீர்ப்பாய்ச்சும் பணி தொடர்ந்து பலன்களைக் கொடுக்கத் தவறிவிட்டது. புதிதாக வந்தவர்களின் பயிற்சிக்கு இந்தத் தடையும் தொந்தரவும் ஒரு தீய பொல்லாத செயலாக இருந்தது! இதை உணர்ந்ததும், எனக்குக் கொஞ்சம் பயம் வந்தது. நான் அவ்விதமாகத் தொடர்ந்தால், நான் இன்னும் அதிக பொல்லாப்புகளைச் செய்வேன், கடைசியில் ஒரு அந்திக்கிறிஸ்துவாகி, அம்பலப்படுத்தப்பட்டு, புறம்பாக்கப்படுவேன். திருச்சபை என்னைப் பணிநீக்கம் செய்தது தேவனுடைய நீதி மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக இருந்தது. நான் தேவனுக்கு முன்பாக வந்து ஜெபம் செய்தேன்: “அன்பான தேவனே, எனது பணிநீக்கம் உமது நீதியின் அடையாளமாக இருந்தது. உமது வார்த்தைகளால் அம்பலப்படுத்தப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்டதன் மூலம், நான் என்னுடைய அந்திக்கிறிஸ்துவின் மனநிலையை உணர்ந்துகொண்டேன். இந்தப் பணிநீக்கத்தின் மூலம் நீர் என்னைப் பாதுகாத்து இரட்சித்தீர், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்!”

அதன் பிறகு, இவ்விதமான சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்திய தேவனுடைய வார்த்தைகளின் இன்னும் இரண்டு பத்திகளை நான் கண்டேன்: “மக்களை ஏமாற்ற அந்திக்கிறிஸ்துகள் அடிக்கடி கோட்பாடுகளைப் பரப்புவார்கள். அந்திக்கிறிஸ்துகள் எதைச்செய்தாலும், அதில் இறுதி முடிவெடுப்பது அவர்கள் கையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். சத்தியத்தின் கொள்கைகளை அவர்கள் முற்றிலுமாக மீறுகிறார்கள். அந்திக்கிறிஸ்துகளிடம் இருந்து வெளிப்படுவதை வைத்து மதிப்பிட்டால், அந்திக்கிறிஸ்துகளின் மனநிலை என்னவாக இருக்கும்? அவர்கள் நேர்மறையான விஷயங்களை விரும்புகிறார்களா, அவர்கள் சத்தியத்தை விரும்புகிறார்களா? அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களா? (இல்லை.) சோர்வும் சத்தியத்தை வெறுத்தலும்தான் அவர்களுடைய சாராம்சம். மேலும் என்ன, அவர்கள் எல்லா பகுத்தறிவையும் இழந்துவிட்ட அளவிற்கு மிகவும் அகந்தையாக இருக்கிறார்கள், குறைந்த பட்ச மனச்சாட்சியும் அறிவும் இல்லாமல் இருக்கிறார்கள்; அவர்கள் மக்கள் என அழைக்கப்படுவதற்குத் தகுதி அற்றவர்கள். அவர்களைப் பற்றி சொல்லக் கூடியது எல்லாம் அவர்கள் சாத்தானைப் போன்றவர்கள் என்பதுதான்—அவர்கள் பிசாசுகள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் பிசாசுகளே, இதில் எந்தச் சந்தேகமும் இல்லை(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் பத்து (பகுதி நான்கு)”). “சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைக் குறித்தும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதைக் குறித்தும் அந்திக்கிறிஸ்துகளின் இருதயங்களில் இருக்கும் மனப்பாங்கு என்ன? ஒரே வார்த்தை: எதிர்ப்பு, அவர்கள் தொடர்ந்து எதிர்க்கிறார்கள், இந்த எதிர்ப்பிற்குள் அடங்கியுள்ள மனநிலை என்ன? அது எதனால் எழுகிறது? கீழ்ப்படியாமையே அதைஎழச்செய்கிறது. மனநிலையைப் பொறுத்த வரையில், இது சத்தியத்தைப் பற்றிய சோர்வு, இது அவர்களின் இருதயங்களில் கீழ்ப்படியாமையைக் கொண்டிருப்பது, இது அவர்கள் கீழ்ப்படிய விரும்பாமல் இருப்பது. மேலும் அதனால், விஷயங்களை எப்படி கலந்தாலோசிப்பது என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளும்படி, எல்லா முடிவையும் ஒரே நபரே எடுப்பதற்குப் பதிலாக, தலைவர்களும் ஊழியர்களும் ஒன்றாக இசைந்து பணிபுரியும்படி தேவனுடைய வீடு கேட்கும்போது, அந்திக்கிறிஸ்துகள் தங்கள் இருதயங்களில் என்ன நினைக்கிறார்கள்? ‘மக்களோடு எல்லாவற்றையும் விவாதிப்பது என்பது மிகக் கஷ்டமானது! இந்த விஷயங்களைப் பற்றிய முடிவுகளை என்னால் எடுக்க முடியும். பிறரோடு சேர்ந்து பணிபுரிவது, அவர்களோடு அதைப்பற்றி பேசுவது, கொள்கையின் அடிப்படையில் விஷயங்களைச் செய்வது—எவ்வளவு முட்டாள்தனமாகவும் சங்கடமாகவும் இருக்கிறது!’ சத்தியத்தைத் தாங்கள் புரிந்துகொள்வதாகவும் எல்லாம் அவர்களுக்குத் தெளிவாக தெரியும் என்றும், விஷயங்களைச் செய்வதற்கு அவர்களுக்குச் சொந்த நுண்ணறிவும் வழிமுறைகளும் இருக்கின்றன என்றும் அந்திக்கிறிஸ்துகள் நினைக்கின்றனர், மேலும் அதனால் அவர்களால் பிறரோடு இணைந்து பணிபுரிய முடிவதில்லை, அவர்கள் மக்களோடு எதையும் கலந்தாலோசிப்பதில்லை, அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் சொந்த வழியிலேயே செய்கிறார்கள், மேலும் அவர்கள் யார் பேச்சையும் கேட்பதில்லை! தாங்கள் கீழ்ப்படிய விரும்புவதாகவும், பிறருடன் இணைந்து பணிபுரிய விரும்புவதாகவும் அந்திக்கிறிஸ்துகளின் வாய்கள் கூறினாலும், வெளியில் அவர்களுடைய பதில்கள் எவ்வளவு நல்லதாக தோன்றினாலும் சரி, அவர்கள் வார்த்தைகள் எவ்வளவு இனிமையாக ஒலித்தாலும் சரி, அவர்களால் தங்கள் கலகத்தன்மையுள்ள நிலையை மாற்ற முடியாது, தங்கள் சாத்தானிய மனநிலைகளை மாற்ற முடியாது. எப்படி இருந்தாலும் உள்ளுக்குள் அவர்கள் வெறித்தனமான கலகப்புத்தி உடையவர்கள்—எந்த அளவுக்கு? அறிவின் மொழியில் விளக்கினால், வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட இரண்டு பொருட்களை ஒன்றாக இணைக்கும்போது நிகழும் ஒரு நிகழ்வே இது: நிராகரித்தல், இதை நாம் ‘எதிர்ப்பு’ என்று விவரிக்கலாம். இதுவே துல்லியமாக அந்திக்கிறிஸ்துகளின் மனநிலை ஆகும்: மேலுள்ளவருக்கு எதிர்ப்பு. மேலுள்ளவரை எதிர்க்க விரும்புகிறார்கள், மேலும் யாருக்கும் கீழ்ப்படிய மாட்டார்கள்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் பத்து (பகுதி நான்கு)”). அந்திக்கிறிஸ்துகளின் சுபாவமும் சாராம்சமும் சத்தியத்தை வெறுப்பதாகவும் தேவனை எதிர்ப்பதாகவும் இருப்பதாக தேவன் சொல்கிறார். என் மனநிலை அந்திக்கிறிஸ்துவின் மனநிலையைப் போலவே இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். தலைவரின் மேற்பார்வையால் நான் கோபமடைந்து, அதை எதிர்த்தேன், அது என் வேலையைத் தாமதப்படுத்தும் என்று நினைத்தேன், அத்தோடு எங்கள் பலனை அதிகரிக்கக் கோருவதற்காக அவர் எங்களிடம் அளவுக்கு அதிகமாகக் கேட்கிறார் என்று நான் நினைத்தேன், அதனால் நான் கீழ்ப்படியாமல், தொடர்ந்து கூச்சலிட்டு, எதிர்ப்பு தெரிவித்தேன். உண்மையில், எங்கள் வேலையில் உள்ள பிரச்சனைகளைத் தலைவர் சுட்டிக்காட்டியதை நான் ஏற்றுக்கொண்டு, எங்கள் வேலையில் நாங்கள் ஏன் முடிவுகளைப் பெறத் தவறினோம் என்பதையும், எங்களுடைய கடமையில் நாங்கள் மிகவும் சாதாரணமாக இருந்ததால்தானோ, அல்லது எங்களுக்கு நுண்ணறிவு இல்லையோ, சகோதர சகோதரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க சத்தியத்தைப் பயன்படுத்தத் திறனில்லையோ என்பதையும் அக்கறையோடு சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். பிரச்சனையைக் கண்டறிந்த பிறகு, அதைச் சரிசெய்து மேம்படுத்த நான் வேகமாகச் செயல்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நான் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கொஞ்சம்கூட சிந்திக்கவோ இல்லை, என் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்காக என்னை நானே குறை கூறவோ அல்லது குற்ற உணர்ச்சியை உணரவோ இல்லை. பணிநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, என்னுடன் சேர்ந்து தலைவரை எதிர்க்க மற்றவர்களைத் தூண்டிவிட நான் மிகவும் சிரமப்பட்டேன். அது ஒரு நேர்மறையான விஷயமாகவும், தலைவர் வேலையைப் பின்தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டும் என்பது தேவனுடைய கோரிக்கையாகவும் இருந்தது, ஆனால் நான் எதிர்க்கவும் விரோதிக்கவும் செய்தேன். வெளிப்புறமாக, நான் தலைவருடன் மோதலில் இருந்தேன், ஆனால் சாராம்சத்தில், நான் சத்தியத்தில் குறைவுபட்டிருந்தேன் மற்றும் நேர்மறையான விஷயங்களை வெறுத்தேன். திருச்சபையின் பணிக்கு நான் இடையூறு செய்திருந்தேன். நான் எப்படி சத்தியத்தில் குறைவுபட்டிருந்தேன், தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தேன் என்பதைக் கண்டு, எனது சாத்தானிய மனநிலையால் நான் திகிலடைந்தேன். திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட சில அந்திக்கிறிஸ்துகளைப் பற்றி நான் மீண்டும் சிந்தித்துப் பார்த்தேன். ஜனங்கள் அவர்களால் பரியாசம் பண்ணப்பட்டு, உதவப்பட்டு, கிளைநறுக்கப்பட்டு, கையாளப்படும் போது, அவர்கள் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அல்லது தங்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள். ஜனங்கள் தங்கள் வேலையை மேற்பார்வையிட்டால் அல்லது அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினால், அவர்கள் அவமானப்பட்டு கோபப்படுவார்கள் மற்றும் அந்த ஜனங்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதுவார்கள். அவர்கள் பிடிவாதமாகவும், சத்தமாகவும் எதிர்ப்பு தெரிவித்து கடைசி வரை எதிர்ப்பார்கள். திருச்சபையின் பணிக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் பொல்லாப்புகளை அவர்கள் செய்தாலும், அவர்கள் அப்போதும் மனந்திரும்பவில்லை, கடைசியில் திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதெல்லாமே அவர்களுடைய அந்திக்கிறிஸ்துவின் மனநிலையின் காரணமாகவே நடந்தது, இது சத்தியத்தில் குறைவுபட்டிருந்ததாலும், அதை வெறுத்ததாலும் ஏற்பட்டது. நான் காட்டிய மனநிலை அந்திக்கிறிஸ்துவைப் போலவே இருந்தது அல்லவா? நான் மனந்திரும்பவில்லை என்றால், நான் இறுதியில் அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுவேன்.

பின்னர், நான் ஏன் தலைவரை எதிர்க்க மற்றவர்களைத் தூண்டினேன் என்றும் நான் சிந்தித்தேன். இவற்றுக்கெல்லாம் பின்னால் மூலக் காரணமாக இருந்தது எது? என்னுடைய தேடுதலின் போது, தேவனுடைய வார்த்தையின் இந்தப் பத்தியை நான் கண்டேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் தேவனுடைய கிரியையை அனுபவித்து சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் வரை, சாத்தானின் சுபாவமேஆளுகை செய்து, உள்ளிருந்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக, அந்த சுபாவம் எதைக்உண்டாக்குகிறது? உதாரணமாக, நீ ஏன் சுயநலமாக இருக்கிறாய்? நீ ஏன் உன் சொந்த பதவியைப் பாதுகாக்கிறாய்? உன்னிடம் ஏன் இதுபோன்ற வலுவான உணர்ச்சிகள் உள்ளன? நீ ஏன் அநீதியான காரியங்களை அனுபவிக்கிறாய்? நீ ஏன் அந்தத் தீமைகளை விரும்புகிறாய்? இதுபோன்ற காரியங்களில் உன் விருப்பம் இருப்பதற்கான அடிப்படை காரணம் என்ன? இந்தக் காரியங்கள் எங்கிருந்து வருகின்றன? நீ ஏன் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாய்? சாத்தானின் விஷம் மனிதனுக்குள் இருப்பதுதான் இந்தக் காரியங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்பதை இப்போது நீங்கள் எல்லோரும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆகவே சாத்தானின் விஷம் என்றால் என்ன? அதை முழுமையாக எப்படி வெளிப்படுத்த முடியும்? உதாரணமாக, நீங்கள் ‘மக்கள் எப்படி வாழ வேண்டும்? மக்கள் எதற்காக வாழ வேண்டும்?’ என்று கேட்டால், ‘ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்’ என்று ஜனங்கள் பதிலளிப்பார்கள். இந்த ஒற்றைச் சொற்றொடரானது பிரச்சனையின் மூலக் காரணத்தை வெளிப்படுத்துகிறது. சாத்தானின் தத்துவமும் பகுத்தறிவுக்கேதுவான எண்ணப்போக்கும் ஜனங்களுடைய ஜீவனாக மாறியிருக்கிறது. ஜனங்கள் எதைப் பின்தொடர்ந்து போனாலும், அவர்கள் அதைத் தங்களுக்காகவே செய்கிறார்கள், அதனால் அவர்கள் தங்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்’—இதுதான் மனுஷனுடைய வாழ்க்கை தத்துவமுமாக இருக்கிறது, மேலும் இது மனித சுபாவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த வார்த்தைகள் ஏற்கெனவே சீர்கேடான மனிதகுலத்தின் சுபாவமாகவும், சீர்கேடு நிறைந்த மனிதகுலத்தின் சாத்தானிய சுபாவத்தின் உண்மையான உருவப்படமாகவும் மாறிவிட்டன, மேலும் இந்தச் சாத்தானிய சுபாவம் ஏற்கனவே சீர்கேடான மனிதகுலத்தின் இருப்புக்கான அடிப்படையாக மாறிவிட்டது; பல ஆயிரம் ஆண்டுகளாக, சாத்தானின் இந்த விஷத்தின்படி இன்றுவரை சீர்கெட்ட மனிதகுலம் வாழ்ந்திருக்கிறது. சாத்தான் செய்யும் அனைத்தும் அதன் சொந்த ஆர்வத்துக்காகவும், இலட்சியங்களுக்காகவும் மற்றும் நோக்கங்களுக்காகவும் ஆகும்; அது தேவனை விஞ்சவும், தேவனிடமிருந்து விடுபடவும், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் கைப்பற்றவும் விரும்புகிறது. இன்று, ஜனங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுள்ள அளவு இதுவாகும்: அவர்கள் அனைவரும் சாத்தானிய சுபாவங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தேவனை மறுதலிக்கவும் எதிர்க்கவும் முயற்சிக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்த விதிகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றனர் மற்றும் தேவனுடைய திட்டங்களையும் ஏற்பாடுகளையும் எதிர்க்க முயற்சிக்கின்றனர், அவர்களின் இலட்சியங்கள் மற்றும் ஆர்வங்கள் அப்படியே சாத்தானுடையவைப் போன்றே இருக்கின்றன. ஆகையால், மனித சுபாவம் சாத்தானின் சுபாவமாக இருக்கிறது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி”). தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, தேவனை எதிர்க்கும் இதுபோன்ற ஒரு கொடூரமான செயலைச் செய்யக் கூடியவளாக நான் இருப்பது எனது சீர்கேடான மனநிலையைக் காட்டுவது மட்டுமல்ல, எனது சாத்தானிய சுபாவம் மற்றும் சாத்தானிய மனநிலையின் காரணமாகவும் இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். இதன் விளைவாக, நான் எந்த நேரத்திலும் தேவனை எதிர்க்கக் கூடியவளாக இருந்தேன். நான் சாத்தானால் எவ்வளவு ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டிருந்தேன் என்பதைப் பார்த்தேன். “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” என்ற சாத்தானிய தத்துவத்தின்படி நான் வாழ்ந்தேன், நம்பமுடியாத அளவிற்குச் சுயநலமாகவும் வஞ்சகமாகவும் மாறியிருந்தேன். நான் செய்தவை, சொன்னவை எல்லாம் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், என் நலன்களைப் பேணவும்தான். மேற்பார்வையின் போது எனது பணியில் உள்ள சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தலைவர் கண்டறிந்தபோது, தலைவர் என்னைத் திறமையற்றவர் என்று சொல்லி என்னைப் பதவி நீக்கம் செய்துவிடுவார் என்று நான் கவலைப்பட்டதனால், தலைவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தவும், ஒன்றிணைந்த எதிர்ப்பில் என்னுடன் நிற்க மற்றவர்களை அணிதிரட்டி தூண்டிவிடுவதற்காகவும், தலைவரின் மேற்பார்வைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், நான் மட்டும்தான் திறனில்லாமல் வேலை செய்யவில்லை என்பதையும், இது நாங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்ட பிரச்சினை என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தவும் நான் சதித்திட்டம் தீட்டினேன். என் அந்தஸ்தைப் பராமரிப்பதற்காக, தலைவரை எதிர்த்து, என்னைப் பாதுகாத்துக்கொள்ள நான் ஒரு விரிவான திட்டத்தைத் தீட்டினேன். இது திருச்சபையின் பணிக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. நான் எவ்வளவு அதிகமாகச் சிந்தித்தேனோ, அவ்வளவு அதிகமாகச் சுயநலமாகவும், இழிவாகவும், வெட்கமில்லாமலும் இருந்தேன் என்பதை நான் கண்டேன். மிகவும் மோசமான ஒன்றைச் செய்ய முடிவதற்கு—நான் மனிதத்தன்மையில் முற்றிலும் குறைவுபட்டவளாக இருந்தேன்! நான் மிகவும் வருத்தப்பட்டு, “அன்பான தேவனே! நான் பொல்லாப்பு செய்திருக்கிறேன், திருச்சபையின் பணிக்கு இடையூறு செய்திருக்கிறேன். நான் முழுமையாக மனந்திரும்பவும், என் தலைவரின் மேற்பார்வையையும் வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்ளவும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு சிருஷ்டியாக என் கடமையை வாஞ்சையோடு செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று தேவனிடம் ஜெபம் செய்தேன்.

அதன் பிறகு, நான் தேவனுடைய வார்த்தைகளின் இரண்டு பத்திகளைப் படித்தேன், அது தலைவரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் மீது எனக்குச் சரியான அணுகுமுறையைக் காட்டியது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்று, பலர் ஒரு கடமையைச் செய்தாலும், ஒரு சிலரே சத்தியத்தைப் பின்தொடர்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யும்போதே, அரிதாகவே மக்கள் சத்தியத்தைப் பின்தொடர்ந்து சத்தியத்தின் யதார்த்தத்துக்குள் பிரவேசிக்கின்றனர்; பலருக்கு, விஷயங்களை அவர்கள் செய்யும் விதத்தில் இன்னும் கொள்கைகள் எதுவும் இல்லை, அவர்கள் இன்னும் தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படியும் மக்கள் இல்லை; சத்தியத்தை நேசிப்பதாகவும், அவர்கள் சத்தியத்தைப் பின்பற்ற விரும்புவதாகவும், அவர்கள் சத்தியத்துக்காகப் பாடுபடத் விருப்பமுள்ளதாகவும் வெறுமனே அவர்களுடைய வாய்கள் கூறுகின்றன, இருந்தாலும் அவர்களுடைய தீர்மானம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இன்னும் தெரியாது. சத்தியத்தைப் பின்தொடராதவர்களுக்கு எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் சீர்கேடான மனநிலை வெடித்துப் பொங்கலாம். சத்தியத்தைப் பின்தொடராதவர்களுக்குத் தங்கள் கடமையைப் பொறுத்தவரையில் ஒரு பொறுப்புணர்வு இருப்பதில்லை, அவர்கள் அடிக்கடி அக்கறை இல்லாமலும் செயலற்றும் இருப்பார்கள், தங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள், மேலும் கிளைநறுக்குதலையும் கையாளுதலையும் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பலவீனமாகவும் எதிர்மறையாகவும் மாறியதும், சத்தியத்தைப் பின்தொடராதவர்கள் முயற்சியை விட்டுவிட வாய்ப்புள்ளது—இது அடிக்கடி நிகழ்கிறது, இதைவிட வேறு எதுவும் இவ்வளவு பொதுவாக இருப்பதில்லை; சத்தியத்தைப் பின்தொடராத எல்லோரும்இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஆகவே, சத்தியத்தை இன்னும் அடையாதபோது, மக்கள் சார்ந்திருக்க முடியாதவர்களாகவும் நம்ப முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நம்பமுடியாதவர்கள் என்பதற்கு என்ன அர்த்தம்? அதாவது, அவர்கள் கஷ்டங்களை அல்லது பின்னடைவுகளைச் சந்திக்கும்போது, அவர்கள் விழ நேரிடலாம், மேலும் எதிர்மறையாகவும் பலவீனமாகவும் மாறலாம். அடிக்கடி எதிர்மறையாகவும் பலவீனமாக இருக்கும் ஒருவர் நம்பகமான ஒருவராக இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் சத்தியத்தைப் புரிந்துகொள்பவர்கள் வித்தியாசமானவர்கள். உண்மையிலேயே சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு தேவனுக்குப் பயப்படும் ஓர் இருதயம் இருக்கவேண்டும், தேவனுக்குக் கீழ்ப்படியும் ஓர் இருதயம், மேலும் தேவனுக்குப் பயப்படும் இருதயம் கொண்ட ஜனங்கள் மட்டும்தான் நம்பக்கூடியவர்கள்; தேவனுக்குப் பயப்படும் இருதயம் இல்லாதவர்கள் நம்பக்கூடியவர்கள் அல்லர். தேவனுக்குப் பயப்படும் இருதயம் இல்லாதவர்களை எப்படி அணுக வேண்டும்? நிச்சயமாக, அவர்களுக்கு அன்புடன் உதவிசெய்து ஆதரவு அளிக்கவேண்டும். அவர்கள் கடமையைச் செய்யும்போது அதிகமாகக் கண்காணிக்க வேண்டும், அதிக உதவியும் வழிகாட்டுதலும் தர வேண்டும்; அப்படியானால் மட்டுமே அவர்கள் தங்கள் கடமையை நன்றாகச் செய்வார்கள் என்று உறுதியளிக்க முடியும். இதைச் செய்வதன் நோக்கம் என்ன? தேவனுடைய வீட்டின் பணியை நிலைநிறுத்துவதே முக்கிய நோக்கம். இதற்கு அடுத்தப்படியான நோக்கம் பிரச்சினைகளை உடனடியாக அடையாளம் கண்டறிந்து, உடனடியாக அவர்களுக்கு வழங்கி, ஆதரித்து, கையாண்டு அவர்களைக் கிளைநறுக்கி, அவர்களது வேறுபாடுகளைச் சரியாக்கி, அவர்களது குறைபாடுகளையும் பற்றாக்குறைகளையும் நிவிர்த்திசெய்ய வேண்டுவதேயாகும். இது ஜனங்களுக்கு நன்மை பயப்பது ஆகும்; இதில் தீங்கானது ஒன்றும் இல்லை. மக்களை மேற்பார்வைசெய்து, அவர்கள் மேல் ஒரு கண் வைப்பது, அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது—இவை எல்லாம் அவர்கள் தேவனிடத்தில் வைத்திருக்கும் விசுவாசத்தில் சரியான பாதையில் நுழைவதற்கு உதவி செய்யவும், தேவன் கேட்கும்படியும் கொள்கையின்படியும் அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய உதவி புரியவும், அதனால் அவர்கள் எந்த இடையூறும் தடையும் செய்யாமலிருக்கவும், அதனால் அவர்கள் தங்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கவுமே. இதைச் செய்வதன் நோக்கம் முழுக்க முழுக்க அவர்களுக்கும் தேவனுடைய வீட்டின் வேலைக்கும் பொறுப்பேற்பதேயாகும்; இதில் எந்தத் தீங்கும் இல்லை(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்). “ஒரு கடமையைச் செய்யும் ஒருவரை தேவனுடைய வீடு மேற்பார்வைசெய்து, கண்காணித்து சோதனை செய்கிறது. தேவனுடைய வீட்டின் இந்தக் கொள்கையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? (ஆம்.) உன்னை தேவனுடைய வீடு மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும், சோதனை செய்யவும் நீ அனுமதித்தால், அது ஓர் அற்புதமான விஷயம். உன் கடமையைச் செய்வதில், உன் கடமையை திருப்திகரமாகச் செய்வதிலும் தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்துவதிலும்அது உனக்கு உதவியாக இருக்கும். அது எந்தவிதக் குறையுமே இல்லாமல் மக்களுக்கு நன்மையும் உதவியும் செய்கிறது. இதைப் பற்றிய கொள்கைகளை ஒருவர் ஒருமுறை புரிந்துகொண்டால், தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் செய்யும் மேற்பார்வைக்கு எதிர்ப்பு அல்லது தற்காப்பு உணர்வும் அதன் பின்னர் ஒருவருக்கு இருக்குமா இல்லாமல் இருக்குமா? நீ சோதிக்கப்பட்டு சிலவேளைகளில் கவனிக்கப்படலாம், உன் வேலை கண்காணிக்கப்படலாம், ஆனால் இது தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக் கூடியது அல்ல. இது ஏன் அப்படி? ஏனெனில் இப்போது உன்னுடைய இந்தப் பணிகள், நீ செய்யும் கடமை, மேலும் நீ செய்யும் எந்த வேலையும் எந்த ஒரு நபரின் தனிப்பட்ட விவகாரமோ அல்லது தனிப்பட்ட வேலையோ அல்ல; அவை தேவனுடைய வீட்டின் வேலையுடன் சம்பந்தப்பட்டு தேவனுடைய வேலையின் ஒரு பகுதியுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. ஆகவே கொஞ்ச நேரம் யாராவது உன்னைக் கண்காணிப்பதில் அல்லது கவனிப்பதில் கழித்தால், அல்லது உன்னிடம் ஆழமான கேள்விகளைக் கேட்டால், உன்னோடு நெருக்கமாகப் பேசி இந்த காலக் கட்டத்தில் உன் நிலை எப்படி இருக்கிறது என்று அறிய முயன்றால், அதுமட்டுமல்லாமல் சிலவேளைகளில் அவர்களுடைய அணுகுமுறை சற்று கடுமையானதாக இருந்தால், அவர்கள் உன்னைச் சற்றே கையாண்டு கிளைநறுக்கினால், தண்டித்துத் திருத்தினால், உன்னைக் கடிந்துகொண்டால், இவை எல்லாம் தேவனுடைய வீட்டின் பணியின் மேல் அவர்களுக்கு மனச்சாட்சியும் பொறுப்பும் கொண்ட நடத்தை இருக்கிறது என்று அர்த்தம். உனக்கு இதைப் பற்றி எதிர்மறை சிந்தனைகள் அல்லது உணர்வுகள் இருக்கக் கூடாது. மற்றவர்களின் மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் வினவலை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் அதன் அர்த்தம் என்ன? அதாவது, உன் இருதயத்தில் நீ தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்கிறாய். உன்னைப் பற்றிய மக்களுடையமேற்பார்வையை, கண்காணிப்பை மற்றும் வினவலை நீ ஏற்காவிட்டால்—இவை அனைத்துக்கும் எதிராக நீ மறுப்பு தெரிவித்தால்—உன்னால் தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்றுக்கொள்ள முடியுமா? தேவனுடைய கூர்ந்தாய்வு மக்களின் கேள்விகளைவிட அதிக விவரமானது, ஆழமானது மற்றும் துல்லியமானது; தேவன் கேட்பது இதைவிட மிகவும் குறிப்பானது, வற்புறுத்துவது, மற்றும் ஆழமானது. அப்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் கண்காணிப்பை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனுடைய கூர்ந்தாய்வை ஏற்றுக்கொள்ளுவேன் என நீ கூறுவது வெற்றுச்சொற்கள் அல்லவா? தேவனுடைய கூர்ந்தாய்வையும் பரிசோதனையையும் உன்னால் ஏற்றுக்கொள்ள முடிவதற்கு, நீ முதலில் தேவனுடைய வீடு, தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் கண்ணாணிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாக இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்). தேவனுடைய வார்த்தைகளின் மூலம், சாத்தானிய, சீர்கேடான மனநிலைகள் நமக்குள் இருப்பதனால்தான், நாம் அடிக்கடி நமது வேலையில் வேண்டுமென்றே செயல்படுகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால், நமது கசப்பான மற்றும் அலட்சியமான சுபாவத்தின் காரணமாக, நாம் அடிக்கடி நமது கடமைகளில் செயலற்றவர்களாக இருக்கிறோம், மேலும் நல்ல முடிவுகளை உண்டாக்க முயற்சிப்பதில்லை. மேலும், நாம் பல வழிகளில் கொள்கைக்கு எதிராக செல்கிறோம், ஆகையால் மேற்பார்வையிட்டு சரிபார்ப்பதற்கும், திருச்சபையின் பணி சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் நமக்குத் தலைவர்களும் ஊழியக்காரர்களும் தேவை. இதைத்தான் தலைவர்களிடமும் ஊழியக்காரர்களிடமும் தேவன் கோருகிறார், இது அவர்களுடைய வேலையின் ஒரு முக்கிய அம்சமாகும். ஆகையால் தலைவர்கள் மற்றும் ஊழியக்காரர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலுக்கு நான் கீழ்ப்படிந்து, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் என்னவென்றால், நான் ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்தேன், தலைவரின் மேற்பார்வையும் சரிபார்ப்புகளும் என் கடமையைத் தாமதப்படுத்தும் என்றும், எனது வேலையின் செயல்திறனைப் பாதிக்கும் என்றும் நினைத்தேன். ஆனால் உண்மையில், பிரச்சனைகளைக் கண்டறிந்து எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சிக்கல்களைச் சரிசெய்யவும் எங்களுக்கு உதவுவதற்காகவே. தலைவர்கள் எங்கள் பணியின் விவரங்களைப் பார்க்கிறார்கள். இது உண்மையில் எங்கள் பணியின் செயல்திறனை மேம்படுத்துகிறது—இது எங்கள் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதில்லை. உதாரணமாக, ஒரு முறை தலைவர் எங்கள் பணியைச் சரிபார்க்கும்போது, புதிதாக வந்தவர்களுக்கு நாங்கள் அன்புடனும் பொறுமையுடனும் நீர்ப்பாய்ச்சவில்லை என்பதையும் அவர்களிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதையும் அவர் கவனித்தார். இது புதிதாக வந்தவர்களில் சிலரை எதிர்மறையாக மாற்றியது மற்றும் அவர்களின் கடமைகளைச் செய்யவிடவில்லை. தலைவரின் ஐக்கியத்தின் மூலம் மட்டுமே எங்கள் பணியில் இருந்த பிரச்சினைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு, புதிதாக வந்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேவனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் அவர்களுடன் ஐக்கியம் கொண்டோம், அவர்களுடைய கடமைகளைச் செய்வதன் அர்த்தத்தை அவர்களுக்குத் தெரிவித்தோம், புதிதாக வந்தவர்களுக்கு அவர்களுடைய உண்மையான வளர்ச்சியின் அடிப்படையில் பணியை ஒதுக்கினோம். அதன் பிறகு, அவர்களுடைய நிலைகள் மேம்பட்டன, அவர்களால் தங்கள் கடமைகளைச் சாதாரணமாக செய்ய முடிந்தது. தலைவரின் மேற்பார்வையும் வழிகாட்டுதலும் எங்கள் பணியை எதிர்மறையாகப் பாதிக்காமல், எனது கடமையில் கொள்கைகளை நன்றாகப் புரிந்து கொள்ள எனக்கு உதவும் என்பதை நான் கண்டேன். இவையனைத்தும் எங்கள் பணியில் தலைவரின் மேற்பார்வையையும் வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொண்டதனால் கிடைத்த பயன்களாக இருந்தன. தலைவரின் மேற்பார்வையை ஏற்றுக்கொள்வது என்பது திருச்சபையின் பணியின் மீதான ஒரு பொறுப்பு மனப்பான்மை என்பதையும், ஒருவர் தனது கடமையில் கொண்டிருக்க வேண்டிய நடைமுறைக் கொள்கை என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, புதிதாக வந்தவர்களுக்கு தொடர்ந்து நீர்ப்பாய்ச்சுவதற்குத் தலைவர் என்னை நியமித்தார், நான் தேவனுக்கு நம்பமுடியாத அளவிற்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக உணர்ந்தேன். அதன் பிறகு, தலைவர் எங்கள் பணியைச் சரிபார்த்து, எங்களை வழிநடத்தியபோது, நான் எதிர்ப்பாக உணரவில்லை, தலைவர் கண்டறிந்த பிரச்சினைகளை என்னால் கவனத்தில் கொள்ளவும், எங்கள் கடமைகளில் உள்ள பிரச்சனைகளை எனது சக ஊழியர்களுடன் உற்சாகமாக விவாதித்து விவரிக்கவும் முடிந்தது. எங்கள் பணியில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மிகுந்த தெளிவை அடைந்ததனால், எங்கள் பணியின் செயல்திறன் படிப்படியாக மாறத் தொடங்கியது. எங்கள் கடமைகளில் தலைவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருப்பதன் மூலமாகவும் மற்றும் கொள்கைகளின்படி பணியைச் செய்வதன் மூலமாகவும் மட்டுமே நமது கடமைகளில் நல்ல பலன்களை உருவாக்க முடியும் என்பதை நான் உண்மையிலே உணர்ந்தேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுவிசேஷத்தை நன்றாகப் பிரசங்கிப்பதற்கு பொறுப்பு முக்கியமானது

நான் எப்பவும் என் கடமைகள பெருசா எடுத்துக்காம அதிக முயற்சி செய்யாம இருந்தேன். நான் அடிக்கடி விஷயங்கள கவனமில்லாம செஞ்சேன். சுவிசேஷத்த...

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன்....