நான் கிட்டத்தட்ட ஒரு அந்திக்கிறிஸ்துவின் பக்கமாக நின்றேன்

ஜனவரி 7, 2023

2021 ஆவது வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். மூணு மாசங்களுக்கு அப்புறமா, நானும் மார்ஜோரியும் திருச்சபைத் தலைவர்களா தேர்ந்தெடுக்கப்பட்டோம். மார்ஜோரி எனக்கு மூணு மாசங்களுக்கு முன்னாடியே கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டாள். ஒரே திருச்சபையில இல்லாத போதும், நாங்க சக ஊழியர் கூடுகைகள்ல ஒன்னா கலந்துக்கிட்டு, திருச்சபைப் பணிகளப் பத்தி கலந்துபேசிக்குவோம். ஒருதடவ, ஒரு கூடுகையில, மார்ஜோரி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தப் பத்தி பேசினாள். அவள் நோய்வாய்ப்பட்டிருந்ததாவும், ஆனாலும் அவள் தன்னோட கடமையத் தொடர்ந்து செஞ்சதாவும், அவளோட கணவன் அவளை ஒடுக்கினாலும் கூட, அவள் எதிர்மறையாக மாறவோ, பின்வாங்கவோ இல்லைன்னும் சொன்னாள். நான் அவளை ரொம்பவே பாராட்டி, அவள் நல்ல வளர்ச்சியப் பெற்றிருக்கிறாள்னு நெனச்சேன். நான் அதே சூழ்நிலையில இருந்திருந்தா, அது என்னோட கடமையச் செய்யும் திறனை பாதித்திருக்கலாம். அவள் மேல நான் உண்மையில நல்ல அபிப்ராயத்த வச்சிருந்தேன். அவளோட கணவன் அவளை ஒடுக்குனாலும் கூட, அவள் தன்னோட கடமைக்கான ஒரு பாரத்தக் கொண்டிருந்தாள், அதக் கைவிடல. சத்தியத்தக் கடைப்பிடிச்சு தேவனால பாராட்டப்பட்ட ஒரு வகையான நபர் இவள்தான்ங்கறத இது காட்டுதுன்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, ஒரு புதிய திருச்சபை உருவாக்கப்பட்டுச்சு, நானும் மார்ஜோரியும் பிரிஞ்சிட்டோம்.

அஞ்சு மாசங்கள் கழிச்சு, ஒரு நாள், எங்களோட மேற்பார்வையாளர் மரியா அவர்கள், எங்களோட குழு சம்பாஷணையில ஒரு செய்திய வெளியிட்டு, அன்னைக்கு ராத்திரி எங்களோட கூடுகையில அந்திக்கிறிஸ்துகள எப்படிப் பகுத்தறிவதுங்கறதப் பத்தி விவாதிப்போம்ன்னு சொன்னாரு, அதுக்கப்புறம் அவர் மார்ஜோரியின் முகநூல் பக்கத்துக்கு இணைப்பை அனுப்பி, அவள் ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்ததால, அவளோடு தொடர்பு கொள்ள வேண்டாம்ன்னு எங்ககிட்ட சொன்னாரு. நான் அதிர்ச்சியடஞ்சேன். மார்ஜோரி ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாள்ங்கறத என்னால நம்ப முடியல. அவள் தன்னோட கடமையில எவ்வளவு ஆர்வமா இருந்தாள், எவ்வளவாய் அவளால தியாகங்கள செய்யவும், தன்னை ஒப்புக்கொடுக்கவும், துன்பத்த அனுபவிக்கவும் முடிஞ்சிச்சுன்னு நெனச்சேன். வியாதியையும் குடும்பத்துல இருந்து அடக்குமுறையயும் எதிர்கொண்ட போதும், அவளால தன்னோட கடமையத் தொடர்ந்து செய்ய முடிஞ்சுச்சு—அப்படி சத்தியத்தத் தேடிய ஒருத்தரால உண்மையிலயே அந்திக்கிறிஸ்துவா இருக்க முடியுமா? மரியா தவறு செஞ்சிருக்கணும்! இது உண்மைன்னு என்னால நம்பவே முடியல. மேற்பார்வையாளர் இன்னோரு செய்திய அனுப்பி நான் அவளால் தொந்தரவடையாமலோ வஞ்சிக்கப்படாமலோ இருக்க, மார்ஜோரியை முகநூல்ல நான் தடுத்து விலக்கணும்னு அவர் எதிர்பார்ப்பதா சொன்னாரு. அத ஏத்துக்கறது எனக்குக் கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. மார்ஜோரியை அப்படி நடத்துறது நியாயமற்றதாத் தோணுச்சு. அவள் தன்னோட கடமையில ஆர்வமாவும் உற்சாகமாவும் இருந்தாள், அதோட, இதுக்கு முன்னாடி என்னை ஊக்குவிச்சு உதவுனவளா இருந்தாள். அவளுக்கு என்ன நடந்துச்சுன்னோ அல்லது அவள் ஏன் அந்திக்கிறிஸ்துவா கருதப்பட்டாள்ன்னோ எனக்குத் தெரியல. நான் ரொம்ப குழப்பமாவும் சோகமாவும் இருந்தேன் நான் அவளைத் தடைசெஞ்சு விலக்க விரும்பல. அதனால நான்: “மார்ஜோரி ஒரு அந்திக்கிறிஸ்து அல்ல, அவளுக்கு சில கருத்துகள் மட்டும்தான் இருக்குது. அவளைத் தடை செஞ்சு விலக்க வேண்டிய அவசியமில்ல. அவளோட பார்வையில இருந்து விஷயங்களப் பார்த்து, அவள் எப்படி உணருறாள்ங்கறதக் கொஞ்சம் கற்பன செஞ்சு பாருங்க” அப்படின்னு சொன்னேன். அந்த நேரத்துல, மேற்பார்வையாளர் என்னோடு ஐக்கியங்கொண்டார், ஆனா, நான் அத கவனிக்கல. அவர் அந்திக்கிறிஸ்துகளப் பகுத்தறிவதப் பத்திய அனுபவ சாட்சி காணொளிய எனக்கு அனுப்பி வச்சு, என்னையப் பார்க்கச் சொன்னாரு, அந்தக் காணொளி எனக்கு உதவியா இருக்கும்ன்னு சொன்னாரு. ஆனா, நான் அத அப்படியே அலட்சியப்படுத்திட்டேன். அதுக்கப்புறமா, என்ன நடந்துச்சுன்னு கேக்க மார்ஜோரிக்கு ஒரு செய்தி அனுப்புனேன். மார்ஜோரி: “நான் சில கருத்துகள பரப்பி வந்தேன், அதனால, குழு பேச்சு வார்த்தையிலிருந்து நான் நீக்கப்பட்டேன், எல்லோரும் என்னைத் தடை செஞ்சு ஒதுக்கிட்டாங்க. அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. நான் என்னை நிரூபிக்க வேண்டியதில்ல, தேவன் என் செயல்கள ஆராய்வாரு. நீங்க கூட என்னைய பகுத்தறிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா? நான் ரொம்பவே சோர்வா இருக்கேன். எல்லோரும் பகுத்தறிஞ்சு என்னைக் கைவிடுறாங்க” அப்படின்னு சொன்னாள். மேற்பார்வையாளரிடத்துல அவர் எவ்வளவா அதிருப்தி அடஞ்சாருங்கறதப் பத்தியும் அவள் நிறைய சொன்னாள். அவள் பேசுனதக் கேட்டதுக்கப்புறமா நானும் மேற்பார்வையாளரிடத்துல ஒரு சார்புநிலைய வளத்துக்கிட்டேன். அவர் காரியங்கள சரியா கையாளலன்னு நெனச்சேன். மார்ஜோரிக்கு சில கருத்துகள் அல்லது சிக்கல்கள் இருந்தா, அவர் அவளுக்கு உதவணும், அவளோடு ஐக்கியங்கொள்ளணும், அவள் ஒரு அந்திக்கிறிஸ்துன்னு உடனடியா முடிவு செய்யக்கூடாது. அந்திக்கிறிஸ்துகளப் பகுத்தறிவது பத்திய அந்த ராத்திரி கூடுகையப் பொறுத்தவர, நான் கலந்துக்கல, அதுக்குப் பதிலா தூங்கப் போயிட்டேன். நான் ரொம்ப சோர்வா இருந்தேன், நிலைமைய எப்படி சமாளிப்பதுன்னு தெரியல. தேவனிடத்துல இருந்து விலகி அந்த மாதிரியான நிலையில வாழ விரும்பாம தூங்கப் போறதுக்கு முன்னாடி நான் ஜெபிச்சேன். இது எல்லாத்துலயும் அவரோட சித்தம் என்னவா இருந்துதுங்கறத நான் புரிஞ்சுக்கும்படி, என்னையப் பிரகாசிப்பிக்கணும்னு தேவனிடத்துல கேட்டேன்.

அடுத்த நாள் காலையில, நான் ரொம்ப நிம்மதியா உணர்ந்தேன். முந்தய ராத்திரி ஐக்கியத்தின் உள்ளடக்கத்தப் பார்த்தேன் மேற்பார்வையாளருக்கும் மார்ஜோரிக்கும் இடையிலான உரையாடல்ல இருந்து ஒரு படம் கிடச்சுச்சு. மர்ஜோரி: “தேவன் மாம்சத்துல மனுவுருவாகியிருக்க வழியே இல்ல, நம்ம சகோதர சகோதரிகள்ல யார் தேவனைப் பார்த்தாங்க? சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் வேதாகமத்தோடு ஒத்துப்போவதில்ல, அவை வேதாகமத்துக்கு புறம்பா இருக்குது” அப்படின்னு சொன்னாள். மார்ஜோரி இந்த விஷயங்கள சொல்லியிருந்ததப் பார்த்து நான் அதிர்ச்சியடஞ்சேன். அவர் வேணும்னே கருத்துகளப் பரப்புனாங்க, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையக்கூட விசுவாசிக்கல. மார்ஜோரி ஏன் அந்திக்கிறிஸ்துவா கருதப்பட்டிருந்தாள்ங்கற காரணம் எனக்கு உண்மையிலயே புரியலன்னும், அவர் நடத்தைகள உண்மையிலயே நான் ஆராஞ்சு பார்த்ததில்லன்னும் அப்போதான் நான் உணர்ந்தேன். என்னோட சொந்த அபிப்பிராயத்தின் அடிப்படையில அவர் ஒரு அந்திக்கிறிஸ்துவா இருக்க முடியாதுன்னு நான் முடிவு செஞ்சுட்டேன். நான் ரொம்பவே குருடாவும் அகந்தையுள்ளவளாவும் இருந்தேன்! தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் பார்த்தேன், அது இப்படி சொன்னது: “சிலரால் கஷ்டங்களைத் தாங்க முடிகிறது, விலைக்கிரயத்தைச் செலுத்த முடிகிறது, வெளிப்புறமாக மிகவும் நன்றாக நடந்துக்கொள்ள முடிகிறது, மிகவும் மரியாதைக்குரியவர்களாக, மற்றவர்களின் புகழைப் பெறுகிறவர்களாக இருக்க முடிகிறது. இத்தகைய வெளிப்புற நடத்தையானது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்காக என்று கருதலாம் என்று கூறுகிறீர்களா? அத்தகையவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதாக ஒருவர் தீர்மானிக்க முடியுமா? ஏன் ஒவ்வொரு நேரமும் ஜனங்கள் அத்தகைய மனிதர்களைப் பார்த்து, அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்துகிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பாதையில் நடக்கிறார்கள் மற்றும் தேவனுடைய வழியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதாக நினைக்கிறார்கள்? சிலர் ஏன் இப்படி நினைக்கிறார்கள்? அதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே உள்ளது. அந்த விளக்கம் என்னவாக இருக்கிறது? சத்தியத்தைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன, தேவனைத் திருப்திப்படுத்துவது என்றால் என்ன, சத்தியத்தின் யதார்த்தத்தை உண்மையாக வைத்திருப்பதன் அர்த்தம் என்ன என்பன போன்ற சில கேள்விகள் பலருக்கு மிகவும் தெளிவானவையாக இல்லை. ஆகவே, வெளிப்புறமாக ஆவிக்குரியவராகவும், உன்னதமானவராகவும், உயர்ந்தவராகவும் மற்றும் சிறந்தவராகவும் தோன்றுபவர்களால் பெரும்பாலும் ஏமாற்றப்படும் சிலர் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி சொற்பொழிவாற்றக்கூடிய மனிதர்களைப் பொறுத்தவரையில், யாருடைய பேச்சும் செயல்களும் போற்றத்தக்கவை என்று தோன்றுகிறதோ, அவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் ஒருபோதும் அவர்களுடைய செயல்களின் சாராம்சம், அவர்களுடைய செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கைகள் அல்லது அவர்களுடைய குறிக்கோள்கள் என்ன என்பதைப் பார்த்ததில்லை. மேலும், இந்த ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை அவர்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. இந்த ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்கு அஞ்சுகிறார்களா, தீமையைத் தவிர்க்கிறார்களா என்பதை அவர்கள் ஒருபோதும் தீர்மானித்ததில்லை. இந்த ஜனங்களுடைய மனிதத் தன்மையின் சாராம்சத்தை அவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. மாறாக, அவர்களுடன் பழகுவதற்கான முதல் படியில் தொடங்கி, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, இந்த ஜனங்களைப் போற்றுவதற்கும் வணங்குவதற்கும் வருகிறார்கள். இறுதியில், இந்த ஜனங்கள் அவர்களுடைய விக்கிரகங்களாக மாறுகிறார்கள். மேலும், சிலரின் மனதில், அவர்கள் வணங்கும் மற்றும் நம்பும் விக்கிரகங்களுக்காகத் தங்கள் குடும்பங்களையும் கிரியைகளையும் கைவிட முயற்சிக்கின்றனர். மேலோட்டமாக அதற்கு அவர்களால் விலை கொடுக்க முடிகிறது என்று கருதுபவர்களே தேவனை உண்மையிலேயே திருப்திப்படுத்துபவர்கள் மற்றும் நல்ல முடிவுகளை மற்றும் நல்ல இலக்குகளை அடைய முடியும். அவர்களுடைய மனதில், இந்த விக்கிரகங்கள் தேவனால் புகழப்படுபவை என்று பார்க்கிறார்கள். அத்தகைய ஒரு விஷயத்தை அவர்கள் நம்புவதற்குக் காரணம் என்னவாக இருக்கிறது? இந்தக் காரியத்தின் சாராம்சம் என்னவாக இருக்கிறது? இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னவாக இருக்கின்றன? … இதன் நேரடி பலன் என்னவென்றால், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கு மாற்றாக மனிதனின் நல்ல நடத்தையை ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள். அது தேவனிடம் தயவைப் பெறுவதற்கான அவர்களுடைய விருப்பத்தையும் பூர்த்தி செய்கிறது. அது அவர்களுக்கு சத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மூலதனத்தை அளிக்கிறது. தேவனுடன் நியாயப்படுத்தவும் போட்டியிடவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதே சமயம், ஜனங்களும் தேவனை நேர்மையற்ற முறையில் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் போற்றும் விக்கிரகங்களை அவருக்குப் பதிலாக வைக்கின்றனர்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, நான் சிந்திக்க ஆரம்பிச்சேன். தியாகங்கள செஞ்சவங்க, துன்பங்கள சகிச்சவங்க, விலைக்கிரயம் கொடுத்தவங்க சத்தியத்தத் தேடுறவங்களாவும், தேவனை நேசிப்பவங்களாவும் இருந்தாங்கன்னு நெனச்சுக்கிட்டு, நான் எப்பவும் ஜனங்கள அவங்களோட வெளிப்புற நடத்தை மூலமா மதிப்பிட்டேன். ஆனா, இந்த மதிப்பிடுற தரநிலை சத்தியத்தோடு ஒத்துப்போகல, அதோட, ஜனங்களோட வெளிப்புற நடத்தையால ஏமாந்துபோக எனக்கு வழிவகுத்துச்சு. ஜெப ஆலயங்கள்ல பெரும்பாலும் பரிசேயர்கள் எப்படி ஜனங்களுக்கு வேதத்த விளக்குவாங்கன்னு நான் நெனச்சுப் பார்த்தேன். வெளிப்புறமா, அவங்க பக்தியுள்ளவங்களாகவும், துன்பங்களத் தாங்குபவங்களாவும், தியாகங்களச் செய்பவங்களாவும், நல்ல செயல்களச் செய்பவங்களாவும் தோன்றுனாங்க, ஆனா, கர்த்தராகிய இயேசு தம்மோட கிரியையச் செய்ய வந்தப்போ, அவங்க தேடவுமில்ல ஆராஞ்சு பாக்கவும் இல்ல, அதுக்குப் பதிலா வேணும்னே எதிர்த்து அவரை கண்டனம் செஞ்சாங்க, கடைசியில அவரை சிலுவையில அறஞ்சாங்க. இதுல இருந்து, வெளிப்புறமா நல்ல நடத்தைய வெளிப்படுத்துபவங்க நல்லவங்களாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். தேவனுக்குக் கீழ்ப்படியறவங்களும், சத்தியத்த நேசிச்சு ஏத்துக்கறவங்களும் மட்டுமே உண்மையிலயே நல்ல மனுஷர்கள். சத்தியத்த ஒருபோதும் நேசிக்காதவங்களயும், சத்தியத்த ஏத்துக்காதவங்களயும் பொறுத்தவர, அவங்க வெளிப்புறமா நல்ல காரியங்களச் செய்தாலும், அவங்க பொய்யான பக்தி கொண்டவங்களாவே இருக்காங்க. வெளிப்புறமா, மார்ஜோரியால சில துன்பங்களத் தாங்கிக்கவும், விலைக்கிரயம் செலுத்தவும் முடிஞ்சுச்சு. ஆனா, உள்ளத்தின் ஆழத்துல, அவள் சத்தியத்தின் நிமித்தம் சோர்ந்துபோனவளாய் தேவனை வெறுத்தாள். அவள் தேவனை பகிரங்கமா குற்றஞ்சாட்டி மறுதலிக்கவும் செஞ்சாள். அவள் சாத்தானோட ஆளுகைகள்ல இருக்குற ஒருத்தி. ஆனா, அவள் எப்படி வெளிப்படையா துன்பங்களத் தாங்கினாள், தியாகம் செஞ்சாள்ங்கறத மட்டுந்தான் நான் பார்த்தேன். அதனால, அவள் சத்தியத்தத் தேடி, அவளோடட கடமையில பொறுப்பும் அர்ப்பணிப்பும் உள்ளவளாய் இருந்தாள்ன்னும், அந்திக்கிறிஸ்துவா இருக்க முடியாதுன்னும் என்னோட கருத்துகளின் அடிப்படையில நான் நம்புனேன். பகுத்தறிவப் பயிற்சி செஞ்சு மார்ஜோரியைத் தடை செஞ்சு விலக்குமாறு மேற்பார்வையாளர் எங்ககிட்ட கேட்டப்போ, நான் அவருக்கு எதிரா ஒரு ஒருதலைப்பட்சமுள்ளவளா மாறினேன், என்னோட கடமையச் செய்யக் கூட விரும்பல. மார்ஜோரியப் பத்திய பகுத்தறிவு கொஞ்சம் கூட எனக்கு இல்லை, அதன் விளைவா நான் ஏமாத்தப்பட்டேன். நான் உண்மையிலயே ஒரு முட்டாளா இருந்தேன்.

அடுத்த நாள், எங்களோட திருச்சபை தேவனை இல்ல, வெறும் மனுஷனைப் பின்பற்றுதுன்னு சொல்லி மார்ஜோரி முகநூல்ல வதந்திகளயும் பொய்களயும் பரப்புவதப் பார்த்தேன். அவள் திருச்சபைய எப்படி அவதூறாப் பேசுகிறாள்ங்கறதப் பார்த்தப்போ, நான் அவளைத் தடை செஞ்சு விலக்காமலும் மறுக்காமலும், அவளைக் காப்பாத்தக் கூட முயற்சி செஞ்சேன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். அதனால, நான் அவளுக்கு செய்தி அனுப்பி, ஏன் இப்படிப்பட்ட காரியங்களச் செய்யுறீங்கன்னு அவளிடத்துல கேட்டேன். மார்ஜோரி பதிலளிச்சு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையப் பத்தி அவதூறாப் பேசினாரு, திருச்சபைய விட்டு வெளியேறும்படி என்னைய வற்புறுத்தினாரு. நான் அவளை உடனே புறக்கணிச்சேன். ரெண்டு மாசங்களுக்கு அப்புறம், மார்ஜோரி அவளுக்கு செய்திகள அனுப்பியிருந்தாள்ன்னும், அதுல அவள் திருச்சபைய அவதூறு செஞ்சு கண்டனம் செஞ்சிருந்தாள்ன்னும் அதோடு, புதிதா வந்தவங்களுக்கு அவதூறான காணொளிகள அனுப்பப் போவதாவும் சொன்னாள்ங்கறதயும் நான் மேற்பார்வையாளர் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு குழு கலந்துரையாடல்ல தேவனோட கிரியையப் பத்தி தன்னோட பல கருத்துகளயும் அவர் பரப்பினாள். மார்ஜோரியின் அத்தையும் கருத்துகள வளர்த்துக்கிட்டு திருச்சபைய விட்டு வெளியேறினாரு. மார்ஜோரி மெய்யான வழிய அறிஞ்சிருந்தும், ஜனங்கள வஞ்சிக்கும்படி கருத்துகளப் பரப்புனது, தெளிவா எதிர்த்தாதா இருந்துச்சு. அது ரொம்பவே கடுமையான குற்றம்—அவள் ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாள். தேவனோட கிரியையப் பத்திய கருத்துகள் அவளுக்கு இருந்துச்சு, ஆனா, சத்தியத்தத் தேடுறது மூலமா அவள் அவற்றத் தீர்க்க முயற்சிக்கலங்கறத மார்ஜோரியின் நடத்தை மூலமா என்னால பாக்க முடிஞ்சுது. அவள் வதந்திகளயும் பொய்களயும் கூட பரப்பி, தேவனை தூஷித்தாள், திருச்சபைய அவதூறு செஞ்சாள், அதோடு, தேவனை மறுதலிச்சு வழிதவறிப் போகும்படி சகோதர சகோதரிகள வஞ்சித்தாள். தேவனிடத்துல இருந்து விலகி, அவரை மறுதலிக்கும்படி ஜனங்கள வஞ்சிக்குற தந்திரமான நரியப் போல மார்ஜோரி உண்மையிலயே ஏமாத்துறவளாவு வஞ்சிக்கிறவளாவு இருந்தாள்ன்னு நான் நெனச்சேன். மத்த சகோதர சகோதரிகளுக்கு அவள் உண்மையிலயே ரொம்பவே ஆபத்தானவளா இருந்தாள். அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் பார்த்தேன். “சகோதரர்கள் மற்றும் சகோதரிகளில் எப்போதும் தங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்துபவர்கள் சாத்தானின் சேவகர்கள், அவர்கள் திருச்சபையைத் தொந்தரவு செய்கிறார்கள். அத்தகையவர்கள் ஒரு நாள் வெளியேற்றப்பட்டு புறம்பாக்கப்பட வேண்டும். தேவன்மீது ஜனங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில், தேவன் மீது பயபக்தியுள்ள இருதயம் இல்லாவிட்டால், தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயம் அவர்களுக்கு இல்லாவிட்டால், அவருக்காக அவர்களால் எந்தக் கிரியையும் செய்ய முடியாமல் போகும் என்பது மட்டுமல்ல, மாறாக அவருடைய கிரியையைத் தொந்தரவு செய்பவர்களாகவும் மற்றும் அவரை எதிர்ப்பவர்களாகவும் மாறிவிடுவார்கள். தேவன் மீது விசுவாசம் கொண்டு, ஆனால் அவருக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவரை வணங்காமல், மாறாக அவரை எதிர்ப்பது ஒரு விசுவாசிக்கு மிகப்பெரிய அவமதிப்பாகும். விசுவாசிகள் அவிசுவாசிகளைப் போலவே தங்கள் பேச்சிலும் நடத்தையிலும் சாதாரணமாகவும் கட்டுப்பாடற்றவர்களாகவும் இருந்தால், அவர்கள் அவிசுவாசிகளை விட தீயவர்கள்; அவர்கள் பிசாசுகளின் பிரதிநிதிகள். திருச்சபைக்குள் தங்கள் நச்சுமிக்க, தீங்கிழைக்கும் பேச்சை வெளிப்படுத்துபவர்கள், வதந்திகளைப் பரப்புகிறவர்கள், விரோதத்தைத் தூண்டுகிறவர்கள், மற்றும் சகோதர சகோதரிகளிடையே தனித்தனி குழுக்களை உருவாக்குகிறவர்கள்—அவர்கள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இப்போது தேவனின் கிரியையின் வேறுபட்ட யுகமாக இருப்பதால், இந்த ஜனங்கள் தடைசெய்யப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் நிச்சயமாகவேபுறம்பாக்கப்பட வேண்டும். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவருக்கும் சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன. சிலருக்குச் சீர்கெட்ட மனநிலையைத் தவிர வேறொன்றும் இல்லை, மற்றவர்கள் வேறுபட்டவர்கள்: அவர்கள் சீர்கெட்ட சாத்தானின் மனநிலைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் இயல்பும் மிகவும் பொல்லாதது. அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் சீர்கெட்ட, சாத்தானின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல; மேலும், இந்த ஜனங்கள் உண்மையான தீய சாத்தான்களாக இருக்கின்றனர். அவர்களின் நடத்தை தேவனின் கிரியையில் இடையூறு செய்கிறது மற்றும் தொந்தரவு செய்கிறது, இது சகோதர சகோதரிகள் ஜீவனுக்குள் நுழைவதை பாதிக்கிறது, மேலும் இது திருச்சபையின் சாதாரண வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறது. விரைவில், ஆட்டுத்தோல் போர்த்திய இந்த ஓநாய்கள் அகற்றப்பட வேண்டும்; சாத்தானின் இந்த சேவகர்களை நோக்கி ஓர் இரக்கமற்ற மனப்பான்மை, நிராகரிக்கும் மனப்பான்மை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். இது மட்டுமே தேவனின் பக்கம் நிற்பதாகும், மற்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் சாத்தானுடன் சேற்றில் புரள்கிறார்கள். தேவனை உண்மையாக விசுவாசிக்கிற ஜனங்கள் எப்பொழுதும் அவரைத் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போதும் தேவன் மீது பயபக்தி கொண்டிருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களுக்குள் சுமக்கிறார்கள். தேவனை விசுவாசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும், மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் தேவனின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் மற்றும் அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தலைக்கனமிக்கவர்களாக, அவர்கள் விரும்பியதைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது; அது பரிசுத்த நடத்தைக்குப் பொருந்தாது. ஜனங்கள் பித்துப்பிடித்து ஓடக்கூடாது, எல்லா இடங்களிலும் ஏமாற்றும்போது மற்றும் வஞ்சிக்கும்போது தேவனின் கொடியை எல்லா இடங்களிலும் அசைக்கக்கூடாது; இது மிகவும் கலகத்தனமான நடத்தையாகும். குடும்பங்களுக்கு அவர்களுக்கான விதிகள் உள்ளன, மற்றும் நாடுகளுக்கு அவற்றுக்கான சட்டங்கள் உள்ளன—மேலும் இது தேவனுடைய வீட்டில் மிக அதிகமாக இல்லையா? இன்னும் அதிகமான கடுமையான தரநிலைகள் அதற்கு இல்லையா? இன்னும் அதிகமான நிர்வாக ஆணைகள் அதற்கு இல்லையா? ஜனங்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேவனின் நிர்வாக ஆணைகளை விருப்பப்படி மாற்ற முடியாது. தேவன் என்பவர் மனுஷர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவன்; அவர் ஜனங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தேவன். இது ஏற்கனவே ஜனங்களுக்குத் தெரியாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை”). தேவனோட வார்த்தைகள் மூலமா, எப்பவும் கருத்துகளப் பரப்புறவங்களும், எதிர்மறைய விதைக்கறவங்களும் திருச்சபைய சீர்குலைக்கறவங்களும் சாத்தானோட கையாட்களா இருக்காங்க. அவங்க சத்தியத்த நேசிப்பதில்ல, அவர்களோட இருதயங்கள்ல தேவ பயம் கொஞ்சமும் இருப்பதில்ல. தனிப்பட்ட குழுக்கள உருவாக்கி விரிசல்கள ஏற்படுத்துறவங்க, தேவனை நிராகரிச்சு, தூஷிச்சு கருத்துகளயும், வதந்திகளயும் பரப்புறவங்க எல்லாருமே பிசாசுகளா இருக்காங்க, அவங்க எல்லாருமே தேவனால புறம்பாக்கப்பட்டு தண்டிக்கப்படணும் அப்படின்னு நான் உணர்ந்தேன். வதந்திகளால வழிதப்பி, பொல்லாதவங்க பக்கமாவும் அந்திக்கிறிஸ்து பக்கமாவும் நிற்கறவங்களும், அவங்கள நிராகரிக்கலேன்னா புறம்பாக்கப்படுவாங்க. மார்ஜோரி தன்னோட கருத்துகள சரிசெய்ய தேவனோட வார்த்தைகள வாசிக்கல, சத்தியத்தத் தேடல, மத்த சகோதர சகோதரிகளோட சேந்து அவள் தேடவுமில்ல. அதுக்குப் பதிலா, அவள் தேவனை மறுதலிச்சாள், கருத்துகளப் பரப்பி, வெளிப்படையா நியாயந்தீர்த்து, தேவனை தூஷிச்சுக்கிட்டுக் கூட இருந்தாள். அவள் முரண்பாட்ட விதச்சு, மத்த சகோதர சகோதரிகளத் தன்வசப்படுத்தி, தன் பக்கமா நிற்கும்படி அவங்கள வஞ்சித்தாள், மேற்பார்வையாளருக்கு எதிரா ஒருதலப் பட்ச கருத்துகள உருவாக்குனாள், அது திருச்சபைப் பணிகள சீர்குலைச்சுது. மார்ஜோரி உண்மையிலயே ஒரு பொல்லாதவளாக இருந்தாள். அவளோட சாராம்சம் சத்தியத்த வெறுக்குற, தேவனை வெறுக்குற அந்திக்கிறிஸ்துவோடதா இருந்துச்சு. தேவனோட வார்த்தைகளின் பிரகாசமும் வழிநடத்துதலும் இல்லேன்னா, நான் அவர் பக்கமா நிக்கும்படி ஏமாத்தப்பட்டு, தேவனை என் சத்துருவாக் கொண்டிருந்திருப்பேன். இன்னமும் கூட நான், தேவனோட வார்த்தைகள வாசிக்கறதோட நோக்கமும் அந்திக்கிறிஸ்துவப் பகுத்தறிய ஐக்கியங்கொள்வறதும் சகோதர சகோதரிகள் சத்தியத்தப் புரிஞ்சுக்கவும் பகுத்தறிவப் பெறவும் உதவறதுக்குத்தான்ங்கறதையும், அதன் மூலமா அவங்க அந்திக்கிறிஸ்துகளால தொந்தரவு அடைஞ்சு ஏமாற்றப்படாம இருப்பதுக்காகத்தான்ங்கறதையும் உணர்ந்துக்கிட்டேன். திருச்சபையில இருந்து அந்திக்கிறிஸ்துகள வெளியேத்தறது தேவனால தெரிஞ்சுகொள்ளப்பட்டவங்களப் பாதுகாக்கறதுக்காகத்தான் செய்யப்படுது. ஒரு தலைவரா இருந்தும் கூட, இந்த அந்திக்கிறிஸ்துவப் பத்திய பகுத்தறிவு எனக்கு இல்லாதிருந்துச்சு, அவளோட பொய்கள நம்புனேன். நான் அவள் பக்கமா நின்னு அவளைப் பாதுகாக்கவும் செஞ்சேன். நான் சாத்தானுக்கு உடந்தையாகிவிட்டதப் பார்த்தேன். நான் ஒரு அந்திக்கிறிஸ்து மேல அனுதாபம் காட்டுனேன், அவளைப் பாதுகாத்து அன்பு காட்டினேன். இது தேவனால தெரிந்துஞ்சுகொள்ளப்பட்டவங்களுக்கு எதிரான கொடூரமான செயலா இருந்துச்சு. நான் எவ்ளோ முட்டாள்தனமா இருந்தேன்ங்கறத உணர்ந்து, உண்மையில என்னையே வெறுத்தேன், அதனால, நான் ஜெபத்தில் தேவனுக்கு முன்பா வந்து, மனந்திரும்பி அவரிடத்துல மன்னிப்புக் கேட்டேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திகள நான் பார்த்தேன்: “மனிதர்கள் பிற மனிதர்களை மதிப்பிடும் அளவீடு அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது; யாருடைய நடத்தை நல்லதாக இருக்கிறதோ அவர்கள் நீதிமான்கள், அதே சமயம் யாருடைய நடத்தை அருவருப்பானதோ அவர்கள் துன்மார்க்கர். மனிதர்களின் சாராம்சம் அவருக்கு கீழ்ப்படிகிறதா இல்லையா என்பதை அளவீடாய்க் கொண்டு அதன் அடிப்படையில் தேவன் அவர்களை மதிப்பிடுகிறார்; தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவன் ஒரு நீதிமான், கீழ்ப்படியாத ஒருவன் ஒரு விரோதி மற்றும் ஒரு துன்மார்க்கன், இந்த நபரின் நடத்தை நல்லதா அல்லது மோசமானதா மற்றும் அவர்களது பேச்சு சரியானதா அல்லது தவறானதா என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). “தேவன் மாம்சமாகி, மனுஷர்களிடையே கிரியைப் புரிய வரும்போது, அனைவரும் அவரைக் காண்பார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்பார்கள், தேவன் தம்முடைய மாம்ச உடலுக்குள் மேற்கொள்ளும் செயல்களை அனைவரும் காண்பார்கள். அந்தத் தருணத்தில், எல்லா மனுஷனின் கருத்துகளும் நுரையாகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுவதைக் கண்டவர்கள் விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் அவருக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள் தேவனுடைய எதிரியாகக் கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துகள், அவர்கள் தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் எதிரிகள். தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படியத் தயாராகவும், விருப்பம் கொண்டவராகவும் இருப்பவர்கள் ஆக்கினைக்குள்ளாக மாட்டார்கள். மனுஷனின் நோக்கங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தேவன் மனுஷனைக் கண்டிக்கிறார், ஒருபோதும் அவனது சிந்தனைகளையும் யோசனைகளையும் வைத்து அல்ல. அவர் மனுஷனை அவனுடைய சிந்தனைகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் கண்டித்தால், தேவனின் கோபமான கரங்களிலிருந்து ஒரு மனுஷனால் கூட தப்பிக்க முடியாது. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள், கீழ்ப்படியாமைக்காகத் தண்டிக்கப்படுவார்கள். தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது, அதன் விளைவாக இது தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அவர்களை வழிநடத்துகிறது. இந்த ஜனங்கள் வேண்டுமென்றே தேவனின் கிரியையை எதிர்த்து அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள், இந்தக் காரணத்திற்காக இந்த வகையான ஜனங்கள் கண்டிக்கப்படுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). தேவனோட வார்த்தைகள் தெளிவா இருக்குது: தேவன் ஜனங்கள அவங்களோட சாராம்சத்தின் அடிப்படையிலும் சத்தியத்தக் குறிச்ச அவங்களோட அணுகுமுறையோட அடிப்படையிலும் நியாயந்தீர்க்குறாரு. சில பேருக்கு தேவனோட கிரியையப் பத்திய கருத்துகள் இருக்கலாம், ஆனா, சத்தியத்தத் தேடவும் தங்களோட கருத்துகள ஒதுக்கி வைக்கவும் அவங்களால முடியும்ன்னா, தேவன் அவங்கள கண்டனம் செய்ய மாட்டாரு. மனுவுருவான தேவனை பத்தி எப்பவும் கருத்துகளக் கொண்டவங்க, சத்தியத்த ஏத்துக்காதவங்க, இன்னும் தேவனைக் கேள்வி கேட்பவங்க மறுதலிப்பவங்க எல்லாருமே, அவங்களோட வெளிப்புற நடத்தை எவ்ளோ நல்லா இருந்தாலும் சரி, அவங்க தேவனோட சத்துருக்களும் அந்திக்கிறிஸ்துகளுமா இருக்காங்க. அப்படிப்பட்டவங்கள தேவன் கண்டனம் செஞ்சு அவங்கள புறம்பாக்குறாரு. தேவனோட வார்த்தைகள வாசிச்ச பிறகு, ஜனங்களோட வெளிப்புற நடத்தைய மட்டுமே நான் எப்பவும் கருத்தில் கொண்டேன்ங்கறத உணர்ந்துக்கிட்டேன். மார்ஜோரி தேவனிடத்துல பக்தியுள்ளவளாவும் சத்தியத்தத் தேடுறவளாவும் இருக்கணும்னு நான் நெனச்சேன், ஏன்னா, அவள் அதிக ஆர்வமிக்கவளாக இருந்து, தியாகங்களச் செஞ்சாள், தன்னையே ஒப்புக்கொடுத்து, திருச்சபைத் தலைவியா இருந்தாள், ஆனா, நான் அவளோட சாராம்சத்தையோ, தேவனுக்கும் சத்தியத்துக்கும் நேரான அவளோட அணுகுமுறையோ கருத்தில் கொள்ளல. மார்ஜோரி தேவனோட கிரியையப் பத்தி சில கருத்துகளக் கொண்டிருந்தாள் அவள் மத்த சகோதர சகோதரிகளோட ஐக்கியத்த ஏத்துக்கல. அதோடு கூட, அவள் தன்னோட கருத்துகளப் பரப்பி, மனுவுருவான தேவனை பகிரங்கமா மறுதலிச்சாள். அவளோட சாராம்சம் தேவனை வெறுக்கறதாவும் சத்தியத்த வெறுக்கறதாவும் இருந்துச்சு—அவள் ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாள். மார்ஜோரியின் வெளிப்புற மாயைகளால நான் தவறா வழிநடத்தப்பட்டு ஏமாத்தப்பட்டேன், அந்திக்கிறிஸ்துவின் பக்கமா நின்னேன். எனக்கு உண்மையிலயே பகுத்தறிவு இல்லாம இருந்துச்சு. ஜனங்களோட வெளிப்புற நடத்தைகளால மட்டும் அல்ல, தேவனோட வார்த்தைகளாலயும், சத்தியத்தின் கொள்கைகளாலயும் நாம ஜனங்களயும் காரியங்களையும் நியாயந்தீர்க்கணும்னு அப்பத்தான் நான் உணர்ந்தேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் இன்னொரு பத்திய நான் பாத்தேன், அது இப்படியா சொன்னது: “தேவன் திருச்சபையைச் சுத்திகரிக்கிறார், இடையூறு செய்பவர்கள் மற்றும் தொந்தரவு செய்பவர்கள், அந்திக்கிறிஸ்துகள், பொல்லாத ஆவிகள், பொல்லாத ஜனங்கள், அவிசுவாசிகள், அவரை உண்மையாக விசுவாசிக்காதவர்கள் மற்றும் ஊழியம் கூடச் செய்ய முடியாதவர்கள் ஆகியோரிடமிருந்து அதைச் சுத்திகரிக்கிறார். இது களத்தை சுத்தம் செய்தல் என்று அழைக்கப்படுகிறது; பதர்நீக்கம் என்று அழைக்கப்படுகிறது. … தேவன் சகலத்தையும் அதனதின் காலத்தில் செய்கிறார் என்பதை நீ பார்க்கலாம். அவர் தாறுமாறாகக் கிரியை செய்வதில்லை. அவருடைய நிர்வாகக் கிரியையானது அவர் உருவாக்கிய திட்டத்தைப் பின்பற்றுகிறது, மேலும் அவர் எல்லாவற்றையும் தாறுமாறாகச் செய்யாமல், ஒரு படிப்படியான முறையில் செய்கிறார். அந்தப் படிகளினால் என்ன? தேவன் ஜனங்கள் மீது செய்யும் ஒவ்வொரு கிரியையும் செயல்பாட்டிற்கு வர வேண்டும், அவ்வாறு வந்துவிட்டதை அவர் பார்க்கும்போது, அவர் கிரியையின் அடுத்தப் படியைச் செய்கிறார். தேவன் தமது கிரியை எவ்வாறு செயல்பாட்டிற்கு வரலாம், அவர் என்ன சொல்ல வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாமே கண்டறிந்திருக்கிறார். அவர் தமது கிரியையை தாறுமாறாகச் செய்யாமல் ஜனங்களின் தேவைக்கு ஏற்ப செய்கிறார். எந்தக் கிரியை ஜனங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமோ, அதையே தேவன் செய்கிறார், மேலும் எது செயல்திறனின் அடிப்படையில் முக்கியமற்றதாக இருக்கிறதோ, தேவன் நிச்சயமாக அதைச் செய்வதில்லை. உதாரணமாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தங்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள எதிர்மறையான அனுபவ பாடங்கள் தேவைப்படும்போது, கள்ளக் கிறிஸ்துகள், அந்திக்கிறிஸ்துகள், பொல்லாத ஆவிகள், பொல்லாத ஜனங்கள் மற்றும் தொந்தரவு செய்பவர்கள் மற்றும் இடையூறு செய்பவர்கள் திருச்சபையில் தோன்றுவார்கள், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளலாம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களால் சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அத்தகைய ஜனங்களை அடையாளம் காண முடிந்தால், அந்த ஜனங்கள் தங்கள் ஊழியத்தை வழங்கியிருக்கிறார்கள், மேலும் அவர்கள் இருப்பதில் இனிமேலும் மதிப்பு இல்லை. அந்த நேரத்தில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அவர்களை அம்பலப்படுத்தவும் புகாரளிக்கவும் எழும்புவார்கள், மேலும் திருச்சபை உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும். தேவனுடைய எல்லா கிரியைகளுக்கும் அதன் படிகள் உள்ளன, மேலும் அந்தப் படிகள் அனைத்தும் மனுஷரின் வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன தேவை மற்றும் அவர்களின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தேவனால் ஏற்பாடு செய்யப்படுகின்றன(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவரின் எண்ணங்களைச் சரிசெய்வதன் மூலம் மட்டுமே, ஒருவரால் தேவனை விசுவாசிப்பதற்கான சரியான பாதையில் செல்ல முடியும் (3)”). தேவனோட வார்த்தைகள வாசிச்ச பிறகு, திருச்சபையில நிறைய பேர் கடமைகளச் செஞ்சாலும், அவங்க எல்லாருமே தேவனால தெரிந்துகொள்ளப்பட்டவங்க இல்ல, அவரோட ஆடுகளும் அல்ல. ஓநாய்கள் மந்தைக்கு நடுவுல தங்கள மறச்சு வச்சிருக்கு. நாம பகுத்தறிவப் பெறவும், பாடங்களக் கத்துக்கவும், நன்மை தீமைகள வேறுபடுத்திப் பாக்கவும் உதவும்படி, தேவன் அந்திக்கிறிஸ்துகளயும், பொல்லாதவர்களயும், அவிசுவாசிகளயும் திருச்சபைக்குள்ள அனுமதிக்கிறாருன்னு நான் உணர்ந்தேன். திருச்சபையில தன்னோட கடமையச் செஞ்ச போதிலும் கூட, மார்ஜோரி உண்மையில தேவனை விசுவாசிக்கல. அவள் திருச்சபைக்குள் தேவனோட கிரியையப் பத்தி ஆராய்ச்சி செய்ய மட்டுந்தான் வந்தாள். சத்தியத்தத் தேடி புரிஞ்சுக்கறதுக்காக இல்ல. அவள் ஆடுகளின் உடை அணிஞ்சிருந்த ஓநாயாவும், தேவனால புறம்பாக்கப்பட்ட ஒரு பொல்லாதவளாவும் இருந்தாள். தேவன் இப்போ திருச்சபைய சுத்திகரிச்சு, ஒவ்வொரு விதமான நபரையும் அம்பலப்படுத்துறாரு. அந்திக்கிறிஸ்துகளோ, பொல்லாதவங்களோ, அவிசுவாசிகளோ திருச்சபைக்குள்ள மறஞ்சிருக்க முடியாது. தேவனோட கிரியையின் மூலமா எல்லாரும் அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுவாங்க. தேவனை உண்மையா விசுவாசிச்சு, சத்தியத்த நேசிச்சு, சத்தியத்தத் தேடுபவங்க மட்டுந்தான் நிலைத்திருப்பாங்க. அவங்க மட்டுந்தான் தேவனால சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்படுவாங்க.

இந்த அனுபவத்தின் மூலமா, நான் கொஞ்சம் பகுத்தறிவப் பெற்றுக்கிட்டு, சில விஷயங்களக் கத்துக்கிட்டேன். முதல்ல, ஜனங்களோட வெளிப்புற நடத்தைகளயும், அவங்க எவ்ளோ துன்பங்களத் தாங்குறாங்க, எவ்ளோ தங்கள ஒப்புக்கொடுக்குறாங்கங்கறத மட்டும் நான் கருத்துல கொள்ளக் கூடாது. ஏன்னா, நிறைய பேரால இவற்றச் செய்ய முடியும், குறிப்பா மத மோசடி செய்பவங்களால செய்ய முடியும். ரெண்டாவது, நான் வெறுமனே ஜனங்கள வணங்கக் கூடாது, ஏன்னா தேவன் ஜனங்கள வணங்குறத வெறுக்குறாரு. ஒருவன் தேவனை மட்டுமே உயர்வா பாத்து ஆராதிக்கணும். மூணாவதா, ஒரு திருச்சபைத் தலைவரா, என்னோட சகோதர சகோதரிகலோட ஜீவப் பிரவேசத்த நான் கருத்துல வைக்கணும், அவங்களுக்கு நன்மை பயக்குற விஷயங்களுக்கு முன்னுரிம கொடுக்கணும். நாலாவதா, பிரச்சினைகள எதிர்கொள்ளுறப்போ, நான் தேவ-பயமுள்ள இருதயத்தக் கொண்டிருக்கணும், தேடவும் காத்திருக்கவும் கத்துக்கணும். என்னோட சொந்த எண்ணங்களின்படி நான் பொறுப்பில்லாத முறையில நியாயந்தீர்த்து கண்டனம்ப்பண்ணக் கூடாது. அது தேவனோட மனநிலயைப் புண்படுத்த ஏதுவாகும். அஞ்சாவதா, சத்தியத்தப் புரிஞ்சுக்க நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அதிகமா வாசிக்கணும். தேவனோட வார்த்தைகளின் வழிநடத்துதலின் மூலம் மட்டுந்தான் சாத்தானோட பொல்லாத சதிகள நம்மால புரிஞ்சுக்கவும், சத்தியத்தின் பக்கமா நிற்கவும் முடியும். அதோடு, சத்தியம் எவ்ளோ விலையேறப்பெற்றதுங்கறதயும் நான் உணர்ந்தேன். சத்தியத்தப் புரிஞ்சுக்குவதன் மூலம் மட்டுந்தான் நாம உண்மையில விஷயங்களப் புரிஞ்சுக்கவும், எல்லா வகையான பொல்லாப்பு செய்றவங்களயும், அந்திக்கிறிஸ்துகளயும், அவிசுவாசிகளயும் பகுத்தறியவும் முடியும். எதிர்காலத்துல, நான் தேவனோட வார்த்தைகள நிறையா வாசிப்பேன் சத்தியத்த என்னோட கொள்கையாக்கிக்கிட்டு, என்னோட செயல்களயும் ஜனங்க மற்றும் விஷயங்களப் பத்தியதான நியாயத்தீர்ப்புகளயும் தேவனோட வார்த்தைகளுக்கு ஏத்தபடி அமச்சுக்குவேன். தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தந்திரமாக இருப்பது எனக்கு எப்படித் தீங்கு விளைவித்தது

எங்களோட வேலை முடிஞ்ச உடனேயே, மாசத் தொடக்கத்துல, எங்களோட வேல சரியா நடக்கலன்னு ஒரு தலைவர் குறிப்பிட்டாரு, அதுக்கான காரணத்த சொல்லச் சொல்லி...

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

Leave a Reply