மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

ஏப்ரல் 1, 2023

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கிறிஸ்தவத்துல ஆர்வமுள்ளவளா இருந்தேன். ஆனா என்னோட குடும்பத்தார் பௌத்த மதத்தச் சேர்ந்தவங்களா இருந்ததால நான் கிறிஸ்தவளா மாறல. நான் அப்பவே நரகத்தப் பத்திக் கேள்விப்பட்டிருந்தேன், ஆனா உண்மையிலயே எனக்கு அதுல நம்பிக்கை இல்லாம இருந்துச்சு.

ஏப்ரல் 2022ல, நண்பர் ஒருத்தர் என்னை ஆன்லைன் கூடுகையில கலந்துக்கச் சொல்லிக் கூப்பிட்டாரு, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் முதல் முறையா அப்போதான் வாசிச்சேன். பரலோக சிருஷ்டிகர் மனுக்குலத்தோட பேசறது தான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் அப்படின்னு நான் உணர்ந்தேன். அதுக்கப்புறம் நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள ஆன்லைன்ல நிறைய வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் ஒரே மெய்யான தேவன்ங்கறதயும், மனுக்குலத்த இரட்சிக்க தேவன் பூமிக்கு வந்திருக்காருங்கறதயும் நான் அறிஞ்சுக்கிட்டேன். ஆனா என்னோட குடும்பம் தடையா இருந்ததாலயும், உலகக் காரியங்கள நான் பற்றிக்கொண்டிருந்ததாலயும், நான் கூடுகைகள்ல தொடர்ந்து கலந்துக்காம இருந்தேன், அதோடு நான் கூடுகைக் குழுவுலயிருந்து கொஞ்ச காலமா விலகவும் கூட செஞ்சேன்.

அதுக்கப்புறம், பிப்ரவரி 3, 2023 அன்னைக்கு காலையில 9:30 மணியளவுல, ஒரு கூடுகைக்குப் பிறகு நான் ஒருவிதத்துல களைப்பா இருந்தேன், அதனால நான் ஓய்வெடுக்கறதுக்காகப் படுத்தேன். பிறகு, என்னோட குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்தத் தூக்கத்துல இருந்து என்னைய எழுப்ப முடியலன்னும், அதனால அவசர சிகிச்சைக்காக என்னைய மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்கன்னும் என்னோட தம்பி என்கிட்ட சொன்னான். டாக்டர் என்னையப் பரிசோதிச்சிட்டு, நான் ஏற்கனவே மூச்சு விடுறத நிறுத்திட்டேன்னு சொல்லிட்டாரு, அதனால அவர் இறப்பு சான்றிதழையும் கொடுத்துட்டாரு. என்னைய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதத் தவிர என்னோட குடும்பத்துக்கு வேற வழியில்லாமப்போச்சு. அவங்க எங்களோட உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் அறிவிச்சிட்டு, மூணு நாளுக்கு அப்புறம் இறுதிச் சடங்கு செஞ்சு என்னைய அடக்கம்பண்ணத் தயாரானாங்க.

அப்போ எங்க வீட்டுல என்ன நடந்துக்கிட்டு இருந்துச்சுன்னு எனக்குத் தெரியல. நான் வேற ஒரு உலகத்துக்குப் போனேன்ங்கறது மட்டும் எனக்குத் தெரியும். நான் வெள்ளை நிற அங்கி அணிஞ்சிருந்தேன், வெளிச்சம் இல்லாத, புகை நிறைந்த குறுகலான பாதையில தனியா நடந்துக்கிட்டிருந்தேன். வானத்தையோ, எனக்கு எதிர்ல இருந்ததயோ என்னால பாக்க முடியல. பாதை கீழ்நோக்கி, குண்டும் குழியுமா, ஓட்டைகள் நிறஞ்சதாவும், கரடுமுரடாவும், வளைவு நெளிவாவும் இருந்துச்சு. ரெண்டு பக்கமும், நான் இதுவரைக்கும் பார்த்திருக்காத எல்லா வகையான விசித்திரமான செடிகள் முட்களால சூழப்பட்டிருந்தத என்னால ஓரளவுக்குப் பாக்க முடிஞ்சுச்சு. சுற்றிலும் விலங்குகளோட சத்தத்தயும் என்னால கேக்க முடிஞ்சுச்சு… நான் அந்தப் பாதையில வெறுங்காலோட நடந்துக்கிட்டிருந்தேன், அது என்னோட காலக் குத்தி கீறிக்கிட்டு இருந்துச்சு. என்னோட உடம்பு முழுசும் சூட்டினால எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு, எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுச்சு. நான் ரொம்ப தூரம் நடந்துபோய், அதுக்கப்புறம் கருப்பு உடையில இருந்த ஒரு பிசாசப் பாத்தேன். அது தலையில இருந்து கால் வரைக்கும் கருப்பா இருந்துச்சு—அதோட முகத்தயோ பாதங்களயோ என்னால பாக்க முடியல. “என்னோடு வா!”ன்னு அது சொல்லுச்சு. அதோட சத்தம் உண்மையிலயே பயமா இருந்துச்சு. நான் பயந்துபோய், “என்னைய எங்க கூட்டிட்டுப் போற? நான் ஒருபோதும் இங்க வந்ததில்ல—நான் வர மாட்டேன். நான் வீட்டுக்குப் போகணும்” அப்படின்னு கஷ்டப்பட்டு சொன்னேன். நான் ஓடிப்போயிற விரும்புனேன். அப்பத்தான், நாலஞ்சு பிசாசுகள் நீலம் கலந்த கருப்பு அங்கிய அணிஞ்சுக்கிட்டு மிதந்துக்கிட்டு வந்து, என்னையப் பிடிச்சு, “நீ செத்துப்போயிட்ட—உன்னால திரும்பிப் போக முடியாது. நீ நிறைய பாவம் செஞ்சிருக்குற, உன்னோட வாழ்நாள்ல நீ செஞ்ச பாவங்களுக்கு நீ தண்டிக்கப்படணும்” அப்படின்னு சொல்லுச்சுக.

அதுக்கப்புறம் அவை ஒரு பெரிய வாசல்கதவுக்கு முன்னாடி என்னையக் கூட்டிட்டுப் போச்சுக. அங்க பல பிசாசுகள் காவலுக்கு நின்னுக்கிட்டிருந்ததப் பாத்தேன். அவை ரொம்ப உயரமா, பெரிய கண்களோடும் காதுகளோடும் இருந்துதுக, அதோடு சிலதுக்கு கூர்மையான பற்கள் வெளிய நீட்டிக்கிட்டு, திகிலூட்டுற தோற்றத்த ஏற்படுத்திக்கிட்டிருந்துச்சு. அவை ஆயுதங்களப் பிடிச்சிருந்துச்சுக, இடுப்புக்கு மேல ஆடையில்லாம இருந்துச்சுக, எலும்புகளால ஆன கழுத்தணிகள அணிஞ்சிருந்துச்சுக அதோடு, மரிச்சவங்களோட மண்டையோடுகள அதுங்களோட உடல்ல தொங்கிக்கிட்டு இருந்துச்சு. அவை தழும்புகளால நிரம்பியிருந்துச்சுக. வாசல காக்கிறவங்க கதவத் திறந்தவுடனே நிறைய வேதனையான அலறல் சத்தங்களக் கேட்டேன். பக்கத்துலயும் தூரத்துலயும், அந்த இடம் பயங்கர வேதனையில போராடுற சத்தங்களால நெறஞ்சிருந்துச்சு. அங்க கொழுத்தி சுட்டெரிக்குற வெப்பமா இருந்துச்சு. நான் ரொம்ப பயந்துபோய், “நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் இங்கே இருக்கக்கூடாது” அப்படின்னு அந்தப் பிசாசுககிட்ட கேட்டேன். என்னோட வாழ்நாள்ல நான் செஞ்ச பாவங்கள ஒண்ணொன்னா, எந்த நாள், எந்த மணிநேரம், எந்த நிமிஷம் அதோடு, எந்த நொடி நான் அந்தக் காரியங்கள செஞ்சேன்னு கூட அவை எனக்குக் காட்டுச்சுக. ஒண்ணுமில்ல அப்படின்னு நான் நெனச்ச ஒரு பொய் கூட அங்க தெளிவா பதிவு செய்யப்பட்டிருந்தத நான் நெனச்சேன். சில உதாரணங்கள இங்க சொல்லுறேன். செப்டம்பர் 5, 2022 அன்னைக்கு, சகோதர சகோதரிகள் என்னைய ஒரு கூடுகைக்கு அழைக்கறதுக்காகக் கூப்பிட்டாங்க, ஆனா, என்னோட குடும்பத்தோட நெருக்கடியால நான் மனசுல சோர்வடஞ்சிருந்து, அதுல கலந்துக்கல. செப்டம்பர் 10, 2022 அன்னைக்கு, நான் ஒரு கூடுகையில கலந்துக்கறதத் தவிர்த்துட்டேன், சகோதர சகோதரிகளோட தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்கல, அவங்களப் பாக்கவும் விரும்பல. அக்டோபர் 5, 2022 அன்னைக்கு, நான் கூடுகைக் குழு எல்லாத்துலயிருந்தும் வெளியேறி மத்த திருச்சபை உறுப்பினர்களோடு வச்சிருந்த தொடர்ப துண்டிச்சிட்டேன். அக்டோபர் 6, 2022 அன்னைக்கு, உலகப் போக்குகளுக்கு ஒத்துப்போய் கேளிக்கைகளில ஈடுபட்டு தேவனை விட்டு விலகி நடந்தேன். நான் திகைச்சுப்போனேன். நான் எத்தன பாவங்கள செஞ்சிருந்தேன்னு பாத்ததும் எனக்குப் பயமா இருந்துச்சு.

அப்போ, கருப்பு நிற ஆடை அணிஞ்சிருந்த பிசாசு என்னைய எங்கயோ கூட்டிட்டுப் போச்சு அதுல ஒரு மரப் பலகை இருந்துச்சு, ஏமாத்துறவங்க, தேவனுக்கு எதிரா நியாயத்தீர்ப்பளிக்கறவங்க அல்லது தூஷிப்பவங்க இங்குதான் தண்டிக்கப்படுவாங்கன்னு அது சொல்லுச்சு. இங்கதான் நான் ரொம்ப கடுமையான தண்டனையப் பாத்தேன். முதல் வகை தண்டனை தண்டிக்கப்படுறவங்களோட வாயிலயிருந்தும் தோல்லயிருந்தும் புழுக்கள் துளச்சுக்கிட்டு வெளியேறி வந்து அவங்களக் கடிச்சுச்சு, புழுக்கள் அவங்க மேல முழுவதுமா கடிச்சுக்கிட்டு இருந்துச்சு—அது உண்மையிலயே பயமா இருந்துச்சு. இரண்டாவது வகையிலயும், தண்டிக்கப்பட்ட ஜனங்கள் நிர்வாணமா இருந்தாங்க. அதோடு, ஒரே நேரத்துல 10 பேர் தண்டிக்கப்படும்படி, அவங்க ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஒரு நீண்ட பலகைக்கு நேரா கூட்டிச் செல்லப்பட்டாங்க. அவங்க மண்டியிட வேண்டியிருந்துச்சு, அவங்களோட கைகள் பின்னால கட்டப்பட்டு, அவங்களோட கன்னங்கள் பலகையில வைக்கப்பட்டன. அவங்களோட கழுத்துல கயிறுகள் இருந்துச்சு, அந்தக் கயிறுகள் பின்னோக்கி இழுக்கப்பட்டப்போ, அவங்களோட நாக்குகள் வெளியே வந்துச்சு. பலகையிலயிருந்து குறுக்க, தலையில கொம்புகள் வச்சிருந்த ஒரு பயங்கரமான பிசாசு அவங்களோட நாக்குக வழியா கொக்கிகள மாட்டி, பின்னர் வலுக்கட்டாயமா வெளியே இழுத்துச்சு; சிலரோட நாக்கு ரெண்டு மடங்கு நீளத்துக்கு வெளியே இழுக்கப்பட்டுச்சு. அதுக்கப்புறம், அவைகளப் பலகையோடு சேர்த்து ஆணியடிக்க பேனா போன்ற நீளமான ஆணிய அந்தப் பிசாசு பயன்படுத்துச்சு. அதுக்கு அடியில நெருப்பு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அந்தப் பிசாசு கொதிக்கிற சூடான தண்ணிய நாக்குகமேல இடைவிடாம ஊத்திக்கிட்டே இருந்துச்சு. இந்த நெருப்பு போன்ற தண்ணீர் ரொம்ப தூரத்துல இருக்குற ஒரு குளத்துல இருந்து கொண்டுவரப்பட்டு, எல்லாப் பிசாசுகளுக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டுச்சு. அத ஒருத்தரோட நாக்குல ஊத்தினப்போ, நாக்கு முழுசா அழிஞ்சுபோயிருச்சு. சிலரோட கண் கருவிழிகள் கூட வெளியில விழுந்துச்சு. அதுக்கப்புறம், பிசாசுக அவங்களோட உடல்கள் முழுவதுலயும் நெருப்பு தண்ணீர ஊத்துச்சுக, அதனால அவங்க முழுவதுமா அழிக்கப்பட்டாங்க. தண்டிக்கப்படுறவங்க சாகுறவரைக்கும் துக்கத்தினால கதறினாங்க. அது பயங்கரமான காட்சியா இருந்துச்சு. சிலரால அத தாங்கிக்க முடியாம சீக்கிரத்துலயே மரிச்சுட்டாங்க. ஆனா இன்னும் அதிகமான பாவங்களுக்கான தண்டனை அவங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியிருந்ததால, தொடர்ந்து தண்டிக்கப்படுறதுக்காக அவங்க மறுபடியும் உயிர்ப்பிக்கப்படுவாங்க. தண்டன முடிஞ்சதுக்கப்புறமும் அவங்க சாகாம இருந்தா, அவங்களோட உடம்புகள்ல இருந்து புழுக்கள் வெளிய வந்து அவங்களத் தின்னுரும், அதுக்கப்புறம் அவங்க மறுபடியும் உயிர் பெற்று வேறு வழியில தண்டிக்கப்படுவாங்க.

மூன்றாவது வகையான தண்டன அக்கினிக் கடல் தண்ணீருக்குள்ள தூக்கி வீசப்படுறதா இருந்துச்சு. ஒரு பெரிய வட்டமான இரும்புத் தட்ட நான் பாத்தேன் அதுல நாலு கயிறுகள் இணைக்கப்பட்டிருந்துச்சு. நூறு அல்லது இருநூறு பேர் தண்டன பெற்ற வேற ஒரு இடத்துலயிருந்து ஒரு சில நொடிகள்ல வந்து தட்டுல தோன்றினாங்க. அவங்க ஆடைகள் எதுவுமே இல்லாம எரியுற சூடான தட்டுல மண்டியிட்டாங்க அந்த நேரத்துல முட்களினாலான கயிறுகள் தானாகவே அவங்களோட கைகளயும் மேல் உடல்களயும் கட்டுச்சு. இந்த ஜனங்கள் வெவ்வேறு மதங்கள் மற்றும் இனங்களச் சேர்ந்தவங்களா இருந்தாங்க. சிலர் தேவனை விசுவாசிக்கல, சிலர் கிறிஸ்தவர்களாவோ அல்லது பௌத்தர்களாவோ இருந்தாங்க. அவங்க தேவனோட புதிய கிரியைய ஏத்துக்காததாலயும், தேவனுக்கு எதிரா தூஷிச்சு, அவர நியாயந்தீர்த்ததாலயும் அவங்க தண்டிக்கப்பட்டாங்க. அவங்கள்ல சிலர் தேவனோட புதிய கிரியைய ஏத்துக்கிட்டாலும், அவங்களோட விசுவாசம் மேலோட்டமானதாவும், செயலற்றதாவும், தேவனை வஞ்சிக்கறதாவும் இருந்துச்சு. அப்படிப்பட்ட நபரும் தேவனால தண்டிக்கப்பட்டான். அவங்க எல்லாருமே அவங்கவங்க நம்பின தேவனக் கூப்பிட்டாங்க. சிலர் இந்த தேவனக் கூப்பிட்டாங்க, சிலர் அந்த தேவனக் கூப்பிட்டாங்க. அது குரல்களோட கூச்சலா இருந்துச்சு, என்னால அவற்றத் தெளிவாக் கேக்க முடியல. அவங்க எப்படிக் கூப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமுமில்ல; அவங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கல. அதுக்கப்புறமா, அந்த ஜனங்கள் ஒரு பெரிய குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாங்க, அந்த குளத்துக்குள்ள கொதிக்குற நெருப்புத் தண்ணீர் இருந்துச்சு. அவங்களோட கயிறுகள் தானா அவிழ்ந்து, இரும்புத் தட்டு சாஞ்சு, அவங்க எல்லாருமே உள்ள விழுந்தாங்க. அவங்க வெந்து, வறுத்தெடுக்கப்பட்டாங்க, அவங்க அதிகப்படியான வேதனையில அலறி துடிக்கும் அளவுக்கு எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. சிலர் விளிம்புல இருந்தாங்க, அந்த குளத்துலயிருந்து ஊர்ந்து வெளிய வர்றதுக்காக தங்களோட முழு பலத்தோடு சண்டையிட்டாங்க, ஆனா அவங்க மறுபடியும் உள்ளே விழுந்துட்டாங்க. கொஞ்ச நேரத்துலயே, அலறல் சத்தம் போயிருச்சு. எல்லாருமே செத்துப்போயி, அக்கினி தண்ணீர் குளத்தின் மேற்பரப்புல மிதந்தாங்க. அவங்க எல்லாருமே செத்துப்போனவுடனே, ஒரு பெரிய வலை அவங்க எல்லாரையும் தோண்டி எடுத்துச்சு, அடுத்த தண்டனைக்காக அவங்க மறுபடியும் உயிரோடு வந்தாங்க.

அதுக்கப்புறமா என்னைய வேற இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க இருந்தவங்க தங்களோட பெற்றோரையோ, பெரியவங்களயோ, ஆசிரியர்களயோ அவமதிச்சதுக்காக எல்லா வகையிலயும் தண்டிக்கப்பட்டாங்க. அவங்கள்ல சிலர் நிர்வாணமா இருந்தாங்க, கழுத்து, கைகள் கால்கள் கூரான சங்கிலிகளால கட்டப்பட்டு இருந்துச்சு. அவங்களோட இரத்தம் கண்ணிப்போய், அவங்களோட சதையும் இரத்தமும் கீழாகப் பாஞ்சு வர்ற அளவுக்கு அடிக்கப்பட்டாங்க. அவங்க போராடிக்கிட்டிருந்து வலியால கதறி அழுதாங்க. நரகத்தோட பிசாசுகள் அவங்களோட கைகளயும் கால்களயும் வெட்டுறதுக்கு கோடாரிகளப் பயன்படுத்துச்சுக. அவங்கள சுக்குநூறாப் பொடியாக்க சுத்தியல் போன்ற ஒன்றைப் பயன்படுத்துச்சுக. தண்டிக்கப்பட்டப்போ, “அந்த நேரத்துல இந்தப் பாவத்த செய்யக்கூடாதுன்னு நீ யோசிச்சயா?” அப்படின்னு அவங்ககிட்ட கேட்கப்பட்டுச்சு. அவங்க மனந்திரும்பினாங்க, ஆனா யாராலயும் அவங்கள இரட்சிக்க முடியல, அவங்க மரிக்குற வரை சித்திரவத செய்யப்பட்டாங்க. அதுக்கப்புறமா மறுபடியும் உயிரடஞ்சு அடுத்த தண்டனைய பெற்றாங்க. சிலர் உயிரோட புதைக்கப்பட்டாங்க. அங்கிருந்த நிலம் அசஞ்சு, சலசலத்துச்சு, மண்ணுல நெருப்பு எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. தண்டிக்கப்பட்டவங்க மெதுவா உள்ளுக்குள் உறிஞ்சப்பட்டு, அவங்க சாகுறவரை பூமிக்குள்ள மூழ்கினாங்க.

பிறகு விபச்சாரம் செஞ்சவங்க தண்டிக்கப்பட்ட இடத்துக்கு என்னையக் கூட்டிட்டுப் போனாங்க. தங்களோட உயிர் தப்பும்படியா அவங்க ஓடிட்டிருந்தாங்க. சிலர் அம்புகள் எய்யப்பட்டுக் கொல்லப்பட்டாங்க, மத்தவங்க குத்திக் கொல்லப்பட்டாங்க. சிலர் விலங்குகளால துரத்தப்பட்டும் அவற்றால கடிபட்டும் கொல்லப்பட்டாங்க. கடைசியில, யாராலும் தப்பிக்க முடியல, அவங்கள்ல மீந்திருந்த ஒவ்வொருவரும் செத்துப்போனாங்க. மரிச்சவங்க அடுத்த தண்டனையப் பெற மறுபடியும் உயிர் பெற்றாங்க.

நான் வேற ஒரு இடத்தப் பாத்தேன் அது மத்தவங்கள ஏமாத்தினவங்கள அல்லது தவறான நோக்கங்களக் கொண்டிருந்தவங்களயும், ஜனங்களச் சாதகமா பயன்படுத்திக்கிட்டவங்க, அல்லது மத்தவங்ககிட்ட சூழ்ச்சியோடு அல்லது பொறாமையோடு வாழ்ந்தவங்களயும் தண்டிக்கறதுக்காகன இடமா இருந்துச்சு. ரெண்டு பக்கமும் மரத்தாலான அடுக்குகள் மற்றும் கூர்முனை கயிறுகளக் கொண்ட ஒரு தொங்கு பாலம் இருந்துச்சு. கூர்முனைக் கயிறுகளப் பிடிச்சுக்கிட்டிருந்தவங்களுக்கு இரத்தம் வந்துச்சு, ஆனா அவங்க அதப் பிடிக்காம இருந்தா கீழ விழுவாங்க. கீழ ஒரு நெருப்பு ஏரி இருந்துச்சு. அவங்க கீழ் விழாம இருந்தாலும், அவங்க ஒரு இறைச்சி அரைக்கும் கருவி வழியா போய் அரைபட வேண்டியிருந்துச்சு, அதுக்கப்புறமா, நெருப்பு ஏரியிலதான் அப்பவும் விழுந்தாங்க.

சிலர் உண்மையிலயே தோற்றத்துல அக்கற கொண்டிருந்து, நல்லா உடை அணிஞ்சு நேரத்த வீணடிக்கிறவங்களா இருந்திருந்தாங்க, ஆனா அவங்க தேவனை விசுவாசிக்கவே இல்ல, அதோடு கூட அவருக்கு எதிரா நியாயந்தீர்த்து தூஷிச்சிருந்தாங்க. அவங்களோட முகங்கள் கொஞ்சம் கொஞ்சமா பூச்சிகளால உண்ணப்பட்டுச்சு. அவங்களத் தவிர, மத்தவங்கள சபிச்சதுக்காக, பொருட்களத் திருடுனதுக்காக இன்னும் பலவற்றுக்காகத் தண்டிக்கப்படுறவங்களும் இருந்தாங்க. அவங்க செஞ்சிருந்த பாவங்களப் பொறுத்து, ஜனங்கள் மறுபடியும் மறுபடியும் ஒரே வழியில தண்டிக்கப்பட்டாங்க, அதுக்கப்புறமா வேற ஒரு வகையான தண்டனைக்கு மாற்றப்பட்டாங்க. இந்தக் காட்சியப் பாத்ததும் என்னோட உடம்பெல்லாம் பயத்தால நடுங்குச்சு. உண்மையிலயே அப்படி தண்டிக்கப்படுறது ரொம்ப மோசமானதா இருக்கும்! நான் செஞ்ச பாவங்களுக்காக வருத்தப்பட்டேன், ஆனா, யாரிடத்துல கெஞ்சுறது, யாரால என்னைய இரட்சிக்க முடியும்ன்னு எனக்குத் தெரியல. அந்த நேரத்துல, நான் மயக்க நிலையில சில மந்திரங்களச் சொன்னேன். ஆனா எந்தப் பதிலும் இல்ல, என்னோட பயமும் குறையல. திடீர்ன்னு நான் ஒரே மெய்யான தேவனை—சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிச்சிருந்தேன்ங்கறது நினைவுக்கு வந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொன்ன ஒரு காரியம் நினைவுக்கு வந்துச்சு. “உன்னுடைய அன்றாட வாழ்க்கையில், நீ எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும், நீ தேவனுக்கு முன்பாக வர வேண்டும்; நீ செய்யவேண்டிய முதல் விஷயம், ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக மண்டியிடுவதுதான், இதுவே மிக முக்கியமானதாகும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவன் மீதான விசுவாசத்தில், சத்தியத்தைப் பெறுவது மிகவும் முக்கியம்”). தேவன் எல்லாத்தயும் ஆளுறார்ங்கறது எனக்குத் தெரியும், நான் எதிர்கொண்டது அவரோட அனுமதியோடு நடந்துக்கிட்டிருந்துச்சு, அதனால நான் அவரைக் கூப்பிடணும். என்னோட பலவகையான பாவங்கள நெனச்சுப் பாத்தேன். நான் தேவனிடத்துல ஆர்வமில்லாம இருந்தேன், அவரைப் புறக்கணிச்சேன். நான் நல்லா உணர்ந்தப்போ, என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிச்சு, கூடுகைகள்ல கலந்துக்கிட்டேன், ஆனா நான் நல்லா உணராதப்போ கூடுகைகளத் தவிர்த்துட்டேன். நான் ஒரு கிறிஸ்தவளா இருந்தேன், ஆனா எனக்கு தேவன் மீது உண்மையான விசுவாசம் இல்லாதிருந்துச்சு. நான் அவரைக் குறிச்சு உற்சாகமில்லாமலும் வஞ்சகமுள்ளவளாவும் இருந்தேன். என்னோட நேரத்த கேளிக்கையில கழிப்பதுல நான் மகிழ்ச்சியடஞ்சேன், ஆனா தேவனை ஆராதிக்க எந்த நேரத்தயும் செலவிடல. அதையெல்லாம் நெனச்சப்போ எனக்கு உண்மையிலயே வருத்தமா இருந்துச்சு நான் என்னோட இருதயத்துக்குள்ள, “சர்வவல்லமையுள்ள தேவனே, நான் நிறைய பாவங்கள செஞ்சிருக்கிறேன். நான் அலட்சியமா இருந்து உம்மைப் புறக்கணிச்சிட்டேன், என்னோட கடமைய சரியா செய்யாம பாவத்தின் சந்தோஷத்துல மகிழ்ந்தேன். இப்ப எனக்கு ரொம்ப பயமா இருக்குது, வருத்தத்தால நிரம்பியிருக்குறேன். நான் இங்க வந்து அந்தப் பாவங்களுக்கான தண்டனையப் பெற விரும்பல. நான் மனந்திரும்பத் தயாரா இருக்குறேன்—தயவுசெஞ்சு அப்படிச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீராக. உமது ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிஞ்சு உமது சித்தத்தின்படி எல்லாத்தயும் செய்ய விரும்புறேன்” அப்படின்னு தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் திரும்பத் திரும்ப இப்படி ஜெபிச்சு அறிக்கையிட்டேன், நான் செஞ்ச ஒவ்வொரு பாவங்களுக்காகவும் தேவனிடத்தில் மனந்திரும்பினேன். நான் படிப்படியா அமைதிய உணர்ந்தேன், அதுக்கப்புறமா அவ்வளவு பயத்த உணரல. பிறகு, என்னோட பேரக் கூப்பிடுற சத்தம் வந்ததப் போல உணர்ந்தேன். நான் ஒரு ஒளிக் கதிரப் பாத்தேன், அந்த ஒளியிலயிருந்து ஒரு குரல் வந்து: “டானி, நீ மனந்திரும்பியிருக்குறயா? நீ நிறைய பாவங்கள செஞ்சிருக்குற. நீ தேவனை சார்ந்துக்கிட்டு, இந்தப் பாவங்களச் செய்யுறத நிறுத்தணும்—தண்டன கிடைக்குறவரை நீ மனந்திரும்புறதுக்கு காத்திருக்க முடியாது. தேவனோட வார்த்தைகள உன்னோட இருதயத்துல பதிச்சு சத்தியத்தப் பின்பற்று. நீ புரிஞ்சுக்கறதும் நடைமுறைப்படுத்துறதும் சரியா இருக்கணும். இது உனக்கான கடைசி வாய்ப்பு, அடுத்த முறை இரட்சிப்பு உனக்கு மறுபடியும் கிடைக்காது. நீ உயிரோடா இருக்குறப்போ, உன் கடமைய சிறப்பா செய்யவும் தேவனோட ராஜ்யத்துல சேரவும் கடினமா பிரயாசப்படு. உன் பாவங்களயோ அல்லது உன் தவறுகளயோ மறுபடியும் செய்யாதே, அதோடு நீ வருத்தப்படும் விஷயங்கள செய்யாதே. நீ உன் கடமைய முடிக்காததால, நீ மரிக்க மாட்டாய். பேரழிவில விழுறவங்கள நீ காப்பாத்தப் போற” அப்படின்னு என்கிட்ட சொல்லுச்சு.

அந்தக் குரல் எனக்குத் தெரிந்த யாருடையதும் அல்ல. காத்து சத்தத்தோடு பேசுறதப் போல அது இருந்துச்சு. அது அவ்வளவு தெளிவா இல்ல, ஆனா என்னால அதப் புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. வார்த்தைகள் கடுமையா இருந்தாலும், அவை அறிவுறுத்திக்கிட்டு இருந்துச்சு, என்னைய நிம்மதியா உணர வச்சுச்சு. அவை பாதுகாப்பு உணர்வைத் தருகிற அன்புள்ளவையா இருந்துச்சு. நான் இதுவரைக்கும் அறிந்திராத ஒரு சந்தோஷத்த உணர்ந்தேன். தேவன் என்னைய இரட்சிக்குறார், வாழ்க்கையில எனக்கு ரெண்டாவது வாய்ப்பக் கொடுத்தார்ங்கறது எனக்குத் தெரியும். இந்தக் குரலக் கேட்டதும் எனக்கு படிப்படியா சுயநினைவு வந்துச்சு.

எழுந்திருச்ச பிறகு, நான் நடுங்கினேன், அப்போதும் ரொம்ப பயந்துக்கிட்டு இருந்தேன். நிறையப் பாவங்களச் செஞ்சதுக்காக நான் ரொம்ப பரிதாபமாவும் வருத்தத்தோடும் இருந்தேன். இது தேவன் எனக்குக் கொடுத்த எச்சரிக்கைன்னு எனக்குத் தெரியும். தேவன் சொன்னதெல்லாம் உண்மை. அவர் சொன்னத நான் விசுவாசிச்சு, அவருக்குச் செவிகொடுக்க வேண்டியிருந்துச்சு. என்னால தொடர்ந்து அவரப் புறக்கணிக்கவும் உற்சாகமில்லாதவளா இருக்கவும் முடியல. நான் மறுபடியும் தவறவிடக் கூடாத ஒரு வாய்ப்ப தேவன் எனக்குக் கொடுத்தார். “நான் சகோதரி சம்மர் அவங்ககிட்ட பேச விரும்புறேன்” அப்படின்னு என்னோட தம்பிகிட்ட சொன்னேன். சகோதரி சம்மர் அவங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில நீர் பாய்ச்சுறவங்களா இருந்தாங்க, அவங்க என்னோடு ஆன்லைன்ல அதிகமா கூடிவந்தாங்க. என்னோட நிலைமையப் பத்தி அறிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா சம்மர் அவங்க தேவனோட சில வார்த்தைகளை எனக்கு அனுப்பிவச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு மனித வாழ்விற்கும் தேவன் பொறுப்பாகிறார். அவர் கடைசிவரை பொறுப்புவகிக்கிறார். தேவன் உனக்காக வழங்குகிறார். சாத்தானால் அழிக்கப்பட்ட இந்த சூழலில், நீ நோய்பட்டாலும் அல்லது மாசுப்பட்டாலும் அல்லது மீறப்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல—தேவன் உனக்காக வழங்குவார். தேவன் உன்னை ஜீவிக்க அனுமதிப்பார். உங்களுக்கு இதில் நம்பிக்கை வேண்டும். ஒரு மனிதனை தேவன் அவ்வளவு சுலபமாக மரிக்க அனுமதிக்கமாட்டார்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VII”). “நீ பிறந்த காலம் முதல் இப்போது வரை, தேவன் உன்னிடம் நிறைய கிரியைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் செய்த எல்லாவற்றையும் பற்றிய முழுமையான விவரத்தை அவர் உனக்குத் தரவில்லை. இதை நீ அறிய தேவன் அனுமதிக்கவும் இல்லை, அவர் உன்னிடம் சொல்லவும் இல்லை. இருப்பினும், மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், அவர் செய்யும் அனைத்தும் முக்கியமாகும். தேவனைப் பொறுத்தவரையில், அது, அவர் செய்ய வேண்டிய ஒன்றாகும். இவை அனைத்தையும் விட அதிகமாக அவர் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று அவருடைய இருதயத்தில் உள்ளது. அதாவது, ஒரு மனிதர் பிறந்தது முதல் இன்று வரை, அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். … இந்த ‘பாதுகாப்பு’ என்பது நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதாகும். இது முக்கியமாகுமா? சாத்தானால் விழுங்கப்படாமல் இருப்பது—இது உன் பாதுகாப்பைப் பற்றியதா இல்லையா? ஆம், இது உன் தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியது. இதைவிட முக்கியமாக எதுவும் இருக்க முடியாது. நீ சாத்தானால் விழுங்கப்பட்டவுடன், உன் ஆத்துமாவும் மாம்சமும் இனி தேவனுக்கு சொந்தமில்லாததாக மாறும். தேவன் இனி உன்னை இரட்சிக்க மாட்டார். தேவன் சாத்தானால் விழுங்கப்பட்ட ஆத்துமாக்களையும் ஜனங்களையும் கைவிடுகிறார். ஆகவே, தேவன் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உன்னுடைய இந்தப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதும், நீ சாத்தானால் விழுங்கப்பட மாட்டாய் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதும் ஆகும். இது மிகவும் முக்கியமானது, அல்லவா?(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”).

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சது நான் சார்ந்துகொள்ள ஏதோ ஒண்ணு இருக்குதுங்கறதப் போல ஒரு பாதுகாப்பு உணர்வக் கொடுத்துச்சு. இந்த அனுபவம், பிறந்ததுலயிருந்து இப்போ வரை, தேவன் நம்மை வழிநடத்துறாருங்கறதயும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மளக் கவனிச்சிக்கிட்டும் பாதுகாத்துக்கிட்டும் வர்றாருங்கறதயும் எனக்கு இன்னும் தெளிவா காட்டுச்சு. நான் தேவனுக்கு முன்பா வந்து, என்னோட கடமைய செஞ்சு, அவரோட மிகப்பெரிய கிருபைய திருப்பிச் செலுத்தணும். நான் அதற்கு சாட்சியளிக்க வேண்டியிருந்துச்சு நம்ம கண்களுக்குப் புலப்படாத ஆவிக்குரிய உலகம் உட்பட எல்லாத்தையும் தேவன் உண்மையிலயே ஆட்சி செய்யுறாரு. நரகம் நிஜமாவே இருக்குது. நரக தண்டனையின் துயரத்த நான் அனுபவிக்கல, ஆனா ஜனங்கள் நரகத்துல தண்டிக்கப்படுறத நான் பாத்தேன். என்னைச் சுத்தி சாத்தானப் பின்பற்றி உலகப் போக்குகளப் பின்பற்றுறவங்க நிறைய பேர் இருக்குறாங்க. அவங்க தேவனுக்கு முன்பா வரல. நான் அவங்களுக்காக ரொம்பவே கவலப்படுறேன், அதோடு எனக்குத் தெரிஞ்சவங்க நரகத்துக்குப் போறதயும், அப்படித் துன்பப்படுறதயும் நான் விரும்பல. சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய அவங்க ஏத்துக்கறாங்களோ இல்லையோ, என்னோட பொறுப்ப நான் நிறைவேத்தப் போறேன் அதோடு நரகம் நிஜமாவே இருக்குதுன்னும், தேவனோட அதிகாரம் உண்மையிலயே இருக்குதுன்னும் அவங்களுக்கு சாட்சி பகரப்போறேன். சர்வவல்லமையுள்ள தேவனால மட்டுந்தான் நம்மள நரக துன்பத்துலயிருந்து இரட்சிக்க முடியும். அவருக்கு முன் வராதவங்களுக்காகவும், சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டவங்க, ஆனா அவரோட இரட்சிப்ப பொக்கிஷமா கருதாதவங்களுக்காகவும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிக்க விரும்புறேன்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “என்னுடைய இறுதிக் கிரியையானது மனிதனைத் தண்டிப்பது மாத்திரம் அல்ல, ஆனால் மனிதனுக்கான இலக்கை ஆயத்தம் செய்வதும்தான். மேலும் இதனால் ஜனங்கள் என்னுடைய நியமங்களையும், செயல்களையும் ஒப்புக்கொள்ளக்கூடும். ஒவ்வொரு மனிதனும் நான் செய்தவை எல்லாம் சரி என்றும், நான் செய்தவை எல்லாம் என் மனநிலையின் வெளிப்பாடுகள் என்றும் காண நான் விரும்புகின்றேன். இது மனிதனின் செயல் அல்ல, மனுக்குலத்தை வெளிக்கொண்டுவந்த இயற்கையுடையதும் அல்ல, ஆனால் படைப்பில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் போஷிக்கும் என் செயலே. நான் இல்லையென்றால் மனுக்குலம் அழிவதோடு பேரழிவு என்னும் சாட்டையடியால் பாடுபடும். எந்த மனிதனும் சந்திர, சூரியனின் அழகையோ அல்லது பசுமையான உலகத்தையோ மீண்டும் காண முடியாது. மனுக்குலம் குளிர்ந்த இரவுகளையும், இரக்கமில்லாத மரண இருளின் பள்ளத்தாக்கையும் மாத்திரமே எதிர்கொள்ளும். நானே மனுக்குலத்தின் ஒரே இரட்சிப்பு. நானே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறேன், அதற்கும் மேலே மனுக்குலத்தின் மொத்த ஜீவிப்பும் என்னையே சார்ந்திருக்கிறது. நானின்றி ஒட்டுமொத்த மனுக்குலமும் உடனடியாக ஓர் அசைவற்ற நிலைக்கு வந்துவிடும். நானின்றி மனுக்குலம் பெரும் அழிவில் அவதியுறும், எல்லாவகையான பிசாசுகளாலும் கால்களின் கீழ் மிதிக்கப்படும், ஆனாலும் ஒருவரும் என்மீது கவனம் செலுத்துவதில்லை. நான் வேறு ஒருவரும் செய்யமுடியாத கிரியையைச் செய்திருக்கின்றேன், இதனை மனிதன் சில நற்கிரியைகள் மூலம் எனக்கு ஈடு செய்வான் என்று நம்பியிருக்கின்றேன். ஒரு சிலரால் மாத்திரமே எனக்கு ஈடு செய்ய முடிகிறது என்றாலும், நான் மனிதனின் உலகத்தில் என் பயணத்தை முடித்து என் விரிவாக்கக் கிரியையின் அடுத்தக் கட்டத்தைத் தொடங்குவேன். ஏனெனில் மனிதரின் மத்தியில் இத்தனை வருடமாக என் போக்குவரத்தின் வேகம் எல்லாம் பலனுள்ளதாக இருந்திருக்கிறது, நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மக்களின் எண்ணிக்கை முக்கியமில்லை மாறாக அவர்களது நற்கிரியைகளே முக்கியம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் இலக்கிற்காக, போதுமான நற்கிரியைகளை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். அப்போது நான் திருப்தியாவேன், அப்படியில்லாவிட்டால், உங்களில் ஒருவனும் உங்கள்மீது விழப்போகும் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது. அந்தப் பேரழிவு என்னிலிருந்தே ஆரம்பிக்கப்படும், மேலும் அது நிச்சயமாகவே என்னாலே திட்டமிடப்படும். என் கண்களில் நீங்கள் செம்மையாய்க் காணப்படவில்லை என்றால், உங்களால் அந்தப் பேரழிவில் பாடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும்...