தந்திரமாக இருப்பது எனக்கு எப்படித் தீங்கு விளைவித்தது

செப்டம்பர் 28, 2023

எங்களோட வேலை முடிஞ்ச உடனேயே, மாசத் தொடக்கத்துல, எங்களோட வேல சரியா நடக்கலன்னு ஒரு தலைவர் குறிப்பிட்டாரு, அதுக்கான காரணத்த சொல்லச் சொல்லி என்கிட்டக் கேட்டாரு. எங்களோட பலன் கொறஞ்சு போயிருந்துச்சுங்கறத நான் அதுவரைக்கும் உணரல. கூடுகைக்குப் பிறகு, நான் அத ஆராய்ஞ்சு பார்த்தேன். முந்தைய மாசத்த விட எங்களோட பலன் பாதியா கொறஞ்சிருந்தத நான் பாத்தேன். நான் ரொம்ப கவலப்பட்டேன். அது அப்படியே தொடர்ந்தா, நாங்க தொடர்ந்து மோசமா செஞ்சுக்கிட்டிருந்தா, நான் பணிநீக்கம் செய்யப்படுவனோ? அதனால, எங்களோட பலன அதிகரிப்பதுக்காக, நான் ஆராய ஆரம்பிச்சேன். நான் ஒவ்வொரு சகோதர சகோதரிகள் கிட்டயும் பேசி, அவங்களோட கடமையில ஏதாவது சிரமங்கள் இருந்துச்சான்னு கேட்டேன். கூடுகைகள்ல, இந்தப் பிரச்சனைகளப் பத்தி நான் ஐக்கியங்கொண்டேன், சிறப்பா செயல்பட்டுக்கிட்டிருந்தவங்கள, தங்களோட அனுபவங்களப் பகிர்ந்துக்க வச்சேன். அடுத்த சில நாட்கள்ல, நாங்க கொஞ்சம் சிறப்பா செயல்பட ஆரம்பிச்சோம், கடைசியா நான் நிம்மதியா இருக்க முடிஞ்சுச்சு. நாங்க தொடர்ந்து இப்படியே செஞ்சா, முந்தைய மாசத்த விட சிறப்பா செயல்படுவோம். நான் அதத் தொடர்ந்து செஞ்சா, எந்த ஒரு பொல்லாப்பும் செய்யாம இடையூறு விளைவிக்காம இருந்தா, நான் திருச்சபையால புறம்பாக்கப்படமாட்டேன்னு நெனச்சேன். அதுக்கப்புறமா, என்னோட பதட்டம் குறைய ஆரம்பிச்சுச்சு. மாச கடைசி நெருங்கயில, எங்களோட முடிவுகள் முந்தைய மாசத்தப் போலவே இருப்பதப் பார்த்தேன். அந்த மாசம் நாங்க நல்லா செஞ்சிருந்தோம்னா, அது முன்னேறுவதப் போல காணப்பட அடுத்த மாசம் சிறப்பா செய்யணும், அதாவது நான் கடினமா உழைக்கணும்னு நெனச்சேன். ஏன் எனக்கு நானே இவ்வளவு பாரத்தக் கொடுக்கணும்? இந்த மாசம் நாங்க நல்லா செஞ்சுட்டதால, நான் புறம்பாக்கப்படமாட்டேன். அப்படி நெனச்சப்போ, நான் முழுசா நிம்மதியா இருந்தேன் கொஞ்சமா தான் பாரத்த உணர்ந்தேன். நான் மனநிறைவடைய ஆரம்பிச்சேன், அதோடு எங்களோட வேலைய குறைவா பின்தொடர்ந்தேன். சகோதர சகோதரிகளோட போராட்டங்களத் தீர்க்க நான் ஐக்கியங்கொள்ளல. சில சமயங்கள்ல, சிலர் தங்களோட கடமையில கொள்கைகள மீறுனதக் கண்டுபிடிச்சப்போ, நான் எதுவுமே செய்யல, இந்த சில சிக்கல்கள் எங்களோட செயல்திறனப் பாதிக்காத வரைக்கும் பரவாயில்லன்னு நெனச்சேன். சில நேரங்கள்ல ஜனங்கள் தங்களோட கடமையில சோம்பேறிகளாகி, எந்த அவசர உணர்வயும் கொண்டிருக்கறதில்ல. இந்தச் சிக்கல நான் தீர்க்கணும்ங்கறத உணர்ந்தேன், ஆனா இந்த மாசம் எங்களோட முடிவுகள் நல்லா இருந்துச்சுங்கறத தெரிஞ்சுக்கிட்டவுடனே, அவங்க கொஞ்சம் ஓய்வெடுத்துக்கலாம்ன்னு நெனச்சேன், அதனால, நான் கண்டும் காணாம இருந்தேன். அந்த நிலையில வாழுறப்போ, நான் ஒரு ஆவிக்குரிய இருள உணர்ந்தேன். தேவனோட வார்த்தைகள்ல இருந்து நான் எந்த பிரகாசத்தயும் பெறல. என்னோட வேலையிலயும் பிரச்சனைகள நான் கண்டுபிடிக்கல. எங்களோட வேலைய நாங்க சுருக்கமா சொல்லும்போது நான் தூக்கக் கலகத்துல தூங்கி விழுந்துக்கிட்டு இருப்பேன். எங்களோட பலன் குறஞ்சப்பதான் நான் பயப்பட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம், நான் சகோதர சகோதரிகள சந்திக்க வேகமா ஓடினேன்.

ஒரு தடவ, ஒரு கூடுகையின் போது, ஒரு சகோதரி சிலர் தங்களோட மோசமான வேலை முடிவுகளால பணிநீக்கம் செய்யப்பட்டுருவோமோ அப்படின்னு பயப்பட்டு, கடினமா உழைச்சாங்க. அவங்க பலன்களப் பெற்றவுடனே, சௌகரியத்துல பேராசை கொண்டவங்களாகி அதிக பாரத்த உணரல அப்படின்னு சொன்னாரு. அது தந்திரமாயிருப்பதுன்னும், தந்திரத்தின் அடையாளம்ன்னும் அவர் சொன்னாரு. இது என்னோட உணர்வுகளத் தட்டி எழுப்புச்சு, என்னால தற்பரிசோதன செய்யாம இருக்க முடியல: எங்களோட பலன் குறஞ்சப்போ, பதவி நீக்கம் செய்யப்பட்டுருவோமோங்கற பயத்துல என்னோட ஆற்றல ஒன்று திரட்டுனேன். நான் சிறந்த முடிவுகள விரும்புனேன். நான் சிறந்த முடிவுகளப் பெற்றப்போ அல்லது அவை அதே நிலமையில இருந்தப்போ, நான் சௌகரியத்துக்காக ஆசப்பட்டேன், எந்த அவசரத்தையும் உணரல. சீரான முடிவுகளப் பெறுவதும், பணிநீக்கம் செய்யப்படாம இருப்பதும் பரவாயில்லன்னு நான் நம்புனேன். அது தந்திரமாவும் நேர்மையில்லாமலும் இருந்ததா இல்லயா? இந்தச் சூழ்நிலைகள்ல என்னோட தொடர் நடத்த இதுதான்ங்கறத நான் உணர்ந்தேன். நான் எப்பவுமே அப்படித்தான் நடந்துக்கிட்டேன். அந்தச் சமயத்துல எனக்குப் பயம் வந்துச்சு.

என்னோட தியானங்கள்ல தேவனோட வார்த்தைகள வாசிச்சேன்: “ஒரு கடமையைச் செய்வதற்கு தற்போது அதிக வாய்ப்புகள் இல்லை, எனவே உன்னால் முடியும் போது நீ அவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். சரியாகச் சொல்லப்போனால் ஒரு கடமையை எதிர்கொள்ளும் போது நீ கடுமையாக உழைக்க வேண்டும்; அப்போதுதான் உன்னையே நீ அர்ப்பணிக்க வேண்டும், தேவனுக்கு உன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், மற்றும் கிரயம் செலுத்த வேண்டும். எதையும் தடுத்து நிறுத்தாதே, எந்த மறைமுகத் திட்டங்களையும் வைத்துக் கொள்ளாதே, எந்த வழியையும் விடாதே, அல்லது உனக்கு நீயே ஒரு தப்பிக்கும் வழியைக் கொடுக்காதே. நீ ஏதாவது வழியைக் கொடுத்தால், கணக்கிட்டுக் கொண்டிருந்தால் அல்லது தந்திரமாகவும் நயவஞ்சகமாகவும் இருந்தால், நீ ஒரு மோசமான வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். ‘நான் தந்திரமாக நடந்துகொள்வதை யாரும் பார்க்கவில்லை. எவ்வளவு அருமை!’ என்று நீ கூறுவதாக வைத்துக்கொள்ளுவோம். இது என்ன மாதிரியான சிந்தனை? மக்களின் கண்களில் மற்றும் தேவனின் கண்களிலும் கூட மண்ணைத் தூவி ஏமாற்றிவிட்டதாக நீ நினைக்கிறாயா? இருந்தாலும் உண்மையில், நீ என்ன செய்திருக்கிறாய் என்று தேவனுக்குத் தெரியுமா தெரியாதா? அவருக்குத் தெரியும். உண்மையில், உன்னுடன் சிறிது நேரம் பழகும் எவரும் உன் சீர்கேடு மற்றும் இழிநிலையைப் பற்றி அறிந்துகொள்வார்கள். அவர்கள் மிகவும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், அவர்கள் இருதயங்களில் உன்னைப் பற்றிய மதிப்பீடுகளை வைத்திருப்பார்கள். பலரும் அவர்களைப் புரிந்து கொண்டுவிட்டதால் அம்பலப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். எல்லோரும் அவர்களுடைய சாராம்சத்தை ஊடுருவிப் பார்த்தவுடன், அந்த நபர்கள் யாராக இருந்தனர் என்று அம்பலப்படுத்தி அவர்களை வெளியேற்றினர். எனவே, மக்கள் சத்தியத்தைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, அவர்கள் தங்கள் கடமையைத் தங்களால் இயன்றவரை சிறப்பாகச் செய்ய வேண்டும்; நடைமுறைச் செயல்களைச் செய்வதில் அவர்கள் தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்த வேண்டும். உன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் உன் கடமையை நீ திறம்படச் செய்ய முடிந்தால், நீ புறம்பாக்கப்படும் அளவிற்கு இது போகாது. நீ எப்போதும் நன்றாக இருப்பதாகவும், புறம்பாக்கப்பட மாட்டாய் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சிந்தித்துக்கொண்டு, இன்னும் உன்னைப் பற்றிச் சிந்திக்காமல் அல்லது உன்னை அறிய முயலாமல், உன் முறையான பணிகளைப் புறக்கணித்து, எப்போதும் கவனக்குறைவானவனாகவும் செயலற்றவனாகவும் இருப்பாயானால், பிறகு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் உண்மையில் உன்னிடம் பொறுமையிழக்கும்போது, அவர்கள் உன்னை யார் என்று அம்பலப்படுத்துவார்கள், மேலும் நீ நிச்சயமாகப் புறம்பாக்கப்படும் அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. அதற்குக் காரணம், உன்னை அனைவரும் ஊடுருவிப் பார்த்துவிட்டார்கள், நீ உன் கண்ணியத்தையும் நேர்மையையும் இழந்துவிட்டாய். யாரும் உன்னை நம்பவில்லை என்றால், தேவன் உன்னை நம்ப முடியுமா? தேவன் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தைப் பார்க்கிறார்: அத்தகைய நபரை அவரால் நிச்சயமாக நம்ப முடியாது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஜீவப்பிரவேசமானது கடமையைச் செய்வதில் இருந்து தொடங்குகிறது”). ஜனங்கள் தங்களோட கடமையில கவனம் செலுத்தணும், அதுக்காக விலைக்கிரயம் செலுத்தணும், அதோடு தங்களோட எல்லாத்தயும் கொடுக்கணும்னு தேவனோட வார்த்தைகள் சொல்லுது. கொஞ்சம் அதிகமா ஒப்புக்கொடுக்கறதால அவங்க நல்ல பலன்களப் பெற முடிஞ்சதுக்கப்புறமா அவங்க பின்வாங்கினா, குறைந்தபட்சத்த அடைவதுல திருப்தியானாங்கன்னா, அது தேவனுக்கு எதிரா சூழ்ச்சி செய்றதும், தந்திரமா இருப்பதுமா இருக்குது. என்னோட நடத்தையப் பொறுத்தவரையில, நான் பதவி நீக்கம் செய்யப்படலங்கறத உறுதிப்படுத்த, சின்ன அளவுல சாதிப்பதுல திருப்தி அடஞ்சேன்ங்கறத என்னால பாக்க முடிஞ்சுச்சு. சகோதர சகோதரிகளோட பிரச்சனைகளயும் கஷ்டங்களயும் நான் தீர்த்து வைக்கல, ஆனா சிரத்தையில்லாம எங்களோட வேலைய தொகுத்துக்கிட்டு இருந்தேன், அதோட ஜனங்கள் தங்களோட கடமையில கொள்கைகளுக்கு எதிரா போவதயும் சோம்பேறிகளா இருப்பதயும் நான் பார்த்தப்போ, “பரவாயில்ல, இது நம்மளோட ஒட்டுமொத்த பலன்கள பாதிக்காது” அப்படின்னு நெனச்சேன். நான் அதக் கண்டும் காணாம இருந்தேன். ரொம்பத் தெளிவா, என்னோட எல்லாத்தயும் கொடுக்கறதும் அதிக விலைக்கிரயத்த செலுத்துறதும் எங்களோட முடிவுகள மேம்படுத்த முடியும், ஆனா, நான் பாரத்த சுமக்க விரும்பல, நான் தந்திரமானவளா மாறினேன். என்னோட கடமையில, நான் அற்ப புத்திசாலித்தனத்தயும், சூழ்ச்சியையும் கொண்டிருந்தேன். அதோட, தேவனை ஏமாத்திக்கிட்டிருந்தேன் அது உண்மையில தந்திரமா இருந்துச்சு! எல்லாரும் தங்களோட கடமையில நேர்மையாவும் நம்பகமாவும் இருக்குற ஒருத்தரக் கண்டுபிடிக்க விரும்புறாங்க. அவங்க நம்பகமானவங்களா இருக்காங்க, ஜனங்கள நிம்மதியா இருக்கவைக்குறாங்க. ஆனா, அற்ப புத்திசாலித்தனத்தக் கொண்டிருந்து சூழ்ச்சி செய்யுற ஒருத்தர நீங்க நம்புனா, அவங்க பணிய முடிக்க மாட்டாங்க, அத அவங்க அழிச்சுப்போடக் கூடும். இப்படிப்பட்ட நபருக்கு மனசாட்சியோ நடத்தைக்கான தரமோ இல்ல. அவங்க கொஞ்சம் கூட நம்பத்தகுந்தவங்க இல்ல. அது நான்தான்ங்கறத உணர்ந்தேன். நான் ஒரு கட்டளைய ஏத்துக்கிட்டேன், ஆனா என்னோட எல்லாத்தயும் நான் அதுக்காகக் கொடுக்கல. நான் தேவனுக்கு எதிரா சூழ்ச்சி செஞ்சேன். என்னோட கடமையில நான் பலன்களப் பெறுவதப்போலவும், பிரச்சினைகள் கவனிக்கப்படாம இருந்துச்சு, ஆனா, தேவன் எல்லாத்தயும் பாக்குறாரு நான் ரொம்ப காலமா நேர்மையில்லாதவளா இருந்தா, நான் அம்பலப்படுத்தப்படுவேன். நான் தேவனோட வார்த்தைகள சிந்திச்சுப் பார்த்தேன்: “கர்த்தராகிய இயேசு ஒருமுறை கூறினார், ‘உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்’ (மத்தேயு 13:12). இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? நீ உன் சொந்தக் கடமை அல்லது பணியைக் கூடச் செய்யாமல் அல்லது உன்னை அதற்காக அர்ப்பணிக்காமல் இருந்தால், ஒருகாலத்தில் உன்னுடையதாக இருந்ததையும் தேவன் எடுத்துப் போடுவார் என்பது அவற்றின் அர்த்தம். ‘எடுத்துப் போடுதல்’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு மனிதனாக, அந்த உணர்வு எப்படி உணரப்படுகிறது? உன்னுடைய செயல்திறனையும் வரங்களையும் கொண்டு உன்னால் அடைந்திருக்கக் கூடியதை அடைவதில் தோல்வி அடைகிறாய் என்பதாகவும், மேலும் நீ ஒன்றும் உணராமல், நீ ஓர் அவிசுவாசியைப்போல் இருப்பதாகவும் உணரப்படும். எல்லாம் தேவனால் எடுத்துபோடப்படுதல் என்பது இதுதான். உன்னுடைய கடமையில் நீ அஜாக்கிரதையாக, ஒரு விலைக்கிரயத்தைச் செலுத்தாமல், உண்மையாக இல்லாமல் இருந்தால், ஒருகாலத்தில் உன்னுடையதாக இருந்ததை தேவன் எடுத்துப்போடுவார், உன்னுடைய கடமையைச் செய்யும் உரிமையை அவர் திரும்பப் பெறுவார், அவர் உனக்கு இந்த உரிமையை அளிக்கமாட்டார்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “நேர்மையாக இருப்பதன் மூலம் மட்டுமே ஒருவரால் உண்மையான மனுஷனாக வாழ முடியும்”). தேவன் நீதியுள்ளவரா இருக்காரு. நான் தந்திரமானவளாவுவும், நேர்மையில்லாதவளாவும் இருந்தேன், நான் செய்ய வேண்டியதயும், என்னால செய்ய முடிஞ்சதயும் நான் செய்யாம இருந்தேன், அதனால, தேவன் என்கிட்ட இருந்ததப் பறிச்சுட்டாரு—நான் முன்னாடி பாத்த பிரச்சனைகள என்னால கண்டுபிடிக்க முடியல, என்னோட கடமையில நான் தூங்கிவிழுந்துக்கிட்டு இருந்தேன். என்னோட பலன்கள் குறைஞ்சுபோச்சு. இது தேவன் தம்முடைய மனநிலைய வெளிப்படுத்துவதா இருந்துச்சு. நான் ஜெபத்துல தேவனுக்கு முன்பா வந்து, அவரிடத்துல மனந்திரும்புறதுக்குத் தயாரா இருந்தேன், என்னைய நல்லா தெரிஞ்சுக்க, என்னை வழிநடத்தும்படி அவரிடத்துல கேட்டேன்.

அதுக்கப்புறமா, என்னைய தொட்ட தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய வாசிச்சேன். தேவனின் வார்த்தை கூறுகிறது: “தேவன் நேர்மையானவர்களை நேசிக்கிறார், ஆனால் வஞ்சகமான மற்றும் தந்திரமான மக்களை வெறுக்கிறார். நீங்கள் ஒரு துரோகியாகச் செயல்பட்டு வஞ்சகமான முறையில் நடக்க முயற்சித்தால், தேவன் உங்களை வெறுக்க மாட்டாரா? தேவனுடைய வீடு உங்களை வெறுமனே விட்டு விடுமா? விரைவில், நீங்கள் கணக்கொப்புவிக்க நேரிடும். தேவன் நேர்மையானவர்களை விரும்புகிறார், துரோகிகளை வெறுக்கிறார். எல்லோரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, குழப்பமடைவதையும் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதையும் நிறுத்த வேண்டும். கணநேர அறியாமையானது புரிந்து கொள்ளத்தக்கது, ஆனால் சத்தியத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள மறுப்பது மாறுவதற்கான பிடிவாதமான மறுப்பாகும். நேர்மையானவர்களால் பொறுப்பேற்க முடியும். அவர்கள் தங்கள் சொந்த லாப நஷ்டங்களைக் கருத்தில் கொள்ளாமல், மாறாக தேவனுடைய வீட்டின் வேலை மற்றும் நலன்களைப் பாதுகாக்கிறார்கள். தெளிவான நீருள்ள கிண்ணத்தில் பார்த்தவுடனே கீழே உள்ளவை ஒருவர் பார்க்கக்கூடியதாய் இருப்பதைப் போல, அவர்கள் கனிவான மற்றும் நேர்மையான இருதயங்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் செயல்களிலும் வெளிப்படைத்தன்மை உள்ளது. வஞ்சகமான ஒரு நபர் எப்போதும் வஞ்சகமான முறையில் நடந்து கொள்கிறார், எப்போதும் காரியங்களை வேடமிடுகிறார், மூடி மறைக்கிறார், மேலும் ஒருவரும் அவர்களின் உண்மையான இயல்பை அறிய முடியாதபடி தங்களை மூடி மறைக்கின்றனர். ஜனங்களால் உங்களுடைய உள்ளான எண்ணங்களின் உண்மையான இயல்பை புரிந்து கொள்ள முடியாது, ஆனால் தேவனால் உங்கள் இருதயத்தில் உள்ள ஆழமான விஷயங்களைப் பார்க்க முடியும். நீங்கள் நேர்மையானவர் இல்லை என்றும், நீங்கள் தந்திரமானவர் என்றும், நீங்கள் சத்தியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்றும், நீங்கள் எப்போதும் அவரை வஞ்சிக்க முயற்சி செய்கிறீர்கள் என்றும், நீங்கள் உங்கள் இருதயத்தை அவரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் தேவன் கண்டால், அப்போது தேவன் உங்களை நேசிக்க மாட்டார், அவர் உங்களை வெறுத்து கைவிடுவார். அவிசுவாசிகளிடையே செழிப்புடன் இருப்பவர்கள், இனிமையாகப் பேசக் கூடியவர்கள் மற்றும் புத்திசாலியானவர்களான இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இது உங்களுக்குத் தெளிவாக உள்ளதா? அவர்களின் சாரம்சம் என்ன? அவர்கள் அனைவரும் அசாதாரணமான வகையில் சாதுரியமானவர்கள், அவர்கள் அனைவரும் மிகவும் தந்திரமானவர்கள் மற்றும் நயவஞ்சகமுள்ளவர்கள், அவர்கள் உண்மையான பிசாசாகிய சாத்தான் என்று கூறலாம். இப்படிப்பட்ட ஒருவரை தேவன் இரட்சிக்க முடியுமா? தந்திரமான மற்றும் வஞ்சகமான நபர்களான பிசாசுகளை விட வேறு எதையும் தேவன் மிகவும் வெறுப்பதில்லை. இத்தகையவர்களை தேவன் கண்டிப்பாக இரட்சிக்க மாட்டார், எனவே நீங்கள் எதைச் செய்தாலும், இந்த மாதிரியான நபராக இருக்காதீர்கள். … தந்திரமான மற்றும் வஞ்சகமான மனிதர்களைக் குறித்த தேவனுடைய அணுகுமுறை என்ன? அவர் அவர்களை நிராகரிக்கிறார், அவர் அவர்களை ஓரங்கட்டுகிறார், அவர்களைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை, அவர் அவர்களை விலங்குகளின் வகையைப் போலவே கருதுகிறார். தேவனுடைய பார்வையில், அத்தகைய ஜனங்கள் வெறுமனே மனிதத் தோலை அணிந்திருக்கிறவர்களாவர்; சாரம்சத்தில், அவர்கள் பிசாசாகிய சாத்தானைப் போன்றவர்கள், அவர்கள் நடமாடும் பிணங்கள், தேவன் அவர்களை ஒருபோதும் இரட்சிக்க மாட்டார். இப்போது இந்த மக்களின் நிலை என்ன? இவர்களின் இருதயங்களில் இருள் இருக்கிறது, இவர்களுக்கு மெய்யான விசுவாசம் இல்லை, இவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், இவர்கள் ஒருபோதும் ஒளியூட்டப்படவோ அல்லது பிரகாசிக்கப்படவோ மாட்டார்கள். பேரிடர்கள் மற்றும் உபத்திரவங்களை எதிர்கொள்ளும் போது, அவர்கள் தேவனிடம் ஜெபிக்கிறார்கள், ஆனால் தேவன் இல்லாமல் இருக்கிறார், அவர்கள் உண்மையிலேயே தங்கள் இருதயங்களில் அவரைச் சார்ந்து இருப்பதில்லை. அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, அவர்கள் ஒரு நல்ல காட்சியை அரங்கேற்ற முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு மனசாட்சியோ அல்லது உணர்வோ இல்லை; விரும்பினாலும் இவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது, மோசமான காரியங்களைச் செய்வதை நிறுத்த நினைத்தாலும் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது, அவர்கள் இந்த விஷயங்களைச் செய்யத்தான் வேண்டும். அவர்கள் வெளியே அனுப்பப்பட்டு புறம்பாக்கப்பட்ட பின்னர் அவர்களால் தங்களைத் தாங்களே தெரிந்துகொள்ள முடியுமா? இந்தத் தண்டனைக்கு தாங்கள் உரியவர்கள் என்று அவர்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் அதைக் கூற மாட்டார்கள், ஒரு கடமையைச் செய்யக்கூடியவர்களாக அவர்கள் தோன்றினாலும், அவர்கள் இன்னும் தந்திரங்களைச் செய்வார்கள், மேலும் அவர்களுடைய பணி தெளிவான முடிவுகளைப் பெறாது. எனவே நீ என்ன சொல்கிறாய்: இந்த மக்களால் உண்மையிலேயே மனந்திரும்ப முடியுமா? நிச்சயமாக முடியாது. இது ஏனென்றால் அவர்களுக்கு மனசாட்சியோ அல்லது உணர்வோ இல்லை மேலும் அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை. துரோகிகளும் தீயவர்களுமான இப்படிப்பட்ட மக்களை தேவன் இரட்சிப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு தேவனை விசுவாசிப்பதில் என்ன நம்பிக்கை இருக்கிறது? அவர்களுடைய நம்பிக்கை ஏற்கெனவே முக்கியத்துவமற்றதாக இருக்கிறது, மேலும் அவர்கள் அதிலிருந்து எதையும் பெற முடியாது என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஜனங்கள் தேவன் மீதான விசுவாசம் முழுவதிலும், சத்தியத்தைத் தேடாமல் இருந்தால், அப்போது அவர்கள் எத்தனை ஆண்டுகளாக விசுவாசிகளாக இருந்து வருகிறார்கள் என்பது முக்கியமல்ல; இறுதியில் அவர்கள் ஒன்றையும் அடைய மாட்டார்கள்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்). “வஞ்சகமான மற்றும் தந்திரமான மக்களை,” “அசாதாரணமான வகையில் சாதுரியமானவர்கள்,” “விலங்குகளின் வகையைப் போலவே,” “தேவன் அவர்களை ஒருபோதும் இரட்சிக்க மாட்டார்,” மற்றும் “அவர்கள் அதிலிருந்து எதையும் பெற முடியாது” அப்படின்னு தேவன் குறிப்பிட்டிருந்ததப் பாத்தது வேதனையளிக்கிறதா இருந்துச்சு. என் கடமையில என்னோட தந்திரமான அணுகுமுறைய தேவன் எப்படி வரையறுத்தாருங்கறதப் போல நான் உணர்ந்தேன். நீ ரொம்பவும் நேர்மையா இருக்கக்கூடாதுன்னும், நீ திட்டம்போட்டு நடந்துக்கணும் அதோட இரகசிய தந்திரங்கள வச்சிருக்கணும்னு நான் எப்பவுமே நினைப்பேன். நான் சூழ்நிலைய பயன்படுத்திக்க முயற்சி செஞ்சேன், என்னைய யாரும் பயன்படுத்திக்க விடல, எதையும் செய்யறதுக்கு முன்னாடி எனக்குப் பிரயோஜனம் இருக்கான்னு யோசிச்சேன், சின்ன முயற்சிக்குக் கூட மிகப்பெரிய பலனை எதிர்பார்த்தேன். அது புத்திசாலித்தனம்னு நெனச்சேன். என்னோட விசுவாசத்தப் பெற்ற பிறகும் கூட அந்தத் தத்துவத்தத் தொடர்ந்து கடைபிடிச்சேன். என்னால ரொம்ப வெளிப்படையா இருக்க முடியாது அல்லது என்னோட முழு பலத்தயும் என்னோட கடமையில ஈடுபடுத்த முடியாது, அது முட்டாள்தனமானதா இருக்கும் அப்படின்னு நெனச்சேன். கடைசியில நான் ஆசீர்வதிக்கப்படலேன்னா, அது எனக்கு மிகப்பெரிய இழப்பா இருக்கும். அந்த இழப்ப என்னால தாங்கிக்க முடியாது. நான் கொஞ்சமா அர்ப்பணிக்கவும், ஆனா, பெரிய ஆசீர்வாதங்களப் பெறவும் விரும்புனேன், அது “புத்திசாலித்தனம்”. அதனால, நான் என்னோட கடமையச் செய்யுறப்போ கொஞ்ச நாளைக்கு அதிக முயற்சி செய்வேன், பொறுத்திருந்து பாத்து, கணக்கிடத் தொடங்குவேன். பலன்கள் அதிகமா இருந்தப்போ, நான் ஓய்வெடுத்தேன். நான் பிரச்சனைகளப் பார்த்த போதும், கூட, அது எங்களோட செயல்திறனைப் பாதிக்கல, நான் பதவி நீக்கம் செய்யப்படமாட்டேன் அப்படின்னா, நான் வருத்தப்படல, அதுக்குப் பதிலா கண்டும் காணாம இருந்தேன். நாங்க மோசமா செஞ்சா, அதன் விளைவுகள நான் ஏத்துக்குவேன், நான் கடினமா உழச்சு, காரணத்தக் கண்டுபிடிச்சு, சிக்கலத் தீர்ப்பேன். பலனளித்தவுடனே, என்னோட கவலை தீர்ந்துபோயிரும். நான் என்னோட சௌகரியங்கள்லயும் ஓய்வுலயும் மகிழ்ச்சியடயத் தொடங்குவேன். நான் ரொம்ப தந்திரமானவளா இருந்தேன்! அதுதான் ஒரு கடமையச் செய்றதா? தேவனுக்கு ஒப்புக்கொடுக்கறதா? நான் புத்திசாலித்தனமானவளா இருந்து, தேவனுக்கு எதிரா சூழ்ச்சி செஞ்சுக்கிட்டிருக்குறேன்னு நெனச்சேன், ஆனா தேவன் எல்லாத்தயும் பார்க்குறாரு. கடமையில எப்பவுமே தந்திரமா இருக்கறவங்கள தேவன் இரட்சிக்க மாட்டாரு. தேவன் நேர்மையானவங்கள விரும்புறாரு—அவங்க தங்களோட இருதயங்கள தேவனுக்குத் திறக்குறாங்க. தங்கள் கடமைகள்ல முழு மனதோடு செயல்படுறாங்க, அவங்க தங்களோட பொறுப்புகள நிறைவேத்துறாங்க, தங்களிடத்துல இருக்கற எல்லாத்தயும் கொடுக்குறாங்க, தங்களோட எதிர்காலத்துக்காகத் திட்டமிடுறதோ அல்லது தங்களோட ஆசீர்வாதங்களக் கருத்தில் கொள்றதோ இல்ல. அப்படிப்பட்ட நபரை தேவன் ஆசீர்வதிப்பாரு. சுவிசேஷப் பணிக்கு பொறுப்பான நபரா, என்னோட தந்திரமான நேர்மையில்லாத நடத்தையும், முன்னேற்றத்தப்பத்தி கவலை இல்லாதத்தனமும் மத்தவங்க தங்களோட சிரமங்களத் தீர்த்துக்காமப் போக வழிவகுத்துச்சு, இதன் விளைவா பலன்கள் குறைஞ்சுச்சு. இது மத்தவங்கள காயப்படுத்தியது மட்டுமல்லாம, எங்களோட சுவிசேஷப் பணியயும் தடை செஞ்சுச்சு. சிந்துச்சுப் பாத்தப்போ, நான் வருத்தமடஞ்சு என்னைய நெனச்சு வெட்கப்பட்டேன். நான் மனந்திரும்பி தேவனிடத்துல ஜெபிச்சு, இனிமேல், நான் என்னோட முழு பலத்தயும் என்னோட கடமையில ஈடுபடுத்தி தந்திரமா இருப்பத நிறுத்துவேன் அப்படின்னு அவருக்கு முன்பா வாக்குப் பண்ணினேன்.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிச்சு, கடமைகளச் செய்றதுக்கான அர்த்தத்தத் தெரிஞ்சுக்கிட்டேன். தேவனின் வார்த்தை கூறுகிறது: “மனிதன் எந்தக் கடமையைச் செய்தாலும், இதைவிடச் சரியானதாக எதுவும் இருக்கிறதா? இதுவே மனிதனுக்கு மத்தியில் மிகவும் அழகானதும் நீதியுள்ளதுமான விஷயமாகும். சிருஷ்டிகரின் அங்கீகாரத்தைப் பெற தேவனுடைய சிருஷ்டிகள் தங்கள் கடமையைச் செய்யவேண்டும்; சிருஷ்டிகள் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் ஜீவிக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவன் அளிக்கும் எல்லாவற்றையும், தேவனிடத்தில் இருந்து வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும்—இது பரலோகத்தால் நியமிக்கப்பட்டது மற்றும் பூமியால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும்; இது தேவனுடைய ஆணை. மனித உலகத்தில் ஜீவிக்கும் போது செய்யப்பட்ட வேறெதையும் விட, தேவனுடைய சிருஷ்டியின் கடமையை ஜனங்கள் செய்வது அதிக நீதியானதும், அழகானதும், மற்றும் உன்னதமானதாகவும் இருப்பதை இதிலிருந்து காணமுடியும்; மனுக்குலத்தின் மத்தியில் வேறொன்றும் அதிக அர்த்தமுள்ளதாகவும் அல்லது மதிப்பு மிக்கதாகவும் இருக்காது, மேலும் ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்வதை விட வேறொன்றும் ஒரு சிருஷ்டியின் ஜீவிதத்திற்கு பெரிதான அர்த்தத்தையும் மதிப்பையும் கொண்டுவருவதில்லை. பூமியில், ஒரு சிருஷ்டியின் கடமையை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்கிற மக்கள் குழுவே சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிகிறவர்கள். இந்தக் குழு வெளி உலகின் போக்குகளைப் பின்பற்ற மாட்டார்கள்; அவர்கள் தேவனின் தலைமைக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிகிறார்கள், அவர்கள் சிருஷ்டிகரின் வார்த்தைகளை மட்டுமே கேட்கிறார்கள், அவர்கள் சிருஷ்டிகர் வெளிப்படுத்தும் சத்தியங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள், அவர்கள் சிருஷ்டிகரின் வார்த்தைகளின்படி வாழ்கிறார்கள். இதுவே மிகவும் உண்மையான, மிகவும் வெற்றிகரமான சாட்சியாகும், மேலும் இதுவே தேவன் பேரில் உள்ள விசுவாசத்தின் சிறந்த சாட்சியாகும். சிருஷ்டிகரைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய முடிகிற சிருஷ்டியே மனுக்குலத்துக்குள் மிகவும் அற்புதமான ஒன்று, மற்றும் மனுக்குலத்தின் மத்தியில் புகழப்பட வேண்டிய ஒன்று. சிருஷ்டிகரால் சிருஷ்டிகளிடம் ஒப்படைக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது அவர்களால் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; மனுக்குலத்துக்கு இது ஆசிர்வதிக்கப்பட்டதும் மகிமையானதுமான ஒன்று, மற்றும் ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்யும் எல்லாருக்கும், வேறெதுவும் மிகவும் அற்புதமானதாக அல்லது நினைவுகூருவதற்குத் தகுதியாக இருக்க முடியாது—இது நேர்மறையான ஒரு விஷயம் ஆகும். … இத்தகைய அழகான மற்றும் இத்தகைய பெரிதான விஷயம், அந்திக்கிறிஸ்துகளின் கூட்டத்தால் ஒரு பரிமாற்றமாக திரிக்கப்பட்டது, அதில் அவர்கள் கிரீடங்களையும் வெகுமதிகளையும் சிருஷ்டிகரின் கரத்தில் இருந்து கோருகிறார்கள். இத்தகைய பரிமாற்றம் மிகவும் அழகாகவும் நீதியுள்ளதாகவும் இருந்த ஒன்றை அலங்கோலமானதாகவும் தீமையான ஒன்றாகவும் மாற்றுகிறது. அந்திக்கிறிஸ்துகள் செய்வது இது அல்லவா? இதில் இருந்து மதிப்பிடும்போது அந்திக்கிறிஸ்துகள் பொல்லாதவர்களா? அவர்கள் உண்மையிலே மிகவும் பொல்லாதவர்கள்! இது வெறுமனே அவர்களுடைய தீமையின் ஓர் அம்சத்தின் வெளிப்பாடாகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி ஏழு)”). தேவனோட வார்த்தைகள வாசிச்சது எனக்குள்ள மிகப்பெரிய தாக்கத்த ஏற்படுத்துச்சு. தேவன் மனிதகுலத்த இரட்சிக்க அமைதியா தனது எல்லாத்தயும் கொடுக்குறாரு, நமக்குத் தேவையானவற்றால நம்மள போஷிக்குறாரு, கடமையச் செய்ய நமக்கு உதவறாரு, அதனால நாம சத்தியத்தத் தேடி, நம்மளோட சீர்கெட்ட மனநிலைகள சரிசெஞ்சு, தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு, பக்தியோடு இருக்கவும், அவரோட இரட்சிப்பப் பெறவும் முடியும். தேவனோட வீட்டுல நம்மளோட கடமையச் செய்யுறது நம்மளோட பொறுப்பு. அது சத்தியத்தப் பெறவும் இரட்சிக்கப்படவும் தேவன் நமக்கு உதவறதா இருக்கு. இது ஒருத்தர் ஏத்துக்கக் கூடிய ஒரு ரொம்ப அற்புதமான வேலை. ஆனா அந்திக்கிறிஸ்துகள் இந்த அழகான விஷயத்த எடுத்து அதை பரிவர்த்தனைக்கான விஷயமா திரிக்கிறாங்க. அவங்க தங்களோட விசுவாசத்துலயும் கடமையிலயும் ஆசீர்வதிக்கப்படணும்னனு எதிர்பாக்குறாங்க. அவங்களால உண்மையான விசுவாசத்தப் பெற்றிருக்கவோ, கஷ்டப்பட்டு விலைக்கிரயத்த செலுத்தவோ முடியாது. அவங்க பாடப்புத்தக அவிசுவாசிகளும் சந்தர்ப்பவாதிகளுமா இருக்காங்க. நான் எப்படி நடந்துக்கிட்டேன்ங்கறதப் பத்தி யோசிச்சுப் பார்க்கையில, நான் அவங்களப் போல இருந்தேன் இல்லயா? நான் தேவனோட சித்தத்தப் பத்தி சிந்திக்கல, நான் பின்வாங்குனேன். சின்ன முயற்சிக்கு ஈடா நான் நிறைய விரும்புனேன், தேவனுக்கு எதிரா சூழ்ச்சி செஞ்சேன். நான் என்னோட கடமைய ஏதோ பரிவர்த்தனையா மாத்தலயா? நான் ஒரு விசுவாசியா இருக்கல. நான் என்னோட கடமையில வெற்றி பெற்று, பதவி நீக்கம் செய்யப்படாத வரையில, என்னால இரட்சிக்கப்பட முடியும் அப்படின்னு நான் எப்பவுமே நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா அது எல்லாமே என்னோட சொந்த எண்ணங்கள் அப்படிங்கறதயும் தேவனுக்கு ஏற்றதா இல்லைங்கறதயும் நான் கடைசியா பார்த்தேன். உங்க கடமைய நிறைவேத்துறது, எந்தத் தீமையும் செய்யாம இருக்கறது அல்லது பணிநீக்கம் செய்யப்படாம இருக்கறதுக்கான அர்த்தம் நீங்க இரட்சிக்கப்படுவீங்கன்னு தேவன் ஒருபோதும் சொல்லல. ஜனங்கள் சத்தியத்தப் பின்தொடருறாங்களா, தங்களோட கடமையில சத்தியத்துக்குள்ள பிரவேசிக்குறாங்களா, அவங்களோட சீர்கெட்ட மனநிலைகள சரிசெய்யுறாங்களா அப்படிங்கறதன் அடிப்படையில ஜனங்களால இரட்சிக்கப்பட முடியுமா இல்லையாங்கறத தேவன் தீர்மானிக்கிறாரு. வேற எந்தக் குறுக்குவழிகளும் இல்ல. ஜனங்கள் உண்மையானவங்களா இருக்கணும்னு தேவன் விரும்புறாரு. ஜனங்கள் எப்பவுமே, தங்களோட கடமையில தந்திரமாவும் நேர்மையில்லாதவங்களாவும் இருந்தா, அவங்க காரியங்கள சாதிச்சாலும், தேவன் அவங்களோட மனநிலைய வெறுக்குறாரு. தேவன் அவங்கள அம்பலப்படுத்தி புறம்பாக்குவாரு. கர்த்தராகிய இயேசு சொன்னாரு: “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்(வெளிப்படுத்தல் 3:16). நான் என்னோட கடமையில உற்சாகமில்லாம இருந்தேன். இந்த மனப்பான்மை வெதுவெதுப்பானதா இல்லயா? தேவன் என்னைய வாந்திபண்ணிப்போட மாட்டாரா? தேவனோட மனநிலையத் தெரிஞ்சுக்கிட்டது எனக்கு பயமா இருந்துச்சு. நான், “தேவனே, நான் மனந்திரும்ப விரும்புறேன். நான் எல்லாத்தயும் என்னோட வேலைக்காக பயன்படுத்துவேன், நான் ஏனோதானோன்னு இருந்தேன்னா தயவுசெஞ்சு என்னைய தண்டித்துத் திருத்துவீராக” அப்படின்னு ஒரு ஜெபத்த ஏறெடுத்தேன்.

எனக்கு ஒரு பாதையக் கொடுத்த தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் வாசிச்சேன். “மக்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் உண்மையில் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள். நீ அதை தேவனுக்கு முன்பாகச் செய்தால், நீ உன் கடமையைச் செய்து, நேர்மையான மனப்பாங்குடனும் இருதயத்துடனும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், இந்த மனப்பாங்கு மிக அதிகமான அளவுக்கு சரியானதாக இருக்காதா? ஆகவே நீ இந்த மனப்பாங்கை உன்னுடைய அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? ‘தேவனை முழு இருதயத்தோடும் நேர்மையோடும் ஆராதிப்பதை’ நீ உன் எதார்த்தம் ஆக்க வேண்டும். எப்போதெல்லாம் நீ அக்கறையற்று இருக்க விரும்பி, செயலற்ற தன்மையில் இருக்கிறாயோ, எப்போதெல்லாம் கபடமாகவும் சோம்பலாகவும் செயலாற்ற விரும்புகிறாயோ, மேலும் நீ கவனம் சிதறப்பட்டு அல்லது உனக்கு நீயே மகிழ்ச்சியை அனுபவித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம், நீ அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: ‘இப்படி நடந்து கொள்ளுவதால், நான் நம்பத்தகாதவனாக இருக்கிறேனா? இது என் கடமையைச் செய்வதில் என் முழு இருதயத்தையும் வைப்பதாகுமா? இதைச் செய்வதால் நான் கடமை தவறியவனாக இருக்கிறேனோ? இதைச் செய்வதில், என்னிடம் ஒப்படைத்துள்ள தேவனின் ஒப்புவிப்பிற்கு ஏற்ப வாழத் தவறுகிறேனா?’ இவ்வாறுதான் நீ சுயசிந்தனை செய்ய் வேண்டும். நீ எப்போதும் உன் கடமையில் கவனக்குறைவாகவும் செயலற்றவனாகவும் இருப்பதையும், நேர்மையற்றவனாக இருப்பதையும், தேவனை நீ புண்படுத்தியிருக்கிறாய் என்பதையும் உன்னால் அறிய முடிந்தால், நீ என்ன செய்ய வேண்டும்? ‘இந்த நொடியில் இங்கே ஏதோ தவறாக இருந்தது என்று நான் உணர்ந்தேன், ஆனால் நான் அதை ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை; நான் வெறுமனே அதை அக்கறையில்லாமல் மூடி மழுப்பினேன். நான் உண்மையிலேயே கவனக்குறைவாகவும் செயலற்றும் இருந்து வந்திருந்தேன் என்பதையும், அதாவது நான் என் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதையும் இதுவரை உணரவில்லை. எனக்கு உண்மையிலேயே மனச்சாட்சியும் பகுத்தறிவும் இல்லை!’ என்று நீ சொல்ல வேண்டும். நீ பிரச்சினையைக் கண்டறிந்து, உன்னைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டாய்—ஆகவே இப்போது, உன்னை நீ முழுவதுமாக மாற்றிக்கொள்ள வேண்டும்! கடமையைச் செய்வதில் உன் மனப்பான்மை தவறாக இருந்தது. ஒரு கூடுதல் பணியில் இருப்பதுபோல், அதில் நீ கவனக் குறைவாக இருந்தாய், மேலும் நீ உன் முழு இருதயத்தையும் அதில் செலுத்தவில்லை. இதுபோல் நீ மறுபடியும் கவனக்குறைவாகவும் செயலற்றும் இருந்தால், தேவனிடம் ஜெபிக்க வேண்டும் மற்றும் அவர் உன்னைத் தண்டித்துத் திருத்தவும் சிட்சிக்கவும் அனுமதிக்க வேண்டும். தன் கடமையைச் செய்வதில் ஒருவர் இப்படிப்பட்ட மனவுறுதியைக் கொண்டிருக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே அவர்களால் உண்மையிலேயே மனந்திரும்பமுடியும். ஒருவரின் மனச்சாட்சி தெளிவாக இருந்து கடமையைச் செய்வதில் அவர்களுடைய மனப்பாங்கு மாறினால்தான் ஒருவரால் முழுவதுமாகத் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். ஒருவர் மனந்திரும்பும் போது, உண்மையில் அவர்கள் முழு இருதயத்தையும், அவர்கள் முழு மனதையும், அவர்கள் முழு பலத்தையும் கடமையைச் செய்வதில் செலுத்தி இருக்கிறார்களா என்பதையும் அடிக்கடி சிந்திக்க வேண்டும்; அதன்பின், தேவனுடைய வார்த்தைகளை அளவீடாகப் பயன்படுத்தி மற்றும் அவற்றைத் தங்களுக்கெனப் பயன்படுத்தி, கடமையைச் செய்வதில் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளுவார்கள். தேவனுடைய வார்த்தையின்படி, தொடர்ந்து பிரச்சினைகளை இந்த வகையில் தீர்ப்பதன் மூலம், ஒருவர் தங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் தங்கள் கடமையை எதார்த்தத்துக்குப் பொருத்தமாக நிறைவேற்றவில்லையா? இப்படித் தன் கடமையைச் செய்யும் ஒருவர் அதைத் தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு மனதோடும், தங்கள் முழு பலத்தோடும் செய்யவில்லையா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனுடைய வார்த்தைகளை அடிக்கடி வாசிப்பது மற்றும் சத்தியத்தைப் பற்றிச் சிந்திப்பதன் மூலம் மட்டுமே முன்னேறிச் செல்வதற்கான ஒரு வழி இருக்கிறது”). தேவனோட வார்த்தைகள் எனக்கு பயிற்சிக்கான தெளிவான பாதையக் கொடுத்துச்சு. நான் என்னோட இருதயத்தப் பயன்படுத்தி நேர்மையா இருக்கவும், தியாகம் செய்யவும், கவனமா இருக்கவும், பொறுப்பா இருக்கவும், அதோடு, என்னோட ஆற்றல் முழுவதையும் செலவழிக்கவும் வேண்டியிருக்குது, அதன்மூலமா என்னால தேவனை திருப்திப்படுத்த முடியும். அதோடு, நான் நேர்மையில்லாமலும் சோம்பேறியாவும் இருக்க விரும்புறப்போ, நான் ஜெபிக்கணும், மாம்சத்த அடக்கி, தேவனோட தண்டித்துத் திருத்துதலுக்காகக் கேட்கணும். அதன் மூலமா, நான் மாம்சத்தப் பின்பற்ற வாய்ப்பிருக்காது.

அதுக்கப்புறமா நான் தேவனோட வார்த்தைகளப் பின்பற்றினேன். என்னோட கடமைக்கும் பலன்களுக்கும் நான் கவனம் செலுத்தினேன். குழுவுல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பலமும் பலவீனங்களும் இருக்குதுங்கறது எனக்குத் தெரியும். அவங்களோட பலத்தை வளர்க்க உதவும்படி, அவங்களோட வேலைய எப்படி ஏற்பாடு செய்வதுன்னு நான் யோசிச்சேன், அதோடு, அவங்க குறைவுபடுற பகுதிகள்ல அவங்களுக்கு உதவிகள செஞ்சேன். அதோடு கூட, முன்னாடி, நான் மேற்பார்வையாளரா இருந்ததால, என்னால வேலையக் கையாள முடிஞ்சா, மத்தவங்க நல்லா செஞ்சாங்கன்னா, நான் நல்லா வேலை செய்யுறேன்னு அர்த்தம். அதனால நான் கொஞ்சம் ஓய்வு நேரத்த அனுபவிக்கலாம்ன்னு நெனச்சேன். இப்ப என்னோட கடமைய என்னால முடிஞ்சவர சிறப்பா செய்யணும்னு இலக்கை நிர்ணயிச்சுக்கிட்டேன். என்னோட வேலைக்கான திட்டம் தினமும் ரொம்ப நிரம்பியிருந்துச்சு, முன்ப விட அலுவலா இருந்துச்சு. சில நேரங்கள்ல நான் சோர்ந்துபோனேன், ஆனா நான் நிம்மதியாவும் சமாதானமாவும் உணர்ந்தேன். நான் ஆச்சரியப்படும்விதமா, அடுத்த மாசம் எங்களோட பலன்கள் அதிகரிச்சுச்சு. நான் மெய்சிலிர்த்துப் போனேன். நாம உண்மையா இருக்கணும்னு தேவன் விரும்புறாரு. மாறின பார்வையோடும், தேவனுடனான ஒத்துழைப்போடும், அவரோட வழிகாட்டுதல என்னால பார்க்க முடிஞ்சுச்சு. தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும்...

ஆவிக்குரிய போராட்டம்

யாங் ஜி, அமெரிக்கா சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களைக்...

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கிறிஸ்தவத்துல ஆர்வமுள்ளவளா இருந்தேன். ஆனா என்னோட குடும்பத்தார் பௌத்த மதத்தச் சேர்ந்தவங்களா இருந்ததால நான்...